பின்பற்றுபவர்கள்

13 அக்டோபர், 2008

வீட்டில் விஷேசம் எதும் 'உண்டா' ?

தலைப்பைத் தொட்டுத்தான் இந்த பதிவு, திருமணம் ஆகி அடுத்த மாதத்தில் மருமக(ள்) வாந்தி எடுக்கவில்லை என்றால் இப்பொழுதெல்லாம் உடனே மலடி பட்டம் கட்டுவதில்லை என்றாலும், 2 - 3 மாதம் சென்று 'என்ன ஆச்சு ...?' என்று கேட்பது நடப்பில் தான் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது கடமை என்று நச்சரித்து திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் (பயலும் வேண்டாம்... வேண்டாம் என்று ஒப்புக்குச் சொல்வதும் உண்டு) அதன் பிறகு, எத்தினி நாளைக்குத்தான் சுவற்றை வெறித்துப் பார்பது, எங்களுக்கும் பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுக்கக் கூடாதா ? என்று கேட்க ஆரம்பித்து அனத்த ஆரம்பிப்பார்கள், முக்கால் வாசி பெற்றோர்கள் 'பேரனை'ப் பெற்றுக் கொடு என்றே கேட்பார்கள். [எனக்கு விளங்காதது ஒன்றே ஒன்று தான், மகன் / பேரன் வேண்டும் என்று விரும்புவர்களுக்கெல்லாம் அவனுக்கு மனைவியாக ஒரு பெண்ணைத்தானே தேர்ந்தெடுப்பார்கள், எவனாவது இளிச்ச வாயன் நிச்சயம் மகனுக்கான பெண்ணை பெற்றுக் கொள்வான் என்று நினைக்கிறார்களோ? :) ..... ]

இப்போதெல்லாம் திருமண வயது, பெண்களுக்கு 25க்கு மேல், ஆண்களுக்கு 30க்கும் மேல் என்றாகிவிட்டது. திருமணத்தின் போது மணமகன்களில் பலர் எல்லாவற்றையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். சூழல்காரணமாக திருமணம் செய்துகொள்ளும் இந்த வயதினர் கூட தங்களுக்குள் புரிந்துணர்வையும், இல்லத்தைநடத்தும் பக்குவத்தையும் பெற ஓர் ஆண்டாவது ஆகும். பெரும்பாலும் இந்தவயதினர் வயதின் காரணமாக உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வதுண்டு. இதில் குறை சொல்லவோ, நிறை சொல்லவோ ஒன்றும் இல்லை, முழு இல்லவாழ்க்கை என்பது குழந்தை(கள்) இன்றியமையா(த)து.

ஆனால் ஓரளவு இளம் வயதில் மணம் முடிக்கும் 21 - 29 வயதுக் காரர்களை யெல்லாம் உடனேயே குழந்தைகள் பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது அவ்வளவு சரியான செயலே இல்லை, எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவது தான் நல்லது. முதலில் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவேண்டும், அவர்கள் இருவருக்குமான மகிழ்ச்சியையும், நெருக்கத்தையும் வளர்த்துக் கொண்டு இரு ஆண்டுகளாவது வாழ்ந்தால் தான் அது அவர்கள் இருவருக்கான தனிப்பட்ட வாழ்க்கையாகவும் அது இருக்கும், குழந்தை பிறந்துவிட்டாலே நமது இந்தியர்கள் தியாகிகள் ஆவது இயல்புதான் அது தவறாகவும் தெரியவில்லை [இப்பெல்லாம் நிறைய டிஸ்கி போடாமல் எழுதவே முடியல :)], ஆனால் அதற்கு முன்பு இருவருக்குமான வாழ்க்கையை கொஞ்சகாலமாவது வாழ்ந்து இன்புற்று இருக்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கான தனிமை, அவர்களுடைய வாரிசுகளுக்கு திருமணம் முடித்த பிறகுதான் கிடைக்கும்.

