பின்பற்றுபவர்கள்

17 மே, 2012

காணாமல் போனவை - கோவணம் !


பண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை என்றால் பட்டுப் புடவையும் பட்டு வேட்டியும் கூட தமிழர்களிடம் இருந்து காணாமல் போய் இருக்கும், ஏதாவது நிகழ்ச்சி அல்லது கோவிலுக்கு செல்லுவதற்கு என்ற அளவில் அவைகள் இன்றும் நம்மிடையே இருப்பது ஆறுதல். உடைகள் அழகுக்காக ? வசதிக்கா ? என்பதைக் காட்டிலும் தோற்றத்திற்காகவும் நன்மதிப்பிற்காகவும் என்கிற பரிணாமங்களாக அந்நிய ஆடைகளையே அணிந்துவருகிறோம், வெயில் நாடுகளில் வேட்டியில் இருக்கும் காற்றோட்டத்தை நீளக் கால்ச் சட்டை (Pant) தந்துவிடாது. இருந்தாலும் சபை நாகரீகம் என்பதாக வேட்டிகள் புறக்கணிக்கப்படுகிறது, தமிழகத்திலும் வேட்டிக் கட்டி அலுவலகம் செல்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரசு அலுவலகங்களில் விதித்தடையாக இல்லாவிட்டாலும் வெட்டி அணிந்து செல்வதை யாரும் வரவேற்பது கிடையாது, நான் துவக்கப் பள்ளியில் படித்த காலங்களில் ஆசிரியர்கள் வேட்டி கட்டிக் கொண்டு வருவார்கள், அரசு அலுவலகம் செல்பவர்களில் கனிசமானவர்கள் வேட்டி அணிந்தவர்களாக இருந்தனர். ரொம்பவும் எளிமையான உடை, அதை கை விட்டுவிட்டது பண்பாட்டுக் கூறுகளுக்கு நட்டம் தான். வேட்டியே காணாமல் போன பிறகு கோவணம் ?

வேட்டிக்கு முன்பே காணாமல் போனது கோவணம், வேட்டி அணிந்தவர்கள் பரவலாக கோடு போட்ட உள்ளாடைக்கு (ராமராஜன் டைப் அண்டர்வேருக்கு) மாறி உள்ளாடைகளிலும் நாகரீகம் என்பது நுழைந்து கொள்ள கோவணம் கட்டிக் கொள்வது முற்றிலுமாக மறைந்து போனது, கோவணம் என்பதே இல்லாதவர்களின் ஒற்றை உடை என்ற அளவில் பார்க்கப்பட்டது, எங்காவது வயலில் வேலை செய்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், சாக்கடைக்குள் இறங்குபவர்கள் தவிர்த்து கோவணம் அணிந்திருப்பவர்கள் எண்ணிக்கை விரைவாக குறைந்தது. 

இடுப்பு சுற்றளவு அளவு பற்றிக் கவலைப்படாமல் இரண்டு முழம் துண்டுத்துணியை இறுக்கமாகவோ, தளர்வாகவோ வசதிக்கேற்ப, அரைஞான் (அரை நாண் - பாதி உடலில் பூணும் கயிறு) கயிற்றில் கட்டிக் கொள்ளும் ஒரு உள்ளாடை என்ற அளவில் இன்றைய நவீன உள்ளாடைகளில் இருக்கும் வசதிகளுக்கு குறைவில்லாமல் மேலாகவே இருந்தது கோவணம். கோவணம் கட்டவதற்கு என்று சுற்றிக் கட்டிக் கொள்ளும் அரைஞான் கயிற்றை மட்டும் இன்றும் பலர் கட்டிக் கொள்கிறார்கள், வெறும் அரைஞான் கயிற்றால் என்ன பயன் என்று தெரியவில்லை, இடுப்பைச் சுற்றிக் கட்டப்படும் கருப்பு அல்லது சிவப்பு நிற பார்பனர் அல்லாதவர்களின் இடுப்புப் பூணூல் போன்று வெறும் வழக்கமாகக் (சம்பிரதாயம்) கட்டப்படுகிறது தமிழக தமிழ் (இந்து) ஆண்களின் அரைஞான் கயிறுகள். சாவியை கட்டுவதற்குக் கூட பயனில்லாத அளவில் அரைஞான் கயிறுகளின் இன்றைய தேவை என்ன வென்றும் தெரியவில்லை.

கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆண்களின் எளிமையான உள்ளாடையாக இருந்தது கோவணம், தலையில் முண்டாசும், உடலில் சிறிய கோவணம் கட்டிக் கொண்டு வேலை செய்பவர்கள், வேலை முடிந்ததும் குளத்தில் இறங்கி குளித்துவிட்டு இடுப்பு மறைக்க குளத்தில் நின்று கோவணத்தை அவிழ்த்து அலசி பிழிந்து தோளில் போட்டுக் கொண்டு துண்டை நனைத்து பிழிந்து உடலை துவட்டிப் பின்னர், அதனை சுற்றிக் கொண்டு மேலே வந்து கோவணத்தை அங்கேயே காய வைத்து கட்டிக் கொண்டு வீடு திரும்புவார்கள். வெறும் கோவணத்தை அணிந்திருப்பதை அறுவெறுப்பாக பார்க்காத சமூகமாக, அதை காம உணர்வுத் தூண்டுதலாகப் பார்க்காத சமூகமாக, பால் கொடுக்கும் தாய்மார்களிடம் கவர்ச்சி தேடாத சமூகமாகத் தான் தமிழ் சமூகம் இருந்தது, இவற்றில் நாகரீகம் என்பது புக இன்றைய மனச் சீர்கேடுகளும் புகுந்துள்ளதை மறுக்கலாகாது.


இன்றைக்கு ஏதோ ஒரு படத்தில் முன்னனி நடிகர் ஒருவர் கோவணம் கட்டிக் கொண்டு நடித்தால் அது புரட்சி என்ற அளவில் அந்தப் பெருமை நடிகருக்கு கிடைக்கும் அளவுக்கு கோவணம் இழுக்காப்பட்டுள்ளது. இன்றைக்கு ஆண்கள் அணியும் ஜட்டிக்கும் குழந்தைகளுக்கு போட்டுவிடும் டயப்பருக்கும் ஈரம் உறிஞ்சுதல் என்பது தவிர்த்து பெரிய வேறுபாடு இல்லை. கோவணத்தின் பயன் என்பதில் அதன் எளிமை, பராமரிப்பு என்பது தவிர்த்துப் பார்த்தாலும் ஆண்களுக்கு மிகவும் ஏற்ற உள்ளாடை என்றே சொல்லப்படுகிறது, குறிப்பாக விரைகள் மிகவும் குளிர்ந்து போகமல் உடல் சூட்டுடன் நெருக்கமாக வைத்திருப்பதற்கு கோவணம் பயனளிக்கிறதாம், இதன் மூலம் விந்தணுக்களும் உற்பத்தியும் பாதிக்கப்படாமல் இருக்குமாம். உடல் சூட்டை விட விரைகள் 2 டிகிரி குறைவாக இருப்பதால் விந்தணுக்கேற்ற வெப்பம் உருவாக்கப்படுகிறது அதனால் தான் மனித விரைகள் உடலுக்கு வெளிப்புறமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் அவை வெளிப்புறமாக இருப்பதால் குளிர்ந்தும் போகும் என்பதால் ஓரள உடலோடு சேர்த்து கட்டி இருந்தால் அதே 2 டிகிரி குறைவான சமநிலை காக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது, இவையெல்லாம் சொல்லக் கேள்விப்பட்டவையே இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள். எப்படிப் பார்த்தாலும் கோவணம் பயனற்றது, நகரீகமற்றது என்று சொல்ல ஒன்றும் இல்லை, அவை உள்ளே அணியப்படும் ஆடை என்பதால் ஒருவர் தாம் கோவணம் தான் கட்டி இருக்கிறேன் என்று வெளிப்படுத்த வேண்டியதற்கான தேவையும் இல்லை. பேண்ட் அணிபவர்கள் உள்ளாடையாக கோவணம் அணிந்தால் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க அவிழ்க்க கொஞ்சம் மெனக்கட வேண்டி இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். மற்றவர்கள் பார்த்துவிடுவார்களே என்பது தவிர்த்து அதில் வேறு நேரடியான பிற சங்கடங்கள் எதுவும் இல்லை.

