பின்பற்றுபவர்கள்

4 அக்டோபர், 2008

'காலம்' மாறிப்போச்சு !

எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் ! - காலம் பதிவும் தப்பவில்லை. புதிய வார்ப்பு உரு(ப்ளாக்கர் டெம்ப்ளேட்
) மாற்றி இருக்கிறேன்.

மாற்றத்திற்கான காரணம், பழைய டெம்ப்ளேட்டில் கட்டுரைக்கான இடம் அகலம் குறைவாக இருந்தது, பெரிய கட்டுரைகளை எழுதும் போது, நீளமான பக்கமாக ஆகிவிடுகிறது. எழுத்துருக்களை பெரிதாக்கினால் இன்னும் நீளமாகவே சென்றுவிடுகிறது.புதிய வடிவமைப்பு டவுன்லோட் செய்யப்பட்டது தான். சிறிது மாற்றம் செய்து இருக்கிறேன். தேவைப்படும் போது அவ்வப்போது செய்தித் துண்டுகளை (Widget) சேர்ப்பேன்.

ப்ளாக்கர் டெம்ப்ளேட் மாற்றும் முன் கவனத்தில் கொள்ள வைக்க வேண்டியவை

1. இருக்கும் டெம்ப்ளேட்டை ( Existing Original Template) முதலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். எதாவது கோளாறுகள் என்றால் உடனடியாக பழைய நிலைக்கு மாற்றிக் கொள்ள பயன்படும்

(Edit Template பகுதியில் Before editing your template, you may want to save a copy of it. Download Full Template)

2. Widget எனப்படும் செய்தி துண்டுகளை தனித்தனியாக ஒருங்குறியில் (Unicode Text Format, Under Notepad select encoding option as 'Unicode) வெட்ஜெட் சேமிக்காவிட்டால் புதிய டெம்ப்ளேட் மாற்றும் போது முன்பு இருப்பவை அழிந்துவிடும், குறிப்பகாக Counter JavaScript காணாமல் போனால் முன்பிருந்த எண்ணிக்கையில் தொடரமுடியாமல் போகும். அதை தவிர்க்க வெட்ஜெட்டுகளை சேமிப்பது தேவை

3. Graphics நிறைய உள்ள டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தாதீர்கள், Page Load ஆக அவை நேரம் எடுத்துக் கொள்ளும்

4. தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் கருவிப் பட்டையை மீண்டும் பொருத்துங்கள்.

32 கருத்துகள்:

பரிசல்காரன் சொன்னது…

காலம் மாறலாம்.. இனி வரும் காதல் மாறுமா?

☼ வெயிலான் சொன்னது…

புதிய வார்ப்புரு நன்றாக இருக்கிறது கோவியாரே!

Thamiz Priyan சொன்னது…

சிம்பிளா அழகா இருக்கு.. :)
நிறைய விட்ஜெட் மற்றும் படங்களைப் போட்டு வருபவர்கள் மீண்டும் வர யோசிக்கும் அளவுக்கு செய்து விடாதீர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

Subash சொன்னது…

நல்ல தகவல்.
அப்படியே வைஜெட்ட எப்படி பேக்கப் எடுப்பது?

//காலம் மாறலாம்.. இனி வரும் காதல் மாறுமா?//

இதுக்கு என்ன அர்த்தம்????
ஹிஹி

சும்மா அதிருதுல சொன்னது…

எழுத்து கலரை கருப்பாக்கலாம்

இப்ப உள்ள கலர் மசம்சனு கண்ணை என்னவோ செய்கிறது..:(

சும்மா அதிருதுல சொன்னது…

//காலம் மாறலாம்.. இனி வரும் காதல் மாறுமா?//

மாற்றம் ஒன்றே உலகில் மாறா...


காதல் கவுத்தடிச்சி படுத்துக்கும்.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

பரிசல்,

வெயிலான்

தமிழ்பிரியன்

சுபாஷ்

மற்றும் சும்மா அதுருதுல ஆகியோருக்கு நன்றி !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மாற்றம் மட்டுமே மாறாதது அல்ல...காலமும் எவ்வடிவெடுத்தாலும் மாறாதது தான்.சரிதானே கோவி

RATHNESH சொன்னது…

புதுவீடு அழகா இருக்கு. முழுதா முடிச்சிட்டு குடி போயிருக்கீங்க, பாராட்டுக்கள்.

ஹோமம் ஏதும் செய்யலியா?

கையேடு சொன்னது…

மிக அருமை.. மிளிர்கிறது.. "கால"மாற்றம்.

