பின்பற்றுபவர்கள்

17 அக்டோபர், 2007

நந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது ? சிவ ஆகமம் !

சிவலிங்க வழிபாடு இந்தியாவில் குறிப்பாக திராவிட இனத்தில் சிந்து சமவெளி நாகரீகம் தொட்டே நடைபெற்றுவருவதென்பதற்கு சாட்சியாக ஆங்கில ஆய்வளர்களால் சிந்து சமவெளி நாகரீகத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிவலிங்க உருவங்களே சாட்சி. ஆரியர்கள் இவ்வுருக்களை ஆண்குறி வடிவம் என்று வேதங்களில் இழித்தே கூறி இருக்கின்றனர். சிவலிங்க உருவம் ஆண்குறி குறியீடா ? என்று பார்த்தால் அவ்வாறு பொருளல்ல வென்றும், முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானின் பேரொளியை தீ வடிவத்தில் வழிபட்டதும் அத்தீ அமைக்க அமைக்கப்பட்ட வேள்விக் குழியே ஆவுடையார் எனும் கீழ்பீடமாகவும். கொழுந்து விட்டொறிந்த ஜோதியே லிங்கவடிவமாகவும் வடிக்கப் பெற்றதென்பர். அதாவது ஆண்பெண் வடிவத்தினனில்லாத இறைவனை ஜோதியாக உருவகித்து வழிபட்டதே சிவலிங்க சொரூபமென்பர்.

ஆரியர்க்கு இறைவணக்கமெல்லாம் இந்திரன், வருணன் போன்றோர்காக செய்யப்படும் வேள்வித்தீயும் அதற்கு முன் இடப்படும் குதிரை, காளை ஆகியவற்றின் உயிர்பலியுமே யாகும் என்பது வேதங்களில் தெளிவாக்கப்பட்டு இருக்கிறது. ஆரியர்களின் வேள்வியை காக்கும் பொருட்டு அவிற்பாகம் பெற்றுக் கொண்டு வேள்வியை அழிக்கவரும் அசுரர்களை அழிப்பதே ருத்திரன் எனும் வேத தெய்வம் என்பர். சுரர் என்றால் சுரா பாணம் அருந்துபவர்கள் அதாவது தேவர்கள். அசுரர் என்றால் சுராபாணம் அருந்தாதவர்கள். சுராபாணம் என்றால் கள் என்றே சொல்லப்படுகிறது. அசுரர்கள் எனப்பட்டோர் வேத வேள்வியின் உயிர்கொலையை கண்டித்து அதனை அழிக்கவே முற்பட்டு இருக்கின்றனர். அவர்களையெல்லாம் ருத்திரன் மற்றும் கண்ணன் ஆகியோரால் அழிக்கப்பட்டதாகவே வேத சுலோகங்கள் சொல்லுகின்றன.

வேதவழி வேள்வி வீழ்ச்சியுற்றபின்பு அதாவது கொல்லாமை அறம் ஓங்கியபோது சிவலிங்கவழிபாட்டை ஏற்றுக் கொண்ட ஆரியர்கள், வேள்வியின் அடையாளமே தீப அடையாளமான ஜோதிர்லிங்கம் என வேள்வியின் அடையாளமாகவே போற்ற ஆரம்பித்தனர். உயிர் கொலையை மறந்தாலும் முன்பு செய்யப்பட்ட பலிகளின் அடையாளமாக சிவலிங்கத்திற்கு முன்பு காளைமாட்டையும் அதன் பின்னே பலிபீடத்தையும் அமைத்து வைத்து நந்தி என்று சொல்லியதாக அறியப்படுகிறது. வெட்டப்போகும் மாட்டின் முன் சென்றால் அருவாள் நமது உடலிலும் விழலாம் என்ற பொருளிலேயே 'நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது' என்ற எச்சரிக்கை வழக்கும் வந்திருக்கிறது.

வேள்விக்கு முன் உயிர்கொலை என்னும் இந்நேரடி பொருள் பொதிந்த நந்தி மற்றும் பலிபீடத்தை மறைப்பதற்காக தமிழ்சைவர்கள் உயர்தத்துவத்தின் பொருளாக மாற்றி வைத்தனர். அதாவது இறைவனாகிய பதியின் முன் பசுவாகிய ஆத்மா தனது ஆணவ மலத்தை பலி இடுவதின் குறியீடே நந்தி மற்றும் பலிபீடம் என்று ஆகமங்களில் மாற்றி எழுத்தப்பட்டு உயிர்கொலையின் வடிவு தத்துவ அடையாளமாக மாறியது.

தரவுகள் :






சொடுக்கிப் பெரிதாக பார்க்கவும்

9 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே,
நல்ல பதிவு. "நந்தி" குறித்த புதிய செய்திகள் அறிந்து கொண்டேன்.. நன்றி.

RATHNESH சொன்னது…

//வெட்டப்போகும் மாட்டின் முன் சென்றால் அருவாள் நமது உடலிலும் விழலாம் என்ற பொருளிலேயே 'நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது' என்ற எச்சரிக்கை வழக்கும் வந்திருக்கிறது//

அதிக உள்ளர்த்தம் பொதிந்த வாசகம்.

