பின்பற்றுபவர்கள்

பாகிஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகிஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 டிசம்பர், 2008

பாகிஸ்தானுடன் போர் வரலாம் !

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத்துறையின் பங்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை உணர்ந்து, அமெரிக்கா பாகிஸ்தானை தீவிரவாதிகளை கைது செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்துவருகிறது.

இந்தியா கேட்டுள்ள இருபது தீவிரவாதிகளின் பட்டியலை கீழே எறிந்துவிட்டு குதர்கமாக, அத்வானியை ஒப்படைக்க இந்தியா தயாரா ? என்ற கேள்வியை பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கேட்டுவருகின்றன. இது நிராகரிக்கக் கூடிய ஒன்று, ஏனெனின் இந்தியாவைப் பொருத்த அளவு அத்வானியும் இந்துத்துவாக்களும் இந்திய முஸ்லிம்களுக்குத் தான் தலைவலியே அன்றி, பாகிஸ்தானுக்கும் அதற்கும் யாதொரு தொடர்ப்பும் இல்லை. மேலும் பாப்ரி மஸ்ஜித் மற்றும் ஏனைய சிறுபாண்மையினர் மீதான அச்சுறுத்தல்கள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அத்வானியோ, தொகடியாவோ பாகிஸ்தானுக்குள் எதையும் தூண்டிவிடவில்லை, அப்படியே தூண்டினாலும் அங்குள்ள சிறுபாண்மை இந்து அமைப்பினரால் அதையெல்லாம் செய்யும் அளவுக்கு மனபலம் கிடையாது, பாகிஸ்தானில் நடக்கும் அனைத்து குழப்பங்கள், தீவிரவாதம், மசூதிக்குள் குண்டுவெடிப்பது எல்லாம் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள், முழுபாகிஸ்தானும் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருப்பதாலும், தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக இருப்பதால் அவர்களின் நேரடி செயல் பயிற்சியாகவே அங்கே அவ்வப்போது குண்டுகள் வெடிக்கப்பட்டு முன்னோட்டம் பார்க்கப்படுகிறது. இதற்கும் அத்வானி குழுவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பாகிஸ்தான் இந்திய முஸ்லிம்களின் நலன் மீது முதலைக் கண்ணீர் வடிப்பது தங்களது தீவிரவாத ஆதரவிற்கு இந்தியாவிற்குள் கைநீட்டுவதற்கான வெறும் உத்திமட்டுமே. இதனை அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் தவிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம்களும் நிராகரிக்கின்றனர்.

மும்பைத் தாக்குதலை தடுக்காமல் விட்ட உளவுத் துறையின் தோல்வியையும், பல்வேறு அரசியல் நடவடிக்கைகளினால் சரிந்துவிட்ட காங்கிரசின் இமேஜை தூக்கி நிறுத்த காங்கிரசிற்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு பாகிஸ்தானுக்குள் இருக்கும் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமே. பல்வேறு நாடுகளும் "இந்தியா பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களின் மீது விமானப்படை தாக்குதலை நடத்தலாம்" என்று சொல்லிவருவது கூட இதனையும் கவனத்தில் கொண்டுதான் என்று நினைக்கிறேன். தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் சும்மா இருக்குமா ? என்பதே கேள்விக்குறி. ஆனால் தீவிரவாதிகளின் மீதான எதிர்தாக்குதலைப் பொருத்த அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்னோடியாக இருப்பதால், ஞாயம் என்று பார்த்தால் இந்தியாவின் மீது தனக்கு பாதுகாப்பிற்கான ஞாயம் இருப்பதாக அனைத்துலகும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் இந்தியாவின் மீது எதிர்த்தாக்குதல் நடத்தினால் ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் தவிர்த்து வேறு எவரும் வரமாட்டார்கள். கடுமையான போர் எனும் போது பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர் உட்பட்ட இந்தியர்களுக்கும் பாதிப்புகளும், பாதுகாப்பின்மையும் இருக்கும். இவையெல்லாம் நினைத்துப் பார்த்து இந்தியா செயல்படாமல் இருக்கும் என்கிற நப்பாசையும் பாகிஸ்தானுக்கு இருக்கிறது. ஆனால் இந்தியா போர்தொடுத்தால் அதை பிரச்சாரமாக்கி பாகிஸ்தான் மக்களை தொடர்ந்து இந்திய வெறுப்பில் வைப்பதற்கு அதுவாய்ப்பாகவும், புதிய தீவிரவாதிகளை அதைச் சொல்லித் தூண்டி உருவாக்கவும் பாகிஸ்தானால் முடியும் என்பதால் எதற்கும் தயாராகவே பாகிஸ்தான் இருக்கிறது.

அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளபடி தீவிரவாதிகளை அழிப்பது பாகிஸ்தானால் இயலாதகாரியம்.

எவ்வளவு காலம் தான் பாகிஸ்தான் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளின் செயலிற்கு அவ்வப்போது மக்களை பறிகொடுக்க முடியும் ? என்ற கேள்வியில் துணிந்து இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. 100, 200 என ஆண்டுக்கு 1000 பேர்வரை காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை தீவிரவாதிகளின் கொடுஞ்செயலுக்கு இரையாகக் கொடுப்பதைவிட ஒரு சில பாதிப்புகள் தற்காலிகமாக ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று இந்தியா துனியும் என்றே நினைக்கிறேன். அடுத்தகாரணமாக மீண்டும் காங்கிரஸ் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கவும் போர் ஒரு முக்கிய காரணியாக காங்கிரசின் வரவேற்பு அறையில் காத்துக் கொண்டு இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள் :

தீவிரவாதிகள் எங்கள் நாட்டவரே-யுஎஸ்சிடம் பாக். ஒப்புதல்
தாவூதுக்கு அத்வானியை கேட்கும் லஷ்கர்!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்