பின்பற்றுபவர்கள்

அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 மே, 2012

செல்பேசிகள் முட்டையை வேக வைக்குமா ?

இயக்கத்தில் இருக்கும் இரு செல்பேசிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளிகளுக்கிடையே வைக்கப்படும் முட்டை சாப்பிடும் பதத்திற்கு வெந்துவிடும் என்கிற தகவல்களை மின் அஞ்சல் அல்லது செய்திகள் வாயிலாக நீங்கள் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவை வெறும் வதந்திதான் என்கிறது வதந்தி பற்றி தகவல் வெளியிடும் இணையத் தளம். 65 நிமிடங்கள் இணைப்பில் (தொடர்ந்த பேச்சில்) இருக்கும் செல்பேசிகள் முட்டையை வேக வைத்துவிடும் என்கிற தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியது. இதனைப் பரப்பியவர்களின் நோக்கம் செல்பேசி பயன்பாடுகளைக் குறைத்து சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்ய முடியுமா ? என்று நினைத்து செய்தார்களோ, அல்லது வெறும் வதந்தியைப் பரப்பச் செய்தார்களோ, ஆனால் தகவல் 100 விழுக்காடு வதந்தி என்கிறது அந்த இணையத் தளம். சுற்றுச் சூழலுக்கும், தனிமைச் சூழலுக்கும் கேடுவிளைவிப்பது செல்பேசி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, தேவைக்கு மட்டுமே செல்பேசி பயன்படுத்துபவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் (அதாவது மூளை பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற தகவல்) தேவையற்றது தான். இயந்திர மய, விரைவு வாழ்க்கையில் சுற்றுச்சூழல் கேடு அதன் தவிர்க்க முடியாத பக்க விளைவு என்பதால், சுற்றுச் சூழல் குறைபாட்டிற்கு செல் பேசியை மட்டுமே குறைச் சொல்ல ஒன்றும் இல்லை. தற்பொழுது உலகெங்கிலும் இயக்கப்படும் கணிணிகள் அவை வெளியிடும் வெப்பம் இவற்றை ஒப்பிட செல்பேசியால் சூடேறும் வெப்பம் மிகவும் நுண்ணியதே, பழுதடைந்த செல்பேசிகளை முறையாக அழிப்பதற்கு வாய்ப்பில்லாத சூழல் தான் உள்ளது, இவை அனைத்து எலெக்ட்ரானிக் பொருள்களுக்கும் பொருந்தும்.

[T]he claim that RF energy from two mobile phones can cook an egg in 60 minutes cannot be true as it is impossible for the egg's temperature to rise to a level that will cook the egg. We can demonstrate this as follows: even if you assume that each mobile phone is emitting RF energy at its maximum average power of 0.25 W (based on a peak power of 2 W per phone) for 60 minutes; and even if the total power (2 X 0.25 W = 0.5 W) of both phones was completely absorbed by the egg (assuming it weighs 50 g), then the result would be a maximum temperature rise after 60 minutes of only 13 C. Even if the egg was at room temperature before starting the experiment, the result would still be far below the temperature actually needed to cook an egg (which is approx. 65- 70 C). 

செல்பேசியில் இருந்து வெளிப்படும் RF எனப்படும் ரேடியோ அலைகள் 60 நிமிடத்தில் முட்டையை வேக வைத்துவிடும் என்பது உண்மை இல்லை, ஒரு செல் பேசி வெளியிடும் வெப்ப அளவு 60 நிமிடத்திற்கு வெறும் 13 டிகிரி தான், அதுவும் சுற்றுச் சூழல் வெப்பத்தால் உரிஞ்சப்பட முட்டைக்கு தனியாக வெப்பம் செல்ல வாய்ப்பே இல்லை. முட்டை வேக 65 - 70 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் தேவைப்படுகிறது. எனவே செல்பேசி முட்டையைச் சூடேற்றி வேக வைக்கும் என்பது 100 விழுக்காடு வதந்தியாகப் பரப்பட்டத் தகவலே.

உங்களுக்கு மின் அஞ்சலில் இது அல்லது இது போன்ற தகவல் வந்தால் அவற்றை சரிபார்க்காமல் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள், வதந்திகள் என்பதே சிந்தித்து பார்க்க நேரமில்லாதவர்களால் பரப்பப்படும் வெறும் கவன ஈர்ப்புத் தகவல் தான்.

இன்று எனக்கு வந்த மின்னல் ஒன்றில்,


A very important message to everyone, please read it carefully. 
1 Egg & 2 Mobiles 
65 minutes of connection between mobiles. 


We assembled something as per image: Initiated the call between the two mobiles and allowed 65 minutes approximately... 
During the first 15 minutes nothing happened; 
25 minutes later the egg started getting hot; 
45 minutes later the egg is hot; 
65 minutes later the egg is cooked. 





Conclusion: The immediate radiation of the mobiles has the potential to modify theproteins of the egg. Imagine what it can do with the proteins of your brains when you do long calls.  
Please try to reduce long time calls on mobile phones and pass this mail to all your friends & Family you care for.

மேற்கண்ட படத்தைக் காட்டி, கீழே காட்டப்படும் வெந்த முட்டையும் செல்பேசியால் தான் வேக வைக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதரமும் இல்லை. வதந்தியைப் பரப்ப இவர்களே ஏற்கனவே வெந்த முட்டையை வைத்து இருப்பர்.

20 ஏப்ரல், 2012

பேரண்டம் பற்றிய வியப்பான தகவல்கள்


பேரண்டம் பற்றி பல வியப்பான தகவல்களை அறிவியல் உலகம் தந்துள்ளது, அவை ஆய்வுகள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது, அவற்றை உண்மை என்று அறிவியலாளர்கள் அடித்துக் கூறவில்லை, மாறாக வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்தவை என்றே சொல்கிறார்கள்.

நாம் பெருவெடிப்புப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம், பெருவெடிப்பின் மையம் எங்கே ?

பேரண்டத்தில் மையம் என்பதே கிடையாது, பேரண்டத்தில் எல்லை விளிம்புகள் என்றும் எதுவும் இல்லாத நிலையில் பேரண்டத்தின் மையம் என்று இதுவரை எதுவும் இல்லை. விளிம்புகள் அற்ற நிலையில் பேரண்டம் வளைவானது, உதாரணத்திற்கு மில்லியன் ஒளி ஆண்டுகள் நம்மால் பேரண்டத்தின் ஊடாக அதன் வெற்றிடத்தில் பயணம் செய்தால் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர முடியும். பேரண்டத்திற்கு மையமோ, எல்லையோ கிடையாது

பேரண்டத்தில் பெருவெடிப்பு எங்கே நடக்கும் ?

பேரண்டத்தில் பெருவெடிப்பு பேரண்டத்தின் வெற்றிடத்தில் நடந்து, வெற்றிடத்தில் விரியும் என்பது தவறான கூற்று. காலத் துவக்குமும், வெற்றிடமும், வெளித்திரள்களும் (கேலக்ஸிகள்) பெருவெடிப்பினால் நிகழ்ந்தவை. பெருவெடிப்பிற்கு முன்பு அளவிட முடியாத திணிவும், அளவிட முடியாத வெப்பமும் உள்ள பொருளாகத்தான் பேரண்டம் இருந்தது. அதனுள் ஏற்பட்ட அளவிடமுடியாத அழுத்தத்தினால் பின்னர் வெடித்து சிதறி வெளித் திரள்களையும், வின்மீன்களையும் உருவாக்கி இன்றளவும் (வெற்றிடங்களை விரித்து) விரிந்தே வருயுறது.

பூமியும் பேரண்டத்தின் ஊடாக விரிவடைகிறதா ?

வெளித்திரள்களும், வின்மீன்களும் உருவாகியது பெருவெடிப்பின் விளைவிகள், அதன் பிறகு வின்மீன்களோ அல்லது வெளித்திரள்களோ அல்லது நம் பூமியோ விரிவடைவதில்லை, பேரண்டவிரிவாக்கம் என்பதில் வெளித்திரள்களுக்கு இடையேயான இடைவெளிகள் (வெற்றிடங்கள்) விரிவடைகிறது, வெளித்திரள் (உதாரணத்திற்கு நாம் பால்வெளித் திரள் - மில்கிவே) அதனுள் இருக்கும் வின்மீன்களை இழுப்பு விசையால் அதனுள்ளேயே வைத்திருப்பதால் அவற்றினுள் விரிவாக்கம் ஏற்படுவது கிடையாது, இது பூமிக்கும் சூரியனுக்கும் பொருந்தும், சூரியன் எரிபொருள் அனைத்தையும் எரித்து அளவில் பெரிதாகிவருவது வேறு. 

பேரண்டத்தின் வெளியே என்ன இருக்கிறது ?

வெளி அல்லது ஸ்பேஸ் அல்லது வெற்றிடம் என்பவை பெருவெடிப்பினால் ஏற்பட்டவையே, பெருவெடிப்பிற்கு முன்பு வெளி என்பதே இல்லை, எனவே பேரண்டத்திற்கு வெளியே என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் அது மற்ற பேரண்டத்தின் தொடர்ச்சியாக இருக்கும் (பேரண்டங்களைப் போன்று எல்லையற்ற எண்ணிக்கையில் பேரண்டங்களும் இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்)

பேரண்டத்திற்கு முன்பு என்ன இருந்தது ?

வெளியும், காலமும் பெருவெடிப்பின் விளைவுகள் என்றே நம்பப்படுகிறது, அதற்கு முன்பு என்னவாக இருந்தது என்பதற்கு ஏற்கதக்க விடைகள் அற்ற சூழலில் பெருவெடிப்பு - விரிவாக்கம் - சுருக்கம் என்பவை மாற்றி மாறி நிகழ்ந்தவை என்று நம்பப்படுகிறது, அல்லது நமது பேரண்ட பெருவெடிப்பு வேறு பேரண்டங்களின் ஒன்றில் நடந்த பெருவெடிப்பின் விரிவாக்கத்தில் நிகழ்ந்தவையா என்றும் அறிய முடியவில்லை.

இறுதியாக ஒரு நல்ல கேள்வி, பேரண்டம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தவை என்று நம்பம்படும் பொழுது, நமது பேரண்டத்தினுள் இருக்கும் பல்வேறு கேலக்ஸிகளின் இடைவெளிகள் எப்படி 14 பில்லியன் ஒளியாண்டைவிடத் தொலைவானதாக இருக்க முடியும் ? நமக்குத்தான் தெரியுமே ஒளியைவிட வேகமாக பயணிக்கும் பொருள்கள் எதுவும் கிடையாது, பின்னர் எப்படி இந்த கேலக்ஸிகள் ஒளியைவிட வேகமாக நகர்ந்து அல்லது அவற்றின் இடைவெளிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும் ?

திரள்களுக்கு இடையேயான வெற்றிட(வெளி) விரிவாக்கம் என்பது ஒளியை விட வேகமாக விரிவடைகிறது எவ்வளவு வேகம் என்பது சரியாக கணக்கிடப்படவில்லை, தவிர பெருவெடிப்பின் முன்பு உள் திணிவுகளின் இடையேயான தொலைவும், பெருவெடிப்பின் முன்பான வடிவமும் நமக்குத் தெரியாத நிலையில், பெருவெடிப்பிற்கும் பின்னர் வெளித் திரள்கள் (கேலகிஸிகளின் இடைவெளி) ஒளியைவிட வேகமாக பயணிக்கக் கூடிய தொலைவை அடைந்திருப்பதாக நாம் ஒளி வேகத்துனுடனும் பெருவெடிப்பு நிகழ்ந்ததாக நம்பப்படும் 14 பில்லியன் ஆண்டுகளையும் ஒப்பிட பெருவெடிப்பின் வெற்றிட விரிவாக்க வேகம் ஒளியைவிட விரைவானது என்பது ஒப்புக் கொள்ளத் தக்கதாகும், கேலக்ஸிகளுக்கு இடையேயான இடைவெளி விரிவாக்க விரைவு என்பது அருகில் இருக்கும் கேலக்ஸிகள் நமக்கு மெதுவாக விரிவடைவதாகவும் தொலைவில் இருப்பவை வேகமாக செல்வதாகவும் தெரிவதால் பெருவெடிப்பின் அண்மையில், அதாவது 2 பில்லியன் ஆண்டுகளில் நமது கேலக்ஸி 2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவை அடைந்திருந்தால் நமது கேலக்ஸிக்கும் நமது கேலக்ஸியை விட்டு விலகிச் செல்லும் மற்றோரு கேலக்ஸிக்கும் இடையேயான தொலைவு ஏற்கனவே இரு மடங்காகி இருக்கும் நிலையிலும் ( 4 பில்லியன் ஒளி ஆண்டுகாக இருக்க) அடுத்த 12 பில்லியன் ஆண்டுகளில் அவை நகரும் (திசை - நோக்கி அல்லது விலகி) 24 பில்லியன் ஒளி ஆண்டைக்காட்டிலும் தொலைவில் தான் இருக்க வாய்ப்புள்ளது. தவிர இந்த வேகத்தை நம்மால் (நமது கேலக்ஸியால்) உணரமுடியாது, ஏனெனில் அதற்கு வெளியே உள்ள வெற்றிடம் தான் விரிவாக்கப்படுகிறது. 

உதாரணத்திற்கு ஒரு ஊதாத பலூனில் சுற்றிலும் புள்ளிகள் வைத்து அதை ஊத, பலூன் விரிய விரிய ஒரு பக்கத்தில் உள்ள புள்ளிக்களுக்கு இடையான தொலைவும், நகர்வும் அங்கிருந்து பார்க்க மறுபக்கத்தில் உள்ள புள்ளிகளின் தொலை மிகுதியாகவும், நகர்வும் விரைவாகவே இருக்கும்.

பேரண்ட விரிவாக்கத்தின் வினாடிக்கான அளவு என்ன ?

parsec என்ற வானவியல் அளவீடுகளில் கேலக்ஸிகளின் தொலைவுகள் அளக்கப்படுகிறது, ஒரு parsec =  3.26 ஒளி ஆண்டுகள், அதாவது 31 டிரில்லியன் கிமீ தொலைவு, நமது கேலக்ஸிக்கும் பக்கத்து கேலக்ஸிக்குமான தொலைவு 1 parsec இருந்தால் அவற்றின் இடைவெளி விரிவாக்கம் வினாடிக்கு 74 கிமீ. நமக்கு 2 parsec தொலைவில் இருப்பவை அதே வினாடி நேரத்தில் 144 கிமி தொலைவுக்கு நகர்ந்திருக்கும். இந்த நகர்வுக் கணக்கை வைத்து தான் அவை 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அருகில் இருந்ததாகவோ அல்லது பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கக் கூடும் என்கிறார்கள்.

பேரண்டத்தில் இருக்கும் கேலக்ஸிகள் எத்தனை ?

