பின்பற்றுபவர்கள்

16 அக்டோபர், 2008

காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நம்மை காப்பது எப்படி ?

பங்கு சந்தை சூறாவளியில் காணாமல் போன நிறுவனங்களில் முதன்மையானவையாக கடன் வழங்கும் வங்கிகளும், காப்பிடு வழங்கும் வங்கிகளுமே ஆகும். லட்சக்கணக்கானோர் சிறுக சிறுக சேமிப்பு + காப்பீடாகப் போட்டவையெல்லாம் வளர்ந்து வாங்கப் போகும் நிலையில் திவாலாகி அவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டது. தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்பது நூற்றாண்டு கால படிப்பினையாக அமையும் என்று எதிர்பார்த்தாலும், மக்கள் எதையுமே அன்றோடு மறந்துவிடுவார்கள் என்கிற லாஜிக் தெரிந்த பொது / தனியார் நிறுவனங்கள் புதுவழியில் மக்களை எப்படியேனும் அனுகிவிடுவர்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மேக்சிமா, ரமேஷ் கார் மற்றும் அனுபவ் நிறுவனங்கள் மூலம் நல்ல 24 விழுக்காடு வட்டி வழங்கப்படுவதை நம்பி அடிவாங்கியவர்கள் என்பதால் தமிழக மக்கள் தற்போதைய பங்கு சந்தை பாதிப்பில் பங்கு பெறாதவர்களாகவும், அப்படியே பெற்று பாதித்திருந்தாலும் ஏற்கனவே நடந்தவையே என்றும் தேற்றிக் கொள்வார்கள்.

பலூன் ஊத ஊத பெரிதாகவும் வியப்பாகவும் இருக்கும், காற்று சேர சேர அழுத்தம் மிக பலூனின் பரப்புகள் மெல்லியதாகவும் மாற, அடுத்து காற்று சேர்ந்து கொண்டிருக்கும் போது எந்நேரமும் வெடிக்கலாம் என்ற விதிபோல் தான் பங்கு சந்தையின் வீழ்ச்சிகள் காட்டுகின்றன. வெறும் பணம், அதை பத்திரமாக (Form) மாற்றி பணம் பண்ணிக் கொண்டே இருக்கலாம் என்கிற நினைப்பில் வெண்ணீரைக் கொட்டியதாகவும், பெரும் கோடிஸ்வரனாக உலா வந்தவர்கள் 'பணம் என்பது மாயை' தான் என்று அருளுரை ஆற்றும் அளவுக்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறது. பணமும் அதன் மூலம் கிடைக்கும் புகழும் (குறுகிய) காலம் தொடர்புடையது என்னும் ஆன்றோர் உண்மையை உணர்ந்து கொள்ள கொடுக்கும் பணம் மிகவும் பெரியதுதான். எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்குவது போலவே பணத்தின் மீது இருக்கும் மோகத்தை உணர்ந்து தெளிந்து கொள்ள இப்பணம் கொடுக்கப்படுவதாகவே உணர்ந்து கொண்டால் ஓரளவு அழுத்தத்திலிருந்து மீளலாம். அப்படியும் ஆறுதல் கிடைக்கவில்லை என்றால்,

'எதைக் கொண்டுவந்தாய், எதனை இழக்கிறாய் ?'

'நீ எதைக் கொண்டு வந்தாயோ...அதை,
நீ பங்கு சந்தையிலிருந்தே கொண்டு வந்தாய்'

'இன்று உன்னுடையதாக இருப்பது... பங்கு பரிவர்த்தனை முடிந்த பிறகு
ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்'

