பின்பற்றுபவர்கள்

14 அக்டோபர், 2008

"மந்திரமாவது நீறு" - எனது பொருள் விளக்கம் !

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவார் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச் சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. - தமிழ்விக்கிப் பீடியாவில் ஞானவெட்டியான் ஐயா சைவ மேற்கோள் காட்டி சிறப்பான விளக்கம் எழுதி இருந்தார்

திருநீறு செய்வதற்கு மாட்டு சாணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ? என்பது வேறொரு சிறப்புக் காரணமாக அந்நாளில் கால்நடை செல்வங்கள் மிகுதியாக இருந்திருக்கிறது, அதுவும் உழவுத் தொழில் முதல், அன்றாடம் அருந்தும் பால்வரை 'ஆ' க்களின் துணையின்றி அமைந்தது இல்லை. காளையைவிட பசுவின் சாணமே தெய்வீகமாகப் போற்றப்பட்டதற்குக் காராணமாக பால் கொடுக்கும் தாய்மை உடையது பசு என்ற காரணமாக இருக்கலாம்.

சைவம் வளர்வதற்கு முன்பு அதாவது களப்பிரர் ஆட்சிக்காலத்திற்க்கு முன்பு 'திருநீறு' அணியும் வழக்கம் பரவலாக இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. விக்கிப்பீடியாவில் திருநீற்றின் காலம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எனினும் சைவம் தழைத்தப் பிறகே இவை பரவலாக வழக்கத்திற்கு வந்திருக்கிறது, இந்து சமய வடநாட்டினர் திருநீறு அணியும் பழக்கம் தற்காலத்திலும் கூட உடையவர் அல்லர், அவர்கள் சந்தனம், குங்குமம் போன்றவற்றைத் தான் பயன்படுத்துகிறார்கள்

இந்திய சமயங்கள் அனைத்திலுமே 'ஆன்மா' என்ற நம்பிக்கையும் அது நெற்றியில் புருவ மத்தியில் இருக்கிறது என்ற நம்பிக்கையும் உண்டு, இதன் காரணாமாகவே நெற்றியில் சமய நம்பிக்கைச் சின்னமாக திலகம் இட்டுக் கொள்ளுதல், திருநீற்றுப் பட்டைகள், நாமக் கோடு, அதன் நீட்சியாக U,V என பரிணமித்து இருக்கிறது.

அனைத்தும் கடவுள் என்ற நம்பிக்கையில் சந்தனம் இருக்க வேண்டிய நெற்றியில் சாணியை (எரித்து) பூசுகிறார்கள். விபூதியில் விஞ்ஞானம் இருக்கிறது, அதற்காக பரிந்துறைக்கப்பட்டது என்றெல்லாம் சொல்லுகிறார்கள், அது உண்மையாக இருந்தாலும், இன்றைய தலைவலி தையலங்கள் கொடுக்கும் உடனடியான பலனுக்கு இணையான பலன் அதில் இருக்குமா என்பதில் எனக்கு ஐயமே. அதை பக்திப் பெருக்குடன் அணிந்து கொண்டவர்கள் மாட்டு சாணத்திற்கு கொடுத்த மரியாதையை சக மனிதனுக்குக் கொடுத்தார்களா என்றும் பார்பது நலம், அணிந்து கொள்பவர்களுக்கு மன அளவில் கூட எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாத திருநீற்றின் மகிமை என்ன வென்று அடியேனுக்கு புரிவதே இல்லை.

திருநீறு அணிவதால் வரும் என சொல்லப்பட்ட பலன்கள்: தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்து பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். (இந்த பத்தியை நான் எழுதவில்லை)

