சிங்கையில் மிகவும் வியப்படையும் வாழ்க்கை முறையில் கர்பிணி பெண்கள் குழந்தை பெறும் முந்தைய நாள் வரையில் வேலைக்குச் செல்வது தான். காரணம் அவ்வளவு சிறப்பானது இல்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், கற்பகாலத்தின் முதிர்ந்த நாள்களில் வீட்டில் இருந்தாலும் ஒத்தாசைக்கு யாரும் இருக்க மாட்டார்கள், அதற்கு பதிலாக பலர் பார்வையில் அலுவலகத்திற்குச் சென்று வந்தால், ஓரளவு மன துணிவுடன் இருப்பார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிலும் பெற்றோர்களுடன் வசிப்பவர்கள் மிகக் குறைவு காரணம் பெற்றோர்களின் வயது முதல் பல சூழல்கள். எனவே மகப்பேற்றிற்கு மனைவியை இந்தியாவிற்கு அனுப்பாதவர்கள் தவிர்த்து அனைவரின் நிலையும் பரிதாபமானது தான். இவ்வளவு துயரமும் நல்லவற்றையும் தருகிறது, கணவன் செய்யும் ஒத்தாசைகள், கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை இருவரும் புரிந்து கொள்ள அது நல்ல வாய்ப்பாக அமைத்திருக்கும்.
வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தை ஆணா / பெண்ணா என்பதை விருப்பம் இருந்தால் அறிந்து கொள்ளலாம். அது சட்ட எதிரானதும் அல்ல. அப்படி தெரிந்து கொள்ளும் போது குழந்தைக்கு பெயர் வைப்பது முதல், முதல் குழந்தையாக இருந்தால் அதனை வளர்க்கும் முறைகளெல்லாம் கற்பக் காலத்தில் அறிந்து கொள்வார்கள். ஆண் / பெண் பாகுபாடு இல்லாததால் என்ன குழந்தைகள் தெரிந்து கொண்டு எவரும் மனம் உடைந்து போவதும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தை பிறக்கும் வரை மற்றவர்களுடன் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்று பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். குழந்தையைக் கொடுப்பது கடவுள் என்ற நம்பிக்கையில் இருக்கும் நம் தேசத்தவர்கள் தான் பெண்குழந்தை என்று அறிந்து கொண்டால், அதை கருவிலேயே அழிக்கவும் அல்லது பிறந்தவுடன் கள்ளிப் பால் ஊற்றவோ, குப்பைத் தொட்டியில் போடவும் துணிவு உள்ளவர்கள். நம் நாட்டிற்கு பிறக்கும் முன் ஆண் / பெண் பால் அறிந்து கொள்வதை தண்டனைச் சட்டமாக வைத்திருப்பது மிகச் சரியே.
குறிப்பிட்ட மருத்துவ மனையில், குறிப்பிட்ட மகப்பேறு மருத்துவரிடம் தான் மாதப் பரிசோதனை முதல் மகப்பேறு வரை செல்வதே எந்த நாடாக இருந்தாலும் நடைமுறை. நாங்களும் அவ்வாறு இந்திய மருத்தவ பெண்மணியிடம் ஆலோசனைக்குச் சென்றுவந்திருக்கிறோம், சரியாக குழந்தை பிறக்குப் போகும் 3 வாரத்திற்கு முன்பு சென்று அவரை அலோசனைக்காக சந்தித்த போது, 'நான் பதினைந்து நாளில் வெளிநாட்டிற்கு மேற்படிப்புக்குச் செல்கிறேன், அடுத்த வாரம் டெலிவரி செய்துடலாமா ?' என்று கேட்டார். மனைவியும் நானும் ஒருவரை ஒருவர் வியப்புடன் அச்சத்துடன் மாறி மாறி பார்க்க, 'இருவாரங்களில் செயற்கைத் தூண்டலின் வழி குழந்தை பிறக்க செய்ய முடியும்... நான் உங்களை அவசரப்படுத்தவில்லை, உங்களுக்கு இயற்கைகையாக வலி எடுத்து பிறக்கும் நாளில் குழந்தை பிறக்க உதவியாக வேறொரு மருத்துவரை வேண்டுமானால் பரிந்துரைக்கிறேன்...நீங்கள் யோசித்து சொல்லுங்கள்... எனக்கு உங்களின் மருத்துவ ஹிஸ்டரி முழுவதும் தெரிவதால் முன்கூட்டியே நானே மகப்பேறுக்கு உதவி செய்கிறேன்..." என்றார். நாங்கள் இருவரும் வெளியே வந்து யோசித்துப் பார்த்தோம்., கடைசி நேரத்தில் வேறு மருத்துவரை நாடவும் ஒப்புதல் இல்லை. இரண்டாவதாக சரியான நேரத்திற்கு குழந்தை பிறக்கும் முன் வலி எடுக்கும் போது மருத்துவ மனைக்கு அழைத்து வரவதற்கு ஆள் இல்லை என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது, முடிவு செய்து...