பின்பற்றுபவர்கள்

29 செப்டம்பர், 2007

மனித ஒழுக்கம் - மது, மாமிசம் மற்றும் இராமன் !

ஒழுக்கம் பற்றிய கட்டமைப்பில் மது அருந்துதல் என்பது ஒவ்வாத ஒன்றாக இந்திய தத்துவங்கள் சொல்கின்றன. பிறமதங்களில் கூட 'மது' என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று அறிவுறுத்தப்படுகிறது. தனிமனித ஒழுக்கமாக இருக்க வேண்டியவை 'மது விலக்கல்' மற்றும் பல... மதக் கோட்பாடுகளுக்காப்பட்டு இருக்கின்றன. ஒழுக்க விதிகள் அனைத்தையும் மதமே தருகிறது என்ற காட்டுவதற்கு இது போன்ற தனிமனித ஒழுக்கம் சார்ந்தவைகள் அனைத்தும் கோட்பாடுகளாக்கப்பட்ட கட்டுப்பாடுகளாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

'உடல் நலனுக்கு கேடு' என்பதால் மது அருந்துதல் தவறா ? சரியா ? என்பதை அதன் மீது விருப்பு உள்ளவர்களே முடிவு செய்ய முடியும். ஒருவர் மிதமிஞ்சி குடித்துவிட்டு தன்நினைவு அற்றவராக இருந்தால் அது ஒழுங்கீனம் என்று சொல்லமுடியும். ஆனால் அப்படி இல்லாதவர்கள் தாமே விரும்பி குடிப்பது ஒழுக்கம் என்னும் விதிக்குள் வராது. இஸ்லாமிய நாடுகள் தவிர்த்து வெளிநாடுகளில் வயது வந்தவர்கள் மது அருந்துதல் ஒழுங்கீனம் என்ற கருத்து எங்கும் இல்லை.

நமது இந்தியாவில் மது அருந்துதல் மட்டுமல்ல, இறைச்சி (கூடவே மீனும் முட்டை ) உணவும் கூட இந்திய மதங்கள் வழி சொல்லப்படும் ஒழுக்க விதிகள் என்கிற கருத்தே இந்திய தத்துவ/பக்திசார் நூல்களில் விரிவிக்கிடக்கின்றன. இன்றும் இந்துமதம் என்று சொல்லப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய மதத்தில் மதுவும் மாமிசமும் நாடுவது தவறு என்பது கோட்பாடாக இருக்கிறது. ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன் அவ்வாறு இருந்ததா ? என்று பார்த்தால் அப்படி இருந்தது போல் தெரியவில்லை. இந்துமதத்தில் ஒன்றான வேதம் சார்ந்த வைதிக மதமான சநானதான தர்மத்தில் வேதம் காலம் முற்பட்டே, விலங்குகளை உண்ணுவதைப் பற்றியும், மது (சோம / சுரா) பாணம் அருந்துவது பற்றியும் நான்கு வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதாக அதை ஆராய்ந்தவர்கள் சொல்லும் கூற்று. வேதகொள்கையில் வழி முதன்மை நிகழ்வாக நிகழும் வேள்வியில் விலங்குகளை பலி இடுவதும் / நரபலி இடுவதும் நடைபெற்றே இருக்கின்றன. பின்னாளில் அவையெல்லாம் பிற்போக்குத்தனமானவை என்றும் விலங்குகளையோ, மனிதர்களையோ பலி இடுவது கண்டிக்கத்தது என்ற கருத்தாக்கத்தை சமணமும், பெளத்தமும் முன்வைத்தன. அதாவது நாகரிகம் வளர வளர முன்பு இருப்பவை பிற்போக்குத்தனமானவை என்பது அப்போதைய கருத்து சூழலில் உருவாகும் ஒரு கட்டமைப்பு.

பவுத்தமும் இறைச்சி உண்ணுவதை முற்றிலும் தடைசெய்யவில்லை. ஆனால் தவிர்க்க முடியாத சூழலில் தமக்காக கொள்ளப்படவில்லை என்றால் இறைச்சி உண்ணுவது தவறல்ல என்ற கொள்கையும் கொண்டிருந்தன. புலால் தவிர்த்தலை கடைபிடிக்கவும் செய்தனர். 80 வயது கடந்த புத்தர், ஏழை அடியர் ஒருவரின் பன்றி இறைச்சி உணவை அதில் விசம் பரவி இருக்கிறது என்று அறிந்தே உண்டு உயிர்நீத்தார். சமணம் / பவுத்தம் பரவியபோது இறைச்சி உணவு தவிர்த்தல் (புலால் மறுத்தல்) கட்டுப்பாடாகவே வைத்திருந்தனர். அது ஜீவகாருண்யம் என்ற கொள்கையாக அறியப்பட்டு மக்களால் ஈர்க்கப்பட்டதால் அந்த மதங்கள் உயர்வாக கருத்தப்பட்டது. அதே போன்று தமிழக வேளாளர் சமயத்தினரும் (சைவர்கள்) இறைச்சி உணவை தவிர்த்தவர்களாகவும் இருந்தனர் (ஏன் என்று அதுபற்றி விரிவாக தெரியவில்லை) ஜீவகாருண்யம் உயர்வான தத்துவமாக இருந்ததால் சநாதன தர்மமும் அவற்றை தமது வைதீக கோட்பாடுகளாக மாற்றிக் கொண்டது. வைதிகம் சைவம் ஆனதன் பலனாக மாட்டிறைச்சி உண்ணுபவர்களை அதையே காரணம் காட்டி புலையர்கள் என்ற சொல்லில் தீண்டத்தாகதவர்கள் ஆக்கி விலக்கி வைக்கவும் எளிதாக இருந்திருக்கிறது.

இராமயணத்தை வால்மிகி எழுதியதாக சொல்லப்பட்ட காலத்தில் மதுவும் / மாமிசமும் ஒழுக்கக் கெடுகளான கருத்துக்களாக இருந்ததில்லை. எனவே இராமனை மது / மாமிசம் உண்டான் என்று சொல்வதில் பெரிய ஆராய்ச்சி செய்து அதை வைத்து தூற்றவது என்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும் இராமயணம் என்று சொல்லப்படும் வால்மிகி இராமகாதையின் நோக்கம்... கம்ப இராமயணத்திற்குப் பிறகு சொல்லப்படும் 'ஒருவனுக்கு ஒருத்தி' தத்துவமும் இல்லை. வால்மிகி இராமயணத்தின் நோக்கம் கிருஷ்ணன் மனித அவதாரத்தில் இராமனாக பிறப்பது என்று சொல்லப்படும் கதை மட்டுமே. தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது கம்பர் இராமயணத்தை மொழிபெயர்த்தால் மட்டும் போதாது என்று நினைத்தே 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று அவர்காலத்தில் தேவையாக இருந்த சமூக ஒழுக்கத்தை அதில் காட்டி உயர்வு செய்ய முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதை, இன்றைக்கு இராமர் பற்றி பேசுபவர்கள் குறிப்பாக 'ஒருவனுக்கு ஒருத்தி' பற்றி சிலாகித்துப் பேசுவதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

திருக்குறளில் புலால் மறுத்தல் குறித்து ஒரு அதிகாரமே இருக்கிறது. கம்பரின் காலம் திருவள்ளுவருக்கு பிறகு என்பதால், கம்பன் மொழி பெயர்க்கும் போது வால்மிகி இராமயணத்தில் இராமன் குறித்து சொல்லப்பட்ட மாமிசம் குறித்த செய்திகளை முடிந்தவரையில் தவிர்த்திவிட்டு புலால் உணவு நட்பை பாராட்டும் விதமாக குகன் தந்தபோது உண்டான் என்று மட்டுமே சொல்லியுள்ளான்.

இன்றைக்கு மது / மாமிசம் நுகர்தல் எந்த சாதியை / மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் / அவை மதக்கட்டுப்பாடுகளாக இருந்தாலும் ... அவற்றைச் சேர்ந்தவர்கள் தாமே விரும்பி விலக்கி வைத்திருத்தலையும் / பலர் அவற்றை விரும்பி நாடுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சாதியைச் சேர்ந்தவன் என்பதால் இவற்றை விலக்குகிறார் என்பதை விட அவரவர் தம் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு தான் நடந்து கொள்கின்றனர் என்று சொல்வதுதான் பொருத்தமானது.

இந்த கட்டுரையில் சொல்ல வந்தது... "அன்றைய / பழங்கால சமூக ஒழுக்கமாக / பழக்கமாக இருந்த ஒன்றை இன்றைய கால ஒழுக்கத்தில் பொருத்திப் பார்த்து அது தவறு" என்று சொல்ல முனைவது மாபெரும் தவறு.
அதாவது இராமன் குடிகாரன் என்று கருணாநிதி அன்றைய வழக்கை பழிப்பதும், அவற்றை மறுத்து 'மது'வுக்கு 'தேன்' என்று பொருள் கூறும் 'சோ'வின் திரித்தலும் தவறு.

28 செப்டம்பர், 2007

அரசியலும் ஆன்மீகமும் !

அரசியலும் ஆன்மிகமும் எதிரெதிரானவை என்பது போலவும், ஆன்மிகவாதிகள் அரசியல் பேசுவதும், அரசியல் வாதிகள் ஆன்மிகம் பேசுவது அபத்தம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஜோசப் ஐயா கூட இதே கருத்தை முன்வைத்து ஒருபதிவு எழுதி இருக்கிறார். அங்கேயே பின்னூட்ட மிடலாம் என்று நினைத்தேன் ஆனால் பின்னூட்டம் நீண்டுவிடும் என்பதற்காக தனிப்பதிவு இடுகிறேன்.

ஆன்மிகம் என்பது இறையியல் மட்டுமே என்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் ஆன்மிகம் என்பது கோட்பாடுகளை வைத்துக் கொண்டு மதங்களாக பரிணமித்து நிற்கிறது. குழுவாக அடையாளப்படுத்துவதில் உலக அளவில் மதத்தின் பெயரால் அதை செய்வது எளிது. மனித வாழ்வியலில் இதை யெல்லாம் செய்யலாம், இதையெல்லாம் செய்யக் கூடாது என்று மதமே தீர்மானம் செய்கிறது. சிவில் சட்டங்களில் இந்து சட்டம், இஸ்லாமிய ஷரியத் சட்டம், கிறித்துவ சட்டம் என்று இருப்பவற்றை அரசியல் அரசு என்னும் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகாரம் கிடைத்த மற்றொரு அமைப்பு அவ்வகை சட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்துமதத்தில் பிறந்தவன் அவனுடைய சமூகம் சார்ந்த விருப்புகளில் இதை இதையெல்லாம் செய்யலாம் / கூடாது என்பதை அரசியலமைப்பு சட்டங்களே முடிவு செய்கின்றன ( இங்கே மதம் தொடர்பான சட்டங்கள் தவறு என்று நான் சொல்லவில்லை, மதம் இருப்பதால் அவையும் இருக்கின்றன ) அரசியிலும் ஆன்மிகமும் வேறு என்று சொல்லிக் கொண்டாலும் மக்கள் ஆடுகோழி பலியிடலாமா ? கூடாதா ? என்னும் ஆன்மிகம் சார்ந்த நம்பிக்கைகளை அரசியலே தீர்மானிக்கிறது. எங்கள் மதம் சார்பாக இவரை எம்பி ஆக்குகிறோம் என்று மதத்தின் பெயரால் வளர்ந்த கட்சிகள் அரசியல்வாதி எவர் என்பதை தீர்மாணிக்கின்றன.

பாரதிய ஜனதா பரிவார கட்சிகளும் சரி, இஸ்லாமியா கட்சிகளாக இருந்தாலும் சரி இவர்கள் அனைவரும் ஆன்மிக வாதிகளே ஆனாலும் அரசியலை இவர்களே தான் தீர்மானிக்கிறார்கள். (இஸ்லாமிய சமூகம் மக்கள் தொகை விழுக்காட்டு அளவில் குறைவாக இருப்பதால் அவர்களைச் சேர்ந்தவர்களை அவர்கள் முன்னிறுத்துவது இந்திய அரசியலில் தவறல்ல என்பது என்கருத்து. *பிரியாணி கிடைச்சுடுச்சிப்பா :-)* அமெரிக்க அளவில் அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்பவர்களின் பிரிவுகள் கூட அதாவது கத்தோலிக்கரா ? அல்லது மெதடிஸ்ட் என்னும் பழைய ஏற்பாட்டு பிரிவை சேர்ந்தவாரா ? என்று தேர்தல்காலத்தில் வெளிப்படையாக விபரங்கள் தெரிகிறது. இலங்கை அரசு /அரசியலில் எதையெல்லாம் செய்யலாம் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை ஆன்மிகமே தீர்மாணிக்கிறது. பகவத் கீதை கர்மயோகம் என்ற பெயரில் பேசுவது முற்றிலும் அரசியலே. மதத்தால் அடையாளப்படுத்திக் கொண்ட நாடுகளின் அனைத்து அரசியலையும் தீர்மாணிப்பது ஆன்மிகமே.

சந்திராசாமி போன்ற (ஆ)சாமியார்கள் மத்திய அரசை கவிழ்க்கும் அளவுக்கு அரசியல் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் பிஜேபி அதிமுகவுடன் கூட்டனி சேரலாம ? கூடாதா ? தீர்மானிப்பவர் சங்கராச்சாரியார். ஆன்மிகமும் அரசியலும் சமூகத்தை வேறு வேறு பெயர்களில் தங்கள் கொள்கைகளை நெருக்கினாலும் / வலியிறுத்தினாலும், பெரும்பாலும் அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகத் தான் இருக்கின்றன. மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் காங்கிரஸ் கட்சியின் ஒரு மத்திய அமைச்சர், சேதுசமுத்திரத் திட்டத்தை தற்காக்கும் கருத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்காக டெல்லி முதல்வரை கடிந்து கொண்டதையும், பதவி விலக சொன்னதையும் வெறும் அரசியல் என்றே பார்க்க முடியாது. அரசியல் வாதிகள் ஆன்மிக வாதிகளிடம் வெளிப்படையாகவே ஆதரவு கேட்கின்றனர். அவர்களும் ஆசி வழங்குகிறார்கள்.

சேர, சோழ, பாண்டியர் காலத்திலும், கிருஷ்ண தேவராயர் மற்றும் அனைத்து பழங்கால இந்திய அரசர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக ஆன்மிக வாதிகளாவே உள்ளனர்.

ஆன்மிகம் புனிதத்தன்மை வாய்ந்தது என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளதால், ஆன்மிகம் அரசியலில் கலப்பது கேட்பதற்கு அபத்தம் போல் தெரிவது வெறும் கானல் தான். அது உண்மையல்ல அரசியலும் ஆன்மிகமும் இரட்டை பிறவிகள். சமூகங்கள் சீர்குழைப்பதும், தீர்மாணிப்பதும், முன்பெல்லாம் வழி நடத்துவதும் அதுவே. ஆன்மிக வாதிகள் மட்டுமல்ல அதற்கு மாற்றான நாத்திக கொள்கைகளும் கூட அரசியலை தீர்மாணிப்பதாகத்தான் உள்ளன.

அரசியல் ஆன்மிகத்துக்கும், ஆன்மிகம் அரசியலுக்காவும் தான் உண்டாக்கப் பட்டு / ஏற்படுத்தப்பட்டு இருகிறது என்பது வரலாறுகளைப் படித்தால் தெரியும் வெள்ளிடைமலை. மற்றபடி மதமாக வளர்ந்திருக்கும் ஆன்மிகத்திலிருக்கும் மேல்பூச்சுகளெல்லாம் அது பொதுமக்களிடம் / நம்பிக்கையாளர்களிடம் இருக்கும் தமக்கான செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்கான அலங்காரங்களே.

