பின்பற்றுபவர்கள்

9 அக்டோபர், 2008

லக்கிலுக்கை கண்டிக்கிறேன் !

"E R Ravichandran Weds Vidya Lakhsmi" அடையாறு பகுதியில் ஒரு திருமண மண்டபத்தைக் கடக்கும் போது கண்ணில் பட்டது அந்த பெயர், ரவிச்சந்திரன் இனிசியலோடு தெரிந்த பெயராயிற்றே... மாலை நேரம் ஆகையால் மண்டபம் பிசியோ பிசி...சற்று எட்டிப்பார்த்தேன்... நினைத்தது போலவே ரவிச்சந்திரனின் அப்பா யாருடைய கையையோ பிடித்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அடப்பாவி ஒன்றாகவே +2, டிப்ளமா படித்தவன், சென்னையில் என்னுடன் ஓர் ஆண்டு வரை ஒரே அறையில் தங்கி இருந்தவன் என்கிட்ட ஒருவார்த்தைச் சொல்லாமல்...இன்னிக்கு கல்யாணம் நடக்குது எனக்கு தெரியாமல் போச்சே... உள்ளே போய் விசாரிக்கலாமா ?... அவனுக்குத்தான் கல்யாணம் என்று உறுதியாகிவிட்டதே...உள்ளே போக வேண்டாம் என்று ... அருகில் இருந்த பரிசு பொருள்கள் விற்கும் கடைக்குச் சென்றேன்... அப்போதெல்லாம் ஹாட் பேக்கில் சாப்பாடு எடுத்துச் சென்று மதியம் சாப்பிடுவது திருமணம் ஆனவர்களின் வழக்கம், அதனால் ஹாட் பேக் ஒன்றை வாங்கிக் மேலே கிப்ட் பேக் செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டு.....திருமண மண்டப்பத்தை நோக்கி நடந்தேன்.

நெருங்கும் போது பார்த்துவிட்ட ரவிச்சந்திரன்.....திகைத்தான்....'டேய் நீ எங்க இருக்கேன்னே தெரியாதுடா...எல்லோரையும் கூப்பிட்டேன்...உன்னைக் கூப்பிட முடியலைன்னு ரொம்ப வருத்தமாக போச்சு...எப்படியாவது யார் மூலமாவது உனக்கு தெரிய வைக்க முடியுமான்னு போனவாரம் வரை என் அலுவலக அருகில் இருக்கும் .... நீ வேலைப்பார்த்த பழைய கம்பெணி நண்பர்களிடம் கேட்டேன்...அவங்களும் தெரியலை என்று சொல்லிட்டாங்க...நல்ல வேளை நீ வந்தது ரொம்ப மகிழ்ச்சி.....'

செல்லமாக முதுகில் தட்டிவிட்டு ...இறுக மார்போடு அணைத்துக் கொண்டு...பிறகு கைகளை இறுகப் பற்றிக் கொண்டே... சற்று தள்ளி அருகில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவர்கள் பக்கம் திரும்பி

"அப்பா....அம்மா.....கண்ணன் வந்திருக்கான்..."

"உன்னப்பத்தி தான்ப்பா நேற்றுவரை புலம்பிக் கொண்டு இருந்தான்...கடவுள் தான் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்..." என்று சொல்லி அவர்களும் நெகிழ்ந்தார்கள்.

அன்னிக்கு நடந்தது எனது நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிதான்.

அழையா விருந்தாளியாக உள்ளே சென்றதாக நான் நினைக்கவில்லை. மாறாக அப்படியும் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை நினைத்தே மகிழ்ந்தேன்.

*********

இப்ப லக்கிக்கு,

எல்லோரையும் உங்கள் நண்பர்களைப் போல் நினைத்து ... வீட்டாண்ட வர்றியான்னு கேட்டுவிடாதீர்கள்

பிரபலங்களை அழைக்க முறை இருக்கிறது.

