பின்பற்றுபவர்கள்
25 அக்டோபர், 2011
திரட்டிகளை பிரபலமாக்குவது எப்படி ?
*******
* பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம் பெர்பூயும் (வாசனை திரவிய) நிறுவனம் துவங்கியுள்ளார், அவருக்கு அவர் விற்பதை விளம்பரம் செய்ய அவர் பெயரே போதும், திரட்டி துவங்க வேண்டுமென்றால் முதலில் பிரபல பதிவர் ஆகனும், மூன்றாண்டுக்கு முன்பு துவங்கிய திரட்டிகளில் பிரபலப்பதிவர் அல்லாதவர்கள் துவங்கும் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு தமிழிஷ், தமிழ்வெளி தவிர்த்து) வெறெதுவும் பிரபலமாகவில்லை, காரணம் திரட்டி ஓனர்கள் யார் என்று வெளிப்படையாகத் தெரியாததால் திரட்டிகளுக்கு அறிமுகம் கிடைக்கவில்லை. திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். உங்களுக்குள் திரட்டி துவங்கும் கனவு இருந்தால் முதலில் பிரபல பதிவர் ஆகுங்கள், பிரபலப் பதிவர் ஆக என்ன என்ன எழுத வேண்டும் என்பதை பிரபலப் பதிவர்களின் பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், அதை நானே சொன்னால் விமர்சனம் ஆகிவிடும்.
* பிரபல பதிவர் ஆகி திரட்டி துவங்கியவுடன் அதை அடுத்த கட்ட மார்கெட்டிங்க் செய்வது முக்கியம், அதற்கு உங்களை பிரபலம் ஆக்கிய திரட்டியிலேயே அதையும் செய்துவிட முடியும். உலகிலேயே உன்னதமானது இந்த புது மாடல் டெலிவிசன் தான் என்பது பழைய டிவியில் விளம்பரமாக ஓடும் போது பழைய டிவி எப்படி நாணாதோ அதே போன்று தான் பழைய திரட்டிகள் புதிய திரட்டிகளின் விளம்பரங்களை சகித்துக் கொள்கிறார்கள், காரணம் பழைய திரட்டிகளின் புரிந்துணர்வு அவற்றை போட்டியாக கருதாமல் மாற்றாக இருக்கட்டுமே என்று நினைப்பதாக இருக்கும், எந்த ஒரு பழைய திரட்டியும் புதிய திரட்டிகளின் வருகையை ரசிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக போட்டியாக நினைப்பது இல்லை என்பதே புதிய திரட்டிகளின் பலம் என்பதை உணர்ந்தாலே உங்கள் திரட்டிகள் அந்த பழைய திரட்டிகள் வழியாக விளம்பரம் செய்ய பிரபலமாகும்.
* பிறகு கூகுள் பஸ், கூகுள் + மற்றும் அனைத்து சமூக இணைய தளங்களிலும் உங்களை நண்பர்களாக நினைப்பவர்கள், இணைத்திருப்பவர்கள் அடிக்கடி உங்கள் திரட்டி பற்றிய விளம்பரங்களை சகித்துக் கொள்வார்களா என்ற எண்ணமெல்லாம் விட்டுவிட்டு நாள்தோறும் திரட்டி பற்றி, வசதிகள் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள், உங்கள் விளம்பரம் பிடிக்காதவர்கள் அவர்களாகவே ம்யூட் செய்து கொள்வார்கள், உங்களைக் கடிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் எந்த பிரபலப் பதிவரையும் நேரடியாக விமர்சனம் செய்ய இணைந்திருப்பவர்கள் தயங்குவார்கள். அப்படியும் எவரேனும் விமர்சனம் செய்தால் அதுவும் பொருட்டல்ல, உலகில் அனைத்து விற்பனையாளர்களின் வெற்றிக்குப் பின்பும் புறக்கணிப்பின் வலி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
* மிக முக்கியமானது அலெக்சா ரேங்கில் உங்கள் திரட்டியில் இடம் என்ன என்பதை நீங்கள் விளம்பரம் செய்தே ஆகவேண்டும், கூடவே தற்போதைய திரட்டி வரிசையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிறத் திரட்டிகளைக் புரட்டி முன்னேறி இருக்கிறீர்கள் என்பதையும் விளம்பரமாகச் செய்ய வேண்டும், அதற்கு உங்கள் நண்பர்களும் மதீப்பீடு கொடுத்து சமூக இணையத் தளங்களில் விளம்பரம் கொடுத்து, பிற திரட்டிகளை முடிந்தால் விமர்சனம் செய்து கூட உங்கள் திரட்டிகளை அவர்கள் பிரபலப்படுத்திவிடுவார்கள்
* திரட்டியின் பெயர் ? அது தமிழுக்கு தொடர்ப்பு இல்லாமலும் தமிழிஷ் போல பாதி தொடர்பிலும், இண்டலி, சுண்டலி போல் முற்றிலும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் நாம் தமிழுக்குத்தான் சேவை செய்கிறோம் என்ற நினைப்பு இருந்தாலே போதும்
* அடுத்து எதாவது ஸ்பான்ஸர் பிடித்து பதிவர்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும், இவற்றையெல்லாம் முறையாகச் செய்யும் போது உங்கள் திரட்டி மிக விரைவில் ஆரம்பித்து இரண்டே நாளில் கூட பிரபலமாகிவிடும்
* முக்கியமாக பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டியின் விளம்பர வருமானத்தில் பதிவர்களுக்கும் (பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில்) பங்கு கிடைக்கும் என்பதை திரட்டியின் தீமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பிரபல இணையத்தளங்கள் நக்கீரன், தினமலர் போல் வெப்டிவியையும் உங்கள் திரட்டிகளில் வைத்திருப்பது மேலும் பதிவர் மற்றும் வருகையாளர் எண்ணிக்கையைக் கூட உதவும்
******
* கடைசியாக மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான தகவல், திரட்டி நடத்துபவரின் ஓய்வு நேரங்களைத் தாண்டி தூக்க நேரத்தையும் திரட்டி தின்றுவிடும், கூடவே பதிவர் பஞ்சாயத்து முதற்கொண்டு, எவரேனும் ஆபாசத் தளங்களை இணைத்திருக்கிறார்களா என்று கண்கொத்திப் பாம்பாக செல் போனை ஆன் செய்துவிட்டு விழிப்போடு இருக்க வேண்டும்.
யப்பாடா பதிவை பிரபலமாக்குவது, பிரபலப் பதிவர் ஆகுவது எப்படி என்று தான் பல பதிவர்கள் மொக்கையாக எழுதியுள்ளார்கள், முதன் முதலில் திரட்டியை பிரபலப்படுத்தவது எப்படி என்கிற (மொக்கை) இடுகையை இட்டு பெருமை எனக்கே சாரும், ஜெமோவும் கூடவே ஞானியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
4 நவம்பர், 2010
கலவை 04/நவ/2010 !
பணக்காரர்களின் குழந்தைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகத் தொடர்கிறது, இதில் இரு குழந்தைகள் மிகவும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பணக்காரன் வீட்டில் குழந்தையாகப் பிறப்பதும் கூட பாவம் என்ற நிலைக்குச் சென்றிருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு சமச்சீரின்மையின் வேறு கோணம் தான். குற்றவாளிகள் பிடிப்பட்டது ஆறுதல் அளிக்கிறது, இருந்தாலும் இவை தொடராது என்பதற்கு எந்த பற்றுறுதியும் கிடையாது. ஏழைக் குழந்தைகள் போலி சாமியார்களின் நரபலிக்கோ, சமூக விரோதிகளானால் பிச்சை எடுக்கவோ கடத்தப்படுகிறார்கள், பணக்காரக் குழந்தைகள் பணத்துக்காகக் கடத்தப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என்பதில் இவை அனைத்தும் ஒன்றே. குழந்தைகளை குறித்தக் குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
தீபாவளி சந்தைகள் சிங்கையில் மலேசியாவிலும் களைகட்டியுள்ளது, குட்டி இந்தியா செரங்கூன் சாலை வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது, விறுவிறுப்பான தீபாவளி சந்தை விற்பனை நடைபெறுகிறது, நான் சென்று வந்த மலேசியா ஜோகூர் பகுதியிலும் அதே நிலைதான், வண்ண விளக்குகள் இல்லை, ஆனால் நிறைய தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எங்க வீட்டுக் குட்டிப்பையனு இது முதல் தீபாவளி, அதைவிட வேறு ஒண்ணும் எங்களுக்கு இந்த தீபாவளியில் தனிச் சிறப்பு கிடையாது.
(Near Perumal Temple, Serangoon Road, Singapore)
(Near Teka Market, Serangoon Road, Singapore)
பலரையும் உடனேயே ஈர்க்க் கூடிய திரைப்படம், பாலியல் ஜோக்குகள் போன்ற மார்கெட்டிங்க் யுத்திகள் எதுவும் இல்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் கணிணி தொடர்பான வெறும் தொழில் நுட்பப் பதிவுகளை மட்டுமே எழுதி ஏராளமான பின் தொடர்பவர்களைப் பெற்று அலெக்சா பட்டியலில் முதல் ஒரு லட்சம் இணையத்தளங்களுக்கான தர வரிசையில் ஒருவராக பதிவர் வேலன் இடம் பிடித்திருக்கிறார். இதன் மூலம் திரைப்படம், பாலியல் சாராத தகவல்கள் கூட பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன, எழுத்து முயற்சியும் பயனுள்ள தகவல்களும் கூட சிறந்த வரவேற்பை பெற முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கும் பெற்று தந்திருக்கிறார். வாழ்த்துகள் வேலன் சார்.
*****
பதிவர் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்
26 அக்டோபர், 2010
வலையுலக நோய் !
என்னைக் கேட்டால் வலைப்பதிவில் இருந்து முற்றிலுமோ தற்காலிகமோ விலக கீழ்கண்ட காரணங்கள் மட்டுமே,
1. இணைய வசதி (தொடர்பில்) இல்லாதது
2. வலைப்பதிவில் மூழ்கி மற்றபணிகளில் கவனிமின்றி அன்றாட செயல்பாடுகள் முடக்கம்
3. வலைபதிவில் இல்லாத பிற நண்பர்களிடம் முற்றிலுமாக தொடர்பு அற்றுப் போகுதல்
4. இல்லத்தினரிடம் நேரம் செலவு செய்ய இயலாமை
5. பிற பணிகளுக்கிடையே நேரமின்மை
6. சரக்கு இன்மை
இது தவிர்த்து யாரோ எவருக்கோ பிடிக்கவில்லை அல்லது குற்றம் சுமத்துகிறார்கள் என்று எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று கூறுவதெல்லாம் 'நான் வளர்ந்துவிட்டேன்......என்னைய தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுங்கள்..... இல்லை என்றால் விலகுகிறேன்' என்பது போன்ற வெறும் பாவ்லாக்களே. இது தேவையற்றது எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லையோ அதே போல் தான் எந்த ஒரு தனிப்பட்ட நபர்களின் விருப்ப வெறுப்புகளுக்காக எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை. நாம் எழுதுவதா வேண்டாமா தொடரலாமா கூடாதா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நம்முடைய சூழலே அன்றி பிறரின் விருப்பு வெறுப்பு அல்ல. வலைப்பதிவில் இருந்து எத்தனையோ பேர் பல காரணங்களுக்காக எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள்அதை ஒட்டு மொத்த வலையுலகமும் அவர்கள் ஏன் எழுதுவதை நிறுத்தினார்கள் என்று நினைவு வைத்துக் கொள்வதும் இல்லை.
"நான் எழுதுவதை நாலு பேர் படிக்கிறார்கள் என்றாலும் படிக்கவில்லை என்றாலும் என் சிந்தனைகளை சேர்த்துவைக்கும் ஒரு நாட்குறிப்பு என்பதாகத்தான் நான் எழுதிவருகிறேன். இவற்றை நானே திரும்பி படிக்கிறேனோ இல்லையோ எனது வாரிசுகள் இவற்றில் ஒரு சிலவற்றைப் படித்து அதிலிருக்கும் நல்லவற்றை தெரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு" என்று நினைப்போர் எவர் பொருட்டும் எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை.
40 இடுகைகள் 40 பிந்தொடர்வோர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பது தன் மீதான உயர்வு மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தால் உடனே அடிபடும் என்பதற்குத்தான் அவ்வாறு குறிப்பபிட்டேன் அந்த எண்ணிக்கை 400 அல்லது அதற்கு மேலும் கூட இருக்கலாம். இதுவும் தனிப்பட்டு எவரையும் கிண்டல் செய்ய எழுதவில்லை. எழுத்தின் மீதான வெறுப்பு பிறர் தூண்டலால் நிகழ்வது சரி இல்லை என்பதற்காக குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவில் தீவிரமாக இயங்குவது தனிப்பட்ட நேர இழப்பு என்பது உண்மை தான் அதற்காக முற்றிலும் தவிர்பதைவிட நம்மை நண்பர்களாக மதித்தவர்களுக்காக நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்பது எனது எண்ணம்.
6 அக்டோபர், 2010
தங்கமீன் - முதல் சிங்கப்பூர் தமிழ் இணைய இதழ் !