என்பதாக கீதாச்சாரத்தை சற்று மாற்றி அமைத்துக் கொண்டு ஆறுதல் அடையலாம்

**********

இங்கே சிங்கையில் தபால் அலுவலகம், வங்கி ஆகியவற்றிற்கும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கும் சென்றால் எதாவது ஒரு காப்பிட்டு முகவர் / கடன் அட்டை முகவர் நம்மை நெருங்கி சிரித்தபடியே ஒரு 20 அடிக்கு கூடவே வருவார். பெரும்பாலும் 'நோ தாங்கஸ்..', இல்லாவிடில் 'எனக்கு வேறொரு நிறுவனத்தில் காப்பீடு இருக்கிறது / கடன் அட்டை இருக்கிறது' என்று சொல்லி சமாளித்து எட்டி வந்துவிடுவார்கள். நான் 2004 வாக்கில் ஒரு தபால் அலுவலகத்திற்குச் சென்ற போது (AI* நிறுவனத்தைச் சேர்ந்த) ஒரு பெண் முகவரிடம் மீளமுடியாமல் சிக்கிவிட்டேன். 'உடனடியாக காப்பீடு எடுக்க முடியாது, வேண்டுமானால் கைபேசி எண்களைத் தருகிறேன், பிறகு பேசுங்களேன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்தேன். தப்பிவந்ததாக நினைத்தேன் ஆனால் சரியாக ஒருவாரத்தில் அழைத்தாள். சும்மா சொல்லி வைப்போமே என்பதற்காக 'இப்ப நிதி நிலமை சரியில்லை, இன்னும் மூன்று மாதம் கழித்து பேசுங்கள்' என்றேன். சரியாக மூன்று மாதம் சென்று அழைத்தாள், அப்போதும் அதே காரணத்தைச் சொல்லி இன்னும் ஒரு ஆறுமதத்திற்கு தள்ளிப் போட்டேன். விடுவாளா ? அடுத்த ஆறுமாதத்தில் அழைத்தாள், அவள் தான் அழைக்கிறாள் என்று சொல்வதற்காக அவளே, 'Kanna Do you remember me, that day angmokyo post office ?", நானும் "yes, yes madam" என்று சொல்வதே வாடிக்கையாக இருக்கும்.

அதன் பிறகு மற்ற சூழல்களையெல்லாம் சொல்லி, அதாவது ஏற்கனவே வெறொரு நிறுவனத்தில் இருக்கும் காப்பீடு அடுத்த ஆண்டு முடிந்துவிடும் அதன் பிறகு பேசு' என்றேன், சரியாக ஒரு ஆண்டில் மீண்டும் அழைத்தாள், கிட்டதட்ட இரு ஆண்டுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்துக் கொண்டே இருந்தாள். இந்த முறை அவளை எப்படி தவிர்பது என்று நினைத்து யோசித்தேன். "Madam, I am going back to india permanently, I am sorry, I cannot signup for any policy" கொஞ்சம் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிந்தது, தொழில் தானே, அதன் பிறகு அவள் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை, மீறி தொடர்பு கொண்டாலும், "I came from India only on last week, I will stay here only for another 2 months" என்று சொல்லலாம் என்றே நினைத்திருக்கிறேன். இதுவரை அவளும் அழைக்கவில்லை. ஒருவேளை எனது கைபேசி எண்ணை அவளது பட்டியலில் இருந்து நீக்கி இருக்கலாம். இதுபோன்ற முகவர்களிடம் பட்டென்று முகத்தில் அடித்தது போல் சொல்வதற்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை.

நல்லவேளை நான் தப்பித்தேன், அவள் முன்மொழியும் வங்கியும் தற்பொழுது திவாலாகி இருக்கிறது, சென்ற ஆண்டு வேறொரு முகவரிடம் வீட்டு பாதுகாப்புக்காக (ஏற்கனவே வேறொரு நிறுவனத்தின் வீட்டு பாதுகாப்பு பத்திரம் House Protection Scheme (HPS) ஒன்று இருக்கிறது) உபரியாக அதே நிறுவனத்தில் 180 டாலர் வரை ஆண்டுத் வைப்புத் தொகையாக கட்டியது ஸ்வாகாதான், பெரிய நட்டமில்லை. 100,000 டாலர் வரை காப்புறுதி வாங்கி இருந்த பல முதியவர்கள் மனம் ஒடிந்து இருக்கிறார்கள். கிணற்று தண்ணீரை ஆற்றுவெள்ளம் அடித்து போகுமா என்று பேச்சு வழக்கு உண்டு சிறுக சிறுக சேமிக்கும் பலரது சேமிப்பை நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி என்னும் சுனாமி அப்படியே விழுங்கிவிட்டது. அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்த நிறுவனங்களில் காப்பீடு செய்யாமால் நிறைய சலுகைகள் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.