*****

ஒரு பக்கம் நாம் கோவணத்தை புறக்கணித்தாலும் ஜப்பானிய பாரம்பரிய உள்ளாடை என்ற அளவில் அவர்களிடையே கோவணங்கள் கட்டும் வழக்கம் இன்றும் உள்ளது, தமிழர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் மொழி பண்பாட்டு தொடர்புகளில் கோவணமும் ஒன்று, அவர்களுடைய திருவிழாக்களில் கோவணம் அணிந்து கலந்து கொள்ளும் ஆண்கள் மிகுதி, தவிர சுமோ வீரர்கள் கோவணங்களைத் தான் அணிந்திருப்பார்கள், அவர்களின் கோவணம் தமிழர்களின் கோவணங்களைவிட நீளமான துணியால் ஆனது காரணம் அவர்கள் அரை ஞான் கயிறு கட்டிக் கொள்வதில்லை எனவே வேட்டி அளவுக்கு நீளமான துணியை பிரி (திரித்து) அவற்றை இடுப்பில் சுற்றி அதையே கோவணமாக முடிந்திருப்பார்கள். ஜப்பானிய கோமணத்திற்கு அவர்கள் வழங்கி வரும் பெயர் Fundhosi ((இதில் இருக்கும் தோஷி, வேட்டி வேஷ்டி ஆனது போல், வேட்டியின் ஒரு திரிபு என்றே நினைக்கிறேன்), தற்போதைய ஜப்பானிய கோவணங்கள் நாடா வைத்தும் விற்பனைக்கு கிடைக்கிறது.

For traditional Japanese men, fundoshi is THE underwear of choice at summer! We'll reveal you a bit about the currently popular traditional underpants movement! 
Psst, fashion watch, fundoshi have become the hot shit in Japan recently! No wonder, since this Japanese tied underwear for men is being rediscovered for its comfort. Generally, we would associate fundoshi with traditional pants or the formal attire for Shinto festival. However nowadays, there are all kinds of fun variations for men and women — and its sales are soaring! PingMag will introduce to you a fine selection that still leaves modern-day Japanese in awe.
Written by Ayana
Translated by Natsumi Yamane
Heritage
During the Sengoku periodfundoshi used to be a piece of military clothing only worn by the samurai class, but since the Edo periodfundoshi also became widespread among commoners and various historical sources confirm that it established itself as the standard male tied underwear. With the wave of Westernisation after World War II, however, fundoshi gradually went out of fashion to be taken over by western underwear. 
http://komanamkaupinam.blogspot.com/2008/07/fwd-fundoshi-for-blog.html
*****
இன்றைக்கும் கோவணத்தின் பயன்பாடு என்ற அளவில் மலையாளிகளின் கேரள ஆயுர்வேத உடம்பு பிடிப்புக்கு (மசாஜ்) செல்பவர்களுக்கு கோவணம் தான் கட்டிவிடுவார்கள், இரண்டு முழம் 20 செமி அகலத்தில் ஆன வெள்ளைத் துணியின் நிள வாக்கில் இருபுறமும் ஒரு செமி அளவுக்கு மறு முனைக்கு சற்று கீழ் வரை கிழித்து அதை கோவணமாக கட்டிவிடுவார்கள்.


பழனி மலை முருகனை இன்னும் Jocky ஜட்டிக்கு மாற்றாத அளவில் நாம் கோவணத்தை காப்பாற்றி வருகிறோம் :)

இணைப்புகள்:
http://komanamkaupinam.blogspot.com/

20 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

கோவணம் முற்றிலும் வழக்கொழியவில்லை ,ஆனால் கோவணத்தை கேவலமாகத்தான் நம்மூரிலும் பார்க்கிறார்கள் , ஏன் எனில் பெரும்பாலும் அடிமட்ட நிலையில் வேலை செய்பவர்கள் அணிவதால் என நினைக்கிறேன்.

நகரத்தில் வேட்டியும் கூட மதிப்பிழந்துவிட்டது, வேட்டி அணிந்தால் காட்டான் அல்லது அரசியல்வாதி என்ற நிலைக்கு போய்விட்டது.ஊர்ப்பக்கமெல்லாம் வேட்டிக்கு முதல் மரியாதை தான் இன்றும்.

