பின்பற்றுபவர்கள்

30 செப்டம்பர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா : DR V.Sankar Kumar

பெயர் : DR V.Sankar Kumar (VSK)

புனைப் பெயர் : மருத்துவர் ஐயா, VSK, SK

வயது : என் மகள் தாத்தா என்று கூப்பிடும் வயது

வசிக்கும் இடம் : நார்த் காரோலினா, அமெரிக்கா

தொழில் : ஆங்கில மருத்துவர்

துணைத் தொழில் : மூன்றாண்டு காலமாக தொடர்ந்து வலைப்பதிவது, பாட்டு எழுதி பஜனைகளில், பூஜைகளில் பாடுவது

அண்மைய சாதனை : பாலியல் கேள்விகளுக்கு பதில் சொல்லிவருவது (வலையுலக நாராயண ரெட்டி)

நீண்ட நாளைய சாதனை : மயிலை மன்னார் பெயரில் சென்னை மொழியில் திருக்குறள் விளக்கம் மற்றும் திருப்புகழ் பொருள் விளக்கம் எழுதிவருவது

நீண்ட நாள் எரிச்சல் : திமுக ஆட்சி

மிகவும் பிடித்த கவிஞர் : பாரதியார்

மிகவும் பிடித்த பத்திரிக்கையாளர் : சோ ராமசாமி

மிகவும் பிடித்த அரசியல் தலைவர் : விஜய்காந்த்

சிறப்பு குணம் : எவ்வளவு தான் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் அடுத்த நிமிசமே மறந்துவிடுவது

பதிவுகள் :

ஆத்திகம் ( அந்தந்த தெய்வங்களுக்கான இந்து பண்டிகைகளில் சிறப்பு பதிவுகள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியல், உள்குத்து அரசியல், அனுபவம், மொழிப்பெயர்ப்பு சிறுகதைகள், கலவைகள், மன்னார் குறள் விளக்கம்)

திருப்புகழ் ( அருணகிரிநாதர் திருப்புகழ்)

கசடற (மருத்துவ துறை சார்ந்த பதிவுகள், தொடர்கள்)

குழுப் பதிவுகள் :
விக்கி பசங்க
கற்பூர நாயகியே கனகவல்லி
முருகனருள்
தமிழ்ச் சங்கம்நண்பர்கள் : ஆத்திகம் பேசுபவர்கள், விஜய்காந்தை ஆதரிப்பவர்கள், திராவிடம் பேசாதவர்கள்

அன்பான எதிரிகள் : கேஆரஎஸ், கோவியார்

எரிச்சல் அடைவது : ஆத்திகவாதிகள் சிலர் முற்போக்காக எழுதுவது

வாழ்நாள் சாதனை : இதயம் தொட்ட தொடர், எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு ஆகிய தொடர் கட்டுரைகள், இசைஞானி இளைய ராஜாவின் திருவாசகம் வெளியே வர அவருடன் இணைந்து செயல்பட்டது.

பொழுது போக்கு : விஜய் டிவி, பஜனை, அடிக்கடி வீட்டில் நடக்கும் பூஜைக்குக்கு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து சுவையான சிற்றுண்டி வகைகளை செய்து பரிமாறுவது (யாருக்காவது சைவ சிற்றுண்டி வகைகளில் சுவை கூட்டுவதற்கு டிப்ஸ் தேவைப்பட்டால் கேட்கலாம்)

அடையாளம் : மொட்டையுடன் இருந்தால் மகாத்மா காந்தி, முடியுடன் இருந்தால் மருத்துவர் இராமதாஸ்

இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா !


ஏழைகளின் தலைவரே நாளைய முதல்வரே... !

ஊர்'குருவி' பருந்தாகும் கனவு. :) பலிக்கட்டமே !

களப்பிரர் ஆட்சியும் கலைஞர் ஆட்சியும் !

இன்று தினமலரை மேய்ந்த போது, ஒரு வாசகரின் கருத்தில் இருந்த சில நையாண்டிகள் தான் இந்த பதிவின் தலைப்பு.

களப்பிரர் ஆட்சி - கலைஞர் ஆட்சி இரண்டுக்கும் என்ன தொடர்ப்பு ? இரண்டுமே தமிழகத்தின் இருண்ட காலமாம். களப்பிரர் ஆட்சி உண்மையிலேயே இருண்ட காலமா ? என்று பார்த்தால் வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கிறார்கள். களப்பிரர் ஆட்சியின் தடயங்களை முற்றிலும் அழித்து அவர்கள் ஆண்டதற்கான ஆதாரங்களையே சைவ சமயத்தினர் அழித்துவிட்டனர். களப்பிரர் ஆட்சி இருண்டகாலம் ஆக்கப்பட்டது என்றுதான் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

களப்பிரர் ஆட்சி : "களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறைக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சி காலமும், இவர்களது கால தமிழ்ப்படைப்புக்களும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதானால் இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது." - தமிழ் விக்கி

இதே தகவல்களை பல்வேறு தமிழ் ஆராய்ச்சி நூல்களிலும் படித்து இருக்கிறேன். அதன் அடிப்படையில் விக்கி கட்டுரை உண்மைதான்.

கலைஞர் ஆட்சி : கலைஞர் ஆட்சியின் போது ஒவ்வொரு முறையும் ஊடகங்கள் முனைந்து செயல்பட்டு கலைஞர் அரசைப் பற்றி தவறான தகவல்களையே பரப்பும். 1996 ன் முந்தைய ஆட்சியின் முடிவில் கலைஞர் அரசின் மீது ஊழல் புகாரே இல்லை என்று அறிந்தவர்கள், 'பணப் புழக்கம்' இல்லை என்று கிளப்பிவிட்டனர். அந்த செய்தி ஊடகங்களின் முழு பலத்துடன் பரப்பப்பட்டது. கிரமத்தினர் கூட கையில் காசில்லை அதற்கு கலைஞர் தான் காரணம் என்று சொல்லும் அளவுக்கு அந்த அவதூறு பிரச்சாரம் வெற்றிகரமாக செயல்பட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தற்பொழுது மின்சாரப் பற்றாக்குறை, இது அரசின் குறைபாடுதான், இருந்தும் ஊடகங்களில் அதையே திரும்ப திரும்ப சொல்வதால் கலைஞரின் இலவச திட்டமும் அதனால் பயன்பெற்றவர்களும் மின்சாரப் பற்றாக்குறையைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள், முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை காலி செய்துவிடால் என்கிற பிரச்சார பின் உத்தி போல் தான் தெரிகிறது.

மின்சார பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் நீண்டகால திட்டம் இல்லாதது தெரிந்தே, பெருகிவரும் தொழிற்சாலைகள், குடியுருப்புகள் தான் முதன்மைக் காரணம், மின்சாரத்தேவை அடுத்த 10 ஆண்டுகளில் இவ்வளவு என்ற வரையரை இல்லாததால் இருக்கும் மின்சாரத்தை பகிர்ந்து கொடுப்பது என்ற சிக்கலுக்குள் விழுத்துவிட்டது. கலைஞர் அரசு ஜெ அரசை குற்றம் சொல்வதிலும் ஞாயம் இல்லாமல் இல்லை, ஆனால் முழுப்பொறுப்பில் பெரும்பான்மை இவர்களையே சாரும் என்பதை மறுப்பதற்கும் இல்லை. இது ஒரு அசாதரமாண சூழல், ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதாலேயே தீர்ந்துவிடாது.

ஆனால் இதை இப்போது பூதகரமாக ஆக்குவதன் மூலம் வருகின்ற பாராளுமன்ற தேர்த்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக மக்களை திருப்ப வாய்பாக மாற்ற எதிர்கட்சிகளும், திமுக எதிர்ப்பு ஊடகங்களும் மிகவும் முனைப்பாகவே செயல்படுகின்றன.

களப்பிரர் ஆட்சி இருண்டகாலமாக ஆக்கப்பட்டதும் சரி, கலைஞர் அரசை இருண்டகாலமாக விமர்சிப்பதும் சரி இவையெல்லாம் திட்டமிட்ட நாடகம் தான். வரலாறுகள் தோறும், வரலாறுகளை இரட்டடிப்பு செய்பவர்களும் எப்போதும் இருப்பதும் கூட வரலாறுகள் தான்.

29 செப்டம்பர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா - SP.VR.SUBBIAH

பெயர் : SP.VR.SUBBIAH

புனைப் பெயர் : வாத்தியார், ஆசிரியர், ஆசான்

வயது : ஆசையுடன் பாசம் வரும், அந்தரங்கமில்லாத வயது

வசிக்கும் இடம் : கோவை

தொழில் : டெக்ஸ்டைல் மார்கெட்டிங்

துணைத் தொழில் : இலவசமாக ஜோதிடம் சொல்வது

நீண்ட நாளைய சாதனை : பலரை வகுப்பறையில் கட்டிப் போட்டு, பிரம்பை சுழற்றி வருவது

அண்மை சாதனை : நட்சத்திர வாரத்தில் 34 பதிவுகள் எழுதியது, ஜோதிட பாடத்தில் 190 இடுகையை எழுதியது

அண்மைய எரிச்சல் : ஜோதிடப் பதிவின் தலைப்பில் டிஸ்கி போடும் முடிவுக்கு தள்ளிவிடப் பட்டது

மிகவும் பிடித்த பொருள் : ஒலிவாங்கி, பில்டர் காஃபி

மிகவும் பிடித்த கவிஞர் : கவியரசர் கண்ணதாசன்

மிகவும் பிடித்த பத்திரிக்கையாளர் : தமிழ்வாணன்பதிவுகள் :

1. வகுப்பு அறை (ஜோதிட பாடம் மற்றும் அனுபவ பாடம்)
2. பல்சுவை (நகைச்சுவை மற்றும் சிவகங்கை சீமை நாட்டுத் தகவல்கள்)

நண்பர்கள் : வகுப்பறை மாணவர்கள், ஆத்திகர்கள்

எரிச்சல் ஏற்படுத்த முயல்பவர்கள் : நாத்திகம் பேசுபவர்கள் மற்றும் ஜோதிடத்தை நம்பாதவர்கள் அடிக்கும் பின்னூட்ட கும்மி (ஆனால் அவர் எரிச்சல் அடைந்தது கிடையாது)

வாழ்நாள் சாதனை : நீண்டகாலமாக எழுதி வருவது, எதிரே அமர்ந்திருப்பவர் கேட்டுக் கொண்டு இருந்தால், தண்ணீர் குடிக்காமல், மூச்சுவிடாமல் பேசுவது

பொழுது போக்கு : பதிவர் சந்திப்புகளுக்குச் சென்று, பதிவர் நண்பர்களுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு (சுமார் இரண்டு மணி நேரம்) சிற்றுரை ஆற்றுவது

நண்பர்களும், பில்டர் காஃபியும் !

காஃபி சமாச்சாரம் இல்லை காபி அடிக்காத சமாச்சாரம். எதைக் காப்பி அடிக்கவில்லை ? பொதுவாகவே எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள், முற்றிலும் ஒன்று போலவே குணமுடையவர்கள் இல்லாவிட்டாலும், சிற்சில குணங்கள் அடிப்படையிலேயே, அதைப் பிடித்திருப்பதாலும், அவற்றில் சில தன்னுடன் ஒன்றிப் போவதாலும் நட்புத் துளிர்க்கிறது. ஒத்தவயது நண்பர்களிடம் ஏறக்குறைய பிடித்தவைகள் நிறைய இருக்கும். மற்ற வயதினரிடையே இருக்கும் நட்பு, நல்ல பழக்கவழக்கம், குணங்களைச் சார்ந்ததாகவே இருக்கும். வயதானவர்களின் அனுகுமுறை பிடித்துப் போய் அவர்களிடம் பழகுவோம். சிறுவயதினரிடையே நாமாக விரும்பி நட்பு கொள்வதும் அவர்களிடம் இருக்கும் எதோ ஒரு நல்ல குணம் நம்மை ஈர்பதாகவே இருக்கும்.

நமது நண்பர்கள் நம்மைவிட எதோ ஒரு குணத்தில் நல்லவர்களாகவே இருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் இருக்கும் நண்பர்களும், அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஈர்ப்பு, கண்டிப்பாக எதோ ஒரு நல்ல குணம் தமக்கு பிடித்ததாக இருக்கும். ஒருவரிடம் இருக்கும் ஒரு நல்ல குணம், இன்னொரு நண்பரிடம் இருக்காது, அதுபோல் ஒவ்வொருவரும் வேறு வேறொன்றில் நல்லவர்களாகவே நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள், அவர்களை வேறுபடுத்தி அறிய வைப்பதும் கூட அவர்களிடம் இருக்கும் நல்ல குணமேயன்றி அவர்களது கெட்ட குணங்கள் இல்லை. நமக்கு ஒரு 10 பேர் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிந்தது இல்லை என்றே வைத்துக் கொள்வோம். இந்த 10 நண்பர்களின் நல்ல குணங்கள் நமக்கும் இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி இருப்பது தான் இயற்கை, அதனால் தான் அவர்களை நமக்குபிடித்து இருக்கிறது. ஆனால் இயற்கைக்கு மாறாகவே நமது குணங்கள் இருக்கும், நண்பர்களிடம் நல்ல குணம் இருக்கிறது என்பதற்காக நாம் அவர்களை நேசிப்போம், பழகுவோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்றைக் கூட நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கவே மாட்டோம். நம்மிடம் அவை இல்லாததாலேயே அவர்களை நமக்கு எப்போதும் பிடித்துப் போகிறது. நண்பர்களின் நல்ல குணத்தை நாமும் கொண்டிருந்தால் அவர்களை விட்டு விலகிவிடுவோம் என்று தவறான புரிந்து கொள்ளவேண்டாம்.

நெருக்கமாக இருக்கும், எனது நண்பர்களின் ஒவ்வொருவரின் நல்ல குணங்களை மட்டும் பார்க்கும் போது

1. ஒருவர் எளிதில் எவருடனும் பழகிவிடுவார் - ஒரு நண்பர்
2. உதவி செய்யச் சொல்லிக் கேட்டால், செய்துவிட்டு தான் அவருடைய வேலையைப் பார்ப்பர் - இது இன்னொரு நண்பர்
3. பார்த்தவுடனேயே முகம் மலர, மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருப்பார் - இன்னொருவர்
4. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி அக்கரையுடன் விசாரிப்பார் - இன்னொருவர்
5. எந்த நிகழ்வாக இருந்தாலும் உடனே எனக்கு தகவல் சொல்லிவிடுவார் - இன்னொருவர்
6. மனவருத்தம் ஏற்பட்டால் மறுநாளே எதுவுமே நடக்காதது போல் பேசுவார் - இன்னொருவர்
7. கூப்பிட்ட உடனேயே எந்த வேலையாக இருந்தாலும் போட்டுவிட்டு ஊர் சுற்ற வருவார் - இன்னொருவர்
8. எனக்கு எதாவது துன்பம் என்றால் துடித்துப் போவார் - இன்னொருவர்
9. எப்போதும் நான் தான் தொடர்பு கொள்ளனுமா ? பண்ணித் தொலைகிறேன் - அலுத்துக் கொண்டாலும் நான் தொடர்பு கொள்ளாவிட்டாலும் அடிக்கடி தொடர்பு கொள்வார் - இன்னொருவர்
10. அவர்கள் வீட்டிற்குச் சென்றால் என்னையும் அவர்களது பெற்றோர் அதே பாசத்துடன் நடத்துவதைப் பார்த்து பெருமையடைவார் - இவர் இன்னொருவர்

இது போன்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்

இவையெல்லாம் எனக்கு இருக்கிறதா ? என்றால் ஏறக்குறைய இல்லை அல்லது குறைவு என்றே சொல்வேன். அவர்களையெல்லாம் பிடித்து நட்பைத் தொடர்வதற்கு அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்தனி நல்ல குணமே காரணம். இவற்றையெல்லாம் நாமும் ஏற்படுத்திக் கொண்டால் ? என்று நினைப்பதோடு சரி. நட்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவர்களிடம் உள்ள ஒரு சில நல்ல குணங்களை பின்பற்றுவது தான். அதைச் செய்கிறோமா என்பது அவரவர் மனசாட்சியைப் பொறுத்ததே. பொதுவாக நட்பு என்பதே வாசனைக்காக விரும்பிக் குடிக்கப்படும் பில்டர் காஃபி போல் தான். நண்பர்களின் நல்ல குணம், நட்பு என்னும் புரிந்துணர்வின் பயன்பாட்டுடன் மட்டுமே தொடர்கிறது. நண்பர்களிடம் இருக்கும் எதோ ஒரு குணத்தைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ளும் நாம், அவர்களை எதற்காகப் போற்றுகிறோமோ, அதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதே இல்லை.

