பின்பற்றுபவர்கள்

29 அக்டோபர், 2008

ஆவிகள் பாவிகளை நோக்கி பேச ஆரம்பித்தால்...

கும்பகோணம் மாகமகம் 100க் கணக்கானோர் ஒரே நாளில் ஆவிகள் ஆனார்கள், அவர்களுடைய ஆவியெல்லாம் அம்மாவுக்கு ஓட்டுப் போட்டு மீண்டும் 2002ல் முதல்வர் ஆக்கியவர்களை மன்னிக்குமா ?

தர்மபுரி பேருந்து எரிப்பில் கருகிய மூன்று மாணவிகளின் ஆவிகள் ஆனார்கள், அந்த வழக்கை இழுத்தடித்த அம்மாவை மாணவிகளின் ஆவிகள் மன்னிக்குமா ?

இரு பஞ்சாப் தீவிரவாதிகளினால் சுடப்படடு இந்திராகாந்தி இறந்த பிறகு காங்கிரஸ் கட்சி(யின்) வெறியர்களால் ஏதும் அறியா 1000க் கணக்கான பஞ்சாப் மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர், அவர்களுடைய ஆவிகளெல்லாம் சேர்ந்து காங்கிரசின் கைக்கூலி என்று வருணிக்கப்படும் மன்மோகன் சிங்கை மன்னிக்குமா ?

பர்வேஷ் முஸ்ரப்பால் இந்தியப் பகுதியை கைப்பெற்ற திட்டமிட்டு நடத்திய மறைமுக கார்கில் தாக்குதலில் 1000க் கணக்கான இந்திய இராணுவத்தினர் பலியானார்கள், அவர்களுடைய ஆவிகளெல்லாம் முஸ்ரபிற்கு சிவப்பு கம்பளம் வரவேற்புக் கொடுத்த வாஜ்பாயை மன்னிக்குமா ?

கோட்சேவை புனிதப் படுத்த முயன்று கொண்டிருக்கும் கூட்டத்தைத் தான் மாகத்மா காந்தியின் ஆவி மன்னிக்குமா ?

சங்கர ராமன் கொலை எப்படி நிகழ்ந்தது என்று அனைவருமே (ஊகித்து) அறிவர், குற்றவாளிகள் தங்களைக் காத்துக் கொள்ள மாநிலத்துக்கு மாநிலம் நீதிமன்றம் தாவுவதையும், அவர்களைக் காப்பாற்ற முயல்பவர்களையும் சங்கர ராமன் ஆவி மன்னிக்குமா ?

கும்பகோணம் விபத்தில் துடிதுடித்து இறந்த பிறகும் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் பற்றிய செய்தியை கவனமாகவே தவிர்த்து வந்த 'சோ' கால்டு செய்தி இதழ்களைத்தான் அந்த பிஞ்சுகளின் ஆவிகள் மன்னிக்குமா ?

கோத்ரா ரயில் எரிப்பு, ஒரிசா கன்னிகாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமை...இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பழையதை விட்டுவிட்டு பார்த்தாலும் கடந்த நூற்றாண்டு வரலாற்றில் கூட பாவிகள் ஆவிகளின் சாபங்களை மட்டும் தான் பெற்று வந்திருக்கிறார்கள். இதுபற்றிப் பேசினால் கூட ஆவிகள் நம்மை நோக்கியும் சபிக்கும்.

27 கருத்துகள்:

Robin சொன்னது…

//கடந்த நூற்றாண்டு வரலாற்றில் கூட பாவிகள் ஆவிகளின் சாபங்களை மட்டும் தான் பெற்று வந்திருக்கிறார்கள். இதுபற்றிப் பேசினால் கூட ஆவிகள் நம்மை நோக்கியும் சபிக்கும்// உண்மை.

பெயரில்லா சொன்னது…

இறந்தும், தேர்தலில் ஓட்டளிக்கும் லட்சக்கணக்கான ஆவிகள் என்ன நினைக்கும்?

நையாண்டி நைனா சொன்னது…

ஆவிகள் வாக்களிக்க பாவிகளும், பாவிகள் வாக்களிக்க ஆவிகளும் நாடாழும் தேசம் தானே நம்மளுடையது......