கணிணி தொழில் நுட்பத்தை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துவர்கள் பலர், அதில் அண்ணன் பாலு மணிமாறன் குறிப்பிடத் தக்கவர். புலம்பெயரும் தமிழர்கள் தமிழை தாய்மொழியாக எடுத்துச் சென்று பின்னர் பெற்றோர்களைப் போலவும், பெற்றக் குழந்தையைப் போலவும் பேணி காத்து, சீராட்டுவதால் குறிப்பிட்ட பலநாடுகளில் தமிழ் வளர்ச்சி கண்டுள்ளது, தேசிய அடையாள மொழியாகவும் வளர்ந்துள்ளது. தன் சிந்தனைகள் தோறும் தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதாக முயற்சி எடுப்போர் பலர், அண்ணன் பாலு மணி மாறன் சிங்கப்பூர் வந்த நாட்களாக தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றும் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளை அமைத்தும், பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களை நூல்களாகப் பதித்தும் கிட்ட தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சேவை ஆற்றிவருகிறார். இவரை நன்கு அறிந்திடாத சிங்கப்பூர் மலேசியா வாழ் எழுத்தாளர்களே இல்லை என்னும் சொல்லும் அளவுக்கு அனைவரிடமும் நல்ல செல்வாக்குப் பெற்றவர்.


சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் இலக்கிய எழுத்துச் சேவைகள் பெரும்பாலும் தாள் (பேப்பர்) சார்ந்த திங்கள் (மாத), கிழமை(வார), நாள் வெளியிடுகளாகவே இருக்கிறது. இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்காவிட்டால் எழுத்துக்கள் பரவலான தமிழர்களை சென்று அடைய தடை என்னும் நிலை தான் உள்ளன. இன்றைய நாட்களில் கணிணி புழக்கம் பெருவாரியான தமிழர்கள் இடையே இருக்கின்ற காரணத்தில் தமிழ் இலக்கியத்தை கணிணி


நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கும் தமிழார்வளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மலர்விழி அவர்களால் திரையிசைப் பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சி தங்கமீன் பற்றிய அறிமுக நிகழ்வென்றாலும் வாழ்த்திப் பேசவந்தவர்களின் நகைச்சுவைக்கும் இலக்கியச் சுவைக்கும் குறைவில்லாமல் இருந்தது. நிகழ்ச்சியின் நிறைவு மதிய வேலை என்பதால் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் சிறப்பு.
தங்க மீன் :
தங்கமீனை தற்போது திங்கள் (மாத) தொகுப்புகளாக துவங்கி இருக்கிறார், இருந்தாலும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய இலக்கிய நிகழ்வுகளை அவ்வப்போது அறிவிப்புகளில் வெளி இடுவதாக குறிப்பிட்டார். பின்னர் பயனர்களைப் பொருத்து திங்கள் இருமுறை அல்லது கிழமை (வார) இதழாக தொகுக்கப் போவதாகவும்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கமீனில் சர்சைப் புக்ழ் திரு சாரு நிவேதிதா மற்றும் திரு மாலன் ஆகியோய் கட்டுரைகள் எழுதித் தொடர்வதாகப் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் மலேசிய இலக்கிய ஆர்வளர்களின் கதை கவிதை மற்றும் கட்டுரைகள் இடம் பெறுவது போலவே தமிழகம் மற்றும் உலகத் தமிழ் ஆர்வலர்களின் கட்டுரைகள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தங்கமீன் சார்பற்ற தகவல் மற்றும் இலக்கிய ஊடகமாகத் திகழும். சிங்கப்பூரில் இருந்து பல்வேறு தமிழ் சார்ந்த இணைய தளங்கள், வலைப்பதிவு திரட்டிகள் மற்றும் வலைப்பதிவுகள் இயங்கி வந்தாலும் முழுமையானதொரு இணைய இதழாக தங்கமீன் தவழ்ந்து வருவது இது தான் முதல் முறை. தங்கள் இலக்கிய கதை, கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை கள், நிகழ்வுகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா மேலும் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் இணைய எழுத்தார்வளர்கள் தங்கமீனில் வெளியிட ஆக்கங்களை அனுப்பலாம்.
13 ஆகஸ்ட், 2010
அப்துல்லாவுக்கு ஆதரவாக நான் பொங்குறேன்...
ஆண்களைக் குறிப்பிட்டு எதுவும் பேசிவிடலாம் யாரும் கேட்கமாட்டார்கள், ஆனால் பெண்களைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லிவிட முடியாது என்பது நிருபனம் ஆகிவிட்டது. சொம்பு தூக்கிகள் (நாட்டாமைகள் தான்) யாரும் சொம்பு வாங்க வராததால் சேலம் சொம்பு மொத்த வியாபரமும் நொடித்து போய் மூடும் நிலைமைக்குச் சென்றுவிட்டதாம். சொம்பு வியாபாரிகளுக்கு பெருத்த நட்டம். அடிக்கடி பெண்கள் பாதிக்கப்படக் கூடாதா என்ற வேண்டுதல் வைக்க அனைவரும் பழனிக்கு காவடி எடுக்கப் போவதாகக் கேள்வி. அப்துல்லாவுக்கு ஆதரவாக யாருமே பொங்காததால்,
நான் பொங்குறேன்.
9 ஜூன், 2010
நமீதா....வினால் ட்விட்டரில் பின் தொடரப்படும் பிரபல பதிவர் !
அந்த அதிர்ஷ்டக்காரப் பதிவர் யாரும் இல்லை, புதசெவி(புரியல தயவு செய்து விளக்கவும்) பதிவர் டிபிசிடி தான்.
மலேசியா லங்காவியில் பில்லா படப்பிடிப்பில் போது நமீதா உர்கார்ந்து பயணம் செய்த மகிழுந்தின் அதே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் டிபிசிடி என்பது எனக்கு தெரிந்த கூடுதல் தகவல்.
எப்போதும் வெளிவராத தகவல்: விரைவில் வலைப்பதிவு மற்றும் டுவிட்டர் நமீதா ரசிகர் குழுவின் தலைவராகவும் ஆக இருக்கிறார் டிபிசிடி . :)
பாராட்டுகள் டிபிசிடி.
தொடர்புடைய ட்விட்டர் சுட்டிகள் : tbcd ; namitha
21 மே, 2010
மணற்கேணி - 2009 நிறைவு நிகழ்ச்சிகள் !
மணற்கேணி - 2009 நிறைவு நிகழ்வுகளாக, வெற்றியாளர்களை சிறப்பிக்கும் வண்ணம், வெற்றியாளர்கள் கலந்து கொள்ளும், சிங்கைப்பதிவர்கள் சார்பாக கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதைத் சிங்கைப் பதிவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றியாளர்கள்:
திரு தருமி (அரசியல் சமூகம்)
திரு தேவன் மாயம் (தமிழ் அறிவியல்)
திரு பிராபகர் (தமிழ் இலக்கியம்)
மணற்கேணி போட்டியில் கலந்து கொண்ட பதிவுகளின் இணைப்பு இங்கே (தமிழ்வெளி)
நிகழ்ச்சியில் சிங்கைப் பதிவர்கள், வலைப்பதிவு வாசிப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
நிகழ்ச்சி பற்றி மேலும் அறிய அழையுங்கள்:
கோவி.கண்ணன் 9876 7586
குழலி 8116 5721
ஜோசப் பால்ராஜ் 9337 2775
1 ஏப்ரல், 2010
ருத்ரன் பதிவுலகை விட்டு ஓடுவாரா ?
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவரும் இல்லை என்பது எனது நம்பிக்கை. ஆனால் தனக்கான விளம்பரத்திற்கு என்று எதையும் வேண்டுமென்றே தூண்டாமல் இருக்கும் ஒருவருக்கெதிரான வன்மம், விஷமத்தனம் ஆபாச அர்சனைகளை விமர்சனமாக பாக்கும் பக்குவம் எனக்கு இல்லை.*****
மருத்துவர் ருத்ரன் செய்த தவறு ?
வினவு குழுவுடன் தொடர்பு வைத்துள்ளார், அவர்களின் கருத்துகளை ஆதரிக்கிறார். பார்பனர்களின் நிலைப்பாட்டு அரசியலை எதிர்க்கிறார், எம்எப்ஹுசைனுக்கு ஆதரவு கொடுத்து இந்துத்துவாக்களை கண்டித்தார்.
இவ்வளவு தவறுகள் செய்த்த மருத்துவரை மன ரீதியில் டார்சர் கொடுத்து பதிவுலகை விட்டு துறத்துவது எப்படி ?
Anonymous said...
ஐயா,
தயவு செய்து பார்ப்பனர் மீதான தனிமனித தாக்குதல் வேண்டாமே.
உமா மேடம்,மனிதம் வளர்ப்போம்.நாளையே உங்களுக்கோ அல்லது ருத்ரன் சாருக்கோ பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகி பெரிய ரத்த இழப்பு,அரிய வகை ரத்தம் எங்கும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஒரு பார்ப்பனர் ரத்தம் கொடுத்தால் வேண்டாம் என்பீர்களா ?
பார்ப்பான் நல்லவன் என்று நம்புவதற்கு ருத்ரனுக்கு ஆக்சிடெண்ட் ஆகனுமாம். என்ன ஒரு நல்ல எண்ணம் !!!
- இதை ஒரு முதிர்ச்சியற்ற முதியவர் (அப்படி என்றால் 65 வயது இளைஞன்...நம்புங்க !!!) மற்றும் சாதி பிரியரின் பதிவில் படித்தேன். மேலும் பல தனிமனித தாக்குதல் , தனிமனித தாக்குதலுடன் கூடிய பெரும்பாண்மையான அனானி கமாண்டுகளை அந்த முதிர்ச்சியற்ற முதியவர் தனக்கு தானே போட்டு மகிழ்ந்து கொள்வார் என்பதை பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். முதிர்ச்சி சிறிதும் அற்ற அந்த முதியவர் குஷ்பு மேட்டரை மறுப்பதிவு செய்து இன்னொரு போலி டோண்டு உருவாக்கத்திற்கு முயற்சி செய்தார்... எல்லோரும் புரிந்து கொண்டு அந்த பக்கமே போகவில்லை. இப்படியெல்லாம் அந்த முதிர்சியற்ற முதியவரைப் பற்றிச் சொல்கிறேன் என்றால் அவர் எனக்கு எதிரி என்று பொருள் இல்லை.
தன்னை மதிக்காத அந்த முதிர்ச்சி அற்ற முதியவரின் பதிவில் தெரியாத்தனமாக பின்னூட்டம் போட்டு சிக்கியவர் மருத்துவர் ருத்ரன்.
*****
மருத்துவர் ருத்ரனின் பின்னூட்டம் முதன் முதலில் கிடைக்கப் பெற்ற பதிவர்கள் அதை (வரமாக) நினைத்து பெருமைபட்டார்கள். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட மருத்துவர்களில் மருத்துவர் ருத்ரன் முகத்துடன் உடனே நினைக்கப்படுபவர் அந்த அளவுக்கு தொழிலிலும், மீடியாக்களிலும் அறியப்பட்டவர்.
நம்ம வியந்து பார்ப்பவர்கள் நம்முன் அடிக்கடிவந்தால் அவரும் சாதரண மனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். பின்னூட்ட பினாமிகளால் அர்சிக்கப்படும் ருத்ரன் பாவம் !!! என்று சொன்னால் மருத்துவர் ருத்ரன் சிரிக்கக் கூடும். இருந்தாலும் ருத்ரன் ஐயாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தகுதியற்றவர்களிடம் மோதி அவர்களை வளர்த்து விடாதீர்கள்.
ருத்ரனின் மீதான வெறுப்பு அவருடைய பார்பனிய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்பதைத் தாண்டி, அவர் மீதான தாக்குதல்களுக்கான உளவியல்,
ஒட்டுமொத்தமாக தாடியுடன் பார்த்தால் ருத்ரன் ஒரு 'பெரியார் பிம்பம்'
பெரியார் மீது வெறுப்பு உள்ளவர்களின் இலக்கு, மருத்துவர் ருத்ரனாகவும் இருக்கிறார்,
அவர் மற்றும் அவரது மனைவியை விமர்சனம் செய்தால் அவர் நிச்சயம் ஓடிவிடுவார் என பதிவுலகை விட்டு ருத்தரனை துறத்த முயற்சிக்கும் கூட்டம் வெற்றி பெரும் என்றெல்லாம் நான் நம்பவில்லை :)
15 மார்ச், 2010
அப்போது நான் சமாதி நிலையில் இருந்தேன் !
ஸ்வாமி ஓம்கார் வழக்கம் போல் கலக்கினார், நகைச்சுவையாக பேசினார், கேள்வி பதில்களுக்கு சிறப்பாக பதில் சொன்னார், 1:30 மணி நேரம் சொற்பொழிவாற்றினார் என்றெல்லாம் வந்தவர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்தார்கள். எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது, நான் சமாதி நிலையில் இருந்தேன். சொற்பொழிவு நிறைவில், அரங்க மின் விசிறியை நிறுத்திவிட்டு எல்லோரும் சுண்டல் சாப்பிடப் போவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது விழிப்படைந்தேன். நிகழ்வைப் பற்றி பதிவர் கிரி எழுதினால் சிறப்பாக இருக்கும், ஸ்வாமி ஓம்கார் கோவை திரும்பிய பிறகு நிகழ்வுகளைப் பற்றி எழுதுவார் என நினைக்கிறேன்.


