பின்பற்றுபவர்கள்

31 ஆகஸ்ட், 2008

எல்லாப் புகழும் ...

இஸ்லாம் மதத்தில் நான் முதன்மையாக கருதுவது அவர்கள் இறை நம்பிக்கையில் காட்டும் ஈடுபாடே. இறை உணர்வில் நீக்கு போக்கு (காம்ப்ரமைஸ்) என்பது அவர்களின் மதத்தில் கிடையாது, ஒரு வகையில் அது அவர்களின் இறைநம்பிக்கையி்ன் ஆழத்தைக் காட்டுகிறது. அதை உறுதியான பிடிமானமாக வைத்திருப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் ஒரு சிலர் இறைபற்று என்பதை விடுத்து அந்த உறுதியினால் பிற மத நம்பிக்கையை பழிக்கவே செய்கின்றனர். அவ்வாறு மாற்று மதத்தினரை தூற்றுபவர்கள் எண்ணிக்கை விழுக்காட்டு அளவில் குறைவே அதைப் பற்றி பேச பலர் இருக்கின்றனர். நான் இங்கு எழுத நினைப்பது வேறு.

நாள் தோறும் 5 வேளைத் தொழுகையும், சமயப்படாமும் ஒரு இஸ்லாமியரின் வாழ்நாள் கடமையாக இருக்கிறது, இதைச் செய்யாதவர்கள் மிகக் குறைவே. பிற மதங்களில் இந்த செயல் உறுதி மிகக் குறைவே. வாழ்கையில் ஒரு அம்சமாகவே இறை நம்பிக்கையையும், அதன் தொடர்பிலான சடங்குகளையும் வைத்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள். இந்த கட்டுறுதி (டெடிகேசன்) மற்ற மதங்களில் குறைவே. பிறமதங்களில் இருப்போர்க்கு, தேவைக்கான வேண்டுதலுக்காகவும், சமயபண்டிகையின் போதுமே இறையின் நினைவு வருகிறது. அதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.

இஸ்லாமியர்கள் அளவுக்கு இறைப்பற்றும், நம்பிக்கையும் உடைய பிறமதத்தினர்களைப் பார்த்ததே இல்லை. ரமலான் மாதத்தில் அவர்கள் இருக்கும் உண்ணா நோம்பு மிகவும் சிறப்பானது, சிறுகுழந்தைகள், தாய்மார்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்கள் தவிர்த்து கிட்டதட்ட அனைவருமே நோம்பை மேற்கொள்கிறார்கள். எனது இஸ்லாமிய நண்பர்கள் பலரும் உண்ணா நோண்பு இருப்பதைப் பார்த்து இரு்க்கிறேன். அதைக் கடனுக்குச் செய்யாமல் வாழ்வியல் கடமையாகவே செய்கிறார்கள்.

இறைவன் மீது நம்பிக்கை உடைய மாற்று மதத்தினர், இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தூற்றும் முன் இந்த படத்தைப் பார்த்துவிட்டு, தங்களிடம் தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டும் என முக்கிய கேள்வியாக நான் கருதுவது,

புனித மெக்காவில் கூடும் மக்கள் வெள்ளத் திரள், இறைவனின் விருப்பம் ஏதுமின்றிய சாத்தியமா ?

'இறைவன் ஒருவனே' என்பதில் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துகிறது. இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை என்பதை ஆணித்தரமாகவே பின்பற்றுவார்கள். என்னைப் பொருத்து மிகச் சரிதான். ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது. மனிதன் இறைத்தூதன் தான்... எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் இஸ்லாமிய கோட்பாட்டை மிகவும் மதிக்கிறேன். அவற்றை செய்யாததாலேயே பிற மதங்களில் போலி சாமியார்கள் பெருத்துவிட்டனர். இஸ்லாம் மீது சில விமர்சனங்கள் எனக்கும் இருக்கிறது, அவை பொதுவாக எல்லோரும் வைக்கும் விமர்சனங்கள் தான் என்பதால் நானும் அதைப்பற்றி எழுத விரும்புவதில்லை.

நாளை (திங்கள் சிங்கையிலும், இந்தியாவில் செவ்வாய்) முதல் உண்ணா நோம்பு தொடங்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இறைவனின் ஆசிர்வாதம் கிட்டட்டும்.

இந்த பதிவின் மூலம் இஸ்லாமிய பதிவர்கள், நண்பர்களுக்கு ரமலான் மாத நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் !

30 ஆகஸ்ட், 2008

இப்படியும் 'நடந்துடுது' !

நாளைக்கு என்னச் செய்யப் போகிறோம் என்று இன்று தெரியாமல் இருக்கும், ஆனால் இன்னிக்கு என்னச் செய்யப் போகிறோம் என்பதே தெரியமல் எதிர்பாராதவைகள் நடந்துவிடும்.

இன்னிக்கு மாலை 1 மணி வரை 8 பதிவரை இன்றே ஒன்றாக பார்க்க முடியும் என்று நினைக்கவில்லை. இவரு அவருக்குச் சொல்லி அவர் இவருக்குச் சொல்லி, 2 நண்பர்களையும் அழைத்துக் கொண்டு 10 பேராக சிங்கை சன்டெக் சிட்டி பகுதியில் அறிவிக்கப்படாத பதிவர் சந்திப்பு நடந்துவிட்டது.

சிங்கையில் அவ்வப்போது கணணி மற்றும் தகவல் தொழில் நுட்ப சிறப்பு விற்பனைக் காட்சியகம் நடக்கும், இந்த வாரம் சன்டெக் சிட்டியில் COMEX 2008 என்ற பெயரில் நடந்தது, நாளை வரை உண்டு, 3 மணிக்கு வருகிறேன் என்று சொல்லி இருந்தாலும், சென்று சேர 4 மணியாகி இருந்தது, ஓவ்வொருவராக வந்து சேர மாலை 5:30 ஆகி இருந்தது. கட்டுக்கடங்காத மக்கள் நெருக்கத்தால் பிதிங்கி வழியும் அந்த கூ(ட்)டத்திலிருந்தே
வெளியே வருவதே சவாலாக இருந்தது....அதன் பிறகு அருகில் மில்லினியாவாக் உணவு அங்காடியில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டே 10 பேரும் அமர்ந்து பேசினோம். திட்டமிட்ட சந்திப்பு இல்லை என்பதால் இது பதிவர் சந்திப்பு என்ற வகையில் வராது.* ஜெகதீசன் பிட்(டு)க்கு கேமரா சுமந்து, சாய்ந்து சாய்ந்து நின்று நேராக இருந்த கட்டிடங்களை சாய்த்து படமெடுத்தார்

* மழையும் குளிருமாக இருக்கு அதுக்கு இதமாக 2 கப் காஃபி சாப்பிட்டு வீட்டுல கவுந்தடிச்சி தூங்கி இருப்பேன் நான் என்னைய்யா துரோகம் பண்ணினேன் - கடிந்து கொண்டவர் பாரி.அரசு

* துபாய் எப்ப போறிங்க என்று யாராவது இனி கேட்டால் கொலை விழும் - பயமுறுத்தினார் எப்போதும் சாதுவாக இருக்கும் அண்ணன் வடுவூரார்

* பார்டிக்கு நான் ரெடி நீங்க ரெடியா - 15 நாளுக்கு முன் அப்பாவாகி இருக்கும் மகிழ்ச்சியில் விஜய்.ஆனந்த்

* முதலில் வந்து, நன்றாக அலைந்து... பின்பு எல்லோரிடமும் மென்மையாக சிரித்தபடி... கொஞ்சமாக, பேசி காஃபிக்கு ஸ்பான்சர் செய்தவர் - சிவராம் முருகன் (ஜீவன்)

* சின்ன ரஜினி கிரியும் விஜய் ஆனந்தும் முதல் முறை சந்தித்ததால் ரொம்ப சீரியசாக பேசிக்கிட்டாங்க

* ஜோசப்.பால்ராஜ் கூட்டத்தில் நசுங்கினாலும் பராவாயில்லை திரும்ப சன்டெக் சிட்டிக்கு விஜய் ஆனந்துடன் சென்றார்...அவர்கள் இருவரையும் பதிவு போடும் வரை காணும் :(படத்தில் இருப்பவர்கள் இருவர் தவிர அனைவரையுமே உங்களுக்குத் தெரியும், என் பக்கத்தில் நிற்பவர் சதகத்துல்லா, மீடியா துறையில் பணியாற்றுகிறார். பதிவரல்லாத மற்றொருவர் ஜோசப்.பால்ராஜின் அருகில் இருப்பவர் அவருடைய நண்பர்

இப்படியும் நடந்துடுது ? பதிவர்கள் சந்திப்புதான் !

படங்கள் : அண்ணன் வடுவூர் குமார்

29 ஆகஸ்ட், 2008

திருக்குறளும் மெகா சீரியல்களும் !

திருக்குறளை பொதுமக்கள் வாழ்வியல் நெறியில் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, நெடுந்த்தொடர் இயக்குனர்கள் நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். நடிகை ராதிகா தொடர்களில் இதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.' [311]


இதன் பொருள் படி, கதாநாயகி நல்ல நிலையில் உயர்ந்து பெரிய வியாபார ஒப்பந்தம் ஒன்றில் கோடிக்கணக்கில் பணம் வரும் நேரத்தில், அந்த ஒப்பந்தத்தினால் தனது கணவரின் சின்னவீட்டின் பெரிய மகனுக்கு பெரிய நட்டம் என்றால், யாருக்கும் சொல்லாமல் நாயகி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பகவான் மேல் பாரத்தைப் போட்டு திருப்பதி படிமேல் 2 வார காட்சி எடுப்பதற்காக ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டி இருப்பார்.

'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.' [312]


இந்த குறள் படி, தன் கணவரின் சின்னவீட்டு பெரிய மகன் ஆயிரம் பேருக்கு முன்னால், கதாநாயகியைப் பார்த்து 'நீ தாண்டி எங்கப்பாவுக்கு வப்பாட்டி' என்று திட்டிவிடுகிறான், தியாக சொரூபமான கதாநாயகி அதைக் அவமானமாகக் கருதாமல் ... கேட்டு சிரித்துக் கொண்டே, 'கண்ணா இன்னிக்கு உனக்கு பிறந்த நாள், காபாலிஸ்வரர் கோவிலுக்கு உனக்காக அர்ச்சனைப் பண்ணப் போகிறேன் வழியவிடு' என்று கூறியபடி ஓரத்தில் துளிர்க்கும் கண்ணீர் சிதறுவதற்குள் அந்த இடத்தைவிட்டுச் செல்கிறார்.

'செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.' [313]


கதாநாயகி ஒரு கட்டத்தில் மிகவும் பொருக்கமாட்டாமல் கணவரின் சின்னவீட்டு பெரிய மகனை கைநீட்டி அடிச்சிடுறாங்க, அடிச்சப் பிறகு 'அவனை அடிச்சிட்டோமே' ன்னு மனம் வருந்தி வருந்தி மூன்று நாள் தூக்கமே இல்லாமல் கண் சிவக்கிறாங்க

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.' [314]


இந்த குறள் மிகவும் புகழ்வாய்ந்தது, இந்த குறளை பயன்படுத்தாத மெகாதொடரே இல்லை, மெட்டி ஒலியின் ஒவ்வொரு நாள் தொடருக்கும் இந்த குறள் தான் கருவாக அமைந்தது. பெரியவர் சிதம்பரம் கேரக்டரே இந்த குறளை வைத்துதான் உருவாக்கப்ப்பட்டது, மருமகன் கேரக்டர் அவமானப்படுத்தும் போதெல்லாம் மாப்ளே...மாப்ளே... என்று உருகுவார். ராதிகா சீரியல்களில் சின்னவீடு கேரக்டருக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவையை விளம்பர நிறுவனம் பரிசு குலுக்களில் அனுப்பியதாக யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைப்பார்

'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.' [315]


நேற்று தன்னை பலர் முன் அவமானப்படுத்திய சின்னவீட்டின் பெரிய மகன் குடிச்சிட்டு கீழே ரத்தம் சொட்ட சொட்ட விழுந்து கிடப்பதைப் பார்த்து தாய்மைகே உள்ள பாசத்தால் காரில் தூக்கிக் கொண்டுவந்து போட்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவன் கண் விழிக்கும் வரை அன்னம் ஆகாரமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்து சரியாக கண்விழிக்கும் நிமிசத்துக்கு முந்தைய நிமிசம் சத்தமில்லாமல் வெளியே சென்றிருப்பார்.

'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.' [317]


பொது எதிரி ஒருவன் தனக்கு பார்டி நேரத்தில் கோக்கில் விசம் கொடுத்துக் கொல்ல முயன்றதைப் போலவே ... இன்னிக்கு அவனே தன் சின்னவீட்டு நடுப்பையனுக்கு பொட்டிக் கடையில் கோக் வாங்கிக் கொடுப்பதைப் பார்க்கிறாங்க, ஒரு வேளை இதிலும் விஷம் இருக்கும்...என்று பதறி...காரை யூ டேர்ன் அடித்து அங்கு நிறுத்துவிட்டு, நடுப்பையன் கோக்கை குடிக்கப் கவிழ்கும் போது... கோக் பாட்டிலை லாவகமாக பிடிங்கி நடுரோட்டில் உடைக்கிறாங்க...

'பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.' [319]


நாளு பேருக்கு முன்னால் கணவரை சத்தம் போட்டு அவமானபடுத்திடுறாங்க நாயகி, அப்பறம் அதை நினைச்சு மனம் புழுங்கி நாலு செவத்துக்குள்ளே அழுமால் மிடுக்காக சென்ற போது நிலைப்படி முன்நெற்றியில் நச்சின்னு இடித்து...ஸ்டிக்கர் பொட்டு நிலைப் படியிலேயே ஒட்டிக் கொள்கிறது.

'நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.' [320]


மேலே சொன்னது போல் அடுத்த முறை கணவரால் அவமானப்படும் போது, எதிர்த்து சத்தமிடலாம் என்று தொண்டை வரை வந்த குரலை.. நிலைப்படி ஞாபகம் வர அப்படியே நிறுத்திவிட்டு... நெற்றியை தடவிக் கொண்டே .... சத்தம் போடாமல் ... மெதுவாக சிரித்துவிட்டு வெளியேறிவிடுகிறார் நாயகி.

Ref: மூலஉரை வீஎஸ்கே ஐயாவின் மன்னார் குறள் விளக்கம்

28 ஆகஸ்ட், 2008

உண்மையும் பொய்யும் ... !

எதிர்வினை ஏற்படுத்தும் எந்த ஒரு நிகழ்வைப் பற்றியும் இரு வேறுப்பட்ட கருத்துக்கள் விதைக்க / வலியுறுத்த மொழியில் பயன்படுத்தும் எளிதான சொல் தான் உண்மை மற்றும் பொய். உண்மை, பொய் இவற்றில் எது உண்மை ? கேள்வியே அபத்தமாக இருக்கிறது...இங்கே எது உண்மை என்பது குழப்பத்தினால் எழும் உண்மை பற்றிய கேள்வி. ஒன்னும் புரியலையா ? நெருங்கிய நண்பர் உண்மையே பேசுபவர் என்று நம்பினாலும், இன்னொருவருக்கும் அவருக்கும் பிரச்சனை எனும் போது நண்பர் பேசுவது தான் உண்மை என்று முடிவு செய்துவிட முடியுமா ? உண்மை எப்போதும் மாறாத ஒன்று. புலன்கள் கூட ஏமாற்றிவிடும் என்பதால் மெய்யறிவின் மூலமே உண்மைகளைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பொய்யின் தேவைகளைப் போல் உண்மையையின் தேவைகளை, புரிதல்களை சுயநலம் தந்துவிடாது.

பலசமயங்களில் பொய்யைவிட மிகவும் சுடுவது உண்மைகள் தான். தனிமனிதர்களைப் பொறுத்து, நிகழ்வைப் பொறுத்து மறைக்கப்பட்ட பொய்களைவிட தெரியப் போகும் உண்மைகள் அவர்களின் விருப்பமானவையாக இருக்க முடியாது.

நீதிமன்றங்களில் நடக்கும் சிவில் வழக்குகளெல்லாம் உண்மை எது என்ற குழப்பத்தை தீர்ப்பவையா ? எந்த ஒரு மனிதனுக்கும் தன் மன அளவில் எது உண்மை என்பது தெளிவாகவே தெரியும், இருந்தாலும் ஆதாயம் கருதியே ஏற்றுக்கொள்ள மனமின்றி வழக்குவரையில் செல்கிறார்கள். நீதிமன்றங்கள் எதுவும் முக்காலத்தை உணர்ந்தவை அல்ல, வாத அடிப்பாடையில் தீர்ப்புகளை வழங்கும். நீதி என்பது நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உண்மைக் குறித்தது எழுதப்படுவது அல்ல. வாதங்களைப் பொருத்தது தான் எழுதப்படுகின்றன.

வாய்மையே (சத்தியமே) வெல்லும் என்பது மிகச் சரிதான். சிற்சில சூழல்களில் வாய்மை வாயடைக்க வேண்டிய இடத்தில் அதாவது பெரிய பிரச்சனை வரும் என்று தெரிந்தே பேசக் கூடாத இடத்தில் பேசும் உண்மை, பொய்யைவிட பெரிய விழைவுகளையே ஏற்படுத்திவிடும். அங்கே வெற்றிபெற்ற உண்மை கூட நகைப்புக்கு / வேதனைக்கு இடமானதுதான்.