28 செப்டம்பர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா - T.V. Radhakrishnan

பெயர் : டி.வி.இராதா கிருஷ்ணன்
முழுப்பெயர் : வரதராஜன் இராதகிருஷ்ணன்
வயது : பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் வயது
துணைவியார் : காஞ்சனா இராதா கிருஷ்ணன் (மீரா கிச்சன், பாரதியார் ஆகிய தலைப்புகளில் வலைப்பதிபவர், கனரா வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்)

வலைப்பூக்கள் :

கற்க கசடற - அறிவியல், ஆன்மிகம் சமூகம் தொடர்பான கட்டுரைகள்

வள்ளுவன் - திருக்குறளுக்கு இரண்டு வரிகளில் எளிய விளக்கம்

தமிழா...தமிழா.. - அனுபவம், அன்றாட அரசியல், அதிபுத்திசாலி அண்ணாசாமி, வாய்விட்டு சிரிங்க மற்றும் கலாய்த்தல்

பணி : ஸ்டேட் வங்கி (விருப்ப ஓய்வு)


நீண்டகால சாதனை : தனது செளமியா தியேட்டர்ஸ் மூலம் எம்ஆர் இராதா, சோ இராமசாமி ஆகிய பிரபலங்களை வைத்து நாடகம் போட்டு, நாடக உலகில் வலம் வந்து, நாடகத் துறைக்கு வளம் தந்தது, பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்து வருவது, இலக்கிய துறையில் நீண்ட கால அனுபவம்

சமீபத்திய சாதனை : அரசியல்வாதிகளுக்கும், அவர்களது அடாவடி வாரிசுகளுக்கும் வலைப்பூக்களில் அளவான ஆப்பு வைப்பது. எழுத்துக்கள் மூலம் இளைஞர்களின் கவனம் பெற்றுவருவது, அடிக்கடி சூடான இடுகைகளில் இடம் பெறுவது

அடையாளம் : பெரிய மீசை, நேற்று ஓய்வு பெற்ற ஆசிரியர் போன்றும், மெகா சீரியல்களின் அப்பாக்களைப் போன்ற பொலிவான தோற்றம்

வசிக்கும் இடம் : சென்னை, பெசண்ட் நகர்

(பயோடேட்டாவை திருத்த உதவிய இராதா கிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றி)

27 செப்டம்பர், 2008

எனது 50 ஆவது பதிவு ! :)

முதல் முறையாக, ஒரே மாதத்தில் எனது 'காலம்' பதிவில் எழுதப்பட்ட இடுகைகளின் எண்ணிக்கை 50 ஐ தொட்டது. முன் எப்போதும் இது போல் நிகழ்ந்ததே இல்லை :)சிங்கை தீபாவளி கொட்டாங்களைக் காண இங்கேச் செல்லுங்கள்

26 செப்டம்பர், 2008

வால்பையனும் ஞானும் !

சிலரின் எக்ஸ்ட்ரீம் இமேஜினேசன் இதனால் பாதிக்கப்படுபவர் சிலர் உண்டு, நான் ஒரு பதிவருக்கு நெருக்கமாக இருந்ததால் அவரது செயலெல்லாம் எனக்கு தெரிந்திருக்கும், தெரிந்தே ஒப்புக் கொள்ள மறுக்கிறேன் என்று கதை கட்டிவிடப்பட்டது. அதை நிராகரித்துவிட்டேன். ஏனென்றால் அதை மறுப்பதாலோ, ஒப்புக் கொள்வதாலோ ஒரு செல்லாக் காசு அளவுக்குக் கூட எனக்கு தனிப்பட்ட பயனில்லை. சம்பந்தப் பட்டவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று ஒதுங்கியாச்சு.

வால்பையன் வலைப்பதிவு எழுத வந்த போது இப்படித்தான், அவர் யாரோட நண்பராக இருக்கிறார் என்று அவர் வெளிப்படுத்தியதால் அவருக்கு இன்றும் பிரச்சனை. ஏற்கனவே ஒரு நபர் என்னுடன் நண்பராகப் பழகியது, மூர்த்தியுடன் எனக்கு இருந்த தொடர்பை வேவு பார்க்கத்தான் என்று சொல்லியதாலும் கொஞ்சம் எச்சரிக்கையாகி, வால்பையன் இன்னாருக்கு நண்பர் என்று அறிந்ததால், வால்பையனின் பதிவுகளைக் கூட படிப்பதில்லை நான். அவரும் பழகுவது போல் பழகி 'வேவு' பார்த்ததாகச் சொல்லிவிட்டால் ? என்கிற கற்பனையில், அவரது பதிவுக்கு பின்னூட்டம் இடுவதையும் படிப்பதையும் தவிர்த்து வந்தேன்.

இடையில் பரிசல் குழுவில் இருந்தவர்கள் நண்பர்களாக பழக ஆரம்பித்தப் பிறகு, அவர்களுக்குள் அனுப்பிய தொடர் மின் அஞ்சலில் என்னையும் இணைத்திருந்தனர். அந்த குழுவில் இருந்தவர்கள் பலரும் என்னுடன் ஜிமெயில் சாட்டிற்கு வந்தனர். எனது மின் அஞ்சலில் Chat செய்ய விருப்பம் தெரிவித்து யாராவது கேட்டால் மட்டுமே அனுமதிப்பேன். ஐடி மட்டும் தான் வரும், அதன் பிறகு அவர்களது பெயரைக் கேட்ட பிறகு உரையாடுவதுண்டு.

இப்படித்தான் ஒருமுறை அனானியாக ஒருவர் வந்து உங்களிடம் முக்கியமான ஒன்றைப் பேசனும் என்று சாட் பண்ணக் அழைத்தார், யார் என்று கேட்டேன், யாருங்கிறது முக்கியமில்லை, சொல்லப் போறத்
தகவல் தான் முக்கியம் என்றார். ஒரு வேளை எங்க பாஸ் தான் மாறுவேசத்தில வந்து உனக்கு வேலைப் போச்சுன்னு சொல்லப் போறாரு என்று நினைத்து சரி இருக்கட்டும் என்று சாட்டுக்கு ஒத்துக் கொண்டேன்.

சாட்டில் வந்த அனானி நபர் 'மூர்த்தி கம்பி எண்ணுகிறான், நீயும் உள்ளப் போகப் போறே... மூர்த்தி பாஸ்போர்டை முடக்கியாச்சு தெரியும்ல... போலி டோண்டுவாக எழுதியது அவன் தான் என்று மூர்த்தியே வாக்கு மூலம் கொடுத்து இருக்கான், ஆடியோ அனுப்புகிறேன் கேட்கிறியா?... மூர்த்தி, வசந்தம் ரவி, ரத்னேஷ் ஆகிய மூவரும் ஒண்ணுதான் உனக்கு தெரியவே தெரியாதா ?' மூன்று பேருமே ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் எப்படி பதிவில் இருந்து காணாப் போனாங்க ?, மூவரும் ஒருவரே என்று உனக்கு நல்லாத் தெரியும் நடிக்காதே, உன் பேரையும் எப்ஐஆரில் சேர்த்திருக்காங்களாம், ஆனால் சேர்த்தது ரவி இல்லை' என்றார்

மனதுக்குள் சிரிப்பே வந்தது, வசந்தம் ரவி யாரென்று எனக்கு உண்மையிலேயே தெரியாது, ரத்னேஷ் என்னுடன் பழகுபவர், மின் அஞ்சல் வழி அவரிடம் உரிமை எடுத்துக் கொண்டு 'அண்ணன்' என்று அழைக்கும் தனிப்பட்ட பழக்கம் உண்டு, மூர்த்தியையும் நன்கு தெரியும் என்பதால்...சரி நாமலும் கொஞ்சம் விளையாடாலாம் என்று

'சரிங்க சாமி போலிஸ் என்றால் எனக்கு ஒண்ணுக்கு வரும், நீங்க ரொம்ப பயமுறுத்தாதிங்க, சூட்கேசில் பணம் தேவைப்பட்டாச் சொல்லுங்க, இரவு 12 மணிக்கு பாழடைந்த மண்டப்பத்துக்கு வந்து தருகிறேன், யாருக்கும் தெரியாமல் தனியாளாக வருகிறேன், கருப்புத் துணியை கண்ணில் கட்டிக் கொண்டு வந்துடுங்கோ... பணத்தை வாங்கிட்டு என்னைய மன்னிச்சி விட்டுட்டுங்க'
என்றேன்.

அதோட அந்த நபர் எஸ்கேப். அதன் பிறகு அந்த நபரின் ஐடியை மின் அஞ்சலில் இருந்து நீக்கிவிட்டேன். அனானியாக வந்து எச்சரிக்கைச் செய்யும் அளவுக்கு எம்மேலத்தான் எம்புட்டு கரிசனம்.

மேலே விட்ட இடத்திலிருந்து... பரிசல் குழுவில் இருந்து முதன் முதலில் வால்பையன் சாட்டிற்கு அழைத்தார், இரண்டு மூன்று முறை அனுமதி அளித்தும் அவர் பெயருக்கு நேராக பச்சை சிக்கனல் வரவில்லை, எதோ ஜிமெயில் கோளாறு என்றே நினைக்கிறேன். அதன் பிறகும் வால்பையன் 2 - 3 தடவை ரெகொஸ்ட் அனுப்பினார். என்ன செய்தும் அவரது சாட் ரெகொஸ்ட் சேர்க்க முடியவில்லை. 'டோண்டுவின் நண்பர் என்பதால் கோவி.கண்ணன் சாட் ரெகொஸ்டை ரிஜெக்ட் பண்ணுகிறாரோ...?' என்று வால்பையன் தப்பாக நினைத்துவிடுவாரே... சரி அவருக்கும் நமக்கும் என்ன பிரச்சனை ஒண்ணும் இல்லை, மின் அஞ்சலைப் போடுவோம் என்று போட்டேன், 'வால்பையன்..,எதோ ஜிமெயில் பிரச்சனையால் உங்க சாட் ரெகொஸ்ட் ஆட் ஆக மாட்டேன்கிறது...இப்ப நான் என்ன செய்ய ? ( விழிகளை உருட்டியபடி தம்பிபட மாதவன் மாதிரி கேட்க) ஒண்ணும் செய்யவேனாம், மின் அஞ்சல் தொடர்பு இருந்தால் போதும், இப்ப அனுப்பி இருக்கிங்க... ரெகொஸ்ட் அக்ஸபட் பண்ணினால் சாட் தானாக அனுமதித்துவிடும் என்றார். அப்பறம் சரியாகிவிட்டது.

"உங்களுக்கும் எனக்கும் வாய்க்காத் தகறாரா ? ஆனால் நாம யாருக்கு நண்பராக இருந்தோம் என்பதை வைத்து .... ஒருவருக்கு ஒருவர் எதிரி மாதிரி நினைக்கும் படி ஆகிவிட்டதே...எதிரிகள் அவர்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள் நமக்கு அவர்களில் யாருமே எதிரி இல்லையே ?"

"ஆமாங்க நீங்கச் சொல்வது சரிதான்... நாம ஒருவருக்கொருவர் தெரியாமலேயே எதிரிகளாக நினைத்துக் கொள்ளும் படி ஆகிவிட்டது...வருத்தமாகத்தான் இருக்கு" என்றார்

நேற்று 100 ஆவது பதிவிற்காக சிலவற்றை மனம் திறக்கிறேன் என்ற தலைப்பில் எழுதி இருந்தார். அது குறித்து நான் அவருடன் உரையாடியது

12:11 AM me: என்ன ஆச்சு ?
ஏன் புலம்பி தள்ளி இருக்கிங்க
12:12 AM வால்பையன்: rentu naalaa thookkame illa
12:13 AM me: அடடே
இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா
வால்பையன்: cornar panraanungka
engka ponaalum seenturaanungka
me: உங்களுக்கும் எனக்கும் ஒரே பிரச்சனைதான், நான் மூர்த்தியுடன் பழகியதால் என்னை தாக்கினார்கள், நீங்கள் டோண்டுவுடன் பழகுவதால் உங்களைத் தாக்குகிறார்கள்
12:14 AM வால்பையன்: irukkalaam
me: நான் கூட உங்களை தமாதமாகத்தான் புரிந்து கொண்டேன். அவர்களும் புரிந்து கொள்வார்கள் வருந்தாதீர்கள்
வால்பையன்: nanri thalaivaa
12:15 AM me: :) நம்ம பிரச்சனை நமக்கு தெரிகிறது, நமக்கு நாம் தான் ஆறுதல் பட்டுக்கொள்ள முடியும், நன்றியெல்லாம் எதுக்கு... லூஸில் விடுங்க
வால்பையன்: intha aaruthal koota evanum sollalaiye
12:16 AM me: ஏனென்றால் நானும் உங்களை மாதிரி அடிபட்டு இருக்கிறேன்,வலி தெரியும்
வால்பையன்: unmai thaan

************

பல கருத்து வேறுபாடுகள், கற்பனைகளால் ஏற்படுவது தான். இருபக்க ஈகோ காரணமாக அவை அப்படியே இருக்கும். எவனோ எவனுக்கோ நண்பராக இருக்கும் போது பிரச்சனை இல்லை, ஆனால் அவனுங்களுக்கு நாமளும் நண்பராக இருந்து தொலைந்து, அவனுங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டால் நம்ம தலையைப் போட்டு உருட்டுவானுங்க. இதுபோன்ற சிலரால் தனித் தனியாக நல்ல...இல்லை கெட்ட அனுபவம் பெற்றது வால்பையனும், ஞானும் !

நீதி : தெரியாத ஒருவரைப் பற்றி தவறாக நினைப்பது மிகப் பெரிய தவறு.

ரஜினி அரசியலில் குதிக்கிறார் - ஒரு ஹாஸ்யம் !

ரஜினி ரசிகர் மன்றங்கள் ஆவலோடு எதிர்நோக்கும் ரஜினியின் அரசியல் குதிப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வரும், ஆனால் அவர் நேரடியாக அரசியலில் ஈடுபடாமல சத்திய நாராயணாவின் தலைமையில் ரசிகர் மன்றத்தை களத்தில் இறக்கி வெள்ளோட்டம் பார்ப்பார். நேரடி அரசியலில் இறங்காததற்குக் காரணமாக நான் யூகிப்பது கலைஞருக்கு எதிராக அரசியலில் இறங்க அவருக்கு இருக்கும் தயக்கம்.


பார்ப்போம், விஜயகாந்த், சிரஞ்சீவி தங்கள் ரசிகர்களை வாக்குச் சீட்டாக மாற்றும் போது பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்ட ரஜினிக்கு அந்த ஆசை இல்லாமல் போகாது, ரசிகர்களும் வெறும் ரசிகனாகவே இருக்க விரும்பவில்லை என்று அறிந்திருக்கிறார். சரிந்து வரும் அவரது இமேஜ் நிமிர 'இயந்திரன்' வெளியிட்டாக வேண்டும், அதற்கு இன்னும் மூன்று ஆண்டுகளாகவது ஆகும். எனவே ரஜினிக்கு இப்போதைக்கு இந்த முடிவைத் தவிர்த்து வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை, அறிவிப்பு வந்த உடனேயே 'சுல்தான் த வாரியர்' வெளியிடப் படும் என்று நினைக்கிறேன்.


இவை நடக்கும் போது தமிழக அரசியல் களத்தில் பெறும் மாற்றங்கள் நிகழும்.

கொய்யா....'லே' ! - வைகைப் புயலின் கட்சி பெயர் மற்றும் சின்னம் !

'வ'னா 'வே'னா சின்னப் புள்ளை, சின்னப் புள்ளத்தனமாக ஒண்டிக்கு ஒண்டி பேட்டிக் கொடுத்தாலும் வெவரம் தான். ஒரு கட்சி ஆரம்பிக்க எவ்வளவு யோசனை செய்து ( நீண்ட காலத்திற்கு பணம் கொழிக்கும் கார்ப்ரேட் பிஸ்னஸ் ஆச்சே) பெயரெல்லாம் வைக்கிறார்கள். ஆனால் நம்ம கைப்புள்ள வடிவேலு எல்லாவற்றிலும் அதிரடி தான்.

கட்சிக்கு பெயரை நக்கீரன் பேட்டியில் உடனே சொல்லிவிட்டார்கட்சியின் பெயர் : 'வைகைப் புயல் திராவிடக் மக்கள் கழகம்' (VPDMK) ,சின்னம் ?

சின்னப்புள்ளத் தனமாக இருக்கிறார் என்று நினைக்காதிங்க,'கொய்யாப் பழம்' சின்னமாம்


திருநெல்வேலி பக்கம் போனால்,

'ஏலே... சின்ராசு, நம்ம வடிவேலு கட்சி சின்னம் என்ன...லே ?'

'டக்குன்னு வரமாட்டேங்குது................. அட(ங்) 'கொய்யா'.....லே' ன்னு வாங்களோ :)))))))))

இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி உண்மையிலே வீரன் தேங்....!

கிளிக்கிப் பெரிதாகப் பார்க்கவும் !

வைகைப்புயல் திராவிட மக்கள் கட்சி சார்பாக தேர்தலில் நிற்க சீட்டு வேண்டுவோர் வடகரை வேலன் அண்ணாச்சியை நாடுங்கள், முந்துவோருக்கு முன்னுரிமை.

25 செப்டம்பர், 2008

வடிவேலு கட்சியின் முதல் வேட்பாளர் !

இந்த புகைப்படத்தை பார்த்துட்டு கோல்கேட் விளம்பரத்திற்கு கூப்பிட்டார்களாம், வேண்டாம், வரலை என்றாராம், அப்பறம் எதுக்கு இந்த புகைப்படம் ? கேட்டேன்

"என்ன அப்படி கேட்டிட்டியே......"

"என்ன அண்ணாச்சி, அப்படி என்னத்த கேட்டேன்"

"அட அதத்தான் நானும் சொல்லுதேன்..."

"சரி சொல்லுங்க அண்ணாச்சி"

"வர்ற தேர்த்தலில் நிக்கேன் இல்லே....."

நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி வடிவேலு ஆரம்பிக்கப் போகும் கட்சியின் சார்பில் தேர்த்தலில் கோவை மாவட்டத்தில் இரு தொகுதிகளில் நிற்கப் போகிறாராம். அதுக்கு எடுத்த புகைப்படம் தான் இது.

அண்ணாச்சி வாழ்க ! அண்ணாச்சி வாழ்க !

உங்கள் ஓட்டு அண்ணாச்சிக்கே !

அண்ணாச்சி வாழ்க !

பெரிய அண்ணாச்சி வடிவேலு அண்ணாச்சி வாழ்க !

பிகு: புகைப்படம் பரிசல்காரன் பதிவில் சுட்டது.

பகவானுக்கு அபச்சாரம் செய்தால் மோட்சமாம் !

