பின்பற்றுபவர்கள்

10 அக்டோபர், 2008

டிபிசிடி ஐயருக்கு பதில் !

முதலில் உங்கள் இடுகையில் தகவல் பிழை இருக்கிறது. தினமலர் விவாகாரத்தை வைத்தோ, தினமலருக்கு ஆதரவாகவோ நான் அந்த இடுகையை எழுவில்லை. டெல்லி குண்டுவெடிப்பில் சிமி அமைப்பைத் சேர்ந்த இஸ்லாமிய பெயரில் இயங்கும் தீவிரவாதிகளின் தொடர்பு என்று செய்திகள் வந்ததைத் தொடர்ந்தே அந்த இடுகையை எழுதினேன். தினமலரை எதிர்க்க லட்சக்கணக்கானோர் கூடி ஆர்பாட்டம் நடத்தி முடக்கியது போல் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் எதிர்ப்பைக் காட்டி இஸ்லாம் அமைதி மார்க்கம் என பொதுமக்கள் மனதில் பதிய வைக்கக் கூடாது ? என்பதாகத் தான் கேட்டேன். அதில் எங்காவது தினமலருக்கான ஆதரவு சொற்கள் இருக்கிறதா ?

நீங்களும் இந்து தானே நீங்களே இந்துத்துவா வியாதிகளைக் கண்டித்துப் போட்டு இருக்கலாமே. நான் தொடர்ந்து எனது எதிர்ப்பை பதிய வைத்துக் கொண்டு தான் வருகிறேன். பெரியார் சிலையை சேதப்படுத்தப் பட்ட போதே சொரணையற்றவர்களாகத் தான் இருந்தோம். இந்துத்துவ வியாதிகள் துணிந்து செயல்படுவதற்கு முக்கிய காரணமே அவர்களின் செயலை ஞாயப்படுத்தும் அடிவருடிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பதால் தான்.

நான் இந்து மதக் காவலன் கிடையாது பிறகு ஏன் வரிந்து கட்டிக் கொண்டு இந்து மதத்தின் பெயரைக் கெடுக்காதீர்கள் என்று கூப்பாடுப் போடப் போகிறேன். பாபர் மசூதியை இடித்து இஸ்லாமியர்களை ஆயுதம் ஏந்த வைத்தது போல் கிறித்துவர்களையும் இவர்கள் செய்துவிடுவார்கள். இதனால் இந்து மதத்தின் பெயர் பாதிக்கப்படும் என்று அக்கரை கொண்டவர்கள் தான் கண்டித்து எழுத வேண்டும்.

எல்லா மாநிலங்களுமே குஜராத் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் பலனை இவர்களின் அட்டூழியத்திற்கு பரிசாகக் பொதுமக்கள் கொடுப்பார்கள்.

இந்துமதம் சாதுக்களின் மதம் கிடையாது, இங்கும் தீவிரவாதிகளின் பிடியில் தான் இருக்கிறது என்று இந்துக்கள் புரிந்து கொண்டு இந்துத்துவ வியாதிகளிடம் இருந்து அதை மீட்க வேண்டும் என்று நினைக்கும் போது கண்டிப்பாக இதற்கு எதிர்ப்பு உள்ளிருந்தே வலுக்கும். இந்துத்துவ வியாதிகளின் தீவிரவாதத்தை இந்துக்கள் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு என்று நினைத்தாலும் அப்பாவி கிறித்துவ சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதை, கிறித்துவ தேவாலயங்கள் சேதப்படுத்தப் படுவதைப் படிக்கும் போது கோபமே வருகிறது. :(

எதிர்ப்பை பதிய வைக்கலாம் ஆனால், அப்பாவிகள் கொள்ளப்படும் போது அரசியல் வாதிகள் கண்டன அறிக்கை விடுவது போல் பயனற்றது தான்.

மதவெறியர்களே வெட்டிக் கொண்டு சாகுங்கடான்னு நினைக்க வேண்டி இருக்கிறது. புயலுக்கு பின் அமைதியா மயான அமைதியா... காலம் தான் முடிவு செய்யும். இந்து மதம் எப்படிப் போனாலும் எனக்கு கவலை இல்லை, நான் அதனைப் பிடித்து தொங்கவும் இல்லை.