என்னைப் பொறுத்த அளவில் 30 வயதைக் கடந்தவர்கள் இரண்டு ஆண்டுக்குள்ளும், அதற்கும் கீழே உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்தும் அவர்களின் முழுவிருப்பத்துடன் யாருடைய வற்புறுத்தலுமின்றி குழந்தை பெற்றுக் கொள்வதே சரி என்று நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் பெற்றோர்களுடன் சேர்ந்து நண்பர்களும், வீட்டில விஷேசம் 'உண்டா ?' என்று டார்சர் செய்கிறார்கள், என்று அண்மையில் மணம் முடித்த ஒரு நண்பர் புலம்பினார்.

நண்பரின் புலம்பல் ஞாயமானதா ? இளம் வயது இணையர்கள் (தம்பதிகள்) குழந்தை பெற்றுக் கொள்வதில் விரைவு(அவசரம்) காட்டச் சொல்லி பெற்றோர்களோ, நண்பர்களோ தலையிடுவது ஞாயமா ?

41 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

உங்க கருத்துகுத்து பதிவிலேயே இதுதான் எனக்கு பிடிச்சபதிவு.

கல்யாணம் ஆகி ஒருமாதம் மட்டும் கூட இருந்துவிட்டு,மனைவியை அங்கு விட்டுவிட்டு வந்து விசா எடுத்து கூட தங்கி ஒருமாதம் கூட ஆகவில்லை, என்னா விசேசம் ஏதும் இல்லையா என்று தெரிந்தவர்கள் தொந்தரவு.

என்ன விசேசம் என்று கேட்பவர்களிடம், பக்கத்துவீட்டு பொண்ணுக்கு மஞ்சதண்ணி ஊத்துறாங்க என்று சொல்கிறேன்.அப்படியும் புரிஞ்சுகாம விளையாடதய்யா சொல்லுய்யா என்று கேட்கும் ஆட்களை என்ன சொல்வது :(((

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
உங்க கருத்துகுத்து பதிவிலேயே இதுதான் எனக்கு பிடிச்சபதிவு.
//

யோவ் உன்னைய யாரு முதல் பின்னூட்டம் போடச் சொன்னது ?

புலம்பியது நீ தான் என்று யாரும் நினச்சிடப் போறாங்க.

:)

பதிவர் பெருமக்களே, புலம்பியது குசும்பன் என்கிற சரவண வேலு இல்லை, இல்லவே இல்லை !

துளசி கோபால் சொன்னது…

இந்தக் காலத்துலேயே இப்படின்னா ஒரு முப்பத்தியஞ்சு வருசம் முன்னாலே நிலமை எப்படி இருந்துருக்குமுன்னு கற்பனை செஞ்சாலும் உங்களுக்கெல்லாம் புரியாது.

குழந்தைக்கும் பாவத்துக்கும் பெரிய சிக்கலான முடிச்சைப் போட்டுவச்சுருந்தாங்க. இதுலே பெண்கள் அதாங்க அயல்வீட்டுப்பெண்கள் உட்பட மகளிர் சமுதாயம்தான் 'பாவிகளைக் கண்டுபிடிச்சு'ச் சிலுவையில் அறைஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

நானும் ஒரு 9 வருசம் சிலுவை சுமந்தேன்(-:

பரிசல்காரன் சொன்னது…

சரியாச் சொன்னேள் போங்கோ!

மணிகண்டன் சொன்னது…

************ என்னைப் பொருத்த அளவில் 30 வயதைக் கடந்தவர்கள் இரண்டு ஆண்டுக்குள்ளும், அதற்கும் கீழே உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்தும் அவர்களின் முழுவிருப்பத்துடன் யாருடைய வற்புறுத்தலுமின்றி குழந்தை பெற்றுக் கொள்வதே சரி என்று நினைக்கிறேன் ***************

ஏன் இப்படி சொல்றீங்க ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
************ என்னைப் பொருத்த அளவில் 30 வயதைக் கடந்தவர்கள் இரண்டு ஆண்டுக்குள்ளும், அதற்கும் கீழே உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்தும் அவர்களின் முழுவிருப்பத்துடன் யாருடைய வற்புறுத்தலுமின்றி குழந்தை பெற்றுக் கொள்வதே சரி என்று நினைக்கிறேன் ***************

ஏன் இப்படி சொல்றீங்க ?
//

குறிப்பாக பெண்கள் 30 வயதைக் கடந்து குழந்தை பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் பருவ வயதை எட்டும் முன்பே பெற்றோர்கள் 50 ஐ கடந்துவிடுவார்கள். பொருளாதாரம் மற்றும் இன்ன பிறவெல்லாம் பிரச்சனைக்குரியதாகிவிடும்.

