பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2008

இலவு காத்த ...

"அதிமுகவுடன் கூட்டணி சேர நாங்கள் தயார், எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன" - பிஜேபி கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜெயலலிதா தேடிச் சென்று கூட்டணி அமைக்க விருப்பம் கொண்டவர் போல் கதவு திறந்து இருக்கிறது என்று அறிவிப்பு வெளி இடுகிறார்கள், எல்லோரும் போயாஸ் தோட்டத்து வாசலில் கதவு திறக்குமா திறக்காதா என்று தவமிருப்பது தான் வழக்கம், இங்கே கமலாலயம் ஜெவின் வருகையை எதிர்பார்த்து கதவு திறந்து வைத்திருக்கிறது.

ஜெவின் தயவால் எங்கள் அத்வானிஜி 13 மாதம், அல்லது 13 நாள் ஆட்சி செய்தால் கூட எங்களுக்கு அது சாதனைதான் என்று நினைக்கிறார்கள் போலும். பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு வாய்ப்பு எப்படி இருக்கும் என்றெல்லாம் ஜெ ஏற்கனவே ரகசிய வாக்கெடுப்பெல்லாம் நடத்திப் பார்த்துவிட்டு, சொல்லிக் கொள்கிற மாதிரி பலன் இல்லை, பிஜேபியின் கூடா நட்பால், கிடைக்கும் தொகுதிகளைக் கூட அதிமுக இழக்க நேரிடும் என்றே, ஜெ நடத்திய சர்வே சொல்லியதாக நக்கீரனில் எழுதி இருந்தார்கள். இது மோடி வருகைக்குப் பிறகு எடுக்கப்பட்ட சர்வே என்பது குறிப்பிடத் தக்கது.

மோடிக்கு ராஜவிருந்து வைத்ததை தமிழக பிஜேபி தனக்கு வைத்ததாக நினைத்துக் கொண்டு கூட்டணிக்காக கதவு திறந்து வைத்திருப்பதாக அறிவித்து இருக்கிறது. பிஜேபியால் தமிழக திராவிட கட்சிகள் பெற்றதைவிட இழந்ததே மிகுதி. முன்பெல்லாம் திமுக கூட்டணி தயவில்லாமல் தனி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது, கடந்த காலங்களில் பிஜேபியுடன் கூட்டணி அமைத்து மத்திய அரசிலும் இடம் பிடித்ததைத் தொடர்ந்து திமுகவின் மதச்சார்பின்மை கேலிக் குறியதாயிற்று, கடந்த காலத்தை மறந்து, அண்மையில் கலைஞர் கருணாநிதி "மகாத்மாவை கொன்ற பாவிகள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரலாமா ?" என்ற பேசியதை யாரும் பெரியதாகவே எடுத்துக் கொள்ளமல், 1996ல் காந்தியைக் கொன்றவர்கள் பற்றி விசாரணை நடந்து கொண்டிருநத்து போலவும் தற்போதுதான் அது குறித்து தீர்ப்பு வெளியானது போலவும் கலைஞர் சொல்லிய "மகாத்மா காந்தியைக் கொன்ற பாவிகள்" அருள்வாக்கு, அவரது இரட்டை நிலைக்கு மேலும் ஒரு சான்று என நினைத்து சிரிப்பையே வரவழைத்தது. கலைஞர் அடிக்கடி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டு கலகலப்பூட்டுவார். :)

தமிழகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக கூட பிஜேபி கூட்டணிக்கு பை பை சொல்லிவருவது தெரிந்தும், கூட்டணிக்காக பிஜேபி தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுகவை நோக்கி தவமிருப்பது தமிழகத்தில் இருந்து தமக்கு ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது கிடைக்காதா என்ற நப்பாசையே. அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் உறுப்பினர்கள் தாம், அத்வானிஜி பிரதமர் ஆக ஆதரவு கொடுப்பார்கள் என்று கூட நினைத்து, பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதற்கு பிஜேபி முன்வரும். ஜெ ஏற்றுக் கொள்வாரா என்பது வேறு.

தலைப்பு குறிப்பு : இலவு காத்த "..." - இங்கு உங்களுக்கு பிடித்த விலங்கு, பறவை போட்டுக் கொள்ளுங்கள், கிளியை கேவலப்படுத்தவிருப்பமில்லை.

பின்குறிப்பு : ஜார்ஜ் புஷ், ஹிலாரி கிளிண்டன், ஒபமா ஆகியோர் பற்றிய தகவல் எதும் தற்போது கைவசம் இல்லாததால் இன்றைய இடுகை இந்திய அரசியல் தான். :)

29 ஏப்ரல், 2008

விவேகாநந்தரின் (சிதைந்த) நம்பிக்கை !

சிக்காகோ சொற்பொழிவின் போது சுவாமி விவேகாநந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளில் முதன்மையாக கருத்தப்படுவது, இந்து மதத்தில் உள்ள உருவ வழிபாட்டை தற்காத்து பேசியதுதான், அந்த குறிப்பிட்ட பேச்சின் பிறகு இந்து மதத்தின் மீது சொல்லப்பட்ட பலதெய்வ வணக்கம் கீழானது என்று சொல்லும் கிறித்துவர்களின் பார்வை ஓரளவுக்கு மாறியது என்றே சொல்லலாம். கிறித்துவத்தின் பெந்தகொஸ்தே பிரிவைவிட கத்தோலிக்கம் இந்தியாவில் பரவியதற்கு பலதெய்வ வழிபாடு இந்தியாவில் இருந்ததும் ஒரு காரணம், ஆரோக்கிய மாதா, அந்தோனியார்..... இன்னும் எத்தனையோ பெயர்களில் கிறித்துவ மத பைபிளில் உள்ள ஏசு தூதர்களெல்லாம், செயின் தாமாஸ் வரை இந்தியாவில் கடவுளாக மாற்றி வழிபட்டதெற்கெல்லாம் இந்து மதத்தில் இருந்த பலதெய்வ வழிபாடும் காரணம்.

ஒற்றை தெய்வ வணக்கம் (ஓரிறைக் கொள்கை) என்று சொல்லப்படும் இஸ்லாம் மதத்திலும் வாகபி பிரிவைவிட தர்காக்கள் அமைத்து வழிபடும் சூஃபி பிரிவே வேகமாக பரவியது. தர்காக்கள் இருக்கும் இடமெல்லாம் சூஃபி ஞானிகளின் நினைவிடம் தான். இன்று இந்திய இஸ்லாமியர்களிடம் உள்ள பெரும் பிரச்சனையே, வகாபி இசமா ? சூஃபி இசமா எதிர்காலத்தில் எதில் செல்வது என்பதுதான், இதற்கான கீழறுப்பு வேலைகள் இஸ்லாம் மதத்துக்குள்ளும் நடைபெறுகிறது. 'தான் இந்தமதத்தைச் சார்ந்தவன்' என்று மட்டுமே தெரிந்து, அந்த மதத்தைப் பற்றி அறியாதவர் எவரும் தனது மதத்தில் வணக்கத்துக்கு உரியது எது என்றோ ? வணங்கத்தக்கது எவை இல்லை ? என்றோ பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை. மத வியாபரத்தில் மக்கள் தொகை கணக்கு காட்ட ஒரு எண்ணிக்கையாகத்தான் அறியாதவர்கள் இருப்பார்கள்.

சொல்ல வந்தது அதுவல்ல,

சரியாக 115 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி சிகாகோவில் பேசியதில் இந்து மதத்தைத் தற்காத்துப் பேசியதில் ஒருபகுதியில் இருந்த ஒருவரி என்னை மிகவும் வியப்படைய வைத்தது, "ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல. "

விவேகாநந்தர் வாழ்ந்த காலத்தில் இந்துமதம் என்ற பெயர் இருந்தது, அது இந்துத்துவ வாதிகளின் ஒருங்கிணைப்பாக இருக்க வில்லை. அப்படி இருந்திருந்தால் பார்பனர்களின் தலைமையில் "ஆரிய சமாஜ்" என்று தனிப்பிரிவு ஏன் தனியாக இயங்கி இருக்க வேண்டும் ? இந்திய தத்துவங்கள் வெறும் ஏட்டுப் பொருள் அல்ல, என்று சொல்வதற்காக விவேகாநந்தர் இந்துமதம் பற்றி பல்வேறு வகையில் தற்காப்பு நோக்கில் விளக்கிப் பேசினார். அதில் ஒன்று தான் மேலே சொல்லி இருக்கும் "இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல" என்பது மேலும் படிக்க...

"ஒரிசாவில் பாதிரியார் அவரது இருமகன்களோடு எரிக்கப்பட்டதும், கோத்ரா ரயில் எரிப்பின் மூலம் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் இந்து மதவெறியன்களால் கொல்லப்படுவதும்" அவர் மறைந்த 80 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கேற்றப்படும் என்று சுவாமிஜி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்துமதத்தின் மீது நம்பிக்கை வைத்து தற்காத்து பேசிய சுவாமிஜியின் சமாதியில் கரியைப் பூசிய இந்துத்துவாக்கள் வெட்கமில்லாமல், இளைஞர்களை கவருவதற்காக அவரது படத்தைப் போட்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.

விவேகாநந்தர் என்றாலே இஸ்லாமியர்கள் முகம் சுழிப்பதற்கு காரணமே அவரை தங்களது முன்னோடியாக (ஐடல்) இந்துத்துவ வெறியர்கள் பயன்படுத்துவதால் தான். விவேகாநந்தரே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்து வைத்து போன்ற ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது. இதனை தடுக்காவிட்டால் சுவாமிஜி மற்றும் இராமகிருஷ்ணர் ஆகியோரின் சிந்தனைகளெல்லாம் தேவையானவர்களுக்கு சேராமல் பாழ்பட்டுவிடும். இராமகிருஷ்ண மடத்தில் பொறுப்பில் உள்ளவர்கள், சுவாமி விவேகாநந்தரை இந்துவெறியர்கள் முன்னிலைப்படுத்துவதை தடுத்தால் மட்டுமே எதிர்கால இளைஞர்களுக்கு விவேகாநந்தரின் போதனைகள் சென்று சேரும். இல்லை என்றால் சுவாமி விவேகாநந்தர் காவிக் கூட்டத்தின் தலைவன் என்றே மற்ற இந்துக்களும் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். புத்தர் பெயரை சிங்கள வெறியர்கள் கெடுப்பது போன்றே, விவேகாநத்தரின் பெயரை இந்துத்துவா வெறியர்கள் கெடுத்துவருகிறார்கள்.

விவேகாநந்தர் இந்துவெறியர்கள் மீது வைத்த நம்பிக்கை எப்போதோ தகர்ந்துவிட்டது, விவேகாந்தரின் மற்ற சிந்தனைகளை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டியது உண்மையான இந்துமத நம்பிக்கையாளர்களின் கையில் தான் உள்ளது. இல்லை என்றால் விவேகாநந்தரின் 'விழுமின் எழுமின்' என்பதற்கு பதிலாக 'காவிக் கூட்டத்தின் முன் மண்டியிட்டு தொழுமின்' என்ற நிலையை இந்துக்கள் அடைந்து, வருணாசிரம கோட்பாடுகள் நிறைந்த கற்காலத்திற்குச் அப்பாவி இந்துக்கள் சென்றுவிடுவார்கள்

28 ஏப்ரல், 2008

தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 2

பகுதி 1
தகவல் தொடர்பு சாதனமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள், சமூக கட்டுக்கோப்பிற்காக அவற்றை எழுதிவைத்துக் கொள்வது தேவை என்ற எண்ணம் ஏற்பட்ட போது எழுத்துக்கள் குறித்தும் சிந்தித்தபோது உடனடியாக குறியீடுகள் ஏற்பட்டுவிடவில்லை, முதன் முதலில் உருவங்களையே எழுத்துக்களாக எழுத ஆரம்பித்திருக்கின்றன, சிந்துவெளி ஹரப்பா நாகரீக எழுத்துக்களும், மங்கோலிய இனம் வாழும் ஆசிய நாடுகளின் எழுத்துக்களும் ஓவிய வடிவ எழுத்துக்களே, சிந்துவெளியில் மீன், வின்மீன் இரண்டிற்கும் ஒரே குறியீடான வின்மீன் ஓவிய எழுத்துக்களையே பயன்படுத்தி இருப்பதிலிருந்து, வேறு சில தரவு (ஆதாரம்) மூலமாக அவையே தமிழ் எழுத்தின் மூலமாக இருக்க முடியும் என்றும், அவ்வெழுத்துக்களை இடமிருந்து வலமாக வாசிக்கும் போதும் செந்தமிழாக பொருள் இருப்பதாகவும் தேவநேயபாவாணரின் மாணாக்கர் திரு மதிவாணன் ஆய்ந்து சொல்லி இருக்கிறார். அதுபோலவே ஐயராவதம் மகாதேவன் அவர் பார்வையில் சிலவற்றைச் சொல்லி இருக்கிறார். எது எந்த அளவு உண்மை என்ற வாதத்துக்கு நான் செல்லவில்லை. ஆனால் அதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், பழங்கால மொழிகள் அனைத்தின் எழுத்துக்களும் ஓவிய வடிவத்திலிருந்தே இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன.


இன்றும் சில மொழிகள் எழுத்துவடிவம் பெறாமலேயே புழக்கத்தில் இருக்கின்றன, பெரும்பாண்மை மக்கள் பேசும் மொழி எழுத்தில்லாமலேயே, அரசு அமைக்கும் அளவுக்கு அவர்களுக்கு செல்வாக்கு இருக்கும் போது எழுத்துக்கள் அவர்களுக்கு தேவையாகிறது, மலாய், பாசா இந்தோனிசியா, பாசா புரூனே போன்றவைகளுக்கு எழுத்து தேவைப்பட்ட போது ஆங்கிலம் இரண்டாம் மொழியாக இருப்பதால், ஆங்கில 26 எழுத்துக்களையே பயன்படுத்தி வருகின்றன, அந்த மொழியில் இல்லாத சொற்களை ஆங்கிலத்தில் இருந்து எடுத்துக் கொண்டு அவர்கள் ஒலிக்கும் திறனுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டு national, English (En) > Nasional, Engress (Malay) இது போன்று ஆயிரக்கணக்கான ஆங்கில சொற்கள் அவர்களின் தொண்டை, நாவு ஒலிக்கு ஏற்றார் போல் மாற்றி தங்கள் மொழிச் சொல்லாக மாற்றிக் கொள்கின்றன.

இது உலக மொழிகள் எல்லாவற்றிலும் உள்ள நடைமுறையே, ஒலிக்க முடியாமல் வெள்ளைக்காரனும் கோழிக்கோடு > Cochin, நாகப்பட்டினம் > Negapatam என்று ஆங்கிலத்தில் மாற்றிக் கொண்டார்கள், பழங்கால மொழிகள் எழுத்தில் எழுத தொடங்கிய போது அவைகள் ஓவிய (சித்திர எழுத்துக்கள், சித்திரம், சிந்தை > சித்தம் + திரம் > சித்திரம் = கற்பனைத்திரன் ) வடிவமாக மரப்பட்டைகள், குன்றுகள், செங்கல் ஓடுகள் ஆகியவற்றில் எழுதிவைக்கப்பட்டன, பின்னாளில் ஓலைச்சுவடியில் எழுதும் முறை ஏற்பட்ட போது ஓவிய வடிவில் எழுதுவது கடினமாக இருந்தது, எழுத்தாணி கொண்டு ஓவிய எழுத்துக்களை எழுதும் போது, சுழிகள், வளைவுள் குறுக்கே வெட்டும் போது துளையாக ஏற்பட்டு அந்த பகுதி கீழே விழுந்துவிடும், எனவே ஓவிய எழுத்துக்களை அப்படியே ஓலையில் எழுத முடியாது என்ற எழுத்துவடிவத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் தேவையாகிப் போனது. சீனர்கள் எழுத்தும் தற்போதைய எழுத்துக்கள் ஓவிய வடிவத்திலிருத்து கோடுகள் (ஸ்ட்ரேக்) வடிவெடுத்தது. தமிழ் போன்ற தற்போதைய எழுத்துக்களின் முதல்வடிவத்தில் எழுதப்பட்டது.



இந்த வடிவம் பெரும் முன்பே மொழிகள் இலக்கண அமைப்பையும், உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், இரண்டும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் பிறந்துவிட்டன. அதாவது மொழி அதன் எழுத்துக்களுடன் இறுதி வடிவம் பெற்றுவிட்டது, அவற்றின் வடிவங்களில் அவ்வப்போது தேவையான மாற்றம் ஏற்பட்டது. பெரியாரின் சிந்தனைகளை ஏற்று லை, ளை, ணா, னா, றா போன்ற எழுத்துக்களும் தற்போதைய எழுத்துவடிவம் பெற்றுவிட்டன.



தொடர்புடைய சுட்டிகள் :
http://www.ancientscripts.com
http://www.ancientscripts.com/chinese.html
http://www.harappa.com
http://www.harappa.com/script/diction.html

தொடரும்...

27 ஏப்ரல், 2008

யார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் !

ஐயர் என்ற சொல் சாதிக் குறித்த சொல்லே அல்ல. ஆசிரியன், குரு என்பவர்களை ஐயர் அந்தணர் என்று குறிப்பது பண்டைய தமிழர் வழக்கம், ஆசிரியன், குருவாக இருப்பவர்கள் உயர்வாக கருதப்பட்டனர், அந்த வகையில் திருவள்ளுவர் கூட ஐயர் அந்தணர் என்று சொல்லப்பட்டார், சங்ககாலத்தில் பிராமணர்களைக் குறிக்கும் சொல் பார்பனர் என்பதே, 'மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்து...' என்ற குறளை பார்பனர் குறித்தே திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். அந்த காலத்திலேயே வெளிப்பெருமைக்காக சில அடையாளங்களைப் பார்பனர்கள் பூண்டிருந்தனர் என்பது அந்த குறளில் இருந்து தெளிவாகிறது.

பரிமேலழகர் போன்ற பார்பன புலவர்கள், புலவர் என்ற தொழில் முறையால் ஐயர்களாக அழைக்கப்பெற்றனர். அதன்பிறகு அவர்களுக்கு வாரிசாக வந்தவர்களும் ஐயர்கள் என அழைத்துக் கொண்டனர். இங்கே தான் ஒரு கூத்தை கவனிக்க வேண்டும். பார்பனர்கள் இருபிரிவுகளாக பிரிந்து ஒருவர் சைவர்களாகவும், மற்றொருவர் வைணவர்களாகவும் அறிவித்துக் கொண்டு சென்றனர். ஆனாலும் ஒருவிசயத்தில் இருபிரிவினராலும் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. அதுதான் 'ஐயர்' என்ற அடைமொழி யாருக்கு சொந்தம் என்பதில் வைணவ பார்பனர்கள் சமரசமின்றி 'ஐயங்கார்' என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். தேவர்களில் வைணவ பிரிவு வந்திருந்தால் தேவாங்கார் என வந்திருக்குமோ ?, பிள்ளைமார்களில் வைணவ பிரிவு ஏற்பட்டு இருந்தால் பிள்ளையாங்கார் என்று மாறி இருக்குமோ. :) செட்டியாங்கார், முதலியாங்கார் கொடுமைடா சாமி ! :)

ஐயர் என்ற சொல் உயர்வின், படித்தவன் என்ற தன்மையைக் குறிப்பதால் ஐயர் என்பதை சாதிப்பெயராக பார்பனர்கள் எடுத்துக் கொண்டனர். சமூக இழிவுகள் தொடர்வதற்கு உயர்வுதாழ்வு என்ற இருதன்மைகள் என்றும் இருப்பதே காரணம், ஒருசாரர் உயர்வாக தம்மை அழைத்துக் கொள்வதன் மூலம் மற்றோர் தாழ்வாக இருப்பதை மறைமுகமாகவே சொல்லிவருகின்றனர் (தன் மனைவி பத்தினி / உத்தமி என்று தம் வீட்டின் முன் எழுதி வைப்பது போன்றதே).

