பின்பற்றுபவர்கள்

24 அக்டோபர், 2008

சபலம் என்பது பாலியல் ஆசை தொடர்புடையதா ?

சபலம் என்ற வடசொல்லுக்கு நேரடிப் பொருள் திடீர் தன் தூண்டுதல் அல்லது திடீர் ஆசை. நாம உணவகத்துக்கு சாப்பிடச் செல்லுவோம், வழக்கமாக இட்லி, தோசை (முடிந்தால் அதில் வகைகள்) எதையாவது ஒன்றை சாப்பிடலாம் என்று முடிவு செய்தே போவோம். அக்கம் பக்கம் பார்க்கும் போது சுடச் சுட கொத்து பரட்டாவை தயிர் பச்சடியில் துவைத்து எடுத்து ஒருவர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார், நம்ம நாக்கில் எச்சில் ஊறி அதையே நமக்குச் சொல்லிடுவோம். இதுபோல் சுழல்கள் தீர்மாணம் செய்யும் திடீர் தூண்டல்கள் தான் சபலம். இதுல பெருசா ஒண்ணும் தவறு இல்லை, பிச்சை எடுக்காமல் நம்ம காசில் எதை வாங்கித் தின்றால் என்ன ? ஆனால் சூழல்களுக்கு அடிமை ஆகிறோம் என்பது உண்மை. புதிதாக வந்த சாமியார் ஆசி வழங்கினால் பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுமாம் என்று கேள்விபட்டால், வீட்டுக் கூரையை (ஓலை அல்ல) உடைத்துவிட்டு சாமியாரைப் பார்க்கச் செல்லும் கூட்டமும் இருக்கிறது, அந்த கோவிலுக்கு விளக்குப் போட்டு வேண்டிக் கொண்டால் இதெல்லாம் நடக்கும் என்று (விளக்குக் கடை வைத்திருப்பவன்) கிளப்பிவிட்டால் போதும்.

வியாழன் நகை வாங்கப் போகனும் என்று ஞாயிற்றுக் கிழமையே முடிவு செய்து இருந்ததால்,அதன்படி நேற்று முஸ்தபா சென்டருக்கு போனோம். வழக்கத்துக்கு மாறாக மறுபடியும் ஒரு அட்சய திருதியையோ என்று நினைக்கும் அளவுக்கு கும்பல். வந்திருந்தவர்கள் எல்லோருமே பங்களாதேசி ஆண்கள், இஸ்லாமியர்களுக்கு அட்சய திருதியையா ? இருக்காதே ! அப்பறம் தங்கம் விலையைப் பார்த்தால் கிராமுக்கு 5 வெள்ளி வரை ( சுமார் ரூ 150) குறைந்து இருந்தது. அவ்வளவு கூட்டத்திற்கு ஏற்ற கடை பணியாட்களை வைத்திருக்காததால் கூட்ட எண்ணிக்கை மிகுதியாகிக் கொண்டே இருந்தது. சரி இதில போய் எங்கே வாங்குவது ? இரவு உணவை முடித்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்து அருகில் இருந்த சாகர் உணவகத்துக்குச் சென்றோம். உணவு வகைகளில் காரம் குறைவாக இருப்பதால் என் மகளுக்கு அந்த உணவகம் தான் மிகவும் பிடித்தது. எங்களுக்கு அடிக்கடி அங்கேயே சாப்பிட அலுப்பாக இருக்கும். மகள் அடம்பிடிப்பாள் வேறு வழியில்லாமல் அங்கு சென்ற போது அங்கும் கூட்டம். 10 நிமிட காத்திருப்புக்கு பிறகு உணவு உண்டுவிட்டு, 30 நிமிடத்திற்கு பிறகு முஸ்தபா சென்று பார்த்தால் கூட்டம் குறையவே இல்லை.

