பின்பற்றுபவர்கள்

28 பிப்ரவரி, 2009

இறையாண்மை நாட்டாமை வெங்காயம் !

சீமான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டுவிட்டதாம் நாட்டாமைகள் பஞ்சாயத்து செய்து சீமானை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள்.

அடேங்கப்பா...ஒரு மாநிலத்திற்கான ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக கருநாடக அரசியல் ரவுடிகள் ரகளை செய்தபோதும், காவேரி ஆணையத்திற்கு எதிராக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்துவருவதற்கும், முல்லை பெரியார் அணை விவகாரத்தில் மலையாளிகள் பொய்யுரைகளை பரப்பிவருவதற்கும், 'தேசிய' இந்தியாவில் மும்பையில் சிவசேனை ரவுடி கும்பல் பிறமாநிலத்தினரின் உடமைகளைப் பறித்து துறத்தியதற்கும், இந்த ஆமைகள் இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவித்ததே இல்லை. அதுமட்டுமா ?


கார்கில் போரில் 1000க் கணக்கான இராணுவ வீரர்களை இழந்ததையெல்லாம் மறந்து அவர்களின் சமாதி ஈரம்காயும் முன் அதற்கு காரணமாக முஷாரப்புக்கு சிவப்பு கம்பளவரவேற்பு கொடுத்து பள்ளிச் சிறார்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்தி முஷாரைப்பை குஷி படுத்திய போதும் இந்த ஆமைகள் கூட்டுக்குள் ஒடுங்கிதான் இருந்தன. அப்போதெல்லாம் ஆவி மன்னிக்காது என்ற செண்டிமண்ட் வசனங்களையெல்லாம் பேசியது இல்லை. இறந்து போன வீரர்கள் அனைவருமே சாதாரண குடிமக்கள் தானே அவர்களுக்கெல்லாம் ஆவியாவது மயிராவது என்று ஒடுங்கியே இருந்தன இந்த ஆமைகள்.

இவர்களைப் பார்த்து சீமான் கேட்கிறார். 'அடேய் வெண்ணைகளா, தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு கொடுப்பது நீங்கள் போட்ட சட்டப்படி தப்புதான், ஆனால் அதே இயக்கத்தைப் பற்றி தூற்றலாம் என்று அந்த சட்டம் எங்காவது சொல்லி இருக்கிறதா ? உனக்கு தூற்றுவதற்கு அனுமதி இருக்கும் போது, ஆதரவு கொடுப்பதற்கு மட்டும் நான் ஏன் உங்கள் அனுமதியை எதிர்பார்க்க வேண்டும், முதலில் சட்டத்தை மதித்து விடுதலை புலிகள் பற்றி நீங்கள் தூற்றுவதற்காக பேசுவதை நிறுத்துங்கள்' என்கிறார்

சீமான் சொல்வது ஞாயம் தானே, தடைசெய்யப்பட்ட இயக்கம் பற்றி தாறுமாறாக அவதூறு செய்ய மட்டும் இவர்களுக்கு சட்டம் அனுமதி கொடுக்கிறதா ?


(இலங்கை, இந்திய இறையாண்மைகள் இப்படியெல்லாம் காக்கப்படுகிறது)


தமிழர் நலனுக்கு எதிராக அரசியல் செய்யும் இவர்களை தமிழர் வரலாறு மன்னிக்காது, ஈழத்தமிழர் விடுதலைக்கு யார் யாரெல்லாம் தடையாக இருந்தார்கள் என்று விடுதலையாகும் ஈழத்தில் எழுதப்படும் வரலாற்றில், இவர்கள் பெயர் உலக வரலாற்றில் நீரோ மன்னனுக்கும், இடியமீனுக்கும், ஹிட்லருக்கும் கொடுத்திருக்கும் இடங்களையே இவர்களுக்கு ஈழத்தமிழர்கள் கொடுப்பார்கள்.

அனுமான் தன்வாலில் தீவைத்துக் கொண்டாலும் அது இலங்கையை எப்படி அழித்ததோ... முத்துகுமார் வைத்துக் கொண்ட தீ ? இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா ? நடந்து கொண்டுதானே இருக்கிறது !

27 பிப்ரவரி, 2009

வாக்களித்தவர்களுக்கு நன்றி ! தமிழ்மணம் விருதுகள் 2008

சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற பிரிவில் எனது 'இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?' என்கிற கட்டுரைக்கு தமிழ்மணம் விருதுகள் 2008 பரிந்துரைகள் மூலம் விருது கிடைத்தற்கு மிக்க மகிழ்கிறேன்.

வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும், எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும் மிக்க நன்றி

தமிழ்மணம் விருதுகள் 2008 ல் பங்கு பெற்றவர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணம் திரட்டியில் தொடர்ந்து எழுதிவருவதால், அதன் மூலமே இவ்விருது கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்மணம் திரட்டி நிர்வாகத்தினருக்கு உளம் கனிந்த நன்றி !

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் போல் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற பதிவர்களுக்கும், மூன்று விருதுகள் பெற்ற பதிவர் மருத்துவர் புரூனோ அவர்களுக்கும் பாராட்டுகள்.

விருது போட்டியில் பங்கெடுத்த எனது மற்ற இரு இடுகைகள் முதல் பத்திற்குள் (4, 5 ஆம் இடத்திற்கு) வந்திருக்கிறது, அதற்கு வாக்களித்தவர்களுக்கும் நன்றி


தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பின் தூக்கத்தை களைத்த தாமிராவுக்கு சிறப்பு நன்றி ! :)

26 பிப்ரவரி, 2009

வாய்மூடி சிரிக்கலாம் போங்க !

தொண்டர் 1 : தலைமையை மாற்றி அமைக்கப் போறதாக உயர்மட்ட குழுவில் பேசியதற்கு தலைவரின் ரியாக்சன் எப்படி ?

தொண்டர் 2 : அந்த கூத்தை ஏன் கேட்கிற, ஒரு அரை மணி நேரம் டைம் கேட்டுட்டு போய் பக்கத்து சலூன் கடையில் டை அடிச்சுட்டு வந்து இப்ப தலைமையை மாற்றியாச்சு ஓகேவான்னு கேட்கிறார்

***

தொண்டர் 1 : தலைவர் திடீர்னு உண்ணாவிருதம் இருக்கேன்னு அறிவிச்சு இருக்கார், பிரச்சனை தீர்ந்திடுமா ?

தொண்டர் 2 : உடம்புல கொழுப்பு கூடிப் போச்சு, 2 வேளை டயட்டுல இருங்கன்னு டாக்டர் சொன்னார், தலைவர் மூன்று வேலையாக டயட்டுல இருக்கப் போறார்ர்னு நான் கேள்வி பட்டேனே. கொழுப்பு பிரச்சனை தீர்ந்துடும்

***

ஒருவர் : வாய்சொல் சாமி மீது முட்டை வீசியதால் எலுமிச்சை விலை சரிந்துவிடும் போலிருக்கு

மற்றொருவர் : முட்டைக்கும் எலுமிச்சைக்கும் என்னைய்யா சம்பந்தம் ?

ஒருவர் : தலையில் விழுந்த முட்டையை கழுவ குளித்ததும் உடம்பு கூலாகிவிட்டதாம், இது நன்னா இருக்கு இனிமே பார்க்கவருகிறவா எலுமிச்சைக்கு பதிலாக முட்டை கொண்டுவாங்கன்னு சொல்லிட்டாராம்

***

அய்யாவு : நம்ம அமைச்சர் எதிர்கட்சிக்கு எதிராக அறிக்கை விடுத்து இருக்கிறார்...பார்த்திங்களா ?

அப்பாவு : ஆமாம் பார்த்தேன்...இனிமே எதிர்கட்சி ஆட்சிக்கு வந்து மீண்டும் கொள்ளையை தொடர முடியாது என்று சொல்லி இருக்கிறார்

அய்யாவு : சரியாத்தான் சொல்றார்...இவங்க ஆட்சியில் எதையும் மிச்சம் வைச்சதானே அவங்க வந்து கொள்ளை அடிக்கப் போறாங்க. சூசகமாகச் சொல்றார்

***

குபபன் : நம்ம தலைவர், முதல்வரின் அறிவிப்பு ஒரு கண் துடைப்பு நாடகம் என்கிறாரே ?

சுப்பன் : இருக்கலாம், முன்பு பக்கதுல இருந்து கைக்குட்டை கொடுத்தவராச்சே இவருக்கு தெரியாதா என்ன ?

வானவில்லை பின்தொடர்ந்து...

மனிதனின் செயற்கை அழகுகளுக்கு எதிராக இயற்கையில் பல அறைகூவல்கள் உண்டு, அவற்றில் ஒன்று தான் வானவில். நேற்று மாலை அலுவலகம் முடிந்து அலுவலக பேருந்தில் வரும் போது சுற்றுச் சூழல் தூறலும் மஞ்சள் வெயிலுமாக இருந்தது, பேருந்து கண்ணாடி வழியாக வெளியே கண்களை ஈர்த்தது வண்ணங்கள், மிக அழகான வானவில், இதுவரை இவ்வளவு அடர்த்தியான வண்ணத்தில் வானவில்லை நான் பார்த்ததே இல்லை. நிழல்படக் கருவி பையிலேயே இருந்ததால் அழகை நிழல்படக் கருவிக்குள் அடைத்துவிட்டேன்.

பேருந்து செல்ல செல்ல ஒவ்வொரு பகுதியிலும் வானவில்லின் தோற்றம் மனதை கொள்ளை கொண்டது.

(படத்தில் தெரியும் பேருந்துனுள் இருந்து தான் மேலே இருக்கும் படங்களை எடுத்தேன்)

பேருந்தைவிட்டு கிழே இறங்கியதும் மீண்டும் பார்த்தேன்.இரட்டை வானவில் (பெரிதாக்கி பார்க்கவும்)

வானவில்லுக்கு மேல் மற்றோர் வானவில், ஆகா வண்ணம் அடர்த்தி குறைந்திருந்தாலும் ஒரு சேர பார்பதற்கு மிக அழகாகவே இருந்தது. 20 நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தேன், அதன் பிறகு தொடர்வண்டியில் ஏறினேன். வண்டி வளைந்து சொல்ல செல்ல வானவில்லின் திசையும் மாறிக் கொண்டே வருவது போன்ற தோற்றம். உடனே நம்(ம) ஆமத்தூர் ஜெகதீசனை அழைத்து, வானவில் அழகாக தெரியுது புகைப்படம் எடுத்து வை. என்றேன். சிங்கையில் ஒரு இடத்தில் பார்க்க முடிந்தால், நாடுமுழுவதும் எங்கிருந்தாலும் பார்க்க முடியும். அவரும் ஆர்வமுடன் வீட்டிற்கு கிழே இறங்கி... சில படங்களை எடுத்துவிட்டு அதன் பிறகு புகைப்படம் எடுத்ததை அழைத்துச் சொன்னார். வானவில் நான் பார்த்த தொடக்கம் முதல் சுமார் 1 மணிநேரம் அழியாமல் காட்சி கொடுத்தது. அதன் பிறகு தொடர்வண்டி சுரங்க பாதைவழியாக செல்லவே வானவில்லை காணமுடியவில்லை. வண்டியை விட்டு இறங்கியதும், வானம் இரவின் தொடக்கத்தை கடந்து இருந்தால் வானவில்லும் காணாமல் போய் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மிகுதியாக தொடர்ந்து அடர்த்தியான வண்ணத்தில் வானவில் அழியாமல் இதுவரை பார்த்ததே இல்லை.


வானவில் என்ற சொல் சரியான பெயர் சொல் இல்லை என்றே நினைக்கிறேன். Train என்பதை புகைவண்டி என்பதாக மொழிப் பெயர்த்து வழங்கிவந்து தற்பொழுது தொடர்வண்டி என்கிறோம். எனெனில் இப்போதெல்லால் எந்த Train னும் புகைவிடுவதில்லை. வானவில்லுக்கு சரியான சொல் மழைவில் ஆங்கிலத்தில் இருக்கும் Rainbow என்கிற அதே பொருளில் வரும். வானவில் என்கிற பெயர் சொல்லை வானத்தில் தொடர்பு படுத்துவதைவிட மழையுடன் தொடர்பு படுத்துவதே சரி. மலையாளத்தில் மழைவில் என்றே சொல்கிறார்கள். இனிமேல் மாற்றி சொல்வதும் கடினம் தான். சங்கப் பாடல்களில் வானவில்லை எப்படி அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அறிந்து கொள்கிறேன்.

ஜெகதீசன் எடுத்த படங்கள்:


25 பிப்ரவரி, 2009

கலைஞருக்கு வேண்டுகோள் !

கலைஞர் ஐயா, வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் மோதலில் கடும் வேதனை அடைந்ததாகவும், தீர்ப்பதற்காக உண்ணா நோன்பு இருக்கப் போவதாகவும், சில நாளிதழ்கள் சாகும் வரை உண்ணா நோன்பு இருக்கப்போவதாக அறிவித்ததாக எழுதுகின்றன. என்பது வயதைக் கடந்த உங்களுக்கு இவையெல்லாம் தேவையா ?

