பின்பற்றுபவர்கள்

நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 டிசம்பர், 2008

என்னம்மா யோசிக்கிறாய்ங்க !

மெதடிஸ்ட் ப்ராட்டஸ்டாண்ட் சர்ச்சுக்கு போக மாட்டார்கள்
ப்ராட்டஸ்டாண்ட் மெதடிஸ்ட் (பெந்தகோஷ்) சர்ச்சுக்கு போக மாட்டாங்க
இவர்கள் இருவரும் மாதா கோவிலுக்கு போக மாட்டார்கள்

அப்பறம்,

சியா முஸ்லிம் சன்னி முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்
சன்னி முஸ்லிம் சியா முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்
இவர்கள் வகாபிகளாக இருந்தால் தர்காவுக்கு போக மாட்டார்கள்

ஆனால் 10000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் மதத்தில் இருக்கும் ஹிந்துக்கள் ( கணக்கு தப்பு 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் பாலம் கட்டப்பட்டது) ஹிந்து கோவில் எதுக்கு வேண்டுமானாலும் போகலாம். தடையே இல்லை

நன்றாக சிந்தியுங்கள், எது உண்மையான மதம் ?

நண்பர் சிங்கை நாதன் செந்திலுக்கு ஆங்கிலத்தில் வந்த ஒரு நீண்ட மின் அஞ்சலின் குறுகிய தமிழாக்கம் தான் இது


*******

படிக்க ஞாயமான கேள்வி போல் இருந்தாலும், இதிலிருக்கும் இந்துத்துவ விளம்பரம் சகிக்க முடிகிறதா ? அல்லது இவர்கள் சொல்வது உண்மைதானா ?

வடகலை வைணவர், தென்கலை பெருமாள் கோவிலுக்கு போகமாட்டார்
தென்கலை வைணவர், வடகலை பெருமாள் கோவிலுக்கு போகமாட்டார்
இவ்விருவைணவரும் சைவர்களின் சிவன் கோவிலுக்கு போகமாட்டார்கள்

இம்மூவகையிலும் உயர்சாதியினராக இருப்பவர் நாட்டார் (கிராம) கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்

நாட்டார் கோவில்களில் வன்னியர், தேவர், கவுண்டர் கட்டிய கோவில்களுக்கு வேறு சாதியினர் போகமுடியாது

கண்ட தேவி கோவில் தேர் இழுப்பதற்கு தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பெரியாருக்கு முன்பு மேலே சுட்டிய எந்த கோவிலுக்குள்ளும் 'இந்து' தலித் நுழைவுக்கு அனுமதி இருந்தது இல்லை. இப்போதும் பரவலாக சாதியின் கீழ் உள்ள கோவில்களுக்கு இவர்களால் செல்லவே முடியாது

1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த புத்த மதம் முற்றிலும் அழிக்கப்பட்டது, பரவலாக இருந்த ஜைன மதமும் மார்வாடிகளிடம் மீட்கப்படாத அடகில் மூழ்கடிக்கப்பட்டது.

இவை அனைத்தையும் விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் தற்கால கோவிலுக்குள் தமிழ் பாடும் உரிமைக்கே நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கிவரும் வேலையிலும், ஆறுமுக சாமி போன்ற முதியவர் சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவேன் என்று முனைந்ததற்கு ரவுடிகளின் துணையுடன் மற்றும் ரவிடியாக மாறி தாக்கப்பட்டதெல்லாம் வசதியாக மறைக்கப்பட்டு இந்து மதம் ஒன்றாம், கோவில் என்பதில் எவரும் செல்ல எந்த தடையுமின்றி சென்று வருகிறார்களாம் ?

******

எல்லா மதக் குப்பைகளும் ஒன்று தான், இதில் எம்மதத்துக் குப்பையில் துர்நாற்றம் மிகுதியாக அல்லது மற்றவற்றைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் புனித குப்பை என்று சொல்வது போன்றதே.