********
மறுநாள் (சனி கிழமை) கேபிள் சங்கர் மற்றும் ஸ்வாமி ஓம்காருடன் பதிவர் சந்திப்பு, 15க்கும் மேற்பட்ட பதிவர்களுடன் சிறப்பாக நடந்தேறியது, லேசான மழை மாலை வெயிலை தனித்திருந்தது, கேபிளுடன் மதியம் உண்டுவிட்டு, ஸ்வாமி ஓம்காரின் யோக வகுப்புகள் முடிந்து வரும் வரை அவருக்காக காத்திருந்தோம், பின்னர் அவரையும் அழைத்துக் கொண்டு சந்திப்பு நடைபெறும் இடம் சென்றோம், அனைவரும் வந்து சேர மாலை 5 ஆகி இருந்தது, சினிமா தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி, தனது துய்புகளை கேபிள் பகிர்ந்து கொண்டார். ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் தொடர்புடைய கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை தெரிவித்தார், சில பர்சனல் கேள்விகள் வெகு பர்சனல் என்பதால் அவற்றை தவிர்த்தார். ராஜேஷ் அண்ணன் கொண்டுவந்த மிளகாய் பஜ்ஜி மற்றும் பச்சை பட்டானி சுண்டலுடன் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.
********
மறுநாள் (நேற்று) கேபிளுடன் செந்தோசா உல்லாச தளத்தில் சுற்றினோம், அங்கே புதிதாக வரவிருக்கும் யுனிவர்சல் ஸ்டுடியோவின் முகப்பை பார்வை இட்டுவிட்டு, சூதாடும் தளத்திற்கு வந்தோம், வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு இலவச நுழைவு என்றாலும் ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை தகுதி பார்க்கிறார்கள். கேபிள் அரை ட்ராயர் அணிந்திருந்ததால் நுழைவுக்கு 'நோ' சொல்லிவிட்டார்கள். மாலை மணி 3 இருக்கும், ஸ்வாமி ஓம்காரும் அந்நேரம் அன்றைய யோகா வகுப்புகளை முடித்திருந்ததால் அவரையும் செந்தோசாவிற்கு வெற்றிகதிரவனுடன் வரச் சொன்னோம், கேபிள் 'அண்டர் வாட்டர் வேர்ல்ட்' எனப்படும் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தை கண்டபின்னர். ஓம்காரும் அங்கு வந்து சேர்ந்தார், பிறகு வெற்றிக் கதிரவனுடன் அருங்காட்சியகத்தையும், பின்னர் மூவரும் டால்பின் விளையாட்டு காட்சிகளையும் கண்டபின்னர், வெளியே வந்தார்கள். இடையே ஜெகதீசன் கானா பிரபாவிற்கு தகவல் சொல்ல, ஞானசேகரை நான் வரச் சொல்லி இருந்தேன், அவரும் வந்து சேர பின்னர் டொன்லீயுடன் அங்கு வந்து சேர்ந்தார் கானா. மாலை 6 ஐத் தாண்டி இருந்தது, அப்படியே நடையாக லேசர் ஒளிக்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து அங்கே 7:45 காட்சிக்கு அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நான் திரும்பி விட்டேன்.


எதிர்பாராமல் ஒன்றன் பின் ஒருவராக செந்தோசாவில் ஆஸ்திரேலியா, சிங்கை, இந்திய பதிவர்கள் மொத்தம் 8 பேர் சந்தித்த நிகழ்வாக அமைந்தது.
11 மார்ச், 2010
சீடர்கள் தப்பி ஓட்டம் !
ஸ்வாமி ஓம்கார் மற்றும் உலக பதிவர் கேபிள் சங்கர் (உண்மை தாங்க, என்னிடம் வலைப்பதிவு சாராத பல நண்பர்கள் கேபிளாரின் பதிவுகளை விரும்பிப் படிப்பதாக சொல்வதுண்டு) இருவர் வரவிருந்த புலி விமானம் சென்னையிலேயே 2:30 மணி நேரம் காலந்தாழ்த்தி புறப்பட குறித்த மாலை 8:30 மணிக்கு பதிலாக 10:30 மணிக்கு தரையிரங்கி, குடிநுழைவு சோதனைகளை முடித்துக் கொண்டு 11:00 மணிக்கு வெளியே வந்தார்கள்.
.jpg)
வெற்றி கதிரவன் கேபிளாருக்கு சிறப்பு வரவேற்பு அட்டையை பிடித்திருந்தார். துக்கள் மகேஷ் முன்பே வந்துவிட்டார் ஜோசப் பால்ராஜ் தனது சொந்தக்காரை எடுத்துவந்து இருவரையும் வரவேற்க்க நின்றார். விஜய் ஆனந்த் தனது குட்டி பையனுடன் வந்திருந்தார், ஜெகதீசன், ரோஸ்விக் மற்றும் பிரபாகர் ஆகியோரும், ஓம்காரின் யோகா மாணவர் திரு வைரவன் வந்திருந்தார். வந்தவுடன் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்த பிரபாகர், 'கோவியார் வரவில்லையா ? என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். என்னைய ரொம்ப 'பெருசா'(!) நினைத்திருப்பார் போல :). நாங்களெல்லாம் காத்திருந்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் வெளியே வந்தார்கள். பெட்டியை அடையாளம் கண்டு எடுத்துவர நேரம் விரைந்துவிட்டதாம். "இமிக்ரேசன் பிரச்சனை ஒண்ணும் இல்லையே ?" ஓம்காரிடம் கேட்டேன். "நீளமான தலைமுடி வைத்திருந்தால் ஒருவேளை கேள்விகள் கேட்பாங்க போல, என்கிட்ட ஒண்ணும் கேட்கவில்லை" நகைச்சுவையாக சொன்னார்.

கேபிளாரிடம் நீங்கள் பரத்தை வைத்து இரண்டாம் பாகமாக இயக்கப் போகும் "தம்பிக்கு இந்த ஊரு" படத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை, போஸ்ட் மேன், பொட்டிக்கடை வைத்திருப்பவர் இப்படி சின்ன ரோலே இருந்தால் என்னை போட்டுவிடுங்க, என்னை வச்சு கதாநாயகனாக அடுத்தப்படம் எடுக்கும் போது சொல்லுங்க அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டு கால்சீட் தருகிறேன் என்று சோசப்பு லொள்ளினார். அவ்வ்வ்
"கேபிள் அங்கிள்" ன்னு சொன்னதால் எனக்கு அவமானமாகிப் போச்சு, நான் இப்படியே திரும்பிப் போகிறேன் என்று கேபிள் முரண்டு பிடிக்க அவரை சமாதானம் செய்து வெளியே கூட்டிவருவதற்கு 1000 முறை "சாரி அங்கிள்" சொல்லிவிட்டார் வெற்றிக்கதிரவன்.