எளிமையாகச் சொல்வதென்றால்,
பேசவேண்டிய இடத்தில் தவிர்த்துப் பேசப்படும் பொய்யும், பேசக் கூடாத இடத்தில் வேண்டுமென்றே பேசப்படும் உண்மையும் ஒன்று தானே ?

27 ஆகஸ்ட், 2008

எண்ணப் படம் பார்த்ததுண்டா ?

விசித்திரமானது மனித மனம், மனம் பற்றி அறிவியல் ஆன்மிகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருவே இதுவரை எழுதவில்லை.

ஒரு நாளைக்கு மனித மனத்தில் தோன்று எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.

மனதில் ஏற்படுத்தும் எண்ணங்களில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல எண்ணங்கள், மற்றது கெட்ட எண்ணங்கள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை எண்ணங்கள் உண்டு அவை தேவையற்ற எண்ணங்கள் என்ற வகையில் வரும்.

எண்ணங்கள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான், தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது நடப்பது போன்றது தான் மனதில் தோன்றும் எண்ணங்கள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது ஓடிக் கொண்டே இருக்கும், குழந்தைகளுக்கு பேச்சுவரும் வரை எண்ணங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் எண்ணங்கள் ஏற்பட்டு அறிவு வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் எண்ணங்கள் பிறகு அதனுடன் ஒப்பீட்டிற்காக தோன்று எண்ணங்கள் சேர்ந்துவிடும்.

தன்னால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் தான் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற THAT IS POSSITIVE / NEGATIVE OR BAD / WASTE THOUGHTS) எண்ணங்கள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே நமக்கு வந்து செல்லும் எண்ணங்கள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் மன ஓட்டத்தை மட்டுமே கவனியுங்கள் உங்கள் சிந்தனைகள் எங்கெல்லாம் சென்றுவருகிறது என்பதைப் பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய எண்ணங்களில் 90 விழுக்காடு தேவையற்ற எண்ணங்களாகவே இருக்கும்.

உடல் சார்ந்த அயற்சியைவிட மனம் சார்ந்த அயற்சியே சோர்வை மிகுதியாக தரும். இந்த மனச்சோர்வின் மூல காரணிகளே எண்ணங்கள் தான். நல்ல எண்ணங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், கெட்ட எண்ணங்களும் தேவையற்ற எண்ணங்களும் மனச்சோர்வை ஏற்படுத்தும். நம் எண்ணங்களில் 10 விழுக்காடு கெட்ட எண்ணங்கள், 80 விழுக்காடு வீனான எண்ணங்கள் என 90 விழுக்காடு இருக்கிறது. மூளையில் இருந்துதான் எண்ணங்களுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற எண்ணங்களினால் மூளையின் சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது, உடல் நலம் மனநலத்துடல் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வையும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற எண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றியாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற எண்ணங்களை குறைத்துக் கொண்டவர்கள் தானே.

இன்னும் எழுதலாம் படிப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் ! - இது இங்கு எனக்கு ஏற்பட்ட வீனான எண்ணம் ! :)

ஆவி மதனும் - மூக்கறுப்பும் !

ஆவியில் மதன் பதில்களை படித்துக் கொண்டு இருந்தேன்... அதில் ஒரு கேள்வி,

இன்று 'மூக்கறுப்பு' (Nose Cut) என்று சொல்வது ராமாயணத்தில் லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகைக் காலத்திலிருந்து வந்திருக்கலாமோ? - வீ.சுந்தரமகாலிங்கம், மம்சாபுரம்.

பண்டைய இந்தியாவில் 'மூக்கறுப்பு' என்பது திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு ஒரு தண்டனையாகவே வழங்கப்பட்டது. அப்போது (திருத்தி) எழுதப்பட்ட ராமாயணத்தில், அந்தத் தண்டனையை சூர்ப்பனகைக்கு லட்சுமணன் வழங்கியதாக ஓர் ஐடியா சேர்க்கப்பட்டு இருக்கலாம். சூர்ப்பனகையின் மூக்கு நிஜமாகவே அறுக்கப்பட்டதா என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது!

*******
சூர்பனகைக்கு உண்மையிலேயே முக்கை அறுத்தார்களா என்று வாசகர் கேட்கவில்லை, இராமயணத்தில் உள்ள ஒரு நிகழ்வை ஒட்டியே கேள்வி எழுப்பினார். அது ஒரு எளிய கேள்வி, அதற்கு பதிலாக அதைத் தொடர்பு படுத்தும் ஆதாரம் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை என்று சொல்லி இருக்கலாம், ஆனால் மதன் வழக்கம் போல் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா தகவலாக ... சூர்பனகை மூக்கறுக்கப்பட்டதற்கே ஆதாரம் எதுவும் இல்லை என்கிறார்.

இராமயண நிகழ்வுகள் மற்றதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா ? குறிப்பாக இராமன் என்கிற அவதார புருசன் உண்மையிலேயே இருந்தான் என்பதற்கு எதுவும் ஆதாரம் இருக்கிறதா ? வால்மிகி எழுதிய ஒரு காவியம் என்பதைத் தவிர்த்து இராமயண காலத்தின் தடயம் என்று நாசா புகைப்படத்தை வைத்து திரிக்கப்பட்ட மணல் திட்டு தான் இராமர் பாலம் தான் என்று நம்புவதற்கு எதேனும் ஆதாரம் இருக்கிறதா ?

மதன் சூர்பனகை மூக்கறுக்கப்பட்ட நிகழ்வின் ஆதாரம் பற்றி பேசி அது நம்பதகுந்தது அல்ல என்று ஐயம் கிளப்ப முயல்வது ஏன் ? என்னதான் கொடுமைக்காரியாக இருந்தாலும், தானே விரும்பி தன் காதலை தெரிவித்த ஒரு பெண்ணை மூக்கறுத்த செயல் அவ்வளவு உயர்வான செயலே அல்ல, அதுவும் அவதாரமாக சித்தரிக்கப்படும் இராமனின் தம்பியின் அந்த செயல் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, அந்த செயல் இலக்குவனின் புனித தன்மைக்கு பங்கம் என்பதால் மதன் மறுக்கிறார் போலும்.

மூக்கறுத்த நிகழ்வு உண்மையா ?

அந்த கதையைப் பொறுத்து, தனது தங்கையான சூர்பனகை மூக்கறுக்கப்பட்டு அவமானப்படுத்தப் பட்டதால் தான் இராவணன் சினந்து சீதையைத் தூக்கிச் சென்றான். இராமயணத்தின் திருப்பு முனையே மூக்கறுப்பு நிகழ்வுதான், அதன் பிறகு இராவணனின் சூழ்சியாக, மாரீசன் மாயமானக வந்து சீதையின் கண்ணில் பட அதனை பிடித்துத்தரச் சொல்லுவாள், இராமன் இலக்குவன் மானைத் தேடிச் செல்ல தனித்திருக்கும் சீதையை தூக்கிச் செல்வான் ( கம்ப இராமயணத்தில் சீதைக்கு மேலும் புனிதம் கற்பித்து தொடாமல் தரையோடு பெயர்த்துச் செல்வதாக சொல்லப்படுகிறது)

அறிவு ஜீவியான மதன் மூக்கறுப்பு பற்றி சொல்லும் போது ஆதாரம் இல்லை என்கிறவர், மதன் வரலாற்று(வரலாற்றைக் கட்டமைக்கும் கதை) ஆசிரியர் என்ற முறையில், இராமனும்,இராமர் பாலமும் இருந்ததற்கு ஆதாரம் இல்லை என்று வெளிப்படையாக எழுதுவாரா ? அல்லது அவை இருந்ததற்கான நம்பந்தகுந்த ஆதாரம் காட்டுவாரா ?

26 ஆகஸ்ட், 2008

வடுவூர் குமார் அப்பாவியா ?

வடுவூர் குமார் ஆன்மிக பதிவர் மற்றும் கட்டுமானத்துறை பற்றி பதிவு எழுதுபவர் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் குறைவாக பேசுவார்.

இவர் அடிக்கும் லூட்டி இப்பொழுதுதான் தெரிந்தது, கூகுள் ஸ்டேட்ஸ் மெசேஜ் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கமலஹாசன் ரசிகராக இருப்பார் போல...நீங்களே பாருங்க மக்கள்ஸ்...இவர் ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வாராம் !

எதுக்கா ?
'கொஞ்ச' நேரமாகுமாம். மெசேஜ் யாருக்குன்னு தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் அண்ணியிடம் சொல்லி குமார் அண்ணனை கண்காணிக்கச் சொல்வேன். அண்ணி சீதையை போல் அண்ணனையே நினைத்துக் கொண்டிருக்க அண்ணன் யாருக்கோ மெசேஜ் விட்டுக் கொண்டு இருக்கிறார்.

அந்த பக்கம் சாட்டில் என்ன மெசேஜாக இருக்கும் ? 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா ?' ன்னு தானே

வடுவூர் அண்ணனை கலாய்பவர்கள் கலாய்கலாம், பின்னூட்ட பெட்டி மாடுரேசன் இன்றி திறந்தே இருக்கிறது. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு !

:)

கலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம் !

தமிழகத்தில் ஒகனேகல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா ? அல்லது இரைச்சல் இல்லாமல் நடைபெறுகிறதா என்பது சரியாக தெரியவில்லை. ஆனல் கர்நாடக அரசு அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் பிரதமரை சந்தித்து திட்டத்தை நிறுத்தச் சொல்லி கோரிக்கை எழுப்பப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தென்னைமரத்தில் தேள் கொட்டிய பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப் போகும் ஒரு திட்டத்திற்காக அதனால் எந்தவித பாதிப்பும் அடையாத ஒரு மாநிலம் எதிராக இருப்பது இந்தியாவிலேயே இதுவே முதன்முறை. அதற்கும் முன்பு அவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பல்வேறு அணைகளை உயர்த்திய போது, தமிழகத்திற்கு பாதிப்பு என்று தெரிந்தும். தமிழகத்தின் சார்பில் வெறும் கண்டன போராட்டத்துடனேயே (தமிழர்களுக்குள் அவ்வளவுதான் ஒற்றுமையோ / சக்தியோ) நிறுத்திக் கொண்டார்கள். முல்லை பெரியார் அணை உயரம் கூட்டுவதில் இன்னும் கூட கேரள மாநிலம் சிக்கலை ஏற்படுத்தியே வருகிறது.

நாமும் கன்னடர்களைப் போல் உணர்ச்சிவசப்பட்டால் மலையாளிகளை ஓட ஓட விரட்டி இருப்போம். மாநில பிரச்சனையை மொழிப்பிரச்சனையாக்காது, தனிமனித வாழ்கையுடன் தொடர்பு படுத்தாது நடந்து கொள்ளும் கண்ணியம் அவர்களுக்கெல்லாம் இல்லை. தமிழர்கள் இதுவிசயத்தில் தெளிவடைந்து அனைத்துக் கட்சியனரும் சேர்ந்தே ஒற்றுமையாக ஒகனேகல் திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். இது போன்ற நேரங்களில் தமிழக எதிர் கட்சிகள் ஒத்துழைப்புக் கொடுத்தால் திட்டம் வெற்றியடைந்து அதன் நற்பெயர் ஆளும் கட்சிக்குச் சென்றுவிடுமோ என்றே நினைத்து மக்கள் நலனை புறக்கணித்து தூய அரசியல் செய்து வருகின்றனர்.

கலைஞர் அணைத்துக்கட்சியனரின் ஒத்துழைப்போடு இந்த திட்டத்தை துரிதமாக முடுக்கிவிட வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளாத கட்சிகளை மக்கள் மன்றம் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

சேது திட்டத்தை இராமன் பெயரை வைத்தாவது நிறைவேற்ற விடுங்கள் என்று சொல்லிய கலைஞர் ஒகனேகல் திட்டத்தை 'ஜெயலலிதா கூட்டுக் குடிநீர் திட்டம்' என்ற பெயரிலாவது நிறைவேற்றியே ஆகவேண்டும். கண்டிப்பாக தமிழர்கள் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கும், நலமான நாகரீக அரசியலுக்கு முன்னோடியாக இருந்தார் என்ற பெயர் நிலைக்கும். இதனை செய்துவிட்டால் கூட்டணிக்காக ஓடிய கட்சிகளையெல்லாம் சேர்த்துக் கொண்டு தான் தேர்தலை சந்திக்க முடியும் என்ற நிலை மாறி மக்கள் ஆதரவுடனேயே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்.

செய்வாரா கலைஞர் ?

25 ஆகஸ்ட், 2008

வி.காந்த் தான் - ஜெவுக்கு நோ மோர் சாய்ஸ் !

ஒருவழியாக பாமக பூனை ஆட்டம் காட்டிவிட்டு திமுக பக்கமே பாய்ந்துவிட்டது. ஒரு காரணம் சின்ன ஐயாவின் நடுவன் அமைச்சர் பதவி, இரண்டாவது காரணம் மூன்றாவது அணி அமைக்கத் திட்டமிட்டிருந்த கம்யூனிஸ்ட் தோழர்களின் தடுமாற்றம். தோழர்கள் மூன்றாவது அணி அமைத்தால், ஓட்டு பிரிந்து பிஜேபிக்கு வாய்பாக அமைந்து இந்திய இறையாண்மையான மதச்சார்பின்மைக்கு வேட்டு விழுந்துவிடும் என்று காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை எச்சரித்ததைத் தொடர்ந்து தேசிய அளவிலான கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அணி அமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்வாங்கியதாக அரசியல் செய்திகள் வழி அறியமுடிகிறது.

எப்போதுமே பலமிக்க கூட்டணி எது என்பதில் தான் மருத்துவர் ஐயா கவனம் செலுத்தி முடிவெடுப்பார், அந்த வகையில் நடுவன் காங்கிரஸ் கூட்டணி பலமிக்கதாகவும், அதன் தொடர்பில் இருக்கும் திமுக கூட்டணி தமிழகத்தில் பலம் வாய்ந்ததாக மருத்துவர் ஐயா கருதுகிறார். அதனைத் தொடர்ந்தே திமுக ரயிலிலேயே மீண்டும் பாமக பயணத்தை தொடர இருப்பதாக நினைக்க முடிகிறது.

பாமகவை நிபந்தனையுடன் கூட்டணியில் வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று நினைத்த ஜெவுக்கு மீண்டும் கூட்டணிக்கு கட்சிகளை சேர்ப்பதில் தொய்வு, இது முன்பே தெரிந்திருந்தால் 'வி.காந்தின் அரசியல் நுழைவு குறித்து ஜெ 'தமிழக வியாதி' என்றோ, வி.காந்த் அதற்கு பதிலடியாக 'தமிழக பெரும் வியாதி' என்றோ தூற்றிக் கொண்டு இருக்கமாட்டார்கள்.

தற்போதைய சூழலில் நடுவன் அரசின் தேர்தலை நோக்கிய ஜெ தலைமையிலான தமிழக கூட்டணி அமைப்பில் ஏற்பட்ட திட்டமிடலில் ஏற்பட்ட அடிக்கு வி.காந்த் மட்டுமே மருந்து. ஜெ வி.காந்துடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது தவிர்த்து வேறு வழியில்லை.

அனேகமாக அண்ணன் காடுவெட்டி குரு இந்நேரம் வெளியில் தான் இருப்பார்.

பாமகவை அதிமுக கூடுதல் இடங்களைக் கொடுத்து வளர்த்துவிட்டது போல், இந்த முறை தேமுதிகாவிற்கு அந்த யோகம் கிடைக்கப் போகிறது.

'இனியும் திமுக அரசுவுடன் கூட்டணியா ? இனி திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. தேர்தல் நெருங்க நெருங்க...'இது கொள்கை கூட்டணி அல்ல...தேர்தல் கால கூட்டணி' என்ற அறிவிப்புகளும் வரும். - எழுதி ஒருமாதம் கூட ஆகவில்லை ! :)

காழ்புணர்வின்றி வேறில்லை.

திரை ரசிகர்கள், தங்கள் விருப்ப நடிகனின் படம் வெற்றிக்காக காவடி எடுத்தாலோ, தீச்சட்டி ஏந்தி பொதுவில் சென்றால் கூட யாரும் அதையெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவது இல்லை, ஏற்கனவே திரை ரசிகர்கள் தங்கள் அறிவிலித்தனத்தை கட் அவுட் காலையும் நக்கி பறைசாற்றிக் கொண்டார்கள் தானே.

குசேலன் என்கிற பேரில் தனக்கு இருக்கும் இமேஜை மூலதனமாக வைத்து எடுத்தப்படம் பிரமிட் சாய்மிராவையும், விநியோகஸ்தர்களையும் ஆட்டம் காண வைத்தது பலரும் அறிந்தது தான், உப்பு சப்பு இல்லாத ஒரு படத்துக்கு 60 கோடி விலை வைத்து தமிழ் ரசிகர்களின் உழைப்பை சுரண்ட நடந்த மோசடி தான் குசேலன், இதற்கு ரஜினிகாந்த் உடந்தை, பெங்களூருவில் படம் ஓடவேண்டுமென்பதற்காக தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்கிற விமர்சனமெல்லாம் ஒருபுறம் இருக்கிறது.