"அண்ணன் வருகிறார்...அணி திருளுங்கள் என்று முதலில் 70 எம் எம் மெகா சைஸ் போஸ்டர்களை சென்னை எங்கும் ஒட்டுங்கள்"

"அண்ணன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதை கொட்டை எழுத்துக்களில் போட்டு பல வகையான அழைப்பிதழை அடித்து எல்லோருக்கும் கொடுங்கள்"

அதன் பிறகு அண்ணனிடம் சென்று, ஒரு கையால் வாயைப் பொத்திக் கொண்டு பவ்யமாக,

"அண்ணே...இந்த பாவிப்பய நீங்க வருவீங்கன்னு ஊருப்பூராச் சொல்லிப்புட்டேண்ணே... எப்படியாவது வந்து கலந்து கொண்டு மானத்தை காப்பாத்துங்க' ன்னு சொல்லிட்டு தடலடியாக காலில் விழுந்து

'சரி' என்று சொல்லும் வரை காலைப் பற்றிக் கொள்ளுங்கள். அப்பறம் தான் அண்ணன் மனசு இறங்கி

'பயப் பொழச்சுப் போறான்...என் பேரைச் சொல்லி பெருமைத் தேடிக்கிறான் போல... நாம சமூக சேவை செய்யதானே இருக்கோம்...' என்று மனம் இறங்கி

"என்னைய்யா நான் பிசியாக இருக்கேன்....அன்னிக்கு போயி .... "

என்று அலுத்துக் கொண்டே ஒப்புக் கொண்டு உங்கள் அழைப்பிற்கு இணங்கி தா(மத)மாக வருவார்

இதில் எதையுமே செய்யாமல் ஆன்லைன் சாட்டில் அழைப்பு விடுத்தது எவ்வளவு புண் படுத்தி இருக்கும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் லக்கி லுக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

பின்குறிப்பு : மேலே உள்ள பகுதிக்கும், கீழே உள்ள பகுதிக்கும் தொடர்பு இல்லை, இரண்டும் வேறு வேறு. பிரபலத்துடன் என் கதையை தொடர்ப்பு படுத்திப் பார்க்காதீர்கள். ஸ்மைலி போடாமல் எழுதி இருக்கிறேன். நான் லக்கிலுக்கை கண்டிப்பது உண்மைதான்.

42 கருத்துகள்:

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

//அழையா விருந்தாளியாக உள்ளே சென்றதாக நான் நினைக்கவில்லை. மாறாக அப்படியும் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை நினைத்தே மகிழ்ந்தேன்.
//
இதுவும் நல்லாத்தான் இருக்கு!

குப்பன்.யாஹூ சொன்னது…

மற்றும் ஒரு பதிவு சாருவை பற்றி,

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட பதிவர்களை கண்டால்.

கோடம்பாக்கம் வ்யாதி வலைபதிவர்களிடமும் தொற்றி கொண்டது போல.

ஒருவர் ஒரு நிகழ்வு/ எழுத்தாளர் பற்றி எழுதினால் எல்லாரும் அதை பற்றியே எழுதி வெறுக்க வைக்கும் செயல்.

அடுத்த பதிவாவது வேறு ஒரு விஷயம் பற்றி எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

குப்பன்_யாஹூ

Ŝ₤Ω..™ சொன்னது…

அண்ணே.. இதுக்கு பேரு தான் வஞ்சப் புகழ்ச்சியா??
ஒன்னுமே வெளங்க மாடேங்குது..

RATHNESH சொன்னது…

அழைக்கப்பட்ட விருந்துகளுக்கே செல்லாமல் தவிர்ப்பவர்கள் மத்தியில் அந்தத் திருமணத்தில் நீங்கள் கலந்து கொண்டது நண்பருக்கு எவ்வளவு சந்தோஷம் தந்திருக்கும் என்று உணர முடிகிறது.

பெயரில்லா சொன்னது…

உங்கள் பெருந்தன்மை பாராட்டப்ப்டவேண்டிய ஒன்று. அதற்காக எல்லோரும் அப்படியா இருப்பர்கள்?

விஜய் ஆனந்த் சொன்னது…

// ஸ்மைலி போடாமல் எழுதி இருக்கிறேன். //

நான் போட்டுக்கறேன்!!!

:-)))))....
:-)))))....
:-)))))....

சரவணகுமரன் சொன்னது…

:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
// ஸ்மைலி போடாமல் எழுதி இருக்கிறேன். //

நான் போட்டுக்கறேன்!!!

:-)))))....
:-)))))....
:-)))))....
//

தம்பி, நீ போட்டுக்கல, போட்டுக் கொடுக்கிறடா :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இறக்குவானை நிர்ஷன் said...
இதுவும் நல்லாத்தான் இருக்கு!
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// குப்பன்_யாஹூ said...
மற்றும் ஒரு பதிவு சாருவை பற்றி,

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட பதிவர்களை கண்டால்.

கோடம்பாக்கம் வ்யாதி வலைபதிவர்களிடமும் தொற்றி கொண்டது போல.