எல்லோரையும் அவரவர் இருப்பிடம் நோக்கி அனுப்ப மணி இரவு 11:45 ஆகி இருந்தது.
கேபிளார் ஒருவாரம் வரையில் இருப்பார், ஸ்வாமி ஓம்காரின் யோகா நிகழ்ச்சிகள் 10 நாள்கள் வரையில் நடக்கின்றது. இருவரின் தொடர்புகளுக்கான அலைபேசி எண்களை பிறகு இங்கு வெளி இடுகிறேன். (கேபிள் லொகேசன் பார்ப்பதிலும் கதாநாயகி தேர்விலும் பிசியாக இருந்தால் அலைபேசியை எடுக்க மாட்டார்)
:)
கேபிள் சங்கரின் அலைபேசி எண் (0065) 91010419
ஸ்வாமி ஓம்காரின் நிகழ்ச்சிகள் :
8 மார்ச், 2010
சிங்கையில் ஸ்வாமி ஓம்காரின் திருமந்திரம் சொற்பொழிவு !
இடம் : வடபத்திர காளியம்மன் கோவில்
நாள் : 12 மார்ச் 2010, வெள்ளிக்கிழமை; நேரம் மாலை 7:00 - 9:00
அனைவரும் வருக அனுமதி இலவசம். சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*****
நாத்திகம் பேசும் நீ ஏன் ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வைத்திருக்கிறாய் என்று பல நண்பர்கள் வியப்புடன் கேள்வியாகவே கேட்கிறார்கள். நான் என்னவோ ஆன்மிக எதிரி என்றும் தீவிர பகுத்தறிவாளன் பெரியார் தொண்டன் என்கிற பிம்பத்தை படிப்பவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். மூடநம்பிக்கையையும், மதவெறி, சாதிவெறியையும் எதிர்ப்பவன் இறை நம்பிக்கையற்றவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதே ஆன்மிக மற்றும் நாத்திக நண்பர்களின் எண்ணமாக இருக்கிறது. இது மிகவும் தவறு. மக்களுக்கு பயனிளிக்க வேண்டிய ஒன்று எந்த பெயரில் இயங்கினால் என்ன என்பதை நினைக்க மறந்துவிடுகிறார்கள்.
இந்த பொது புத்திப் புரிதலில் கொள்கை ரீதியான தவறுகள் பெரும்பாலும் மறைக்க அல்லது மன்னிக்கப் படுகிறது. நிறுவனம் அல்லது வணிக மயமாகி இருக்கும் கொள்கைகள் என்ற அளவில் (நாள்பட்ட) தலைமையில் கீழ் இயங்கும் பகுத்தறிவு வாதமோ, ஆன்மிகமோ எல்லாம் ஒன்று தான். எந்த ஒரு கொள்கையும் தலைமையை வைத்து அளவிட செய்ப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கொள்கைக்கான தொண்டன் என்ற பெயரில் தலைமை முறைகேடுகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்று எழுதாத விதியாக எல்லாவித அமைப்புகளிலும் உண்டு.
எனது நிலைப்பாடுகள் என்ற அளவில் பலமுறை நான் எழுதி இருப்பவை, சாதி எதிர்ப்பு அல்லது சாதிச் சம உரிமை. மதவாத எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, தாய் மொழி உணர்வு இதன் அடிப்படையில் தான் நான் எழுதிவருகிறேன். பிறரைத் தாழ்த்தாத வீழ்த்தாத நம்பிக்கைகள் எதையும் நான் குறை சொன்னது கிடையாது. ஓப்பீட்டு அளவில் எங்கள் மதத்தில் தான் அனைவரும் உய்வு அடைகிறார்கள் போன்ற மதபற்று போலி ஆன்மிகத்தை கடுமையாகவே சாடி இருக்கிறேன். பார்பனியம் என்கிற தளத்தில் உயர்வர்க்க, ஆளுமைகளைச் செய்யும் பார்பனர்களையும் பிற சாதியினரையும் கடுமையாகவே சாடி இருக்கிறேன். மற்றபடி பல்வேறு மதம், சமூகம் சார்ந்த நெருக்கமான நண்பர்கள் எனக்கு உண்டு. கொள்கை அளவிலான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் போது அங்கே நட்பையோ, தனிப்பட்ட குணநலன்களையும் நான் கருத்தில் கொள்வது இல்லை. எனக்கு பல தரப்பு நண்பர்கள் உண்டு, அதிலும் ஆன்மிகம் பேசுபவர்கள், ஆன்மிக வாதிகள் நிறையவே உண்டு. நான் கண்ணை மூடிக் கொண்டு நாதிகன் பேசுபவனும் அல்ல கண்ணை மூடிக் கொண்டு ஆன்மிகம் என்ற பெயரில் அடவாடிகள் செய்யும் மதவாதிகளை ஆதரிப்பவனும் அல்ல. நான் பெரியார் மற்றும் வள்ளலார் ஆகியோரை சமமாகவே போற்றுகிறேன் என்பது என் வலைப்பதிவில் அவர்கள் இணைந்திருக்கும் படமே தரவு.
*****
ஸ்வாமி ஓம்கார் பதிவுகள் தமிழ் மணத்தில் புதிதாக இணைந்த போது அவருக்கு பின்னூட்டம் இட்டவர்கள் மிகக் குறைவு, ஏனெனின்றால் இந்து ஆன்மிகம் என்ற பெயரில் பார்பனிய மேலாண்மை போற்றும் கருத்துகளே வெளிவருகிறது என்பதால் ஸ்வாமி ஓம்கார் எழுத வந்த போது, இவரும் ஒரு இந்துத்துவவாதியோ என்று நினைக்க வைத்திருக்கும். நான் அவரது தொடக்க கால 'குரு கீதை' பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட போது கூட அப்படியாக நினைத்தேன். ஆனால் அவரது மறுமொழிகள் இந்துமதத்தை தாங்கிப் பிடிப்பதாக இல்லாமல் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருந்தது. மேலும் புனிதம், புனிதத்துவம் என்ற இனிப்பு தடவி எதையும் எழுதாமல் எதார்த்தமாக எழுதிவந்தார். பிறகு அவருடன் மின் அஞ்சல் தொடர்பு என நட்பாக தொடர்ந்தது அவரது அறிமுகம். தமிழகம் சென்றிருந்த போது கோவையில் நேரடியாக சந்தித்தேன். ஆசிவாங்கவோ, ஜோதிடம் பார்க்கவோ செல்லவில்லை. இணையத்தின் வழியாக அறிமுகம் ஆன நண்பர் என்ற அளவில் தான் எங்கள் சந்திப்பு அமைந்தது. இன்றளவிலும் அப்படித்தான். ஸ்வாமி ஓம்கார் மற்றவர்களுக்கு சாமியார், ஸ்வாமிஜி. வால்பையன் , கல்வெட்டு போன்றவர்கள் பார்வையில் மற்றொரு போலி சாமியார். எப்படியோ....என்னைப் பொருத்த அளவில் மனம் விட்டுப் பேசக் கூடிய நல்ல நண்பர்.
சிங்கையில் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். எனக்கு தெரிந்தது சோதிடம் மற்றும் ஆன்மிகம், ஆன்மிக நிகழ்ச்சி நடத்தலாம், என்னுடைய மாணக்கர் ஒருவர் இருக்கிறார். அவரும் கூட சிங்கையில் நிகழ்ச்சி நடத்தக் கேட்டுக் கொண்டார் என்று ஸ்வாமி ஓம்கார் என்னிடம் குறிப்பிட்டார். அவரது தினம் தினம் திருமந்திர நூல் வெளியான பிறகு, ஏற்பாடு செய்யுங்கள் திருமந்திரம் பற்றி சொற்பொழிவு நடத்துகிறேன் என்றார். அவரது மாணக்கருடன் கலந்து பேசினேன். அவருக்கு தேவை ஸ்வாமி ஓம்கார் நடத்தும் யோகா வகுப்புகள் தான். ஏனெனின்றால் அவரால் 10 - 15 நாட்களுக்கு இந்தியாவில் தங்கி ஸ்வாமி ஓம்காருடன் யோகா கற்றுக் கொள்ள நேரம் வாய்கவில்லை. கூடவே அவரது நண்பர்கள் பலருக்கும் யோக கற்றுக் கொள்ள ஆவல் (யோகாவும் இந்திய ஆன்மிகம் ஒன்றுக் கொண்டு தொடர்புள்ளது என்றாலும், இப்பொழுதெல்லாம் எளிமை படுத்தி ஆன்மிகம் கலக்காமல் பலர் மதச் சார்பற்ற யோகா நடத்துகிறார்கள்)
எனவே திருமந்திரம் சொற்பொழிவுடன் யோகா வகுப்புகளும் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு, ஸ்வாமி ஓம்காருக்கு தேதிகளைக் குறிப்பிட்டு, தங்கும் இடம் முதல் அனைத்தும் ஏற்பாடுகளையும் ஸ்வாமியின் மாணக்கர் மற்றும் நான் இணைந்து செய்தோம்.
ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சியினூடே சனி அல்லது ஞாயிறு பதிவர் சந்திப்புகள் உண்டு. தேதி முடிவு செய்யவில்லை. பின்னர் சிங்கைப் பதிவர்களுடன் கலந்து பேசிவிட்டு எழுதுகிறேன்.
இசை, இயல் தமிழில் இருக்கும் பல்வேறு பக்தி இலக்கியங்களில் திருமந்திரம் சிறப்பு வாய்ந்தது, அதனை ஸ்வாமி ஓம்கார் எளிய விளக்கங்கள் மூலம் திருக்குறள் போல் எளிமை படுத்தி பக்தியாளர்களுக்கு பயனளிக்கும் நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். ஸ்வாமி ஓம்காரின் சொற்பொழிவு அவரது நூல்கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பொருத்த அளவில் ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் சார்ந்த ஒரு இலக்கிய பேச்சாளர் என்பதாகத்தான் நான் அவரை வரவேற்க மற்றும் முன்மொழிய முடிவு செய்தேன்.
நித்யானந்தன் அம்பலப்பட்டு கிடக்கும் இந்த வேளையிலும் ஒப்புக் கொண்டுள்ளபடி நிகழ்ச்சி நடத்த துணியும் ஸ்வாமி ஓம்காரை மனதாரப் பாராட்டுகிறேன்.
சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சிங்கைப் பதிவர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடம் தெரிவித்து அழைக்க வேண்டுகிறேன். யோக வகுப்புகளுக்கு பதிவு செய்வோர் என்னையோ அல்லது ஸ்வாமி ஓம்காரின் மாணாக்கர் திரு வைரவன் (9750 4503) அவர்களையோ அழைத்து பதிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகள் இலவசம்.
பதிவர்கள் அனைவரின் வருகையால் ஆதரவால் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமையும். நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக !
24 பிப்ரவரி, 2010
பதின்ம கால நினைவுகள் (எச்சரிக்கை தொடர் பதிவு) !
வீட்டில் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் மூவர் (என்னுடன் சேர்த்து 4 பேர், மேலும் அக்கா, தங்கை) இருந்தாலும் அடித்துக் கொண்டது, புத்தகங்களைக் கிழிப்பது, மிதிவண்டியை உடைப்பது போன்ற ஓற்றுமையைத்தான் செயலில் காட்டி வந்தேன். திரைப்படங்களில் காட்டுவது போல் அண்ணன் தம்பி பாசம் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு இடையே நிறைய ஆண்டு வேறுபாடு இருக்கவேண்டும் இல்லை என்றால் இருவர் அல்லது மூவராக குறைந்த எண்ணிக்கையில் உடன்பிறந்த உறவு முறைகள் இருக்க வேண்டும். ஆனால் இருபது அகவைக்கு மேல் உடன் பிறப்புகளின் மீதான ஈர்ப்பு இயல்பாக வந்துவிடும்.
+1, +2 படிக்கும் போது நானும் பேண்ட் - க்கு மாறிவிட்டேன், ஜட்டி போட்டு போடனுமாம், அதுக்கு முன்பு வரை அரை ட்ராயர் போடும் போது அந்த வழக்கம் இல்லை. (பெரு)நகர் புறங்களிலும், படித்த பெற்றோர்களின் பிள்ளைகளிடமும் அந்த வழக்கம் இருந்தது, தற்போது வசதி குறைந்த மாணவர்கள் கூட ஜட்டி அணியாமல் அரை ட்ராயர் அணிவது கிடையாது. என் தம்பி மகன்கள் வெறும் அரைடிராயருடன் செல்வது இல்லை. அப்போதெல்லாம் அரை ட்ராயர் பின்னால் கிழிந்து தபால் பெட்டி என்று கிண்டல் செய்வோரும் உண்டு, எப்படிடா உங்களுக்கெல்லாம் பின்னால் கிழியுது என்று கேள்வி கேட்பார்கள், அதில் ஒன்றும் புதிர் இல்லை, சறுக்கு மரம் எனப்படும் சாய்வு ஏறி (ஸ்லைடிங் ரெய்ட்) சிமெண்டால் தான் செய்யப்பட்டு இருக்கும், தற்போது ப்ளாஸ்டிக்கில் செய்கிறார்கள், சிமெண்ட் சாய்வில் சருக்கும் போது அரை ட்ராயரின் பின்பக்கம் தேய்ந்து ஓட்டை ஆக்கிவிடும், வீட்டில் உள்ளவர்கள் போடக் கூடாது என்று சொல்லும் வரை தபால் பெட்டி அரை ட்ராயருடன் வெளியே சென்றதில் அப்போதைய மாணவர்கள் யாரும் வெட்கப்பட்டது போல் தெரியவில்லை.
+1, +2 படிக்கும் போது தான் சாதிய முகங்கள் அறிமுகம் ஆகின, மாணவர்களுக்குள்ளேயும், இவன் பறையன், பள்ளன், செட்டி(யார்), முதலி(யார்), பூணூல்காரன் என்றெல்லாம் சாதிய அடையாள பட்டப் பெயர் வைத்து அழைத்துக் கொள்வார்கள். என்னுடன் படித்த பார்பன மாணவர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் வகையில் வகுப்பில் முதலாக வந்ததே இல்லை. ஆங்கில அகர வரிசை படி வகுப்புகளின் மாணவர் வருகைப் பதிவேடு வாசிப்பதன் மூலம் ஒரிரு வாரங்களில் அனைவரின் பெயர்களும் தெரிந்துவிடும், எப்படியோ கூடவே அதே மேசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் அவர்களுக்குள் நட்பை மேலும் வளர்த்துக் கொள்வார்கள், அவர்களுக்கு பிடித்தவர்கள் என வகுப்பினுள் குழுக்கள் உருவாகி இருக்கும், இப்படியாக உருவாகும் குழுக்கள் உடற்பயிற்சி வகுப்பின் போது அவிழ்த்து விடுவதை வாய்ப்பாக்கிக் கொண்டு காமக் கதைகளையும், பாலியல் பற்றிய அறிவுகளை வளர்த்துக் கொள்வார்கள், கற்பத்தடைகள் வகைகள் பற்றியெல்லாம் அப்போது தான் உடன்படிக்கும் மாணவர்கள் சொல்லக் கேட்டுக் கொண்டேன். என்னுடன் படித்த மாணவர்களில் மிகச் சிலரே நல்ல நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்களின் முகவரிகள் தெரியவில்லை.
பிறகு கல்லூரிக்குச் செல்வார்கள், எனக்கு கல்லூரி செல்லும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை (பிறகு கிடைத்தது, பின்னர் பகுதி நேரமாக இளநிலை முடித்தேன்), பெரிதாகவும் முயற்சிக்கவில்லை, பாலிடெக்னிக் எனப்படும் பட்டய படிப்பில் தான் சேர்ந்தேன். கூடவே 20 மாணவர்கள் வரை படித்தார்கள், 18 அகவை ஆகி இருந்தது, உடன் படிப்போர் அவர்களது வீட்டுக்குச் செல்லும் போது அவர்களின் தங்கைகள் பார்த்துவிட்டால் உள்ளே சென்று அறையினுள் முடங்கிவிடுவார்கள். ஒவ்வொரு முதிர்நிலை பதின்ம வயது மாணவனுக்கும் தன்னுடைய நண்பனின் தங்கையை சைட் அடிப்பது அல்லது அவள் தன்னை காதலிக்கிறாளோ என்கிற நினைப்பு இருக்கத்தான் செய்கிறது. பதின்ம வயதில் மட்டுமல்ல, நான்காம் வகுப்பு படிக்கும் போது என்வயதை ஒட்டிய என்னுடன் அப்போது நான்காம் வகுப்பு நண்பன் (அதே தெருவில் இருப்பவன்) ' அந்த (எட்டாம் வகுப்பு)அக்காவை லவ் பண்ணப் போகிறேன்' இன்னொரு மாணவனிடம் சொல்லி, அவன் அதை வெளியே சொல்ல இரண்டு பக்கமும் பெற்றோர்களிடம் நன்றாக முதுகு வீங்கும் அளவுக்கு வாங்கினான், நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.
மற்றபடி அந்த வயதில் பெற்றோர்களுடனோ, உடன் பிறந்தோர்களுடனோ நல்லதொரு புரிந்துணர்வு வளர்ந்தது என்று சொல்ல முடியவில்லை. அவையெல்லாம் பின்னால் வேலைக்குச் சென்ற பிறகே ஏற்பட்டது.
பதின்ம வயதுகள் மன முதிர்ச்சி வளரத்தொடங்கும் வயது, பாலியல் ஆர்வம், கல்வித் தேர்வு என பல அறை கூவல்களை உள்ளடக்கியது.
என்னை தொடருக்கு அழைத்த இயற்கை நேசி, நண்பர் தெகா அவர்களுக்கு நன்றி. இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...
பெரியவர் மதுரை கிருஷ்ண மூர்த்தி (Consent tobe Nothing)
பெரியவர் மதுரை சீனா ( அசைபோடுவது)
துளசி அம்மா (துளசி தளம்)
இளைஞர் அக்பர் (சினேகிதன்)
இளைஞர் ஸ்டார்ஜன் (எ) ஷேக் (நிலா அது வானத்து மேலே)
என்றும் இளைஞர் சஞ்செய் காந்தி (முன்னாள் பொடியன், இன்னாள் SanjaiGandhi)
(பழைய நினைவுகளில் விருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் வெட்கப்படாமல் எழுதுங்க)
பிகு : மேலே உள்ள படம் இணையத்தில் கிடைத்தது மற்றபடி எனக்கு படத்துக்கும் தொடர்ப்பு இல்லை.
25 ஜனவரி, 2010
இராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு !

பேச்சு சங்க இலக்கியம், தமிழக பண்டைய அரசர்கள், அசோகர் குறிப்புகள் என இலக்கிய காலம் பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இலக்கிய காலம் அல்லது வரலாற்றின் காலம் வரையறுத்தலில் பயன்படுத்தும் Absolute Marker எனப்படும் குறிப்பு முறைகளைப் பற்றி சொல்லத் தெரிந்து கொண்டோம். வரலாற்றின் காலம் கிறித்துவ ஆண்டின் அடிப்படையில் ரோமப் பேரரசுகளின் குறிப்புகளை ஒட்டி அவற்றுடன் தொடர்புடைய தகவல்களால் வரலாற்றின் காலம் வரையறுக்கப்படுகிறது. இதன் படி சங்க இலக்கியத்தின் காலம் கிமு 1000 வரையில் கூட இருக்கவும், சிலம்புவின் காலம் கிமு வுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பதாக தெரிவித்தார். நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார். தமிழர்களின் தொல் சமயம் ஆசிவகம் எனப்படும் சமண வகையைச் சார்ந்ததாக இருப்பதற்கான கூறுகளாக சங்க இலக்கியத்தில் எண்ணற்றக் குறிப்புகள் காணக் கிடக்கின்றன என்றார். ஆசிவகம், பெளத்தம், திருத்தங்கர்களைப் பின்பற்றும் ஜைன சமயம் ஆகியவை சமணம் என்பதாகக் குறிப்பிட்டார். சமணம் என்கிற சொல் தனிப்பட்ட சமயம் சார்ந்ததல்ல அது ஒரு குறியீட்டுப் பெயர் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது சம்மணர் அதுவே சமணர் என்பதாகியது அந்த வகையில் புத்தர், மகாவீரர், ஆசிவகர் ஆகியோர் சமணர் எனப்பட்டனர் என்பதாக கூறினார்.
கிட்டதட்ட 2 மணி நேரத்திற்குமான உரையாடலில் தமிழ் தொடர்புடைய பல தகவல்களை தெரிந்து கொண்டோம். பேச்சு எழுத்து சீர்த்திருத்தம் தொடர்பாகவும் சென்றது. தற்போது இருக்கும் எழுத்து அமைப்பு போதுமானதாகவே உள்ளது, எழுத்துச் சீர்திருத்தம், மாற்றம் தேவை என்பதாக நடைபெறவிருக்கும் இணைய தமிழ் சொம்மொழி மாநாட்டில் தேவையற்றது என்பதாக குறிப்பிட்டார். அச்சுத் தமிழில் இருந்த எழுத்து எண்ணிகையின் அடிப்படையில் சேர்க்கப்படும் அச்சுக் கோர்ப்புகள் குறைபாட்டிற்கு பெரியார் பரிந்துரை மாற்றாக இருந்தது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் பெரிய அளவு மாற்றமாக இகர, உகர மெய்யெழுத்துச் சீர்த்திருத்தம் தேவை அற்றது, இந்த சீர்த்திருத்தப் பரிந்துரையின் படி இகர வரிசையிலான 'கு முதல் னு' மற்றும் 'கூ முதல் னூ' வரையிலான தனி எழுத்துக்குப் பதில் 'க்+உ,ஊ -> கு,கூ என்பதற்கு பதில் ஜு, ஜூ க்கு இருக்கும் மேற் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்பது போன்ற பரிந்துரையாம், இதன் மூலம் இகர உகர வரிசை எண்ணிக்கையிலான நெடுங்கணக்கு குறியீடுகள் வெகுவாக குறைக்கப்படும், எனவே கற்றுக் கொள்ள எழுது என்பதாக பரிந்துரைச் செய்ய இருக்கிறார்கள் இன்றும் இது தமிழுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தும் என்றார். அவருடைய பதைபதைப்புக் காரணமாக,
இந்த மாற்றம் சிறிய மாற்றம் அல்ல, வீரமாமுனிவர் செய்தது 3 விழுக்காடு, பெரியார் செயத்து 2 விழுக்காடு, ஒப்பீட்டு அளவில் புதியவகை மாற்றம் எழுத்து அமைப்பில் பெரும் சிதைவை ஏற்படுத்தும், ஏற்கனவே இருக்கும் இலட்சக்கணக்கான நூற்களை புதியவகை எழுத்துக்கு மாற்றி மீள் பதிப்பு செய்யப் போகிறவர் யார் ? அப்படிச் செய்யவில்லை என்றால் அவை பயன்படாமல் அழிந்துவிடவோ, வாசிக்க முடியாத ஒன்றாகவே ஆகி இலக்கிய பயன்பாட்டில் இருந்து முற்றிலும் மறைந்துவிடும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு.
எழுதும் முறைகள் கற்கள், துணி, ஓலைசுவடி, தாள், கணி(னி) என்று வளர்ந்து வந்திருக்கிறது, கணி(னி)யில் தட்டச்சு செய்வதற்கும் சேமிப்பதற்கும் தற்போதைய நடைமுறை எழுத்துக்களால் எந்த ஒரு தடையும் இல்லை, மேலும் எளிதாக மாற்றினாலும் தற்போதைய கணிணி நுட்பத்தினால் பெரும் மாற்றம் ஏற்படும் அளவுக்கு அந்த மாற்றம் பயனளிக்காது என்றார். அச்சுக் கோர்க்கும் காலத்தில் தேவை என்பதற்கு இருந்த எழுத்துச் சீர்திருத்தமும், தற்போதைக்கு வலிந்து வழியுறுத்தப் போகும் எழுத்துச் சீர்த்திருத்தமும் ஒன்று அல்ல, அது தேவையற்றதுமாகும் என்றார். உண்மையில் சொல்லப் போனால் ஆங்கில பெரிய சிறிய எழுத்துக்களின் எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் தற்போது நாம் படுத்தும் தமிழ் தட்டச்சு எழுத்துகள் எண்ணிக்கையில் குறைவே. உயிர், மெய், உயிர்மெய் என்ற எண்ணிக்கையில் நெடுங்கணக்கு குறியீடுகள் 247 எழுத்து என்றாலும் நம் பயன்படுத்தும் தட்டச்சு எண்ணிக்கைக் குறிய எழுத்துகள் 48க்கும் குறைவே, பெரும்பாலும் உயிர்மெய் எழுத்துக்கள் உயிர் + மெய் எழுத்துகளை சேர்த்து தட்டச்சும் போது நமக்கு கிடைக்கும் படி மென் பொருள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதால் மொத்தம் 247 எழுத்துகள் தமிழில் இருப்பது உண்மை என்றாலும் அவற்றை மொத்தம் 46க்கும் குறைவான தட்டச்சு விசை பொத்தான்களினுள்ளேயே அமைப்பட்டு இருக்கிறது. தங்கிலீஸ் முறையில் அல்லாமல் தமிழ் 99 முறையில் நாம் தட்டச்சு செய்யும் போது அந்த எண்ணிக்கை இன்னும் குறைவே. எனவே 247 எழுத்துகள் தனித் தனிக் குறியீடாக நம் விசைப்பலகையில் இல்லை என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.
என்னிடம்(கோவி) தமிழில் எத்தனை எழுத்துகள் என்று பிறமொழி பேசுவோரிடம், நான் 247 என்று சொல்வது இல்லை, பெரிய சிறிய என மொத்தம் ஆங்கிலத்தில் இருக்கும் 48 எழுத்துகளைவிட தமிழ் குறியீட்டுச் சொற்கள் எண்ணிக்கை குறைவு என்றே சொல்வதுண்டு.
இராமகி ஐயா சொல்வது போல் தமிழில் மேலும் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது என்பதுடன் அவர் சொன்னது போல், அத்தகைய பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் அது தமிழ் வளர்ச்சி என்னும் தொடர்ச்சியில் பெரிய பாறாங்கல்லைப் போட்டு பழந்தமிழுக்கும் தற்காலத்திற்கும் இடையே பெரிய தடையாகிவிடும் வாய்ப்பு மிகுதியாவே இருக்கிறது. எப்போதுமே வளர்ச்சி என்பதில் பழமைக்கும் புதுமைக்கும் நுட்பமான தொடர்பு இருக்கும் அந்த தொடர்பே வளர்ச்சியின் அளவீடாகவும் அமையும் அப்படியே அமையும் வளர்ச்சி மிக மிக மெதுவானதாகவும் தேவையானதாகவும் அமையும் போது அதனால் மொழிக்கு பயனுண்டு ஆனால் புகுத்தப்படும் பெரும் வளர்ச்சிகளினால் மொழி முற்றிலும் சிதையும் பேருங்கேடு உள்ளது. இதன் காட்டிற்காக பல்வேறு மொழிகளில் புகுத்தப்பட்ட நடைமுறைகளையும் அவை சிதைந்து போனதையும் குறிப்பிட்டார்.

