பின்பற்றுபவர்கள்

2 ஆகஸ்ட், 2006

புரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...!

நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களை எல்லோரும் விரும்புவது ஏன் ? எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், முதல் நாளே அவருடைய படம் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது, அதிகபட்சமாக சில படங்களை இருமுறை பார்த்ததுண்டு, அதில் சமீபத்தில் வெளிவந்து வேட்டையன் ராஜாவாக கலக்கிய சந்திரமுகியும் அடக்கம். சிவாஜி எப்பொழுது வரும் ? எதிர்பார்பவர்களில் நானும் ஒருவன். அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா ? நடிப்பா ? முடியைக் கோதிவிட்டு 'கண்ணா ... ஆறுலையும் சாவு, நூறுலையும் சாவு' சொல்லும் போது விசில் தூள்பறக்கும்.

நடிப்பு ?
எனக்கு தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கவில்லை. அதன் பிறகு ஓரிரு படங்கள் 'ராகவேந்திரா, தளபதி, சந்திரமுகி, எஜமான்' போன்ற படங்களில் ஓரளவு நடித்துள்ளார். மற்றப் படங்களெல்லாம் அக்மார்க் ரஜினி மசாலா படங்கள் தான் . கொஞ்சம் பைட்டு , நிறைய ஸ்டைலு, அம்மா, தங்கை சென்டிமென்ட் ... இதில் எம்ஜிஆர் செய்யாதது ஸ்டைலு மட்டும்தான். மற்றபடி ரஜினி பார்முலா படங்களும், எம்ஜிஆர் பார்முலாபடங்களும் ஒரே மாதிரி ரீல்களில் ஒடிய ரீலுகள்தான்.

எம்ஜிஆர் அம்மா சென்டிமென்ட் வெச்சிக்கிட்டு 200 நாள் ஓட்டியிருந்தால், ரஜினி அதுகூட கொஞ்சம் ஸ்டைலையும் நுழைத்து 250 நாள் முன்னூறு நாட்கள் தன் படத்தை ஓட்டிக்காட்டினார்.அம்மாவுக்கு பூஜைப் போட்டுட்டு காதலியுடன் மாந்தோப்பில் ஒரு மாங்காய் பாடலை பாடி பெண்ணியத்தின் கண்ணியம் காப்பார்கள். பெரும்பாலன படங்கள் ஏழை பொதுமக்களின் கூலித் தொழில் (ரிக்சா காரன், ஆட்டோ காரன்) ஏதோ ஒன்றில் இருவரது பாத்திரமும் பின்னப்பட்டிருக்கும். இருவரும் திரையில் பணக்காரர்களை வெளுத்து வாங்கிவிட்டு அவர்களது மக(ள்க)ளை முடிவில் திருமணம் செய்து பணக்காரத் திமிரை திருத்துவார்கள்.

ஏன் இப்படி ? திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வருகிறவர்களெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் எனவே கதைகள் அதை ஒட்டி இருக்கவேண்டிய கட்டாயம். அதுமட்டுமா ஏழையின் கோபம், ஏக்கம், வஞ்சமான பணக்காரத் தனத்தை உண்டு இல்லை என்று சாடினால் தான் திரையரங்கில் சூடுபறக்கும். பெரும்பாலும் ஏழைகளுக்காகவே குரல் கொடுப்பது போன்றே இவர்கள் படம் இருக்கும். 5 / 10 ரூபாய் டிக்கட்டில் பணக்காரர்களை திருந்தியதைப் பார்த்து நிம்மதியுடன் அடுத்த நாளும் அதே மக்கள் அதே படத்துக்கு திரையரங்கில் வரிசையில் நிற்பார்கள்.

ஏழைகளைத் தாண்டி இந்த இருவரும் எப்படி பொதுமக்களுக்கும் பிடித்தவர்கள் ஆனார்கள் ? தமிழகத்தில் நல்ல நடிகர்களே இல்லையா ? அவர்கள் ஏன் எல்லா தரப்பு மக்களையும் கவரவில்லை ? நல்லா யோசிச்சா ஒன்னே ஒன்னு தான் காரணம் என்று தெரிகிறது. அது தமிழகத்தில் புறையோடி போயுள்ள சாதிவெறி. எல்லா நடிகருகும் சாதியால் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டார்கள். இந்த நடிகர் இந்த சாதி ஆள் என்று தெரிந்துவிட்டது. எல்லா பெரிய நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் பின்னால் இருப்பது அவர்கள் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தான். சரத்குமார் நாடார் என்றும் , விஜயகாந்த் தெலுங்கர் நாயுடு என்றும், கார்த்திக் தேவர் என்றும் ... இன்னும் பலர் சாதிச் சாயம் பூசிக் கொண்டனர்.

கமல் நன்றாக நடித்தும் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை, அவர் ஏன் ரஜினிகாந்த் அளவுக்கு வரமுடியவில்லை? அது அவரே விரும்பாவிட்டாலும் அவர் மேல் விழுந்த ஒரு சாதி முத்திரையைத் தான் காரணம். அதுமட்டுமல்ல அவரின் விரும்பம் இல்லாவிட்டாலும் ... தாங்கள் அவரை தூக்கி நிறுத்துவது கடமை போல் வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு சமூகத்தினால் ... அந்த சமூகத்தை விரும்பாதவர்களின் வெறுப்பும், பெரும்தன்மையின்மையும் கமல் போற்றப் படாததற்குக் காரணம். இது விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்களுக்கும் பொருந்தும். தற்போது நடிகர் விஜய்க்கு கிறித்துவர் என்ற முத்திரையும் குத்தப்பட்டுவிட்டது. செவாலியர் சிவாஜி மாபெரும் நடிகராக வளர்ந்தும் (அவரே தேடிக்கொண்ட) தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முத்திரையும் அவரால் அரசியலில் வளர்ச்சி பெற முடியாமல் செய்துவிட்டது.

இது போன்ற தமிழகத்தில் உள்ள சாதிகளுக்குள் சிக்கிக் கொள்ளாதவர்கள் என்பதால் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய "இருவர்" க்கு சாதீய அடையாளம் இல்லாது போனது. இது பொதுமக்கள் மத்தியில் இருவருக்கும் அமோக வரவேற்ப்பு கிடைப்பதற்கு மறைமுக காரணமாக அமைந்தது. மேலும் அவர்கள் ஏழை மக்களை கவரும் வண்ணம் திரைக் கதைகளை அமைத்துக் கொண்டதன் மூலம், ஏழைமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்பும் மாபெரும் நடிகர்களாக வளர்ந்தனர். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக போன்ற இயக்கங்களுக்கு சாதி அடையாளம் இல்லாத தலைவர்கள் கிடைப்பது அரிது. திமுகவிற்கு இந்த அடிப்படையில் ஸ்டாலினைத் தவிர்த்து மாற்றும் இல்லை.