தற்பொழுது அளவிடப்பட்ட பேரண்டத்தின் விரிவு 93 பில்லியன் ஒளி ஆண்டைக் கொண்டது, இதை அவதனிக்கப்பட்ட பேரண்ட (observable universe). விட்டத் தொலைவு என்கிறார்கள். அதற்கும் கூடுதலாகவே இருக்கலாமாம். நமக்கு தொலை நோக்கியால் பாக்க முடிந்த அளவில் உள்ள பேரண்டத்தில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளவை 80 பில்லியன் கேலக்ஸிகள், ஒவ்வொன்றிலும் 100 - 200 பில்லியன் வின்மீன்கள், ஒவ்வொரு வின்மீனுக்கு குறைந்தது ஒரு கோள், அந்த கோள்களுக்கு துணைக் கோள் என்று மிகப் பெரிய பில்லியன் எண்ணிக்கையினுள் இருக்கிறது

கேலக்ஸிகளுக்கு இடையான தொலைவு எப்படி கணக்கிடப்படுகிறது ?

ஒரு ஒளி ஆண்டு தொலைவில் உள்ளதை ஒரு ஒளி ஆண்டு பயணித்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் பலரிடம் உண்டு,  அது தவறு. ஒளி ஆண்டுகளின் கணக்கு ஒரு கேலக்ஸின் உள்ள வின்மீண்களின் ஒளி அடர்த்தியை வைத்தே கணக்கிடப்படுகிறது, ஒளி அடர்வு பயணம் தொலைவுக்கு ஏற்ற பண்புகளைக் கொண்டு இருப்பதால் குறிப்பிட்ட ஒளி அடர்த்தி கொண்டவை குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் என்ற கணக்கில் அவை அளவிடப் படுகிறது, ஒரே ஒளி அளவைக் கொண்ட அருகில் இருக்கும் மெழுகுவர்த்திக்கும் தொலைவில் இருக்கும் மொழுகுவர்த்தியும் நமக்கு ஒரே அளவான வெளிச்சத்தைக் கொடுப்பது இல்லை. அவற்றின் ஒளி ஆண்டு அளவுகள் வின்மீன் அல்லது கேலக்ஸி அவற்றின் தொலைவுகளைச் சொன்னாலும் அவை அங்கேயே தற்போதும் நிலை கொண்டு இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. இன்று ஒரு கேலக்ஸி 10 பில்லியன் ஒளி ஆண்டுத் தொலைவில் உருவானால் அதன் வெளிச்சம் பூமியை எட்டி நம் கண்டுபிடிப்பிற்குள் அவை வர அதே 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும், எனவே நாம் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என்று கணிக்கும் கேலஸிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்திருக்கும் தற்போதைய தொலைவு நமக்கு தெரியாது. நம்மிடம் இருக்கும் ஆகப் பெரிய தொலைவு அளவீடு ஒளி ஆண்டு தான்.


நாம் இருக்கும் மில்கிவே கேலெக்ஸியின் அளவும் பரப்பளவும் என்ன ?

ஸ்பைரல் வட்ட வடிவத்தில் இருக்கும் மில்கிவே கேலக்ஸியின் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவு, அதன் தடிமன் 1000 ஒளி ஆண்டுகள். பேரண்டத்தில் இருக்கும் பெரிய கேலக்ஸிகளில் மில்கிவேயும் உண்டு,  மில்கிவே வினாடிக்கு 552 - 630 கிமீ வேகத்தில் ஒட்டு மொத்தமாக நகர்கிறது.

மில்கிவே கேலக்ஸியின் வயது என்ன ? 

12.6 பில்லியன் ஆண்டுகள், இது பெருவெடிப்பு நிகழ்ந்தததாக கணக்கிடப்பட்டுள்ள 13.7 பில்லின் ஆண்டுகளுக்கு பின்னர் 1.1 பில்லியன் ஆண்டுகளில் மில்கிவே உருவாகி இருக்குமாம். அதிலிருக்கும் நம் சூரியன் 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. நமது சூரியனின் எரிபொருள் முழுதும் தீர இன்னும் 5.5 மில்லியன் (55 லட்சம் ) ஆண்டுகள் உள்ளனவாம்

மில்கிவே கேலக்ஸியில் இருக்கும் வின்மீன்களின் எண்ணிக்கை எத்தனை ? 

200 பில்லியன் வின்மீன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, நமது சூரியனும் ஒரு வின்மீன் தான் அதற்குள் கோள்கள், அந்த கோள்களில் சிலவற்றிற்கு சந்திரனைப் போன்று துணைக் கோள்கள்.

மில்கிவேயில் சூரியன் இருக்கும் இடம் எங்கே ?

மில்கிவேயின் மையத்தில் இருந்து 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில். மில்கிவேயின் மேல் எல்லைக்கு கீழே அதன் தடிமனுள் 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கிறது

மில்கிவேயில் சூரியனின் நகர்வு வேகம் எவ்வளவு ?

நொடிக்கு 250 கிமீ / நிமிடத்திற்கு 15,000 கிமீ / மணிக்கு 9 லட்சம் கிமீ, மில்கிவேயின் மையத்தை ஒரு முறை வளம் வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் 220 மில்லியன் ஆண்டுகள். 




கூகுள் + ல் தற்பொழுது பேரண்டம், மில்கிவே, சூரியன், நிலவு மற்றும் பிற கோள்களின் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்,

***************

பேரண்டம் பற்றி படிக்க படிக்க வியப்பின் எல்லைக் கடந்து வியப்படைய முடிகிறது, ஆறு நாளில் (பால்வெளித்திரளை ஒப்பிட) தம்மாத்தோண்டு பூமியைப் படைத்தார் கடவுள் என்றால் மற்ற கோள்களையும் சூரியனையும், பால்வெளித்திரளையும் அதில் இருக்கும் வின்மீன்களையும், மற்ற வெளித்திரள்களையும் அதில் இருக்கும் வின்மீன்களையும் படைக்க எத்தனை நாள் எடுத்திருப்பார் ? நாளா ? அவரோட படைப்புகள் துவங்கி எத்தனை பில்லியன் களின் பில்லியன் ஒளி ஆண்டுகளாக நடக்கிறது ? கடவுளுக்கே வெளிச்சம். கடவுளின் 'ஆகுக' என்ற சொல் ஒளி வேகத்தில் பயணித்தாலும் பேரண்டத்தின் அடுத்த பக்க விளிம்பிற்குச் செல்ல எத்தனை ஒளி ஆண்டுகள் எடுக்குமோ ?

பேரண்டம் உருவாகி 14 பில்லியன் ஆண்டுகள் ஆகிறதாமே என்று ஒரு இந்து நண்பரிடம் சொன்னேன், பிரம்மாவின் பகல் என்பது ஆயிரம் சதுர்யுகமாம், கிட்டதட்ட 14 பில்லியன் ஆண்டுக்கு பக்கத்தில் வருது என்றார், பக்கத்துல கருங்கல் எதுவும் இல்லை, இருந்தால் முட்டிக் கொண்டு இருப்பேன்.

பேரண்டம் பற்றி நமக்கு தகவல்கள் தெரிய தெரிய கடவுள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கடவுள் என்கிற ஒரு நம்பிக்கையை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி, கடவுள் என்பது ஒரு  சூனியக்காரன், கோபக்காரன், மந்திரவாதி, மேஜிக் செய்பவன் என்ற அளவுக்கெல்லாம் மத நம்பிக்கையாக்கி சுறுக்கி  வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்க முடிகிறது 

30 ஜனவரி, 2012

பெருவெடிப்பும் வாயுப் பிரிப்பும் !

கடைசியாக நடந்த பெருவெடிப்பு என்று 14 பில்லியன் ஆண்டுகளைச் சொல்லுகிறார்கள் அறிவியாலாளர்கள், 14 பில்லியன் ஆண்டுகள் என்பது மனித வயதையும் மனித இனத் தோற்றதையும் ஒப்பிட எண்ணற்ற ஆண்டுகள் அதாவது வரலாறுகளுக்குள் அடங்காத ஒரு காலம். 14 பில்லியன் ஆண்டுகள் என்கிற கணக்கு பால்வெளித் திறள்களின் இடப்பெயர்வு அல்லது விரிவு அவற்றின் ஒளித்தன்மையையும் வைத்துச் சொல்லப்படுகிறது. நூற்றாண்டுகள் தொலைநோக்கி வழியாக ஆய்ந்ததின் பயனாக பால்வெளித் திறள்கள் சுழலுகின்றன மற்றும் நகர்ந்து விரிவடைகின்றன, பால்வெளித் திரள்களின் விரிவுகள் என்பது முன்பு இருந்த இடத்தில் இருந்து மொட்டுகள் வளர்ந்து விரிவது போன்றது என்று படங்களின் வழியாக விலக்குகிறார்கள், அதாவது அடர்வுமிகு ஒரு புள்ளியில் இருந்து அடர்வின் விசையையானல் வெளித் தள்ளப்பட்டு விரிவது தான் பிரபஞ்சத் தோற்றம் என்பது தற்போதைய அறிவியலாளர்களின் முடிவு.

இதை முற்றிலும் தகர்க போதிய அளவு மதங்களிடையே எந்த ஒரு ஆதாரமும் இல்லை, மாறாக பிரபஞ்ச விரிவும் அவற்றின் வாயுக்களின் சேர்க்கையும் பிரபஞ்சம் மற்றும் கோள்களை தோற்றுவிக்கின்றன என்பதௌ மதங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது என்று காட்டிவிட்டாலே தங்கள் மதம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்று காட்டிவிடலாம் என்பதே மதப் பற்றாளர்களின் திட்டமாக உள்ளது.

Job 9:8
He alone stretches out the heavens and treads on the waves of the sea.

Psalm 104:2
He wraps himself in light as with a garment; he stretches out the heavens like a tent

Isaiah 40:22
He sits enthroned above the circle of the earth, and its people are like grasshoppers. He stretches out the heavens like a canopy, and spreads them out like a tent to live in.

பழைய ஏற்பாட்டின் வசனங்களாம்,

1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.

மேலே ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ளதற்கும் கீழே தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேறு சில பழைய ஏற்பாட்டு வசனங்களும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, மேலே கடவுளின் செயல் என்று குறிப்பிட்டு இருப்பவையில் சுவர்கத்தை ஒரு டெண்ட் டைப் போல் விரித்தான் என்றும் கீழே பூமி படைக்கப்பட்டபிறகே சூரியன் உள்ளிட்டவைகள் படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பெருவெடிப்பு நிருபனம் செய்ய முடியாத நிலையிலும் பூமியும் மற்ற சூரிய குடும்ப கோள்களும் சூரியனில் இருந்து பிரிந்தவை என்பதும், நிலவு பூமியில் இருந்து பிரிந்தது என்பதே (அவை சுற்றும் விசைகளின் மையம் தொட்டு அறிவியலாளர்களின் கூற்று) இதை இன்று வரை மதப்பற்றாளர்களால் மறுக்கவும் முடியவில்லை. இதற்கான வசனங்கள் இறைப்புத்தகங்களில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறார்கள், ஆனால் மதப்புத்தகங்களில் பூமி முதலில் படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால் தடுமாறுகிறார்கள்.

பெருவெடிப்பு என்ற கொள்கையின் தொடர்ச்சியில் தான் பரிணாமக் கொள்கையும் வருகிறது, ஆனால் பெருவெடிப்புக்கு வசன ஒட்டுப் போடும் மதப்பாற்றாளர்கள் பரிணாமம் என்றால் எட்டிக்காயாக தெரிகிறது, காரணம் ஆதாம் - ஏவாள் பற்றிய கருத்தாக்கத்தை முற்றிலும் சிதைக்கிறது. அனைத்தும் தான் தோன்றியவை என்பது பரிணாமவாதிகளின் கூற்றாக இருக்கும் போது கடவுளால் படைக்கப்பட்டது, படைப்பு அற்புதம் என்றெல்லாம் சுட்டிக்காட்ட ஒன்றும் இல்லாத சூழலில் பரிணாமவாதிகளை மறுக்க வழியில்லாமல் டார்வினுக்கு குரங்குபடம் போட்டு ஆத்திரம் தீர்த்துக் கொள்கிறார்கள் அன்றி அவற்றிற்கு மூலமான பெருவெடிப்புக் கொள்கையை கைப்பற்றிக் கொள்கின்றனர்.

ஆம் வானத்தில் இருந்து பூமியைப் பிரித்தான் என்ற வசனம் பெருவெடிப்பைத்தான் பேசுகிறது, எனவே எங்கள் மதம் கடவுளால் உண்டாகப்பட்டதற்கு இதுவே நிருபனம் என்கிறார்கள்.

******

மிக எளிதாக போர்களின் மீதும், கைப்பற்றுவதன் மூலமும் பரவிய மதங்கள் (குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை, பெருவாரியான மதங்கள் அப்படித்தான் பரவின) அரசர் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்று தான் மதங்கள் அரசர்கள் மதம் மாறியதன் மூலம் மாறினார்கள், ஆங்கிலேயர்களின், ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பால் கிறித்துவம் பரவியது, இஸ்லாம் பரவிய விதம் பற்றி நான் சொன்னால், அவர்கள் மதத்தை கிள்ளிவிட்டேன் நான் என்று சர்சை ஆகிவிடும், சகிப்புத்தன்மை அற்ற நிலையில் அதைப் பற்றி நான் பேசவும் விரும்பவில்லை. பவுத்தமும் அரசர்கள் வழியே தான் பெருவாரியாகப் பரவியது.

இன்றைக்கு மன்னர் ஆட்சிகள் ஒழிந்து மக்கள் ஆட்சிகள் ஏற்பட்ட நிலையில் மதங்களைப் பரப்ப அறிவியல் முட்டுக்கட்டையாக நிற்பதால் அறிவியலை வரித்துக் கொள்ளுதல் என்ற நிலையில் மதப்பற்றாளர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள், அதாவது மதம் அறிவியலை மெய்ப்பிக்கிறதாம், அறிவியல் மூலம் மதக்கருத்துகள் நிருபனம் செய்யப்படுகிறதாம், அறிவியலை மதம் மெய்பிக்கிறதா ? அல்லது அதிலிருந்து உருவப்படும் தகவல் மதக்கருத்துகளுடன் ஒட்டவைக்கப்பட்டு மதங்களுக்கு உயிர்பிச்சை கேட்கப்படுகிறதா என்பது வேறு விவாதம். இதுவே இப்படிப் பட்ட விவாதமாகப் போகும் போது 'உங்கள் வேதம் இறைவனால் அருளப்பட்டதா ?' என்ற விவாதங்களின் மூலாம் எதை மெய்ப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மற்றவர்களின் மதநம்பிக்கை விமர்சனம் செய்யத் தக்கது என்ற நிலையில் இருப்பவர் தம் மதம் விமர்சிக்கப்படும் போது பொங்கி எழுவது சகிப்புத்தன்மை அற்ற செயலின்றி வேறு என்ன ?