ஒருவர் ஒரு நிகழ்வு/ எழுத்தாளர் பற்றி எழுதினால் எல்லாரும் அதை பற்றியே எழுதி வெறுக்க வைக்கும் செயல்.

அடுத்த பதிவாவது வேறு ஒரு விஷயம் பற்றி எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

குப்பன்_யாஹூ
//

குப்பன்_யாஹூ,

பேரோடு வாழாட்டாலும், ஊரோடு வாழுங்கிறாங்க பெரியவங்க
:)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சாரு நிவேதிதாவை விட்டு வெளியே வாருங்கள் பதிவர்களே.....
இதான் அடுத்த பகிரங்க கடிதத்துக்கு நான் வைக்கப் போற தலைப்பு.

பெயரில்லா சொன்னது…

அழைக்கப்பட்ட விருந்துகளுக்கே செல்லாமல் தவிர்ப்பவர்கள் மத்தியில் அந்தத் திருமணத்தில் நீங்கள் கலந்து கொண்டது நண்பருக்கு எவ்வளவு சந்தோஷம் தந்திருக்கும் என்று உணர முடிகிறது.//
;-))

rapp சொன்னது…

:):):)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
அழைக்கப்பட்ட விருந்துகளுக்கே செல்லாமல் தவிர்ப்பவர்கள் மத்தியில் அந்தத் திருமணத்தில் நீங்கள் கலந்து கொண்டது நண்பருக்கு எவ்வளவு சந்தோஷம் தந்திருக்கும் என்று உணர முடிகிறது.

1:42 PM, October 09, 2008
//

ரத்னேஷ் அண்ணா,

அதன்பிறகு ஒரு சில தடவைகள் அவனைப் பார்த்ததுடன் சரி, கடந்த 11ஆண்டுகளாக தொடர்பு இல்லை. இப்போ எங்கே வேலை பார்க்கிறான் என்று தெரியலை, கடைசியாக நான் சந்தித்த போது ரெனால்ட் கம்பெணியில் வேலை செய்தான். இப்போது போல் கைப்பேசி தொடர்புகளெல்லாம் அப்போது இல்லை, சொந்த வீட்டில் இருப்பவர்களை எப்போ வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும். வாடகைக்கு இருப்பவர்களை தேடிப்பிடிப்பது கடினம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
உங்கள் பெருந்தன்மை பாராட்டப்ப்டவேண்டிய ஒன்று. அதற்காக எல்லோரும் அப்படியா இருப்பர்கள்?

2:07 PM, October 09, 2008
//
அண்ணாச்சி,

பாராட்டுக்கு நன்றி !

நான் இரண்டு நிகழ்வுகளையும் தொடர்பு படுத்தவில்லை, 'அழைப்பிதழ்' என்ற செய்தியால் அந்த நிகழ்வு எனக்கு நினைவு வந்தது அதனால் அதனை முற்பகுதியில் எழுதி இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
:-)
//

சரவணகுமரன் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
:-)
//

சரவணகுமரன் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
சாரு நிவேதிதாவை விட்டு வெளியே வாருங்கள் பதிவர்களே.....
இதான் அடுத்த பகிரங்க கடிதத்துக்கு நான் வைக்கப் போற தலைப்பு.

2:49 PM, October 09, 2008
//

அண்ணே (சாரி தம்பியா)

சீசன் பதிவுகள் கேள்விப்பட்டது இல்லையா ? சுஜாதா மறைந்தவுடன் 200 பதிவுகள் வந்தது, கலைஞர் இரங்கல் பாவுக்கு 100 பதிவு, இது போல் சீசனுக்கு சீசன் நிறைய இருக்கு,

மழைகாலத்துல எல்லோரும் தான் குடைபிடிப்பாங்க.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆர்.கே.சதீஷ்குமார் said...

;-))
//

ஆர்.கே.சதீஷ்குமார் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//rapp said...
:):):)
//

rapp நன்றி !

Rajaraman சொன்னது…

ஐந்து நட்சத்திர விடுதியில் சீமை சாராயத்துடன் சந்திப்பு. சிறப்பு விருந்தினர் கனவுக்கன்னி நமீதா ( குட்டை பாவாடை, முண்டா பனியன் முகத்தில் குத்துவது போல்) இவ்வாறு ஏற்பாடு செய்து விட்டு அழைத்தால் தான் அவர் வருவார். Atleast கனிமொழியாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு இப்போது புலம்புவதில் என்ன அர்த்தம் ?????????????

