இரண்டுமே உணர்வு பற்றிய சொல்தான். இரண்டிற்கும் என்ன பெரிய வேறுபாடு ? வானொலி கேட்ட போது இதுபற்றி சொன்னார்கள். சினம் உணர்ச்சி வசத்தில் ஏற்படுவதாம். வெறுப்பு ? அதுவும் உணர்ச்சிவசத்தில் ஏற்படுவதுதான். சினம் சட்டென்று செயலாற்றிவிடும், வெறுப்பு ? சமயம் கிடைக்கும் வரையில் அப்படியே அசைப் போட்டுக் கொண்டு இருக்குமாம். சினம் காலங்களால் ஆற்றப்படும். வெறுப்பு ஆறுவது கடினமாம். ஏற்படும் சினத்தினால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியாவிட்டால் அது வெறுப்பாக மாறிக் கொண்டு இருக்கும்.
*******
பெரும்பாலும் கட்சிக்காரர்கள் மாற்றுக் கட்சித் தலைவர்கள் மீது வைத்திருப்பது வெறுப்பு சார்ந்த உணர்வே. அந்த மாற்றுக்கட்சித் தலைவரிடம் இவர்களுடைய சினத்தினால் ஒன்னும் செய்ய முடியாது என்பதால் வெறுப்பாகவே இருப்பார்கள். அவரைப் பற்றி மறந்தும் நல்லதாக நான்கு வார்த்தைப் பேசிவிடமாட்டார்கள். பொதுமக்களுக்கு ஒரு முதல்வர் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால் 5 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த வெறுப்பு தேர்தல் நேரத்து சினமாக மாறி வாக்குச் சீட்டில் வெளிப்பட்டுவிடும்.
குறிப்பிட்ட நடிகரின் தீவிர ரசிகர்களாக தனனை அறிவித்துக் கொள்பவர்கள் அவருக்கு மாற்றானவரிடம் எந்த அளவு வெறுப்பு வைக்கிறார்களோ அதுவேதான் தான் விரும்பும் நடிகரின் நேசத்திற்கான அளவுகோல் என்று நினைக்கிறார்கள். புதசெவி ? கமல் எவ்வளவு தான் சிறப்பாக நடித்திருந்தாலும் ரஜினியின் தீவிர ரசிகர்களின் ரசனைக்கு அது குப்பைதான். அதே போல் கமலின் தீவிர ரசிகர்களும் நினைப்பார்கள். கமல் - ரஜினி என்கிற நடிகர்களை எதிர் எதிர் போட்டி பிம்பங்களாக கற்பனை செய்து கொண்டு, ஒருவருக்கு கமல் பிடித்தது என்று அதற்காக சில காரணங்கள் கூட இருக்கும். அடுத்தது அவருக்கு ரஜினி ஏன் பிடிக்காது என்பதற்கு காரணமே இருக்காது. ஆனாலும் பிடிக்காது. கட்சித் தொண்டர்களும் இப்படித்தான். கொள்கை பிடித்து இருக்கிறது என்பதற்காக ஒரு தலைவரை பிடிக்கிறது என்று சொல்பவர்கள் எவரிடமும், ஏன் எதிர்கட்சித் தலைவரைப் பிடிக்கவில்லை என்பதற்கு மிகச் சரியானக் காரணம் எதுவும் இருக்க முடியாது, பொதுவாக சரியில்லை, பிடிக்கவில்லை என்பார்கள். கொள்கை ரீதியாக பிடித்திருக்கிறது என்று சொன்னாலும், அந்த கொள்கைக்கு மாற்றாக அந்த தலைவர் நடக்கும் போது அதனைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். காரணம் தலைமைக்குக் காட்டும் விசுவாசம். நீண்டகாலமாக ஒரு தலைவரை முதலில் கொள்கைக்காக பிடித்ததற்கும், தற்போதும் எதிர்கட்சித் தலைவரை காரணமின்றி வெறுப்பதற்கும் தலைவர்களின் செயல்பாடுகள் காரணமாக அமைவதே இல்லை. இவை காரணமின்றிய ஈர்ப்புகள் மற்றும் வெறுப்புகள்.
தன் இல்லத்துக்குள், நல்ல நண்பர்களுக்குள் சினம் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றியோ, தள்ளிப் போட்டோ ஆற்றிக் கொள்வார்கள். அந்த சினம் தொடர்ந்து ஏற்படும் போதும் ஏதும் செய்ய முடியாது என்று நினைக்கும் போது வெறுப்பாக மாறும். வெறுப்பு ஏற்பட்டால் மணவிலக்கு, நட்பு முறிவு இவையே நடக்கும். சினம் சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்று, அவை வெறுப்பாக பரிணாமம் அடையும் போது ஒன்றுமே செய்ய முடியாது. சேர்வதற்கான வாய்பை ஏற்படுத்தித் தரும் மறுசிந்தனை என்பது சினத்தில் இருக்கும், வெறுப்பில் அதற்கான வாய்ப்பு மிக மிக அரிது.
தீவிர ரசிகர்கள் ஏன் எப்போதும் ஒரே நடிகரின் தீவிர ரசிகர்களாகவே இருக்கிறார்கள் ? அவருக்கு மாற்றான நடிகராக இருப்பவர் என்று பரவலாக பலரும் மாற்றாக ஒருவரை சொல்லும் போது இவர்களுக்கு அந்த மாற்று என்பது எதிர்ப்பு என்பதாகக் புரிந்து கொள்ளப்பட்டு, இவர்கள் பற்றுக்கு மாற்றான வெறுப்பை மாற்று நடிகர்கள் மீது கொள்கின்றனர்.
வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும். ஒருவர் மீது தன் சினம் செல்லுபடியாகாது என்று தெரிந்துவிட்டால் வெறுப்பு அங்கே குடியேறிவிடும். சினத்தைவிட வெறுப்பே ஆபத்தானது ஏனென்றால் 'அவனை நினைச்சாலே...எனக்கு ஒடம்பெல்லாம் எரியுது...' என்பதாக தன் மனதையே எப்போதும் கிளறிவிட்டுக் கொண்டு சோர்ந்து போகச் செய்யும் ஆற்றல் வெறுப்புக்கு உண்டு.
பின்பற்றுபவர்கள்
உணர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
6 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்