வானத்தின் கீழே என்கிற பெயரில் பதிவெழுதும் ரஜினி ரசிகர், ஒருவர் மனம் பொங்கி இருக்கிறார், அதாவது

எதோ சன் டிவி குசேலனில் ரஜினி காந்த் தோன்றும் காட்சி செயற்கையாக இருந்தது என்று விமர்சனம் செய்ததாம், ரஜினி ரசிகர்கள் அதை கண்டித்தால் யாருக்கும் பிரச்சனை இல்லை. இவர் காழ்புணர்வு என்று தலைப்பிட்டு, சன் டிவியை திட்டும் சாக்கில் கமலஹாசனின் தசவாதரத்தை விமர்சிக்கிறார். விமர்சிக்கும் உரிமை இவருக்குத்தான் இருக்கிறது போலும், அட கமலஹாசனை விமர்சனம் செய்வதை இவரைப் போலவே ரசிக வெறியில் இருக்கும் கமலஹாசன் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள், ஆனால் சந்தடி சாக்கில் இவரது காழ்புணர்வின் பரிமாறலுக்கு பெரியாரை பயன்படுத்துகிறார்.

"துப்பாக்கி குண்டு எதேச்சையாகப் பாய்ந்ததில் தொண்டையிலிருந்த கேன்சர் நீங்கிவிட்டது என்றும், 12-ம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட ரங்கநாதர் சிலை 10 நூற்றாண்டுகள் கழித்து ரங்கராஜன் நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க சுனாமியை உருவாக்கியது எனும் கேயாஸ் தியரி பகுத்தறிவையும் ( பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு! ) சிலாகிக்கும் இந்த மோசடிக் கும்பலுக்கு, வாழ்வின் வலிகளையும், நட்பின் உன்னதத்தையும் சொல்லும் குசேலன் லாஜிக் இல்லாத படமாகத்தான் தெரியும். "

இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் பேசுவது நிஜமல்ல, வசனகர்த்தாவின் வசனமே என்று ரஜினியே வாய்திறந்த பிறகும் திருந்தாத ஜன்மங்கள் இருக்கும் நாட்டில், முட்டாள் தனமான சினிமா கதைகளுக்காக தந்தை பெரியார் என்று போற்றப்படுபவர் தூக்குமாட்டிக் கொள்ளவேண்டுமோ.

இந்த பதிவருக்கு பெரியாரைப் பற்றி தெரியாமலேயே... பெரியார் என்றுமே பேசப்படுபவர் என்கிற ஒரே காரணத்தினாலேயே பெரியாரை தனது கமலுக்கு எதிரான அரசியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார். பகுத்தறிவின்மை முட்டாள் தனங்களைக் கண்டால் பெரியார் தூக்குமாட்டிக் கொள்வாரா ? எந்த ஒரு பகுத்தறிவாளனும் அற்ப காரணங்களுக்காக தூக்கு மாட்டிக் கொள்ளமாட்டான். தமிழன விடுதலைக்கு இறுதி மூச்சுவரை பாடுபட்ட தந்தை பெரியாரை இந்த ரஜினி ரசிகர் கமலஹாசனை விமர்சனம் செய்ய அற்பமாக பயன்படுத்தி இருக்கிறார்.

பெரியாரை இழிவு படுத்தும் இந்த இடுகையை வன்மையாக கண்டிக்கிறேன், பெரியாரின் உண்மையான பற்றாளர்கள் கூட தன்னம்பிக்கையற்றவர்கள் அல்ல.

தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்பது உலகவழக்கு !

பகுத்தறிவு இமயமான பெரியார்,அற்பமான திரைக்கதைக்கும் காட்சிக்கும் தூக்குமாட்டிக் கொள்ளும் பலவீனமான திரைரசிகனல்ல

கடவுள் மறுப்புக் கொள்கையை என்றுமே மாற்றிக் கொள்ளாதாவர் பெரியார். 'அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி' என்று வாலி பாட்டெழுதிய போது சீறிப்பாய்ந்தவர்கள் பெரியார் தொண்டர்கள். அதாவது நடக்கவே முடியாத, நடக்காத ஒன்றை பெரியாரின் கொள்கைக்கு மாற்றாக எழுதி பெரியாரின் பெயரிலேயே விளம்பரப்படுத்துவது பெரியாரை கேவலப்படுத்துவது போன்றது தான்.

ஆட்டுமந்தைகளாக தன்னைப்பற்றி எண்ணம் சிறிதுமின்றி, சுயமரியாதை இன்றி இருக்கும் இவர்கள் கூட தன் பெயரை பயன்படுத்துவது தெரிந்தால் இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் நாட்டில் பிறந்ததற்கு பெரியார் ஒருவேளை வருத்தப்பட்டு 'வெங்காயம், வெள்ளைப் பூண்டு, காட்டுமிராண்டி........' என்று கடிந்துகொள்வார்.

நீங்கள் குசேலன் வெற்றிக்காக தீ மிதிங்கள், காவடி எடுங்கள், 10 நாள் பட்டினி கிடப்பதாகவும், ஏன் படம் வெற்றிபெற்றால் நாக்கை அறுத்துக் கொள்கிறேன், கட்டைவிரலை துண்டித்துக் கொள்கிறேன் என்று கூட வேண்டிக் கொள்ளுங்கள், அதைவிடுத்து பெரியாரை உங்கள் அரசியலுக்கு இழுப்பது பலரின் மனதையும் புண்படுத்துகிறது.

24 ஆகஸ்ட், 2008

:) கிருஷ்ண குமார் ஜெயந்தி :)

கருமை நிறத்தோன்....இவன்
கார்குழல் கூந்தலுக்கு மட்டுமே மயங்காதவன்...இவன்
வெண்ணையும் கூடத் தேவையில்லை
வெண்குழலே போதுமென்பான்,
துளசி தீர்த்தம் தேவையில்லை
சுண்டக்கஞ்சி போதுமென்பான் !
டாஸ்மாக்கில் சிறந்ததை தேர்ந்தெடுத்து
(எப்போதும்) பாஸ்மார்க்கு வாங்குபவன் இவன் !

பரங்கிமலையில் தவமிருந்து
ஜோதியிலே கலந்தவன்,
ஆவடியா ? அம்பத்தூரா ?
பட்டாபிராமா ? பாடியா ?
எல்லாமே என் ஊர்தான் என்றே
பால(ன) பாடம் படித்துவிட்டு
மோட்சம் அறிந்தவன் !


நகைச்சுவை...
வேண்டுவோர் மகிழ்வதற்கே,
காண்டு கஜேந்திர மோட்சம் கொடுப்பவன் இவன் !

மடிப்பாக்கம் மாதவனாம் கிருஷ்ண குமார்
மகிழ்வுடன் நிதமிருக்க வாழ்த்துகிறேன்
நண்பனாக !லக்கி லுக் என்கிற கிருஷ்ண குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் !

டவுசரைக் கழட்டியவர்
கோவி.கண்ணன்

***********

என்னைப் பொருத்து.....
இன்னிக்குத்தான் தமிழ்பதிவில் கிருஷ்ண ஜெயந்தி !

சிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்படங்கள் !

விஜய் ஆனந்த் என்கிற பின்னூட்ட சூறாவளியை திங்கள் கிழமை லக்கிலுக் எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார், பின்னூட்ட சூறாவளி சிங்கையில் தான் இருக்கிறார். நல்ல பதிவுகளாக தேடிப்பிடித்து பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துபவர். விரைவில் பதிவும் எழுத இருக்கிறார். 'இன்று சந்திக்கலாம் உங்கள் வீட்டு அருகே பார்ப்போம்' என்று சொல்லி இருந்தேன். இடையில் ஜெகதீசனையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து தொலைபேச... 'எங்க வீட்டுக்கே இரண்டு பேரும் வந்துடுங்க' என்றார். அப்பறம் 5 நிமிடம் கழித்து தொலைபேசியில் அழைத்து ... 'பாரி.அரசு அங்மோகியோ கூப்பிடுகிறார் 6 மணிக்கு அங்கேயே வந்துடுங்க' என்றார். இராம் (முகவை மைந்தன்) வருவதாகச் சொன்னார். விஜய்க்கு தொலைபேசி அங்கு வரச்சொல்லிவிட்டு ஜோசப் பால்ராஜைக் கூப்பீட்டு தீடீர் சந்திப்பு நேரம் இருந்தால் வாருங்கள் என்றேன். 'அண்ணே பொழுது போகாமல் உட்கார்ந்து இருக்கேன்...இப்பவோ போய் துண்டு போட்டுவிடுகிறேன்...' என்றார். கிரியும், ஜோதிபாரதியும் வேலைக் காரணமாக திடீர் சந்திப்பின் அழைப்பை புறக்கணித்து விட்டார்கள், மற்றவர்களைக் கூப்பிடலாம் அவங்க வீட்டு அம்மணிகளின் சாபத்தைப் பெறவேண்டாம் என்று நினைத்து அதுக்குமேல் யாரையும் கூப்பிடல, ஏனென்றால் சிங்கை சந்திப்பு நடந்து மூன்றுவாரம் கூட ஆகலை.

சந்திப்பிற்கு குறித்த நேரத்தில் ஆறுபேருமே அடைந்துவிட்டோம். அங்கே ஒரு காஃபி கடையில் உட்கார்ந்து ஒருமணினேரம் பேசினோம்* விமானநிலையங்களில் பாதுக்காப்புக்காக டெக்னாலஜி வழியாக பயணிகளை நிர்வாணமாக்கிப் பார்பதை அரசுகள் நடைமுறை படுத்தி இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?" என்றார் அரசு.

பாதுகாப்புக்காக செய்யப்படுவை அதைத் தவறு என்று சொல்லமுடியவில்லை. விமானப்பயணம் அச்சமூட்டுவதாக இல்லாமல் இருக்க தற்போதைய சூழலில் தேவைதான் என்றோம். அதைக் கண்காணிப்பவர்கள் ஆண்களின் படங்களையும், பெண்களின் படங்களையும் பார்பவர்கள் ஆணுக்கு ஆண் சோதனையாளர், பெண்ணுக்கு பெண் சோதனையாளர்களை வைக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பாரி.அரசு, மற்றும் பால்ராஜ் ஆகியோரின் அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடப்பங்கீடு, கிரீமி லேயர் பற்றி பெரிய விவாதம் நடந்தது.

(இராம், அரசு,பதிவர்,பால்ராஜ் மற்றும் விஜய் ஆனந்த்)

இரவு மணி 8 வாக்கில் அங்கிருந்து அரசுவின் வீட்டுக்குச் சென்று இரவு 10:15 வரை பேசிக் கொண்டு (மட்டும்தான்!!!) இருந்தோம். இடையில் பரிசல்காரன் மற்றும் வெண்பூவிடம் கைபேசியில் பேசினோம். மலேசிய தம்பி விக்னேஷ்வரன் ஈபோவிலிருந்து அழைத்துப் பேசினார். சந்திப்பின் நோக்கம் விஜய் ஆனந்தின் அறிமுகம். சந்திப்பில் விவாதித்தவற்றைப் பற்றி தம்பி பால்ராஜ் அவர்கள் விரிவாக எழுதுவார். பேசிய மற்ற விசயங்கள் ஈஎஸ்பி அனுபவம் பற்றி இராம் எழுதுவார். MACH3 FUSION பற்றி ஜெகதீசன் எழுதுவார். அவர்களுக்கெலலம் விஜய் ஆனந்த் 'மீ த பர்ஸ்ட் பின்னூட்டம்' போடுவார்

விஜய் ஆனந்த்...துடிப்பான இளைஞர் 26 வயதாகிறது, திருமணமானவர், சென்ற வாரத்தில் குட்டிப் பையனுக்கு அப்பாவாகி இருக்கிறார். புதியவரானாலும் வெட்கப்படமால் விவாத ஜோதியில் கலந்தார் , நீண்ட நாள்களாக வலை மேய்பவர்.

22 ஆகஸ்ட், 2008

உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தப்பு ? - எல்லோரும் எல்லாமும் பெருக !

உயர்சாதியினர் தமிழகத்தில் 14 விழுக்காடு இருக்கிறார்களாம், அவர்கள் தங்களுக்கு 14 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டதை கலைஞர் தலைமையிலான அரசு மறுத்துவிட்டது. பேசாமல் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி மொத்த இடமான 100 விழுக்காட்டையும் சாதி மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்துக் கொடுத்துவிடலாம்.

அப்படியே பிரிச்சு கொடுத்துட்டு அந்த ஒதுக்கீட்டில் எந்த மாணவனைத் தேர்ந்தெடுப்பது என்ற தலைவலியையும் அரசு வைத்துக் கொள்ளாமல் அதாவது கட் ஆப் மார்க் பற்றி யெல்லாம் அந்தந்த சாதிகளே தீர்மாணிக்க சாதிசங்கங்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்.

தற்போதைய ஒதுக்கீட்டு முறையில் மொத்தம் 4 பிரிவுகள் இருக்கிறது,

எஸ்ஸி / எஸ்டி - 19
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20
பிற்படுத்தப்பட்டோர் - 30 விழுக்காடு
ஓப்பன் - 29 விழுக்காடு (கணக்கு சரியாக தெரியல, கொஞ்சம் கூட குறைவாகக் கூட இருக்கும்)

உயர்வகுப்பினர் வெறும் 14 விழுக்காடு தானே கேட்கிறார்கள், மீதம் இருக்கும் (29 மைனஸ் 14 ) 15 விழுக்காடும் அதே அடிப்படையில் பிரித்துக் கொடுத்தால்

எஸ்ஸி / எஸ்டி - 22
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 23
பிற்படுத்தப்பட்டோர் - 35 விழுக்காடு
உயர்வகுப்பு - 15 விழுக்காடு

என்று கணக்கு வந்துவிடும்......

இந்திய அளவில் இருக்கும் இந்திய அரசு வேலை / கல்விகளிலும் இட ஒதுக்கீட்டு முறை மாற்றப்பட வேண்டும். தற்போது வகுப்படிப்படையில் இருக்கும் ஒதுக்கீட்டை மாநில அடிப்படைக்கு மாற்றி அமைத்து அந்தந்த மாநில நிலவரப்படி ஒதுக்கீடு வழங்கவேண்டும். பல்வேறு மாநிலங்களில் சாதிப்பெயர் ஒன்றாக இருந்தாலும், மக்கள் நிலையும் வாழ்க்கைத் தரமும் வேறு. அதனால் இந்திய அளவில் மாநில அளவிலான இட ஒதுக்கீடே சரியான தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.

சேவகம் பண்ணுவதற்காக என்ற எந்த தனிப்பட்ட சாதியும் கிடையாது ஆகவே.....இருக்கும் சாதி மக்கள் தொகை அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் சமத்துவம் நிலைநாட்டப்படும்.

உயர்வகுப்பினர்களும் படிக்க வேண்டுமே. அவர்களுக்கு இட ஒதுக்கீடே இல்லை என்றால் எப்படி ?

எல்லோரும் எல்லாமும் பெருக !

:)

இவரு என்ன சொல்றாருன்னா ? இட ஒதுக்கீட்டையே எடுத்துவிடனுமாம்...யாரா ? அதை அங்கேயே போய் படிங்க...

21 ஆகஸ்ட், 2008

வெளிச்சப் பதிவருடன் ஒரு திடீர் சந்திப்பு !

நேற்று மாலை ஆறுமணிக்கு தம்பி ஜெகதீசன் போன் செய்தார். 'லிட்டில் இந்தியாவுக்குப் போறேன்... அண்ணனுக்கு புதுப்படம் சிடி வாங்கிக் கொடுத்தனுப்பனும்...உங்களுக்கு தெரிஞ்ச கடை இருக்கா?', 'நான் அந்த பக்கம் வழியாகத்தான் போவேன்...7.30 மணிக்கு வருகிறேன்..லிட்டில் இந்தியாவில் வெயிட் பண்ணு' என்று சொல்லிவிட்டு...7.15 மணிக்கு லிட்டில் இந்தியாவிற்கு சென்றேன்...முஸ்தபாவில் கொஞ்சம் வேலை இருக்கு...'அங்கேயே இருங்க..,வருகிறேன்'...என்றார்.

லிட்டில் இந்தியா எருமை சாலையில் (Baffalo Road) வாடகைக் கார்கள் நிறுத்துமிடம் (டாக்ஸி ஸ்டாண்ட்) அருகில் உட்கார்ந்து இருந்தேன்.

ஒருவர் அருகில் நெருங்கி வந்து.....'நீங்க தானே கோவி.கண்ணன் ?' எனக்கு வியப்பாகிவிட்டது...'முன்னபின்னே தெரியாத ஒருவர் சரியாகக் கேட்கிறாரே... வலைப் பதிவாளராகத்தான் இருக்கும்....வேற யாரும் 'கோவி' சேர்த்துச் சொல்லமாட்டாங்க' என்பதால் 'நீங்க வலைப்பதிவாளரா ?' என்று கேட்டேன். பெயரைச் சொன்னார். 'அடக்கொடுமையே...அவரோடு ஒரு 10 தடவையாவது போனில் பேசி இருந்தும்...எதிரில் பார்த்து பேசும் போது குரலை வைத்துக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை...' வந்தவர் வேறு யாருமில்லை நம்ம
ஜோதி பாரதி!!!

சராசரி உயரமும்...சற்றே கூடுதலான உடலும்...அடுத்த வினாடி புன்னகை பூக்கத் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கும் முகம் அவரது அடையாளத்தில் உடனடியாக காண்பது இவைதான்.