ஐயர் என்பதை படித்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதைப் போன்றே தமிழர்கள் சூட்டி மகிழ்ந்தனர். கால்டுவெல் அருள்தந்தையை 'கால்டுவெல் ஐயர்' என்றும், ஐயுபோப் அவர்களை ஐயூபோப் ஐயர் என்று அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கும் தமிழ்சார்ந்த முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்களை ஐயர் என்று அழைக்கப்படுவதன் மூலம் அவை சாதிப்பெயர்கள் என்ற தோற்றத்தில் நிலைபெற்று இருப்பதை மாற்ற முடியும்.

எனக்கு தெரிந்த தமிழர்களுக்கு 'ஐயர்' (சர் பட்டம் போல்) பட்டம் கொடுக்க வேண்டுமென்றால் தந்தை பெரியார் (ராமசாமி ஐயர்), அண்ணாதுரை ஐயர், கருணாநிதி ஐயர், தேவநேயபாவாணர் ஐயர், (இவர்களுக்கு ஏற்கனவே சிறப்பு வழங்கு பெயர்கள் இருக்கிறது. அது ஐயர் என்று சொல்வதைக் காட்டிலும் உயர்வானது) பொங்குதமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் திருமாவளவன் மற்றும் இராமதாஸ் ஐயா ஆகியோரையும் திருமாவளவன் ஐயர், இராமதாஸ் ஐயர் என்றும் அழைக்க முடியும். அவர்களெல்லாம் அதை விரும்புவார்களா என்பது வேறு விசயம் :)

பார்பனர் என்று சொல்வது இழிவுபடுத்துவது போல் உள்ளது ( தற்பொழுதுதான் இழிவு என்றால் என்ன வென்று புரிகிறது போலும்) அதனால் பிராமணர்கள் என்று சொல்லச் சொல்லுவோம், பிராமணர் என்றே சொல்லிக் கொள்வோம் என பார்பனர்கள் பிரமணர்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவன் தன்னை / பிறரை பிரமணன் என்று ஒப்புக் கொண்டால், மனுவேதப்படி அவர் முகத்தில் இருந்து பிறந்தவர், சூத்திரன் காலில் இருந்து பிறந்தவன் என்பதை நம்புபவனாகவே பொருள். எனவே பார்பனர்களை பார்பனர் அல்லோதோர் பிராமணர் என்று சொல்லாமல் 'பார்பனர்' என்றே அழைப்பதே சரி. தலித் பெருமக்களை மகாத்மா காந்தி 'ஹரிஜென்' என்று அழைக்க பரித்துரைக்காமல் 'பிராமணர்' என்று அழைக்க பரிந்துரைத்திருந்தால், 'பிராமணர்' என்ற சொல்லைக் கூட பார்பனர்கள் துறந்து, அதனை இழிவாகப் பார்த்து 'ஆரியர்கள்' ஆகி இருப்பார்கள்.

ஐயர் பட்டம் பொதுப்படுத்தப்பட்டால் பார்பனர்களின் சாதிப்பெயராக இருக்கும் 'ஐயர்' என்பது கூட இழிவின் பெயராக நினைத்து, பார்பனர்களே 'ஐயர்' என்று சாதியின் பெயர் போட்டுக் கொள்வதை நிறுத்திவிடுவார்கள். பார்பனர் என்பது கூட நிறத்தை குறிக்கும் சொல் தான் பால் + பணர் > பாற்பனர் > பார்பனர் அதாவது பால் போன்ற வெண்மை நிறத்தை உடையவர்கள் என்று குறிப்பதாக பொருள், வெள்ளைக்காரர்கள் சுதந்திர போராட்டத்துக்கு முன் இந்தியாவில் ஊடுறுவிய போது தனிநிறத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டத்தைப் போன்றே திருவள்ளுவர்கள் காலத்தில், பார்பன ஊடுறுவல்கள் இருந்தபோதும், தமிழர் யார் ? பார்பனர் யார் ? என்பதை நிறத்தை வைத்தே அறிந்து கொள்ளப்பட்டது. காலப்போக்கில் எல்லோரும் எல்லோரிடமும் கலந்த போது பார்பன, திராவிட நிறமெல்லாம் மாறிவிட்டது. இன்று கரிய நிறத்தில் இருக்கும் ஆதிதிராவிட பழங்குடியினர் தவிர்த்து எல்லோருடைய முன்னோர்களும் பல்வேறு கலவையை ஏற்படுத்தியவர்களே. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் தவிர்த்து தமிழகத்தில் எந்த சாதியும் கலப்பில்லாதது அல்ல. நாங்கள் தான் அக்மார்க் ஒரிஜினல் சாதி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எந்த சாதிக்காரனுக்கும் இல்லை.

அதாவது தலித்துகளை அண்டவிடாமல் செய்துவிட்டதால் அவர்கள் மட்டுமே பிறசாதிகளிடம் கலக்க வழி இல்லாமல் கலப்பில்லா சமூகமாக இன்றுவரை இருக்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் சமூகம் தூய்மையானது என்று சொல்லிக் கொள்ள எந்த தகுதியும் இல்லை. இதில் வன்னியர், பிள்ளைமார், தேவர், முதலியார், பார்பனர் வரை எவரும் கலப்பில்லாதா சமூகமே இல்லை. இவர்கெளெல்லாம் சேர்ந்து தலித்துகளை தாழ்ந்த சாதி என்று சொல்வதுதான் கொடுமையோ கொடுமை.

உயர்சாதிப் பெயர்கள் என சொல்லிக் கொள்ளப்பட்டு வரும் ஐயர், தேவர், பிள்ளைமார் எல்லாம் உயர்வுக்காக சொல்லப்படும் வெறும் அடைமொழி பெயர்களே, இவற்றை யாருக்கு வேண்டுமானாலும் அடைமொழியாக கொடுக்க முடியும். இந்த பெயர்கள் எந்த சாதிக்கும் உரிமையான, பாத்தியப்பட்ட பெயர்களோ, பரம்பரை சொத்தோ அல்ல.

26 ஏப்ரல், 2008

தமிழகத்துக்குத் தேவை ஒரு தலித் முதல்வர் !

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்" - என பெண்களின் முன்னேற்றம் குறித்த நடுத்தரவரக்கத்தினரின் கவலையை பாரதி பாடிவைத்தான். முன்னேறிய சமூகமாக மாறிக் கொண்டிருப்பவர்களுக்கு இவை ஏற்புடைய கருத்துக்கள். இந்திய தேசத்தில் பெண்கள் எந்த அளவுக்கு இழிவு படுத்தப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு உயர்வும் படுத்தப்பட்டு இருக்கிறார்கள், விதவை என்றாலே முகத்தை மறைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பவர்கள் இருக்கும் இந்தியாவில் தான் அன்னை இந்திரா - விதவை பிரதமர் வழிநடத்தி இருக்கிறார்.
பெண் சமுகம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் மேலெழுவதற்கு படிப்பதாலும், உயர் பதவியில் அமர்வதாலும் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியும்.

சுதந்திர போராட்டகாலத்திற்கு முன்பு வரை நாடார்கள் தீண்டத்தகாத சமூகமாகவே இருந்தனர், நாடார்கள் மதம் மாறியதற்கு கிறித்துவ மதத்தில் இருந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ அல்லது எந்த ஒரு ஈர்ப்போ காரணம் இல்லை. நாடார்கள் மற்றும் வன்னியர்களில் கிறித்துவர்கள் மிகுந்தவர்களாக இருப்பதற்கு காரணம் அவர்கள் தாழ்த்தப்பட்டவராக இருந்து, ஒருகாலத்தில் தீண்டத்தாகதவர்களாக நடத்தப்பட்டதே காரணம். இன்றைக்கு எந்த ஒரு நாடார் சமூகத்தினரையும் சாதி சொல்லி திட்டும் நிலை இல்லை, ஒரு காலத்தில் நாடார்கள், வண்ணார்கள் ஆகியோரை இழிவு படுத்தும் ஆயிரம் பழமொழிகள் இருந்தது, இப்பொழுது அந்த பழமொழிகளை எவராவது நினைவு வைத்துச் சொன்னால் மட்டுமே, இப்படியும் கூட அவர்களை இழித்துக் கூறி இருக்கிறார்களா என்று வியப்படைவார்கள்.

நாடார் சமூகம் ஒரே நாளில் விழிப்பு பெற்றுவிட வில்லை, தினத்தந்தி அதிபர் சிபா ஆதித்தனார் போன்றோர்கள் முன்னேறியதும் தங்கள் சமூகம் அடிமைப்பட்டு கிடப்பதிலிருந்து மீட்கவேண்டும் என்று தொடர்ந்து ஊக்கம் கொடுத்துவந்தார்கள், அதன்படி நாடார்களில் பலர் நன்கு படித்து பெரிய நிறுவனங்களை திறமையாக நடத்தும் HCL சிவசாமி நாடார், விஜிபி சந்தோசம் போன்ற தொழில் அதிபர்களாக உயர்ந்தார்கள், இன்றைக்கு சரவணபனுடன் போட்டியிடும் உணவகங்கள் ஒன்று கூட இல்லை, சரவணாஸ்டோருடன் போட்டியிடும் நிறுவன்ங்கள் கூட நாடார்களுக்கு உடமை உள்ளவையாகவே இருக்கின்ற அளவுக்கு நாடார்கள் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைந்திருக்கிறார்கள்.

இவர்களெல்லாம் இன்று உயர்ந்து நிலையை எட்டி இருப்பதற்கு, அயோத்திதாசார் போன்றவர்கள் போராடியதும், காமராஜர் என்ற நாடார் குல பெருமகனார் தமிழக முதல்வராக பதவி அடைந்ததும் காரணம், காமராஜர் நாடார்களை வளர்த்துவிட்டார் என்று கூட சொல்கிறார்கள், அதுபற்றி எனக்கு தெரியாது. ஒரு சமூகமே தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து மீள்வதற்கு தங்கள் சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் அமர்ந்துவிட்டார் என்ற பெருமையே காரணமாக அமைந்துவிட்டது என்றால் மறுக்க முடியுமா ?

சாதியற்ற சமூகம் நல்லதுதான் வரவேற்கத்தக்கதே, ஆனால் எல்லோரும் சமமாக இருந்தால் சாதி தேவை இல்லை, 'ஏண்டா... சாதியைப் பேசுகிறாய் ? என்று கேட்டு செருப்பால் கூட அடிக்கலாம், ஆனால் நிலைமை அவ்வாறு இல்லையே, தங்களைவிட பொருளாதாரத்தில் கல்வி அறிவில் பின்தங்கி இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தினால் தானே தலித்துகளை இன்றும் கீழ்சாதிக்காரர்கள் என்றே சொல்லிக் கொண்டு, வெளிப்படையாக வன்னிய கிறித்துவர்கள் தலித் கிறித்துவர்களுடன் ஒரே சர்ச்சுக்கு செல்ல விருப்பமில்லை, நாங்கள் இந்துக்களாகவே மாறிவிடுகிறோம் என்றெல்லாம் தீண்டாமை தீ அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள், முன்பு தீண்டத்தாகாதவர்களாக கருதப்பட்ட நாடார்களை, அவ்வாறே எவரும் தீண்டத்தகாதவராக பார்க்கும் நிலை இன்று இல்லையே, அவர்கள் பொருளாதார மற்றும் கல்வி வாய்ப்பில் முன்னேறி இருப்பதே காரணம்.

தலித் பெருமக்களுக்கு இடஒதுக்கீடு என்று இருக்கிறது அவர்களால் ஏன் முன்னேற முடியவில்லை ? 10 வயதில் வேலைக்குச் சென்றால் தான் வாழ்க்கை என்று இருக்கும் 90 விழுக்காட்டு தலித்பெருமக்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீடுகளால் என்ன பயன் ? இருந்தாலும் அப்படியும் படிப்பின் அருமை தெரிந்து, கடினப்பட்டாவது படித்துவருபவர்களுக்கு இட ஒதுக்கீடு நல்ல வாய்ப்பாகத்தான் அமைகிறது. படிப்பதைத் தவிர வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் படிக்கவைக்கும் பிற சாதிக்கார பிள்ளைகளுடன், வயிற்றுப்பசியுடன் பள்ளிக்கு அடி எடுத்துவைத்தவன் போட்டிப் போட முடியாது என்பதாலேயே இட ஒதுக்கீடு தலித் பெருமக்களுக்கு குறையைப் போக்க ஓரளவுக்கு உதவுகிறது.

தலித் சமூகம் மீதான தீண்டாமைக் கொடுமைகள், மற்றும் ஒதுக்கிவைக்கப்படும் இழிவுகள் முற்றிலும் நீங்க வேண்டுமென்றால், தலித் மக்களில் இருந்து ஒருவர் முதல்வராக வரவேண்டும், அவ்வாறு ஒருமுறை வந்துவிட்டால் கூட அம்மக்கள் விழிப்புணர்வு பெற்று தாழ்வு படுத்துபவனின் குரல்வளையை மிதிப்பார்கள். அவர்களுக்கு பதவியின் அருமையும் படிப்பின் அருமையும் தெரிந்து ஆண்டைகளிடம் இருந்து விடுதலை அடைவார்கள். தமிழகத்தைப் பெறுத்தவரையில் ரிசர்வு செய்யப்பட்ட தொகுதிகளில் கூட அவர்களின் விருப்பத்திற்கு ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாமால் அங்கெல்லாம் கூட அதே சமூகத்துக்கு கட்சிக்காரர்களை நிறுத்தி அவர்களையெல்லாம் எதோ ஒரு கட்சி சார்பானவர்களாக மாற்றி ,அவர்களை ஏமாற்றியே அவர்களின் ஓட்டில் எல்லாக் கட்சிகளும் ஆட்சியில் அமர்ந்தும் கொண்டு இருக்கின்றனர்.

எந்த ஒரு பெரிய கட்சியும், கட்சிக் கொள்கைகள் என்ற முழக்கத்தில் தலித் ஒருவரை முதல்வராக ஆக்குவோம் என்ற வரி கூட சொல்வது இல்லை. மக்கள் செல்வாக்கை நிரூபணம் செய்ய வாக்குச் சீட்டே நல்ல கருவி. தலித் பெருமக்கள் அதை விழிப்புடன் பயன்படுத்தினால் பல மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற வாக்களர்களாக மாறுவார்கள். திருமாவளவன் போன்ற தலித் சமுகத்து தலைவர்கள் தமிழக முதல்வராக ஆனால் மட்டுமே இரட்டைக் குவளைமுறையும், சாதிவெறியால் முடங்கிக் கிடக்கும் பாப்பாபட்டி போன்ற கிராமங்களில் எதிர்காலத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு இருக்காது.

'திராவிடப்' பெயரில் இருக்கும் கட்சிகள், முதல்வர் பதவியை வாரிசுகளுக்கு உயில் எழுதிவைக்காமல் எதிர்காலத்தில் ஒரு தலித் முதல்வரை உருவாக்கினால், உண்மையிலேயே தமிழகத்தில் சமத்துவம் மலரும். உத்திரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக ஆனது போலவே தமிழகத்தில் ஒரு தலித் முதல்வர் உருவாகவேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் சாதிகள் இருந்தாலும் சாதி வேற்றுமைகள் மறையும்.

பின்குறிப்பு : தலித் என்ற சொல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறித்து சொல்லப்படும் பொதுச் சொல். அப்படிச் சொல்லக் கூடாது என்று எதிர்ப்புகள் கூட இருக்கிறது, கட்டுரைக்காக அந்த சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன். வேறெந்த நோக்கமும் இல்லை.

24 ஏப்ரல், 2008

நீங்கள் இந்துவா ? உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் !

நீங்கள் இந்துவா ? இல்லையா என்பதை திரு லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதி இருப்பதையும், முன்னாள் தமிழ்மண பதிவர் திரு ஜெயராமன் அவர்களின் இடுகையை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.


பி.கு. இந்துவாகப் பிறந்ததால் ஒருவன் இந்து இல்ல. இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனோருவனும் இந்து இல்ல என்பதே என் தாழ்மையான கருத்து,

- மேற்கண்ட இந்த பொன்னெழுத்தை நான் கண்டது, திரு லட்சுமிநாரயணன் அவர்களின் பார்பனர்கள் தமிழர்களா ? என்ற பதிவில்.

பார்பனர்கள் தாங்களே தமிழர்கள் இல்லையா என்று பேச ஆரம்பத்துவிட்டதிலிருந்தே எனக்கு அதில் கருத்து கூற ஒன்றும் இல்லை. இங்கே இவர் சொல்கிறார், 'இந்து' என்பதற்கு அடையாளம் இருக்கிறதாம், இந்து மதக்கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவன் இந்து இல்லையாம் ?

இந்துமதக் கோட்பாடு என்றால் என்னவென்று யாருக்காவது தெரியுமா ? பகவத்கீதை என்ற மனுச்சார்பு, வைணவசார்பு நூல் தவிர்த்து இந்துமதம் சார்பாக எதாவது நூலோ கோட்பாடோ இருக்கிறதா ? அடுத்து இவர் சொல்கிறார், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரிபவர் இந்து இல்லையாம் ? வேதங்கள் உண்மை என்று தானே ஆராய்ச்சியாளர்கள் கூடச் சொல்கிறார்கள், அது உண்மை இல்லை என்றால் தஸ்யூக்களை அழித்தகதையும், இந்திரனுக்கு பிடித்த பாணம் சோமபானம் என்றும் அதை ஆரியர்கள் அமுதமாகவே பருகினார்கள் என்றே தெரியவந்தது. வேதங்கள் உண்மைதான் ஐயா. சத்தியமான உண்மை, ஆனால் அந்த வேதங்கள் யாருக்கானது என்பது தெரிந்ததால் தான் பார்பனர்தவிர்த்து மற்றவர்கள் அதில் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை. பார்பனர் வேதத்ததை பார்பனர் அல்லோதோர் படித்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வரத்தானே பார்பனர் அல்லோதோர் (சூத்திரன்) வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும், நாவை அறுக்க வேண்டுமென்றெல்லாம் மனுவேதம் இயற்றி அதை மன்னர்களால் செயல்படுத்த வைத்து, நிறைவேற்றாவிடில் ஆட்சிக்கு அபச்சாரம் நேர்ந்துவிடும் என்றெல்லாம் கதைகட்டி விட்டார்கள். இதையெல்லாம் இந்து என்பதால் பார்பனர் அல்லோதோர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது என்ன வகையான கட்டாயம் ? முதலில் இந்து என்ற அடையாளம் இதுவெல்லாம் என்று எதாவது இருக்கிறதா ? என்னைக் கேட்டால் காதுக் குத்திக் கொள்ள மறுப்பவன் இந்து இல்லை என்று சொல்லலாமா ? இல்ல (குடும்ப) வழக்கத்தின் காரணமாக பகுத்தறிவாளர்கள் கூட காது குத்திக் கொள்ளவது உண்டு.

