பின்பற்றுபவர்கள்

தமிழக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 பிப்ரவரி, 2013

குஷ்புக்கு கருத்து சொல்ல அருகதை ?


சென்ற சட்டமன்ற தேர்தலில் மூழ்கின கப்பலில் ஏறி மதிப்பை இழந்தவர்கள் முக்கியமாக இருவர், அதில் நடிகை குஷ்பு மற்றும் வடிவேலு பற்றிக் குறிப்பிடலாம். வடிவேலுவுக்கு திரையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது, தற்பொழுது தான் ஒருசிலர் ஒப்பந்தம் செய்யத் துவங்கியுள்ளனர், இதற்கிடையே விஜயகாந்ந் திமுகவை நெருங்குவது உங்களுக்கு பொறுக்கலையா ? என்று கருணாநிதி பத்திரிக்கையாளர்களிடம் பொங்கி இருக்கிறார், இந்தக் கேள்வியை வடிவேலுவிடமும் இவர் கேட்டு இருக்கலாம், பாவம் வடிவேலு விஜயகாந்தை எதிர்க்க திமுகதான் சரியான கட்சி என்று முடிவு செய்து திமுகவிற்காக பரப்புரைகள் செய்து ஈராண்டாக செல்லாகக் காசாக இருக்கிறார், திமுக சார்பு தொலைகாட்சி ஊடகங்கள் வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகளை தொடர்ந்து போட்டு கல்லாக் கட்டி வந்தாலும் அவர்களின் சொந்த நிறுவனங்கள் எடுக்கும் படங்களில் கூட வடிவேலுவிற்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை. 

டுத்து குஷ்பு 'தலைவர் கலைஞர் அடுத்து ஸ்டாலின் என்று முடிவு செய்திருந்தாலும் பொதுக் குழு உறுப்பினர்களின் தேர்வும் சேர்ந்து தான் ஸ்டாலின் அடுத்த தலைவரா ? என்று முடிவு தெரியவரும் என்று பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது ? ஞாயமாகப் பார்த்தால் குஷ்புவின் இந்தப் பேச்சை திமுகவினர் பாராட்டி இருக்க வேண்டும், காரணம் தலைவர் தேர்வு என்பது திமுக கட்சியில் முறைப்படியாக நடக்கக் கூடியது என்பதே அவர் சொல்லவந்ததும் புரிந்து கொள்ளக் கூடியதும் ஆகும்.

'அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்'தான்னு திமுக தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''  - கேள்வி

''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனா இருப்பவங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டாரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமா இருப்பாங்களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுப்பாங்க.'' -குஷ்பு

கட்சியில் பெரும்பான்மையாக இருக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவின் இந்தப் பேச்சை ஸ்டாலினுக்கு எதிரானது என்று கூறி குஷ்பு வீடுமீது தாக்குதலும், அவர் மீது விமான நிலையத்தில் செருப்பு வீச்சும் நடத்தி இருக்கிறார்கள், இது உட்கட்சி பூசல் அதில் உனக்கென்ன என்றெல்லாம் கேட்டுவிட முடியாது, வெளியில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு பெண், ஒரு நடிகை, அதுவும் கட்சியில் புதிதாக இணைந்தவர் கட்சித் தலைவராக அடுத்து வர இருப்பவர் குறித்து கருத்து கூறலாமா ? என்றே கொதித்திருக்கிறார்கள் என்றும் இவர்களது 'முற்போக்கு சிந்தனை பரப்புரைகள்' குறித்து விமர்சனம் செய்ய வேண்டியதாக உள்ளது.

துமட்டுமின்றி என்னதான் எங்க கட்சியைப் பற்றி உங்களால் விமர்சனம் செய்ய முடிந்தாலும் திமுக மட்டுமே உட்கட்சியில் ஜனநாயக ரீதியில் பேசுவதற்கு அனுமதிக்கும் கட்சி என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும், அதிமுகவில் ஜெ-வை எதிர்த்து எவராலும் பேசமுடியுமா ? என்றெல்லாம் வாய்கிழிய பேசுவார்கள், திமுகவின் உட்கட்சி ஜெனநாயகம் பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கிறதா இல்லையா ? என்பது எம்ஜிஆர் கட்சித் துவங்க, பின்னர் வைகோவும் கட்சி துவங்க காரணமாக அமைந்தது என்பது நமக்கும் தெரியும். பாவம் குஷ்புவுக்கு அவை தெரிந்திருக்கவில்லை என்பது தான் நமக்கு புதிய தகவல்.

குஷ்பு மீது நடிகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பொங்குவதற்கு அவர் ஒரு நடிகை, ஒரு பெண் மற்றும் அதுவும் அண்மையில் தான் திமுகவில் இணைந்தவர் வெளிப்படையாக பேசலாமா என்கிற வெறுப்பா ? அல்லது ஸ்டாலின் ஆதரவாளர் என்ற முறையில் எழுந்த போர் குரலா ?

திமுக என்பது தனியார் சொத்து தான் என்று கட்சியில் இருக்கும் குஷ்புவுக்கு தெரியாதது நமக்கு வியப்பே.

10 ஏப்ரல், 2012

* இது தான் 'உயர்' தமிழா ? - ஒரு மொழிப் பெயர்ப்பு !


சென்ற ஏப்ரல் 1, ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 மணிக்கு விஜய் தொலைகாட்சியை ஓடவிட்டேன், பக்தி திருவிழா நிகழ்ச்சி யாரோ ஒரு வைணவ சாஸ்திரிகள் நன்னா ப்ரசங்கம் பண்ணிண்டே பஜனை பண்ணினா, நேக்கு தான் ஒண்ணும் புரியல, கீழே உள்ளதைப் படிச்சுப் பாருங்கள், நேக்கு புரியலைன்னாலும் நோக்கு புரியும்னு பதிவு செய்து கொஞ்ச கொஞ்சமாக கேட்டு தட்டச்சினேன், ப்ரசங்கம் பண்றச்ச நாலு பேர் நாமம் பொட்டுண்டு முன்னாடி உட்கார்ந்து கேட்டுண்டு இருந்தா மத்தவாளைப் பார்த்தா ப்ராமணாப் போல் தெரியவில்லை, ஆனால் சாஸ்திரிகள் நன்னா ப்ராமண பாஷையில் தான் பேஷினா, கேட்டுண்டுருந்த மத்தவாளுக்கு அர்தம் ஆனதா நேக்கு தெரியாது.

**********
இப்போது பிரஷங்கம்....


"சாதுக்கள்னா யாரு ?  தீர்கமான ஆயுளைக் கொடுக்கணும் அப்படிங்கிறது தான் ஒரு பிறவியிலே அவனுக்கு தீர்கமான ஆயுள் கிடைக்கறது, அந்த தீர்கமான ஆயுள் கிடைத்த பிறவியிலும் அவன் புண்ணியம் பன்றான், அந்த பிறவியிலும் அவன் நறையா புண்ணியம் பண்றதைப் பார்த்துட்டு அடுத்தப் பிறவியிலே அவனுக்கு * அக்‌ஷயமான ஐஷ்வர்யத்தை பஹவான் அனுக்கிரஹம் பண்றான், அந்த அக்‌ஷ்யமான ஐஷ்வரியத்தை வச்சிண்டு அவன் நறையா புண்ணிய காரியங்களை பண்ணும் பொழுது பஹவான் பார்க்கிறான் அடுத்த ஜென்மாவிலே அவனுக்கு பெரிய எஸ் எஸ் கீர்த்தியைக் கொடுக்கிறான், அந்த கீர்த்தி இருக்கக் கூடிய ஜென்மாவிலேயும் அவன் நறையா புண்ணியங்களை பண்ணிண்டே வர பஹவான் பார்க்கிறான், இவனுக்கு எதக் கொடுத்தாலும் அதற்கு தகுந்த புண்ணியத்தைப் பண்றான் இனிமே இவனுக்கு கொடுக்கறத்துக்கு ஒண்ணுமே இல்லை தீர்கமான ஆயுள் கொடுத்தாச்சு ஆரோக்கியம் கொடுத்தாச்சு அழகு கொடுத்தாச்சு, புகழ் கொடுத்தாச்சு பஹவான்கிட்ட இப்ப கொடுக்கிறதுக்கு ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு மோ... க்‌ஷ ...ச...ம். ஆனா சாத்திரங்களெல்லாம் என்ன சொல்றதுண்ணா புண்ணியத்துக்கு பலன் மோக்‌ஷசம் இல்ல. புண்ணியம் பண்ணினால் நல்ல ஜென்மாக்கள் வரும் அந்த ஜென்மாக்களிலே நாம் சவுக்கியமாக இருக்கலாம். "

***************


அருஞ்சொற்பொருள்

தீர்கமான ஆயுள் - நீண்ட வாழ்நாள்
புண்ணியம் - நற்பலன்
ஐஷ்வர்யம் - செல்வம்
அனுக்கிரஹம் - கிட்டுதல்
அக்‌ஷ்யமான - குன்றாத
ஜென்மா - பிறவி
எஸ் எஸ் கீர்த்தி - எஸ் எஸ் வாசனா ? ஆவ்வ் ( கீர்த்தி - புகழ்)
மோக்‌ஷசம் - மேலுலகம்
சவுக்கியம் - உடல் நலம்

* மேலேயும் கீழேயும் திரும்பத் திரும்ப சிலவரிகள் வருவது அவர் பேசியதில் இருந்ததே

***************

"இவனோ புண்ணியத்துக்கு மேல புண்ணியம் பண்ணிண்டே இருக்கான், * அந்த புண்ணியத்துக்கு பலனா தீர்கமான ஆயுள், ஐஷ்வர்யம், ஆரோக்கியம், எஸ் எஸ், கீர்த்தி எல்லாம் கொடுத்தாச்சு, பஹவான் பார்க்கிறான் நம்மகிட்டேர்ந்து இவனுக்கு கொடுக்காதது மோட்சம் தான் ஆனா புண்ணியத்திற்கு பலனா மோக்‌ஷத்தக் கொடுக்க முடியாது, அதனால பஹவான் என்ன பண்ணறான்னா இவனோட புண்ணியங்களெல்லாம் உயர்ந்த நிலையை அடையும் பொழுது பஹவன் அவனுக்கு சத்சங்கத்தைக் கொடுக்கிறான், அந்த சத்சங்கத்தினால இவன் மோட்சம் வரட்டும் என்று நினைக்கிறான், அதாவது ஒரு ஜீவனுக்கு எப்பொழுது சத்சங்கம் கிடைக்கினும்கிறது ப்ராப்தம் ஆகிறதுன்னா பல கோ(ட்)டி ஜென்மாக்களில் இவன் பண்ணின புண்ணியங்களெல்லாம் பழுத்து ஒரு நிலையை அடையும் பொழுது தான் அவனுக்கு சத்சங்கம் அப்படிங்கிறது ப்ராப்தம் ஆகிறது. சத்சங்கம் என்றால் என்ன ? ஒரு இடத்தில போர்டு இருக்கு வாசல்ல இது சத்சங்கம் னு எழுதி இருக்கிறதால சத்சங்கம் ஆகிடாது, சத்சங்கம் அப்டினுட்டா, பொதுவா அதற்கு ஒரு அர்தம் சொல்லனும் அப்படின்னுட்டா சாதுக்களுடைய சங்கம் .....சத்சங்கம். "

***************
அருஞ்சொற்பொருள்

சத்சங்கம் - பக்தர் / அன்பர் கூட்டம்
ப்ராப்தம் - விதி
***************

"சாதுக்கள்னா யாரு அப்படினுட்டு பாஹவதமே ஒரு கேள்வி கேட்டு அதற்கு ஒரு பதிலும் சொல்றது 'ஜீவன் முக்தி, க்ரண முக்தி, காய முக்திய சாது மஹான். அந்த சாதுக்கள் மூன்றே மூன்று காரியம் தான் பண்ணிண்டு இருக்காளாம், அந்த மூன்று காரியத்திற்கு அந்நியமா வேற ஒரு காரியம் பண்ணி பழக்கமில்லே தெரியாது, என்ன பண்ணுவா அப்படின்னா ? எங்கேயாவது யாராவது பஹவானைப் பத்தி சொல்லமாட்டாளா ன்னு ஏங்கி தவிச்சி சதா ஷர்வ காலமும் பஹவானுடைய கதைகளையும், குணங்களையும், லீலைகளையும் கேட்டுண்டே இருப்பாளாம், அப்படி சொல்றதுக்கு யாருமே இல்லேன்னு அப்படின்னுட்டா, நான் சொல்றேன் நீ கேட்கிறியான்னு சின்ன குழந்தையை உக்காத்தி வச்சிண்டாவது பஹவானோட பால லீலைகளை அந்த குழந்தைக்கு எந்த அளவுக்கு புரியுமோ அந்த அளவுக்கு சொல்லுவா, சொல்றதுக்கும் ஆளில்லே, கேட்கிறதுக்கும் ஆளில்லே ங்கிற போது 'க்ருஷ்ணா ஹரே கோவிந்தா, ஹரே க்ருஷ்ணா ராமா கிருஷ்ண கோவிந்தா, நந்த நந்தன கோவிந்தா, ஹரே ராமா கிருஷ்ணா கோவிந்தா அப்படின்னு பஜனை பண்ணிண்டே இருப்பாளாம், ஒண்ணு பகவத் மூலம் சொல்றது மற்றொன்று பகவத் மூலம் அழிக்கிறது இல்லேன்னா பஹவானைப் பற்றி பாடிண்டே இருக்கிறது, இந்த மூன்று காரியங்களை மட்டுமே யார் பண்ணிண்டு இருக்காளோ அவா தான் சாதுக்கள்."

(இதுக்குமேல் கேட்கவில்லை தொலைகாட்சியை நிறுத்தியாச்சு)

***************
அருஞ்சொற்பொருள்

பாஹவதம் - சமய நூல்
ப்ராப்தம் - விதி
மஹான் -  மூத்த அறிஞர்
சாது - சாமியார்
அந்நியம் - மாற்றாக
காரியம் - செயல்
லீலை - விளையாட்டு
பால - சிறு அகவை
காயம், க்ரணம், ஜீவன் - உடல், பொருள், ஆவி(உயிர்)
சதா ஷர்வ காலமும் - முக்காலமும் அல்லது எப்பொழுதும்

***************

சென்னையில் கைரிக்‌ஷா ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சென்னை பாஷையில் பேசுறாங்க, தமிழை கொலை செய்கிறார்கள், கொச்சைப் படுத்துகிறார்கள் என்கிறோம், ஆனால் நானூறு பேர் அமர்ந்திருக்கு ஒரு அவையில் பிரசங்கம் என்ற பெயரில் பார்பன மொழி வழக்கிலேயே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வெளியில் பார்பனர்கள் தங்களுக்குள் தவிர்த்து பிறரிடம் பார்பன தமிழ்மொழிப் பேசிவது கிடையாது, எனவே பார்பனர்களுக்கு பொதுவாக பலர் பேசும் பொதுத்தமிழ் உரையாட வராது என்று சொல்வதற்கில்லை, நம்புவதற்கில்லை, ஆனால் எல்லோரும் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் வலிந்தே இவ்வாறு பேசுகிறார்கள், ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது, ஒரு வேளை இழந்து போன பார்பனப் பெருமையை 'ப்ராமணர்' என்னும் கட்டமைப்பாக மீட்டெடுக்கும் முயற்சி என்றே நினைக்கத் தோன்றுகிறது, 30 ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக தமிழகத்தில் நரேஷ் "ஐயர்" மற்றும் அனுஷா "ஐயர்" போன்ற பெயர்கள் தோன்றி இருக்கின்றன. பார்பனர்கள் தனி அடையாளம் விரும்பும் வரை பார்பன எதிர்ப்புகளை பார்பனர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது பார்பனர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பார்பனர்களும் பார்பன எதிர்ப்புகளை விரும்பியே ஏற்படுத்திக் கொள்கிறார்கள், வெளியில் இருந்து வரும் பார்பனர் எதிர்ப்பு பார்பனர்களை ஒன்று சேர்க்கும் என்றே பார்பனர்கள் நினைக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

7 பிப்ரவரி, 2012

உன்னிக்கிருஷ்ண பணிக்கர் ஒட்ட வைப்பாரா ?

ஊடகங்கள் சசிகலா குடும்பத்தினர் போயாஸ் தோட்டத்தில் இருந்து துறத்தப்பட்ட பிறகு, நாள் தோறும் மர்மக் கதை போல் அதை எழுதிவருகின்றனர், இராவணன் போங்கு ஆட்டம் மற்றும் கைது, இராவணனின் அசுர வளர்ச்சி பற்றியெல்லாம் ஜூவி வெவ்வேறு கட்டுரைகளை வெளி இட்டு இருந்தது. அதே போல் திவாகரன் பதுங்கியது, முன் ஜாமினுக்கு முயற்சி செய்தது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழிலும் எழுதியுள்ளது. சசி கும்பல் என்றே கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்கள்.