வியப்பு பொங்க....

"ஓ....நீங்கள் தானா அவர் ? எங்கே இந்த பக்கம் ?"

"இட்லி அரிசி வாங்க வந்தேன்" என்றார் கையில் அரிசி மற்றும் இதர பொருட்கள் இருந்தது... பொறுப்பான இல்லத்தரசன் ... சிறிது நேரம் அங்கேயே நின்று பேசினோம்

"ஜெகதீசன் முஸ்தபாவில் இருக்கார்... அவரையும் பார்த்து விட்டு வருவோம்" என்று கிளம்பினேம்

அதற்குள் வேலை முடிந்ததாக செல்பேசியில் அழைத்துவிட்டு வீரமா காளியம்மன் கோவிலுக்கு அருகில் வந்து திரும்பவும் அருகிலேயே நின்று கொண்டு 'எங்க இருக்கிங்க ?' என்று கேட்டார் ஜெகதீசன்.

பிறகு மூவரும் காஃபி குடித்துக்கொண்டே மொக்கைப் போடலாம் என்று கோமள விலாசுக்குச் சென்றோம்.


காஃபி மற்றும் பீட்ருட் காரசிப்ஸ் வாங்கிக் கொறித்துக் கொண்டே ஒரு 40 நிமிடம் மொக்கை... பெருசாக எதைப்பற்றியும் விவாதிக்க வில்லை. ஒருவர் ஒருவரைப் பற்றி கேட்டுக் கொண்டோம். அவரிடம் திரட்டிய தகவல்கள், எனக்கு தெரிந்த தகவல்களும்

* பதிவர் சந்திப்புக்கு வரமுடியாமல் போனதற்கு குடும்ப பாரமே காரணம் என்றார் (நம்பாதிங்க...முதுகு வளைவாக இல்லை)

* அடுத்த முறை சந்திப்புக்கு வருகிறேன் என்றார்

* 10 ஆண்டுகளாக சிங்கையில் இருக்கிறார்

* 3 வண்டுகளுடன் கொஞ்சம் சிறிய குடும்பம்

* சிங்கை கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு நெருக்கமானவர்

* அவ்வப்போது சிறு சிறு கவிதைகளை எழுதுவார்

* அண்மையில் பிராவகம் நடத்திய போட்டியில் ஈழத்தமிழர் குறித்து கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றவர்

* இயல்பாக பேசக் கூடியவர், சட்டென்று நண்பராகிவிடும் குணம், இந்த பூனை பால் மட்டும் தான் குடிக்கும் புலிப்பால் குடிக்காது

* நாள் தோறும் கிடைத்தால் வாரத்துக்கு 7 நாளும் அசைவம் சாப்பிடுபவர்

* கோவிலுக்குப் போகக் கூடியவர்

* ஊர் அத்திவட்டி

* போண்டாவுடன் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார், வடைத்தான் கிடைத்து. (நிழற்படம் பார்க்க)

* மகாகவி பாரதி மீது சற்று விமர்சனம் இருந்தாலும் பாரதியைப் போற்றுபவர்

* பாரதி ராஜாவின் விருப்ப நாயகன் நடிகர் 'ராஜா' வின் அசப்பிலான தோற்றம்.

தகவல்கள் போதுமா ? :)

அதன் பிறகு விடைபெற்றோம்.

நான் வசிக்கும் இடத்திலிருந்து 30 நிமிட பயணத்தொலைவில் தான் அவரது வீடு இருக்கிறது, நேரில் சந்திக்கவேண்டும் என்று நீண்டநாளாகவே சொல்லிக் கொண்டு இருந்தோம், நேற்று அது சற்றும் எதிர்பாராவிதமாக, இனிமையான சந்திப்பாக அமைந்தது.

***

மற்றோர் மினி சந்திப்பு...பிறகு

நானும் ஜெகாவும் சிடி வாங்கப் போகும் போது ...இடைமறித்து குறுக்கே கையைப் பிடிச்சு இழுத்து....'பொன்னி அரிசி இங்கே கிடைக்குது....வாங்க வாங்க' என்றார் ஒருவர்...ஹெல்மெட் போட்ட தலை...பார்த்தால்...நம்ம ஜோசப்.பால்ராஜ்....அவருடைய உறவினர் ஒருவரை அறிமுகப்படுத்தினார். முச்சந்தியில் நடந்த இந்த மற்றொரு குறுஞ் சந்திப்பு வெறும் 2 நிமிடங்களில் 'பை பை...' ஆகிவிட்டது

20 ஆகஸ்ட், 2008

புதிய பதிவர்களை எப்படி அடையாளம் காண்பது ?

தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள். பல்வேறு தமிழர்கள் தமிழால் ஒன்று கூடுவது ஆரோக்கியமானது தானே. ஒவ்வொருவருக்கும் தத்தம் படித்த, கேட்ட, பிடித்ததைப் பற்றிய
நிலைப்பாடுகளே பதிவில் வெளிப்படும். புதிய பதிவர்களை எளிதில் அடையாளம் காண 'புதியது' என்ற சிவப்பு குறிசொல்லை தமிழ்மணம் அவர்களது இடுகையுடன் இணைத்திருக்கிறது.

அப்படி வருகிறவர்களெல்லாம் புதியவர்களா ? அது ஒருபுறம் இருக்க, புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு ஆதரவளிக்க வேண்டியது பதிவர்கள் கடமைகளில் ஒன்று :) யாருமே பின்னூட்டவில்லை என்றால் நம்ம கருத்து இந்த சபையில் எடுபடாது போல, இங்கே குழுவாக செயல்படுகிறார்கள் என்று நினைத்து 3 இடுகையோடு காணாமல் போய்விடுவார்கள்.

முன்பெல்லாம் புதிய பதிவர்களுக்கு உடனடியாக பின்னூட்டுவேன், தற்போது அவ்வாறு செய்வதில் சற்று தயக்கமாகவே இருக்கிறது. காரணம் வெளிப்படையானது தான்.

வந்திருப்பவர்கள் புதியவர்களா ? அல்லது ஏற்கனவே இணைப்பில் இருப்பவரின் மற்றொரு வலைப்பதிவா ? அல்லது ஏதோ ஒரு பெயரில் வந்து கும்மி அடிக்கும் பிரபல பதிவர்களா என்ற ஐயம் (சந்தேகம்) இருப்பதால் சட்டென்று, அவர்களுக்கு வணக்கம் போட முடிவதில்லை.

புதிய பதிவர்களின் பதிவு எப்படி இருக்கும் ?

* கண்டிப்பாக ஜிகினா வேலை எதுவும் இல்லாத பொதுவான ப்ளாக்கர் டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள். ரொம்ப அலப்பறையாக இருந்தால் அது பழம் திண்ணு துப்பியவரின் பதிவாகத்தான் இருக்கும்
* புதிய பதிவர்களுக்கு வழக்கமாக பதிவர்கள் பயன்படுத்தும், பின்னூட்டம், மறுமொழி, புதசெவி, சொசெசூ மற்றும் ஏனைய குழூக்குறிச் சொற்கள் தெரிந்திருக்காது
* இதுதான் என் முதல் பதிவு என்றெல்லாம் ஆரம்பிக்க மாட்டார்கள்
* முதல்பதிவில் மூச்சு முட்ட எழுதி இருக்கமாட்டார்கள்
* பெயருக்காக மூன்று இடுகைகள் மட்டுமே இணைத்திருக்க மாட்டார்கள்
* ஏற்கனவே நீண்டகாலமாக பதிவை படித்துவந்திருந்து புதிதாக பதிவு எழுத வந்திருந்தால் மேற்சொன்னவைகளெல்லாம் இல்லாமால் இருக்கும்.
* மெக்கலேய கல்வி முறை, கிறித்துவ மெசினரி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றெல்லாம் புதிய பதிவர்களின் பதிவில் காண்பது அரிது
* பெரியார் தொண்டராக அறிமுகப்படுத்திக் கொள்பவராக இருந்தால் வெறும் பார்பனியம் பற்றி மட்டுமே எழுதமாட்டார்கள். இஸ்லாமியர் பெயர்களில் கிறித்துவர்களை திட்டி எழுதமாட்டார்கள் அதை வைத்தே பதிவுக்காரர் குல்லாவா, கொண்டையா என்று கண்டுபிடித்துவிடலாம்.
* புதிய பதிவர் எவருமே ஆறுமாதத்திற்கு முன்பு நடந்த விவாதங்களைப் மீண்டும் கிளறி எழுதமாட்டார். புதிய பதிவர்களுக்கு அவை நடந்ததே தெரிந்திருக்காது.
* வேர்டு வெரிபிகேசன் வைத்திருப்பார்கள்
* புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்
* புதிய பதிவர்கள் ஒரு சிலரின் பின்னூட்டங்கள் சூடான இடுகையில் இடம் பிடிக்கும் லக்கி லுக் போன்றவர்களின் இடுகையில் காணப்படும். தங்கள் பெயரை ஒருசிலராவது படித்து தங்கள் பக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்புவார்கள். இதுல எதுவுமே தவறல்ல. புதிதாக எழுதிய போது எனக்கு யாராவது திட்டியாவது பின்னூட்டமிடமாட்டார்களா என்று நினைத்திருக்கிறேன்.
* கமெண்ட் மாடுரேசன் வைத்திருக்க மாட்டார்கள் (அம்பி பின்னூட்டத்தில் தெரிவித்தது)
* அனானி / அதர் ஆப்சன் திறந்து வைத்திருப்பார்கள் (அம்பி பின்னூட்டத்தில் தெரிவித்தது)

இதையெல்லாம் படிச்சுட்டு இதை தவிர்த்துவிட்டு புதிதாக முயற்சிக்கும் பழைய பதிவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?

வெர்ரி சிம்பிள்...

தலைப்புச் சூடாக வைப்பார்கள், இரண்டு நாளைக்கு ஒருமுறையேனும் சூடான இடுகையில் இடம்பிடிப்பார்கள்.

மேலும் குசும்பன் ஆராய்ச்சியில் கண்டுகொண்டவை இங்கே !

பொன்முடியை நான் ஏன் ஆதரிக்கிறேன் ?

இது உகாண்டா தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியை நான் ஏன் ஆதரிக்கிறேன் போன்ற மொக்கை மேட்டர் இல்லை. மனோன்மணியம் பல்கலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்கலை வளாகத்திற்குள் ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறதாம்.

//ஆங்கிலத்தில் பேச வேண்டும்-பொன்முடி:

விழாவில் கலந்துக் கொண்டு முதுநிலைப் படிப்புகளை தொடங்கி வைத்து, விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

இந்தியாவிலேயே இதுவரை அறிமுகம் செய்யப்படாத 3 புதிய முதுநிலை படிப்புகள் இங்கே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 18 ஆண்டுகாலமாக இப்பல்கலைக்கழகம் தென்மாவட்ட கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இப்பல்கலைகழகத்தில் புதிய பட்டப்படிப்பு பாடங்களை நடத்திட வெளிநாட்டு பேராசியர்கள் வருகை தர உள்ளனர்.

இப்பல்கலை கழகத்தில் ஆங்கிலத்தில்தான் மாணவர்கள் பேச வேண்டும் என்று துணை வேந்தர் கூறியதை வரவேற்கிறேன். இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்க் கூடாது. ஆங்கிலம்தான் நம்மை உலகத் தரத்துக்கு உயர்த்த உதவும் மொழி. சீனர்கள் கூட இப்போது ஆங்கிலம் கற்க ஆரம்பித்துவிட்டார்கள்.//

தமிழுக்குத் தடையா ? என்று படித்ததும் ஒரு நொடி திகைத்தது என்னவோ உண்மைதான். பிறகு நினைத்துப் பார்த்ததில் கல்லூரி முடித்த எத்தனை மாணவர்கள் வேலையில் சேரும் போது சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் ? தமிழகத்தில் இருக்கும் இயந்திரவியல், தகவல் தொழில் நுட்பம், மற்றும் ஏனைய மாத ஊதியம் வழங்கும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அனைத்திலுமே ஆங்கிலமே பொதுவாக புழக்கத்தில் இருக்கிறது. அலுவலக கூட்டங்களில் (Meeting) எப்போதுமே ஆங்கிலத்தில் தான் உரையாடல் நடைபெறும். நான் முதன் முதலில் நேர்முகத் தேர்வை சந்திக்கும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாததால் ஒரு சில அலுவலகத்தில் (HCL,L&T,WIPRO)எழுத்து தேர்வு நன்கு செய்தும் நிராகரிக்கப்பட்டேன். என்னைப் போன்று ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி இல்லாதவர்கள் பலருக்கும் இதே நிலை இருந்திருக்கும்.

தமிழ்வழிக் கல்வியை உயர்நிலை வரை படித்த மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும் போது ஆங்கிலபாடங்களைப் படிக்கும் போது திணரவே செய்கிறார்கள். தமிழ்வழிக்கல்வியில் ஆங்கில பாடம் சிறப்பாக சொல்லிக் கொடுக்கப்படாததும் ஒரு காரணம். மற்றும் தமிழ்வழிக்கல்வியில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடம் மட்டுமே. 12 ஆம் வகுப்புவரை ஆங்கிலக் கட்டுரைகளை மனப்பாடம் செய்தால் தான் எழுத முடியும் என்பது தான் தமிழ்வழி கல்வி கற்பவர்களின் நிலை. நான் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவில் ஆங்கிலத்தில் தேறுவதுதான் கடினம் என்றே பயந்து கொண்டே தேர்வு முடிவை எதிர்நோக்கினேன். நல்லவேளை தவறவில்லை.

ஆரம்ப பள்ளிக் கூடங்களில் தாய்மொழியை பேசவே கூடாது என்ற விதிகள் தான் மொழியை முடக்கிவிடும். சிறுவயது மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வயது, அங்கு தடைசெய்தால் தாய்மொழியை பொதுவாக பேச்சில் பயன்படுத்துவது குறைந்துவிடும்.

மனோன்மணியம் சுந்தரானார் பல்கலையில் எடுத்த முடிவு தவறானது அல்ல. மாணவர்கள் ஆங்கில உரையாடலில் சிறந்து விளங்கினால் தான் உலக அளவில் நாம் சிறந்து விளங்க முடியும் பொன்முடி சொல்வதும் சரிதான்.

சுண்டல் !

அவியல் பதிவுகளை நண்பர்கள் போடுகிறார்கள். சிற்றுண்டி வகையில் ஒரு பதிவைப் போட்டுப் பார்ப்போமே. அவியல் பதிவுகளில் பா.கே.ப சாயலில் எழுதுகிறார்கள். இதைக் கொஞ்சம் க.போ.யா ( கலக்கப் போவது யாரு பாணியில் நகைச்சுவையாக எழுத முயற்சிக்கிறேன். சிரிப்பு வரலைன்னா, ரொம்ப கவலையை விடுங்க. நம்ம சாதி வெட்டிப்பயல் பாலாஜி (பதிவர் சாதிதானுங்க) பதிவு பக்கம் எட்டிப் பாருங்க, உண்மையிலேயே நகைச்சுவையில் கலக்குபவர் அவருதான். நகச்சுவையில் கொஞ்சம் யோசித்தால் ஐ மீன் நகத்தைக் கடிச்சிக்கிட்டே யோசித்துப் பார்த்து....

நடிகர்கள் கடற்கரையில் சுண்டல் விற்றால் ? சூட்டோடு சூடாக சூப்பர் ஸ்டார் சுண்டல் விற்பதைப் பற்றி கேட்ப்போம்.

கோவி : சூப்பர் ஸ்டார் ரஜினி சார், நேற்று நீங்கள் விற்ற சுண்டல் சூப்பர் சுண்டல் என்று வித்திங்களே, உண்மையில்யே அது சூப்பர் சுண்டலா ?

ரஜினி : ஹா...ஹ்ஹா..ஹா...யாரோ செஞ்ச சுண்டல நான் இங்கே வந்து விக்கிறேன். அத நான் செஞ்ச சுண்டலாக நீங்க தான் நெனக்கிறிங்க, இன்னிக்கு நல்ல சுண்டலோடு வந்திருக்கன் இது நல்ல சுண்டல். மக்கள் இதை வாங்கித் தீர்கணும், நல்ல சுண்டலை ஆண்டவனே கைவிட்டாலும் மக்கள் கைவிட்டுட மாட்டாங்க

கோவி ; மனதுக்குள்...இன்னிக்கு மட்டு இவரே செஞ்ச சுண்டலாக்கும்...

*******

கோவி : கமல் சார், உங்க சுண்டல் தான் இப்ப நல்லா போகுதாமே ... ஆனால் ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லையே.
கமல் : நான் 5 வயதிலிருந்து சுண்டல் விக்கிறேன்...சுண்டலை எப்படி செஞ்சா நல்லா இருக்கும்னு எனக்கு தெரியும்...கொண்டக்கடலை சுண்டல் ஒருவகைதான் செய்யமுடியும்னு பலர் நினைக்கிறாங்க...நான் ஒரே கொண்டக்கடலையில் 10 வகையான சுண்டல் செய்திருக்கேன். பார்த்திங்க என்றால் அது கொண்டக்கடலை சுண்டலான்னு தெரியாது. அமெரிக்கா சமையக்காரர் தான் சுண்டலுக்கு மசாலா அரைக்கிறார். என்ன கேட்டிங்க ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லையா ? ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லைன்னு யார் சொன்னது ? இருந்தால் நல்லா இருக்கும்னு தானே எல்லோரும் நினைப்பாங்க ? இப்படித்தான் சண்முகி மாமி...

