பின்பற்றுபவர்கள்

26 அக்டோபர், 2008

ஏகன் ! தல ஏன் ?

டிஸ்யூம் டிஸ்யூம் சண்டை நடக்கும் காட்சியின் போது தான் திரையரங்கினுள் நுழைந்தேன். வில்லன் சுமனுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்ல இருந்த அப்ரூவர் வில்லன் (பாட்ஷா படத்தில் நக்மா அப்பாவாக நடிப்பவர்) குழுவிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சி. அதன் பிறகு அஜித் அறிமுகக் காட்சி, பாபு ஆண்டனியை ஞாபகப் படுத்தும் கெட்டப். வில்லனின் ஹாங்காங் ஏஜெண்டை பட் பட் என்று சுட்டு வீழ்த்துகிறார்.

போலிஸ் உயர் அதிகாரி நாசரின் (வளர்ப்பு மகனான - அதற்கு ஒரு கண்ணீர் சிந்த வைக்க முயலும் ப்ளாஷ் பேக் படத்தின் பின்பகுதியின் வைத்திருக்கிறார்கள், மிஸஸ் மணிரத்னம் வந்து போகிறார் ) வளர்ப்பு மகனான அஜித் அப்ரூவரை கண்டுபிடித்து கைது செய்வதும் வில்லனை போட்டுதள்ளுவதுடன் கதை முடிந்துவிடுகிறது.

அப்ரூவரின் மகளை வில்லன் கும்பல் குறிவைக்கும் என்று அறிந்து, ஊட்டி கல்லூரியில் மாணவனாக பாதுகாப்புக்காக அனுப்பப்படுகிறார் அஜித். அஜித் மாணவனா ? பார்பவர்கள் கிண்டல் செய்யக் கூடும் என்பதை உணர்ந்தே அவர்களே திரைக்கதையில் அதைச் செய்துவிட்டார்கள்.

முக்கிய பாத்திரம் நயன்தாரா, கல்லூரி விரிவுரையாளராக அறிமுகம் ஆக அவரை துறத்தி காதலிக்கும் மாணவனாக அஜித் என இடையே திரைக்கதை நகர்த்தப்படுகிறது. முந்தானை முடிச்சு தீபா கெட்டப்பில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டுடன் கூடுதல் கவர்ச்சியுடன் நயன் தாரா கல்லூரி விரிவுரையாளர் ஆகவருவது, கல்லூரிகளின் தரத்தைக் கேவலப்படுத்தும் செயல், இப்பொழுதெல்லாம் எல்லா கல்லூரிகளிலுமே மாணவ - மாணவிகளுக்கே ட்ரெஸ் கோட் உண்டு.

எனக்கு படத்தில் பிடித்த மற்றொரு பாத்திரம் ஜெயராமன், இவரது குழந்தைத்தனமான நடிப்பு எப்போதும் எனக்கு பிடிக்கும், இந்தப்படத்திலும் நிறைவாகச் செய்திருக்கிறார். அவர்தான் அந்த கல்லூரியின் முதல்வர் அஜித்துக்கு உதவுகிறார், அவருடன் சேர்ந்து சத்தியன் காமடி செய்ய முயன்றிருக்கிறார். ஈஎம்சி ஹனிபா அஜித்தின் உதவியாளராக நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டு நன்றாகவே செய்தார். படம் சீரியஸ் கதையாக காட்டப்பட்டு பிறகு முழுநீள நகைச்சுவையாக்க முயன்று தோற்று இருக்கிறார்கள்.

பாடல் இசையில் சத்ததத்தைத் தவிர வேறெதும் காணும், பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் இயக்கம் என்பதால் 5 பாட்டுக்கு குத்துப்பாட்டு டான்ஸ் இருக்கிறது. பாடல்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. ராஜு சுந்தரம் கன்னி முயற்சியாக இயக்கம் வசனங்களில் கவனம் செலுத்திய அளவுக்கு காட்சியில் திரைகதையில் கவனம் செலுத்தவில்லை, அவ்வளவாக அனுபவமின்மையைக் காட்டுகிறது. விஜயை வைத்து பிரபுதேவா போக்கிரியைக் எடுக்க முயன்றது போல் அஜித்தை வைத்து ராஜு சுந்தரம் முயன்று... ஹூகூம் என்றே சொல்ல வைக்கிறது. நாசர் போலிஸ் அதிகாரி அவரது மகன் அதைச் சுற்றி க்ரைம் கதை, இதுபோல் தமிழில் 10 படங்களுக்கும் மேல் வந்துவிட்டது. போக்கிரி கதை போலவே :(

பில்லா வெற்றியை நம்பி அஜித் - நயன் தாராவை ஜோடி சேர்த்து ஒரு சொதப்பலான கதைக்கு பயன்படுத்த முயன்று இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து வேறெதும் படம் பார்பவர்கள் உணரப் போவதில்லை. அஜித் சண்டைக்காட்சிகளும் மற்ற படத்தில் வந்தவைப் போன்றே இருந்தது. பில்லா படம் ரீமேக் என்றாலும் படத்தில் ஒரு ரிச்னஸ் இருந்தது, இதில் அதுவும் இல்லை. தல ஏன் இப்படி என்று கேட்க வைக்கிறது ? ரசிகர்களால் ஓடினால் உண்டு.