திரும்பவும் பிக்பாங்க், ஆம் அவை ஏற்கனவே என்னுடைய மதத்திலும் சொல்லப்பட்டுள்ளது அவை வாயுப்பிரிதல் போன்று மிகப் பெரிய சத்தத்துடனும் வெளிப்பட்ட வாயு அதிலிருந்தே அனைத்தும் தோன்றின. என்னுடைய மதத்தின் பெயர் பூனையிசம், பூனை தான் எனது கடவுள். பூனை எப்படி கடவுளாக முடியும் ? எகிப்தியர்களின் கடவுள் பூனையாம், நாமெல்லாம் ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய பல்வேறு கூட்டங்களாம். நான் என் மூதாதையர்களின் மதத்தை முன்னும் பின்னும் பற்றுகிறேன்

22 ஜூலை, 2010

படைப்புக் கொள்கை ...3

கடவுள் அனைத்தையும் படைத்ததாக மதங்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றன, கடவுள் 7 நாளில் உலகைப் படைத்ததாக ஆப்ரகாமிய மதங்களின் அடிப்படை நம்பிக்கை, அதன் பிறகு ஓய்வெடுக்கச் சென்றவர் தூதர்களை அடையாளம் காட்டுவதுடன் நிறுத்திக் கொண்டார் என்பதுடன், இவர் தான் இறுதித் தூதர் என்பது முறையே ஏசு மற்றும் முகமது ஆகியோர் பற்றி ஆப்ரகாமிய மதங்களின் கோட்பாடு, இறுதித் தூதர் யார் என்பதன் நம்பிக்கை தான் அம்மதங்களின் பெயர்களாக முறையே யூத மதம் (மோஸஸ்) கிறித்துவ மதம்(ஏசு), இஸ்லாம் (அ) முகமதிய மதம் (முகமது) என்று வழங்கப்படுகிறது, இஸ்லாம் மற்றும் கிறித்துவ நம்பிக்கைகளையும் அந்த இறைத்தூதர்களை ஏற்றுக் கொண்ட பார்சி மற்றும் அகமதியா மதங்களும் உள்ளன ஆனால் இவற்றின் அடிப்படை கடவுள் கொள்ளை மற்றும் படைப்பு சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் ஒன்று தான், அதாவது கடவுள் ஏழு நாளில் உலகைப் படைத்தார். இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளும் இவை போன்று தான் என்றாலும் கூட ஏழு என்றநாள் எண்ணிக்கைக்கு பதில் ஆண்டுக்கணக்கில் சொல்லபடுகிறது மற்றபடி அவை உயர்ந்ததொரு நம்பிக்கை என்று கொள்ள முடியாது. மதங்கள் அனைத்தின் அடிப்படை நம்பிக்கைகளும் கடவுள் உலகை படைத்தார் அல்லது சிருஷ்டித்தார் என்பதான நம்பிக்கை. படைத்தல் அல்லது சிருஷ்டித்தல் என்பது இல்லாத ஒன்றை உருவாக்குவது என்பதாம். இவற்றை ஏன் படைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு மதமும் தெளிவான ஒரு விடையைத் தந்ததுவிடவில்லை, அது கடவுளின் விருப்பம் என்கிற எளிய விடையைக் கூறி கேள்விகள் எழாது என்று நினைத்துக் கொள்வர்.

மனித அறிவின் படி கடந்த கால வரலாற்றில் புதிதாக எந்த ஒரு உலோகமும் தோன்றி இருக்கவில்லை, இவை அனைத்தும் அறியும் போது இவை இருக்கிறது என்பதாக தெரிந்து கொண்டனர். சிந்துவெளியில் இரும்பைப்பற்றிய அறிவில்லை என்பதால் சிந்துவெளிக்கு பிறகே இரும்பு தோன்றியது என்பது பொருளல்ல, இரும்பு கண்டுபிடிக்கப்படாமல் அல்லது பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கிறது என்பது தான் பொருள். இன்று நாம் பயன்படுத்தும் அனைத்துவிதாமான பொருள்களும் நாம் அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்திலும் இருந்தவையே, அவற்றில்கலவை செய்து பெயரிட்டு புதிய பெருள்கள் என்கிறோம், மற்றபடி முற்றிலும் முன்பு மூலங்கள் எதுவுமே இல்லாத பொருள் என்று எதுவுமே கிடையாது. இவைகள் நோய்கிருமிகளுக்கும் பொருந்தும், உயிர்கொள்ளி நோய் கிருமிகள் கூட இருந்திருக்கலாம், அல்லது புதிய பரிணாமாக அவை பிரிதொரு கிரிமியின் வளர்ச்சியாக மாறி இருக்கலாமே அன்றி அவை மூலங்கள் எதுவும் இல்லாமல் தான் தோன்றியாக தோன்றி இருக்க வாய்புகள் இல்லை, மேலும் அவை பரவும் சூழல் போதிய தட்பவெட்பம் ஆகியவை அவை எளிதில் பரவுவதற்கு வழி செய்திருக்கின்றன. அதாவது நாம் பெயர் வைத்திருக்கும் புதிய நோய்கள் கிருமிகள் அனைத்துமே முன்பு பெயரில்லாமல் இருந்தவை அல்லது பரவாமல் இருந்தவை. அறிவியலாளர்கள் புதிதாக ஒரு கோள் அல்லது நட்சத்திரம் பற்றிய அறிமுகம் கொடுக்கிறார்கள் என்றால் அவை முன்பு இல்லாமல் இருந்தது கிடையாது, அவை அறிவியல் புலனுக்குள் அறியப்பெற்றிருக்கிறது என்பதே பொருள், கருங்குழிகள், பெருவெளிகள் அனைத்துமே இல்லாத எந்த ஒரு பொருளையும் உருவாக்கிவிடாது அவற்றில் இருக்கும் வாயு மண்டல மூலக் கூறுகள் ஒன்றிணைந்து அல்லது சிதைந்து திடப் பொருள் உருவாக்கத்தை நடத்துகின்றன என்பது தான் அறிவியல் உண்மை.

அடிப்படையில் உயிரினங்கள் அனைத்தும் உற்பத்தி (இனப்பெருக்கம்) வளர்ச்சி, முதிர்ச்சி எனபதனுள்ளும், ஒன்றை ஒன்றும் உண்ணும் சுழற்சியில் இருக்கின்றன. இவற்றில் நீண்ட வாழ்நாள் கொண்டவற்றின் உற்பத்தி குறைவாகவும், குறுகிய வாழ்நாள் கொண்டவை மிகுதியான உற்பத்தித் திறனையும் பெற்றிருக்கின்றன. வேட்டையாடி அழிக்கப்பட்ட உயிரனங்களைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும், இயற்கைச் சீற்றங்களினால் முற்றிலும் அழிந்த உயிரினங்களின் மறு உற்பத்திக்கு கடவுள் என்ன செய்திருக்கிறார் என்கிற கேள்விக்கு மதங்கள் விடை சொல்லுவது இல்லை. படைப்பிற்கான காரணம் இறை விருப்பம் என்றாலும் அவை முற்றிலும் அழிந்து போனதற்கு என்ன காரணமாக இருக்கும் ? அவற்றை படைத்ததின் நோக்கத்தை அப்படைப்புகளும் தோன்றியதன் நோக்கத்தை நிறைவு செய்துவிட்டனவா என்பதற்கு தெளிவான எந்த ஒரு பதிலையும் இறைவனின் படைப்பு என்கிற நம்பிக்கையாளர்கள் விடை தேடியதில்லை. இத்தகைய கேள்வியில் படைப்பு என்று எதுவும் கிடையாது, உயிரினத் தோற்றம் சூழலால் அமையப் பெற்றது என்பதையும் பரிணாமம் அல்லது ஏதோ ஒன்றினால் நம்ப வேண்டி இருக்கிறது. நன்னீரில் உற்பத்தியாகாத புழுக்கள், பூச்சிகள், கொசுக்கள் தேங்கிய குட்டையில் (தோன்றி) வளர்வதற்கு சுற்றுச் சூழல் என்பது தானே வேறுபாடு.

தாவிர வகைகள் உட்பட, உயிர்களின் நோக்கம் உணவு தேடுதல் (தன்னைப் பாதுகாத்தல்), இனப்பெருக்கம் இவை தவிர்த்து எதுவும் கிடையாது. வாழுதல் அதில் கிடைக்கும் இன்பம் எனப்படுபவை தாவிர வகைக்கள் தவிர்த்து உயிரினங்களுக்கு இருந்தாலும், தாவிர வகைக்களுக்கு வாழும் இன்பம் என்னும் மனம் சார்ந்த உணர்வுகள் கூட கிடையாது, வாழும் இன்பம் தவிர்த்து எந்த ஒரு உயிரனத்திற்கும் வாழுதலுக்கான வேறு எந்த தனிப்பட்ட பலனும் கிடையாது, நாம் ஏன் வாழனும் என்கிற கேள்வியே எழாமல் உடல் சார்ந்த, இச்சை, பாசம் என்பதை வளர்த்துக் கொண்டு மனித இனம் வாழுதலை நேசித்தாலும், பிற உயிரனங்களுக்கு தாம் ஏன் வாழனும் என்கிற எண்ணம் எதுவுமே இல்லாமல் தன்னிச்சை எனப்படும் தூண்டலில் தோன்றி, வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து மறைகின்றன. உயிரினம் வாழுதலுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்கிற தேடலில் மறைந்த (இறந்த) பிறகான நிரந்தர மற்றும் தற்காலிக சுவர்கங்களையும் மதங்கள் காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய கற்பனையில் சிக்காத மனித இனம் மதங்கள் தோன்றுவதற்கு முன் வாழ்ந்து மறைந்தும் இருக்கின்றன. படைப்பு அதற்கான நோக்கம் இவற்றின் தெளிவுகள் எதுவுமே வரையறுக்கப்படாத சூழலிலும் கூட மனிதன் உட்பட உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன எனும் போது அதற்கு காரண கருத்தா என நம்பப்படும் கடவுள் அவர்களுக்கு மட்டும் ஏன் எதையும் (தெளிவாக, மறைமுகமாகக் கூடச்) சொல்லி வைக்க வில்லை என்ற கேள்வியில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்கிற கொள்கைகள் என்னால் எப்போதும் நிராகரிக்கப்படுகிறது.

எந்த ஒரு தானியங்கி (சுழற்) விசையும் தொடந்து செயல்பட புற விசையின் எப்போதுமான தூண்டல் என்பது தேவை. எடுத்துக்காட்டிற்கு பூமியின் பருவகாலம் மாறி மாறி ஆண்டுக்கு ஒரு முறை வருவதற்கு (அதன் வழி தொடர்சியான தானிய பொருள் உற்பத்திக்கு, உயிர் தோற்றங்களுக்கு) பூமி சுற்றுவதும் சூரியனும் புறக்காரணிகள், இந்த வெளிப்புற தூண்டல் இல்லை என்றால் பூமியில் பருவகாலம் என்பதே ஏற்படாது. பரவெளியெங்கும் இது போல் கோள்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன, இதைத் தவிர்த்து புறத்தூண்டல்கள் எதுவுமே இல்லாத சூழலில் படைப்புகள் என்று நம்புவை அனைத்தும் வெறும் நம்பிக்கை மட்டுமே என்று நான் கருதுகிறேன். இவை அனைத்தையும் இறைவனின் சித்தம்/விருப்பம் செயல்படவைக்கிறது என்று பூசி மொழிகினாலும், இவை எல்லாம் செயல்பட வைப்பதில் இருக்கும் இறைவனின் விருப்பம் என்ன ? என்று கேட்டால் விடை கிடைப்பது இல்லை. இறைவனுக்கு விருப்பம் நோக்கம் எதுவுமே கிடையாது என்று வைத்துக் கொண்டாலும், மனிதன் நல்லவனாக வாழனும் அதன் பிறகு சொர்கம் கிடைக்கும் என்பதும் மதங்கள் காட்டும் இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

விருப்பம் எதுவும் இல்லாத கடவுள் விரும்பிய படி உலகையும் ஏனையவற்றையும் படைத்தார் என்பது முரணனான கூற்றுகள். அப்படியே கடவுளுக்கு விருப்பம் இருந்து படைத்திருந்தாலும் படைப்பின் பிழைகளுக்கு இறைவன் தான் பொறுப்பு என்று குற்றம் சொல்லுபவர்களை நாம் புறந்தள்ளவும் முடியாது. படைப்பில் பிழையே இல்லை என்பவர்களும் எல்லாவற்றையும் சரியாக படைத்த கடவுள், மனிதனுக்குள் இத்தனை பிரிவினைகளை ஏற்படுத்தாத சூழலை மட்டும் படைக்கவில்லை என்று சொன்னாலும் அது முரண் தானே. இறைவன் நாடினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதும் கெட்டவை நடந்ததில் இறைவனின் பங்கு இல்லை என்பது போன்ற முரணான கூற்றுகளை எப்போதும் நிராகரிக்கிறேன், அந்தக் கூற்று உண்மை என்றால் படைப்பில் பாராபட்சம் என்பதும் உண்மையாகத்தானே இருக்க முடியும் ?

நான் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று எங்கும் விவாதிப்பது இல்லை, ஆனால் இறைவனின் செயல்கள் இவை இவை என்று சொல்லப்படுவற்றை என்னால் கேள்வி எழுப்பாமல் இருக்கவே முடியாது, அந்த வகையில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் நான் நிராகரித்தே வருகிறேன்.

முந்தைய பகுதிகள் 1, 2 மற்றும் இறைவன் படைக்கிறானா ?

(என்றாவது) மீண்டும் தொடரும்......

4 ஜனவரி, 2010

கூகுள் - நீயூட்டன் ஆப்பிள் !

இன்று காலையில் கூகுளை திறந்த உடன் கூகுள் தேடு பொறியின் எழுத்து ஆப்பிள் அணிந்திருந்தது, அதிலிருந்து ஒரு ஆப்பிள் ஓசை இல்லாமல் விழுந்தது, எனக்கு இருக்கும் (அறிவியல்) அறிவைக் கொண்டு அது சட்டென்று என்னவென்று ஊகித்து அறியமுடியவில்லை, சரி என்ன வென்று பார்போம் என்று ஆப்பிள் மீது அழுத்தினேன், தேடு பொறியில் 'isaac newton' என்று தேடச் சொல்லி வந்தது.

அந்தத் தேடலில் முதலிலேயே விக்கிப் பீடியாவின் ஐசக் நியூட்டன் குறித்த கட்டுரை... அதன் முதல் வரியிலேயே இன்று ஐசக் நியூட்டனின் பிறந்த நாள் என்று அறியும் விதமாக,

Sir Isaac Newton FRS (4 January 1643 – 31 March 1727 [OS: 25 December 1642 – 20 March 1727])[1] was an English physicist, mathematician, astronomer, natural philosopher, alchemist, and theologian who is perceived and considered by a substantial number of scholars and the general public as one of the most influential scientists in history.