ஆங்கிலத்தில் ஹார்லிக்ஸ் இதோ....அப்படியே குடிங்க.... படிங்க

You know the Latin Catholic will not enter to Syrian catholic church,

these two will not enter to Marthoma church,

these three will not enter to Penthacost church,

these four will not enter to Salvation army church,

these five will not enter to 7th day Adventist church,

these six will not enter to Orthodox church,

these seven will not enter to Jacobite church .....................

Like this there are 146 castes in Kerala alone for Christianity,

each will never share their churches for Christians !

Wonderful

One Christ, One Bible, One Jehova....What a unity !Among

Muslims, Shia an Sunni kill each other in all the Muslim countries.

The religious riot in Muslim countries is always between these two.

The Shia will not go to Sunni mosque,

these two will not go to Ahamadiya mosque,

these three will not go to Sufi mosque,

these four will not go to Mujahiddin mosque....................

like this it appears there are 13 castes in among

Muslims, Killing / bombing/conquering/ massacring/... each other !


The American attack to the Muslim land of Iraq is

fully supported by all the Muslim countries surrounding Iraq !


One Allah, One Quran, One Nebi....! Great unity !


For Hindus 1280 books, 10,000 commentaries,

more than one lakh sub commentaries for these foundation books,

330 million gods, variety of aacharas, thousands of Rishies, hundreds of
languages...

still everyone goes to the SAME TEMPLE ...

whether unity is for Hindus or i others and never quarreled each other for
the

last ten thousand years in the name of religion………………………


கேட்கிறவன் கேணையனாக இருந்தால் சோ ராமசாமி திருப்பதிக்கு மொட்டை அடிப்பதாக வேண்டிக் கொண்டார் என்றும் சொல்லுவார்கள்

மும்பை தாக்குதல் "சோ" த்தனமான பதில்கள்

கேள்வி : மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் பற்றி

சோ : அரசு செயல் இழந்துவிட்டதைத் தான் காட்டுகிறது, சோனியா காந்தி தலைமையிலான அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்

கேள்வி : மலேகான் குண்டு வெடிப்பு பற்றி

சோ : மும்பை தாக்குதல் நடப்பதற்கு காரணமே மத்திய அரசு மலேகான் குண்டு வெடிப்பைப் பற்றி தேவைக்கு அதிகமான ஆர்வம் காட்டியதால் தான் நடந்திருக்குமோ என்று கருதுகிறோன்

கேள்வி : என்ன சொல்கிறீர்கள், இதற்கும் அதற்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரியுமா ?

சோ : தொடர்பு இருப்பது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை, மலேக்கான் பற்றிய விசாரணையையே செய்து கொண்டு இருந்ததால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த ஸமயத்தைப் பயன்படுத்தி மும்பைக்குள் நுழைந்துவிட்டார்கள்

கேள்வி : பொடா சட்டம் இருந்தால் மும்பை தாக்குதலை சமாளித்து இருக்க முடியும் ?

சோ : உலக அரசியல் பார்வையாளர்கள் கூட அப்படித்தான் சொல்கிறார்கள், பாஜக அரசியல் தலைவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். பொடா சட்டம் இருந்திருந்தால் தீவிரவாதிகள் உள்ளே நுழைய பயப்பட்டு அப்படி பாகிஸ்தான் திரும்பி இருப்பார்கள், பொடா சட்டத்தை எடுத்த தைரியம் தான் இந்த துணிகர செயலைச் செய்ய தூண்டப்பட்டு இருக்கிறது

கேள்வி : காங்கிரஸ் அரசு இப்பொழுது நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதே ?

சோ : எங்கே கட்டுக்குள் கொண்டுவந்தார்கள், தீவிரவாதிகளுக்கு சாப்பிட இரண்டு நாள்களுக்கு மேல் உணவு கிடைக்கவில்லை, உடல் பலம் குறைந்தது அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் போனதால் அவர்களை அழிக்க முடிந்தது, கட்டுக்குள் கொண்டு வந்திருந்தால் 200 உயிர்கள் வரை போய் இருக்குமா ?