தமிழகத்தில் எல்லோரும் விரும்பும் தமிழ் நடிகர் வருவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை. சாதி வெறுப்பு, சாதி பாசம் போன்ற நோய் பீடித்துள்ளதால் தமிழனே விரும்பி தமிழ்நாட்டை சாதிய அடையாளம் இல்லாத அண்டை மாநில நடிகர்கள் கையில் கொடுக்க துணிவதும் தமிழனே தேடிக்கொண்ட விதிதான்.

ரஜினிக்குப் பின் நிற்பது அன்பினால் வந்த கூட்டமா ? ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதிகம் இருப்பது ...சாதி நடிகர்களையும், சாதி அரசியல் வாதிகளையும் வெறுத்து நொந்தக் கூட்டம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்... ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் !

பின்குறிப்பு : தமிழ்நாட்டு எந்த நடிகர்களின் நடிப்புத் திறமையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிவாஜி அவர்களின் பெயருக்கும் முன் செவாலியர் என்று பட்டத்துடன் எழுதியிருப்பதும் அந்த நினைவில் தான். தமிழக நடிகர்கள் எப்படி அடையாளப் படுத்தப்படுகிறார்கள் என்ற வேதனையில் எழுதியது தான் இது. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தலைவன் ஆகும் தகுதியை தடுப்பது எது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். கட்டுரையை திசைத் திருப்புவதற்காக நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு நடிப்புத் திறமையை கேவலப் படுத்துவதாக சொல்வது ஏற்றுகொள்வதற்கு இல்லை. நீங்கள் கேள்வி கேட்கவேண்டுமென்றால் ரசிகர்கள் பலத்துடன் தமிழகத்தை ஆளத் துடிக்கும் நடிகர்களிடம் தான் கேட்கவேண்டும். அதற்காக நடிகர்களுக்கு நாடாளும் திறமை இல்லையென்று சொல்லவில்லை. நம்மைப் போன்று அவர்களும் தமிழர்களே அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு. தமிழகத்தில் மாபெரும் தலைவராக இவர் வருவார் என்று ஸ்டாலினைத் (அதுவும் திமுக என்ற தனிக்கட்சிக்கு மட்டும் பொருந்தும்) தவிர்த்து, சாதிய அடையாளமே இல்லாமல் அடுத்து யாரையாவது ஒருவரை உங்களால் காட்டமுடியும் என்றால் இந்த கட்டுரையை எடுத்துவிடுகிறேன்.

53 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அரசியலில் ஜாதி ஓட்டுக்கள் இல்லாமல் இல்லை. ஆனால் சினிமா நடிகர்களை ஜாதி பார்த்து ஆதரிக்கிறார்கள் என்பது ஒரு அதிகப்படியான ஒன்று. சரத்குமார் நாடார் என்பதால் நாட்டமை ஒடியதா?, பிரபு தேவர் என்பதால் சின்னதம்பி ஒடியதா?.

எம்.ஜி.ஆர் ,ரஜினி போன்றவர்களின் படங்களுக்கு ரீப்பிடட் ஆடியன்ஸ் உண்டு. இவர்களின் படத்தை 10 தடவைக்கு மேல் போய் பார்க்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். கமலின் படங்கள் இந்த வகை ரசிகர்களை கவரவில்லை.(சகலகலாவல்லவன் போன்றவை விதிவிலக்கு.). தற்போது விஜயின் படங்களுக்கு ரீப்பிடட் ஆடியன்ஸ் இருக்கிறார்கள்...

(ஜாதி அடிப்படையில் தான் ரீப்பிடட் ஆடியன்ஸ் உருவாகிறார்கள் என்று அடுத்த ஆர்க்யூமெண்ட் வராது என நம்புகிறேன்.) மற்றபடி மக்கள் சினிமாவில் மயங்குகிறார்கள் என்பதில் உங்களோடு நான் ஒத்து போகிறேன். விட்டேன் ஒர் குத்து.

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்,
இது மிக மேலோட்டமாக எழுதப்பட்டுள்ளது.

நீங்கள் நிறுவ முனைவது போல நடிகர் திலகத்தை விட எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் பல மடங்கு அதிகம் என்பது மாயை .அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் அளவுக்கு ,இன்னும் சொல்லப்போனால் அதை விட அதிகமாக ரசிகர்களை கொண்டிருந்தவர் நடிகர் திலகம் .நடிகர் திலகத்தின் வசூல் சாதனைகள் எம்.ஜி.ஆரின் சாதனைகளை விட அதிகம் .ஒரே நாளில் இரண்டு படங்கள் ,ஒரே மாதத்தில் 3 படங்கள் என்று ரிலீஸாகி அனைத்தும் வசூலில் சாதனை படைத்த வரலாறு நடிகர் திலகத்துக்கு உண்டு .எம்.ஜி.ஆரை விட அதிக வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் .

வித்தியாசம் எங்கே வருகிறதென்றால் ,ரசிகர்களின் மனோபாவத்தினால் தான் .எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை தலைவனாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் .சிவாஜி ரசிகர்கள் பெரும்பாலும் அவரை ஒரு நடிகனாக மட்டும் பார்த்தவர்கள் .வெறித்தனமான பக்தி இல்லாதவர்கள்.அதனால் நடிகர் திலகத்துக்கு ரசிகர்கள் குறைவு என்பது போல சொல்லுவது மிகத் தவறு.

கமல் ,ரஜினியை பொறுத்தவரை ஒரு காலத்தில் வசூலில் கமல் முன்னணியில் இருந்தார் (தூங்காதே தம்பி தூங்காதே நேரத்தில்) .நாயகனுக்கு பின்னர் அவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு கொஞ்சம் சீரியசான படங்கள் கொடுக்க நினைத்தார் .மசாலா ரசிகர்கள் அவரை விட்டு சென்றனர் .ரஜினி முன்னேறி இன்று தொட முடியாத இடத்தில் இருக்கிறார் .ஆனால் அதையும் மீறி கமலுக்கு உள்ள மதிப்பு அப்படியே தான் இருக்கிறது .வசூலில் நீரூபிக்க வேண்டிய கட்டத்தை தாண்டி விட்டவர் கமல் .கமலும் ரஜினியும் தத்தம் பாதையை தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்கள் .அதில் இருவருக்குமே வெற்றி தான் .

எம்.ஜி.ஆரை யும் ரஜினியையும் ஒப்பிட்டால் ,நடிப்பில் ரஜினி எம்.ஜி.யாரை விட பல மடங்கு சிறந்தவர் .ஆனால் எம்.ஜி.ஆர் பன்முகத்திறமை கொண்டவர் .அவர் ஒரு இயக்குநர் ,தயாரிப்பாளர் ,தேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் .இருவரும் மக்கள் மனமறிந்தவர்கள் .