ஆன்மிகம் என்பது நம்பிக்கை என்ற அளவில் இருந்தால் அரசியலில் அது என்றுமே மூக்கை நுழைக்காது. ஆனால் நாம் சுற்றிலும் பார்க்கும் / கேட்கும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் அப்படி இல்லை.

அரசியலும் ஆன்மிகமும் வேறு வேறு என்பது பழைய வேதாந்தமாக இருக்கவேண்டும். அது தோன்றிய காலத்திலேயே மறைந்திருக்க வேண்டும் :)

பின்குறிப்பு : ஒரு இறை நம்பிக்கையாளன் அரசியல் பேசினால் அவன் மத நம்பிக்கை யாளனே. இங்கு ஆன்மிகம் என்ற குறியீட்டில் சொல்லி இருப்பது மதநம்பிக்கையாளர்களைப் பற்றியும், அதை அரசியலில் பயன்படுத்துவர்கள் குறித்தது. இங்கு குறிப்பிட்டு இருக்கும் 'ஆன்மிகம்' இறைவன் மதத்தைக் கடந்தவன் என்று இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் பற்றியது அல்ல.

26 செப்டம்பர், 2007

மனிதன் ஏன் இயற்கையை வெல்ல வேண்டும் ?

மனிதனின் உணர்வுகள் அனைத்தும் இயற்கை ... அதில் கட்டுப்பாடு என்பது மனிதனாக முடிவு செய்து கொண்ட செயற்கை. இந்த செயற்கையை மனிதன் தன்விருப்பத்திற்கு ஏற்றவாரே ஏற்படுத்திக் கொண்டான். நாளாடைவில் அது அவனுக்கு சமூகம் என்ற சிறந்த அமைப்பை தந்தது.

உண்ணும் உணவை மென்மையாக்க நெருப்பை பயன்படுத்திக் கொண்டான்...காலப்போக்கில் அவன் கூறிய பற்களின் அவசியமின்மையால் தட்டையாக மாறியது. உணர்வலையின் உந்துதலில் எதிர்பாலினரிடம் கூடி தனித்துக் கொள்ளும் விலங்குகளைப் போன்று அல்லாது உறவு முறைகளை அமைத்துக் கொண்டு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டான்.

குடும்பம் என்ற அமைப்பு ஒரு கட்டுப்பாடு என்பதைவிட பாதுகாப்பு என்பதே பொருத்தம். தனிமனிதன் துன்பத்திற்கு ஆளாகும் போது தனக்கென்று ஒரு குடும்பம் இல்லை என்றால் அவனால் தற்காத்துக் கொள்வது எளிதன்று.

இன்றைய சமுதாய சூழ்நிலையில் தனிமனித சுதந்திரத்தின் தேவையே பெரிது என்பதுபோல் சித்தாந்தங்கள் முன்மொழியப்படுவதும், நவீன சிந்தனையாக்கம் என்ற பெயரில் வலியுறுத்தப்படுகிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மனிதர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும் தரவுகள் முன்வைக்கப்படுகின்றன. இவைதான் சரியோ என்று பலரும் நினைக்க ஆரம்பித்து முடிவில் குடும்ப அமைப்பும் கட்டுப்பாடுகளும் கேலிக் குறியாகிவிடும் என்ற எண்ணத் தோன்றுகிறது. உணர்வலைகளின் உந்துதல் என்பது இயற்கையானது அதை ஏன் கட்டுப்படுத்தவேண்டும் இயல் கேள்வியில், அதை முறைப்படுத்தலில் தலைப்படாமல் மனம் போல் செயல்பட்டு தனது இன்பமே பெரிது என்று நினைக்க ஆரம்பித்து, முடிவில் அதில் விலக மனமின்றி குடும்பம் என்ற அமைப்பு பொறுப்புகள் நிறைந்ததாக (ஐயக்) கருத்தாக்கத்தை / எதிர்கருத்தை பலர் கொண்டுள்ளனர்.

உடலுறவும் அதனால் கிடைக்கும் குழந்தை பேறும் இயற்கை என்பதை விட உடலுறவு உந்துதல் என்பது இயற்கை ....குழந்தை பேற்றை விரும்பினால் செய்து கொள்ளலாம் என்பது வரை இயற்கையை வென்றாகிவிட்டது. இயற்கையின் சிறகுகளை தன் விரும்பும் திசைக்கு மாற்றிவிட்டதால் அல்லது இயற்கையை தனக்கு சாதமாக நினைக்க ஆரம்பித்து பலரும் உடலுறவு இச்சைக்கு எதிர்பாலினர் தேவையே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இயற்கையின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதால்... உடலுறவு என்பது வாழ்வியலுடன் சேர்ந்த அம்சம் என்பதைவிட பசியைப் போன்ற ஒரு உணர்வு, அதை எப்படியும் தனித்துக் கொள்வதே இயற்கை என்ற நினைக்க ஆரம்பித்து, ஓரினசேர்கை ஆகியவற்றை நோக்கிச் செயல்படுத்திக் கொண்டிருப்பதையும், அதற்காதராவாக உணர்வுகள் 'இயற்கையானது' என்பது போன்ற சித்தாந்தங்களை முன்வைக்கிறார்கள். இதை சமுகம் என்ற கட்டுப்பாட்டு அமைப்பிற்குள் இருந்து பார்கையில் மனித இனம் விபரீதமான பாதையில் செல்வதாக நினைக்க முடிகிறது.

விலங்குகள் போல் புணர்ந்து மகிழலாம் என்பது இயற்கை என்று சொல்பவர்களின் / இப்படி நினைப்பவர்களின் சமூக நலன் குறித்த அக்கரை தான் என்ன ? ஒன்றுமே இல்லை. இதுபோன்ற தனிமனித சுதந்திரம் 100 விழுக்காட்டை எல்லோருமே அடையும் போது விலங்குகளுக்கும் நமக்கும் வேறுபபடு இல்லாமல் போய்விடும். விலங்குகளால் சுதந்திரமாக இருந்தாலும் பிறப்புகளை கட்டுப்படுத்த முடியாது / பாதுகாத்துக் கொள்வதும் எளிதன்று. ஆனால் மனிதன் ? அதாவது தனிமனிதனாகவே வாழ ஆசைப்படுபவர் ஏன் குழந்தை பெற்றுக் கொண்டு பொறுப்புகளை சுமக்க வேண்டும் என்று நினைப்பர். சமூக அமைப்பு சீரழியும். மனிதன் இயற்கையை வென்று ஏற்படுத்திய இயற்கைக்கு மாற்றான சமுக அமைப்பு அவன் கையால் இயற்கைக்கு பலியாகிவிடும்.

தனிமனித சுதந்திரம் எதுவரை ? இதன் எல்லைக் கோடுகள் அகலப்படுத்திக் கொண்டு செல்லும் போது இயற்கை நம்மை வென்றுவிட்டதாக சிரிக்கும். அப்பொழுது ஆதிவாசிகளைப் போல் காட்டில் இல்லாது ஆனால் அவர்களைப் போல் நகரத்தில் வசித்துக் கொண்டிருக்கும் நம் சந்ததிகள்.

தனிமனித சுதந்திரம் ? இந்த கேள்வியில் அனைத்து பெண்களும் தமக்கும் தனிமனித சுதந்திரம் வேண்டும் எனவே எனக்கு பிள்ளை பெற விருப்பமில்லை என மறுத்தால் என்னவாகும் ?

இயற்கை சீற்றம் எதுமின்றியே மனித இனம் முற்றிலும் மறைய ஒரே தலைமுறை போதும்.
மனித இனம் இயற்கையுடன் எப்போதுமே போராடிக் கொண்டு / வென்று கொண்டிருக்க வேண்டும். இயற்கையென்ற தன்நலனை இயன்றவரை சமுக நலன்நோக்கிய பயன்பாட்டை நினைத்து கட்டுப்படுத்த வேண்டும்

நவநாகரீகம் என்ற பெயரில் தனிமனித சுதந்திரம் உயர்ந்தது என்ற பொறுப்பற்ற சிந்தனையை வலியுறுத்தி பேசுபவர்கள் சமூகம் புறக்கணிக்க வேண்டும் அல்லது திருத்த முயலவேண்டும்.

நமக்கு விருப்பம் இல்லாத ஒன்றை எவரும் திணிக்க முடியாது. நாமே எதையும் வர்புறுத்தலால் ஏற்றுக் கொள்ளாத போது, நாம் வாழும் சமூகத்துக்கு நாம்மால் இடையூறே இல்லாது ஒன்றிணைந்து வாழ்வதே தனிமனித சுதந்திரம். சமூகமாக கூடிவாழ்வதில் சில விட்டுக் கொடுத்தலில் தீமைகள் இருந்தாலும் கிடைக்கும் நன்மைகள் கோடி.

இயறகையை வெல்லுவோம்... ஒன்றிணைந்த வாழ்வுடன் இன்புற்று இருப்போம்.


24 செப்டம்பர், 2007

20 ஒவர் போட்டி கொண்ட உலக கோப்பையை இந்தியா வென்றது !

சற்றுமுன் முடிவடைந்த உலக கோப்பையில் இந்தியா பாக்கிஸ்தானை 5 ஓட்ட வேறுபாட்டில் வீழ்த்தியது.

முன்னதாக இந்தியா 157 /5
அடுத்து ஆடிய
பாகிஸ்தான் 152/10

வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !

இராமயணம் நடந்த கதையா ?

வடமொழி வேதங்களான நான்கு வேதங்களில் பெரிதாக பேசப்படாத கிருஷ்ணன், மத்வாச்சாரியார் மற்றும் இராமானுஜருக்குப் பிறகே வைணவம் என்னும் விஷ்ணுவை / கிருஷ்ணனை வழிபடும் பிரிவு ஒன்று இருப்பது தெரியவந்தாக இதுவரை தெரிந்த பக்தி இலக்கியம் மற்றும் சமய நூல்களில் இருந்து அறிய கிடைப்பவை. வேதகாலத்திற்கும் பகவத் கீதைக்கும் தொடர்பு இல்லை என்று பல்வேறு அறிஞர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையில் வேதம் பற்றி குறிப்பு இருக்கிறது. வேதங்களில் பகவத் கீதையோ, கிருஷ்ணனோ இல்லை. மேலும் கிருஷ்ணன் ஆரிய கடவுள் இல்லை என்பதற்கு சான்றாக கிருஷ்ணன ஆயர் குலம் சார்ந்த கடவுள் என்கிறார்கள். கிருஷ்ணனின் வண்ணமும், இராமனின் வண்ணமும் கூட கருப்புதான் என்பது அந்த உருவ ஓவியங்களைப் பார்த்தாலே தெரியும்.

நான் பல பதிவுகளில் குறிப்பிட்டது போல சிறப்புற்ற பலவழிபாடுகள் வைதீக மயமாக்கப்பட்ட போது கிருஷ்ணனும் வைதீக மயமாக்கப்பட்டு இருக்க வேண்டும். வேதக்கடவுளாக காட்ட மகாபாரதம் மற்றும் பகவத் கீதையுடன் தொடர்பு படுத்தி இருக்க வேண்டும். கீதையின் முழுப்பகுதியும் கிபி 1500 க்கு பிறகே இறுதி வடிவம் பெற்றதாக அண்மையில் ஒரு நூலில் படித்தேன்.

எனது பார்வையில் இராமயணம் என்பது வைணவ / சைவ மதங்களின் ஒற்றுமைக்காக ஏற்பட்டது என்பது முதன்மையான காரணம். இராமயணத்தில் இலங்கே'ஸ்வரன்' சிவ பக்தனாகவும், இராமரே இராமேஷ்வரத்தில் சிவ பூஜை செய்தவராகவும் காட்டப்பட்டு இருக்கிறது.

கிருஷ்ண அவதாரம் என்று சொல்லப்படும் தசவதாரத்தில் இராமனும் ஒன்று. மற்ற அவதாரங்கள் நடந்ததற்கான சான்றுகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. அவற்றிற்கான புராணங்கள் மட்டுமே இருக்கிறது. பூமி தட்டையானது என்ற கருத்து கொண்டிருந்த போது அவதாரக்கதைகள் ஏற்பட்டு இருக்க வேண்டும். மூன்று அடி நிலம் கேட்டு மாபலி சக்ரவர்த்தியிடம் கிருஷ்ணன் நிலத்தை ஒருகாலாலும், வானத்தை ( இல்லாத ஒன்றை எப்படி?)ஒருகாலாலும் 'அளந்ததாகாவும்' மீதம் ஒரு அடி வைக்க இடம் இல்லாது போனதால் மாபலி சக்ரவர்த்தி தலையில் காலை வைத்து மண்ணுக்குள் அமிழ்த்தியதாகவும் அவதாரக் கதை வாமன அவதாரத்தில் செப்புகிறது. உருண்டையான பூமியை ஒரு தட்டையான பாதத்தால் எப்படி அளக்க முடியும் என்ற கேள்விக்கு விடை தேடினால் புராணங்கள் உருவான போது பூமி தட்டையானது என்றும் வானம் கூரையாக இருந்தது என்ற கருத்து இருந்திருக்கலாம் என்று கொள்ள முடிகிறது. கூர்ம அவதாரம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன்.


இதுபோன்றே பல அவதாரக் கதைகளும் சுவைபட எழுதி இருந்தாலும் நடப்புக்கு ஒவ்வாதவையாகவே இருக்கிறது. எனவே 8 அவாதாரக்கதைகளைப் போல் தான் இராம அவதாரக் கதையும் அதில் ஒன்று என்று கருத முடிகிறது. தெய்வங்கள் இருக்கிறது என்று நம்புவருக்கு இராமார் வாழ்ந்தார் என்று நம்புவது ஒன்றும் கடினமானது அல்ல. ஆனால் அவதாரங்கள் அனைத்தும் 'லோக ஷேமத்திற்கு' என்று அவற்றிற்கான காரணமாக அதை நம்புவர்கள் சொல்லும் போது, கோவில்களை இடம் மாற்றி வைப்பதாலேயோ, அல்லது பாபர் மசூதி போன்றும், புத்த விஹாரங்களை இடித்தது போன்றும் நம்பிக்கை சார்ந்த இடங்களை இடித்தது பாவச் செயல் அல்ல என்று ஆதிக்கம் நிலைநிறுத்திக் கொண்டதையும் நினைத்தால், மணல் திட்டு என்று அரியப்பட்டத்தை இராமர் பாலம் என்று நம்பினாலும் மக்கள் நலனுக்காக அதனுடன் சுற்றுசூழலின் பாதூகாப்பையும் கவனத்தைக் கொண்டு பொருளாதார மேம்பாட்டுக்கு தேவை என்னும் போது அகற்றிவிட்டால் பெரிதாக கெடுதல் ஒன்றும் வரப் போவதில்லை.

ஆப்கானில் புத்தர் சிலைகளின் தலை பீரங்கிகளுக்கு வீழ்ந்த போது இந்தியாவில் பிறந்தவர் புத்தர் என்பதற்காக இந்தியாவுக்கு கெடுதல் எதுவும் வரவில்லை. அது மதவெறியால் உடைக்கப்பட்டது. ஆனால் இங்கு நாம் ஆக்கபூர்வத்திற்காக ஒரு மணல் திட்டை அகற்றுகிறோம். வைரவேல் திருடு போனபோது திருடர்களை சூரசம்ஹாரம் செய்யாத முருகன், பஞ்சலோக சிலைகள் களவு போனபோது கவலைப்படாத மற்ற தெய்வங்கள், மரகத லிங்கங்கள் கடத்தப்பட்ட போது ருத்தர தாண்டவம் ஆடாத சிவனையும், பரம்பரைகளாக கோவில் சொத்துக்களை தின்றொழிக்கும் கும்பல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த தெய்வங்களும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றன.