கேள்வி : ராஜ் தாக்ரேவின் ஆட்கள் தீவிரவாதிகளை முறியடித்திருக்கலாமே ?

சோ : ராஜ் தாக்ரேவின் வேலையே மும்பையில் அன்னியர் நுழையக் கூடாது என்பது தானே, அதைத் தீவிரவாதிகள் எளிதாக செய்கிறார்கள் என்பதை அறிந்த ராஜ் தாக்ரே அவர்களை எப்படி தடுப்பார் ? தீவிரவாதிகளின் ஆன்ம சாந்திக்கு ராஜ் தாக்ரே ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. நான் கலந்து கொள்வதைப் பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை

கேள்வி : இந்தியாவின் மீது நடைபெறும் தொடர் தாக்குதலை நிறுத்துவது பற்றி ?

சோ : ஏன் மோடி, ஜெயலலிதா போன்றோர் பிரதமர் ஆகக் கூடாது ? என தற்பொழுது தான் மக்கள் ஸிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள், இது ஒரு நல்ல ஆரம்பமாகத் தெரிகிறது. மோடி பிரதமர் ஆனால் இந்தியாவிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விரைவில் துக்ளக்கில் கட்டுரைகள் வெளிவரும்

கேள்வி : தமிழ்நாட்டிலும் இதுபோல் தாக்குதல்கள் நடக்குமா ?

சோ : திமுகவும், திராவிடக் கட்சிகளும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றனர், விடுதலைப் புலிகளால் தமிழகத்திலும் இது போல் நடக்கலாம்.

பின்குறிப்பு : "சோ" த்தனமான என்றால் கேணைத் தனமான என்ற பொருள் அல்ல.

22 செப்டம்பர், 2008

ஒரு கதையும், தொடர்பில்லாத ஒரு செய்தியும் !

ஒரு ஊரில் ஒருவன் திடீர் பேமஸ் ஆகனும் என்று நினைத்தானாம், தன்னைப் பற்றி, எல்லோரையும் பேச வைக்கனும் என்று நினைத்துக் கொண்டானாம். அதற்கு என்ன செய்வது ? ஊரில் இருக்கும் நாட்டாமைக் காரரிடம் வம்பிலுத்தால் பஞ்சாயத்தைக் கூட்டுவாங்க, அப்பறம் ஊரே நம்மைப் பற்றி தான் பேசும் என்று திட்டம் போட்டானாம்.

அடிக்கடி நாட்டாமையைச் சீண்டி வந்தானாம், நாட்டாமைக்கு இந்த பய அடிக்கடி நம்மை சீண்டுகிறான், இதைக் கண்டித்தோம் என்றால் அதை வச்சு மறுபடியும் சீண்டுவான், கண்டுகாமல் விடுவோம் என்று இருந்துவிட்டாராம். ஒரு நாள் பாம்பு கடித்து மாடு இறந்ததை நாட்டாமை தான் விசம் வச்சிக் கொன்றார் என்று கிளப்பி விட்டானாம். நாட்டாமைக்கு கோபம் வந்தது, என்ன செய்திருப்பார் ? பஞ்சாயத்தைக் கூட்டினால் அந்த பயலுக்கு விளம்பரம் கொடுத்தது போல் ஆகிடும் என்று பேசமால் கோபத்தை அடக்கிக் கொண்டு இருந்தாராம்.