யாருக்கு பகவானால் வதம் (மரணம்) ஏற்படுகிறதோ, அவனுக்கு மோட்சம் கிடைக்கிறதாம். பகவானுடைய பார்வை விசேஷம் அப்படி! ராமனோடு போரிட்டு ராவணன் உயிர் துறந்தான் என்பது ராமாயண கதை. ராமனாக வந்திருப்பது நாராயணன் தான் என்று தெரிந்திருந்தும் ராமனோடு போர் புரிந்தான் ராவணன். அவன் கையால் தான் வதம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பி போர் செய்தான். பகவானுக்கு அபசாரம் செய்தால் அவர் கையால் வதம் ஏற்படும் என்று தெரிந்து, எதை செய்தால், பெரிய அபசாரமாக இருக்கும் என்று விசாரித்த ராவணன், சீதையை அபகரித்துச் சென்றான். ராமனாக வந்த நாராயணனால் வதம் செய்யப்பட்டான்; மோட்சம் பெற்றான் என்பது சுருக்கமான கதை. மோட்சம் கிடைக்க இப்படி ஒரு வழி, அப்படி ஒரு வழி இருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அதை அடைந்து விட்டால் போதும் என்கின்றனர். அவரவர் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம் இது!.

மோட்சம் பெற இன்னும் சாமார்த்தியமான பலவழிகளைக் கண்டு கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

- கோவிலை விபச்சாரக் கூடம் ஆக்கினால் பகவானுக்கு கோபம் வரும், இறந்த உடனேயே சொர்கம் சென்றுவிடலாம் என்பதற்காக தேவதாசிகளை உருவாக்கினர், பின்பு கருவாக்கினர்.

- கோவில் சொத்தை மொத்தமாக தின்றால் பகவானுக்கு கோபம் வரும், செத்தா சொர்கம் தான்

- கோவில் உண்டியலை பங்கமில்லாமல் பங்கு பிரித்துக் கொண்டால் 'ஏண்டா எனக்குன்னு 10 பைசா கூட இல்லையா ?' பகவானுக்கு கோபம் வரும், என்னிக்கு செத்தாலும் அன்னிக்கே சொர்கம் தான்.

- இதெல்லாம் விட கோவிலுக்குள் கொலைப் பண்ணி, இரத்தக்கரையாக்கினால் கொலையானவனுக்குக் சொர்கம் கிடைக்கும் முன்பே கொன்றவர்களுக்கு கிடைத்துவிடும்

"நந்தனாரை இறைவன் உள்ளேயே அழைத்திருக்கலாமே, யாரால் தடுக்க இயலும் என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இன்னும் முக்கியத்துவம் அளிக்க இறைவன் விரும்பியதே இதற்கு காரணம்.

ஒருநாள், அந்த ஆசை நிறைவேறியது. சிதம்பரத்துக்கு அவர் நடந்தே சென்றார். அவரது உள்ளத்தில், நடராஜப் பெருமானை உள்ளே சென்று தரிசித்தே தீர வேண்டும் என்ற பக்தி வெறி ஏற்பட்டது. கோவில் மதில் சுவர் ஓரமாக படுத்துக் கொண்டார். வந்த களைப்பில் உறங்கி விட்டார். அப்போது, அவரது கனவிலும், தில்லை வாழ் அந்தணர்கள் கனவிலும் தோன்றிய சிவன், நந்தனாரை கோவிலுக்குள் அனுமதிக்கும்படி வேண்டினார்.இறைவனே சொன்ன பிறகு அந்தணர்கள் என்ன செய்ய இயலும்? அவர்கள் நந்தனாரை தேடி வந்து வணங்கி, இறைவனின் உத்தரவைத் தெரிவித்தனர். அவரை கோவிலுக்குள் மேளதாளம் முழங்க அழைத்துச் சென்றனர். அங்கே சென்ற நந்தனார் இறைவனைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார். இறைவனோடு ஒன்றிப் போனார். அந்த நிலையிலேயே அவர் ஒளிப் பிழம்பாக மாறி, இறைவனுடன் கலந்து விட்டார். "

- தீண்டாமையை அப்படியே விட்டு வைத்திருப்பது சிவபெருமானின் திருவிளையாடல் மகிமையாம். அதன் பிறகு கோவிலுக்குள்ளேயே அவனை (எரித்து) ஜோதியாக்கியதும் இறைவனின் மகிமையாம். அடப்பாவிகளா, உங்கள் ஈனச் செயலுக்கு இறைவன் துணை இருப்பதாக்க அள்ளிவிடுகிறீர்களே, கடவுளுக்கு இப்படியும் அபச்சாரம் செய்து சொர்கம் செல்லும் திட்டமா அது. இந்த பாவிகள் செல்ல இருக்கும் சொர்கத்தின் பெயர் சொர்கமா ? சிதம்பரம் கோவிலுக்குள் தனியாளாகப் போய் இருந்தால் ஓதுவார் ஆறுமுகசாமியும் 'ஜோதியில்' கலந்திருப்பார், அவர்தான் பகவானுக்கு அபச்சாரம் பண்ணவில்லையே, பின்பு அவருக்கு எப்படி அந்த பாக்கியம் கிடைக்கும் ?

24 செப்டம்பர், 2008

விஜய்காந்தை எதிர்க்கும் வடிவேலுவின் தகுதி ?

'வி'னா 'வா'னா விவாகரத்தில் வடிவேலு அதுவும் சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த்துக்கு குடை பிடித்தவர் அவரை எதிர்த்து தேர்த்தலில் போட்டி இடுவேன் என்பதும் அதற்காக கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறுவதெல்லாம் சரியா ? என்பது போல் சில கருத்துக்களை சில இடங்களில் படிக்க நேர்ந்தது.

இந்த அளவீட்டில் பார்த்தால் விஜயகாந்த் கலைஞர் காலில் பொது நிகழ்ச்சியில் பலமுறை விழுந்து இருக்கிறார். கலைஞருடன் அரசியலுக்கு ஆதரவளித்து தன்னை திமுக ஆதரவாளனாகவே காட்டிக் கொண்டு இருந்தார். இப்போதெல்லாம் அவர் கலைஞருக்கு கொடுக்கும் மதிப்பு எல்லோரும் அறிந்தது தான். மூத்த அரசியல் வாதி, வயதானவர் என்பதைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாது, விஜயகாந்த் செய்தி இதழ்களுக்கு பேட்டி அளிக்கையில் கைதேர்ந்த அரசியல் வாதியாக மட்டுமே தெரிகிறாரேயன்றி, நலமான அரசியல் நடத்துபவராகத் தெரியவில்லை.

அரசியல் என்று இறங்கிவிட்டாலே முன்பு தெரிந்தவர், மூத்தவர், குடைபிடித்தவர் என்றெல்லாம் கிடையாது, போர்களத்தில் எதிரே நிற்பவர் போன்று தான், இது தவறுதான் என்றாலும் விஜயகாந்த் இதைச் சரியாகச் செய்கிறார். வடிவேலு அப்படி செய்யக் கூடாது என்பது மட்டும் என்ன ஞாயம் ?

வடிவேலுக்கு தகுதி இருக்கிறதா ? என்பது போல் கேட்கப்படும் கேள்விகளெல்லாம் நிராகரிக்கப் படவேண்டியவை. வடிவேலு அரசியலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக இருப்பதும் அவருடைய விருப்பம், நாட்டின் கடைசி குடிமகன் வரையிலும் அரசியலுக்கு வரும் தகுதி இருக்கிறது. தகுதி, திறமை, முன்பு இப்படி இருந்தாயே என்பது போல் பேசுவதெல்லாம் ஆண்டை மனப்பான்மையே. அரசியலில் மேலே வந்தவர்களில் பலர் விபத்தாக வந்தவர்கள், போட்டியில் வந்தவர்கள், வாரிசாக வந்தவர்கள் என்றெல்லாம் இருக்கிறது, யாருமே பிறவி அரசியல் வாதியாகப் பிறக்கவில்லை.

விஜய்காந்துக்கு கலைஞரைக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறதோ, அதே தகுதி வடிவேலுவுக்கும் உண்டு !

வடிவேலு தொடர்ந்து கைப்புள்ளையாக, நகைச்சுவை நடிகராக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.

மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா ? - மறுமொழிப் பதிவு

//சகோதரர் கோவி.கண்ணனின் மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா? என்ற பதிவில் மதங்களைப் பற்றிய அவரின் புரிந்து கொள்ளலை எழுதி இருந்தார், "எம்மதமும், கோட்பாடும் உலக மக்களை மேம்படுத்தாது" என்று எழுதி இருந்தது சரியல்ல;. மற்ற மதங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அவரின் கூற்றுக்கு எதிர்வினையாற்றலாம். இஸ்லாம் உலக மக்களை மேம்படுத்தியது, மேம்படுத்திக் கொண்டிருக்கிறது, மேம்படுத்தும் என்பதைச் சொல்லவே இப்பதிவு.//

சகோதரர் நல்லடியார் அவர்களே, மதம் உலக மக்களை மேம்படுத்துகிறாதா என்ற கேள்வியை எல்லா மதங்களுக்கும் பொதுவாகத்தான் எழுதி இருந்தேன். எந்த மதமாக இருந்தாலும் உலக மக்கள் அனைவரையும் மேம்படுத்த வேண்டும் என்ற பொருளில் சொல்லவில்லை, அப்படி பொதுக் கொள்கைக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரியும். நான் சொல்வது குறைந்த அளவாக அந்த மதத்தைப் பின்பற்றுவர்களையாவது மேம்படுத்துகிறாதா என்று கேட்பதாக எடுத்துக் கொள்ளலாம். அது எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் நோக்கிய கேள்வியே அல்ல. நீங்கள் என் கேள்வியை தவறாக புரிந்து கொண்டு இஸ்லாம் உலக மக்களை மேம்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள், இஸ்லாம் மதத்தை இஸ்லாமியர்கள் தவிர்த்து யாரும் ஏற்றுக் கொள்வதில்லை, எனவே நீங்கள் அதைப் பொதுப்படுத்தி எழுத முடியாது, நீங்கள் உங்கள் கருத்தாக 'இஸ்லாம் இஸ்லாமியர்களை மேம்படுத்துகிறது' என்றவகையாக பதிலிட்டு இருந்தால் பொருத்தமாக இருக்கும்.

//உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான மார்க்கம் என்றால், உலகமக்களின் பிரச்சினைகளும் பொதுவானதாகவும் அதற்கான தீர்வுகள் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்.உலக மக்களின் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள் இப்படித்தான் இருந்து வருகின்றன.//

அப்படியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வேறு வேறு, சீனர்கள் பன்றி இறைச்சி இல்லாமல் ஒரு நாள் கூட இருக்கமாட்டார்கள், பெரும்பாலான இந்தியர்கள் மாட்டு இறைச்சியை உண்ணமாட்டார்கள், இவர்களெல்லாம் இஸ்லாமைப் பின்பற்ற வேண்டுமென்றால் தங்களது உணவு பழக்க வழக்கத்தைக் கூட மாற்றியாக வேண்டும், அடுத்து உடை, இஸ்லாமில் இருக்கும் உடைக்கட்டுப்பாடு உங்களுக்குத் தெரிந்ததுதான், இறை நம்பிக்கை என்பதற்காக தங்களது உடைப் பண்பாட்டையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் எந்த ஒரு சமூகம் உடனே முடிவெடுத்துவிடாது. ஆக இஸ்லாம் கொள்கைகள் அதனைச் சார்ந்திருப்பவர்களுக்குத்தானே அன்றி, உலகத்தில் இருக்கும் அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும் பொதுவானது அல்ல. அடுத்தது காலம், மதங்கள் தோன்றிய காலமும் தற்போதைய காலமும் முற்றிலும் மாறுபட்டது, விரைவு வாழ்க்கைச் சூழலில் இருக்கிறோம். இஸ்லாமியர்களைப் பொறுத்த அளவில் பெண்களுக்கு ஆண்கள் மருத்துவம், மகப்பேறெல்லாம் பார்க்க முடியாது, இவையெல்லாம் உலகத்துக்கும் பொதுவான, காலத்துக்கு ஒவ்வும் கருத்துக்களா ?

//இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் கிறிஸ்தவத்தின் மேம்படுத்தப்பட்டவையே என்ற போதிலும் கிறிஸ்தவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக மது/போதை,விபச்சாரம் போன்றவை இரண்டிலுமே தடுக்கப்பட்டவை.கிறிஸ்தவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமை சிலமணி நேரங்களே கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.!
//

உங்கள் மதத்தைப் பற்றி நீங்கள் உயர்வாக பேசும் உரிமை உங்களுக்கு உண்டு, பிற மதத்தினரைக் குறைச் சொல்ல உங்களை அவர்கள் அனுமதிக்கிறார்களா ? அல்லது நீங்களாக உரிமை எடுத்துக் கொள்கிறீர்களா? இஸ்லாமியர் எவரும் மது, போதை, பாலியல் தொழிலாளிகளிடம் செல்பவர்கள் இல்லையா ? நீங்கள் இஸ்லாமில் இருக்கும் அனைத்து கொள்கைகளையும் பின்பற்றுபவராக இருக்கலாம், ஆனால் அதே அளவுகோலில் எல்லா இஸ்லாமியர்களை எப்படி நினைத்துப் பார்க்கிறீர்கள், எனது இஸ்லாமிய நண்பர்களுக்கு மதுப்பழக்கம் இருக்கிறது, அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று நீங்கள் சொல்லுவீர்களா ? நான் சொல்ல மாட்டேன். பின்பற்றுதல், பின்பற்றாதது எல்லாமதத்தில் இருப்பவர்களிலும் சிலர் அல்லது பலர் கூட உண்டு. எல்லா நல்லக் கருத்துக்களுக்கும் தோன்றிய நாட்டிற்கு ஏற்றக் கருத்தாக அந்தந்த மத வேதப்புத்தகத்திலும் இருக்கும்.

//இஸ்லாமியத் தீர்வுகள்,மற்றவற்றைவிட எதார்த்தமாகவும் நியாயமாகவும் உள்ளன. ஒரு கன்னத்தில் அறைந்தவரிடம் மறுகன்னத்தைக் காட்டு என்பது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் உண்மையில் பாதிக்கப்பட்டவரின் உள்மனம் ஏற்காது. உலகலாவிய மார்க்கமென்றால்,அதன் வழிகாட்டல்களும் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவானவையாக இருக்க வேண்டும். எக்காலத்திற்கும் பொருத்தமான,தனிநபரால் மாற்ற முடியாதத் தீர்வாதாக இருக்க வேண்டும். உலகம் எதிர்கொண்டுள்ள நீண்டகாலப் பிரச்சினைகள் சிலவற்றையும் அவற்றிற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளையும் பார்ப்போம்://

உலகளாவிய ? அதற்கு மேலேயே விளக்கம் சொல்லிவிட்டேன். ஒரு மதம் முதலில் தன்னை சார்ந்துள்ளவர்களை மேம்படுத்தினாலே போதும், உலகம் அமைதியாகிவிடும், இங்கே உலகளாவில் நடக்கும் மதச் சண்டைகளுக்குக் காரணம் ? உங்கள் மதமே மோசமானது என்கிற எதிர் எதிர் (இரு பக்க கோஷம்) குற்றச்சாட்டு தானே.

//கொலை,கொள்ளை, திருட்டு,இலஞ்சம், ஊழல், மது, சூது, விபச்சாரம், பொய், புறம்,அவதூறு/வீண்பழி ஆகியவை உலக மக்கள் அனைவருக்கும் பொது. ஏழை-பணக்காரர், முதலாளி-தொழிலாளி, கடனீந்தோர்-கடனாளி, நுகர்வோர்-வியாபாரி, வட்டி,கடன்,வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் ஆகிய பொருளியல் பிரச்சினைகளுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் நிரந்தர வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் உள்ளன. கற்பழிப்பு, வரதட்சணை, விவாகரத்து, சிசுக்கொலை, கருக்கலைப்பு போன்ற பெண்ணிய்ப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் அழகியத் தீர்வுகள் உள்ளன.//

இந்திய இஸ்லாமியர்களுக்கு அரபு நாடுகளில் இருக்கும் கிரிமினல் சட்டங்களை அமுல் படுத்தினால் எத்தனை இஸ்லாமியர்கள் வரவேற்பார்கள் ? நீங்கள் வரவேற்பீர்களா / ஒரு நாட்டின் சட்ட அமைப்பு அந்த நாட்டி மக்களின் மன நிலையையும், குற்ற விகிதத்தையும் பொறுத்தது, ஒரே மாதிரி சட்டம் எந்த நாட்டுக்கும் பொருந்தாது. மரண தண்டனையைக் கூட ஒழிக்க வேண்டும், ஒழித்துவிட்டோம் என்று சில நாடுகள் சொல்லி வருகின்றன.

//எயிட்ஸை ஒழிக்க முடியாது. ஆனால், பரவலைத் தடுக்கலாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். தீர்வாக, ஆணுரை, கட்டுப்பாடுடன்கூடிய உடலுறவு என்ற தீர்வுகளைச் சொல்கிறார்கள்.கொள்ளிக்கட்டையால் முதுகு சொறியலாமா? தீவிரவாதம் குறித்து உலகநாடுகள் கவலை படுகிறார்கள். தீவிரவாதத்தை ஒழிப்பதற்குப் பயங்கரவாதத்தைக் கையால்கிறார்கள். //

நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் கருத்தடை சாதனங்களே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தி குடும்பத்தின் அளவைக் குறைத்துக் கொள்ள இஸ்லாமும் சரி வாடிகனும் சரி அனுமதிக்கவில்லையே ? எய்ட்ஸ் வேறு, அது ஒழுங்கீன பிரச்சனை, அதை மதக் கொள்கைகள் அதனை தடுத்துவிடாது. காம உணர்வுகளும், அதற்கான வடிகாலும் அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்வது அதன் விளைவை அவர்கள் அனுபவிக்கிறார்கள். எல்லாவற்றையும் மதமே தீர்மாணிக்கிறது நீங்கள் சொல்லலாம், ஆனால் நடைமுறைச் சாத்தியமில்லாதவைகள் எல்லாம் வெறும் கொள்கைகள் தான். கிட்டதட்ட நன்னெறி ஒழுக்கம் மாதிரி. படிக்க நன்றாக இருக்கும், செயலுக்கும், சூழலுக்கும் சரிவராது. உங்களைத் தாக்க வருபவரிடம் உடனடியாக எதிர்தாக்குதல் நடத்துவீர்கள், இல்லை என்றால் உங்களைக் காப்பாற்றிக் கொள்வீர்கள், அந்த நேரத்தில் நம் மதத்தில் இதற்கு என்ன தீர்வு சொல்லி இருக்கிறதென்று எவரும் பார்க்க மாட்டார்கள்.