தகவல்கள் இருந்தன.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் புவி ஈர்ப்பு பற்றிய அறிந்து கொண்டவையே எடை மற்றும் வேகம் ஆகியவற்றின் உண்மைகளை புலப்படுத்தியது, நியூட்டன் கலிலியோ மறைவிற்கு பின் அடுத்த ஆண்டு பிறந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அறிவியலின் தந்தைகளுள் இவரும் ஒருவர்.



நியூட்டனுக்கு என் சார்பில் ஒரு மிகப் பெரிய '.......'

4 நவம்பர், 2009

வேதங்களுக்கு முன்பான இயற்கை மற்றும் இயக்கம் !

மனிதன் உட்பட விலங்குகள் அனைத்தின் இனப்பெருக்க உறுப்புகளைவிட மிகவும் பாதுகாப்பான அமைப்பில் இருப்பது கடினமான ஓட்டினுள் அமைந்த மூளையும், மார்ப்புக் கூடுகளினுள் அமைந்த இதயமும் தான். அதே போன்று பிற உயிர்தோற்றதிற்கான விதைகள், முட்டைகள் பாதுகாப்பான மேலோடுகளோடு அமைந்திருகின்றன. திடீர்தாக்குதல், விபத்து, கடுமையான நோய் என்பதைத்தவிர்த்து இவ்வுறுப்புகள் நேரிடையாக நலிவுறாது. கருவளர்ச்சியுறும் போது முதல் நிலை செல்களில் இருந்து முதலில் தோற்றுவிக்கப்படுவது இதயம், பிறகு மூளை, இவ்விரண்டு உறுப்புகள் செயல்பாட்டில் தான் ஏனைய உறுப்புகளும் இயங்குகின்றன. உலக வியப்புகள் (பிரம்பிப்பு, அதிசயம், ஆச்சரியம்) என்று பட்டியல் இட்டிருப்பவைகளைப் பார்த்து மனிதர்கள் வியப்படைவதைவிட வியப்பானவை உயிரினங்கள் ஒவ்வொன்றின் உடல் அமைப்புகள் மற்றும் அவற்றின் இயக்கம்.

உயிரினங்கள் ஒவ்வொன்றின் தோற்றம்(Shape) மற்றும் அதன் செயல்பாடுகள்(Activities), இயக்கம் மற்றும் அதன் தொடர்சிக்காக இனப்பெருக்கச் சுழற்சி அமைப்புகளில் உள்ள நுண்ணறிவுடன் ஒப்பிடுகையில் கணிணி, செயற்கைக்கோள், செவ்வாய் ஆய்வு வரை நீண்டுவிட்ட நம் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் மிகச் சாதாரணமானவை ஏனெனில் மிகவும் நுட்பமான மனித மூளையே கூட இயற்கையில் அமைந்த ஒன்று அதனை பயன்படுத்துவதைத் தான் மனிதர்களான நாம் செய்துவருகிறோம். அறிவியலாளார் ஐன்ஸ்டீன் கூட முழுமையாக மூளையின் செயல்பாடுகளைப் பயனபடுத்தியவர் அல்ல ஆனால் மூளையின் செயல்பாடுகளை மற்றவர்களைவிட மிகுதியாகப் பயன்படுத்தியவர் என்று (IQ படி) சொல்கிறார்கள்.

இப்படி பெரும் வியப்புக்குள்ளான பெருவெளி(பிரபஞ்சம்), வெளித்திரள்கள் (கேலக்ஸி) சூரியன், கோள்கள், உயிரினம், அவற்றின் இயக்கம் இவற்றை ஏற்படுத்தியது யார் என்ற மனித மனக் கேள்வியின் ஒற்றை விடையாக இறை நம்பிக்கையாளர்களின் ஒரே மற்றும் இறுதிக் கூற்றான 'இறைவனின் படைப்பு' என்று சொல்லப்படுவதும் கூட என்னைப் பொறுத்தளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அதே சமயத்தில் இவை பெருவெடிப்பு மற்று பரிணாம வளர்ச்சியின் கூறுகள் என்பதும் சரியானக் கூற்று என்பதை அறிவியல் இன்னும் எட்டவில்லை, அவை ஒரு கோட்பாடு, அறிவுக்கு மற்றும் சிந்திக்க ஏற்றவை என்ற அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறதே அன்றி முடிவாக பரிணாமம் தான் காரணம் என்பதாக அறிவியல் உலகம் எந்த வரையறையையும் செய்யவில்லையே, அதன் தொடர்பாக பெருவெடிப்பு பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் மட்டுமே இருக்கின்றன.

ஆறுநாளில் உலகம் படைக்கப்பட்டது, இரத்தக்கட்டியில் / களிமண்ணில் இருந்து மனிதனைப் படைத்தோம், பிரம்மா விழித்தான் உலகம் உண்டாகிற்று போன்ற மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கைகள் சூரியன் உலகைச் சுற்றிவந்ததாக நம்பப் பட்டக் காலத்தில் ஏற்கக் கூடிய ஒன்றாக இருந்திருக்கலாம், ஆனால் இன்றைக்கு இவை அந்த காலத்தில் மனித மனம் கண்டுபிடிக்க முடியாதவற்றிற்கான சொல்லப்பட்ட விடை என்பதைவிட அவை என்னாளும் அன்னாளும், அதற்கு முந்தேயும் மனித மனக் கேள்வியாக இருந்திருக்கின்றன என்பதையும் காட்டும் குறிப்புகள் என்பதாகத்தான் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

மதங்கள் என்னதான் இறுதி, உறுதி என்று உயிரினங்களின் தோற்றம் குறித்த அனைத்தையும் 'படைப்பு' , 'இறைச்சித்தம்' என்று முடிவுரை எழுதி இருந்தாலும் அவற்றிற்கான விடைகள் இன்றும் தேடலாகத்தான் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மதமும் அவற்றிற்கான விடையை தங்கள் சிந்தனைகளுக்கு ஏற்ப வரையறை செய்திருப்பதுடன் அவை ஒவ்வொன்றும் மாறுபட்டு இருப்பதால் மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கையில் யாதொரு உண்மையும் இருப்பது போலோ அல்லது பொதுவான ஒன்றாகவோ ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என்றே நினைக்க முடிகிறது.

இயற்கையின் வியப்புகளை, அமைப்புகளை கடவுள் செயலாக நினைத்துப் பார்ப்பதில் இருக்கும் அபத்தம் போல் வேறெதும் அபத்தம் எதுவுமில்லை, ஏனெனில் இந்த அபத்தம் மூளையின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கக் கூடியது அல்லது சிந்தனையைத் தடுப்பது ஆகும், மனித முயற்சியினால் ஆவது எதுவுமில்லை என்று மனிதன் நினைத்திருந்தால் இயற்கையை கட்டுப்படுத்துகிறோமோ அல்லது அதற்கு முயற்சிக்கிறோமா என்பதைவிட விமானப் பயணம் முதல் வின்வெளிப்பயணம் வரை இயற்கை அதன் தன்மையைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட இயற்கையின் மீதானப் பயணம் கூறு இல்லாத ஒன்றாக ஆகி இருக்கும். இது கடவுளால் அமைந்த ஒன்று என்று எந்த ஒரு பொருளையும் உறுதியாகக் காட்டமுடியாத போது ஒட்டுமொத்த பருப்பொருள்களையும் கடவுள் படைப்பாகப் பார்ப்பதில் நினைப்பதும் அபத்தம் தானே. இது கடவுள் செயல் என்று உணர்ச்சி வசப்படுவதாலோ அல்லது அல்ல என்று சொல்வதாலோ இயற்கையும் அதன் தன்மையும் செயல்பாடுகளும் ஒரு நாளும் மாறப் போவதுமில்லை.

வேதப்புத்தகங்களும், குறிபிட்ட சில முதிர்ந்த சாமியார்களும் உலகைப் பற்றிய முழு அறிவு(ஞானம்) அளிப்பதாகக் கூறுவதெல்லாம் எந்த ஒரு காலத்திலும் முழுமையான உண்மையாக இருந்திருந்தால் இன்றும் உலகம், இயற்கைப் பற்றிய அறிவுத் தேடல் என்பற்கான தேவைகளே இல்லாது போய் இருக்கும். எந்த ஒரு கடவுள், மத, அறிவியல் நம்பிக்கைகளும் முழுமையானதொரு பிரஞ்ச இயக்க அறிவைக் கொண்டு கொடுத்துவிடும் என்பது எப்போதும் நடந்ததே இல்லை. இந்த சாமியார், இந்த மதம், இந்த நம்பிக்கை முழுமையான ஒரு அறிவை, ஞானத்தைத் தருகிறது என்று எவரும் நம்பினால் அவை வெறும் நம்பிக்கை மட்டுமே.

இயற்கை என்னும் மாபெரும் பரவெளியையும் அடக்கிய இயக்கத் தொகுப்பு அல்லது பரவெளியுடன் இயங்கும் பேரறிவு அதன் சொந்தக்காரர், உரிமையாளர், படைப்பாளி என்பது போன்ற இறைக்கட்டுமானங்கள் அதன் மீது இல்லாத காலத்திலும் இயற்கை அதன் போக்கிலேயே தொடர்ந்து இயங்கி வந்து கொண்டுதான் இருக்கிறது என்கிற உண்மை வேதப்புத்தகங்கள் எதிலும் எழுதப்படவில்லை.

14 அக்டோபர், 2009

கருத்து, பொருள் வாதங்கள் !

பொதுவாக ஆத்திகம் நாத்திகம் என்கிற சொற்கள் இறை ஏற்பு மறுப்பு எனும் இரு கொள்கைகள் பற்றிய சுறுக்கமான இன்றைய புரிதல்கள்களாக இருக்கின்றன. ஆத்திகம் நாத்திகம் என்பதற்கான இந்து சமய விளக்கம் (மனுதர்ம விளக்கம்) என்பது நான்கு வேதங்களை ஏற்றுக் கொள்கிறவன் ஆத்திகன் அதை மறுப்பவன், தவிர்பவன் நாத்திகன், அதைத்தான் அஸ்தி நஸ்தி என்ற வடசொற்களின் சுருக்கத்தின் விளக்கமாக ஆத்திகம் நாத்திகம் என்று சொல்லாக மாறி இருக்கிறது. பிறமதங்களின் இறை மறுப்புகளும் கூட இப்படிப் பட்ட அவரவர் வேத சார்பில் இறை ஏற்பு மறுப்புகள் குறிக்கப்படுகின்றன, உதாரணத்திற்கு முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள், இஸ்லாமியர்களின் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற கருத்து அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான கருத்து என்பதால் ஒருவர் காஃபிரா மும்மீனா என்பதை அவர் முகமது நபியை (இறுதி) தூதராக ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் ஒருவர் அப்படியாக நினைக்கப்படுகிறார். இதுபோன்றே திரித்துவத்தை ஏற்றுக் கொள்பவர்கல் கிறித்துவர்கள் (இறை நம்பிக்கையாளர்கள்) ஏற்காதவர்கள் இறை மறுப்பாளராகக் கருத்தப்படுகிறார்கள். ஆக இறை ஏற்பு மறுப்பு என்பது இறை பற்றிய ஒன்றல்ல மதச் சார்புள்ள ஒரு கருத்தை ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்தே. இப்படிப் பார்த்தால் எந்த ஒரு நம்பிக்கையாளரும் இறைமறுப்பாளர்களே என்பதை புரிந்து கொள்ளலாம். வேண்டுமானால் மதம் என்பதை பொதுவில் சாடும் பொழுது அவர்களெல்லாம் வேறு வழியில்லாமல் கூடிக் கொண்டு அங்கு 'இறை நம்பிக்கை' பொதுவானது என்றுக் கூறிக் கொண்டு தாம் 'இறை மறுப்பாளர்கள் அல்ல' என்று சொல்ல வருவார்கள்.

இறை நம்பிக்கைக் குறித்தக் கொள்கைகள் அனைத்துமே பொதுவானது தான். படைப்பு, காத்தல், அழித்தல் என்கிற பொது சித்தாந்தம் அனைத்து இறை நம்பிக்கைகளுக்குமே உண்டு. இதன் படி உலகில், பரவெளியில் (பிரபஞ்சம்) இருப்பது அனைத்துமே படைக்கப்பட்டது என்பதே இறை நம்பிக்கையாளர்களின் கொள்கைகள், இதனை அனைத்து வேத புத்தகங்களும் வலியுறுத்துகின்றன. அதாவது என்றோ ஒருநாள் இல்லாத இருந்தவை இறைசித்த்தால் ஏற்பட்டு நம் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிவதாக எண்ணுவது நம்புவதே இறை நம்பிக்கையாகும். மூலப் பொருள் இல்லாது ஒன்றைப் படைக்க முடியாது என்கிற அறிவியல் (பெளதீக) விதிகளுக்கு மாற்றாக இவை என்றோ ஒரு நாள் கடவுள் சித்தத்தால் "தோன்றியவை" அல்லது "படைக்கபட்டவை" என்பதே "கருத்து" முதல்வாதமாகும் (Idealism). இந்த நம்பிக்கைக் கொண்டோர்கள் அனைவருமே கருத்து முதல்வாதிகள் என்பது உலக சிந்தாந்ததங்களில் கொடுக்கப்பட்ட பொதுப் பெயர் ஆகும். கருத்து முதல் வாதப்படி கோழியில் இருந்து முட்டையா முட்டையில் இருந்து கோழியா என்பதற்கான விடை என்றுமே கிடையாது. அதற்கான விடை "கோழிகள்" (சேவல் மற்றும் பெட்டை) இறைவனால் படைக்கப்பட்டது என்பதே ஆகும்.

மூலப் பொருள் இன்றி இன்னொரு பொருள் தோன்றி இருக்க முடியாது என்று சொல்வதே "பொருள் முதல்வாதம்" (materialism)ஆகும். இதிலும் கோழி முதலா ? முட்டை முதலா என்ற கேள்விக்கு தெளிவான எந்த ஒரு விடையும் காண்பது இயலாத ஒன்று என்பதாலேயே பண்டைய கால பொருள் முதல் வாதிகள், கோழியும் முட்டையும் என்றுமே இருப்பதாகும் (Allways Exists) என்பாதாக சொல்லுவார்கள், இவற்றிற்கான தோற்றம் முடிவு என்பது என்றுமே இருந்தது கிடையாது என்பதே அவர்களின் விளக்கமாகும், ஆனால் அதனை அறிவு ரீதியாக ஒப்புக் கொள்ள முடியாத புதிய(நவீன) சிந்தனையாளர்கள் பொருள் முதல்வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக "பரிணாம" கொள்கையைக் கொண்டு வந்தார்கள். டார்வின் பொருள் முதல்வாத நம்பிக்கையாளர். எந்த ஒரு பொருளுக்கும் மூலம் என்பது கிடையாது, ஆனால் மாற்றம் உண்டு என்பதே பரிணாமக் கொள்கையில் அடிப்படையாகும். இதன் படி இன்றைய மனிதன் என்பவன் குரங்கிலிருந்து மாற்றம் பெற்றவனாக கோட்பாடு வகுத்தார்கள் ( இதில் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை கிடையாது).

