உலக நாடுகளின் உருக்கமான வேண்டுகோலை புறக்கணித்து அல்லாவின் ஷரியத்தை நிலை நாட்ட சவுதியில் தலை துண்டிக்கப்பட்ட மும்மின் இளம் பணிப்பெண் ரிஷானா (4 மாதக் குழந்தையைக் கொன்றதாக சொல்லிய கொலை குற்றச் சாட்டின் போது அப்பெண்ணுக்கு 17 வயது தனாம்) பெண்ணின் தாயார் சையது ஃபரீனா சவுதி அரசு சார்பில் இரக்க மனப்பான்மையுடன் அள்ளிக் கொடுத்த 20 லட்சம் இலங்கைப் பணத்திற்கு நிகரான ரியாலை வாங்க மறுத்து சவுதிகளும், சவுதி அரேபியாவும் கொடுக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
தங்கள் மகள் செய்தது கொலை என்றும் அல்லாவின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்தப் பெண்ணின் தாயார் கூறி இருந்தார் எனவே சரியத் சட்டம் சரியே எல்லாம் முறைப்படி நடக்கிறது, சவுதியோ, ஷரியத் சட்டமோ தவறிழைக்கக் கூடியதில்லை, இதை சாக்கிட்டு வஹாபிய எதிரிகள் சவுதி மீதும், ஷரியத் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர் என்று சுவனப்புகழ் சுவனப்பிரியன் மற்றும் அவரது சகாக்கள் நடக்கப் போகும், நடந்த நிகழ்வுக்கு கொஞ்சம் அலட்டிக் கொள்ளாமல் அல்லா அந்த பெண்ணுக்கு நற்கூலி தர பிராத்திக்கிறோம் என்று முடித்துக் கொண்டனர். ஒரு மும்மினுக்கு (அல்லா மற்றும் இறுதி இறைத்தூதர் முகமது மீதான நம்பிக்கையாளர்) மும்மின்கள் கொடுக்கும் தண்டனையை மும்மீன்கள் ஏற்கிறோம் காஃபீர் உங்களுக்கு என்னைய்யா கொடச்சல் ? என்று இவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
தாங்கள் சார்ந்த மதக் கொள்கையை எதிர்த்து எதுவும் பேச இயலாத நிலையில் கையறு நிலையில் அந்தத் தாயார் ஷரியத் சட்டத்தின் தண்டனையை ஏற்பபதாக கூறி இருந்தார் என்பது சவுதியின் பண உதவியை புறக்கணித்ததில் இருந்து தெரிகிறது, மகளை அனுப்பியது வீட்டு வேலைக்கு இதுல ரோசத்திற்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்று அந்த தாயாரை இவர்கள் தூற்றாமல் இருந்தால் பெரிது.
சவுதிக்கு வேலைக்கு செல்லும் அப்பாவிகள் சவுதியில் முறையான விசாரணை இன்றி சிறை தண்டனை அனுபவிக்கின்றனர் என்பதை நண்பர் சுவனப்பிரியன் 'சவுதி சிறையில் வாடும் சக தமிழனை காப்பாற உதவுங்கள்" என்று ஒப்புதல் வாக்குமூலமாக முன்பு இறைஞ்சி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே சவுதியில் சிறைகள் கூட குளிர்சாதன அறைகள் , பாலைவன சொர்கம் அங்கு தண்டனைக்கு சொல்லக் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுவனப்பிரியன் சொல்லமாட்டார் என்று நம்புவோம்.
நான்கே மாதமான பச்சிளம் குழந்தையின் மூச்சு திண்றல் மரணத்திற்கு காரணம் என்று நம்பப்படும் குற்றவாளி பெண் இதுவரை அனுபவித்த, ஐந்து ஆண்டுகள் தண்டனை போதாது குற்றவாளியின் தலை வாளால் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று தங்கள் குழந்தையின் மீதான பாசத்தை மறக்க இயலாத அளவுக்கு வெறுப்பும், பழிவாங்கும் எண்ணம் மாறாமல் இருந்திருக்கும் போது, மறக்கவே இயலாமலும், ஆற்றாமையாலும் இருக்கும் தாய் தனக்காக உழைக்கச் சென்ற தங்கள் இளம் மகள் கொலை குற்றம் செய்திருக்க வாய்பே இல்லை தெளிவாகக் கூறுகின்றார் , 22 வயதான அவருடைய மகள் சட்டம் என்ற பெயரில் ஊர் கூடி பொது இடத்தில் அநியாயமாக தலை துண்டிக்கப்பட்டதற்கு பணம் கொடுக்கிறேன் என்று முன் வந்தால் ஏற்றுக் கொள்வாரா ?
மரண தண்டனைகள் கட்டாயம் தேவை தேவை என்று கூறுபவர்களுக்கும், மரண தண்டனைகள் நிறைந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கும் இரக்க மனம் வாய்க்க வாய்ப்பே இல்லை என்பதை அந்த குழந்தையின் பெற்றோர்களும் நிருபனம் செய்துள்ளனர்.
இணைப்பு : Executed Sri Lankan maid's mother refuses Saudi money
மரண தண்டனைகள் கட்டாயம் தேவை தேவை என்று கூறுபவர்களுக்கும், மரண தண்டனைகள் நிறைந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கும் இரக்க மனம் வாய்க்க வாய்ப்பே இல்லை என்பதை அந்த குழந்தையின் பெற்றோர்களும் நிருபனம் செய்துள்ளனர்.
இணைப்பு : Executed Sri Lankan maid's mother refuses Saudi money