//உலக வெப்பமயம், நதிநீர் பங்கீடு, நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகளுக்கு மதங்கள் காரணமல்ல;ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத் தன்மையும் பொருளாசையுமே காரணம்.சுருக்கக்கூறின் தனிநபர் பிரச்சினை முதல் சர்வதேசப் பிரச்சினைவரை,படுக்கையறை முதல் பாராளுமன்றம் வரை எல்லாவகையானப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வுண்டு. அதாவது,உலக மக்களை மேம்படுத்தும் தகுதி இஸ்லாத்திற்குச் சற்று அதிகமாகவே உள்ளது.//

உலக வெப்பம் மற்றும் ஏனைய பிரச்சனைகள் மக்கள் பெருக்கம், தொழிற்சாலைகள் மிகுந்தது, எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்துவது, பொருட்களை மறுபயனீடு செய்யாதது போன்றவற்றால் ஏற்படுபவை, அது இயற்கைச் சீரழிவு, ஆனால் ஆன்றாடம் நடக்கும் மதம் தொடர்பான சண்டைகள், சர்வதேசப் பிரச்சனைகள் இவற்றிற்கெல்லாம் காரணம் பழமை வாதத்தில் திளைத்திருக்கும் மதவாதிகளே காரணம், இவைகள் அனைத்து மதவாதிகளாலும் ஏற்படுபவையே. இருமதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள முயன்றால் அவர்களின் திருமணத்திற்கு குறுக்கே நிற்பது எது ? படுக்கை அறைக்குச் செல்வதே பிரச்சனை ஆகிவிடுகிறதே.

*****

நான் இந்து மதத்தை முன்மொழிபவனாகவோ, எந்த மதத்தையும் உயர்த்தியோ இந்த இடுகையை எழுதவில்லை. நீங்கள் எழுதியவற்றிற்கு மறுமொழி மட்டுமே, முடிந்தால் பிறமதத்தைத் தொடர்ப்பு படுத்தாது பதில் அளியுங்கள், மேலும் உங்களின் புனிதமதமான ரமழான் மாதத்தில் இந்த பதிவை எழுதவும் எனக்கு விருப்பமில்லை. உங்களுக்கு கருத்துக்கு மாற்றுக் கருத்து என்ற முறையில் மட்டுமே எழுதினேன். நேரம் கிடைத்தால் அரசியலும் ஆன்மீகமும் ! - இதற்கும் சேர்த்தே பதில் அளியுங்கள். நீங்கள் மிக முதன்மையாக கருதி, வழிநடக்கும் (இறைநம்பிக்கை, வழிபாடு முறைகள் தவிர்த்த பிற) கொள்கைகளை சீர்தூக்கி இது இதெல்லாம் உலக மக்களுக்கு பொதுவானது என்று ஒரு பட்டியல் இடமுடியுமா ?


சுட்டிகள் :
அரசியலும் ஆன்மீகமும் ! - கோவி.கண்ணன்
மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா ? - கோவி.கண்ணன்

மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா? - நல்லடியார் (எதிரொலி)

23 செப்டம்பர், 2008

புதிய பதிவர்களே... ! யாரும் கண்டு கொள்ளவில்லையா ? கவலை வேண்டாம் !

புதிதாக பதிவு எழுத வரும் போது எல்லோருக்கும் இருக்கும் தடைதான், யாருமே பின்னூட்டமாட்டாங்க, அதற்கு காரணம் நிறைய இருக்கு. பழைய பதிவர்கள் பலர் புதிய பதிவு திறந்து வச்சி யாரையாவது கலாய்பாங்க, அதனால் புதிய பதிவர்களைப் பற்றிய கவனம் வெளியே தெரிய சுமார் ஒரு மாதம் கூட ஆகும், அதுவும் நாளைக்கு 1 பதிவாவது போட்டு வந்தால் மட்டுமே.

புதிய பதிவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு எளிய வழிகள்

1. நாள் தோறும் ஒரு பதிவாவது போடுங்கள்
2. உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள், அது எளிதுதான், எப்பொழுது முதல் பதிவை எழுதி இருக்கிறார்கள், அல்லது புரொபைல் பார்த்தால் பதிவு தொடங்கிய தேதி தெரிந்துவிடும்
3. அப்படி கண்டு கொண்டவர்களுக்கு பின்னூட்டம் போட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள், ஏனென்றால் அவர்களும் இதே போன்று 'நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லை' என்றே நினைத்திருப்பார்கள்.
4. அவர் உங்களுக்கு பதிலுக்கு பின்னூட்டம் போடவில்லையே என்று சோர்ந்து விடாதீர்கள், தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வாருங்கள்
5. அப்படி செய்யும் போது புதுப்பதிவர்களென உங்களுக்குள் ஒரு குழுவே ஏற்பட்டுவிடும், அப்பறம் என்ன பின்னூட்ட மழைதான்.
6. பரிசல், வடகரைவேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, வெண்பூ இன்னும் பலர் இப்படித்தான் ஆரம்பத்தில் புதியவர்களை அவர்களுக்குள் கண்டுகொண்டு ஊக்கப்படுத்திக் கொண்டு தங்களுக்குள் உற்சாகப்படுத்திக் கொண்டார்கள்
7. இது போன்ற பின்னூட்ட குழுவை முதலில் உருவாக்க வேண்டும், உங்களுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு வந்தவர்களோ, உங்களுக்கு பிறகு வருபவர்களோ உங்களுடன் தொடர்ந்து எழுதுபவர்களாகவும், உங்களுடன் புரிந்துணர்வோடும் வளர்ந்து வருவார்கள்.
8. "லக்கிலுக்குவுக்கு நறுக்கென்று நாலு கேள்வி", "இட்லி வடை யாரென்று கண்டுபிடித்துவிட்டேன்", "நமீதாவுடன் நேருக்கு நேர்" இது போன்ற தலைப்புகளில் மொக்கையாக வாரத்திற்கு 3 பதிவாவது போட்டால் தான் ஏற்கனவே எழுதிக் கொண்டு இருக்கும் பழைய பதிவர்களின் கவனம் பெறுவீர்கள். அந்த பதிவில் நகைச்சுவையும் இருந்தால் பழைய பதிவர்களாலும் கண்டு கொள்ளப் படுவீர்கள்.
9. சர்ச்சைக்குறிய செய்திகளை கட்டுரையாக்குங்கள், விவாதம் ஆக்குங்கள் எல்லோருடைய கவனமும் பெறுவீர்கள்
10. மொக்கைப் பதிவர்களின் தலைவரான குசும்பனின் பின்னூட்ட கும்மியில் கலந்து கொள்ளுங்கள், அதன் பிறகு பின்னூட்டம் போடுவது, பதிவு எழுதுவது எலலாமே எளிதாகிவிடும், டீக்குடிக்கிற நேரத்தில் கூட ஒரு பதிவை எழுதிவிட முடியும்

எல்லாவற்றையும் விட முதன்மையான யோசனை, உங்கள் பகுதியில் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தால் தவறாது கலந்து கொள்ளுங்கள்

பதிப்புரிமை : கோவி.கண்ணன்

பெரும் பிரச்சனையிலே பெருத்த சந்தேகம் !

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]


ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!

'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்

ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,

இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,

ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்

வழியே நிகழும் வகையினை அறிந்து

வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்

மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை

எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,

- வீஎஸ்கே

இந்த கணக்கு ஆண்களுக்குச் சரி,

பெண்களுக்கு ? ஒன்பது ஓட்டையா ? பெண்குறி ஒரே துளையா ? குழந்தை பிறக்கும் வழி, மற்றும் சிறுநீர் பாதை என இரண்டு இருக்கிறது. ஒரே இடத்தில் முடிந்தாலும், ஆரம்பம் வேறு இடம், வேறு வழியாக வந்து முடிகிறது. பெண்களுக்கு ஒன்பது ஓட்டை கணக்கு சரியில்லை என்றே நினைக்கிறேன். தகவல் தெரிந்தவர்கள் 'உடலுக்கு ஒன்பது வாசல்' என்று பொதுவாகச் சொல்லப்படும் கூற்றை மறுக்கிறீர்களா ? நான் மறுக்கிறேன்.

அடுத்து ?

******
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]

ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்

ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி

பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!

மூலாதாரம் என்னும் முதல்நிலை

குதம், குறி இவற்றின் நடுவே இருக்கு

கணபதி
இங்கே ஆளுமைசெய்து ( பிள்ளையார் உட்கார நல்ல இடமாக கிடைக்கலையா? )

சாதகன் தன்னை வழிநடத்திடுவார்

குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்

பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்

உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்

திருமால் இதிலே வாசம் செய்கிறார்

இதயநாடியில் அநாகதம் உளது

உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்

கண்டம் நடுவே விசுத்தி ஆகும்

மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்

புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்

சுழுமுனை என்பதும் இதுவேதான்

ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்

மூலம் தொடங்கி மேலே எழும்பி

பிராணன் இவற்றின் வழியே கடந்து

சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்

இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்

ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த

இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்

இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி

ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்

தன்னை மறந்தவன் இறையினை உணரும்\


ஏன் அப்படி சொல்கிறார்கள் ? ஆன்மிக அரசியல். தியானம் யோகம் இவற்றில் இருந்து பெண்களை விலக்கிவிட்டுத்தான் கோட்பாடுகளை வகுக்கிறார்கள். பெண்கள் கணவனுக்கு பணிவிடை செய்தாலே
தெய்வத்துக்கு செய்தது போன்றது தான் என்றெல்லாம் சொல்லி அவளின் கவனங்களை திருப்பிவிட்டார்கள். :)

அடுத்து யோக நிலையில் ஒவ்வொரு இடத்திலும் ஆண் தெய்வமே உட்கார்ந்து இருக்கிறதாம். இந்த தெய்வங்களின் மனைவியர்(கள்) குழாயடி சண்டை போட சென்றுவிட்டார்களா ?

இந்த ஹடயோகம், குண்டலினி யோகம் இவையெல்லாம் பெண்களுக்கு கிடையாது என்று சொல்லுவதற்கேற்ப முழுக்க முழுக்க ஆண்களுக்காகவே வகுப்பட்ட நோக்கிலேயே இருக்கிறது.

வீஎஸ்கே ஐயா மன்னிக்க இன்னிக்கு பதிவு போட மேட்டர் கிடைக்கல.

சரி, ஐயத்துக்கு யாராவது பதிவர்கள் பதிலைச் சொல்லுங்கள், பெண்களுக்கு உடல் வாசல் ஒன்பதா ? பத்தா ?

22 செப்டம்பர், 2008

ஒரு கதையும், தொடர்பில்லாத ஒரு செய்தியும் !

ஒரு ஊரில் ஒருவன் திடீர் பேமஸ் ஆகனும் என்று நினைத்தானாம், தன்னைப் பற்றி, எல்லோரையும் பேச வைக்கனும் என்று நினைத்துக் கொண்டானாம். அதற்கு என்ன செய்வது ? ஊரில் இருக்கும் நாட்டாமைக் காரரிடம் வம்பிலுத்தால் பஞ்சாயத்தைக் கூட்டுவாங்க, அப்பறம் ஊரே நம்மைப் பற்றி தான் பேசும் என்று திட்டம் போட்டானாம்.

அடிக்கடி நாட்டாமையைச் சீண்டி வந்தானாம், நாட்டாமைக்கு இந்த பய அடிக்கடி நம்மை சீண்டுகிறான், இதைக் கண்டித்தோம் என்றால் அதை வச்சு மறுபடியும் சீண்டுவான், கண்டுகாமல் விடுவோம் என்று இருந்துவிட்டாராம். ஒரு நாள் பாம்பு கடித்து மாடு இறந்ததை நாட்டாமை தான் விசம் வச்சிக் கொன்றார் என்று கிளப்பி விட்டானாம். நாட்டாமைக்கு கோபம் வந்தது, என்ன செய்திருப்பார் ? பஞ்சாயத்தைக் கூட்டினால் அந்த பயலுக்கு விளம்பரம் கொடுத்தது போல் ஆகிடும் என்று பேசமால் கோபத்தை அடக்கிக் கொண்டு இருந்தாராம்.

திட்டம் பழிக்கவில்லை என்பதால் புதுப்புது பழிகளை நாட்டாமைக்காரர் மேல் சொல்லிக் கொண்டே வந்தானாம். அதன் பிறகு இவனுக்கு இதே வேலையாகிப் போச்சு என்று யாருமே கண்டு கொள்ளவில்லையாம், புகழ்விரும்பி தன்னோட செயலை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறான், நண்பர்களிடம் மட்டும் சொன்னானாம் நாட்டாமைக்கு கண்டிப்பாக ஒரு நாள் கோபம் வரும் அப்போ என்னை கட்டி வச்சி உறிப்பார், அப்போ நான் போடும் சத்தம் ஊர் முழுக்கக் கேட்கும், நான் பேமஸ் ஆகிடுவேன் என்று சொன்னானாம். நாட்டமை மீது மேலும் மேலும் கடுமையான பழிகளை சொல்லிக் கொண்டே வருகிறானாம்.

அது முடிந்தது போல் தெரியல.

*****

- முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே, வடிவேலு வீட்டை நான் தாக்கியதாக அவதூறு கிளப்பியுள்ளனர். வடிவேலு மட்டுமல்ல, கருணாநிதியே என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அதை சந்திக்க நான் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்

இந்த செய்திக்கும் மேற்கண்ட முடியாத கதைக்கும் தொடர்பு இல்லை.

நீர்த்துப் போன பெரியார் கொள்கைகளில் ஒன்று - திருமணம் !

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. -பெரியார்

'நச்' என்று சொல்லி இருந்தாலும், சமூகம் என்கிற அமைப்பின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறவர்களுக்கு பெரியாரின் இந்த கருத்து ஏற்புடையதாக இருக்காது. மாறாக திருமணம் செய்து கொள்ளாமல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதைச் சரி என்கிறாரோ என்ற கற்பனையெல்லாம் வளர்த்துக் கொள்வார்கள், மேலும் குழந்தை குட்டிப் பெற வேண்டாம் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம், இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் உலகம் உய்விக்குமா ? என்று கவலைப்படுவார்கள், என்னமோ பெரியார் சொல்வதினால் உலகமே ஒரு நாளில் மாறிவிடப் போவது போல் நினைக்கும் இவர்களின் அச்சம் நகைப்புக் கிடமானது தான்.

*****

பெண்களை இந்திய சமூகம் குறிப்பாக நடுத்தரவர்கம் ஒரு அடிமை போன்று தான் நடத்தி வந்தது, 50 ஆண்டுகளுக்கு முன்பு இரு / பல பெண்களை மணந்து கொள்ளும் பழக்கம் பரவாலாக இருந்தது, பெண்களை உடல் உறவு இச்சைக்காகவும், வாரிசுக்களை உருவாக்கும் எந்திரமாகவே வைத்திருந்தார்கள், எல்லோரையுமா ? எல்லோரையும் அல்ல, விழுக்காட்டு அளவில் வதைபடும் பெண்கள் எண்ணிக்கை மிகுதி. மற்ற பெண்களுக்குக் கிடைத்த சுதந்திரம் கூட அவளின் கணவரின் தாரள மனசுதான் காரணம், சமூக அமைப்பு அல்ல. பெண்களுக்கு இயல்பான சுதந்திரம் இருக்கவில்லை, வீட்டோடு இருக்கும் வேலைக்காரியாக நடத்தப்படுவதும் இல்லாமல் கூப்பிடும் போதெல்லாம் அவளது சுய விருப்பு வெறுப்பு இன்றி அவனை மகிழ்விக்க வேண்டும், அன்றைக்கு குடும்பக் கட்டுப்பாடு முறை இல்லாததால் அவளுக்கு மாதவிலக்கு நிற்கும் வரை குழந்தைகளைப் பெற்றுப் போட்டு ஆகவேண்டும் என்பது அவளது தலையெழுத்தாகி இருந்தது.


60 ஆண்டுகளுக்கு முன், என் அம்மா படிக்க விரும்பிய போது "கட்டிக் கொடுத்தால் சட்டிப்பானை கழுவ போற ஒனக்கு, படிப்பு எதுக்கு, சமையலை மட்டும் கற்றுக் கொள் போதும்" தாத்தாவின் கண்டிப்புடன் மூன்றாம் வகுப்போடு நிறுத்தப்பட்டு இருக்கிறார். பெருவாரியான ஆண்களின் மன நிலை பெண்கள் ஆண்களுக்கு பணிவிடை செய்து, அவன் விருப்பங்களை நிறைவேற்றி, அவன் வாரிசுகளைப் பெற்றுத் தந்து, இடையில் இறந்துவிட்டான் என்றால் வெள்ளை சேலை அணிந்து அவனை நினைத்து உருகிக் கொண்டே, பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும். பெண்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே நினைத்துப் பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தது சமூகம். இதனை கண்டு மனம் புழுங்கி, மாற்ற வேண்டும் என்பதற்காகவே பெரியார் திருமணத்தினால் பெண்கள் எப்படியெல்லாம் அடிமையாகிறார்கள் என்பதை சற்று கடுமையாகவே சொன்னார்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளிலும் கூட அதே நிலை தான் இருந்தது, ஆண்களைப் பொருத்த அளவில் பெண்கள் பெண் குழந்தைகள் மட்டுமின்றி 'ஆண் குழந்தைகளையும்' பெறுபவர்கள். வாரிசுகளை உருவாக்கிக் கொள்வதற்காக மட்டுமே பெண்களுடன் உறவு கொள்வார்களாம் ஆண்கள், மற்றபடி இச்சைகளை ஆண்கள் ஆண்களிடமே தீர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள், கிரேக்க மேதைகள் அரிஸ்டாட்டில், பிளாட்டோ மற்றும் மாவீரன் அலெக்சாண்டர் ஆகியோர் ஓரின புணர்ச்சி யாளர்களாகவே இருந்ததற்கு அன்றைய ஐரோப்பாவில் பெண்களின் நிலை மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டு இருந்ததும் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஐரோப்பிய நாடுகள் பெண்ணடிமைத் தனத்திலிருந்து என்றோ மீண்டு இருக்கிறது.