இன்றைய பலன்கள் : அணிந்து கொண்டால் பக்திமான் என்ற தோற்றம் கிடைக்கும், இவன் திருடனா, கொள்ளைக்காரனா, கொலைகாரனா, மற்ற பாதகங்களைச் செய்யக் கூடியவனா என்று உடனே அறிந்து கொள்ள முடியாது. குற்றங்களில் இருந்து மறைத்துக் கொள்ள சிறு உதவியேனும் செய்கிறது. பழனி போன்ற சைவத் திருக் கோவில்களில் பெரும அளவில் விற்கக் கூடிய, லாபம் ஈட்டும் நல்ல விற்பனைப் பொருள். நுணுக்கமான துகள்களாக மாற்றி விரலிடுக்கில் ஒளித்து வைத்துக் கொள்ள வசதியாக இருப்பதன் மூலம், காற்றிலிருந்து விபூதி வரவழைக்கும் மேஜிக் செய்து அற்புதம் நிகழ்த்த எளிதாக இருப்பதால் இக்காலத்திற்கும் ஏற்றவாறு 'மந்திரமாவது திருநீறு' என்ற சமயக்கருத்தின் பொருள் மிகச் சரியாக பொருந்தி வருகிறது.

34 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

//////அதை பக்திப் பெருக்குடன் அணிந்து கொண்டவர்கள் மாட்டு சாணத்திற்கு
கொடுத்த மரியாதையை சக மனிதனுக்குக் கொடுத்தார்களா என்றும் பார்பது நலம்,
அணிந்து கொள்பவர்களுக்கு மன அளவில் கூட எந்த ஒரு மாற்றத்தையும்
ஏற்படுத்தாத திருநீற்றின் மகிமை என்ன வென்று அடியேனுக்கு புரிவதே இல்லை.//////

இப்போது சத்தியமாகப் புரியாது. புரியும் காலம் வரும்!:-))))
புரியும் சக்தியை அல்லது சூழ்நிலையைக் கொடுக்கும்படி அந்த
நீலாயதாட்சணியை வேண்டிக்கொள்கிறேன்!

நீலாயதாட்சணி யாரெண்று தெரியுமா?
நாகை தொலைபேசி இணைப்பகத்தைத் தொடர்பு கொண்டு கேட்கவும்!

Subbiah Veerappan சொன்னது…

//////இன்றைய பலன்கள் : அணிந்து கொண்டால் பக்திமான் என்ற தோற்றம் கிடைக்கும்,
இவன் திருடனா, கொள்ளைக்காரனா, கொலைகாரனா, மற்ற பாதகங்களைச்
செய்யக் கூடியவனா என்று உடனே அறிந்து கொள்ள முடியாது. குற்றங்களில்
இருந்து தப்பிக்க சிறு உதவியேனும் செய்கிறது. பழனி போன்ற சைவத் திருக்
கோவில்களில் பெரும அளவில் விற்கக் கூடிய, லாபம் ஈட்டும் நல்ல விற்பனைப்
பொருள். நுணுக்கமான துகள்களாக மாற்றி விரலிடுக்கில் ஒளித்து வைத்துக் கொள்ள
வசதியாக இருப்பதன் மூலம் மேஜிக் செய்து அற்புதம் நிகழ்த்த எளிதாக இருப்பதால்
இக்காலத்திற்கும் ஏற்றவாறு 'மந்திரமாவது திருநீறு' என்ற சமயக்கருத்தின் பொருள்
மிகச் சரியாக பொருந்தி வருகிறது./////

உங்கள் பக்தர்களுக்கு ஏற்ற விளக்கம்!:-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்போது சத்தியமாகப் புரியாது. புரியும் காலம் வரும்!:-))))
புரியும் சக்தியை அல்லது சூழ்நிலையைக் கொடுக்கும்படி அந்த
நீலாயதாட்சணியை வேண்டிக்கொள்கிறேன்!

நீலாயதாட்சணி யாரெண்று தெரியுமா?
நாகை தொலைபேசி இணைப்பகத்தைத் தொடர்பு கொண்டு கேட்கவும்!//

சுப்பையா ஐயா,

நான் (பிறருக்கு) சொல்ல வேண்டிய தெல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் ! ஆனால் யாருக்கு என்று சரியாகச் சொல்லவில்லையே ! ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது எனக்கு எப்போதுமே தேவைப்படாது, பொருந்தாது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்போது சத்தியமாகப் புரியாது. புரியும் காலம் வரும்!:-))))
புரியும் சக்தியை அல்லது சூழ்நிலையைக் கொடுக்கும்படி அந்த
நீலாயதாட்சணியை வேண்டிக்கொள்கிறேன்!//

எனக்கு எதாவது ஆகனும், அதன் முலம் நான் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் உங்களின் உள்ளத்தில் பொங்கும் பக்திப் பெருக்கை நினைத்து மெய் சிலிர்க்கிறேன். அந்த சிலிர்ப்பு சந்நிதானத்தில் நின்றாலும் கிடைக்காது !