கருத்து முதல்வாதம் என்பது புதிய சிந்தனைகளை தோற்றுவிப்பதில் எந்த ஒரு முனைப்பையும் காட்டியதே இல்லை, அவை தோற்றுவித்ததெல்லாம் பல்வேறு மதங்களையே. பொருள் முதல்வாதச் சிந்தனையாளர்கள் ஏன் எதற்கு எப்படி என்று அனைத்து இயக்கங்களை ஆய்ந்ததன் விளைவாக அதன் செயல்பாடுகள், அதில் ஒன்றை மாற்றி அமைக்கும் போது அதன் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் செயல் ஆகியவற்றை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டதன் விளைவாகவே அறிவியல், வானவியல், மருத்துவ இயல் கண்டுபிடிப்புகள் அனைத்துமே உருவாகின. கருத்து முதல்வாதிகள் எந்த ஒரு காலத்திலும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் போது அதனை கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

அறிவியலும் அறிவியல் கொள்கைகளும் பின்பற்றப்பட்டதும் அதனை கருத்து முதல்வாதிகளான மதவாதிகள் அது ஏற்கனவே மதநூல்களில் மறைமுக மாகச் சொல்லப்பட்டு ஒன்று தான் புதிதல்ல என்றும் சொல்லுவார்கள். உலகெங்கிலும் கருத்து முதல்வாதமே வலுப்பெற்றிருந்தால், வலியுறுத்தப்பட்டால் கண்டுபிடிப்புகள் என்று எதுவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போய் இருக்கும், ஏனெனில் ஆண்டவன் படைப்பில் அனைத்தும் சரியானதாகவும், தேவையான அளவிற்கு இருப்பதாகவே எல்லாகாலத்திலும் கருத்து முதல்வாதிகள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

பொருள்முதல்வாதம் மேலோங்கும் பொழுது அதனை உள்வாங்கிக் கொள்ளும் உத்தியாக கருத்து முதல்வாதிகள் அதனை வளைத்துவிடுவதுண்டு. பொருள் முதல்வாதியான புத்தர் துன்பங்களுக்குக் காரணம் பேராசை என்றார். இறைவன் இருக்கிறானா இல்லையா என்கிற ஆராய்சிகளை விட்டுவிட்டு தன்னிலையை உணர்ந்து மரணத்திற்கு முன் மனிதனின் வெவ்வேறு நிலையான மூப்பு, பினி யாவும் உண்மை, உலகமும் வாழ்க்கையும் நிலையல்ல என்று சொன்ன போது சடங்குகளில் மூழ்கிக் கொண்டிருந்தவர்கள் ஓரளவுக்கு விழிப்பு அடைந்தனர். பின்னர் பொருள் முதல்வாதம் ஆதிசங்கராரால் உள்வாங்கப்பட்டு வாழ்வே மாயம், உலகம் நிலையற்றது, அனைத்தும் எங்கும் நிறைந்திருந்திருப்பது பிரம்மம் என கடவுள் கொள்கைபோன்று கருத்து முதல்வாதமாக மாற்றியமைக்கப்பட்டது, அதன் பின்னர் வந்த புத்த பிக்குகள் புத்தரை புனிதராக்கி கடவுளாக்கி பொருள் முதல்வாதக் கொள்கைகளை கருத்து முதல்வாதாமாக மாற்றிக் கொண்ட மகாயானக் கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டு உருவ வழிபாடுகள், புறச்சடங்குகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

பொருள் சார்ந்த தேவைகளும், அறிவியல் ரீதியான வளர்ச்சிகளும் சமூகத்திற்கு தேவை எனும் போது பொருள் முதல்வாதம் வளர்ச்சி பெரும், கம்யூனிச, கடவுள் மறுப்பு சித்தாந்தங்கள் முதல்வாதத்தை ஒட்டி ஏற்பட்டவை. பொருள்வாதம் மேலோங்கி வளர்ந்த பிறகு கருத்து முதல்வாதம் விழித்துக் கொண்டு அவற்றை உள்வாங்கி வளரும். இன்றைய தேதிகளில் மக்களிடையே இருப்பது கருத்து முதல்வாதமா ? பொருள் முதல்வாதமா ? என்று பார்த்தால் பிழைப்பு வாதம் (வாழ்க்கை) என்பதை வழியுறுத்தல் இரண்டிலுமே இருக்கிறது. ஆனால் பிழைப்புவாதம் பொருள் முதல்வாதத்தின் ஒரு நோக்கமே. இன்றைக்கு கருத்து முதல்வாதங்கள் என எஞ்சியிருப்பது மதவாதமே. மதவாதங்களின் கொள்கைகள் பிழைப்பு வாதம் தான். கருத்துவாதம் முழுக்க முழுக்க பலமிழந்து அறிவியல் துணை தேடும் முயற்சியில் வளர்ச்சி இன்றிப் போய் இருக்கிறது. கருத்து முதல்வாதமான ஆன்மா, தேடல், இறைவன், படைப்பு சொர்க்கம் இதனை முன்னிறுத்தும் வருங்கால புதிய கருத்துவாதம் ஏற்படுவதும் வளர்ச்சி பெறுவதும் நடைபெறுவதும் கடினம். உலக அளவில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய ஏதும் நிகழ்ச்சி / அழிவு ஏதும் நடந்தால் கருத்து முதல்வாதம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.

தொடர்புடைய இணைப்புகள் :
Idealism
Materialism
கடவுளைத் தேடி...
காரணத்தை அகற்றாமல் காரியத்தை அகற்ற முடியாது
Can Consciousness be Created in Software? - Martine Rothblatt

7 அக்டோபர், 2009

பட்டையும் நாமமும் இன்றைய கணிணி அறிவியலும் !

Symbols எனப்படும் குறியீடுகள் மொழிகளைக் கடந்த முதன்மை அடையாளங்கள், அதை உலகப் பொது மொழி என்றும் சொல்லலாம். பருப்பொருள்கள் (Matererial) அனைத்தும் குறியீடுகள், அவற்றின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி அடையாளப்படுத்த அவற்றிற்கு பெயர் வைத்து வழங்குகிறோம். பெயர் என்று சொல்லும் போது அவை மொழி அடையாளங்களைக் கொள்கின்றன. பெயரை நீக்கிவிட்டுப் பார்த்தால் பொருள்களில் எஞ்சி இருப்பது அதன் தன்மைகள் மட்டும் தான். தகவல் பரிமாற்றத்திற்காக பெயர்சொல்கள் பயன்படுகின்றன என்பதைத் தவிர்த்து ஒரு பொருளில் பெயர் அதன் தன்மையில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.

குறியீடுகள் பண்டைய காலம் முதலே பயன்பாட்டில் இருக்கிறது, அவற்றை நாம் இன்றைக்கு கணனியில் பயன்படுத்திவருகிறோம், புதிய குறியீடுகளை அமைத்துக் கொள்கிறோம், எந்த ஒரு மொழிக்கும் புதுச் சொற்கள் ஏற்படுகிறதோ இல்லையோ அன்றாடம் எதோ ஒரு குறியீடுகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். மொழிகளில் எழுத்துக்கள் ஒலியின் குறியீடுகள் தான்.

கல்வி அறிவு இல்லாதோர் அன்றைய காலத்தில் கணக்குகளை கோடுகளால் எழுதிக் கொள்வர், அவர்களுக்கு தெரிந்தது நேராக ஒரு கோடு, பத்துவரை எண்ணுவதற்கு ஒன்பது கோடுகளைப் போட்டு 10 ஆவது எண்ணிக்கையை குறுக்குக் கோடாகப் போட்டு 10 வரை எண்ணிக்கையை அமைத்துக் கொண்டு கணக்குகளில் பயன்படுத்திக் கொள்வர். அவை ஒருபரிமாணக எண் குறியீடுகள், கோடுகளின் நீள அகலத்தில் வேறுபாடுகள் இருக்காது. கணனியைப் பொருத்த மட்டிலும் அது 1, 0 தான் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பது அனைவருக்குமே தெரிந்தது. கணிணியும் கல்வி அறிவு அற்றது தானே.

இன்றைக்கு பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் பொருள்களின் விலை ஒட்டியில் (Price Sticker) இருக்கும் பட்டைக் கோடுகள் (BAR Code) பற்றி ஓரளவுக்கு அனைவருக்குமே தெரியும். கணிணி வழியாக, கருவிகள் வழியாக விரைவாக படிக்கக் கூடியதாக பட்டைக் கோடுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவை இருபரிமாண (2D) கோடுகளாக இருக்கும், ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஏற்றார் போல் அதன் அகலத்திலும், அடுத்த எழுத்தின் இடைவெளி ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கும்.

1952 அக்டோபர் 7 ஆம் (அன்றைய, இன்றைய ) தேதி முதன் முதலாக பட்டைக் கோடுகள் பொதுப்பயன்பாட்டிற்கு வந்ததாக சொல்கிறார்கள். இன்றைக்கு சிங்கப்பூர் கூகுளைத் திறந்ததும் கூகுள் முதல் பக்கத்தில் பட்டைக் கோடுகளால் கூகுள் என்று எழுதி இருப்பதைப் பார்த்தேன், பட்டைக் கோடுகள் படிப்பான் (Scanner) இருந்தால் அதனை படிக்கலாம். (கூகுள் எனக்கு பிடிச்சிருக்கு)



இன்றைக்கு பட்டைக் கோடுகளின் பயன்பாடுகள் மிகப் பெரியது, தானியங்கி இயங்கு தளங்கள் (Automatic System) அனைத்திலும் இந்தப் பட்டைக் கோடுகளே பயன்படுகின்றன. முழுவதும் கணிணி மயமாக்கப்பட்ட விமான நிலையங்களில் செல்லும் பயணிகளின் உடைமைகளை (Baggage) அந்தந்த விமானங்களுக்கும் ஏற்ற பிரித்து அனுப்பவும், இறங்கிய பயணிகளின் உடைமைகளை அந்தந்த இழுவை (Belt) பகுதிக்கு பிரித்து அனுப்பவும் வகையில் படிக்கக் கூடிய ஒட்டியாக பயன்படுகிறது. பேரங்காடிகளில் பொருளுக்குரிய விலையைக் கொடுக்காமல் மறந்து அல்லது கவர்ந்து வந்தாலோ, சரியாக பிடித்துவிடுவார்கள். மொத்தப் பொருள்களையும் முப்பரிமாண முறையில் அந்தப் பகுதியை கடக்கும் போது அங்கு இருபுறமும் பொருத்தி இருக்கும் கருவி படித்து பட்டியல் இட்டுக் கொண்டு, பிறகு அவை பணம் செலுத்திய விலைப் பட்டியல் கணிணியில் இருப்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியாகப் பொருந்தவில்லை என்றால் மின் ஓசை எழுப்பி காட்டிக் கொடுத்துவிடும். ஒரே ஒரு பொருளை தெரியாமல் மறைத்து எடுத்துச் செல்பவர்கள் கூட சிக்குவது இப்படித்தான். அந்த நாள் இதே பொருளை ஒற்றையாக யாராவது வாங்கி இருக்கிறார்களா என்று ஒப்பிட்டுப் பார்த்து இல்லை என்றால் மின் ஓசை எழுப்பிவிடும். (ஒட்டியை பிய்த்து எரிந்துவிட்டு எடுத்துவரலாம், ஆனால் அப்படி பிய்த்து எரியும் போது அவை கண்காணிப்பு அசைபடக் கருவியில் பிடிக்கப்படாமல் இருக்கவேண்டும்... எப்படிப் பார்த்தாலும் பணம் கொடுக்காமல் எடுத்துவரும் பொருள்கள் காட்டிக் கொடுத்துவிடும்)

பட்டைக் கோடுகளை மிகச் சாதரணமாக அதற்குரிய படிப்பான்கள் மூலம் படிக்கப்படும், பொதுவாக பட்டைக் கோடுகளில் பொருள் குறியீட்டு எண்கள் மட்டுமே அச்சிடப் பட்டு இருக்கும், அவை படிக்கப்படும் போது அதற்கான முழுப் பெயர் மட்டும் விவரங்கள் கணிணி பட்டியலில் இருந்து எடுத்துவந்து சேர்க்கப்பட்டு கணிணி திரையில் காட்டும் படி மென்பொருள் அமைத்திருப்பார்கள், இப்படி செய்யும் போது ஒரு பொருளின் விலையைக் கூட்டவோ குறைக்கவோ விற்பனையாளருக்கு வாய்ப்புகள் இருக்கும்.



பட்டைக் கோடுகளில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பட்டைக் கோடுகளும் உண்டு (Encoded Barcode) அவற்றை அதற்குரிய படிப்பான் மூலம் படித்தாலும் பாதுக்காப்பை நீக்கக் கூடிய (Decoding) மென் பொருள் மூலம் தான் அதனை முழுதாகப் படிக்க முடியும், இந்த வகை பட்டைக் கோடுகளை தகவல் பாதுகாப்பு காக்கவேண்டிய தேவை உடைய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.



பட்டைக் கோடுகளைப் பற்றி விக்கி இணைய தளம் ஆங்கிலத்தில் மிகுதியான தகவல்களைத் தருகிறது.


தலைப்பைப் பற்றிச் சொல்லவில்லையே ? ஒருவர் சைவரா ? வைணவரா ? (யானையும் விட்டு வைக்காத) அதில் வடகலையா ? தெர்ன்கலையா ? இந்த பட்டைக் கோடுகள் எப்படியெல்லாம் அந்த காலத்திலேயே பயன்பட்டு இருக்கிறது, நாம தான் உலக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடி :)



(இது நாகூர் யானை)

24 ஜூலை, 2009

மின்னணு வாக்கு இயந்திரங்களை முற்றிலும் அழிக்கலாம் !