ஜெ - சசி நட்பு உறவுகள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதான கஞ்சா வழக்கு கைதின் பிறகே முடிவுக்கு வந்திருக்க வேண்டும், அதையும் தாண்டி பத்து ஆண்டுகள் நீடித்ததற்கு ஜெ - சசி தொழில் ரீதியான முதலீடுகள் குறுக்கே நின்று இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். வளர்ப்பு மகனாக தத்தெடுத்து நாடே வியக்கும் வண்ணம் திருமணம் நடத்தி வைத்து பிறகு கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், கூடவே இருந்த சசிகலாவால் அதனை தடுத்திருக்க முடியவில்லை, என்பதிலிருந்து ஜெ வின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ள போயாஸ் தோட்டத்தில் குடியிருந்திருக்கின்றனர், மற்றபடி ஜெ-வை கைக்குள் போட்டு வைத்திருக்க வில்லை என்பதை தற்போதைய கட்டம் கட்டிய காட்சிகளில் இருந்து ஒருவாராக ஊகிக்க முடிகிறது. ஜெவும் தனது பிடிகள் என்று சசி மற்றும் அவருடைய உறவினர்களிடம் சிக்கி இருக்க வில்லை என்பதால் நினைத்த மாத்திரத்தில் அவர்களை வெளியேற்றி சசி உறவுக்காரர்கள் மீதான நடவடிக்கையை எடுக்க முடிகிறது.

ஆகா ஆதயங்களின் அடிப்படையில் சசி ஜெவிடம் தொடர்பு வைத்திருந்தாலும் அதே ஆதாயங்களின் அடிப்படையிலும் தனக்கான பாதுகாப்பு என்ற முறையில் மட்டுமே ஜெ சசி உறவினர்களிடம் நீக்கு போக்காக நடந்திருக்கிறார் என்றும் நினைக்க முடிகிறது, ஜெ ஏற்கனவே இருமுறை பதவி இழந்திருந்தாலும் சசி மற்றும் அவரது உறவுக்காரர்கள் ஜெ வை கைவிட்டுவிட்டு ஓடி இருக்கவில்லை, கருணாநிதியிடமும் சென்று சேரவில்லை, பொன் முட்டையிடும் வாத்து ஓய்வெடுக்கிறது என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தினர். ஆனாலும் அவர்களின் நட்புகளிடையே எந்த ஒரு நம்பிக்கையும் நிலவி இருக்கவில்லை மாறாக ஜெவுக்கு பிறகான அதிமுகவை கைப்பெற்ற வேண்டும் என்ற முன்னெடுப்பாக தனது சமூகத்தைச் சார்ந்தவர்களை அதிமுகவில் வளர்தெடுத்தும், சட்ட உறுப்பினர் சீட்டுகளை மிகுதியாக பெற்றுத் தந்திருக்கிறார்கள். இவை கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தாலும் இந்த முறை விழுக்காடு அளவில் ஜெவின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குச் சென்றதால் நட்புகள் முறிந்து போயாஸ் தோட்டத்து துடைத்தொழிப்பு நடந்துள்ளது.

என்னதான் பிரச்சனை என்றாலும் சசியின் தம்பி திவாகரனை கைது செய்யும் முன் அவரது மனைவியை கூட காவல் நிலையத்திற்கு அழைத்து மிரட்டப்பட்டதாக ஜூவி செய்தி வெளி இட்டிருக்கிறது. அவர்கள் முறைகேடுகள் செய்திருந்தாலும் கூட குடும்பப் பெண்களையும் அழைத்து விசாரணை செய்தது கைது நடவடிக்கையின் அரச தந்திரம் என்று சொன்னாலும் கூட தனக்கு பிடிக்காதவர்களை, ஓரம் கட்டியவர்களி ஜெ எதுவும் செய்யத் தயங்கமாட்டார் அவர்கள் தன்னுடன் எவ்வளவு ஆண்டுகள் விசுவாசியாக இருந்திருந்தாலும் கூட என்பதையே புரிய வைத்தது.


"குடும்பப் பெண்ணுக்கு அவமானம்...

ஸ்டேஷனுக்கு வெளியே கூடியிருந்த திவாகரனின் ஆதரவாளர்கள், ''யார் ஆட்சி யில் இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் சிலர் சம்பாதிக்கத்தான் பார்ப்பாங்க. அதுக்காக எதையும் நியாயப்படுத்தலை. கூப்பிட்டு எச்சரிக்கை செஞ்சு அனுப்பி இருக்கலாம். அதை விட்டுட்டு, இத்தனை நாள் கூடவே இருந்து சேவகம் செஞ்சவங்க குடும்பப் பெண்களை ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, அவமானப்படுத்துறது துரோகம். இத்தனை நாளும் அந்தம்மா ஒருத்தரே தமிழ்நாடு முழுக்க கட்சியைக் கட்டுப்பாட்டில் வெச்சிரு ந்தாங்களா? மன்னார்குடி உறவுகள் இருக்கப்போய்தானே அது சாத்தியம் ஆச்சு? இப்ப டெல்டாவில் அமைச்சர் களாக இருக்கிற எத்தனை பேர் அந்தப் பதவிக்காக பாஸ் கிட்ட பவ்யம் காட்டி இருப்பாங்க? சின்னம்மாவை கார்டனை விட்டு அனுப்பி எவ்வளவு நாள் ஆச்சு? அவங்க ஒரு வார்த்தை மீடியாகிட்ட பேசி இருப்பாங்களா? சின்னம்மா வாயைத் திறந்தா, நிலைமை என்ன ஆகும்? எங்க பொறுமையை சோதிக்காதீங்க. எல்லாத் துக்கும் ஒரு எல்லை உண்டு...'' என்றார்கள் ஆக்ரோஷமாக!" - ஜூவி

வெளியில் இருந்து பார்க்கவும், பொதுப் புத்தியாகவும் அவங்க தப்பு செய்திருக்காங்க, இது அவர்களுக்கெல்லாம் தேவையே என்று நினைக்கத் தோன்றும், ஆனால் பயன்படுத்தித் தூக்கியெறிதல் என்ற கோணத்தில் பார்க்கும் போது ஜெ மீதான நம்பகத் தன்மை மற்றும் நன்மதிப்பு கெடத்தான் செய்கிறது. ஜெ-வுக்கு தேவை விசுவாசிகள் மட்டுமே அவர்கள் தடம் புரண்டால் அவர்கள் அதற்கான கூடுதல் விலையையும் சேர்த்தே கொடுத்தாக வேண்டும் என்பதாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார். இந்த நிலைமை 'எல்லாம் அம்மாதான்......அம்மா அம்மா' என்று சுற்றி வந்த சசி உறவுக்காரர்களுக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் தற்போது போயாஸ் தோட்டத்தின் உரிமை புதுப்பித்துள்ள சோ வகையாறாவிற்கும் நடக்க வாய்ப்புகள் உண்டு.

********

ஜெ - சசி இருவரும் சேர்ந்து பல பரிகார பூசைகளை செய்திருக்கிறார்கள், உன்னிக்கிருஷ்ண பணிக்கர் என்ற சோதிடரின் ஆலோசனைப் படியே நடந்திருக்கிறார்கள், ஆட்சியை கைப்பற்றுதல், அல்லது தக்க வைத்துக் கொள்ளுதல் என்ற முறையில் பல்வேறு யாகங்களையெல்லாம் செய்தார்கள் என்றெல்லாம் செய்தி இதழ்கள் எழுதித் தீர்த்தன, அது போன்ற யாகங்கள் எதுவுமே உடைந்து போன நட்புறவை ஒட்டவைக்காதா ? உன்னிக்கிருஷ்ண பணிக்கரின் கைங்கர்யங்கள் இவர்களின் விரிசலை சரி செய்யாதா ? இந்த சோதிடம் சமய நம்பிக்கை இவை அனைத்தும் ஆதாயத்தின் பலனை நோக்கித்தான் செய்யப்படுகின்றன ஈகோ மற்றும் வெறுப்புகளை சரி செய்ய சோதிடமோ, பரிகாரமோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையோ அல்லது அதற்கான முயற்சிகளில் இவர்கள் இருவருக்கும் விருப்பம் இல்லையோ.

எனக்கு இதில் தனிப்பட்ட வருத்தம் மகிழ்ச்சி இல்லை, நம்பிக்கைத் தூரோகம் மற்றும் பயன்படுத்தி தூக்கி எறிதல் என்பதில் ஜெவிற்கும் சசிக்கும் பெரிய வேறுபாடு இல்லை, மக்கள் செல்வாக்கு என்ற அடிப்படையில் ஜெ ஓங்கி இருக்கிறார் அவரால் சசி குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிகிறது அது தமக்கு தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இல்லாததால் சசி முடங்கி இருக்கிறார் அவ்வளவே.

2 பிப்ரவரி, 2012

கேப்டன் முழக்கம் தளபதி கலக்கம் !

நேற்றைய சட்ட மன்றத் தொடர் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், கூட்டணி உதவியால் கனிசமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்த விஜயகாந்த், உள்ளாட்ச்சித் தேர்தலுக்கு பிறகு சட்ட சபைக்குள் செல்லவே மாட்டார் என்று ஊகங்கள் கிளம்பி இருந்தன, அதற்கு ஏற்றவாறு எதிர்கட்சியாக இருந்த போது கருணாநிதியும், ஜெயலிதாவும் சட்ட சபைக்குச் சென்றார்களா ? என்று கேள்வி எழுப்பி இருந்தார், இதன் மூலம் வழக்கமான வெறும் லாவனி அரசியல் போல் விஜயகாந்தும் அடுத்தத் தேர்தல் வரை ஒப்பேற்றிவிடுவார் என்று ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் கருதி இருந்தனர், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கு பெற்றதுடன் ஆளும் கட்சியை கேள்விகளால் துளைத்து அடித்து திணறடித்தார் விஜயகாந்து.

பெரும்பான்மை ஆதரவுடன் அமைந்துள்ள ஆட்சி என்று முழங்கிக் கொண்டு இருந்த ஜெயலலிதாவுக்கு இது பெரிய அதிர்ச்சி தான். விஜயகாந்தை பேசவிடாமல் கத்திக் கொண்டிருந்த அவரது சட்டமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் ஜெ கட்டுப்படுத்தவில்லை, முடிவில் விஜயகாந்த் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

தாம் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்ததற்காக வருத்தப்படுவதாகவும், கட்சியினரை திருப்பித்படுத்தவே கூட்டணி அமைத்திருந்ததாகவும் உளறினார். கூடவே வரும் சங்கரன் கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும் தேமுதிகவால் தனித்து தேர்தலை சந்திக்க முடியுமா ? என்றக்கேள்விக்கு முன்பு, பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் கட்டணத்தை உயர்த்திய பிறகு நாங்கள் வெற்றி பெறுவோம், உங்களால் முடியுமா ? என்று கேட்டார், அந்தக் கேள்வியில் எங்களால் மக்களை பாதிக்கும் எதையும் செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்திக்க முடியும், நாங்கள் ஆளும் கட்சி என்ற ஆணவம் தெரிந்தது.

இதற்கு பதிலளித்த விஜயகாந்த் ஆளும் கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெரும் இரகசியம் ஏற்கனவே தெரிந்தது தானே, எதிர்கட்சியாக இருந்த போது அவ்வாறு வெற்றிபெற்றிருக்கிறீர்களா? ஏன் முதல்வராக இருந்தவரில் பர்கூரில் தோற்றவர் தானே ஜெயலலிதா என்று பதிலடிக் கொடுத்தார், முதல்வராக இருந்து தோற்றவர்களில் காமராஜரும் உண்டு, எனவே விஜயகாந்தின் அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது, ஜெயலலிதாவின் ஆட்சியில் திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் தலைவர்களும் பம்மிக் கொண்டு இருப்பார்கள், தேர்தலின் போது தான் அவர்கள் குரல் வெளிப்படும், இல்லையென்றால் முரசொலியில் 'ஆணவ ஆட்சிப் பாரீர்' என்று கட்டுரை வடிப்பார்கள், இப்படி சட்டமன்றத்திற்குள் காரசாரமாக (கை நீட்டிப்) பேசியதில்லை. (திமுகவினரிடம் இது பற்றிக் கேட்டால் நாங்கள் சபை நாகரீகம் அறிந்தவர்கள் என்றே சமாளிப்பர்)

விஜயகாந்த் சட்டமன்றத்தில் அணல் தெறிக்கப் பேசப் பேச அங்கு அருகில் அமர்ந்திருந்த ஸ்டாலினைப் பார்க்க பரிதாபமே மிஞ்சியது. 'அடுத்தத் தேர்தலுக்கு முன்பே விஜயகாந்த் மேலும் செல்வாக்கு பெற்று திமுகவின் தவிர்க்க முடியாத கூட்டணியில் ஒன்றாகவோ, அல்லது தேமுதிகவின் செல்வாக்கை சமாளிக்க முடியாமல் போவதுடன் திமுகவின் செல்வாக்கும் பாதாளத்திற்கு செல்லும் வாய்ப்பும் இருப்பதாக ஸ்டாலின் நினைத்திருக்கக் கூடும். ஏற்கனவே எதிர்கட்சி சிறப்பையும் விஜயகாந்தால் இழந்த ஸ்டாலின் திமுகவின் எதிர்காலம் குறித்தும் தமது முதல்வர் கனவு குறித்தும் கவலைப்பட்டு அமர்ந்திருந்தது போலவே தெரிந்தது.

விஜயகாந்த் இந்த ரீதியில் சென்றால் மேலும் செல்வாக்குப் பெறுவது உறுதி என்றே தெரிகிறது. நான் விஜயகாந்தின் அரசியலை பேச்சை விமர்சனம் செய்திருக்கிறேன், இப்போது பார்க்கும் போது அவர் சரியான திசையில் தான் பயணிக்கிறார், கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்றே தெரிகிறது, எந்த தனிப்பட்ட அரசியல்வாதிகளால் எனக்கும் தனிப்பட்ட நன்மை கிடையாது, விஜயகாந்த் கட்சி மற்றும் கொள்கை ஆகியவற்றில் எனக்கு எந்த ஈர்ப்பும் எப்போதும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் விஜயகாந்தின் வளர்ச்சி மற்ற அரசியல் வாதிகளின் வளர்ச்சியைப் போன்றது தான், பலமான எதிர்கட்சி சட்டசபையின் தன்னிச்சையான முடிவுகளை எதிர்க்க மிக மிகத் தேவையான ஒன்று.

இதே அரசியல் கட்சிகள் அடுத்தும் தேர்தலை சந்தித்தால் என்னுடைய வாக்கு இப்போதைய சூழலைப் பொருத்து தேமுதிகவிற்குத் தான்.

கமான் கேப்டன்............கமான் !

13 ஜனவரி, 2012

பாலுக்கும் பூனைக்கும் காவல் - முதல்வர் அம்மா !

என்ன கொடுமை முதல்வர் அம்மா ?

பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது, என கூறியுள்ளார் ஜெயலலிதா.
****
எமக்கெல்லாம் ஜெயலலிதா எம்ஜிஆரின் அரசியல்வாரிசு மற்றும் குறிப்பாக எம்ஜிஆரின் திராவிடக் கட்சியான அதிமுகவை கடந்த 20 ஆண்டுகளாக வழிநடத்தும் திராவிட சிந்தனையாளர் (சிரிக்காதிங்க சார், நான் சீரியஸாக சொல்கிறேன்) மற்றும் திராவிடத் தாய், ஈழத்தாய் அம்மா முதல்வர் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் அம்மாவோ திடிரென்று தாம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் மனதில் பதிந்துள்ளதால், அவர்களிடையே நக்கீரனின் செய்தி தாம் மாட்டுகறி சாப்பிடுவது தவறான செயல் என்று நினைத்திருக்கக் கூடும், என்று வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


முதல்வரம்மா, பொதுமக்களிடையே ஒரு பார்பனர் மாட்டுகறியோ வேறு 'மாம்சமோ' முட்டையோ மீனோ சாப்பிடுவது தவறான செயலாக நினைக்கப்படுவதில்லை, ஆனால் பொது மக்களின் கவலை பொருளியல் ரீதியானது மட்டுமே, பலர் வெளிப்படையாகவே 'பார்பனர்கள் அசைவம் சாப்பிடுவதால், மீன், ஆடு கோழி உள்ளிட்ட அசைவம் விலையேறிவிட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள், எனது பார்பன நண்பர்களில் சிலரோ 'யார் செய்த சதியோ, இவ்வளவு ருசியான அசைவ உணவை எங்கள் சமூகத்திற்கு கிடைக்கவிடாமல் செய்து எங்கள் பிராமண சமுதாயத்தை சைவ பிராணி ஆக்கிவிட்டார்கள்' என்று புலம்புவதுடன் வீட்டுக்கு வெளியே அசைவம் தவிர்த்து எதுவும் சாப்பிடுவதற்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். எனவே ஒரு பார்பனர் அசைவம் சாப்பிடுவது தவறு என்று பொது மக்களோ, பார்பனர்களோ கூட நினைக்காத போது பொதுமக்கள் தவறான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள் ?

ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் படி தவறாக நினைக்க வாய்பு இருந்தால் பின்னர் அல்லது முன்னர் 'உயர்சாதி ஆளுமை எண்ணம் கொண்ட பிராமண சமுதாயத்தைச் சார்ந்த ஜெயலலிதா எப்படி தொடர்சியும், பாரம்பரியம் மிக்க , பெரியார் வழியில் உருவான திராவிடக் கட்சியின் மற்றொரு பிரிவிற்கான அண்ணாவின் பெயரை முன்மொழிந்து ஏற்பட்டுள்ள அதிமுக கட்சியினை வழிநடத்த முடியும் என்று நினைத்திருக்க மாட்டார்களா ?
பொதுவாகவே மக்கள் யாரும் தனிமனித நிலைப்பாடுகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை, ஒருவேளை அப்படி நினைத்திருந்தால்

பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கவர்ச்சி நடிகையாக முடியுமா ? அல்லது உங்களைப் போல் கதாநாயகி ஆக முடியுமா ? அதற்கு அந்த சமூகம் அனுமதி அளிக்குமா ? ஏற்றுக் கொள்ளுமா என்று நினைத்திருக்கக் கூடும்.