சிறுக சிறுக சேமித்து இப்படி ஒரே தடவையில் மாயமாகப் போவதற்கு பதில் 'இருக்கிற வரை Enjoy பண்ணுவோம்' என்ற மனநிலைக்கு மக்கள் சென்று, வரும் காலத்தில் சேமிக்கும் பழக்கம் ஒழிந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை :(

28 கருத்துகள்:

CA Venkatesh Krishnan சொன்னது…

Me the First:)))

ஐயா, உங்களை சினிமா கேள்வி பதில் தொடருக்கு அழைத்துள்ளேன்.

விவரம் என் பதிவில்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இளைய பல்லவன் said...
Me the First:)))

ஐயா, உங்களை சினிமா கேள்வி பதில் தொடருக்கு அழைத்துள்ளேன்.

விவரம் என் பதிவில்.
//

இளைய பல்லவன்,
இன்று இரண்டு பதிவு போட்டாச்சு, உங்கள் அழைப்புக்காக நாளைக்குத்தான் பதிவிட முடியும் !
:)

dondu(#11168674346665545885) சொன்னது…

என்னுடைய இப்பதிவை பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2006/08/blog-post_11.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
என்னுடைய இப்பதிவை பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2006/08/blog-post_11.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

டோண்டு சார்,

பார்த்தேன். டெலிமார்கெட்டிங்க் பதிவு.

பிறருடைய பதிவை படிக்கும் போது சட்டென்று அதன் பொருள் தொடர்பில் உள்ள நீங்கள் எழுதிய பதிவையும் சுட்டியையும் எப்படி உடனே எடுத்துக் காட்டுகிறீர்கள் ? வியப்பாக இருக்கிறது.

CA Venkatesh Krishnan சொன்னது…

உண்மைதான்.

ஆனால் இன்றைய நிலைமையில் அரசு நிறுவனங்களும் தனியாரிடம் தானே முதலீடு செய்கின்றன.

பி.எஃப். நிதியை நிர்வகிப்பதற்கு தனியார் நிறுவனங்களை அரசு அணுகுகிறது. இதை மறுபரிசீலனை செய்வது நல்லது.

Adriean சொன்னது…

//இதுபோன்ற முகவர்களிடம் பட்டென்று முகத்தில் அடித்தது போல் சொல்வதற்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை.//
இவர்களுக்கு முகத்தில் அடித்தால் போல் தான் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.

மணிகண்டன் சொன்னது…

***** இவர்களுக்கு முகத்தில் அடித்தால் போல் தான் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் ******

தேவையில்லை. எனக்கு அவசியம் இல்லை என்பதை மிகவும் எளிதாகவும் அழுத்தமாகவும் கூற முடியும்.


!!!! கொஞ்ச நாள் அந்த பொண்ணு கிட்ட பேசணும் போல இருந்தா, ஒரு மூணு மாசம் கழிச்சி போன் பண்ணுங்கன்னு அழகா சொல்லலாம் !!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
***** இவர்களுக்கு முகத்தில் அடித்தால் போல் தான் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் ******

தேவையில்லை. எனக்கு அவசியம் இல்லை என்பதை மிகவும் எளிதாகவும் அழுத்தமாகவும் கூற முடியும்.//

மணிகண்டன்,

சிலரிடம் வேண்டாம் தேவை இல்லை என்று சொன்னால் ஒரு புழுவைப் பார்ப்பது போல் மேலும் மேலும் பார்த்துவிட்டுச் செல்வார்கள், அவர்களிடமெல்லாம் எப்படி சொல்வது ?

//!!!! கொஞ்ச நாள் அந்த பொண்ணு கிட்ட பேசணும் போல இருந்தா, ஒரு மூணு மாசம் கழிச்சி போன் பண்ணுங்கன்னு அழகா சொல்லலாம் !!!!!!//