லட்சுமி நாராயணன் அவர்களே, வேதங்களில் சொல்லி இருப்பது போல் மூவர்ணத்தாரில் யார் யாரெல்லாம் பூணூல் அணியவில்லையோ அவர்களெல்லாம் இந்து இல்லை என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை ? இந்தியாவில் இருக்கும் 50 விழுக்காடு மக்கள் தொகை பழங்குடியினர் மற்றும் தலித் பெருமக்களே, இவர்களையெல்லலம் சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே இரவில் இந்துவாக அறிவித்தது அவர்களைக் கேட்டுத்தான் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா ? இல்லை அவர்கெளெல்லாம் நீங்கள் சொல்லும் இந்து மத கோட்பாடுகளை, வேதங்களை ஏற்றுக் கொண்டு இந்துவாக மாறினார்களா ?

நீங்கள் சொல்லும் இந்துமதக் கோட்பாடுகளையும், இந்துவேதங்களையும் பார்னர்கள் தான் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆகவே இதை வைத்து உறுதியாகச் சொல்ல முடியும், பார்பனர் தவிர்த்து, இந்து அரசியல் தெரியாதவர்கள் தவிர்த்து எவருமே இந்து இல்லை, மற்றவர்கள் எல்லோரும் வயிற்றுக்குள் சுமக்கும் மலம் போல, வேறு வழியின்றி இந்து மதம் என்ற பெயரை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பெரியாருக்கும் முன் கோவில் வாயில் கதவுகளையும் சாத்தி வைத்திருந்தது தான் தாங்கள் சொல்லும் கோட்பாடு என்ற பெயரில் கட்டுப்பாட்டில் இருந்த இந்துமதம்.

நீங்கள் சொல்வது போல் இல்லாவிடில் ஒருவர் இந்து இல்லை என்று வைத்துக் கொள்வோம், ஒருவன் ஒரு பார்பனன் இல்லை என்று எவ்வாறு சொல்வீர்கள் ?

ஒரு வேண்டுகோள், பிறப்பினால் பார்பனாக பிறந்ததால் ஒருவன் பார்பனன் இல்லை என்றும், யார்யெரெல்லாம் பார்பனர் இல்லை என்று தெரிவித்து ஒரு பட்டியல் அளித்தால் நன்றாக இருக்கும்.

22 ஏப்ரல், 2008

இவர்களையாவது விட்டு வையுங்கடா !

இறந்த தலைவர்களுக்கு உருவச்சிலை அமைப்பது, அவர்களின் செயல்களை போற்றி மரியாதை காரணமாக அவர்களை நினைவுறுவதற்கும், வருங்கால சந்ததியினர்கள் தலைவர்களின் அற்பணிப்பை உணர்ந்து வாழ்கையில் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதலைக் கொடுப்பதற்குத்தான். பொதுவாக தேசிய தலைவர்கள் எந்த ஒரு தனிப்பட்ட சாதிக்கும் உடமையான (சொந்தமான)வர்கள் இல்லை என்பதால் காந்தி, நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகளுக்கு செய்யப்படும் அவமரியாதை குறைவே, அப்படியும் தீவிரவாதிகளின் இலக்கு அவர்களது சிலையாகத்தான் இருக்கும். தமிழ்மண்ணில் பெரியார் சிலைக்கே அவமாரியாதை நடந்திருக்கின்ற போது, முத்துராமலிங்க தேவர் போன்றவர்களுக்கு அது நடப்பது ஒன்றும் தவிர்க்க முடியாதது அல்ல.

தேசிய தலைவர்களில் தமிழக அளவில் அவமரியாதை செய்யப்படுவதில் அண்ணல் அம்பேத்கரின் சிலையே மிகுந்தது. தலித் பெருமக்கள் தங்கள் குலத்தில் தோன்றிய விடிவெள்ளியாகத்தான் நினைத்து அம்பேத்காரையும் அவரது சிலைக்கும் மரியாதை செய்து வருகின்றனர். அம்பேத்காரை தலித் பெருமக்களுக்கும் மட்டுமான சாதித் தலைவர் போல் நினைத்து ஒரு தேசிய தலைவருக்கு பிற சாதிக்காரர்கள் அவமரியாதை செய்து வருவது ஒருவகையில் தேச துரோகம் ஆகும். இந்திய அரசியல் சாசன சட்டத்தை ஏற்படுத்தி, சமூக நீதிக்கு எதிராக போராடிய அண்ணல் அம்பேத்கார் வெறும் தலித் பெருமக்களுக்கான தலைவர் மட்டுமல்ல. மகாமத்மா காந்தி போலவே அண்ணல் என்று அன்புடன் அழைக்கப்படும் மாபெரும் ஒரு தலைவர் அவர்.

அண்ணல் அம்பேத்கார் தமிழகத்தில் தொடர்ந்து அவமரியாதை செய்யப்படாமல் இருக்க வேண்டுமென்றால் தலித் பெருமக்கள் அவரை தங்கள் தலைவர் போன்று முன்னிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இவர்கள் இப்படி செய்வதாலேயே அண்ணல் அம்பேத்கார் தலித்துகளின் தலைவன் என்றே சாதிவெறியர்கள் எப்போதும் அவரது சிலைக்கு அவமரியாதை செய்து வருகின்றனர். ஒரு தேவர் சிலை அவமதிக்கப்பட்டால் பதிலுக்கு 10 அம்பேத்கார் சிலைகள் அவமானப் படுத்தப்படுவது(ம்) நடந்தேறுவருகிறது. இதுபோன்று தேசிய தலைவர்களை அவமானப் படுத்துபவர்களை மத்திய அரசின் தடுப்புக் காவல் சட்டம் கொண்டு ஒடுக்கினால் இது போன்று அவமரியாதைகள் குறையும்.

தேவர் சிலைக்கு நடந்த அவமரியாதைப் பற்றி...

பிற்காலத்தில் சிலையாக மாற இருக்கும் எந்த ஒரு சாதிக்கும் தலைவனாக உருவெடுக்கிறவர்களுக்கு வருங்காலத்தில் பிற சாதியினர் செய்யும் அவமரியாதை இதுதான் என்று தேவர் சிலைக்கு நடக்கும் அவமரியாதைகள் பாடமாக இருக்குமா ? தெரியவில்லை. முத்துராமலிங்க தேவர் தேவர் சமூகம் தாண்டி பிறமக்களுக்கு அப்படி என்ன செய்துவிட்டார் என்றே தெரியவில்லை. அவரது நூற்றாண்டுக்கு அரசு விழாவெல்லாம் கலைஞர் அரசு எடுத்தது. அதே ஆண்டில் தான் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டும் வந்தது, அது எத்தனைப் பேருக்கும் தெரியும் ? அதையும் அரசு மிகச் சிறப்பாக கொண்டாடியதா ? கேவலமான ஓட்டு அரசியலும், சாதி அரசியலும் நடக்கின்ற நாட்டில் தமிழறிஞர்களுக்கு பெரிய அளவில் விழா எடுப்பதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. சுதந்திர தினத்துக்கு மிட்டாய் கொடுப்பது போல் நடந்து முடிந்துவிடும். மதுரையில் தேவநேயப்பாவாணருக்கு மணிமண்டபம் என்ற செய்தி தவிர்த்து தேவநேயப்பாவானருக்கு தமிழக அரசு என்ன விழாவெல்லாம் எடுத்தது, பொதுமக்களுக்கு அது பற்றி தெரியுமா ? அரசு குறிப்பையோ, செய்தித்தாள்களையோ பார்த்தால் தான் தெரியவே வரும்.

தேவரோ, இன்னும் எந்த சாதித் தலைவரோ அவர்களது சிலைகளெல்லாம் பொதுமக்கள் புழங்கும் இடங்களில் வைப்பதால் தானே அவமரியாதைக்கு ஆளாகிறது. சாதி மோதல்கள் வரும் போது சாதித் தலைவர்களின் சிலை இலக்காவது தவிர்க்கவே முடியாது. அதற்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால் ஒருவரின் சிலையே 100க் கணக்கான இடங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தால் தமிழக அரசுக்கு வீன் செலவு தானே ? அந்த செலவையெல்லாம் சங்கம் வைத்து சாதி வளர்ப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? சாதித் தலைவர்கள் மீது அந்தந்த சாதியினருக்கு நன்மதிப்பு இருக்கட்டும், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த தலைவர்களை ஏன் சிலையாக வடித்து பொதுவில் வைத்து பிரச்சனைகளுக்கு அடிகோல வேண்டும். அப்படியும் சிலை வைக்க வேண்டுமென்றால் சாதி சங்க கட்டிட வளாகத்தினுள் பாதுகாப்பாக வைத்தால் அவர்களுக்கு ஏன் அவமரியாதை ஏற்படப் போகிறது ?

இறந்த பிறகும் காலம் காலமாக தான் சிலை உருவத்திலும் தங்கள் சாதியினருக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சாதித் தலைவர்கள் குறிப்பாக மருத்துவர் இராமதாஸ், தொல். திருமாவளவன், மற்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி, மருத்துவர் சேதுராமன் மற்றும் அனைத்து சாதித் தலைவர்களும் தங்களுக்கு வருங்காலத்தில் நடக்கும் அவமரியாதை உணர்ந்து, தங்களுக்கு எந்த சிலையும் இருக்கக் கூடாது என்று தற்போதே தங்கள் சாதியினரிடம் சொல்லி விடுவது நல்லது.

சாதிதலைவர்களின் சிலைகள் பொது இடத்தில் இருப்பது எப்போதும் சீண்டலுக்கும், மோதலுக்குமே வழிவகுக்கும். அது நடந்தால் பொது சொத்துக்கும் மாபெரும் சேதம் விளைவிக்கும். தெருக்களின் பெயர்களில் இருந்து சாதிகளை அகற்றியது போலவே ஊருக்கு(ள்) நடுவே இருக்கும் சாதித் தலைவர்களின் சிலைகளை தமிழக அரசு அகற்றிவிட்டு அங்கெல்லாம் மணிக்கூண்டு அமைக்கலாம். ஒரு சாதித்தலைவருக்கு ஊருக்குள் சிலை இருந்தால் நம் சாதியிலும் ஒருவருக்கு சிலை இருப்பதுதான் நமது சாதிக்கும் பெருமை என்றே பிற சாதியினர் நினைப்பார்கள், சாதிகளும் சாதி வேற்றுமைகளும் சாதிகளின் தலைவர்கள் சிலையாக நின்று கொண்டிருந்தால் கூட அதை அதை கட்டிக் காக்கும் என்பதே உண்மை.

அப்படியும் சிலை வைக்க வேண்டும் என்கிறார்கள் என்றால் ஊருக்கு வெளியே பொதுச் இடுகாடு இருப்பது போன்று தமிழகத்திற்கு பொதுவாக ஒரு நினைவு இடத்தை அரசு ஒதுக்கி, அதனுள் லண்டனில் மெழுகு சிலை அமைத்தவைத்திருப்பது போன்று அனைத்து தலைவர்களுக்கும் இடம் ஒதுக்கி, அந்தந்த சாதியினரிடம் அங்கு வசதிக்கேற்றவாறு சிலை அமைத்துக் கொள்ளச் சொல்லலாம், பிறந்த நாள், இறந்த நாள் போன்ற நிகழ்வுகளுக்கு அந்த சிலைகளையும் தொலைவில் இருந்தே பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று விதிமுறை அமைத்து, ஓரிருவரை மாலை மரியாதை செய்ய அனுமதிக்கலாம். அதற்கு ஆகும் பாதுகாப்பு செலவும் குறைவு. அந்த இடத்தை சுற்றுலா தலம் போல் அமைத்தால் அது இன்னும் நன்றாகவே இருக்கும்.

வாஉசியும், பாரதியும் சாதித்தலைவர்கள் ஆகும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரையும் எதாவது ஒரு சாதி உரிமை கொண்டாடி இருக்கும் :(

தமிழகத்தில் முன்னாள் தலைவர்கள் யாரை வேண்டுமானாலும் சாதித் தலைவராக மாற்றிக் கொள்ளூங்கள், தந்தைபெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிநி ஆகியோரையாவது விட்டுவையுங்கடா ன்னு சொல்லத் தோன்றுகிறது.

முடியல்ல... தயவு செய்து நிறுத்தவும் - குசும்பன் !

கல்யாணம் எல்லாம் நல்லபடியாக முடிஞ்சுதான்னு கேட்க குசும்பன் தம்பிக்கு தொலைபேசினேன்...

நம்ம சரவணவேலு குசும்பன் தம்பி மூச்சு விட சிரமப்படுறாராம்,

"யோவ் என்னய்யா சின்ன வயசுதானே அதுக்குள்ளே இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு..."

"பெருசு ஓவராக கற்பனை பண்ணாதிங்க...இது அது இல்ல இது வேற மேட்டர்".

"என்னைய்யா மேட்டரு...சொல்லேன்யா"

"கல்யாணம் ஆகி 7 நாள் ஆச்சு"

"சந்தோசம் தானே"

"டெய்லி நான் வெஜ்ஜா போட்டு கொல்லுராங்கய்யா ...எறா சுறா நண்டு நெத்திலி, ஆடு, கோழி......எவ்வளவு தான் திங்க முடியும்"

"யோவ் துபாய் போனால் இப்படி சாப்பிட முடியுமா ... அன்பான உபசரிப்பு கிடைக்குமா எஞ்சாய் பண்ண வேண்டியதுதானே...."

"அது இல்ல பெருசு...பேண்ட் எல்லாம் இடுப்புல ஏறமாட்டக்குது.....புதுசா ஒரு டஜன் பேண்ட் சர்ட் எடுக்கனும் போல இருக்கு...முடியல நான் வெஜ்ஜை தயவு செய்து நிறுத்தவும்னு சொல்லப் போறேன்"

"கல்யாணம் ஆச்சுன்னு ஓணான் கூட கொமோடோ சைசுக்கு பெருசாகிடும்யா"

"பினாங்கு பதிவருக்கு போட்டியா ஆகிடுவேனோன்னு பயமாக இருக்கு"

"ஆனா என்னையா ?"

"அவரு உடம்ப வச்சுதான் ஓட்டுவேன்...இனிமே எந்த மூஞ்சோடு ஓட்டுறது"

"அவனவனுக்கு ஆயிரம் கவலை...ஒனக்கு டிபிசிடியை ஓட்ட முடியலைன்னு கவலை "

"அண்ணாச்சி, சிவா மோசம் பண்ணிப்புட்டான்"

"தண்ணி அடிச்சு படுத்து தூங்கி மூகூர்த்த நேரத்துக்கு வராம இருந்துட்டானா ?"

"அதை செஞ்சிருந்தாலும் பரவாயில்லை, எதிரிலேயே இருந்தான்... மேரேஜை லவ் டெலிகாஸ்ட் பண்ணப் போறேன்னு லேப்டாப்பை நோண்டிக்கிடே இருந்தான்...என்கிட்ட வந்து பேசவே இல்லை... எனக்கு கடுப்பாயிட்டு"

"கல்யாண மண்டபத்தில் கலர் பஞ்சமா ? பாவம் சிவா... வேற வழி இல்லாமல் வீக் எண்டு ஜொள்ளுக்காக எதாவது படம் தேடி இருப்பான்... அதை விடுய்யா"

"நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்க, அறிமுகம் இல்லாதவர்கள் கூட போன் பண்ணி வாழ்த்தினாங்க, மனசுக்கு சந்தோசமாக இருந்துச்சு பெருசு..."

"மிக்க மகிழ்ச்சி... ம் ஏன்யா பெருசு பெருசுன்னு கொல்லுறே...எனக்கு மீசை கூட நரைக்கல தெரியுமா ?"

"டிபிசிடியும் நீங்களும் ஒருத்தர் ஒருத்தர் பேசிவச்சிக்கிட்டு அவரு உங்களை பார்த்து 'நீங்க இளமையோ இளமைங்கிறது', நீங்க அவரைப் பார்த்து 'ரொம்ப ஸ்லிம்மா ஸ்மார்டாக இருக்கேன்னு' சொல்லிக்கிட்டு ஊரை ஏமாற்றி வருவது எனக்கு தெரியாதா ?"

"யாரோ கூப்பிடுறாங்க ....சரிடா சரவணா நான் போனை வச்சுடுறேன்...கல்யாண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடு"

"இன்னொருதடவை காலங்காத்தால போனைப் போட்டு...இங்கிதம்..."

திட்டுவதற்குள் போனை துண்டித்துவிட்டேன்.

21 ஏப்ரல், 2008

கடுகடு மேலாளர்கள் !

எல்லோருடைய மேலாளர்களும் (BOSS) கடுகடு வென்று இருப்பார்களா ? நான் முன்பு வேலை பார்த்த 10 அலுவலகத்திலும் எனக்கு கிடைத்த மேலாளர்களில் 8 பேர் எப்போதும் கடுகடு சிடுமுகம் தான். பொதுவாக உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்புணர்வின் காரணமாக தனக்கு கீழே வேலைப்பார்பவர்களிடம் கடுகடுவென்று நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். பதவியின் பொறுப்புணர்வு என்பதில் ஏவலையும் (அதிகாரத்தை) பயன்படுத்திக் வேலை வாங்குபவர்களை பலருக்கும் பிடிக்காது, வேலை இடத்தில் மேலாளர்கள் அவ்வாறு நடந்து கொள்ளும் போது அவருக்கு கீழே வேலைப்பார்பவர்கள், அவர் கடந்து செல்லும் போதெல்லாம் பேயை பார்த்து அரண்டு போவது போலத்தான் அச்சமுடன் இருப்பார்கள், அறைக்கு அழைத்தால் விசாரனைக் குழு (விசாரனை கமிஷன்) முன்பு நிற்கப்போவது போலவே பயந்து நடுங்குவார்கள்.

கடுகடு மேலாளர்களிடம் விடுப்பு கேட்டு கிடைப்பதைவிட அந்த மேலாளர் விடுப்பில் செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி ... அவருக்கு கீழே வேலைபார்பவர்களுக்கு கொண்டாட்டம் தான், 'அப்பாடா இன்னிக்கு ஆள் இல்லை' என்ற மகிழ்வில் மிகுந்த சுதந்திரத்துடன் வேலை நேரத்தில் அரட்டை கச்சேரி, புகைப்பிடிக்கச் செல்வது, அக்கம் பக்க காஃபி கடைக்கு சென்று ஒரு கால் மணிநேரமாவது நேரத்தை செலவிட்டு, மேலாளரின் விடுப்பை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். ஹூம் என்ற பெருமூச்சுடன் அடுத்த நாள் வழக்கமான அச்சம் வந்துவிடும்.

கடுகடு மேலாளர்கள் இருக்கும் அலுவலகத்தில்... அலுவலகம் என்ற சூழல் பள்ளிக் கூடம் போல் தனிமனித கட்டுப்பாடுகள் மிக்கவையாகி வேலை நேரத்தில் ஒருவித பயத்துடனே எல்லா வேலைகளும் நடக்கும். கடுகடு மேலாளர்கள் உண்மையில் எப்போதும் கடுகடுவெனவே இருப்பார்களா ? ஒரு சிலர் அப்படி இருப்பார்கள், கொஞ்சம் தொய்வு விட்டால் சொல்வதை சட்டை செய்யாமல் இருந்துவிடுவார்கள், பிறகு கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்தே மேலாளர்கள் அந்த கடுமையையும் முகத்தையும் எப்போதும் வைத்திருப்பார்கள்.