கோவி: (எஸ்கேப்) ஐயோ சாமி...

*********

கோவி : இளைய தளபதி....வணங்கங்ணா... அவங்களாவது சுண்டல் விற்கிறாங்க...நீங்க நமத்துப்போன முறுக்கை சுண்டல்னு சொல்லி விக்கிறிங்களே எப்படிங்கண்னா

விஜய் : அப்படிங்களான்னா...அப்பா இருக்காருங்களே அவருதான்னா முறுக்கைக் கூட சுண்டல்னு விக்கலாம்னு சொன்னார். சுண்டல் என்னங்கண்னா சுண்டல், ஒரு குத்துப்பாட்டோ ஊசிப்போன போண்டாவைக் கூட விக்கலாங்கண்னா...ஏன்னா இங்கதான் வலைபதிவாளர்கள் சந்திக்கிறாங்க

கோவி : போண்டா மேட்டரு இஸ்டாருங்களுக்குக் கூட தெரிஞ்சு போச்சு

*********

கோவி : தல...பழைய சரக்கை சுடவெச்சு சூப்பராக தள்ளிவிடுறங்களே...உங்க சுண்டலும் வியாபாரம் ஆகிடுதாமே

அஜித் : சுண்டல் விக்கறது பெரிசுல்ல...நாம அதை எப்படி விக்கிறம்ங்கிறது தான் பெரிசு...கெட்டப்போடு விக்கனும் ...கெட்ட சுண்டலை வித்துடக் கூடாது...பழைய சரக்கானாலும் பதமாக இருந்தால் விக்கலாம்.

கோவி : எனக்கு இப்ப விக்குது !

*******

கோவி : குழந்தை தியா எப்படி இருக்கா ? உங்க சுண்டல் இப்பெல்லாம் ஏன் சரியாக போகல மிஸ்டர் சூர்யா ?

சூர்யா : முன்பெல்லாம் விக்கிறது சுண்டல் தானான்னு நானே தெரிஞ்சிக்க உடம்பு முழுவதும் 'சுண்டல்' 'சுண்டல்' னு பச்சக் குத்திக்குவேன். மறக்காமல் எல்லாத்தையும் வித்துடுவேன். கல்யாணம் ஆனதும் காலேஜ் பொண்ணுங்க சுண்டல் வாங்குவது குறைஞ்சிட்டு...நாளைக்கு நான் விக்கிற சுண்டலோட வாசனை மியாமி பீச் வரைக்கும் தெரியும்.

கோவி : மூக்கைப் பிடித்துக் கொண்டே .... கெட்டுது போ......

*******

கோவி : விக்ரம் சார்.....ஆரிச்சாமி சுண்டல், அந்நியன் சுண்டல் னு நல்லா வித்துக்கிட்டு தானே இருந்திங்க..


விக்ரம் : ம்ம்..எங்கிட்ட சுண்டலைக் கொடுத்து விக்கச் சொன்னவங்களெல்லாம் நான் நல்லா விக்கிறேன் என்று தான் கொடுத்தாங்க...நல்ல சுண்டலைக் கொடுக்கல...இப்ப சுண்டல் வாங்கி விக்கும் போது சரக்கு நல்லா இருந்தான் வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு பீச்சில வந்து பாருங்க கந்தசாமின்னு ஒருத்தன் சுண்டல் விப்பான்

கோவி : ஐயோ நாளைக்கு பீச்சுப்பக்கம் வந்து வேறு யாரும் வாங்கினால் நானும் வாங்குறேன்

*******

கோவி : சிம்பு தம்பி...

சிம்பு : என்ன கேக்கப் போறிங்க ? அவங்க சுண்டல் வேகமாக விக்குதேன்னு தானே...முதலில் யார் வேகமாக சுண்டல் விக்கிறாங்கங்கங்கிறது முக்கியமில்லே...கடைசியில யாரு வித்து முடிக்கிறாங்கங்கிறதுதான் வியாபார வெற்றியே..இன்னிக்கு நாலு பேரு அவங்க சுண்டல் நல்லா இருக்குன்னு சொல்லிட்டா என் சுண்டல் விக்காம போய்டுமா ? நல்ல சுண்டலை வாங்கிட்டு வந்து விக்கிறது பெரிசு இல்லை. நல்ல சுண்டலை நாமே செஞ்சு விக்கெனும்...

சொல்லிக் கொண்டே விரலை சொடுக்க அவர் வைத்திருக்கும் சுண்டல் பாத்திரம் நழுவி பீச் மணலில் தலைகீழாக விழுகிறது

******

கோவி : உங்க சுண்டல் மட்டும் ஏன் விக்கும்னு சரியாகவே சொல்ல முடியல ?

தனுஷ் : இத பாருங்க நான் என்ன விக்கிறேன்னு எனக்குத் தெரியாது...எங்க அண்ணனும், அப்பாவும், சுண்டல் செய்றவங்களும் என்ன சொல்லி விக்கச் சொல்றாங்களோ அதை விப்பேன். முந்தா நேத்திக்கு நல்லா இருந்தது...நேத்திக்கு நல்லா இல்லை...இன்னிக்கு நல்லா இருக்கு. ஏத்த இறக்கம் வியாபாரத்துல இருக்கும்.

கோவி : தத்துவம் பேசுவதில் மாமனார் தோற்றாரு போங்க...


*****

ரூம் போட்டு யோசிச்சி...மூடு இருந்தால் நாளைக்கு அரசியல் வாதிகள் விற்கும் சுண்டலைப் பற்றி கேட்போம்.

18 ஆகஸ்ட், 2008

முஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் !

செளதியில் அடைக்கலம்:

இதற்கிடையே அவரை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து தவிர செளதி அரேபியாவும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. முஷாரப்பிடம் இருந்து நவாஸ் ஷெரீப்பை காப்பாற்றி பாதுகாப்பு தந்த செளதி இம்முறை ஷெரீப்பிடம் இருந்து முஷாரப்பை காப்பாற்றும் வேலையில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக செளதி வெளியுறவு அமைச்சர் அஜீஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு செளதியே அடைக்கலம் கொடுக்கும் என்றும் தெரிகிறது.

அவர் பதவி விலகினால் நாட்டை விட்டு கெளரவமாக வெளியேற உதவ வேண்டும் என நவாஸ் ஷெரீ்ப்-சர்தாரி ஆகியோரிடம் செளதி கூறியுள்ளது. அதை இருவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.


மேலும் படிக்க ...

நன்றி : தட்ஸ்தமிழ்
cartoons : http://www.dawn.com/2008/08/18/cart.htm

அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு பதவி சுகம் அனுபவிக்கிறார்களோ, பதியும் வரலாறு தவிர்த்து அவை யாவும் நிலையல்ல...அவர்கள் வாழும் காலத்திலேயே ஒருநாள் அவை காணல் நீராகிவிடும்.

குப்பைகள் !

உலக சுற்றுச் சூழல் அச்சுறுத்தலில் முதன்மை பங்கை வகிப்பது குப்பைகள் தான். மக்கிய குப்பை, மக்காத குப்பை போடுவதற்கு ஏற்ப சென்னை மாநகரத்தில் இரண்டு தொட்டிகளை வைத்திருப்பார்கள், சிங்கையிலும் ரீசைக்கிள் குப்பைத் தொட்டிகள் எங்கும் உண்டு, குளிர்பான அலுமினிய புட்டிகள் (can) , மற்றும் தாள்களைப் போடுவதற்கென்றே தனியான தொட்டிகள் உண்டு. அதைத்தவிர ப்ளாஸ்டிக் குப்பைகளைப் போடுவதற்கென்றே தனியான தொட்டிகள் உண்டு. ப்ளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகளைக் குறைக்கவும் பல்வேறு நடவெடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். பேரங்காடிகளுக்கு வருபவர்கள் கைப்பையை உடன் எடுத்துவருவதன் மூலம் ப்ளாஸ்டிக் பை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுதியாகிறது.

சென்னைப் போன்ற இந்திய நகரங்களில் ஒரு ரூபாய் தண்ணீர் பாக்கெட்டுகளால் ப்ளாஸ்டிக் குப்பை மிகுதியாகிறது. இந்த குப்பைகள் கொட்டப்படும் நிலங்களை ஒன்றும் செய்யமுடியாமல் பாழ்பட்டுவிடும், மேலும் ப்ளாஸ்டிக் பொருள்களை எரிப்பதனால் ஏற்படும் புகை சுற்றுபுரம் மற்றும் காற்றின் தூய்மைக் கேட்டையும் மிகுதியாக்கிவிடும், சென்னை போன்ற பெருநகரங்களின் தண்ணீருக்காக பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளை தடைசெய்யாவிட்டால் தூய்மைக்கேட்டை வெகு விரைவில் அடைவது திண்ணம். முடிந்த அளவு தூயத்தண்ணீரை வீட்டில் இருந்து எடுத்துச் சென்றே அருந்தினால் ப்ளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கையிலான பயன்பாடு குறையும். அல்லது அவைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.

எழுதவந்தது இது அல்ல, சுற்றுப்புர சூழலுக்காக என்னால் முடிந்த ஒட்டுத்தகவல் தான் அது.

*********

நம் இந்தியர்கள் வெளிநாடுகளில் துப்புரவு பணியாளராக வேலை செய்வதை கெளரவ குறைச்சலாக நினைப்பது இல்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள வெளிநாடுகளின் விமானநிலையங்களில் துப்புரவு தொழிலாளராக ஒரு இந்திய பணியாளராவது இருப்பார்கள். இவர்கள் இந்தியாவில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. டெல்லியைத் தவிர்த்து வேறெங்கிலும் பார்பனர்கள் துப்புறவு பணி செய்வதில்லை. இந்தியாவெங்கிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினர்கள் பலரும், பிற்பட்டவர்களில் வெகுசிலரும் அந்த வேலையைச் செய்துவருகிறார்கள், வெளிநாட்டில் ? மிகுதியாக பிற்பட்ட வகுப்பினர்கள் கூட அந்த வேலையைச் செய்கிறார்கள்.

வெளிநாட்டு பணம் என்றால் செய்யமுடிகிறது ? உள்நாட்டில் இவர்களால் இதைச் செய்யமுடியவில்லையே ஏன் ? இந்தியாவின் பண மதிப்புத்தான் காரணமா ? இந்தியாவில் குப்பை அள்ளுபவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ஊதியம் என்றால் எந்த வகுப்பினராக இருந்தாலும் சென்றுவிடுவார்களா ? வறுமை காரணமாக அந்த வேலையை பலபிரிவினரில் சிலர் அதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனாலும் விருப்பத்தின் பேரில் அதைச் செய்யமாட்டாகள். இந்தியாவில் அதே வேலையை இந்தியர்கள் விருப்பத்துடன் செய்கிறார்களா ? வெளிநாடு, உள்நாடு எங்குமே இந்தியர்கள் அதை விருப்பத்துடன் செய்வதில்லை. வயிற்றுப்பாட்டுக்காகத்தான் செய்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர் தவிர்த்து பிற பிரிவினர்கள் வெளிநாட்டில் அதே வேலையைச் செய்யும் போது இந்தியாவில் செய்யமுடியவில்லையே ஏன் ? இதற்கு காரணம் இந்தியாவில் தொழில் அடிப்படையில் ஒருவருக்கு உயர்வு, தாழ்வும், இழிவும் கற்பிப்பது ஆகும்.

சிங்கையில் 10 ஆண்டுகளாகப் பார்க்கிறேன். இங்கு துப்புறவு பணியாளராக இருக்கும் சீன ஊழியரை அலுவலகத்தில் இருக்கும் பிறர் அலுவலக முதலாளி உட்பட எவரும் தாழ்வாக நினைப்பது இல்லை. அவர்கள் தொட்டதை நான் தொடமாட்டேன் என்று வேலையை வைத்து தாழ்வாக நினைப்பது இல்லை. குறிப்பாக எந்த ஒரு மனிதனுக்கும் கிடைக்கும் மரியாதைக் குறைவு, இழிவு இங்கு தொழில் சார்ந்ததாக இல்லை. இந்தியாவில் இருந்து வந்திருக்கும் துப்புறவு தொழிலாளர் குப்பை அள்ளுவதால் அவர்களை யாரும் அவமானப்படுத்தியது இல்லை. அது ஒரு தொழில், போதிய அளவு படிக்காததால் அந்த வேலையை வயிற்றுப்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள் அவ்வளவுதான், 'இந்த வேலை இங்கு பார்த்தேன்' என்று இந்தியாவில் சொன்னாலே அவமானம் என்ற அளவுக்குத்தான் தொழிலடிப்படையில் தாழ்வு கற்பிக்கப்பட்டு, 'துபாயில கக்கூஸ் தானே...கழுவினாய் ?' என்று கேட்பதை நகைச்சுவை வசனமாக்கி (படம் : வெற்றிக் கொடிகட்டு), அதை ரசிக்கும் வண்ணம் தொழில்பற்றிய இழிவு நிலை இன்னும் 90 விழுக்காடு இந்தியர்கள் மனதில் இருக்கவே செய்கிறது.

வெளிநாட்டில் அருவெறுப்பின்றி வேலை செய்தாலும், இன்னவேலை செய்தோம் என்ற சொல்வதே, அதாவது அந்த வேலையின் செயலைவிட, வேலையின் பெயரைச் சொல்வதே அவமானம் என்று தானே செய்பவர்கள் நினைக்கவேண்டிய நிலை இருக்கிறது! வெளிநாட்டில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியர் எவரும் வெளிநாட்டினரிடம் இயல்பாக பேசுவார்கள், இந்தியர்களைக் கண்டால் அவர்களின் இயல்பு சட்டென்று தொலைந்து, தாழ்வுணர்ச்சிக்கு வந்து சோகமாகிவிடுவார்கள். பலமுறை அதனை கவனித்து இருக்கிறேன். முடிந்த அளவுக்கு அவர்களைப் பற்றி விசாரித்து இயல்பாக பேசவைக்க முயற்சிப்பேன். வயதைப் பொருத்து 'அண்ணா,/ தம்பி எந்த ஊரு நீங்கள்?, எப்போ இங்கே வந்திங்க, திருமணம் ஆகிவிட்டதா ?' என்றெல்லாம் கேட்கும் போது இயல்பாக பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

நம்மைப் பார்ததும் 'இந்த தொழிலைச் செய்கிறோம், அவர்கள் நம்மை இழிவாக நினைப்பார்களே' என்று மனநிலைக்குக் கொண்டு சென்று தாழ்வுணர்ச்சியில், மனம் வாடும் அளவுக்கு தொழில் முறை இழிவுகள் நம்நாட்டில் புறையோடி இருக்கிறது. வசூல்ராஜா படத்தில் தரை துடைக்கும் ஒரு பெரியவரைக் கமல் கட்டியணைக்கும் போது காட்சி என்றாலும் ஈரமுள்ள நெஞ்சினருக்கு கண்களில் ஓரத்தில் ஈரம் சுரக்கும்.

எந்த வேலையும் இழிவு அல்ல, உழைக்க மறுத்தும், குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்தும், அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழ்வதைவிட துப்புரவு பணி தாழ்வானது அல்ல. குறிப்பிட்ட தொழில் இழிவென்றால் அதே தொழிலை எவரும் செய்ய முன்வராத போது, அந்த வேலைக்கு மாதம் கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்தால், உயர்கல்வி படித்தவன் கூட அந்த வேலையைத்தான் தேர்ந்தெடுப்பான். எந்த ஒரு தொழிலையும் தாழ்வாக நினைப்பவர்கள் தான் குப்பைகள்.

16 ஆகஸ்ட், 2008

(சின்னத்)திரை நட்சத்திரங்களுடன் நான் !

ஆகஸ்ட் 13 - 17 வரை சிங்கை எக்ஸ்போ 3 ஆவது தளத்தில் இந்திய கைவினை பொருள்கள் மற்றும் வீட்டும்னை விற்பனையாளர்களின் கண்காட்சி நடை பெறுகிறது. இல்லத்தினருடன் இன்று சென்று வந்தேன். அவ்வளவாக கூட்டமில்லை. சிங்கை வானொலி வழி விளம்பரத்தில் கண்காட்சிக்குச் செல்ல 2 வெள்ளி நுழைவு சீட்டு வாங்க வேண்டும் அறிவிக்கப்பட்டு இருந்ததால் பலர் வரவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டே நுழைவுச் சீட்டை வாங்கும் பகுதிக்கு சென்றேன் பதிவு செய்துவிட்டு இலவச அனுமதி கொடுத்தார்கள். சனி - ஞாயிறு மக்கள் வெளியே கிளம்புவதே அறிது, அதிலும் கட்டணம் என்றால் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துவிட்டு இருந்துவிடுவார்கள் என்பது பின்னர்தான் அவர்களுக்கு தெரியும் போல, அதனால் கட்டணமின்றி இலவசமாகவே அனுமதிக் கொடுத்தார்கள்.