ஏற்கனவே ஈழம் தொடர்பில் உங்கள் அணுகுமுறை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை, மாறாக உங்கள் மீது கடும் விமர்சனங்களையும், குற்றச் சாட்டுகளையுமே வைக்கிறார்கள். அவற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை முத்துகுமாரின் கடிதம் மூலம் அனைவருக்குமே தெரிவிந்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், சரியான அறிவுறுத்தலுக்கு பதில் தவறான அறிவுறுத்தல் வழங்குபவர்கள் (அம்மாவின் தோழியை அப்படித்தான் சொல்லுவார்கள்) அருகில் இருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்

இலக்கியம், திரைத்துறை, அரசியல் ஆகிய மூன்றிலுமே நீங்கள் நிகழ்த்திய சாதனைகளை உங்களுக்கு முன்பு அண்ணா ஒருவரால் தான் செய்ய முடிந்தது, அதற்கு பின்பும் எவரும் இல்லை. இந்த நீண்ட நெடிய அரசியல், சமூகப் பயணத்தில் கிடைத்த புகழைவிட தற்போதைய அரசியல் சூழலில் இந்த வயதில் மன அழுத்தமும், களைப்பும் மிகுதியாவே இருக்கும். இதிலிருந்துவிடுபட தங்கள் அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெருவதுதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று உங்களுக்கு அறிவுறுத்துபவர்கள் எவரும் இல்லை என்றே நினைக்க முடிகிறது

இதோ உங்கள் ஆட்சியில் முத்தாய்ப்பாக தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுதந்துவிட்டீர்கள், அதற்குமேலும் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் செய்ய வேண்டிய சூழலில் தற்போதைய அரசியல் சூழல் (திமுக அரசியலுக்கு) இல்லை என்பதை உங்கள் பல்வேறு முடிவுகளின் தடுமாற்றம் உணர்த்துகிறது.

உங்கள் பல்வேறு அரசியல் நிலைகளின் காரணங்களை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு அரசியலில் இருந்து முற்றிலும் விலகினால், கிடைத்த புகழ் குன்றாமல் பெருகும். கருணாநிதி (இந்த வயதில்) அரசியல் நாடகம் ஆடுகிறார், குடும்ப அரசியல் நடத்துகிறார் என்கிற எதிர்த்தாக்குதல்கள் உங்களை நோக்கி தொடர்ந்து சொல்பவர்கள் உத்தமர்கள் இல்லையான்றாலும் அப்படி குற்றம் சாட்டுவது கண்டிப்பாக குறையும். உங்கள் மருத்துவர்கள் விடுக்கும் வேண்டுகோள்கள் கூட பரிதாபம் வரவழைக்க முயலும் ஒரு அரசியல் முயற்சியாகவே விமர்சிக்கப்படுகிறது. எவ்வளவோ அரசியல், இலக்கிய சாதனைகள் செய்த உங்களுக்கு இது தேவையா என்றே பலரும் கேட்கிறார்கள்.

50 ஆண்டுகாலம் நீங்கள் வளர்த்த அரசியல்வாதிகள் அது உங்கள் மகன்களாக இருந்தாலும் உங்கள் இடத்தில் இருந்து அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு கிடைக்கட்டும். தமிழின தலைவர் என்று உங்களை குறிப்பிட்டு மகிழ்ந்தவர்கள் பலரும் தற்பொழுது காங்கிரசுடன் ஆன உங்கள் அரசியல் நிலையால் இகழ தொடங்கி இருக்கின்றனர். நீங்கள் அரசியலில் இருந்து விலகினால் உங்கள் வெற்றிடம் தற்போதைய சூழலில் தமிழனுக்கு தடைக்கல்லா ? படிக்கல்லா ? தமிழர்கள் அனைவருமே உணர்ந்து கொள்ளட்டுமே.

இப்படிக்கு,

திராவிடத் தலைவர், மிகச் சிறந்த தமிழறிஞர் என்ற முறையில் உங்கள் மீது பற்று கொணடுள்ள, உங்கள் உடல் நிலையில் அக்கறை கொண்டுள்ள ஒரு தமிழன்

24 பிப்ரவரி, 2009

அப்பாவி சிங்களர்களை(யும்) காங்கிரஸ் காக்க வேண்டும் !

வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வன்னியிலும், முல்லைத்தீவிலும் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்கள் குறித்து அச்சம் அடைவாதாகவும், இலங்கை அரசு கேட்டுக் கொண்டால் அப்பாவி தமிழர்களை வெளியேற்ற உதவுவதாகவும் இந்திய அரசின் சார்பில் கூறியுள்ளார். இது நல்ல நோக்கமாக தெரிந்தாலும், அப்பாவி தமிழர்களை அவர்கள் வாழும் இடத்தில் இருந்து வெளியேற்றிவிட்டடல் அதன் பிறகு அங்கிருக்கும் விடுதலைப் புலிகளை ஏவுகனை வீசி முற்றிலும் அழித்துவிட முடியும் என்ற மறைமுக யோசனையை காங்கிரஸ் முன்வைப்பதாகவும், உதவ ஆயத்தமாக இருப்பதாக தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

மேலும் இதன் மூலம் போரில் இலங்கை அரசு வெற்றி பெற காங்கிரஸ் அரசு ஆதரவு அளிப்பதையும், தமிழ் ஈழம் அமைவதை தடுத்துவிட முயற்சிக்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு ஊதுகுழலாக காங்கிரஸ் பின் நிற்பதைத் தான் பிரணாப் முகர்ஜியின் அந்த போர்கள பூமியில் ஒடுங்கி இருக்கும் அப்பாவிகள் குறித்த 'அக்கரை' தெரிவிக்கிறது.

இலங்கைக்கு அரசுக்கு உதவும் காங்கிரஸ், அப்பாவி சிங்களர்கள் குறித்து அக்கரை படாதது வியப்பையே அளிக்கிறது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் எப்பொழுது மனித வெடிகுண்டுகளாக கொழும்பில் ஊடுறுவி வெடிப்பார்கள், எப்போது விமானம் மூலம் குண்டு போட்டு தாக்குவார்கள் என்ற நிலையில் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்களை அப்புறப் படுத்த உதவுகிறோம் என்று காங்கிரஸ் அரசு தெரிவித்து, சிங்கள அப்பாவிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு பெயரவைத்தால் எதிரிக்கு எதிரிகளான சிங்கள இராணுவமும், ஈழ விடுதலை போராளிகளும் நேரடியாக மோதிக் கொள்வார்கள்.


அப்பாவி தமிழர்கள் குறித்து அச்சப்படும் காங்கிரஸ் அரசு, எப்போது வெடிகுண்டு தாக்குமோ என்று நடுங்கும் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர் பற்றி அக்கரைபடுமா ?

- தினமலர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த கேள்வியை அப்பாவிகளும், பாமரர்களும் கேட்கிறார்கள்.

23 பிப்ரவரி, 2009

ஆஸ்கார் வென்ற இசைப்புயலுக்கு வாழ்த்துகள் !

இசைபுயலுகு சிறந்த பின்னனி இசை, மற்றும் சிறந்த பாடல் இசை என இருவிருதுகள் கிடைத்திருக்கிறது !

சர்வேஷன் ஆன்லைன் பதிவு.
சுட்டி 1

வாழ்த்து தெரிவித்து முன்பு இட்டிருந்த சுட்டி,

சுட்டி 2

ஸ்வாமி ஓம்காரின் கணிப்பு

சுட்டி 3

தகவல் அறியும் சட்டம் ... என்ன சொல்லுது ?

தகவல் அறியும் சட்டம் ஒன்று இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது, இதன் மூலம் பிறரது தனிப்பட்ட தகவல் தவிர்த்து அனைத்தையும் அறியலாம். எப்படி அந்த சட்டத்தைப் பயன்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதனைப் பயன்படுத்துவோர்கள் சிலரை அந்த சட்டத்தின் மூலம் பெறப்படும் தகவல் அதிர்ச்சியூட்டுகிறதாம்.

பொழுது போகாத ஒருவர்,

'இந்திய இராணுவ வீரன் ஒரு மாதம் அருந்து மதுவின் அளவு என்ன ?.....என்று கேட்க அதற்கு பதிலாக

'ஒன்பது லிட்டர்' - என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதைப் படித்துவிட்டு இராணுவ வீரர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக புலம்புகிறார் கேள்வி கேட்டவர். ஐயோ... பாவம் நாட்டின் பொதுமக்களிடம் பெறப்படும் வரிப்பணத்தில் 75விழுக்காடு பாதுகாப்புக் காரணங்களுக்காக செலவிடப்படுகிறது என்பது இவருக்கு தெரியாது போலும்.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம்

'இராணுவ வீரர்களால் வன்புணர்ச்சி (Rape) செய்யப்படும் சொந்த நாட்டு பெண்களின் எண்ணிக்கை எத்தனை ? பிற நாட்டு பெண்கள் எத்தனை ?' என்று கேள்வி கேட்டால் விடை கிடைக்குமா ? தெரியவில்ல்லை

***

ஒரு தமாசு,

தகவல் அறியும் சட்டத்தின் மூலம்,

சு.ஸ்வாமி மீது எத்தனை முட்டைகள் வீசப்பட்டது ? அதில் அழுகிய முட்டைகள் எத்தனை ? என்று தெரிந்து கொள்ள முடியும் என்று தான் நினைக்கிறேன்.

22 பிப்ரவரி, 2009

ஐ....நாவுக்கு அப்பாவிகள் கேள்வி !

கண்டனம் சடங்கில் மொய் வைப்பது தான் அது பற்றிய அறிக்கை, இது போன்று கண்டன திருவிழாக்களை நடத்துவது அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு பொழுது போக்கு. யார் முதலில் கண்டனம் தெரிவிப்பது என்ற போட்டி தான் இதுவரை நடைபெற்றதில்லை. கிட்டதட்ட அனைத்து நாடுகளுமே கண்டன திருவிழாவில் பங்கேற்கும். காந்திதேசமாச்சே... கண்டனம் பதிய வைப்பதில் இந்தியாவே முன்னிலை வகிக்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் நினைத்து பெருமை பட வேண்டும்.

சதாம் உசேன் தூக்கில் இடப்பட்ட நிகழ்வுகளைக் கூட பன்னாட்டு கண்டனங்களுடன் உலகம் மறந்துவிட்டது. (பின்னே பழையதெல்லாம் மறக்கனும் என்று தெரியாமலா சொல்கிறார்கள்). ஐநா அரங்கம் (சபை) ஒன்று இருப்பதே உலகில் எங்காவது அமெரிக்கா போர் தெடுக்கும் பொழுது தான் தெரியவரும். ஐநா சபை என்பதை அமெரிக்கவின் அறிவிக்கப்படாத பன்னாட்டு கட்டுப்பாட்டு (அமெரிக்கா தவிர்த்து பல நாடுகளைக் கட்டுப்படுத்தும்) மையம் என்றுதான் பாமரர்கள் கூட சொல்கிறார்களாம்

(பாமரருக்கு ஐநா வெல்லாம் தெரியுமா ? அவங்களுக்கு தெருநாய் மட்டும் தானே தெரியும் என்கிற அறிவு பூர்வமான கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. அப்படி கேட்பவர்கள் தினமலர் வாசகர் கடிதம் படித்ததே இல்லை என்றே நினைக்கிறேன். அங்கு கடிதம் எழுதுபவர்கள் அனைவருமே 'அப்பாவிகள் கேட்கிறார்கள், 'பாமர்கள் கேட்கிறார்கள் என்றே எழுதுவார்கள். பின்னே அப்பாவிகளின் நாடி துடிப்பை அறிந்த ஒரே 'தமிழ்' நாளிதழாச்சே தினமலர், அதை படித்து வாசகர் கடிதம் எழுதும் அனைவருக்குமே அந்ததந்த பகுதியில் வாழும் சேரி, அப்பாவி மக்களின் நாடி துடிப்பும், அங்கே குட்டையில் ஊறும் அப்பாவி பன்றிகளின் மொழி கூட தெரிந்து வைத்திருப்பார்கள். நீங்கள் தினமலரில் வாசகர் கடிதம் எழுதுபவர் என்றால் உங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் யார் என்ற வெவரம் எல்லாம் வெள்ளிடை மலையாக தெரிந்திருக்கும்...தினமலரைப் பற்றி எழுதி என்/உங்கள் நேரத்தை வீனாக்கிவிட்டேனா ? வேறொன்னும் இல்லை தினமலர் அப்பாவிகளின் குரலாய் ஒலிப்பதைப் படித்து கீழே உதிர்ந்த எனது தலைமயிர் கூட சிலிர்த்தே நிற்கிறது. தினமலருக்குத் தான் அப்பாவிகள், பாமரர்கள் மீது என்ன ஒரு பாசம் ! தினமலர், இந்து(ராம்), துக்ளக்(சோ ராமசாமி) ஆகியவை நாள்தோறும் இலங்கையில் வாடும் தமிழர்களின் குரலாய் ஒலிக்கிறார்கள்!!!)

*****

கொழும்பில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவு தற்கொலைப் படை கரும்புலிகள் விமானத்தின் மூலம் குண்டு வீசிட்டார்களாம். அதற்குத்தான் ஐநா முதல் ஆளாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. வன்னியிலும் முல்லைத் தீவிலும், ஆளும் அரசு...மக்கள் பிரதிநிதி என்ற பெயரில் இலங்கை அரசு குண்டு மழை பொழிந்து தமிழினத்தை துடைத்தொழிக்கும் இன ஒழிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. ஒருபக்கம் 'தமிழர்கள் அழிந்துவிடுவார்கள்' என்று கவலைப்படும் ஐநா, அதை தடுத்து நிறுத்த எந்த நடவெடிக்கையும் எடுக்காமல் விடுதலைப் புலிகளின் நேற்றைய விமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஐநா நைனாக்களே....கொழுப்பில் வாழும் சிங்களன் உயிர்தான் உயிர்... இலங்கை இராணுவத்தின் குண்டு மழைக்கு பதுங்கு குழியின் அடியில் ஒடுங்கி நடுங்கியபடி இருக்கும் தமிழன் உயிர் மயிரா ? - அதெற்கெல்லாம் எந்த கண்டனமும் கிடையாதா ? இதை யாரும் கேட்கவில்லை, நம்ம தினமலர் பாணியில் சொல்லவேண்டு என்றால் இந்த கேள்வியை அப்பாவிகளும், பாமரர்களும் தான் கேட்கிறார்கள்

ஈழப்போராளிகளுக்கு ஓர் வேண்டுகோள், இலங்கை இராணுவத்திற்கு எதிராக போராடும் பொழுது, போராட்டத்தில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தலாமா ? ஐநாவிடம் கேட்டு முன் அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள், இல்லை என்றால் கண்டனம் தெரிவிப்பார்கள் - இதையும் அப்பாவிகள் தான் சொல்கிறார்கள்

21 பிப்ரவரி, 2009

நாளை உலகப் பெரும் புகழடையப் போகும் தமிழனுக்கு வாழ்த்துகள் !