எனக்கு மேலாளர்களாக இருந்தவர்கள் அனைவருமே கடுகடு கடுப்பர்கள் தான். ஆனால் அவர்களுக்கும் எல்லோரைப் போல் கலகலப்பாக கீழே வேலைப்பார்பவர்களிடம் முடிந்த அளவு நட்புடன் பழகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும், கீழே வேலைப்பார்பவர்கள் நெருங்கிச் சென்று பேசுவதற்கு தயங்குவதாலேயே அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் எப்போதும் விலகியே இருப்பார்கள். காரணம் கல்லூரியில் செய்முறை பயிற்சிக்கான மதிப்பெண் குறைக்கப்படும் அச்சம் இருப்பது போலவே, ஆண்டு இறுதியில் ஊதிய உயர்வு பரிந்துரையில் (அப்ரைசல்) கைவைத்துவிடுவாரோ என்ற அச்சம் தான். என்னுடைய மேலாளர்களிடம் வேலை நேரம் தவிர்த்து பழகிய போது அவர்களும் நகைச்சுவை உணர்வு உடையவர்கள் தான் என்று தெரிந்தது, அவர்களிடம் நெருங்கிப் பழகத் தொடங்கியதும், அவர்கள் எவரும் எனக்கு பேயைப் போல் தெரியவில்லை.

மற்றவர்களிடம் சிரிக்கிறார்களோ இல்லையோ, என்னைக் கடந்து செல்லும் போது சிரிப்பை உதிர்த்துவிட்டுதான் சென்றிருக்கிறார்கள், அதே போல் முன்பு அவர்கள் கடுமை காட்டி சொல்லியதையெல்லாம், சிறிது கடுமையுடன், பொறுப்பு உணர்வை வளர்க்கும் விதமாக அறிவுரையாக மாற்றிச் சொல்வார்கள். அதைக் கேட்பதற்கும் நமக்கு பொறுமை இருக்கும். மேலாளர்கள் தன்னிடம் வேலைப்பார்பவர்களிடம் எதிர்ப்பார்பதும், அது சரிவரச் செய்யவில்லை என்றால் அதற்கு கடிந்து கொள்வதும் இயல்புதான், ஆனால் அவர்களை புரிந்து கொண்டவர்களிடம் காட்டும் அனுகுமுறையும், அவர்களைப் பார்த்து பயந்து நடுங்குபவர்களிடமும் / பொறுப்பற்றவர்களிடமும் நடந்து கொள்ளும் அனுகுமுறை வெவ்வேறானது.

சிலர் மேலாளருக்கு சோப்புப் போட்டு அவரை குளிர்விப்பார்கள், அது தனி. அவர்களை உடன்(சக) அலுவலர்களே நன்றாக தெரிந்துவைத்திருப்பார்கள், 'இவனிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், போட்டுக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவான்' என்று சோப்பு ஆட்களிடம் கூடவே வேலைப்பார்பவர்கள் மேலாளரைப் பார்த்து அச்சமுறுவதைவிட கூடுதலாகவே அச்சமுறுவார்கள்.

என்னுடன் வேலைப்பார்பவர்கள் எப்போதும் கேட்பதுண்டு, 'உன்கிட்ட மட்டும் ஏன் அவர் கடுப்படிப்பதே இல்லை?', 'அவரைப்பார்த்து நடுங்காமல் நம் வேலையைப் சரியாக பார்த்தால் அவருக்கு ஏன் பயப்படவேண்டும், அவரும் மனிதர் தானே, அவரிடம் சிரித்த முகத்தோடு அலுவலகம் தவிர்த்த நேரங்களில் பேசிப்பாருங்கள், உங்களுக்கு அவரையும், அவருக்கு உங்களையும் பிடித்து போகும்' என்று சொல்லி இருக்கிறேன். இந்திய மேலாளார்கள் மட்டுமல்ல, சீன மேலாளர்களும் ஆரம்பத்தில் கடுகடு என்று இருந்தவர்கள், பின்பு நன்றாகவே பழகினார்கள், என்னிடம் இனவேற்றுமை காட்டியதே இல்லை. அவர்கள் பதவி விலகி வேறு அலுவலகம் செல்லும் போது என்னையும் அங்கே வந்துவிடச் சொல்லி பலர் அழைத்திருக்கின்றனர். நான் மாறிச் சென்ற பல வேலைகள் என்னுடைய முன்னாள் மேலாளர்களின் அழைப்பினால் கிடைத்ததுதான்.அலுவலகம் நேரம் தவிர்த்து, அலுவல் தொடர்பில்லாதவற்றைப் பற்றி மேலாளர்களிடம் நட்பு முறையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காததாலும், வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாததாலும், தயக்கத்தாலுமே பல கடுகடு மேலாளர்கள் புரிந்து கொள்ளப்படமாலேயே இருக்கின்றனர்.

தெரியாத பேயைவிட, தெரிந்த பேயே பரவாயில்லை. இந்த சிறுகதை படித்துப் பாருங்கள்.

திரு ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு ... (மட்டுமல்ல)

திரு ஜெயபாரதன் ஐயா அவர்கள் பற்றி அறியாதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன், கனடாவில் அறிவியல் துறையில் பணியாற்றி இருக்கிறார். அவரது 100க் கணக்கான கட்டுரைகளை திண்ணை இணைய இதழில் குவிந்து கிடக்கிறது. இலக்கியம், மொழியாக்கம், அறிவியல், கவிதைகள் என ஜெயபாரதன் ஐயாவின் இலக்கிய பயணம் அளவிட முடியாது. இவை அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து கொண்டே தொடர்ந்து செய்தார் என்பதை உணரும் போது அவர் தமிழ்மீது கொண்டுள்ள அளப்பெரிய பற்றை எவராலும் விளங்கிக் கொள்ள முடியும், இவரது அறிவியல் கட்டுரைகளை முடிந்த அளவுக்கு சிறப்பாக தமிழில் கொடுத்து இருப்பார், மற்றும் அதனை எளிதாக விளக்க தேவையான படங்களை இணைத்து இருப்பார்.

அவரது எழுத்துக்களை நீண்ட நாட்களாக படித்து வரும் வாசகன் நான். அண்மையில் 'தமிழ் விடுதலை ஆகட்டும்' என்ற கட்டுரையை திண்ணை இணைய இதழில் எழுதி இருந்தார், அதனைத் தொடர்ந்து அதே கட்டுரையை தனது வலைப்பதிவில் ஏற்றி தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார், ஞாயிற்றுக் கிழமை என்பதால் எத்தனை பேர்கள் அதனை படித்தார்கள் என்று தெரியவில்லை. ஜெயபாரதன் ஐயா அவர்களின் கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது, ஒரே ஒரு பத்தியில் எனது மாற்றுக் கருத்தைச் சொல்கிறேன்.

அவரது முழுக்கட்டுரை தமிழ் விடுதலை ஆகட்டும்!

//நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். //

ஜெயபாரதன் ஐயா,

எந்த ஒரு மொழியிலும் எழுதியது போலவே படிக்க முடியாது, அதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும், ஆங்கிலத்தில் பலுக்குதல் (ப்ரனவுன்சேசன்) என்று உண்டு என்பது தாங்களுக்கு தெரியும். tsunami என்பதை சுனாமி என்று தெளிவாக படிக்கும் போது பாசுகரன் என்று எழுதினால் அதை பாஸ்கரனாகவே படிக்க முடியாது என்பது நமது பயிற்சி இன்மையே காரணம் அது தமிழின் குறையன்று. ஆங்கிலத்தில் பலக்குதலுக்கும் (உச்சரிப்புக்கும்) சொல்லுக்கும் வேறுபாடு இருப்பதை கேள்வி இன்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ள நாம், தமிழ்மட்டுமே பேசுவது போலவே எழுதவேண்டும் என்று நினைப்பது தமிழுக்கு அழகு சேர்க்குமா என்று மனம் திறந்த்து சிந்திக்க வேண்டும்.

என்னதான் ரஜினி, எம்ஜிஆர் என்று எழுத்தில் எழுதினாலும் பாமரர் சொல்வது ரசினி, எம்சிஆர் தான். அவர்களை முட்டாள்கள் என்று சொல்லத் துணிவதாக இருந்தால் உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். சீனமொழியில் 90 விழுக்காடு சொற்கள் உண்மையான பெயர்சொல்லின் ஒலி அமைப்பை ஒத்து இருக்காது 'இந்த்உ' என்று இந்தியாவையாவையும், 'சிஞ்சப்பூ' என்று சிங்கப்பூரையும் குறிப்பிடுவார்கள், அவர்கள் அதை தங்கள் மொழியின் குறைபாடு என்று தாழ்வாக நினைப்பது இல்லை. அவர்களின் இலக்கியம் வளராமலும் இல்லை.

தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து பேசுபவர்கள் எப்போதுமே ஆங்கிலத்தை ஒப்பிட்டே பேசுகிறார்கள், அதில் இருக்கிறது இதில் இல்லை என்றே சொல்லப்படுகிறது, ஆங்கிலம் வெள்ளைக்காரர்களின் தாய்மொழி என்பதைவிட ஒரு வணிக மொழியாக பரிணமித்து நிற்கிறது, உலக அளவில் இரண்டாவது மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது, நமது தமிழ் தமிழர்களைத்தாண்டி பரவாது, நமது தமிழ் மட்டுமல்ல, உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் சீன மொழி கூட சீனர்களைத் தவிர்த்து எவரும் பேசுவதாக தெரியவில்லை. சிலர் மாற்று மொழி அறிந்து கொள்ளவும், ஆங்கிலம் தவிர்த்து, தாய்மொழி தவிர்த்து சிலர் வணிகம் தொடர்பாகவும் மேலும் சில மாற்று மொழிகளை அறிந்து கொள்வார்கள், ஆங்கிலம் தவிர்த்து அறிந்து கொள்ளப்படும் மொழிகளை அறிவோர் எண்ணிக்கை ஆசியாவைப் பொருத்து மிகமிகக் குறைவே (இந்தி போன்ற கட்டாயம் பாடம் தவிர்த்து)

ஜெயபாரதன் என்பதை செயபாரதன் என்று பிறர் எழுதுவது உங்களுக்கு பிடிக்காமல் உங்களை ஜெயபாரதன் என்றே அழைக்கச் சொல்வது / எழுதச் சொல்வது உங்கள் உரிமை, அது போன்றே அவர்கள் ஜெயகாந்தனை செயகாந்தன் எனவும், ஜெர்மனியை செர்மனி என எழுதும் போது 'அப்படி எழுதாதே !' என்று நீங்கள் கட்டளை இட முடியாது.

நீங்கள் குறிப்பிட்ட மேற்கண்ட சொற்களை சீனம் போன்ற மற்ற செம்மொழிகள் எப்படி எழுதுகிறது என்று கேட்டறிந்தால் நான் சொல்வது உங்களுக்கு புரியவரும். 'எனக்கு தமிழ்பற்றி தான் கவலை' என்றால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஏற்கனவே இருக்கும் ஜ,ஷ,ஹ,க்ஷ, போன்ற திசை எழுத்து வகைகள் அப்படியே இருக்கலாம், அவற்றை பயன்படுத்த பழகிவிட்டோம், புதிதாக pha,ba,bha எல்லாம் தேவை இல்லை என்பது என்கருத்து. ஸ்ரீ என்பதை திரு என்று மொழிமாற்றி பயன்படுத்துவதாலும், சீனிவாசன் என்று எழுதுவதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. pha,ba,bha எழுத்துக்களை தமிழில் கொண்டுவந்தால் புதிய கலைச்சொல் ஆக்கம் குறைந்துவிடும்.

ஆங்கிலம் a e i o u - வெறும் ஐந்து குறில் மெய்களை வைத்து பலுக்குதல் முறையில் நெடில் சொற்களை அமைத்துக் கொள்ளும் போது தமிழில் மட்டும் வேற்றுமொழியில் உள்ள எழுத்துக்கள் இல்லை என்று நினைக்க வேண்டும் ? Kamaraj என்பதை ஆங்கிலத்தில் எழுதி தமிழர் தவிர்த்து வேற்று மொழியாளர்களை படிக்கச் சொன்னால் 'கமராஜ்' என்றுதான் படிப்பார்கள்.

சில எழுத்துக்கள் இல்லை என்றால் எந்த மொழியை ஆதாரமாக வைத்து அவற்றில் இருக்கும் எந்தந்த எழுத்தையெல்லாம் தமிழுக்கு கொண்டுவருவது ?

காதில் கேட்கும் ஒலி அலைவரிசை 4 - 4000 khz இதில் ஒரு எழுத்துக்கு 4 hz என்று வைத்துக் கொண்டாலும் எந்த ஒரு மொழியும் முழுமையான மொழி என்பதற்கு உயிர், மெய், உயிர்மெய் என 1000 எழுத்துக்கள் தேவைப்படும், அப்படி ஒரு மொழி உலக மொழிகளில் கிடையவே கிடையாது. அப்படி ஒன்று உருவாக்கினாலும் அத்தனை எழுத்துக்களையும் நாவால் பலுக்கும் திறன் மனிதருக்கு கிடையாது.

'தமிழ்' என்பதை மலையாளம் தவிர்த்து உலகில் உள்ள அனைத்து மொழிகளும் எப்படி பலுக்குகிறது, எழுதுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், அதற்கு அந்த மொழியாளர்கள் அப்படி ஒரு ஒலி (ழ்) உள்ள எழுத்து இல்லையே என்று கவலைப்பட்டு இருக்கிறார்களா ? என சிந்திந்து…தமிழ்மொழியில் சில எழுத்துக்கள் இல்லை, சிலவற்றை அப்படியே எழுதி தமிழின் 'குறையை' நீக்கவேண்டும் என்ற 'தாழ்வு' மனப்பாண்மை வராது.

19 ஏப்ரல், 2008

வலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் !

குமுதமும், அமரர் சுஜாதா ஆகியோர் வலைப்பதிவாளர்கள் பற்றி சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், அவை வலைப்பதிவு என்ற ஊடகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்தாக்கம்.

கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..
-
பலர் என்பது எதிர்ப்புக்கு(ஆட்சேபனைக்கு) உரியது. சிலர் அப்படி இருக்கலாம். தமிழ்பதிவாளர்களில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் உண்டு, அவர்களாகவே மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.


வலைப்பதிளர்கள் பற்றி நியூயார்க் டைம்ஸ் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

Blogged Out

Mon, Apr 07, 2008
The Straits Times

SAN FRANCISCO - THEY work long hours, often to the point of exhaustion. Many are paid by the piece - not garments, but blog posts. This is the digital-era sweatshop. You may know it by a different name: home.
A growing workforce of homeoffice labourers and entrepreneurs, armed with computers and smartphones and wired to the hilt, are toiling under great physical and emotional stress created by the around-the-clock Internet economy that demands a constant stream of news and comment.

In the last few months, two of them have died suddenly.

Two weeks ago in North Lauderdale, Florida, Mr Russell Shaw, a prolific blogger on technology subjects, died at 60 of a heart attack.

( 60 வயதில் மாரடைப்பு வருவது பொதுவானது, அதற்கு காரணமாகச் அவர் வலையில் எழுதுவதை சொல்லலாமா என்பது ஆராய்ச்சிக்கு உரியது)

In December, another technology blogger, Mr Marc Orchant, died at 50 of a massive coronary. A third, Mr Om Malik, 41, survived a heart attack in December.
Other bloggers complain of weight loss or gain, sleep disorders, exhaustion and other maladies born of the nonstop strain of producing for a news and information cycle that is as always-on as the Internet.

To be sure, there is no official diagnosis of death by blogging. There is also no certainty that the stress of the work contributed to their deaths. But friends and family of the dead, and fellow bloggers, say those deaths have them thinking about the dangers of their work style.

The pressure even gets to those who work for themselves - and are being well compensated for it.

'I haven't died yet,' said Mr Michael Arrington, the founder and co-editor of TechCrunch, a popular technology blog.

The site has brought in millions of dollars in advertising revenue, but there has been a hefty cost. Mr Arrington says he has gained 14kg in the last three years, developed a severe sleeping disorder and turned his home into an office for him and four employees.

'At some point, I'll have a nervous breakdown and be admitted to the hospital, or something else will happen. This is not sustainable,' he said.

The emergence of this class of information worker has parallelled the development of the online economy. Publishing has expanded to the Internet, and advertising has followed.

For the obsessive, that can mean never leaving the house.

Blogging has been lucrative for some, but those on the lower rungs of the business can earn as little as US$10 (S$14) a post and, in some cases, are paid on a sliding bonus scale that rewards success with a demand for even more work.

One of the most competitive categories is blogs about technology developments and news.

They are in a vicious 24-hour competition to break company news, reveal new products and expose corporate gaffes.

Bloggers for such sites are often paid for each post, though some are paid based on how many people read their material.

Some sites, like those owned by Gawker Media, give bloggers retainers and then bonuses for hitting benchmarks, like if the pages they write are viewed 100,000 times a month. Then the goal is raised, like a sales commission: write more, earn more.

Bloggers at some of the bigger sites say most writers earn about US$30,000 a year starting out, and some can make as much as US$70,000. Speed can be of the essence. If a blogger is beaten by a millisecond, someone else's post on the subject will bring in the audience, the links and the bigger share of the ad revenue.

'There's no time ever - including when you're sleeping - when you're not worried about missing a story,' Mr Arrington said.

In the case of Mr Shaw, it is not clear what role stress played in his death. His girlfriend Ellen Green said the pressure, though self-imposed, was severe. She said she and Mr Shaw had been talking a lot about how he could create a healthier lifestyle, particularly after the death of his friend, Mr Orchant.

'The blogger community is looking at this and saying, 'Oh no, it happened so fast to two really vital people in the field', ' she said. 'They are wondering, 'What does that have to do with me?''

For his part, Mr Shaw had written a last e-mail dispatch to his editor at ZDNet: 'Have come down with something. Resting now posts to resume later today or tomorrow.'

NEW YORK TIMES

**************

ப்ளாக்கிங் தொழில் நுட்பத்தை பிழைப்பாக வைத்திருப்பவர்களுக்கு, கூடுதல் வருமானம் பெறுவதற்காக அவர்கள் வேகமாக செயல்பட வேண்டி இருப்பதால் அவர்களுக்கு மன அளவில் அழுத்தமும் சோர்வும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, மற்ற தொழில்களிலும் வேலை அழுத்தத்தின் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயற்கை.

தமிழ்வலைப் பதிவுகளில் பிழைப்புக்காக எழுதுபவர்கள் பற்றி சரியாக தெரியவில்லை. தமது எழுத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு (அங்கீகாரம்) புகழடைந்தவராக (பாப்புலர் ப்ளாக்கர்) ஆக வேண்டும் என்று எழுதுபவர்கள் உண்டு. வலைப்பக்கம் எழுதுபவர்களில் பலர் (என்னையும் சேர்த்து) தாம் படித்ததை பகிர்வது, மாற்றுச் சிந்தனைகள், சமூக அரசியல் போன்றவற்றை எழுதுகிறார்கள். எண்ண ஓட்டம் தெரிந்து கொண்டு இதில் பல நட்புகள் / சிற்சில எதிர்புகள் கிடைக்கிறது, அதைத்தவிர எண்ணங்களை சேர்த்துவைக்கும் நாட்குறிப்பேடு என்ற அளவில் உதவுகிறது.