நடிப்பு மற்றும் அரசியல் ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பார்வையில்ஷகீலா, நமீதா,நயன்தாரா ஆகியவர்களின் மதம் பார்க்கப்படாது, ஜெயமாலினி ஜோதிலட்சுமி உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகளின் சாதியும் பார்க்கப்படாது.

பூணூலை கழட்டிவிட்டு நடிக்கும் பார்பன நடிகர்களையாரும் பார்பனராகப் பார்ப்பதும் இல்லை, அப்படி இருக்க, ஒருவேளை நக்கீரன் வெளியிட்டது தவறான செய்தி என்ற போதிலும் உங்களுக்கு பொது மக்கள் இப்படித்தான் நினைத்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட தவறானத் தகவலாக இருக்கும், உங்களின் இது போன்ற அறிக்கை உங்கள் அரசியலுக்கும் கட்சிக்கும் பின்னடைவே. நீங்களே நினைத்துப் பாருங்கள்

திராவிடத் தாயாக முதல்வர் ஜெயலலிதா அல்லது
திராவிடத் தாயாக ஒரு பார்பன சமூக முதல்வர்
ஈழத்தாயாக முதல்வர் ஜெயலலிதா அல்லது
ஈழத்தாயாக ஒரு பார்பன சமூக முதல்வர்
திராவிடக் கட்சியின் தலைவி ஜெயலலிதா அல்லது
திராவிடக் கட்சியின் தலைவியாக ஒரு பார்பன சமூகத்தைச் சார்ந்தவர்

எது மக்கள் மனதில் பதிந்திருக்கும் ?

சாதி, மதங்களைக் கடந்தவர் என்ற உறுதி மொழியில் முதல்வர் பதவி ஏற்ற தாங்கள், அதை வழங்கிய பொது மக்கள் தங்களை ஒரு பார்பனத்தியாகவே நினைப்பார்கள் என்று தாங்கள் நினைப்பது உங்கள் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முரணானது, தவறான செய்தி என்பதற்காக நக்கீரனைக் கண்டிக்கிறோம் அதே வேளையில் தாங்கள் மீண்டும் ஒருமுறை தங்களை பிராமணப் பெண்' என்று மறைமுகமாக பொதுமக்களை சாக்கிட்டு, பழிபோட்டு கூறி பெருமைப்பட்டுக் கொள்வதையும் அரசியல்சாசனத்திற்கு எதிரான செயல் என்று கண்டிக்கிறோம். அப்படிக் கூறிக் கொள்வது உங்கள் விருப்பம் என்றால் உங்கள் கட்சி திராவிடக் கட்சியாக இருக்க முடியாது என்றே பொதுமக்கள் கருதுவார்கள், அதாவது 'பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த பெண் திராவிடக் கட்சிக்கு பொருத்தமானவரா ?

உங்கள் கட்சி திராவிடம் பேசுகிறதா இல்லையா என்பதெல்லாம் வேற, ஆனால் பார்பன உ(ர்)ணவு அடிப்படையில் நீங்கள் அதை பெரிது படுத்தும் போது உங்கள் கட்சியின் திராவிட சார்ப்பு அடிப்படை நிலைப்பாடுகளும் அதற்கு உங்களின் தகுதிகளும் உங்களாலேயே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

உங்கள் அறிக்கை ஒருவேளை மாட்டுகறி உண்ணும் பார்பனர் இருந்தால் அவர்கள் பொதுமக்கள் முன்பு வெட்க்கப்பட வேண்டும், அல்லது பொது மக்கள் அவர்களை தூற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்திருக்கிறது என்று நீங்கள் அறிந்துள்ளீர்களா ?

21 டிசம்பர், 2011

சசி வகையறா இடத்தைப் பிடிக்கப் போவது யார் ?

ஜெ-சசி நட்புறவு முக்கிய காலகட்டத்தை கடந்துள்ளது, இதற்கு முன்பு ஜெ-சசி பிரிவிற்கும் தற்போதைய பிரிவிற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, முன்பு ஜெ தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதற்கு சசி வகையறாக்களின் சொத்துக்குவிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள் என்ற காரணம் முன்வைக்கப்பட ஜெவும் வேண்டா வெறுப்பாக சசியை பிரிந்ததாக அறிவித்தார், ஒரு சில நாட்களிலேயே ஒன்று சேர்ந்தார்கள், மறுபடியும் ஜெ இரண்டாம் முறையாக முதல்வராக இருந்த போது சசி கூடவே தான் இருந்தார், அதன் பிறகு ஜெ தோற்கடிக்கப்பட்டதற்கு சசியை யாரும் காரணம் காட்டவில்லை, பிறகு ஜெ மூன்றாம் முறையாக முதல்வரான போதும் சசியின் செல்வாக்கினால் வென்றார் என்று யாரும் நினைக்கவில்லை. எனவே ஜெ-வின் வெற்றித் தோல்விக்கு சசியை முன்னிலைப்படுத்த ஒன்றுமே இல்லை.



ஆனாலும் அதிமுகவின் வாக்கு வங்கி உறுதியாக இருக்க சசியின் முக்குலத்தோர் ஆதரவு இருந்தது வெளிப்படையான உண்மை. அதிமுக கட்சி முக்குலத்தோர் கட்சி என்று தான் அண்மையில் பரமகுடி சம்பவங்களை ஒப்பிட்டுக் கூடப் பேசப்பட்டது, சசி ஜெவுடன் நட்பாக இருந்தது அதிமுகவின் பலத்திற்கு நன்மையாக இருந்ததே அன்றி ஆட்சிக்கு நன்மை / தீமை செய்வதாக இருந்தது என்று சொல்ல ஒன்றும் இல்லை. ஜெ-சசி உறவு உடைந்ததால் அதிமுகவிற்கு நன்மை போலும், ஜெ இனி தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்வார் என்று எழுதுகிறார்கள். ஜெவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சசிதான் காரணம் என்றாலும் கூட அது 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருகிறது, இடைப்பட்ட காலத்தில் சசிதான் இதற்கெல்லாம் காரணம் என்று ஜெ உணர இதுவரை வாய்க்காத வேளைகள் இப்போது தான் கிடைத்தது போல் நினைக்கிறார்கள். ஜெவின் நட்பால் சசி வகையறா பெருத்த லாபம் ஈட்டி இருந்தாலும் ஜெ-வின் அரசியல் எதிரிகளால் ஜெ-விற்கு தனிப்பட்ட ஆபத்துகள் ஏற்படா வண்ணம் தன் உறவுக்காரர்களால் அரண் அமைத்துப் பார்த்துக் கொண்டவர் சசி.

சசியை வெளியேற்றதால் ஜெ-வுக்கு கிடைத்திருக்கும் மபெரும் ஆதரவு திமுக கூடாரத்தை மிகவும் அதிர்ச்சியிலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று நினைக்க முடிகிறது

நடப்பதைப் பார்க்கும் போது ஜெ-சசி பிரிவுகள் பழைய நிகழ்வுகளின் தொடர்ச்சி என்று நினைக்க முடியவில்லை, ஜெ-வுக்கு பிறகான அரசியல் என்ற நிலையில் சசி தன் உறவுக்காரர்களை உள்ளே நுழைத்து செயல்பட அவை ஜெ-வை எரிச்சல்படுத்தி இருக்க வேண்டும் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. ஜெ -வைப் போல் வாரிசுகள் அற்ற சசி தன்னைச் சார்ந்தவர்கள் நன்மை அடையட்டம் என்று நினைத்திருக்கிறார் அன்றி மீண்டும் சொத்துக் குவிப்புகளில் ஆர்வம் காட்டியதாக நினைக்க முடியவில்லை.

இவை ஜெ-சசி இருவருக்குமான தனிப்பட்ட கசப்புணர்வுகளின் வெளிப்பாடே அன்றி சசி இல்லாவிட்டால் அம்மா நல்லாட்சித்தருவார் போன்ற பிம்பங்களை பார்பன ஊடகங்கள் பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது, ஒருவேளை சசிதான் காரணம் என்றால் ஜெவினால் மேலும் இருமுறை தமிழக முதல்வராக வரும் வாய்ப்பே இருந்திருக்காது.

ஜெ-சசி நட்பு கெட்டுப் போனதால் முக்குலத்தோருக்கும் அதிமுகவிற்கும் இழப்பே அன்றி மற்றவர்களுக்கும், ஆட்சிக்கும் நன்மை என்று சொல்ல ஒன்றும் இல்லை, சசியின் இடத்தைப் பிடிக்க சோ உள்ளிட்ட பார்பனர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன, போயாஸ் தோட்டத்தின் பொறுப்புகளை சோ வின் மகன் ஏற்றுக் கொண்டுள்ளாராம், சனிப் பெயர்ச்சியை சசியுடன் தொடர்ப்பு படுத்தி எஸ்வி சேகர் கிண்டல் அடித்ததை நினைவு கூறுங்கள். சசியினால் தமிழகத்திற்கு கெடுதல் இருந்ததா இல்லையா என்பதைவிட ஜெ-வுக்கு கிடைக்கும் பார்பன ஆலோசனைகள் மிகவும் ஆபத்தானது. முன்பு போல் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளிலும் பிற்படத்தப்பட்டோர் நலனிலும், இலங்கைத் தமிழர் நலனிலும் ஜெ பார்பனர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் செயல்பட்டால் தமிழகத்திற்கு நல்லது.

பொருளியல் ரீதியாக சசி வகையறா தமிழகத்தைச் சுரண்டின என்பது உண்மை என்றாலும் நிலம் சார்ந்த அரசியல், கருத்தியல் ரீதியான ஜெ-வின் நடவடிக்கைகளில் அவர்கள் குறுக்கே வரவில்லை என்றே நினைக்கிறேன்.

ஜெ-வின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிந்த சசியை ஜெ - கழட்டிவிட முடிவெடுக்கும் முன் ஜெவுக்கு அதை எதிர்கொள்ளும் பெரிய ஆதரவுக்கரங்கள் கிடைத்திருக்கக் கூடும் அப்படி எதுவும் இல்லை என்றால் இவை வெறும் நாடகமே.

நாடகமும் இல்லை என்றால் 'கள்ளர்கள் இடத்தில் குள்ளர்கள்' (அதாவது வாமன அவதாரங்கள்) டோண்டு சாருக்கு பிடித்தபடி சொல்லவேண்டுமென்றால் 'தேவரியம் இருந்த இடத்தில் பார்பனியம்'

7 டிசம்பர், 2011

ஆ ராசாவின் 50 பைசா சாதனை !

குப்பனுக்கும் சுப்பனுக்கும் (இவிங்க தான் இழிச்ச வாய், படிக்காத பாமரன் என்று சொல்ல இவர்களைக் கேட்காமலேயே இவங்க பேரைப் பயன்படுத்தலாம்) 50 பைசா செலவில் அழைத்துப் பேசுவும், ஏழைகளுக்கு அலைபேசியை எட்டும்படி செய்ததுடன் நல்ல விலைக்கு விற்று ஏழை நாடான இந்தியாவை வளர்ந்த நாடாக்கியுள்ளார் ராசா என்ற பரபரப்புரை செய்யப்படுகிறது, இந்த கூத்துக்கு இடையே 'நான் வாய்த் திருந்தால் பலர் ஜெயிலுக்கு போகனும்' என்று ராசா திருவாய் மலர்ந்து சவடால் விட்டு எவனும் உத்தமன் கிடையாது என்று ஒப்புதல் கொடுத்தது வேற அது இந்த மாசம்.

நண்பர் திரு அப்துல்லா இப்படி எழுதுகிறார்,

"குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்? ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க‌.

நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது" - திரு அப்துல்லா

அவர் சார்ந்துள்ள இயக்கத்தைத் தாங்கிப் பிடிப்பது அவர் விருப்பம் அதில் ஒன்றும் தவறு இல்லை, ஆனால் உண்மைகளை திரித்தும், தவறான தகவல்களைத் தருவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது, 'ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை காசு கொடுத்து வாங்கப்படாத இயற்கைக் கொடை, அதை எவ்வளவுக்கு விற்கிறோமோ அதை லாபம் என்றே கருத வேண்டும்' என்கிறார்

அமெரிக்காவில் 2008ல் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் அமெரிக்க அரசுக்கு கிடைத்த தொகை $19.592 billion (ஒரு பில்லியன் = ஆயிரம் மில்லியன் = 100 கோடி) = 1900 கோடிகள், இந்திய ரூபாயில் = 76,000 கோடி

2010 கணக்கெடுப்பின் படி அமெரிக்க மக்கள் தொகை 30 கோடி அதில் மொபைல் வைத்திருப்பவர்கள் 30 கோடி பேர் = 30 கோடி இணைப்பு, கிட்டதட்ட எல்லோரிடமும் அலைபேசி உண்டு. அதாவது ஒரு இணைப்பின் 2533 ரூபாய் = 60 அமெரிக்க டாலர் அரசுக்கு கிடைக்கும். இந்தியாவில் இந்த உரிமத்தின் காலக்கெடு 20 ஆண்டுகள், ஒரு இணைப்பை 60 டாலருக்கு வாங்கும் அலைபேசி சேவை நிறுவனம் அதை 20 ஆண்டுகள் பயன்படுத்த முடியும். இந்தியாவில் செல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்கவைக் காட்டிலும் இருமடங்கிற்கும் சற்று கூடுதல் அதாவது 2011 கணக்கின் படி 86.5 கோடி பேர், 2008ல் 75 கோடி பேர் என்றாலும் அரசிற்கு கிடைத்திருக்க வேண்டியது அமெரிக்காவைப் போன்று இரண்டரை மடங்கு 1,75,000 கோடி. இவை உத்தேசக் கணக்கு தான், இவற்றின் அரசு மதிப்பீடு இன்னும் கூடுதலாகவே இருக்கும்.



இராசா ஏலத்தில் விற்றது 10,772 கோடி., ராசா குறைந்த விலைக்கு விற்றதால் தான் 50 பைசாவிற்கு அலைபேச முடிகிறதாம். இதில் 14 விழுக்காட்டை (1537 கோடிக்கு) ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் அதை 670 விழுக்காடு லாபத்தில் கிட்டதட்ட 10400 கோடிக்கு விற்றுள்ளது, 14 விழுக்காட்டிற்கே ஏலம் எடுத்த நிறுவனத்திற்கே 6.7 பங்குக்கு வருமானம் கிடைத்தால் மீதம் உள்ள 84 விழுக்காட்டிற்கு கிடைக்கும் லாபம் (10773 - 1537) கிட்டதட்ட 61,881 கோடிகள், அதாவது 10 ஆயிரம் கோடிக்கு அரசு விற்பனை செய்தவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் விற்றது அல்லது லாபமாக நினைத்தது 70 ஆயிரம் கோடி. ஏலம் எடுத்தவர்களிடம் வாங்கியவர்களுக்கு இது கிட்டதட்ட அவர்கள் மறுவிற்பனையில் வாங்கும் போது அதன் பலன் அதைவிட இரண்டரை மடங்கு என்று தெரிகிறது, அதாவது ஸ்வான் டெலிகாமிடம் ஸ்பெக்டரம் வாங்கிய எடிசலாட்டிக்கு அதன் மதிப்பு இரண்டரை முதல் மூன்று பங்குவரையிலானது. இதைத்தான் மொத்தமாக மறுவிற்பனையில் கிடைக்கும் ஒருலட்சத்து 75 ஆயிரம் கோடி நட்டம் என்கிறார்கள்.

அமெரிக்காவில் 2008 நடந்த 2ஜி ஏலத்தின் மதிப்புகள் ஏற்கனவே தெரிந்தவை தான், இவற்றைப்பற்றி ஒரு மத்திய அமைச்சர் அறிந்திருக்காமல் குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டார் என்பதும் முந்தைய வழிகாட்டுதலைப் பின்பற்றினார் என்பதும் மாட்டிக் கொண்ட சமாளிப்பு வாதம் தான். உண்மையில் குறைந்த விலைக்கு விற்று அதைப் பயன்படுத்தும் விதிமுறைகளுடன் கொடுத்திருந்தால் ஒரு அழைப்புக்கு 50 பைசா என்ற நிலை 5 பைசா என்ற அளவிற்குக் கூடக் கிடைத்திருக்கலாம்.

இன்னும் சொத்தை வாதமாக 10 ஆண்டுக்கு முந்திய பழைய லேண்ட் லைன் கட்டணங்களை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் 10 ஆண்டுக்கு முன்பு பேசும் கட்டணங்கள் இன்றைய கட்டணங்களை விட 10 மடங்கு வரையில் இருந்தன. முன்பு அழைப்பு ஒன்றுக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருவெள்ளி செலவு பிடித்தது, தற்போது அழைப்பு அட்டைகள் மூலம் அதே ஒரு வெள்ளிக்கட்டணத்திற்கு 30 - 50 நிமிடங்கள் வரை பேசலாம், அதே போன்ற சில சலுகைக்கட்டணங்களும் கூட முன்பைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது, இதற்குக்காரணம் இன்றைய தொழில் நுட்ப உத்தியே அன்றி ராசா செய்த சாதனை என்று எதுவும் இல்லை, மற்ற நாடுகளிலெல்லாம் ராசா தான் கட்டணம் குறைக்க சாதனை செய்தாரா ?