இங்கே இந்தியாவில் பெண்களுக்கு புனிதம் சேர்பதாக அவளை லட்சுமி, சரஸ்வதி, பூமாதேவி, சக்தி, கற்புக்கரசி என்றெல்லாம் உயர்வான பெயரில் அழைப்பதாகவும், தாய்மையைப் போற்றுகிறோம் என்றெல்லாம் மிகவும் உயர்வாகக் கூறிக் கொண்டு வந்திருந்தாலும், இந்திய இளம் விதவைத் தாய்களின் நிலை உலகில் எங்கும் நடக்காத கொடுமைதான் ( அதற்கு முந்தைய காலங்களில் இந்த நிலையைக் கூட அவளுக்குக் கொடுக்காமல் கணவனின் பிணத்தோடு சேர்த்து எரித்தார்கள்.), பெண்களை இப்படியெல்லாம் வதைத்து வந்த சமூகத்தைப் திருத்துவதற்கு பெரியார் கூறிய அதிரடி கருத்துகள் எவ்வளவு பெரிய அடியைக் கொடுத்திருக்கிறது.

பெரியார் திருமணம் வேண்டாம் என்றாரே, இப்பொழுது அவரது தொண்டர்கள் கூட அவரது வேண்டுகோளை மதித்தார்களா ? தற்பொழுது பெண்கள் எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள், முன்பைப் போல் மாதவிலக்கு நிற்கும் வரை யாரும் குழந்தை பெறுவது கிடையாது, ஒன்றோ அல்லது இரண்டோ அத்துடன் நிறுத்திக் கொள்கிறார்கள், அடாவடி ஆண்களை எதிர்த்து குடும்ப நல நீதிமன்றங்களை நாடி அவனது செயலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுதலையாகி அவர்களுக்கென்ற வாழ்கையை வாழத் தொடங்குகிறார்கள், இரண்டு திருமணமெல்லாம் தற்போதைய ஆண்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி போய்விட்டது. முதல் மனைவின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு திருமணம் ஆன ஆணும் தன்விருபங்களுக்கு ஏற்ப பல பெண்களையெல்லாம் மணந்து கொள்ள முடியாது. கணவன் அன்னிய பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்றாலே அவனிடமிருந்து மணவிலக்கு பெற்றுக் கொண்டு விடுபடவும் பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

தற்பொழுதெல்லாம் தப்பு செய்யும் ஆண்கள் அந்த கால ஆண்களைப் போல் வெளிப்படையா சின்னவீடு என்பது போல் ஏற்பாடு செய்து கொள்ள முடியாது. மொத்தத்தில் ஒரு திருமணம் ஆன ஆணின் பணமோ, புகழோ, பாரம்பரியமோ அவன் மனைவியை ஆட்டுவிக்கும், அடிமை படுத்தும் சாதனமாக ஆகிவிட முடியாது. தற்பொழுது தான் ஆண்கள் பெண்களும் சமுகத்தில், தனது குடும்பத்தில் சமமானவள் என்று உணர ஆரம்பித்திருக்கிறார்.

கணவன் - மனைவிக்குள்ளே இந்த அளவுக்கு புரிந்துணர்வுகள் ஏற்பட்டுவிட்டதால், பெரியார் சொன்ன திருமணம் குறித்த (மேற்கண்ட) அன்றைய கருத்துக்கள், இன்றைக்கு தேவையற்றதாகிவிட்டது. தற்பொழுது பெண்களைப் பொருத்த அளவில் திருமணம் அவளை அடிமை ஆக்குவதில்லை, பெண்களிடம் விழிப்புணர்வைக் கூட்டி, ஆண்கள் தங்களைத் திருத்திக் கொண்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் அதிரடி கருத்துக்களும் ஓரளவு காரணமாக இருந்து, எந்த ஒரு சமுக சீர்திருத்தவாதியாக இருந்தாலும் அவரது சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சாகாவரம் பெற்றவை அல்ல, அவை தேவை எனும் போது ஏற்படும், அதன் தேவை முடிந்ததும், அவைகளின் வலியுறுத்தல்கள் கூட தேவை இல்லாமல் போய்விடும். மற்ற மாநிலங்களிலும் இந்த மாற்றம் இருக்கிறது என்றாலும், தமிழகத்தில் இந்த மாற்றம் விரைவாகவே நடைபெற்றது.

21 செப்டம்பர், 2008

வரலாறு காணாத சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு !

சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சந்திப்பு என்று அறிவித்தபடி, அந்த சந்திப்பைப் பற்றிய அறிப்பாளராகவும், பதிவர்களில் முதல் ஆளாகவும், ஒருங்கிணைப்பாளராகவும், ஜோசப் பால்ராஜ் முதல் ஆளாக 2:45 மணிக்கே சென்றுவிட்டார், அதன் பிறகு இளம் சிங்கம் ஜெகதீசன், இளம் புயல் விஜய் ஆனந்த் ஆகியோர் 3 மணிக்கு கூடிவிட்டனர். வழக்கமாக சந்திப்பு என்றால் 2 மணி நேரம் கழித்துக் கூட வருவார்கள், நான் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பஜ்ஜி, வடை(போல் சுவை) செய்யும் வேலையில் சிக்கிவிட்டேன், ஒருவழியாக செய்து முடித்துவிட்டு கிளம்பினால் வரிசையாக தொலைபேசி அழைப்புகள், 'இங்கே' வந்து கொண்டு இருக்கிறேன் என்று வர்ணனை செய்து கொண்டே சந்திப்பு நடக்கப் போகும் இடத்தின் இரயில் நிலையத்தை அடையும் போது சரியாக மாலை 4 மணி ஆகி இருந்தது. போனதுமே உண்மையில்யே பெரிய அதிர்ச்சி மொத்தம் 15 பதிவர்கள் இரயில் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார்கள், தாமதமாக சென்றதால் வெட்கமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்துவிட்டு சந்திக்கும் இடத்தை நோக்கி நடந்தோம். 4 - 8 பேர்தான் வருவார்கள், மீதமாகிற பஜ்ஜி தான் இரவு உணவு என்று நினைத்தேன்.


எல்லோரும் உடனடியாக சந்திப்பு நடக்க குறித்த இடத்தை, ஜோ வழிகாட்ட அவரது பின்னால் தொடர்ந்தோம்.
ஜோசப் பால்ராஜ் (1) புகைப்படக் கருவியுடன் காட்சி அளித்தார், ஜோ (2), சிங்.ஜெயகுமார் (3), பதிவராகப் போகும் அவரது நண்பர் தெட்சினா மூர்த்தி(4), ஜெகதீசன்(5), பாஸ்கர் (6) (வலைப்பதிவு வாசிப்பாளர்) , அகரம்.அமுதன்(7), முகவை மைந்தன் இராம்(8), சிங்கை நாதன் செந்தில் (9), அழகர்சாமி(10), ஜோதி.பாரதி(11), விஜய்.ஆனந்த்(12), டொன்லி (தயாளன்) (13), கோவி.கண்ணன்(14),ரவிச்சந்திரன்(15)
அனுமதி இல்லாமல் செல்லும் ஒரு சிறு ஊர்வலம் போல அணிவகுத்து செல்ல, அந்தப் பகுதி மக்கள் வியப்போடு பார்த்தார்கள்.

சுமார் மாலை 4.10 மணி அளவில் அந்த இடத்தை அடைந்ததும் பெரும் வியப்பு, அவ்வளவு அமைதியான, இயற்கைச் சூழல் உள்ள இடத்தில் இதுவரை சந்திப்பு நடந்தது இல்லை. சிறிய ஏரியுடன் (குவாரி பள்ளம்) இணைந்த சிறிய மலை (உடைத்தது போதும் என்று அப்படியே இயற்கையாக விட்டுவிட்டார்கள், அந்த சூழலில், ஏரிக்கரையில் சற்று சரிவான பகுதியில் அமர்ந்தோம். ஒவ்வொருவராக அறிமுகத்துடன் பதிவர் சந்திப்பு தொடங்கியது,

'அ' வரிசையில் என்ற கணக்கில் அகரம்.அமுதா பேசினார், பெயர்காரணம், அவரது எழுத்துப் பணியின் நோக்கம் குறித்துச் சொன்னார், ஜோதிபாரதி - அத்திவெட்டி அலசலில் எழுதிவருகிறார், அண்மையில் தமிழ் பிராவகம் என்ற இணைய இதலின் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களைப் பற்றிய கட்டுரைக்கு முதல் பரிசுபெற்றதையும், கவிதைகள் மீதுள்ள ஈடுபாட்டை பகிர்ந்தார். அடுத்து சிங்.ஜெயக்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி எழுதினாராம், தற்பொழுது நேரமின்மையால் வாசிப்புடன் வலையுலகில் எப்போது தொடர்பில் இருக்க்கிறார். அவரது நண்பர் தெட்சனாமூர்த்தி பதிவுகளை வாசித்து வருகிறார், 'மூர்த்தி' என்ற பெயரில் பதிவு ஆரம்பிக்க உள்ளேன் என்றார், பல பதிவர்கள் பொருளோடு சிரித்துக் கொண்டு என்னைப் பார்த்தார்கள் :). அடுத்து தம்பி ஜெகதீசனின் ஆமத்தூர் பற்றிய பகிர்தல், அதன் பிறகு அழகர்சாமி அவரைப் பற்றிய அறிமுகத்துடன் வலைப்பதிவில் வாசிப்பு அனுபவம் பற்றி பகிர்ந்தார். வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் பாஸ்கர், இராம், ஆகியவர்கள் சற்று பெரிய உரைகளை ஆற்றினார்கள், டொன்லி தன்னைப் பற்றிய அறிமுகத்துடன், தாம் ஒரு ஈழத்தமிழர், சிங்கையில் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்றும் குறிப்பிட்டார். முதன் முதலாக ஒரு ஈழத்தமிழ் பதிவரை சந்தித்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி அடுத்து ரவிச்சந்திரன் தனது மரத்தடி எழுத்து (பொன்னி வளவன் ) அனுவங்களையும், கிராமங்களுக்கு கல்வி உதவி செய்யும் அமைப்பை (AIMS India) ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்துவருவதைக் குறிபிட்டார், கேட்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. பிறகு நான், ஜோ, பால்ராஜ் மற்றும் சிங்கைநாதன் பற்றிய அறிமுகங்கள் முடிந்தது.

இடையில் சிங்.ஜெயகுமார், தட்சினாமூர்த்தி மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர்கள் சிற்றூண்டி உணவுகளை அனைவருக்கும் வழங்கும் பொறுப்பை அவர்களாக ஏற்றுக் கொண்டு, பேப்பர் தட்டுகளில் பண்டங்களை வழங்கி, அனைவரின் அன்பையும் பெற்றனர். பஜ்ஜி, வடை, இனிப்பு பூரி, சீனி உருண்டை, ஜோதிபாரதி கொண்டு வந்திருந்த கேசரி, மற்றும் கோக், மிராண்டா, செவன் அப் என பானங்களுடன் தேவையானவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது,

அறிமுகம் முடிந்ததும் மிகுந்து பேசப்பட்டவை தமிழ் மேம்பாடு குறித்தான விவாதங்கள் தான், அதுபற்றி பதிவர் இராம் எழுதுவார், இதில் விடுபட்ட தகவல்களை ஜோசப்பால்ராஜ் எழுதுவார்.

பிள்ளையாரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். எப்படி ? பதிவர் சந்திப்பு நடந்த ஏரிக்கரையில் பிள்ளையார் சதுர்த்திக்கு பிறகு சிறிய பிள்ளையார் சிலையை கொண்டு வந்து போட்டு இருக்கிறார்கள், தண்ணீர் தெளிவாக இருந்ததால் பிள்ளையார் கிடப்பது தெரிந்தது. தண்ணீரில் இருந்து எடுத்துப் பார்த்தோம், வண்ணம் போய் இருந்தது.

சந்திப்பு மாலை 7 மணிக்கு முடிவுற்றது, அதன் பிறகு தேனீர் கடையில் தேனிர் வாங்கிக் கொண்டு சுமார் 8 பதிவர்களுடன் அருகில் இருந்த விளையாட்டு மைதனாத்தில் தொடந்தது, அதில் ஜோ, நான் மற்றும் விஜய் ஆனந்த் மதங்களின் உள்விவகாரங்கள் பற்றி முவருக்குள் பேசினோம். அங்கிருந்து சுமார் இரவு 9 மணிக்கு 5 பேராக டாக்சியில் குட்டி இந்தியாவை அடைந்து இரவு 10 மணி வரை பேசிக் கொண்டு இருந்து விடைபெற்றோம்.

மேலும் பதிவர்களின் பெயருடன் கூடிய படங்கள்


இந்த வரலாறு காணாத சிங்கைப் பதிவர் சந்திப்பை அருமையாக ஏற்பாடு செய்து வழி நடத்திய பதிவர் ஜோசப் பால்ராஜுக்கு கலந்து கொண்ட பதிவர்கள் சார்பில் நன்றி.

தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?

'இந்து' என்ற ஒற்றைச் சொல்லும் அதன் மீதான கட்டமைக்கப்பட்ட பொருளும் போலியான ஒன்று, பெரும்பாண்மை என்ற சொல்லில் மதவெறியைத் தூண்டுவதைத் தவிர்த்து அதில் இணைய வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான சமத்துவம் எப்போதும் மறுக்கப்பட்டு வருகிறது. வெள்ளைக்காரர்களால் யார் யாரெல்லாம் முஸ்லிமாகவும், கிறித்துவர்களாகவும் இல்லையே அவர்கெளுக்கெல்லாம் இந்துக்கள் என்று அடையாளம் அவர்கள் விருப்பமில்லாமலே கொடுக்கப்பட்டது.

தலித்துகள் இந்துக்கள் இல்லையா ?

களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு இம்மண்ணில் வேறூன்றி இருந்த பெளத்தமும் சமணமும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது, ஒழிக்கப்பட்டது என்றால் அதைப் பின்பற்றியவர்களை கொலை செய்துவிட்டார்காளா ?
பிக்குகளை மட்டும் தான் கழுவில் ஏற்றினார்கள், அதில் பெரும்பங்காற்றியது சைவம், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் போன்ற பக்திமான்கள். பெளத்தர்கள், சமணர்கள் தமிழுக்கு எதிரி என்பதாக பரப்பிவிடப்பட்டு அவர்களின் மதத்தை முற்றிலும் அழித்தார்கள். அதனுடன் அவர்களின் கோபம் தீரவில்லை, அதைப் பின்பற்றியவர்களை யெல்லாம் அடிமைகளாக்கினார்கள், அவர்களை ஊருக்கு வெளியே தங்கும்படி துறத்தினார்கள். அவ்வாறு துறத்தப்பட்டவர்கள் தான் பறையர்கள். தாங்கள் துறத்தப்பட்ட வெறுப்பில் அந்த காலத்தில் ஒரு பார்பனர் சேரிக்குள் நுழைந்தால் பறையடித்து எச்சரிக்கை செய்வது வழக்கமாம், கூட்டமாக சேர்ந்து பார்பனரை துறத்துவார்களாம். சைவர்களால் பவுத்தர், சமணர் என்ற சொற்களே தடை செய்யப்பட்டதால், பறையடித்து எச்சரிக்கை செய்பவன், பறைபவன், பறையன் என்று ஊருக்குள் / நாட்டுக்குள் குடியிருக்கும் பார்பனர்கள் அவர்களைப் பற்றி குறிப்பிடுவார்களாம். அப்படி கிடைத்த பெயர் தான் அடிமையாக்கப்பட்ட முன்னாள் பவுத்தர்களுக்கான காரண பெயர் 'பறையன்' - நூல் ஆதாரம் 'நான் பூர்வ பவுத்தன்' அயோத்திதாச பண்டிதர். ஆதாரம் தேவைபடுபவர் பின்னூட்டத்தில் மின் அஞ்சலை தெரியப்படுத்துங்கள் அனுப்பி வைக்கிறேன்.

இவ்வாறாக பற்பல சேரிகளுக்கு துறத்தப்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பே அவர்களுக்கு கிடைக்காதாதால் திரண்டு போராடும் அளவுக்கு அவர்களால் ஒன்று சேர இயலவில்லை, ஆதிக்க சக்திகளான சைவ சமய அரசர்களுக்கு எதிராக போராடும் ஆற்றலுமே அவர்களிடம் இல்லை. அதுவரை தொழில் அடிப்படையிலான சாதிகள், மனு அடிப்படை சாதிகளாக மாறிய காலம் அது, எனவே முன்னால் பவுத்தர்களெல்லாம் சூத்திர பிரிவுக்குள்ளும், 5 ஆம் பிரிவான சண்டாள பிரிவுக்குள்ளும் அவர்களை வைத்துவிட்டனர். இதுவே வரலாற்று உண்மை.