ஆன்லைனில் இருப்பதையும் தேர்ந்தெடுத்தக் கொண்ட நண்பர்கள் தவிர்த்து பலருடனும் உரையாடுவதை தவிர்த்தால் நேரவிரயம் மிச்சமாகும். அவதூறுகள் செய்யாமல் பொதுவாக வலையில் எழுதுவதற்கும் வரும் எதிர்வினைகளுக்கு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் செயலாற்றினால் எந்த வித மன உளைச்சலும் வராது. தேவையற்ற தொடர்புகளும், தேவையற்ற(வர்களின்) சீண்டலும் மன உளைச்சல் ஏற்படுத்தலாம், அவற்றைப் புறந்தள்ளிச் செல்வது எதிர்வினை ஆற்றுவதைவிட நல்லது.

என்ன சொல்ல வருக்கிறேன் என்றால், குமுதம் சொல்லும் 'மனநோய்' என்பதில் உண்மை இல்லாமல் இல்லை, ஆனால் அதை 'பலருக்கும்' என்று பெரிதுப்படுத்திச் சொல்வது மிகைப்படுத்தலே.

தமிழ் வலைப்பதிவுலகில் எத்தனையோ பதிவர்கள் மொக்கை, காமடி, கொஞ்சம் சீரியஸ் இடுகை, குறிப்பிட்ட அளவு நண்பர் வட்டம் என்று மகிழ்வுடனே இருக்கிறார்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதலாம் என்பது நாளடைவில் வேலைத்தவிர்த்து, பிறவற்றிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் செய்துவிடும். ( என்னைப் பொருத்து, வலைப்பதிவாளர்கள் தவிர்த்து வெளி உலக நண்பர்களிடம் தொடர்பு குறைந்துவிட்டது) முடிந்த அளவுக்கு எதாவது ஒரு நேரம் ஒதுக்கி அதற்குள் வலை எழுதுவதை, படிப்பதை வைத்துக் கொள்வதே நல்லது.

'முப்புரி நூல்' இல்லாததால் எனக்கு எதிராக பிரசாரம்: கருணாநிதி

சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் திட்டமிட்டு சில டிவி, பத்திரிக்கைகள் விஷமத்தை பரப்பி வருவதாக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்ைக:

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சில பத்திரிக்கைகள், எழுதி வருகின்றன. நான் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதைப் பொறுக்க முடியாமல்தான் இப்படி என் மீது அவதூறை வாரி வீசுகின்றனர்.

இந்த முதல்வரிடம் முப்புரி நூல் இல்லை, நான் பிரம்மனின் முகத்திலிருந்து தோன்றிய சமூகத்தைச் சேர்ந்தவனும் இல்லை. பிரம்மனின் காலிலிருந்து உதித்த சமூகத்தைச் சேர்ந்தவனாகி விட்டேன். அதனால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.

நான் பிற்பட்ட வகுப்பில் பிறந்த காரணத்தினால்தான், சில குறிப்பிட்ட பத்திரிக்கைகள், அரசின் சாதனைகளை மூடி மறைத்து விட்டு, வேண்டும் என்றே எனக்கு எதிராக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

நிக்சனும், ஹெக்டேயும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக கிளம்பிய குற்றச்சாட்டுக் காரணமாகத் தான் பதவியை ராஜினாமா செய்தார்கள். அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர் தமிழகத்தில் இரு அதிகாரிகளுக் கிடையே தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து என்னை பதவி விலக சொல்வது விஷமத்தனமானது.

செய்தி : தட்ஸ்தமிழ்

தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1

மொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே முதன் முதலில் மொழிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும். உலகில் உள்ள எந்த மொழியும் (கணனி மொழி தவிர்த்து) தோன்றிய காலத்தில் எழுத்துடனே தோன்றி இருந்ததற்கான கூறுகளே (ஆதாரம்) இல்லை.

பறவைகளின், விலங்குகளின் தொண்டை மற்றும் நாக்கு அமைப்பிற்கு ஏற்றார் போல் குரல் ஒலி இருக்கும், ஒரு குறிப்பிட்ட வகை பறவைகளின் குரல் ஒலி அதே வகை இன்னொரு பறவையின் குரல் ஒலியை ஒத்தே இருக்கும், இது போன்று தான் ஒவ்வொரு வகை விலங்குகளுக்கும் ஒலியிளவில் ஏற்ற இரக்கம் இருக்கும். அவை தம் சூழலுக்கு, தேவைக்கு ஏற்ப எழுப்பும் ஒலிகள் எல்லாம் ஒரே அளவில் (wave length) தான் இருக்கும்.

மனிதன் சமூக விலங்கு, பழங்குடி(ஆதிவாசி)களாக இருந்தாலும் தனக்கென சமூகம் அமைத்துக் கொண்டவன், குழுவாகவே வாழப் பழக்கப்பட்டவன், பழங்கால மனித குழுக்களில் அந்தந்த குழுக்களுக்குள் தோற்ற அமைப்பும் குரல் ஒலியும் ஒன்று போலவே இருந்திருக்கலாம், காலப்போக்கில் இனக்குழுக்கள் கலந்த போது பல்வேறு நிற இனங்களில் கலப்பில், இனக்குழுக்களுக்குள் பல்வேறு முகசாயல் உடைய மனிதனாக பரிணாமம் பெற்றுவிட்டான். சீனர்கள் என்றாலே அவர்களது முகம் இப்படித்தான் இருக்கும், எல்லோருமே நகல் (க்ளோனிங்) செய்யப்பட்டவர்கள் போல இருக்கிறார்கள் என்றே நினைப்போம், ஆனால் அவர்களுடன் நாள் தோறும் பழகுபவர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு முகமும் இந்தியர்களைப் போலவே வேறுவேறு வடிவானது என்பது தெரியும். மேற்கு இந்திய மட்டை(கிரிக்கெட்) ஆட்டக்காரர்களைப் பார்த்தபிறகும் கருப்பின மக்களைக் கூட நாம் ஒரே தோற்றம் முடையவர்கள் என்றே நினைக்கிறோம், அவை வெறும் உடல் அமைப்புதான், முக அமைப்பு, குரல் ஒலி எந்த ஒரு இனத்திலும் இரட்டையர்கள், உடன்பிறந்தோர் தவிர்த்து ஒன்றுபோலவே இருக்காது.

முதலாக காணப்பட்ட மனித குழுக்களுள் ஒவ்வொன்றிலும் அவர்களுக்குள் குரல் ஓலியும் தோற்றமும் ஏறக்குறைய ஒன்று போலவே இருந்திருக்க வேண்டும், அவர்களுக்குள் எழுப்பிக் கொண்ட ஒலிகளே நாளடைவில் வேறுப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கான சுட்டொலிகளாக ( அல், உல், குல் - அங்கே, இங்கே, பக்கத்திலே) மாறி மொழியாக வளர்ந்திருக்கிறது. நாகரீகம் வளர்ச்சியடையாத இனக்குழுக்களுக்கு தகவல் சேமிப்பு என்பதற்கான தேவையே இல்லை, ஏனென்றால் அவர்கள் எளிய ஆயுதங்களை செய்வது, வேட்டையாடுவது மற்றும் குடில்களை அமைத்துக் கொள்வது என்பது மட்டுமே அவர்கள் வாழ்நாளில் தெரிந்து கொள்ளவேண்டியவை. அதனால் அவர்களுக்கு பேசும் மொழியில் எழுத்துக்கள் தேவையற்றதாகவும், பேசும் மொழியே மூத்தோர் வழி வாய்வழியாக அறியப்பட்டு அவர்களுக்குள் புழங்கி வந்தது. அது போன்ற பழங்குடியினரின் மொழிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த மொழி சிதையாமலேயே இருக்கும்.

நாகரீகம் பெற்ற இனக்குழுக்கள் மொழியை தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்துவது என்பதிலிருந்து தகவல் சேமிப்பு என்பதை நோக்கி மொழியை கொண்டு செல்ல முயன்ற போது எழுத்து என்பது அதற்கு இன்றியமையாதது, தேவை (அத்யாவசியம், அவசியம்) என்றாகியது.

தொடரும்...

17 ஏப்ரல், 2008

சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

தினமலரின் 'அந்த' விளம்பரம் சன் டீவியில் ஓடியது, "சன்டேன்னா இரண்டு"

"உங்க வெளம்பரம் ஓடுது"

சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தாள் என் மனைவி

"எப்படியோ உனக்கு என்னை ஓட்டனும்"

"சந்தர்பம் கிடைப்பதைத்தானே பயன்படுத்த முடியும்"

"பொல்லாத சந்தர்பம், ஊரு ஒலகத்தில் கல்யாணம் ஆன ஆம்பளைங்க செய்யாததையா நான் செஞ்சிட்டேன்"

"சரி...நான் போய் குளிச்சுட்டு வந்துடுறேன்"

"ம்...சரி சரி...நானும் எல்லாம் இருக்கா என்று பார்க்கிறேன்... இப்பெல்லாம் எப்போ தீறுதுன்னு கணக்கு வச்சிக்க முடியல..."

"எல்லாத்தையும் நானே உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டி இருக்கு..."

"அது...இல்லடி 10 - 12 நாளைக்கு ஆகும் னு தான் வாங்குறோம்...எல்லாத்தையும் அளந்து, அளந்து செஞ்சுகிட்டு இருக்க முடியுமா ?"

"ஐயா சாமி...உசிரை வாங்காதிங்க, போய் திறந்து பார்த்தால் தெரிஞ்சிடப் போகுது"

"வளைஞ்சு கொடுத்துதான் ஆகனும்...என்ன பண்ணறது...வெளியில் தான் பெண்ணியம் பேசுகிறேன் என்று வேறு சொல்றாங்க ... உன் விருப்பத்தையும் பார்க்க வேண்டி இருக்கே"

"உங்க இலக்கிய பேச்செல்லாம் வேறு எங்காவது வச்சிகுங்க ... முதலில் போய் ப்ரிட்ஜை திறந்து என்னனென்ன இல்லையோ பார்த்து வாங்கிட்டு வாங்க..."

"சரிடியம்மா...."

அடுத்து சிறுகதையின் தலைப்பை இங்கே தான் சொருகி இருக்கிறேன் கவனமாக பிடித்துக் கொள்ளுங்க :)

"என்ன முனகல்...சன்டேன்னா... காலை டிபன், மதிய சாப்பாடு இரண்டு வேளை சாப்பாடும் நீங்க தானே எப்பவும் செய்றிங்க..."

"ம் பழகுன மாடுதானே ஏன் பம்மனும்னு கேட்கிறியா...? சரி பிரிட்ஜைப் திறந்து பார்த்துட்டு கடைக்கு கிளம்புறேன்"

"அப்பா...நானும் உன் கூட கடைக்கு வர்றேன்"

அடுத்து இரண்டாவது டார்சர் மெல்ல ஆரம்பிக்குது, சன்டேன்னா பொண்டாட்டி, பொண்ணு இரண்டு பேரோட டார்சர் தாங்கல.

*******

இது வவாச போட்டிக்காக எழுதியது ... ஆனால் எந்த பிரிவில் சேர்ப்பது என்று தெரியல, சிறுகதை, நகைச்சுவை, மொக்கை, அனுபவம்.

இந்த சிறுகதை (?) குடும்பத்தை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்த திருமணம் ஆன ஆண்களுக்கு காணிக்கை.

நினைவு படுத்திய வெட்டிப்பயல் (எ) பாலாஜிக்கு நன்றி ! அங்கேயும் சன்டேன்னா இரண்டா ? :)

16 ஏப்ரல், 2008

இளங்கோவடிகள் (கண்ணகி), பாரதி யார் தீவிரவாதி ?

ஒரு சொல்லோ, செயலோ அதன் தன்மையில் இருக்கும் உண்மை இயல்பைவிட, அது யாரால் சொல்லப்பட்டது என்பதை வைத்துத்தான் வலிந்து பொருள் உறக்கவே உரைக்கப்படுகிறது.

ஒருமுறை அமெரிக்காவில் ஒரு மாநிலம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற போது அதில் தப்பிப்பிழைத்தவர்கள் பற்றிய செய்தியில் கருப்பர்களைப் பற்றி குறிப்பிடும் போது, "அங்குள்ள கடைகளில் உணவை திருடினார்கள்" என்றும் அதே செய்திதாளில் பிரிதொரு பக்கத்தில் வெள்ளையர்கள் பற்றிய குறிப்பிடும் போது, "உணவுக்காக ஒரு கடையில் இருந்த ரொட்டிக்களை எடுத்தார்கள்". அதாவது ஒன்று திருட்டு என்றும் மற்றொன்று உயிர்வாழ்வதற்கென்றும் சொல்லப்பட்டது.

ஒடுக்கப்பட்டவர்கள் வீறுகொண்டு எழுந்து போராடினால் அது தீவிரவாதம் என்றும், அவர்களுக்கு எதிராக ஆளும் வர்க்கம் எடுக்கும் நடவெடிக்கை உலகை அமைதி பூங்காவாக ஆக்குவதாற்கா என்று சொல்லுவார்கள்.

இது போன்ற கூத்து தமிழ் இலக்கியங்களை வைத்தும் செய்யப்படுவதுண்டு, இந்த இலக்கிய அரசியல் படி யார் தமிழை நேசித்தார்கள், சுவாசித்தார்கள் என்றெல்லாம் காட்டுவதற்கு எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும்.
பெரியார் தமிழை காட்டுமிராண்டு பாசை என்று சொன்னார், அவர் தமிழனல்ல என்றும் (இதுபற்றி முன்பே எழுதி இருக்கிறேன்) பெரியார் மீது பெரிய குற்றச்சாட்டுகள் எதையும் சொல்ல முடியாது போகும் போது இது போன்று அவர் (வெளியில் தொங்கிய மூத்திர பையில்) சிறுநீர் போனது , பாரிஸில் நிர்வாணமாக நின்றது, வயதான காலத்தில் மணியம்மையை திருமணம் செய்து கொண்டது என்பதையெல்லாம் சொல்லி பெரியார் ஒரு அயோக்கியன் என்று காட்ட முற்படுவார்கள்.

இளங்கோவடிகளையும், பாரதியையும் ஒப்பிட முடியுமா ? சிலப்பதிகாரம் என்ற பெருங்காதை படைத்த புலவன் எங்கே, வருண கீதையை மொழிப்பெயர்த்த பாரதி எங்கே ? பாரதி சிறந்த கவிஞர் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரை இளங்கோவடிகளுடன் ஒப்பிட முடியுமா ?

அப்படியும் ஒப்பிட்டு இளங்கோவை தாழ்த்தியும், பாரதி புரட்சிக்கென பிறந்ததாகவும் காட்டுகிறார்கள்.

இது ஒருபதிவில் இருந்து எடுத்த ஒரு பகுதி

//பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையை எரித்த கண்ணகியை தீவிரவாதி என்று நாம் இதுவரை சொன்னதில்லியே! பாண்டிய மன்னன் செய்தது தவறு என்று ஜல்லிதானே அடித்து இருக்கின்றோம்.
பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரையையும் மதுரை மக்களையும் கண்ணகி ஏன் எரித்தாள் என்று யாரவது கில்லி அடித்து இருப்பார்களா?//


இளங்கோவின் சிலப்பதிகார நாயகி தனக்கு அநீதி கிடைத்தற்காக மதுரையை எரித்தாளாம் ! இது என்ன ஞாயம், பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் என்ன செய்ய முடியும் ? ஞாயமான கேள்வியே. இலக்கிய புனைவுக்காகவும், வளமைக்காகவும் புலவர்கள் பொய்யுரைப்பது வழக்கம் தான். கண்ணகி மதுரையை எரித்தாளா இல்லையா என்பது பற்றி சிலப்பதிகாரம் தவிர்த்து வேற எந்த தமிழ் இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை, கதையின் இலக்கியத்தையும், பயனையும் எடுத்துக் கொண்டு, அதை ஒரு புனைவு அல்லது அந்த கதையே புனைவு என்று கூட சொல்லிவிட முடியும்.

தனிமனித அநீதி எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மட்டுமே கண்ணகி மதுரையை எரித்தாக சொல்லப்பட்ட செய்தியை இளங்கோவடிகளின் கற்பனை என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அதே தனிமனித் நீதி பேசிய பாரதியின் செய்யுள் மட்டும் புரட்சியாக பரப்பபட்டு வருவது ஏன் ?

''தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’

என்று பாரதி ஆவேசப்பட்டது என்னவோ உண்மை. ஆனால் உணவின்றிப் பசியால் வாடுவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அந்தக் காரணத்தை அழிப்பதற்குப் பதிலாக ஜெகத்தினை அழித்திடுவது என்ற ஆவேசத்தில் அறவியல் இருக்கலாம்; அதில் அறிவியல் இல்லை.


- அறவியல் காரணமாக, அறிவியல் காரணம் என்றெல்லாம் திரிக்கிறார்கள், முதலில் இதை அறிவின் காரணமாகச் சொல்ல முடியுமா ?

பலர் பாரதியிடம் இருக்கும் பக்தியின் காரணமாகவும், நம்மவர் என்ற பாசத்திலும் பலவகையில் திரிக்கிறார்கள். கூகுளில் "ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று தேடிப்பாருங்கள்.

எவனோ ஒருவன் பட்டினியால் இரு(ற)ப்பதற்கு காரணம், அவன் சோம்பேறியாகக் கூட இருக்கலாம், உழைக்கத்தெரிந்தும் அந்த பொருளை சேமிக்கும் சக்தியற்றவனாக இருக்கலாம், அல்லது எதோ ஒரு புண்ணாக்கு காரணத்திற்காக, ஞாயமற்ற காரணத்திற்கு அவன் பட்டினியாக இருந்து இருக்கலாம், அந்த பட்டினியால் அவன் செத்தே போனதாகக் கூட வைத்துக் கொள்வோம், அந்த ஒருவனுக்காக முழு உலகையும் அழிக்கச் சொன்ன செயல் ஞாயமானதா ?

உலகத்தை(யே) அழிக்கச் சொன்ன பாராதி தீவிரவாதியா ? மதுரையை (மட்டும்) கண்ணகி எரித்தாள் என்று புனைவுக்காக எழுதிய இளங்கோ திவிரவாதியா ?

எது புரட்சி ? யார் செய்வது புரட்சி ? அது ஏன் பரப்பப்படுகிறது, ஒன்று ஏன் தாழ்வாகவும், மற்றொன்று ஏன் உயர்வாகவும் சித்தரிக்கப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ந்தால் எல்லாவற்றிலுமே சாதி அரசியல் அசிங்கம் (நன்றி: இளா) இருப்பதுதான் தெரிகிறது.

:(

15 ஏப்ரல், 2008

நான் தான் இராமன் பேசுகிறேன்...