கருணாநிதி இந்துக்களை இழிவு படுத்துவிட்டார் ? யார் யார் இந்துக்கள் ? நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள் இந்துக்கள் இல்லையா ? அவர்கள் தங்கள் குல சாமிகள் ஆடு கோழி கேட்கும் என்று அதை பலி இடுவது நம்பிக்கையில்லையா ? அவர்களின் நம்பிக்கைகளையும், விழாக்களையும் ஒரே ஒரு சட்டத்தில் பாழ்படுத்தி, அவர்களை, அவர்களே கட்டிக் கொண்ட சாமிகளுக்கு முன்னால் வெட்ட முடியாமல்போன ஆடுகளை சுடுகாட்டில் வெட்ட வைத்து அவர்களை மசான (மயான) புத்திரன்களாக ஆக்கியது மட்டும் இழிவு இல்லையா ? இதையெல்லம் செய்வதவர் கருணாநிதி என்னும் நாத்திகரா ? நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர் இந்துக்கள் இல்லையன்றும், அவர்கள் இந்து தெய்வங்கள் இல்லை என்றும் சொல்ல முடிந்தால் இறை நம்பிக்கை இழிவு படுத்துப்படுவதைப் பற்றிய கூற 'யோக்கிதை' இருக்கிறது கொள்ளலாம். நாட்டார் தெய்வங்கள் சர்கரை பொங்கல் மட்டுமே சாப்பிடும், ஆடுகோழி கேட்காது என்று அந்த சாமிகளே வந்து சொல்லியதா ? கூட்டம் கூட்டி இந்திய இந்துக்களின் ஜனத்தொகைக்கு மட்டும் அவர்களது எண்ணிக்கை வேண்டும், அவர்களது குலதெய்வமும், நம்பிக்கை ஏற்புடையதல்ல என்பது ஆதிக்கம் செலுத்துவது இழிவு படுத்துவது அன்றி வேறு என்ன ?

நம்பிக்கை என்றால் அவரவருக்கு இருப்பது எல்லாமே நம்பிக்கை தான் ஒருவர் மொட்டை அடித்துக் கொள்வார், தரையில் உருளுவார், அலகு காவடிகள் கூட எடுப்பார், இதையெல்லாம் பைத்தியகாரத்தனம் என்று சொன்னால் கருணாநிதி இதிகாச இராமனைப் பற்றி கேள்வி எழுப்பியதில் என்ன தவறு இருக்கிறது ? கருணாநிதி வெறும் வாய்வார்த்தை தானே சொன்னார், பிஜேபி, இந்துபரிவார அமைப்புகளின் ஆதரவுடன் ஜெயலலிதா நாட்டார் தெய்வங்களுக்கு ஆட்சி அதிகாரத்தின் பேரிலேயே சட்டம் இயற்றி , காவலர்கள் துணையுடன் ஆடுகோழி பலி இடுபவர்களை ஓட ஓட விரட்டி இழிவு படுத்தினாரே, அது இந்துமதத்தின் மீதான இழிவு இல்லையா ? கருணாநிதியின் முயற்சியினால் தான் ஓடாத திருவாரூர் தேர் ஓடியதாக சொல்கிறார்கள். கோவில்களை தேவதாசிகள் என பெண்களை 'வைத்திருந்து' கோவிலையும் தெய்வத்தையும் பெண்களையும் இழிவு படுத்தியதெல்லாம் கருணாநிதி போன்ற நாத்திகர்களே துடைத்தொழித்தனர்.

ஒரு மக்கள் நல திட்டத்தை நம்பிக்கை என்ற பெயரால் கெடுக்கும் போது, அந்த நம்பிக்கையை குறித்து கேள்வி எழுப்புவது மட்டும் என்ன தவறோ ?



நண்பர் குமரன் பார்வைக்காக பின்பு இணைக்கப்பட்டது, இடுகைக்கும் இதற்கும் தொடர்பில்லை.

22 செப்டம்பர், 2007

விஜயகாந்தின் மதச்சார்பின்மையும், தமிழ்பற்றும் பல் இளிக்கிறது !

இதுநாள்வரை தாம் அல்லாவுக்காக குல்லா போடுபவர் என்றும் இஸ்லாமியர்கள் எனது ஒன்றுவிட்ட தம்பிகள் என்று சமத்துவம் சமதர்மம் பேசிய விஜய காந்து "இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார்". ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று திருவாய் மலர்ந்துள்ளார். தேமுதிக என்ற தேர முடியாத திக்குமுக்கு கழக தொடக்கவிழாவில் பட்டை ( அந்த பட்டை அல்ல) நெற்றியில் அடித்துவந்து தம் இந்துத்துவ அடையாளத்தை வெளிப்படுத்தி தாம் தமிழர்களுக்காக பாடுபடப்போவதாகவும், மதசார்பற்றவர் என்றும் சொன்னார். "பட்டை" வெளிப்படையாக தெரிந்ததும் பாஜக அவரையே சுற்றி சுற்றி வந்து கூட்டணி அமைத்து சட்டமன்றத்தில் நுழைய முயற்சித்தது. விஜயகாந்தும் தமது இந்துத்துவ வேசம் வெளிப்பட்டுவிட்டால் (போட்ட) முதலும் மோசமாகி முற்றிலும் மோசமாகிவிடும் என்று தவிர்த்தார்.

எந்த கட்சியும் சரியில்லை என்று கருதிய சிலர் வேறுவழியின்றி மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மதிப்பளிப்பதற்காக விஜயகாந்துக்கு ஓட்டுபோட்டனர், 60 விழுக்காடு பதிவான வாக்குகளில் 8% விழுக்காடு இவருக்கு கிடைத்தது. 234 தொகுதிகளில் நின்று இந்த வாக்கை பெற்றவர் வெறும் 25 தொகுதிகளில் நின்று காங்கிரசை இவருக்கு கிடைத்த 8% ஓட்டை வைத்து ஓட்டை கணக்கு போட்டு தாம் காங்கிரசை விட பெரிய கட்சி என்று சொல்லி வந்தார். அரசயலை கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர வேறு எவருக்கும் இதில் உள்ள சூட்சமம் புரியாது. விஜயகாந்துக்கு செல்வாக்கு இருப்பதாக அவரே ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினர். மதுரை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்ததற்கு விஜயகாந்தின் ஊர் என்பதாலும், அவருடைய உறவினர்கள் என தெலுங்கு பேசுபவர்கள் அதிகம் இருப்பதாலும், ஜெயலலிதா எதிர்கட்சியாகிவிட்டதால் நம்பிக்கை இழந்ததால் விஜயகாந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தது, இதைத்தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்கவே முடியாது.

"இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று சொல்லி இருப்பதனால் முஸ்லிம்களின் சகோதரன் என்று சொல்லி வந்த விஜயகாந்து இதன் வழி முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் கருணாநிதி திட்டவில்லையே ஆதங்கப்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது. இவருடைய மறைமுக இந்துத்துவ முகமூடி கிழிந்து தொங்குகிறது. தவளை தன் வாயால் கெடும் என்ற "தமிழ் பழமொழியை" பின்வரும் தேர்தல்களில் விஜயகாந்து தெரிந்து கொள்வார்.

"திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே, அவர் எந்தக் கல்லூரியில் படித்தவர் ?"என்று கருணாநிதிக்கு எதிராக கேள்வி எழுப்பியதில் இருந்து இவருக்கு இதிகாச புராண கதைகளில் வரும் பாத்திரங்களுக்கும், ஒப்பற்றவர்களாக வாழ்ந்து மறைந்த திருவள்ளுவர் போன்றவர்களுக்கு முடிச்சு போடுவதில் இருந்து இவரின் இந்திய / தமிழக வரலாற்றின் அறியாமையும் வெளிப்பட்டுவிட்டது. எந்த ஒருதமிழனும் கேள்வி எழுப்ப துணியாத திருவள்ளுவரை, கற்பனை பாத்திரம் போல் திருவள்ளுவர் காலேஜில் படித்தாரா ? என்று கேள்வி எழுப்பியதில் இருந்தும், திருவள்ளுவரை தாம் புகழந்ததில்லை/மதிக்கவில்லை என்றும் மறைமுகமாக சொல்லி இருப்பதன் மூலம், தமிழகத்தில் பிறந்து, தமிழர்களால் புகழடைந்திருந்தாலும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தமக்கு இருப்பது தமிழுணர்வு இல்லை என்று வெட்ட வெளிச்சமாக்க்கிக் கொண்டுள்ளார்.

விழித்துக் கொள்ளுங்கள் !

டாவின்சி கோட், முகமது நபி படம், இராமர் பாலம் !

இந்தியாவில் எந்த மதவியாதியாக இருந்தாலும் சரி, சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் மாற்றுமதத்தினரை புண்படுத்தி, அதில் வடியும் சீழை முகர்ந்து பார்த்து பரவசப்படுதே 100 ஆண்டுகால வழக்கம். தம்மதத்தை உயர்வாகவும் மாற்றுமதத்தை இழித்துக் கூறவும் இவர்களாகவே கையில் எடுத்துக் கொள்ளுவது மததுவேசம் என்னும் கேவல உத்தி. இந்த கேவலமான உத்தியை கையாளுபவர்கள் பெரும்பாண்மை என்ற போர்வையில் இருந்து கொண்டு வெற்றிகரமாக நடத்திமுடிப்பவர்கள் இந்துமத வெறியர்களே. அத்துவானியை வாஜ்பாயையும் அர்ஜுனன் கிருஷ்ணனான உருவகப் படுத்தியபோது புண்படாத இந்து மனது, பிறப்பின் அடிப்படையில் கிறித்துவ மதம் சேர்ந்தவர் என்பதால் சோனியா காந்தியை அம்பிகையாக காட்டி தேர்த்தல் நேரத்தில் படம் வெளி இட்டிருந்தாலும் அது இந்துக்களின் மனதை புண்படுத்திவிடுமாம். சகல லோகத்திற்குமான மதம் என்றும் எல்லா மதத்திற்கும் இந்து மதமே மூலம் ( அது இல்லை) என்றும் உலகலாவிய வேதாந்தாம் பேசும் வேதவாந்திகள் இந்துமதத்தை புன்படுத்தும் உரிமை மட்டும் (மேற்படி அத்வானி போட்ட கிருஷ்ணன் வேடம்) உரியது என்பது போல் பேசுவது குள்ளநரித்தனமே.

இராமரைக் குறித்து கேள்வி எழுப்பியதாலேயே இந்துக்கள் ( இதில் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் அவர்களிடம் கேட்காமலேயே வலிய இந்துவாக சேர்த்துக் கொண்டது, அவர்களை தவிர்த்து பார்த்தால் இந்துக்கள் இந்திய மக்கள் தொகையில் 30 விழுக்காட்டிற்கும் குறைவே) மனம் புன்பட்டுவிட்டதாகவும், கருணாநிதியின் நாக்கையும், தலையையும் வெட்ட வேண்டுமாம். அடேங்கப்ப்பா, சிறிது காலத்திற்கும் முன்பு எதோ ஒரு ஐரோப்பிய நாடு (டென்மார்க் ?) முகமது நபி பற்றிய வெளியிட்ட கேலி படத்தை இந்தியாவிலும், இணைய தளங்களிலும் வெளியிட்டு அரிப்பை தீர்த்துக் கொண்டவை இதே இந்துமத வெறி கும்பல்கள்தான். அதுமட்டுமா ? டாவின்சி கோட் என்று ஏசு கிறித்து திருமணமானவர் என்று சர்சையை கிளப்பிய படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி சொறிந்து கொண்டவையும் இந்த மதவெறியர்களே. புன்படுத்துதல், குஜராத் போன்ற கலவரங்களால் கூறுபோடுதல் போன்றவற்றை வெற்றிகரமாக நடத்திவிட்டு கொக்கறிக்கும் இக்கும்பல்களினாலேயே இந்திய மண்ணில் இஸ்லாமின் பெயராலும் தீவிரவாதம் நுழைந்துவிட்டது.

இறை என்றால் அனைத்தும் இறைதான், மதமென்றால் அனைத்தும் இறைவன் ஆக்கியது என்று வேதாந்தம் பேசும் வெறியர்கள், அவற்றை தூற்றம் போது மாற்று மதத்தினர் புன்படுவார்கள், அந்த இரத்தத்தை உறிஞ்சலாம் என்று ஓநாய் போல் செயல்பட்டுவிட்டு, தற்பொழுது இந்துமதத்தை புன்படுத்துவதாக நீலிகண்ணீர் வட்டிப்பதும், மதவெறியை தூண்டி ரவுடி இசத்தை வளர்பதையும் பார்த்து இந்தியர்கள் என்ன உலக நாடுகளே இந்துமதம் ஒரு காட்டுமிராண்டி மதம் என்று நினைப்பதற்கான வேள்விகளை வளர்த்து இருக்கின்றன. மதத்தை புண்படுத்தினால் நாக்கையும் தலையையும் வெட்ட வேண்டுமென்றால் இந்தியாவில் மதவெறியன் எவனுக்குமே தலையோ நாக்கோ இல்லாமல் என்றோ 'முண்டம்' ஆகி இருப்பார்கள் ஏனென்றால் இவர்கள் மாற்று மததினர் மீது செய்வதும் அதே ஈனத் தனத்தைத்தான்.


நானும் இந்துதான் இந்துமதம் இந்துவெறி காட்டுமிராண்டிகளால் கேவலப்படுவதையும், சீரழிக்கப்படுவதையும் வன்மையாகவே கண்டிக்கிறேன். இராமயணம் மூலம் தமிழர்களை குரங்குகளாக சித்தரித்து காட்டியதையும் பொருத்துக் கொண்டு வாளாதிருக்கும் தமிழர்கள், கலைஞர் கருணாநிதியின் அரசியல் குறித்து பலவிமர்சனங்கள் இருந்தாலும் தமிழுக்கு அரும்பணியாற்றியவர் என்பதாலும், தமிழர்களின் மற்றொரு மாபெரும் தலைவர் என்பதாலும் ஒவ்வொரு தமிழனும் அவரை நேசிக்கின்றான் என்பதால் அவரின் இராமயணம் குறித்த கருத்துக்களாக தலையையும், நாக்கையும் தூண்டிப்பேன் என்று சொல்லும் இந்து வெறியர்களுக்கு எதிராக தமிழர்களை வாளாக மாற்றிவிடும் நிலைக்கு கொண்டு விட்டுவிடாதீர்கள்

21 செப்டம்பர், 2007

முக முறிவுகள் ஏன் ?

மூஞ்சை காட்டுவது என்று வழக்கில் சொல்லுவார்கள். நாம் சிலருடன் சாதரணமாகத்தான் பழகுவோம். அல்லது நெருக்கமாக இருப்பதாக நாமே நினைத்துக் கொள்வோம். எனவே நமது செயல்களில் மாற்றம் எதுவும் இல்லையென்றாலும், நமக்கு நெருக்கமானவர்களுக்கு நமது செயல்கள் பிடிக்காது போனால் நம் மீது பழகிய காரணத்தால் சிலவற்றை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக ஒரு பெரிய பழியை எதிர்பாராத நேரத்தில் சுமத்துவார்கள். அவர்களுக்கு நமது செயல் பிடிக்கவில்லை என்றே அறிந்திருக்காத சமயத்தில் ஒரு பழியை போட்டுவிடும் போதும், நாம் நிலைகுலைந்து போய்விடுவது உண்மைதான். ஏன் எதற்கு என்று நினைத்துப் பார்த்தால் பழகிய பழக்கம் தான் காரணம். பழகிவிட்டதால் எதையும் உடனடியாக அல்லது பேசி புரிய வைக்க முடியாது என்ற தயக்க உணர்வைவிட பழியை போட்டுவிட்டு உடனடியாக வெட்டிவிடுவது எளிதான வழி போன்ற உளவியல் காரணம் என்று நினைக்கிறேன்.