இராமகி ஐயாவின் வேண்டுகோள், பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் என்ன எழுதினாலும் கூடவே அவ்வப்போது துறை சார்ந்த ஆக்கங்களை ஒன்றிரண்டாவது எழுதினால் நன்றாக இருக்கும், துறைச் சார்ந்த இடுகைகள் மிகவும் குறைவாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
நேற்றைய மாலை மாலை 6.30 வரை நடந்த சந்திப்பு சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இராமகி ஐயாவுக்கு மிக்க நன்றி.
இராமகி ஐயாவுடனான சந்திப்புக்கு வந்திருந்தவர்கள் ஜோசப் பால்ராஜ், இராம் குமார், ஜெகதீசன், விஜய் ஆனந்த், வெற்றிக் கதிரவன்(விஜய்), பிரியமுடன் பிரபு, ஜோ மில்டன் மற்றும் நான்.
*******
இணைப்பு: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது எனக்கோரும் மலேசிய பதிவர் திரு சுப.நற்குணன் அவர்கள் தனது திருத்தமிழ் பதிவில் எழுதிய இரு இடுகைகள் மற்றும் கருத்துரைகள்.
1.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)
17 ஜனவரி, 2010
தம2009 - வாக்களித்தவர்களுக்கு நன்றி !
போட்டிக்காக என்று எதையும் எழுதாவிட்டாலும் போட்டி நடைபெறும் பொழுது போட்டிக்காக எதை அனுப்பலாம் என்பதில் பெரும் மனக் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. போட்டிகளுக்கு அனுப்பப்படும் கட்டுரைகள் என்பதில் ஒரளவு தரமும் உண்மைத் தகவல்களும் இடம் பெற வேண்டும் என்பதால் அதற்குரிய தகுதி இருப்பதாக எனது இரு தொடர் கட்டுரைகளைத் தான் அனுப்பினேன். இரண்டுமே முதல் சுற்றில் வாக்குகளைப் பெற்று தேர்வாகி இருந்தது. இரண்டாம் சுற்றிலும் வெற்றிபெறுமா என்பது ஐயமாகவே இருந்தது, எனக்கு வாக்கு அளியுங்கள் என்று போட்டி முடியும் வரை யாரிடமும் தனிப்பட்ட அளவில் கேட்டுக் கொண்டதில்லை. அவ்வாறு கேட்டு வாங்கி வெற்றிபெறுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. போட்டிகளை கொடுக்கல் வாங்கலாக கொச்சைப் படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன். நான் போட்டிக்கு அனுப்பிய பிரிவுகளில் மிகவும் ஆக்கபூர்வமாகவும் வாசகர்கள் மிகுதியாக உடையவர்களும் போட்டி இட்டு இருந்தனர் என்பதால் இரண்டாம் சுற்றில் எனது கட்டுரைகளில் எதாவது ஒன்றாவது வெற்றிபெருமா என்கிற ஐயமும் இருந்தது. நல்ல கட்டுரைகள் வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் நாம் எழுதுவதும் நல்ல கட்டுரை என்கிற தீர்ப்பு வரவேண்டும் என்கிற விருப்பம் இருந்ததை இல்லை என்று சொல்வதற்கில்லை. போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அதன் பிறகு முதல் சுற்றில் தேர்வானதும் கூடுதல் மகிழ்ச்சி, இறுதி சுற்றில் பயணக் கட்டுரைக்கு இரண்டாம் இடம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

நாம் வெற்றிபெருவதைவிட வெற்றிபெறுவது அனைத்தும் நல்லக் கட்டுரைகளாக இருக்க வேண்டும் என்று எல்லோரைப் போல் நானும் விரும்புகிறேன்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே போட்டியில் பங்கு பெறுவது என்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துவிடுகிறார்கள். மற்ற முடிவுகள் எல்லாம் ஒரு அங்கீகாரம் என்ற அளவில் தான் கொள்ளப்பட வேண்டும். திருநங்கைகள் பற்றி மேலும் விழிப்புணர்வுகள் வளரவேண்டும் என்கிற சமூகப் புரிதலில் சகோதரி லிவிங் ஸ்மைல் வித்தியாவின் 'திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்' என்ற கட்டுரை வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன் இரு சுற்றுகளிலும் அவருக்காக வாக்களித்தேன். நினைத்தபடி வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கையின் எழுத்து என்கிற பொது புத்தி சாயம் கூட அவரது எழுத்துக்கு தேவையற்ற ஒன்று. தேர்ந்த எழுத்தாளரின் எழுத்துக் கூறுகள் அவரது எழுத்துகளில் உண்டு என்பதை அவர் பலமுறை நிருபணம் செய்திருக்கிறார். வெற்றி பெற்ற 'லிவிங் ஸ்மைல் - வித்யா' விற்கு நல்வாழ்த்துகள்.
மருத்துவர் புரூனோ, வினவு மற்றும் தமிழ் சசி ஆகியோர் இரு பிரிவுகளில் போட்டி இட்டு இரு பிரிவுகளில் வெற்றிகளும் பெற்றிருக்கிறார்கள். புதிய பதிவர்கள் நிறைய பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். போட்டி நடத்திய தமிழ்மணம் குழுமத்திற்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்
28 டிசம்பர், 2009
சிங்கையில் அழகிய சிங்கர் !

போகும் வழியில் ஈரோடு பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடந்ததையும் அங்கு ஆட்டம் போட்டதையும் பகிர்ந்து கொண்டு வந்தார். கேபிள் (சங்கர்), தண்டோரா இருவரும் பட்டையைக் கிளம்பினார்களாம், காரில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது, இவரும் பாட தொடங்கிவிட்டார். பால்ராஜ் பாட்டு ஒலியை முற்றிலுமாக குறைத்துவிட்டார். அப்துல்லா மட்டுமே பாடிக் கொண்டு வந்தார் ( உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்.....). ஏன்ம்பா பாட்டை நிறுத்திட்டிங்கன்னு அப்துல்லா கேட்க, அதான் லைவாக பாடுறியே அதான் நிறுத்திவிட்டேன் என்று சொல்ல கலகலப்பு.
சிங்கை நாதன் வீட்டுக்கு மாலை 7:30க்குச் சென்றோம். வீட்டில் உள்ளவர்கள் இன்னும் 1 மணி நேரத்தில் வந்துவிடுவதாகச் சொன்னார் செந்தில். செந்தில் தற்போது பார்க்கும் பொழுது முகம் நன்றாக தெளிவடைந்திருக்கிறார்.