20 ஆண்டுக்கு முன்பு 75 ஆயிரம் கொடுத்து வாங்கிய கணிணிகள் அதைவிட பலமடங்கு வசதி வேகத்துடன் 20 ஆயிரத்திற்கே இன்றைக்கு கிடைக்கிறது, இதெல்லாம் ஐடி அமைச்சாராக இருந்ததால் நாட்டு மக்களுக்கு கிடைத்த நற்பலன் என்று சொன்னால் கேட்டுக் கொள்ள நாம் என்ன ஆடுகளா ?.

அண்ணன் அப்துல்லோ போன்றோர் பொறுப்பற்று ராசா மிகப் பெரிய சாதனையாளர், போற்றுங்கள் என்று எழுதுவது அவர் மீதான மதிப்பைக் குறைக்க வில்லை என்றாலும் நேர்மையை ஐயம் கொள்ளச் செய்கிறது.

முழுப்பூசினிக்காயை சோற்றில் மறைத்தாலும்.....எத்தனை நாளைக்கு ? பூசனிக்காயே அழுகி வெடித்து நாறிக் காட்டிவிடும், ராசாவின் சாதனைகள் என்று சொல்லப்படுபவை அப்படித்தான்

21 நவம்பர், 2011

விஜயகாந்த் சட்டசபைக்குச் செல்லாதது ஏன் ?


திமுகவுக்கு எதிராக அடித்த சட்டசபைத் தேர்தலில் 29 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர் என்ற பெருமை தேமுதிகவிற்கு கிடைத்துவிட்டது, ஒரு ஆண்டு சென்றதும் தான் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வேன் என்று கூறி இருந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனால் எதிர்பார்த்தப்படி உள்ளாட்ச்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியால் இருந்து கழட்டிவிடப்படவே உதிரிக்கட்சிகளைத் தேற்றிக் கொண்டு உள்ளாட்ச்சித் தேர்தலை சந்தித்தார் குறிபிட்டபடி எந்த ஒரு நகராட்ச்சிக் கூடக் கிடைக்காத விரக்தியில் இனி அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வதன் மூலமே மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும் என்று நினைக்கிறது தேமுதிக.

மற்றக் கட்சிகளைப் போன்று அரசியலில் நீண்டகாலம் இருந்த ஒரு தலைவரின் தோற்றுவிப்பாக தேமுதிக இருக்கவில்லை, திராவிடக்கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்ற எதிர்ப்பார்புகளாலும், ரஜினி போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படலாம் என்று நினைத்த மக்களின் எதிர்ப்பார்ப்பை மூலதனமாக வைத்து தேமுதிக துவங்கப்பட்டது, எதிர்ப்பார்ப்பிற்கும் மேலாக சுமார் 8 விழுக்காட்டினரின் வாக்குகளை தேமுதிக தக்க வைத்துள்ளது, இந்த வாக்குவிகிதம் சரியாமல் இருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சிப்பதவிகள் உருவாக்கப்பட்டு பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு தேர்தலுக்கு வேலை பார்க்கும் அளவுக்கு தொண்டர்களை உருவாக்கி இருந்தது தேமுதிக. தமிழ்நாட்டின் எந்த மாவட்ட சட்டமன்ற தொகுதி என்றாலும் 10000 வாக்குகள் வரையிலும் தேற்றிவிடும் அளவுக்கு தேமுதிக வலுவாகவே உள்ளது.

அதிமுக - திமுக - அதிமுக - திமுக என்று மாறி மாறி வேறு வழியின்றி மக்கள் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சூழலில் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கும் தேமுதிக பொறுப்பான எதிர்கட்சியாகச் செயல்பட்டால் இந்த அதிமுக - திமுக சுழற்சியைத் தடுக்க முடியும் என்பது உண்மை தான். கருநாநிதி சரி இல்லை என்று தான் ஜெ -விற்கு மறு வாய்ப்பு வழங்குகிறார்கள், அதே போல் ஜெ சரி இல்லை என்றால் வேறு வழியின்றி கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்குறார்கள், கங்கு கொண்டிருக்கும் கொள்ளைக்கட்டையைவிட புகைந்து கொண்டிருக்கும் கொள்ளிக்கட்டையால் தலை அதிகமாக தீய்ந்து போகாது என்றே நினைக்கின்றனர், ஆனால் புகைந்த கொள்ளிக்கட்டை தலையில் ஏறியதும் மீண்டும் கங்கு கொள்ளத் துவங்குறது என்பதை மட்டும் வாக்கு அளிக்கும் மக்கள் உணருவதில்லை.

இது போன்ற சூழலில் புதியதொரு கட்சி ஆட்சி அமைக்க பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதன் மூலம் தான் வளரமுடியும். ஏனெனில் தமிழ்நாட்டின் மையப் பிரச்சனைகளுக்கு இயக்கங்கள் தேவையற்றது தான் இன்றைய அரசியல், திராவிர இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பண்ணையார்களின் ஆண்டான் அடிமை முறையை ஒழிக்கவும், அதற்கு ஆதரவு கொடுத்த காங்கிரசினை எதிர்த்து துவங்கியது. ஆனால் இன்றைய சூழலில் திராவிட அரசியல் என்பதும் அது முன் வைத்த திராவிட அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டதால், தன்னல நோக்காகவும் குடும்ப அரசியலாகத் தொடர்வதால், இவற்றிற்கு மாற்றுத் தேடு வேறெந்த மையப் பிரச்சனையும் இல்லை, இருந்த ஒரே ஒரு ஈழப்பிரச்சனையையும் அரசியல்வாதிகள் விருப்பம் போல் விளையாடி ஒழித்துவிட்டார்கள், எனவே அனைத்து மக்களை மையப்படுத்திய பிரச்சனைகள் இல்லாத சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி மாற்றங்களின் விடையாக நிற்கிறது.

29 இடங்கள் சட்டமன்றத்தில் பிடித்திருப்பது தேமுதிகவிற்கு பலம் தான், ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகள் எழுப்பி குடைச்சல் கொடுத்துக் கொண்டு சட்டமன்ற செயல்பாடுகளின் கவனத்தைப் பெற்று மக்கள் செல்வாக்கப் பெற முடியும் என்று தேமுதிக நினைக்கிறது, அதிமுக கூட்டணியில் இணைந்து அந்த இடங்களைப் பெற்றதன் மூலம் நேரடியாக சட்டமன்ற விவாதங்களில் தானும் பங்குபெறுவது விஜயகாந்த் தனக்கு பலவீனம் என்றே நினைக்கிறார். இதற்கு மாற்றாக வெளியில் இருந்தே ஆளும் கட்சியை கடுமையாகச் சாடி தேமுதிகவை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்.

இதற்கு இடையே அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்பு மற்ற நடிகர்கள் விஜய் உள்ளிட்டவர்கள் கட்சித் துவங்கினால் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஆபத்து தான், ஏனெனில் விஜயகாந்தை அரசியல்வாதியாகப் பார்த்து வருவது அல்ல இன்றைய வாக்குகள், அவருக்கு கிடைக்கும் வாக்குகளும் செல்வாக்கும் அவரைப் போன்று திரையில் இருந்துவரும் பிற நடிகர்களுக்கும் கிடைக்கும். குறிப்பாக விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும், மற்றபடி விஜய் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவார் என்றெல்லாம் நான் நம்பவில்லை.

விஜயகாந்து வரும்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவாரா என்பதெல்லாம் அதிமுக - திமுக கட்சிகளின் செயல்பாடு பொறுத்தது, விஜயகாந்தின் செல்வாக்கை ஒடுக்க இந்த இருகட்சிகளே கூட ஏதாவது நடிகரைத் தூண்டிவிட்டு புதுக் கட்சித் துவங்கினால் தான், விஜயகாந்தை அடுத்த தேர்தலில் அவற்றால் சமாளிக்க முடியும்.

12 நவம்பர், 2011

தினமலர் வேறு தொழில் செய்யலாமே !

தினமலரின் திரித்தல் தெரிந்தும் பலர் படிப்பதற்குக் காரணமே அது எந்த அளவுக்கு கேவலாக செய்திகளை வெளியிடுகிறது, பொய் பரப்புகிறது, இட்டுக்கட்டி எழுதுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு பதலடிக் கொடுப்பதற்குத்தான், வெகுஜன ஊடகம் என்று கடைவிரித்திருக்கும் தினமலருக்கு இதைச் செய்யாவிட்டால் அவை வழக்கமான வாசக மந்தைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும், பொதுப் புத்திகளை வாசகர்களிடையே உருவாக்குவதில் தினமலருக்கு நிகர் வேறு எந்த நாளிதழும் இல்லை, மற்ற நாளிதழ்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு நிலையிலேயே நீடிக்கும் ஆளும் கட்சிக்கு அடிவருடுதல் என்ற நிலை அவர்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, ஆனால் தினமலர் அப்படிப்பட்டது அல்ல, அவர்கள் அடிவருடும் அரசியல் கட்சி எப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியாகத்தான் இருக்கும், சென்ற திமுக ஆட்சியின் போது ஓயாமல் ஜால்ரா அடித்து செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு பகுதியே ஒதுக்கி இருந்தது தினமலர், கருணாநிதியின் அரசியலை மறைமுகமாக எதிர்த்தாலும் விளம்பர லாபம் கருதி திமுக ஆளும் கட்சியாக இருந்த போது எப்போதும் ஜால்ரா அடித்தும், சிலவற்றை விமர்சிக்காமல் அடக்கியும் வாசித்தது. இருந்தாலும் கருணாநிதியின் ஆட்சி நீடிப்பதை தினமலர் விரும்பி இருக்கும் என்பது ஐயமே.

எம்மைப் போன்றவர்கள் கருணாநிதியையும் அவரது அரசியல் நிலைப்பாட்டையும் விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் அடிப்படைக்காரணம் உண்டு, திமுக கருணாநிதியின் வாரிசுகளால் ஆக்கரமிக்கப்பட்ட பிறகு அது தன் அரசியல் பாதையில் இருந்தும் கொள்கைகளிலிருந்தும் முற்றிலுமாக விலகி, ஊழல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்டவைகளிலும், மதுரை தினகரன் உள்ளிட்டவைகளில் கொலையானவர்கள் குறித்து அனுதாபமே இல்லாமல் குடும்பமாகக் கூடிக் கொண்டது மேலும் குறிப்பாக இலங்கைப் போராட்டத்தின் போது காங்கிரசின் கைப்பாவையாக செயல்பட்டார்கள் என்பதே. ஆனால் இவை போன்று கொள்கை ரீதியாக கருணாநிதி பற்றிய விமர்சனம் செய்யாத தினமலர் வழக்கமான திராவிட அரசியல் காழ்புணர்வு மற்றும் கருணாநிதி பற்றிய தீவிர வெறுப்பு என்ற நிலையிலேயெ உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகிறது, அரசியல் மட்டுமல்ல திரைத்துறையைச் சார்ந்த நடிகைகளை விபச்சாரிகள் என்று கூறி அவர்களை அடையாளப்படுத்துவதாக படங்களை வெளியிட்டு திரைத்துறையினரிடம் செருப்படிப் படாத குறையாக கண்டனங்களைப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டது

******

எந்த ஒரு குற்ற (கிரிமினல்) வழக்கிலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று நீதிபதிகளே குறிப்பிடுவது கிடையாது, காரணம் குற்றம் சுமத்தப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்பது தெளிவு, விசாரணைகள், சாட்சிகள் அடிப்படையில் தான் ஒருவர் குற்றவாளி, குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது, மற்றபடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்படுவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் (accused) என்றே அழைக்கப்படுகிறார்கள். வழக்கு முடியும் வரை குற்றத் தொடர்புடையவர் குற்றம் சுமத்தப்பட்டவர் என்றே அழைக்கபடுவர், ஒருவர் குற்றமற்றவரா என்று தெரியாமல் அவரை குற்றவாளி என்று தொடர்ந்து அழைப்பது தான் குற்றம். 30 ஆண்டுகளாக நாளிதழ் நடத்திவரும் தினமலருக்கு இது தெரியாதா ? இவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது என்றால் 'பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் சங்கராமன் கொலைக் குற்றவாளி ஜெயந்திர சரஸ்வதி ஆஜரானார்' என்று செய்திகள் போட்டு இருக்கலாமே இவர்கள், பிறகு ஏன் ?


இது போன்ற கேவலாமான காழ்புணர்வு தலைப்புகளை இட்டு செய்தி வெளியிட்டு வாசகர்களின் பொது அறிவையும் பாழ்படுத்தும் தினமலரின் செயல் கண்டிக்கத்தக்கது, திமுகவினர் நினைத்தால் மேற்கண்ட இழிவிற்கு மான இழப்பு வழக்கே தொடுக்கலாம், செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறதோ தினமலர், நான் கனிமொழி இராசா ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று சொல்லவரவில்லை, அவற்றை முடிவு செய்வது நீதிமன்றம் தானே. இப்படிப்பட்ட இழிதொழிலாக்கி நாளிதழ் நடத்துவதற்கு ஆளும் அரசியல்வாதிகளுக்கு குண்டி கழுவி விட்டு சேவை செய்து துட்டுப்பார்க்கலாம், துய்மை செய்யும் தூய பணி. செய்வார்களா ?

16 செப்டம்பர், 2011

64 ஆம் நாயன்மார் தேவநாதர் வரலாறு !

பின்னொரு காலத்தில் தேவநாதரைப் பற்றி அறிந்து கொள்ளவும், தேவநாதரை 64 ஆவது நாயன்மாராக ஆக்க வேண்டுகோள் வைத்துள்ள சிவ அன்பர்களைப் போற்றி, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெறத் தக்க பேறு பெற்ற தேவநாதர் நாயன்மார் வரலாற்றை சுறுக்கமாக எழுதத் தலைப்(ப)பிட்டுள்ளேன்.

முதுபெரும் அரசியல்வாதிகளும், மாமன்னர்களும், சைவ வைணவ சமய குரவர்களும் வாழ்ந்த நற்பூமியாம் பல்லவ நாட்டின் தலைநகராம் காஞ்சி மாநகரம், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமென்பர் அது போல் காஞ்சி மாநகர் குறித்த மற்றொரு முதுமொழி உண்டு, 'காஞ்சிக்கு சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்' என்பதே அது, அதன் பொருள் அறியா மூடர் சிலர், அவர்களின் சோம்பேறிகளாகப் பலர், காஞ்சிக்குச் சென்றால் காலாட்டிக் கொண்டே இருந்தால் சாப்பிட்டுவிடலாம் என்று காஞ்சி வந்து காலாட்டி கால்வீங்கிப் பின்னர் பிச்சைக்காரர்களாக அங்கேயே தங்கிவிட்டனர். மூடர் அறியாரோ முதுமொழி ? என்னும் பழமொழிக்கேற்ப அடே மடையர்களே காஞ்சியில் காலாட்டிப் பிழைப்பது என்பது அவ்வூரில் புகழ்பெற்ற நெசவுத் தொழில் என்பதாம், அஃதாவது கால்களால் ஆட்டி ஆட்டி தறிபோடும் தொழில் தான் காலாட்டிப் பிழைக்கும் தொழில் என்பர். காஞ்சி மாநகருக்கு நெசவு மட்டுமா புகழ் ? உலகுக்கே ஆன்மிகப் பேரொளி வீசம் ஶ்ரீஶ்ரீஶ்ரீ காஞ்சி காமகோடிப் பீடம் அமைந்துள்ள நகர் தான் காஞ்சிமாநகர், ஆதிசங்கரர் நான்முகமாய் நான்கு நகரங்களில் சங்கரமடங்களை நிறுவிவிட்டு பஞ்சரத்தினமாக காஞ்சியில் ஒன்று அமைக்க முடிவு செய்திருந்த போது முக்தி அடைந்தார், ஆதி சங்கரரின் சங்கல்பம் (எண்ணம்) அறிந்த கும்பகோண மடப் பெரியவாக்கள் தங்கள் மடத்தை காஞ்சிக்கு இடம் பெயர்த்து சங்கரரின் சங்கல்பம் பூர்த்தி பெற்று அருளாசி வழங்கிவருகின்றனர். காஞ்சிமடம் எதைச் சேர்ந்தது என்று கேட்டால் வரலாறு தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்றே நான் இந்த பிட்டுகளை இங்கே போட்டு வைக்கிறேன். காஞ்சிக்கு பெருமை மட்டும் தானா ? சிறுமையும் கூட இருக்கிறது, நாத்திகன் ராமசாமியின் சீடன் அண்ணாத்துரை பிறந்து வளர்ந்ததாம் இவ்வூர், நல்லோர் நல்லூரின் நரிகளும் வாழ்ந்திருக்கின்றன என்பதைச் சுட்டவே யாம் இங்கு அண்ணாதுரைப் பற்றிச் சுட்டியுள்ளோம். நல்லது தேவநாதருக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்ப்பு ? ஏன் காஞ்சியைப் பற்றி பெருமை பொங்க எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது அறிவோம்,

சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் நாயன்மார்கள் வரலாறு எழுதும் போது அவர்கள் வாழ்ந்த சென்ற ஊர்களின் பெருமைகளை எழுதி பின் அவர்களைப் பற்றிச் சொல்வது பக்தி இலக்கிய வழக்கம் என்று வழிசொல்லி இருக்கிறார். யாமும் அதைப்பின் ஒற்றியே தேவநாதர் வாழ்ந்துவரும் காஞ்சிமாநகர் தம் பெருமைகளை எடுத்துரைத்தோம். அப்பேரு பெற்ற காஞ்சி மாநகரில் மச்சேஸ்வர நாதர் என்ற பெயரில் உலகாளும் உமையாளின் மனாளன் கோவில் ஒன்றில் குடிகொண்டிருந்தார். அம்மச்சேஸ்வர நாதர் ஆலயத்தில் ஆறுகாலப் பூஜைகளுடன் நடுச்சாம பூஜைகளையும் செவ்வனே செய்து வாழ்ந்து வந்தார் தேவநாதக் குருக்கள், தேவநாதர் தம் பெயருக்கு ஏற்படியே தேவந்திரனை தலைவராக கொண்ட பிராமணச் சமூகத்தில் விளைந்த பிராமண குலக் கொழுந்து, சாதா காலமும் இறைச் சேவை செய்து கொண்டிருந்தாலும் தேவநாதரின் நாட்டம் அர்சனைக்கு வரும் பெண்கள் மீதே இருந்தது. இதனை மச்சேஸ்வரர் அறிவாரா ? உலகாளும் ஊர்த்தாண்டவர் ஒவ்வொரு உயிர்களின் உள்ளத்திலும் ஆடுகிறார், தேவநாதரின் சிந்தை அறியாமல் இருப்பாரோ ?

