பின்பற்றுபவர்கள்

6 அக்டோபர், 2008

சிங்கப்பூர் தமிழ்தொலைக்காட்சியில் பதிவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு காட்டப்படுகிறது !

சிங்கை தமிழ்தொலைக்காட்சியான வசந்தம் சென்ட்ரலில், எதிரொளி என்ற நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு அரை மணி நேர நிகழ்சியாக ஒளிபரப்படும், அதில் இன்று பாரி.அரசு, கோவியார் மற்றும் ஜோதிபாரதி பங்கு கொண்ட கருத்து கேட்டல் நிகழ்ச்சி நடைபெறும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர் சிங்கைப் பதிவர் சதக்கத்துல்லா.

நிகழ்ச்சியின் நோக்கம்,

இந்தியத் தமிழர்களைப் போல் சிங்கப்பூர் தமிழர்கள், இந்தியர்கள் தமிழ் பதிவுகளில் அவ்வளவாக ஈடுபாடுகாட்டுவதில்லை. அவர்களில் பலர் ஆங்கில பதிவுகளை எழுதுகிறார்.

தமிழ் பதிவுகள் சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு, தமிழின் வளர்ச்சிக்கும் அவர்களுக்கும் எவ்வாறு பயனளிக்கும். அவர்களை அதில் எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது தொட்டு மூவரும் பேசுகிறோம். நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சென்ற வாரம் முடிந்தது. இன்று சரியாக இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்றார் நண்பர் சதக்கத்துல்லா.

சிங்கைவாழ் தமிழ்பதிவர்கள் இந்நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள், முடிந்தால் Youtube வழியாக பதிவில் ஏற்ற முயற்சிக்கிறேன்.

13 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

சூப்பர் ! வாழ்த்துக்கள்

குசும்பன் சொன்னது…

எனக்கு அப்பவே டவுட்டு தீபாவெங்கட் கூட உரசி உரசி நின்னு போட்டோ எடுத்தபொழுதே!!!

இனி கோவியார் சின்னத்திரை சிவாஜி என்றே அழைக்கப்படுவார்.

குசும்பன் சொன்னது…

ஆஹா என்னது நிகழ்ச்சி பேரு “எதிரொளி” யா? அவ்வ்வ்வ்

பக்கத்துல ஒரு பொண்ணை உட்கார வெச்சுக்கிட்டு ...ம்ம்ம் மேலே படிங்கம்மா என்று சொல்லி டிடியில் ஒரு நிகழ்ச்சி வருமே அதுபோலவா:)

Athisha சொன்னது…

டேன்ஸ் புரோகிராமா

மானாட மயிலாட மாதிரி

வலையாட பதிவாட வா?

ARV Loshan சொன்னது…

வாழ்த்துக்கள்.. கலக்குங்கள்..

சி தயாளன் சொன்னது…

சிங்கைச் சிங்கங்களுக்கு என் வாழ்த்துகள்..!

//இனி கோவியார் சின்னத்திரை சிவாஜி என்றே அழைக்கப்படுவார்.//

வழிமொழிகிறேன்...!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சிவாஜி எல்லாம் சின்ன வயசு நடிகருங்க. வேணும்ணா சின்னத்திரை பாகவதர் என அழைக்கலாம்.

கோவி.க பாகவதர் பெயர் நல்லா இருக்குல்ல?

சிங்கப்பூர் சின்னத்திரையில் தன் பேட்டி வெளி வந்ததை கொண்டாட இந்த வார இறுதியில் ஒரு காக்டெயில் விருந்து ஏற்பாடு செய்துள்ளார் கோவியார். வெளிநாடு வாழ் பதிவர்கள் சிங்கை வந்து செல்ல விமான பயணச்சீட்டுகள் பெற உடன் தொடர்பு கொள்ளவும். எவ்வளவோ செய்யிறாரு( சேவிங் செஞ்சதுக்கே.......) , இது கூட செய்ய மாட்டாரா என்ன ?

MyFriend சொன்னது…

வாழ்த்துக்கள்.

ரெக்கார்ட் செய்து பகிர்ந்துக்கொள்ளவும். :-)

வடுவூர் குமார் சொன்னது…

எதிரொலி அல்லவா?
முடிந்தால் தான் யுடூபில் ஏற்றுவீர்களா?

பரிசல்காரன் சொன்னது…

சிங்கை சின்னத்திரை புகழ் கோவியாருக்கு வாழ்த்துக்கள்!!!

Sanjai Gandhi சொன்னது…

வாழ்த்துக்கள் கோவியாரே.. இந்நேரம் நிகழ்ச்சி முடிஞ்சிருக்குமே.. youtubeல போட்டிங்களா? லின்க் எங்க?

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

வெப் காம் வைத்து பதிவு செய்து இருக்கிறேன். அவ்வளவாக சரியாக வரலை, இருந்தாலும் அதையே ஏற்றுகிறேன்.

அனைவருக்கும் நன்றி !

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரே
சதக்கிடம் இருக்கும்,கேட்டுப்பாருங்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்