வாலிப வயோதிக அன்பர்களை துன்புறுத்தும் சுய இன்பம் பற்றிய 'விழிப்புணர்வு' பழனி / சேலம் சித்த வைத்தியர்களைத் தாண்டி பதிவுகளாகவும் வந்து கொண்டி இருக்கிறது, விழிப்புணர்வு என்ற பெயரில் அறிவு வெளிச்சத்தை அணைக்கும் செயலாக தன்னின்பம் பற்றிய தவறான விளக்கங்களை கொடுக்கிறார்கள், வெற்றிலைப் போட்டால் கோழி முட்டும் என்று சிறுவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து காக்க நகைச்சுவையாகக் கூறுவதுண்டு, கோழி எப்படி முட்டும் ? என்று யோசித்துக் கொண்டே வெற்றிலையை மறந்துவிடுவான் சிறுவன், காம்பைக் கிள்ளிக் திண்ணக் கொடுப்பார்கள், வெற்றிலையால் கெடுதல் எதுவும் இல்லை என்றாலும் சிறுவயதில் பற்களில் கறை படுவது முகத் தோற்றத்தையும் சிரிப்பழகையும் கெடுத்துவிடும் என்பதால் அவ்வாறு கூறி தடுப்பார்கள். பருவ வயதில் கைப் பழக்கம் எனப்படும் தன்னின்பம் பற்றிய விழிப்புணர்வுகளும் அத்தகையது என்றாலும் அவை எந்த வயதிற்கு ஏற்ற பரிந்துரை அல்லது விழிப்புணர்வு என்று அடிப்படை அறிவே இல்லாமல் பொதுவாக அவை தவறு என்கிற ரீதியில் எழுதப்படுகிறது, தவறுதலாக சித்தரிக்கப்படுகிறது.
பெண் பூப்பெய்தும் பருவம் தான் ஆணின் திருமண வயதையும் முடிவு செய்கிறது என்கிற நிலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண வயது ஆணுக்கு 15 பெண்ணுக்கு 12 - 13 என்ற நிலையில் இருந்தது. ஆண் பெண்ணைவிட இரண்டு வயதாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்கிற சமூக எண்ணங்களின் செயல்பாடுகளாக ஆணின் திருமண வயது 16 என்று முடிவு செய்து வைத்திருந்தனர். ஆண் உடல் ரீதியாக வளர்சி அடைந்து கிளர்ச்சி அடையும் பருவம் 15 - 16 வயது தான், அந்த காலகட்டத்தில் திருமணம் செய்வது நடைமுறையாக இருந்தது, அன்றைய ஆண்களுக்கு பொருளாதார வழிநடத்தல்களாக இல்லம் சார்ந்த தொழில்கள் இருந்ததால் திருமணத்தைத் தள்ளிப் போட வேறு காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பருவ வயதில் திருமணம் செய்துவைப்பது நடைமுறையாக கடைபிடிக்கப்பட்டுவந்தது. சேலம் சித்த வைத்தியர்களின் அறிவுறுத்தல்கள் 16 வயதினருக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம், காரணம் சுய இன்ப நாட்டத்திலோ அல்லது பாலியல் தொழிலாளியை நாடும் எண்ணங்களையோ வளர்த்துக் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கைப் பற்றிய எண்ணங்கள், அதன் நன்மைகள் ஆகியவற்றை புறந்தள்ளக் கூடும் என்பதால் விலைமாந்தர்களிடம் செல்வது முறையற்ற உறவு என்ற வகையில் தடுக்கப்படுவது போலவே சுய இன்பப் பழக்கம் உடல் ரீதியாக கேடுவிளைவிக்கக் கூடியவை என்கிற அறிவுறுத்தல்களை செய்வதால் முறையான பாலியல் வடிகாலுக்கு திருமண உறவை நம்பி, விரும்பி செய்து கொள்வார்கள் என்று உளவியல் ரீதியாக கிளப்பிவிடப்பட்டவையே சுய இன்பம் பற்றிய கட்டுக்கதைகள்.