பெயரில்லா சொன்னது…

நடிகர் திலகத்தை ஒரு சாதிக்குள் நீங்கள் அடைக்க முயல்வதும் ,அவர் சாதியை காட்டிக்கொண்டார் என்று சொல்லுவது என் போன்ற கோடிக்கணக்கான நடிகர் திலகம் ரசிகர்களை கேவலப்படுத்துவது.

நடிகர் திலகம் அரசியலில் தலைவனாக ஏற்றுக்கொண்ட பெருந்தலைவர் என்ன அவர் ஜாதியா?

கோவி.கண்ணன் சொன்னது…

//சரத்குமார் நாடார் என்பதால் நாட்டமை ஒடியதா?, பிரபு தேவர் என்பதால் சின்னதம்பி ஒடியதா?.
//

அண்ணே ! நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள்... திரைக் கதையையும், இயக்குனர்களையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

படம் ஓடுவது நடிகர்களுக்கு என்று சொன்னால் பாபா பஞ்சரானதுக்கு யார் காரணம் ...? அரசியல் என்று வந்தால் எந்த நடிகருக்கு ஆதரவு என்று சொல்ல வந்திருக்கிறேன் :))

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் நிறுவ முனைவது போல நடிகர் திலகத்தை விட எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் பல மடங்கு அதிகம் என்பது மாயை //

அண்ணே நீங்களும் தப்பாக புரிந்து கொண்டீர்கள்... நான் சிவாஜியை விட.. எம்ஜி ஆருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. எம்ஜிஆரின் நடிப்பையும், சிவாஜியின் நடிப்பையும் ஒப்பிடவில்லை. அரசியல் என்று வந்தால் சிவாஜியும் - எம்ஜிஆரும் எப்படி வேறுபடுகிறார்கள் என்று சொல்ல வந்திருக்கிறேன் :)). ரசிகர் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்பது நன்கு தெரியும். ஓட்டாக மாறக் ரசிகர் கூடிய கூட்டம் என்றால் அது எம்ஜிஆர் ரஜினி இருவருக்கும் மட்டும் தான் ஓரளவிற்கு இருக்கிறது அதற்கு நான் சொன்ன காரணமும் தான் காரணம்.

பெயரில்லா சொன்னது…

//அரசியல் என்று வந்தால் எந்த நடிகருக்கு ஆதரவு என்று சொல்ல வந்திருக்கிறேன் :))//

அப்படி சொல்ல வந்ததாக தெரியவில்லை .ரஜினியை விரும்புபவர்களில் எத்தனை சதவீதம் உங்களைப் போல அவருக்கு ஓட்டு போடுவார்கள் ? அந்த வகையில் ரஜினி ஒரு சிவாஜி ,எம்.ஜி.ஆர் அல்ல .

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
நடிகர் திலகத்தை ஒரு சாதிக்குள் நீங்கள் அடைக்க முயல்வதும் ,அவர் சாதியை காட்டிக்கொண்டார் என்று சொல்லுவது என் போன்ற கோடிக்கணக்கான நடிகர் திலகம் ரசிகர்களை கேவலப்படுத்துவது.

நடிகர் திலகம் அரசியலில் தலைவனாக ஏற்றுக்கொண்ட பெருந்தலைவர் என்ன அவர் ஜாதியா?
//

நான் கேவலப் படுத்தவில்லை ... வருத்தப்பட்டுதான் எழுதினேன். அவருக்கு ஜாதிய அடையாளம் இருப்பது உண்மை தானே ! கோடிக் கணக்கான ரசிகர்களும் சாதியைப் பார்த்ததால் தானே அவர் ஜானகி எம்ஜிஆருடன் கூட்டனி வைத்த தேர்தலில் வெற்றிப் பெறாமல் 0/50 கிடைத்து.

பெயரில்லா சொன்னது…

GK,

//ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் //

இந்த ஒரு விசயதிற்காக ஓட்டு போடுவேன் என்று நீங்கள் சொல்வது சாதி வெறுப்பு காரணமாகத்தான். இருப்பினும் அவர் கொள்கை என்ன?, முக்கியமான விசயங்களில் அவர் நிலைப் பாடேன்ன என தெரியாமல், நீங்கள் இவவாறு சொல்வது வியப்பை அளிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

//கோடிக் கணக்கான ரசிகர்களும் சாதியைப் பார்த்ததால் தானே அவர் ஜானகி எம்ஜிஆருடன் கூட்டனி வைத்த தேர்தலில் வெற்றிப் பெறாமல் 0/50 கிடைத்து.//

நல்ல கண்டுபிடிப்பு ! வெறித்தனமான சிவாஜி ரசிகனான நானே அந்த தேர்தலில் அவர் கட்சிக்கு ஓட்டு போடவில்லை .தி.மு.க வுக்கு தான் போட்டேன் .அதற்கு காரணம் சாதி அல்ல .அவரை நான் தலைவனாக பார்க்கவில்லை என்பது தான் காரணம்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படி சொல்ல வந்ததாக தெரியவில்லை .ரஜினியை விரும்புபவர்களில் எத்தனை சதவீதம் உங்களைப் போல அவருக்கு ஓட்டு போடுவார்கள் ? அந்த வகையில் ரஜினி ஒரு சிவாஜி ,எம்.ஜி.ஆர் அல்ல //

ரஜினி 'சிவாஜி'ன்னு படம் நடித்தாலும் அவர் எம்ஜிஆரின் வழியை தேர்ந்தெடுத்து மக்களை கவர்ந்தவர் :)

பெயரில்லா சொன்னது…

இது தவறான வாதமாக எனக்கு படுகிறது...
ஏழை பாத்திரங்கள் எற்று நடித்தது..அதனால் மக்களை கவர்ந்தது என்பது சரிதான்...படம் பார்ப்பவனுக்கு திரையில் இருப்பவனை தன்னுடன் ஒப்பிட்டு பார்க்க கூடிய வாய்ப்பினை கொடுத்தார்கள்..அதனாலும் ஒரு பாசம் வளர்ந்தது..

இது எல்லாவற்றையும் விட அவர்களுடைய வசீகரம் தான் அவர்களுக்கு ரசிகர்களை தேடி கொடுத்தது...கமல் அழகு.. ரஜினி வசீகரம்...நான் கமல் மேல் மிக அதிக மதிப்பு அதிகம் வைத்து இருக்கிறேன்..அவர் திறமைகளை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.. ஆனால் ரஜினி என்றதும் ஒரு ஈர்ப்பு வருகிறது..அது கமலிடம் மிஸ்ஸிங்...
மற்றபடி ஜாதிக்கும் அவர்கள் புகழுக்கும் சம்பந்தம் இல்லை.. ஒரு சில நடிகர்களுக்கு மிக சிறிதளவில் இது பொருந்தலாம்..அவ்வளவுதான்.ஆனால் நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கு நிச்சயம் இல்லை..