:)

//நீலாயதாட்சணி யாரெண்று தெரியுமா?
//

நேரடியாகவே பார்த்து இருக்கிறேன்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஆயுத பூஜையின் போது திருநீர்யிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததன் மகிமையும் சொல்லுங்கள் கண்ணன்.. எனக்கு விஜயகாந் ஞாபகம்தான் வந்தது.

Subbiah Veerappan சொன்னது…

/////எனக்கு எதாவது ஆகனும், அதன் முலம் நான் புரிந்து கொள்ள வேண்டும்
என்று வேண்டிக் கொள்ளும் உங்களின் உள்ளத்தில் பொங்கும் பக்திப்
பெருக்கை நினைத்து மெய் சிலிர்க்கிறேன். அந்த சிலிர்ப்பு சந்நிதானத்தில்
நின்றாலும் கிடைக்காது !////

இப்போது கொஞ்சம் உறைக்க ஆரம்பித்திருக்கிறது.
நீலாயதாட்சணி என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்துவிட்டாள் என்று நினைக்கிறேன்:-)))))

எதாவது ஆகித்தான் அவள் உணரவைப்பாள் என்று நினைக்க வேண்டாம்.
ஆகாமலும் உணரவைப்பாள்.இறைவிக்கு இல்லாத சக்தி எது?

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்போது கொஞ்சம் உறைக்க ஆரம்பித்திருக்கிறது.
நீலாயதாட்சணி என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்துவிட்டாள் என்று நினைக்கிறேன்:-)))))//

உறைத்தால் தண்ணீர் நிறைய குடியுங்கள், இல்லாட்டி வயுறு கடுப்பும் வந்துடும் !

SP.VR. SUBBIAH சொன்னது…

///////ஆ.ஞானசேகரன்
ஆயுத பூஜையின் போது திருநீர்யிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததன்
மகிமையும் சொல்லுங்கள் கண்ணன்.. எனக்கு விஜயகாந் ஞாபகம்தான் வந்தது.//////

அது நான்காண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம்
அப்படிப் பக்திப்பழமாக இருந்தவர்தான் இப்படி மாறிவிட்டார்
பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, பல பதிவுகளைப் படித்ததன் விளைவாக குழம்பிப் போய்விட்டார்.
தெளிவு பிறக்குமா? பிறக்காதா?
மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவாரா? அல்லது மாட்டாரா?
நீலாயதாட்சணிக்கே வெளிச்சம்!!!!!:-)))))

VSK சொன்னது…

நம்ம் அன்புக் கோவியாரை இப்படி எல்லாம் எழுதவைப்பதே அந்த நீலதயாக்ஷியின் கருணை இல்லாமல் வேறென்ன ஆசானே!

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK 11:00 AM, October 14, 2008
நம்ம் அன்புக் கோவியாரை இப்படி எல்லாம் எழுதவைப்பதே அந்த நீலதயாக்ஷியின் கருணை இல்லாமல் வேறென்ன ஆசானே!
//

ஆமாம் ஆமாம் !

சைவர்களுக்கு'உலகெல்லாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தது போல் எனக்கு இந்த பதிவை எழுத அருள் கொடுத்து இருக்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH 10:37 AM, October 14

அது நான்காண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம்
அப்படிப் பக்திப்பழமாக இருந்தவர்தான் இப்படி மாறிவிட்டார்
பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, பல பதிவுகளைப் படித்ததன் விளைவாக குழம்பிப் போய்விட்டார்.
தெளிவு பிறக்குமா? பிறக்காதா?
மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவாரா? அல்லது மாட்டாரா?
நீலாயதாட்சணிக்கே வெளிச்சம்!!!!!:-)))))
//

சுப்பையை ஐயா,

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தப் படம் இல்லை, சென்றவாரம் எடுத்தவைதான், இன்னும் புகைப்படக் கருவியில்யே இருக்கிறது, வேண்டுமானால் புகைப்படக் கருவியில் இருப்பதையே படம் எடுத்துக் காட்டுகிறேன். :)

எதை வைத்து நீங்கள் தெளிவடைந்தவராகவும், என்னை தெளிவற்றவனாகவும் நினைக்கிறீர்கள் ?