வெள்ளைக்கார ஆட்சிக்கு பிறகு இவர்களை 'இந்து பறையர்கள், இந்து பள்ளர்கள் (பல்லாக்கு தூக்கும் அடிமையாக இருந்தால் இந்த பெயர் வந்திருக்க வேண்டும்) என்று அழைக்கப்பட்டனர். இவர்களாக விரும்பி இந்து மதத்தை ஏற்கவில்லை. இவர்களின் ஒப்புதல் இல்லாமல் சேர்க்கப்பட்டனர். நான்காம் சாதியாக தாழ்தப்பட்டவராக இருப்பது அவர்களின் தலையெழுத்து அல்ல, அவர்களின் தலையில் ஆதிக்க சக்திகள் போட்ட சூடு. தாழ்தப்பட்டவர்கள் முன்னேற வேண்டும் என்ற நல்லெண்னம் அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகளைக் கொடுத்தாலும், அதுவும் ஒப்பந்த (கண்டிசன்) அடிப்படையில் தான் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது நீ நாலாம் சதிக்காரணாவே இந்து பறையனாக, பள்ளனாக இருந்தால் மட்டுமே இவற்றை நீ பெற முடியும் என்பதே அந்த ஒப்பந்தம்.

இப்படியெல்லாம் 'இந்து மதத்தின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி என்ன சாதனையைச் செய்யப் போகிறோம் ?' இந்து மதம் என்பதைப் பிரித்தால் கிடைக்கும் பல்வேறு சமயங்கள், சைவம், சமணம், பவுத்தம், சனாதனம் (பார்பன மதம்), ஆதி சங்கரரின் 6 மதங்கள், வடகலை வைணவம், தென்கலை வைணவம் , பார்பன சைவம், வெள்ளாளர் சைவம், நாட்டார் சமயம் (மதுரைவீரன், முனியை தெய்வமாக கொண்டவர்கள்) இப்படி சென்று கொண்டே இருக்கும், இன்னும் இந்த பிரிவுக்குள் இருப்பவர்கள் தங்கள் தெய்வமே உயர்ந்தது என்று நினைக்கிறார்கள், ஒரு வைணவர் சைவ திருநீறை அணியமாட்டார், சைவர் நாமம் போட்டுக் கொள்ளமாட்டார். ஆனால் பொதுப்பெயராக 'இந்து' என்பதில் அடங்கி இருக்கிறார்கள் அவ்வளவே, பிரித்துப் பார்த்தால் இந்திய சமயங்கள் ஒவ்வொன்றும் சிறுபான்மை தொகையைக் கொண்டதே, ஆதிக்க சக்திகள் தங்களின் சாதகத்துக்காக 'இந்து' வாக்கிக் கொண்டனர் . அனைத்தும் ஒன்றா ? இன்றைய சூழலில் கூட அவை ஒன்று இல்லை, ஆகம கோவில்களில் பார்பனர்தான் பூசை செய்ய முடியும், ஆடுவெட்டும் கோவிலில் காலைக் கூட வைக்க மாட்டார்கள்

இப்படி இதில் இணைத்திருப்பதால் தானே அவன் தாழ்த்தப்பட்டவன் என்ற நிலையிலேயே தொடர்கிறான், இந்த அவலம் தேவையா ? இதற்கு கிடிக்கு பிடியாக சலுகையில் மறைமுக ஒப்பந்தம் வைத்திருக்கிறார்கள். இந்து மதம் என்ற பெயரில் ஒருங்கிணைக்க பட்டிருக்காவிட்டால் அவன் தாழ்தப்பட்ட பவுத்தனாகவே தொடர்ந்திருப்பான், மதம் மாறும் தேவையே அவனுக்கு வந்திருக்காது, சலுகைகளும் அவன் முன்னேறும் வரை கிடைத்துக் கொண்டிருந்திருக்கும்.

தலித்துகள் இந்துக்கள் கிடையாது, எண்ணிக்கை பெரும்பாண்மைக்காக இந்துக்கள் ஆக்கப்பட்டவர்கள். ஆனது ஆயிற்று, இனி மாற்றுவது கடினம் தான், இந்து மதத்தின் மக்கள் தொகையைக் கட்டிக் காக்க 'காலில் இருந்து பிறந்தவன்' என்று இவர்களால் தூற்றப்படும் தலித்துகள் காலில் மதாச்சாரியர்கள் விழலாம். அதன் மூலம் நூற்றாண்டு காலமாக தலித்துகளுக்கு செய்த பாவங்களை, அநீதிகளைப் போக்கிக் கொள்ளலாம், அப்படி விழுந்தால், செய்தால் மதம் மாறிய தலித்துகள் கூட 'தாய்' மதம் திரும்புவார்கள், பிறகு ஏன் ஒரு தலித் மதம் மாறப் போகிறான் ? அதைச் செய்யாமல், இட ஒதுக்கீட்டை கேடயமாகப் பயன்படுத்துவதும், இந்து மதத்தில் இருந்து பிற மதத்திற்கு அவர்களுக்கு சலுக்கை பறிப்பு என, இட ஒதுக்கீட்டு சலுகையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துவதும் அரசாங்கத்தின் கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.

சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?

தலித் கிறித்துவர்களுக்கான சிறப்பு சலுகைகள் மறுப்பும் அதன் மீட்பும் பற்றி,

பொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் !

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு – சில எண்ணப் பகிர்தல்கள் (கோவி.கண்ணனுடன்) - பதிவர் ரத்னேஷ்

மதம் மாறுதலும், தீராத பழைய கணக்கும்.... - டிபிசிடி

தலித் கிறித்துவர்களுக்கு சலுகை கொடுத்தால் இந்து மதம் அழிந்துவிடுமா ? ரத்னேஷ் அண்ணாவிற்கு பதில்.

19 செப்டம்பர், 2008

தலித் கிறித்துவர்களுக்கு சலுகை கொடுத்தால் இந்து மதம் அழிந்துவிடுமா ? ரத்னேஷ் அண்ணாவிற்கு பதில்.

பல நூற்றாண்டுகளாகவும் பல்வேறு மதத்தினரின் படையெடுப்பு அத்தனையும் தாக்குப் பிடித்துக் கொண்டு இருக்கும் இந்திய சமய நம்பிக்கை (இந்து மதம் என்ற பொதுப் பெயரில் வழங்கப்படும் அனைத்தும்) தலித் கிறித்துவர்களுக்கு கொடுக்கப் படும் இட ஒதுக்கீட்டினால் அழிந்துவிடும் என்று நினைத்தால் உங்களுக்கு So Called ஹிந்து மதத்தின் தத்துவ, ஞான, ஆன்மிகம் இவற்றில் எதிலுமே முற்றிலும் அல்லது சிறுதளவேனும் நம்பிக்கை இல்லை என்றே நினைக்க முடிகிறது. பெரியாரால் வீழ்ந்தது பார்பனியமும், மூடநம்பிக்கையுமேயன்றி கடவுள் நம்பிக்கையல்ல. ஏனெனில் பெரியாரையும் கடவுளாகத்தான் நினைப்பர் நம் மக்கள்.

தலித் கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் இந்து மக்கள் தொகையோ, இந்து மதமோ பாதிக்கப்படும் என்பது அறியாமைதான். நாடார்கள், வன்னியர்கள், முதலியார்கள் இவர்கள் இந்துவாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும் பிற்பட்ட பிரிவினர்தான். கிறித்துவ மதத்திற்கு மாறுவதால் அரசாங்க சலுகைகள் அளவில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பிறகு ஏன் இவர்கள் அனைவருமே கிறித்துவர்கள் ஆகவில்லை ? உயர்வு தாழ்வைக் காரணம் காட்டித்தான் முன்பு இவர்களை மதம் மாற்றத்திற்கு தூண்டினார்கள், ஆனால் அந்த நிலை அவர்களுக்கு இன்று இல்லை. இவர்கள் நிலையெல்லாம் பொருளாதார அளவில் உயர்ந்துவிட்டதால் எந்த மதத்தில் இருந்தாலும் வழிபாடு தவிர பெரிய மாற்றம் இல்லை, வேறு வேறு மதங்களாக இருந்தாலும் சாதி அடிப்படையில் இவர்களுக்குள் பெண் கொடுத்து / எடுப்பதும் கூட நிற்கவில்லை. பின்பு ஏன் தலித்துக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தால் அனைவருமே கிறித்துவர்கள் ஆகிவிடுவார்கள் என்கிற தேவையற்ற பயம் ? அங்கும் சரியாக நடத்தப் படவில்லை என்பது வெளிச்சமாகிவிட்டது. மற்றவர்களை விட பாதிக்கப்படும் தலித் பெருமக்களுக்கு அது நன்றாகவே தெரியும். அண்மையில் கூட வன்னியர் - தலித் கிறித்துவர்கள் மோதல், சர்ச் பூட்டப்பட்டது பற்றிய தகவல்களை பதிவில் எழுதினேன்.

'நாம் அங்கும் இப்படியே தான் நடத்தப்படுவோம்' என்று நன்கு தெரிந்தே, இந்து தலித்துகள் சலுகை பாதிப்பு இல்லை என்பதற்காக கிறித்துவர்களாக மாறுவார்களா ? தெரிந்த பேய் ! தெரியாத பேய் !!!பழமொழியை நினைத்துப் பாருங்கள். எது பெட்டர் ?

இந்துமதத்தைக் காக்க இட ஒதுக்கீட்டை கேடயமாக பயன்படுத்துவது தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு செய்யும் துரோகம், 1000 ஆண்டுகளாக தொடர்ந்த அவலம், தலித் கிறித்துவர்களுக்கு தொடர்கிறது. தலித் இந்துக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்பது கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் பழைய வடிவமாகவே தொடர்ந்து இருக்கிறது.

இந்துமதத்தைக் காக்க வேண்டுமென்றால் அதை முதலில் இந்துத்துவ வாதிகளிடமிருந்து விலக்கினாலே காப்பாதாகவே பொருள், தலித் ஆலய நுழைவு போராட்டத்தை ஆதரிக்கும் இந்து அமைப்பினர் எத்தனை பேர் ? ஒருவரும் இல்லை, அதை எதிர்க்கவே இவர்களும் சாதிவெறியர்களின் வாளாகவே இருக்கிறார்கள். தலித்துகளுக்கு எந்த உரிமையும் கொடுக்காமல், மெஜாரிட்டி குறையாமல் வைத்துக் கொள்வதற்காக மட்டுமே கவலைப் படுகிறார்கள், அதுவும் அவர்கள் மீது இருக்கும் கரிசனம் கிடையாது, அவர்கள் சிறுபான்மையினர் என்று தூற்றும் கிறித்துவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பலம் திரட்டிக் காட்டி, நாங்களே பெரும்பான்மையினர் என்று மார்த்தட்டவும், இந்து மதம் பெயரில் நடத்தப்படும் கலவரங்களுக்கு ஆதரவு வேண்டும் என்பதற்குத்தான். தலித் ஆழ்வார் சிலையே பெருமாள் பக்கத்தில் வைத்தால் தீட்டாகிவிடும், ஆச்சாரம் கெட்டுவிடும் என்பவர்கள். இந்து தலித் பாதிக்கப்படுவான் என்பதெல்லாம் நீலிக் கண்ணீர் தான்.

தலித் கிறித்துவர்களுக்கு சலுகை வழங்கினால், அதனால் இந்து எண்ணிக்கை குறையும் என்பதெல்லாம் வெறும் கற்பனையே. கிறித்துவ மதவாதிகளுக்கு வேண்டுமானால் அது பலத்த அடியாக அமைய இருக்கும்.எனென்றால் முன்பெல்லாம் "நாங்கள் சமமாக நடத்துகிறோம் வாருங்கள்" என்று அழைத்துச் சென்றனர், வழிப்பாடு, அருள்தந்தை, இடுகாடு ஆகிய எதிலுமே கிறித்துவர்களிடம் சமத்துவம் எதுவுமே ஏற்படவில்லை(வெள்ளையர் கருப்பர் இனத்திலும் கூட உலக அளவில் இப்படித்தான்), பேதமே தொடர்கிறது என்பது கண்கூடு.

இனி தலித்துகளுக்கு உயர்வு, சமத்துவம் தருவதாகக் கூறமுடியாமல்,
"இயேசு இரட்சிக்கிறார் பாவிகளே வாருங்கள்" என்பதைத் தான் சொல்ல முடியும். அதற்கும் ஏன் கவலைப் பட வேண்டும். "பாவிகளைத் தானே அழைக்கிறார்கள்" என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

பிஜேபியின் தலித் கிறித்துவர்களுக்கு எதிரான இந்த முட்டுக்கட்டை, போராட்டம் எல்லாம் வழக்கமான மத எதிர்ப்புக்காகவும், இந்துமத வெறியாகச் செய்யப்படும் அரசியல் மட்டுமே யன்றி, இந்து தலித் குறித்தான உண்மையான அக்கரையோ, நல்ல நோக்கமோ அல்ல, மாறாக இந்து தலித்துகளுக்கு பாதிப்பு என்கிற கூப்பாட்டை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.

எனது கட்டுரைகளில் எந்த மதத்தையும் உயர்ந்தது என்ற வலியுறுத்தல் செய்வது இல்லை. சிலவற்றின் சிறப்புத் தன்மைகளை சுட்டி இருக்கிறேன், சிலவற்றின் பிற்போக்குத்த தனங்களை சுட்டி இருக்கிறேன். என்னைப் பொருத்து அனைத்து மதங்களும் ஒன்று தான், மதங்கள் தோன்றும் போது உலகைக் காக்கத் தோன்றின என்பது நம்பிக்கை, இப்பொழுது பரிணாமம் அடைந்து உலகை அழிக்கப்போகின்றன என்பது உறுதி.

"இந்து மதத்துக்கு மட்டும் ஏன் இந்தத் தண்டனை?" என்ற உங்கள் கேள்வி அபத்தம், உங்கள் கேள்வியை நிராகரிக்கிறேன். அது முற்றிலும் உங்கள் கற்பனை. இந்து மதம் மோசம் பிற மதங்கள் ஓகே, என்பது போல் ஒப்பீட்டு அளவில் எந்த மதமும் உலகில் உயர்ந்த மதம் என்று நான் சொன்னது இல்லை.

பின்குறிப்பு : இந்த இடுகை, எனது பொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் ! - பதிவின் கருத்துப் பகிற்விற்காக அண்ணன் ரத்னேஷ் எழுதிய தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு – சில எண்ணப் பகிர்தல்கள் (கோவி.கண்ணனுடன்) பதிவிற்கான எனது மாற்றுக் கருத்துக்கள்.


சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?

வடுவூர் குமார் அண்ணனுக்கு வாழ்த்துகள் !

இப்ப வருமோ, எப்ப வருமோ ... நீண்ட நாளாக எதிர்ப்பார்த்து காத்திருந்த துபாய் வேலை ஒப்பந்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நம்ம வடுவூர் குமார் அண்ணன் சிங்கையிலிருந்து துபாய்க்கு இன்று துபாய் புறப்படுகிறார்.

பதிவர் சந்திப்புகளில் தவறாது கலந்து கொள்பவர் என்பதால் அவரது பிரிவு சிங்கைப் பதிவர்களுக்கு சற்று வருத்தம் தான். எங்கள் வருத்தத்தைப் போக்க, கூகுளாண்டவர் இருக்கிறார், எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.

**********

9:32 AM வடுவூர்: Good Morning,Free?
me: துபாய் போறிங்களா ?
:)
என்றைக்கு ?
வடுவூர்: Yes,Want to inform that
Today eve
9:33 AM me: ஓ.......
வடுவூர்: 4.50 flight
me: அப்படியா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
வடுவூர்: this time can't come for meet up
me: சரியா ஊகம் பண்ணி இருக்கிறேன்....வாழ்த்துகள் வடுவூர்
வடுவூர்: o!
நன்றி
9:34 AM me: பரவாயில்லை, பதிவர் மீட்டிங் சும்மா நல்லிணக்கத்துக்கு தானே வேலை தான் முக்கியம்

***********

அண்ணன் வடுவூரார், புதிய சூழலில் எதிர்நோக்க உள்ள பணியை சிறப்பாக முடித்து பெயர் பெற்று உயர்வடைய வேண்டும் என்று சிங்கை (பதிவர் சந்திப்பு) பதிவர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

அவருக்கான பதிவர் சந்திப்பு சிற்றுண்டி பாகம் தனியாக எடுத்துவைக்கப்பட்ட பிறகு அடுத்த சுற்றில் தீர்க்கப்படும், எனவே நாளை மாலை 3 மணிக்கு புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் நடக்கும் சந்திப்புக்கு கொண்டுவரும் பண்டங்களின் அளவை குறைத்துவிட வேண்டாம் என்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


வடுவூர் அண்ணா தங்கள் இனிய பயணத்திற்கும், புதிய வேலைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !

அன்புடன்
கோவி.கண்ணன்

குசும்பனுக்கு : அமீரகம் பதிவர்கள் சார்பில் குமார் அண்ணனுக்கு சிறப்பான வரவேற்பு பதிவு ஒன்றை தட்டிவிடுங்கள்.

18 செப்டம்பர், 2008

பொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் !

//தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறி போனாலும் அவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சலுகை வழங்க வேண்டும் என்று ரங்கநாதன் மிஸ்ரா அறிக்கை தந்துள்ளது.

இதை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சட்ட மசோதாவாக கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

எனவே மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க கூடாது என்று டெல்லியில் 21ம் தேதி பாஜக தாழ்த்தப்பட்டோர் அணி சார்பில் பேரணி நடைபெறுகிறது.

மேலும் இந்து ஹரிஜன மக்கள் மத்தியில் விழிப்புணர்வு யாத்திரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.//


தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்துவர்களுக்கான இட பங்கீடு குறித்து முன்பே எழுதி இருந்தேன்.