கோவி.கண்ணன் சொன்னது…

//தி.மு.க வுக்கு தான் போட்டேன் .அதற்கு காரணம் சாதி அல்ல .அவரை நான் தலைவனாக பார்க்கவில்லை என்பது தான் காரணம் //
ம் இதைதான் சொல்கிறேன் ... ஏன் தலைவனாக பார்க்கவில்லை ? அவருக்கு அந்த தகுதியில்லையா ?
நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் ஒரே விசயம் தான் புரிந்துணர்வில் எங்கோ இடர்கிறது :))

பெயரில்லா சொன்னது…

//ரஜினி 'சிவாஜி'ன்னு படம் நடித்தாலும் அவர் எம்ஜிஆரின் வழியை தேர்ந்தெடுத்து மக்களை கவர்ந்தவர் :)//

ரஜினி சினிமாவில் தேர்ந்தெடுத்தது எம்.ஜி.ஆர் வழி (அவர் சிவாஜி ரசிகராக இருந்தாலும்) .ஆனால் அரசியலில் அவர் சிவாஜியிடமிருந்தே பாடம் கற்றுக்கொண்டதாகத் தான் அவருடைய நடவடிக்கைகள் தெரிகிறது .

சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்த அரசியலுக்கு சிவாஜி லாயக்கு இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் தான் ரஜினியும் அது தனக்கு லாயக்கு இல்லை என்று நினைப்பதாக நான் நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//அதற்கு காரணம் சாதி அல்ல .அவரை நான் தலைவனாக பார்க்கவில்லை என்பது தான் காரணம்//
உண்மை..

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த ஒரு விசயதிற்காக ஓட்டு போடுவேன் என்று நீங்கள் சொல்வது சாதி வெறுப்பு காரணமாகத்தான். இருப்பினும் அவர் கொள்கை என்ன?, முக்கியமான விசயங்களில் அவர் நிலைப் பாடேன்ன என தெரியாமல், நீங்கள் இவவாறு சொல்வது வியப்பை அளிக்கிறது. //
சிபா ... நான் ஒட்டே இல்லாத ஓட்டான்டி ... நினைத்தாலும் போடமுடியாது ... என் பெயர் பட்டியலில் இல்லை :)

கொள்கை : அட கொள்கையைப் பார்த்து ஓட்டா யாருப்பா அது ? நான் தமிழனுங்க :)
நிலைப் பாடா ? அவர் நிலையில்லாமல் நடந்து கொல்வதும் ஒரு நிலைப்பாடே :))

பெயரில்லா சொன்னது…

ஜோ சொன்ன மாதிரி மேலோட்டமான பதிவு இது கண்ணன்.

பாலச்சந்தர் கணேசன் சொன்னது போல்

"..அரசியலில் ஜாதி ஓட்டுக்கள் இல்லாமல் இல்லை. ஆனால் சினிமா நடிகர்களை ஜாதி பார்த்து ஆதரிக்கிறார்கள் என்பது ஒரு அதிகப்படியான ஒன்று...."

பெயரில்லா சொன்னது…

// ஏன் தலைவனாக பார்க்கவில்லை ? அவருக்கு அந்த தகுதியில்லையா ?//
அவரை விட தகுதிவாய்ந்த கலைஞர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதால் .அது போக நான் சிவாஜி என்னும் மாபெரும் நடிகனுக்கு ரசிகன் .வெறித்தனமான ரசிகன் .அதற்காக அரசியலில் அவரை தலைவராக ஏர்றுக்கொள்ள வேண்டுமென அவசியம் இல்லை .சாதி காரணமாகத் தான் நான் ஓட்டுப்போடவில்லை என்றால் சாதி காரணமாக நான் அவர் ரசிகனாக இருக்க முடியாது என்ரு சொல்லியிருக்கலாம் .என்ன லாஜிக்கோ போங்க!

பெயரில்லா சொன்னது…

//ம் இதைதான் சொல்கிறேன் ... ஏன் தலைவனாக பார்க்கவில்லை ? அவருக்கு அந்த தகுதியில்லையா ?
நான் சொல்வதும் நீங்கள் சொல்வதும் ஒரே விசயம் தான் புரிந்துணர்வில் எங்கோ இடர்கிறது :)) //

கண்ணன் . தவறான பாதைக்கு எடுத்துச்செல்கிறீர்கள்..நானும் ஒரு சிவாஜி ரசிகந்தான்.. ஆனால் அவர் என்ன ஜாதி என்றே நீங்கள் சொல்லித்தான் தெரியும்...ஜோ கூரியது சரி.. நடிகனாக பார்ப்பது வேறு.. தலைவனாக பார்ப்பது வேறு...

//ரஜினி 'சிவாஜி'ன்னு படம் நடித்தாலும் அவர் எம்ஜிஆரின் வழியை தேர்ந்தெடுத்து மக்களை கவர்ந்தவர் :) //
இல்லை.. எம்.ஜி.ஆர். ராஜதந்திரி.. அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மக்களை கவர்வதற்க்கு தன்னை ஒரு தலைவனாக முன்னிறுத்திக் கொள்ள சரியான முறையில் காய்களை நகர்த்தியவர்...
ரஜினி அப்படி அல்ல... அவர் எதுவும் செய்யமலேயே அரசியல் சாயம் இல்லாதபோழுதே அவருக்கு ரசிகர்கள் சேர்ந்தனர்...தானாக அமைந்ததுதான் இது.. அன்பினால் சேர்ந்த கூட்டம் தான் இது..

பெயரில்லா சொன்னது…

இல்லீங்க நீங்க சொல்றதை என்னால் ஒப்புக் கொள்ளவே முடியாது. ரஜினியிடம் இருக்கும் ஒரு இனம் புரியாத காந்த சக்திதான் காரணமே ஒழிய கண்டிப்பாக நீங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

பெயரில்லா சொன்னது…

:)

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி ... மறுமொழி எல்லோருக்கும் இடவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஒட்டு மொத்தமாக என் நிலைப்பாட்டை 'பின்குறிப்பு' என்று கட்டுரையில் சேர்த்து இருக்கிறேன். என் கருத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. உங்கள் எதிர் கருத்துக்கள் - என் கருத்துக்கள் ஆகியவை வேறுபாடுகளை அலச மட்டும் பயன்பட வேண்டும், விதைக்க அல்ல என்றும் கூறிக்கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

GK,

//கொள்கை : அட கொள்கையைப் பார்த்து ஓட்டா யாருப்பா அது ? நான் தமிழனுங்க
நிலைப் பாடா ? அவர் நிலையில்லாமல் நடந்து கொல்வதும்
ஒரு நிலைப்பாடே //

தமிழக அரசியலை இரண்டே வரிகளில் சொல்லிடீங்க... சரி விடுங்க..