திருநீற்றுப் பட்டையின் மூன்று கோடுகள் எதைக் குறிக்கிறதென்றாவது தெரியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
ஆயுத பூஜையின் போது திருநீர்யிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததன் மகிமையும் சொல்லுங்கள் கண்ணன்.. எனக்கு விஜயகாந் ஞாபகம்தான் வந்தது.
//

ஞானசேகரன்,

நம்ம பதிவர் சர்வேஷன் எனது புகைப்படத்தில் கிராபிக்ஸ் பட்டை போட்டு வெளி இட்டு இருந்தார், அவரது ஆசையை நிறைவேற்றும் வண்ணம் உண்மையான படத்தையே எடுத்துப் போட்டேன். வெறொன்றும் சிறப்புக் காரணம் இல்லை.

Subbiah Veerappan சொன்னது…

//////எதை வைத்து நீங்கள் தெளிவடைந்தவராகவும், என்னை தெளிவற்றவனாகவும் நினைக்கிறீர்கள் ?///

நான் தேளிந்தவனா? யார் சொன்னது?

தெளிவிருந்தால் ஏன் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கப்போகிறேன்?
அல்லது மற்ற பதிவுகளைப் போய் ஏன் படிக்கப்போகிறேன்?
அதைவிட நேரத்தைக் கெடுத்து ஏன் பின்னூட்டம் போடப்போறேன்?

சுஜாதா சொன்னதுபோல பதிவுகளில் எழுதி ஒன்றும் சாதிக்கப்போவதில்லை!
பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லாதது இந்தப் பதிவு எழுதும் வேலை!

அதை என்றைக்கு முழுமையாக உணர்ந்து, பதிவு எழுதுவதை நிறுத்துகிறேனோ
அன்றைக்குத்தான் நான் தெளிவடைந்தவன் ஆவேன்!

ஏழு கோடி தமிழர்களில் (என் பதிவுகளை) ஒரு இருநூறு பேர்கள் படிக்கிறார்கள்.
25 பேர்கள் பின்னூட்டம் போடுகிறார்கள்
அதற்குப்போய் ஏன் எழுதவேண்டும்?
என்றைக்குத்தான் புத்தி வருமோ தெரியவில்லை?

அந்த நிலைபெற (புத்திவந்த நிலை) எனக்கு பழநி அப்பன்தான் அருள் புரிய வேண்டும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

நான் தேளிந்தவனா? யார் சொன்னது?

தெளிவிருந்தால் ஏன் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கப்போகிறேன்?
அல்லது மற்ற பதிவுகளைப் போய் ஏன் படிக்கப்போகிறேன்?
அதைவிட நேரத்தைக் கெடுத்து ஏன் பின்னூட்டம் போடப்போறேன்?//

வாத்தியார் ஐயா, நான் மேற்சொன்ன வரிகள் இவ்வளவு சிந்தனைகளைத் தருமா ? ஞானி ஆகிவிட்டீர்களா ?

//சுஜாதா சொன்னதுபோல பதிவுகளில் எழுதி ஒன்றும் சாதிக்கப்போவதில்லை!
பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லாதது இந்தப் பதிவு எழுதும் வேலை!//

வாழ்கைக் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். அடுத்த நாள் மரணம் என்று தெரிந்துவிட்டால் வாழ்ந்தது கூட பொருளற்றதாகவே இருக்கும்.

//அதை என்றைக்கு முழுமையாக உணர்ந்து, பதிவு எழுதுவதை நிறுத்துகிறேனோ
அன்றைக்குத்தான் நான் தெளிவடைந்தவன் ஆவேன்!
//
மாணவர்கள் படையைத் திரட்டு உங்கள் வீட்டு முன்பு மறியல் நடத்துவேன், அதற்கு நானே தலைமை ஏற்பேன்.