எக்ஸ்போ வளாகத்தின் 3 வது தளத்தில் தான் கண்காட்சி நடந்தது. நடிகர் மோகன் ராம், ???நான் சென்ற போது மாலை 2.30 ஆகி இருந்தது, அருகிலேயே சின்னத்திரை நட்சத்திரங்களுடன் சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாங்கள் உள்ளே சென்றதும் நேராக உணவு கடைகளுக்குச் சென்று வேண்டியதை வாங்கிக் கொண்டு அமர்ந்தோம். அப்போது நட்சத்திரங்களும் அங்கு வந்து உணவை வாங்கிக் கொண்டு ஒரு மேசையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் துணை நடிகை துணிக்கடைக்குச் சென்றாலே அவளால் கசங்கமல் வெளியே வரமுடியாது. யார் ???, திபாவெங்கட், தேவதர்ஷினி(திருமதி சேத்தன்) இங்கு சின்னத்திரை நட்சத்திரங்களை யாரும் கும்பலாக மொய்க்கவில்லை. அங்கிருக்கும் மக்களில் ஒருவராகத்தான் அவர்களைப் பார்க்க முடிந்தது. விருப்பப் பட்டவர்கள் அவர்களுக்கு கைகுலுக்கி (வெகு சிலர்தான்) அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் ஓரிரு முறை அவர்களை திரும்பிப் பார்த்ததுடன் சரி. சின்னத்திரை நட்சத்திரங்கள் யாரும் 'பந்தா' செய்யவில்லை. பாராட்டலாம் ! அவர்கள் அனைவருமே பெரிய திரைகளிலும் நடிப்பவர்கள் தான்.

நாங்களும் சாப்பிட்டு முடித்ததும், ரவி???, சேத்தன்,???? அருகில் சென்று சின்னத் திரை நட்சத்திரங்களின் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். க்ளிக்கிக் கொடுத்தது தங்கமணிதான்.
மேடையில் புடவைக் கட்டிக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றை வைத்திருந்தார்கள், புடவையை 200 வகையாக கட்ட முடியுமாம், யாராவது கேள்வி பட்டு இருக்கிறீர்களா ? 10 வகையாக ஒரே புடவையை கட்டிக் கட்டினார்கள், சீனப் பெண்ணைத் தான் புடவை கட்டுவதற்கு காட்சிப் பொருளாக ஆக்கி இருந்தார்கள்,

நம் இந்தியப் பெண்கள் பொது இடத்தில் இதெற்கெல்லாம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதால் சீனப் பெண்தான்

கிடைத்திருக்கிறாள். அந்த சீனப் பெண்ணும், அவ(ர்க)ளது பொது இட கலாச்சாரமும் மேற்கத்திய தாக்கம் இருப்பதால், அவள் வெட்கப்பட வில்லை. அழகாகவே சிரித்தாள், புடவை கட்டுவதை மேடை நிகழ்ச்சியாக பார்க்கும் போது ஆபாசமாக பார்த்தால் ஆபாசம் தான், கலையாக பார்த்தால் கலைதான். பெண்களுக்கு கலையாக தெரிந்திருக்கும். நான் கலையாக மட்டும்தான் பார்த்தேன் என்று சொன்னால் அது பொய்தான். கொஞ்சம் ஆபாசமாகத்தன் இருந்து.

அதன் பிறகு கோலப்போட்டி நடந்தது. தங்கமணிக்கும் கோலப்போட்டியில் கலந்து கொள்ள ஆசை, கலந்து கொள்ளச் சென்றோம், வண்ணப் பொடிகளைக் கொடுத்தார்கள். கோலமாவு இல்லாமல் வண்ணப் பொடிகளை மட்டும் வைத்து எப்படி கோலம் போடுவது ? ஏற்பாட்டளரிடம் கேட்டோம். "By mistake we forgot to bring the rongoli white powder (வெள்ளை கோலை மாவு), please draw the outline on the newspaper and color it...we are very sorry". என்றார்கள். சொதப்பலான, பொறுப்பின்மையாக ஒரு ஏற்பாடு. அப்படியும் சில சிறுவர் - சிறுமியர், சில பெண்கள் வண்ணப் பொடியை வைத்து அவர்களால் முடிந்த அளவு முயன்றார்கள். அருகில் இருக்கும் கோலங்கள் தான் பரிசு பெற்றவை. இது இவ்வளவு அலங்கோலமாக இருப்பதற்குக் காரணமே வெள்ளை கோல மாவு இல்லாததால் தான். ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தால் அடிப்படை தேவைகளாவது சரியாக செய்ய வேண்டும். கோலப் போட்டி பெரிய சொதப்பல் தான். அதன் பிறகு சிறுவர்களுக்கு திரைப்பாடல்களுக்கான நடன அசைவுகளை சென்னையில் இருந்து வந்த திரைக் கலைஞர் ஒருவர் செய்து காட்டினார். விஜய் பாட்டு (மதுரைக்கு போகாதடி....), மற்றும் ஒரு ஹிந்திப் பாட்டின் ஒரு பகுதிக்கு அசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார், 20 பேர்வரை சேர்ந்து ஆடினார்கள். அந்த நிகழ்ச்சி நன்றாக இருந்தது.

கடைசியாக கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். மாலை 7.00 மணிக்கு நடைபெறப் போகும் சின்னத் திரை நட்சத்திரங்களின் நிகழ்ச்சிக்கு இலவச நுழைவு சீட்டுக் கொடுத்தார்கள். மாலை வரை அங்கிருந்தால் மிகவும் அசதி ஆகிவிடும் என்பதால் மாலை 5 மணிக்கு திரும்பிவிட்டோம், 5 மணிக்கு மேல் நல்ல கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதெல்லாம் சின்னத்திரை நட்சத்திரங்களின் நிகழ்ச்சிக்கு இலவச நுழைவுச் சீட்டுக் கொடுக்கவில்லை. நண்பர் ஒருவர் இல்லத்தினரோடு அங்கு வந்தார், அவரிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் திரும்பிவிட்டோம்.

கண்காட்சிக்கு நாளை கடைசிநாள், பார்க்க விருப்பம் உள்ளவர்கள் சிங்கைப் பதிவர்கள், சிங்கை நண்பர்கள் சென்று வரலாம். சிங்கப்பூர் எக்ஸ்போ 3 ஆவது தளத்தில் தான் கண்காட்சி நடக்கிறது. இந்திய மாநகரங்களில் / தலைநகரங்களில் வீடு, மனை வாங்குபவர்களக்காக நிறைய ஆலோசனைக் நிலையங்கள் (ஸ்டால்ஸ்) இருக்கிறது, அவர்கள் விற்பனை செய்யும் இடங்களைப் பற்றிய தகவல்கள் அளிக்கிறார்கள். கைவினைப் பொருள்கள் மற்றும் பல்வேறு மாநில இந்திய உடைகள், அலங்காரப் பொருள்கள், தரைவிரிப்புகள் எல்லாம் கண்காட்சியில் விற்பனையில் உள்ளது. உள்ளே எல்லாம் சேர்த்து 50 நிலையங்கள் (ஸ்டால்) வரையில் இருக்கும். சைவம் மற்றும் அசைவ உணவுகளுடன் 5 -6 உணவுக் நிலையங்கள் இருந்தது.

15 ஆகஸ்ட், 2008

முக ஸ்டாலின் அவர்களின் தொண்டையில் சிக்கிய முள் !

கலைஞர் ஐயாவுக்கு வயது ஆக ஆக வாரிசுகள் மேல் வைத்திருக்கும் பாசமும், பெருமையும் கூடிக் கொண்டே போகிறது, தந்தை மக்கட்கு ஆற்றும் உதவியாக, அரசு விழாவா ? குடும்ப விழாவா ? என பெரும் குழப்பம் ஏற்படும் அளவுக்கு பொது இடங்களில் வாஞ்சையின்றி வாரிசுகளைப் புகழ்ந்து தள்ளுகிறார்.

//"இப்போது சென்னை எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அங்கே பக்கத்திலே ஒரு ரயில்வே கேட்- அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய காலனி. அந்தக் காலனியில் ஒரு வீட்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்போது ஸ்டாலின் ஒரு சின்ன குழந்தை. ஒரு ஊக்கை விழுங்கி விட்டான். இப்போதுதான் புரிகிறது- அவன் ஒரு ஊக்கை விழுங்கவில்லை. ஊக்கத்தை விழுங்கியிருக்கிறான் என்று. அந்த ஊக்கம்தான் இன்றைக்கு அவரை மேயராக்கி, அமைச்சராக்கி, இன்னும் என்னென்னவோ ஆக்கப் போகிறது."//


நல்ல வேளை கலைஞர் வீட்டில் ஊக்கமருந்தாக ஒரே ஒரு ஊக்குதான் இருந்திருக்கிறது போலும். இன்னும் நிறைய ஊக்குகள் இருந்திருந்தால் மற்ற வாரிசுகளுக்கும் மேயராகி, அமைச்சராகும் வாய்பெல்லாம் விரைவாகவே கிடைத்திருக்கும்.

//கருணாநிதி நகர் என்றால் கே.கே.நகர்- இன்னும் 10 ஆண்டுகள் சென்ற பிறகு அது கீக்கி நகர் என்றாகி விடும். ஏனென்றால் வரலாற்றுப் பெயர்களை, இன உணர்வுக்கு தூண்டுதல்களாக இருந்த பெயர்களை எல்லாம் அழித்து ஒழிக்க வேண்டும் என்பதுதான் சில வஞ்சகர்களுடைய திட்டம். நான் எல்லோரையும் சொல்லவில்லை. அப்படிச் செய்பவர்கள் வஞ்சகர்கள். அது வஞ்சகர்களுடைய திட்டம், வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் என்றார் கருணாநிதி.//

ஞாயமான ஆதங்கம் ! 'முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம்' என்ற பெயரில் இருந்த எம்ஜிஆர் என்ற பெயரெல்லாம் காணமல் போனது பற்றி எதுவும் சொல்லவில்லையே !

நாளுக்கு நாள் கலைஞர் செய்யும் காமடிகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அவரைப் பற்றி எதிர்கட்சிகள் எதுவும் தவறாக சித்தரிக்கத் தேவை இல்லை. அவரே அதையெல்லம் பொதுமக்களுக்கு தன் பேச்சின் வழியாக உணர்த்திவிடுகிறார்.

இந்தியாவின் 61 ஆவது சுதந்திர நாள் ! (என்னுடைய 2 காசு)

'கண்ணீரையும் செந்நீரையும் கொட்டி பெற்ற சுதந்திரம்...!' என்று வீரவசனமெல்லாம் எழுதப் போவதில்லை. பயப்படாமல் படிங்க :)

ஆளும்வர்கம் ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு மீண்டும் அடித்தட்டு மக்களை அடிமையாக்கிக் கொண்ட நாளே சுதந்திர தினம் என்கிறார்கள். சுதந்திர நாளை பெரியார் புறக்கணித்ததற்கு அடிப்படைக் காரணமும் இதுவேதான். வெள்ளைக்காரன் வந்திருக்காவிட்டால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை அடைவதற்கான பல்வேறு மாநிலங்களின் இணைப்பு நிகழ்ந்திருக்காது. அதற்காக வெள்ளைக்காரர்களுக்குத் தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே 90 வயதைத் தாண்டிய முதியவர் மகாத்மாகாந்தி கொடுரமாக கொலை செய்யப்பட்டார். ஆங்கிலேயர் நினைத்திருந்தால் அவரை கொலை செய்வது கடினமான வேலையாக இருந்திருக்காது. அவர்கள் கூட காந்தியின் உயிருக்கு பாதுகாப்பு அளித்து அவரது போராட்டத்தை ஏற்கமுடியாவிட்டாலும் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவே இருந்தனர். சுதந்திர இந்தியாவின் முதல் ஆண்டிலேயே காந்தியின் உயிர் சுதந்திரமாக பறிக்கப்பட்டது. மதவாதம் எவ்வளவு கொடியது என்று அந்நிகழ்வு புரியவைத்ததால் இன்னும் இந்தியாவில் மதவாதத்தை எதிர்க்கும் நல்லோர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் காந்தியைக் கொன்ற கொடியவனை இந்திய மக்களுக்கு நல்லவனாக்கிக் காட்ட முடியுமா என்ற நாடகங்களும் சுதந்திரமாகவே நடந்தேறிவருகிறது.

அண்மையில் தீண்டாமை சுவரை இடித்தற்காக எதிர்ப்பு தெரிவித்து ஊரை காலிசெய்து மலையேறிய பிள்ளைமார்களும், தலித் கிறித்துவர்கள் நுழையக் கூடாது என்ற கோஷமிட்டு 'தாய்' மதம் திரும்பப் போவதாக அறிவித்த வன்னிய கிறித்துவர்களும் தீண்டாமை அரக்கனை முதுகில் ஏற்வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 61 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒழிக்கப்படாத தீண்டாமை கொடுமை சுதந்திர இந்தியாவைப் பார்த்து பல் இளித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதையெல்லாம் விட சுதந்திர நாளில் கூட பாதுகாப்பு என்ற பெயரில் எவரையும் சந்தேகித்து ஆடை அவிழ்த்துப் பார்த்து அவர்களின் சுதந்திரத்தைக் கேள்விக் குறியாக்கும் அரசுகளை அவ்வாறு தூண்டுவதற்கு காரணமான தீவிரவாதிகள் ஆகியவை இருந்தாலும் ஆண்டு தோறும் சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. எப்போதும் போல் சுதந்திர நாள் வீர உரையாற்ற பலத்த பாதுகாப்போடு பிரதமர் உரையாற்றுவது சுதந்திர நாளின் நகை முரண் என்றாலும் பிரதமரின் உயிர் சுதந்திரமாக பறிக்கப்பட விடக் கூடாது என்பதால் அத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது.

சுதந்திரநாள் பழிப்புக்குறியதல்ல, ஆனால் சுதந்திரம் என்பதன் உண்மையான உணர்வை யாரும் அனுபவிக்கவில்லை என்பது உண்மைதானே ? வெறும் சடங்காகக் கொண்டாடப்படும் சுதந்திர நாள், உண்மையிலேயே அந்த நிலையை முற்றிலும் அடைந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நான் சுதந்திரமானவன் என்று நினைக்கும் படியும், ஒவ்வொருவரும் மதிக்கப்படும் நாள், வரும் ஆண்டுகளின் கொண்டாடப்படும் எதோ ஒரு சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் கிடைக்கும், என்ற எதிர்கால நம்பிக்கையை இன்று கொண்டாடப்படும் சுதந்திர நாளும் ஏற்படுத்தும், என்ற இன்றைய நம்பிக்கையில் இருக்கும் உங்களைப் போல், நானும் மகிழ்வோடு இருக்கிறேன்.

தாய் திருநாடு இந்தியாவின் புகழும் வெற்றியும் என்று நிலைக்கட்டம் !

அனைவருக்கும் இனிய இந்திய விடுதலை திருநாள் வாழ்த்துகள் !

14 ஆகஸ்ட், 2008

எழும்பூர் பாலாஜி உட்லண்ட்ஸ் மாமா !

1996 - 97 வாக்கில் நான் எழும்பூர் அரும்காட்சியகம் அருகில் அல்சம்மாள் வணிக வளாகத்தில் இருக்கும் ஒரு ஆட்டோமேஷன் அலுவலகத்தில் பணி புரிந்தேன். அப்போது பேச்சிலர் வாழ்கைதான். அங்கு அருகில் மாமா / மாமி மெஸ்கள் போன்று எதுவும் இல்லை. சாப்பிட வேண்டுமென்றால் கொஞ்சம் தொலைவு நடந்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் இருந்து சரியாக 8 நிமிட நடை தொலைவில் எழும்பூரையும் பூந்தமல்லி விரைவு சாலையையும் இணைக்கும் மேம் பாலத்திற்கு அருகில் எழும்பூர் பகுதியில் இருக்கிறது பாலாஜி உட்லண்ட்ஸ. என்னுடன் பணிபுரிபவர்கள் அதனை மாமா ஓட்டல் என்று தான் அழைப்போம் (அதற்கான காரணம் பின்னர்). அலுவலகத்திற்கு எதிரிலேயெ விரைவு உணவகம் இருக்கிறது விலை கொஞ்சம் மிகுதி. என்றாவது மாற்றம் தேவையிருந்தால் அங்கும் உணவு அருந்துவோம்.

பாலாஜி உட்லண்ட்ஸ் ஏன் மறக்க முடியாத உணவகம் ஆகியது ? பொதுவாகவே தொடர்ந்து ஒரு ஓட்டலுக்குச் சென்றால் அங்கு இருக்கும் பறிமாறுபவர் நமக்கு பழக்கம் ஆகிவிடுவார். முன்பெல்லாம் பறிமாறும் ஊழியர்களுக்கு ஊதியம் மிகக் குறைவே தற்பொழுது எப்படி என்று தெரியவில்லை. தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்ர்கள் சிறு அன்பளிப்பு ( டிப்ஸ் ) கொடுப்பார்கள், ஒருமுறை வருபவர்களாக இருந்து தாரள மனது உடையவராக இருந்தால் அவர்களும் முடிந்த அளவு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கொடுப்பார்கள். பல இடங்களில் வசித்த போது அந்தந்த பகுதியில் இருக்கும் ஓட்டல்களில் உள்ள சர்வர்கள் நாள்தோறும் செல்வதால் நமக்கு நல்ல பழக்கம் ஆகிவிடுவார்கள். ஆரம்பத்தில் சாம்பார், சட்டினி எல்லாம் தட்டில் / இலையில் குறையும் போது நிரப்பிவிட்டுச் செல்வார்கள், அப்பறம் சில நாட்களிலேயே....'சார் இன்னிக்கு வடை சூடாக இருக்கு' என்று சொல்லிக் கொண்டே எடுத்து வந்ததை நம் விருப்பத்தைக் கேட்காமலேயே தட்டில் வைத்துவிடுவார்கள். தட்டமுடியாத நிலைமையில் சாப்பிட்டுவிட்டு பில் கேட்கும் போது, வடைக்காகன் பில்
இருக்காது, 'வடைக்கான தொகை இல்லையே ?' பரவல்ல சார்...விடுங்க...இதைப் போய் கவுண்டரில் கேட்டுடாதிங்க...அப்பறம் முதலாளி எல்லோரும் கேட்பது போல் அசிங்கமாக திட்டுவார்' என்பார்கள். இதுபோல் சர்வரின் தனி கவனி0பு பல ஓட்டல்களில் எனக்கு நடந்திருக்கிறது.