உங்க பக்கமே நானும் வந்தரேன்...

பெயரில்லா சொன்னது…

read from here : Sivaji's interview : http://tamilmagan.blogspot.com/2006/08/i-missed-bus-sivaji-ganesan.html

Question : Did you not think that it was good for you - at least when you had considerable influence in politics - to play only ‘clean roles’ like MGR did?

Ans : No. I did not think that there was any connection between the roles I played and the role I was supposed to play in politics. But the people thought that way! They thought that there was some connection! And that’s how MGR was a grand success in politics. He did it and I missed the bus.
But politics was only secondary for me. I played the drunkard, loafer, womaniser, murderer, rowdy…every conceivable anti-hero roles. That’s why I could do 300 and more films.
I have to mention a fact here. I understood only much later that people did not want to see me play the politician in real life. They wanted me to see me onscreen only as an actor. So many actors enter politics and not all become leaders. And there are some who could not shine well in acting and turn politicians instead.

பெயரில்லா சொன்னது…

ரொம்பவும் வித்தியாசமான கோணத்தில் யோசித்திருக்கிறீர்கள். ஆனால் இது உண்மை என்று எனக்கு தோன்றவில்லை.

பெயரில்லா சொன்னது…

//தமிழக நடிகர்கள் எப்படி அடையாளப் படுத்தப்படுகிறார்கள் என்ற வேதனையில் எழுதியது தான் இது. //

தமிழக நடிகர்கள் சாதியை வைத்து அடையாளப்படுத்தப்பட வில்லை.

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்,
உங்கள் இந்த பதிவில் உள்ள ஒவ்வொரு வரிக்கும் என்னால் மறுப்பு சொல்லி வாதங்களை வைக்க முடியும் .ஆனால் நீங்கள் அதை விரும்புவது போல் தெரியவில்லை

//உங்கள் எதிர் கருத்துக்கள் - என் கருத்துக்கள் ஆகியவை வேறுபாடுகளை அலச மட்டும் பயன்பட வேண்டும், விதைக்க அல்ல என்றும் கூறிக்கொள்கிறேன்.//
இதுக்கு என்ன அர்த்தமோ ? உண்மையிலே எனக்கு புரியவில்லை.நீங்கள் தான் இங்கு தவறான கருத்துக்களை விதைத்தது.

// கட்டுரையை திசைத் திருப்புவதற்காக நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு நடிப்புத் திறமையை கேவலப் படுத்துவதாக சொல்வது ஏற்றுகொள்வதற்கு இல்லை.//
நீங்கள் தான் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கு சொந்தமான ஒரு மாபெரும் கலைஞனுக்கு சாதி முத்திரை குத்தி அவரின் ரசிகர்களை கேவலப்படுத்தியது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் தான் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கு சொந்தமான ஒரு மாபெரும் கலைஞனுக்கு சாதி முத்திரை குத்தி அவரின் ரசிகர்களை கேவலப்படுத்தியது. //

இந்த பதிவு அவருக்கு எதிராக எழுதப்பட்டதல்ல ... அவரும் வந்து இருக்கிறார்... அவ்வளவுதான்... அவர் மீது சாதி முத்திரையில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?. மாபெரும் கலைகனின் மாபெரும் ரசிகரில் நானும் ஒருவன் என்று சொல்வதில் உங்களைப் போல் எனக்கு பெருமை உண்டு.

பெயரில்லா சொன்னது…

//மாபெரும் கலைகனின் மாபெரும் ரசிகரில் நானும் ஒருவன் என்று சொல்வதில் உங்களைப் போல் எனக்கு பெருமை உண்டு. //

அவர் ஜாதியினால் தான் ரசிகரானீர்களா? அப்படியானல் உங்கள் பெருமை அந்த கலைஞனுக்கு அவமானம்தான்..

பெயரில்லா சொன்னது…

//அவர் மீது சாதி முத்திரையில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?//
யார் யார் மீதும் சாதி முத்திரை குத்தலாம் .அதற்கு குத்தப்பட்ட நபர் பொறுப்பாக ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை .சிவாஜியின் லட்சோப லட்ச ரசிகர்கள் அவரின் சாதியை கருத்தில் கொண்டே அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளவும் ஓட்டுப்போடவும் மறுத்து விட்டதாக கூறுவது அபத்தம் .

எங்கள் நாகர் கோவில் தொகுதியில் அந்த தேர்தலில் சிவாஜியின் கட்சி ஜெயா அதிமுக ,காங்கிரஸ் கட்சிகளை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்தில் வந்தது .ஆனால் அந்த தொகுதியில் சிவாஜி பிறந்த ஜாதியினர் 1 சதவீதம் கூட கிடையாது .தெரியுமா உங்களுக்கு?

//மாபெரும் கலைகனின் மாபெரும் ரசிகரில் நானும் ஒருவன் என்று சொல்வதில் உங்களைப் போல் எனக்கு பெருமை உண்டு.//
அப்படியென்றால் நீங்கள் ஏன் அவரை தலைவனாக ஏற்றுக்கொள்ளவில்லை ?நீங்கள் சொல்லுவது போல ஜாதி தான் காரணமா?

பெயரில்லா சொன்னது…

//கமல் நன்றாக நடித்தும் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை, அவர் ஏன் ரஜினிகாந்த் அளவுக்கு வரமுடியவில்லை? அது அவரே விரும்பாவிட்டாலும் அவர் மேல் விழுந்த ஒரு சாதி முத்திரையைத் தான் காரணம்.//
//செவாலியர் சிவாஜி மாபெரும் நடிகராக வளர்ந்தும் (அவரே தேடிக்கொண்ட) தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முத்திரையும் அவரால் அரசியலில் வளர்ச்சி பெற முடியாமல் செய்துவிட்டது.//

அதெல்லாம் ஒன்னும் இல்லை. எம்.ஜி.ஆர் புரட்சி நடிகர். சமூக பிரச்சினைகளை கையாண்டார். ஆனால், சிவாஜியோ அனைத்து பாத்திரங்களையும் (குடிகாரன், தவறு செய்யும் சராசரி மனிதன்) ஆகிய பாத்திரத்தில் நடித்தார். எம்.ஜி.ஆர் படங்கள் பெரும்பாலும் சுபமாக முடியும், எல்லாமே positive approach-ஆக இருக்கும். ஆனால், சிவாஜி படங்களோ சோகம், வருமை போன்றவை யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும். இது ஒரு நடிகனின் இமேஜ் உருவாக்குவதற்கு பெரிய காரணம். அதனாலேயே சிவாஜி (பின் கமல்) ஆகியோர் நடிப்பை தாண்டி அரசியலில் கால் வைக்க முடியாமல் போய்விட்டது. மற்றபடி, தாங்கள் கூறியபடி, சாதீய கண்ணோட்டத்தில் எல்லாம் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் ஜாதியினால் தான் ரசிகரானீர்களா? அப்படியானல் உங்கள் பெருமை அந்த கலைஞனுக்கு அவமானம்தான்.. //
என்னங்க இது நீங்களே இப்படி தீர்மாணித்தால் நான் என்ன சொல்வது ?... நான் எங்காவது சாதிப் பார்த்து ரசிகனானேன் என்று சொல்லியிருக்கிறேன். சாதிப் பார்த்து ரசிகன் என்றால் நான் ஏன் ரஜினி சாருக்கு ஓட்டுப் போடுவேன் என்று சொல்லப் போகிறேன். நான் ரஜினி சாருக்கு என் ஓட்டு என்று தானே சொல்லியிருக்கிறேன். எனக்கும் எதாவது ஒரு ஜாதியை கொண்டுவந்து ஒட்டவைக்காதிங்க. நான் ஜாதிப் பார்த்தேன் என்றால் நான் எழுதிய இந்த கட்டுரையே அபத்தம் தான். இதுக்குமேல் என்னால் உங்களுக்கு புரிவது போல் விளக்கத் தெரியவில்லை.