தற்பொழுது வயதும் பருவமும் திருமணத்தை முடிவு செய்ய முடியாத நிலையில் தனிமனித பொருளாதார மையம் பெரும் அறை கூவலாக அமைந்துவிட்டபடியால் கல்லூரிப் படிப்பை முடித்து பின்னர் வேலை தேடி, வேலை வாய்ப்பு பெற்று, ஓரளவு கால் ஊன்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட நிலையில் திருமணம் என்கிற முடிவை எடுக்க 25 வயதிற்கு மேல் ஆகிறது. பெற்றோர்களே விரும்பிக் கொடுத்தாலும் 20 வயது பெண்ணை மணந்து கொள்ள 25 வயது இளைஞர்கள் முன்வருவதில்லை. பெண்ணுக்கான திருமண வயது அரசு 18 என்று வழிகாட்டினாலும் 22 வயதிற்கு மேல் தான் திருமணப் பேச்சு துவங்குகிறது. ஓரளவு நிலையான வருமானம் உள்ள ஆணை பெண்ணுக்கு மணம் முடிக்க ஆணின் வயது 28 வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பெண்ணையும் படித்தவளாகவே கொடுப்பது தான் அவர்கள் இருவருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதால் பெண்ணும் படித்து வேலைக்குச் சென்ற பிறகே திருமணம் செய்விப்பது வழக்கமாகி இருக்கிறது. முதிர்கன்னி பற்றி கண்ணீர் கவிதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டதற்குக் காரணம் சமூகப் புரட்சி நடந்துவிட்டது என்பதல்ல. முதிர்கன்னி என்றால் எத்தனை வயதிற்கு மேற்பட்டவர்முதிர்கன்னி ? என்கிற வயது பற்றிய முடிவெடுக்கத் திணற வேண்டிய நிலையில் முதிர்கன்னிக் கவிஞர்களின் சிந்தனை சிறகுகள் படபடக்க மறுத்துவிட்டன. திருமணம் பற்றிய முடிவுகளுக்கு பருவமும், வயதும் காரணிகள் இல்லை, பொருளாதாரமே முதன்மைக் காரணம்.
தனிமனித பொருளாதார மேம்பாடு திருமணம் எப்போது என்பது பற்றித் தான் முடிவு செய்யும். ஆனால் பருவ வயதை எட்டி ஒரு சில ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் உடல் ரீதியான இச்சைகளுக்கு அவை பொறுப்பேற்றுக் கொள்ளாத போது தனிமனித பாலியல் தேவையின் வடிகாலுக்கு தீர்வு ? அரசுகளைப் பொருத்த அளவில் பாலியல் தொழிலை ஊக்குவிக்க முடியாத நிலைக்குக் காரணம் குடும்ப அமைப்புகள் சீர்கெட்டுவிடும் என்கிற அக்கரை கிடையாது, பாதுகாப்பற்ற உறவினால் நோய் பெருகும் என்பதே காரணம், ஏனெனில் தனிமனித பாலியல் தேவைக்கு வடிகால் இவை என்று திருமண பந்தம் தவிர்த்து வேறெதையும் காட்ட முடியாத நிலையில் ஒருவர் பாலியல் தொழிலாளியை நாடுவதைத் தடுக்கும் உரிமையையும் அரசுகள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் பாலியல் நோய சார்ந்த விழிப்புணர்வுகளை செய்வதை மட்டும் அரசுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.
தனிமனித வக்கிரம், மித மிஞ்சிய பாலியல் உணர்வுகள், வண்புணர்வுகள், கள்ள உறவுகள் என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அடிப்படை ரீதியிலான திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. பாலியல் தொழிலாளியை நாடுவதில் உள்ள ஆபத்துகள் கடுமையான பாலியல் நோய் தொற்றுகள், அதனை பிறருக்கும் பரப்புதல் கூடவே பண விரயம். ஆனால் சுய இன்பம் எந்த ஆபத்தும் அற்றது என்பதால் தனிமனித பாலியல் தேவைக்கு சரியான தீர்வு அது மட்டுமே.
மதங்கள் அனைத்துமே சுய இன்பத்தை பாவம் என்றும் ......செய்துவிட்டால் நரகம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றன, மதங்களின் கோட்பாட்டின் படி சுய இன்பத்திற்கு தண்டனைக் கிடைக்கும் என்றால் 99.9X விழுக்காடு ஆண்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. ஒரு நகைச்சுவைக்காக சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு கைவெட்டப்படும் என்று வைத்துக் கொண்டால் யாருக்கு கை மிஞ்சும் ? ஒரு வேளை தண்டனை எதுவும் கிடைக்காதவருக்கு ஏற்கனவே கைகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது செயல்படாத உறுப்பு கொண்டவராக இருக்க வேண்டும். மதங்கள் வேண்டுமென்றால் வேறு பிரச்சாரங்கள் செய்யலாம் அடுத்தவர் உறுப்பை அனுமதியின்றித் தொடுவது பாவம், தண்டனைக்குறியது. இது போன்ற கோட்பாடுகள் இருந்தால் வரவேற்பேன். வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?