பாலாஜி உட்லண்ட்சில் சாப்பிட ஆரம்பித்து 1 மாதம் இருக்கும், எப்போதாவது குளிர்சாதன அறைக்குச் செல்வோம். அங்கு ஒரு சர்வர் மாமா (25 வயது தான் இருக்கும்) ஒரு நாள் சூடான பகோடாவை சுமார் 200 கிராம் இருக்கும் சிறிய தட்டு நிறைய கொண்டு வந்து வைத்தார் சாப்பிட்டதும் அதற்கான பில் கொடுக்கவில்லை. அதற்கும் முன்பே அவ்வப்போது 2ரூபாய் வரைக்கும் டிப்ஸ் கொடுத்து வந்த பழக்கத்தினால் இலவச பகோடா வந்திருக்கிறது. எவ்வளவோ முறை வேண்டாம் என்று சொன்னாலும் சாப்பிடப் போகும் போதெல்லாம் மிக்சர், இனிப்பு என்று எதாவது ஒன்றை கொண்டு வந்து வைத்துவிடுவார். முதலாளிகளுக்கு தெரிந்தால் வேலை போய்விடும், அப்படியே அவர்கள் கண்டு பிடித்துக் கேட்டாலும் பில் போடும் போது மறந்துவிட்டதாக சமாளித்துவிடுவார்கள்.

ஒரு முறை என்னுடன் பணி புரிந்த சம்பத் என்ற நண்பரை பாலாஜி உட்லண்ட்சுக்கு அழைத்துச் சென்றேன். அதே சர்வர்தான் நன்றாகவே கவனித்தார். 'கண்ணன்...நானும் எத்தனையோ முறை இந்து ஓட்டலுக்கு வந்திருக்கிறேன். என்னை ஒருநாளும் இது போல் கவனித்தது இல்லையே !' என்று வியப்பு பொங்க கேட்டார். 'நமக்கு சாப்பாடு வைத்தை சர்வர் என்னோட மாமா தான்' என்றேன் :). அந்த சர்வர் அருகில் வரும்போது என் முகத்தையும், சர்வர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான் சம்பத். எனக்கு புரிந்துவிட்டது.

'இப்ப ஏன் இருவரையும் மாறி மாறி பார்த்தேன்னு சொல்லவா ?' என்று கேட்டேன். சிரித்தபடியே 'சொல்லுங்க' என்றான்

'மாமாவுக்கும் எனக்கும் முகசாடையில் எதாவது ஒத்து வருகிறதா ? என்று தானே பார்த்தே ?' 'அட ஆமாம் எப்படி இவ்வளவு சரியாகக் கேட்கிறீர்கள் ? அவரு வெள்ளையாக இருக்கார்..நீங்க அவ்வளவு கலர் இல்லையே...' அதே வியப்பு பொங்க கேட்டான். இதை அலுவலகத்திற்கு சென்று எல்லோரிடமும் சொல்ல சம்பத்தை ஓட்டினார்கள். 'அவன் தான் உன்னை ஏமாத்த சொந்த மாமான்னு சொல்லி இருக்கிறான்...அதைப் புரிஞ்சிக்காம இருண்டு பேருக்கும் முகச் சாடை பார்த்து இருக்கியே...உன்னையெல்லாம் ஈசியாக ஏமாத்திடலாம்' என்று சொல்ல சம்பத்துக்கு வெட்கமாக போய்விட்டது.

கிட்டத்தட்ட நான் அந்த பகுதியில் ஓர் ஆண்டு வேலை பார்த்தவரை பாலாஜி உட்லண்ட்ஸில் சில மாதங்கள் வரை நல்ல கவனிப்புதான். 'நீ பண்ணுவது தப்பு...அவன் தான் கொண்டு வந்து வைக்கிறான் என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே' கூடவே என்னுடன் பணி புரிந்த தமிழ்செல்வன் என்னை அடிக்கடி கடிந்து கொள்வான். 'நானாக வைக்கச் சொல்லவில்லை....வேண்டாம் என்று பலமுறை சொல்லிவிட்டேன். அதுக்கும் மேல் பொருக்க முடியவில்லை என்றால் ஓட்டல் ஓனரிடம் தான் சொல்ல முடியும், அவன் வேலை போய்விடும், எனக்கு மனசு வரலை...நான் இனி வேற ஓட்டலுக்கு சாப்பிடப் போகப் போகிறேன். என்று சொல்லி இடம் மாற்றிவிட்டேன்.

பிறகு சிங்கை வந்த பிறகு பேச்சிலராக இருந்த கொஞ்ச நாளில் அடையார் உடுப்பியிலும் அதே போன்ற நிகழ்வுகள்.ஓட்டல் சர்வர்களின் பந்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்பொழுதெல்லாம் வாடிக்கையாளராக எந்த உணவகத்திற்கும் செல்வது இல்லை.

13 ஆகஸ்ட், 2008

மேற்கு மாம்பலம் மாமா மெஸ் !

மாம்பலம் பேச்சிலர்களுக்கு பழகிய பெயர் தான் மாமா மெஸ், ஒரிஜினல் பெயர் எது என்று மறந்துவிட்டது. எனக்கு அலுவலகம் அப்போது ஆரிய கவுடா ரோட்டில் இருந்தது. எங்களைப் போன்ற பேச்சிலர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் தான் மாமா மெஸ் சாப்பாடு இருக்கும். இரண்டு பொறியல், ஒரு கூட்டு சாம்பார், அப்பளம் ஊறுகாய், மோர், ரசம் மற்றும் வத்தல் குழம்பு இவையே மாமா மெஸ்ஸின் மதிய சாப்பாட்டில் இருப்பவை.

காலை அலுவலகம் நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டால் மாமா மெஸ்ஸில் பூரி கெழங்கு, ஊத்தப்பம், தோசை இட்லி, மெதுவடை மற்றும் தயி கூட கிடைக்கும். மாமா மெஸ்ஸின் அமைந்திருக்கும் இடம், மேற்கு மாம்பலம் அரங்கநாயகம் ரயில் பாலத்திற்கு அருகில் இருக்கும் டேட்டா உடுப்பி ஓட்டலுக்கு அருகில் இடது பக்கமாக திரும்பும் சாலையில் எஸ்ஆர்எம்கல்லூரி அலுவலகத்திற்கு மிக அருகே, ஆரிய கவுடா சாலைக்கு திரும்பும் சாலையில் அடுத்தார் போல் ஒரு மாடியில் இருக்கிறது.

மாமா மெஸ்ஸுக்கு வாடிக்கையாளர்கள் என்றால் நாள் தோறும் கையில காசு வாயில தோசை என்று கண்டிசன் கிடையாது, 'நாளைக்கு தருகிறேன் மாமா' என்று சொல்லிவிட்டால் போதும். அது போல் மாதந்திர பணம் செலுத்தும் திட்டத்தின் கீழும் பலர் அங்கு கணக்கு வைத்திருப்பார்கள், சாப்பிட்டுவிட்டு நமது பெயருக்கு நேராக அங்கிருக்கும் குறிப்பேட்டில் தேதியைப் போட்டுவிட்டு கையெழுத்து போட்டுவிட்டால் போதும், அந்த மாதத்திற்கான முழுத்தொகைக்கும் சாப்பிட்டு இருக்காமல் விடுமுறைக்குச் சென்றிருந்தால் மீதம் தொகையை அடுத்த மாதக் கணக்கில் வரவாக வைத்துக் கொண்டு கூடுதலாக கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் போதும் என்ற சலுகையெல்லாம் உண்டு.

அவ்வபோது நடக்கும் இந்து பண்டிகைக்களின் சிறப்பு நாட்களுக்கென உள்ள ஒரு உணவை இலவசமாக போடுவார்கள். இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி எல்லாம் வருவது மாமா மெஸ்ஸின் மதிய சாப்பாட்டின் போது தான் தெரியும். மாமா மெஸ்ஸில் எனக்கு பிடித்த ஐயிட்டம் உருளைகிழங்கு பொறியல் தான். நன்றாக வேகவைத்த உருளைகிழங்கில் அளவாக சேர்க்கப்பட்ட காரம், மற்றும் தக்களியுடன் அதன் சுவையே தனி.

மாமா மெஸ்ஸுக்கு அருகிலேயே மேல் நிலைபள்ளியும் இருப்பதால் +2 மாணவிகளை சைட் அடிப்பதற்காகவே சாப்பிட்டு முடித்தது ஒரு சிகெரெட்டை பற்ற வைத்துக் கொண்டு உச்சி வெயிலைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் நிற்பவர்களும் உண்டு.

ஒருவாரம் மாமாவிடம் சொல்லாமல் ஊருக்குச் சென்று திரும்பினால், அன்பாக ஆதரவாக 'ஆத்துல அம்மா அப்பா சவுக்கியமோ' விசாரிப்பார். மாமா மெஸ்ஸில் அளவற்ற சாப்பாடு தான். இருப்பு தீறும் வரை கேட்பதெல்லாம் முகம் கோணாமல் வைப்பார்கள்.

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே முறுக்கு மற்றும் காரம், இனிப்பு வகைகள் மாமா மெஸ்ஸில் ஆயத்தம் ஆகிவிடும், மற்ற இடங்களை விட கிலோவுக்கு 5 ரூபாய் வரை வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் தருவார்கள்.

ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ஒருவரை மாமா மெஸ்ஸில் வாடிக்கையாளராக பார்த்தேன் என்பதும் மாமா மெஸ் பற்றிய மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. மாமா மெஸ்ஸென்றாலும் மாமாக்கள் கையால் அங்கு எல்லோருக்கும் சமபந்தி போஜனம் தான்.

பின்குறிப்பு : இந்த பதிவை தமிழ் வலைப்பதிவு உலகின் முடிசூடா மன்னன் எனது நண்பர் லக்கிலுக் அவர்களுக்காக அளிக்கிறேன்.

ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !


ரோஜாக்களுக்கு வண்ணமயமான வரலாறு இருக்கிறது. நெடுங்காலமாக அன்பென்னும் சொல்லுக்கான சின்னம் என்று சொல்கிறார்கள். மகிழ்விலும் துக்கத்திலும் மற்றப் பூக்களை விட ரோஜாவின் பங்கு அளப் பெரியது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருக்கிறதாம். உலகெங்கிலும் 150 வகைகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றதாம். முதன் முதலில் சீனாவில் தான் ரோஜாவை மலர் தோட்டப்பயிராக விளைவித்தார்களாம். அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்து இருக்கிறது. ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு ரோஜாவின் பயன்பாடு எண்ணிக்கை அந்த காலத்திய ரசனைக்கேற்ப ஏற்ற இரக்கமாக மாறி மாறி வந்திருக்கிறது.


15 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வெள்ளை மற்றும் சிகப்பு ரோஜாக்களின் பெயரில் இரு அரசு மாளிகைகள் இருந்ததாகவும் இரண்டிற்கும் இடையே யான போர்கள் 'வார் ஆப் ரோஸஸ்' என்று அழைக்கப்பட்டதாம்.

17 ஆம் நூற்றாண்டில் ரோஜாவுக்கு கடும் தட்டுப்பாடு எற்பட்டு இருக்கிறது. ரோஜா, ரோஜா திரவம் ஆகியவை பண்டமாற்றுக்கு பயன்பட்டு இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் பாரிசின் மன்னர் நெப்போலியன் மனைவி ஜோஸ்பின் என்பவர் Château de Malmaison என்ற இடத்தில் தோட்டம் அமைத்து அரிய வகை ரோஜாக்களை வளர்த்து அழகு படுத்தினாராம்.ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !

இந்த சொற்றொடர் புகழ்வாய்ந்தது உண்மையும் கூட. இது பற்றிய புரிதல் இருந்துவிட்டால் உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் முடிவுக்கு வந்துவிடும்.

ஈஸ்வரனும் அல்லாவும் ஒரே இறைவனின் வேறு பெயர்கள் என்று சொன்னதற்காக சுட்டுக்கொள்ளப் பட்ட மகாத்மா காந்தி நினைவுக்கு வருகிறார். பல்வேறு பெயர்களில் ரோஜாவை எல்லோருமே ஏற்றுக் கொள்ளும் பொழுது பல்வேறு பெயர்களால் (ஈஸ்வரன், அல்லா, ஜீசஸ் என) அழைக்கப்படும் தகுதி பரம்பொருளுக்கு இல்லையா ? அனைத்து மதவாதிகளும், அவர்கள் காட்டும் ஆன்மீகமும் சறுக்குவது இங்கே தான். மதநம்பிக்கையாளர்கள் வைத்திருக்கும் இறை நம்பிக்கை (வெறும்) 'பெயரளவோ' இருக்கிறது அல்லவா. இது உண்மை எனும் போது மதப்பற்றாளர்களை போலி ஆன்மிகவாதிகள் என்று ஏன் சொல்லக் கூடாது ?

பலவண்ணங்களில் ரோஜாக்கள் பூக்கிறது, இந்த மதத்திற்கு சொந்தமானவை என்று எந்த ஒரு தனிப்பட்ட நிறத்திலோ, அல்லது அந்த மதத்திற்கு மட்டுமே, அல்லது பகுத்தறிவாளர்களுக்காகவோ பூப்பது இல்லை.
உலகில் உள்ள மொழிகள் அனைத்திலும் ரோஜாவின் பெயர் வெவ்வேறாக இருந்தாலும் ரோஜா ஒன்றுதான். அது எந்த மதத்திற்கும், கொள்கைக்கும் தொடர்பானது அல்ல.

ரோஜா ROSE, ரோசா எந்த பெயரில் இருந்தாலும் ரோஜா ரோஜாதான்.

இறை என்று உண்டு என்று நம்புவர்களாக இருந்தாலும்,

இந்த பெயரில் இருக்கும் இறைவனே என் நம்பிக்கைக்குரியவன் என்பது என்ன வகையான இறைநம்பிக்கை ?

இந்து மத தெய்வங்கள் - பேய் / பிசாசு எனச் சொல்லும் கிறித்துவர்கள்
அல்லா - முகமது நபியின் கற்பனை என்று சொல்லும் 'ஹிந்து'க்கள்
பிதா சுதன் பரிசுத்தஆவி - கிறித்துவ மிசினெறிகளின் பிதற்றல் என்று சொல்லும் ஹிந்து மற்றும் பிற மதங்கள்.

மத நம்பிக்கையாளர்கள் காட்டும் எந்த இறைவனுக்கும் இல்லாத ஒரு தகுதியாக, எந்த பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது. மேலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளவும் படுகிறது

11 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக் - இந்திய வீரர்கள் பதக்கம் பெறுவதில் ஏன் சுனக்கம் ?

100 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் ஒரே ஒரு தங்கம், அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு. நமது நாட்டில் வீரர்களே இல்லையா ? பிறகு ஏன் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி தகுதிச் சுற்றில் கூட தோல்வியைத் தழுவியது ?

இந்திய விளையாட்டு இது என கட்டமைப்பைச் செய்ததில் பண்ணாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிகப் பெரியது. வீட்டுக்குள்ளேயே சின்னத்திரை மூலமாக காட்டப்படும் அனைத்து விளம்பரங்களிலும் மட்டையாட்டமே (கிரிக்கெட்) முன்னிலையில் இருக்கிறது, பெயரளவுக்குக் கூட மற்ற விளையாட்டுக்களைக் காட்டாததால் மாணவர்களிடையே மட்டையாட்டத்தில் இருக்கும் ஆர்வம் வேறெதிலும் இல்லாமல் போனது.

உண்மையில் படகு செலுத்துதல், கால்பந்து, மல்யுத்தம், கபடி, வாலிபால் ஆகியவற்றிற்கு நல்ல ஊக்கம் கொடுத்தால் நாமும் உலக அளவில் வெற்றிபெற முடியும். இந்த விளையாட்டுக்கெல்லாம் அடிப்படையில் உடலில் உறுதி இருக்க வேண்டும். (ஜமாலன் கட்டுரை) உடலில் உறுதி உள்ளவர்களாலேயே இந்த போட்டியிலெல்லாம் பங்கெடுக்க முடியும், எல்லாவற்றிலும் சாதி அரசியல் இருப்பதால், இது போன்ற விளையாட்டுக்களுக்கெல்லாம் ஊக்கமும் கிடைப்பது இல்லை, உண்ணும் உணவு அடிப்படையில் கிடைக்கின்ற அதற்குத் தேவையான உடல் தகுதியுடன் விளையாடும் வீரர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிரிவினரிலேயே இருக்கின்றன இவர்கள் கலந்து கொண்டால் கண்டிப்பாக போட்டிகளில் வெல்ல முடியும். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி என்பது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை தானே. மட்டையாட்டத்தில் வீரர்களுக்கு கொட்டும் பணம் ஒலிம்பிக் போட்டிகளில் கொட்டிவிடாது.