சுடுகாட்டிலும், சவப்பெட்டியிலும் ஊழல் செய்யும் தேசம் தானே இது....

Bharath சொன்னது…

இதில் தா.கிருட்டினன், லீலாவதி மற்றும் தினகரன் ஆவிகள் மட்டும் மிஸ் ஆனதுக்கு ஏதாவது காரணம் இருக்கா? :)

நல்லா எழுதுராங்கப்பா இடுக்கை..

அவங்கவங்களுக்கு அவங்க அவங்க வலி..

இந்த வெட்டி வாதத்தை விட்டு விட்டு பதிவர் கல்வெட்டு சொல்வது போல் ஏதாவது "constructivஎ" ஆக பண்ணலாமே..

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said...
இதில் தா.கிருட்டினன், லீலாவதி மற்றும் தினகரன் ஆவிகள் மட்டும் மிஸ் ஆனதுக்கு ஏதாவது காரணம் இருக்கா? :)

நல்லா எழுதுராங்கப்பா இடுக்கை..

அவங்கவங்களுக்கு அவங்க அவங்க வலி..

இந்த வெட்டி வாதத்தை விட்டு விட்டு பதிவர் கல்வெட்டு சொல்வது போல் ஏதாவது "constructivஎ" ஆக பண்ணலாமே..
//

Bharath ஐயா,

முதலில் ஆவிகளை நம்பாதவர்களை ஆவிகள் ஒண்ணும் செய்துவிடாது என்பதால் குறிப்பிடவில்லை.

:)

இரண்டாவது ஆவிகளைப் பற்றி 'ஆவிகள் மன்னிக்காது' என்ற கூற்றை ஆவிகளை நம்பாதவர்கள் பேசவே இல்லை.

:)

Unknown சொன்னது…

இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வாழவே தகுதியில்லாத ஆவியை விட்ட பாவிகளுக்கு, மன்னிக்கவோ மன்னிக்காமலிருக்கவோ எந்த தகுதியும் இல்லை.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

இது மனுஷன் எழுதினாதா? இல்லை வேற ஆவி எதாவது எழுதிச்சா?


ஒரே திகிலா இருக்கு..

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

செத்து போனத கூட மனுசன் விட மாட்டுறான் பார்திங்களா?

இததான் சிறு திரும்பும் பல் குத்த உதவும்னு சொன்னாங்களோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
இது மனுஷன் எழுதினாதா? இல்லை வேற ஆவி எதாவது எழுதிச்சா?


ஒரே திகிலா இருக்கு..

3:27 PM, October 29, 2008
//

ஸ்வாமி,

இது பிடி சாமி மர்ம் நாவல், இதையெல்லாம் நீங்கள் படிக்கக் கூடாது.

ஆன்மா பற்றிய பாடம் படிப்பவர்கள் ஆவி பற்றி படிக்கக் கூடாது. சரியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
//கடந்த நூற்றாண்டு வரலாற்றில் கூட பாவிகள் ஆவிகளின் சாபங்களை மட்டும் தான் பெற்று வந்திருக்கிறார்கள். இதுபற்றிப் பேசினால் கூட ஆவிகள் நம்மை நோக்கியும் சபிக்கும்// உண்மை.
//

ராபின் ஆவி பிடித்தவர்களை பீடைகள் என்றும் சொல்லுவாங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
இறந்தும், தேர்தலில் ஓட்டளிக்கும் லட்சக்கணக்கான ஆவிகள் என்ன நினைக்கும்?
//

ஓட்டுப் போடுவதைப் பற்றி எதும் நினைக்காது, அதுக்கு வாங்கிற காசில் படையல் எதும் போடவில்லை என்று தான் கவலைப்படும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
ஆவிகள் வாக்களிக்க பாவிகளும், பாவிகள் வாக்களிக்க ஆவிகளும் நாடாழும் தேசம் தானே நம்மளுடையது......

சுடுகாட்டிலும், சவப்பெட்டியிலும் ஊழல் செய்யும் தேசம் தானே இது....
//

நைனா,
ஹிஹி, தந்தையர் நாடெனும் போதினிலே மூச்சு(ம்) இறக்குது பேச்சினிலே !

