இரண்டாம் முறை தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு என்பது மறுபடியும் கிடைத்த நல்வாய்ப்பு, ஏதாவது மாறுபட்டு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஓரளவு எழுதிய அனைத்து இடுகைகளும் எனக்கு மன நிறைவைத் தந்தது, மூன்றே மூன்று இடுகைகளுக்கான தகவல்களை மட்டுமே முன்கூட்டித் திரட்டி இருந்தேன், மற்றபடி அனைத்து இடுகைகளும் அன்றன்றே எழுதி வெளியிட்டவையே, இடையில் நான் உணர்ந்த நில அதிர்வு பற்றிய தகவலை என்னுடைய மற்றொரு பதிவில் வெளியிட்டேன், நில அதிர்வு நடந்த ஐந்தாம் நிமிடம் மற்ற ஊடங்களில் வெளிவருவதற்கு முன்பே நில அதிர்வை அறியும் USGS வெப்பதளத்தில் அதிர்வு அளவை மட்டும் சரி பார்த்துவிட்டு உடனேயே நில அதிர்வின் தகவலையும் சுனாமி விழிப்புணர்வு குறித்து பதிவுலகம் அறியச் செய்தது சென்றவாரத்தில் நட்சத்திரப் பதிவுகளைத் தாண்டி எனக்கு மனநிறைவைத் தந்தது, வலைப்பதிவுகளில் பலம் அது தான்,. வெளியே எந்த ஒரு ஊட்கத்திலும் இது போன்ற எச்சரிக்கைக் குறித்தத் தகவலை உடனேயே வெளியிட்டுவிடமுடியாது, அதை நாம் ஊடகப் பொறுப்புணர்வு என்று வகைப்படுத்தாவிட்டாலும், அவர்கள் கொடுக்கும் தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று, நடக்காத ஒன்று என்று தெரியும் பொழுது ஊடகத்தின் பெயர் கெட்டுவிடும், அதனால் இது போன்ற உடனேயே எச்சரிக்கைச் செய்ய வேண்டிய தகவல்களுக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்களுக்கும், மேலிடத்து அனுமதிக்கும் காத்திருப்பர், நமக்கு (வலைப்பதிவர்களுக்கு) அது போன்ற தடைகள் எதுவும் இல்லாததால், நாம் நேரிடையாக அறிந்தத் தகவலை உடனேயே வெளியிட்டுவிட முடியும்.
நட்சத்திர வாரத்தில் எழுதிய அனைத்துப் பதிவுகளுமே 'வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை' யில் வந்து போனது, ஒரே நாளில் எழுதிய மூன்று இடுகைகள் கூட அவ்வாறு அதிகம் பார்வையிடப்பட்ட பட்டியலில் இருந்தாலும், தமிழ்மண திரட்டி வரையறையின் படி ஒருநாளில் ஒருவரின் ஒரு இடுகை மட்டுமே முகப்பில் காட்டப்படும் என்பதால் மற்ற இடுகைகள் முகப்புப் பக்கத்தில் வரவில்லை, ஆனால் தமிழ்மணத்தின் தனிப்பக்கமான மற்றொரு 'இன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்' பகுதியில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். எனது இடுகைத் தலைப்பும் உட்பொருளும் படிப்பவர்களை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்.
மேலும் எழுதிய சில இடுகைகளை, 'திகட்டும்' என்பதால் நான் வெளியிடவில்லை, அதை நான் பிறகு மற்றொரு நாள் வெளியிடுவேன்.
வாழ்த்து மற்றும் கருத்துரை விட்டுச் சென்ற பதிவர் அன்பர்கள்
Robin, புதுகை.அப்துல்லா, kari kalan,பிரியமுடன் பிரபு, ராமலக்ஷ்மி, மோகன் குமார், கபிலன், ரவிச்சந்திரன், என். உலகநாதன், முனைவர் பரமசிவம், துளசி கோபால், T.V.ராதாகிருஷ்ணன், தேவன் மாயம்,தமிழ்சேட்டுபையன், தனிமரம், சேலம் தேவா, அம்பலத்தார், புதுகை.அப்துல்லா, ராஜ நடராஜன், thequickfox, குமரன் (Kumaran), nigalkalathil siva, Amudhavan, ஆ.ஞானசேகரன், நண்டு @நொரண்டு -ஈரோடு, ILA(@)இளா, கிரி, SathyaPriyan, சுவனப்பிரியன், நட்புடன் ஜமால், இராம.கி, தருமி, சிவபாலன்,Vinoth Kumar, வவ்வால், ராஜ நடராஜன், அறிவன்#11802717200764379909, Vairai Sathish, அன்பை தேடி,,,அன்பு, நம்பள்கி!, கல்வெட்டு, சார்வாகன், தறுதலை, renga, மாதேவி, Jawahar,மௌனகுரு, jaisankar jaganathan,புலவர் சா இராமாநுசம், கிளியனூர் இஸ்மத், அமர பாரதி, renga, அன்பு ஆமீரா, BADRINATH, Krishna Moorthy S, முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ், guna thamizh, கிரி, Karthik Vasudhevan, koodal bala, விழித்துக்கொள், அப்பாதுரை, இராஜராஜேஸ்வரி, வே.சுப்ரமணியன், எல் கே, Ramachandranwrites, பழனி.கந்தசாமி, பனிமலர், O.R.B Raja, ரமேஷ் வெங்கடபதி, மாயன்:அகமும் புறமும், Anonymous, தமிழ் ஓவியா, smart, kamalakkannan, Chilled Beers, Gaana Kabali மற்றும் ganabathy
- இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், பெரும்பாலான பதிவுகள் அன்றன்றே எழுதி வெளியிட்டச் சூழலில் பின்னூட்டங்களுக்கு உடனடியாக மறுமொழிய முடியவில்லை.
மேலும் எனக்கு அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் குறுந்தகவலால் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், இடுகைகளை வாசித்த அன்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(நட்சத்திர வார இடுகைகளை வாசித்தவர்கள் எண்ணிக்கை : 8,771)
நட்சத்திர பதிவர் வாய்ப்பு நாம் கேட்டுவாங்குவதில்லை, அதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுக்கிறார்கள் என்று பொருளும் இல்லை, நன்றாக எழுதிக் கொண்டு வந்தால் தமிழ்மண நிர்வாகிகளின் கவனத்திற்கு செல்லும், அல்லது தமிழ்மணம் நிர்வாகிகளை அறிந்தவர்கள் நன்றாக எழுதும் பதிவர்களின் பெயர்களை பரிந்துரைப்பார்கள். அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அதை மட்டுமே அல்லது பிரச்சார உத்தியில் எழுதுபவர்களுக்கு அவ்வாய்ப்புக் கிடைக்காது என்றே நினைக்கிறேன், இவை எனது அவதனிப்பின் மூலமாக அறிந்துள்ள தனிப்பட்ட கருத்து,
திரும்பப் படித்துப் பார்க்கும் நேரமின்மையால் நட்சத்திர இடுகைகளாக எழுதியவற்றின் எழுத்துப் பிழைகளை சரிபார்க்க முடியவில்லை. எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.
எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்மணம் நிர்வாகக் குழு மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்துவரும் இந்தவார நட்சத்திரப் பதிவருக்கும் நல்வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்.
