அன்புள்ள பக்த கோடிகளே, இலங்கையில் இருந்து நான் திரும்பியதும் மூழ்கடித்து, இன்று இல்லாத பாலத்தை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு என் செயலுக்கு களங்கம் கற்பிக்கிறீர்கள், இராமனால் மூழ்கடித்து அழிக்கப்பட்ட பாலம் இன்றும் இருப்பதாகச் சொல்வது என்னை கேவலப்படுத்துவது தானே ?

நான் கடவுளா ? நான் கடவுளே இல்லை, நான் மனிதன், மனித அவதாரம், மனிதனைப் போலவே குழந்தை பெற்றுக் கொண்டவன், மனிதர்களைப் போலவே மனைவியை சந்தேகப்பட்டவன், மனிதனைப் போலவே அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுபவன், அது என்ன என்று கேட்கிறீர்களா ? என் அப்பா தசரதர் கொடுத்த வரம் படி எனது தம்பி தானே பட்டத்து இளவரசனாக இருக்க முடியும் ? அதற்கு ஆசைப்பட்ட எனது தாய் கோசலையும், அதை ஆமோதித்து 14 ஆண்டுகள் கழித்தாவது அதனை பெற்றுக் கொள்கிறேன் என்று வனவாசம் போன நான் சாதாரண மனிதன் தானே ?

ஆசைப்பட்டேன் என்ற வெளிப்படையாக என்னிடம் சொல்லி மையல் கொண்ட சூர்பனகை என்ற பெண்ணை நான் மூக்கறுத்தேன், நான் செய்த அந்த தவறினாலேயே இராவணன் என் மனைவியை கவர்ந்து சென்றான். வெறும் மனிதனான என்னால் வாலியுடன் போர் செய்ய முடியுமா ? அதனால் தான் அவனை மறைந்திருந்து கொண்டேன், நான் கடவுள் என்றால் அவனை எளிதாக கொன்று இருக்க முடியும், அகலிகைக்கு காலடியால் சாபவிமோசனம் கிடைக்க காரணமாகச் சொல்லப்பட்ட நான் வாலியை வீழ்த்துவது எளிதாக இருந்திருக்காது.

தாடகை, சூர்பனகை என்ற பெண்ணைத்தான் வஞ்சித்து இருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள், என்னுடன் பிறந்த பாவத்திற்காகவே என் தம்பி இலக்குவன் தன் மனைவியை பிரிந்து காட்டில் காய்ந்து கொண்டிருந்தான், அதனை அனுமதித்த நான் மனிதர்களைப் போலவே சுயநலக்காரன் தானே ? என் பேராசையின் மீதான வெறுப்பில் என் செருப்பே பரவாயில்லை என்னும் நிலைக்கு என் தம்பி பரதன் சென்றுவிட்டான்

இராவணன் செய்த தவறுக்காக (மூக்கறுப்பால் தூண்டியது நான் தான்) இலங்கையையே அந்த காலத்து கண்ணகியாக அனுமாரை வைத்து தீக்கிரையாக்கினேன்.

நான் பிறந்ததால் எதாவது நன்மை இருக்கிறதா ? என்று பார்த்தேன், மதக்கலவரங்களை 20 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்ததையும், என் பெயரைச் சொல்லி சேது திட்டம் நிறுத்தப்பட்டதையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், தவிர்த்து ஒன்றுமே இல்லை. என் நிலை எவருக்கும் வரக் கூடாது, என் கதையும் எவருக்கும் சொல்லப்படக் கூடாது.

என் மனைவி சீதை "சந்தேகபுத்திகாரனான உன்னுடன் இருப்பதை விட என் தாய் பூமாதேவியிடமே செல்கிறேன்", துப்பாத குறையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் . முதன் முதலில் தாய்வீட்டுக்கு பெண்கள் கோவித்துக் கொண்டு போகும் பழக்கமே என்னால் தான் ஏற்பட்டதோ என்றும் கூட நினைக்கிறேன்.

நான் ஏகப்பத்தினி விரதன் என்று கம்பர் தமிழில் எழுதும் போது சொல்லிவிட்டார், அதே கதையை வால்மிகி எழுதும் போது என்னிடம் குறை காணவில்லை.

நான் பிறக்கமலே இருந்திருக்கலாம், சாதாரண மனிதனாக இருந்த என்னை கடவுள் நிலைக்கு உயர்த்தியதையும் என்னை வைத்து அரசியல் செய்யப்படுவதும் எனக்கு மேலும் பாவம் சேர்ப்பதாகவே உள்ளது.

நான் பிறந்ததிலிருந்து மறையும் வரை என்னுடன் இருந்தவர்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்தார்கள், வரிசையாக சொல்லலாம், எனது தாய்மார்கள், தந்தை, தம்பிகள், என் மனைவி, இராவணன், அவன் தம்பிகள் எவரும் மகிழ்வாக இருந்ததே இல்லை. அனுமான் கூட என்னுடன் இருந்ததால் திருமண வாழ்கையே வேண்டாம் என்று தனியாளாக இன்றும் இருக்கிறான்.

என் கதை என்னவிதமான பாடம் என்று தெரியவில்லை, என்னைச் சேர்ந்தவர்கள், சார்ந்தவர்கள், போற்றியவர்கள் எல்லோரும் துன்பத்தையே அனுபவத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பொருத்திப் பார்க்கும் போதுதான், என்னை வைத்து செய்யப்படும் அரசியலும், அதனால் பலர் இறப்பதும் கூட என்னால் ஏற்படும் துன்பமாகவே மாறுகிறது என நினைக்கிறேன்

என்னை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திவிடுங்கள், எனக்கு மேலும் பாவத்தை சேர்த்து 'மீனிலும் தாழ்ந்தவனாக' (நன்றி: ஜயராமன் சார்) இன்னொருமுறை பிறக்க வைக்காதீர்கள். போதும் நான் பட்டதும், என்னால் நீங்கள் பட்டதும்.

இப்படிக்கு,
ஸ்ரீஇராமன்
தற்பொழுது எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை

பிகு : இந்த இடுகைக்கும் லக்கியின் இந்த இடுகைக்கும், டிபிசிடியின் இந்த இடுகைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ... திரு வந்தியத்தேவன் அவர்களுக்கு ... (மட்டுமல்ல)

திரு வந்தியத்தேவன் அவர்களின் பின்னூட்டத்திற்கான மறுமொழியாக எழுதியது, நீளம் கருதி தனி இடுகையாக்கி இருக்கிறேன், அவருக்கு மட்டுமல்ல அதுபோன்ற கருத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் எனது கருத்தாக இதை எழுதுகிறேன்

//வந்தியத்தேவன் has left a new comment on your post "வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள...":

மாற்றம் என்பது முன்னேற்றதிற்கானதாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் ஒரு வீம்புக்கு மாற்றுவது கொஞ்சம் பயத்தை அளிக்கிறது. கீழ்கண்டவாறு எல்லாம் அறிவிப்புகள் வெளியானால் எவ்வாறு இருக்கும். சற்று நகைச்சுவை உணர்வுடன் படியுங்கள். (அவற்றில் நகைச்சுவை இருப்பதாக தெரியவில்லை என்றாலும்! :) )//


முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், சங்ககாலத் தமிழன் அனைத்து சமயம் சார்ந்தவன், அவன் பவுத்தனாக இருந்திருக்கிறான், சமணனாக இருந்திருக்கிறான், மதமற்றவனாகக் கூட இருந்திருக்கிறான். அப்பொழுதும் அனைத்து தமிழர்களாலும் ஆண்டு பிறப்பு கொண்டாடப்பட்டே வந்தது. தமிழர்களின் நாட்காட்டி முறை திரிக்கப்பட்டவுடன் சித்திரையில் தமிழ் ஆண்டு பிறப்பதாகவும் அதன் கொண்டாடமெல்லாம் இந்து பண்டிகையாகவும் மாற்றப்பட்டது, தற்பொழுது தமிழர்களில் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்களா ? கொண்டாவில்லை என்றால் தமிழர் குடி முழுகிவிடுமா என்று கேட்பீர்களா ? எந்த ஒரு மொழியின் ஆண்டுபிறப்பும் மதம் தொடர்புடையாதாக இருந்தால் அந்த மதத்துக்காரர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள், உலகம் முழுவது ஆங்கில நாட்காட்டி முறை இருந்தாலும் எதாவது இஸ்லாமிய நாடுகளில் ஜென 1 ஐ புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுகிறார்களா ? இந்தியாவில் கொண்டாடுகிறோம், அதனையும் இந்துமதவாத சக்திகள் எதிர்கின்றன.

இப்பொழுது சொல்லுங்கள் சித்திரை புத்தாண்டு இந்து பண்டிகைப் போல் உள்ளதா இல்லையா ? ஒரு புத்தாண்டு தேதியை மாற்றுவதன் மூலம் அனைத்து மத தமிழர்களின் ஒருமித்த தமிழ் விழா, பண்டிகையாக அது மாறும் என்றால் அதனை மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் ? சீனர்கள் அவர்களின் புத்தாண்டை மதம் சார்ந்த ஒன்றாக கொண்டாடுவதில்லை, கொண்டாட்டதிலும் மத வாசனை இல்லை.

//வேட்டி தான் தமிழனின் பாரம்பரிய உடை என்று அறிவித்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வேட்டி கட்டிக் கொண்டு வரச் செய்யலாம், சத்யராஜ் சொன்னது போல தமிழ் கடவுள்களை மட்டும் தமிழன் வழிபட வேண்டும் என்று உத்திரவு இடலாம்.
படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிப்பது போல தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்தால் அவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் இலவசம் என்று அறிவிக்கலாம். (ஆனால், தமிழினத் தலைவர் தம் பெயரை அன்புச்செல்வம் என்றும் கூட்டணித் தலைவரின் பெயரை
இராமஅடியான் என்றும் மாற்றிக் கொள்ள வேண்டும் முதலில்!)//


கேரளா மாநிலத்தில் வேட்டி கட்டிக் கொண்டு தான் அலுவலகம் செல்கின்றனர், அதை அவமானமாக யாரும் நினைப்பதில்லை, நமது முன்னோர்வழி உடை வேட்டியை வேஷ்டி என்று வடமொழியில் எழுதுவது தான் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் தமிழனின் மனநிலை மாறவேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் தமிழ்நாட்டு கோவில்களுக்கு வரும் விழுக்காடு, தமிழன் அங்கெல்லாம் படையெடுத்துச் செல்வதை ஒப்பிடும் போது மிக மிக குறைவு, தன்வீட்டை இருட்டாக போட்டுவிட்டு, அடுத்த தெருவுக்கே விளக்குகள் அளிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அவரது செயலை போற்றுவீர்களா ? ஒருவருக்கொருவர் (பரஸ்பரம்) என்ற முறையில் தமிழர்களின் கோவில்களுக்கு பிறமாநிலத்தவர் வந்து சென்றால் நாமும் அவ்வாறு செய்யலாம், எங்கும் இருப்பது கடவுள் என்று நம்பும் தமிழ் பக்தர்கள், பிறமாநிலத்தில் உள்ளவற்றில் சக்தி இருப்பதாகவும், தம்மாநில கடவுள் வெறும் சிலை தான் என்று நினைத்து ஒதுக்கப்படுவதும் என்ன வகையான பக்தி என்று தெரியவில்லை. குழந்தைக்கு தமிழ் பெயர் வைக்கவும் அரசு அறிவித்தால் உண்டு என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு இன்று தமிழன் தன்னைத் தாழ்வாக நினைத்திருப்பது மாறவேண்டுமா? வேண்டாமா ?

//கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ் குடி. உணவு, உடை, பழக்க வழக்கம், திருவிழா, மொழி - இவற்றில் எதுவும் கலப்பில்லாமல் வணிகம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பிருந்த மூத்தகுடி தமிழன் மட்டுமே இருந்திருக்க முடியும். ஆக அந்த ஆதி தமிழன் பயன்படுத்திய பொருட்களை, வாழ்க்கை முறையை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டுணர்ந்து அவ்வாறு வாழ தலைப்பட வேண்டும் என்று அறிவுறுத்தலாம். //

உலகில் எந்த ஒரு வளர்ந்த நாகரீகமும் உணவு, உடை, பழக்கவழக்கம், நாகரீகம், மொழி ஆகியவற்றை மாற்றிக் கொண்டது கிடையாது, இதற்கு சிறந்த உதாரணமாக சீனர்களையும் ஐரோப்பியர்களையும் காட்டலாம். அலுவலக உடை, வெளிப்பழக்கம் இதெல்லாம் வேறு, இது உலக அளவில் எல்லோரும் செய்வது தான், தன்னளவில் அரைக்கால் சட்டை அணியும் ஆண்கள் வெள்ளைக்கார பெண்மணிகளைப் பார்த்து தம்வீட்டு (தமிழ்) பெண்களும் அவ்வாறு மிடி அணியவேண்டும் என்று சொல்லத் தயாராக இருக்கிறார்களா ? எதுவுமே ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உள்ளதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம், நாகரீக வளர்ச்சி என்பதை மறந்துவிட்டு விதண்டாவாதத்திற்காக ஏன் கோவணம் கட்டிக் கொண்டே தமிழன் இருக்கக் கூடாது என்றும் கேட்கலாம்.

//எனக்கு புத்தாண்டு எப்பொழுது கொண்டாடினாலும் என்ன? வருத்தம் என்னவென்றால் முன்பு பொங்கலுக்கு ஒருநாள் , தமிழ் வருடப் பிறப்பிற்கு ஒருநாள் என இரண்டு விடுமுறைகள் வரும். நல்ல விருந்து உணவு கிடைக்கும். புது படங்கள் வெளியாகும். இப்படி எல்லாவற்றையும் ஒன்றாக்கி விட்டால்! எதாவது புது பண்டிகைகள் உருவாக்கலாம். இன்று சோழர் காலத்தில் குடவோலை முறை துவக்கிய நாள். பாண்டிய மன்னன் சங்கம் வைத்த தினம், பல்லவன் புலிகேசியை வென்ற தினம். இப்படி.... இதை விட்டு விட்டு...!! :( நான் சொல்வது சரியா இல்லையா, நீங்களே சொல்லுங்கள் கோவியாரே! //

விடுமுறையெல்லாம் குறைக்க மாட்டார்கள், சித்திரை திருநாள் என்ற பெயரில் விடுமுறை விடுவார்கள், நீங்கள் சொல்பவை அனைத்தும் அதில் இருக்கும் என்றே நினைக்கிறேன். பிறமொழிக்காரர்களின் பண்பாடு, பழக்கவழக்கம், இதையெல்லாம் நமது முதுகில் சேர்த்து கட்டப்பட்டு இருப்பதை தூக்கி எறிவோம், மிகவும் கூனாகிப் போனதால் தமிழர்களின் பார்வை கூட மங்கிவிட்டது. எல்லாவற்றையும் தமிழுக்குள், தமிழர்களுக்குள் நுழைத்தவர்கள், தமிழர் தம் தெய்வங்களுக்கெல்லாம் (மதுரை வீரன் உட்பட) பூணூல் அணிவித்தவர்கள், தமிழர்கள் பூணூல் அணிய வேண்டும், ஆண்டு தோறும் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வழக்கத்தை மட்டும் ஏன் நுழைக்கவில்லை?

முதலில் தமிழன் தான் யார் என்று உணரட்டும், இது போன்ற நடவடிக்கைகளினால் தான், தனக்கென தனிப்பண்பாடு இருந்தது, தாம் பழம்பெருமை மிக்கவர்கள் என்று தமிழன் உணர்வான். ஆபாசத்தை அடித்தளமாக வைத்துள்ள சித்திரை ஆண்டுப்பிறப்பின் கதைகள் நமக்கு எதற்கு ? இந்த கண்டறாவிக் கதை தமிழர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை என்றாவது உங்களுக்குத்த் தெரியுமா ? சற்று மனம் திறந்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த தைக்கு பொங்கலோ பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துக்களையும் சேர்த்தே சொல்வீர்கள்.

வெளிநாட்டு அருட்தந்தை கால்டுவெல் ஐயர் திராவிட மொழிகளை ஆராய்ந்து தமிழ் தனித்தன்மை வாய்ந்தது, அது ஒரு சொம்மொழி என்று கண்டு சொல்லி இருக்காவிடில், வடமொழியில் இருந்து பிறந்ததே தமிழ் என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருப்போம், இன்னும் சிலர் இதே உளறலைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவிலிகளின் அறியாக் கூற்றுப்படி வடமொழி தேவபாசையாம், அதிலிருந்து பிறந்த தமிழ் சூத்திர பாசையாம்.

நீங்கள் சொன்னது நகைச்சுவையாக தெரியவில்லை, பலருக்கு இருக்கும் அதே ஐயப்பாடுதான், இதுபற்றி தமிழ் மொழி ஆர்வளர்களும், தமிழ் பற்றாளர்கள் சொல்வதையும் கேட்டால், இது மதசார்பற்று ஒட்டுமொத்த தமிழனுக்கு நன்மை அளிப்பதை புரிந்து கொள்வீர்கள். தமிழ்புத்தாண்டு தேதி மாற்றம் குறித்து இஸ்லாமிய, கிறித்துவ சமூகம் வரவேற்றுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ்புத்தாண்டு மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்ட நடைமுறைகளில் எனக்கு ஒப்புதல் இல்லை, பலதரப்பினரிடம் இதுபற்றி கலந்துமுடிவை எட்டி இருக்கலாம்.

14 ஏப்ரல், 2008

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததுண்டா ?

எந்த ஒருவருக்கும் உலகத்திலேயே மிகவும் பிடித்தது அவரது முகம் தான். ஒரு சில தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தவிர்த்து தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளாத முகம் என்ற புரிந்துணர்வு இருப்பதாலும், நமக்கு கிடைத்தது இது என்ற மனநிறைவு இருப்பதாலும் தத்தமது முகத்தை, தோற்றத்தை நேசிக்காதவர் மிகக் குறைவே.

ஒரு மனிதர் கோபப்படும் போது முகத்தில் இருக்கும் 46 தசைகளில் அதன் தூண்டல் இருக்கிறதாம். அதுவே மி(க்)கவும் மகிழ்ச்சி அடையும் போது ஒருவரது முகத்தில் 16 தசைகளில் மட்டுமே அதன் தூண்டல் இருக்கிறதாம். அதாவது கோபப்படும் போது நம் முகம் முற்றிலும் மாறிவிடுகிறது, முகம் சிவந்துவிடுகிறது, இரத்த ஓட்டம் கூடுதலாகிறது.

கோபப்படும் போது நாம் 46 தசைகளும் மாறி இருக்கும் நமது நரசிம்ம அவதாரத்தை நம்மீது மதிப்பு வைத்துருப்பவர்கள் மட்டுமே பார்த்து பயந்து நடுங்குவார்கள், நம்மை உதாசினப்படுத்துபவர்கள் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள்.

நம் மகிழ்வான முகத்தையும், கலைந்த தலையை சரிசெய்யவும், முகத்தை அழகு படுத்தவும் அடிக்கடி பார்க்கும் நாம், ஒருமுறை கோபம் கொப்பளித்து உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும்
போது நம் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் நம்மீது நமக்கே வெறுப்பு வரும், கோபப்படுவது பொருளற்றது என்று நினைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும், அதன் பிறகு கோபம் குறைந்து பொறுமையாக (நிதானமாக) யோசித்துப் பார்க்க முடியும்.