பெயரில்லா சொன்னது…

//நான் எங்காவது சாதிப் பார்த்து ரசிகனானேன் என்று சொல்லியிருக்கிறேன்.//
ஆனா மத்தவங்கள்லாம் அப்படித் தான்னு மட்டும் சொல்லுவீங்க .சிவாஜியின் கோடானுகோடி ரசிகர்கள் அவரின் ஜாதியை கருத்தில் கொண்டே அவருக்கு ஓட்டளிக்கவில்லை என்ற கண்டுபிடிப்பு மட்டும் சுலபமா சொல்லுறீங்களே!

பெயரில்லா சொன்னது…

// கட்டுரையை திசைத் திருப்புவதற்காக நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு நடிப்புத் திறமையை கேவலப் படுத்துவதாக சொல்வது ஏற்றுகொள்வதற்கு இல்லை.//

கட்டுரையின் அடிப்படை கருத்தே (தமிழக நடிகர்கள் எப்படி அடையாளப் படுத்தப்படுகிறார்கள் )தவறு என்பதுதான் எனது வாதம்.. அந்த அடிப்படையை நிரூபிக்க நீங்கள் கூறிய சிலரின் பெயர்களை வைத்துத்தான் எதிர்வாத்ங்கள் எழுப்பப்பட்டன..திசை திருப்புவது என நீங்கள் கூறுவதும் தவறு..அப்படி சொல்வதுதான் திசை திருப்பி வேறு விதமான திசைக்கு இட்டுச் செல்ல வழி வகுக்கிறது..

பெயரில்லா சொன்னது…

நடிகர்களை, நடிகர்களாகவே பார்த்து, திரையில் ரசிக்க வேண்டும் என்பது என் கருத்து...

***

//ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும்//

ஆசை, தோசை, அப்பளம், வடை...
அவர்தான், இந்த விளையாட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டாரே...

***

சிவாஜி கதை யென்னான்னு யாராவது ஒரு அவுட்லைனாவது
கொடுங்கப்பா :-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படியென்றால் நீங்கள் ஏன் அவரை தலைவனாக ஏற்றுக்கொள்ளவில்லை ?நீங்கள் சொல்லுவது போல ஜாதி தான் காரணமா? //

நீங்கள் திரும்ப திரும்ப திரு சிவாஜியை பற்றியே கேட்கிறீர்கள். அதற்காக எழுதவில்லை. நீங்களே சொல்லுங்கள் திரு ரஜினி அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் மீது சாதிய முத்திரை குத்தப் பட்டிருக்குமா ? இல்லையா ? இந்த அளவுக்கு எல்லோரும் விரும்புவராக அவரை நினைத்துப் பார்த்திருக்க முடியுமா ? எதாவது ஒரு சாதிக் கட்சி அவர் முகத்தை போஸ்டரில் போட்டு இருக்காதா என்ன ? இது தான் சிவாஜி அவர்களுக்கு நடந்திருக்கிறது நடந்து கொண்டும் இருக்கிறது

பெயரில்லா சொன்னது…

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி சாதிபேதங்களுக்கு எல்லாம் அப்பால்பட்ட மாபெரும் கலைஞர். அவரால் தமிழர் அனைவருக்கும் பெருமை. அவரைப்பற்றி சமீபத்தில் படித்த இந்தக் கட்டுரை என்னை நெகிழ வைத்தது.

Standing tall, shining still
T R JAWAHAR

That Sivaji Ganesan's statue has become sub-judice should be of little concern for his admirers. The actor non pareil stands tall in the hearts of the people.
Born into a poor family, Ganesan took flight from home at the tender age of seven to meet his tryst with destiny, on the stage and screen. The spark was evident from his early days. In fact, he defied all logic and rules of artistic evolution. Sivaji Ganesan was a consummate actor from day one!

'With my first movie itself, I landed on the moon', he once told this writer. In fact he said, 'moo...o oon' in his typical booming baritone with that all too familiar drag that was vintage Sivaji. For a prolific performer of his calibre he was too humble and ever remained an ardent student of his vocation, even after he had written and re-written the grammar of acting several times over. ' What do I know? I only did what my directors bid me to do. All credit goes to them'.

He was certainly not acting when he said this, but the remarkable under-statement reflected the character and disposition of the man to life and to his career. 'I can never become a director. I can only act and this I can and I want to do till my last breath. I am not so talented as these youngsters who could write, act, sing, dance and direct'.

I still remember those bulging, probing eyes rolling in mock seriousness when he made the statement. Sivaji never wavered from his karmic duty as an actor. He was never even tempted into lofty rhetoric when lesser beings in the industry used to harangue endlessly on the pros and cons of acting. But then Sivaji did not have to speak. His portrayals spoke a million words, wrote a thousand theories on the art and science of acting and has spawned generations of actors, all trying to imitate and emulate him.

The sheer volume of his output is astounding and the versatality and vitality of his performances confound all. The breath-taking array of his roles makes one wonder if it was really just one man who did all this. He could switch from extreme roles in a jiffy. The regal gait of a monarch and the clumsy walk of a village idiot, the cunning viles of a villain or the utopian goodness of a hero, a doting father or a wayward son, a sanguine saint or a senseless maniac, as Lord Shiva or His devotee, from a short-tempered musician to a soft-spoken family man, you name it, and a visage of Sivaji would pop up your mind's screen. He was the undisputed master of melodrama and little wonder that the people of Tamilnadu, have laughed and wept with him for over five decades and will do so for time immemorial by watching his immortal performances.

