பின்பற்றுபவர்கள்

மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 செப்டம்பர், 2013

செவ்வாயோ வெறும் வாயோ !

மதப் புத்தகங்களுக்கு மாற்று விளக்கம் சொல்ல வேளை வந்துவிட்டது, பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படை மூலக் கூறுகள் பூமியில் இருந்ததற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை, அவை ஒருவேளை செவ்வாயில் இருந்திருக்கலாம் எனவே செவ்வாய் தான் உயிரின தோற்றத்தின் மூலமாக இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர், அறிவியல் கூற்றுகள் காலத்திற்கும் ஏற்றவை என்பதை அறிவியலே ஏற்றுக் கொள்வது கிடையாது, அறிவியல் கொள்கைகள், அறிவியல் கூற்றுகள் மாறக் கூடியது என்பதை அறிவுள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள், அதில் நானும் ஒருவன், எனக்கு செவ்வாய் தான் மூலமா, பவுத்திரமா ? என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் இல்லை. :)


ஏற்கனவே மதத்தையும் அறிவியலையும் கலந்து பேதிக்கு / போதிக்கும் மருந்தாக கொடுப்பவர்களுக்கு தான் இந்த கருத்துகள் அடுத்து என்ன செய்யலாம் என்று மண்டை குடைய வைத்திருக்கும். நானே சிலவற்றை எடுத்து தருகிறேன்.

இறைவன் ஆறு நாளில் உலகை படைத்தான் என்று போதித்த முந்தைய விளக்கங்களை இனி உலகம் என்றால் அம்மையப்பன் அம்மையப்பன் என்றால் உலகம் என்ற ரீதியில் உலகம் என்றால் செவ்வாயும் பூமியும், செவ்வாயும் பூமியும் என்றால் உலகம் என்று புது விளக்கம் அளிக்கலாம்.

அது சரி, களிமண்ணில் இருந்து மனிதனை உருவாக்கினார் என்பதை எப்படி சொல்வதாம் ? என்று கேட்போருக்காக, களிமண்ணால் மனிதனை படைத்தார், என்பது உண்மை தான் என்று கூறிவிட்டு, ஆனால் அதனை செவ்வாயில் இருந்து எடுத்த களிமண் என்பதை இப்போது தான் அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறுவீராக. ஆக மனிதனை (செவ்வாயில் இருந்து எடுத்த) களிமண் மூலமாக படைத்தான் என்று அடைப்புக் குறிக்குள் எழுதிவிட்டால் விளக்கமாகிப் போகும்.

இதுக்கெல்லாம் இந்து மதத்தினர் எளிய விளக்கம் கொடுப்பார்கள், எப்படி என்று கேட்கிறீர்களா ? கிருஷ்ணரின் பவளச் 'செவ்வாயில்' இருந்து தான் உலகமும் உயிர்களும் தோன்றியது என்பதை இந்து கூற்று மெய்பிக்கிறது என்பார்கள்.  படிச்சா செவ்வாய்க்கே செவ்வாய் தோஷம் ஏற்பட்டது போல் இருக்கா ?

:)

இணைப்பு:



24 ஜூலை, 2013

கிறித்துவர்களின் இறைவன் யார் ?

அண்மையில் மலேசியாவிற்கு வாடிகனால் அனுப்பப்பட்ட ஒரு கிறித்துவ மதபிரசங்கி பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார். மலேசிய கிறித்துவர்களை வழிநடத்த வந்த அவர், மலேசியாவில் மலாய் பேசும் கிறித்துவர்கள் தங்களுடைய இறைவனை 'அல்லா' என்று அழைக்கலாம், என்று ஒப்புதல் கொடுத்தார், ஏற்கனவே மலாய் மொழியில் இறைவன் என்ற சொல்லுக்கு 'அல்லா' என்றே வழங்கிவருகிறார்கள், எனவே மலாய் இஸ்லாமியர்கள் அல்லாத மலாய் கிறித்துவர்கள், மற்றும் இந்தோனேசிய கிறித்துவர்கள் வழிபாட்டின் பொழுது 'அல்லாவிடம்' தான் மன்றாடுவார்கள், மலாய் இஸ்லாமியர்களுக்கு எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் மலாய் கிறித்துவர்களும் 'அல்லா'வைத்தான் வணக்குத்துக்கு உரியவராக வழிபடுகிறார்கள் என்பது தெரியும்.  இது போன்று அல்லாவை வணங்குபவர்களில் அரபியை தாய்மொழியாகக் கொண்ட கிறித்துவர்களும் உண்டு. அதாவது அரேபிய மொழியில் இறைவன் என்பதற்கு 'அல்லா' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. 'அல்லா ஹு அக்பர்' என்றால் இறைவன் மிகப் பெரியவன் என்றே பொருள்.