செயற்கை தூண்டுதல் வழியாக மருத்துவர் சொல்வது போல் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து மருத்துவரிடம் சரி சொல்லிவிட்டோம். அந்த வாரத்திலேயே என் அம்மாவும் சிங்கை வர. மருத்துவர் சொன்ன அந்த நாளில் மருத்துவமனையில் மகப்பேற்றிற்காக மனைவியைச் சேர்த்தேன். குழந்தை சரியாக திரும்பி இருந்தாலும் குழந்தை பிறக்கும் கடைசி நிமிடம் வரை வழக்கமான பிறப்பா, அறுவை சிகிச்சை வழியாக பிறப்பா என்று சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்கள். காலையில் செயற்கை தூண்டுதலுக்காக கொடுத்த மருந்துகள் மாலை 4 மணிக்குத்தான் வேலை செய்ய ஆரம்பித்து வலி எடுக்க ஆரம்பித்து நல்லிரவு தாண்டியே பிறந்தது.
வெளிநாட்டில் இருக்கும் ஆண்களுக்கு மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும், நானும் அவ்வாறு எனது மகள் பிறக்கும் போது அருகில் இருந்திருக்கிறேன். பிரசவ வேதனை என்று சொல்வதை ஆண்கள் உணர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பு. வலி தெரியாமல் இருக்க உடலை வளைத்து முதுகு தண்டுவடத்தில் ஊசி ஏற்றி.....அதையும் மீறி எடுக்கும் வலியில் பெருகும் கண்ணீரும், வேதனையான கூப்பாடும் அருகில் இருக்கும் கணவன் அறிந்து கொள்ளும் போது அடுத்த ஓர் ஆண்டுக்குள் இன்னொரு குழந்தைக்கு எந்த கணவனும் ஆசைப்பட்டு மனைவியை தொல்லை படுத்த மாட்டான். அதுமட்டுமல்ல... குழந்தை வெளியே வரும்போது வழி குறுகலாக இருந்தால் நேரம் மிகுந்து எடுக்கும், குழந்தைக்கு எதும் நேர்ந்துவிடலாம் என்று அதைத் தவிர்க்க பிறப்பு உறுப்பின் கீழ் பகுதியை ஒரு அங்குலம் அளவிற்கு கத்திரிக்கோளால் வெட்டிவிடுவார்கள், பீறிட்டு அடித்து குளமாக தேங்கும் இரத்ததையோ, வெட்டியதையோ அறியமுடியாத அளவுக்கு, பெண்கள் அதைவிட பெரிய வலியை தாங்க முயன்று கொண்டி இருப்பார்கள். வெட்டிய கீழ் பகுதியை குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே மருத்துவர் தைத்துவிடுவார். அது குணமாக ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். எல்லா நாட்டிலும் 50 விழுக்காட்டிற்கு பெண்களுக்கு மகப்பேறின் போது பிறப்புறுப்பில் கத்தரிவெட்டு விழுவது நடைமுறைதான். அப்படி நடப்பதை பெண்கள் ஆண்களிடம் சொல்வது கிடையாது, மிகவும் எளிதாக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் விழுக்காட்டு அளவில் 20 விழுக்காடு கூட இருக்காது.
********
தலைப்புக்கு வருவோம்,
கொடுப்பினை (அதிர்ஷ்டம்) என்பதே எதிர்பாராமல் நிகழ்வதுதானே, பிறந்த நேரத்தை வைத்துத்தான் ஜாதகங்கள் எழுதப்படுகிறது. அதிர்ஷ்டத்தை தனது வாரிசுகளுக்கு ஆக்கிக் கொள்ள இப்பொழுதெல்லாம் பெற்றோர்களே குழந்தை பிறக்கும் நேரத்தையும் தீர்மாணிக்கிறார்கள், இந்த கூத்தெல்லாம் இந்தியாவில் தான் நடக்கிறது, இதற்கு மருத்துவர்களும் முழு ஆதரவு என்பதை நினைக்கும் பொழுது மருத்துவத் தொழிலின் புனிதம் கூட கேள்விக் குறியாகிறது. சரத்குமார் - ராதிகா தம்பதிகள், தங்கள் பெற்ற குழந்தைக்கு நாடாளும் ஜாதக நேரத்தை ஜோதிடர்களுடன் ஆலோசித்து, சரியான நேரத்தில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தார்களாம். தமிழ்நாட்டில் முதன் முறையாக(?) அடுத்த காமராஜர் ஆட்சி சரத்குமாரின் மகன் தான் தலைமையில் ஏற்படுமோ ?