மின்னணு வாக்குப் பதிவு வரவேற்க்கக் கூடிய ஒன்று தான். இதன் மூலம் கள்ள வாக்குப் பதிவை தவிர்க்க முடியாதெனினும் விரைவாக வாக்கு எண்ணிக்கைக்கு வழி வகை செய்கிறது. ஆனால் இவற்றிற்கும் ஆன செலவுகளுக்கான பலனை இவைத் தரவில்லை என்பதே உண்மை, வாக்குப் பதிவின் போது இயந்திரங்கள் பழுதானதும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தங்கள் அடுப்பொடிகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்களை கைப்பெற்றிக் கொண்டு தங்களுக்கே வாக்களித்துக் கொண்டு வாக்களர்களைத் துறத்தினார்கள் என்றும் செய்திகள் வந்தன. வாக்குப் பதிவை வீடியோ எடுப்பது போன்ற நடவெடிக்கைகள் வெறும் வாக்களர் கண் துடைப்பாகத்தான் நடைபெறுகின்றன. வாக்காளர்களின் சான்றாவணங்களில் எதோ ஒன்று இருந்தால் போதும் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டி வாக்களிக்க முடியும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தாலும் மின்னனு வாக்குப் பதிவு முழு வெற்றிப் பெறவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளை மறுப்பதற்கும் திணறுகிறது. முறைகேடு நடைபெறுவதில்லை என்கிற தேர்தல் ஆணையத்தின் வெறும் நம்பிக்கை வழியுறுத்தல் மட்டுமே என்பதாகவே எதிர்கட்சிகள் கருதுகின்றனர்.

உலகில் முதன் முறையாக, உலகில் மாபெரும் மின்னணுவாக்குப் பதிவு என்பதெல்லாம் வெறும் சாதனை வாக்கியங்கள் தானா ? மின்னணு வாக்குப் பதிவை முறை படுத்த முடியாதா ? கண்டிப்பாக முறைப் படுத்த முடியும். அதற்கு முதலில் வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்களை எல்லாம் ஒரு பெரிய திடலில் குவித்து வைத்து புல்டவுசரை விட்டு ஏற்றி அழித்துவிட்டு மக்கும் குப்பையாக மாற்றி ஆழக் குழியில் புதைக்க வேண்டும். தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது, இன்றும் இந்த பழைய முறை வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்துக் கொண்டிருந்தால் தேர்தல் தோறும் குழப்பமே வரும். மின்னணு வாக்குப் பதிவை தற்போது இருக்கும் தொழில் நுட்ப முறையில் இன்னும் சிறப்பானதாக 100 விழுக்காடு நம்பகத் தன்மையுடன் நடத்த முடியும்.

எப்படி ?

இன்று உள்ள சிறப்பான மின்னணு தொழில் நுட்பங்கள் இதற்கு உதவி செய்யும்
1. கிளைன்ட் சர்வர் எனப்படும் பொதுவான டேட்டாபேஸ் சர்வர் மற்றும் அதனை தொடர்பு கொள்ளும் கணிணிகள்
2. தொடுதிரைகள்
3. கம்பியில்லா (வயர்லெஸ்) இணைப்பு
4. வாக்களர்களின் ஆள்காட்டி விரல் ரேகை பதிவு (நன்றி பதிவர் அறிவிலி - இராஜேஷ் குமார்)

வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரியுடன், புகைப்படம் மற்றும் அவர்களின் விரல் ரேகைகளை தொகுதிக்கு ஒன்றாக சர்வர் கணிணியில் பதிந்துவிட்டு, அந்த சர்வர் கணிணியை பல்வேறு வாக்குச் சாவடியில் வைக்கப்படும் க்ளைண்ட் கணிணியுடன் இணைத்து, கைரேகை படிக்கும் கருவியுடன் இணைத்துவிட்டால் போதும்.
ஒவ்வொரு வாக்களர் வாக்களிக்கும் போதும் கைரேகையை ஒப்பிட்டு வாக்களிக்க அனுமதிக்கும் படி மென்பொருள் அமைத்துவிட்டால் போதும். வாக்களர்கள் கைரேகையை சரிபார்த்தவுடன் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தை தொடுதிரையில் தொடுவதன் மூலம் வாக்குப் பதிவை செய்யலாம். ஒரு 17" தொடுதிரைக்கு 20 வேட்பாளர் வரை விரல் தொடுவதற்கு ஏற்ற அகலங்களுடன் வடிவமைத்து வைக்க முடியும். 40 வேட்பாளர் இருந்தால் அருகருகே இரண்டு தொடுதிரை வைத்துவிட்டால் போதும், கணிணிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடுதிரை இணைக்க கிராபிக்ஸ் வன்பொருளை (Video Graphic Cards) அதே எண்ணிக்கையில் சேர்த்தாலே போதும். கணிணிகளில் இந்த வசதியை சேர்ப்பதும் எளிதுதான். மிகுந்த அளவாக 100 வேட்பாளர்கள் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு கணிணியும் 5 தொடுதிரைகளும் போதுமானது. இன்றைய தேதிகளில் இதற்கு ஆகும் செலவு ஒரு தொகுதிக்கு ரூ 50,000 மட்டுமே, இந்த கணிணிகளை தகுந்த மின் கலன் Backup உடன் வைத்துவிட்டால் திடீர் மின்சாரம் தடைபெற்றாலும் தொடர்ந்து இயங்கும். 32" தொடுதிரைகளைப் பயன்படுத்தினால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடுதிரைகள் தேவை இருக்காது.

வாக்குப்பதிவு க்ளைண்ட் கணிணிகள் அணைத்தும் சர்வர் கணிணியுடன் வயர்லஸ் இணைப்புடன் இருப்பதால் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை.
வாக்களித்தவர் மீண்டும் வாக்களிக்காத வண்ணம் விரல் ரேகை பதிவை ஒப்பிட்டு கணிணி மென் பொருள் தடுக்கும் வண்ணம் அமைத்துவிட்டால் போதும். வாக்குப் பதிவை ஆளில்லா பணமெடுக்கும்
இயந்திரம் அமைப்பது போல் அமைத்துவிட்டு ஒரு ஏகே 47 னுடன் ஒன்று/இரண்டு காவல் அலுவலரைப் போட்டாலே போதும், வேண்டுமென்றால் பாதுகாப்பு கேமரா ஒன்றே ஒன்று பொருத்தலாம். வாக்குப் பதிவுக்கு இவ்வளவு அலுவலர்களும் அவர்களின் பந்தாக்களும் வெகுவாக குறைக்க முடியும்.

அனைத்து சர்வர் கணிணிகளையும் (ஏற்கனவே) தலைமை சர்வர் கணிணியுடன் இணைத்துவிட்டால் போதும், வாக்குப் பதிவு முடிந்ததும் சில நொடிகளில் வெற்றியாளர்களையும், அணைத்து வாக்குப் பதிவு விவரங்களையும் அறிவித்துவிட முடியும். இன்று வளர்ந்துள்ள தொழில் நுட்பத்தில் இதைச் செயல்படுத்துவது மிகவும் எளிது, பழைய வாக்குப் பதிவு இயந்திரங்களைவிட வாக்களிக்கும் முறையும் எளிது, மிகவும் பாதுகாப்பானது. வாக்குப் பதிவு க்ளைண்ட் கணினியைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும், தண்ணீரையே அதில் கொட்டினாலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாக்குகளை ஆளுமை அதிகாரவர்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த முறை மின்னணு வாக்குப் பதிவின் தேர்தல்கள் பூசல், புகார்கள் குறைந்து அமைதியாகவும் நம்பகத் தன்மையுடனும் நடக்கும்.

14 ஜூலை, 2009

மதம் மற்றும் அறிவியல் !

அறிவியல் ஆன்மீகம் என்று தலைப்பிட நினைத்தேன். இன்றைய ஆன்மிகம் என்பது மதவாதிகளின் பிடியில் திணறிக் கொண்டு இருப்பதால் ஆன்மிகம் என்று சொல்லப்படுபதில் மேலோங்கி இருப்பது மதவாதமே, மதப் பற்றுக்கும், மதவெறிக்கும் நூல் இழைவேறுபாடுதான், கையில் தீவட்டி வைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுவது மதப் பற்று, அதே தீவட்டி மூலம் மாற்று மதத்தினரின் வீட்டைக் கொளுத்துவது மதவெறி, கொளுத்துவதற்கும், கையில் வைத்திருப்பதற்கும் அசம்பாவிதம் என்ற ஒரு நிகழ்வு இடையில் இல்லாதது மட்டும் தான் வேறுபாடு. அசம்பாவிதம் நடந்தால் கையில் இருப்பது எதிரியின் மீது வீசப்பட்டுவிடும். 'எனக்கு மதப்பற்று இருக்கிறது மதவெறி இல்லை' என்போர்கள் அசம்பாவித சூழலில் இல்லாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.

***

மனித வாழ்க்கை, மரணம், இயற்கை இது பற்றிய கேள்வியில் மனித உள்ளங்களின் இருவகை சிந்தனைகளின் செயலாக்கம் தான் மதம் மற்றும் அறிவியல். இயற்கை மீது இருந்த வியப்புக்கும், பயத்துக்கும் காரணமாக 'இறைவனை' முன்னிறுத்தி தீர்வு சொல்வதாக எழுதப்பட்டதே மதநூல்கள், இயற்கையின் செயல்பாடுகளை ஆய்ந்து பார்முலாக்களில் அடக்கி, தனது புலனில் நீட்சி செய்து கொண்டவை அறிவியல். புலன் நீட்சி என்றால் நம்மால் பறக்க முடியாது, விமானங்கள் மூலம் அதைச் செய்கிறோம், தொலைவில் உள்ள காட்சிகளை காண்கிறோம், தொலைவில் உள்ளோரிடம் பேசுகிறோம், (தொலைவின் வாசனையை நுகரவும், தொட்டு உணரவும் தான் இன்னும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை, அது சாத்தியப் படவும் படாதது, ஏனெனில் கண் பார்ப்பதற்கும், காது கேட்பதற்கும் காட்சிக்கு மிக அருகில் இருக்க வேண்டிய இயற்பியல் நிலை தேவை இல்லை என்பதால் தொலைவில் இருப்பதைப் பார்பதும் கேட்பது அறிவியலால் சாத்தியம் ஆகிற்று). இயற்கையை ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அதன் தன்மையைப் புரிந்து கொண்டால் அது அனுமதிக்கும் வழியில் செயல்பட்டு தனக்கு தேவையானவற்றை செய்து கொள்ள முடியும் என்கிற சிந்தனைகளின் தொகுப்பு தான் இன்றைய அறிவியல். மதங்கள் மனித சிந்தனைகளை, கேள்வி கேட்பதை விரும்புவதில்லை, அப்படியே செய்தாலும் அதற்குள் தான் சிந்திக்கவேண்டும், சொல்லப்படும் பதிலைத் தான் ஏற்கமுடியும் என்பதாகவே மதவாதிகள் சிந்தனைத் தடைகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இறைவனே எல்லாமாக செயல்படுவதும், எல்லாவற்றையும் செய்வதாக மத நம்பிக்கை. இதை இப்படியே நம்பி இருந்தால் இன்றைக்கு மனித அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கவே முடியாது, அறிவியல் கூறுகளை மதங்கள் வரலாறு தொட்டே எதிர்த்து வந்திருக்கின்றனர். உலகம் உருண்டை என்றோரை கல்லால் அடித்து துறத்தியும், அறிவியல் கோட்பாடுகள், சிந்தனைகள் இறை நம்பிக்கைக்கு எதிரானவை என்றே தத்துவமேதைகள் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு மதங்கள் சொல்லும் கதைகளை யாரும் நம்புவதில்லை என்கிற காரணத்தினால் மதக் கொள்கைகள் அறிவியல் சட்டை அணிந்து வந்து பல் இளிக்கின்றன. எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும். அது உண்மையெனில் ஒவ்வொரு அறிவியல் அறிஞனும் நாள் கணக்கில் ஆராய்ச்சிக் கூடத்தில் செலவிட்டு ஒவ்வொன்றையும் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டிய நிலை இருக்காது. இன்னும் சிலர் மதக் கருத்துக்களை ஆழமாக நம்பிக்கொண்டு, 'இறைவன் அனைத்தையும் மறைத்து வைத்திருப்பது நம் அறிவு திறனைத் தூண்டி நாமாக கண்டிபிடிக்கத்தான்' என்றும் சொல்கிறார்கள், இதுவும் வெறும் ஊகம் மற்றும் தன் நம்பிக்கை மீது வீசப்படும் கேள்விக்கு எதிராக தனக்குத் தானே ஏற்படும் தன்னாறுதல் மட்டுமே. மனிதன் சிந்திக்காது மதவாதிகளின் சொல்படி கேட்டு இருந்தால் இந்த உலகம் இன்னும் பழமையான உலகமாகத்தான் இருந்திருக்கும்.

இயற்கையையை யார் யாரோ செயல்படுத்துவதாகவும், அதில் நல்லது நடந்தால் இறைச் செயலாகவும், கெட்டது நடந்தால் சாத்தானின் வேலையாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இறைவன் மிகவும் நல்லவர், இயற்கையை அவரே செயல்படுத்துகிறார் என்ற இறை நம்பிக்கை / மத நம்பிக்கைகளை தகர்க்கும் வண்னம் இயற்கைப் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் அந்த நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காக 'சாத்தான்' என்கிற ஒன்றை புகுத்தி வைத்திருக்கிறார்கள். மனிதன் மனச் செயல்பாடுகளில் செயல்படுகிறான். இயற்கை ? அது முழுவதும் சூழலால் பின்னப்பட்டது. சுற்றுச் சூழலால் என்றோ ஒரு நாள் அழிந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளரும், மறுமைக்கு முன்பு அழிந்துவிடும் என மதக் கொள்கையாளர்களும் அறிவுறுத்துகிறார்கள். பூமியும் உயிரனத் தோற்றதிற்கும் இவர்களது பங்கு எதுவுமே இருந்ததில்லை என்று பார்க்கையில் உலகம் அழிந்தால் முன்பு போல் ஏற்படாமல் இருக்க ஏதாவது வெளிப்படையான தடைகள் அல்லது மீண்டும் உலகம் உருவாகவே ஆகாது என்று சொல்லவும் முடியுமா ? இயற்கையின் மாறுதல்கள் அதாவது கால சுழற்சியில், இயற்கையின் சூழலில் எதுவுமே நடக்கும், மாறும். இயற்கையின் செயல்பாடுகளின் வியப்புகளைப் பற்றிய சிந்தனைகளின் இரு கூறுகளே மதம் மற்றும் அறிவியல்.

இயற்கை / இயக்கம் என்பவை காலத்தில் (Domain of Time) நிலைத் தன்மை, நிலையாத் தன்மை என இருவகைத் தன்மையில் செயல்படுகிறது. இதில் நிலைத்த தன்மை பற்றி பேசுவது மதம், நிலையாத் தன்மையை ஆய்ந்து எழுந்தது அறிவியல்.

எந்த விதியும் காலத்தில் அடக்கம் (எல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டது என்பதாக) - Static Nature of 'Nature' - மதம் !

விதிகள் காலத்தால் மாறும் (எல்லாம் இயற்கை மாற்றத்துக்கு உட்பட்டது, நாம் அதன் மீது அமர்ந்து செல்ல முடியும்) - Dynamic Nature of 'Nature' - அறிவியல் !


(படத்தை பெரிதாகப் பார்க்க மேலே அமுக்கவும்)

20 ஜூன், 2009

முடிவற்ற தேடல் !