சென்னையிலே சில கிளப்புகள், நட்சத்திர ஹோட்டல்களில் வேட்டிக்கு தடை உண்டு.நட்சத்திர ஹோட்டல்கள் கூட ஆளுக்கு ஏற்ப அனுமதித்து விடுகிறது.

ஆனால் ஜிம்கானா கிளப்,சென்னை சேப்பாக் கிரிக்கெட் அரங்கில் உள்ள கிளப்,சுகுண விலாஸ் கிளப் ஆகியவை வேட்டி, காலர் இல்லாத டீ.ஷர்ட் ஐ கூட அனுமதிப்பதில்லை.செம்மொழி கொண்ட சென்னையில் தான் இந்நிலை.

சில வருடங்களுக்கு முன் இளையராஜா வேட்டிக்கட்டியதால் அரபு தேசத்தில் நட்சத்திர விடுதியில் அனுமதிக்காமல் அவமரியாதை செய்யப்பட்டு பின்னர் பேச்சு வார்த்தை நடத்தி தங்க வைக்கப்பட்டார்.

அப்போது நான் போட்டப்பதிவு,
இசைஞானி வேட்டிக்கட்டியது தவறா?

விச்சு சொன்னது…

கோவணத்தின் பயன்பாட்டினை எழுதியுள்ளீர்கள்.நல்ல தகவல்களோடு சொல்லியுள்ளீர்கள். இதையே நீங்கள் குறிப்பிட்டது போல் நாடாவோ அல்லது கலர்கலர் துணியோ பயன்படுத்தி கொஞ்சம் மாடர்னாக மாற்றி விற்பனைக்கு வந்தால் அதுவும் பிரபல நடிகர் விளம்பரத்தில் தோன்றி நான் இந்தக்கோவணம்தான் அணிகிறேன் என்று சொன்னால் நிச்சயம் நம்மவர்கள் வாங்குவார்கள்.2 ரூபாய் துணியை 200 ரூபாய்க்கு விற்கலாம். நல்ல பிசினஸ் ஐடியா சொல்லியாச்சு. திறமை உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

dondu(#11168674346665545885) சொன்னது…

நான் கோவணம் கட்டித்தான் எனது முரட்டு வைத்தியத்தையும் செய்தேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வேகநரி சொன்னது…

எங்க பழைய கால உடை பற்றி தெரியாத விடயங்களும் தெரிந்து கொண்டேன்.
//வெறும் கோவணத்தை அணிந்திருப்பதை அறுவெறுப்பாக பார்க்காத சமூகமாக அதை காம உணர்வுத் தூண்டுதலாகப் பார்க்காத சமூகமாக பால் கொடுக்கும் தாய்மார்களிடம் கவர்ச்சி தேடாத சமூகமாகத் தான் தமிழ் சமூகம் இருந்தது, இவற்றில் நாகரீகம் என்பது புக இன்றைய மனச் சீர்கேடுகளும் புகுந்துள்ளதை மறுக்கலாகாது.//
மிக சரி .காமாலையின் தாக்கத்திற்கு உட்பட்டவன் கண்களுக்கு எல்லாமே காம உணர்வை தூண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்வால், இளையராஜாவிற்கு ஏற்பட்ட அவமானம் குறித்த உங்கள் பதிவைப் படித்தேன். :(

சிங்கையில் அலுவலகம் தவிர்த்து எங்கும் வேட்டிக் கட்டிக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//விச்சு கூறியது...
கோவணத்தின் பயன்பாட்டினை எழுதியுள்ளீர்கள்.நல்ல தகவல்களோடு சொல்லியுள்ளீர்கள். இதையே நீங்கள் குறிப்பிட்டது போல் நாடாவோ அல்லது கலர்கலர் துணியோ பயன்படுத்தி கொஞ்சம் மாடர்னாக மாற்றி விற்பனைக்கு வந்தால் அதுவும் பிரபல நடிகர் விளம்பரத்தில் தோன்றி நான் இந்தக்கோவணம்தான் அணிகிறேன் என்று சொன்னால் நிச்சயம் நம்மவர்கள் வாங்குவார்கள்.2 ரூபாய் துணியை 200 ரூபாய்க்கு விற்கலாம். நல்ல பிசினஸ் ஐடியா சொல்லியாச்சு. திறமை உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.//