திட்டம் பழிக்கவில்லை என்பதால் புதுப்புது பழிகளை நாட்டாமைக்காரர் மேல் சொல்லிக் கொண்டே வந்தானாம். அதன் பிறகு இவனுக்கு இதே வேலையாகிப் போச்சு என்று யாருமே கண்டு கொள்ளவில்லையாம், புகழ்விரும்பி தன்னோட செயலை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறான், நண்பர்களிடம் மட்டும் சொன்னானாம் நாட்டாமைக்கு கண்டிப்பாக ஒரு நாள் கோபம் வரும் அப்போ என்னை கட்டி வச்சி உறிப்பார், அப்போ நான் போடும் சத்தம் ஊர் முழுக்கக் கேட்கும், நான் பேமஸ் ஆகிடுவேன் என்று சொன்னானாம். நாட்டமை மீது மேலும் மேலும் கடுமையான பழிகளை சொல்லிக் கொண்டே வருகிறானாம்.

அது முடிந்தது போல் தெரியல.

*****

- முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே, வடிவேலு வீட்டை நான் தாக்கியதாக அவதூறு கிளப்பியுள்ளனர். வடிவேலு மட்டுமல்ல, கருணாநிதியே என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அதை சந்திக்க நான் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்

இந்த செய்திக்கும் மேற்கண்ட முடியாத கதைக்கும் தொடர்பு இல்லை.

12 செப்டம்பர், 2008

பிரேமானந்தா VS கோவியானந்தா !

கோவி: ஸ்வாமி புலனடக்கம் என்றால் என்ன ஸ்வாமி ?

பிரேம்ஸ் : குழந்தாய், நான் தற்போது இருக்கும் நிலையில் சகலமும் அடங்கித்தான் இருக்கிறது, நக்கலான கேள்வி போல் இருக்கிறது உன் கேள்வி, புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதே புலனடக்கம் தான், அப்படி அடக்க முடியாதவர்களை சிறைக்கம்பிக்குள் பயிற்சி கொடுப்பார்கள், நான் மாட்டிவிட்டேன், மற்றவர்கள் மாட்டாமல் இருக்கிறார்கள்

கோவி : நல்லது ஸ்வாமி, முக்தி அடைதல் பற்றி திருவாய் மலர்வீர்களா ?

பிரேம்ஸ் : சிறையில் கொசுக்கள் கடிக்காத நாள்தான் நிம்மதியான உறக்கம் தரும், முக்தி அடையும் நாளாக தெரிகிறது, மறுபடியும் கிண்டல் அடித்து இருக்கிறாய் குழந்தாய். குற்றத்திற்கான தண்டனை முடிவடையும் நாள் தான் முக்தி அடைவது, குற்றம் - தண்டனை சரியாப் போச்சு அதுவே முக்தி.

கோவி. ஸ்வாமிஜி, குழந்தாய் குழந்தாய் என்கிறீர்களே அதன் பொருள் யாது ?

பிரேம்ஸ் : பிள்ளைவரம் வேண்டி வரும் பெண்களை குழந்தைக்கு தாய் ஆக்குவது தான் குழந்தாய் அது. இரு பொருள்கள் உண்டு, ஒன்று 'குழந்தையே' என்று அன்பாக கூப்பிடுவது, குழந்தைக்கு தாய் ஆக்குவது, இரண்டாவதை மட்டும் செய்ததால் தான் தனித்து இங்கு தியானத்தில் அமர்ந்து இருக்கிறேன்

கோவி : ஸ்வாமி பேரின்பம் பேரின்பம் என்கிறார்களே ?

பிரேம்ஸ் : அலையும் நாக்குக்கு என்றாவது அறுசுவை உணவு கிடைக்கும் போது தான் பேரின்பம் பற்றியே தெரிந்து கொண்டேன். தேடுவது கிடைக்கும் போது அடையும் மட்டற்ற மிகழ்ச்சி தான் பேரின்பம்.

கோவி : ஸ்வாமி மோட்சம் என்றால் என்ன ?

பிரேம்ஸ் : கூண்டை விட்டு வெளியே வருதல், இரட்டை ஆயுள் தண்டனையிலிருந்து வெளியே விட்டால் எனக்கு வெளி உலகம் மோட்சம் தான். நம்மை வாட்டும் துன்பம் எதுவோ அதிலிருந்து விடுபடுவது தான் மோட்சம்.