நமது இதுநாள் வரையிலான கோபங்களை திரும்பிப் பார்க்கும் போது, முன்பு எதோ ஒரு காரணத்திற்காக கோபப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைத்துப் பார்த்தோமேயானால், எந்த ஒரு நல்ல மனிதனும், 'நான் அப்படி நடந்திருக்கக் கூடாது' என்றே நினைப்பார்.

கோபத்துக்கான சரியான காரணம் இருந்தால் கோபம் தவறு அல்ல, அந்த கோபம் தவறு செய்தவர்களுக்கு படிப்பினையைத் தர, அவர்கள் உணர்ந்து கொள்ள அதனை முறையாக பயன்படுத்தலாம், ஆனால் அதே கோபம் தனக்கும் பாதிப்பையும் படிப்பினையும் தருமென்றால் அது எல்லை மீறிய கோபமாகத்தான் இருக்கும். அதைத் தவிர்ப்பது (சுயநலநோக்கோடு) நல்லதென்றே தவிர்க்கலாம்.

அடுத்த முறை அடங்கா கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பார்ப்போம், நமக்கே அது பார்க்கும் வண்ணம் இருக்கிறதா என்று அப்போது தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு தனிமனிதனின் கோபமும் தன்னைச் சேர்ந்தாரை மட்டுமே வஞ்சிக்கும், அதே கோபம் மற்றோரிடம் செல்லும் போது, பழிவாங்கும் உணர்வாக என்றாவது ஒருநாள் தன்னை நோக்கியே திரும்பிவரும். இரண்டுமே முடிவில் வருத்தம் தருவதில்தான் முடியும்


குறள் : 306
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.


ஐயன் திருவள்ளூவர் எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறார் பாருங்கள்

கொண்டவரை அழிப்பது, கோபத் தீ அவரை மட்டுமல்ல, அவருக்குத் துணையாகத் தோன்றும், அனைவரையுமே, அது அழிந்து விடும்.

13 ஏப்ரல், 2008

வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் முட்டாள் நாள் வாழ்த்துகள் !

"பழையன கழிதலும் புதியன புகு(த்)தலும்
வழுவல கால வகையி னானே"


இது நன்னூலில் தமிழ் இலக்கண மாறுதல் விதியாக சொல்லப்பட்டு இருப்பது என்று எடுத்துக் கொண்டாலும், இவை மக்கள், மொழி, பண்பாடு எல்லாவற்றிக்கும் பொருந்தும், காலம் மாறும் போது, மேற்கத்திய தாக்கம் போல் இயல்பாக புதியன புகும், சில வேளைகளில் புகுத்தப்படும், புகுவது இயல்பானது, புகுத்தப்படுவது ? புகுத்தப்பட்டது என்று அறியாமல் கலந்துவிட காலம் எடுக்கும்.

தமிழர்கள் எப்பொழுது தீபாவளி கொண்டாட தொடங்கினார்கள் என்பது சரியாக தெரியவில்லை, கண்டிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கொண்டாடி இருக்க மாட்டார்கள், அது போலவே சித்திரையையும் அறுபது வடமொழி பெயர்களில் புத்தாண்டாக பிறக்கிறது என்ற வழக்கமும் என்று தொடங்கியது என்று தெரியவில்லை. கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் சித்திரை ஆண்டு பிறப்பாக கொண்டாடப் பட்டதற்கான குறிப்பு இல்லை.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சியை அகற்றியதும் சைவம், வைணவம் என்ற பெயர்களில் தமிழ் கடவுள்கள் வடமொழியார் கடவுளுடன் இணைக்கப்பட்டன, தமிழர் தம் சுடலைமாடன் சிவனென்றும், முருகன் அவன் மகனென்றும், கொற்றவை முதலிய பெண் தெய்வங்கள் அம்பாள் (அம்பேல் அல்ல) ஆகியது, மாயோன் விஷ்னுவானான். பக்தி இயக்கம் என்ற பெயரில் கிறுக்கியது, மொழியாக்கம் செய்யப் பட்டதெல்லாம் புகுத்தப்பட்டன. சித்திரையும் அதை ஒட்டி நாரதர் விஷ்ணுவுடன் கூடி பெற்றுக் கொண்டதாக அருவெறுப்பு கதை சொல்லப்பட்டு, அந்தக்கதைகள் காலத்துக்கும் அழியாவண்ணம் புத்தாண்டுக்குள் புத்தாண்டின் பெயராகவும் (பிரபவ முதல் - குரோதன வரை, இவற்றை தமிழ் பெயர்கள் என்றே நானும் சிறுவயதில் அறுபது ஆண்டுகளின் பெயரையும், நட்சத்திர, ராசி பெயர்களையெல்லாம் மனப்பாடம் செய்திருக்கிறேன், இன்றும் அவற்றை வரியாக சொல்ல முடியும்), திங்கள் (மாத) பெயர்கள் புகுத்தப்பட்டது போல் தமிழுடன், தமிழர்களுடன் ஒன்றிணைந்தன (ஐக்கியமாயின).

இன்றைக்கும் பல கிராமங்களில் பழைய பழக்கத்தின் காரணமாக பொங்கலே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, தீபாவளி கொண்டாடாத கிரமங்கள் தமிழகத்தில் உண்டு, ஏனென்றால் தீபாவளிக்கான கதைகளோ, தீபாவளி கொண்டாடத்தக்கது என்றோ அவர்களுக்குத் தெரியாது.

மன மென்மை, மேன்மைகளை செம்மைப்படுத்துவதாக கருத்தப்படும் (நம்பிக்கையாளர்களின் கூற்றுப்படி) 'இறை நம்பிக்கை' உடையவர் தமிழர்கள் என்பதால், பக்தியின் பெயரால் எதைப் புகுத்தினாலும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க முடியும், இன்றைய காலகட்டங்களில் எண்கணிதம், வாஸ்து என்ற புதிய மிளகாய் அரைப்பு எந்திரங்களெல்லாம் வீட்டு கழிவரையின் வாயில் எந்த திசை நோக்கி இருக்கவேண்டும், அதை பயன்படுத்தும் போது எந்த திசை நோக்கி உட்கார்ந்து 'இருக்க' வேண்டுமென்றெல்லாம் சொல்லிவிட்டு (எல்லா திசையிலும் ஒவ்வொரு சாமி இருக்கிறது, சனி மூலையில் சனீஸ்வரன் இருக்கிறான், அவர்களை நோக்கி அமரக் கூடாதாம், வடமேற்கு, தென்மேற்கு பரவாயில்லை) முன்பு இருந்தவை சரியில்லை அதற்கு ஈடுசெய்ய (பரிகாரமாம்) இன்னின்ன செய்ய வேண்டுமென்றால்லாம் சொல்லி பணத்தை கறந்து கொண்டிருக்கின்றனர். அட்சய திருதியை 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் கேள்வி பட்டதேயில்லை. இவையெல்லாம் புகுந்ததா ? புகுத்தப்பட்டதா ?

எந்த ஒரு நம்பிக்கையையும் எவரும் அறியா வண்ணம் சீர்குலைக்கலாம், மாற்றலாம், ஏற்படுத்தலாம் அதெற்கெல்லாம் கேள்வியே எழாது. ஆனால் பலரும் தெரியும் படி, பலரும் அறியும் வண்ணம் மாற்றினால் 'வழிவழி வந்ததை மாற்றாதே, உணர்வு, நம்பிக்கை கெடுகிறது' என்ற ஓலம் பெரிதாகவே எழுகிறது.

***********

கலைஞர் தமிழ்புத்தாண்டின் திங்களை மாற்றியதைத் தொடர்ந்து சின்னத்திரை ஊடகங்கள் தமிழ்புத்தாண்டு என்று சொல்லாமல் சித்திரை நாள் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை படைத்துவருகின்றன. அரசு அறிவிப்புக்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கு ஏற்றவண்ணம் மாற்றிக் கொண்டார்கள், பல ஜூனியர், சீனியர் பத்திரிக்கைகள் ( தமிழில் செய்தி இதழகள்) இன்னும் புத்தாண்டு சிறப்பு மலர் என்று அறிவிப்பை வெளி இடுகின்றன. இவை தமிழ்பற்றுக்கான அளவு கோலாக நான் பார்க்கவில்லை. தமிழக அரசின் அறிவிப்பு மதிக்கப்பட வில்லை என்ற அளவில் மட்டுமே கொள்கிறேன்.

கலைஞர் செய்தது பாராட்டும் வண்ணம் இருந்தாலும், இவற்றிற்கான அறிவிப்பை ஓராண்டுக்கு முன்னரே செய்திருந்தால் பலதரப்பு குழப்பம் வராமல் இருக்கும், அது மட்டுமல்ல, தமிழின தலைவர் என்று (திமுக) சொல்லுவதாலும், தமிழக முதல்வராக இருப்பதாலும் அவரால் இந்த அறிவிப்பை செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் இது போன்ற அறிவிப்புகளில் மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களின், ஈழத்தமிழர்களின், புலம் பெயர்ந்து அங்கேயே தங்கிவிட்ட மலேசிய, சிங்கை தமிழர்களின் முன்னிலையாளர்கள் (பிரதிநிதிகளை) கலந்து பேசி முடிவு செய்திருக்க வேண்டும். அவர்களும் தமிழர்கள் தானே, மாற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் தான், தமிழ்வளர்ச்சியில் ஆர்வம் காட்டுபவர்கள், தமிழக முதல்வராக இருந்து அறிவிப்பு வெளி இட்டால் அது தமிழகம் சார்ந்தவையாக இருந்தால் எவருக்கும் கேள்வி வராது, தமிழ் தமிழகத்துக்குள் முடங்கிவிடவில்லை.

தமிழர்கள் தமிழ் பேசுகிறார்கள், இவை தமிழ்சார்ந்த அறிவிப்பு என்றாலும் அனைத்துத் தமிழர்களின் ஆதரவைப் பெற்று அறிவித்து இருக்க வேண்டிய ஒன்றை கலைஞர் தன்னிச்சையாக அறிவித்ததால், சிங்கை மலேசிய தமிழர்களுக்கு தமிழ்புத்தாண்டின் தேதி / திங்கள் மாற்றம் குறித்த விழிப்புணர்வு எட்டப்படவில்லை. ஓராண்டுக்கு முன்பே அறிவித்து ஒப்புதால் வேண்டும் என்று நற்காரணங்களைச் சொல்லி இருந்தால் பலதரப்பட்ட தமிழர்களின் புரிந்துணர்வோடு புத்தாண்டு மாற்றம் இயல்பாகவே புகுந்தது ஆகி இருக்கும். அப்படி செய்யாததால், இன்னும் சில ஆண்டுகளுக்கு, 'வரலாற்றில் தன் பெயரை இடம் பெறச் செய்ய கருணாநிதி 'பேர்'ஆசையால் இதைச் செய்துவிட்டார்' என்று நான்கு பேர் உறுப்பினராகக் கொண்டு பாரதியின் பெயரில் சங்கம் வைத்து பாரதியின் பெயரையும், தமிழையும் கெடுத்துக் கொண்டு இருப்பவர்கள் இடறிக் கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதியின் பெயர்... தமிழர், தமிழ் வரலாற்றில் அவர் முதல் முறை முதல்வரான போது கூட அல்ல, பராசக்தி வசனம் எழுதிய போதே பொறிக்கப்பட்டு விட்டது.

இந்த புத்தாண்டு செய்தியுடன் தொடர்புடையவர்கள் நான்குவகையினர்,

1. மாற்றம் குறித்து மகிழ்பவர்கள், அதை நடை முறைபடுத்தியவர்கள்

2. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நடை முறைபடுத்தினாலும், பழைய சித்திரை புத்தாண்டை சித்திரை நன்னாள் என்று மாற்றிக் கொண்டவர்கள்.

3. மாற்றம் பற்றி அறியாதவர்கள் (புலம்பெயர்ந்தவர்கள், வெளிநாட்டு குடிமக்களாக மாறிய தமிழர்கள்) இவர்கள் இன்றும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்

4. மாற்றம் தெரிந்தாலும் அதை மறுத்து ஏளனம் செய்வதற்காகவே வேண்டுமென்றே, சித்திரை 1 ஆம் நாளே தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக் கொண்டாடுபவர்கள்

இவர்களுக்கு முறையே வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும், முட்டாள் நாள் வாழ்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 ஏப்ரல், 2008

பேரரசன் நீ, குறுநில மன்னன் நான் !

வழக்கமாக குறளோவியத்திற்கு உரை எழுதும் வடிவில் திமுக - காங்கிரஸ் உறவு வெறும் கொள்கை கூட்டணி அரசியல் உறவல்ல அதையும் தாண்டி புனிதமானது, புனிதமானது என்கிறார் கலைஞர். தமிழகத்தில் கூட்டணி அரசு என்ற கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு இளங்கோவன் போன்றவர்கள் அமைச்சர் அவையில் இடம் கேட்காதவரையிலும், கலைஞர் சொல்லும் திமுக நடுவன் அமைச்சர்களை நீக்கவோ, சேர்க்கவோ செய்தால் காங்கிரஸ் உறவு புனிதமான உறவுதான்.

சோனியா அம்மையார், கலைஞரை 'பாதர்' பாதர்' என்று மட்டும் அழைக்காமல், கனிமொழியை தனது தங்கையாகவே நினைத்து மேலவை என்ன அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என்பதால் கலைஞரின் சொல்லும வெறும் அரசியல் உறவல்ல என்பதையே காட்டுகிறது. கலைஞர் ஒகனேகல் பற்றி திடீர் முடிவு எடுத்ததும் கூட, கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க நினைக்கும் காங்கிரசுக்கு கலைஞர் கொடுத்த 'கை' - இதுவும் அரசியல் தாண்டிய இணக்க உறவையே காட்டுகிறது.

இதெல்லாம் விடக் கூத்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் போதெல்லாம் ஹனீபாவின் கரகரப்பிரியா குரலில், டி ராஜேந்தர் எழுதிய 'பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தாது யாரு ?' என்ற பாடலில் மிசா காலத்தில் அதே காங்கிராசாரிடம் அடி உதைப்பட்டதை சொல்லிக் காட்டி ஓட்டுக் கேட்க முடிகிறதென்று தெரியவில்லை. எனக்கு புரியவில்லை. கூட்டணி கட்சி முன்பு செய்த கொடுமைகளை சொல்லிக் காட்டிக் கொண்டே ஓட்டுக் கேட்பது கூச்சமாக இருக்காதா ?

கூட்டணி கட்சிகளை ஜெ புகழாமலேயே கெடுப்பார். கலைஞரின் புகழ்ச்சி அரசியல் தான் கூட்டணி நாகரீகம் என்ற இலக்கணம் ஆகிவிடும் போல் இருக்கிறது. இது போல் இராமதாஸ் ஐயா பேசுவதில்லை என்பதால் தான் அடிக்கடி கலைஞர் அவர் மீது ஆவேசம் அடைக்கிறார் என நினைக்கிறேன்.

ஒகனேகல் விவகாரத்தில் கலைஞரின் வலியுறுத்தலுக்கு நடுவன் அரசான காங்கிரஸ் என்ன பதில் அளீத்தது என்று சொல்லாமல், நெடுஞ்சாலை வளர்ச்சி பணிகளுக்கு தமிழகத்துக்கு எத்தனை கோடி ஒதுக்கியது என்பதைத் தான் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்கிறார்களா ?

அந்த காலத்தில் இராஜாக்களை புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசு பெற்றுக் கொள்வது போலவே காங்கிரசையும், சோனியா அம்மாவையும் வானளவில் புகழ்ந்து பாடி தமிழ்நாட்டுக்கு நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் கலைஞர் ஆகிய முதல்வர் கவிஞர் கருணாநிதி.

ஈரோட்டு இளங்கோவன் அமைதியாக இருக்கும் வரை திமுக - காங்கிரஸ் வெறும் அரசியல் உறவல்ல நிஜம் என்றே தொடரும்.

எல்லாம் (தம்)மக்கள் நலனுக்காகத்தான்.

9 ஏப்ரல், 2008

Incredible India !

முன்பு நான் எழுதிய புதுக்கவிதை ஒன்று,

தேச 'ஒற்று'மை !

தேசத்தின் வியப்பிது,
தேர்தல் நாளில் தான் கண்டுகொண்டேன்,
நம் அனைவரின் கைகளில் ஒற்று'மை' !

தேர்தல் மை எல்லோருக்கும் வைக்கப்படுகிறது, இந்தியாவெங்கிலும் ஒரே பணம் ஒரே மதிப்பில் இருக்கிறது இவையே தேச ஒற்றுமை. மற்றவை எல்லாமும் மாநில நலம் சார்ந்தவைதான், பிரதமந்திரியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பொதுவான வராகத்தானே இருக்க வேண்டும், அவர் தேர்ந்தெடுக்கப் பட்டவுடனே அவரது தொகுதி தலைகீழாக மாறும், மற்ற ஊர்களிலெல்லாம் அவருக்கு தொடர்பு இல்லையா ? (அவர் பிறந்ததால் அந்த ஊருக்கு கிடைக்கும் புண்ணியமோ ) பிரதமர் என்ற அளவில் கூட தேச ஒற்றுமையின் அழகே (லெட்சனம்) இந்த அளவில் தான். உண்மையான இந்திய தேச ஒற்றுமையை, அந்நாட்டின் மக்கள் புலம்பெயர்ந்த / வேலைக்காக இடம்பெயர்ந்த வெளிநாடுகளில், அவர்கள் இந்தியர்கள் என்ற உணர்வில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது ஆதரவாக இருப்பதிலிருந்து... தேச ஒற்றுமை இந்தியாவைப் பொருத்த அளவில் வெளிநாடுகளில் தான் பார்க்க முடிகிறது. சிங்கை போன்ற நாடுகளில் உலக ஒற்றுமையையும் பார்க்கலாம், ஒரே மேசையில் அமர்ந்து ஆறு வெவ்வேறு நாட்டினர் உணவு உண்பதையும், ஒரே அலுவகலத்தில் வேலைசெய்து, ஒருவர் வீட்டு நிகழ்ச்சிக்கு அவர்களெல்லாம் வந்து கெளரவிப்பதையும் கூட பார்க்கலாம். இந்தியாவில் இருக்கும் போது அருமை பெருமை அறியப்படாத, தெரிந்து கொள்ள முடியாத பல்வேறு மாநில கலைகளும் வெளிநாட்டில் இருக்கும் போது கண்ணுற அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது.