ஹாலிவுட்டின் ஆஸ்கார் பரிசு இந்திய திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து...பின்னார்...அது ஒன்றும் அவ்வளவு உயர்ந்த விருது அல்ல...பிற நாட்டினரின் படங்களுக்கு ஒரு பிரிவு வைத்திருக்கின்றனர் அவ்வளவுதான் என்பதாக இந்திய திரைக்கலைஞர்கள் தங்கள் பெருமூச்சுகளுக்கு ஞாயமான காரணங்களை சொல்லிக் கொண்டு தேற்றிக் கொண்டனர்.


நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் ஆங்கிலப் படமான 'ஸ்லம் டாக் மில்லினியர்' படத்துக்கு இசை அமைத்து பல விருதுகளைப் பெற்றதுடன், அவரது பெயர் ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பின்னனி இசை
சிறந்த பாடல் (இருபாடல்கள்)


என இரு பிரிவுகளில் அவரது பெயர் முன் மொழியப்பட்டுள்ளது.

இசைப்புயல் நாளை நடக்க இருக்கும் ஆஸ்கர் விருதுவழங்கும் விழாவில் குறைந்தது பின்னனி இசை அல்லது பாடல் அல்லது இரண்டிலுமே பரிசு வெல்லப் போவது உறுதி,

எனெனில் அனைத்து தமிழ்மக்களின் வாழ்த்துகளும், இந்தியர்களின் வாழ்த்துகளும் அதை உறுதி படுத்தும், அவற்றிக்கும் மேலாக அவரது இசைக்கும் அந்த தகுதியும் இருக்கிறது.ஏ.ஆர்.ரகுமானின் இசையை விட அவரிடம் மிகவும் பிடித்தவை...அவர் புகழின் உச்சியை நோக்கி மேலே செல்லும் ஒவ்வொரு காலகட்டத்திலும்,

'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தன்னடக்கமாக சொல்லும் அவரது மனது.

20 பிப்ரவரி, 2009

அபி அப்பாவிடம் "பத்து" கேள்வி !

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு தாமதமாக சென்றதும் இல்லாமல், அர்சனா ஸ்வீட் வாங்க மறந்ததற்கும் சேர்த்து, அபி அம்மா கொடுத்த பரிசின், குளுமைக்கு இதமாக 'பத்து' போட்டுக் கொண்டது உண்டா ?

சிவனறிவானா ?

புராண இதிகாச கதைகளில் எனக்கு பெரிய ஈடுபாடோ, நம்பிக்கையோ கிடையாது, எனவே அவற்றைப் பற்றி அறிந்தாலும் அதனைப் பற்றி அவ்வப்போது 'ஸந்தேகம்' கிளப்பிவருகிறேன். இதன் மூலம் இறை நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் நோக்கம் எதுவும் கிடையாது. மூடநம்பிக்கையின் ஊற்றாக அவை எவ்வாறு செயல்படுகின்றன என்ற விதத்தில் மட்டுமே எழுதுவதுண்டு. இறை நம்பிக்கையும், மூட நம்பிக்கையும் ஒன்றே என்று சொல்பவர்களுக்கோ (நாத்திகர்கள்) , மூடநம்பிக்கை என்று எதுவும் கிடையாது, அது இறை நம்பிக்கையின் நீட்சி, அது மூடநம்பிக்கையாக தெரிவது உங்கள் பார்வை குறைபாடு என்ற சப்பைக் கட்டுகள் செய்பவர்களைப் (ஆத்திகர்கள்) பற்றி நான் அலட்டிக் கொள்வது இல்லை.

சைவ சமயத்தை நிலைநாட்ட தோன்றியவையே பெரிய புராணக் கதைகள், அவை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடையாது. தமிழக சைவ சமயம் என்பது சைவவேளாளர்கள் மற்றும் சைவ பார்பனர்களின் நலனை முன்னிருத்தி தோன்றிய ஒன்று. இவர்களின் திருவிளையாட்களுக்கு சிவனுக்கு திருவிளையாடல் கதைகளை எழுதி சைவ இலக்கியங்கள் படைத்துக் கொண்டார்கள். கிபி 6 ஆம் நூற்றாண்டில் இருந்தே சிவன் சைவ திருத்தலங்கள் அனைத்திலுமே பிள்ளைமார் மற்றும் பார்பனர் ஆதிக்கமே இருந்துவந்திருக்கிறது. பிற்காலத்தில் சைவர்கள் துறத்தப்படவே அல்லது செல்வாக்கு இழக்கவே, பிள்ளைமார்கள் வள்ளலார் பெயரில் இணைந்திருக்கிறார்கள். இதனால் வள்ளலாருக்கோ, அவரது கொள்கைகளுக்கோ எந்த பயனும் இல்லை, ஆனால் ஆபத்து உண்டு, பழைய அரசியல்வாதிகள் இன்றைய சாதி சங்கக் கட்டிடத்தின் வரவேற்பரையில் புகைப்படமாக சிரித்துக் கொண்டு இருப்பது போல் வள்ளலார் வெள்ளாளர்களின் வரவேற்பரைக்குள் சிறைபட்டு போகும் ஆபத்து உண்டு. அய்யா வைகுண்டர் 'நாடாராக' அடையாளப்படுத்தியதால் அய்யா வைகுண்டரின் புகழ் பரவாமலேயே போயிற்று. திரைப்படம் எடுத்து அப்படி ஒருவர் இருந்ததை காட்ட வேண்டிய,அதுவும் நாடார் குல பெருமைக்காக காட்ட வேண்டிய கட்டாயத்தில் அவருக்கான திரைப்படம் எடுக்க்கப்பட்டது. வள்ளலாருக்கு அந்த நிலமை வேண்டாம், அந்த காலத்தில் பிள்ளைப் பட்டம் போட்டுக் கொள்வது நடைமுறை என்பதால் வள்ளலாரின் இயற்பெயரில் இராமலிங்கம் பிள்ளை என்று இருந்திருக்கலாம். அவரது வரலாறுகளை படிக்கும் பொழுது சாதியை தாங்கிப் பிடித்தவராக தெரியவில்லை. பக்தியை விட ஏழைகளின் பசிப்பிணி ஆற்றுவதே இறைத்தொண்டு என்ற பெருமகன் அவர்.

*****

சைவ சமயத்தை பலரும் போற்றினார்கள் என்பறு காட்ட மூன்று பெண்கள், உட்பட பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களையும், வெள்ளாளர்கள் மற்றும் பார்பனர்களில் பலரையும் நாயன்மார்களாக திருவிளையாடல் புராணக் கதை வழியாக சுட்டிக் காட்ட வேண்டிய தேவை சேக்கிழாருக்கு இருந்ததிருகிறது. அவை திருத்தொண்டர் புராணம் / திருவிளையாடல் புராணம் என்று வழங்கப்படுகிறது. அதில் ஒன்றிரண்டு பாத்திரங்கள் வாழ்ந்திருக்கலாம், சிவன் பிள்ளைக்கறி கேட்டான், நரியை பரியாக்கியது, திருநீல கண்டர் போன்ற கதைகள் நடக்கவே முடியாத கற்பனைக் கதைகள். 'சைவ' சமயத்தில் 'பிள்ளைக் கறி' (நர மாம்சம்) இருக்கமுடியாது. மிதமிஞ்சிய பக்தி என்று விட்டுத் தொலைக்கலாம். அவ்வளவெல்லாம் செய்து சைவத்தை வளர்த்து 63 நாயன்மார்களுடன் ஆகமம் செய்து உருவாக்கப்பட்டவையே சைவ திருத்தலங்கள், எல்லா கோவிலிலுமே 'திரேதா யுகத்தில் ஒரு அசுரன் கடும் தவம் செய்து.....என்று ஆரம்பித்து சிவன் தனது மகிமையால் எப்படி அழித்தார்' என்பதாகவே முடிந்து, அது அந்த இடத்தில் நடந்ததாகவும், அங்கு கோவில் எழுப்ப வேண்டும் என்று அரசனின் கனவில் தோன்றி சொல்லியதாகவே தல புராணங்கள் எழுதப்பட்டு இருக்கும்.

*****

சொல்லவந்ததின் முன்னோட்டம் நீண்டுவிட்டது.திருவிளையாடல் புராணத்தில் ஒரு நாயன்மாராக நந்தனார் கதை உண்டு, நந்தனார் எப்படி தில்லையில் ஐய்க்கியம் ஆனதைப் பற்றிய கதை. அதை மெய்பிக்கும் விதமாக நந்தனாருக்கான சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. நந்தனார் குலம் புலையர். தாழ்த்தப்பட்டவர் என்பதால் 'சூத்திரனுக்கு' கோவிலுக்குள் சிலையா ?, குறுகிய மனம் படைத்த தற்கால தில்லை பார்பனர்கள் அதனை பெயர்த்து எங்கோ வீசிவிட்டார்கள். ஒரு தில்லைப் பார்பனர் வீட்டின் படிக்கட்டிற்கு கீழ் புதைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைத்து போராடிய இறை அன்பர்கள், தற்சமயம் நந்தனார் சிலை மீண்டும் கோவிலுக்குள் வைக்கப் போராடி வருகின்றனர். இதை அறிந்து கொண்ட பார்பனர், அந்த போராட்டத்தை முடக்க வேண்டும், வெற்றிபெறச் செய்யக் கூடாது என்பதற்காக, நந்தனார் பற்றிய சிறப்புக் கதைகளை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.

'நந்தன் என்பவன் வாழ்ந்தே இல்லாதா கற்பனை பாத்திரம்... இதற்காக எதற்கு வீனாக போராடுகிறீர்கள், அறிவை வேறெதுக்காவது பயன்படுத்தலாமே' என்றெல்லாம் அற(ம்)வுரை
கூறுகிறார்கள்.

புராணங்கள், இதிகாசங்கள், இராமர் பாலம் போன்றவை கற்பனை என்று சொன்னால் அவன் நாத்திகன், அதையே ஆதாயம் கருதி பார்பனர்களும் சொன்னால் அவை பக்தி வளர்ச்சிக்காக மகான்கள் புனைந்த பக்தி நெறி இலக்கியங்கள்.

யாரு ஆத்திகன் ? யாரு நாத்திகன் ? யாரு கடவுளின் பெயரால் சாதி வளர்ப்பது ?

சிவனறிவான் !

சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லுவார்கள். நந்தனார் சிலை கூட சிவன் சொத்து தான்.

திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் !


*******

பிகு:ஐயா...இங்கே மற்றும் எனது கட்டுரைகளில் 'பார்பனர்கள்' என்று குறிப்பிடுவது 'லேபிளை' சுமந்து கொண்டிருக்கும், அதை பெருமை மற்றும் தான் சாதி அடிப்படையில் உயர்ந்தவன் என நினைக்கும் பார்பனர்களை மட்டுத்தான். இந்திய அரசியல் சட்டம் கூட பார்பனர்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லி அங்கீகாரம் எதுவும் கொடுக்கவில்லை. முன்னேறிய வகுப்பினர் என்று பிரிவில் தான் வைத்திருக்கிறார்கள்

18 பிப்ரவரி, 2009

சோனியா, கருணாநிதி, இராமதாஸ் ஆகியோருக்கு இவர்கள் நன்றி சொல்கிறார்கள் !

முட்டையால் அடித்ததற்கே ஆசிட் அடித்தது போல் புலம்புறானுங்க, பாருங்கடா இங்கே

17 பிப்ரவரி, 2009

கலவை !

சு.ஸ்வாமிக்கு முட்டை அடியாம். வன்முறை கூடாது. அவ்வளவு முட்டையையும், தக்காளியையும் ஆம்லேட் போட்டு டாஸ்மாக் பக்கம் வைத்திருந்தால் நல்ல விற்பனை ஆகி இருக்கும். எவ்வளவு வீனாப்போச்சு !

இதை வச்சு புஷ்"ஷூ" போல் புகழடையலாம் என்று சு.ஸ்வாமி திட்டம் போடுகிறாம்.

"தமிழ்நாட்டுல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கெட்டு போய்டுத்து, என்கிட்ட 111 எம்பி சைன் (யாரோ குரல் விடுறாங்க...யோவ்...! அதுக்கு எம் எல் ஏ கையெழுத்து போடனும்) போட்டு கொடுத்து இருக்கா...கருணாநிதி ஆட்சியை பிப்ரவரி 30க்குள் கவுத்துடுவேன்."படம் : நன்றி வினவு

(இது முட்டையால் அடித்த பிறகு எடுத்த படம் அல்ல, சிதம்பரம் சிற்றம்பலத்தில் சாமி கும்பிட்டுவிட்டு சு.சாமி வெளியே வருகிறார்)
***

மதுரை இடைத்தேர்தலில் தேமுதிக டெபாஸிட் இழந்து செல்வாக்கு இழந்து வருகிறது - இது செய்தி, ஒருவாரம் கழித்து...