தாழ்த்தப்பட்ட பிரிவினர் தவிர்த்து நல்ல உடல் தகுதி உள்ள மற்ற இளைஞர்களுக்கு மட்டையாட்டம் தவிர்த்த விளையாட்டுக்களில் ஆர்வம் வராமல் போனதற்கு காரணம் அதனால் பெரிய அளவில் பணமோ புகழோ கிடைக்காது, (ஜமாலன் மற்றொரு கட்டுரையைப் பார்க்க). ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் மாநில அரசு விளையாட்டு ஆசிரியர் வேலையும், ஒரு வீடும் கொடுக்கும், மத்திய அரசு எதோ பணமுடிப்பு கொடுப்பார்கள். பத்மஸ்ரீ எல்லாம் கொடுக்க மாட்டார்கள். ஆண்டுக்கணக்கில் பயிற்சி பெற்று அந்த போட்டியில் பங்கு பெற்று பதக்கம் பெற்றால் தான் இவையெல்லாம். பெறாவிட்டால் நாய் கூட திரும்பிப் பார்க்காது, கிடைக்குமா கிடைக்காதா என்பதற்கு ஆண்டுகணக்கில் ரிஸ்க் எடுத்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாது வாழ்வை வீணாக்கிக் கொள்ளவேண்டுமா என்று தான் இளைஞர்களும் நினைப்பார்கள். இளைஞர்களின் பெற்றோர்களுக்கு நடப்பு நன்றாக தெரிவதால் பையன் படித்து நாலு காசு சொந்தமாக சம்பாதித்து நம்ம கையை எதிர்பார்க்கமல் இருந்தாலே போதும், என்று சொல்லி இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை தடை செய்துவிடுவார்கள்.

பள்ளிகளில் சாம்பியனாக வரும் மாணவர்கள் கூட கல்லூரியில் சேர்ந்ததும் முற்றிலும் விளையாட்டை மறந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒலிம்பிக்கில் மிகுந்த தங்கம் பெற வேண்டும் என்ற 100 கோடி இந்தியர்களின் கனவு, விளையாட 10 பேரை அனுப்பி வைத்துவிட்டு எப்படி நிறைவேற்றுவது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே மாணவர்களை மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்க வேண்டும். விளையாட்டுக்கென்றே மாநிலம் தோறும் தனிக் கல்லூரிகள் அமைத்து பட்டப்படிப்பாகவும், பல்வேறு மாநில போட்டிகளை பல்வேறு விளையாட்டுக்களின் வழி நடத்தினால், படிப்பில் ஆர்வம் இல்லாத விளையாட்டு ஆர்வம் மிக்க மாணவர்கள் பயன்பெறுவர், அவர்களால் நாடும் பயன்பெறும்.

வெறும் மட்டையாட்டமே போதும் என்று இந்தியா நினைத்தால், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பர விளையாட்டாக மாறி வீட்டுக்குள் இளைஞர்ர்களை முடக்கிப் போட்டு, இந்திய இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் எந்த ஆர்வமும் இல்லாது செய்துவிடும்.

வெறும் 10 பேரே கலந்து கொள்ளச் செல்ல அனுப்பிவிட்டு 10 பேரும் தங்கம் பெற்று திரும்பவேண்டும் என்று நினைப்பது எந்தவிதத்தில் ஞாயம். இவர்களுக்காவது கலந்து கொள்ளத் தகுதி இருக்கிறதே என்ற பெருமூச்சே வருகிறது.

ஒலிம்பிக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு முன் அடுத்த ஒலிம்பிக்கிலாவது இந்தியர்களும் பதக்கப் பட்டியலில் ஒரு கவுரமான நிலையை அடைந்து உலகிற்கு நாம் விளையாட்டுகளில் சளைத்தவர்கள் என்று காட்டவேண்டும்.

10 ஆகஸ்ட், 2008

வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு சிறந்த ...

ஒரு சிறந்த படத்தைப் பற்றி இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு எப்படி மனது வந்தது? என்ற பதிவர் ஜெகதீசன் எழுதிய பதிவைப் படித்ததும் தெளிந்தேன்.

நானும் 5 கோடி தமிழ்மக்களும் ரஜினியின் வருத்தம் குறித்த பேச்சை தவறாக புரிந்து கொண்டதால் குசேலன் படத்தை ஒருமுறை தான் பார்த்தோம்.

அன்று பாபாவை பாமகவினர் படப் பெட்டியைத் தூக்கி ஓடிச்சென்று பொதுமக்களுக்கு அச்சம் கொடுத்து, திரையரங்கு பக்கம் வரவிடாமல் செய்து படத்தைத் தோல்விப்பட மாக்கினர், இன்று ஆருயிர் ரசிகர்களும் ரஜினியின் விளக்கத்தை மன்னிப்புக் கேட்டதாக தவறாக புரிந்து கொண்டு இரண்டாவது முறை பார்பதைத் தவிர்த்துவிட்டனர், ஆடி தள்ளுபடி நடப்பதால் பெண்கள் அடுத்த மாதம் தான் குசேலன் பார்பதாக முடிவெடுத்துள்ளனர். இதைத் தெரிந்தும் விஷமிகள் குசேலன் 'ப்ளாப்' என்று வதந்தி பரப்பிவருகின்றன. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவியில் விரைவில் கலைஞரின் புதல்வி கனிமொழி தயவால் 'இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக' வெளியாகும் என்றெல்லாம் கொக்கறிக்கின்றனர்.

நான் பார்த்தவரை குசேலன் படம் மிகச் சிறந்த படம் (முன்பு காழ்புணர்வால் தவறாக எழுதிவிட்டேன்), மீனாவின் நடிப்பாகட்டும், பசுபதியாகட்டும் நடிப்பில் பின்னி எடுக்கின்றனர். உலகில் எந்த படத்திலும் வராத காட்சியாக சலூன்கடையே ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றன, சலூன் கடை மட்டும் தானா ? ஒரு சலூனில் உடைந்த பழைய மரநாற்காலி கூட பார்த்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனையோ பாத்திரங்கள், இதையெல்லாம் பார்க்க நல்ல கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். சரியாக பார்க்காமல் படம் வெளியீட்டாளர்கள் பிச்சைபாத்திரம் ஏந்துகிறார்கள் என்றெல்லாம் வதந்தீ வருகிறது. வெளியீட்டாளர்களே ரஜினியின் பேரைச் சொல்லி கோடிகளை குவிக்கும் போது பங்கு தருகிறீர்களா ? இப்போது மட்டும் நஷ்ட ஈடு கேட்பது ஏன் ?

இதையெல்லாம் பொதுமக்கள் நம்பவேண்டாம், குசேலன் படத்தில் சில காட்சிகளை மாற்றி படத்தில் 90 விழுக்காடு ரஜினி வருவதாக பேக்ரவுண்டிலாவது ரஜினியை நுழைத்து திரும்ப வெளியிடப் போகிறாராம் வாசு. தயவு செய்து குசேலனை இரண்டாவது முறை பார்த்தீர்களாயின் அதன் மீதுள்ள காழ்ப்புணர்வை மறந்து 3 ஆவது முறையும் 4 ஆவது முறையும் யாராவது ஓசியில் அழைத்துச் சென்றால் 5 ஆவது முறையும், திருட்டு விசிடி கிடைத்தால் 6 ஆவது முறையும் கூட பார்ப்பீர்கள்.

நான் முன்பு குசேலன் படம் அவ்வளவாக நல்லா இல்லை என்று எழுதி இருந்தேன் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் புரூனோ : குசேலன் படம் நன்றாக இல்லை என்று யார் சொன்னது ? நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தானே சொன்னேன் !

குசேலன் குருவியைத் தாண்டி நிச்சயம் சாதனை படைக்கத்தான் போகிறது, படம் சரியில்லை என்று சொன்னவர்கள் எல்லோரும் முகத்தில் கரியை பூசிக் கொள்ளத்தான் போகிறார்கள் !

குசேலன் படம் பற்றிய தரமான விமர்சனத்திற்கு மனசாட்சி சொல்வதைப் பாருங்கள் !

போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா ?

இந்த தலைப்பில் ஒரு பதிவைப் பார்த்து அதிர்ச்சயடைந்தேன், அதில் பெரியாருக்கு மாலை போடுவது ஏன் என்ற கேள்வியெல்லாம் எழுப்பி இருக்கிறார்கள். பெரியார் வாழ்ந்து மறைந்தவர், மாலை மரியாதை செய்வதற்கும் கடவுள் வணக்கத்திற்கு என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. மாலை மரியாதை செய்வது ஒரு வழக்கம். என்னைக் கேட்டால் பெரியாருக்கு கோவில் கட்டியே கும்பிடலாம். ஆனால் அது அவரது கொள்கைக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு பெரியார் என்றுமே தந்தைப் பெரியார் தான். மாதா பிதா குரு தெய்வம் என்கிற வரிசையில் தந்தையாக பெருவாரியான தமிழர்களால் போற்றப்படும் படும் பெரியார் இரண்டாவதாக இருக்கிறார். நான்காவது நிலையில் தான் கடவுளே, ஏனென்றால் அந்த கடவுளையும் கும்பிட அடைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட கோவில் கதவுகளைத் திறந்து விட்டவர் பெரியாரே. திருவரங்கம் அரங்கனை காணச் செல்பவர்கள், அதற்கும் முன்பு பெரியார் சிலையை கண்டு உள்ளே செல்வதற்கு போராடி வாய்பளித்த பெரியாருக்கு நன்றி செலுத்திவிட்டுதான் செல்கிறார்கள். அவர் வழிவந்தவரே மானமிகு வீரமணி ஐயா. வீரமணி ஐயாவைப் பற்றிய தனிப்பட்ட விமரசனங்களை அதாவது சொத்து சேர்த்தார் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றை விடுகிறேன், மனிதர்கள் ஒவ்வொருவரும் பாசம், பணம், புகழ் எதோ ஒன்றில் அல்லது மூன்றிலுமே பலவீனமானவர்கள் தான். ஆனால் கொள்கையளவில் இன்றும் அவரும் சரி, கலைஞரும் சரி சமரசம் செய்து கொண்டது கிடையாது.

வீரமணி ஐயாவுக்கு விவாதத்துக்கு வர அரைகூவல் விடுத்து அவரை அழைப்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் சற்றேனும் சிந்திக்க வேண்டும். பிராட்டஸ்டாண்ட் கிறித்துவர்களின் 'ஏசு அழைக்கிறார்' என்ற துண்டு சீட்டை (பிட் நோட்டிசை) வாங்கிப் படித்து முகம் சுளிக்காமல் செல்லும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா ? இந்துக்கள் இருக்கிறார்களா ? ஏன் கத்தோலிக்க கிறித்துவர்கள் இருக்கிறார்களா ? பிராட்டஸ் ஸ்டாண்ட் கிறித்துவர்கள் பகுத்தறிவு வாதிகளா ? பின்பு ஏன் அவர்களைப் பார்த்து ஒதுங்கியும் சில சமயும் முறைத்துவிட்டும் செல்கிறீர்கள்.

ஈராக் போரின் போது அந்தர்யாமி என்கிற வடநாட்டு ஊழியர் ஒருவரை அல்லாவின் பெயரைச் சொல்லி கழுத்தை அறுத்ததை அல்ஜெசீராவில் காட்டினார்கள், ஆப்கானில் முகத்தை மறைத்தே இஸ்லாமிய பெண்ணை பொது இடத்தில் சுட்டுக் கொன்றதையெல்லாம் காட்டினார்கள், இதையெல்லாம் எந்த பகுத்தறிவாளன் செய்கிறான். அய்யோ அய்யோ என்று அலறி மகன்களுடம் மடிந்து துடித்த ஆஸ்திரேலிய பாதிரியாரை எந்த பகுத்தறிவாளன் கொன்றான். ஐயோகோ......கற்பினிப்பெண்களின் வயிற்றைக் கீறி குழந்தையை எடுத்து வெளியில் வீசிய குஜராத் நிகழ்வு போன்ற படுபாதக செயல்களையெல்லாம் எந்த பகுத்தறிவாளன் செய்தான் ? அன்றாடம் செய்தியாக எங்கோ ஒரு ஊரில் பிள்ளை வரம் தருவதாக பெண்களின் வன்புணர்ச்சி செய்வதை எந்த பகுத்தறிவாளன் செய்கிறான் ?

மாதாவின் கண்ணில் ரத்தம் வழிகிறதாம் ! எத்தனை மாற்றுமத நம்பிக்கையாளார்கள் அது உண்மையாக இருக்கும் என்று சொன்னார்கள். பிள்ளையார் பால் குடித்ததை பகுத்தறிவாளன் மட்டும் தான் கேலி செய்தானா ? சிலை வணக்கத்தை பகுத்தறிவாளன் மட்டும் தான் அபத்தம் என்று மறுக்கிறானா ? நாட்டார் தெய்வங்கள் எனப்படும் கிராம தெய்வங்கள் இழிவு என்று ஊருக்கு வெளியே அவற்றை நிறுத்து காவலுக்கு மட்டுமே அவை உரியது என்று புறம் தள்ளுபவன் பகுத்தறிவாளனா ? இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். அறிவியல் ஆன்மிகத்தை மெய்பிக்கிறதாம். தாரளமாக மெய்பிக்கட்டும். அப்படியென்றால் அடுத்து அவர்கள் கண்டுபிடிக்கும் முன் அவற்றையெல்லாம் வெளியிட்டு காப்புறிமை பெற்றுக் கொள்ளலாமே.

மதவாதிகளே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட நாகரீக வளர்ச்சியில், தன்னம்பிக்கையில் முன்னேறி இருக்கிறார்கள், தயவு செய்து அவர்களின் காலைப் பிடித்து கற்காலத்துக்கு இழுத்துச் செல்லாதீர்கள். இறைநம்பிக்கை என்பது என்றுமே நம்பிக்கைதான். உணர்வு பூர்வமானதும் கூட, அதற்கும் மேல் அதை மெய்பிக்க முடியாது. அதனால் தான் அவ்வப்போது புதிய கொள்கைகளுடன் புதிய மதங்கள் பிறக்கிறது. என்றோ அதையெல்லாம் மெய்பித்து இருந்தால் ஒரே மத்துடனே இறைநம்பிக்கை நின்றிருக்கும். பகுத்தறிவாளர்கள் தகர்க்க நினைப்பது இறை நம்பிகையல்ல, அதன் மூலம் பரப்படும் கட்டுக் கதைகளைத்தான். இவை இல்லாது இருந்தால் பகுத்தறிவாளர்களையே 'இறைவன்' படைத்திருக்கமாட்டான்.

நான் இங்கு சொல்லி இருப்பது எந்த மதத்திற்கும், அதன் அடிப்படைவாதிகளுக்கும் பொருந்தும் !

மதங்கள் கடவுளல்ல, மதங்கள் கடவுள் என்று நினைத்தால் கடவுள் இல்லைதான். அதில் கூறப்பட்டுள்ளதை மட்டுமே நம்பி அடுத்த மதத்ததைத் தூற்றுபவன் அந்த கடவுளை நம்பினாலும் அவன் காட்டுமிராண்டியே. உங்களுக்கு இருப்பது இறைநம்பிக்கையா ? கடவுள் நம்பிக்கையா ? அதில் தெளிவு இருந்தால் பகுத்தறிவாளர்களுடான உங்கள் விவாதம் தேவையற்றது !

போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கும் முன் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகிய மூன்று மதநம்பிக்கையாளர்களும் எந்தமதம் சிறந்தது ? எது அறிவியல் பூர்வமானது ? எது மூடநம்பிக்கையற்றது ? என்று தங்களுக்குள் விவாதித்துவிட்டு, அதில் வெற்றிபெற்றால் அடுத்து பொது எதிரியான(?) பகுத்தறிவாதிகளுடன் விவாதிக்களாம் !

கடவுள் தான் காப்பாறனும் !

ஒன்றே குலம் ! ஒருவனே இறைவன் !

குசேலனை ஓரம் கட்டிய பதிவர் !குசேலனுக்கு ரிடையர் கொடுத்து... தம்பி KRS க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பதிவுகள் தான் இன்று தமிழ்மணத்தில் படையெடுத்து இருக்கு !

1. பிறந்த நாள் வாழ்த்து சொல்லேலோ ரெம்பாவாய் : ambi
2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் க.ர.ச. (K.R.S) : குமரன் (Kumaran)
3. "கே.ஆர்.எஸ் சிறப்பு" கண்ணன் பாட்டுக்கள் : கானா பிரபா
4. Birthday: KRS : ILA
5. துர்காவின் மோசடி - KRS க்கு நியாயம் தேவை!
6. ஒரு (போலி) அப்பாவி சிறுவனின் கதை -துர்கா
7.
கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு !
8. குசேலனை ஓரம் கட்டிய பதிவர் !

அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
அன்புத் தம்பி கண்ணபிரான் ரவி சங்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
108 முறை இருக்கா ?
குறிசொற்கள் ? சும்மா ட்டமாஷு :)சூடான இடுகையிலும் வந்திட்டு !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்