கோவி : ஸ்வாமிஜி நாம் வேண்டினாலும் நம் பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்காதா ?

பிரேம்ஸ் : ஏன் கிடைக்காது வாய்தமேல் வாய்தா போட்டு தண்டனை குறைக்கச் சொல்லி முறையிட்டால் மன்னிப்பு கிடைத்தாலும் கிடைக்கும், அதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒழுங்கீனங்களை குறைத்துக் கொண்டால், முற்றிலுமாக மன்னிப்பு கிடைக்காது என்றாலும் தண்டனைக் காலம் குறையலாம் சரியா ?

கோவி : ஸ்வாமிஜி உண்மையிலேயே நீங்கள் ஞானம் பெற்றுவிட்டீர்கள்

பிரேம்ஸ் : நல்லது குழந்தாய், நான் வெளியே வரும் போது மீண்டும் பக்தைகள் கிடைப்பார்கள் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறது உன் வார்த்தைகள்.

கோவி: நல்லா காயடித்தும் ...

பிரேம்ஸ் : என்ன குழந்தாய் உளறுகிறாய் ?

கோவி : காயம் என்றால் உடல் அதனை தோல் உறியும் வரை நன்றாக அடித்தும், பக்தைகளின் நலனையே நினைக்கிறீர்களே அதைத் தான் சொல்ல வந்தேன். ஸ்வாமிக்கு புரியாததா ? அதனால் விட்டுவிட்டேன். நல்லது விடைபெறுகிறேன் ஸ்வாமி

பிரேம்ஸ் : அடுத்த முறை வரும் போது வெறும் கையோடு வந்துவிடாதே குழந்தாய், நாவுக்கு ருசியாக ஆந்திரா ஊறுகாய் சாப்பிட ஆசை, முடிந்தால் எடுத்துவா குழந்தாய்.

கோவி: அப்படியே ஆகட்டும் ஸ்வாமி, இப்'போதைக்கு' ஆந்திரா ஊறுகாய் தான் தங்களுக்கு பேரின்பம் ஊட்டும், அடியேன் அடுத்த முறை ஊறுகாயோடு வருகிறேன்.

********

குரங்கு has left a new comment on your post "***********"

கோவியானந்தா...

உங்க பதிவ படிக்க படிக்க, நான் சாமியாரா போய்ருவேன் போலிருக்கு :(




- இந்த பின்னூட்டத்திற்கு பதிவுக்கும் தொடர்பு இல்லை :)))))

******

என்னது ? இந்து சாமியார்களை மட்டும் தான் கிண்டல் அடிப்பீரான்னு கேட்கிறிங்களா ?

அடுத்த மத ஆட்களை கிண்டல் அடிக்கத்தான் நீங்கள் இருக்கிறீர்களே !

5 செப்டம்பர், 2008

1 ரூபாய் அரிசி - கலைஞர் கவிதை !


அரக்கியின் ஆட்சியிலே அடிவயிறு காய்ந்த தடா !
அண்ணாவின் தம்பி ஆட்சியிலே பாலாறுகள் ஓடுதடா !
ஒரு ரூபாய்க்கு எண்ணை வாங்க முடியுமா ?
ஒரு கிலோ அரிசியே வாங்கமுடியும் - பாலகரும் சொல்கின்றனரே !
அண்ணாவின் ஆட்சி இது, பெரியாரின் ஆட்சி இது !
பேராசை பேய்களின் வீழ்ச்சி எது ?

வஞ்சகர் என்பார், பேய்கள் என்பார், இவையெல்லாம்
ஒரு வஞ்சியின் வடிவிலே இங்கு வந்ததென்பேன் !
ஓடுகாலிகள் வீடுகாலிசெய்துவிட்டு ஓடும் இடம் தான் அது,
நாடி வருபவர்களுக்கு மாடாய் உழைக்கும் இடமே நம் கழக வீடு !