மதிப்பு மிக்க கலாம் அவர்களின் கருப்பு வெள்ளைக் கனவான 2020 ஆண்டில் இந்திய வல்லரசு என்பதற்கு வண்ணம் தீட்டும் திட்டங்களை நடுவன் அரசு தொடங்கி இருக்கிறது. அதில் ஒரு திட்டமாக சுற்றுலா வளர்ச்சி திட்டமும் உள்ளது. இந்திய இயற்கை அமைப்புகளும், தட்பவெப்பமும், இயற்கை வளங்களிலும் வெறெந்த நாட்டிலும் காணக்கிடைக்காத அளவுக்கு மிகுந்தே இருக்கிறது, நமது கவனக் குறைவினால் அதை நாமும் கண்ணுறாமல், வெளிநாட்டினர் வந்தால் முகம் சுழிக்கும் அளவுக்கு பராமரிப்பு இன்றி வைத்திருக்கிறோம், தற்பொழுது இந்திய அரசு சுற்றுலா தளங்களை அழகுபடுத்தி வெளிநாட்டினரைக் கவரும் வண்ணம் பல்வேறு நாடுகளில் இந்திய சுற்றுலா கண்காட்சி நடத்திவருகிறது. நமது நாட்டில் இவ்வளவு வளங்களும், இயற்கை அமைப்புகளும் இருக்கிறது என்பதே அது போன்ற கண்காட்சிகளுக்குச் செல்லும் போது தான் தெரியவருகிறது. அவற்றைக் காண வெளினாட்டினர் வரும் போது நமக்கெல்லம் உண்மையில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வெளிநாட்டினர் இந்தியாவைப் போற்றும் போது கிடைக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை. அது போன்று இந்தியாவின் ஊழல் போன்றவற்றை அவர்கள் சுட்டிக் காட்டும் போது தலைகுனிவாகவும்(அவமானம்) இருக்கும்.

வெளிநாட்டினரை இந்தியாவிற்கு ஈர்க்கும் நடவடிக்கையால் அவர்களது அன்னிய பண வரவு இந்தியாவில் பெருகும். அதுமட்டுமல்ல, உலக அளவில் இந்தியா என்றால் ஏழை நாடு மட்டுமே என்ற எண்ணம் மாறும். அவர்களுக்கு மனநிறைவு இருந்தால் நம்நாட்டில் முதலீடு செய்வார்கள், வேலை வாய்ப்பு பெருகும் (எல்லோருக்கும் தெரிந்தவைதான்) . அந்தவகையில் தற்போதைய இந்திய அரசு சுற்றுலாதுறையில் கவனம் செலுத்தி இருப்பது இந்தியர்கள் அனைவராலும் வரவேற்க்கத் தக்கது. இவற்றைச் செய்தால் மட்டுமே போதாது, இந்தியாவின் மீது ஈர்பில் வரும் சுற்றுலா பயணிகளான வெளிநாட்டினருக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது இந்தியாவின் கடமை, வெளிநாட்டினரை ஏமாற்றி குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், ஒருவெளிநாட்டினரின் உயிர் இந்திய மண்ணில் கொலை செய்யப்பட்டால் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவருக்குமே இந்தியா என்றால் கொலைகார, கொள்ளைக்கார நாடு என்ற எண்ணம் வந்துவிடும். அதைத் தடுக்கும் விதமாக வெளிநாட்டினருக்கு எந்த கெடுதலும் வந்துவிடாமல் சுற்றுலாத்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அண்மையில் இந்திய சுற்றூலா வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் சுற்றுலா கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 மாநிலங்களின் கலைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்சிகளை நடத்தினர், பஞ்சாபி பங்க்ரா நடனம், மணிப்புரி இசைநடனம், அஸ்ஸாம் இசை நடனம் (ரத்னேஷ் அண்ணா கவனிக்க), மேற்கு வங்காள் கல்கத்தா காளி நாட்டிய நடனம், இராஜஸ்தான் பாடல்கள், குஜராத் பொம்மலாட்டம், மலையள களரி சண்டை, தமிழக
உறுமி மேளத்துடன் கரகம் (ஜமாலன் சார் கவனிக்க) ஆகியவை இலவச நிகழ்ச்சிகளாக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியைப்பற்றிய விமர்சனம் எதுவும் இல்லை. எல்லாம் நிறைவாகவே இருந்தது.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது மணிப்புர் இசை கருவிகளுடன் சுழன்று ஆடிய நடனம், அடுத்து நரம்பை முறுக்கேற்றும் மேளம், நாதஸ்வரத்துடன் கூடிய நம்ம ஊர் கரகம்.
(குஜராத்)

மேற்கு வங்காளம்
இராஜஸ்தான்
(உத்தரபிரதேசம்?)
(கேரளா)
(மணிப்பூர்)
(குஜராத்)
(அஸ்ஸாம்)
(பஞ்சாபி)
(நம்மவூர் கரகம)


மேற்கண்டது மகிழ்வான செய்தி, அதிலும் மறைவான கசப்பு கீழே

**************
திரைக்குப்பின்னால் : நிகழ்ச்சி முடிந்தது தமிழக கலைஞர்களிடம், கேரள கலைஞர்களிடம் பேச்சுக் கொடுத்தேன், தமிழகம், தஞ்சாவூரை சேர்ந்த கலைஞர்களில், 4 இசைகலைஞர்கள் ஆண்கள் 3 கரகாட்ட பெண்கலைஞர்கள் என 7 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் புலம்பலைக் கேட்க்க முடிந்தது.

"தங்கும் இடம், சாப்பாட்டுக்கெல்லாம் பிரச்சனை இல்லை சார், ஆனால் சம்பளம் ரொம்ப கம்மியாக கொடுக்கிறார்கள்" என்றார் ஒருவர், பக்கத்தில் நின்ற என்னைப் போன்ற பார்வையாளர் 'ஊரு சம்பளத்தைக் கணக்கு பண்ணி கொடுப்பாங்களோ' என்றார், அதற்கு 'அப்படி கொடுத்தாலும் பரவாயில்லை, ஊருல ஒருநாளைக்கு தண்ணி செலவோடு 500 ரூபாய் கிடைக்கும், இங்கு அதுவுமில்லை' என்றார்.

அதுதவிர "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற மாநிலக்காரர்களுக்கும் இதே நிலமைதான், இந்த கலைஞர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டியர் என பொறுப்பு கொடுக்கப் பட்டவருக்கு இந்தியைத் தவிர வேறு மொழி தெரியவில்லை. எங்கள் குழு ஒவ்வொன்றிற்கும் அந்த குழுவில் ஒருவரை தலைவர் என்று சொல்லி அவரிடம் மட்டுமே பொறுப்பாளர் பேசுகிறார், வேறு விபரம் கேட்டாலும் சொல்ல மாட்டேன்கிறார்கள்"
நான் சந்தடி சாக்கில்,"ஏன்ய்யா தார் பூசி இந்தியை அழிச்சிட்டு இப்படி பொலம்புறிங்க, இந்தி படிச்சிருக்கலாம்லே" - நூல்விட்டு கேட்டேன், "அட போங்க சார் மற்ற மாநிலகலைஞர்களும் பொறுப்பாளர் பேசுற இந்தி புரியாமல் விழிக்கிறார்கள், எங்களுக்கு புரிந்திருக்கும் என நினைத்து ஆங்கிலத்தில் வடமாநில கலைஞர்கள் விபரம் கேட்கிறார்கள், இங்கிலீஸ் பேசினாலும் ஓரளவு அனைவருக்கும் புரியும், இந்திகாரனிடம் மாட்டிக்கிட்டு கொடுமையாக இருக்கு" - என்றார்

அழைத்துவரப்படும் இந்திய கலைஞர்களும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் நடந்து கொள்வதும் சுற்றுலாவளர்ச்சி கழகத்தின் கடமைதான். வயிற்றுப்பாடு என்றாலும் கலைஞர்கள் கலைகளை காப்பவர்கள், அவர்களுக்கு உரிய கவுரவும், ஊதியமும் வழங்கப்பட வேண்டும்


(பிரச்சனை பண்ணாதிங்கப்பா)


படங்கள் அனைத்தும் செல்பேசிவழியாக எடுத்தவை 'பளிச்' சென்று இருக்காது.

ஜமாலன் சாருக்கு தனித்தகவல் : ஜமாலன், கரகாட்டக்கலைஞர்களைப் பற்றி வினவினேன், கரகாட்ட பெண் கலைஞர்கள் செரீனா, செரீபாவுக்கு உறவுக்காரவங்களாம், வயசானதால் பழைய ஆளுங்களெல்லாம் தற்போது ஆடுவது இல்லையாம். :(

8 ஏப்ரல், 2008

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது.

பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை வரை நுழைந்தது ? வரலாறுகளைப் பார்க்க வேண்டும், முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாரம்) இல்லை. முகலாயர்கள் ஆட்சியில், அவர்கள் பேசிய இரானிய பிரிவைச் சேர்ந்த உருதே, வடமொழிகளான சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகியவற்றுடன் கலந்து வட்டார மொழி என்ற அளவில் டெல்லி பகுதியில் வழங்கப்பட்டது, இஸ்லாமியர் ஆட்சி இந்தியாவில் விரிவு அடைந்த போது ஆதிக்கத்தின் வழி தெற்கே மைசூர், ஹைதராபாத் வரை இந்தி மொழி பரவலாயிற்று.

தாய்மொழியின் பால் அக்கறை இல்லாதவர்கள் ஈரானிய வட இந்திய மொழிகளை கலந்தே பேசி இந்தி என்ற ஒரு கலப்பு மொழியை உருவாக்கினார்கள். இந்தி - அதை செயற்கை மொழி என்றும் சொல்லலாம், காரணம் எந்த ஒரு இயற்கை மொழியும் தோன்றிய காலகட்டங்கள் பற்றிய ஆராய்ச்சி தவிர்த்து அவை இயற்கை மொழியாக (வெறும் சொல்லாடல் தான்) அறியப்படுவதற்கு அவற்றை எழுதுவதற்கான எழுத்துகளும் அவை பேசப்படும் காலம் முதலே இருக்க வேண்டும்.

இந்தி ஒரு மொழியாக உணரப்பட்ட போது அவற்றை எழுத்துவடிவில் எழுதும் சிக்கலில் எந்த எழுத்துருவை அதற்கு கொடுக்க வேண்டும் என்று முனைந்ததில், சமாஸ்கிரத கிரந்த எழுத்துக்களையே இந்தியை எழுதுவதற்கும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதுவும் உலக வழக்குதான். எழுத்தில்லாமல் 100க் கணக்கான மொழிகள் எழுத்துவடிவம் பெற்றது எப்படி என்றால் அவை அந்த பகுதியில் எழுத்துடன் புழங்கிவரும் மற்றொரு மொழியின் எழுத்துக்களை ஏற்றுக் கொண்டு அதன் வழியே எழுத்து மொழியாக மாறும். தெற்காசிய மொழிகளில் பாசா மலாய், பாசா இந்தோனேசியா போன்றவைகளுக்கு எழுத்து கிடையாது, அவை ஆங்கில் 26 எழுத்துக்களையே பயன்படுத்தி எழுதப்பட்டு வருகிறது. ஐரோப்பிய மொழி பிரிவுகளிலும் இதே நிலைதான். அவற்றில் எழுத்துக்களின் எண்ணிக்கையும் வடிவத்தில் சற்று மாறுபட்டு இருக்கும்.

பதியப்பட்டுள்ள இந்திய 3000 ஆண்டு வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தி, செயற்கையாக உருவானது அதாவது உருது மொழியின் ஒரு பிரிவு, அவற்றில் பழம்பெரும் காப்பியங்களோ, இதிகாச புராணங்களோ இல்லை, இந்தி இலக்கியம் அத்தனையும் 500 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டவையே, இந்தியில் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால் அது சமஸ்கிரதம் அல்லது உருது மொழியைச் சார்ந்தே அமைக்க முடியும். இந்தி சொம்மொழி கிடையாது.

இந்தியும் உருதுவும் சகோதர மொழிகள் என்பது பலருக்கு தெரியுமா ? உருது பேசுபவர்களுக்கு இந்தி புரியும். இந்தி பேசுபவர்களுக்கு உருதும் புரியும், 60 விழுக்காடு சொற்கள் வரை இரண்டிற்கும் பொதுவாக உள்ளவை. இந்திக்கும் உருதுக்கும் ஒரே பெரிய வேறுபாடு எழுத்து வடிவம் மட்டுமே, உருது அரபு எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, இந்தி சமஸ்கிரத எழுத்துக்களை பயன்படுத்துகிறது.

எந்த ஒரு பழம்பெருமையும், முன்னோர்வழி (பாரம்பரிய) இலக்கியமும் அற்ற ஒரு மொழியை தேசிய மொழி என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அனைவராலும் பேசப்படும் ஒரு மொழி தேசியமொழியாக வரவேண்டும், அதனால அனைவரும் பயன்பெற வேண்டும், அந்த மொழி தாக்கத்தால் மாநில மொழி சீர்கெடக் கூடாது என்றால் அதற்கு சரியான மொழி ஆங்கிலம் தவிர்த்து வேறொரு மொழி இந்தியாவில் இல்லை. 'இந்திய மொழிகளில் உள்ள பழமையான ஒரு மொழியை மட்டுமே, இந்தியாவின் பொது மொழியாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு பெருமை' என்றால் Sorry to Say அந்த தகுதி இந்திக்கு இல்லவே இல்லை. அதற்கான காரணம் மேற்கண்டது தான்.

இந்தியாவின் தேசிய மொழியாக ஆங்கிலம் இருக்கக் கூடாதா ? என்னைப் பொருத்து இருக்கலாம், அதற்கான பயனும் அளவிடப் பெரியது, அதைவிட மற்றொரு முதன்மைக் காரணம் இந்தி இந்தியாவில் நுழைந்தற்கும் ஆங்கிலம் நுழைந்தற்கும் இடையே உள்ள ஆண்டுகள் வேறுபாடு வெறும் 200 ஆண்டுகளே.

இந்தி வலியுறுத்தப்படுவதற்கு உண்மையிலேயே தேசிய வாதம், பொதுமொழி என்ற காரணங்கள் மட்டும் தானா ? இன்னொரு மறைமுக காரணமும் உண்டு, இந்தி மொழி ஆதிக்க அரசியலும் அதைச் சார்ந்ததே, இந்தி எழுத்துக்களைப் பார்க்கும் போது அது வடமொழி எழுத்துக்களைக் கொண்டிருப்பதால் (இறந்தவர்களின் நிழல்படத்தைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்வது போல) விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்க்காவே, வடமொழியின் வடிவமாகவே பார்த்து, வடமொழி தேவ பாசை என்று உயர்வு கற்பித்தவர்களே, இந்திக்கு தேசிய அடையாளம் கொடுக்க வேண்டும், இந்தி தேசிய மொழி என்றெல்லாம் பரப்புகிறார்கள், வெறொன்றும் பெரிய காரணம் இல்லை.

வடமொழியை இந்திவழி உயிர்கொடுத்து நடமாட வைக்க முடியும் என்று நினைப்பது வெறும் கற்பனையே, இந்தியைப் போல் வடமொழி பேசப்படும் மொழியாக இருந்ததே இல்லை, எழுதுவத்ற்கு பயன்பட்ட எழுத்து மொழி மட்டுமே, வடமொழி எந்த காலத்திலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பேசப்பட்ட மொழியாக அறியப்பட்ட வரலாறுகள் இல்லை. அதற்கு உயர்வு கற்பித்து ஒரு குழுவுக்குள் வழங்கி வந்ததாலேயே அதன் வளர்ச்சியும், பரவலும் முடங்கி, கோவில் கருவரை என்ற அளவில் சுறுங்கிவிட்டது.

கிட்டதட்ட மறைந்துவிட்ட மொழியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று நினைக்கும் வடமொழிப் பற்றாளர்களுக்கு இருக்கும் பதட்டம் / பொறுப்புணர்வு கூட வாழும் மொழியை பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இல்லை. மொழிக்கலப்பால் தமிழ் அழிந்துவிடுமா கற்பனை பண்ணாதீர்கள் என்கிறார்கள். மொழிக்கலப்பால் மட்டுமே மொழி அழிவதில்லை, புழக்கத்தில் இல்லாமல் போனாலும் கூட மறையும் என்பதற்கு 'நமது' தேவபாசையே சான்றாக இருக்கிறது.

மீண்டும் இடுகை தலைப்பிற்கு வருகிறேன். இந்தியும் இந்தியாவிற்குள் நுழைந்த மொழி, செயற்கை மொழி, எழுத்தில்லாமல் வடமொழி எழுத்துக்களை பயன்படுத்திவரும் மொழி, குறிப்பாக பழம்பெரும் இலக்கியம் இல்லாத மொழி. எந்த தகுதியை வைத்து இந்தியை தேசிய மொழி என்று சொல்ல முடியும் ? அப்படி சொல்ல முனைந்தால் ஆங்கிலத்தைத்தான் முதலில் அப்படி சொல்ல வேண்டும். ஆங்கிலத்தின் பயனும் உலக அளவில் அதன் வீச்சும் கற்றுக் கொண்டால் இந்தியர்களுக்கு உலக அளவில் செயல்படும் தகுதிகளும் பலன்களும் கிட்டும். சீனா நம்மிடம் போட்டியிட திணறுவதற்கு முதன்மை காரணமே சீனர்களுக்கு ஆங்கிலம் வராது அவர்கள் ஆங்கில காலனியாக இருந்தது இல்லை.

மற்றபடி இந்தி மொழி பரவலை தேசிய மொழி என்ற பெயரில் அனுமதித்தால் எப்போதும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று புலம்பலில் இருக்க வேண்டியதுதான். மொழிகள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தவே பரப்பப்படுகிறது, முகலாயர்கள் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியபோது அங்கெல்லம் இந்தியின் ஆதிக்கமே இருக்கிறது என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம், இது வட நாடு முழுவதும், தென்நாட்டில் சில மாநிலங்களிலும் ஆதிக்கதின்
வழியாக நுழைந்திருப்பது கண்கூடு.

ஆங்கிலம் ஆங்கில காலனி ஆதிக்கத்தால் ஏற்பட்ட திணிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றால், இந்தியும் முகலாய (ஈரானிய) ஆதிக்கத்தின் வழியான திணிப்பே. ஆண்டுகள் இடையே தான் வேறுபாடு. இந்தியர்களுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு இந்தியுடன் ஒப்பிடுகையில் அளவிட முடியாதது.

தமிழ் சிறந்த மொழிதானே அது ஏன் பரவவில்லை ?
தமிழர்கள் எங்கும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டதாகவோ அதற்கு கருவியாக(ஆயுதமாக) தமிழை பயன்படுத்தினார்கள் என்ற வரலாறு கிடையாது. சோழர்கள் கடாரம் போன்ற நாடுகளை வென்றதுடன் திரும்பிவிட்டார்கள் அங்கேயே தங்கிவிடவில்லை.ஆசிய நாடுகளில் பரவி இருக்கும் தமிழ் ? அதை தமிழகள் தவிர யாரும் பேசுவதும் இல்லை. மக்கள் பரவியதைத் தொடர்ந்து தாய் தமிழையும் பேசிவருகிறார்கள். என் மொழியை பேசுங்கள், உயர்வானது என்று தமிழன் எவரிடமும் வலிந்து தனது மொழியை திணித்தது கிடையாது.

உண்மையான தேச ஒற்றுமை, பொது மொழி வேண்டுமென்றால் ஆங்கிலமே அதற்கான தீர்வு.
ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயேயும் பொது மொழியாக ஆங்கிலம் தான் இருந்தது. ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் மூலம் தேச ஒற்றுமை என்ன உலக ஒற்றுமையே போற்ற முடியும்
:)

பின்குறிப்பு : இங்கே இந்தி மொழியை குறைத்து மதிப்பிட்டு, அதனை ஏளனம் செய்ய வில்லை. தம்மை ஏளனம் செய்யாத பிறமொழிகளை ஏளனம் செய்யும் தகுதி எவருக்கும் கிடையாது, இங்கே 'இந்தி' அதன் உருவாக்கம் தன்மை, பயன்பாடு, அதன் தாக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். இந்தி மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்