எனது அலுவலகத்தில் உடன் வேலைபார்பவர் ஒருவரும் நானும் ஒரே பகுதியில் வசிப்பவர்கள். முன்பு இருவருமே ஒன்றாக வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தோம். அவர் அங்கிருந்து வேறொரு அலுவலகத்திற்கு சென்று ஓராண்டுக்கு பின்பு அவரது அலுவலத்தில் வேலை செய்தவர் ஒருவர் விலகவே என்னை அந்த இடத்துக்கு பரிந்துரைத்து அழைத்தார். ஆனால் அந்த அலுவலகம் தொலைவு என்பதால் அதையே காரணம் சொல்லி மறுத்தேன். அவர் நாள்தோறும் அவரது வாகனத்தில் அலுவலகத்தில் செல்லலாம் என்று சொன்னார். உடனடியாக சரி என்று சொல்லாவிட்டாலும் வேலை செய்யும் இடத்தில் மாற்றம் வந்தால் புதியவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதால் சிரிது தயக்கத்திற்கு பிறகு வேலையில் சேர்ந்துவிட்டேன். அவர் தன்னுடைய வாகனத்தில் அழைத்துச் செல்கிறேன் என்கிறாரே என்பதால் அதையே சாக்காக வைத்து அவரது வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாமல் முடிந்த அளவு தவிர்த்தே நான் தனியாகவே அலுவலகம் சென்று வந்தேன். ஆனால் என்றாவது தாமதம் ஆனால் அவருக்கு தொலைபேசிவிட்டு அவருடன் செல்வதுண்டு. இது மாதத்திற்கு ஒரு முறை நிகழ்வது கூட அரிது. இப்படி ஒருநாள் அவருடன் செல்லும் போது வழக்கத்துக்கு மாறாக கடுகடு என்றிருந்தார். காரணம் புரியவில்லை. அதன் பிறகு பேச்சுக் கொடுத்தபோது அவருக்கு என்னை அழைத்துச் செல்வதில் விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு அவருடன் செல்வதை முற்றிலும் தவிர்த்தேன். இது போன்று தான் சிலர் வெளிப்படையாக சொல்ல தயக்கப்பட்டு ஒரு நாள் முகத்தை காட்டிவிடுவார்கள். வெளிப்படையாக சொன்னால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் முகத்தைக் காட்டும் போது உறவுகளே கூட கெட்டுப் போய்விடும். முகம் நோக்க முடியாது போய்விடும்.

எந்த பிணக்குகள் ஏற்பட்டாலும் முற்றிவிடும் முன்பு வெளிப்படையாக பேசினால் எதாவது நல்ல முடிவு கிடைக்கலாம், பாதிப்பின்றி முடித்துக் கொள்ளலாம் இல்லை என்றால் காழ்புணர்வும், முகமுறிவும் தான் மிஞ்சும். இதில் நமது குறைபாடும் உண்டு. நாம் அடுத்தவரை நாடுவது என்பது வெறும் நட்புக்காக, நேர போக்கிற்காக கூட இருக்கலாம். ஆனால் அவர் விருப்பத்துடன் தான் செய்கிறார் / உடன்படுகிறார் என்ற தவறான அனுமானத்தை வைத்திருப்பதால் அவை மோசமாகும் போதுதான் நமக்கே அதுபற்றி தெரியவரும். மனிதர்களின் மனநிலை வேறு வேறு என்பதால் இவை வாழ்க்கை முழுவதுமே அவ்வப்போது எவருடனாவது ஏற்படும் ஒரு விரும்பதாக நிகழ்வுகள் தான். பாடம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை அளவு கோலாகவைத்து எல்லோரையும் எடை போட முடியாது இருந்தாலும் அதுபோன்ற ஒத்த நிகழ்வுகளில் சிறுது முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

டிஸ்கி : இது பதிவுலக பதிவர்கள் எவரையும் குறித்து எழுதப்படவில்லை. குறிசொற்கள் அனுபவம் / நிகழ்வு :)

18 செப்டம்பர், 2007

ஆசிய நாடுகளில் பரவிய அவதாரகதைகள்...



மரணத்துக்கு அச்சப்படதாவர்கள் விண்ணுலகிலும் இல்லை போலும். ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் பிறப்பு இறப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள எதாவது வழி இருக்கிறதா ? என்று பரமசிவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும் அதை எடுத்து உண்டால் மரணமில்லாமல் என்றும் இளமையுடன் வாழலாம் என்றும் கூறினாராம். இது சரியான வழி என்று தேவர்களும் அசுரர்களும் முடிவு செய்து கிருஷ்ணனின் உதவியையும் கேட்டனர். வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு மந்தாகினி மலையை மத்தாக கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பித்தனர். மத்துக்கு கீழே முட்டுக் கொடுத்து தாங்கி பிடிக்க கிருஷ்ணன் ஆமை அவதாரம் எடுத்து தாங்கிபிடித்தாராம்.

அவ்வாறு பாற்கடல் கடையும் போது அதிலிருந்து தோன்றியதுதான் காமதேனு, கற்பகவிருட்ஷம், லக்குமி மற்றும் பல பல. அமிர்த்தம் திரளும் முன்பு வலி பொருக்காமல் வாசுகி(பாம்பு) விஷத்தை கக்க ஆரம்பித்ததும் அதனை எடுத்து சிவன் உண்டதாகவும், சிவனின் உடல் நீல நிறமாக மாறியதையும், வயிற்றுக்குள் சென்றுவிட்டால் ஈரேழு உலகமுமே அழிந்துவிடும் என்பதால் பார்வதி சிவனின் கழுத்தில் கையை வைத்து விஷம் வயிற்றுக்குள் இறங்காமல் தடுத்துவிட்டாள் நீல விஷத்தை தொண்டையில் தாங்கிக் கொண்டுள்ளதால் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்ததாக அந்த கதையில் மேலும் சொல்ல்லப்படும் தகவல். இவ்வாறாக பாற்கடல் கடைந்து அமிர்த்தம் வந்ததும் அவற்றை தாங்கள் மட்டுமே அடைய வேண்டும் என்று தேவர்கள் சூழ்ச்சி செய்தனர். இதற்கு மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணன் உதவி செய்வதாகவும், மோகினியே சமமாக அமிர்த்த கலச்சத்தில் இருந்து அமிர்தத்தை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. தீர்த்து முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுக்கப்பட்டது இதனை தெரிந்து கொண்ட அசுரர்களில் ஒருவன் தேவர் உருவம் எடுத்து தேவர்களுக்கு இடையே நின்று அமிர்தத்தை வாங்கி உண்டுவிடுவான். இதனை அறிந்த கிருஷ்ணன் அந்த அசுரனை நோக்கி சக்ராயுதத்தை வீச அவன் உடல் தலைவேறு முண்டம் வேறாக ஆகிவிடுவான். இந்த அசுரன் ஏற்கனவே அமிர்த்தம் உண்டு இருப்பதால் மரணிக்க மாட்டான். பின்னர் அவன் உடலில் ஒரு பாம்பை வெட்டி தலையை முண்டத்துடனும், உடலை தலையுடனும் இணைக்க ஒன்று இராகுவாகவும், மற்றது கேதுவாகவும் மாறிவிடுவதாக மகா விஷ்ணு அவதாரக் கதைகளில் ஆமை அவதார கதையில் சொல்கிறார்கள். இது போன்ற கதைகளை பயபக்தியுடன் படித்தால் அடுத்தவரின் உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்களை எப்படி ஏமாற்றுவது போன்ற நல்லொழுக்கங்களை கற்றுக் கொள்ள முடியும். :)

புத்தரை கிருஷ்ணனின் ஒன்பதாவது அவதாரமாக (விஷ்ணு என்று) வைணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதால் (பெளத்ததை வைதிக வைணவம் உள்வாங்குதல்) புத்தமதம் பரவிய கிழக்கு ஆசிய நாடுகளில் கிருஷ்ண அவதாரக்கதைகளும் புத்த மதத்துடன் சேர்ந்தே பரவியுள்ளது. புத்தரின் போதனைகளை உள்வாங்கி அத்வைதம் அமைந்ததால் ஆதிசங்கரையும் வைணவர்கள் பிரசன்ன புத்தர் என்றே அழைத்தார்கள். குறிப்பாக இராமயணம் கடல் கடந்து சென்றதற்கு காரணம் அவை புத்தருக்கும் விஷ்ணுவிற்கும் ஏற்கனவே தொடர்பு படுத்திவிட்டதால், வைணவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் வைணவ கதைகளை மேடை நாடகங்களுக்காக பவுத்தர்களால் ஆசிய நாடுகளுக்கு எடுத்துச் சென்று இருக்கக்கூடும், பல கிருஷ்ண அவதாரக்கதைகளும், இராமயணமும் கடல் கடந்து சென்றுள்ளது. அம்மக்களுக்கு கிருஷ்ணன், இராமன் என்றால் புத்தரின் மற்றொரு பிறவி, அவதாரம் என்று தான் கொள்கிறார்கள். கிழக்கு ஆசியவில் பலநாடுகளில் சூரியன் கோவில்கள் இருக்கிறது. ஆனால் அங்கு சூரியன் இல்லை. ஞான சூரியனான புத்தரே அங்கு இருக்கிறார்.

அண்மையில் கட்டப்பட்டுள்ள தாய்லாந்தின் புதிய விமான நிலையமான சொர்ண பூமி விமான நிலையத்தில் மேற்சொன்ன பாற்கடல் கடைதல் பற்றிய அமைப்புக் காட்சி வைக்கப்பட்டு இருந்தது. மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதிகாசங்களுக்கு உருவம் கொடுத்தை இந்தியாவில் சூரசம்ஹாரம் தவிர்த்து வேறெதும் நான் பார்த்தது இல்லை.

படங்களை பெரிதாக பார்க்க 'கிளிக்' செய்யுங்கள்.


அன்புடன்,

கோவி.கண்ணன்

17 செப்டம்பர், 2007

தாய்லாந்தில் விநாயகர் சதுர்த்தி !

விநாயக சதுர்த்தி அன்று தாய்லாந்து பேங்காக்கில் இருக்கும் பேறு பெற்றேன். நானும் எனது நண்பரும் தங்கியிருந்த சிலோம் வில்லேஜ் என்ற நகர பகுதியின் அருகிலேயே மாரியம்மன் ஆலயம் இருந்தது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நல்ல கூட்டம். இந்திய தலைகள் மிக்கவையாக காணப்படவில்லை. தாய்லாந்து இன மக்களும், சீன மக்களுமே மிக்கவர்களாக (அதிகமாக) இருந்தனர். 30 மீட்டர் நீள அகலத்தில் சிரிய கோவில் அதில் நாட்டார் சிறு தெய்வங்கள் காத்தவராயன் உட்பட அனைத்தும் இடம்பிடித்து இருந்தனர். பொன்னிர புத்த சிலைகள் பல்வேறு தோற்றத்தில் மூல சன்னதியில் இடதுபக்கம் இருந்தது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் எடுக்க முடியவில்லை.

தாய்லாந்து அரசு சார்பில் பவுத்த நாடு ? என்பது தெரியவில்லை. ஆனால் 32,000 க்கும் மிக்கவையான பவுத்த கோவில்கள் இருப்பதாக கணக்கு சொல்கிறார்கள். தடுக்கி விழுந்தால் எதாவது புத்தர் சிலைமேல் விழும் அளவுக்கும் எங்கும் புத்தர் பல்வேறு கோலங்களில் காட்சி தருகிறார். கூடவே அரசமரத்தடி புத்தரின் வைதீக வடிமான அதே அரசமரத்தடி சிறிய பிள்ளையாரையும் தாய்லாந்து மக்கள் போற்றுகின்றனர்.

விநாயக சதுர்த்தியன்று இந்தியாவில் நடப்பது போன்றே சிறப்பாக (விஷேசமாக) வழிபாடு நடந்தேறியது. ஆராதனை (அர்சனை) தட்டுகளுடன் தாய்லாந்து மக்களும், சீனர்களும் கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்து சென்றனர். இதைப் பார்க்கும் போது இந்து மதம் வெளிநாட்டில் வளர்ந்திருக்கிறது என்பது போல் தோன்றினாலும் பவுத்தம் இந்துதத்துவங்களுக்கு உரிய இடம் தந்து அரவணைத்து வளர்வது போன்று தான் எனக்கு தெரிந்தது.

பூனூல் அணிந்த வேதியர்களின் ( அவர்கள் பிரமணர்களா ? என்பதை உறுதிபடுத்த முடியவில்லை... ஆனால் தமிழ் பேசுபவர்கள் என்று தெரிந்தது) தேவபாசை மந்திரத்துடன் மேளதாளம் விண்ணைப் பிளந்தது. குறைந்த அளவு தமிழர்கள் அங்கு இருப்பதால் தமிழிலும் அர்சனை பதாகைகளுக்கு தேவை இல்லை என்ற நிலை இருந்தது. கோவில் ஆராதனைக்காக தாய்லாந்து மக்களுக்கு தமிழென்றாலும் வே(ற்)று மொழி என்றாலும் ஒன்றுதான். கோவிலில் எல்லா விளங்கங்களும் தாய் மொழியிலும் (பாஷா தாய்) சில இடங்களில் ஆங்கிலத்துடனும் இருந்தது.

தாய்லாந்து மக்கள் மங்கோலிய இன நிற அடையாளத்தைக் கொண்டவர்கள் (மங்கோலியர் அல்ல) என்றாலும் 'தாய்' மொழியின் எழுத்துருவடிவம் பிரம்மி எழுத்துருவகையைச் சார்ந்ததும்... அதில் சில எழுத்துக்கள் பாலி மற்றும் வடமொழி சொற்களை எழுதுவதற்கென்றே ( தமிழ் ஹ், ஜ, ஷ இன்னும் பிற போன்று ) பயன்ப்படுத்தப்படுவதாக குறிப்புக்கள் இருக்கிறது.

தாய்லாந்தின் சூரியன் கோவில் (WAT ARUN) பற்றிய சுவையான தகவல்களையும், இந்து மத இதிகாசமான இராமயணம் சில ஆசிய நாடுகளில் போற்றப்படுவதற்கான சில காராணங்களையும் வேறு ஒரு இடுகையில் பகிர்வேன்.

12 செப்டம்பர், 2007

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !

தேசியம் என்ற கட்டமைப்பில்... இந்து தேசியம் என்ற சொல்லில் பெரும்பாண்மையினரை நிலைநிறுத்த முயற்சிப்பது போலவே, தேசிய மொழி என்ற பெயரில் இந்தி ஓட்டகம் ஒவ்வொரு மாநிலத்திலும் தலையை நுழைத்து அங்கு இருக்கும் மொழிகளை காலி செய்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் மாராட்டிய மொழி பேசுபவர்கள் குறைந்து, மராட்டிய மொழி திரைப்பட தொழிலும் நசிந்து அந்த இடத்தை இந்தி ஆக்கிரமித்துக் கொண்டாதாக சொல்கிறார்கள்.. இந்த பிரச்சனை தற்பொழுது கர்நாடகாவில் பூதகரமாக உருவெடுத்து வருகிறது.

இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை நேசிக்காதவர்கள் போலவும், தேச விரோதிகள் போலவும் அந்த அந்த மாநிலத்தில் இருக்கும் இந்தி 'அபிமானிகளால்' தூற்றப்படுகிறார்கள். இந்திய மாநிலங்கள் அனைத்தும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதே அந்த அந்த மொழிக்கள் பேசும் மக்கள் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும், வட்டார மொழிகள் பாது காக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் தானே. இந்திய தேசியம் என்றால் வேற்றுமையில் ஒற்றுமை அடிப்படையில் அதில் ஒருங்கிணைந்த பல்வேறு மாநிலங்களுக்கும் அவற்றில் பேசப்படும் மொழிகளுக்க்கும் முதன்வைத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தான் முதன்மையானதாக இருக்க முடியும், இல்லை என்றால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது பொருளற்றது.

தேசிய கட்சிகள் இந்தியா முழுவதும் தேர்தல் பிராசாரம் செய்வதற்கு எளிதாக இருக்கும் என்பதைத் தவிர்த்து இந்தி மொழியின் இந்திய நிலப்பரப்பு தழுவிய பயன் வேறு எதுவும் இருக்கிறதா ?

மராட்டிய மாநிலத்தை விழுங்கியதைப் பார்த்தும், பிறமொழி படங்களால் கன்னட திரையுலகம் நசிந்து வருவதைப் பார்த்தும், மாநிலமுழுவதும் இந்தியின் ஆக்கிரமிப்பால் நம் அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு விழிப்பு ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் மருந்துக்கு கூட கன்னட மொழி பயன்படுத்தப்படவில்லை,
இந்தி விளம்பர சொற்றொடரை (வாசகத்தை) ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள் அதனால் கன்னடம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கன்னட வலைப்பூக்களில் வந்து கொண்டிருக்கின்றன. கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைகளை வலியுறுத்தி பரவலாக பேசுகிறார்கள்.

இந்தி அறிந்தால் இந்தி சீரியல் / சினிமா பார்க்கலாம் என்ற பலனைத்தவிர மொழிவாரி மாநிலத்தவர் கண்ட பலன் வேறு எதுமில்லை. கர்நாடகாவில் நகர்புறங்களில் பேச்சுவழக்கில் இருந்து கன்னடம் முற்றிலும் மறைய கூடிய நிலையில் இருப்பதாக வெளிப்படையாக சொல்கிறார்கள். 'இந்தி' தேசிய மொழி என்பது முட்டாள் தனாமான வாதம் என்று தற்பொழுது கண்டு கொண்டிருக்கிறார்கள். விழித்துக் கொண்டதை பாராட்டுவோம். திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழுக்கு அடுத்து பழைமையான மொழி என்றால் கன்னடம் தான். திராவிட மொழிகளான கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியவற்றிற்கு செம்மொழி தகுதிகள் இருக்கின்றன என்று பாவாணர் ஆய்ந்து சொல்லி இருக்கிறார். செம்மொழி தகுதிக்கு கன்னடியர்கள் முயன்றுவருவதால் தற்பொழுதி இந்தி ஆக்கிரமிப்பு வெளிப்படையாக அவர்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

மொழிவாரி மாநிலங்களின் தத்தம் மொழிகளை தொலைத்துவிட்டால் அந்தந்த மாநிலங்களின் பண்பாடும் சேர்ந்தே தொலைந்து போகும். இந்தி தேசிய மொழி என்று இந்திய சட்டஅமைப்பில் இல்லாத போது ... இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை என்பதோ, தேசியத்திற்கு எதிரானவன் என்று சொல்லும் விஷமத்தனங்கள் கண்டிக்க தகுந்தவை. மாநிலங்களின் மொழியை விழுங்கி ஏப்பமிடவும், புறக்கணிக்கவும் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளும் இந்தி மொழிக் கொள்கை என்ன வகையான தேசிய வாதம் ?


ஒரு கன்னடியரின் இந்திக்கு எதிரான மனநிலையில் வெளிப்பட்ட கருத்து கீழே,

vasant ಅಂತಾರೆ:
nudi-gudi blog inda kaDa tandaddu:

The three pronged approach (through administration, education and media / entertainment) of central govt to impose Hindi has met with success to a considerable degree in some of the states of India. Many of the languages like Bhojpuri, Maithili, Santhali, Rajasthani, Haryanvi, etc have been systematically reduced to "dialects" of Hindi. Many other languages like Punjabi, Marwari, Gujarati, Bengali, Marathi have lost their entertainment industries and are happy entertaining themselves in Hindi, an alien language to most people living in those states. Students in most of the states have been brainwashed that Hindi is the national language of India. Loyalty and patriotism to the nation has been reduced to acceptance of Hindi as the sole "National" and "Link" language. Any Indian having a different opinion on this is branded as not being nationalist enough! A bigger problem this has created is the false sense of superiority in the Hindi speakers. Their expectation that the whole of India speaks Hindi, their reluctance to learn the language of the place they settle in, arrogance that they display in their interaction with fellow non-Hindi speaking Indians is the biggest threat to national integration.
8. I never knew all this was happening. I am aware of this issue now. What should I do?
• Be aware that Hindi is not the ONLY national language of India. All the languages spoken in India are National languages. Please create this awareness in people around you.
• If you are residing in non-Hindi states, ensure that you conduct all the transactions at central government offices and banks in the language of the land or English. Do not use Hindi.
• Boycott Hindi films and music in non-Hindi speaking states. Encourage the media and entertainment industry of the place you live.
• Boycott schools and colleges that teach ONLY Hindi and not the local language in non-Hindi states.
• In non-Hindi states, converse with Hindi speakers in the language of the land or English. Do not converse / transact with them in Hindi.



அன்புடன்,

கோவி.கண்ணன்

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் குறித்து...

எனது பெயரில் சில இடங்களில் வெளியான பின்னூட்டங்களை சுட்டிக்காட்டிய பதிவு நண்பர்கள், அவை என்னுடைய பின்னூட்டமா ? என்று கேட்டார்கள். குறிப்பாக தோழியர் தமிழச்சியின் பதிவில்

//
Anonymous said...
தாங்கள் கராத்து வகுப்புக்கு செல்ல ஆரம்பித்து இருப்பதாக கெள்விபட்டேனே ! :-). உண்மையா ?. உங்களை மிரட்டுபர்கள் உங்கள் தோழர்களாகத்தான் இருப்பார்கள். உங்கள் மன திடத்தை சோதிப்பதர்காவோ ? அஞ்சாதீர்கள்.
ஒர் கடி ஜோக் சொல்லிவிடுங்கள்.

கோவி.

9:48:00 PM
//

மற்றும் அனானி / அதர் ஆப்சன் புகழ், திருவாளர் டோண்டு ராகவன் பதிவில் மற்றொன்று

//Anonymous said...
என்னுடய தனிப்பட்ட கருத்தில் தில்லியில் இந்த கை ரிக்ஷாவை ஒழித்தால் நன்றாக இருக்கும். இந்த கை ரிக்ஷா இந்தியா இன்னும் மிகவும் ஏழை தேசம் என்று பறைசாற்றும்.

கோவி

September 11, 2007 11:12 PM //

என்றும் இருந்தது.

நான் அனானியாக எவருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை. நான் ப்ளாக்கர் கையப்பத்துடன் மட்டுமே பின்னூட்டம் போடுகிறேன். எனது பின்னூட்டங்களில் புரொபைல் புகைப்படம் இருக்கும். எனவே என் பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் அவை என்னுடைய கருத்து அல்ல. கோவி என்று வேறொருவர் இருக்கிறாரா என்று தெரியாது. எனவே மறுமொழி இடுபவர்கள் அதற்கு மறுமொழி இட்டால் அவை எனது கருத்தாக எடுத்துக் கொண்டு எனக்கு சொல்வது போல் மறுமொழி இடவேண்டாம்.

நான் பார்த்த என் பெயரில் வெளியான அந்த பின்னுட்டங்களில் ஆபாசம் இல்லை. எனவே அதுபோன்ற பின்னூட்டங்களை வெளியிடுவதும், வெளியிடாததும் பதிவர்களின் முடிவே.

எனது கருத்து...ஆபசமில்லை என்றால் எனது பெயரில் வெளியாகும் அனானி பின்னூட்டங்களை விருப்பப்பட்டால் வெளி இடுங்கள்.


எனது பெயரில் பின்னூட்டம் போட ஆசைப்பட்டால் மேற்கண்ட பின்னூட்டங்களைப் போல் ஆபாசம் இல்லாது நகைச்சுவையுடன் கூடிய பின்னூட்டங்களை போடவேண்டும் என்று அந்த அனானி தம்பிக்கு வேண்டுகோள் வைத்து நன்றி கூறிக் கொள்கிறேன்.

10 செப்டம்பர், 2007

தந்தை பெரியார் தமிழ் விரோதி ?

பெரியார் தமிழை முன்னிறுத்தவில்லை, மாறாக 'திராவிடர் இயக்கம்' என்று சொல்லை முன்னிறுத்திவிட்டார், அவர் தம்மை கன்னடர் என்று கருதி இருந்ததாலேயே தான் திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர், எனவே பெரியார் தமிழுக்கு விரோதியா ? என்கிற ஐயப்பாட்டை நண்பர் அரைபிளேடு வெளிப்படுத்தினார்.

எந்த ஒரு கொள்கைகள் அல்லது மேடை பேச்சுக்கள் ஆகியவை அவை எந்த சூழலில் சொல்லப்பட்டவை என்பதை பொதுமக்கள் நினைவு வைத்திருக்க மாட்டார்கள் என்பதால் குட்டையை குழப்பி மீன் பிடிப்பதில் அதிக மீன்களை சுலமாக பிடிக்க முடியும் என்பது ஒரு வகை உத்திதான். பெரியார் கொள்கைகளை அறிந்த நண்பர் அரைபிளேடு அதுபோல் செய்திருக்க வாய்ப்பில்லை. 'திராவிட' என்ற சொல்லே 'சூத்திர' பாசை என்று இழித்துக் கூறப்பட்ட தமிழை முதன் முதலில் பலுக்கத் தெரியாமல் (உச்சரிப்பில்) திரித்துச் சொல்லப்பட்ட தமிழின் மற்றொரு பெயர் ( பாவணர் கூற்றுப்படி தமிழ் > த்ரமிள > த்ரமிட > திராவிட). பின்னாளில் தமிழிலிருந்து திரிந்து போன மொழிகளே கன்னடம், தெலுங்கு, துளு மற்றும் மலையாளம். இவை பேசப்படும் நிலப்பரப்புகளை நாம் இன்னாளில் திராவிட நிலங்கள் என்று புதிதாக அடையாளப்படுத்தவில்லை. அவை ஏற்கனவே வடமொழியாளர்களால் அப்படி குறியீடு செய்யப்பட்டவைதான். சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் திராவிட என்ற சொல்லை பார்பனீய அல்லது பிராமன சித்தாந்தங்களுக்கு எதிராக பயன்படுத்தி அந்த சொல்லை வெளிக் கொணர்ந்தவர்
அயோத்திதாச பண்டிதர். அதன் பிறகே பெரியாரும் அதே சொல்லை திராவிட இயக்கம் என்ற பெயருக்கு பயன்படுத்திக் கொண்டார்.

எதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிய கொடுமைகள் நடப்பதாக பெரியார் நினைத்திருந்தால் 'தமிழர் இயக்கம்' என்று கூட வைத்திருந்திருப்பார். அவர் கேரளா வைக்கம் வரை சென்று போராடி இருப்பதை நினைவு கூர்ந்து பார்க்கையில் ஒட்டு மொத்த திராவிட நிலப்பரப்பும் சாதிய கொடுமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்று பரந்த நோக்கில் 'திராவிடர் இயக்கம்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். பெரியார் தம் இயக்கம் வலுப்பெற்றிருந்தாலும் அதை அரசியல் கட்சியாக்கி நிறுவனப்படுத்த பெரியார் நினைத்தவர் அல்ல. இந்நாளில் திராவிட கட்சிகள் கொள்கைகளை மறந்து 'தூய அரசியல்' செய்து கொண்டிருப்பதை பார்க்கையில் பெரியாரின் முன்னறிதலால்(தீர்க தரிசனம்) உணர்ந்திருந்து, திராவிட இயக்கம் அரசியல் கட்சியாக வளர்ந்தால் அதனால் சமரசங்கள் ஏற்பட்டு கொள்கைகள் திரியும் என்று நன்கு உணர்ந்திருந்தார்.

பெரியார் சுதந்திர நாளை துக்க தினமாக அறிவித்ததற்கு காரணமே ஆட்சி அதிகாரம் என்பது ஆதிக்க சக்திகளின் கைகளில் வீழ்ந்து மீண்டும் இந்திய பழமை வாதத்தைத் தாங்கிப் பிடித்து, மூவர்ண கொடி என்பது நான்கு வருண கொடியாகவே ஆகிவிடும் என்று நம்பியதால் தான். அதையே தான் மகாத்மா காந்தி வேறு வடிவில் வலியுறுத்தினார். அதாவது சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். பெரியார் சொன்னதும் சரி, மகாத்மா சொன்னதும் சரி இரண்டுமே ஆதிக்க சக்திகளின் கையில் மீண்டும் இந்தியா விழுந்துவிடும் என்று நன்கு உணர்ந்தாதால் ஏற்பட்ட மாற்றுச் சிந்தனைகள். அண்ணாதுரை போன்றவர்கள் சுதந்திர தினம் என்பது சுதந்திர போராட்ட வீரர்களின் குறுதிக்கு கிடைத்த பலன் என்றும் அந்த சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தது தவறு என்று போர் கொடி தூக்கிவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கினார். திராவிட கட்சிகளின் உதயம் என்பது சுதந்திரம் அடைந்ததை குறித்த வெளிப்படையான கருத்துக்களால் பெரியாருக்கும் அவரது பற்றாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவான இயக்கம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவாக்கி முதல்வராக அமர்ந்த அண்ணாதுரை அவர்களும் அந்த வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கி தாம் பெரியாரின் பாசறையை சேர்ந்தவர் என்று பெரியாருக்கே புரியவைத்தார் என்பது பெரியார் திரைப்படத்திலும் பதிவாகி இருக்கிறது.

பெரியாரின் தமிழ்பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தகாலத்தில் தமிழ் முற்றிலும் சிதைந்ததாகவே இருந்தது. அப்பொழுது இருந்தது தமிழ் 'மொழி' அல்ல, வடமொழியை கலந்து திரிக்கப்பட்ட மணிப்பவள தமிழ் 'பாஷை'. அதன் இயல்பு நடையெல்லாம் தொலைந்து போய் பக்தி இலக்கியங்களையும், வடமொழி மொழிப்பெயர்பான இராமயணம், மகாபாரத கதா கலேசபங்களைத்தான் விழாக்களில் அரங்கேற்றி வந்தனர். பெரியார் அறிந்திருந்த தமிழ் காட்டு மிராண்டி 'பாசை' என்று சொல்லும் அளவுக்கு அது களங்கப்பட்டு இருந்தது. திருக்குறளுக்கு கொடுக்கப்பட்ட திரிக்கப்பட்ட விளக்கங்கள் போன்றே சிலப்பதிக்காரகதைகளின் உட்பொருளை சிதைத்து கற்பை முன்னிறுத்தி அவை உயர்வாக பேசப்பட்டது. இதையெல்லாம் பார்த்தே பெரியார் பழமைவாதம் பேசும் மொழியாக தமிழை நினைத்து தமிழ் 'காட்டு மிராண்டி பாசை' என்றார். பின்னாளில் அவர் கொடுத்த ஊக்கத்தில் தான் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் போன்றவர் தமிழில் இருந்த வேற்று மொழிச் சொற்களுக்கு மாற்றான புதிய தமிழ் சொற்களை சங்க இலக்கியங்களில் இருந்து அறிமுகப்படுத்தினர். பக்தி பாடல்கள் எழுதினாலும் பெரியாரின் சீர்த்திருத்த எழுத்துக்களைத்தான் அவற்றில் பயன்படுத்துகிறோம் :) பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது போன்று அக்கரைகளினால் எழுந்த கோபமேயன்றி அது துவேசம் இல்லை.