மதம் மாறும் தாழ்த்தப்பட்டவர்களை பிற்பட்டவராக அறிவிக்கிறது இந்திய அரசியல் சட்டம். இது எந்த வகையில் ஞாயம் என்பது தெரியவில்லை.

ஒரு சாதியின் சமூக நிலையை வைத்தே இட ஒதுக்கீட்டிற்குள் அந்த சாதி குறிப்பிட்ட பிரிவுக்குள் வருகிறது.
மதமாற்றம் ஒருவரின் சமுக நிலையை அடுத்த நாளே மாற்றிவிடுகிறது என்பது வெறும் மத விளம்பரங்கள் தான், தலித்துகள் மதம் மாறிய பிறகும் தலித்துகளாகவே நடத்தப்படுவதுதான் கொடுமையே. அவர்கள் எதை நம்பி மதம் மாறினார்களோ அதன் பயனை அடைந்தவர்கள் என்பது விழுக்காட்டு அளவில் மிக மிகக் குறைவே. சாதிவெறி என்பது கிறித்துவ மதத்தில் இருக்கிறது என்பதை கிறித்துவர்களே ஒப்புக் கொண்ட விசயம் தான். நான் அறிந்த வகையில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படும் என்பதற்காகவே இந்து மத வழிபாடுகளில் இருந்து கிறித்துவ வழிபாட்டுக்கு மாறினாலும் இந்துவாகவே சர்டிபிகேட் அளவில் தொடர்பவர்கள் உள்ளனர். அவர்கள் இட பங்கீட்டு சலுகைகளையும் அனுபவத்தே வருகிறார்கள். இந்த யோசனை இல்லாத பல தலித் கிறித்துவர்கள் உரிமையை இழந்து 50 ஆண்டுகளாகப் போராடியே வருகிறார்கள். அவர்களுக்கும் கொடுப்போம் என்ற வாக்குறுதி தேர்தல் காலங்களோடு நிற்கிறது.

மதம் மாறினால் சமூக பொருளாதாரம் மாறும் என்று எந்த மதமாவது எழுத்தளவில் இந்திய அரசுக்கு ஆவணங்கள் வழங்கியுள்ளதா ?

எதன் அடிப்படையில் தலித் கிறித்துவர்கள் பிற்பட்டவர் பிரிவுக்கு தள்ளிவிடப் படுகின்றனர் ? தனக்கு பிடித்த மதத்துக்கு ஒருவர் மாறுவதற்கும் அவரது சமூக, பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு ?

மதம் மாறுவது சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது அதனால் தான் தலித் கிறித்துவர்களை பிற்பட்டோருக்கு மாற்றுகிறோம் என்று அரசாங்கம் சொல்ல முடிந்தால்... அனைத்து தலித் பெருமக்களையும் கிறித்துவ மதத்திற்கு மாறச் சொல்லி அரசாங்கமே சிபாரிசு செய்து, இட ஒதுக்கீட்டு தலைவலிகளை குறைத்துக் கொள்ளலாமே...ஏன் செய்வது இல்லை ?

இந்த கேள்விகளை வைத்து தலித் கிறித்துவர்கள், அல்லது அவர்கள் சார்பில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அரசாங்கத்தின் மவுனம் கலையும்.

தற்போதுள்ள நடைமுறை அதாவது, 'மதச்சார்பற்று நடந்து கொள்வோம்' என்று உறுதி எடுத்துக் கொண்ட அரசாங்கத்தின் செயல், இந்து தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் தான் இடப்பங்கீடு என்பது இந்து மதத்தின் மக்கள் தொகையைக் கட்டிக் காக்கும் கேடயமாகவே இருக்கிறது என்று யாரும் குற்றம் சாட்டினால் இந்திய அரசாங்கம் என்ன பதில் அளிக்கும் ?

பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நசுக்கப்பட்டுள்ள தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் எதிராக போராடும் உரிமை அதே போன்ற நிலையில் இருக்கும் இந்து தலித் அமைப்புகளுக்குக் கூட கிடையாது என்றே நினைக்கிறேன். வேண்டுமென்றால் இந்து தலித் அமைப்புகள், கிறித்துவ தலித் மக்களுக்கும் சேர்த்தே இட ஒதுக்கீட்டு அளவை கூடுதலாக்கச் சொல்லி கோரிக்கை வைத்து போராடுவது தான் சிறந்த வழி.

********

1. தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை - இல.கனேசன்

தகவலுக்கு நன்றி ! அப்படியென்றால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எப்போதும் கைவைக்காமல் முன்னேற்றம் அடையும் வரையில் அப்படியே தொடரலாம்.

2. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். - இல.கனேசன்

என்ன ஒரு கரிசனம் - சிலிர்க்கிறது ! இப்போதாவது தெரிகிறதா ? இந்து தாழ்த்தப்பட்டவராக தொடர சம்மதம் தெரிவித்தால் வெகுமதியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம், என்பதை இவ்வளவு கரிசனமாக, அழகாகச் சொல்ல முடியுமா ?

3. மதம் மாறிய தலித்துகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கூடாது என பாஜக கூறியுள்ளது.

அவர்களைத்தான் நாங்கள் தாழ்த்த முடியாதே பிறகு எப்படி தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லமுடியும் என்பதைத்தான் சொல்லமுடியாமல் சொல்கிறார்கள் போலும்.

சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?

17 செப்டம்பர், 2008

காரைக்கால் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !

'பேரைக் கேட்டாலே அதிருதுல்ல' என்கிற மாதிரி எங்க ஊர் குடிமகன்களை சொக்க வைக்கும் பெயர் தான் காரைக்கால் (பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த யூனியன் பகுதி). பாண்டிச்சேரியில் இருந்து கிழக்காக சுமார் 120 கி.மி தொலைவில் இருக்கும் கடற்கரை நகர். நாகைக்கும் காரைக்காலுக்கும் சுமார் 10 கிமி க்கும் குறைவு. நாகை - நாகூர் வெறும் நான்கு கிலோ மீட்டர் இடைவெளிதான். நாகைக்கு அடுத்து நாகூர் தாண்டியதுமே வெண்ணாறு என்ற கடலில் கலக்கும் ஆறு ஒன்று உண்டு, 100 ஆண்டுகளாக இருந்த ஆற்று பாலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடிரென்று உடைந்துவிழவே எனது உறவினரின் மகன் உட்பட பலர் 'ஜல' சமாதி ஆனார்கள். அதன் பிறகு மிதவைப் பாலம் போடப்பட்டு அமைச்சர்களுக்கு கொள்ளை லாபம், முடிந்த அளவுக்கு புதிய பாலத்தை கட்ட 2 ஆண்டுகள் இழுத்துக் கொண்டார்கள். அந்த பாலத்தைத் தாண்டியதுமே 'வாஞ்சூர்' என்கிற கிராமத்தின் நுழை வாயிலிலேயே காரைக்காலில் நுழைய அனுமதி வழங்கும் சுங்கச் சாவடி சோதனை இருக்கும், அதைத் தாண்டி தடுக்கி விழுந்தாலே எதாவது ஒயின் ஷாப்பில் தான் விழவேண்டும். அங்கு ஆரம்பித்து 100க் கணக்கான சரக்கு கடைகள் எல்லையின் அருகிலேயே இருக்கும்.

நன்றாக குடித்துவிட்டு நிதானம் இருந்தால் தள்ளாடி நடந்தே கூட நாகூர் பகுதிக்கு வந்துவிட முடியும். மேட்டூரில் தண்ணீரே இல்லை என்றாலும் நாகூர் விவாசயப் பெருமக்களின் 'தண்ணீர்' தேவையை வாஞ்சூர் தான் போக்குகிறது, வாஞ்சூரைத் தாண்டினால் அடுத்து 2 கிமி தொலைவில் திருமலைராயர் பட்டினம் என்னும் சிறுநகரம், சிவன் கோவில்கள் அங்கு உண்டு, பெரிய வளர்ச்சி பெறவில்லை என்றாலும் அன்றாடத் தேவைகளுக்கான கடைகள் அங்கு உண்டு, அதைத் தாண்டி 3 கிமி தொலைவில் தான் காரைக்கால் இருக்கிறது. காரைக்காலில் காரைக்கால் அம்மையாருக்காக ஆண்டு தோறும் மாம்பழத் திருவிழா நடக்கும், நான் பார்த்தது இல்லை. திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலும் காரைக்காலைச் சேர்ந்த யூனியன் பகுதிதான். சனீஸ்வரன் கோவிலின் தற்போதைய நிலை அந்த கோவிலின் குளத்தில் மிதக்கும் டன் கணக்கான அழுக்குத் துணிகள் தானாம் (தகவல் உபயம் : ஸ்வாமி ஓம்கார்), பழையதை விடுவது என்ற கணக்கில் பக்தர்கள் தங்கள் அணிந்திருந்த உள்ளாடைகள் வரை அனைத்தையும் சனீஸ்வரனுக்கு காணிக்கையாக்கி (சனிஸ்வரனுக்கே சனியன் பிடித்த கதை) சனிபகவானின் பார்வையில் இருந்து தப்புகிறார்களாம், 'இவ்வளவு அழுக்கா ?' பிடித்தால் நான் செத்தேன் என்று சனிஸ்வர பகவானை நினைக்க வைக்கும் திட்டம் போல.

தமிழகத்திற்கும் பாண்டிக்கும் இருக்கும் பொருள் சேவை வரி விகிதம், பாண்டியைச் சேர்ந்த காரைக்காலுக்கும் பொருந்தும் என்பதால் வாகனங்கள் மற்றும் பல பொருள்களை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக எங்கள் நாகைப்பகுதி மக்கள் காரைக்காலுக்குச் செல்வார்கள். காரைக்காலில் தெருக்களின் அமைப்பு, கழிவுநீர் வெளியேற்றமும் மிகச் சரியாக அமைக்கப்பட்டு இருக்கும், காரைக்கால் வழியாக சென்னை சென்றிருக்கிறேன், அங்கு திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன், சில உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள், காரைக்கால் ஒரு துறைமுகப் பகுதி என்பதைத் தவிர காரைக்கால் பற்றி முழுவிவரமும் தெரியாது.

காரைக்கால் பற்றி நன்கு அறிந்தவர் யார் ? ரத்னேஷ் அண்ணன் தான்.

இணைய தளம் : காரைக்கால்.நெட் (இனிமையான வீடியோ பாடல்கள் இருக்கிறது)

அப்பறம் ஏன் இந்த பதிவு ?

'கொத்தவால் சாவடி' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று போடுவது தான் இப்போதைக்கு நல்ல நடப்பில் (ட்ரெண்ட்) இருப்பதால் என் பங்குக்கு இது. பதிவர் ஜெகதீசன் அவர்கள் 'ஆமத்தூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பதிவைப் போட்டு தன்னுடைய பதிவர் கடமையை நிறைவேற்ற வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ரத்னேஷ் அண்ணா...! பெரியாரை விமர்சிக்கும் முன் ...

வழக்கமாக பார்பனிய ஏகாதிபத்யமே மாற்றுப்பார்வை என்கிற கருத்து நுழைத்தலில் கோணல் பார்வையில் எல்லாவற்றையும் எழுதி இருக்கும். நீங்கள் எழுதியுள்ள இந்த பதிவில் பெரியாரை விமார்சிக்கிறீர்களா ? வீரமணியை விமர்சிக்கிறீர்களா ? என்பதைச் சரியாகச் சொல்லுங்கள்.

பெரியாரை என்றால் அதில் பெரியாரை வடிவேலுடன், வடிவேலின் சினிமா காட்சியுடன் ஒப்பிட்டு இருப்பதே தவறு, இன்னிக்கு வடிவேலுவும் மேலே வந்திருக்கிறார் என்றால் ஆளின் தோற்றத்திற்கு, அவன் எந்த சாதியில் பிறந்திருக்கிறான் என்பதற்கு இல்லாமல் அவனுடைய திறமைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்கிற பெரியாரின் சிந்தாந்தம் பரவலாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டதால் தான்.

நீங்கள் சொல்லும் குற்றச் சாற்றை இன்னும் மாற்றிப் போட்டுக் கூடக் கேட்கலாம்

"பெண்ணியம் பேசும் பெரியார், தனது கொள்கைகளை தன் வீட்டுப் பெண்களிடம் வலியுறுத்தி பெண்களிடம் வீரத்தைக் காட்டி இருக்கலாமா ?" இப்படி கேட்டு இருந்தீர்களென்றால் சிரித்துவிட்டு போய்விடுவார்கள்.

ஆக, கோவில்களின் புனிதம் களங்கப்பட ஆரம்பித்தது இவர்களின் ஏற்பாடு தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா? அதற்கு முன்பேயே அப்படி இருந்தால் இவர் தனியே ஆட்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே. கோவிலுக்குப் போய்த் திரும்பிய போதெல்லாம் அவர்கள் நொந்திருப்பார்களே. இவர் ஏற்பாடு செய்யும் முன் அந்தக் கோவிலில் அப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழவில்லை என்று தானே அர்த்தம்? தங்கள் கொள்கையை வலியுறுத்துவதற்காக இவர்கள் எந்த நாடகமும் நடத்துவார்கள் என்பது தானே இதன் மூலம் சொல்லப்படும் செய்தி.

- இது மிதமிஞ்சிய கற்பனையே, இதற்கு நான் பதிலும் அளித்துவிட்டேன்

கோவி.கண்ணன் said...

//இவர் ஏற்பாடு செய்யும் முன் அந்தக் கோவிலில் அப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழவில்லை என்று தானே அர்த்தம்? //

இது கொஞ்சம் கற்பனையானது தான், பெரியார் குடும்பம் செல்வாக்கு மிக்கது, அவர்கள் வீட்டுப் பெண்களை கோவிலில் இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும், மற்ற பெண்களிடம் வைத்துக்கொள்ளும் வம்புகளை இவர்களிடம் செய்ய முயன்றிருக்க மாட்டார்கள்.

முதலில் நம்வீட்டில் உள்ளவர்களை சரி செய்துவிட்டு பிறகு மற்றவர்களுக்குச் சொல்லுவோம் என்று அவர் நினைத்து ஏன் செய்திருக்கக் கூடாது ?

September 17, 2008 11:47 AM

இதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்,

RATHNESH said...

கோவி.கண்ணன்,

//முதலில் நம்வீட்டில் உள்ளவர்களை சரி செய்துவிட்டு பிறகு மற்றவர்களுக்குச் சொல்லுவோம் என்று அவர் நினைத்து ஏன் செய்திருக்கக் கூடாது ?//

எண்ணம் சரியே. நான் கேட்பது, அதனை நிறைவேற்ற பொய் நாடகம்? அதுவும் புனிதமாகக் கருதப்படும் ஓர் இடத்தைக் களங்கம் செய்து?

நான் வீரமணி பொய்சொல்கிறார் என்றே சொல்லவில்லை. ஆனால் நீங்கள் கோவில் 'புனிதமாக கருதப்படும்' என்ற கருத்தைச் சொல்லி பெரியார் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.

கோவில்கள் எப்போது புனிதமாக இருந்தது ?

கோவில்களில் தேவதாசிகளின் ஆட்டமும், அவற்றைச் சார்ந்தவர்களின் அந்தபுரமாக இருந்த காலங்களில் கோவில்கள் புனிதமாக இருந்ததா ?

பள்ளன், பறையன் இன்னும் சண்டாளர்கள் நுழைந்துவிட்டால் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்துவைக்கப்பட்டு இருந்ததால் புனிதமாக இருந்ததா ?

தற்பொழுது தான் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டவுடன் அவர் சிந்திய இரத்தத்தால் புனிதம் அடைந்திருக்கிறதா ?

வழக்கமாக புனிதம் பேசிதான் பெண்கள் முதல் மனிதர்கள் வரை தாழ்த்துவது நடந்து ஏறியது, வீட்டில் உள்ளவர்களை வெளி ஆட்களை வைத்தே ... இங்கும் புனிதம் கெடுகிறேதே...? என்பதால் பெரியார் அடவடி செய்தார், அதுவும் புனிதமாக கருதப்படும் கோவிலை வைத்து செய்தார் என்பது தங்களின் கண்டுபிடிப்பா ?

இன்னும் ஒன்றே ஒன்று,

கோவில் உண்மையிலேயே புனிதமானதா ? அல்லது கோவில் புனிதமாக கருதப்படுகிறதா ?

கள்ளுக்கடை, சாராயக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இன்றைய தலைவர்களில் ஒருவர் கூட தங்கள் வீட்டு தென்னை மரங்களைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தங்கள் வீட்டு பெண்களை அனுப்பியதுமின்றி, தனது தோப்பில் இருந்த அத்தனை தென்னை மரங்களையும் வெட்டி சாய்தார்.

உங்கள் பதிவின் ஆதங்கத்தில் பெரியார் குறித்த ஆதங்கமும் இல்லை, வீரமணி குறித்த குற்றச் சாட்டும் இல்லை. உங்களின் தவறான புரிதலின் எழுத்துவடிவம் மட்டுமே இருக்கிறது.

எந்த சூழலில் பெரியார் தமிழை 'காட்டுமிராண்டி பாஷை' என்று சொன்னார் என்ற சூழலைச் சொல்லாமல் Context ஆக பெரியார் தமிழைத் தூற்றினார் என்று சொல்லும் கூட்டத்திற்கு உங்கள் கருத்து நிச்சயம் பலனும், பயனுமாக இருக்கும்.

பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை, அதே சமயத்தில் நாம் எடுத்துவைக்கும் கருத்தில் எதாவது பொருள் இருக்க வேண்டும். வீரமணி அட்டாக் என்ற பெயரில் பெரியாரை கேவலப்படுத்துவது யார் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

நாடுகள், மக்கள் மனது, சட்டங்கள், தண்டனைகள்

விபத்து நடந்த அன்று, நடக்கும் முன்பு அன்று மதியம் நானும் நண்பர் பாஸ்கரும் தீவிர விவாதம் செய்து கொண்டு இருந்தோம்.