குழந்தை பிறக்கும் நேரத்தையும், நாளையும் மனிதர்கள் தீர்மாணிக்கும் அளவுக்கு சென்று விட்ட காலத்தில், ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து எழுதப்படும் ஜாதகம் எந்த அளவுக்கு சரி ? பிறந்த பிறகுதான் ஒருவரின் ஜாதகமே பலனுக்கு வருகிறது என்று சொல்லப்படுவதால், பிறக்காத குழந்தைக்கு பிறக்கும் நேரத்தை மனிதர்களே முடிவு செய்து கொள்வதால், 'இந்த நேரத்தில் தான் இந்த குழந்தை பிறக்கும்' என்பது யாருடைய ஜாதகத்தில் எழுதப்பட்டு இருக்கும் ?
பின்பற்றுபவர்கள்
ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
16 அக்டோபர், 2008
பிறக்காத குழந்தையின் ஜாதகம் !
பதிவர்:
கோவி.கண்ணன்
at
10/16/2008 09:53:00 AM
தொகுப்பு :
கட்டுரைகள்,
மகப்பேறு,
ஜோதிடம்
39
கருத்துக்கள்

9 செப்டம்பர், 2008
ஜோதிடம் கேயாஸ் தியரியும் !
கிரகங்களால் நற்பலனா ? கிரகங்களுக்கே நற்பலன் இல்லாமல் போனதால் என்னவே புளூட்டோ கிரகம் சூரியனின் ஞான ஒளி எனக்கு வேண்டாம் என்று கோவித்துக் கொண்டு சூரிய குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றதா ? மற்ற உயர்ந்த கிரகங்களால் தள்ளி வைக்கப்பட்டதா என்றே தனியாக தத்துவ ஆராய்ச்சியே நடத்தலாம்.
"இந்த கலர் கல்லுல மோதிரம் செஞ்சிப் போட்டுக் கொள்ளுங்கள்" - ஒரு பக்கம் இராசிக் கற்களால் பிழைப்பு நடத்துபவன்
"உங்க வீட்டு கக்கூசு சூரியனைப் பார்த்தபடி இருக்கு, ஆகாதுங்க...மாத்துங்க" - வாஸ்து பெயரில் மோசடி கும்பல்கள்
"பேரை மாத்திட்டிங்கன்னா... நீங்கதான் தேர்த்தல் நடத்தாமலேயே செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி ஆவிங்க...." அள்ளிவிடும் பெயர் சோதிடக்காரர்கள்.
"நாடி ஜோதிடம் பார்த்திங்கன்ன...நடந்தது நடக்கப் போறது எல்லாம் தெரிஞ்சிக்கலாம்..." நாடி சோதிடன் ஒருபக்கம் பனையோலையை மண்ணில் புதைத்து எடுத்து வண்ணம் பூசி பழைய ஓலைச்சுவடியாக காட்டி அதில் அவர்களே எழுதிய பொய்யுளை (!) வைத்து சோதிடம் நாடி ஜோதிடம்
"கிளிக்கு இறக்க முளைச்சுடுத்து... ஒடச்சி கூண்டில அடைச்சிட்டேன்....மினாட்சி... தம்பி பேருக்கு ஒரு சீட்டெடுத்துப் போடு' பறவை வதை செய்யும் கிளி சோசியன்
"கை ரேகையிலதான் உங்க தலையெழுத்தே அடங்கி இருக்கு, ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் காட்டுங்க..." கைரேகை சோசியன்
இன்னும் மச்ச சோதிடன், மயிர் சோதிடன் ( இது ஒரு படத்தில் வரும்.. தியாகராஜன் ஸ்ரீதேவியின் கூந்தல் மயிரை வைத்து அவருக்கு தொடையில் மச்சம் இருப்பதைச் சொல்லுவார்), குறிகாரன், குடுகுடுப்பை, பில்லி சூனியம் வைக்கிறவன் என பல ரகங்களில் சோதிடம். சாமியாடிகள் தனி ரகம்.