Sivaji Ganesan was an ageless wonder. If the current generation were to study his career they would emerge completely confused about the chronology of his movies. Would anyone believe if I say that he did Navarathiri, Karnan and Puthiya Paravai in the same year? Or for that matter Thillana Mohanambal and Ooty Varai Uravu? Or again Thiruvarutchelvar and Iru Malargal? And to think that he was just thirty one when he played Kattabomman, the macho Tamil chieftain who dared the British or as the venerable V.O.C just a year later! For him acting was a series of different states of mind and the moment his mood shifted to the latest role on hand, the inner spirit automatically generated the relevant body language and expressions on the exterior. Here was a man whose every cell, every drop of blood, every sinew and muscle could act, thus creating a colossal facade that was much, much more than the sum of all its parts.

Such was the range of his histrionic abilities that he dwarfed all his peers and strode the tinsel world like a towering titan. Bestowed with an imposing demeanour, a powerful screen presence, a resonating voice that could also melt into a cool stream and vibrant eyes housed in a remarkable face, Sivaji was a make-up man's delight and a director's dream.

Sivaji was often accused of over emoting, but then with his bottomless ocean of skill, he could carry on till eternity unless the director bothered to say 'cut'. And few directors had the heart to stop the deluge and often left it to his fans to consume to their fill. In a way such directors did him a dis-service, but Sivaji had also proved that he was capable of 'restraining' himself if the director wanted it that way and movies like Sridhar's Nenjirukkum Varai, Balachander's Yethiroli and Savale Samali stand testimony to this facet of the actor. Sivaji was a gold mine of talent. He could be presented as raw gold, cut to size, polished to taste, made into any kind of jewellery or moulded into any shape. It was wholly upto the director to take his pick. But he was gold all the same, pure and pristine.

Sivaji was a national treasure but was also sadly a victim of regional bias. In a milieu dominated by Hindi film intellectuals who moulded filmi opinion at the national level, Sivaji was deliberately overlooked, though international recognition came his way unsolicited. For them Dilip Kumar and Raj Kapoor were pan Indian icons but Sivaji never figured in their scheme of things just because he hailed from a regional filmdom and spoke a local tongue. And paradoxically for him, in Tamilnadu he suffered because of the reverse effect. While he threw his lot with a national party, he was promptly sidelined owing to the dominance of Dravidian politicians of the sixties, who had appointed themselves as the sole custodians of Tamil. Could there ever be a greater protagonist of Tamil than Sivaji Ganesan or has anyone else enriched and elevated the language as he did, beyond paroachical walls and transcending State borders? Though Sivaji Ganesan brought glory and world attention to the State and his mother tongue, it is also a fact that he was badly let down here. An artiste of international stature was confined to totally local terrain.

All said, Sivaji Ganesan would ever remain the mascot for acting, for admirers and critics alike.

பெயரில்லா சொன்னது…

//நான் எங்காவது சாதிப் பார்த்து ரசிகனானேன் என்று சொல்லியிருக்கிறேன். சாதிப் பார்த்து ரசிகன் என்றால் நான் ஏன் ரஜினி சாருக்கு ஓட்டுப் போடுவேன் என்று சொல்லப் போகிறேன். நான் ரஜினி சாருக்கு என் ஓட்டு என்று தானே சொல்லியிருக்கிறேன்.//

உங்களின் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன்.. உங்களை போலத்தான் எல்லொரும்... உங்கள் பதிலிலேயே இந்த பதிவின் அடிப்படை கருத்து அடிபட்டு போகிறது...நன்றி :-)

பெயரில்லா சொன்னது…

"நீங்களே சொல்லுங்கள் திரு ரஜினி அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் மீது சாதிய முத்திரை குத்தப் பட்டிருக்குமா ? இல்லையா ?"

இது உண்மைதான். அவர் வன்னியகுலசத்திரியர் என்று பாமக ஆளுங்க இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று நிணைக்கிறேன். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவேண்டாம்.

பெயரில்லா சொன்னது…

ஆரம்பிச்சாச்சா?......
முதல்ல இந்த வாதமே தப்பு. நீங்கதான் மக்கள் தலைவராச்சேன்னு சொன்னா பொது விசயத்தில் எந்த கருத்தும் சொல்லாம நாங்க ஒரு நடிகந்தான்னு சொல்லவேண்டியது. சரி நீ நடிகந்தானய்யான்னு சொன்னா ஒடனே என்னோடது மக்கள் சக்திங்க வேண்டியது. அரசியலுக்கு வந்தா அதப் பத்தி பேசலாம் சும்மா எறுமை மாட்டை தண்ணீல அடையவிட்டு வெலை பேசறது சரியில்ல .....ஆனா ஜிகே நீங்க நல்லவேளையா டிஸ்கிய முதல்லயே போட்டாச்சு. மத்தபடி நடிகன் அரசியலுக்கு வந்தா சாதி பாப்பாங்க ஆனா கமல் மேல சாதி பாக்கறதா சொன்னா என்னால் ஏத்துக்க முடியாது..... ஏன்னா அப்பிடி அவங்க ஆளுங்கதான் சப்போர்ட்ன்னு சொன்னா ஒரு அம்தாயிரம் பேருதான ரசிப்பாங்க:) இன்னும் ரஜினிக்கு வேணும்னா தன்னோடது எல்லாமே வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருக்கு இல்லன்னா எல்லாரும் "உங்காளு அவ்ளோதான்னு கும்மியடிப்பாங்க கமலுக்கு அந்த நிலமயில்ல " போனால் போகட்டும் .........கதைதான் அதனாலதான் தொடர்ச்சியா ஓடாம போனாலும் நல்ல படம் எடுக்க முடியுது.....வர்ட்டா.........

கோவி.கண்ணன் சொன்னது…

சரி சரி ... சரியாக கொண்டு வந்து விட்டாச்சு ... இனிமேல் பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் சம்பந்தப்பட்டவர்களே போட்டு வாதம் தொடரலாம் ... எனக்கு சக்தி இல்லை.
சக்தி கொடு ... சக்தி கொடு ... இறைவா ....!
:))

பெயரில்லா சொன்னது…

// எனக்கு சக்தி இல்லை.
சக்தி கொடு ... சக்தி கொடு ... //
இரண்டு புலி பால் வாங்கி அடிங்க
சக்தி கிடைத்து விடும்.
:))))

கோவி.கண்ணன் சொன்னது…

நாகை சிவா said...
// எனக்கு சக்தி இல்லை.
சக்தி கொடு ... சக்தி கொடு ... //
இரண்டு புலி பால் வாங்கி அடிங்க
சக்தி கிடைத்து விடும்.
:))))
இது ஆவரது இல்லை :) நான் என்ன ஐயப்பனா புலிப்பால் சாப்பிட ... இந்த பதிவ எழுதிவிட்டு பின்னூட்டத்தை திறந்தால் புலிவால் பிடித்த மாதிரி இருக்கு :)

பெயரில்லா சொன்னது…

//சக்தி கொடு ... சக்தி கொடு ... இறைவா ....!
:))//
உங்களுக்கு தமிழ் நாட்டு நடிகர்களின் பாடல் ஒன்னும் நினைவுக்கு வரவில்லையா...?
சோதனை தாங்கவில்லை.. அப்படினு கூட பாடியிருக்கலாமே..
தமிழ்குடி தாங்கிகளே போராட்டம் போராட்டம்,

//புலிவால் பிடித்த மாதிரி இருக்கு :)//

ஆமா சாதிப் புலியப் புடிச்சி "சாதி"ச்சிட்டீங்க,
விட்டீங்க உங்களையே கடிச்சிடும்...


அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

//இந்த பதிவ எழுதிவிட்டு பின்னூட்டத்தை திறந்தால் புலிவால் பிடித்த மாதிரி இருக்கு :)//

இதுக்கெல்லாம் கவல படலாமா கோவி..அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...உங்களுக்கு தெரியாதா?

பெயரில்லா சொன்னது…

சிவாஜிகணேசன் நடிப்பு ஜாதி
நடிகர் ஜாதி அல்ல

பெயரில்லா சொன்னது…

//இது ஆவரது இல்லை :) நான் என்ன ஐயப்பனா புலிப்பால் சாப்பிட ... இந்த பதிவ எழுதிவிட்டு பின்னூட்டத்தை திறந்தால் புலிவால் பிடித்த மாதிரி இருக்கு :) //
நான் சொன்ன புலிப்பால் சிங்கையில் கிடைக்கும் புலி
குழலிய கேளுங்க விளக்கமாக சொல்லுவார்
:)

பெயரில்லா சொன்னது…

El kanth de Rajini es buen agente en vida verdadera pero no en las películas:))

பெயரில்லா சொன்னது…

/முதல் நாளே அவருடைய படம் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது, அதிகபட்சமாக சில படங்களை இருமுறை பார்த்ததுண்டு/

என்ன சொல்ல வர்ரீங்க? தலைவர் படத்தை 1 தடவைக்கு மேல் பார்க்க முடியாதுன்னா?
இதுல தலைவரோட ரசிகருன்னு வேற சொல்லிக்கிறீங்க எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.

/எனக்கு தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கவில்லை/
/கமல் நன்றாக நடித்தும் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை, அவர் ஏன் ரஜினிகாந்த் அளவுக்கு வரமுடியவில்லை?/

ஏன்னா கமல் நல்லா நடிச்சது/நடிச்சிக்கிட்டு இருக்கிறது தான் காரணம், தலைவர் கில்லாடிதனமா ஆரம்பத்திலேயே நடிப்புக்கு தலை முழுகிட்டார், அதனால தான் சூப்பர் ஸ்டார் ஆக முடிஞ்சது.

பெயரில்லா சொன்னது…

சரியான் சூனா, பானா வா இருப்பீங்க போலேருக்கு, புத்திய ஒழுங்கா செலவு பன்னுங்க . . . . . . . . .. .

கோவி.கண்ணன் சொன்னது…

//வெங்கட்ராமன் said...
சரியான் சூனா, பானா வா இருப்பீங்க போலேருக்கு, புத்திய ஒழுங்கா செலவு பன்னுங்க . . . . . . . . .. .
//

வெங்கி...!
ம் ... புத்தியை செலவு பண்ணக்கூடாது பெருக்கனும் !
:)
கருத்துக்கு நன்றி !

உதயதேவன் சொன்னது…

சாதி வெறுப்பு, சாதி பாசம் போன்ற நோய் பீடித்துள்ளதால் தமிழனே விரும்பி தமிழ்நாட்டை சாதிய அடையாளம் இல்லாத அண்டை மாநில நடிகர்கள் கையில் கொடுக்க துணிவதும் தமிழனே தேடிக்கொண்ட விதிதான்.
-----unmai*3-------------

Unknown சொன்னது…

ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் சிவாஜியை போன்ற ஒரு மா நடிகனை இந்தியாவில் பார்க்க முடியாது.ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் சிவாஜி அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை காரணம் அந்த காலகட்டத்தில் அவர் ஒரு தமிழன் என்பதே..தேசிய விருதுகளை வாங்கியவர்களில் பெரும்பாலூம் வங்காளிகளும்.மளையாளிகளுமே..காரணம் தேர்வு குழுவில் இவர்கள் ஆதீக்கமே....இருந்தாலும் இன்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜாதி பாகுபாடில்லாமல் சொல்லூம் வார்த்தை இவன் நடிப்புல சிவாஜியை மிஞ்சிடுவாண்டா என்று தான் சொல்வார்கள்,.எம் ஜி ஆர் என்று யாரும் சொல்லமாட்டார்கள்...அவருக்கு தேசிய விருது கிடைத்தது அரசியல் மற்றும் அவர் ஒரு மளையாளி என்பதே...தமிழனை தமிழனே குறை கூறுவதை விட்டு விடுங்கள்..

வல்லவரையன் சொன்னது…

இக்கட்டுரை நடிகர்களின் வெற்றியின் ரகசியத்தை சாதி என்ற சிறு கூட்டுக்குள் அடைக்க முயல்கிறது.

ரஜினி மற்றும் எம்ஜிஆரின் நடிப்பைப் பற்றி பேசும்போது முக்கியமாக அவர்களின் வசீகரத்தையும் 'ஸ்கிரீன் பிரசன்ஸ்' ஐயும் கூறி இருக்கவேண்டும். மக்களுக்கு என்ன பிடிக்கும், என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருவருக்கும் மற்ற நடிகர்கள், இயக்குனைகளை விட அதிகம் இருந்தது. காட்சியமைப்பில் இருவரும் இயக்குனரின் வேலையில் தலையிடுவதும் உண்டு, அந்த தலையீடுகள் அவர்களுக்கு அதிக விசில்களையும் பெற்று தந்தன.

ஒரு காட்சியில் மற்ற நடிகர்களோடு ஒன்றாக நடிக்கும் காட்சிகளில் சிவாஜி கமல் - இருவரும் சற்று அதிகமாகவே மெனக்கெடுவார்கள், தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டுவார்கள். எம்ஜிஆரும் ரஜினியும் இதை மிக எளிதாக செய்வார்கள் (அவர்கள் நடிப்பை இங்கே ஒப்பிடவில்லை என்று புரிந்துகொள்க). அதற்கு பெயர் தான் 'ஸ்கிரீன் பிரசன்ஸ்'. இது யாருக்கு அமைகிறதோ அவரே மாஸ் ஹீரோ ஆக முடியும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், சிவாஜி, கமல் நடிக்கும் காட்சிகளில், நாம் அந்த காட்சிகளை முழுமையாக உள்வாங்கி ரசிக்கிறோம். எம்ஜிஆர், ரஜினி நடிக்கும் காட்சிகளில் நாம் அவ்விருவரையும் மெய்மறந்து ரசிக்கிறோம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்