வி.காந்து : வரும் தேர்தலை இலங்கை தமிழருக்கு (இவரெல்லாம் ஈழத்தமிழர் என்று சொல்லமாட்டார்) ஆதரவாக அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்

(பின்னே 234/40 தொகுதியிலும் டெபாசிட் போனால் கட்சிக்கு பெருத்த நட்டமாகிடுமே)

***

அத்வானி : மத்திய பட்ஜெட் சத்யம் நிறுவன கணக்கு வழக்கு போல் இருக்கிறது

அடப்பாவிகளா, சத்தியம் நிறுவனத்தின் (x)ஆயிரம் கோடி முறைகேடு பாராளுமன்றத்தில் லாவனி பாட நகைச்சுவைக்காக மட்டும் தான் பேசப்படுதா ? சத்தியத்துக்கும் (நேர்மை பற்றியல்ல) பாஜவுக்கும் தொடர்பில்லை என்பதைத்தான் பாராளுமன்றத்தில் இப்படி போட்டு உடைக்கிறாரோ. ஆமாம் இராஜசேகர ரெட்டி காங்கிரஸ்காரர் ஆச்சே. நெருப்பில்லாமல் புகையாது - சாம்ராணி, பருப்பில்லாமல் மணக்காது ... சாம்பாரு

***

ரஜினியை மோடியாக்க முயல்கிறேன் - சோ

மோடிக்கு தமிழகத்தில் இருக்கும் 'மதிப்பும் மரியாதையும்' தெரிந்தும்...சோவுக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு காண்டு ? ரஜினி ரசிகர்களிடம் இருந்து சோ வை ஆண்டவன் தான் காப்பாத்தனும்.


***

சிதம்பரம் தீட்சிதர்கள் உண்ணாவிரதம்.

நெய் விலை கடும் சரிவு . (சத்தியமாக என்னோட கற்பனை இல்லை, தட்ஸ்தமிழில் யாரோ ஒரு புள்ளையாண்டான் போட்டு இருந்தான்)

16 பிப்ரவரி, 2009

ஸ்வாமி ஓம்கார் இடுகைக்கு எதிர்வினை !

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா என்ற தலைப்பில் ஸ்வாமி ஓம்கார் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். இந்திய பண்பாடு அழிந்துவருவதற்கு காரணம் வெளிநாட்டு சதி என்பதாக எழுதி இருப்பதை ஏற்பதற்கு இல்லை. இந்தியாவின் பண்பாடு என்பதை வெள்ளைக்காரர்கள் காட்டுமிராண்டி பண்பாடாக கருதினார்கள் என்று எழுதி இருக்கிறார். ஒப்புக் கொள்ள வேண்டியது. வெள்ளையர் வருகையின் முன்பு இந்தியாவின் பண்பாடு என்னவாக இருந்ததை என்பதைப் பார்க்கவேண்டும்.

வருண அடுக்கு முறையில் பிரம்மனை கூறுபோட்டு தலையில் இருந்து கால்வரை பிறந்தவர்கள் இன்னார் என்றெல்லாம் கற்பிக்கப்பட்டு நால்வருண முறையும், மேலோர், கீழானவர் என்கிற பாகுபாடுகளும் அவர்களுக்குள்ளும் சேரவிடாமல் பஞ்சமர் என்ற ஒரு பிரிவுகளும் இருந்தன. இதில் சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் சேர்த்த மக்கள் தொகையில் மற்றவர்கள் பாதிக்கும் குறைவாகவே இருந்தனர். சூத்திரர் மற்றும் பஞ்சமர் உடல் உழைப்பில் மற்ற மூவர்ணத்தாரும் உடல் நோகாமல் நிழலில் பிழைப்பை நடத்து வந்தனர். பிறப்பினால் தாழ்வாக வைக்கப்பட்டிருப்பதை சாபமாகவும், தலையெழுத்தாகவுமே நினைத்து அதில் இருந்து விடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்றியும் வாழ்ந்துவந்தனர். இவையெல்லாம் படிப்படியாக புரிந்து கொள்ளப்பட்டது வெள்ளையார் வருகையினால் தான்.

வெள்ளைக்க்காரர்களை 'துரை'யாக அழைத்தவர்களும், அவர்களிடம் ஊழியம் பார்த்தவர்களும், அவர்களது மொழியைக் கற்றுக் கொண்டவர்களில் பாமரர் யாரும் கிடையாது, அவ்வாறெல்லாம் செய்தவர்கள் படித்த 'பண்டி'தர்களே.

ஸ்வாமி மேலும் சொல்கிறார், வெள்ளைக்காரர்கள் 'இந்தியா' என்று அழைத்ததாலேயே நாம் 'பாரதத்தை' மறந்து இந்தியா என்று அழைக்கிறோம் என்கிறார். ஸ்வாமி, வெள்ளைக்காரர்களை விடுங்கள் நம் இந்திக்காரர்கள் 'இந்தி'யா என்று அழைப்பதையே விரும்பி செயல்படுகிறார்கள்.

ஸ்வாமி மேலும் ஆதங்கப்படுகிறார், பாம்பாட்டிகளையும், வித்தைக்காட்டுபவர்களையும் பார்த்துவிட்டு இந்தியர்கள் என்றால் காட்டுமிராண்டுகளளென்று எண்ணுகிறார்கள் என்கிறார். நமக்கு அதே தான், மடோனோ மற்றும் டூப் பீஸ் அழகிகளைப் பார்த்துவிட்டு அது வெளிநாட்டினரின் தேசிய உடை என்று நினைப்பது இல்லையா ? வெளிநாட்டினர் என்றாலே அவர்கள் கணவன் மனைவியாக கடைசிவரை வாழாதவர்கள், அடிக்கடி மணவிலக்கு பெருபவர்கள் என்ற கற்பனையெல்லாம் வைத்திருக்கிறோம். அங்கும் 50 ஆண்டு மணநாள் நிறைவுக்கான வாழ்த்து அட்டைகள் விற்பதை நாம் நினைத்து பார்த்ததே இல்லை. பயன்பாட்டில் இல்லாத ஒன்றையா ஒரு நாட்டில் விற்பார்கள் ?உண்மையிலேயே வெளிநாட்டுக்காரர்களைவிட வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பும் இந்தியர்கள் செய்யும் அலட்டல் அளவுக்கு கூட இந்தியா வந்து செல்லும் வெள்ளைக்காரர்கள் நடந்து கொள்வது கிடையாது.

"சினிமா என்பது கலாச்சாரத்தின் ஓர் பிம்பம் என மறந்து தங்கள் மனம் போன போக்கில் இவர்கள் சினிமா எடுப்பதால் பாரதம் என்பது வேறு வகையான தன்மையில் வரலாற்றில் பதிவாகிறது. 50 வருடம் கழித்து இந்தியர்களின் மனநிலை 2008ல் எப்படி இருந்தது என ஆய்வு மேற்கொண்டால் ஆவணமாக இருப்பது தற்சமய சினிமா எனும் ஊடகம் என்பதை மறந்துவிடக்கூடாது." - ஸ்வாமி ஓம்கார்

நம் நாட்டின் சத்யே ஜித்ரே போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களும் இந்தியாவின் அவல நிலையை, ஏழ்மையை படம் எடுத்து தான் புகழ் அடைந்தார்கள். நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளலாம், அடுத்தவன் வந்து 'உங்க ஊரில் இது நடக்குது' என்று காட்டினால் தவறா ?

ஸ்வாமியின் மற்ற மற்ற வரிகளெல்லாம் ஏற்புடையது தான். ஆனால் ஒட்டுமொத்தமாக கலாச்சார சீரழிவுக்கு வெள்ளைக்காரனைக் காட்டுவது ஏற்கத்தக்கது அல்ல. வெள்ளையர் வருகைக்கு முன்பு 'முலை' வரி கட்டிய மக்கள் உண்டு, அதற்கு கட்டாயப்படுத்தியவர்கள் காட்டுமிராண்டிகளா ? அதை சுட்டிக்காட்டியவர்கள் காட்டுமிராண்டிகளா ? ஒருவழியாக உடன்கட்டை கலாச்சாரம் ஒழிந்திருந்தாலும், விதவை மறுமணம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாவே இருந்தது, அதனை 'வாட்டர்' படத்தின் மூலமாக ஆவனப்படுத்த முயன்ற தீபா மேத்தாவுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் என்ன என்ன என்று அனைவருமே அறிவர். வெள்ளையர் வருகைக்கு முன் 'இந்தியா சுபிட்சமாக இருந்தது' என்று உங்களால் கண்டிப்பாக கூறமுடியாது.

உலகின் இதயம் போல் நடுவில் இருந்தாலும், இந்தியா பொருளாதாரத்திலும், இன்னபிறவற்றிலும் பின் தங்கி இருப்பதற்கு என்ன காரணம் ? பழமை வாதம், மூட நம்பிக்கை தான்.

யாரோ ஒரு கவிஞன் சொன்னான்,

விதவைகளின் வெப்ப மூச்சில்
வெந்து கொண்டிருக்கிறது இந்தியா !


நம்மிடம் குறை இருப்பதை உணர்பவர் எவரோ அதை களைய முயற்சிப்பவரும் அவரே ஆவர். மற்றவர்களுக்கும் தெரிந்துவிட்டதே என்பதற்காக நம் குறைகள் நிறைகள் ஆகிவிடுமா ? அல்லது அவர்களை பதிலுக்கு குற்றம் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ?

இணைந்த கைகள் (100) !

25 ஆவது பதிவு, 50 ஆவது பதிவு, 100 ஆவது பதிவு எல்லாம் காலம் மலையேறி போச்சு வேறென்ன புதுசு ?

பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை :

எண்ணிக்கையில் முன்னனியில் இருப்பவர்கள்

இட்லிவடை
பரிசல்காரன்
யுவகிருஷ்ணா (நம்ம லக்கிலுக்)
வகுப்பறை வாத்தியார்
அதிஷா
குசும்பன்
கார்க்கி
வால்பையன்

*****

மேற்கண்ட இளையர்களின் பதிவு போல எனது பதிவையும் பலரும் பின் தொடர்ந்து படித்து எண்ணிக்கையை உயர்த்தி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது இடுகை தமிழ்மண சூடான இடுகையில் தடை செய்யப்பட்டு இருந்தாலும் எனது பதிவுகள் தொடர்ந்து வாசிக்கப்படுவதற்கு பின் தொடர்பவர்களாக இணைந்து படிப்பவர்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பதும் காரணம்.
என்பதிவில் 100 ஆவது பின் தொடர்பவராக இணைந்திருந்தவர் புதுகை அப்துல்லா, அது காலை நிலவரம், மதியம் யாரோ கழண்டு கொள்ள 99க்கு வந்தார். தற்பொழுது 100 ஆவது பின் தொடர்பவராக சேர்ந்திருப்பவர் மறத்தமிழன்.


இணைந்த கைகளில் இணைந்த அனைத்து பதிவு நண்பர்களுக்கும் நன்றிகள். முதலில் இணைந்த மருத்துவர் புரூனோவுக்கும், எண்ணிக்கையை முழுமையாக்கிய புதுகை அப்துல்லாவிற்கும் மற்றும் மறத்தமிழனுக்கும், மின் அஞ்சல், உரையாடி வழியாக வாழ்த்து தெரிவித்த அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் நன்றிகள் !

Reader மற்றும் Feeder ல் படிக்கும் அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி !

15 பிப்ரவரி, 2009

வழக்கொழிந்த சொற்கள் !

வழக்கொழிந்த சொற்கள் பற்றி எழுதும் படி வெளிச்சப் பதிவரின் வேண்டிகோளை ஏற்று இந்த இடுகை. தமிழ் பேச்சு வழக்கில் பிறமொழி கலப்பென்பது இயல்பு. தொழில் தொடர்பில் (இதைதான் 'வியாபார நிமித்தம்' என்பார்கள்) பிற இன, மொழி மக்களுடன் உரையாடுபவர்களே பெரும்பாலும் மொழிக் கலப்பை (அறியாமல்) செய்பவர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இன்றைய தேதியில் தொலைக் காட்சி பெட்டிகளே அதைச் செய்கின்றன.

100க்கும் மேற்பட்ட ஒளிவழிகளில் பல்வேறு மொழியில் தொலைகாட்சி சேவைகள் ஒவ்வொரு வீட்டிக்குள்ளும் இருப்பதால், மொழிகலப்புகளுக்கான மூலம் வீட்டிக்குள்ளேயேயும் கூட தொடங்குகிறது எனலாம். ஒளிவழி என்றால் என்ன ? சிங்கை தமிழ் தொலைகாட்சி மற்றும் வானொலியில் Channel க்கு பயன்படுத்தும் சொல். ஒலிவழி ? ஒளி வழியா ? எதுசரி ? நிறப்பிரிகையின் (Spectrum of Light -உடனே ஊழலை நினைத்துவிடாதீர்கள்) குறியீட்டில் உள்ள அலைவரிசையே ஒளி/ஒலி பரப்புக்கு பயன்படுத்துவதால் ஒளிவழி என்று சொல்வது பொருத்தமானது.