ஆண்கள் கோமணக் கட்டிக் கொள்வதால் குபேரன் வீட்டுக்குள் வருவான் என்று சொன்னால் கோமண வியாபாரம் பிய்த்துக் கொண்டு போகும், நாடே சோசிய நம்பிக்கையில் தான் இருக்கு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) கூறியது...
நான் கோவணம் கட்டித்தான் எனது முரட்டு வைத்தியத்தையும் செய்தேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நல்லது. அதை நினைவுச் சின்னமாக எடுத்து வைத்து பாதுகாத்து வைக்காமல் இருந்தால் சரி.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//thequickfox கூறியது...
எங்க பழைய கால உடை பற்றி தெரியாத விடயங்களும் தெரிந்து கொண்டேன். //

நன்றி குயிக்ஃபாக்ஸ்

சீனுவாசன்.கு சொன்னது…

எங்கோ மணம் பறக்கும்படி செய்து விட்டீர்கள்!

VSK சொன்னது…

நீங்கள் அணிவது ஜட்டியா, இல்லை ஜப்பானிய கோவணமா?

கச்சட்டம், குளிசீலை, கொடுக்கு, என்பவை இதன் இதர பெயர்கள்.

கோவணம், கோமணம் இரண்டுமே சரிதான்!:))

Karthik சொன்னது…

நான் இன்றும் கோமணம் கட்டிக் கொள்கிறேன்.

ஜட்டியை விட நன்றாக உள்ளது.

மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.

உண்மையாக கோமணம் காட்டனில் விரைப் பகுதி பலமாக ஈரப்பதம் இல்லாமல் சம நிலையில் வைத்து அரிப்பு ஏற்படாத வண்ண்ம் காக்கிறது.

Karthik சொன்னது…

Komanam is a must

Unknown சொன்னது…

நண்பர்கள் அனவைருக்கும் வணக்கம்,

நான் சிறு வயது முதல் கோமணம் கட்டிக் கொண்டு இருக்கிறேன்.

ஆண்களுக்கு கோமணம் ஒரு அருமையான உள்ளாடை

இதன் பலன்கள் இதை கட்டி உணர்த்தவர்க்ககே தெரியும்.

பொதுவாக கோமணம் வெள்ளை காட்டன் துணியில் கட்டுவது நல்லது.

நான் வெள்ளை மற்றும் ஊதா,பச்சை நிற துணியால் என்னோட கோமணத்தை
கட்டுவேண்.

என்னோட உள்ளாடை கோமணம் மட்டுமே.

அனைவரும் கோமணம் கட்டி அதன் பயனயை பெறுங்கள்.நன்றி..!!
வணக்கம்..!!

yuvaraja சொன்னது…

அருமையான பதிவு

yuvaraja சொன்னது…

அருமையான பதிவு

saravanaperumal சொன்னது…

நாமும் முயற்சிக்கலாம்

Karthik சொன்னது…

Komanathirksga group create seithal nan member,கோமணம் photovudan kooda 25 years eearong
கோமணம் superb cloth,nan ready
Kavi8626@gmail.com

Unknown சொன்னது…

கோமணம் ஒரு அருமையான உள்ளாடை. எனது உள்ளாடை கோமணம் மட்டுமே.நவீன ரக ஜட்டிகள் அரிப்பை ஏற்படுத்துகின்றன. கோமணம் அணிவதால் இது தடுக்கபடுகிறது.கோமணம் மிக சிறந்த உள்ளாடை அதையே அணிந்து மகிழ்வோம்

Karthik சொன்னது…

kavi8626@gmail.com
Hangouts
Any komanam wearers can interact
It's not fun but a very good topic
Kavithasan @, Karthik Kumar

Unknown சொன்னது…

i am a muslim .i love wearing komanam.from my age of19 i am using only komanam as my inner.
i use to take bath in kavery with komanam.
females at padithurai dont view it differently.
i have taken accupancher treatment from female practeicener with komanam only. komanam is wonderful

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்