'தேடல்' ஆன்மிகவாதிகளுக்கு நெருக்கமானச் சொல். தேடலில் தொடங்கி அதிலேயே முடிவதைத் தவிர்த்து யாரும் தேடியதைக் கண்டு கொண்டார்களா ? அவர்களுக்கே வெளிச்சம். உலகத்தில் இரண்டு வகை கூட்டங்கள் உண்டு. ஒன்று அனைத்தையும் ஆன்மிகம் தந்துவிடுகிறது அல்லது தந்துவிட்டது என்று திடமாக நம்புவது. அடுத்தக் கூட்டம் அறிவியல் எல்லாவற்றையும் தந்து கொண்டு இருக்கிறது தந்துவிடும் என்கிற திடமான நம்பிக்கை.

இவர்கள் இருவருமே கூட்டுக் களவானியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பார்கள் அதில் சிலர் மட்டும் தனித்து ஆன்மீகம், நாத்திகம் என்பர். முழுப் பெருவெளியிலும் பூவியுலும் கூட அவிழ்க்க முடியாத புதிர்கள் எப்போதுமே உண்டு. அதனால் தான் மனிதனின் தேடல் அது ஆன்மிகமாக இருந்தாலும் சரி அறிவியலாக இருந்தாலும் முற்று பெருவதே இல்லை. ஆன்மீகம் சித்தாந்தங்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் கொள்கைகளை வளர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றன. வானத்தில் சாமிகள் இருப்பதாகக் காலம் காலமாக சொல்லப்பட்டுவருவது விண்கலக் காலங்கள்(Satelite) தொடங்கிய காலத்தில் கொஞ்சம், கொஞ்சம் மாக மறைந்து வருகிறது. புராணங்களை நம்பிக் கொண்டு இருந்த ஆன்மிகவாதிகள் அவைகள் புனைவுகளாக இருக்கலாம் என்று நம்பத் தொடங்கி இறைவன் ஒற்றைத் தன்மை உடையவன் அறிவியலுக்கும், புலனுக்கும் அப்பாற்பட்டவன் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள், ஏனெனில் இறைவன் காட்சிக் கொடுத்தாகவும் பார்வதி பால் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஞானசம்பந்தன் காலத்து கதைகளெல்லாம் அண்மைய நூற்றாண்டுகளில் எதுவும் நடக்கவே இல்லை. இந்தியா சொர்க பூமி, இறைவனின் பிறப்பிடம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், முகலாய பேரசிடமும், வெள்ளைக்காரர்களிடமும் அடிமையான பிறகு இந்தியாவில் கடவுள் இருந்திருந்தால், அல்லது கடவுள் பார்வை பட்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா ? என்றெல்லாம் நினைத்து உருவ வழிபாட்டுக் கடவுள்களையும் சின்னங்களையும் கோவில்கள் மற்றும் பூசை அறையுடன் நிறுத்திவிட்டு தத்துவங்களை முன்னிறுத்தி பேசத் தொடங்கினார்கள்.

அறிவியல் பக்கம் உள்ளவர்களில் பலர் அனைத்தும் அறிவியல் பொருள்கள் அனைத்தும் மூலக் கூறுகளால் ஆனவை என்றும் எல்லாவித இயக்கங்களையும் பார்முலாக்களில் அடக்கிவிடமுடியும், கணக்கிட முடியும் என்று நம்புகிறார்கள். பெருவெடிப்பு என்னும் கொள்ளையை உருவாக்கி, உலகமும் பிரபஞ்சத் தோற்றமும் இப்படித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவதுடன் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக பால்வெளித்திரல்கள் விரிவடைவதை காட்டுகிறார்கள். மனிதன் அறிந்துள்ள வரலாறுகள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குக் குறைவே, கடந்த 200 ஆண்டுகளில் பிரபஞ்ச மறைப்புகள் (ரகசியம்) அனைத்தையும் கிட்டதட்ட அறிந்துவிட்டதாகவும், முழுவதும் அறிந்துவிட முடியும் என்று அறிவியலார் நம்புகிறார்கள். சுமேரியர்களுக்கு முன்பு நாகரீக வளர்ச்சி பெற்ற மனிதர்களே இருந்திருக்க முடியாது என்று நம்புகிறார்கள். இவையெல்லாம் ஆன்மிகம் போன்ற வெறும் நம்பிக்கைதானே. பூமியில் உயிரனம் எத்தனையோ முறை அழிந்திருக்கலாம், ஆனால் ஆதாரம் எதுவும் கிட்டவில்லை என்பதால் நமக்கு தெரிந்த நாகரீகம் பெற்ற பழங்காலத்து மனிதர்கள் என்றால் அது சுமேரியர்கள், பிறகு ஆப்ரிக்கர்கள், அதன் பிறகு சிந்துசமவெளி நாகரீகம். இன்னும் சில நூற்றாண்டுகளில் அல்லது அடுத்த 10 ஆண்டுகளில் பழமையான நாகரீகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இன்று இருப்பதைவிட மிகவும் நாகரீகம் அடைந்தவர்களாக இருப்பது தெரிந்தால் இன்றைய மனிதர்களான நாம் மிகவும் அதிர்ச்சி அடைவோம், ஆனால் அப்படிப் பட்டவர்கள் பூமியில் இருக்க வாய்ப்பில்லை, அதனால் ஒருவேளை வேற்றுக் கிரகத்தில் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூட நம்புகிறார்கள். ஏன் அப்படி ? பூமியில் கூட இருந்திருக்கலாம், நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்கிற காரணத்திற்காக அவற்றை மறுக்கவோ, அதைப் பற்றி ஆய்வு செய்யவோ நினைப்பது இல்லை. ஏனெனில் மின்சாரமும், பெட்ரோலும் முன்பு எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பதைத் தாண்டி மனித மனம் சிந்திக்காது எனவே மனித இறுதிகட்ட நாகரீக வளர்ச்சியில், அறிவியலில் தற்போது இருப்பதாக நாம் கருதுகிறோம்.

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, அறிவியல் சார்ப்புள்ளவர்களுக்கு எந்த ஒரு பொருளுக்கும் அழிவு உண்மை என்பது தெரிந்தும் பழங்காலத்தில் வாழ்ந்தவர்களின் ஆதாரம் தேடி, கிடைத்த வரையில் இருக்கும் ஆதாரத்தை வைத்து நாமே நாகரீக உச்சம் பெற்றவர் என்று நினைக்கிறோம்.

ஆன்மிகத்திலும் அப்படியே எத்தனையோ பேர் முயன்றும், இது இப்படித்தான் என்று என்று பலவகையான அவரவர் வரையறை செய்து, புதியவர்களின் தேடல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தான் நம்புவது வரை தான் இறை அதற்குமேல் இருக்க வாய்ப்பில்லை என்பதாகவே நினைக்கிறார்கள். ஆன்மிகத் தேடல் (ஒவ்வொ)ஒருபிறவியின் தனிப்பட்ட இறை குறிந்த கேள்வி என்றால் அறிவியல் ஒட்டுமொத்த மனிதர்களின் வரலாறு அறிந்த காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கேள்வி. ஆன்மிகவாதிகளின் கேள்வி அந்த பிறவியோடும், அறிவியலாளார்களின் கேள்வி வரலாற்றுடன் (உலகத்தின் ஒவ்வொரு அழிவுடன்) முடிந்துவிடுகிறது. விடைகள் எப்போதும் கிடைக்காது என்பதால் தான், ஆன்மிகமானாலும் அறிவியல் ஆனாலும் அதில் மனிதர்கள் நாட்டம் கொண்டு தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தேடுங்கள் கிடைக்கப்படும் வெறும் நம்பிக்கை சொற்றொடர் !

(என்ன சொல்லவருகிறேன் ? நமக்கு முன்பு கூட பூமியில் தற்காலத்தைவிட மாறுபட்ட அறிவியல் / ஆன்மீக வாழ்க்கை இருந்திருக்கலாம்)


மிர்தாதின் புத்தகம் இதை ஒட்டிய கருத்தை முன்வைக்கிறது, அதில் அறிவியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

20 ஏப்ரல், 2009

படைப்புக் கொள்கை ...2

முந்தைய பகுதியை இங்கே வாசிக்கவும். விலங்குகளுக்கும் நமக்கும் உள்ள அறிவின் வேறுபாடு ஒப்பிட்டு நமக்கு தேவையானவற்றை, விருப்பத்திற்கு ஏற்ப நம் செயல்களை அமைத்துக் கொள்ளும் திறன். விலங்குகளுக்கும் ஒப்பீட்டு அறிவு உண்டு, நண்பர் வீட்டுக்கு முதல் நாள் சென்றால் நம்மைப் பார்த்து குறைக்கும் நாய், இரண்டொரு நாளில் நம்மிடம் வால் ஆட்டுவதும் கூட ஒப்பீட்டு அறிவின் வழியாகத்தான். நாயைப் பொறுத்த அளவில் ஒப்பீட்டு அறிவு என்பது தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் என்ற அறிதலை ஒப்பீடு செய்வதுடன் முடிகிறது. விலங்கு காட்சி சாலைகளில் விலங்குகள் செய்யும் திறன்மிக்க செயல்கள், அவற்றை அவ்வாறு பழக்குவதுன் மூலம் அவற்றை ஒரு செயலாக கற்றுக் கொண்டு செய்கிறது.

கிளிகள் எண்களை எண்ணுவதாகச் சொல்லி சட்டங்களில் எண்கள் பலகையை மாட்டிவிட்டு கிளி கூட்டல் கணக்கு செய்வதாக நம்மிடம் சொல்லுவார்கள், இரண்டு எண்களைப் (3,5) பற்றி நம்மிடம் சொல்லிவிட்டு அதன் கூட்டுத் தொகையை தற்பொழுது கிளி காட்டப்போவதாக நம்மிடம் சொல்லுவார்கள் அதே போல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகையான ஒரு எண்ணை வரிசையாக (9,8,6,7) மாட்டப்பட்டிருக்கும் எண்ணில்(8) ஒன்றை தேர்வு செய்து கிளி காண்பிக்கும். கிளிக்கு கூட்டல் தெரிந்திருக்கிறது, சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்றே நாம் வியப்போம். ஆனால் கூட்டல் தொகையாக வரும் எண்ணை எப்போதும் ஒரே இடத்தில் தான் மாட்டி வைப்பார்கள். மற்றொரு முறை அதே நிகழ்ச்சிக்குப் போகும் போது வேறு வேறு (4,2) எண்ணைச் சொல்லி கிளியைக் கூட்டச் சொல்லிவிட்டு அதன் கூட்டுத்தொகைப் பலகையை (9,6,8,7) முன்பு கிளி எங்கே தொட்டுக் காட்டியதோ(8 இருந்த இடத்தில்) அதை இடத்தில் (6 ஐ) வைத்திருப்பார்கள்.

விலங்குகளுக்கான அறிவு எல்லைக் குட்பட்டது தான், உணவு தேடுவது, இனப்பெருக்கம் செய்து இனத்தைப் பெருக்கிக் கொள்வது, ஆபத்துகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வது இவைதான் அவற்றின் அறிவில் அடங்கி இருக்கும். அவற்றின் மரபு காரணிகளின் படி சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அப்படியே நடந்து கொள்ளும், உதாரணத்திற்கு கோழி தன் கால்களால் குப்பையைக் கிளறுகிறது என்பது நமக்கு தெரியும், ஒரே ஒரு கோழிக்குஞ்சாக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சும் வளர்ந்ததும் சொல்லிக் கொடுக்காமலேயே குப்பையைக் கால்களால் கிளறும். தாய்கோழியுடன் வளரும் கோழிக்குஞ்சு அதை விரைவாக கற்றுக் கொள்ளும் அவ்வளவுதான் வேறுபாடு. மிகச் சில விலங்குகளே காணமால் போன தனது கூட்டத்தில் இருந்த விலங்கு பற்றி நினைவு வைத்திருக்கும். யானைக் கூட்டத்தில் உள்ள யானை ஓர் இடத்தில் இறந்தால் அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் இறந்த யானை (எலும்புகள்) கிடந்த இடத்தில் யானைக் கூட்டம் சிறிது நேரம் நின்றுவிட்டுப் போகுமாம். மற்றபடி விலங்குகளுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் இறப்பும், இறப்பிற்கு பிறகு என்ன ஆவோம் என்கிற எண்ணங்களோ, 'இறைவன்' இருக்கிறான் என்ற சிந்தனைகளெல்லாம் இருக்காது.

படைப்புக் கொள்கை எதுவாக இருந்தாலும் கோழி முதலில் படைக்கப்பட்டதா ? முட்டை முதலில் படைக்கப்பட்டதா ? என்று கேட்டால் கோழியைத்தான் சொல்லுவார்கள். கோழியும் சரி முட்டையும் சரி உயிர்த்தன்மை உள்ள ஒரு உயிரின வடிவத்தின் இருநிலைகள் என்று சொல்வது தான் சரி என்றே நான் நினைக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகள், முட்டை, புழு, பூச்சி என மூன்று நிலைகளைக் கொண்டு இருக்கிறது. மற்றவையெல்லாம் உயிரனு, அது சூழலில் முட்டையுடன் இணையும் போது கருவளர்ச்சி / முட்டையாக உருப்பெருதல் என்பதாக இருக்கிறது, வளர்ந்த உயிரினம் (adult) பல உயிரனுக்களைத் தோற்றுவிக்கும் நிலையைப் பெருகிறது, அதாவது இனம் பெருக்குதல் அல்லது இனப்பெருக்கம்.

உயிரனங்களில் வளர்ச்சி மற்றும் இறப்பு தவிர்த்துப் பார்த்தால் அவற்றின் தொடர்ச்சி என்றென்றும் இருப்பதாக கொள்வதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன். பொதுவாக மனித மனம் பொருள்கள் எதற்குமே மூலம் என்று ஒன்று இருப்பதாகவே நம்பும். அப்படி எண்ணித்தான் இன்றைய அறிவியல் என்பது பிரபஞ்ச தோற்றம் பெருவெடிப்பில் தொடங்குவதாக நம்புகிறது. இதற்குக் மாற்றாக மத நம்பிக்கையாளர்கள் இறைவன் தன் சித்தத்தில் அனைத்தையும் தோன்ற வைத்ததாக நம்புகிறார்கள். விருப்பு வெறுப்பு அற்றவன் என்று சொல்லப்படும் இறைவன் உலகையும், உயிரனங்களையும் தோன்றச் செவதற்கான அவன் விருப்பம் எத்தகையது ? அது விருப்பத்தில் வராதா என்று கேட்டால் நேரடியாக பதில் வருவதே இல்லை. ஒரு சிலர் இறைவன் தான் தோன்றி என்கிறார்கள். இங்கே தோன்றி என்று சொல்வதன் மூலம் எதோ ஒரு நாள் இறைவன் வெளிப்பட்டதாகவும், அதன் பிறகு அனைத்தையும் படைத்ததாக நம்புகிறார்கள், அப்படி என்றால் இறைவன் தான் தோன்றுவதற்கு முன் எதுவுமே இல்லையா என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்பவர்களாகவும் அவர்கள் இல்லை.