புதிய செய்தி. நன்றி.

தங்களுடைய முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நான் கேட்டிருந்த தகவல்களையும் இந்தப் பதிவில் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.

குறைந்தபட்சம் பிரதோஷம் என்பது புதிய தத்துவமா பழையது தானா என்று மட்டுமாவது அறிய விவரங்கள் இருந்தால் சொல்லுங்களேன்.

வவ்வால் சொன்னது…

கோவி,

நீங்கள் சொன்ன உள்ளார்ந்த கருத்தும் இருந்து இருக்கலாம், ஆதியில் யாரும் சைவம் மட்டுமே உண்டதில்லை, மாமிசம் உண்டவர்கள் தான். வேதங்களில் கூட வேள்வித்தீயில் இட்ட மாமிசங்களை பிராமணர்கள் உண்பது வழக்கம் என்று உள்ளதாக சொல்கிறார்கள்.
//அதாவது இறைவனாகிய பதியின் முன் பசுவாகிய ஆத்மா தனது ஆணவ மலத்தை பலி இடுவதின் குறியீடே நந்தி மற்றும் பலிபீடம் என்று ஆகமங்களில் மாற்றி எழுத்தப்பட்டு உயிர்கொலையின் வடிவு தத்துவ அடையாளமாக மாறியது.//

கோயிலில் நந்திக்கு தற்போது சொல்லும் விளக்கம் சரியாகப்படவில்லை.ஏன் எனில் நந்தி பசுவல்ல , காளை, நந்தித்தேவர் என்பவரும் சிவனின் ஞானவடிவம் அவரினை குறிக்கவே நந்தி கோயிலில் உள்ளது.

நந்தியின் நாசிதுவாரத்திலிருந்து வரும் மூச்சுக்காற்று மூலவரின் நாபிக்கமலத்தில் சென்று சேருகிறது. மூல விக்ரகத்தின் உயிர் நந்தியிடம் இருந்து தான் வருகிறது என்று ஒரு புத்தகத்தில் உள்ளது. எனவே குறுக்கே சென்றால் கடவுளின் சுவாசத்தை கெடுத்த பாவி ஆவோம் :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கோவி.கண்ணன் அவர்களே,
நல்ல பதிவு. "நந்தி" குறித்த புதிய செய்திகள் அறிந்து கொண்டேன்.. நன்றி.
//

ஜெகதீசன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
"நந்தி" மாதிரி குறுக்கே நிற்காதே" என்னும் சொல் வழக்கில் இருந்து "நந்தி" க்கான மரியாதை இவ்வளவுதான் இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் said...
Nice article
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said... குறைந்தபட்சம் பிரதோஷம் என்பது புதிய தத்துவமா பழையது தானா என்று மட்டுமாவது அறிய விவரங்கள் இருந்தால் சொல்லுங்களேன்.//

ரத்னேஷ்,

பிரதோஷத்தில் பல வகை இருக்கு சனிபிரதோஷம் சனிஸ்வரன் கோவிலை சுத்தனும்.

இதெல்லாம் "அட்சய த்ருதியை" நகைக்கடைக்கு வருமானம் ஈட்டித்தருவதற்கு திடீர் என்று முதலிடத்தைப் பிடித்தது போல், கோவில் அளவில் பிரதோஷம்.

600 கோடி மக்கள் தொகை உள்ள உலகில், 80 கோடி இந்துங்களில் (நன்றி இலைக்காரன்) தலித்துக்களையும், பணக்காரர்களையும் தவிர்த்துவிட்டால் மிகக் குறைந்த அளவிலேயே இதையெல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டு நம்புகிறார்கள்.

பிரதோஷம் எல்லாம் நடுத்தரவர்க்க ஆடியன்ஸ்காகத்தான் !
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...கோயிலில் நந்திக்கு தற்போது சொல்லும் விளக்கம் சரியாகப்படவில்லை.ஏன் எனில் நந்தி பசுவல்ல , காளை, நந்தித்தேவர் என்பவரும் சிவனின் ஞானவடிவம் அவரினை குறிக்கவே நந்தி கோயிலில் உள்ளது.//

வேதகாலங்களிலும் வேதங்களிலும் பசுக்களைத்தான் புனிதமாக கருதினர். காளையை அல்ல. எனவே காளை பலி நடைபெற்றே வந்திருக்கிறது.

ஞானவடிவம் என்ற உருவமெல்லாம் தமிழ் சைவர்கள் கொடுத்த "பட்டை பெயர்"

:)

ATOMYOGI சொன்னது…

அருமையான பதிவு! ஆய்வு செய்யப்படவேண்டியதொன்று.....

RAHAWAJ சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே, அருமையான பதிவு, வாய்ப்பு கிடைத்தால் சுவாமி சிவானந்த சரஸ்வதி எழுதிய "ஞான சூரியன்" எனற புத்தகம் படிக்கவும் நிறைய செய்திகள் இருக்கு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்