விஜய் ஆனந்த் சொன்னது…

ஹ்ம்ம்ம்...

என்னத்த சொல்ல...

எப்படி இருந்த நான்....இப்படி ஆயிட்டேன்...

நையாண்டி நைனா சொன்னது…

அதனாலே நானு புள்ளை குட்டி பெத்ததுக்கு பின்னாலே...கண்ணாலம் கட்டிக்கலாம்னு கீரேன்.....

நாமக்கல் சிபி சொன்னது…

/குழந்தைக்கும் பாவத்துக்கும் பெரிய சிக்கலான முடிச்சைப் போட்டுவச்சுருந்தாங்க. இதுலே பெண்கள் அதாங்க அயல்வீட்டுப்பெண்கள் உட்பட மகளிர் சமுதாயம்தான் 'பாவிகளைக் கண்டுபிடிச்சு'ச் சிலுவையில் அறைஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

நானும் ஒரு 9 வருசம் சிலுவை சுமந்தேன்(-://

:((

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அச்சச்சோ நான் சாதரணமாவே ..அந்த பக்கம் என்ன செய்தின்னு கேட்பதற்கு என்ன விசேசம்ன்னு கேட்பேனே.. :)

Bharath சொன்னது…

தலைவா நீங்க சொல்லுவது ஒரு 7-8 வருஷத்துக்கு முந்தய நிலமை.. இப்பவெல்லாம் வாழ்க்கையில் சீக்கிரம் செட்டில் ஆகிவிடுவதால் ஆண்கள் 25-27 வயதுக்குள்ளும், பெண்கள் 23-25 க்குள்ளும் திருமணங்கள் நடந்துவிடுகிறது.. 30 வயது ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை..

Unknown சொன்னது…

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பார்கள். நீ என்னதான் ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகியை திருமணம் செய்திருந்தாலும், ஒரு வருடத்துக்குப் பிறகு, உன் முகத்தையே அவள் பார்ப்பதும், அவள் முகத்தையே நீ பார்ப்பதும் வாழ்க்ககையில் அலுத்து விடும். அதனால்தான் அதன் பின் வாழ்க்கையில் சிறிய சிறிய பிணக்குகள் தோன்றும். அது சில சமயம் வளரும் சில சமயம் தேயும்.

இந்தக் காரணத்தினால்தான் பெரியவர்கள் முதல் குழந்தைக்கு அவசரப் படுகிறார்கள். முதல் குழந்தை பெற்று விட்டால் அந்தக் குழந்தையிடம் செலுத்தும் அல்லது பெரும் அன்பின் மூலம் அவர்களுக்குள் அன்பு மென்மேலும் பெருகும் வளரும். அதன் மூலம் குடும்ப பந்தங்களும் பலப்படும்.

குசும்பன் புரிந்ததா?
ஜிகே ஒப்ப முடிகிறதா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ரொம்ப தள்ளிப் போடக் கூடாது சாமியோவ்.
எங்க ஊர்ல சொல்லுவாங்க.
கல்யாணம் பண்ணுன முகூர்த்தத்தோட நல்ல சேதியும் காதுல விழுவனும்.
தலைச்சன் ஆம்புள பொறக்கணும், அப்படின்னு சொல்லுவாங்க.

முரளிகண்ணன் சொன்னது…

asaththal post

வெண்பூ சொன்னது…

நல்ல பதிவு கோவி.. எல்லோரும் இதை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருப்பதில்லை என்பது உண்மை. ஆனால் நானே கல்யாணம் ஆனவர்களை கண்டதும் அடுத்த கேள்வி "குழந்தை?" என்பதுதான்.. மாற்றிக்கொள்ள வேண்டும்.. :(

நாமக்கல் சிபி சொன்னது…

//அச்சச்சோ நான் சாதரணமாவே ..அந்த பக்கம் என்ன செய்தின்னு கேட்பதற்கு என்ன விசேசம்ன்னு கேட்பேனே.. :)//

அக்கா!
என்ன விசேஷம்னு கேக்குறதுக்கும் விசேஷம் உண்டான்னு கேக்குறதுக்கும் வித்தியாசம் உண்டு! :)

ஜோ/Joe சொன்னது…

நல்ல பதிவு .நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.

ambi சொன்னது…

கோவி அண்ணா, அருமையா எழுதி இருக்கீங்க.