தீபாவளிக்குத் தேவையான மற்ற சாமான்களை வாங்கிவிட்டு திரும்பவும் நகைக்கடைக்குச் சென்றால் 80 விழுக்காட்டு கூட்டத்தைக் காணும், எல்லோரும் வாங்கிட்டுப் போய்ட்டாங்களா ? இல்லை, அந்த ஒரு மணி நேரத்திற்குள் தங்கம் விலை 34.90 லிருந்து 36.10க்கு போய்விட்டது. வாங்க வந்தவர்கள் அதைப் பார்த்து திரும்பி இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். கடைப் பணியாளர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள் அவர்களும் பிசியாக இருந்தார்கள். அவர்கள் முகத்தில் ஏகப்பட்ட கடுகடு, திடீரென்று இவ்வளவு வாடிக்கையாளர்களை கவனிக்க வேண்டும் என்றால் எரிச்சல் வருவது இயல்புதானே. அதுக்கும் மேல் பொறுமை காத்து வாங்க நேரமும் இல்லை, இரவு 12 மணி வாக்கில் வீட்டுக்கு திரும்பிவிட்டோம்.

நகை வாங்க வந்தவங்க தினக்கூலிகளாக வேலை பார்ப்பவர்கள். அவர்களைக் குறைச் சொல்லவும் முடியாது. விலைவாசிக் குறையும் போது ஆசைப்படுவதை வாங்க அது ஒரு வாய்புதான். அவர்களைத் தவிர்த்து இன்னும் பலர் அவர்களெல்லாம் வசதி படைத்தவர்களே எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் 5 டாலர் குறைந்தது தெரிந்து அவர்களும் வந்தது வியப்பளித்தது. இங்கே வெளிநாடுகளில் டாக்ஸியில் வந்து சென்று உணவையும் முடித்துச் செல்ல நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு 40 - 50 வெள்ளி ஆகும். இந்த 40 வெள்ளியும் நேற்று 8 கிராம் தங்கம் வாங்கி இருந்தால் மிச்சப்படும் பணமாகத்தான் இருக்கும். ஆக வந்துவிட்டு போன செலவு, விலைக் குறைந்த நகை வாங்குவதால் ஈடு செய்யப்படும். மற்றபடி அதனால் எந்த லாபமும் இல்லை. அடுத்த மாதம் 25 வெள்ளிக்கு தங்கம் குறைந்தால், ஐயையோ போன மாதம் 34.90 கொடுத்து வாங்கிவிட்டேனே என்று வயிறு எரிவார்கள்.

தேவைக்கு என்று ஒரு பொருள் வாங்குவது என்பது வேறு, விலைக் குறைந்துவிட்டதே வாங்கி அடுக்குவோம் என்று நினைத்தால் அது ஒருவகையான சபலம் தான். இந்த மனநிலை, அடுத்து இன்னும் குறையும் போது ஏமாந்துவிட்டதாக நினைக்க வைக்கும்.

வீடுகளில் நேற்று என்ன மாதிரி பேச்சு நடந்திருக்கும் ?

"என்னங்க நீங்களாக எப்போ கூட்டிட்டு போய் வாங்கிக் கொடுத்து இருக்கிங்க ?"

"நல்ல வேளை நீ போட்டு இருப்பது வாங்கியது என்றாவது தெரிகிறதே?"

"என்னமோ ஒண்ணு, இன்னிக்கு தங்கம் வெல குறைஞ்சிருக்கு... 4 பவுனில் ஒத்த வளையலாக வாங்கனும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை...இப்ப விட்டுவிட்டால் இவ்வளவு குறைவாக கிடைக்காது..."

"பணத்துக்கு எங்கே போறது...? கிரிடிட் கார்ட் கடன் வேற இருக்கே..."

"உங்க அமெரிக்க அண்ணனுக்கு போன் போடுங்க... இப்ப 2000 டாலர் இன்ஸ்டண்ட் டிரான்ஸ்பரில் அனுப்பி வைக்கச் சொல்லுங்க... அப்பறம் கொடுத்துடுவோம்...அதுதான் டாலர் மதிப்பு குறையுதுல்லே... திருப்பிக் கொடுக்கும் போது நம்ம கையை கடிக்காது..."

