பின்பற்றுபவர்கள்

4 அக்டோபர், 2008

சொல்லும் பொருளும் !

"சொல்வது என்ன என்று பார்க்காமல் சொல்வது யார் என்று பார்த்து, அவன் பூணூல் அணிந்திருக்கிறானா என்று பார்த்து, அதற்கு மற்றொரு பொருள் சொல்லுகிறார்கள், தூற்றுகிறார்கள்" - இது பார்பன பதிவர்களின் நீண்டகால புலம்பல். ஒரு சொல்லின் பொருள் ஒன்று என்றாலும் சொல்வதன் நோக்கம் வேறு ஒன்றாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. "நீங்களே, நல்லா இருங்க...!" என்று ஒருவர் அலுப்புடன், வெறுப்புடன் சொல்லும் போது "நல்லா இருங்க" என்று சொல்வது வாழ்த்துவதாக எடுத்துக் கொள்ள முடியாது.

சுயநலம் சாராமல் சொல்லப்படுவதற்கு மட்டுமே சொல்லும் பொருளும் ஒன்றிணைந்து இருக்கும்,

எந்த ஒரு பிரச்சனைக் குறித்தும் பேசப்படும் கருத்துக்களில் மூன்று வகை உண்டு. பிரச்சனை தனக்கு ஏதுவாக இருப்பதனால் கூறப்படும் கருத்து, பிரச்சனை தனக்கு எதிராக இருப்பதால் கூறப்படும் கருத்து, பொதுவான கருத்து.


எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு.

யார் எது சொன்னாலும் அதை அப்படியே பொருள் கொள்வதைவிட அதன் உண்மையான பொருளை ஆ(ரா)ய்ந்து கண்டு கொள்வதே சரி. இவர்கள் எதற்காக இதை வலியுறுத்துகிறார்கள் என்பதைக் கண்டு கொண்டால் சொல்லவந்த ஒன்றை விட அதில் மறைவாக திணிக்கப்படும் மெய்யான மறைபொருளையும் சேர்த்தே கண்டு கொள்வதே உண்மையான அறிவு.

ஒன்றைப் பற்றிய கருத்து மூன்று விதமாக இருப்பது போலவே முற்றிலும் தவறான கருத்து கூட பலசமயம் எதிரொலிக்கும், அவதூறு ஆறுமுகங்களுக்கு இருக்கும் ஐந்து பொய்முகங்கள் மூலம் எப்போதும் அவதூறு கருத்துகள் மட்டுமே வெளிப்படும். எதிர்கருத்துகள் அல்லது ஒத்த கருத்துகள் பெரும்பாலும் சுயநலம் சார்ந்தவையாகவே இருப்பது போல் அவதூறுகளைச் சொல்ல முடியாது அவை அடிமன ஆழத்தில் இருக்கும் அழுக்கின் வெளிப்பாடுகள், இவைகள் எந்த நலமும் இல்லாமல் மன நோயின் வெளிப்பாடாக ஏற்படும் உளறல்கள்

சொல்லுக்குப் பொருள் பொதுவானது, எதிரானது, சார்ந்தது, முற்றிலும் தவறான உளறல் என்னும் நான்கு வகைப்படும்.

1 கருத்து:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//சொல்லுக்குப் பொருள் பொதுவானது, எதிரானது, சார்ந்தது, முற்றிலும் தவறான உளறல் என்னும் நான்கு வகைப்படும்.//

;-))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்