மூன்றாவதாக அரைகுறை மொழிப்பேச்சாளர்களால் கலப்பு மிகுதியாக ஏற்படும், எது அரைகுறை பேச்சு ? தாய்மொழியல்லாத எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொண்டு பேசத் தொடங்கும் முன் அம்மொழியில் உள்ள அறிந்திராத சொற்களுக்கு மாற்றாக தாய்மொழியில் உள்ள சொற்களைப் பயன்படுத்திப் பேசுவார்கள், அது தவறு அல்ல. ஆனால் அவர்களிடம் உரையாடுபவர்கள் வழியாக அந்த கலப்பு மொழிகளின் மீது ஏற்றப்படும். சவுக்கார் பேட்டை சேட்டுகளின் தமிழ் இத்தகையவையே, அவர்களிடம் பணியில் இருப்பவர்களிடம் அவர்கள் பேச, அவர்கள் கலந்து பேசும் இந்தி மொழியில் அடிக்கடிக்கடி புழங்கும் சொற்கள் தமிழுக்குள் நுழைந்துவிடும். ஜல்தி (விரைவு), அதிகம் (மிகுதி), கம்மி (குறை-குறைவு) போன்ற பண்பு பெயர் சொற்கள் இப்படியாக நுழைந்தவையே.

சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. இப்பழமொழிக்கும் மொழிக்கலப்பிற்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். பயன்பாடில்லா, வெறும், அசைவற்று என்கிற ஒரு நிலையில் இருந்த ஒன்றை தொடர்பு படுத்தி சொல்ல பயன்பட்டு வருவது 'சும்மா' இந்தி சொல். சும்மா கிடத்தல் என்பது கவனிப்பாரின்றி கிடத்தல், சும்மா என்பது பண்பு பெயர் என்ற நிலையில், கவனிப்பாரின்றிய, அசைவற்ற என்கிற பண்பைப் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லாக சும்மா என்பதைப் பயன்படுத்துகிறார்கள். சும்மா கிடைக்கிறதே என்று நாமும் இதுபோல் பலசொற்களை பயன்படுத்தி மொழியை கெடுக்கிறோம். சும்மா கிடைக்கிற பிறமொழிச் சொற்கள் யாவும் மற்றொருமொழிக்கு சுமையே. குரங்கு கை பூமாலை என்பதின் மாற்றுவடிவம் தான் சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்கிற பழமொழியும். நல்ல நிலையில் இருந்த ஒன்றை வீனாக்குவது.

மொழிக்கலப்பு என்பது இயல்பு தான். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டால் மொழி உருக்குலைந்துவிடும். அங்கிலம் எல்லா மொழிகளையும் ஏற்கவில்லையா ? ஆங்கிலம் எல்லா மொழிச் சொற்களையும் ஏற்கும், அதிலிருக்கும் 2 லடசத்திற்கும் மிகுதியான சொற்கள் அனைத்தையுமே சொல்விளக்க அகரமுதலி (அகராதி) இல்லாமல் ஒருவருமே அறியமுடியாது. அதுமட்டுமின்றி ஆங்கிலம் பயற்சி இன்றி கற்றுக் கொள்ளும் அளவுக்கு எளிதான மொழியல்ல, இருப்பினும் வட்டார வழக்கு போல் ஆங்கிலம் சில நாடுகளில் பேசப்பட்டு வருகிறது சிங்கை, மலேசிய ஆங்கிலம் இத்தகையதுதான். எந்த ஒரு இலக்கணத்திலும் அடங்காமல் ஒரு கலவை மொழி போலத்தான் ஆங்கிலம் இப்பகுதியில் பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் அமைந்திருக்கும் நீதிமன்ற தீர்பாணை மிக எளிதாக ஆங்கிலம் அறிந்த அணைவருக்குமே புரிந்துவிடுமா ? அது தவறாக புரிந்து கொள்ளப் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தனியாக விளக்கமெல்லாம் எழுதப்படும். மொழிக்கலப்பை ஏற்பதால் மொழி வளரும் என்பது மொழி வரலாறுகள் அறியாதவர்களின் பிதற்றல்கள்.

கிரேக்கம், லத்தீன், இப்ரோ போன்ற ஐரோப்பிய மொழிகள் ஒன்றுக் கொண்டு மிகுதியாக கலந்ததால் உருவான புதிய மொழியே ஆங்கிலம் ஏறக்குறைய அதே காலத்தில் தான் உருதும் சமஸ்கிரதமும் கலந்து 'இந்தி' உருவானது, ஆங்கிலேயர்களைப் போல் 'இந்தி'யர்களும் வெளிநாடுகளைக் கைப்பற்றி இருந்தால் அங்கிலத்திற்கு பதில் இந்தி பரவி இருக்கும். ஆங்கிலம் பரவியதற்கு அதன் மொழி வளம் மட்டுமே காரணம் என்பதை விட அரசியல் காரணமே மிகுதி.

மொழிக்கலப்பை தவிர்க்க என்ன செய்யலாம் ? மிக எளிதானவையே, இருவரும் தமிழர்கள், இருவருக்குமே தமிழ் நன்றாக தெரியும் என்று இருவருமே அறிந்தால் தமிழிலேயே பேசலாமே,

அண்மையில் சென்னையில் நண்பர் வீட்டுக்குச் சென்றேன். நண்பர் வீட்டுக்கு மேல் மாடியில் இருந்த தமிழர் நண்பரிடம், எதோ ஒன்று குறித்து பேசும் போது

'யூ நோ வாட் ஐ டிட்...' என தனது ஆங்கிலப் புலமையைக் காட்டிக் கொண்டிருந்தார். எரிச்சலாக இருந்தது. பத்து உரையாடல் வரிகளில் ஆறில் ஆங்கிலமே பேசினார்

வெள்ளைக்காரன் நாட்டை விட்டுவிட்டுச் சென்றாலும் அவனது மொழியையே தங்களுக்குள் பேசி அவனது அடிமையாக தொடர்ந்து இருப்பதையே பலரும் பெருமையாக கருதுகிறார்கள்.

வழக்கொழிந்தது எது ? சென்னைப் போன்ற பெருநகரங்களில் இருக்கும் தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் தொடர்பு கொள்வது வழக்கொழிந்தது வருகிறது. பணி தொடர்பில் இல்லாது மற்ற நேரங்களிலும் ஆங்கிலத்தில் உரையாற்றும் தமிழர்களிடம் வெட்கப்படாமல் தமிழிலேயே பேசச் சொல்லுங்கள்.

14 பிப்ரவரி, 2009

கோக் பெப்ஸிக்கு போட்டியாக மாட்டு சிறுநீர் :

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின் சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெள ஜல் என அது பெயரிட்டுள்ளது.

இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இது மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக் குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர் வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போது மார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போல உடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காது என்றார் ஓம் பிரகாஷ்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள் தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேத மூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும்.

இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம் இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்

மேலும் படிக்க

*******

மாட்டு சிறுநீர் என்று படித்தால் தலைப்பு அருவெறுப்பாக இருக்கும் 'கோமேயம்' என்று படிக்கவும்.


தசவதாரம் படம் பார்த்திருக்காவிட்டால் சவுச்சாலயம் என்றால் எதோ வட இந்திய கோயில் என்றே நினைத்திருப்போம். கழிவரை என்ற பெயர்ச் சொல்லை சமஸ்கிரதத்தில் மொழி மாற்றி எழுதி யாராவது படித்தால் 'ஸ்லோகம்' சொல்வதாக நினைத்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நம்மவர்கள் இருக்கும் வரை கோமேயம் என்ன அஸ்வமேயம் (குதிரை மூத்(தி)ரம்), வரகாமேயம் (பன்றி மூத்(தி)ரம்) கூட விற்பனைக்கு வரலாம்.

13 பிப்ரவரி, 2009

நாளையை நினைத்த இவரு பாவம்...இந்நாளே நன்னாள் !

சேக்கிழாரின் சைவ நெறியில் எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது. நந்தனார் வரலாறு நடந்தவையா...திருத்தொண்டர் புராணத்தில் ஒரு கதையா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லவில்லை. அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் நந்தனார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்தி நெறியின் குறியீடு என்பதை கண்டிப்பாக அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

நந்தனார் வரலாறு பலருக்கும் தெரிந்தவை என்பதால் அதை இங்கே சொல்லப் போவதில்லை. இறுதியில் நந்தனார் 'ஜோதியில்' ஐக்கியம் ஆனார், என்று சொல்கிறார்கள். 200 நூற்றாண்டுகளுக்குள் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரின் 'முக்தி'யும் கூட ஐயமாகவே இருப்பதால், சேக்கிழாருக்கு முன்பு வாழ்ந்தவராக சொல்லப்படும் நந்தனார் 'ஜோதி' மயமானது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவுமே கிடையாது.

சேக்கிழார் சிவநெறியைப் போற்றியவர்கள் என்ற வரிசையில் நந்தனாரையும் குறிப்பிட்டு நாயன்மார்கள் வரிசையில் வைத்துள்ளார். நாயன்மார்களில் ஒருவர் என்ற அளவில் நந்தனாருக்கு முதன்மைத்துவம் எதுவும் இல்லை. பிற நாயன்மார்களைவிட நந்தனார் நேரடியாக தில்லைக்கு தொடர்புடையவர் என்பதால், நந்தனார் அங்கே முக்திபெற்றவர் என்று கூறி தனியாக சிலை நிறுவப்பட்டு போற்றப்பட்டதாக சொல்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்டவனுக்கு தனி மரியாதையா ?' சிலையிலும் தீண்டாமை கொடுமை செய்து நந்தனார் சிலையை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தீட்சிதர்கள் அப்புறப்படுத்தியதாகவும், கண்ணகி சிலைபோல் நந்தனார் சிலையும் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. ஐம்பது ஆண்டுகள் கணக்கு என்பது மிகச் சரியாக இல்லாவிட்டாலும், பாரதியார் பாடலில் நந்தனார் சிலை இருந்த இடத்தைப் பற்றிய பாடல் இருப்பதால், பாரதி காலத்தில் சிலை கோவினுள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்றே சொல்கிறார்கள்.


ரே கல்தான்....சிற்பியின் கைவண்ணத்தில் சாமி சிலையாகவும், அடியார் சிலையாகவும் ஆகிறது, அந்த கல்லில் உள்ள வடிவத்தை வைத்து தீண்டாமை பார்பது என்பது வருணாசிரம கொள்கையின் உச்ச கட்ட கொடுமை. சைவம் சைவம் என்று கூவும் சைவ அன்பர்கள் சிலையை மீண்டும் நிறுவவதற்கு முயற்சி எடுத்தார்களா ? அது தில்லை தீட்சிதர்களிடம் செல்லுபடியானதா என்ற தகவலெல்லாம் தெரியவில்லை. தமிழில் பாடுவதற்கே நாத்திகர்களின் போராட்டம் தேவைப்படும் போது, வருணாசிரம கொள்கைகளை இந்து மத, சைவ கொள்கைகளாக நினைக்கும் ஆன்மிகவாதிகளுக்கு நந்தனார் சிலை அகற்றப்பற்றதற்கு ஏதும் கவலைப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே. போகட்டும்.

தீட்சிதர்களின் அடாவடிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கோவிலை கையகப்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆறுமுக ஸ்வாமி போராடித்தான் உள்ளே சென்றிருக்கிறார். இறுதி மூச்சு வரை போராடிய நந்தனார் எப்போது செல்வார் ?

ஆன்மிக அன்பர்களும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை மேலாக நினைப்பவர்களும் நந்தனார் சிலையை தில்லையில் மீண்டும் நிறுவ முயற்சி செய்ய வேண்டும், அதற்காக மாதவி பந்தலார் முயற்சியில் வேண்டுகோள் விண்ணப்பம் மின் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது, அதில் உங்கள் கையொப்பம் இடுங்கள் கையொப்ப எண்ணிக்கைக்கு ஏற்ப நந்தனார் கோவிலுக்குள் செல்லும் நாள் முடிவு செய்ப்படும்.

மின் விண்ணப்பம்:


நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்


'நாளைப் போவோம்...நாளைப் போவோம்' என்று காத்திருந்தற்காகவே நந்தனாருக்கு 'திருநாளைப் போவார்' என்ற பெயருண்டு. நம் காலத்தில் நாளை வேண்டாம்....இன்றே அவரை அழைப்போம்.


*******


மதுரை மீனாட்சிக் கோவிலினுள் தெற்குவாசல் வழியாக நுழையும் போது இந்த சிலை இருக்கிறது. சிலை(யில்) கண் பளிச்சிடவே கிளிக்கினேன். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' இவர் மீனாட்சிக் கோவில் சொத்தில் அமைந்த வயலில் நாத்து நட்டாரா ? களையெடுத்தாரா ? அம்மனுக்கு மஞ்சள் (சாத்த) அரைத்துக் கொடுத்தாரா, அல்லது நாயனாரா ? தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' திவ்வியமாக பூசை புனஸ்காரங்களுடன் நின்றுகொண்டு இருக்கிறார் காரணம் பெயர் ராசி மற்றும் குலம். நந்தனார் சிலை அகற்றப்பட்டதற்குக் காரணமும் குலம் தான், அவர் புலையர் குலத்தை சேர்ந்தவராம்.

12 பிப்ரவரி, 2009

இராம் சேனா நடத்தி வைத்த திருமணம் ?