அண்டை அயலாரின் டார்சர் ரொம்ப கடுப்பான விடயம். அதுவும் சில இடங்களில் கம்பேரிசன் எல்லாம் வேற நடக்கும். :(


என்னோட சில சொந்த கருத்துக்கள்:

1) ஒரு 25 வருசங்களுக்கு முன்னாடி எல்லாம் குழந்தை வளர்ப்பு ரொம்ப எளிதா இருந்தது, காரணம் தங்கஸ் வேலைக்கு செல்வது அரிதான விடயம். மேலும் தாத்தா, பாட்டி பாத்துகுவாங்க.
முணுக்குனா சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் கிடையாது. எல்லாம் பாட்டி கை வைத்யம் தான்.

ஆனா இப்ப, அதுவும் வெளி நாட்டுலனா ஏன்னு கேக்க ஒரு ஆளு உண்டா..?

இப்பொதெல்லாம் பாட்டிக்கே அப்போலவுல தான் வைத்யம் பாக்க வேண்டி இருக்கு. :))

அதனால பாட்டி தாத்தாக்கள் நல்லா ஆரோக்யமா இருக்கும் போதே பேத்திகளை(பேரன்னு சொல்லலை பாருங்க நான்)பெத்துக்கறது நல்லது.

2) விக்கற விலைவாசில இன்னும் 2 வருஷம், 3 வருஷம் கழிச்சு பெத்துகிட்டா, குழந்தை பராமரிப்பு என்பது பட்ஜட்ல துண்டு இல்ல, வேட்டியே விழற விஷயமாகி விட வாய்ப்புள்ளது.

3) இருக்கற சுற்றுபுற சூழல் மாசுல இம்பொடன்ஸி (தமிழ்படுத்த சங்கடமா இருக்கு, அதான்) ரேட் அதிகமாயிட்டே போகுது. லேப்டாப் சூடு கூட காரணமாமே!

3 வருசம் கழிச்சு, அய்யோ போச்சே! அம்மா போச்சே!னு கத்தறதை விட இப்பவே ஆக வேண்டியதை பாக்கலாம் இல்ல.

டாக்டர் புருனோ, இங்க கொஞ்சம் வாங்கப்பா! :))

4) சமூக பொருளாதர காரணிகளால வீடு வாங்கனும், கார் வாங்கனும்!னு தள்ளி போட்டா அலை ஓய்ஞ்சு கடல்ல குளிச்ச மாதிரி தான்.


5) நாம ரிட்டயர் ஆகறப்போ நம்ம பெண்கள்(பாருங்க, பிள்ளைகள்னு நான் சொல்லலை) பொருளாதார சுதந்திரம் அடைந்து இருக்கனும்.

எனவே குசும்பா, இந்த பதிவுக்கு எதிர்வினை பதிவு போடறத விட்டுட்டு, எதிர்வினை ஆற்று. :))

எல்லாம் சரி, கோவி அண்ணா, வீட்ல ஏதும், மறுபடி விசேசம் வருதுங்களா? :)))

ambi சொன்னது…

யோவ் பரிசல், என்ன விட நீர் சீனியர், வளரும் தலைமுறைக்கு நாலு நல்லதை சொல்லுவீர்ன்னு பாத்தா அடக்கி வாசிக்கறத பாரு! :)))

நவநீதன் சொன்னது…

இந்த விசயத்துல அனுபவம் கொஞ்சம் கம்மி தான்.
நாங்கல்லாம் இன்னும் சந்தோசமான பேச்சிலர்.

அனால் கல்யாணமனவர்களிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்கும் போது வெட்கப் பட்டுக்கொண்டே சிரிப்பு சிரித்து மழுப்புவார்கள். அதை பார்க்கும் போது சிலர், இந்த கேள்வி கேட்கப் படுவதை விரும்புவர் போலிருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் 3:58 PM, October 13, 2008
இந்தக் காலத்துலேயே இப்படின்னா ஒரு முப்பத்தியஞ்சு வருசம் முன்னாலே நிலமை எப்படி இருந்துருக்குமுன்னு கற்பனை செஞ்சாலும் உங்களுக்கெல்லாம் புரியாது.