'எப்போ என் பொண்டாட்டி பொருளாதார நிபுணர் ஆனாள் ? ' மனதுக்குள் நினைத்துக் கொண்ட கணவன்

எப்படியாவது சமாளித்து கூட்டிக் கொண்டு வந்திருப்பான்

----- இது போல் பலவேறு கதைகள் நடந்திருக்கும்.

நகை தொடர்பில் மட்டுமே இதை எழுதவில்லை. ஆண்களும் இப்படித்தான், யாராவது வீடுகட்ட இடமோ, வீடோ வாங்கிவிட்டார்கள் அதுவும் குறைவான விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்று கேள்விபட்டாலே போதும் அப்பறம் விழிபிதுங்கும் அளவுக்கு கடனை வாங்கிவிடுவார்கள்.

7 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இவ்வளவும் நடந்ததா? நேற்று!

தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சிதான் ஏற்பட்டது.
கீழே உள்ள விடயங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. உண்மை!

துளசி கோபால் சொன்னது…

சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டாருன்னு சொல்றது இதைத்தான்.

எது நடக்கணுமோ அது நன்றாகவே நடந்தது

இல்லைன்னா

எது கிடைக்காதுன்னு இருக்கோ அது (அன்னைக்குக்) கிடைக்காது.

பின்குறிப்பு: கவனிக்கவும். அந்த ஒரு நாளைத்தான் சொல்றேன்:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டாருன்னு சொல்றது இதைத்தான்.

எது நடக்கணுமோ அது நன்றாகவே நடந்தது

இல்லைன்னா

எது கிடைக்காதுன்னு இருக்கோ அது (அன்னைக்குக்) கிடைக்காது.

பின்குறிப்பு: கவனிக்கவும். அந்த ஒரு நாளைத்தான் சொல்றேன்:-)
//

துளசி அம்மா,
பாதுகாப்பு சாமி கூட வரம் கொடுக்குமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
இவ்வளவும் நடந்ததா? நேற்று!

தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சிதான் ஏற்பட்டது.
கீழே உள்ள விடயங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. உண்மை!
//
ஜோதிபாரதி
உங்களுக்கு போன் பண்ணிச் சொல்லும் போது நான் சாகரில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.

நையாண்டி நைனா சொன்னது…

நல்லா தான் இருந்தது... ஆனா இதுவும் சேமிக்க ஒரு வழி தானே.....

/*கோவில் உண்டியலும், பங்கு சந்தையும் ஒண்ணுதான், இரண்டிலுமே நம்பிக்கையோடுதான் பணம் போடனுமாம்...!*/
இது சூப்பருங்கோ ...

ஆனா பல பேரு ஒண்னுலே கொள்ளை அடிச்சத்தை தானே இன்னொண்ணுலே போடுறாங்கோ....

RATHNESH சொன்னது…

என்னது,

//அதுதான் டாலர் மதிப்பு குறையுதுல்லே... திருப்பிக் கொடுக்கும் போது நம்ம கையை கடிக்காது...//

ஏன் சாமி கிண்டல் பண்ணிட்டிருக்கீங்க? 39 ரூபாய்ல இருந்து ஒரு மாசத்துக்குள்ள 50 ரூபாயைத் தாண்டிருக்கு இங்க; தெரியுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

// RATHNESH said...
என்னது,
ஏன் சாமி கிண்டல் பண்ணிட்டிருக்கீங்க? 39 ரூபாய்ல இருந்து ஒரு மாசத்துக்குள்ள 50 ரூபாயைத் தாண்டிருக்கு இங்க; தெரியுமா?
//

RATHNESH,

நான் சொன்னது சிங்கையில் நடந்திருக்கும் என்று நம்பப்படும் டயலாக். இங்கே வந்திருக்கும் தமிழர்களுக்கு அண்ணன் தம்பிகள் அமெரிக்காவில் இருக்கக் கூடாதா ?
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்