Rajaraman சொன்னது…

அல்லது அவரது சீமை சரக்கு சப்ளையர் அந்துமனியாவது கலந்துகொண்டிருக்க வேண்டும்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பதிவை விடுங்கள்..பின்னூட்டத்திற்கு பதிலில் 'மழைகாலத்தில் எல்லாரும்தான் குடைபிடிப்பாங்க' இது அருமை

Bleachingpowder சொன்னது…

லக்கிலுக்கின் பெயரை உங்கள் வலைதளத்தின் விளம்பரத்திற்காக உபயோகபடுத்தினதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :))

வால்பையன் சொன்னது…

நீங்க யார நக்கல் அடிக்கிரிங்கன்னே தெரியல

அமர பாரதி சொன்னது…

கோவி,

கீழ்க் கண்ட வரிகளை ஒரு ப்லாகில் படித்தேன். அத சுட்டியையும் தந்திருக்கிறேன்.

//திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் முதல் ஞாயிறு கதையரங்கம். கடை ஞாயிறு கவியரங்கம் நடக்கும். கதையையும், கவிதையையும் படித்துக் காட்டலாம். விவாதம் செய்யலாம். போன முறை சந்திப்பிலேயே என்னிடம் சொன்னார். 'வசந்த் என்று ஒருவர். வந்தாரா?' என்று கேட்டிருக்கிறாராம், சங்கத்தில். 'இல்லை' என்றிருக்கிறார்கள். சொன்னவுடன் உண்மையில் வெட்கிப் போனேன். என்னையெல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து கேட்டிருக்கிறார் என்றால்... என்ன சொல்வது... மேன்மக்கள் மேன்மக்களே!

http://kaalapayani.blogspot.com/2008/09/blog-post_21.html

//

பதிவர் கூறியிருப்பது ஒரு பெரிய மலையாள எழுத்தாளரை. எழுத்தாளர்களை கொண்டாட வேண்டும் கும்பிட வேண்டும் என்று கூறும் சர்ச்சைக்குரியவர் அடுத்தவர்களை மதிக்கும் லட்சனத்தை அவரின் வெப் சைட் கட்டுரைகளிலேயே பார்க்கிறோம். மேலும் இந்த அளவு சக மனிதர்களிடமிருந்து தான் வேறுபட்டவன் என்பதை அவரே சொல்லிக்கொள்ளும் போது இதை ஒரு மனநிலை பிறழ்வாகவே பார்க்கிறேன். இவர் உதாரணம் காட்டும் மலையாள எழுத்தாளர்கள் எந்த அளவு சக மனிதர்களை மதிக்கிறார்கள் என்பதை அவர் அறிவாரா?. கொடுத்திருக்கும் சுட்டியை அவர் நேரம் இருந்தாலும் படிக்காமல் இருக்க வேண்டுகிறேன். இவருக்கு தான் மட்டும் தான் எழுத்தாளர் என்ற ஒரு வகையான நோய் இருப்பது தெளிவாகிறது.

"தலையில் ஏறி கழுதை ப்ளா ப்ளா ப்ளா..." இவர் தலையில் ஏறுவதால் யாருக்கு என்ன லாபம் என்பதை அசட்டுத்தனம் இல்லாமல் சொல்லட்டும்.

Sanjai Gandhi சொன்னது…

//பயப் பொழச்சுப் போறான்...என் பேரைச் சொல்லி பெருமைத் தேடிக்கிறான் போல... நாம சமூக சேவை செய்யதானே இருக்கோம்...'//

டபுள்ஷாட் :))

வெண்பூ சொன்னது…

ஆஹா.. கோவி, நீங்க டபாய்க்கிறீங்களா, கண்டிக்கிறீங்களா, இல்ல காமெடி பண்ணுறீங்களான்னு ஒண்ணியுமே புரியல.. லக்கிக்காவது புரிஞ்சா சரி.. :)))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பாரு சாமி பாரு
பழையக் கொறத்தி...
பஞ்சத்துக்கு வந்தவதான்
நம்ம கொறத்தி...


Fame is not Publicity!
Publicity is not Fame!

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
ஐந்து நட்சத்திர விடுதியில் சீமை சாராயத்துடன் சந்திப்பு. சிறப்பு விருந்தினர் கனவுக்கன்னி நமீதா ( குட்டை பாவாடை, முண்டா பனியன் முகத்தில் குத்துவது போல்) இவ்வாறு ஏற்பாடு செய்து விட்டு அழைத்தால் தான் அவர் வருவார். Atleast கனிமொழியாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு இப்போது புலம்புவதில் என்ன அர்த்தம் ?????????????