குழந்தைக்கும் பாவத்துக்கும் பெரிய சிக்கலான முடிச்சைப் போட்டுவச்சுருந்தாங்க. இதுலே பெண்கள் அதாங்க அயல்வீட்டுப்பெண்கள் உட்பட மகளிர் சமுதாயம்தான் 'பாவிகளைக் கண்டுபிடிச்சு'ச் சிலுவையில் அறைஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

நானும் ஒரு 9 வருசம் சிலுவை சுமந்தேன்(-://

துளசி அம்மா,

ஒரு ஆண்டு குழந்தை பிறப்பது இயற்கையாகவே தள்ளிப் போனாலே பலரும் பலவிதமாக பேசுவார்கள் 9 ஆண்டுகள் நிங்கள் எவ்வளவு ஏச்சுக்களைத் தாங்கி இருப்பீர்கள் என்று நினைக்க முடிகிறது. குழந்தைக்கும் பாவத்துக்கும் மட்டுமா முடிச்சுப் போடுறாங்க, ஒரு வீட்டில் அஞ்சலி பாப்பா பிறந்துவிட்டால், காலமெல்லாம் அவர்களின் பெற்றோர்களையெல்லாம் எதோ பாவம் செய்துவிட்டு பிறவி எடுத்தவர்களைப் போல் அவர்கள் காதுபடவே பேசுவார்கள். அது பிள்ளை பெறாமையைவிடக் கொடுமையானது. :(

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் 4:00 PM, October 13, 2008
சரியாச் சொன்னேள் போங்கோ!//

பரிசல்,
உங்களுக்கு ஒன்னும் சொல்லவில்லை :) உங்களுக்கு எல்லாமும் ஆச்சு !

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் 4:20 PM, October 13, 2008
ஹ்ம்ம்ம்...

என்னத்த சொல்ல...

எப்படி இருந்த நான்....இப்படி ஆயிட்டேன்...//

நீ என்ன ஆயிட்டே ? இப்பதான் பொறுப்பு வந்தது போல் இருக்குன்னு என்னிடம் சொன்னதெல்லாம் ?
:) போட்டுக் கொடுத்துடுவோம்ல...

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா 4:45 PM, October 13, 2008
அதனாலே நானு புள்ளை குட்டி பெத்ததுக்கு பின்னாலே...கண்ணாலம் கட்டிக்கலாம்னு கீரேன்.....//

செய்விங்க செய்விங்க....பொண்ணுக்கு அண்ணன் / தம்பி இல்லைன்னா செய்விங்க, இருந்தால் முதுகில் டின் கட்டிடுவாங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துலெட்சுமி-கயல்விழி 6:17 PM, October 13, 2008
அச்சச்சோ நான் சாதரணமாவே ..அந்த பக்கம் என்ன செய்தின்னு கேட்பதற்கு என்ன விசேசம்ன்னு கேட்பேனே.. :)//

முத்துலெட்சுமி-கயல்விழி,
புதிதாக திருமணம் ஆனவர்களிடம் தான் கேட்கக் கூடாது, மற்றவற்களிடம் கேட்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath 7:08 PM, October 13, 2008
தலைவா நீங்க சொல்லுவது ஒரு 7-8 வருஷத்துக்கு முந்தய நிலமை.. இப்பவெல்லாம் வாழ்க்கையில் சீக்கிரம் செட்டில் ஆகிவிடுவதால் ஆண்கள் 25-27 வயதுக்குள்ளும், பெண்கள் 23-25 க்குள்ளும் திருமணங்கள் நடந்துவிடுகிறது.. 30 வயது ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை..//

Bharath, ஓரளவு சரிதான் எனக்கு தெரிந்த நண்பர்களில் பலர் 30க்குள் திருமணம் முடித்துவிட்டார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் 8:23 PM, October 13, 2008
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பார்கள். நீ என்னதான் ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகியை திருமணம் செய்திருந்தாலும், ஒரு வருடத்துக்குப் பிறகு, உன் முகத்தையே அவள் பார்ப்பதும், அவள் முகத்தையே நீ பார்ப்பதும் வாழ்க்ககையில் அலுத்து விடும். அதனால்தான் அதன் பின் வாழ்க்கையில் சிறிய சிறிய பிணக்குகள் தோன்றும். அது சில சமயம் வளரும் சில சமயம் தேயும்.