எங்க வீட்டில் குழப்பம் பண்ண முயற்சிக்கிறிங்களா ? அதெல்லாம் தங்கமணி நம்பாது
//

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நான் ஆரம்பக் காலத்துல இருந்து தனியார் காப்பீட்டு நிறுவனங்கள நம்புறது இல்ல. டாடா ஏஐஜியில சேர சொல்லி என் நெருங்கிய நண்பர் அவ்ளோ வற்புறுத்தியும் சேரவேயில்லை. ஆயுள் காப்பீட்டுக்கு எல் ஐ சி தான் சிறந்தது என்பது எனது நம்பிக்கை , அது தற்போதைய நிகழ்வுகளால் மேலும் உறுதியடைகிறது. நமது ஊரிலும் எல் ஐ சியின் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிகள் நடந்தன. அதை கம்யூனிஸ்டுகளும், எல் ஐ சி ஊழியர்களும் போராடி தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எல்லாவற்றையும் தனியார் மயமாக்கும் நோக்கில் செல்லும் மன்மோகன், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலிய மூவரணி இனி என்ன செய்யும் என தெரியவில்லை. இன்னும் அமெரிக்காவை தூக்கி நிறுத்த உழைப்பார்களா அல்லது இந்தியாவிற்கு கடமையாற்றுவார்களா எனத் தெரியவில்லை.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஒரு வேளை நீங்க அந்த பொண்ணுகிட்ட அடிக்கடி பேசணும்னு மூணு மாசம் , 6 மாசம்னு இழுத்துக்கிட்டு இருந்தீங்களோன்னு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வர்றத தவிர்க முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
ஒரு வேளை நீங்க அந்த பொண்ணுகிட்ட அடிக்கடி பேசணும்னு மூணு மாசம் , 6 மாசம்னு இழுத்துக்கிட்டு இருந்தீங்களோன்னு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வர்றத தவிர்க முடியாது.

5:11 PM, October 16, 2008
//

ஜோசப் பால்ராஜ்,

பிறரையும் தன்னைப் போல் நினை என்று சொல்வது இதுபோன்ற நிகழ்வுக்கு சரியாக வராது !

:)))))

கிருஷ்ணா சொன்னது…

//சிறுக சிறுக சேமித்து இப்படி ஒரே தடவையில் மாயமாகப் போவதற்கு பதில் 'இருக்கிற வரை Enjoy பண்ணுவோம்' என்ற மனநிலைக்கு மக்கள் சென்று, வரும் காலத்தில் சேமிக்கும் பழக்கம் ஒழிந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை :(
//
நம்மூரில் வங்கியில் சேமிக்கும் மக்களின் சதவிகிதம் 5 க்கும் குறைவு என படித்ததாக நினைவு.

//கிணற்று தண்ணீரை ஆற்றுவெள்ளம் அடித்து போகுமா என்று பேச்சு வழக்கு உண்டு சிறுக சிறுக சேமிக்கும் பலரது சேமிப்பை நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி என்னும் சுனாமி அப்படியே விழுங்கிவிட்டது. அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்த நிறுவனங்களில் காப்பீடு செய்யாமால் நிறைய சலுகைகள் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.
//

எனக்கு தெரிந்து சிறிது சிறிதாக வங்கியில் சேமிக்கும் நடுத்தர வர்கதினர் Sensex 15000 - 20000 சென்ற போது வங்கி சேமிப்பை எடுத்து Mutual Fund மற்றும் Unit linked Insurence இல் invest செய்து இன்று 50%- 70% நஷ்ட்டம் அடைந்து உள்ளனர்.