சற்று கூடுதல் எடை, வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உடல் எடை கூடுகிறதாகச் சொன்னார். VAD எனப்படும் இதய இயக்கியை சிறிய பையில் போட்டு குறுக்காக மாட்டிக் கொண்டு இருந்தார். நன்றாக நடக்கவும் பேசவும் முடிகிறது.

எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். சிறிது நேரம் அவருடைய மருத்துவ நிலவரம் குறித்துக் கேட்டுக் கொண்டோம், மற்ற நிலவரங்களைப் பேசினோம். 45 நிமிடங்கள் ஆகி இருந்தது, அப்துல்லாவிற்கு வேறு சிலரைப் பார்க்க வேண்டியிருந்ததால் செந்தில் வீட்டினர் வரும் வரை காத்திருக்க முடியவில்லை. செந்திலிடம் விடை பெற்று குட்டி இந்தியாவிற்கு வந்தோம். பிறகு நான் வீட்டிற்கு விடை பெற்றேன்.

புதுகை அப்துல்லாவுடன் பதிவர் சந்திப்பு வார இறுதியில் நடக்க இருக்கிறது. அது பற்றிய விவரம் விரைவில் வரும்.
தம்பி அப்துல்லா இனிய குரலில் பாடுபவர், பதிவர் என்பதைத் தாண்டி அனைவரையும் அண்ணா என்று அழைக்கும் பாசக்காரப் பயப் புள்ளன்னு பேரு இருக்கு. ஏற்கனவே சிங்கை வந்திருக்கிறார். அப்போது குறுகிய கால இடைவெளியில் சந்தித்தோம். பிறகு தனிப்பட்ட முறையில் சென்னையில் சந்தித்து இருக்கிறேன். சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு, அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர். நாம் சந்திப்பவர்களில் 'இவருடன் நட்பு வேண்டும், இவர் நண்பராக அமைய மாட்டாரா ?' என்று நினைக்க வைப்போர் மிகக் குறைவுதான். அப்படி இருப்பவர்களில் இவரும் ஒருவர். அந்தவகையில் புதுகை அப்துல்லா எனக்கு தம்பி அப்துல்லா.
பின்குறிப்பு : அப்துல்லாவிற்கு அழகிய சிங்கர் பெயர் அளிப்பு அப்பாவி முரு (நன்றி)
25 நவம்பர், 2009
ஊருக்குள்ளே என்னைப் பற்றி...
எனது 1000 ஆவது பதிவை பாராட்டி வாழ்த்திய அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி !தலைப்பில் பதிவர் பெயரை வைத்து இடுகைகள் எழுத எதேனும் கும்மி, கேள்வி, எதிர்வினை,பாராட்டு, நற்பெயர், கெட்டப் பெயர் அனைத்துக் காரணங்களும் இருக்கும், பிறப் பதிவரின் இடுகை தலைப்பில் இடம் பெறும் பதிவர்கள் பலர் உண்டு, பல்வேறு பதிவர்களின் இடுகைகளில் என்பெயர் 25க்கும் மேற்கண்ட இடுகைகளில் இடம்பெற்றிருக்கிறது.
பாராட்டு, புகழ்ச்சி...இகழ்ச்சி...எல்லாம் உண்டு, போற்றுவார்கள் போற்றலும் இருக்கிறது, தூற்றுயவர்கள் தூற்றியதும் இருக்கிறது....போகட்டும் கோவி.கண்ணனுக்கே ! :)
கூகுளாண்டவரின் உதவியுடன் முடிந்தவரை தேடிப் பிடித்து இணைத்திருக்கிறேன், முழுப்பட்டியல் இல்லை என்றாலும் கொஞ்சம் நிறைவான பட்டியல் தான்.
என் பெயர் (கோவி,கோவியார்,கோவி.கண்ணன்) தலைப்பில் இடம் பெற்ற பல்வேறு பதிவர்களின் இடுகைகள்:
1. பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்?
2. கோவி.கண்ணணுக்கு நடந்தது என்ன?
3. "கோவி.கண்ணன் அவர்களின் பார்வைக்கு... பெரியாரின் விளக்கம்"
4. கோவியார் செய்த மாபெரும் உதவி
5. கோவி கண்ணனும்,பதிவுகளும்
6. இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?
7. கோவியாருக்கு எச்சரிக்கை
8. ஆறு: கோவி கண்ணனுக்காக
9. 75. வீரமணியும் கோவி.கண்ணனும் "நைசாக" பாடிய கண்ணன் பாட்டு!
10. அன்புள்ள கோவி.கண்ணன் அவர்களுக்கு
11. "கோவி”யார்” பற்றி செந்தழலின் அதிரடி வாக்குமூலம்..."
12. காமெடி+ செண்ட்டிமெண்ட் கோவி.கண்ணனின் அழுகாச்சி காவியம்(கடிதம்)
13. கோவி. கண்ணன் அவர்களிடம் நறுக் என நான்கு கேள்வி !
14. அடித்து ஆடும் கோவி.கண்ணன் அலறித்துடிக்கும் ஆரியக்குஞ்சுகள்
15. பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
16. "சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-1"
17. "சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-2"
18. Hate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ணன்
19. BlogOgraphy:கோவி.கண்ணன்
20. கோவி கண்ணனுக்கு கண்டனம்..
21. ”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!”
22. கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?
23. கோவி.கண்ணனும், நையாண்டியும் - சிக்கலின் நான்
24. காணவில்லை! காரணம் என்ன? - கோவியார் பெசல் கும்மி!
25. கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !
26. "டேக் கேர் கோவி!!"
27. இதெல்லாம் ஒரு பிழைப்பா கோவி கண்ணன்?
மேலும்:
28. ஆயிரத்தில் ஒருவன் - கோவியார்.
29.கோவி.கண்ணனின் அட்டகாசங்கள்
24 நவம்பர், 2009
1000ம் - 'காலத்து' பயிர்கள் !
மிகச் சிறந்த ஆக்கம், கட்டுரை படைக்க வேண்டும் என்கிற உறுதியுடன் நான் எதையும் எழுதுவதில்லை, எழுதுபவர்கள் அனைவருமே கற்பனை என்கிற எல்லைக் கோட்டில் நின்று எழுதுவதில்லை. எங்கோ படித்தவற்றின் பகிர்வுகள் அது குறித்த எண்ணங்களை தான் சார்ந்துள்ள பிடித்த கொள்கைகளின் கருத்துகளையும் நுழைத்தே எழுதுகிறார்கள், நேர்மையான விமர்சனப் பகிர்வுகள் வருவது குறைவுதான். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களம் என்பது சிந்தனைக் களம் என்பதைத் தாண்டி சித்தாந்தங்களை முன்னிருத்தும் களமாக நிற்கிறது. அரசியல் சார்பு, தன்னல முன்முடிவுகள் தான் பெரும்பாலும் கருத்துக்களில் முன்னிறுத்தப்படுகிறது. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல இருந்தாலும் பச்சைப் பொய்களை அல்லது உண்மைகளைத் திரித்துக் கூறி கருத்துக்கு வலுசேர்க்க வேண்டும் என்று முயன்றதில்லை, அதற்கான தேவையும் எனக்கு இல்லை என்று உறுதியாக நினைக்கிறேன்.
முதல் பதிவிலிருந்து 999 இடுகை வரை சிந்தனை ஓட்டங்களில் ஒரு சில கருத்துகளில் மாற்றம் இருந்தாலும் முழுமனதையும் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒருமாற்றமும் நான் படித்தவற்றின் வழியாக எனக்கு ஏற்படவில்லை என்பதை என் எழுதுக்களில் எனது முந்தைய இன்றைய நிலைப்பாடுகளை ஒப்பிடும் போது எனக்கு தெரிகிறது. நாத்திக நிலைப்பாடு, ஆத்திக நிலைப்பாடு என்ற இருபக்கமும் எதோ ஒன்றை சார்ந்து எழுதியது போல் தெரியவில்லை. மதவேறுபாடுகளால் கூறுபட்டு கிடக்கும் மனித இனங்களை ஒன்றிணைக்க வாழ்வு உண்மையானதே, மனம் முதன்மையானது, தனிமனித உரிமை என மனிதம் பேசும் நாத்திகம் எந்த அளவுக்கு எனக்கு முதன்மையாக தெரிகிறதோ அதே அளவுக்கு அனைவரையும் ஒன்றிணைக்க வாழ்வே நிலையற்றது, உடல் நிலையற்றது, நிறம் நாமே விரும்பிப் பெற்றது அல்ல, இனவேறுபாடுகள் தவிர்த்தால் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும் என்று கூறி அதற்கு இறை நம்பிக்கையை முன்வைத்துப் பேசும் ஆத்திகமும் எனக்கு முக்கியமானதே. எனது வலைப்பக்கத்தில் நான் வள்ளலார், பெரியார் வேறு காலகட்டங்களின் வேறு வேறு தமிழ் துருவங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கிறேன். தமிழ் சூழலிலேயே அத்தகைய இருதுருவங்கள் நம்மிடையே வாழ்ந்ததும் நம் தமிழர்களின் கொடுப்பினையாக நினைக்கிறேன்.
தீவிர இறை மறுப்பு மற்றும் ஏற்பு என்ற இரண்டிற்குள்ளும் நான் பொதுவாக மூக்கு நுழைப்பதில்லை, மதவாதமும், சாதிவேற்றுமையும் கண்டிப்பதில் சார்பு நிலையற்றது என்பதால் நாத்திகவாதமாக எனது கருத்தை பேசுவது எனக்கு வசதியாவே இருக்கிறது. எனக்கு இறை நம்பிக்கை உண்டு என்று சொன்னால் அதை நிருபனம் செய்யச் சொல்லி ஆத்திக நண்பர்களே என்னிடம் கேட்கக் கூடிய பேராபத்தும் உண்டு :) என்னை இறைமறுப்பாளனாக நினைப்பவர்களிடம் அப்படி நினைக்காதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன், என்னை இறை ஏற்பாளான நினைப்பவர்களை தடுக்கவும் மாட்டேன். கடவுள் நம்பிக்கை என்பது பெரும்பாலும் ஊட்டப்பட்ட நம்பிக்கையாக இருப்பதால், அதுபற்றி மிகவும் உணர்ச்சிவசப்படுவதும் எதிர்ப்பதும் தேவையற்றது, இருந்தாலும் அவை சமூகத்தில் ஏற்படும் கெடுதல்களை நோக்கும் போது அவை விவாதமாக மாறுகிறது. பூசை அறை நம்பிக்கைகளை யார் குறைச் சொல்லப் போகிறார்கள் ?
என் பதிவின் முந்தைய பிந்தைய இடுகைகளிலும் ஒப்பீட்டு அளவில் எனக்கு தெரிந்த நல்ல மாற்றமாக நான் கருதுவது எழுதும் போது வடமொழி உட்பட்ட பிற மொழிச் சொற்களை தெரிந்த மட்டில் தவிர்த்து எழுதுவதுதான்.
புதிய பதிவர்களின் பதிவுகளை படித்து ஊக்கமளிப்பதை முடிந்தமட்டில் செய்துவருகிறேன், நன்கு தெரிந்த பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கே பின்னூட்டமிடுவதிலும், கும்மி அடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
இங்கு காலத்தில் இருப்பது 1000 இடுகைகள், இவை தவிர்த்து பிறர் மற்றும் எனது பிற வலைப்பக்களிலும் எனது எழுத்துப் பங்களிப்புகள் உண்டு. இதற்கு செலவிட்ட நேரம் பிற நடவடிக்கைகளுக்கான நேர இழப்பு தான் என்றாலும் இந்த நேரப் பங்களிப்பு 200 க்கும் மிகுதியான நண்பர்களைப் பெற்று தந்திருக்கிறது, 100க்கும் மிகுதியானவர்களை நேரடியாக சந்தித்து மகிழவைத்திருக்கிறது, 1000க்கும் மிகுதியானவர்களுக்கு என்னைப் பற்றிய அறிய வைத்ததுடன் எண்ணங்களை வாசிக்க வைத்திருக்கிறது. எழுதுவதன் பிறநோக்கம், ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்துகள் ஏற்பட வைக்க வேண்டும், வாசிப்பவர்களை எழுதத் தூண்டவேண்டும் என்பதே எழுத்து குறித்த எனது தனிப்பட்ட எண்ணம்.
1000 இடுகைகளுக்கு 22,103 பின்னூட்டங்கள் கிடைத்திருக்கிறது. சராசரியாக இடுகைக்கு 22+ பின்னூட்டங்கள் என வாரிவழங்கியதுடன்,
தொடர்ந்து வாசித்துவரும் அனைத்து தரப்பு நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றி (காக்டெய்ல் தாங்கஸ்) ! முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் ஜோதிபாரதி, ஸ்டார்ஜன் மற்றும் அக்பருக்கு மிக்க நன்றிகள்,
வருகை அட்டவணைகள் :