மச்சேஸ்வரநாதருக்கு பக்தர்களை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பது வழக்கம், பக்தர்களை மட்டுமா ? என்கிறீர்ளே நான் அர்சகர்களையும் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன் என்பதை காட்ட விரும்பிய பெருமானார் மச்சேஸ்வர,ர் ஒரு நாள் பக்தை வடிவில் அர்சனைத் தட்டுடன் வந்தார். அப்போது குருக்கள் பணியில் இருந்த தேவநாதர் 'அப்பப்பா இம்மண்ணுலகில் இவ்வளவு அழகான பெண்ணா ? ' வியந்தார், காமம் தலைக்கேறியது, மயக்கும் மஞ்சளாக செவ்வானம் லேசான தென்றல், மல்லிகை மணம், உள்ளத்தை கொள்ளையடிக்கும் குமரிப் பெண், ஒரே கண் ஜாடையில் சம்மதம் பெற்றார் தேவநாதர். கருவறைக்கு அழைத்துச் சென்று அவள் ஆடையைக் களைய.........ஆவேசம் அடைந்த பெருமானார் பெண் உரு மறைய சடாமுடிகளுடன் தன் உருபெற்று நெற்றிக்கண் திறக்க 'தேவ நாதா நீ என்ன காரியம் செய்கிறாய் ? இது என் கருவறை என்று தெரியாதா ? உன்னை எரித்துவிடுகிறேன்.......என்று சொல்ல, அங்குள்ள மணிகளெல்லாம் கிண் கிண் என அடிக்கின்றன, பதட்டம் அடையாத தேவநாதர் மிகப் பொருமையாக 'ஐயனே தங்கள் தரிசனம் பெற்று பாக்கியம் பெற்றேன், ஆனாலும் நீங்கள் கோபப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை' என்று கூறினார், கருவறையில் கசமுசா செய்வது தவறு என்றே உமக்குத் தெரியாதா ? என்று மேலும் சினமானார் இறைவர். ஐயனே நீர் இல்லாத இடம் ஏது ? என் வீட்டுப் படுக்கையறையிலும் பஞ்சுத் தலையிணையிலும் கூட நீர்தான் இருக்கிறீர். காணும் இடங்களில் எல்லாம் பரம்பிரம்பம் உமை தரிசிக்கும் எனக்கு கருவறை ஒன்றும் தனித்த இடமாகத் தெரியவில்லை, தவறிருந்தால் என்னை மன்னியுங்கள். இருந்தாலும் நான் தவறாக எதையும் செய்துவிடவில்லை என்று கூறினார்.

தேவநாதரின்ன் மெய்யறிவை மெச்சிய பெருமானார் மகிழ்ந்து பார்வதியை வரவழைத்து தம்பதி சகிதமாக காட்சி தந்து 'நீயே உண்மையான சிவ பக்தன்.....வா என்னோடு' என்று கையிலாயம் அழைத்துச் சென்றார்.

கருவறை ஈசனவன் காட்சிதந்தவனைக் கேட்க,
நில்லா இடமென்றோ செல்லா இடமென்றோல்லாமல்
எல்லாவிடத்திலிருக்கும் எம்மீசன், இவ்விடத்தில் மட்டும்
நிற்கானோ என்றுரைத்த தேவநாதன்

தேவநாதர் வரலாறு முற்றிற்று.

*****

தேவநாதருக்கு மச்சேஸ்வரர் காட்சிக் கொடுத்த மார்க்ழி திங்கள் 11 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் தேவநாதர் பிறந்த பழைய சீவாரம் மக்கள் வெகு விமர்சியாகக் கொண்டாடிவருகிறார்கள். ஆண்டு தோறும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு வந்து தேவநாதர் பெயரில் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்கின்றனர்.

சைவ சமயத்தில் மட்டும் தானா இம்மாதிரி கசமுசா கதைகள் உள்ளன ? வைணவத்திலும் உண்டு அவர்களில் சிலர் ஆழ்வார்கள் ஆகியுள்ளனர், 'சிந்தாமணி' என்ற பொதுமகளிடம் 'லீலா சுகர்' என்ற வைணவர் அடிமைப்பட்டிருந்து பின்னர் திருந்தினாரே?​ 'தேவ தேவி' என்னும் விலைமகளிடம் விப்ர நாராயணர் சரணடைந்திருக்க,​​ அரங்கன் அவரை மீட்டாரென்பது வரலாறு

*********

இந்தக் கதைகளை நான் பக்தியாளர், நெறியாளர் ஐயா இராம கோபாலன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். ஏனெனில் அவர் தான் நாத்திகர் அண்ணாதுரைக்கு கோவிலில் வைத்து மரியாதைச் செய்வதை தார்மீக ரீதியில் எதிர்த்து,

அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?: ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பினார்

8 ஜூன், 2011

கனிமொழி தின்ற உப்பு !

மக்களாட்சி அரசியலும், அரசு பதவிகளும் குடும்பச் சொத்தாக மாற்றி கையகப்படுத்தும் முயற்சியின் குறுக்கு வழிகள் எவ்வளவு பேராபத்தானவை என்பதை இந்தியாவிற்கு பாடமாக வைக்கும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் பற்றி இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்பட்டுவருகிறது. திராவிட அரசியலில் வெற்றிகரமாக 5 முறை முதல்வர் பதவியையும், பல்வேறு மத்திய அமைச்சர் பதவிகளை தன் கட்சியினருக்குப் பெற்றுத் தந்த கருணாநிதி இன்று வேதனையில் இருக்கிறார், இந்த சூழலில் அவரது நாக்கும், எழுத்து இலக்கிய நடையின் சுவை மாறாது அந்த வேதனையை 'திகார் சிறையின் கடும் வெப்பம் பறித்து வைக்கும் அன்றைய மலர்களைக் கூட 10 நிமிடத்தில் கறுக்கி விடும்' என்று பேச முடிகிறது.

கருணாநிதி நான்கு முறை முதல்வராக இருந்தும் கூட (இரண்டாம்) துணைவி திருமதி ராசாத்தி அம்மாளும் அவரது மகளும் அரசியல் சார்ந்த பதவிகளுக்கு உரிமை கோர கருணாநிதி அனுமதித்து இருக்கவில்லை அல்லது அவர்களே ஆசைப்படவில்லை. கருணாநிதியின் வயோதிகம் மற்றும் தனக்கன எதிர்காலப் பாதுகாப்பு என்ற வகையில் கருணாநிதியின் அரசியல் (சொத்துக்களின்) வாரிசுகளில் ஒருவராக தன்னையோ தன் மகளையோ ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நெருக்குதல் காரணமாக ராசாத்தி அம்மாளின் தூண்டுதல் மூலமாகவோ கனிமொழி அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது. 'என்னால் தானே இத்தனையும் ?' என்று கனிமொழியிடம் சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்த போது இராசாத்தி அம்மாள் வேதனையுடன் அழுது கொண்டே கூறினாராம் (ஜூவி) இது கற்பனையென்றாலும் கூட மெய்பிக்கும் வண்ணம் தேர்தலுக்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு முன்பே, கருணாநிதி ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் இராசாத்தி அம்மாளின் கட் அவுட்டுகள் இருந்ததை மறுப்பதற்கில்லை.

கருணாநிதியின் வழிகளில் ஒன்றாக இலக்கியம், கவிதை என்ற ரீதியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இலக்கிய வட்டத்தில் வளர்ந்த கனிமொழி, கருணாநிதியின் அரசியல் வாரிசாக மாற்றிக் கொண்டு வளர்ந்தவிதம் முழுக்க முழுக்க இராசாத்தி அம்மாளின் நச்சரிப்பினால் தான் நடந்திருக்க வேண்டும். தயாளு அம்மாவின் ஆண் வாரிசுகள் (ஸ்டாலின், அழகிரி) அரசியலில் கொடி கட்டிப் பறப்பதைப் பார்க்கும் போது இராசாத்தி அம்மாள் தான் பெற்ற ஒரே ஒரு வாரிசு அவ்வாறு உச்சத்தை அடைய நினைத்தது அவரது எண்ணப்படி தவறு இல்லை, ஆனால் கனிமொழி மீதான அவரது அரசியல் திணிப்பு அவரை நீராராடியாவின் நெருக்கம் அளவிற்கு செல்ல வைத்து, குறுக்கு வழியில்ர ( அன்பு மணி / இராமதாஸ் ஆசைப்படும்) மேலவை உறுப்பினர் ஆக்கி, ஊழலில் முகாந்திரம் இருந்து விசாரணைக்கு சிறையில் அடைக்கும் அளவுக்கு ஆக்கியுள்ளது.

என்ன தான் மாட மாளிகை தங்கத்தில் இழைத்த வீடு என்றாலும் ஒருவர் அதில் தனியாக இருப்பது கொடுமையான ஒன்று தான், அதே நிலையை சற்று எதிராக திகார் சிறை பற்றி நினைத்துப்பாருங்கள், பத்து - பத்து சதுர அடியில் ஒற்றை கழிவரை, இவ்வளவு நாள் குடும்பம், கட்சியினர், மகன் என்று தன்னைச் சுற்றிலும் யாராவது இருந்து கொண்டே இருந்த ஒருவர் சிறையில், எப்போதும் எதிர்கால அரசியல் வளர்ச்சி பற்றி சிந்தனையில் இருந்த ஒருவர் இரவுப் பொழுதை தனிச்சிறையில் கழிப்பதென்பது எவ்வளவு கொடுமையான ஒன்று.

இதை எழுதும் போது எனக்கு கருணாநிதியின் ஈழம் குறித்த செயல்பாடுகள் கூட நினைவுக்கு வரவில்லை, நான் இதை திமுக எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலையில் இருந்து கூட எழுதவில்லை. இன்று கனிமொழிக்கும், கலைஞர் தொலைகாட்சி இயக்குனர் சரத் குமாருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாம். இதன்படி மீண்டும் திகாருக்குச் செல்கிறார்கள், இனி எப்போது கனிமொழி வழக்கில் இருந்து மீண்டுவருவாரா அல்லது தண்டனையின் தொடர்ச்சியாக தொடர்வாரா என்பது கேள்விக்குறி ? கனிமொழியின் இன்றைய நிலைக்கு திருமதி ராசாத்தி அம்மாளின் பேராசையும், அதற்கு தடை போட வக்கிலாமல் இன்றும் இலக்கிய சுவை மாறாது பேசும் கருணாநிதியும் தான் காரணம். கனிமொழியும் தெரிந்தே தவறு செய்திருக்கிறார் காரணம், அரசியல் அதிகாரம் தன் தந்தையின் கட்டுப்பாட்டை மீறிவிடாது என்ற நம்பிக்கையாக இருந்திருக்கலாம். இதில் பரிதாப்பபட வேண்டிய இருவர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் அவர்களது வாரிசு ஆதித்யா தான், வேறு எவரையும் விட கனிமொழியின் அன்பும் அரவணைப்பம் இவர்கள் இருவருக்குத்தான் தேவைப்படும். இவர்களுக்காக கனிமொழி மீதான அரசியல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

தாயார் இராசாத்தி அம்மாள் காய்ச்சியை உப்பை, தந்தை கருணாநிதியிடம் கொடுத்து ஊட்டிவிடச் சொல்ல கனிமொழியும் ஆசை ஆசையாக தின்றுவிட்டார்.

கூடா நட்பு ? அது காங்கிரசா ? அல்லது இராசாத்தி அம்மாளுடன் மத்திய அமைச்சர் பேரத்திற்காக பேசிய நீரா ராடியாவா ? சொன்ன கருணாநிதிக்கே வெளிச்சம்.

7 மே, 2011

திமுகவின் அருவெறுப்பான முகம் !

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன் கதை தான் நினைவுக்கு வந்தது, ஒருவேளை கற்பனைக் கதை என்றாலும் கூட ஒரு விலங்கிற்கு வேண்டுமென்று அநீதி அளித்தது கூட தண்டனைக்குரியதே என்கிற தகவலுடன் அரசன் உறவுகள் பார்க்காது நீதியை நிலைநாட்டவேண்டும் என்கிற நீதிக்கதை, இன்றளவும் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது.

*****

ராசா தலித் என்பதால் பார்ப்பன ஊடகங்கள் ஸ்பெக்டரம் ஒதுக்கீடை வைத்து ஊழல் கதை எழுதி ஊதிப் பெருக்கிவிட்டன, ராசா குற்றமற்றவர் என்று தெரிவித்துவந்ததுடன், வீரமணி உள்ளிட்ட தனது நலவிரும்பிகள் மூலம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊடகத்திற்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி.

மகளுக்கு சிபிஐ சம்மன் என்றதும் பிரபல 'கிரிமினல்' வழக்கறிஞர் பார்பனர் ராம்ஜெத்மலானியின் கையைப் பிடித்து கொஞ்ச......ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா தான் முழுப் பொறுப்பு கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும் என்று மலானி நீதிமன்றத்தில் தெர்விக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் நீதிமன்றத் தலையீட்டால் வேறு வழியின்றி காங்கிரஸ் - திமுகவினால் பலியிடப்படும் ராசா இன்றும் அதே தலித்துதான். ஜெத்மலானி 'ராசா தான் முழுப் பொறுப்பு' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக திமுகவினரிடமோ, கருணாநிதியிடமோ சொல்லி இருக்கமாட்டார் என்று நம்புவதற்கு இல்லை. ராசா பகிரசங்கமாகவே காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்.



இவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும் ? அழகிரியும் - மாறன் சகோதர்களும் மீண்டும் இணைந்த போது முன்பு தினகரன் அலுவலகத்தில் கொல்லப்பட்ட மூவரை முற்றிலுமாக மறந்து இனித்த இதயமும் பனித்த கண்களும் தானே இவர்களது. மனைவியைக் காப்பாற்ற தொலைகாட்சி இயக்குனர் சரத்குமார், மகளைக் காப்பாற்ற ராசா பொறுப்பேற்கிறார்கள்,

திமுகவை திராவிடக் கட்சி என்றும், திமுகத் தலைவரை தமிழினத் தலைவர் என்றும் ஒருகாலத்தில் நான் கொண்டாடியதை நினைத்தால் மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. பாவம் ராசா !

27 ஏப்ரல், 2011

துறவியின் மறுபக்கம் !

அரசியல் ஒன்றும் பொதுச் சொத்து அல்ல வாரிசுகள் வரிந்து கட்டிக் கொள்ள என்று ஒருசாரார் வாரிசு அரசியலைச் சாடுகிறார்கள். இந்த நிலையில் பழைய நேர்காணல் ஒன்றை நினைவு படுத்த....


********

தமிழ்நாட்டு அரசியலின் அழுத்தமான அதிகார மையங்களில் ஒருவர் ராஜாத்தி
கருணாநிதி!

மகள் கனிமொழி, பேரன் ஆதித்தனுடன் வாழும் சி.ஐ.டி. காலனி இல்லம்தான்
கோபாலபுரத்துக்கு அடுத்து கழகத்தினர் காத்திருக்கும் முக்கியத் தலம். நீண்ட
யோசனைக்குப் பிறகு, பேட்டிக்குச் சம்மதித்தார் ராஜாத்தியம்மாள்.

''முன்பெல்லாம் கேமராவைப் பார்த்தாலே ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள், இப்போது
அடிக்கடி விழா மேடைகளில் தலைகாட்டுகிறீர்கள். அரசியல் பிரவேச ஐடியா எதுவும்
இருக்கா?''

''தலைவரின் மனைவி என்பதால் மட்டுமல்ல... கட்சிக்காரர்கள் நிறையப் பேர்
என்னையும் விழாக்களுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தலைவரையும்
குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. அதையும் மீறி
நேரம் கிடைக்கும்போது மட்டுமே விழாக்களில் கலந்துகொள்கிறேன். கனி நடத்தும் விழா
என்றால், எப்படிப் போகாமல் இருக்க முடியும்? 'தலைவரின் பொண்ணு கனி அரசியலில்
இருக்கே... அது போதும் எனக்கு!''

''கலைஞரை நீங்களும் 'தலைவர்' என்றுதான் அழைப்பீர்களா?''