'மெல்லத் தமிழினி சாகும்' என்று சொல்லில் தமிழ் வீழவேண்டும் என்ற ஆசையில் தான் பாரதி தமிழுக்கு சாபம் கொடுத்தான் என்று நாமாகவே நினைத்து கேள்வி எழுப்பி பாரதியின் தமிழ்பற்றை குறைபட்டுக் கொள்ளவது எவ்வளவு நம் அறியாமையை காட்டுமோ, அது போல் தான் தந்தை பெரியாரின் தமிழ் குறித்த பேச்சுக்கள் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள்.

9 செப்டம்பர், 2007

பதிவர்கள் இருவருடன் ஒரு மினி சந்திப்பு.

அண்மையில் நான் வலைப்பதிவில் கண்டுகொண்ட சிங்கைப்பதிவர்கள் இருவரை இன்று சந்தித்தேன். ஒருவர் பாரி. அரசு என்கிற அரசு. மற்றவர் ஜெகதீசன். அரசு பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர், ஜெகதீசன் விருதுநகர் மாவட்டத்துக்காரர். இருவருமே இளைஞர்கள். அரசு முப்பதைத் தாண்டாத இளைஞர், ஜெகதீசன் 27 வயது இளைஞர்.

இந்தவாரம் ஏற்கனவே தொலைபேசியில் பேசி வைத்துக் கொண்டபடி நேரடியாக சந்திப்பதற்கு முடிவு செய்து ஜெகதீசனுக்கு தொலை பேசிவிட்டு அரசு அவர்களை நூலகத்தில் காத்திருக்கச் சொன்னேன். எனது நிழல்படத்தை அவர் பார்த்திருந்ததால் உடனடியாக கண்டுகொண்டார். அதன் பிறகு வந்து இணைந்து கொண்ட ஜெகதீசனுக்கும் எங்களை அடையாளம் கண்டுகொண்டதில் சிரமம் இல்லை. பின்பு மூவரும் அரசுவின் இல்லத்திற்கு சென்றோம். ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டதைத் தொடர்ந்து பேச்சு வலைப்பக்கம் பற்றி சென்றது.

அரசு நீண்டகாலமாக பல்வேறு இணைய தமிழ் குழுமங்களில் செயலாற்றியதையும், பல்வேறு சமூகம் அமைப்புகளில் தம் +2 கால வயதுகளில் செயல்பட்டதையும், சில கட்சிகளில் வெளியில் இருந்து களப்பணி ஆற்றியதையும் தெரிவித்தார். சிங்கை வந்த பிறகும் தமிழ் 99 என்ற பட்டறை நடத்துவதற்கு தன்னார்வர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சிங்கையில் பழுதில்லாத பழைய கணனிகளை வாங்கி தமிழகத்தில் உள்ள ஏழைப் பிள்ளைக்கள் படிக்கும் கிராம பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கும் சேவையை பகிர்ந்து கொண்டார். பல்வேறு சமூக அரசியல்களையும், கட்சி அரசியலின் வரலாறுகளை நன்கு அறிந்திருக்கிறார் என்பது அவருடன் உரையாடியதில் இருந்து தெரிந்து கொண்டேன். மேலும் சென்ற வருடத்திற்கு முன்பு சொந்தமாக கணனி நிறுவனம் அமைத்து பல கல்லூரிகளுக்கு கணனி மையங்களை அமைத்து கொடுத்ததாகவும். பின்பு ஒரு அரசியல் வாதியால் தமக்கு நட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிங்கைக்கு விமானம் ஏறிவிட்டதாகவும் சொன்னார் :( சொந்த நாட்டையும், பிறந்த மண்ணையும் நேசிப்பதை அவரது பல்வேறு தகவல்களின் ஊடாக கண்டேன். அரசியல் கட்சிகளில் தொண்டர்களால் வெளிப்படையாக நடக்கும் கொள்கை முரண்பாடுகளையும், கட்சிகளுக்குள் நடக்கும் சிலரின் சாதி அரசியலையும் நேரில் பார்த்து அதிர்ந்த விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். பின்பு நேரம் கிடைக்கும் போது அதுபற்றி எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அடுத்து நம் ஜெகதீசன், அதிகம் பேசவில்லை. ஆனால் முகத்தைப் பார்க்கும் போது மாறாப் புன்னகைப் பூக்கும் முகம். துடிப்பான இளைஞர், நாங்கள் இருவர் பேசுவதையும் ஆர்வமாக கேட்டுக் கொண்டு அவ்வப்போது தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இவரும் மக்களை அடிமை படுத்தி வைத்திருக்கும் இறைதத்துவங்களின் மறுப்பாளர் என்று சொன்னார். பல்வேறு வலை அரசியல்கள் பற்றி வியப்பாக கேட்டுக் கொண்டார். என் பங்குக்கு நானும் வலைப்பதிவு எழுதும் போது தனிமனித தாக்குதல் குறித்து எவரும் பின்னூட்டினால் அனுமதிக்காதீர்கள். தனிமனிதரை தாக்கும் வண்ணம் உங்கள் கருத்துக்களை புரிந்து கொள்வது போன்று எதையும் எழுதிவிடாதீர்கள் என்று எனது வேண்டுகோளை வைத்தேன். அதைவிட முக்கியம் இளைஞரான உங்களுக்கு தற்பொழுது வேலைப்பார்க்கும் தொழிலில் புதிய நுட்பங்களை கற்றுக் கொள்ள இதுவே சரியான வயது எனவே அதற்குத்தான் அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்றும் எனது கருத்தைச் சொன்னேன்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த எங்கள் சந்திப்பில் இருமுறை காஃபி, ஒருமுறை குளிர்பானம், அதனுடன் மிக்சர் என நேரம் கடந்ததே தெரியவில்லை. இரு தம்பிகளை சந்தித்து வந்தது போன்ற உணர்வுடன் வீடுவந்து சேர்ந்தேன்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

இருத்தலை தக்கவைத்துக் கொள்ளும் நவின சித்தாந்தம் !

ஆங்கிலத்தில் அருமையான ஒரு சொல் 'சர்வைவல் ஆப் பிட்டெஸ்ட்'. அதாவது 'எது போராடுகிறதே அதுவே வாழ்கிறது' என்பது எளிமையான தமிழ் பொருள் விளக்கம். ஒருவனுக்கு தனிமனிதன் என்பது ஒரு அடையாளம் என்றால் அதன் இருப்பை நிறுத்திக் கொள்ள குடும்பம் என்ற அமைப்பு தேவைப்படுகிறது. அதன் பிறகு அந்த குடும்பங்களின் இருப்பை தக்கவைக்க, அது ஒரு சமூகத்தின் அங்கம் என்ற அமைப்பின் பின்னால் அது இருக்கிறது, சமூகம் இனக்குழுக்களுக்கு பின்னால், இனக்குழுக்கள் மதம் என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால் நிற்கிறது.

இதில் சமூகம் மற்றும் இன என்ற அடிப்படையில் திரளுபவர்களே இருத்தலை தக்க வைத்துக் கொள்ளு வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக நினைத்து எப்போதும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு கருவியாக மதம், அதில் ஈடுபாடுள்ள உள்ள பிற இனத்து மக்கள் உணர்வுகளைக் கூட உரமாக்குகிறார்கள். தம் இனம் செழித்தால் மட்டுமே தம்மால் வாழ முடியும் என்ற நம்பிக்கையின் பின்னால் தான் அனைத்துவகையான சமூக அரசியலும் பின்னப்படுகின்றன. இந்த அரசியலில் புகுத்தப்படும் கடவுள் நம்பிக்கைகள் என்பது வெறும் ஆத்திகம் அல்லது பக்தி சார்ந்தவையே அல்ல. அதற்கும் மேல் குறிப்பிட்ட இன அமைப்பைக் கட்டிக் காக்கும் கேடயங்களாகத்தான் அவை பயன்படுகின்றன. அநதந்த மதங்களை உயர்வு என்று தாங்கிப் பிடிக்கும் இனக்குழுக்களை ஆராய்ந்தால் இது வெட்ட வெளிச்சமாக தெரியும். இந்த அரசியல் தெரியாது கடவுள் நம்பிக்கை தவிர்த்து அதன் பெயரில் மதநம்பிக்கைக் கொண்டவர்கள் பரிதாபத்துக்கு குறியவர்கள் தாம்.

புரட்சி, மறுமலர்ச்சி என்ற நிகழ்வுக்குப் பின்னால் உண்மையில் புரட்சி நடந்து பொதுமக்களுக்கு நன்மை நடந்திருக்கிறதா ? என்று அவை நடந்து 50 ஆண்டுகளுக்கு பின் பார்த்தால் 90 விழுக்காடு புரட்சிகளின் மூலம் அதிகாரவர்கத்தின் கைமட்டுமே மாறி இருக்கிறது என்பது தெளிவாக தெரியும்.

எல்லாவகையான சமூக அரசியலுமே, இனக்குழுக்கள் தமக்குச் சாதகமான வாழ்வாதரங்களைக் கட்டமைப்பதும், அவற்றினால் பாதிக்கப்படுபவர்கள் அதை சீர்குலைத்தலும் மட்டுமே நடக்கிறது. அதாவது பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்த அவர்களுக்கான மறுகட்டமைப்பு என்றும் அதைச் சொல்லாம்.

குறிப்பிட்ட இனக்குழுக்களின் முழுச் சமூக கட்டமைப்பு என்பது மின்சாரம் இல்லாத, அல்லது தகவல் தொடர்பற்ற காலங்களில் மிக மெதுவாக பின்னப்பட்டு இருந்தாலும் அவை முழுதாக கட்டி முடிக்கப்பட்ட காலங்களை கணக்கிட்டால் அவற்றைச் சீர்குலைக்க அதே தகவல் தொடர்பு அற்ற காலமாக தற்போதும் இருந்தால் நீண்ட நெடிய காலம் ஆகும். ஆனால் அதற்குள் அநத குறிப்பிட்ட இனக்குழுக்கள் புதிய கருத்தாக்கத்தில் தங்கள் பழைய கட்டமைப்பை பழுதுபார்த்துவிடும். பல்வேறு காலகட்டங்களில் புதிய சிந்தனைகளை உள்வாங்கிய பல்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த உயர்சாதியினராக தங்களை அறிவித்துக் கொண்டவர்களிடையே வந்த மாற்றங்களைப் பார்த்தால் இந்த சமூக அரசியல் நன்கு புரியும்.

ஆனால் நவினகாலமான தகவல் தொழில் நுட்பங்கள் மிக்க இந்தகாலத்தில் ஒருபக்கம் அனைவரும் சமம் என்ற சித்தாந்ததிற்கு வந்ததாலும். இன அடையாளம் என்பதை உயர்பிரிவினர் விட்டுவிடத் தயாராக இல்லை, இருத்தலை தக்கவைத்துக் கொள்ளும் பழைய பயத்தின் காரணமாகவே, இனம் என்ற அடையாளத்தை தற்காலிகமாக மறைத்துக் கொண்டு மதத்தை பயன்படுத்துகிறார்கள். தனிமனித வாழ்கைக்கு மதம் எந்த வகையிலும் பயன் தராது. மதம் என்பது இனக்குழு என்ற அமைப்பிற்கு மட்டுமே பயன் தரும். இந்த நூண்ணியல் அரசயலோ அல்லது இறைவன் வேறு மதம் வேறு என்று புரியாத இறை நம்பிக்கையாளர்களே தான் மதகலவரங்களுக்கு பலிகடாக்கள் ஆக்கப்படுகின்றனர்.

மதங்களை இறைவன் படைத்தான் என்றால் பல்வேறு மதத் தோற்றங்களும், ஒவ்வொன்றின் தோற்றத்திற்கான காரணமாக எது இருந்திருக்கும் ? மத அரசியல்கள், சமூக போராட்ட அரசியல்கள், அதன் கட்டமைப்புகள் என எதுவுமே புனிதத் தன்மை வாய்ந்ததோ, ஒட்டுமொத்த உலக அமைப்புகளுக்கு சுதந்திரம் தருவது என்பதல்ல.இவை மற்றவர்களை ஒடுக்குதல் அல்லது தமது ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்ளுதல் என்பவை தாம். அதில் பாதிப்பு அடைந்து தங்கள் கட்டமைபுகள் சிதைக்கப்பட்டதாக பின்பு அதைப் புரிந்து கொண்ட மற்ற இனக்குழுக்கள் அதிலிருந்து மீளுவதற்கு நடத்தும் மற்றொரு சமூக அரசியல்கள் மற்றொரு கட்டமைப்பு. உதாரணம் ஆதிதிராவிடர்கள் என்னும் தென்னிந்திய பழங்குடி மக்கள் ஆரியர் வருகைக்கு முன் பெளத்தத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவும் கல்விக் கேள்விகளில் பிராமனர்களை ஒத்தவர்களாகவும் இருந்தனர் என்கிறது வரலாற்று குறிப்புகள். பின்பு பிராமணர்களின் ஆளுமை, அதன் பிறகு சென்ற நூற்றாண்டிலிருந்தே பிராமணர்களின் வீழ்ச்சி. வெள்ளையருக்கு எதிரான தென் ஆப்ப்ரிக்க கருப்பின மக்களின் போராட்டங்கள் என பலப்பல வரலாறுகள் இவைதான் உலகம் தோன்றி மனித குழுக்கள் முதன் முதலில் பிரிந்ததிலிருந்து நடந்துவருகின்றன. தற்பொழுது இந்த சமூக இன அரசியல்கள் வெட்டவெளிச்சமாகி வருவதைத் தொடர்ந்து,

எதிர்காலத்தில் மதங்களையும், இனக்குழு அடையாளங்களையும் அனைவருமே புறக்கணிக்க ஆரம்பித்துவிடுவர். இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்கனவே நடந்துவருபவைதான். இது உலகம் தழுவி நடந்தேறும் போது இவற்றினால் பயன் இல்லை என்ற சூழல் வரும் போது, மத, இன அடையாளங்களை ஆசையாக அணிந்தவர்களும் தூக்கி போட்டுவிடுவார்கள்.

நடக்கும் அல்லது நடந்த இனம் சார்ந்த சமூக அரசியல்கள், மத அரசியல்கள், அதற்கான போராட்டங்கள் எதுவுமே புனிதத்தன்மை வாய்ந்தது அல்ல. சரி தவறு என்றெல்லாம் சொல்லி விட முடியாது. இவைகள் யாவும் அவரவரின் (இனக்குழுக்கள்) இருத்தலை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதற்காக அவ்வப்போது தம்குழுக்களை புதுப்பித்துக் கொள்ள நடக்கும் போராட்டமே.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

7 செப்டம்பர், 2007

இந்து வழிபாடுகளில் மறுமலர்ச்சி ?