பிங்க் ஜட்டி அனுப்புவதாக இருந்தால் இங்கே இருக்கிறவர்களுக்கும் அனுப்புங்க, இப்ப திருமண உடை அணிந்திருக்கிறார்கள், அது எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, அதனால் இவங்களுக்குத்தான் ஜட்டி தேவைப்படுது.பிப்ரவரி 14ன்னு தெரியாமல் குட்டி சுவரு ஓரமா நின்னேன், பக்கத்துல இன்னொரு கழுதை நிற்பது கூட தெரியாது, புடிச்சு கட்டி வச்சிட்டாங்க.பிப்ரவரி 14 அன்னிக்கு இரண்டு பேரும் சேர்ந்து கரணம் போட்டோம், அது குத்தமா ?
வயுத்துப் போக்குன்னு வெட்னரி ஹாஸ்பிடல் கூட்டிவந்தாங்க, அங்க இது வந்தது... சும்மாதான் நல்லா இருக்குதேன்னு பார்த்தேன், டாக்டர் இராம் சேனாவில் இருக்காராம்

அகோரி VS அந்நியன் :)

சில பாத்திரங்கள் நீண்ட நாள் பேசப்படும், அதை வைத்து நிறைய காமடிகளை உருவாக்குவார்கள், என்னோட முயற்சியில்...

********

அந்யாயத்தைக் கண்டா அப்படியே பொங்கனும்.....ரஜினி பாணியில் கொள்கை வைத்திருக்கும் அகோரியும், அந்நியனும்....

அகோரி தலைகீழ் யோகா பண்ணும் இடத்திற்கு வந்த அந்நியன்

இருவரும் கரகரத்தகுரலில்

அந்நியன் : அந்த போலிஸ்காரனும் தானே பிச்சைக்காரர்களை கொடுமை படுத்தினான் அவனையேன் கொல்லலை ?

அகோரி : கஞ்சா இருக்கா...

அந்நியன் : கஞ்சா.... குடிக்கிறது சட்ட விரோதம்

அகோரி : எனக்கு சட்டம் கிடையாது....தொண்டை ரொம்ப கெட்டுப் போய் இருக்கு போய் இருமல் மருந்து வாங்கி சாப்பிட்டுவா
அந்நியன் : உனக்கும் தான் இருமல் மருந்து தேவைப்படுதே ... அதனால அதை நீ சொல்லாதே...நீயும் இந்த நாட்டுல ஒருத்தன் தான், ஏன் சட்டம் உன்னை கட்டுப்படுத்தாது...?

அகோரி : கஞ்சா இருக்கா... இருந்த கொடு ......சும்மா தொன தொனக்காதே...தலைக்கீழே யோகா பண்ணிக்கிட்டு இருக்கேங்கிற தைரியத்துல பேசுற......எறங்கினேன்......அம்பி ஆகிடுவே

அந்நியன் : கஞ்சா குடிக்கிறது சட்டப்படி குற்றம், அதையும் மெரட்டி கேட்கிறது அதவிட குற்றம்

அகோரி : ஓம் ரீம் க்லீம்........என்று சொல்லிக் கொண்டே அந்நியன் மீது ஏறி அவரை சாத்துகிறார்

...அந்நியன் அம்பி ஆகிறார்

அம்பி : யார் நீங்க...எதுக்காக என்னை பின்னுறேள்

அகோரி : உன்னைய மாதிரி சட்டத்தை கையில எடுக்கிறவனுக்கு மரணம் கொடுப்பவன் நான்......கடவுள் அகம்.....ப்ரம்மாஸ்மி' ......அதிர அதிர கத்துகிறார்

அம்பி : என்னது ஐயராத்து மாமியா ?

அகோரி பளாரென்று அம்பியின் கன்னத்தில் அறைவிட

அம்பி மீண்டும் அந்நியனாக மாறுகிறார்

அந்நியன் : உன்னைய மாதிரி சட்டத்தை மதிக்காமல் கஞ்சா குடிச்சிட்டு தூங்கும் சோம்பேறிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் அந்நியன் நான்

இருவரும் பலமாக மோதிக் கொள்கிறார்கள்....இருவரின் தலைமுடிகள் சிக்கிக் கொள்கிறது, சிக்கிய முடியுடன் ஒருவருக்கு ஒருவர் முட்டிக் விருமாண்டி பாணியில்

'உர்ர்ர்ர்ர்ர். உர்ர்ர்ர்ர்ர்ர்ர்' இருபக்கமும் ஒரே உறுமல் சத்தம்

பொதுஜனம் கூடிவிட்டார்கள்

ஒருவர் : நிறுத்துங்கப்பா உங்க சண்டையை.......'எங்களையெல்லாம் பார்த்தால் இளிச்சவாயனாக தெரியுதா ?' எதோ பொழுது போக்குன்னு ரசித்தால் ஆள் ஆளுக்கு நாட்டுக்கு அட்வைஸ் மழை....தலை முடியை வளர்த்து இன்னும் என்ன கேரக்டர்கள் வரப்போகுதோ.... இந்த ஷங்கரையும்...பாலாவையும் புடிச்சு மரத்துல கட்டிவச்சி உறிக்கனும். அப்பதான் ஒருத்தரும் இப்படி பட்ட கேரக்டர்களை உலாவிட மாட்டாங்க.

மற்றொருவர் ஒருவர் : சரி சரி வேடிக்கைப் பார்க்கமல் எல்லோரும் காசைப் போடுங்க, அந்நியனுக்கும் அகோரிக்கும் முடிவெட்டிவிட்டு ஏர்வாடிக்கு அனுப்பனும்.

பிகு : இன்னும் சிறப்பாக எழுதனும் என்று நினைத்தேன். நேரமில்லை

11 பிப்ரவரி, 2009

மதுரை திருக்காட்சி நிறைவு பகுதி ! ரத்னேஷ் சந்திப்பு !

பதிவர் அண்ணன் ரத்னேஷுடன் மின் அஞ்சல் தொடர்பில் இருந்து கொண்டு இருந்தாலும் இதுவரை புகைப்படத்தில் கூட பார்க்காத ஒருவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற ஒருவித உணர்வு இருந்தது. எனது புகைப்படங்களை அவர் பார்த்திருப்பதால் தொலைவில் இருந்தே என்னை தெரிந்து கொண்டு கையசைத்தார். 6 அடிக்கு சற்று குறைவான உயரம், வட இந்தியாவில் இருப்பதால் என்னவோ.....மீசை மிஸ்ஸிங், நெற்றியில் புருவத்திற்கு சற்று மேலாக குங்குமம். நம் வடுவூர் குமார் அண்ணனை லேசாக நினைவு படுத்தும் தோற்றம். உயரத்திற்கேற்ற எடை. நான் கற்பனை செய்திருந்த உருவத்தில் பொருந்தவில்லை. நெருங்கி வந்ததும் கைகுலுக்கல் மற்றும் லேசனான தழுவல் அறிமுகம் ஆகிக் கொண்டோம்... அவரது அப்பாவையும் மனைவியையும் அறிமுகப்படுத்தினார். பெட்டிகளை தூக்கிக் கொண்டு நடந்தோம். நான் குட்டி ரத்னேஷை தூக்கிக் கொண்டேன். அன்னியர் என்ற உணர்வில்லாது என்னிடம் முரண்டு பிடிக்காமல் இருந்தான். அதன் பிறகு மேலே ஏறி, கீழே இறங்கி..

(குட்டி ரத்னேசும், நானும்)

'இங்கேயே சாப்பிட்டுவிட்டு போகலாம்' என்றார் இரயில் நிலைய வளாகத்திலேயே சாப்பிட்டோம், ஏற்கனவே சீனா ஐயாவின் கவனிப்பில் வயிறு நிறைந்திருந்த்தால் ஒரு தோசையுடன் முடித்துக் கொண்டேன். அதன் பிறகு 'கிளம்புறேன்.....' என்றேன்

'வீட்டுக்கு வந்துட்டு போங்க...பக்கம் தான் பழங்காநத்தம்....' என்றார்

ஒரு ஆட்டோ போதவில்லை என்பதால் இரண்டு எடுத்து

ஒன்றில் அவரும்...அவர் மனைவியும் ஏறிக் கொள்ள

அடுத்ததில் நானும் அவரது அப்பாவும், குட்டி ரத்னேசும் ஏறிக் கொள்ள ஆட்டோ புறப்பட்டது......எங்கேயோ கடத்திக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்தானோ என்னவோ.....பொடியன்....'அப்பா அப்பா.....' என்று சினுங்க ஆரம்பித்தவன் வீடு போகும் வரை நிறுத்தவில்லை.அவர்கள் வீட்டில் ஒரு 10 நிமிடம் இருந்தேன். புகைப்படங்கள் எடுத்தேன், அவரே எழுதிய புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.

'அண்ணா உங்கப் படம் பதிவில் போடலாமா ?'

'வேணாங்க.....என்னை பார்க்க வருபவர்கள், நான் சந்திக்கிறவர்கள் நேரில் பார்த்தால் போதும்...அலுவலகத்தில் கூட நான் எழுதுவது யாருக்கும் தெரியாது...(குட்டி) ரத்னேஷ் படத்தைப் போடுங்க...' என்றார்.


அதன் பிறகு வீட்டில் இருந்து விடை பெற்றேன். இருங்க வருகிறேன் என்று சொல்லி பேருந்து ஏற்றிவிட வந்தவர் சுமார் 30 நிமிடங்கள் தனிப்பட்ட தகவல்களை என்னிடம் பேசிக் கொண்டு இருந்தார். இரவு 10:30 ஐ நெருங்கவே....விடைபெற்றேன். ஆட்டோவுகான பணத்தை ஓட்டுனரிடம் கொடுத்து

'அங்க போய் மறுபடியும் இவரிடம் வாங்கிக்காதிங்க' என்று சொல்லி ஏற்றிவிட்டார். ஓட்டல் அறைக்கு வரும் போது இரவு 11 ஆகி இருந்தது. காலி செய்துவிட்டு பேருந்து நிலையம் சென்று புதுக்கோட்டை தஞ்சை வழியாக....நாகை வந்து சேர காலை 6 மணி ஆகிவிட்டது.

*********இவ்வளவு சிரமப் பட்டு காத்திருந்து சந்திக்க அப்படி என்ன தான் நடந்தது ?

விருப்பட்டவர்கள் தொடர்ந்து படிக்கலாம்


பதிவர் ரத்னேஷ் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்பில் இருப்பவர், அவ்வப்போது மின் அஞ்சல் அனுப்பினால் எப்போதாவது அதற்கு பதில் எழுதி அனுப்புவார். மற்றபடி எங்களுக்குள் தொலைபேசி தொடர்புகள் கூட இருந்தது இல்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல நூல்களையும், பல்வேறு கட்டுரைகளையும் வேறு ஒரு புனைப் பெயரில் எழுதியவர் என்பது எனக்கு பின்னரே தெரியும். நம்மைப் போல் பதிவர் என்ற எண்ணத்திலேயே அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். வாசகர்கள் கடிதம் அவருக்கு புதியதல்ல எனவே, தொடக்கத்தில் எனது தனிப்பட்ட தொடர்புகளை அவர் விரும்பி இருக்கவில்லை என்று பின்னர் தெரிந்தது. 'எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் நெருக்கம் வாசகர் கடிதம் தாண்டி இருக்க வேண்டியதில்லை' என்பதே அவரது சித்தாந்தம். மற்றவை போலித்தனமானது என்பார். முதல் மின் அஞ்சலுக்கும் பதில் அளிக்கும் விதமாக, எனது நட்சத்திரப் பதிவுகளைப் பாராட்டி எழுதியதுடன் வலையுலகம் வளர்ந்து கொண்டு இருப்பதையும், இப்படி ஒரு சார்பற்ற ஊடகம் இருப்பதையும் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டு, தனது இயற்பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.

அவரது ஆரம்பகால இடுகைகளில் ஒன்றை முதன் முதலில் படிக்கும் பொழுதே நல்ல எழுத்தனுபவம், வாசிப்பு அனுபவம் இருப்பதாக உணர்ந்தேன். அதில் இருந்த சமூகம் குறித்த எண்ணங்களும், கடவுள் கொள்கை குறித்த கருத்துகளும் அவரைப் போல் நானும் எழுதி வந்ததால் அவரது எழுத்து படித்தவுடன் பிடித்து போய்விட்டது,

பின்னூட்டத்தில் எனது மின் அஞ்சல் முகவரி கொடுத்து அவரது மின் அஞ்சல் முகவரி கேட்டிருந்தேன், சில நாட்கள் கழித்தே எனக்கு மின் அஞ்சல் செய்தார். மின் அஞ்சல் பரிமாற்றத்திலேயே அவரை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்து விருப்பத்தைக் கூறி இருந்தேன். கண்டிப்பாக நல்ல மனிதராகத் தான் இருப்பார் என்று அவரது எழுத்துக்கள் சொல்லியதால். அவரைப் பற்றி எதுவும் தெரியாமலேயே எழுத்தை வைத்து நான் மற்றும் எனது மனைவி மகள் படங்களை எனது இரண்டாவது மின் அஞ்சலில் அனுப்பி என்னைப் பற்றிய முழு அறிமுகம் கொடுத்து இருந்தேன். உங்களை நேரில் பார்க்கும் வரை உங்கள் புகைப்படம் அனுப்பாதீர்கள் என்று சொல்லி இருந்தேன். அதை ஏற்று மனைவி, மகன் படங்களை மட்டும் அனுப்பினார். அவர் எப்போதாவது தான் தமிழ்நாட்டு பக்கம் வருவார். மற்ற நாட்களில் வட இந்தியவில் அஸ்ஸாமில் வேலை. கடந்த ஜூனில் சென்னை சென்ற போது 'முடிந்தால் அஸ்ஸாம் வந்து சந்திக்கிறேன்' என்று மின் அஞ்சல் செய்திருந்தேன், 'அஸ்ஸாம் உல்பா பிரச்சனை எப்ப யாரை கடத்திக் கொண்டு போவார்கள் என்று தெரியாது...ரிஸ்க் எடுக்காதிங்க...இங்கே நண்பர்களை வரவழைப்பதை நானும் விரும்பவில்லை' என்றார். அதன் பிறகு சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக இருவருக்கும் தொடர்பில்லை.