//ஏழு கோடி தமிழர்களில் (என் பதிவுகளை) ஒரு இருநூறு பேர்கள் படிக்கிறார்கள்.
25 பேர்கள் பின்னூட்டம் போடுகிறார்கள்
அதற்குப்போய் ஏன் எழுதவேண்டும்?
என்றைக்குத்தான் புத்தி வருமோ தெரியவில்லை?//

இதுக்கெல்லாம் ஒட்டுமொத்த தமிழர்கள் கணக்கு சரியாக வருமா ? மொத்தப் பதிவர்களின் கணக்கில் தான் சரியாக கணக்கிட வேண்டும்.
ஏழுகோடித் தமிழர்களில் கலைஞரை, அம்மாவைத் தெரியாதவர்கள் கூட உண்டு


//அந்த நிலைபெற (புத்திவந்த நிலை) எனக்கு பழநி அப்பன்தான் அருள் புரிய வேண்டும்!//

உங்களுடனேயே இருப்பவரை எங்கே தேடுகிறீர்கள் ? நம்பிக்கை இன்மையோ ?

Subbiah Veerappan சொன்னது…

//அந்த நிலைபெற (புத்திவந்த நிலை) எனக்கு பழநி அப்பன்தான் அருள் புரிய வேண்டும்!//
உங்களுடனேயே இருப்பவரை எங்கே தேடுகிறீர்கள் ? நம்பிக்கை இன்மையோ ?/////

இதில் வேண்டுதல் மட்டுமே உள்ளது!
தேடுதல் எங்கே உள்ளது?
நம்பிக்கை இன்மை எங்கே உள்ளது?

திசைதிருப்பும் போக்கு எதற்கு?
ஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டுப் பதில் எழுதப் பழகுங்கள்!
என்ன அவசரம்?
உங்கள் பதிவுதானே?
எங்கே ஓடிப்போகப் போகிறது?

Subbiah Veerappan சொன்னது…

//////VSK 11:00 AM, October 14, 2008
நம்ம் அன்புக் கோவியாரை இப்படி எல்லாம் எழுதவைப்பதே அந்த நீலதயாக்ஷியின்
கருணை இல்லாமல் வேறென்ன ஆசானே!//////

ஆமாம் சார்! அன்னையின் அருளில்லாமல் எதுவும் இல்லை!
ஆனால் அதை அவர் உணர்ந்த மாதிரித் தெரியவில்லை! அதுதான் சோகம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...


இதில் வேண்டுதல் மட்டுமே உள்ளது!
தேடுதல் எங்கே உள்ளது?
நம்பிக்கை இன்மை எங்கே உள்ளது?

திசைதிருப்பும் போக்கு எதற்கு?
ஒருமுறைக்கு இருமுறை படித்துவிட்டுப் பதில் எழுதப் பழகுங்கள்!
என்ன அவசரம்?
உங்கள் பதிவுதானே?
எங்கே ஓடிப்போகப் போகிறது?
//

வாத்தியார் ஐயா,

நான் படித்துவிட்டு தான் சொன்னேன், உங்களைத் தாழ்த்திச் சொல்வதற்காக தட்டச்சு செய்வேனா ? அதில் எதாவது பலன் இருக்கிறதா ? எந்த ஒரு லாப நோக்கிற்காகவும் தவறாக ஒன்றைச் சொல்வது வழக்கம் இல்லை. திசைத் திருப்பவே இல்லை. திசை காட்டும் ஆளவுக்கு அறிந்தவனும் இல்லை


சரி உங்களுடன் இருப்பவரிடம் ஏன் வேண்டுதல் செய்கிறீர்கள், கைகள் உங்களது வேண்டிக் கொண்டா அசைக்கிறீர்கள் ? மனதும் உங்களது எதாவது வேண்டிக் கொண்டா நினைக்கிறீர்கள் ? உங்களின் மனதோடு மணமாக மனமாக இருப்பவரிடம் வேண்டுதல் எதற்கு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH 12:37 PM, October 14, 2008
//////VSK 11:00 AM, October 14, 2008
நம்ம் அன்புக் கோவியாரை இப்படி எல்லாம் எழுதவைப்பதே அந்த நீலதயாக்ஷியின்
கருணை இல்லாமல் வேறென்ன ஆசானே!//////