உலகம் சுருங்கி ஊடகங்கள் பெருகியதைத் தொடர்ந்து, சாமியார்களையும், அவதார புருஷர்களையும் தள்ளிவிட்டு பார்த்தால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்துமதம் ஓரளவுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கிறது. பழமை வாதிகளைத் தவிர்த்து கட்டுப்படுத்துபவர் என்று எவரும் இல்லை என்பது வேறு பற்றியம். புதிய சாமிகள், அவற்றிற்கான புராணங்கள் தற்காலத்தில் / அண்மைக்காலத்தில் ஏற்பட்டத்தாக தெரியவில்லை. மாறாக அது புதிய வழிபாட்டு முறைகளை கொண்டுவந்து மக்கள் மத்தியில் கடைவிரித்திருக்கிறது. இதற்கு இரு உதாரணங்களைச் சொல்ல முடியும் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக பெரிய அளவில் தென் மாநிலங்களைத் தழுவிய ஐயப்பன் வழிபாடும் அதற்கான விரத முறைகளும். எதோ சில ஒழுக்கங்களை கட்டுப்பாடுகளாக விதித்திருப்பதால் முயன்று பார்பவர்களுக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது.

48 நாள் விரதம் செருப்பணியக் கூட தடை, விரத காலத்தில் பிரம்மசாரியம் என்பதெல்லாம் ஒரு இந்து பக்தனுக்கு மாறுபட்ட அனுபவமாக இருப்பதால் மனதளவில் பலரையும் ஈர்த்தது என்று சொன்னால் மிகையல்ல. கருப்பு நிற வேட்டி என்றால் கலங்கியவர்களுக்கு மத்தியில் அதே கருப்பு வேட்டியில் மழிக்காத தாடியிடன் ஆத்திக பெரியார்கள் தமிழகம் முழுவதும் காட்சிக் கொடுத்து பெரியார் மீது இருந்த பயம் உயர்வர்கத்தினர் என்று தங்களைக் கூறிக் கொள்வர்களுக்கு நீங்கியது என்று சொல்லலாம். ஏழைப்பணக்கார்ரன் பார்க்காது அனைவரையும் 'சாமி' என்று அழைப்பதாலும், எந்த சாமியின் காலிலும் எந்த சாமியும் வயது, சாதி வேறுபாடு இல்லாமல் விழுவதால்.

ஐயப்ப வழிபாடு இந்து சமயத்துக்குள் சாதி நல்லிணக்கத்துக்கு குறைந்த பட்சம் விரதகாலங்களில் வழி அமைத்தது. நான் 12 வயதில் ஐயப்பனுக்கு மாலை போட்ட போது என் அப்பாவே என் காலில் விழுந்து இருக்கிறார். ஐயப்ப வழிபாடு வைதிக மரபை முற்றிலும் புறந்த தள்ளவில்லை என்றாலும் அதிலிருந்து வெகுவாக விலக்கி இருந்து பிறமதத்து ( இஸ்லாமிய அரசர் வாபர் போன்ற) அன்பரையும் போற்றும் படி அமைந்தது அதன் சிறப்பு. ஆனால் ? ஆனால் ? பெண்களை தள்ளிவைத்து 'தீட்டு' பார்பதால் ஐயப்ப வழிபாடு மாறுபட்ட வழிபாடு என்றாலும் அது வைதிக மரபின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதை அண்மை நிகழ்வுகளைப் நாம் பார்த்து இருப்பதால் ஓரளவுக்கு வைதீக ஐய(ப்ப) வழிபாடு.

மற்றொன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு. வைதீக மரபினரே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழக இந்து சமயத்தில் அதைச் சாராத, மற்றும் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் வைதிக வழிப்பாட்டு முறைகளை முற்றிலும் மாற்றி வேள்விகளையும், பூசைகளையும் பெண்களும் செய்யலாம் என பெண்களை முன்னிறுத்தி ஏற்பட்ட பங்காரு அடிகளாரின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் பெருவாரியான மக்கள் மத்தியில், குறிப்பாக குடும்பத் தலைவிகளான பெண்கள் மத்தியில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. கிட்டதட்ட ஐயப்பன் வழிபாடு போன்றே இருமுடி எடுத்தல், நடைபயணம், தனிப்பட்ட ஆடைகள் என அத்தனை அம்சங்களையும் வைத்தும், அதே போன்று மண்டல விரதங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் பங்காரு அடிகளாரின் சக்தி சமயம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை அங்கு (ஆசை) ஆசிகளுக்கு வரும் மத்திய அமைச்சர்களையும், சந்திரமுகி வெற்றிக்காக வேண்டி படையப்பா படக்குழுவினர் படையெடுத்ததை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.

சூத்திரன் நுழையக்கூடாது, பெண்கள் கருவறைக்கு வரக்கூடாது என்ற நெறி(முறை)யற்ற வைதீக கட்டுப்பாட்டுக்களை உடைத்தெறிந்து மாதவிலக்கு நேரத்திலும் உடல் தூய்மையும், மனத்தூய்மையும் இருந்தால் இறைவி (சக்தி)யை தொட்டு பூஜை செய்யமுடியும் என்ற அதிரடி அறிவிப்பில், இதுகாறும் பெண்களில் மாதவிலக்கு என்பது சாபக் கேடு என்றும் பெண்களின் கறை என்று சொன்னவர்கள் எல்லாம் பேச்சற்று போனார்கள். கல்லையும் மண்ணையும் கடவுளின் அம்சம் என்றே மக்களை ஏமாற்றி வந்ததால் பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தியை தூற்ற முடியாமல் ஊமையானார்கள். ஆனால் கல்கி சாமியாரையும், சாயிபாபாவையும், லோக குருக்களையும் கடவுளாக பார்பவர்கள் எவரோ அவர்களே அதை மறைத்துவிட்டு சொல்லடிகளாக பங்காரு அடிகளார் மீதான தனிமனித விமர்சனம்,தூற்றல் என்று போனது நகைமுரண். உயிரோடு இருக்கும் ஒரு மனிதர் தம்மை கடவுள் படத்துடன் இணைத்துக் கொள்வது பாவம் என்றும், அவர் சாமியார் அல்ல ஆசாமி என்று பல்வேறு கதைகளை கட்டவிழ்த்தார்கள். கவனிக்க ! நான் எனது தனிப்பட்ட கணிப்பாக பங்காரு சொக்கத்தங்கம் என்று சொல்ல முயற்சிக்க வில்லை :)))

கடவுள் எது, எவர் முன்னிறுத்தும் கடவுள் உண்மையானவை என்பதெல்லாம் முன்பு போல் உயர் சமூகத்தினாரால் மட்டுமே தீர்மாணிக்க முடியாது என்பதை பங்காரு அடிகளாரின் வழிபாட்டு மன்றத்தின் வெற்றி உணர்த்துவதால், தமிழக பக்தர்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள், வைதிக / ஆகம வழிபாட்டு முறைகளில் பெரிதாக ஒன்றும் பற்றுதல் கொண்டிருக்க வில்லை. பக்தியில் தேவையற்ற கட்டுப்பாடுகள் களையப்படவேண்டும் என்றும் விரும்பி இருக்கிறார்கள் என்றும் கொள்ள முடிகிறது.


குறிப்பு உதவி நூல் : தமிழர் பண்பாட்டு வெளிகள் - ஆசிரியர் க சு நடராசன்.

6 செப்டம்பர், 2007

உறவுமுறை(யற்ற) திருமணங்கள் !

திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம் (காதல் திருமணம்) இருந்ததாக இலக்கிய குறிப்புகள் சொல்லுகின்றன. முருகன் வள்ளியம்மையை வளைத்தது களவு மணமாம்.

வருணம் (சாதி பேதம்) செழித்து வளர்ந்த பின்புதான் சாதிக்குள் திருமணமும், அதுவும் பெற்றோரால் பார்த்து வைக்கப்பட்டதாகவும் மாறி இருக்கிறது. குடும்ப வழக்கம் (சம்பிரதாயம்)என மாறிவிட்ட திருமண நிகழ்வை மனம் போல் மாங்கல்யம் என்பதெல்லாம் பெயரளவுக்குச் சொல்வதுதான். நமக்கு முன்னோர்களும் பெற்றோர்களாலேயே திருமணம் செய்து கொண்டுள்ளதால் இளையர்களும் அது தான் முறையானது என்று திருமண முறைகளை ஏற்றுக் கொண்டு, இது இந்திய வழக்கம் என்ற பரிணாமத்தை அடைந்துள்ளது.

பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்களை இந்துக்கள் மட்டுமா கடைபிடிக்கிறார்கள் ? இல்லையே இந்தியர் அனைவருமே தத்தம் மதக் கோட்பாட்டுக்கு ஏற்றவாறு பெற்றோர் நடத்தி வைக்கும் திருமண முறைகளையே பின்பற்றுகின்றனர்.

வரதட்சனை வாங்கும் பழக்கம் தமிழக இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்பதை இஸ்லாமிய நண்பர்கள் மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பொதுவாக நமக்கு அடுத்து இரண்டு வயது குறைவாக இருந்தால் தங்கைக்கு மணம் முடித்துவிட்டுதான் அண்ணனாக இருக்கும் நாம் திருமணம் செய்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் இப்படித்தான். சில சமயம் சூழ்நிலையின் காரணமாக அண்ணனுக்கு திருமணம் முதலில் ஆவதும் உண்டு. கீழக்கரையைச் சேர்ந்த எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் தமது தங்கைக்கு திருமணம் விரைவில் முடிக்க வேண்டும் அதற்காக தாம் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். எனக்கு வியப்பாக போய்விட்டது. அதற்கும் இதற்கும் என்ன தொடர்போ ? என்றேன். அவர் சொன்னார், பெண்விட்டில் கொடுக்கும் பணத்தை வைத்துதான் எனது தங்கை திருமணத்தை நடத்த முடியும் அதனால் தான் நான் இப்போது திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்றார். கீழக்கரை போன்ற ஊர்களில் இஸ்லாமிய மணமகனுக்கு அவர் குறைவாக சம்பாதிப்பவராக இருந்தாலும் சுமார் 5 லட்சம் வரை கொடுப்பார்களாம்.
இந்த வேண்டாத பழக்கத்தை இந்துக்களிடமிருந்தே தமிழக இஸ்லாமியர்கள் பின்பற்றி இருக்க வேண்டும். இன்னும் இது அவர்களிடையே நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களால் ஏற்பாடும் ஒரு சிக்கல் என்பதற்க்காக இதை இங்கு குறிப்பிட்டேன்.

பதிவின் தலைப்புக்கு வருவோம்.

இந்துக்களில் மாமன் மகள் / மகனை மணந்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் சொல்வது 'மாமன்' என்ற உறவு முறையை மட்டும் தான். மாமன் என்பவர் யார் ? அம்மாவுடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ தான். அக்கா - தம்பி உறவுகள் அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் தொடருகிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும் சொத்துக்கள் பிரிந்துவிடக் கூடாது என்பதுதான் பரவலாக இவ்வகை திருமணங்களின் காரணிகளாக அமைகின்றன. பெருளற்றாருக்கு இவ்வுலகம் இல்லை. காசு இல்லாத மாமன் கடன்காரனுக்குச் சமம். ஏழ்மையாக இருக்கும் உறவு முறை என்னதான் நெருக்கமாக இருந்தாலும் உறவு முறை திருமணம் அங்கு கேள்விக்குறிதான்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது தங்கை - அண்ணன் ஒரே இரத்தம். மாமன் மகளோ மகனோ மாமனைப் (அம்மாவின் தம்பி / அண்ணன் ) போலவே தோற்றம் கொண்டவர்களாகவும் ( கிட்டதட்ட நம்முடன் பிறந்தவர்களைப் போலவே) இருப்பார்கள், ஆனாலும் திருமணத்திற்கு தடையில்லை ஏனென்றால் இங்கு திருமண ஒப்பிற்கு காரணம் மாமனின் மனைவி வேறு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது மட்டும் தான். இது முறையான திருமணம் ?

அடுத்து இஸ்லாமிய சமூகத்தில் அண்ணன் - தம்பி சம்பந்திகளாவதற்கு மதத்தில் தடையில்லை. எனது நெருங்கிய நண்பர் கூட பெரியப்பாவின் மகளை மணந்திருக்கிறார்.
இங்கும் பெரியப்பாவின் அல்லது சித்தப்பாவின் மனைவி வேறு ஒருவர் தானே ?
பெரியப்பாவின் பிள்ளைகள் அவரது மனைவியின் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் திருமணம் செய்து கொண்டால் முறையற்றதா ?

மாமன் மகளை ( அம்மாவின் தம்பி / அண்ணன் மகளை) மணப்பதும், பெரியப்பா / சித்தப்பா மகளை மணப்பதும் ஒன்று போலத்தான், ஒரே இரத்தம் தொடர்புடையது. பெரியப்பா மகளை மணப்பது சரி இல்லை முறையற்றது என்றால் அம்மாவின் தம்பி / அண்ணனின் மகளை/ மகனை மணப்பதும் கூட முறையற்றதே.

அப்பாவின் அண்ணனை பெரியப்பா என்று சொல்வது போல் அப்பாவின் அக்காவை பெரியம்மா என்று சொல்வதில்லை என்பதால் ஒன்றை முறையானதாகவும் மற்றொன்றை முறையற்றதாகவும் சொல்கிறார்கள். அப்பாவுடன் பிறந்தவர்கள் பெரியப்பாவாக இருந்தாலும் அத்தையாக இருந்தாலும் இதெல்லாம் உறவுமுறையின் பெயர்கள் தான். அதற்கும் திருமண சம்பந்ததிற்கும் உள்ள தொடர்பை நாமகவே வலிய ஏற்படுத்திக் கொண்டது தான். சித்தப்பாவிற்கு / பெரியப்பாவிற்கு மீசை இல்லாதிருந்தால் அத்தை ஆகி இருப்பாரே. :))

அத்தைக்கு மீசை இருந்தால் சித்தப்பாவோ / பெரியப்பாவோ தானே :))

மாமன் மகளை (அக்காவின் மகள் / அம்மாவின் அண்ணன்/தம்பியின் மகள்) மணப்பதும் சித்தப்பா / பெரியப்பாவின் மகளை (முறைப்படி தங்கை) மணப்பதும் ஒன்றே. இரண்டுமே ஒரே குடும்ப இரத்த சம்பந்தம் தான். இதில் அவரவர் ஏற்றுக் கொண்டுள்ள மத வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஒன்று முறையற்றது என்று சொலவதற்கு அறிவு ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை. வெறும் உறவு முறை காரணங்கள் மட்டுமே. அதுவும் நாம் பின்பற்றும் மதத்தில் சொல்லப்படும் காரணங்கள் எநத வேதத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

அம்மாவின் தம்பியின் வீட்டில் சம்பந்தம் கொள்வதும், அப்பாவின் தம்பியின் வீட்டில் சம்பந்தம் கொள்வதும் ஒன்றே ! இதில் அப்பாவின் தம்பியின் வீட்டில் சம்பந்தம் கொள்வது முறையற்றது என்று சொல்வதற்கான பின்புலம் என்ன வென்று பார்த்தால் ஒழுங்கீனமாக காட்டவும், வேண்டுமென்றே வலியுறுத்தியும் , தங்கை முறை உள்ளவர்களை திருமணம் செய்வர் உறவு முறை தெரியாதவர்கள் என்று சிறுபாண்மையினரை சுட்டி சொல்லப்படுவதும் அவர்களை எள்ளுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட காரணம் மட்டுமே வேறு ஒன்றும் இல்லை.
இதற்கு தமிழினத்தை நண்பர் ஹரிஹரன் இழுப்பது சிரிப்பை வரவழைக்கிறது. இவர் தாம் விரும்பி பரிமாறும் சனாதன தயிர்சாத புளிப்பை மறைப்பதற்கு அவ்வப்போது போது தமிழினத்தை ஊறுகாயாக கொண்டு வந்து தூக்கி (து)வைப்பார்.