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணா..!
எங்க நைனா ஒண்ணு சொல்வார்..." உலகில் நாம் பணக்காராணாக வேண்டும் (தன்னலம் கருதாமல்) என்று எண்ணும் இரண்டு நல்ல மனிதர்கள் நாம் அன்னையும் பிதாவும் தான், மற்ற எல்லாரும் ஏதோ ஒரு சுய லாபதிற்காக மட்டுமே அப்படி எண்ணுவார்கள்" என்று, இதனை நான் என்றும் பின்பற்றி வருகிறேன். அதனாலேயே என்னிடம் யார் வந்து, MLM, AMWAY என்று இன்னபிறவற்றை பேசினாலும் நான் காது கொடுத்தே கேப்பது இல்லை.
என்னை எப்படி எல்லாம் வளைக்க முயல்வார்கள் தெரியுமா? "உங்களுக்கு 5000 ரூபாயெல்லாம் சாதாரணம்; நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம்; உறுப்பினர் மட்டும் ஆகி விடுங்கள் போதும்; மற்ற எல்லா வேலையையும் நானே பார்த்து கொள்கிறேன்" என்பார். நான் எதற்கும் பிடி கொடுக்க மாட்டேன்.
நான் அவர்களிடம் "எனக்கு 5000 சாதாரணம், உங்களுக்கு 1000 சாதாரணம் தானே நீங்கள் ஒரு 1000 கொடுங்கள் நான் 6 மாதம் கழித்து 1300 தருகிறேன். சத்தியமா நான் ஏமாற்ற போவதில்லை உங்களுக்கே தெரியும் எனக்கு 5000-மே சாதாரணம் என்று". அப்புறம் அவர்கள் ஏன் நம் பக்கம் வர போகிறார்கள்.
மேலும் அவர்கள் இதோ பாருங்கள் "இது எனக்கு வந்த காசோலை, இது ஏன் நண்பருக்கு வந்த காசோலை" என்று பல ஆவனங்களை காட்டுவார்கள். "சரி..சரி... உங்களுக்கு வந்தால் நீங்கள் அனுபவித்து கொள்ளுங்கள், உங்கள் திறமை மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களே இன்னொரு உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள் என்று கூறி விடுவேன்." பின்னர் அவர்கள் என்ன செய்வார்கள்? என்னை பற்றி தூற்றி விட்டு போவார்கள்.. போகட்டுமே... என்ன கெட்டு விட போகிறது....
நிறுவனம் கம்பி நீட்டிய பிறகு, நம்மிடம் தானே வருவார்கள் கை மாற்றுக்கு

கிருஷ்ணா சொன்னது…

தனியார் காப்பீட்டு
நிறுவனதிலும் Term insurence எடுத்தால் பாதுகாப்பனதுதான். ஆனால் அவர்கள் அதை மார்க்கெட் செய்வதில்லை.

L I C யிலும் கூட Unit linked Insurence Scheme இல் முதலீடு செய்து இருந்தால் நஷ்டம் தான்.

நையாண்டி நைனா சொன்னது…

மன்னிக்க..

பதிவுடன் தொடர்பு இல்லாவிட்டாலும், நாம் அனைவருக்கும் தொடர்புடையது...

அண்ணா.. தயை கூர்ந்து இதை படியுங்கள்.
http://kulali.blogspot.com/2008/10/blog-post_16.html

மணிகண்டன் சொன்னது…

************** எங்க வீட்டில் குழப்பம் பண்ண முயற்சிக்கிறிங்களா ? அதெல்லாம் தங்கமணி நம்பாது *********

உங்க பதிவு எல்லாம் படிக்கறாங்களா ?

அப்படி இருந்தா நான் ஒன்னும் புதுசா குழப்பம் பண்ண முடியாதுன்னு தாழ்மையோட தெரிவிச்சிக்கறேன்.

பெயரில்லா சொன்னது…

கோவி,

நான் காப்பிட்டுக்கு எல் ஐ சி யைத்தான் நம்புகிறேன். பத்திரமானது என்பதுதான் காரனம்.

ஆனா நமது சேமிக்கும் பழக்கம் பல்வேறானது. நகை, சீட்டு, இடம், வங்கி என்று பலவேறாகப் பிரித்து சேமிப்பதால் ஒன்று கைவிட்டாலும் ஒன்று தூக்கிவிடும்.

எல்லாவற்றையும் ஒன்றிலேயே முதலீடு செய்வதுதான் தவறு. நானும் பங்கு மார்க்கட்டில் முதலீடு செய்திருந்தேன். சென்செக்ஸ் 7000க்கு மேல் எகிறும் போதே எனது ஆடிட்டர் அலோசனை சொன்னார். ”என்ன காரனத்திற்காக ஏறுகிறது என்பது தெரியவில்லை. டெக்னிக்கலாக அனாலிசிஸ் பண்ண முடிவதில்லை. எனவே வெளியேருங்கள்” என்றார். இன்று அவர் சொன்னது உண்மையாகிவிட்டது.