ஆமாம் சார்! அன்னையின் அருளில்லாமல் எதுவும் இல்லை!
ஆனால் அதை அவர் உணர்ந்த மாதிரித் தெரியவில்லை! அதுதான் சோகம்!
//

வாத்தியார் ஐயா,

நீங்கள் சொல்லிய அன்னையின் தமிழ் பெயர் கருத்தடங்கன்னி அன்னை. வடமொழி வழுவில் நீலாயதாட்சி என்று அழைக்கிறார்கள். கருவறையில் தமிழ் பெயர் தான் இருக்கிறது.

சோகப்படாதீர்கள், எனக்கு அஷ்ட சக்திகளின் அருளே உண்டு !
:)

Subbiah Veerappan சொன்னது…

/////சரி உங்களுடன் இருப்பவரிடம் ஏன் வேண்டுதல் செய்கிறீர்கள்,
கைகள் உங்களது வேண்டிக் கொண்டா அசைக்கிறீர்கள் ?
மனதும் உங்களது எதாவது வேண்டிக் கொண்டா நினைக்கிறீர்கள் ?
உங்களின் மனதோடு மணமாக மனமாக இருப்பவரிடம் வேண்டுதல் எதற்கு ?////

அடடா என்னே விளக்கம்!
மனதோடு மனதாக இருப்பவன், பதிவுகள் என்ற அவலத்தில் என்னை
ஏன் சிக்கவைத்தான்?
அதை (அந்த அவலத்தை) எனக்கு முழுமையாக உணரவைத்து இந்தப் பதிவுகள்
என்ற அவலத்தில் இருந்து எப்போது என்னை மீட்பான்?
வேண்டாமல் எதுவும் கிடைக்காது; அதற்குத்தான் வேண்டுதல்!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
அடடா என்னே விளக்கம்!
மனதோடு மனதாக இருப்பவன், பதிவுகள் என்ற அவலத்தில் என்னை
ஏன் சிக்கவைத்தான்?
அதை (அந்த அவலத்தை) எனக்கு முழுமையாக உணரவைத்து இந்தப் பதிவுகள்
என்ற அவலத்தில் இருந்து எப்போது என்னை மீட்பான்?
வேண்டாமல் எதுவும் கிடைக்காது; அதற்குத்தான் வேண்டுதல்!
//

வாத்தியார் ஐயா,

இதற்கு ஆன்மிகத்தில் ஒரு சொல் இருக்கிறது

"எல்லாம் அவன் செயல்"

ஜோதிடத்தில் இன்னொரு சொல் இருக்கிறது

"எல்லாம் விதியின் விளையாட்டு"

எல்லா மதத்திற்கும் பொதுவான சொல் ஒன்று இருக்கிறது

"உலகம் என்பது நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள்"

உங்களுக்கு இதில் மூன்றிலுமே ஒப்புதல் இருக்கும். உங்களுக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள் !

Ŝ₤Ω..™ சொன்னது…

***
அனைத்தும் கடவுள் என்ற நம்பிக்கையில் சந்தனம் இருக்க வேண்டிய நெற்றியில் சாணியை (எரித்து) பூசுகிறார்கள்.
***
***
அதை பக்திப் பெருக்குடன் அணிந்து கொண்டவர்கள் மாட்டு சாணத்திற்கு கொடுத்த மரியாதையை சக மனிதனுக்குக் கொடுத்தார்களா என்றும் பார்பது நலம்
***


சிந்திக்க வேண்டிய வரிகள்..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//திருநீறு அணிவதால் வரும் என சொல்லப்பட்ட பலன்கள்: தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்து பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். (இந்த பத்தியை நான் எழுதவில்லை)//