ஒருமுறை முகவை இராம் டார்ஜிலிங் செல்ல ஆயத்தமான போது ரத்னேஷ் முகவரி கொடுங்க பார்த்து வருகிறேன் என்றார். முகவரியா ? என்னிடம் மின் அஞ்சல் தவிர்த்து எதுவும் இல்லை, அஸ்ஸாமுக்கு சென்று பார்பதை அவரும் விரும்பவில்லை என்றேன். அதன் பிறகு இராம் செல்வதைப் பற்றி மின் அஞ்சல் அனுப்பியதும், 'முகவை ராம் டார்ஜிலிங் என்னிக்கு போறார்னு கேட்டு சொல்லுங்க அங்கேயே சென்று பார்த்து வருகிறேன் என்று மின்னஞ்சல் செய்திருந்தார். அதற்குள் முகவை ராம் இந்தியா தொடர்பு எண்ணைக் கொடுக்காமல் சென்றதால் என்னால் தகவலை சொல்ல முடியாமல் போய்விட்டது. இருவரும் சந்திக்கவில்லை

அதனுடன் அவரும் பதிவு எழுதுவதை இணைய இணைப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவிட்டார். நான் சென்னை கிளம்பும் மூன்று நாளைக்கு முன்பு முதன் முறையாக சிங்கையில் இருந்த என்னை அலைபேசியில் அழைத்து பேசினார். நான் சென்னை வருகிறேன். உங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா ? என்று கேட்டேன். நான் அடுத்த மாதம் தான் சென்னை வருகிறேன். எதற்கும் முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். நான் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு கிளம்பிய மறுநாள் அவர் சென்னை வந்தார், அதனால் அங்கும் பார்க்க முடியவில்லை. 'சென்னை...காரைக்கால், நாகை... மதுரை இங்கே எங்காவது நாம எப்படியும் சந்திப்போம்' என்றார். எனக்கு நம்பிக்கை இல்லை 'எங்கே சந்திப்பது என்று எனக்கும் குழப்பம் ஆகிவிட்டது' ஏனெனில் மற்ற நண்பர்களுக்கு நான் இந்தந்த தேதிகளில் அவர்களைப் பார்க்க வருவதாக தகவல் சொல்லிவிட்டேன். அதன் படி பயணத்திலலிருந்தேன்.

ஒருவழியாக நான் மதுரையில் இருந்த அன்று (ஜென / 29 / 2009) காலை அலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து இரவு 8:30க்கு மதுரை வருவதை தெரிவித்ததும், அவருடைய ஊரிலேயே அவரைப் பார்ப்பது என்று முடிவு செய்து இரவு 8:30 வரை காத்திருந்து பார்த்து வந்தேன். எனக்காகவே முன்கூட்டி அஸ்ஸாமிலிருந்து கிளம்பி வந்தவரை அவருடைய ஊரிலேயே பார்த்தது எனக்கும் மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுத்தது.

தற்பொழுது இணைய இணைப்பு சரியாக கிடைக்கவில்லை என்பதால் அதில் போராடுவதை கைவிட்டு, வரும் ஏப்ரலுக்கு மேல் பணி மாற்றம் கிடைக்கும் போது திரும்ப எழுதுவதாக சொன்னார்.

அவருடைய இயற்பெயர் என்ன, எந்த பதிப்பகத்தின் வழியாக, எந்த பெயரில் புத்தகங்களை வெளி இட்டு வருகிறார் ?

இதையெல்லாம் அவரே எப்போதாவது சொல்லுவார் என்று நினைக்கிறேன்.

அவரை சந்தித்தப் பிறகுதான் அவர் ஒரு எழுத்தாளர், பதிவர் வட்டத்திற்குள் வந்திருக்கிறார், எழுத்து அவருக்கு புதியதல்ல என்று தெரிந்தது, பதிவரை பதிவராக சந்திக்கச் சென்று எழுத்தாள பதிவரை சந்தித்து வந்தேன்.

10 பிப்ரவரி, 2009

மதுரை திருக்காட்சி பகுதி 3

சீனா ஐயாவை அலுவலகம் செல்லச் சொல்லிவிட்டு, மாட்டுதாவணி செல்லும் சிறு பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன். அது சந்துபொந்தெல்லாம் புகுந்து ஒரு 30 நிமிடத்தில் மாட்டுதாவணி நிலையத்தில் நின்றது. மாலை 4:30 இருக்கும், ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தேன். அலைபேசி அழைத்தது...'நான் தருமி பேசுகிறேன்...(வெளிநாட்டில் இருந்து வந்த) மகள் மற்றும் பேரக் குழந்தைகள் வேறொரு உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். நான் இப்ப ப்ரீதான்...வருகிறேன்'
என்றார். வருவதற்கு 30 நிமிடங்கள் ஆகும் என்றார்.

சரியாக 30 நிமிடத்திற்குள்ளேயே வந்துவிட்டார்.

பெரியவர்களில் மற்றவர்களிடம் பழகுவதற்கும் தருமி ஐயாவிடம் பழகுவதற்கும் வேறுபாடு உள்ளது.எப்போதும் தற்கால சிந்தனைகளில் இருப்பவர். பகுத்தறிவு வாதி, எந்தவயதினராக இருந்தாலும் கிட்டதட்ட ஒத்த வயதினர் போலவே இவருடன் உரையாடும் அளவுக்கு மிக இயல்பாக பேசுவார். மற்றவர்களிடம் பேசும் போது அவர்களின் வயதின் காரணமாக மிகவும் மதிப்பு கொடுத்து பேசுவேன். இவரிடம் நெருங்கிய நண்பரைப் போல பேசுவேன். வயதாகிவிட்டாலே நாத்திக கொள்கைகளில் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் மரண பயம் காரணமாக மாற்றம் இருக்கும். இவரிடம் அதை சிறிதும் பார்க்க முடியாது. 'கடவுள் உண்டு / இல்லை என்பதில் முன்பெல்லாம் அப்படி இப்படி நினைப்பேன்...இப்ப ரொம்ப தெளிவாக இருக்கிறேன்' என்றார். ஹோட்டல் அறையிலேயே சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.பிறகு வீட்டுக்கு அழைத்தார்.

வரும்போது மகிழுந்து அவரே ஓட்டிக் கொண்டு வந்திருந்தார். இருவரும் அவர் இல்லம் நோக்கி பயணித்தோம். வழியெங்கும் 'அழகிரி பிறந்த நாள்' கொண்டாட்டம் களைகட்டி இருந்தது. அதைப் பற்றி கலகலப்பாக பேசிக்கொண்டே சென்றோம். அவர் திமுக அனுதாபி/ அபிமானி. 'கட்சியை கெடுத்துடுவானங்க போல இருக்கு, ரொம்ப வருத்தமாக இருக்கிறது' என்றார்.
'கட்சி ஏற்கனவே திசைமாறிவிட்டது, மூன்றாம் கட்டத் தலைவர்கள் வரும் போது எல்லா கட்சியிலுமே இவையே நடக்கும், கெட்டும் போன கட்சிக்கு ஏன் வருத்தப்படுறிங்க' என்றேன்

'என்ன இருந்தாலும் திமுகவை விட்டால் அதிமுக...அந்த அம்மா அப்படியே தானே இருக்கு, அதனால்தான் கவலையே' என்றார்

'எல்லோரும் ஒரே குட்டையில் ஊறும் போது, அதே தட்டில் தானே எடைபேடமுடியும்' என்றேன்

'கட்சி கெட்டுப் போகுது...எனக்கு ஏற்கமுடியவில்லை' என்றார். திமுக மீது இவ்வளவு அபிமானமா ? கலைஞர் ஒருவரால்தான் பலரும் திமுக மீது அனுதாபம் கொண்டு சகித்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று புரிந்தது.

பேசிக் கொண்டு சென்றதில் நேரமோ, தொலைவோ தெரியவில்லை. மதுரை நகருக்கு கொஞ்சம் தள்ளி அவரது இல்லம் என்றாலும், மதுரையின் வளர்ச்சியில் அந்த இடமும் மதுரைக்குள்ளே இருப்பதாக நினைக்கும் அளவுக்கு எங்கும் குடியிருப்புகள். முதன் முதலில் இவர் வீடுகட்டி வந்தபோது மண் பாதையாக இருந்தது. அரசாங்கத்திடம் இவரது தொடர் முறையீட்டால் / முயற்சியால் தார் சாலையாக இருக்கிறது, என்பதை அவர் சொன்னதில் இருந்து அறிந்து கொண்டேன். தார் சாலை வரக் காரணமாக இருந்தவர் என்பதால் அவர் மீது அப்பகுதி மக்களுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது.

வீட்டுக்குள் சென்றோம், வீட்டுவாசலில் அவர்கள் வளர்க்கும் குட்டி நாய் வரவேற்பு கொடுத்தது, உள்ளே நுழைந்ததும் தருமி ஐயாவின் துணைவியார் மிகுந்த வரவேற்பு கொடுத்தார். வீட்டின் உற்பகுதிகளைக் அழைத்துச் சென்று காட்டினார்கள். இவருக்கென்றே கணினியுடன் கூடிய தனி அறை இருக்கிறது.


வீட்டுற்குள் நுழைவாயிலாக அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான ஓரளவு பெரிய ஒற்றை நிலைக்கதவு இருந்தது. பொதுவாக இந்துக்கள் தான் இப்படி மெனக்கட்டு கதவுக்கு செலவு செய்து அலக்கரிப்பார்கள், இவர் மதம் என்ற அளவில் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ... இவர்களும் இப்படி கதவு செய்வார்களா ? கதவு கண்ணை விரியவைத்தது. வரவேற்பு அறை சுவர்களில் அழகான ஜெய்பூர் சித்திர ஓவியம் பொருத்தப்பட்டு இருந்தது. எதிர்சுவரில் வாரிசுகள் மற்றும் பேரக் குழந்தைகளின் நிழல்படங்கள் அலங்கரித்திருந்தன. முகம் கைகால் கழுவிக் கொள்ளச் சொன்னார்கள், பிறகு சிற்றூண்டியாக சமோசா மற்றும் ஜாங்கிரியுடன் தேநீர் பரிமாறினார்கள்.

இந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் 'யப்பா...யப்பா' என்று அழைத்துக் கொள்கிறார்கள். வியப்பாக இருந்தது, அவர்கள் இருவருக்கும் இருக்கும் நெருக்கம் தோழமையுடனும் சேர்ந்தே இருப்பதையே உணர்ந்தேன். தருமி ஐயாவின் துணைவியாரும் அன்பாக எனது உறவுகள் குறித்து விபரங்களைக் கேட்டுக் கொண்டார். சுமார் 30 நிமிடம் அங்கிருந்திருப்பேன். சீனா ஐயா இரவு உணவுக்கு ஒரு ஓட்டலை குறிப்பிட்டு அங்குவருமாறு என்னையும் தருமி ஐயாவையும் அழைத்தார். அங்கிருந்து இந்த முறை ஸ்கூட்டியில் கிளம்பினோம், அவரே ஓட்டிவந்தார். .

ஓட்டல் பெயர் குழப்பத்தில் வேறொரு இடத்திற்கு சென்று பிறகு அவரை அழைத்து தெளிவு படுத்திக் கொண்டு சரியான ஓட்டலுக்குச் சென்றோம், காண்டினென்ட் ஓட்டல். மாலை 6:30 ஆகி இருந்தது, சீனா ஐயாவும், செல்விஷங்கர் அம்மாவும் வரவேற்பறையில் காத்திருந்தனர்

இரவு சாப்பிடும் நேரம் அதுவல்ல என்றாலும் அங்கே பேசிக் கொண்டே பொறுமையாக உணவருந்த முடியும்,பேபிகார்ன் சூப்பில் ஆரம்பித்து, Nan மற்றும் அன்னாசி வறுத்த சோறு (பைனாப்பிள் ப்ரைட் ரைஸ்) மற்றும் பழத்துண்டுகள் (சாலட்), பனிக்குழைவு (ஐஸ்கிரீம்) என வரவழைத்து சீனா ஐயா உபயத்தில் சாப்பிட்டோம். மிக மகிழ்ச்சியான பொழுதுகள் ஆக இருந்தது. உரையாடல்கள் மிக இயல்பாகவே...தருமி ஐயா...சீனா ஐயா இருவரில் யார் அண்ணன் / தம்பி என கேலியும் கிண்டலுமாகவே சென்றது.மணி இரவு 8. அவர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி 8:30க்கு நான் இரயில் நிலையத்திற்கு போகும் நேரம் நெருங்கவே சீனா ஐயாவிடமும், செல்விஷங்கர் அம்மாவிடமும் விடைபெற்றுக் கொண்டேன். தருமி ஐயா இரயில் நிலையம் அருகில் என்னை இறக்கிவிட்டார்.

என்மீது அன்பு மழை பொழிந்தவர்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டே இரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.மணி 8:30 இரயில் நிலையத்தில் வரும் / போகும் இரயில்கள் மிகுந்த நேரம். கூட்டமாகவே இருந்தது. 'வைகை வந்துவிட்டதா', சிலரிடம் கேட்டேன் சரியான தகவல் இல்லை. பிறகு ஒலிப்பெருக்கியில் வந்து சேர்ந்ததை தெரிவித்தார்கள், அந்த பதிவர் நண்பர் இப்படியாகத்தான் வரவேண்டும் என்று பயணிகள் வெளியேறும் வழியில் காத்திருந்தேன். வெளியே வந்த கூட்டத்தில் அவர்களைக் கண்டு கொள்வது வாய்ப்பற்றது என்றே தெரிந்தது. ரயில் நிற்கும் இடத்தில் பார்கலாம் என்று மேலே படியில் ஏறிக் கொண்டே... வந்துவிட்டாரா என்பதை அறிய அழைபேசியில் அழைத்தேன்.