இந்தக் காரணத்தினால்தான் பெரியவர்கள் முதல் குழந்தைக்கு அவசரப் படுகிறார்கள். முதல் குழந்தை பெற்று விட்டால் அந்தக் குழந்தையிடம் செலுத்தும் அல்லது பெரும் அன்பின் மூலம் அவர்களுக்குள் அன்பு மென்மேலும் பெருகும் வளரும். அதன் மூலம் குடும்ப பந்தங்களும் பலப்படும்.

குசும்பன் புரிந்ததா?
ஜிகே ஒப்ப முடிகிறதா?//

சுல்தான் ஐயா,

உலக அழகிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டு ஆச்சு, இன்னும் நீங்கள் சொல்லும் லாஜிக் படி குழந்தை பிறக்கல.
அது அபிஷேக்பச்சனும் ஐஸ்வர்யாவும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. எல்லோருக்கும் ஏன் உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராயே நினைவுக்கு வருகிறது ? உலக அழகிதான் அழகியா மற்ற மாடல் அழகிகள், நடிகைகள் அழகி இல்லையா ? உங்க மனசில் யார் இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்.

:)))))))

ஐயா மனைவியுடன் சென்ற வெளிநாடு வாழ் இந்தியர்களெல்லாம், திருமணம் முடித்த ஓராண்டிலேயே குழந்தைப் பெற எவ்வளவு வதை படுகிறார்கள் தெரியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி 9:57 PM, October 13, 2008
ரொம்ப தள்ளிப் போடக் கூடாது சாமியோவ்.
எங்க ஊர்ல சொல்லுவாங்க.
கல்யாணம் பண்ணுன முகூர்த்தத்தோட நல்ல சேதியும் காதுல விழுவனும்.
தலைச்சன் ஆம்புள பொறக்கணும், அப்படின்னு சொல்லுவாங்க.//

ஜோதிபாரதி,
ரொம்ப தள்ளிப் போடச் சொல்லவில்லை, சில சமயம் தள்ளிப் போட்டாலும் உணர்ச்சி வசத்தில் ஆனது ஆகிடும். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் 1:26 AM, October 14, 2008
asaththal post//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ 1:46 AM, October 14, 2008
நல்ல பதிவு கோவி.. எல்லோரும் இதை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருப்பதில்லை என்பது உண்மை. ஆனால் நானே கல்யாணம் ஆனவர்களை கண்டதும் அடுத்த கேள்வி "குழந்தை?" என்பதுதான்.. மாற்றிக்கொள்ள வேண்டும்.. :(//

வெண்பூ,
ஆனால் அதை பலர் வெகு பர்சனலாகத்தான் நினைக்கிறார்கள். தவிர்த்துவிட்டு புதுவீடு கட்டிவிட்டீர்களா என கேளுங்க ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி 2:17 AM, October 14, 2008
//அச்சச்சோ நான் சாதரணமாவே ..அந்த பக்கம் என்ன செய்தின்னு கேட்பதற்கு என்ன விசேசம்ன்னு கேட்பேனே.. :)//

அக்கா!
என்ன விசேஷம்னு கேக்குறதுக்கும் விசேஷம் உண்டான்னு கேக்குறதுக்கும் வித்தியாசம் உண்டு! :)//

நமக்கல் சிபி, விளக்கத்திற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe 9:58 AM, October 14, 2008
நல்ல பதிவு .நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.//

பகிர்வுக்கு நன்றி ஜோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//நவநீதன் 7:44 PM, October 14, 2008
இந்த விசயத்துல அனுபவம் கொஞ்சம் கம்மி தான்.
நாங்கல்லாம் இன்னும் சந்தோசமான பேச்சிலர்.