இவர்கள் எல்லாரும் சோதிடம் உண்மை என்று பரப்பிக் கொண்டு அதில் பிழைப்பையே நடத்துவார்கள். சோதிடம் பார்க்கச் செல்லும் எவருக்குமே, உங்கள் வாழ்கை இனி நன்றாகவே இருக்கும் என்று சொல்வதே இல்லை. உனக்கு தோஷம், பித்தம், வயிற்றுப் போக்கு, வாந்தி இன்னும் என்னன்னவோ சொல்லி, இதுக்கெல்லாம் பரிகாரம் செய்தால் சரியாப்போய்விடும் என்றே ஜோதிடம் கேட்க வந்தவர்களை மன அளவில் மிரட்டுவார்கள்.
சோதிடம் பார்க்காவிட்டால் இந்தியர்கள் செத்துவிடுவார்களா ? உலகில் எங்கும் முன்னேறிய சமூகம் எதிலுமே தன்னம்பிக்கையை மூட நம்பிக்கை இரையாக்கிவிட்டு ஏமாந்து நிற்பது இல்லை. கிரகம் பாதிக்கும் என்று நம்புவார்கள், பரிகாரத்தினால் கிரகத்துக்கு அல்வா கொடுக்க முடியும் என்றும் நம்புவார்கள். இதெல்லாம் என்ன வகையான நம்பிக்கை என்றே தெரியவில்லை.
இறை நம்பிக்கை உடையவர்களை கிரக பலன்கள் என்ன செய்துவிட முடியும் ? இறை சக்தியை விட கிரகங்களின் சக்தியே பெரிது சமயத்தில் சனியனுக்கு பயந்து கொண்டு புங்கை காய்க்குள் பதுங்கி கொண்டான் சிவபெருமான் என்ற கதையெலாம் கூடச் சொல்வார்கள். இறைவனே கிரகங்களுக்கு பயப்படுவான் என்றால் இறைவன் பேராற்றல் மிக்கவன் என்று சொல்வதும் கூட பொய்யாகிவிடுகிறது.
ஜோதிடம் ஆன்மிக வளர்ச்சிக்கு எப்போதாவது நன்மை அளித்திருக்கிறதா என்றால் அப்படி ஒன்றும் தெரியவில்லை, அட நெய்விளக்கு வியாபாரம் வளர்ச்சி பெற்று இருக்கிறதா ? பெரிய அளவில். நாம கொளுத்தி வச்சிட்டு அந்த பக்கம் சென்றவுடனே அணைத்து எடுத்துக் கொண்டு மறுவிற்பனைக்கு ஆயத்தம் செய்துவிடுவார்கள். ஜோதிடத்தினால் ஆன்மீகம் வீழ்ச்சி அடைந்தே இருக்கிறது, மூட நம்பிக்கையை வளர்த்ததில் போலி சாமியார்களுக்கு உரிய பங்கு ஜோதிடர்களுக்கும் உண்டு.
விதியை மதியால் வெல்ல முடியுமா ? காற்றில் ஆடிக் கொண்டு இருக்கும் ஒரு பொருள் உங்கள் மண்டையை பதம் பார்க்கும் முன் 'ஆடுவதால் நிச்சயம் விழுந்துவிடும்' என்பதை மதியால் உணர்ந்து அதனை அகற்றவேண்டும், 'விழுந்தாலும் அடிபாடாது' என்று நினைத்து அதற்குக் கீழே நின்றால் ஈர்ப்பு விசை என்னும் விதி அங்கே வேலைசெய்தாலும் செய்துவிடும் அல்லவா ?
எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் கிரகங்களுக்கு எள்ளுப்பூ மாலை அணிவித்து, குளிர்விக்க நெய்விளக்கும் ஏற்றுவது கேயாஸ் தியரியின் தத்துவமா ? இங்கே செய்வது அங்கே சென்று பாதங்களின் வீரியத்தைக் குறைத்து நற்பலனாக மாறிவிடுமா ?
****
ஜோதிடத்தில் கைக்காசை செலவு செய்யும் பரிகாரம் எதுவும் கிடையாது!
இறைவனைப் பிரார்த்திப்பது ஒன்றுதான் பரிகாரம். - சுப்பையா வாத்தியார்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்