என்னைப் பொருத்தும், மருத்துவ உலகத்தைப் பொருத்தும் உறவு முறைக்குள் திருமணம் செய்வதுதான் முறையற்றது. பரம்பரை வழி நோய்களும், நோஞ்சான் பிள்ளைகளும், உடல் குறையுடன் பிறப்பதற்கும் உறவு முறை திருமணங்கள் வழிகோளுகின்றன.

காதல் திருமணங்களே சமுக நல்லிணக்கத்துக்கும், சந்ததிகளுக்கும் நல்லது !

5 செப்டம்பர், 2007

பரஸ்பரம் சொறிந்து கொள்ளுதல் !

பதிவை போட்டோமா, பின்னூட்டத்தை வெளியிட்டோமோ முடிந்தால் மறுமொழி இட்டோமோன்னு இருந்தால் பிரச்சனைகளே இல்லை. தோழரே, நண்பரே, தல போன் நம்பர் கொடுங்களே, இமெயில் கொடுங்களேன்னு என்று பரஸ்பரம் முதுகு சொறியப் போய்விட்டால் அப்பறம் கோஷ்டி கானம் ஆகிடும் பொழப்பு. நமது தனித் தன்மையை இழந்துவிடுவோம். இவர் நம்ப நண்பராக இருக்காரே, இந்த கருத்தை பதிவில் போட்டால் தப்பாக நினைத்துவிடுவோரோ, என்றெல்லாம் நினைக்க ஆரம்ம்பித்து சொந்தக் கருத்துக்கு சுயவேலி அமைத்துவிடுவோம்.

அதற்காக நட்பு, சந்திப்பு எல்லாம் தவறு என்று சொல்ல முடியாது, நம் எண்ண ஓட்டத்துடன் ஒத்து இருக்கிறார்கள் என்று ரொம்பவும் நெருங்கக் கூடாது என்றே நினைக்கிறேன். அப்படியும் தன்னையறியாமலேயே நெருங்கிவிட்டதாக நண்பர்களோ, நாமோ நினைத்துவிட்டால் நம்ம சின்டு அல்லது அவர்களது சின்டு யாரோ ஒருவரது கைக்குப் போய்விடும். அப்பறம் அவன் தான் மனிதன் படத்தில் வரும் 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாட்டு தமக்குத்தாமே பாடிக் கொள்ளக் வேண்டியதுதான் :)

வலைப்பதிவர்கள் என்று ஒரு ஒற்றைச் சொல்லில் எல்லோரையும் அடக்கினாலும் அதில் ஒற்றுமை என்பது கருத்தளவில் எந்த இருவருக்கும் வேறுபடவே செய்யும். கருத்துப் பரிமாற்றங்கள் சரிதான். முட்டுக் கொடுத்தல் ? அங்கு தான் நம் கருத்துக்களை புதைக்க தயாராகிவிடுகிறோம். யாருக்காக எழுதுகிறோம் ? என் எழுத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்வார்கள் என்றெல்லாம் எவரும் நினைக்கக் கூடாதென்றே நினைக்கிறேன். இருந்தாலும் நெருங்கிவிட்டோம் என்ற நினைப்பில் இதையெல்லாம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்போ அல்லது ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கேள்விகளோ பொருளற்றது. ஏனென்றால் கால ஓட்டத்தில் நமது கருத்தையே நாம் மறுக்கும் அல்லது
முட்டாள் தனமாக நினைக்கும் சூழல்கள் கூட வளர்ந்திருக்கும்.

கொள்கை என்ற அளவில் குழுக்களாக வளர்ந்தாலும் நாளடைவில் எந்த கொள்கையுமே எதாவது சில பல காரணங்க்களுக்காக தளர்ந்து, கட்டுப்பாடுள்ள அரசியல் கொள்கைக் கூட்டணி கட்சிகள் கூட தத்தம் கொள்கைகளைத் தளர்த்தி தேர்தல் காலத்தில் சமரசம் செய்து கொண்டு சேர்வதோ, அல்லது சமரசம் இன்றி பிரிவதையோ பார்த்துதான் வருகிறோம். நம்மோடு இருப்பவர்கள் என்றுமே நமக்காக நாம் சொல்வதையெல்லாம் கேட்பார்கள் என்று நான் நினைத்தால் அது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு, ஒருகாலமும் அவ்வாறு நடக்கவே நடக்காது எல்லாமே அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு அமைவதுதான். இதையெல்லாம் மனதில் கொள்ளாது விருப்பு வெறுப்பு என்று பார்க்கப் போனால் எதிரிக்கு எதிரி நண்பராகவும், நமக்கும் எதிரிக்கும் நண்பராக இருப்பவர் எதிரியாகவும் நினைத்துக் கொள்வோம். இவை குழப்பத்தில் தான் கொண்டு செல்லும் என்றாலும். அதே நிலைகள் நீடிக்கும் என்றெல்லாம் எவருமே அறுதியிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் சண்டையை விலக்கப் போகிறவனுக்குத்தான் கத்திக் குத்து முதலில் விழுமாம், பிறகு எதிரிகள் ராசியாகி போய்விடுவார்கள்.

எனது அனுபவ முழுமையாக சொல்கிறேன். யாரிடம் வேண்டுமானாலும் நட்பு கொள்ளலாம், கூட்டு பதிவராக கூட இருக்கலாம். ஆனால் இவர்தான் நமக்கு நெருக்கமானவர் என்று நினைத்து முதுகு சொறிய ஆரம்பித்தால் அதன் பிறகு ? என்றாவது ஒரு நாள் எதிரிகளைவிட பரம எதிரியாக பார்க்க ஆரம்பித்தால் ஜீரணிப்பது மிக கடினம். குறிப்பாக எவரும் கேட்டால் இன்றி அறிவுரைகளை சொல்வது சமரசங்களை செய்வது எரிச்சலை தந்திருக்கிறது என்பது பின்புதான் தெரியவரும்.

அளவோடு சொறிந்து தோழமையோடு வாழ்வோம் !

பின்குறிப்பு : டிஸ்கி போடாமல் எழுதிவிட்டுவிட்டால் எதை எதையோ தொடர்பு படுத்தி சொல்லாத கருத்துக்கு அரும் சொற்பொருளெல்லாம் கூட வரும். இது எவரையும் குறி(வை)த்ததல்ல.

அன்புடன்,

கோவி.கண்ணன்


இதே தொடர்பில் முன்பு எழுதியது... சார்பு நிலை - வலை அரசியல் !

1 செப்டம்பர், 2007

நண்பர்களின் முயற்சி வெற்றி அடையட்டும் !

போலி விவகாரம் - இந்த விவகாரத்தை எட்டி நின்று பார்த்துவருகிறேன். நேற்று நான் இதில் எதையும் தொடர்பு படுத்தாமல் எழுதிய புத்தர் அறிவுரைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அது நண்பர்கள் பாதிப்புக்குள்ளான தன்மை என்று புரியவைத்து. எனவே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த இடுகை எழுதுவதற்கு காரணம் எனது அனைத்து நண்பர்களுக்கு எனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று நினைப்பதால் எழுதுகிறேன்.

பொதுத்தளத்தில் எழுத வந்த போது எவரும் அறிமுகமாகி இருக்கவில்லை. பொதுத் தளத்தில் தமிழில் எழுதுகிறோம் தமிழர்களிடம் பழகுகிறோம் என்று தான் வருகிறோம். இதில் அவரவருக்கு தெரிந்த சமூகம் மற்றும் அரசயலைத்தான் பேசுகிறோம். எதிர்கருத்து தெரிவிக்கவோ அதை மறுப்பதற்கோ உரிமை உண்டு. இதில் தனிப்பட்ட காழ்ப்பு என்பது முன்பின் தெரியாதவர்கள் என்பதால் எள்ளளவும் இருக்க முடியாது, இருக்கக் கூடாது. ஆனால் உள்ளே வந்த போது வலையுலக அரசியலும் அதற்கான எதிர்வினைகளும் அதிர்ச்சி அளித்தன.

போலி பதிவுகள், ஆபாச அர்ச்சனை என்பவை அனைத்தும் பலரைப் போல என்னையும் அதிர்ச்சியடைய வைத்தது. நாம் பாதிக்கப்படுவரை இதில் தலையிடுவது முறையற்றது மட்டுமின்றி பிரச்சனையின் ஆழம் தெரியாது என்பதால் என்னைப் போன்று பலரும் மெளனமாகத்தான் பார்த்து வந்தார்கள். இப்பொழுது பிரச்சனை உச்சம் ஆகி இருப்பது கடந்த மூன்று நாட்களாக நண்பர்கள் பலரும் எழுதுவதை வைத்து நினைக்க முடிகிறது.

போலி என்பவனது பின்னூட்டங்களும் அதில் வெளியாகி உள்ள படங்களும் நண்பர்களின் புகைப்படமாக இருக்கின்றன. பதிவர்களின் புகைப்படம் மட்டுமின்றி, எதிலும் தொடர்பில்லாத அவர்கள் குடும்பத்து உறுப்பினர்களின் படங்களையும் காட்டி வைத்திருக்கிறான். மின் அஞ்சல் முகவரி, வேலை செய்யும் கம்பெணி, தொலை பேசி எண் என அனைத்தையும் வெளியிட்டு, பெண்களை கூட விட்டுவைக்காமல் மிரட்டி அவர்களை உளவியல் ரீதியாக டார்சர் கொடுக்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. கிரிடிட் கார்டு மோசடி போன்று பெரிய குற்றங்களைத் தவிர்த்து சைபர் கிரைம் இதையெல்லாம் கண்டு கொள்ளாது என்கிறார்கள் என்ற துணிச்சலில் செய்கிறான் அல்லது குழுவாக செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த போலி குழுமத்திற்கு ஆதரவளிப்பவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன். திருத்திக் கொண்டு தமிழன் என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு இந்த ஆபாச முகமூடியை புதைத்துவிட்டு வெளியே வரவேண்டும் என்று பலரைப் போல நானும் விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் போலி அண்ட் குழு மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை வரவேற்கிறேன்.

நண்பர்களின் அம்மாவை நானும் அம்மா என்றே அழைக்கிறேன். நண்பர்களின் அப்பாவை அப்பா என்று அழைப்பதை சிலர் அருவெருப்பாக நினைத்தாலும் நான் தயங்காமல் நண்பர்களின் அப்பாவை அப்பா என்றே அழைத்திருக்கிறேன். நண்பர்களின் தாயைப் பற்றி கேவலமாக எழுதுவது என்பது எனது தாயைச் சொல்வது போன்றதுதான் இவை வன்மையாக கண்டிக்கப் படவேண்டியவை. கண்டிக்கிறேன்.

போலியுடன் தொடர்பு கொண்டு அவனை திருத்த முயற்சிக்கலாம் கை கொடுக்க வருகிறீர்களா ? என்று சில நண்பர்கள் என்னைக் கேட்ட போது. இது கத்தியின் மேல் நடப்பது போன்றது, முகம் தெரியாத ஒருவருடன் தொடர்பு கொள்வது என்பது எதாவது பெரிய விவகாரமாகும் போது உங்களைக் கைக்காட்டி அவன் தப்பித்துக் கொள்வான், எனவே இது பற்றி எல்லாம் சிந்திக்காதீர்கள். முடிந்தால் போலி குருப்புடன் ஆன தொடர்புகளை அறுத்துக் கொள்ளுங்கள் என்று எனது கருத்தைச் சொன்னேன். நாம் ஒருவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருந்தால் அவரைப் பற்றி நீண்டகாலமாக நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும், அவர்களுடன் அதன் பிறகு மின் அஞ்சலோ, தொலைபேசி தொடர்போ கொண்டிருக்க வேண்டும். அவர்களுடன் பழகினால் நம்மீது குற்றம் சொல்லும் போது நம்மால் அந்த விவாகரத்தை பேசியாவது தீர்த்துக் கொள்ள முடியும். முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்பு கொண்டால் பாதிக்கப்படுவது அறிமுகம் இல்லாதவன் அல்ல.

எனக்கும் ஜிமெயில் சாட் ரெகொஸ்ட் கேட்டு சில மின் அஞ்சல் வந்த போது அவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ளச் சொல்லி மின் அஞ்சல் அனுப்பி அவர்கள் விபரம் சொன்னால் தான் அனுமதித்திருக்கிறேன். இருவாரங்களுக்கு முன்பு ஒரு பதிவர் கூட எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பதாக சொல்லி சாட் பண்ண அழைத்தார். சரி என்று சாட்டில் எந்த ஊர் என்ற விபரமெல்லாம் கேட்டேன். அதன் பிறகு மற்ற நண்பர்களைக் கேட்ட போது அவர் தனது பெயரைச் சொல்ல மறுக்கிறார் என்று சொன்னவுடன் போது அந்த நபரை நான் ப்ளாக் செய்தேன். அவர் போலிப் பதிவர் அல்ல, இருந்தாலும் புனைப்பெயரை வைத்து கொண்டிருப்பவர் என்பதைத் தவிர எந்த விபரமும் தெரியவில்லை. இது போல் புனைப்பெயரை வைத்துக் கொண்டு பதிவு எழுதிக் கொண்டிருப்பவர் பலர் இருக்கின்றனர். அவர்களெல்லாம் தாம் நன்கு அறிமுகமான யாரையாவது சந்தித்ததற்கான குறிப்புகளையோ, பதிவர் பட்டரை போன்ற நிகழ்வுகளுக்கு சென்று வந்ததையாவது குறிப்பிட்டு தாம் வெறும் புனைப்பெயரை வைத்துக் கொண்டிருப்பவர் அல்லர் என்று சொன்னால் மட்டுமே மற்ற பதிவர்கள் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதையோ, விபரங்களைப் பகிர்ந்து கொள்வதையோ செய்யலாம். இல்லை என்றால் என்றோ ஒரு நாள் உங்கள் விபரங்கள் வெளியிடப் படும் போது உங்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சம்.

முன்பின் எவருடனும் அறிமுகம் இல்லாமல் வெறும் புனைப்பெயரை வைத்துக் கொண்டு சில பதிவர்கள் பலரையும் தொடர்பு படுத்தி இந்த விவகாரத்தில் குளிர்காய்கிறார்கள் என்ற அளவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், பதிவர்கள் அவற்றை புறம்தள்ளிவிட்டு செல்லலாம். இவை பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே என்பதை பலரும் உணரவேண்டும்.

தம்மை குற்றம் சொல்பவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவை இல்லை என்று கோபப்பட்டு வார்த்தைகளை மட்டும் வீசுவது என்பது மேலும் குழப்பத்தை விளைவித்து, விவாகாரம் முற்றிக் கொண்டே செல்லும். பாதிக்கப்படுபவர்கள் எதோ ஒரு அடிப்படையில் ஒருவரையோ / பலரையோ குற்றம் சொல்ல உரிமை இருக்கிறது. வெளிப்படையாக சொல்கிறேன், பாதிக்கப்பட்ட நண்பர்கள் சிலர், முத்தமிழ்மன்ற மூர்த்தி தான் போலி என்று சொல்கிறார்கள். தம்மீது குற்றம் இல்லையென்று மூர்த்தியோ, அவரை குற்றம் சொல்லும் எனது நண்பர்களோ ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காவல் துறை உதவியை நாடி இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றே விரும்புகிறேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் திருந்தவேண்டும் அல்லது தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விவகாரத்தில் நுழைந்து பிரசனைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்து களமிறங்கியிருக்கும் அனைத்து நண்பர்களின் முயற்சி வெற்றி அடைய வேண்டும்.

இந்த பிரச்சனைகள் அடங்கும் போது வழக்கம் போல் பதிவிடுவேன். முடியும் என்ற நம்பிக்கையில்.

போலி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் !

அன்புடன்,

கோவி.கண்ணன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்