கோவி.கண்ணன் சொன்னது…

//Xavier said...
இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வாழவே தகுதியில்லாத ஆவியை விட்ட பாவிகளுக்கு, மன்னிக்கவோ மன்னிக்காமலிருக்கவோ எந்த தகுதியும் இல்லை.
//

சேவியர் சார்,
பேசும் நடைபிணங்கள் என்கிறீர்கள் சரியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
செத்து போனத கூட மனுசன் விட மாட்டுறான் பார்திங்களா?//

அரசியல் கண்ணா அரசியல் !

//இததான் சிறு திரும்பும் பல் குத்த உதவும்னு சொன்னாங்களோ?

3:31 PM, October 29, 2008
//

எஸ்வீசேகர் டிராமவில் வருகிற சம்பந்தா சம்பந்தம் இல்லாத இடத்தில் வரும் பழமொழி மாதிரி இருக்கு.

திரும்பும் இல்லேப்பா துறும்பும்.

துளசி கோபால் சொன்னது…

அந்த ஆவிகள் எல்லாம் மறுஜென்மம் எடுத்து அந்தந்த எதிர்க்கட்சியில் இருக்கு.

புனரபி ஜனனம் புனரபி மரணம்....

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அந்த ஆவிகள் எல்லாம் மறுஜென்மம் எடுத்து அந்தந்த எதிர்க்கட்சியில் இருக்கு.

புனரபி ஜனனம் புனரபி மரணம்....
//

This is Valid Point !
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்த வாரம் ஆவியையும் கோவியையும் பிரிக்க முடியாது என்று ஜாதகத்தில சொல்லி இருக்காங்களாம்.
உங்களுக்கு பயம் இல்லையா கோவியாரே?
அடுத்த பதிவில் ஆவியின் படம் எடுத்துப் போடுங்கள்.
பார்க்காதவர்கள் பார்ப்பார்கள் இல்லையா?
நானும் இதுவரைப் பார்த்ததில்லை. உங்க தயவிலாவது பார்த்திடலாம் என்கிற நப்பாசைதான்.

மணிகண்டன் சொன்னது…

கோவி, உங்களுடைய பதிவுகளை சில மாதங்களாக படித்துக்கொண்டு வருகிறேன். ஆதலால் உங்களது பதிவுகளை ஒருவித புரிதலோட படிக்கமுடிகிறது.

தமிழ் ஈழ மக்கள் உலகெங்கும் பரவி இருக்கின்றனர். அவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்களின் தாய்நாட்டை தவிர உலகில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என்பது கொடுமையே. இத்தகைய நிலை இரண்டு வருடத்திற்கு முன்பு சற்று தளர்ந்தது. நான் சந்திந்த ஈழத்தமிழர்கள் சிலர் இலங்கைக்கு சென்று வர துவங்கினர். தற்பொழுது மீண்டும் அகதிகளாக வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டனர். ஈழத்தில் இருக்கும் தமிழர்களின் நிலை பற்றி நினைப்பதே மிகவும் கடினம். இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் ஆயுதம் தாங்கி போராடும் விடுதலைபுலிகளை ஆதரிப்பது அவசியம் ஆகிறது. இதுவரை நான் ஐரோப்பாவில் சந்தித்த அனைத்து ஈழத்தமிழர்களும் புலிகளின் நடவடிக்கைகளில் நியாயத்தை மட்டுமே பார்க்கின்றனர். அதுவும் புரிந்துகொள்ள கூடியதே. அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை விடுதலைப்புலிகளே. சற்றே தள்ளி (மிகவும் என்றும் சொல்லலாம்) இரண்டாவதாக அவர்கள் இந்தியாவை நம்புகின்றனர். அதேசமயம் இந்திய அரசாங்கத்திற்கு புலிகளை நேரடியாக ஆதரிக்க மனமில்லை. அதற்கான காரணம் ராஜீவ்காந்தி கொலை மட்டுமே என்று தங்கள் எண்ணம். தினம் ஒன்றாக நீங்கள் உங்கள் எண்ணங்களை பதிவுடுகிறீர்கள். ஆனாலும் புலிகளின் இன்றைய மற்றும் நேற்றைய நடவடிக்கைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா/எதிர்க்கிறீர்களா என்ற குழப்பம் எனக்கு இன்றும் நீங்கவில்லை.