ஏகன் ஏமாற்றம் !

11 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஏகன் ஏமாற்றம் !//

தீபாவளிப் படம் பாத்தாச்சா? இதை விட மிகப்பெரிய ஏமாற்றத்தை அஜித்தும், அர்ஜுனும் கொடுத்ததாக ஒரு செய்தி புகைகிறது. அர்ஜுன் கலைஞர் டி.வி யில் மறுத்திருக்கிறார். அஜித் மறுத்ததாக சொல்கிறார்கள். உண்மை நிலவரம் தெரியவில்லை. நெருப்பில்லாமல் புகையாது....!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...


தீபாவளிப் படம் பாத்தாச்சா? இதை விட மிகப்பெரிய ஏமாற்றத்தை அஜித்தும், அர்ஜுனும் கொடுத்ததாக ஒரு செய்தி புகைகிறது. அர்ஜுன் கலைஞர் டி.வி யில் மறுத்திருக்கிறார். அஜித் மறுத்ததாக சொல்கிறார்கள். உண்மை நிலவரம் தெரியவில்லை. நெருப்பில்லாமல் புகையாது....!
//

அஜித் பற்றி வந்தது பத்திரிக்கைகளின் திரித்தல், அஜித் எப்போதும் பத்திரையாளர்களிடம் பேசியதே இல்லை. விளம்பர படங்கலும் காசுக்காக செய்தது இல்லை. இவர்களாகவே எழுதிக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நான் அதற்கு தான் கிளம்பிக் கொண்டு இருக்கிறேன்.. பிறகு வந்து படிக்கிறேன்...

வெண்பூ சொன்னது…

சுடச்சுட விமர்சனமா.. ஒரு விக்கெட் அவுட்.. பாக்கலாம் மத்த படமெல்லாம் என்ன பண்ணுதுன்னு.. :(

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
சுடச்சுட விமர்சனமா.. ஒரு விக்கெட் அவுட்.. பாக்கலாம் மத்த படமெல்லாம் என்ன பண்ணுதுன்னு.. :(
//

வெண்பூ,

சிங்கையில் படம் வெளியாகி 3 நாள் ஆகுது !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அஜித் பற்றி வந்தது பத்திரிக்கைகளின் திரித்தல், அஜித் எப்போதும் பத்திரையாளர்களிடம் பேசியதே இல்லை. விளம்பர படங்கலும் காசுக்காக செய்தது இல்லை. இவர்களாகவே எழுதிக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்.
//

சக நடிகர்கள் செய்த செய்தித் திரிப்பாகக் கூட இருக்கலாம். நாங்கள் குடும்பத்தோடு
தியேட்டருக்கு சென்றால் அங்கு யாரும் சினிமா பார்க்க முடியாது. அதனால் செல்வதில்லை.

பெயரில்லா சொன்னது…

எதிர்பார்த்ததுதான்.

சரியான கதைத் தேர்வு இல்லாமல் இன்னும் எத்தனை நாட்களௌக்குத்தான் நயந்தாராவையும், ஸ்ரேயாவைஅயும் நம்பி படமெடுக்கப் போகிறார்களோ?

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நயந்தாரா எக்கச் செக்கமாக காட்டி இருக்காங்களே...நடிப்ப (!?) :P

மணிகண்டன் சொன்னது…

**************** இன்னும் எத்தனை நாட்களௌக்குத்தான் நயந்தாராவையும், ஸ்ரேயாவைஅயும் நம்பி படமெடுக்கப் போகிறார்களோ **************

எங்கள மாதிரி ரசிக கண்மணிக இருக்கறவரைக்கும்.

குப்பன்.யாஹூ சொன்னது…

eganai purakkanippom.

VSK சொன்னது…

இந்த 'இமேஜ்' என்னும் அவலத்தைச்த் தொலைச்சிட்டு, பெரிய நடிகர்கள் வரலேன்னா, அவங்கள ஒதுக்கிட்டு நிறையப் படம் வரணும்.
ரசிகர்களும் அதைத்தான் பார்ப்போம்னு முடிவு பண்ணனும்.
ம்ம்ம். நடக்கற காரியமா இதெல்லாம்!

நல்ல விமரிசனம் கோவியாரே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்