''எல்லோருக்கும் தலைவராக இருக்கும் அவர் எனக்கும் தலைவர்தான்! 'வாங்க... போங்க'
என்று எப்போதாவது அழைப்பேன். ஆனாலும், 'தலைவர்' என்று அழைப்பதில்தான் எனக்குக்
கம்பீரமே இருக்கு.''

''கழகத் தலைவர், குடும்பத் தலைவராக எப்படி?''

''வீட்டில் இருந்தாலும் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார். எதையாவது
எழுதிக்கொண்டு இருப்பார். ஃபைல்களைப் பார்ப்பார். 'அதைச் செய்... இதைச் செய்'
என்று மற்றவர்களையும் வேலை வாங்குவார். இப்போது மோட்டார் நாற்காலியில் அவர்
உட்கார்ந்துகொண்டு வரவேண்டிய நிலையிலும், ஓய்வு எடுக்காமல் வேலை
பார்க்கிறார்!''

''இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் நீங்கள் பொக்கிஷமாக வைத்திருக்கும் பொருள்
என்ன?''

''ஒரு சமயம் பெரியாரைப் பார்ப்பதற்காக நானும் தலைவரும் போயிருந்தோம். அப்போது
கனிக்கு ஒரு வயசு இருக்கும். அவளும் எங்களுடன்தான் வந்தாள். மணியம்மையாரும்
பெரியாரும் விருந்து தந்து எங்களை உபசரித்தார்கள். கிளம்பும்போது பார்சல் ஒன்றை
என்னிடம் நீட்டி 'இந்தாம்மா, இதைப் பரிசா வெச்சுக்க!' என்று சொன்னார் பெரியார்.
அந்த பார்சலில் என்ன இருக்கும் என்று அப்போதே எனக்கு ஆர்வம் பொங்கியது. காரில்
வீட்டுக்குக் கிளம்பும்போது 'சால்வையாகத்தான் இருக்கும்' என்றார் தலைவர்.
'பெரியார் பரிசாக் கொடுத்தது புடவைதான்' என்று சொன்னேன். 'பெரியாருடன் எனக்கு
நெருக்கம் அதிகம். அவரைப்பற்றி எனக்குத் தெரியும். பார்ப்போம் இதில் யார்
ஜெயிக்கிறார்கள்?' என்று தலைவர் சொன்னார். பார்சலைப் பிரித்தால், அழகான புடவை.
பெரியார் கொடுத்த அந்தப் புடவையை இப்போதும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.இதேபோல
பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் கொடுத்த கொடி ஒன்றையும்
பாதுகாத்துவைத்திருக்கிறேன். இரண்டு பேரும் திராவிட இயக்கத்தின் மூத்தவர்கள்.
அவர்கள் எனக்குக் கொடுத்த சொத்து அவை!''

''கனிமொழி இன்று தீவிர அரசியலில் வலம் வருகிறார். அவருடைய ப்ளஸ், மைனஸ் என்ன?''

''கனி நிறையச் சமூக சேவைகள் செய்து வருகிறாள். அது எனக்குப் பிடிக்கும். ஒரு
அம்மாவா எனக்கு இதை நினைத்துப் பெருமையாக இருந்தது. தலைவரின் பிறந்த நாளையட்டி
விருதுநகர், காரியாப்பட்டி பகுதியில் சின்னதா ஆரம்பிச்ச வேலைவாய்ப்பு முகாம்
இன்னிக்குப் பெரிய அளவில் வளர்ந்துக்கிட்டு இருக்கு. நாகர்கோவில், வேலூர்,
ஊட்டி, விருதுநகர், கடலூர்னு நிறைய ஊர்களில் இப்படி முகாம்கள் நடத்தப்பட்டு
இருக்கின்றன. 80 ஆயிரம் பேருக்கு மேல வேலை வாங்கிக் கொடுத்திருக்கு கனி. நாலு
வருஷமா பிரபலமாகி வரும் சென்னை சங்கமம் விழா, பெண்களுக்கு அரசியல் பயிலரங்கம், திருநங்கைகளின் முன்னேற்றம் என்று நிறைய விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் கனியைக் கொஞ்சம் கர்வத்தோடுதான் நான் பார்க்கிறேன். யாருக்குமே தெரியாம
அடிக்கடி ரத்ததானம் செய்வாள். யாருக்குமே தெரியாத விஷயம்... இரண்டு
வருஷத்துக்கு முன்னாடியே தன் உடலை மருத்துவமனைக்குத் தானம் கொடுப்பதா எழுதிக்
கொடுத்திருக்கு. சமீப காலமா தான் ரத்ததானம் கொடுக்கலை. காரணம், அது உடம்புலேயே
ரத்தம் இல்லை. அந்த அளவுக்குச் சாப்பிடாம, உடம்பை வருத்தி உழைச்சுக்கிட்டு
இருக்கு.

எனக்குப் பிடிக்காத விஷயம்... தனக்குன்னு எதுவுமே கனி செஞ்சுக்காது. எந்தப்
பொருள் மீதும் ஆசையோ, பற்றோ இல்லை. கழுத்தில் செயினோ, காதுல நகை நட்டோ
போட்டுக்க விரும்பாது. 'நகை போட்டுக்கம்மா'னு சொன்னா, 'வேண்டாம்'னு சொல்லி
என்கிட்டயே சண்டை போடும். ஒரு துறவி மாதிரிதான் கனி வாழ்ந்துட்டு இருக்கா!''

**********

ஈராண்டுக்கு முன்பு ஏதோ ஒரு வார இதழில் கருணாநிதியின் இணைவி திருமதி இராசாத்தி அம்மாள், தன் மகள் பற்றிக் பெருமையாக கூறியவை அவை.

மே 6 ஆம் தேதி துறவி பாட்டியாலா நீதிமன்றத்தை அலைக்கற்றை ஊழல் தொடர்பில் சந்திக்கிறார்கள்.

அரசியலில் பேரும் பொருளும் அடைவதென்றால் எவ்வளவு பெரிய ரிஸ்க், சும்மா எதையும் அனுபவித்துவிட முடியாது சார். வாரிசு அரசியில் என்று வயிறு எரிபவர்கள் சிந்திக்கவும்.

22 மார்ச், 2011

வைகோவின் நிலைப்பாடு பாராட்டதக்கது !

கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கிய வைகோ கருணாநிதியுடன் கூட்டணியில் இணைந்திருந்தார். கருணாநிதியின் தவறுகளால் ஆளுமையால் அதனை எதிர்த்து உருவாகிய அரசியல் கட்சிகள் அதிமுக, மதிமுக. அதிமுக வெற்றிகரமாக ஆட்சியில் அமர்ந்ததால் திராவிடக் கட்சிகளில் மக்கள் பலமிக்கத் தலைவர் தாமே என்பதை எம்ஜிஆர் நிருபனம் செய்தார். ஏற்கனவே உடைந்த திமுக கட்சியில் இருந்து பிரிந்ததால் வைகோவால் ஒரு மாற்று சக்தியாக உருவாக முடியவில்லை, இருந்த போதிலும் 50 தொகுதிகள் வரையிலான வெற்றித் தோல்விகளை முடிவு செய்யும் ஒரு கட்சியாக மதிமுகவை வளர்த்துவந்தார்.

ஜெ தனிப்பட்ட காழ்புணர்வின் மூலமாக பொடோ சட்டத்தில் ஓர் ஆண்டு வைகோவை சிறையில் அடைத்திருந்தாலும் கருணாநிதியை நம்பி அரசியல் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வைகோ விரும்பவில்லை. காரணம் திமுகவுடன் இணைந்து செயல்படும் மதிமுகவிற்கு கொள்கை என்று எதுவும் தனியாக இருக்காது, கட்சி வளர வாய்ப்பில்லை என்ற முடிவில் அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்றே ஜெவுடன் கூட்டணியில் தொடர்ந்தார்.

இதற்கிடையே இந்தத் தேர்தலுக்கு முன்பே வைகோ கட்சி பெருந்தலைகளை திமுக இழுத்துக் கொள்ள அரசியல் பலமில்லாதா வைகோவின் கட்சியை அதிமுகவும் கைப் பற்றிக் கொள்ள விரும்பவில்லை. அவர்களாகவே வெளியே செல்லட்டும் என்கிற ரீதியில் 8, 7 என எண்களைக் காட்ட இதற்கு மேல் ஜெ கூட்டணியில் தொடர்வது தனக்கு தனிபட்ட அவமானம் என்பதாக வைகோ தேர்தலை புறக்கணித்துள்ளார்.

வைகோ தேர்தலை புறக்கணிப்பதால் மதிமுக தொண்டர்களின் வாக்கு ? தன்னுடைய கட்சி தனித்து தேர்தலில் நின்றால் வாக்குகள் பிரியும் கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்றவதற்கு தடையாக அமையும் என்று தெளிவாகச் சொல்லி இருப்பதன் மூலம் மறைமுகமாக மதிமுக தொண்டர்களின் வாக்குகள் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக எடுத்துக் கொள்ளமுடிகிறது. வாக்குகள் சிதறாமல் அல்லது பிரியாமல் இருக்க அதிமுக கூட்டணிக்கே வாக்கு அளியுங்கள் என்று சொல்வதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ளமுடியும்.

இதற்கிடையே முன்னால் போயாஸ் தோட்டாத்து பூசாரி வீரமணி வழக்கம் போல் பார்பன சதி, ஆரியமாயை என்றெல்லாம் ஒரு கடிதத்தை வைகோவிற்கு எழுதியுள்ளார். இதன் மூலம் அதிமுகவிற்கு செல்லும் மதிமுகவினரின் வாக்குகளை முடிந்த வரையில் தடுக்க முடியும் என்பது திருவாளர் வீரமணியின் நம்பிக்கை.

ஈழப்படுகொலைக்கு ஆதரவு, இமாலய ஸ்பெக்டரம் ஊழல், சிக்கியவர்களின் தற்கொலைகள் என்று காட்சிகள் நடந்து வரும் வேலையில் திமுக கூட்டணி பக்கம் செல்லாமல் தேர்தலை புறக்கணித்ததுடன் வாக்குகள் சிதறாமல் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கச் சொல்லும் வைகோவின் நிலைப்பாடு சரிதான் என்று தோன்றுகிறது.

கட்சித் தொடங்கிய இருபது ஆண்டுகளுக்கு பிறகு வைகோவின் கட்சிக்கு அமைந்திருக்கும் இன்றைய நிலை நாளை தேமுதிகவிற்குக் கூட ஏற்படலாம். ஏனெனில் இந்தக்கட்சிகள் உருவாக வேண்டும், வளரவேண்டும் என்ற மக்கள் தேவை/விருப்பமாக இவை தோன்றாமல் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பங்களினால் தோன்றியுள்ளன.

வைகோ அரசியல்வாதி என்பதைத் தாண்டி நல்ல தமிழ் உணர்வாளர் என்பதால் அவரின் இந்த முடிவுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. வைகோவின் அரசியல் வாழ்க்கை எந்த ஒரு தொண்டனும் ஒரு வாரிசு அரசியல் கட்சியைச் சார்ந்து தானும் தலைவராக வளரமுடியும் என்று நினைத்தால் அதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே என்பதைக் காட்டுகிறது. அதாவது வைகோ திமுகவின் செயல்பாடுகளுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டே வந்திருந்தால் ஒரு வீரபாண்டியாரைப் போலவே திமுக அமைச்சராக ரிடையர் ஆகி இருக்க முடியும்.

சிரஞ்சிவியைப் போன்று அதிமுகவுடன் மதிமுகவை இணைத்து அரசியல் லாபங்களை அறுவடை செய்திருக்க முடியும், அது தனக்கு மட்டுமே நன்மை என்று நினைத்ததால் அதனை கைவிட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். இன்றைய தமிழகத்திற்குத் தேவை போலி திராவிட எதிர்ப்பு அரசியல் தான். வைகோ சீமானுடன் இணைந்து செயல்படுவது தான் மதிமுகவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். திமுகவும், அதிமுகவும் திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் அருகதையற்றவை. திமுக ஆட்சியில் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டிய கட்சி என்பதை இந்த சூழலிலும் வைகோ சுட்டியுள்ளார். அரசியல் தெளிவுகளைப் பெற இந்த தற்காலிக அரசியல் ஓய்வு வைகோவிற்கு பயனளிப்பதாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

7 மார்ச், 2011

திமுக - காங்கிரஸ் ஒன்று படுமா ?

அரசியல் கட்சிகளின் கூட்டணி துரோகங்கள் அரசியல் களத்திற்குப் புதியவை அல்ல. மாநிலம் தோறும் நடப்பவை தான். இப்போதெல்லாம் தேர்தல்காலக் கூட்டணிகள் தோர்தலுக்குப் பிறகு எப்படிச் செயல்படலாம் என்ற திட்ட வரையறையை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு கைகோர்கின்றன. இதன்படி தேர்தலுக்குப் பின் அணிமாறும் மருத்துவர் இராமதாஸ் போன்றே அனைத்துக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன. தமிழக காங்கிரசின் திட்டம் திமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று ஒப்பந்தம் போட்டு தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை ஒடுக்குவதே. இதன் மூலம் ஸ்பெக்டரம் விவகாரத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கு திமுகவே காரணம் என்று காட்டிவிட்டு தொடர்கைதுகளை நடத்த காங்கிரசு திட்டமிட்டு இருந்தது. இதனை அறிந்து கொண்ட கருணாநிதி காங்கிரசின் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கைக்கு உடன்படாமலும், முடிந்தவரை காங்கிரசின் கூட்டணி இடங்களைக் குறைப்பதன் மூலம் அதனைத் தடுக்கமுடியும் என்று நினைத்தார். திமுகவின் மனநிலை அறிந்து கொண்ட காங்கிரசும் முடிவில் இறங்கிவர மறுத்தது. காங்கிரசை வைத்துக் கொண்டாலும், கழட்டிவிட்டாலும் பாதிப்பு என்று உணர்ந்த கருணாநிதி காங்கிரசை கழட்டிவிடுவதே சரி, அதுவும் விஜயகாந்த் அதிமுக கூட்டணிக்குச் சென்ற பிறகு செய்தால் காங்கிரசால் தனித்து நிற்பதைத் தவிர்த்து ஒன்றும் செய்துவிடமுடியாது, தனித்து நின்றால் அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள், அதிமுகவுடன் சேர்ந்து தனக்கும் கட்சிக்கும் அவர்களால் ஆபத்து ஏற்படுத்த முடியாது என்றே முடிவெடுத்து இருக்கிறார் என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

மற்றபடி காங்கிரஸ் இத்தைகைய துரோக அரசியலுக்கு வரைபடம் வைத்திருக்காவிடில் காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி அரசமைப்பதில் திமுகவிற்கு எதுவும் கவுரவப் பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை, ஏனினெல் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரசுடன் கைகோர்த்து மத்திய அமைச்சரைவையில் கனிசமான இடங்களைப் பெற்ற திமுக, சட்டசபைத் தேர்தலிலும் அத்தகைய புரிந்துணர்வில் கூட்டணி அரசாகத் தொடர்வதில் சிக்கலோ, தன்மானத்திற்கு இழுக்கு என்பதற்கோ அரசியல் மொழியில் எதுவுமே இல்லை. கருணாநிதி கூட்டணி அரசு என்பதை ஒப்புக் கொள்ளும் மனநிலையில் இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகும் அதைத் தொடர்வதற்கு காங்கிரஸ் விரும்பவில்லை, திமுகவை கழட்டிவிடுவதன் மூலம் மிஸ்டர் க்ளீன் என்று தனது மத்திய அரசை காட்டமுடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது, சட்டமன்றத் தேர்தல் உடனடியாக இல்லாவிடில் காங்கிரஸ் - திமுக உறவு என்றோ முடிவுக்கு வந்திருக்கும், திமுகவுடன் நிபந்தனைகளுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கழண்டு கொள்ளலாம் என்கிற காங்கிரசின் திட்டம் பொய்யாகிப் போய் இருக்கிறது. காங்கிரசை தனிமைப்படுத்தியது கருணாநிதியின் சாணக்கியத்தனம் என்று திமுகவினர் பெருமைப் பேசிக் கொண்டாலும் தலைவரின் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் இனிதான் ஆபத்தே என்று உணர்ந்துள்ளனர். எவ்வளவு அடித்தாலும் எங்களுக்கு வலிக்கவில்லையே என்கிற பாணியில் கருணாநிதியின் முடிவுக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தாகச் செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் தரப்பிலும் இதுவே தான்.

ஸ்பெக்டரம் விவகாரத்தில் ராசா கைது திமுகவினருக்கு காங்கிரஸ் அரசால் அவமானம் என்றால், அதே ஸ்பெக்டரம் விவகாரத்தால் திமுகவினால் காங்கிரசின் ஒட்டுமொத்தப் பெயரும் கெட்டுவிட்டதாக காங்கிரசார் கருதுகின்றனர். இவ்வளவு கொதிப்புகள் தொண்டர்களிடையே இருந்தாலும் மேல் மட்டத்தில் காங்கிரஸ் தரப்பில் திமுகவின் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டே. திமுகவுடன் பேசி அதிக இடங்களைப் பெற்றுவாருங்கள், எங்களுக்கு எதிராக நீங்கள் நிற்கும் தொகுதிகளில் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று அதிமுக காங்கிரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டி இருக்கிறது.

