ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், குவீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டதாக, அமிதாப் பச்சன் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்நிலையில், ஐ.ஐ.எப்.ஏ., விருதுகள் விழாவை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் வழங்க இருந்த கவுரவ டாக்டர் பட்டத்தை நிராகரிக்கும் முடிவு என் தனிப்பட்ட முடிவு. எனது நாட்டு மக்கள் கவுரவமின்றி நடத்தப்படும் நிலையில், இந்த கவுரவ விருதை ஏற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. இது எனது மனசாட்சிப் படி எடுத்த முடிவாகும்.
நன்றி தினமலர்

(முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவிடம் லங்க ரத்னா விருது பெற்ற 'இந்து ராம்')
இலங்கைப் போரில் சிங்களவர்களைவிட முனைப்புக் காட்டிய இந்தியர்களுக்கு இன்னும் பல விருதுகளும் பாராட்டுப் பத்திரங்களும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வெறுப்புகள் ஏன் குறையாமல் இருக்கிறது என்பதற்கு வராலாறுகள் தோறும் இதுபோன்ற நிகழ்வுகள் இருப்பதைவிட வேறென்ன காரணமாக இருக்க முடியும் ? மனசாட்சிகளே இல்லாத விலங்குகளிடையே வாழ்வது தான் மனிதம் பற்றி அவ்வப்போது நினைத்துக் கொள்ள வழிவகை செய்கிறது.