திருநீரு அணிந்து அணிந்து நெற்றியில் பள்ளம் விழுந்து கறுத்து போகிறதே. அதை எப்படி குணப்படுத்தாலாம்? இதை நான் கேட்கவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Ŝ₤Ω..™ 3:07 PM, October 14, 2008
***
அனைத்தும் கடவுள் என்ற நம்பிக்கையில் சந்தனம் இருக்க வேண்டிய நெற்றியில் சாணியை (எரித்து) பூசுகிறார்கள்.
***
***
அதை பக்திப் பெருக்குடன் அணிந்து கொண்டவர்கள் மாட்டு சாணத்திற்கு கொடுத்த மரியாதையை சக மனிதனுக்குக் கொடுத்தார்களா என்றும் பார்பது நலம்
***


சிந்திக்க வேண்டிய வரிகள்..
//

Ŝ₤Ω..™ ,

இந்த பதிவின் சுறுக்கமான (சுறுக்கென்று அல்ல) பொருளடக்கமே அந்த இருவரிகள் தான், சரியாக பிடித்துச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நீறில்லா நெற்றி பாழ்

:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
நீறில்லா நெற்றி பாழ்

:-)))))
//

யாராவது வைணவா இருந்தால் ஓடிவாங்க... இராதாகிருஷ்ணன் ஐயா என்னமோ சொல்கிறார்.

:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி 10:00 PM, October 14, 2008


திருநீரு அணிந்து அணிந்து நெற்றியில் பள்ளம் விழுந்து கறுத்து போகிறதே. அதை எப்படி குணப்படுத்தாலாம்? இதை நான் கேட்கவில்லை
//

ஜோதிபாரதி,

பழனியில் 18 சித்தர்களின் அலோசனை பெயரில் தயாரிக்கப்படும் ஒரிஜினல் எஸ் எஸ் சித்தனாதன் விபூதி என்று போட்டிருக்கும் பொட்டலத்தை வாங்குங்கள், அதுவும் ஒரிஜினலா என்று பார்த்து அறிந்து கொள்ள என்ன செய்வது ? லேபுக்குத்தான் அனுப்பனும் !
:))

சிங்கையில் பழனி சித்தனாதன் விபூதி விற்பனையை எனக்கு தெரிந்தவர்கள் தான் எடுத்து இருக்கிறார்கள், அதனால் இப்படி ஒரு வெளம்பரம் !
:))))))

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

//அணிந்து கொள்பவர்களுக்கு மன அளவில் கூட எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாத திருநீற்றின் மகிமை என்ன வென்று அடியேனுக்கு புரிவதே இல்லை.//

எதிராளுக்கு மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பட்டியலிட்டு இருக்கிறீர்களே! அது போதாதா?

Natty சொன்னது…

தல, மறுபடியுமா? திருநீறு என்ன அளித்ததோ இல்லையோ, உங்களுக்கு மற்றொரு பதிவு கொடுத்து சூடான இடுகைக்கு அழைத்து சென்றது ;)

அறிவு என்பது ஒரு அழகான போதை.... அனைத்தும் புரிந்தார் போலவும், தெரிந்தார் போலவும் காட்டி ஒரு போலியான ஈகோவை உள்ளே கொண்டுவந்துவிடும்... ஈகோ ஒன்றும் தவறல்ல.. ஆனால், அது உண்மையான புரிதலை (உணர்தலை) தடுத்துவிடும்...

சமய சின்னங்கள் பெரும்பாலும் Moral of the story மாதிரிதான்...... காமம், வெகுளி, மயக்கம் மூன்றினை விடச்சொல்ல மூன்று பட்டை இடுவதாகவும், நிலையாமையை எடுத்துக்காட்ட சாம்பலை பூசுவதாகவும் எடுத்துக்கொள்ளலாமே!

நன்மையும் தீமையும் நாடி, நலம்புரிந்த தன்மையால் என்பது இங்கேயும் பொருந்துமே!

Adriean சொன்னது…

//எனக்கு எதாவது ஆகனும், அதன் முலம் நான் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் உங்களின் உள்ளத்தில் பொங்கும் பக்திப் பெருக்கை நினைத்து மெய் சிலிர்க்கிறேன். அந்த சிலிர்ப்பு சந்நிதானத்தில் நின்றாலும் கிடைக்காது !//
கடவுள் பற்றாளர்கள் என்றாலே அப்படி தான் அன்பு மயம்.