காங்கிரசின் திட்டம் பலிக்காமல் போனதால் காங்கிரஸ் திமுக அரசின் மீது கடுங்கோபத்துடன் இருப்பதும், அதன் வெளிப்பாடுகள் ஓரிரு நாளில் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதையும் மீறி காங்கிரஸ் திமுவுடன் சுமூகமாகப் பேசி 60 இடங்களைப் பெற்றுக் கொண்டாலும், பின்னர் அதிமுகவுடன் கைகோர்க்கப் போவது உறுதிதான். ஏனெனில் ஒரு மாநில அரசியலில் கிடைகும் லாபத்தைவிட ஒட்டுமொத்த இந்திய அறுவடையையே காங்கிரஸ் விரும்புகிறது, அது ஸ்பெக்டரம் விவகாரத்தில் திமுகவை கைகாட்டிவிடுவதன் மூலமே நடக்கும் என்று காங்கிரஸ் வியூகம் அமைத்திருக்கிறது.

காங்கிரஸ் தனித்து நின்றாலும் இப்போதைய அரசியல் துரோகங்களையும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் எத்தனிப்பையும் ஒன்று சேர்ந்துப் பார்த்தால் அதிமுகவினர் காங்கிரசார் தங்களை எதிர்த்து நிற்காத தொகுதிகளில் வாக்களிப்பர். இப்படிச் செய்வதன் மூலம் அதிமுக - காங்கிரஸ் உறவுகள் புதுப்பிக்கப்படலாம், ஜெ வும் தன் மீதான வழக்குகளில் தற்காத்துக் கொண்டு இழந்த ஆட்சியைக் கைப்பற்றுவார்.

********

வரப்போகும் தேர்தலில் திமுகவிற்கே பாதிப்பு, ஒருவேளை இழுபறியில் ஆட்சி அமைத்தாலும் காங்கிரஸ் மைய அரசுத் தலைமை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தினாலும் திமுகவினரால் ஒன்றும் செய்யவே முடியாது, மேற்கண்ட இவை யாவும் என் ஊகங்கள் என்றாலும் நடைபெற சாத்தியம் உள்ளவை தான் என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். 90களில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் முடங்கிக் கிடந்த திமுக திராவிட உணர்வு என்ற திராவிட உணர்வாளர்களின் அரவணைப்பினாலும், அதிமுவின் ஊழல் குறித்து மக்கள் எதிர்ப்பினாலும் வளர்ந்து ஆட்சியில் அமர்ந்து ஜெவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றில் சிக்கி, காங்கிரசின் இரும்பிப் பிடியில் பிழியப்பட்டு கிடந்தாலும், ஈழத் தமிழர்களின் நலன் கருதி இருந்தால் திமுக தொடர்ந்து பிழைத்திருக்கும், ஏனென்றால் குடும்ப அரசியலோ, ஊழலோ ஒரு அரசியல் கட்சியையும், தலைமையையும் புறக்கணிக்க பெரியக் காரணம் இல்லை. இருந்தாலும் இனத் துரோகம் சகிக்க முடியாது என்பதால், வருத்தம் வருத்தம் தான் என்பதுத் தவிர்த்து திமுகவின் இன்றைய நிலையும், அதற்கான ஆதரவும் என்பது பற்றி இதற்கு மேல் கருத்துக் கூற வெறொன்றுமில்லை.

6 மார்ச், 2011

கூட்டணி முறிந்தது அடுத்து என்ன ?

நேற்று தான் அழகிரி 'விஜயகாந்த் தன்மானமிக்கவர் அதிமுகவுடன் கூட்டணி பற்றி இன்னும் வாய்திறக்கவில்லை' என்று கூறி கடைசிகட்ட சந்தேகப்பார்வையை அதிமுக விஜயகாந்த் மீது வீசும், என்ற நம்பிக்கையில் அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார். அடுத்த நாளே ஜெவும் விஜயகாந்தும் கூட்டணி என்று ஊடகங்களில் வந்தார்கள்.
தேர்தல் தேதி அறிவித்ததைச் தொடர்ந்து கூட்டணி முடிவுகள், முடிச்சுக்கள், முழுக்குகள், முறிவுகள் என அடுத்தெடுத்து அரங்கேறி ஊடகங்களுக்கு தீணி போட்டுவருகின்றன. அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட அரசியல்வாதிகளின் ஊழல்கள், திருவிளையாடல்கள், நம்பிக்கைத் துரோகங்களினால் ஏற்படுத்தப்பட்ட மறைமுக / நேரடி பாதிப்புகளால் அடுத்து என்ன நடக்கும் என்று காது கொடுத்துக் கேட்கக் கூடிய நிலைக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசை ஏற்படுத்தும் போது மதவாத பாஜக, தமிழின எதிரி காங்கிரசா என்றதில் கூட இந்திய இறையாண்மைக்கு பாதுகாப்பாக வாக்களிப்போம் என்று தமிழ்நாட்டின் பெரும்பான்மையினர் மதவாதத்திற்கு எதிராக வாக்களித்தது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் கூட தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் குழம்பிய சூழலில் ஸ்பெகட்ரம் ஊழல் விவகாரம், காமன் வெல்த் ஊழல் என மத்தியில் ஆளும் கூட்டணி கட்சியினரினால் இந்திய பொருளாதாரச் சூழல் சுரண்பட்டுள்ளதால் மக்கள் தெளிவான முடிவெடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வீழ்ச்சியையும் எழுச்சியையும் சரி செய்து கொள்ள அதிமுக - தேமுதிக கூட்டணிகள் ஒன்று சேர்ந்துள்ளது.

தமிழ் நாட்டில் காங்கிரசு ஆட்சி அல்லது ஆட்சியில் பங்கு என்ற கனவில் இருக்கும் காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடிக் கொடுக்கவும், கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ள மனமில்லாத நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாகவும் பிரச்சனை அடிப்படையில் ஆதரவளிப்பதாகவும் அறிவித்து, தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை இதன் மூலம் காங்கிரசாருக்கு அறிவித்திருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சேரும் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து திமுகவில் இணைந்த பாமக தான் தற்போது செய்வதறியாது திகைத்துள்ளதாக நினைக்க முடிகிறது. ஏனெனில் பாமகவிற்கு அதிமுக, திமுக எந்த ஒரு கட்சியிலும் கூட்டணி அமைப்பது சிக்கல் இல்லை என்றாலும் திமுக ஆதரவினால் மட்டும் தான் அன்பு மணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்ற வாய்ப்பு இருந்ததால், ஊழல் விவாகரங்கள் இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தொடர்பில்லாதது போல் குடும்ப நல அரசியலில் திமுகவில் இணைந்து கையெழுத்திட்ட பாமக நிறுவனர் இராமதாசுக்கே இழப்பு, (இதைத் தவிர்க்கவே) கிடைத்த இடங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் பாமக முன்வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிவிட்டதாக உணரும் இராமதாசுக்கே காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிவு பேரிழப்பு. மற்றபடி திருமாவளவனுக்கோ, திமுவுடன் இணைந்த உதிரிகட்சிகளுக்கோ எந்த இழப்பும் கிடையாது. அவர்களுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாததால் வந்த வரை வெற்றிபெற்றால் இலாபமே.

காங்கிரஸ் தனித்து நின்று தனது பலத்தை சோதனை செய்து கொள்ள இது நல்ல வாய்ப்பு தான். விஜயகாந்து கடந்த தேர்தல் முடிவின் பிறகு சொன்னது போல் எங்களுக்கு 10 விழுக்காட்டு வாக்காளர்கள் (அல்லது அதற்கும் குறைவோ) ஆதரவு கொடுத்துள்ளனர் என்றோ சொல்லிக் கொள்வதுடன் வாக்கு வங்கியின் கையிருப்பை அறிந்து கொள்ளலாம்.

திமுக காங்கிரஸ் அல்லாத தற்போதைய கூட்டணியைத் தொடரும் போது கனிசமான வெற்றிகளைப் பெரும் என்றாலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கெல்லாம் வெற்றிபெற்றுவிட முடியாது, காங்கிரசுடன் கூட்டணி தொடர்ந்தாலும் இதே நிலை தான் கொஞ்சம் கூடுதலாக சட்டமன்ற இடங்கள் கிடைக்கலாம். இதை சந்தர்பமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயகாந்தை கலட்டிவிட்டுவிட்டு காங்கிரசுடன் கைகோர்தால் அதிமுக தமிழகத்தில் காணாமல் போகலாம். ஜெ அவரசப்பட்டு அந்த முடிவை எடுக்கமாட்டார் என்றே நம்புவோம்.

எனக்கென்னவோ தேர்தலுக்கு முன்பே அதாவது இன்னும் ஓரிரு காங்கிரசும் திமுகவும் சமாதானமாகவே போவார்கள், 60 இடங்களைப் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் திமுகவுடன் தொடரும் என்றே நினைகிறேன். ஏனெனில் காங்கிரஸ் தனித்து நிற்கும் தற்கொலை முடிவுக்குப் போகாது உடன்கட்டை தம்பதிகளைப் போல் தான் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள். காரணம் இருவரின் அரசியல் ரீதியான தில்லுமுல்லுகளை இருவருமே அறிந்திருக்கிறார்கள், நீதிமன்றத் தலையீட்டினால் மட்டுமே ஸ்பெக்டரம் விவாகரம் சூடுபிடித்தது. அதைவைத்து மிரட்டி சட்டமன்றத் தொகுதிகளைப் பெறமுடியும் என்று நம்பியதும், அதற்கான நடவடிக்கையும் காங்கிரசின் விடா(கண்டன்) முயற்சியே. முயற்சியின் தோல்வியை உணர்ந்து காங்கிரசு திமுகவுடன் வேறு வழியில்லாமல் கைகோர்கும்.

25 பிப்ரவரி, 2011

இந்தத் தேர்தலில் நடக்கப் போகும் உள்ளடி வேலைகள் !

வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதன்மைக் கட்சிகளைடையே கூட்டணி பேரங்கள் களைகட்டியுள்ளன. இல்லாத செல்வாக்கு வளர்ந்துவிட்டதாக இராஜபக்சே ஆதரவு புகழ் காங்கிரசு கட்சி திமுகவுக்கு நெருக்கடிக் கொடுத்துவருகிறது. அந்தப்பக்கம் சென்ற தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றிபெற்ற விஜய்காந்து கட்சி 48 இடங்களுக்கு அதிமுக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. ஸ்பெக்டரம் விவகாரத்தில் கருத்து கூறாமல் மவுனம் காத்த பாமக எதிர்பார்த்தபடியே திமுக கூட்டணியின் முதுகில் ஏறிக் கொண்டுள்ளது. மதிமுக அம்மாவின் அரவணைப்பிலேயே தொடர்கிறது, வைகோ சிரஞ்சீவியைப் பின்பற்றி அதிமுகவுடன் கட்சியையே இணைத்துக் கொள்ளலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரசை எதிர்க்கும் தன்னுடைய தேசிய அரசியல் நிலைப்பாட்டில் அதிமுகவுடன் நெருங்கி பேச்சுவார்த்தையை தொடர்கிறது. ஜெவின் நக்கல்களைப் பொருத்துக் கொண்டு சீட்டுக் கேட்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு தயக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கம்ப் போல் தேசிய அரசியலில் செல்வாக்கு உள்ள பாஜக ஆதரவற்றக் கட்சியாக தனி ஆளாக தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த அணைத்துக்கட்சிகளும் கொள்கை என்று எதையோ சொல்லிக் கொண்டாலும் தனிச் செல்வாக்கு எந்த்க்கட்சிக்கும் இல்லை, அவை அவை தனித்து நின்றால் வெற்றி வாக்கு வேறுபாடுகள் பெரிதாக ஒன்றும் இருக்காது. அப்படி தனித்து நிற்கும் வாய்ப்பே இல்லாத வண்ணம் கொள்கையிலும் நீர்த்து கொள்ளையிலும் பெருகியதால் கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே தமிழகத்தை கூறுபோட்டுப் பிரித்துக் கொள்ளமுடியும் என்கிற புரிந்துணர்வு நிலையில் கூட்டணியாக களம் காணுகின்றன.

முதலில் அதிமுக கூட்டணியில் இணையும் விகாந்து கட்சியைப் எடுத்துக் கொண்டால், தன்னை 'கருப்பு எம்ஜிஆர்' என்று சொல்லிக் கொண்டு அதிமுகவினரிடையே வெறுப்பாகப் பார்க்கப்பட்டவர், மேலும் அதிமுக கட்சி தலைவியால் கடந்தகாலத்தில் 'குடிகாரன்' என்று விமர்சனம் கிடைக்கப் பெற்றவர். விஜயகாந்தின் வாக்குகள் பெரும்பாலும் திரை ரசிகர்களான வாக்காளர்கள் வாக்குகள், அவற்றில் கனிசமானவை எம்ஜிஆருக்கு கிடைத்தவையாக இருந்ததால் மதுரை உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் அதிமுக வாக்குவங்கி பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வாக்காளர்களை வளைத்த வளர்ந்த விஜயகாந்து 48 சீட்டுகள் கொடுத்தாலும் அவற்றின் வெற்றிக்கு அதிமுக முனையுமா என்பது ஐயமே, தேமுதிகவையோ, பாமகவையோ ஒரு அரசியல் சக்தியாக வளர்வது தங்களுக்கு ஆபத்து என்றே திமுக அதிமுக உணர்ந்தாலும் அவர்கள் எதிரணிக்கு செல்வதைவிட தங்களது கூட்டணியிலேயே தொடர்வதை ஒரு சகிப்புத் தன்மையாக் கொண்டு தான் அவர்களை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்கிறார்கள். விஜயகாந்து கூட்டணியில் இணைந்தாலும் அதிமுகவினரின் முழு ஆதரவுடன் போட்டியிட்ட இடங்களில் பெரும்பான்மையானவற்றில் வெல்வது ஐயமே. ஆனால் சென்ற முறை கிடைத்த ஒரு இடத்தைவிட இந்த முறை இரண்டு இடங்களில் வென்றாலும் தேமுதிகவிற்கு அது வெற்றி வளர்ச்சியே என்றாலும் அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சியில் அது வீக்கம் தான்.

அடுத்து அடுத்தவன் இலையில் இருந்து எடுத்து திண்ணும் முடிவுக்கு வந்திருக்கும் காங்கிரசைப் பார்ப்போம், 80 சீட்டுகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்பதாக கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரசு காய் நகர்த்துவருகிறது. இதைப் பெற்றுக் கொள்ளும் முனைப்பில் ராசா கைது போன்ற நெருக்கடிகளைக் கொடுத்து திமுகவை பணிய வைக்க முயன்று கொண்டிருக்கிறது. பொறியில் அடைபட்ட எலி பொறிகடலையில் பங்குகேட்டால் தரமாட்டேன் என்று சொல்லுமா என்ன ? திமுக காங்கிரசின் வேண்டுகோளை மறுக்காமல் திணறுவதற்கு அவர்கள் அதிமுக பக்கம் சாய்வார்கள் என்கிற ஐயம் என்பதெல்லாம் 2005க்கு முன்பிருந்த திமுகவிற்கு இருந்திருக்கலாம், இப்போது இருப்பது ஸ்பெக்டரம் புகழ் திமுக. சிரஞ்சீவியின் பிராஜராஜ்யம் போல் திமுக கட்சியை தங்களுடன் இணைத்துக் கொள்ள காங்கிரஸ் நெருக்கடி கொடுக்காதவரை திமுகவிற்கு கவுரமே (திமுகவிற்கு லாபம் என்று சொல்லவரவில்லை, லாப / நட்டக் கணக்கிளெல்லாம் தற்போதிய திமுகவின் இலக்கணமே இல்லை). திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது ஸ்பெக்டரம் ஊழலில் திமுகவின் குற்ற உணர்வு மற்றும் காங்கிரசின் தமிழக ஆட்சி ஆசை ஆகியவற்றால் ஏற்படும் நிர்பந்தக் கூட்டணி. அதாவது ஒப்பந்தத்துடன் உறவு கொண்டு பின் கர்பமாக்கிவிட்டு ஓடியவனை பிடித்து வந்து கட்டிவைத்து கட்டிக்கச் சொல்வது போன்றது தான். ஊடகங்களுக்கு நீராராடியவுடனான பேரம் குறித்த திமுகவினர் கனிமொழி உள்ளிட்டோரின் பேச்சுகளை மத்திய அரசு நிறுவனங்களின் வழியாக கசிய விட்டு திமுகவிற்கு தலைகுனிவு, ராசா கைது, கலைஞர் தொலைகாட்சி சிபிஐ சோதனை உள்ளிட்ட என நம்பிக்கைத் துரோகங்கள் நிறைந்த கூட்டணி. காங்கிரஸ் கேட்கும் 80 தொகுதிகளை நிர்பந்ததால் திமுக கொடுத்தாலும் திமுவினரின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது ஐயமே, காங்கிரசார் திமுகவை மேடைகளில் சீண்டியதைப் போல் திமுகவினர் காங்கிரசாரை தாக்கிப் பேசாமல் போனாலும் திமுக - காங்கிரஸ் உறவு சீர்கெட்டால் திமுகவிற்கு அரசியல் ரீதியான ஆபத்து என்பதால் திமுகவினர் அடக்கியே வாசித்தனர். ஆனால் அந்த கடுப்பையும், வெறுப்பையும் கண்டிப்பாக தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிராக காட்டுவதற்கு திமுகவினர் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. காங்கிரசு நிற்கும் தொகுதிகளில் காங்கிரசு வாக்களிப்பதிவிட சுயேட்சைகளுக்கோ அல்லது அதிமுகவினருக்கோ வாக்களிப்பதையோ திமுகவினர் விரும்புவர்.