6:03 PM, October 09, 2008
//

:)

ஹலோ, அது எதுவும் இல்லாமல் பத்ரி அலுவலக மொட்டை மாடியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

முறைப்படி கூப்பிடலைன்னு தான் வருத்தமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
பதிவை விடுங்கள்..பின்னூட்டத்திற்கு பதிலில் 'மழைகாலத்தில் எல்லாரும்தான் குடைபிடிப்பாங்க' இது அருமை

6:45 PM, October 09, 2008
//

மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

//Bleachingpowder said...
லக்கிலுக்கின் பெயரை உங்கள் வலைதளத்தின் விளம்பரத்திற்காக உபயோகபடுத்தினதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :))

7:42 PM, October 09, 2008
//

கொஞ்சம் மென்மையாகவும் கண்டிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் அலவ்டு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
நீங்க யார நக்கல் அடிக்கிரிங்கன்னே தெரியல

8:06 PM, October 09, 2008
//

வால்பையன்,

உங்களுக்கு வசதியானதை எடுத்துக் கொள்ளவும் !

:)

நான் கிருஷ்ண பக்தன் நாரதர் இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அமர பாரதி said...
கோவி,

கீழ்க் கண்ட வரிகளை ஒரு ப்லாகில் படித்தேன். அத சுட்டியையும் தந்திருக்கிறேன்.
//

அமர பாரதி,

விரிவான தகவல்களுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// பொடியன்-|-SanJai said...
//பயப் பொழச்சுப் போறான்...என் பேரைச் சொல்லி பெருமைத் தேடிக்கிறான் போல... நாம சமூக சேவை செய்யதானே இருக்கோம்...'//

டபுள்ஷாட் :))

9:47 PM, October 09, 2008
//

தீபாவளி நெருங்குதுல்ல :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
ஆஹா.. கோவி, நீங்க டபாய்க்கிறீங்களா, கண்டிக்கிறீங்களா, இல்ல காமெடி பண்ணுறீங்களான்னு ஒண்ணியுமே புரியல.. லக்கிக்காவது புரிஞ்சா சரி.. :)))

10:16 PM, October 09, 2008
//

வெண்பூ,

பின்னூட்டத்தில் ஸ்மைலி போடாமல் தெளிவாகத்தானே எழுதி இருக்கேன்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
பாரு சாமி பாரு
பழையக் கொறத்தி...
பஞ்சத்துக்கு வந்தவதான்
நம்ம கொறத்தி...


Fame is not Publicity!
Publicity is not Fame!//

ஜோதி,
துணை நடிகை விபச்சார வழக்கில் கைதுன்னு பப்ளிசிட்டி கொடுப்பாங்க பேப்பர் காரங்க, அதைத்தானே சொல்றிங்க ?

//பாரு சாமி பாரு
பழையக் கொறத்தி...
பஞ்சத்துக்கு வந்தவதான்
நம்ம கொறத்தி...//

வருவான் வடிவேலன் படப்பாட்டு, சரியா ?

புதுகை.அப்துல்லா சொன்னது…

"என்னைய்யா நான் பிசியாக இருக்கேன்....அன்னிக்கு போயி .... "
//

அன்ணே பலபேருகிட்ட இது நீங்க சொன்ன டயலாக் இல்லையே
:)))))))))))))))))))))))))

இவன் சொன்னது…

:-))))
:-))))
:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா said...
"என்னைய்யா நான் பிசியாக இருக்கேன்....அன்னிக்கு போயி .... "
//

அன்ணே பலபேருகிட்ட இது நீங்க சொன்ன டயலாக் இல்லையே
:)))))))))))))))))))))))))
//

புதுகை.அப்துல்லா,

பாத்ரூம் போற வேலைக் கண்டிப்பாக இருக்கும் அதை வைத்து பிசியாக இருப்பதாகத் தான் சொல்லுவாங்க.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// இவன் said...
:-))))
:-))))
:-))))

7:34 AM, October 10, 2008
//


நன்றி !

லக்கி பேரைச் சொல்லி 40 பின்னூட்டம் ஆகிட்டு !

அனைவருக்கும் நன்றி !

லக்கிலுக் சொன்னது…

கேப்மாரிகளும், மொள்ளமாறிகளும் நெறைஞ்ச இந்த வலையுலகத்துலே உங்களை மாதிரி நல்லவங்களும் இருக்கீங்களே? நன்றி! :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்