வால்பையன் சொன்னது…

பாலூட்டிகள் அனைத்துமே தன் குட்டிகளுக்கு பால் கொடுக்கின்றன!
நாம் மட்டுமே பசுவிடம் இருந்து அதை திருடி குடிக்கிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

எதிராளுக்கு மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பட்டியலிட்டு இருக்கிறீர்களே! அது போதாதா?

3:07 AM, October 15, 2008
//

ரத்னேஷ்,
எதிராளிகள் மனதில் மாற்றம் ஏற்படுவதில்லை, அவர்களை பார்க்கிறவர்கள் மனதில் தான் 'பக்திமான், அவதாரம்' என்றெல்லாம் நினைக்க வைத்துவிடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Natty said...
தல, மறுபடியுமா? திருநீறு என்ன அளித்ததோ இல்லையோ, உங்களுக்கு மற்றொரு பதிவு கொடுத்து சூடான இடுகைக்கு அழைத்து சென்றது ;)//

Natty மன்னிக்கனும்,
இந்த இடுகை சூடாகவில்லை :) துந்நூறு பழிவாங்கிவிட்டது. யாராவது மந்திரிச்சி என்பெயரில் வைத்திருக்கனும். :)

//அறிவு என்பது ஒரு அழகான போதை.... அனைத்தும் புரிந்தார் போலவும், தெரிந்தார் போலவும் காட்டி ஒரு போலியான ஈகோவை உள்ளே கொண்டுவந்துவிடும்... ஈகோ ஒன்றும் தவறல்ல.. ஆனால், அது உண்மையான புரிதலை (உணர்தலை) தடுத்துவிடும்... //

பலபேர் தன்னை பெரும் அறிவாளி என்று நினைப்பதால் தான் அகங்காரத்துடன் நடந்து கொள்கிறார்களோ. நீங்கள் சொல்வது உண்மை !

//சமய சின்னங்கள் பெரும்பாலும் Moral of the story மாதிரிதான்...... காமம், வெகுளி, மயக்கம் மூன்றினை விடச்சொல்ல மூன்று பட்டை இடுவதாகவும், நிலையாமையை எடுத்துக்காட்ட சாம்பலை பூசுவதாகவும் எடுத்துக்கொள்ளலாமே! //

சத்தமாகச் சொல்லாதிங்க, காமத்தை விடச் சொல்லுதுன்னு சொன்னால் யாரும் விபூதியை நிலைப்படியில் கூட பூச மாட்டார்கள். :) மற்றதெல்லாம் அடுத்து தான்.

//நன்மையும் தீமையும் நாடி, நலம்புரிந்த தன்மையால் என்பது இங்கேயும் பொருந்துமே!//

சரிதான் !

எனக்கு புரியாதது ஒன்று தான் வேசத்துக்கே மதிப்புக் கிடைக்கிறது என்று நினைத்து வேசமிடுபவர்கள், அதை உண்மையாகவே செய்தால் பெருமதிப்பே கிடைக்கும், ஆனால் யாரும் முயல்வதே இல்லை.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

// Chandran said...
கடவுள் பற்றாளர்கள் என்றாலே அப்படி தான் அன்பு மயம்.
//

டக்குன்னு சாபம் கொடுத்துடுவாங்களா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
பாலூட்டிகள் அனைத்துமே தன் குட்டிகளுக்கு பால் கொடுக்கின்றன!
நாம் மட்டுமே பசுவிடம் இருந்து அதை திருடி குடிக்கிறோம்.
//

மற்ற பாலூட்டிகளிடம் எக்ஸ்ஸாக இல்லை. நாய் 6 வரை போடும் 8 முலைக் காம்புகள் இருக்கும்,

பசு 2 போடுவது அதிகம், 4 காம்புகள் உண்டு, 10 லிட்டர் வரை கூட சுரக்கிறது. கன்றுக்கு சுரப்பதைவிட அதிகமாகவே சுரக்கும். இந்தியாவில் பசுவை தாயாக நினைப்பதால் பலர் பசுவதை செய்வதை எதிர்கிறார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்