ஆனால், மணல் கடிகாரம் மட்டும் காலத்தை எதிர்திசையில் நகர்த்துது.. :) தெரிந்தே செய்த புதுமையோ..:)

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
மாற்றம் மட்டுமே மாறாதது அல்ல...காலமும் எவ்வடிவெடுத்தாலும் மாறாதது தான்.சரிதானே கோவி
//

மிகச் சரி, 'காலம்' மாறாது !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
புதுவீடு அழகா இருக்கு. முழுதா முடிச்சிட்டு குடி போயிருக்கீங்க, பாராட்டுக்கள்.

ஹோமம் ஏதும் செய்யலியா?
//

ரத்னேஷ் அண்ணா,

பாராட்டுக்கு நன்றி,

செண்டிமெண்ட்ஸ் டெம்ப்ளேட் மாற்றும் போது கொஞ்சம் தடுத்தது, 'அடே மண்டு' ன்னு தலையில் தட்டிக் கொண்டு மாற்றிவிட்டேன். பாராட்டுக்கு நன்றி !

ஹோமம் ?
ஹோமம் செய்ய டிபிசிடி ஐயர், ஜெகதீசன் ஐயர், லக்கி ஐயங்கார் மற்றும் பலர் இருக்கின்றனர்.

ரத்னேஷ் ஐயர் செய்வதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். பெரும் பலனே இருக்கும் ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
மிக அருமை.. மிளிர்கிறது.. "கால"மாற்றம்.//

கையேடு பாராட்டு உற்சாகம் கொடுக்கிறது.

//ஆனால், மணல் கடிகாரம் மட்டும் காலத்தை எதிர்திசையில் நகர்த்துது.. :) தெரிந்தே செய்த புதுமையோ..:)

7:42 PM, October 04, 2008
//

நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன். காலம் நமக்கு தெரிந்து முன்னோக்கியே நகர்கிறது, எனவே மாற்றி இருக்கிறேன். நன்றி !

நசரேயன் சொன்னது…

காலம் புகுந்த புது வீட்டிலே இருந்து தொடர்ந்து சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்/வணங்குகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
காலம் புகுந்த புது வீட்டிலே இருந்து தொடர்ந்து சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்/வணங்குகிறேன்
//
நாசரேயன், மிக்க நன்றி !
வாழ்த்து போதும் !

Sanjai Gandhi சொன்னது…

நல்ல மாற்றம்.. வரவேற்கிறோம்.. :)

வெண்பூ சொன்னது…

புது டெம்ப்ளேட் அருமை கோவி.. நன்றாக இருக்கிறது.

SurveySan சொன்னது…

காலத்துக்கு ஏத்த மாதிரி 'காலம்' மாறியது போல், உங்க 'எண்ணமும்' மாறினால், மகிழ்ச்சி.

புது கூலிங்கிளாஸ், வாங்கி அனுப்புகிறேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//காலத்துக்கு ஏத்த மாதிரி 'காலம்' மாறியது போல், உங்க 'எண்ணமும்' மாறினால், மகிழ்ச்சி.
//

சர்வேசன், பாராட்டுக்கு நன்றி, உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும், சற்று குறைந்த அளவேனும் நல்ல எண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

சஞ்ஜெய் மற்றும் வெண்பூ மிக்க நன்றி !

RATHNESH சொன்னது…

//ரத்னேஷ் ஐயர் //?

நான் அய்யன் அபிமானி மட்டுமே!

இன்னும் உங்களைச் சீண்டுவதென்றால், இந்து மதத்தில் ஆண்டவனுக்கு அடுத்த படியாக அதிக அளவுக்கு உரிமையுடன் பிரச்னை இன்றிக் கிண்டல் செய்யப்படும் வார்த்தை ஆகி விட்டதல்லவா இந்த 'ஐயர்' என்கிற வார்த்தையும்?

குடுகுடுப்பை சொன்னது…

காலம் மாறலாம் கோலம் மாறலாம் ஆனால் கருத்து இப்போதைக்கு மாறாதென்று நம்புவோம்.


வாழ்த்துக்கள் கோவியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
//ரத்னேஷ் ஐயர் //?

நான் அய்யன் அபிமானி மட்டுமே!

இன்னும் உங்களைச் சீண்டுவதென்றால், இந்து மதத்தில் ஆண்டவனுக்கு அடுத்த படியாக அதிக அளவுக்கு உரிமையுடன் பிரச்னை இன்றிக் கிண்டல் செய்யப்படும் வார்த்தை ஆகி விட்டதல்லவா இந்த 'ஐயர்' என்கிற வார்த்தையும்?