"இந்தியர்கள் உலகத்தில் இருப்பவர்களைவிட நல்லவர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்" என்றார்

"எதை வச்சு சொல்றிங்க பாஸ்கர்?"

"நம்ம ஊரில் பரம ஏழைகள் சாதாரண சாதி சான்றிதழ் வாங்கனும் என்றாலும் கூட 10 ரூபாயாவது கொடுத்தால் தான் காரியம் ஆகுது..இங்கெல்லாம் போனவுடனே எந்த சர்டிபிகேட் வாங்கனும் என்றாலும் சரியான தகவல் கொடுத்தால் சரி பார்த்துவிட்டு கொடுத்துடுவாங்க"

"சரிதான், இங்கே சட்டதிட்டம் கடுமையாக இருக்கு, நீங்க பணம் கொடுத்தால் உங்களைத்தான் புடிச்சு உள்ளே போடுவாங்க, இவ்வளவு இருந்தும் சென்றவாரம் அரசாங்க திடீர் சோதனையை ஒரு நிறுவனத்திற்கு முன்கூட்டியே தகவல் சொல்லி மாத மாதம் பணம் பெற்றவர் சிக்கி இருக்கிறார்"

"ஆமாம் படிச்சேன்...நம்ம ஊரில் அதிகம் இல்லையா ?"

"ஞாயப்படுத்துறேன் என்று நினைக்காதிங்க, நம்ம ஊரில் அரசாங்க வேலைக்கு பணம் கொடுத்து தானே போறான், போட்ட முதலை அவன் எடுக்கிறான்... நேர்மையை மறந்து, மறுத்து பைபாஸ் பண்ணுவதற்கு நாம தயராக இருப்பதால், லஞ்சமும் குற்றங்களும் அதிகரிக்குது...கடுமையான தண்டனைகள் இருக்கும் சீனாவில் ஊழலுக்கு குறைவில்லை என்கிறார்கள்"

"இங்கே இந்த ஊரில் பாருங்க...கீழே எதும் கிடந்தா யாரும் எடுக்க மாட்டாங்க"

"யார் சொன்னது? நீங்க 100 வெள்ளியைக் கீழே போட்டுட்டு அந்த பக்கமாக நின்று பாருங்க, யாரும் பார்க்கவில்லை என்றால் எடுப்பாங்க, ஆனல் வெறும் 10 சென்ட் போட்டால் எடுக்க மாட்டாங்க, இங்கேயும் பொருளின் மதிப்பை வைத்துதான் ஒருவர் நேர்மையானவரா இல்லையா என்பதையே சொல்ல முடிகிறது"

"ம் சரிதான், சிலர் தொலைக்கும் பர்ஸ் இதுபோல் சிலரால் எடுக்க்கப்பட்டு விட்டால் உடனே ஐடெண்டி கார்டை எடுத்து வீசிட்டு மத்ததை எடுத்துட்டு போய்கிட்டே இருப்பாங்க....."

"இப்ப நீங்களே சொல்றிங்க...."

"இல்லிங்க முற்றிலும் சரி என்று ஒத்துக்க மாட்டேன்... "

"சரி....நம்ம நாட்டுக்கும், தாய்லாந்துக்கும் என்ன வேறுபாடு"

"இரண்டும் ஏழை நாடுகள் தான்"

"அதுமட்டுமா அங்கீகரிக்கப் பட்ட தொழிலாகவே பாலியல் தொழில் தாய்லாந்தில் நடக்குது, இந்தியாவில் பெருநகரங்களில் நடக்குது இல்லை என்று சொல்லவில்லை, பொழைக்க வழி இல்லை என்றால் அந்த தொழிலுக்கு போவலாம் என்று நினைப்பவர்கள் இந்தியாவில் குறைவுங்க...பாத்திரம் தேய்தாவது பிழைப்பாங்க, பிழையான வாழ்கையை தேர்ந்தெடுப்பவங்க குறைவுதான்"

"ஒத்துக்கிறேன்...நீங்க இப்படி சொல்றிங்க, கிராம புறங்களில் பலரும், இப்போ சாப்ட்வேரில் வேலைபார்ப்பவர்கள் பலரும் ஒழுக்கம் கெட்டு தானே கிடக்கிறாங்க"

"கிரமங்களும், மேல்தட்டு மக்கள் மட்டுமே சமூகம் இல்லிங்க, நடுத்தர மக்கள் இதுபோல் முடுவெடுப்பது இல்லையே... அவர்களில் இருப்பாங்க அளவு மிக மிகக் குறைவு"

"நடுத்தர மக்களிலும் இருக்காங்களே...ஆம்பளைங்க எல்லாம் வெளியே போகலை என்று நினைக்கிறிங்களா ?"

"ஆம்பளைங்களுக்கு வெளிப்படையான பாதிப்பு குறைவுதான், 90 விழுக்காடு சென்று வருகிறார்கள், பெண்கள் அப்படி இல்லை என்பது ஆறுதலான விசயம் தானே"

"ம் சரிதான்...ஒப்புக் கொள்கிறேன்"

"வெளிநாட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரிய வித்யாசம் இங்கே ஆண்களாக நாடிப்போனால் தான் உண்டு... இந்தியாவில் பெண்களை அந்த தொழிலுக்கு தள்ளுபவர்கள் ஆண்களாகக் கூட இருக்கும், வெளிநாட்டில் அந்த தொழிலுக்கு விரும்பிப் போகுபவர்கள் இருக்கிறார்கள்"

"சரிதான்...நம்ம ஊரில் குற்றங்களுக்கு தண்டனை குறைவுதான், அதனால் குற்றம் செய்கிறவர்கள் அதிகம் ஒத்துக்கிறிங்களா ?"

"அது அப்படி இல்லிங்க...எங்கே குற்றம் அதிகமாக இருக்கிறதோ அங்குதான் தண்டனை அதிகமாக இருக்கும்"

"எப்படி சொல்றிங்க ?"

"போதைப் பொருள் கடத்தினால் ஆசிய நாடுகளில் மரண தண்டனை தெரியும் தானே ? காரணம் இங்கு போதை புழங்கிகள் அதிகம், அதற்கெல்லாம் குறைவாக தண்டனை வைத்திருந்தால், நாட்டில் பொருளாதாரம் சீறழிவது மட்டுமல்லாமல் இளைஞர்களின் வாழ்க்கையே சீரழிந்துவிடும், ஓர் ஆண்டு தண்டனை முதல் 10 ஆண்டு தண்டனை வரை கொடுத்தால் அது போதை வியாபாரிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல, தொடர்ந்து புதிய ஆட்களை வைத்து செய்தே வருவார்கள், அதனால் தான் இங்கெல்லாம் மரணதண்டனை வைத்திருக்கிறார்கள்"

"ம் சரிதான்...."

"போதைத் தவிர மற்ற கிரிமினல் சட்டங்களையும் பாருங்க, எந்த நாட்டில் மக்கள் மனசு மோசமாக இருக்கோ அங்குதான் தண்டனையின் தன்மையும் அதிகமாக இருக்கும், ஒழுக்கம் கெட்டவர்களை வளைகுடா நாடுகளில் பொதுவில் கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம் இல்லை என்றால்...நாடே கெட்டுவிடும், ஏனென்றால் அவர்களெல்லாம் பணக்காரர்கள், நம்ம ஊர் கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்தில் பாலியல் வண்கொடுமைக்கு பணம் கட்டிவிட்டு வெளியே வருவது போல் வந்து அதையே செய்வார்கள், ஒழுக்கம் ஒழுங்கீனமெல்லாம் அந்த பகுதி மக்களின் செயல்பாட்டைப் பொருத்தே இருப்பதால் அதற்கான சட்ட வரையரையும் அதற்கு ஏற்றவாறு அந்தந்த நாடுகளில் இருக்கிறது...குற்றங்கள் குறைந்திருப்பது தண்டனைகளின் கடுமைகளினால் அன்றி அது மக்களாக விரும்பி குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள் என்ற பொருளில் வராது...நாடுகளைப் பொறுத்து, அந்தந்த நாட்டு மக்களின் வாழ்க்கைச் சூழல், கலாச்சாராம், பண்பாடு பொருத்து... அவர்களுடைய அரசாங்கமே ஏற்றது என நடை முறை படுத்தி இருக்கும் தண்டனையின் தன்மைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அது தவறாக எனக்கு தெரியலைங்க..."

"சொல்வது சரிதான்...ரொம்ப ப்ரியாக விட்ட அமெரிக்காகாரனே இப்ப குற்றம் அதிகரிக்க, தண்டனைகளையும் நடைமுறையும் மாற்றிவிட்டான்" என்றார்

"அடிபட்டு இருங்காங்க இல்லையா ? மரண தண்டனை குறித்த என் தனிப்பட்ட கருத்து மரண தண்டனை என்பது தவறுதான்... தண்டனைகள் திருந்துவதற்காக கொடுக்கப்படும் ஒன்று...

******

கடைசிவரை , பிறநாட்டினரின் மக்கள் தொகையை, ஏழ்மையை வைத்து ஒப்பிடுகையில் இந்தியர்கள் குற்ற மனநிலையும், குற்ற எண்ணிக்கையும் குறைவு என்பதை நண்பர் ஒப்புக் கொள்வதில்லை. நண்பர் நினைப்பது சரியா ?

ஆத்திகர், நாத்திகர் இவர்களில் மிகவும் நல்லவர்கள் யார் ? - கர்மாவுக்கு பதில்

//நல்லவர்களாக வாழவேண்டியதன் அவசியத்தை விளக்குமாறு பாவ, புண்ணியங்கள் மற்றும் இறைவன் பற்றிய பயங்கள் தவிர்த்த பகுத்தறிவாளர்களிடம் கேட்கிறேன்.// - கர்மாவுக்கு பதில்.

ஆத்திகம், நாத்திகம் எந்த கொள்கையாக இருந்தாலும் அதன் தோற்றத்திற்கு 'துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பது' என்கிற ஒரே காரணம் தான். துன்பம், துயரம், துக்கம் இதிலிருந்து வாழும் போதும், வாழ்கைக்குப் பிறகும் விடுதலை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் கொள்கைகள் வளர்த்துக் கொண்டவர்கள் ஆத்திகர்கள், கண்ணுக்குத் தெரியாத, உணரமுடியாத மறுவாழ்வு பற்றி ஏன் கவலைப்பட வேண்டும், அது வெறும் கற்பனையாகக் கூட இருக்கலாம் இருக்கின்ற வரையில் மகிழ்ச்சியாக இருப்போம் என்று சொல்வதுதான் நாத்திகம்.

ஆத்திகத்தின் மூலக் கொள்கை சிதையாது இருந்திருந்தால் நாத்திகம் வந்திருக்கவே வந்திருக்காது, ஆத்திகம் பண்பாடு, கலாச்சாரம் என்று வளர்த்துக் கொண்டிருந்தாலும் கவலையே இல்லை. ஆனால் அந்த கொள்கைகளில் ஒன்றாக பிறரை (குறிப்பாக இன / சாதி அடிப்படை ஏற்ற தாழ்வு) , பிற உயிர்களைக் கூட துன்புறுத்தி (வேள்வியில் பலி இடுதல்) இன்பம் காண்பதாகவும் இருந்ததால் அவை விலக்கப்பட வேண்டும் என்று போர்கொடி எழுந்தது.

உதாரணத்துக்கு வாழும் உரிமை மனிதர்களுக்கு மட்டும் இருக்கிறதா ? யாரையும் கேட்டுப்பாருங்கள், இல்லை என்றே சொல்வார்கள், அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உண்டு, இருந்தாலும் நம் சுயநலத்திற்காக விலங்குகளை உண்கிறோம், அதற்கு காரணமாக உணவு சுழற்சி என்பது இயற்கையாகவே உள்ளது, அதாவது பூச்சி - தவளை - பருந்து , பருந்து இறந்தால் பூச்சிகள் அதை உண்ணும் என்று ஞாயம் கற்பிப்பர், அந்த உணவு சுழற்சிக்குள் நாம் செல்வதை நாம் ஏன் அனுமதிப்பது இல்லை ? நாம் பிற விலங்குகளை அடித்து உண்ணும் போது பிற விலங்குகளும் நம்மை அடித்து தின்னும் அந்த உரிமையை நாம் கொடுக்கிறோமா ? இல்லை, பாதுகாப்பாக வசிக்கிறோம், அல்லது தாக்க வருவதைக் வதைக்கிறோம், கொல்கிறோம். இது முரண்பாடுதான். இந்த முரண்பாட்டிற்கான ஞாயமும், அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் மனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு செயல்படுகிறது. முற்றிலும் சுயநல நோக்கானது இது தவறுதானே. ஆறாவது அறிவை வைத்து அனைத்து உயிர்களை நேசிக்கிறோமோ இல்லையோ, அதனை அழிவில் இருந்து காப்பதற்காவது நாம் முயற்சி எடுக்கவேண்டும்.

முதன் முதலில் நாத்திக மதமான பெளத்த மதமே உயிர்கொலை செய்வதை வன்மையாக கண்டித்தது, அதை முற்றிலும் வலியுறுத்தவில்லை, ஒரு சில கட்டுப்பாட்டுடன் பசிக்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லை என்றால் உங்களுக்காக கொல்லப்படவில்லை என்றால் இறைச்சியை நீங்கள் புசிக்கலாம் என்பதே. எனவே பாவ /புண்ணியம் காண்செப்ட் என்பதைவிட வாழும் உரிமையை பிற உயிர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் நோக்கம். வலி என்பது இரத்தம் ஓடக் கூடிய உயிரினங்கள் அனைத்திற்குமே உண்டு, கூடுதலாக மனிதனுக்கு உணர்வு பூர்வமான துன்பம், துயரம், துக்கம் இவைகள் உண்டு, தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்வதற்கு யாரும் பெரிதாக வருத்தப்படுவது இல்லை. பிறரால் நேரும் போது தான் வருத்தம், மன உளைச்சல் என அத்தனையும் ஏற்படும். இவற்றைப் போக்கவோ, கட்டுப்படுத்தாவோ ஆத்திக கொள்கைகள் உதவவில்லை.

ஆத்திக நம்பிக்கையுடையவர் ஆயிரத்தில் ஒருவர் முற்றிலும் நல்லவராக இருப்பதே அரிதுதான். கொள்கை, நோக்கம் ஒன்று இருந்தால் அதனால் பயன் இருக்க வேண்டும், கொள்கை இருந்தாலும் அதனால் பயனில்லை என்றால் அந்த கொள்கையே வீண்தானே. ஆத்திகர்கள் தவறு செய்துவிட்டு எல்லாவற்றையும் 'ஆண்டவனுக்காகவும்' ஏன் 'ஆண்டவன் செயல்' என்றே சப்பைக் கட்டி தங்களுக்குக்குள் ஆறுதல் ஏற்படுத்திக் கொண்டும், பிறருக்கு இவர்களால் ஏற்படும் துன்பங்களை 'விதியின் விளையாட்டு' அல்லது 'முன் ஜென்ம பாவம்' அல்லது 'அவனுக்கு ஆண்டவன் கொடுத்தது அவ்வளவுதான்' என்று சொல்லிக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதுடன் மென்மேலும் துன்பத்தையே ஏற்படுத்தினார்கள், ஏற்படுத்தேயே வருகிறார்கள்.

இந்த இடத்தில் தான் நாத்திகம் அதனையெல்லாம் மறுத்து அனைத்து உயிர்களும், குறைந்த அளவாக மனிதன் எல்லோருமே சமம் என்று சொல்ல முயற்சிக்கிறது. கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிவதை நம்பினால் போதும், வாழ்கை என்பது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே என்பதை வலியுறுத்துகிறார்கள். நாத்திகர்கள் எவரும் கொலை செய்தால் எனக்கு மனவுளைச்சல் ஏற்படுவதில்லை என்று சொல்லத் துணிபவர் அல்ல. நல்லவர்களாக வாழத் துணிவதற்கும், அதனை வலிவுறுத்துவதற்கும் காரணம், உனக்கு எது துன்பமோ அதை பிறருக்கும் துன்பம் என்று நினைத்து, நீயும் பிறருக்கு அந்த துன்பத்தை ஏற்படுத்தாதே என்பது தான்.

ஆத்திகர்கள் நல்லவர்களாக இருப்பதற்கு சொர்கப் பதவி, சொர்க சுகம் என்கிற ஆசை, மறுபிறவி தண்டனை, இறையச்சம் இவைகள் கூட காரணமாக இருக்கலாம், இந்த கற்பனை எதுவும் இல்லாமல் நல்லவனாக இருக்கும் நாத்திகர்களே மனதளவிலும், செயலளவிலும், பலன் எதிர்பாராதவர்களாக இருப்பதால் ஆத்திகர்களை விட மிக நல்லவர்கள். மண்ணில் வாழ்ந்த மகான்களிலேயே யார் மிகவும் நேசிப்பதற்கு ஏற்றவர் என்று கேட்டுப்பாருங்கள் ஒப்புக்கொள்ள மனமில்லாவிட்டாலும், மனது சொல்லும் நாத்திகனின் பெயர் 'புத்தர்'

இந்த கருத்து இன்றைய நாத்திகர்களுக்கோ, ஆத்திகர்களுக்கோ முற்றிலும் பொருந்தாது, இங்கே எழுதி இருப்பது கோட்பாட்டுக்கான பொருள் தான். இருப்பக்கமும் கெட்டவர்களும் உண்டு, நல்லவர்களும் உண்டு, தவறு செய்தால் தனக்கு தண்டனை உண்டு என்று நம்பினாலும் (அறிந்தே) தவறு செய்பவர்கள் கெட்டவர்களா ? தண்டனைப் பற்றி பயமே இல்லாமல் (அறியாமையில்) தவறு செய்பவர்கள் கெட்டவர்களா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்