வறுத்து எடுக்கும் பதிவர்களும் பதிவுகளும் ஆரம்பத்தில் படிக்க சுவையார்வமாக இருக்கும்... நாளைடைவில் அதே போன்று பதிவுகளைப் படித்து படித்து விவாதங்கள் என்ற பெயரில் இனிமா குடித்த ஆயாசத்தில் இருக்கும் பதிவர்களை... பாயசம் குடிக்க வைத்து கலகலப்பாக்கும் ஒரு குழுவாக ... வம்பு வாதம் சற்றுமில்லாத (வவாச) பதிவுகளைப் அளிக்கும் பதிவுக் குழுக்களில் நம் வருத்தப்படாத வாலிபர்களின் பதிவுகள் முதன்மையானவை.
கு'பீர்' கு'பீர்' னு வயிறு கலங்க சிரிக்க வைக்கும் சிபி, ஸ்டெடியாக பின்னூட்ட கட்டிடத்தை வேகமாக எழுப்பும் கொத்தனார், ஊறுகாய்க்குக்கூட நக்கலில் சிக்கல் வைக்காத நாகை சிவா, எவ்வளவு 'அடித்தாலும்' நின்னு சமாளிக்கும் கைப்பு, பேதையில் மயங்காத ஜொள்ளுபாண்டி, 'காய்த்து' எடுக்கும் விவசாயி, 'தண்ணி' இல்லாக்காட்டில் தாக சாந்திக்கு வேண்டும் தேவ் என தள்ளாடமல் லொள்ளித் திரிபவர்களின் எகத்தாளமில்லாத நக்கல்கள், நையாண்டிகள்.. ஆப்புரேசன் (அளவோடு ஆப்பு வைப்பது) ... மட்டின்றி அவ்வபோது வந்து இளமையை புதுப்பித்து செல்லும் பதிவர்களின் பதிவுகளும் குறிப்பாக திரும்பிப் பார்க்கும் ஜோசப் ஐயா என நகைச்சுவையில் வகைகளை பரிமாறும் பதிவுகளை வவாசவில் படித்து வயிற்றுவலியயல் துடித்து இருக்கிறேன்.
இவிங்கெல்லாம் யாருன்னு கூகுளாண்டவரை வேண்டிக் கேட்டுக் கிட்டதில்... எனக்கு மட்டும் அந்த வரலாற்று ரகசியத்தைச் சொல்லி மறைந்தார்.
*********
ஒரு முறை 100 கைகளுடன் ஒரு கடவுள் ஒரு பெண்மணியின் கனவில் தோன்றினார்.
'பொன்மணி இந்த பதிவுலகில் சதாகாலமும் சாதிச் சண்டைகளும், மதச்சண்டையும் நடந்து வருகிறது இவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி எனக்கில்லை ... எனவே நீ பதிவுலகில் அவதரித்து ... யானை மீது அமர்ந்து சண்டைகளிலிருந்து பதிவர்களை மீட்டு எடுக்கும் பொறுப்பை உனக்கு கொடுக்கிறேன்' என்று கூறி மறைந்துவிட்டார்...'
அதன்படி வ.வா.சங்கம் தோன்றியதாக வரலாற்று குறிப்புகளை வைத்து ஆய்வாளர்கள் குறி சொல்லி இருக்கின்றனர். அகழ்வாராய்ச்சி மேலும் செய்து பார்க்கையில் இரும்பினால் ஆன ஆயுதம் கைப்பற்ற பெற்றதாகவும் அந்த ஆயுதமே உலகில் தோன்றிய முதல் இரும்பு ஆயுதமாக இருக்க முடியும் என்று தெரிகிறது. ஆம் நண்பர்களே 'ஆப்பு' ஆயுதம் ஹராப்பா காலத்திற்கு பிறகு தோன்றியதாக அறியப்படுகிறது. ஆப்பு என்ற சொல் இருந்தே தகப்பன்மார்கள் அடிக்கடி தாய்மார்களிடம் ஆப்பு வாங்குவதாலேயே ஆப்பா என்று அழைக்கப்பட்டதாகவும் அந்த ஆப்பா மறுவி தற்பொழுது அப்பா, அப்பு என்று அழைக்கப் படுகின்றதாம். இங்கு அபிஅப்பாவை நினைத்தால் நான் பொறுப்பல்ல :) அப்படிபட்ட பெருமைக் குறிய ஆப்புக்கு மேலும் பெருமை சேர்த்த வவாசவின் செயல்பாடுகள் மாபெரும் ஆப்பார்வமாக நினைக்க முடிகிறது.
********
நானும் தேடி தேடிப் பார்த்ததில் பெரும் குழப்பமே மிஞ்சுகிறது. பதிவுகளில் இருக்கிற ஆப்புகள் அதிகமா ? பின்னூட்ட ஆப்புகள் அதிகமாக என்று எண்ணி எண்ணிப் பார்த்து பெரும் குழப்பமே அடைந்திருக்கிறேன். பற்றாக்குறைக்கு அங்காங்கே காலில் இரத்தம் வழியும் அளவுக்கு வெட்டிப்பயல், சிவா, இராம் போன்றவர்களால் பிடுங்கப்பட்ட ஆனிகளும் பெரும் அளவுக்கு பதிவும், பின்னூட்டமாக இரைந்து கிடக்கிறது.
எல்லா ஆப்பும் ஆப்பல்ல; சொல்லாமல்
கொல்லாமல் வைப்பதே ஆப்பு !
அதாகப்பட்டது சொல்லி வைக்காமல் ஆப்பு வைக்க வேண்டும் எவர் மனதையும் கொல்லாமல் வைக்க வேண்டும் என்ற ஆப்பு அதிகாரம் 7 ஆவது குறளில் திருவாப்பார் எழுதியுள்ள நல்லொழுக்க நெறிபடி சங்கத்தை நடத்தி செல்கிறார்கள் இளம் சிங்கங்கங்கள்
நீங்களும் கொடுங்க, வாங்குங்க ஆப்புகள் இலவசம். ஓராண்டு நிறைவை ஒட்டி வாவச வில் மேடையேறி வெற்றிகரமாக ஆப்புவாங்கிக் கொண்ட சங்கத்தின் சிங்கங்களும்,
போட்டு வாங்கிய சிறப்பு எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இரண்டு பதிவுகளான கோவியாரின் நாடக சபா 1, மற்றும் 2 ஐ ஏற்றுக் கொண்டு என்னை பாராட்டி மகிழ்வித்தற்கு வவாச க்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேடை ஏறி வாலிபர்களாக மாறிய பெரிய சிங்கள், தல கைப்புள்ளை மற்றும் இளம் சிங்கக்குட்டிகளான இளா, இராம், வெட்டிப்பயல், மற்றும் அனைத்து சிங்கங்களுக்கும் பாராட்டுக்கள்.
பின்குறிப்பு : பதிவே எழுத தெரியாவதர்களுக்கு முப்பது நாட்களில் 300 மொக்கை பதிவுகள் போடுவது எப்படி ? 40 வது பதிப்பு - என்ற நாமக்கல்லாரின் எழுதி வடித்த இலவச கையேடுகளை (ஈபுக் வடிவத்தில்) பின்னூட்டம் போடுபவர்களுக்கு இலவசக் கொத்தனார் உபயத்தில் .... வழங்கப் போவதாக இளா என்னிடம் தெரிவித்தார்.
:)))))))
--
அன்புடன்,
கோவி.கண்ணன்