அனால் கல்யாணமனவர்களிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்கும் போது வெட்கப் பட்டுக்கொண்டே சிரிப்பு சிரித்து மழுப்புவார்கள். அதை பார்க்கும் போது சிலர், இந்த கேள்வி கேட்கப் படுவதை விரும்புவர் போலிருக்கிறது.//

குழந்தை உண்டானவங்க மழுப்புவார்கள், ஆனால் கேட்கப்படுவதை விரும்புவார்களோ ? ! :)

Unknown சொன்னது…

//உங்க மனசில் யார் இருக்காங்கன்னு தெரிஞ்சு போச். :)))))))//

சேரன், ஸ்நேகா நடித்த சமீபத்திய படத்தில் டாக்டராக வரும் ஜெயராம் இப்படித்தான் வசனம் பேசுவார். அதுதான் எடுத்துப் போட்டேன்.

எனக்கு ஒல்லிக் குச்சியா பெண்களைப் பார்த்தால் பாவமாகத் தோன்றும்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவி...இப்போதெல்லாம் பெண்களும் ஆண்களுக்கு சமமாக படிப்பு...மற்றதுறைகள் என வந்துவிடுகின்றனர்.75%மேல் கல்யாணவிஷயங்களில் அவரவர் வருப்பப்படி ந்டக்கிறார்கள்.அவர்களுக்கு யாருடைய அறிவுரைகளும் தேவைப்படுவதில்லை.எல்லாவற்றிலும் ஃப்ளான் பண்ணி நடக்கிறார்கள்.அவை சரியானபடியும் அமைகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ambi 2:57 PM, October 14, 2008
கோவி அண்ணா, அருமையா எழுதி இருக்கீங்க.

அண்டை அயலாரின் டார்சர் ரொம்ப கடுப்பான விடயம். அதுவும் சில இடங்களில் கம்பேரிசன் எல்லாம் வேற நடக்கும். :(


என்னோட சில சொந்த கருத்துக்கள்://

அம்பி கருத்துக்கள் ஒவ்வொன்னும் நற்சொற்கரு(த்)துகள் !

1) ஒரு 25 வருசங்களுக்கு முன்னாடி எல்லாம் குழந்தை வளர்ப்பு ரொம்ப எளிதா இருந்தது, காரணம் தங்கஸ் வேலைக்கு செல்வது அரிதான விடயம். மேலும் தாத்தா, பாட்டி பாத்துகுவாங்க.
முணுக்குனா சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் கிடையாது. எல்லாம் பாட்டி கை வைத்யம் தான். //

ஆமாம் ஆமாம் !

//ஆனா இப்ப, அதுவும் வெளி நாட்டுலனா ஏன்னு கேக்க ஒரு ஆளு உண்டா..?
//

சோகமான சுமை !

//இப்பொதெல்லாம் பாட்டிக்கே அப்போலவுல தான் வைத்யம் பாக்க வேண்டி இருக்கு. :))

அதனால பாட்டி தாத்தாக்கள் நல்லா ஆரோக்யமா இருக்கும் போதே பேத்திகளை(பேரன்னு சொல்லலை பாருங்க நான்)பெத்துக்கறது நல்லது. //
:))

//2) விக்கற விலைவாசில இன்னும் 2 வருஷம், 3 வருஷம் கழிச்சு பெத்துகிட்டா, குழந்தை பராமரிப்பு என்பது பட்ஜட்ல துண்டு இல்ல, வேட்டியே விழற விஷயமாகி விட வாய்ப்புள்ளது. //

பெட்சீட் விழுவதாக அல்லவா சொல்லுவாங்க ! :)

//3) இருக்கற சுற்றுபுற சூழல் மாசுல இம்பொடன்ஸி (தமிழ்படுத்த சங்கடமா இருக்கு, அதான்) ரேட் அதிகமாயிட்டே போகுது. லேப்டாப் சூடு கூட காரணமாமே! //

லேப்டாப் வச்சிருகவங்க தொடையில வச்சிக்காதிங்க !

//3 வருசம் கழிச்சு, அய்யோ போச்சே! அம்மா போச்சே!னு கத்தறதை விட இப்பவே ஆக வேண்டியதை பாக்கலாம் இல்ல.

டாக்டர் புருனோ, இங்க கொஞ்சம் வாங்கப்பா! :))//

இன்னா மேட்டர் மேலே சொன்ன பொட்ன்ஸ் மேட்டர் சரியான்னு சொல்லவதற்கு டாக்டர் வரனுமா ?