'வந்துட்டோம்...இறங்கி அங்கேயே தான் நிற்கிறோம்...' என்றார்

'எங்கே நிற்கிறிங்க...சரியாக பெட்டி எண்ணை சொல்லுங்க'

'C1...'

'வைகை நிற்கும் அடுத்த ப்ளாட்பார்மில் இப்ப ஒரு இரயில் கிளம்பி போய் கொண்டு இருக்கிறதே...அது போகும் பக்கமா ...எதிர்பக்கமா ?'

'ரயில் செல்லும் பக்கம் தான்'

நடந்தேன்....அரை கிலோமீட்டருக்கும் மேலான தொலைவு, 15 பெட்டிகளைக் கடந்து சென்றேன்.B1..B5..B12...C1...

C1 கடைசி பெட்டி அருகில் இருந்தே நான் C1 ஐ நெருங்கும் முன்பாக என்னை கண்டு கொண்டு என்னை நோக்கி நடந்து வந்தார் அந்த பதிவர், கூடவே அவரது மனைவி, அவரது அப்பா...மற்றும் அவரது நான்கு வயது பையன்......அந்த

பையன் யாருமல்ல..... உதட்டை கடித்தபடிகுட்டி ரத்னேஷ் ...!!!

தொடரும்....

மதுரை திருக்காட்சி பகுதி 2

மீனாட்சிக் கோவிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன, தளவாட சோதனை (மெட்டல் டிடெக்டர்) செய்தே உள்ளே அனுப்பினார்கள். எல்லா வயதினருக்கும் பிடித்த விலங்கு என்றால் யானைதான், யானையுடன் படம் எடுத்துவிட்டு பொற்தாமரை குளம் இருக்கும் பகுதிக்கு வந்தேன்.

பச்சை வண்ண நீரில் பொற்தாமரை, பச்சை வண்ண மேனியாள் மீனாட்சி அம்மை நடுஇரவில் நீராடுவதால் அந்த குளம் பச்சையாக காட்சி அளிக்கிறது என்று பச்சைப் பொய்யை யாராவது சொன்னால் நம்பாதிங்க, நீர் பாசிதான், சரியான பராமரிப்பு இல்லாததால் பாசிபடிந்து இருக்கிறது, பொற் தாமரையின் அடிப்பகுதி தெரியும் அளவுக்கு நீர் வற்றி இருந்தது.

(தாமரை இதழில் குருவி ஓய்வெடுப்பது தெரிகிறதா ?, க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்)

பொற்தாமரை தான் தோன்றி (சுயம்பு) என்று சொல்வதையும் நம்புவதற்கு இல்லை. பல கதைகள் அதில் ஒரு (நக்கீரன்) கதையை மெய்பிக்கும் விதமாக குளத்தில் வேலைபாடுகளுடன் பொற் தாமரையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குளத்திற்குள் வெறும் பூவாக நிற்பதற்காகவே ஒரு தாமரையை தோன்ற வைக்க முடியுமென்றால், இறை சித்தத்தால் நாட்டில் பசி, பினி, வறுமை இல்லாமலேயே செய்ய முடியும். அதையெல்லாம் கண்டு கொள்ளமால் அற்புதம் நிகழ்த்த தாமரையை தோன்ற வைத்தார் இறைவன் என்று சொல்வதெல்லாம் ஆன்மீகத்திற்குமே ஏளனமானவை. (பகுத்தறிவு பகுதியை அப்பறம் வைத்துக் கொள்கிறேன்)

கோயில் புதுப்பிப்பு பணிகள் நடந்தேறிக் கொண்டு இருந்தது, கோபுரங்களில் கூரை வேயப்பட்டு இருந்தன, எப்பொழுது குடமுழுக்கு என்று தெரியவில்லை. அங்கு சில நிழல்படங்களை எடுத்துவிட்டு, மீனாட்சி கோயிலுக்கு வந்தேன். வியாழன் நடுப்பொழுது என்றாலும் கூட்டத்திற்கு குறைவில்லை, வரிசையில் சென்று கொண்டிருந்தார்கள், அந்த வரிசையில் உள்ளவர்ளை குறிவைத்து 'அம்மனுக்கு சாத்திய புடவை' என்று கூறி அம்மன் செண்டிமெண்ட் ஏல வியாபரம் நன்றாக நடந்து கொண்டிருந்தது.
(படங்களின் மீது எலியை அழுத்தி பெரிதாக பார்க்கவும்)

அந்த பகுதியில் மேல்கூரையில் ஓவியங்களை புதுப்பித்துக் கொண்டு இருந்தார்கள், மிகவும் கடினமான பணி, நேர்த்தியாக செய்ய வேண்டும்,


கையை மேலே உயர்த்தி ஒட்டடை அடித்தாலே நமக்கெல்லாம் மறுநாள் கையை தூக்க முடிவதில்லை. வரிசையில் சென்றே மினாட்சி கோயிலுக்குள் சென்றுவந்தேன். பிறமதத்தினர் உள்ளே நுழையக்கூடாது என்ற அறிவிப்பு இருந்தது, நாத்திகர் நுழையக் கூடாது என்றில்லை :) பணம் படைத்தவர்களுக்காக குறுக்கு வழியென சிறப்பு வழியும் இருந்தது. பிறகு அனுமதி சீட்டு பெற்று வியப்பூட்டும் ஆயிரங்கால் மண்டபம் சென்றேன், சில முறை கோயிலுக்குச் சென்றிருந்தாலும் இந்த முறைதான் இந்த பகுதிக்குச் சென்றேன்.


(படங்களின் மீது எலியை அழுத்தி பெரிதாக பார்க்கவும்) உள்ளே நல்ல குளுமை. சொக்கநாதரைப் பார்க்க நேரமில்லை. உள்ளே சென்ற வழி திரும்பும் போது குழப்பியதால் வெளியேறும் போது பெரிய சுற்று சுற்றி வரவேண்டியதாகிவிட்டது. துளசி அம்மா சொல்றாங்க 'ஆகா அம்மன் பிரகாரம் சுத்த வச்சிட்டா பாத்திங்களா' :) மணி 2 ஆகி இருந்தது.

*****

1 மணி வாக்கில் அலுவலகத்தில் சந்திக்கிறேன் என்று சீனா ஐயாவிடம் சொல்லி இருந்தேன். இடையில் ஒருமுறை அழைத்திருந்தார். திரும்பவும் அழைத்து 2:30 ஆகும் என்று சொன்னேன். 'வாங்க வாங்க ஒண்ணும் பிரச்சனை இல்லை' என்றார். அன்று மாலை 4 மணிக்கு அவருடன் தான் மீனாட்சி கோவிலுக்கு செல்வதாக திட்டமிட்டு அவரிடம் சொல்லி இருந்தேன், அழைத்துச் செல்கிறேன் என்றார். நாயக்கர் மஹாலுக்கு அருகிலேயே இருப்பதை அறிந்து அவரையும் அலைச்சலுக்கு ஆளாக்கவேண்டாமேயென்று நானாகவே சென்று வந்தேன். ஐயாவுக்கு வருத்தம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சீனா ஐயா அலுவலகத்தை அடையும் போது மணி 2:30க்கு மேல் ஆகிவிட்டது. அவரது அலுவலக அறையின் குளிரில் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கிளம்பினோம்.

அலுவலக கீழ்தளத்தை புதுப்பித்து இருந்தார்கள், அதற்கு பல லட்சம் செலவு ஆகியதாம், சுற்றிக் காட்டினார். முதன் முதலில் இந்தியாவில் இவர் பணிபுரியும் வங்கியில் தான் கணினியை அறிமுகப்படுத்தி, அதன் பிறகே பிற கிளைகளையும் கணினி மயம் செய்தார்களாம், அதற்காக ஐயா பிற மாநிலங்களுக்கும் சென்று செய்து கொடுத்து வந்திருக்கிறார். அலுவலக மகிழுந்து ஓட்டுனரை அழைத்து மகிழுந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்த அவரது இல்லத்திறகு அழைத்துச் சென்றார்.


பதிவர் செல்வி ஷங்கரின் பதிவுகளைப் பலர் படித்திருப்பீர்கள், அவர் யார் என்று பதிவர்கள் பலருக்கும் தெரியாது. ஒரு சில பெண் பதிவர்களுக்குத் தெரியும், அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர் அதை வைத்து எனக்கு தெரியும், அதாவது பதிவர் திருமதி செல்வி ஷங்கர் வலைச்சரம் பேராசிரியர் சீனா ஐயாவின் இல்லத்தரசி என்பது பலருக்கும் தெரியாது. சீனா ஐயாவும் செல்விஷங்கர் அம்மாவும் தமிழ்மணம் மற்றும் பிற திரட்டிகள் வழியாகவும் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.

இல்லத்திற்கு சென்றதும் ஐயாவும் அம்மாவும் சேர்ந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

உணவை மேசையில் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். பெசண்ட் நகரை நினைவு படுத்திய அறுசுவை உணவு. தீரத்தீர அம்மாவின் கையால் இங்கேயும் கிடைத்தது. உணவிற்கு பிறகு பச்சரிசி பாயாசம், மிதமான இனிப்பில் சுவையாக இருந்தது செய்முறை கேட்டுக் கொண்டேன்.

இங்கே அம்மாவைப் பற்றி சொல்லியாகவேண்டும்.

அம்மா எப்போதுமே தேங்காய் கீற்று அளவிற்கு திருநீற்றுடன் இருக்கிறார். அம்மா இருக்கும் நிழல் படங்கள் அனைத்திலும் அவ்வாறே இருக்கிறார். அம்மா எந்த ஒரு இமேஜைப் பற்றியும் கவலைப்படாது தொலைவில் இருந்தே தெரியும் அளவுக்கு திருநீற்று நெற்றியுடனே இருகிறார். ஐயாவும் அப்படியே, இருவரையும் திருநீறின்றி பார்பது அரிதென்றே நினைக்கிறேன். அம்மா மேல்நிலை ஆசிரியராக சென்னையில் சவுக்கார் பேட்டையில் ஒரு சேட்டு பள்ளியில் பணியாற்றியவராம், தமிழ் ஆர்வம் காரணமாக இந்தியைக் கற்றுக் கொள்ளாமல் சேட்டு மாணவிகளுக்கு தமிழை சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள வைத்திருக்கிறார். அவர்களின் இல்லத்தினர் அனைவருமே பாரதிமீது பெரும் பற்றுக் கொண்டவர்கள். அம்மா தமிழறிவும், இலக்கிய அறிவும் மிக்கவர். அம்மா தட்டச்சும் பதிவுகளை ஐயாதான் பதிவேற்றுகிறார். ஐயாவிடம் பழகும் போது ஒரு 10 வயது குழந்தையுடன் பழகும் மனநிலை கிடைக்கும்.


வீட்டில் இருக்கும் ஆல்பங்களை ஐயாவும் அம்மாவும் காட்டி விளக்கினார்கள். பல செய்தித்தாள்களில் வங்கி சேவையில் ஐயாவின் பங்கு குறித்த புகைப்பட துண்டுகள் மற்றும், பொதுமக்களுடனான விழாக்களில் மேடையில் அமர்ந்த, உரையாற்றிய புகைப்படங்கள் இருந்தன. இவர்களின் இளைய மகள் தமிழார்வம் மிக்கவர், போட்டிகளில் ஆயத்தமின்றி கலந்து கொண்டு, கமலஹாசன் போன்ற பிரபலங்கள் கையால் பரிசுகள் பல பெற்றவர், மேலும் திருமணத்திற்கு முன்பு வரை பொதிகை தொலைகாட்சியில் நிகழ்சிகள் நடத்தியவர் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன்


அதன் பிறகு அம்மாவும் ஐயாவும் சேர்ந்து நிற்கச் சொல்லி ஒரு புகைப்படத்தை எடுத்தேன், முதன்முறையாக பதிவர்களுக்கும் செல்வி ஷங்கர் அம்மாவின் நிழல்படத்தை காண்பிப்பது எனக்கும் பெருமையாக இருக்கிறது. சீனா ஐயாவின் இயற்பெயர் சிதம்பரம், கோயிலினுள் சொக்கனாதரைப் பார்க்காவிடிலும் சிதம்பரம் ஐயா, செல்வி அம்மா இருவரும் சேர்ந்து நின்று எனக்கு ஆசி வழங்கிய போது... நல்லில்லறம் நடத்திக் கொண்டு இருக்கும் சொக்கனாதர் - மீனாட்சி தெய்வீக தம்பதிகளாகத்தான் தெரிந்தார்கள்.


'நீங்கள் இருவரும் தம்பதிகள் என்று சொல்லாமல் மர்மமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்...ஏன்' - குசும்பாக கேட்டேன்

'மர்மம் எல்லாம் ஒண்ணும் இல்லை கோவி, யாரும் கேட்கல... தம்பதிகள் எழுதுறோம் என்று விளம்பர படுத்த ஒண்ணும் இல்லையே...இருவரும் எழுதுகிறோம்' என்றார் அம்மா

அதன் பிறகு ஐயாவை அலுவலகம் செல்லச் சொல்லிவிட்டு, நான் விடுதியில் மாலை வரை ஓய்வெடுக்கப் போவதாக விடைபெற்றேன்.

தருமி ஐயா வந்தாரா இல்லையா ? இரவு 8:30 மணிக்கு வைகையில் வந்த பதிவர் நண்பர் யார் ?

தொடரும் ....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்