நேற்று சித்த வைத்தியம் என்ற பெயரில் சுய இன்பம் பற்றி உளறி எச்சரித்த பதிவு ஒன்றை படிக்க நேரிட்டதால் தான் இதை எழுதுகின்றேன், மதவாதிகள் இதுபற்றி பெரிதாக எச்சரிக்கைக் கொடுப்பதில்லை, எழுதினால் ஏன் வம்பு என்று நக்கைக் கடித்துக் கொள்வதுடன் தன்கையையே கட்டிப் போட்டுக் கொண்டு தான் எழுத நேரிடும் என்பதால் அவர்கள் சுய இன்பம் பற்றி எழுத வெட்கம் அடைந்துள்ளார்கள் மற்றபடி நாமும் எழுதலாம், கைப் பழக்கம் இல்லாத சமூகத்தை உருவாக்கி சொர்கத்திற்கு அனுப்புவோம் என்று கனவு காணுவார்கள் ஆனாலும் அதற்கு அவர்கள் கை அனுமதிக்கனுமே ? காலத்துக்கும் ஏற்றக் கருத்துகள் எங்கள் மதப் புத்தக்கத்தில் முத்துகளாகக் கோர்க்கப்பட்டுள்ளன என்று அளந்துவிடும் எவரும் சுய இன்பம் பற்றி எழுதுவதை அடக்கி வாசித்தே வருகின்றனர். தனிமனிதன் யாருக்கும் தொல்லை இன்றி தாம் ஈடுபடும் சுய இன்பத்தை எந்த ஒரு அரசும் வெளிப்படையாக தடையாக அறிவிவிக்கவில்லை என்பதிலிருந்தே இது பற்றிய கருத்துகள் காலம் கடந்துவிட்டவை என்பது உறுதியாகின்றது, மதப் புத்தகங்களில் குறிப்பிட்ட பக்கங்களை பிய்து எரியுங்கள். கடவுள் மனிதர்களை எல்லை மீறி சோதிப்பது இல்லை, அதனால் தான் மனிதர்களின் உறுப்பை எட்டும் அளவுக்கு நீளமான கைகளையும் விரல்களையும் வழங்கியுள்ளான் - நம்புங்கள். :). எந்த ஒரு அறிவியல் ஆய்வும் கட்டுப்பாடான சுய இன்பப் பழக்கத்தை தவறு என்று சொல்லவில்லை, மாறாக உடல் ரீதியான நன்மைகள் என்றே பட்டியல் இடுகின்றன. தேவையின் போது நாய் உள்ளிட்ட விலங்கினங்களும் நாவினால் தனக்கு தானே செய்து கொள்கின்றன. இணைப்பு
பசி, தூக்கம், உடல் அரிப்பு போன்று தனிமனித பாலியல் வேட்கையும் அதற்கான தீர்வும் தேவையான ஒன்றே, இதற்கு எளிய வழி தன்னின்ப தீர்வு தான். தன்னின்ப / கைப்பழக்க செயல்பாடுகள் தவறு என்றால் ஏன் தவறு ? எந்த வயதினருக்கு தவறு ? என்றெல்லாம் விளக்கிவிட்டு அதன் பிறகு அது பற்றிப் பேசலாம். மொட்டையாக விந்துவிட்டான் நொந்து கெட்டான் இவையெல்லாம் எதுகை மோனையாக எழுதப்பட்டது என்பது தவிர்த்து வேறெதும் அறிவுபூர்வமாக சொல்லவில்லை என்பதே உண்மை.
சுய இன்பம் தவறு என்கிற முட்டாள்களின் தவறான வழிகாட்டல் மூலம் அரைகுறையாக புரிந்து கொள்ளும் பருவ வயதை எட்டிய ஒருவர் / திருமணம் ஆகாத ஒருவர், ஆண்/பெண் உறவே சரி என்று எண்ணி பாலியல் தொழிலாளியை நாடும் வழிகாட்டலாக எடுத்துக் கொள்வர், அதன் ஆபத்துகள் மிகுதி, கூடவே சிறுவர் / சிறுமியர்களையும் சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள் என்றாவது எழுதும் மடையர்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் அவ்வாறு எழுதமாட்டார்கள்.