//4) சமூக பொருளாதர காரணிகளால வீடு வாங்கனும், கார் வாங்கனும்!னு தள்ளி போட்டா அலை ஓய்ஞ்சு கடல்ல குளிச்ச மாதிரி தான். //

ரொம்ப அடிபட்டு இருக்கிங்க


//5) நாம ரிட்டயர் ஆகறப்போ நம்ம பெண்கள்(பாருங்க, பிள்ளைகள்னு நான் சொல்லலை) பொருளாதார சுதந்திரம் அடைந்து இருக்கனும்.
//

இது மேட்டரு

//எனவே குசும்பா, இந்த பதிவுக்கு எதிர்வினை பதிவு போடறத விட்டுட்டு, எதிர்வினை ஆற்று. :))//

அனேகமாக உங்க ஆலோசனையைக் கேட்டு 'ப்ளான்' பண்ணுவார்னு நினைக்கிறேன்

//எல்லாம் சரி, கோவி அண்ணா, வீட்ல ஏதும், மறுபடி விசேசம் வருதுங்களா? :)))
//

பொண்ணுக்கு திருமணம் செய்ய இன்னும் 16 ஆண்டுகளாவது ஆகும், அப்பறம் அப்பச் சொல்லி விடுறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...

சேரன், ஸ்நேகா நடித்த சமீபத்திய படத்தில் டாக்டராக வரும் ஜெயராம் இப்படித்தான் வசனம் பேசுவார். அதுதான் எடுத்துப் போட்டேன்.

எனக்கு ஒல்லிக் குச்சியா பெண்களைப் பார்த்தால் பாவமாகத் தோன்றும்.

9:24 PM, October 14, 2008
//

சுல்தான் ஐயா,

உங்களுக்கு பெரிய மனசு ! குஷ்பு போன்று பூசின மாதிரி அல்லது பூசனி மாதிரி இருந்தால் தான் இடம் கொடுப்பிங்களோ !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
கோவி...இப்போதெல்லாம் பெண்களும் ஆண்களுக்கு சமமாக படிப்பு...மற்றதுறைகள் என வந்துவிடுகின்றனர்.75%மேல் கல்யாணவிஷயங்களில் அவரவர் வருப்பப்படி ந்டக்கிறார்கள்.அவர்களுக்கு யாருடைய அறிவுரைகளும் தேவைப்படுவதில்லை.எல்லாவற்றிலும் ஃப்ளான் பண்ணி நடக்கிறார்கள்.அவை சரியானபடியும் அமைகிறது.

9:40 PM, October 14, 2008
//

இராதாகிருஷ்ணன் ஐயா,

பெண்கள் எப்போதும் அவங்க விருப்பப் படி தான் நடப்பாங்க !

:)))))))

குடுகுடுப்பை சொன்னது…

கல்யாணங்களை பண்ணமா புள்ளங்கள பெத்தமான்னு இருக்கனும். அவ்ளோதான்

அமர பாரதி சொன்னது…

மொதல்ல இதுக்கெல்லாம் நேரம் செலவழிச்சு மனசு வருத்தப்படறத நிறுத்தனும். கல்யானம் செஞ்சவங்ககிட்ட "குழந்தை இருக்கிறதா" என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?. கேட்டால் "இன்னும் 3 வருஷத்துக்கு வேண்டாம்னு ப்ளான் பண்ணியிருக்கிறோம்" என்று சொல்லி விட்டுப் போகலாமே. மற்றபடி பொறனி பேசுபவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் இப்படி கேட்பது தவறு என்று சொல்வதும் சரியில்லை.

கல்யானம் செய்வதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் அவரவர் சவுகரியம்.

//ஆனால் அதை பலர் வெகு பர்சனலாகத்தான் நினைக்கிறார்கள்// இதில் என்ன பெர்சனல்? அப்படி நினைப்பவர்கள். "இது என்னுடைய பெர்சனல் விஷயம்...நீங்கள் இதைக் கேட்காதீர்கள்" என்று சொல்லலாம். அதற்கும் தைரியம் இல்லாமல் இருந்தால் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம்.

RATHNESH சொன்னது…

கரெக்ட் அமரபாரதி,

//கல்யானம் செய்வதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் அவரவர் சவுகரியம்.//

நான் உங்க கட்சி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்