3:39 AM, October 05, 2008
//

ரத்னேஷ் அண்ணா,

ஐயர் என்பது சாதி பெயர் கிடையாது, இறைவன் என்ற சொல் எப்படி மதங்களுக்கு பொதுவானதோ, ஐயர் என்பதும் சாதிகளுக்குப் பொதுவானது தான். பார்பனர்கள் மட்டும் தான் அதை பயன்படுத்துகிறார்கள். தமிழ் ஆசிரியர்களுக்கு சங்க காலத்தில் ஐயர் பட்டம் உண்டு. அவர்கள் பூணூலும் அணிந்திருந்தனர். காலப் போக்கில் பார்பனர்களின் தனித்த அடையாளமாக மட்டுமே சுறுங்கிவிட்டது. 'ஐயர்' என்பதும் 'அந்தணர்' என்பதும் தூய தமிழ் சொல். பார்பனர்களுக்கு சாதிப் பெயர் எல்லாமே வடமொழி பெயர்கள் தான். உயர்வுக்காக சேர்த்துக் கொண்டது தான் ஐயர் பட்டம். இது பற்றி "யார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் ! " என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். பார்பனர்களில் ஒருவர் கூட அதை மறுக்கவில்லை. 'அந்தணர் என்பவர் அறவோர்' என்று வள்ளுவர் சொன்னது பார்பனர்களை என்று பலரைப் போல் நீங்களும் நினைக்கிறீர்கள்.

திராவிட வரலாறுகளைத் தோண்டி எடுத்த கால்டு வெல் பாதிரியாருக்கு தமிழர்கள் கால்டு வெல் ஐயர் என்ற பட்டம் தான் சூட்டி மகிழ்ந்தார்கள். தமிழார்வர்கள் அனைவருமே 'ஐயர்' தான்.

நான் கிண்டல் அடிக்கவில்லை, சீரியஸ் அகவே எழுதினேன்.

MSATHIA சொன்னது…

வார்ப்புரு நல்லா இருக்கு

MyFriend சொன்னது…

இது நல்லா இருக்கு :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

காலம் செய்த கோலமைய்யா!
கடவுள் செய்த குத்தமைய்யா?
Template நீட்டும் போது வாஸ்து சாஸ்திரம்
பார்த்தீர்களா என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//Sathia 10:02 AM, October 05, 2008
வார்ப்புரு நல்லா இருக்கு
//

சதியா,

பாராட்டுக்கு நன்றி !

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொன்னது…

கோவி கண்ணன்,

முதலில், உங்கள் புதிய டெம்ப்லேட் மிக அழகாக இருக்கிறது.

இரண்டாவதாக இந்த ஐயர் விஷயம். இது சாதிப் பெயர் இல்லை என்று சொல்வது வெறும் வார்த்தை விளையாட்டு போல் தான் தெரிகிறது.

//உயர்சாதிப் பெயர்கள் என சொல்லிக் கொள்ளப்பட்டு வரும் ஐயர், தேவர், பிள்ளைமார் எல்லாம் உயர்வுக்காக சொல்லப்படும் வெறும் அடைமொழி பெயர்களே, இவற்றை யாருக்கு வேண்டுமானாலும் அடைமொழியாக கொடுக்க முடியும். இந்த பெயர்கள் எந்த சாதிக்கும் உரிமையான, பாத்தியப்பட்ட பெயர்களோ, பரம்பரை சொத்தோ அல்ல.
//

அப்படி பார்த்தால் எந்த பெயர் தான் யாருக்கு சொந்தம் சொல்லுங்கள்? இந்த உலகத்தில் எதுவுமே யாருக்கும் சொந்தமானதோ பாத்தியப்பட்டதோ இல்லை.

எத்தனையோ வார்த்தைகளுக்கு அர்த்தம் காலப்போக்கில் மாறி இருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் அந்த வார்த்தைக்கு அர்த்தமாக மக்கள் எதை புரிந்து கொள்வார்கள் என்பதை வைத்தே அதன் பிரயோகம் அமைய வேண்டும் என்பது என் கருத்து.

காரணப்பெயராக இருக்கும் ஒன்றை , அதே காரணம் வேறொன்றிலும் இருக்கக் கண்டு , அந்த வேறொன்றுக்கும் அதே பெயர் வைக்க தலைப்படுவது குழப்பத்தை தரும்.(இந்த வாக்கியமே குழப்பத்தை தருமோ? :) ) (இது காரணப் பெயர் இல்லாத ஒன்றுக்கு கூட பொருந்தும்.)

அத்தி மரங்கள் அணி வகுத்து நின்றதால் அந்த ஊருக்கு ஆரணி என்று பெயர் வைத்தார்கள். இது போல அத்தி மரங்கள் நிறைந்த ஊர்கள் நிறைய இருக்கும். அதற்காக எல்லாவற்றையும் ஆரணி என்று பெயர் வைத்தால் ஒரு ஊருக்கு போவதற்கு பதிலாக வேறொன்றுக்கு போய் விடுவார்கள்.

ரத்னேஷின் பின்னூட்டத்தில் உள்ள விஷயம் மறுக்க முடியாத உண்மை.