ஆன்மாக்களையும் / ஆவிகளையும் பேச வைக்கும் நீங்கள் இதுவரை கட்டான்குடி மசூதியில் உள்ள ஆவிகளிடம் பேச முயன்றதுண்டா ?

குடிமகன் சொன்னது…

ஏனுங்கோ ...நீங்க இட்லி அவிக்கிற ஆவி ..பத்தி தானே பேசுரீங்கோ


http://tamilkudimagan.blogspot.com/

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணாச்சி,

எல்லா ஆவியும் ராசீவ் காந்தி ஆவிக்கு சமாம் ஆயிடுமா? அவரு யாரு எம்புட்டு நல்லவரு, அவரோடப் போயி தர்மபுரில செத்தப் புள்ளைங்க, கும்பகோணத்துல செத்த குழந்தைகள எல்லாம் ஒப்பிடாதீங்க. நீங்க பேசுறது தேச விரோதம்.

நெம்ப பேரு நீங்க சொல்லியிருக்க ஆவிங்க கூட எல்லாம் பேசுனாங்களாம், அந்த ஆவிங்க எல்லாம் எல்லாரையும் மன்னிச்சுருச்சாம். ராசீவ் காந்தி ஆவிமட்டும் தான் இன்னும் மன்னிக்கலயாம். இது புரியாம நீங்க இப்டியெல்லாம் எழுதிகிட்டு இருக்கீங்க.

அண்ணே, தூங்குறவன எல்லாம் ஒரு சத்தம் அல்லது ஒரு தட்டுல எழுப்பியிரலாம்ணே, ஆனா தூங்குறவன் மாதிரி நடிக்கிறவன எல்லாம் ஒன்னியும் செய்ய முடியாது. காதுல அணுகுண்டு வெடிச்சாக்கூட தூங்குறமாதிரியேத்தான் சாவானுங்க. நீங்க எழுதியிருக்கத பார்த்து எழுந்திரிச்சுருவானுங்களா?

Sanjai Gandhi சொன்னது…

//தர்மபுரி பேருந்து எரிப்பில் கருகிய மூன்று மாணவிகளின் ஆவிகள் ஆனார்கள், அந்த வழக்கை இழுத்தடித்த அம்மாவை மாணவிகளின் ஆவிகள் மன்னிக்குமா ?//

எங்கள் கல்லூரியின் அருகில் நடந்ததால் இதை நேரில் பார்த்து கதறி அழுதேன்.. மறக்கவேண்டும் என்று நினைக்கத் துடிக்கும் மிக கோரமான நிகழ்வு. ஆனாலும் எப்படியாவது நினைக்க வைத்து விடுகிறார்கள்.:((

அதில் ஒரு சகோதரி IAS பரீட்சைக்கு தயார் செய்துக் கொண்டிருந்தார். 3 பேரும் என் பள்ளித் தோழனின் கல்லூரி வகுப்புத் தோழிகள். :((

குடுகுடுப்பை சொன்னது…

என் வருகையை மட்டும் பதிவு செய்கிறேன்.கொஞ்சம் வேலை அதிகம் பிறகு வருகிறேன்

ILA (a) இளா சொன்னது…

//"ஆவிகள் பாவிகளை நோக்கி பேச ஆரம்பித்தால்..."//
பேசிட்டா பரவாயில்லை, பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டா??

வால்பையன் சொன்னது…

இப்படியெல்லாம் நடந்தால் எவனும் அரசியலுக்கு வரமாட்டான்

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

கவனம் கோவி,
சில வேளைகளில் ஆவிகள் வலைப்பக்கம் வந்தாலும் வரலாம்.

We The People சொன்னது…

//கோத்ரா ரயில் எரிப்பு//

தவறாக எழுதிவிட்டீர்களா? கோத்ரா இன கலவரம் பற்றி மட்டுமே லிஸ்டில் இருந்திருக்கவேண்டும்??

சரி விடுங்க! எப்படி மோடியை மன்னித்துவிடுவோமா? அப்ப இனிமே மோடியையும் திட்டா கூடாதோ??

அத்திரி சொன்னது…

கலிகாலத்துல இருந்துட்டு ஏங்க இப்படி டென்சன் ஆகுறீங்க?. எல்லாத்தையும் ஆண்டவன் பாத்துப்பான்...!!!!!!!!!!!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்