அதே போன்று அதிமுக அணியில் இடம் பெறும் விஜயகாந்தின் தேமுதிகவிற்கும் நடக்க வாய்ப்புள்ளது. எந்த முறையும் இவ்வளவு குழப்பங்களுடன் தமிழகம் தேர்தலை சந்தித்தே இல்லை. காரணம் ஒன்றை விட்டால் இன்னொன்று என்ற ஆறுதல் இருந்தது, ஜெயலலிதா ஊழல்வாதி என்ற வெளிப்படையாகத் தெரிந்த பிறகு திமுகவிற்கு வாய்ப்புக் கொடுத்தனர், பின்பு பணப்புழக்கம் இல்லை என்று மறுமுறை அதிமுகவிற்கு வாய்ப்புக் கொடுத்தனர். இந்த முறை தேர்தலை சந்திக்கும் எந்தப் பெரியக்கட்சியும் மக்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. சசிகலா குடும்பம் தமிழகத்தை பயமுறுத்தியதைவிட பலமடங்கு பயத்தை தமிழக மக்களுக்கு 'நிதி' குடும்பம் ஏற்படுத்திவிட்டிருக்கிறது. தேமுதிக மற்றும் காங்கிரஸ் இந்தத்தேர்தலுடன் காணாமல் போவதற்கான வாய்புகள் நிறைய உள்ளன.

இந்தத் தேர்தலில் கூட்டணிகள் பல்வேறு முரண்பாடுகளுடனும், நம்பிக்கையின்மையுடனும் இணைந்திருக்கின்றன, இவற்றின் வெறுப்புகளின் விகிதம் தேர்தல் முடிவுகளுடன் சேர்ந்தே தெரியவரும்.

6 பிப்ரவரி, 2011

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ?!

'மிஸ்டர் க்ளீன்' காங்கிரசு கட்சி தன் பகடையை நன்றாகவே உருட்டுகிறது. பிகாரில் புறமுதுகு காட்டிய கோ மகன் ராகுல் காந்தி தமிழக சட்ட(ச)பைக்கு 90 இடங்கள் வரை பேரம் பேசுவதாக நாளிதழ் செய்திகள் அறிவிக்கின்றன. அந்த 90ம் ஏ,பி,சி என்ற பிரிவுகள் அடிப்படையில் அதாவது ஏ - காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள், பி - காங்கிரஸ் கூட்டணியாக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள், சி - இழுபறி தொகுதிகள். கருணாநிதியின் இலவச அறிவிப்புகளை வைத்து திமுக கூட்டணி வெற்றிபெரும் என்கிற (நப்)பாசையில் இவ்வாறு மிகுதியாகக் கேட்கப்படுவதாக நினைக்க முடிகிறது, அதிலும் திமுக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் தனிப்பட்ட கவனமாக ராசா கைது நடவடிக்கைகள் இந்த நேரத்தில் செய்வதன் மூலம் நெருக்குதல் கொடுத்து கேட்டும் சீட்டுகளைப் பெற்றுவிட முடியும் என்று காங்கிரஸ் கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள், இதன் மூலம் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் கனிசமான வெற்றியைப் பெற வாய்ப்புள்ள அதே நேரத்தில் திமுக ஊழல் குறித்த குற்றச் சாட்டில் தோல்வியைச் சந்தித்தால் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு தன் தலைமையில் ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் நம்புவதாக ஐயம் ஏற்படுகிறது.

அதாவது திமுகவின் இலவசத் திட்டங்கள் காங்கிரசை கரையேற்றும் அதே சமயத்தில் திமுகவின் மெகா ஊழல் திமுகவை (மட்டும்) வீழ்த்தும் என்றும் நம்புகிறார்கள் போலும். இதற்கனவே திமுகவின் இலவசத் திட்டங்கள் மத்திய அரசின் மானியத்தில் செயல்படுவதாக இளங்கோவன் உள்ளிட்டோர் கூறுவதை ஒப்பு நோக்கவும். அதாவது ஊழலில் பலனை திமுக அனுபவம் செய்யவும், இலவசத் திட்டங்களின் அறுவடையை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திட்டம் போலும்.

ராசா அப்பழுக்கற்ற உத்தமராசா என்றும் பார்பனப் பத்திரிக்கைகளின் சூழ்ச்சி என்று புலம்பும் தாத்தா நெருக்குதல் தரும் காங்கிரசிற்கு அடிபணிவது 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதை நினைவுப்படுத்துகிறது. தாத்தாவின் நிலை காங்கிரசை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலைதான். தாத்தாவின் நிலை பரிதாபம் என்றாலும் இது எதிர்பார்த்த ஒன்று தான். நேர்மையானவர்கள் வளைய மாட்டார்கள்.

தாத்தாவுக்கும் நமக்கும் தெரிந்தவையில் தாத்தா மவுனம் சாதிப்பவை :

1. ஸ்பெக்டரம் டேப் விவகாரத்தில் ராசா - நிராடியா தொடர்புடைய உரையாடலை மத்திய அரசின் கீழ் உள்ள தொலை தொடர்பு நிறுவனமே வெளியிட்டது. இதில் காங்கிரசின் கைங்கரியம் இருக்கிறது என்றும் தெரிந்தும் தாத்தாவின் மவுனம்

2. நீராராடியாவுன் மத்திய அமைச்சர் பதவிகளுக்கான போரம் குறித்த உரையாடல், இது ஒரு நரித்தனமான காங்கிரசின் அரசியல் அசிங்க விளையாட்டு, நீராராடியா டெலிபோன் பேச்சுகளில் திமுகதரப்பின் பேச்சுகளை மட்டுமே வெளியிட்டுவிட்டு, நீரா ராடியா காங்கிரசின் எந்த பிரமுகருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை வெளியிடாமல் காங்கிரஸ் தற்காத்து கொண்டது, நீரா ராடியா காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரா ? அவர் கண்டிப்பாக திமுக அமைச்சர் பதவிகளுக்கு இன்னொரு காங்கிரஸ் பெருந்தலைகளிடம் தானே பேசு இருப்பார் அது ஏன் வெளிவரவில்லை. இதை ஏன் தாத்தா இதுவரை கேட்காமல் வெறும் பார்பன பத்திரிக்கை சதி என்றே கூறி வர அதற்கு போயாஸ் தோட்டத்து முன்னாள் பூசாரி (மானமிகு வீரமணி ஐயா) ஜிங்க்சா அடிக்கிறார் ? பொதுமக்களுக்குத் தோன்றும் இந்தக் கேள்விகள் திமுகவினருக்கு தோன்றாதா ?

திமுக காங்கிரசை கேள்வி கேட்காததற்கு ஸ்பெக்டரம் ஊழலில் பெரும் பங்கு திமுகவிற்கு இருப்பதே காரணம், அதற்கான வழுவான ஆதாரமும் காங்கிரஸ் வசம் உள்ளது. தயாநிதி மாறன் தொலைதொடர்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இராசா அமர்ந்த பிறகு ராசாவின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு அதன் பிறகான மத்திய அரசு தேர்தல் முடிகளுக்கு பிறகு மத்திய அமைச்சர் பேரமும் பதியப்பட்டுள்ளது. ஆக ஸ்பெக்டரம் விவகாரம் காங்கிரசிடம் இலங்கைப் போருக்கு முன்பே சிக்கி இருக்க, திமுகவை காங்கிரஸ் தன் இலங்கை அதிபரின் ஆதரவுக்கும் பயன்படுத்தி இருக்கிறது, இதன் பிறகும் தாத்தா போர் நிறுத்தத்திற்கு ஆடியவை வெறும் நாடகம் தான். ஒராண்டாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடிக்கக் காரணம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிறது என்பதால், இதில் திமுகவுக்கு நெருக்கடிக் கொடுத்து மிகுதியான இடங்களைப் பெற்று வென்றால் தன் தலைமையில் ஆட்சி அமைத்துவிட்டு திமுகவை கழட்டிவிடலாம் என்பதே காங்கிரசின் எண்ணமாக இருக்கவேண்டும். முதலில் திமுகவின் விரல்களைப் பயன்படுத்தியும் தமிழர்களின் கண்களில் குத்திய காங்கிரஸ் பிறகு திமுகவின் கையைக் கொண்டே திமுகவை குத்திக் கொள்ளும் நிலைக்கு பகடை ஆடிவருகிறது.

திமுகவின் ஊழல் குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை, அதனால் இலவச திட்டங்களினால் திமுக வெல்லும் என்று உடன்பிறப்புகள் பரப்பி நம்பி வந்தாலும், திமுகவின் இலவசத் தொலைகாட்சி வழியாகவே திமுகவின் ஊழல்களையும் அறிந்துள்ளார்கள் பெருவாரியான மக்கள். ஈழ மற்றும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவானர்களின் எழுச்சி காங்கிரசுக்கு எதிராக பலமாகவே வேர்விட்டிருக்கிறது. எனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அது ஒரு உடன்கட்டை கூட்டணி தான். இதில காங்கிரஸ் தன் தலைமையில் கூட்டணி ஆட்சி என்னும் கனவுக்கு உரமாக உருட்டி விடுவது பகடையா? அல்லது தனக்குத் தானே கட்டிக் கொள்ளும் (பீகாரில் தோற்றோடியதைப்) போன்ற பாடையா ?

31 ஜனவரி, 2011

தாமரையின் மீது திடீர் மீது பாசம் கொண்ட உபிகள் !

மேயிர மாட்டுக்கு நக்குற மாடு இளப்பம் என்பார்கள், அதைவிடுங்க, காலில் விழுவதற்கும் காலை நக்குவதற்கும் எதாவது வேறுபாடு இருக்கிறதா ? வேண்டுமானால் மாகாத்மா காந்தி கூட வெள்ளைக்காரனின் காலணியை நக்கப் பணிக்கப்பட்டார், அதானால் காலை நக்குவது இளிவானது அல்ல, காலில் விழுவது தான் இழிவு என்று விளக்கம் கொடுக்கலாம். அம்மா காலில் விழும் அதிமுக தொண்டர்கள் இருப்பது போலவே கருணாநிதிக்கு காலை நக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். இதுல யார் சிறந்த விசுவாசி என்று எப்படிச் சொல்ல முடியும் ? வளர்பவனுக்காக குலைக்கும் நாயும், வளர்பவனுக்காக கடிக்கும் நாயும் ஒன்று தானே. இதில் உசத்தி என்று எதைச் சொல்வது ?

******

சீமானின் சமூக / அரசியல் ரீதியான வளர்ச்சியைப் பற்றிக் கேட்டால், சீமான் ஒரு வெத்து வேட்டு, பெரிதாக தொண்டர்கள் இல்லை, எங்களை எதிர்த்து ஒண்ணும் புடுங்க முடியாது என்று தான் பாராளுமன்ற தேர்தலின் போது உபி களால் சீமான் பற்றி கருத்துக் கூறமுடிந்தது. அதே 'தேச துரோகம் செய்துவிட்டார்' என்று அடைக்கப்பட்ட சீமான் சிறையில் இருந்து வந்த பிறகு கருணாநிதியை வீழ்த்த ஜெ - வை ஆதரிப்போம் என்று சொன்னதும், 'தன்மான சீமான் போயாஸ் தோட்டத்து அடிமை ஆனார், சீமானை நம்பியவர்களுக்கு பட்டை நாமம், சீமான் ஆதரவாளர்களே உங்கள் நிலை அந்தோ பரிதாபம்' என்றார்கள்.

சென்றவாரம் கவிஞர் தாமரை ஜெ - கருணாநிதியை ஒப்பிட்டு இரண்டுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான் எதற்கும் ஜெ வை ஆதரிக்கும் முடிவை மறுபரீசிலனை செய்யவும் என்று இருந்தது, தாமரையின் கடிதத்தில் எள்ளளவும் கருணாநிதிக்கான ஆதரவு என்று எதுவும் இல்லை, கிட்டதட்ட முத்துக்குமார் கடிதம் போன்று சற்று நிதானத்துடன் எழுதப்பட்டதே தாமரையின் கடிதம். தாமரையின் கடிதத்தை உபி கண்ணாபின்னாவென்று வழிமொழிந்தார்கள். தாமரையின் கடிதம் பற்றி எனது கருத்து என்னவென்றால், இது தேர்தல் நேரம், ஜெ-வையோ, கருணாநிதியையோ அரசியலை விட்டே அனுப்பும் சக்தி உடைய மூன்றாம் தலைவர்கள் யாருமே இல்லை. எனவே தற்போதைய சூழலில் தமிழின எதிர்பாக தொடரும் ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே முதன்மையான இலக்கு, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியில் தான் சீமானின் ஆதரவு அமைந்திருக்கிறது. ஒருவேளை ஜெ வெற்றிபெற்றால் ராஜபக்சேவிடம் (திருமா, கனிமொழி போன்று) விருந்து சாப்பிடப் போவாரா இல்லையா என்பதெல்லாம் பின்னால் நடைபெறுவது, அந்த நேரத்தில் எது போன்று நடந்து கொள்ளவேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் தன்னை சிறையில் அடைத்தவருக்கே ஓட்டு கேட்ட வைகோ போன்ற நிலை சீமானுக்கு இல்லை.

கருணாநிதி எதிர்பாளர்கள் ஜெவின் ஆதரவாளர்களாகவோ, சீமானின் ஆதரவாளர்களாகவோ இல்லாத சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜெ விற்கு தான் வாக்களித்தனர், அந்த வாக்கு கூட 'ஜெ திடிர் ஈழத்தாயானார்' என்பதற்காக அல்ல, காங்கிரசுக்கும் திமுகவிற்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நிலையை தற்போது தான் சீமான் வெளிப்படையாக அறிவித்து எடுத்திருக்கிறார். எனவே ஆளும் கட்சிக்கான எதிர்ப்பு வாக்கு என்பது கடந்த பாராளுமன்ற தேர்தல் முதலே துவங்கப்பட்டது, அது சீமான் மூலமாக இன்னும் பலம் பெறுகிறது அவ்வளவே. தமிழர் நலன் கருதும் அனைவரின் நிலைப்பாடும் இதுவே, இதற்கும் சீமானின் நிலைப்பாடுகளுக்கும் தொடர்பே இல்லை, ஒருவேளை சீமான் எந்த முடிவும் எடுக்காவிட்டாலும் ஈழ/ தமிழக மீனவர் ஆதரவு நிலை கொண்டவர்கள் ஜெ - வைத்தான் ஆதரிப்பாளர்கள், அதற்குக்கு காரணம் ஜெ வெற்றிப் பெறவேண்டும் என்கிற நோக்கம் இல்லை, கருணாநிதி ஆட்சி தொடரக் கூடாது என்பதே.

சீமான் மீது உபிகள் பாசம் கொண்டிருந்தார்கள் என்பது சீமான் அதிமுகவை ஆதரிக்கப் போகிறேன் என்று அறிவித்தப் பிறகே தெரிந்தது, அதே போன்று தாமரை மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்பது தாமரை சீமானுக்கு எதிர்ப்பு கடிதம் எழுதிய போது தெரியவருகிறது. இது தீடிர் பாசமா ? சந்தர்பவாத வேசமா ?

25 ஜனவரி, 2011

தமிழக மீனவர்களுக்கு இலவச இறுதிச் சடங்கு !

நாள் தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்திகளுக்கு குறைவு இல்லை. வட இந்தியன் வம்பிலுத்துவிட்டு வெளிநாடுகளில் நைய புடைக்கப்பட்டால் இந்தியனை அடித்துவிட்டார்கள் என்று கண்டனம் தெரிவித்து அனைத்து மாநில மக்களிடம் இந்திய உணர்வு அரசியல் நடத்தும் இந்தியா, எதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் சிங்கு தலைப்பாகை வைக்கக் கூடாது என்றால் இந்தியர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழும் பிரதமர், தான் எழுதிய பாடல் போலவே காகிதக் ஓடத்தை டெல்லிக்கு அனுப்பும் தமிழக முதல்வர், இவர்கள் கூட்டணி தமிழக சட்ட சபைத் தேர்தலை நெருங்கும் இந்த நேரத்தில் கொலை செய்யப்படும் மீனவர் உடல் நலம் கருதி 'இலவச இறுதிச் சடங்கு நடத்தவும், பதினாறாம் நாள் கருமாதிக்கு பண உதவி செய்யும் இலவச திட்டம்' அறிவித்து தேர்தலில் வென்றுவிட நினைத்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. ஈழத்தமிழர்கள் பிணங்களின் மீது ஏறி நின்று பாராளுமன்ற வெற்றியைச் சுவைத்தார்கள், சட்ட மன்ற வெற்றிச் சுவைக்கு தமிழக மீனவன் பிணங்கள் போலும்.

வங்காளவிரிகுடா சிங்களவெறிகுடாவாகி மீனவர்களின் இரத்தங்கள் கலந்து நிறமாறிக் கிடக்கிறது.

தமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்று இந்தியாவே ஒதுங்கி வேடிக்கைப் பார்பதன் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டு உணர்த்தும் போது தேசியவாதம் பேசும் தேசியவியாதிகளை எதால் அடிக்கலாம் ?

நம்மால் நேரிடையாக ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்றாலும், முடிந்த வழியில் இந்த அக்கரமங்களுக்கு செருப்படிக் கொடுத்தோம், எதிர்ப்பைக் காட்டினோம் என்று வரலாற்றில் எழுத்தின் வழியாகப் பதியவைக்கவில்லை என்றால் நாம் தமிழனுக்கு பொறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்