9 நவம்பர், 2009
பிள்ளையார் பிடிக்க...புலிவால் தொட்ட பதிவு !
பிடித்த கடவுள் : முருகன் தமிழக இந்து ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் அவர் தான் தெய்வம்
பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்.
பிடித்த நாவல் ஆசிரியர்கள் : சு.சமுத்திரம், சாண்டில்யன், சுஜாதா, கி.ராஜ்நாராயணன் மற்றும் பலர் ஆனாலும் உயிரோடு இருப்பவர்களில் சுபா மற்றும் இராஜேஸ் குமார் (Mr No கவனிக்கவும்)
பிடிக்காத நாவல் ஆசிரியர் : பலரும் வெறுத்தும் ஒரு சிலர் துதிபாடும் "பாலகுமாரன்" ஒரே ஒரு நாவல் தவிர மற்றதைப் படிக்க விரும்பியதில்லை. உதவி இயக்குனர்களைப் பற்றி இழிவாக பேசு வாங்கிகட்டிக் கொண்டவர் என்கிற கூடுதல் சிறப்பும் அண்ணாருக்கு உண்டு. எழுத்தாளர்களில் ஒரு சு.ஸ்வாமி
பிடித்த பாடகர் : எஸ்பிபி, மனோ, சின்னக் குயில் சித்ரா மற்றும் பலர்
பிடிக்காத பாடகர் : சங்கர் மகாதேவன் ( ஓவர் கத்தல்... அலட்டல் இல்லே ?)
பிடித்த பட்டிமன்ற பேச்சாளர்கள் : சாலமன் பாப்பையா குழுவினர்
பிடிக்காத பட்டிமன்ற பேச்சாளர்கள் : திண்டுக்கல் லியோனி குழுவினர் ( பாட்டுமன்றம், வழக்காடு மன்றம் ஆகியவற்றில் நகைச்சுவை என்கிற பெயரில் பல்வேறு தரப்புகளை கிண்டல் அடிக்கும் விவேக், எஸ்விசேகர் பாணி)
பிடித்த நடிகர் : அஜித், கமல், ரஜினி மற்றும் பலர்
பிடிக்காத நடிகர் : பரத் (இன்னும் வளரவே இல்லை அதுக்குள்ள...பஞ்ச் டயலாக்கெல்லாம் தாங்க முடியல தம்பி)
பிடித்த அரசியல் தலைவர் : திருமா ( ஈழம் மேட்டரில் ஸ்டண்ட் அடித்தாலும், தன் முயற்சியால் வளர்ந்தவர்)
பிடிக்காத அரசியல் தலைவர் : விஜயகாந்த் கொள்கை இருப்பதாகக் கூறிக் கொண்டு எல்லாவற்றிலும் பிறழ்ந்தே பேசுவது. ஓவர் பில்"டப்" வாய்ஸ் கொடுப்பது.
பிடித்த பிரபல பதிவர் : செந்தழல் ரவி (இயல்பான நகைச்சுவை பதிவுகள்)
பிடிக்காத பிரபல பதிவர் : 'அவதூறு ஆறுமுகம்' என்கிற அவருடைய அவதாரம் (எதையும் ஆராயாமல் யார் மீதாவது மன அளவில் ஏற்படும் ஐயங்களையெல்லாம் பதிவில் எழுதி வெளிப்படுத்தி, அவர்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வது...புழுதிவாரித் தூற்றுவது குறிப்பாக இட்லி வடை பதிவைப் படிப்பவர்களின் கணிணி தகவல்களை குக்கீஸ் வழியாக இட்லி வடை குழுமம் திருடுவதாக கிளப்பி விட முயற்சித்தது உட்பட.....தம்பி திருந்தனும்...... )
நான் யாரையும் நிரந்தர பகைவராகவே நினைக்கக் கூடிய தகுதியை யாருக்கும் கொடுப்பது இல்லை......ஐ மீன் எனக்கு எதிரியாகும் தகுதி யாருக்கும் இல்லை :)
பிடித்த பதிவர்கள் குழு : வினவு. (அருமையான விவாதங்கள், சான்றுகளுடன் தகவல்கள், சிந்தனையைத் தூண்டும் ஆக்கங்கள், பக்க சார்ப்பு என்றாலும் நிற்கும் இடம் ஆளுமைகளுக்கு எதிராக என்பதால்)
பிடிக்காத பதிவர்கள் குழு : இட்லி வடை பல கட்டுரைகள் பக்க சார்ப்போடு எழுதப்படுகிறது, சமய, உயர்சாதி சார்புள்ளது என்கிற குற்றச் சாட்டு உண்டு....மாறனும் .......எல்லாமும் மாறனும் :)
பிடித்த செய்தியாளர்கள் குழு : தட்ஸ் தமிழ் (பின்னூட்டத்தில் பலர் எவ்வளவு திட்டினாலும் தாங்குறாங்க .......ரொம்ப நல்லவங்க)
பிடிக்காத செய்தியாளர்கள் குழு : தினமலர் (சாதி மற்றும் மத பக்க சார்ப்புள்ள செய்தி குழுமம்...முகமது நபி கார்டூன் வெளி இட்டு தனது இந்து வெறியை வெளிச்சப்படுத்திக் கொண்டது)
பிடித்த அரசியல் கட்சிகள் : கொள்கைகளே நீர்த்து போய் இருந்தாலும் அம்மா கட்சி உட்பட திராவிடக் கட்சிகள்
பிடிக்காத அரசியல் கட்சிகள் : போங்...கிரஸ், பிஜே...பி உட்பட தமிழக தேசிய வியாதி கட்சிகள்
தொடரை தொடர அழைக்கும் பிரபல பதிவர்கள்
1. நண்பர் பெரியவ திருவாளர் ஆத்திகம் சங்கர் குமார்
2. நண்பர் ஆன்மிக பதிவர் திருவாளர் கூடல் குமரன்
3. ந்ண்பர் முற்போக்கு பதிவர் திருவாளர் டிபிசிடி (புதசெவி)
4. நண்பர் முற்போக்கு குறள்(ல்) திருவாளர் ஜெகதீசன்
இவர்கள் தற்போது மிகுந்து எழுதுவதில்லை, அதற்காக இவர்களை அழைக்கிறேன்.
*****
தொடரின் விதிமுறை :
1. பிடித்தவர்கள் பிடிக்காத அறியப்பட்டவர்கள் (பிரபலம்) பற்றி ஏன் பிடித்தது, பிடிக்கவில்லை பற்றிய குறிப்புகளுடன் 10 பட்டியல் இட வேண்டும்
2. பிரபலங்கள் தமிழகத்தில் பலரும் அறிந்தவர்களாகவும், உயிருடன் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
3. நான்கு பதிவரை அழைத்து தங்க சங்கிலி இல்லை இல்லை இணைப்பு சங்கிலி ஏற்படுத்த வேண்டும்
10 அக்டோபர், 2009
நானும் ரோசா தான் !
வலையுலகில் இதைப் பதிவாகப் படிக்காவிட்டால் இதை வலையுலகம் சாராத ஒரு நிகழ்வாக புறம் தள்ளலாம். தொடர்புடைய இருவரும் வலையுலகுக்கு தொடர்புடையவர்கள் என்பதால் இதை வலையுலகம் தொடர்புடைய ஒரு செயலுடன் பார்க்கக் கூடிய சூழலாக அமைந்திருக்கிறது. இதன் வழியாக வலையுலகில் இது போன்ற நிகழ்வுகள் கூட நடக்க வாய்ப்புகள் இருப்பதற்கான ஒரு மோசமான ஒரு உதாரணமாக அமைந்துவிட்டு இருக்கிறது என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.
பேசித் தீர்க்க வேண்டிய பினக்குகளை பேசித் தீர்க்காவிடில் நீதியை / காவல்துறையை நாடி முறையிடுவது தான் சரியான செயல்பாடு, அதைவிடுத்து தெருச்சண்டைப் போல் குத்துவது என்பதில் தொடங்கி இருப்பது ஒரு தவறான அனுகுமுறை. வலையுலகும் பொதுவான களம் என்பதால் டீசண்ட் இண்டீசண்ட் என்று ஒழுங்கு கட்டமைகளால் வலையுலகை கட்டமைத்துவிட முடியாது என்பதாகவே விளங்குகிறது.
நம் கண்டனங்களால் மறைத்துவிட முடியாத ஒரு நிகழ்வாக, வலையுலகில், பதிவர்களிடையே இது போன்ற மோசமான நிகழ்வுகளை துவக்கி வைத்திருப்பதிலும் தமிழ் பதிவுலகினர் முன்னோடியாக இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று அல்ல என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.
நாளைக்கு சுந்தரும் ரோசாவும் மீண்டும் நெருங்கினாலும் இப்படி ஒரு நிகழ்வை பதிவர்கள் மத்தியில் பதியவைத்திருப்பதை அழிக்க முடியாது, ரோசாவின் செயலை முற்போக்கு வாதிகளுக்கும் பொதுப் புத்தி உண்டு என்றும் பொதுப்புத்திகளை அழிப்பது உடைப்பது அவ்வளவு எளிதல்ல என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் போல
இனி 'நானும் ரோசாதான்' என்று சிலர் கிளம்பாமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.
மதமும் மார்க்கமும் !
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
-கோவியார்