தேசிய முற்போக்கு கூட்டணித் தேரின் இழு கயிற்றை அறுத்துவிட்டு
அச்சாணி முறிந்ததாக அளந்துவிடுகின்றனர் !
கயிற்போனால் புதுக்கயிற்கள் வரும், அய்யகோ அங்கே
அச்சாணி இல்லா நிலையடித் தேரை
வீதிவுலாவில் வரும் உற்சவ தேர் என்கிறார்கள் !

தேட்ட்டக்காரர்களின் (ஜெ, இராமதாஸ்) கண்ணிகள்
குயில்களை குழப்பும், வல்லுருவை குழப்புமா ?
கழக சூரியன் மீது கருமேகம் படிந்துவிட முடியுமா ?
அடியில் தீவை வைத்து அடுப்பு மூட்டி
கடலைத்தான் வற்ற வைக்க முடியுமா ?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுவோம்
அண்ணா அன்று சொன்னார், இன்று கழக ஆட்சியிலே
ஏழையின் சிரிப்பில் நாம் அரிசியையும் பார்க்கிறேம்
அவலையும் பார்க்கிறோம்.

ஒற்றை ரூபாய் அரிசித்திட்டம் உலகும் காணாத்திட்டம்
சுற்றி இருக்கும் மாநிலங்கள் மழைத்துப் போய் பார்கும் திட்டம்
தேர்த்தலின் சாக்காக அரிசி போடுகின்றோமாம்,
எள்ளி நகைக்கின்றனர் நச்சு கும்பல்கள் !
தேர்தல் நேரத்தில் யாருக்குமே பசிக்காதா ?
கையிருப்பு இருந்தால் கால்ரூபாய்க்கும் படி கொடுப்போம் !

வாழ்க அண்ணா ! வளர்க (இளைய) கழகம் !

(கலைஞர் எழுதல... அவர் மாதிரி எழுத முயற்சித்தேன்... கழக கண்மணிகள் பொருத்தருள்க)

25 ஜூன், 2008

விடுபட்டவை - இட்லி வடைக்குக் கொஞ்சம் சட்னி !

பெரியார் படம் வந்து ஒரு ஆண்டுக் கூட ஆகவில்லை. அதற்குள் மற்றுமொரு நாத்திக நச்சுக் கருத்துப்படம் வந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறது. திருவல்லிக்கேனி பெருமாளை தரிசித்துவிட்டு, துளசி தீர்த்தம் குடித்துவிட்டு இந்த படத்தை பார்தத்தும் தான் தெரிந்தது, இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள், இந்து நம்பிக்கை எவ்வளவு கேவலமாக கிண்டலடிக்கப்பட்டு இருக்கிறது என்பதே. மேலும் தன்கையை வைத்தே கண்ணைக் குத்திக்கொள்ளச் செய்வது போலவே ஆத்திகர்களின் அறியாமையை பயன்படுத்தி நாத்திகம் வளர்க்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 'அந்த' படம், அதற்கு கருணாநிதி, நாத்திகன் வீரமணி போன்றவர்களின் 'ஆசிர்வாதம்' வேறு. படத்தின் பேரைச் சொன்னாலே பதிவர்கள் அடிக்க வருவார்கள், எனவே விசயத்துக்கு நேராகாவே சென்றுவிடுகிறேன். இந்த படத்தை மூக்குக் கண்ணாடியின் இடுக்கு வழியாக உற்றுப்பார்த்த போது, ஆங்காங்கே அதிர்ச்சி அடைந்தேன்.