சாதி பெயர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தி அதை நீக்க தலைப்பட வேண்டும் என்பது நீங்கள் சுட்டிய கட்டுரையின் நோக்கமாக இருப்பின், அது மிகவும் பாராட்டுக்குரியதே. ஆனால் அந்த கட்டுரையின் சில பின்னூட்டங்களும் அதற்கான பின்னூட்ட பதில்களுமே அதுவே ஒரு கேலிப் பேச்சிற்கு சமாதானமாக அமைந்து விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

ரத்னேஷுக்கு நீங்கள் அளித்த பதிலும் அந்த வகையில் தான் சென்றமைவதாக தோன்றுகிறது. இது வெறும் தோற்றமா இல்லை நோக்கமா இல்லை தோற்ற மயக்கமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//எத்தனையோ வார்த்தைகளுக்கு அர்த்தம் காலப்போக்கில் மாறி இருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் அந்த வார்த்தைக்கு அர்த்தமாக மக்கள் எதை புரிந்து கொள்வார்கள் என்பதை வைத்தே அதன் பிரயோகம் அமைய வேண்டும் என்பது என் கருத்து.//


வந்தியத்தேவன்,

அதென்னமோ சரிதான் அதனால் தான் சாதிப் பெயரைச் சொன்னாலே, பலருக்கு தனி (அவ)மரியாதையே கிடைக்கிறது.

நான் 'ஐயர்' என்று நண்பர்களைக் குறிப்பிட்டதை நீங்கள், கிண்டலாகவோ அல்லது சீரியஸ் ஆகவோ, எப்படிவேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...
கோவி கண்ணன்,

முதலில், உங்கள் புதிய டெம்ப்லேட் மிக அழகாக இருக்கிறது.

இரண்டாவதாக இந்த ஐயர் விஷயம். இது சாதிப் பெயர் இல்லை என்று சொல்வது வெறும் வார்த்தை விளையாட்டு போல் தான் தெரிகிறது.
//

கால்டுவெல் ஐயர்

கால்டுவெல் பார்பனர் கிடையாது, அவர் ஒரு வெள்ளைக்கார பாதிரியார், தமிழுக்கும் வடமொழிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று முதன்முறையாக கண்டறிந்தவர்.

அவரை ஐயர் என்று பட்டப்பெயருடன் தான் அழைக்கிறார்கள்

பெயரில்லா சொன்னது…

thamilbest இல் இணைத்துள்ளேன். நன்றி

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொன்னது…

பார்பனரை ஐயர் என்ற காலமும் போச்சே
வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே

என்று பாரதியார் பாடி இருக்கிறார். அது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அது ஒன்றும் பெருமையாக சொல்லப் படுவதில்லை இன்று (கால்டுவெல் ஐயர் காலம் போலல்லாமல்). இன்னும் சொல்லப் போனால் ஒரு இனத்தாரை தாக்கி பேசவோ அல்லது கேலி செய்யவோ தான் பயன்படுகிறது. இதை பார்க்க நாம் எங்கயும் போக வேண்டாம். தமிழ்மணம் போதாதா? ஒன்று கவனித்தீர்களா. அந்த ஐயர் என்ற வார்த்தையை பயன்படுத்தும் பொழுதும் அவர்களின் 'பாஷையையும்' சேர்த்து தான் எடுக்க முடிகிறது. "ஐயர் வாள், ஆத்துல மாமி சௌக்கியமா ?" என்பது போல். அதுவும், ஹோமம் என்று சொன்ன உடன் தான் அதை பயன்படுத்தி உள்ளீர்கள். ஆக, அந்த வார்த்தையுடன் தற்போது அதனால் குறிப்பிடப்படும் மக்கள், செய்யும் தொழில், பேசும் மொழி எல்லாவற்றையும் இணைத்து தான் பார்க்க முடியும் என்கிற போது அதை "இப்பொழுது" சாதிப் பெயராகத் தான் பாக்க முடியும் இல்லையா? அவ்வாறு அது கேலி இல்லை என்றால் நீங்கள் அதை எல்லா சமயமும் பயன்படுத்தி வர வேண்டும் கண்ணன் ஐயர் அவர்களே! :) (ஹோமம், பூணூல், நாமம் என்னும்போது மட்டும் அல்லாமல்) அப்பொழுது அது யாருக்கும் கேலியாகத் தெரியாது! ஆக இந்த "வள வளா" பின்னூட்டத்தின் சாரம், ஆண்டவனுக்கு அடுத்தபடியாக அதிகமாக "பிரச்சனையின்றி" (கவனிக்க) உரிமையுடன் கிண்டலடிக்கப்படும் வார்த்தை "ஐயர்" என்பதே !!( அதை தான் தாங்களும் செய்திருக்கிறீர்கள்
என்பதும்) . நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்