6 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)

TBCD சொன்னது…

என்னுடைய பதிவில் போட்டதையே இங்கே தருகிறேன்...பொறுத்தருளவும்...

ஃஃஃஃஃஃஃஃஃ

முதலில் நான் கேட்ட கேள்வியயை சரி வர புரிந்தக் கொள்ளத் தவறியிருக்கிறார் என்றே எண்ணுகிறேன்...

என்னுடைய கேள்வி....மிகவும் எளிமைப்படுத்திச் சொன்னால்...

இசுலாமிய தீவிரவாதிகள் என்று சொல்லி, இசுலாமியர்களே உங்கள் தூய்மையயை நிருபியுங்கள் என்று முழங்கியவர்....ஏன்..இந்து தீவிரவாதிகள் தான் இவற்றை செய்கிறார்கள் என்று தெரிந்தப் பின், இந்துக்களே உங்கள் தூய்மையயை நிருபியுங்கள் என்றுச் சொல்லவில்லை...

என்பதே...

சொன்ன கருத்தை விட்டு, பதிவைச் சுட்ட சொன்ன விவகாரத்தை பெரிதுப்படுத்தி...தினமலருக்கு நீங்க ஆதரவாளர் என்று சொல்லவில்லை...

இசுலாமியர்களுக்கு வழிகாட்டியாக நீங்கள் திகழ்ந்ததுப் போல் உங்களுக்கு இந்து மதத்தில் ஈடுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும்..(அதில் கொஞ்சம் சந்தேகம் வந்து இருக்கு..அதைப் பிறகு கவனிப்போம்..) அமைதியயை விரும்பும் நடுநிலைவாதிகள் இந்து மத ஆதரவாளர்களுக்கும் இவ்வாறு ஒரு முழக்கம் சொல்லியிருக்கலாமே...

அதற்கு நீங்க இந்து சமய நம்பிக்கை கொண்டவராக இருந்திருக்க வேண்டுமென்றால், அந்த கேள்விக்கு இசுலாமியராக இருந்திருக்க வேண்டுமே....

அது ஏன்..இசுலாமியர்கள் மட்டும் தீக்குளிக்கனும்...

இந்தக் காலத்தில் இராமன் இருந்திருந்தால்..(அல்லது இந்தக்காலத்திலாவது இருந்திருந்தால்) தீக்குளிக்கனும்...சீதை மட்டும் தீக்குளித்தால் போதும் என்று இறுமாந்துவிட மாட்டோமய்யா...

இந்து மதம் எக்கேடு கெட்டால் எனக்கென்னா என்று சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது...கேள்விக்கு உட்படுத்துவது என்ற வந்துவிட்டால், எல்லாரையும் கேள்விக்குட்படுத்த வேண்டும்...

வீட்டிலே காவிக்கொடி ஏற்றி, பல இந்து மக்கள் தங்களை அடையாளம் பிரித்திருக்கிறார்கள் என்பது உபசெய்தி...இது வரவேற்கத்தக்கதா...மக்களின் அமைதி இத்தகையவர்களுக்கு உன்மத்தம் ஏற்றாதா.....

எனவே மறுபடியும் கேட்கிறேன்...இந்து மதத்தினரை தீக்குளிக்கச் சொல்வீர்களா...(சொல்லுக்கு நேரடியாக பொருள் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
//

:))))))))))))

ஆட்காட்டி சொன்னது…

முதலில மதங்களை ஒழிக்க வேண்டும். பிரச்சினை கொடுப்பவர்களை கழுவேத்தலாம். இல்லாவிட்டால் பெற்றோல் ஊற்றி கொளுத்தலாம். கடவுள் வந்து காப்பாத்தினா பிழைச்சுப் போகட்டும் என்று விடலாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மதங்கள் மதங்கொண்ட யானைகளாக இருக்கும் வரை
மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தை
யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
இதை இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
போதனைகள் புத்தி மழுங்கச்செய்யும் கூர்மையானவை.
>>>>>இதை மதத்திற்காக மட்டும் சொல்கிறேன் <<<<<
"மண்டை கழுவப் பட்டவர்கள்
மாய்ந்து கொல்கிறார்கள்".

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஹம்ம்ம்ம்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்