குடுகுடுப்பை சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க , யாரையும் நம்ம முடியல

அப்படியே கொஞ்சம் விளம்பரம்.
காப்பீட்டின் அவசியம்

புருனோ Bruno சொன்னது…

//அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்த நிறுவனங்களில் காப்பீடு செய்யாமால் நிறைய சலுகைகள் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.//

நல்ல வார்த்தைகள்

அரசு வேண்டாம். தனியார் தான் சிறந்தது என்று எழுதும் சில பதிவர்கள் கடந்த ஒரு மாதமாக பொருளாதாரம் குறித்து எழுதாமல் அமைதியாக இருக்கிறார்களே.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தலைப்பே ரசிக்கும் படியாக இருக்கிறது.
உள்ளே உள்ள அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப் பெற்ற கடன் அட்டைகளை ஒவ்வொன்றாக திருப்பிக் கொடுத்துவருகிறேன். கடன் அட்டை சில நேரங்களில் பயன் படலாம். பல நேரங்களில் நம் கையைக் கடிக்கும் அட்டைகள்! காப்பீட்டு நிறுவனங்கள் காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் நேரம் இது, நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நேர்ந்த கதி இன்னும் பல நிறுவனங்களுக்கு ஏற்படலாம். பீ கேர் புல்!

RATHNESH சொன்னது…

சுடுகாட்டு வைராக்கியம், பிரசவ வைராக்கியம், செப்டம்பர் 11 வைராக்கியம், பாஜக அரசு தோற்ற சமயத்து வைராக்கியம், நடுநடுவே கம்யூனிஸ்டுகள் ஆட்டம் காட்டி மிரட்டிய போதைய வைராக்கிய லிஸ்ட்டில் இது புது சீசன். மூன்று முதல் ஆறு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும் போது என்ன மாதிரி பதிவுகள் வரும் என்று தெரியவில்லை. இந்தப் பதிவுக்காக மட்டும் சொல்லவில்லை, இந்த வீழ்ச்சியையும் இதை அடிப்படையாகக் கொண்டும் பணம் செய்யும் வித்தை தெரியாதவர்கள் பங்கு வர்த்தகத்திற்கு ஒத்துவராதவர்கள். அவர்களை ஏமாற்ற வெளியிலிருந்து வர்த்தக நிறுவனங்கள் வரவேண்டியதில்லை; இத்தகையவர்கள், தம்மளவிலுமே எதையும் சேர்த்திருக்க மாட்டர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
சுடுகாட்டு வைராக்கியம், பிரசவ வைராக்கியம், செப்டம்பர் 11 வைராக்கியம், பாஜக அரசு தோற்ற சமயத்து வைராக்கியம், நடுநடுவே கம்யூனிஸ்டுகள் ஆட்டம் காட்டி மிரட்டிய போதைய வைராக்கிய லிஸ்ட்டில் இது புது சீசன். மூன்று முதல் ஆறு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும் போது என்ன மாதிரி பதிவுகள் வரும் என்று தெரியவில்லை. இந்தப் பதிவுக்காக மட்டும் சொல்லவில்லை, இந்த வீழ்ச்சியையும் இதை அடிப்படையாகக் கொண்டும் பணம் செய்யும் வித்தை தெரியாதவர்கள் பங்கு வர்த்தகத்திற்கு ஒத்துவராதவர்கள். அவர்களை ஏமாற்ற வெளியிலிருந்து வர்த்தக நிறுவனங்கள் வரவேண்டியதில்லை; இத்தகையவர்கள், தம்மளவிலுமே எதையும் சேர்த்திருக்க மாட்டர்கள்.
//

ரத்னேஷ்,

உங்கள் பின்னூட்டம் என்னால் ஊகிக்க முடிகிறது..... :) அதையும் மனதில் வைத்தே சேர்த்து பதிவில் எழுதிவிடுகிறேன்.

தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்பது நூற்றாண்டு கால படிப்பினையாக அமையும் என்று எதிர்பார்த்தாலும், மக்கள் எதையுமே அன்றோடு மறந்துவிடுவார்கள் என்கிற லாஜிக் தெரிந்த பொது / தனியார் நிறுவனங்கள் புதுவழியில் மக்களை எப்படியேனும் அனுகிவிடுவர்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
தலைப்பே ரசிக்கும் படியாக இருக்கிறது.
உள்ளே உள்ள அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப் பெற்ற கடன் அட்டைகளை ஒவ்வொன்றாக திருப்பிக் கொடுத்துவருகிறேன். கடன் அட்டை சில நேரங்களில் பயன் படலாம். பல நேரங்களில் நம் கையைக் கடிக்கும் அட்டைகள்! காப்பீட்டு நிறுவனங்கள் காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் நேரம் இது, நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நேர்ந்த கதி இன்னும் பல நிறுவனங்களுக்கு ஏற்படலாம். பீ கேர் புல்!
//

ஜோபா,

என்னிடம் டிபிஎஸ் காரன் கடன் அட்டைகளை (ஒட்டிக் கொண்டு இரத்தம் உறிஞ்சுவதால் அட்டையோ ?) என்னிடம் வலிய திணித்து இருக்கிறான். ஓரிரு முறை முன்பதிவுக்காக பயன்படுத்தியதோடு சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

// புருனோ Bruno said...


நல்ல வார்த்தைகள்

அரசு வேண்டாம். தனியார் தான் சிறந்தது என்று எழுதும் சில பதிவர்கள் கடந்த ஒரு மாதமாக பொருளாதாரம் குறித்து எழுதாமல் அமைதியாக இருக்கிறார்களே.
//

புருனோ,

பிரச்சனை என்று வரும் போது அந்தந்த தரப்பு மெளனம் காப்பது தானே இயற்கை ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க , யாரையும் நம்ம முடியல

அப்படியே கொஞ்சம் விளம்பரம்.
காப்பீட்டின் அவசியம்
//

குடுகுடுப்பை,

பாராட்டுக்கு நன்றி,

காப்பிடு மிகத் தேவையான ஒன்று. ஆனால் சரியான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் இடுகையின் சுட்டிக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
கோவி,

நான் காப்பிட்டுக்கு எல் ஐ சி யைத்தான் நம்புகிறேன். பத்திரமானது என்பதுதான் காரனம்.

ஆனா நமது சேமிக்கும் பழக்கம் பல்வேறானது. நகை, சீட்டு, இடம், வங்கி என்று பலவேறாகப் பிரித்து சேமிப்பதால் ஒன்று கைவிட்டாலும் ஒன்று தூக்கிவிடும்.

எல்லாவற்றையும் ஒன்றிலேயே முதலீடு செய்வதுதான் தவறு. நானும் பங்கு மார்க்கட்டில் முதலீடு செய்திருந்தேன். சென்செக்ஸ் 7000க்கு மேல் எகிறும் போதே எனது ஆடிட்டர் அலோசனை சொன்னார். ”என்ன காரனத்திற்காக ஏறுகிறது என்பது தெரியவில்லை. டெக்னிக்கலாக அனாலிசிஸ் பண்ண முடிவதில்லை. எனவே வெளியேருங்கள்” என்றார். இன்று அவர் சொன்னது உண்மையாகிவிட்டது.
//

அண்ணாச்சி,

நீங்கள் சொல்வது (எனக்கு தெரிந்து) யாவும் உண்மை. என்னிடமும் எல் ஐ சி பாலிசி இருக்கிறது. வீட்டுக்கார அம்மா நகைகள் வாங்கும் போது நான் 'நோ' சொல்வதே இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...
தனியார் காப்பீட்டு
நிறுவனதிலும் Term insurence எடுத்தால் பாதுகாப்பனதுதான். ஆனால் அவர்கள் அதை மார்க்கெட் செய்வதில்லை.//

கிருஷ்ணா,
வெவரமானவர்கள் தான் ! :)

//L I C யிலும் கூட Unit linked Insurence Scheme இல் முதலீடு செய்து இருந்தால் நஷ்டம் தான்.
//

பலர் வட்டி விகிதத்துக்கு ஆசைப்பட்டு அப்படித் 'தானே' செய்துவிட்டு சிக்கிக் கொள்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
அண்ணா..!
எங்க நைனா ஒண்ணு சொல்வார்..."
//

நைனா,

உங்கள் அனுகுமுறை எளிதானது, நேர்மையானது, பிரச்சனை இல்லாதது, நானும் பின்பற்ற முயல்கிறேன். நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்