* இராமாயணம் பொம்பலாட்டக் காட்சியில் இராமர் படங்களை ஆத்திக சிறுவனை வைத்து எரிக்கவைத்து, இராமசாமி நாயகனின் சீடன் என்று காட்டிவிட்டார்

* இராமசாமி பெரியாரின் நினைவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காவே பல'ராம் நாயுடு' என்று 'தெலுங்கு' பேசும் பாத்திரத்தை வைத்தார். அந்த பாத்திரத்தின் மூலம் இந்து தெய்வம் நம்பிக்கைகளை மட்டுமின்றி 'மடம்னா தப்பு நடக்காதா ?' என்று பெரியார் பாணியில் கேலி செய்தார்

* இந்து நம்பிக்கைக்கு எதிராக வயது வந்த பெண்ணை பெருமாள் சிலையை தொட வைத்து பெருமாளை நிந்தித்தார்

* இராம பக்தன் அனுமானை (சோதனை குரங்கு) முதல் காட்சியிலேயே கொன்று இந்துக்கள் மனதை புன்படுத்திவிட்டார்

* கிருஷ்ணபகவான் பருந்தாக வருவது போன்று காட்சி வைத்து அந்த பருந்து உயிருக்கு தப்பி ஓடுவது போன்று காட்சி வைத்து கடவுளுக்கு சக்தியே இல்லை என்று நாத்திக கருத்தை திணித்தார்

* பெருமாள் சிலையை இரயில் பெட்டி கழிவறைக்கு அருகில் எடுத்துச் சென்ற அவமானப்படுத்தினார்

* பெருமாள் சிலையை 'மண்ணுக்குள் புதைத்து' இறை நம்பிக்கைக்கு 'சமாதி' கட்டினார்

* பெருமாள் சிலை சுனாமியால் வெளியே கொண்டு வந்து காட்டியதன் மூலம் இயற்கைதான் சிலையைக் கூட காப்பாற்றுகிறது என்ற நாத்திக கருத்தை கடைசி காட்சியின் மூலம் வலிய திணித்தார்

* இந்துக்கள், கிறித்துவர்களை விட இஸ்லாமியர்கள் சுனாமி ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுவதாகக் காட்டியதன் மூலம் இராமசாமி நாயகரைப் போலவே அப்பாவிகள் முஸ்லிம் மதம் மாறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்

* பிராமணப் பெண் இராம சாமி நாயகரை 'நாத்திகன்' என்று கிண்டல் செய்வதாகக் காட்டியதன் மூலம் பார்பனர் அல்லாதவர்களுக்கு பார்பன வெறுப்பை ஏற்படுத்த முயன்று பார்பன துவேசம் நீர்த்துப் போகமல் இருக்க முயற்சி செய்திருக்கிறார்

* படத்தில் தென்கலை நாமம் போட்டுக் கொண்டு இராமனுஜம் நம்பி வருவதால், வடகலை ஐயங்கார் என்ற ஒரு பிரிவையே மறக்க வைக்க இரட்டடிப்பு சூழ்ச்சி செய்து இருக்கிறார்

* ஸ்ரீகிருஷ்ணரின் பத்து அவதாரங்களும் பத்து பாத்திரப் படைப்பின் மூலம் கிண்டல் அடிக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.... அதற்கு முன் தொலை நோக்கியை எடுத்துக் கொண்டு சென்று படத்தை 2 ஆவது தடவைப் பார்த்து சல்லடைப் போட வேண்டி இருக்கிறது.

மொத்ததில் நான் அறிந்தவகையில் இந்த படம் இந்து நம்பிக்கைகளுக்கு சமாதி கட்டுவதற்கு குழி தோண்டிய முயற்சி.

இந்துக்களே விழுமின் எழுமின் !

பின்குறிப்பு : இட்லிவடையின் பாடிகாட் முனீஸ்வரன் பதிவுக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு இல்லை. ஐ மீன் இந்த பண்டம் அசல் நெய்யினால் செய்யப்பட்டது (அல்ல)

இது நகைச்சுவை நையாண்டி பதிவு என்றால் நம்பனும் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்