இன்னும் சிலர் இறைவன் என்றென்றும் இருப்பவன், அழிவற்றவன் அவனே அனைத்தையும் தோன்றச் செய்தான் என்கிறார்கள். தோன்றச் செய்தல் என்ற செயல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு முன் எவ்வளவு காலம் இறைவன் அப்படியே இருந்தான் ? என்ற கேள்விக்கு இவர்கள் சரியான விளக்கம் அளிப்பது இல்லை. இறைவன் தான் தோன்றி என்றால் படைப்புகள் என்று சொல்லப்படுபவைகள் ஏன் தான் தோன்றியாக இருக்கக் கூடாது, இறைவன் என்றென்றும் இருப்பவன் என்றால் பொருள்கள், உயிரினங்கள் அனைத்தும் என்றென்றும் இருப்பவை என்று ஏன் சொல்லக் கூடாது என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாது தவிர்பர்.

தங்கம் என்கிற உலோகப் பொருளை எடுத்துக் கொள்வோம், பூமியில் இருக்கும் பல்வேறு கனிம பொருள்களில் அதுவும் ஒன்று. அதன் பயனையும், மதிப்பையும் மனிதர்கள் தான் முடிவு செய்து பயன்படுத்துகிறார்கள். மதம் தொடர்பான எந்த நூலிலும் பூமியில் இன்னின்ன கனிம வளங்களை புதைத்து வைத்திருப்பதாக சொல்லி இருக்கவில்லை. அப்படி சொல்லி இருந்திருதால் அறிவியலாளர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி நடத்தி அவற்றை பிரித்தெடுக்கும் வழிகளைக் கண்டு கொள்வதற்கு எளிமையாக இருந்திருக்கும், எந்தந்த இடத்தில் திரவ எரிபொருள் கிடைக்கிறது என்பதும் எந்த ஒரு மதத்திலும் சொல்லப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும், குறைந்த அளவாக திரவ எரிபொருள்கள் பற்றி மதங்களில் எதுவும் கூறப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. வானத்திற்கு எல்லை இல்லை என்பதை நம்பினாலும்...கண்டிப்பாக வானம் / அல்லது பரவெளிக்கு எல்லை இருக்கும், அதற்கும் பின்னாலும் எதோ இருக்கும் என்பதையும் அதே மனம் நம்பும். பொருள்களும், உயிரினங்களும் படைக்கப்பட்டதாக நம்புவதும் அப்படித்தான்.

படைப்புக் கொள்கை தொடரும்...

29 மார்ச், 2009

ஆறாம் அறிவுக்கு மேல்... !

அறிவு என்றால் ஒன்றைப் பற்றிய உண்மையை உணர்ந்து தெளிதல், அல்லது அறிந்து கொண்டு தெரிந்து வைத்திருத்தல் என்று சொல்லலாமா ? நம்முடைய அறிவு என்பது இதுவரை முந்தைய தலைமுறையின் பட்டறிவின் தொகுப்பு. மனித அறிவுக்கும் ஏனைய உயிரனங்களின் அறிவுக்கும் ஒரே வேறுபாடு, பட்டறிவை(அனுபவ) சந்ததிகளுக்கு எழுதி வைப்பதன் மூலம் வெற்றிகரமாக மாற்றுவது மட்டுமே. மின்சாரம் மற்றும் ஏனைய கண்டுபிடிப்புகள், உண்மைகள், தத்துவங்கள் ஆகியவற்றின் நம் அறிவு என்பவை முன்னோர்கள், முந்தைய கண்டுபிடிப்பாளர்கள் நமக்கு தொகுத்துத் தந்தவையே. குழப்பமான அல்லது நம் புலனுக்கு எட்டாதவைகளைப் பற்றிய எதையும் அதன் தன்மைகளை பிரித்து அறிவதன் மூலம் நமக்கு அவை பற்றிய உண்மை தெரிகிறது. கண்டுபிடிப்புகள் அனைத்துமே பல்வேறு மூலப்பொருள்களின் சேர்க்கை அல்லது மாற்றம் என்பவைதானே. பொருள்களின் தன்மையை ஆராய்ந்து அவற்றில் இருக்கும் ஒழுங்குகளைக் கண்டு கொண்டு, அவற்றில் மாற்றம் ஏற்படுத்திக் கொடுப்பது தான் கண்டு பிடிப்புகள். நாம் கண்டுபிடிக்காதவை அனைத்துமே நம் அறிவைப் பொருத்தவரை ஒழுங்கற்ற அல்லது குழப்பமானவை என்று சொல்வதே பொருத்தமானது. கண்டுபிடித்த பொருள்கள் ஒழுங்கான, தெளிவான என்ற நிலைக்கு அதன் சமன்பாடுகள் அறியப்பட்டு, வரையறைக்குள் வந்துவிடுகிறது. அதாவது உலக, பிரபஞ்ச பொருள்கள் அதன் இயக்கங்கள் இவற்றை ஒழுங்கான (கண்டுபிடிக்கப்பட்ட) மற்றும் ஒழுங்கற்ற (இது வரை கண்டறியப்படாத) என்ற இரு வகைக்குள் தான் இருக்கின்றன.

மனித மூளை அறிவின் சிகரம் என்று நினைப்பது எந்த அளவுக்கு உண்மை ? மனித மூளையின் நினைவுத் திறனையும் அதன் மூலம் பகுத்தறியும் தன்மையையும் வியக்கிறோம் ஆனால் மனித மூளையை அறிவின் சிகரம் என்று சொல்ல முடியுமா ? ஆறாவது அறிவைத் தாண்டி எதுவுமே இருந்துவிட முடியாதா ? பகுத்தறிவாதிகளைக் கேட்டால் இருக்க முடியாது என்றே சொல்லுவர். உலகைப் பற்றிய அறிவு மனித மூளைகளின் கண்டுபிடிப்புகளால் வந்தவை, மனித மூளையும் அதன் ஆறாவது அறிவும் இல்லை என்றால் நாமும் விலங்குகள் போல் தான் என்று சொல்லுவர். ஆறாவது அறிவு இருட்டு அறையில் இருக்கும் ஒரு பொருளைப் பார்க்க உதவும் ஒரு விளக்கைப் போன்றது மட்டுமே. அறையில் அந்த பொருள்கள் எப்படி வந்தன, எப்படி அவை ஒழுங்கு தன்மையில் அறையினுள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை சொல்லிவிடாது. அல்லது எந்த ஒரு தெளிவான பதிலையும் ஆறாவது அறிவின் மூலம் பெற முடியாது. ஊகமாக இப்படி இருக்கலாம் என்று சொல்லலாம். டார்வின் கோட்பாடுகள் கூட இப்படிப்பட்டதே. புல்லாகி பூண்டாகி, பூச்சாகி விலங்காகி, குரங்காகி மனிதனான் என்பதே டார்வின் கொள்கை, கோட்பாடு அளவில் இவை சரி ஆனால் இவை உயிர்களின் தோற்றம் குறித்த முடிவான கோட்பாடுகள் இல்லை. அறிவியலாளர்கள், அறிவியல் அடிப்படையில் அந்த ஊகத்தை ஏற்றுக் கொள்வர், அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்வதால் அதனை படித்தவர்கள் ஏற்றுக் கொள்வர். பெருவாரியான மக்கள் ஆதரவு இருந்தால் மதவாதிகள் அதனை மதத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாக எதாவது ஒரு செய்யுளுக்கு (திரித்து) பொருள் கூறி அறிவியலும் உள்ள மதம் என்று புரியவைத்து மதம் வளர்க்க முயல்வர். ஆப்ரகாமிய மதங்கள் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனெனில் மனிதன் களிமண்ணால், இரத்தக் கட்டியால் படைக்கபட்டவன் என்பதே அவற்றின் கொள்கை (அது வேறு காமடி), இந்திய சமயசார் தத்துவங்கள் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன. டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் இந்திய மதங்களுக்கு இருக்கும் மறைமுக சிக்கல், உயிரினங்களின் தோற்றம் என்பவை காலமாற்றத்தினால் ஏற்பட்ட ஜீன்களின் உருமாற்றத்தால் உருவானவை என்கிற அடிப்படையில் அமைந்திருப்பதால், இங்கே இறைவனின் படைப்புக் கொள்கையை எங்கே இடைச் சொருகுவது என்பது அந்த சிக்கல். டார்வின் கொள்கையை ஒரு மதம் ஏற்றுக் கொண்டால், அது கிட்டதட்ட இறைவனின் படைத்தல் தொழிலை மறுப்பது போன்றதாகும், படைத்தல் தொழிலையே மறுக்கும் படி அமைந்திருப்பதால் மனிதனை இறைவன் படைத்தான் காக்கிறான், எனவே வணங்குங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் ஞாயமானவை என்று தெரியவில்லை. வெறும் இறை அச்சம் என்பதைத் தவிர்த்து இறைவணக்கம் செய்யச் சொல்ல எந்த காரணத்தையும் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மதத்தினரால் சொல்லவே முடியாது.


நமக்கு கிடைக்கும் அறிவின் தொகுப்பு பகுத்தறிவு, அறிவியல் ஆன்மிகம் இப்படி எதன் மூலம் வந்திருந்தாலும் அவை இயங்கு பொருள்களில் இருக்கும் ஒழுங்குமுறையை அறிந்து கொள்வதை மட்டுமே தந்திருக்கிறது. அந்த ஒழுங்கு முறை ஏன் எப்படி ஏற்பட்டது என்பதை அறிவது மிக மிகக் கடினம், சரியாக 356.25 நாட்கள் பூமி ஒரு ஆண்டைக் கடந்து மீண்டும் அதே இடத்தில் தொடங்குகிறது. நமக்கு வேண்டுமானால் நமது எண்ணியல் அடிப்படையில் அது ஏன் 365.25 நாள் எடுத்துக் கொள்கிறது, ஏன் 365 டிகிரியில் வட்டமான வட்டப்பாதையில் இன்றி நீள்வட்டத்தில் செல்கிறது என்பதற்கான விடை தெரியாமல் இருக்கலாம், ஆனால் (இயற்கையின்) இயக்கம் என்னும் பேரறிவு என்பது மனித அறிவிக்குள் அடங்காது, பேரறிவிற்கும் நமது எண்ணும் முறைக்குக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. 10 அடிமான முறையில் நாம் எண்ணுகிறோம். இயற்கைக்கும் அதன் இயக்கத்திற்கும் நமது 10 அடிமான முறை எதுவும் தெரியாது, காரணம் 10 அடிமான முறை, கோண அளவீடுகள் நம்மால், நமது கணக்கு வழக்குக்காக ஏற்படுத்தப்பட்டவையே. இயற்கையும் நமது கணக்கியல் முறைகளில் தான் இயங்க வேண்டும் என்பதற்கு எந்த வித தேவையும் இல்லை. அவற்றின் இயக்கங்களை நம்முடைய அளவீட்டு முறைகளில் ஒப்பிட்டு இயற்கையில் இருக்கும் ஒழுங்கு முறைகளைக் கண்டு கொண்டு, அதன் வழியாக கணக்கிட்டு சாட்டிலைட் போன்றவற்றை நிலை நிறுத்துகிறோம், அதாவது இயற்கை இயக்கத்திற்கு பொருத்திக் கொள்ளும்படி நமது கணக்கியலில் சமண்பாடுகளை உருவாக்கி அதனை ஒப்பிட முடிகிறது.

இவற்றை பூமி இயக்கத்தைக் குறித்து மட்டுமே சொல்லவில்லை. எட்டுக்கால் பூச்சிக்கு எட்டு கால் ஏன் இருக்கின்றன ? ஐந்து இதழ் பூக்கள், அமீபா போன்ற ஏன் அனைத்து உயிரனங்களின் அமைப்பிற்கும், கனிம பொருள்கள் அனைத்திற்குமே பொருந்தும், நாம் பொருள்களின் இயக்கத்தை நமது கணக்கியலில் பொருத்தி சமண்பாடுகளை உருவாக்கிக் கொள்கிறோம் அதைத்தான் மனித அறிவு வளர்ச்சியால், முயற்சியால் இதுவரை செய்யப்பட்டு இருக்கிறது, அதையே பகுத்தறிவு அல்லது ஆறாவது அறிவு என்கிறோம். நம்மால் அறிய முடியாத, காரணங்கள் அனைத்தையுமே அறிந்து கொள்ள முடியாத அளவில் பேரியக்கம் இருக்கிறது. அதை இயற்கை என்போர் சிலர், இறைவன் என்போர் பலர். இயக்கத்திற்குக் காரணம் அதன் தன்மையிலேயே இருப்பதாக புரிந்து கொள்வதால், நம்புவதால் அவற்றை இறைவனின் லீலைகளாக நான் நினைப்பது இல்லை.

எண்ணற்ற உயிர்கள், அவற்றின் தோற்றம், அவற்றின் ஒவ்வொரு வித்தும் வளர்ந்து பல வித்துக்களைத் தோற்றுவிப்பதன் மூலம், ஒரு வட்டத்திற்குள்ளேயே அவ்வுயிர்கள் தோன்றி பெருக்கிக் கொண்டு தொடர்கின்றன. ஒரு வித்திற்குள் முழுவளர்ச்சியின் தன்மையை அடங்கி இருப்பது மிக மிக நுட்பமான ஒன்று, நம் மனித அறிவால் விளங்கிக் கொள்ளவும் முடியாது, ஜீன்களின் மூலம் அவற்றின் தன்மைகளை மட்டுமே அறிய முடியும், நாம் கண்டு கொண்டது தவிர்த்து இயற்கையின் பல செயல்படும் தன்மைகளின் அறிவு, மனித மூளையுடன், மனிதனின் கணக்கியல் சமண்பாடுகளுடன் மிகச் சரியாக ஒப்பிட முடியாத பேரறிவு. அதாவது இயக்கத்தின் தன்மைகளையோ, அவை ஏன் அவ்வாறு ஒரு (ஏதோ ஒரு) முறையில் இயங்குகின்றன என்பதை மனித கணக்கு மற்றும் எண்ணியல் மூலமாக முற்றிலுமாக அறிந்து கொள்ளவே முடியாது. ஆறாம் அறிவின் மூலம் இயற்கையை முழுவதுமோ ஆராய்ந்துவிட முடியும் என்கிற மனித முயற்சி இயற்கையின் பேரறிவுக்கும் முன்பு பெரும் அறைகூவல் தான். பகுத்தறிவாளர்கள் அல்லது இறைமறுப்பாளர்கள் இறைவனை நம்பத் தேவையில்லை என்றாலும் மனித அறிவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இயற்கை பேரறிவு மிக்கது என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்