இந்துக்கள் வழிபடும் இறைவன் சிவன், கண்ணன், பிள்ளையார் மற்றும் முருகன் அரேபியில் எழுத நேரிட்டால் இந்துங்களின் அல்லா சிவன், இந்துக்களின் அல்லா கண்ணன், இந்துக்களின் அல்லா பிள்ளையார் மற்றும் இந்துக்களின் அல்லாக்களில் மற்றொருவர் அல்லா முருகன் என்று எழுதுவார்களா ? எனக்கு தெரியவில்லை, ஆனால் மலாய் மொழிப் பெயர்ப்பில் கூகுள் மலாய் மொழிப் பெயர்ப்பு அப்படித்தான் காட்டுகிறது.  


ஏற்கனவே மலாய் கிறித்துவர் ஒருவர் தன்னுடைய கடையின் பெயரில் 'அல்லா' வை சேர்த்து எழுதி இருந்ததை மலாய் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு காட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று மலாய் கிறித்துவர்கள் 'அல்லா'வைப் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பாகியது, இருந்தாலும் பிற கிறித்துவர்கள் (மலேசிய இந்திய கிறித்துவர்கள் மற்றும் மாலேசிய சீனக் கிற்த்துவர்கள்) அவ்வாறு பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தல் எதுவும் இல்லை. இப்படி இருக்கையில் போப்பின் தூதுவர் மலேசிய கிறித்துவர்கள் அனைவரும் பைபிள் வாசிக்கும் பொழுதும் வழிபாட்டின் பொழுதும் 'அல்லா' வை பயன்படுத்தச் சொன்னதும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கி, மலேசியாவில் பிறர் அல்லாவைப் பயன்படுத்தலாமா என்பதை அரசோ / நீதிமன்றமோ முடிவு செய்யாத நிலையில் இருக்கும் பொழுது இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று மலேசிய அரசு தரப்பு மதபோதகருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளது. மதபோதகரும் அங்கு தொடர்ந்து தங்கி மதபோதனை செய்ய வேண்டிய சூழலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

அடைப்படையில் கிறித்துவர்களின் நம்பிக்கையும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் ஒன்றே, கிறித்துவர்கள் முகமது நபியை இறைத்தூதராக ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஏசு கிறித்துவே (சுதன்) இறைவன் அவரே  மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர், இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் ஏசு கிறித்து இறைவன் அல்ல இறைத்தூதர்களின் ஒருவர், அப்படி என்றால் யார் இறைவன் ? கிறித்துவர்களின் இறைவன் தான் இஸ்லாமியர்களுக்கும் இறைவன், ஆனால் ஏசு கிறித்து இறைவன் அல்ல என்பது இஸ்லாமிய தரப்பினரின் குரான் வழி நம்பிக்கை.

விக்கிப் பீடியாபடி முகமது நபிக்கு முன்பு இருந்த பாகன் பல தெய்வ வழிபாட்டு முறையில் இருந்த இறைவனுக்கும் அல்லா என்று தான் பெயர், ஹிப்ரு மொழியிலும் அரபி மொழியிலும் வழங்கப்படும் 'அல்லா' என்று சொல் வழக்கு உச்சரிப்பு என்ற வகையில் பெரிய வேறுபாடும் இல்லை. சவுதி அரபி கிறித்துவர்கள் இறைவழிப்பாட்டில் அல்லா என்று சொல்ல எந்த தடையும் இல்லை, அது ஒரு இறைவன் குறித்த சொல் என்பதுடன் இருவரின் இறைவனும் ஒன்றே, அவர்களும் அல்லாவைத் தான் வழிபடுகிறார்கள் என்கிற புரிதல் உள்ளது, ஆனால் மலாய்காரர்கள் 'அல்லா' தனிப்பட்ட முறையில் இஸ்லாமியரின் பயன்பாட்டிற்கானது என்று சொல்லுகிறார்கள். நம்ம தமிழ் முஸ்லிம்களும் 'வணக்கம் சொல்லுதல்' என்றால் அல்லாவுக்கு வணக்கம் சொல்லுவதுடன் முடித்து போட்டுக் கொண்டு முடிந்தவரை வணக்கம் சொல்லவே தயங்குவார்கள், மறுப்பார்கள், வணக்கம் சொல்லுவதற்கும் கும்பிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு, தமிழ் தெரிந்தும் தமிழ் இஸ்லாமியர்களிடையே இவ்வளவு தகறாரு என்றால் 'அல்லா' என்ற ஒற்றைச் சொல்லை யார் யாரெல்லாம் சொந்தம் கொண்டாடுவது என்பது தான் இப்போது மலேசியாவில் மலாய் இஸ்லாமியர்கள் கிளப்பும் பிரச்சனை.

அரேபியாவில் கிறித்துவர்களுக்கு அனுமதி இருக்கும் ஒரு சொல் மலேசியாவில் மறுக்கப்படுவதற்கு உணர்ச்சி வசப்படுதல் அல்லது வெறும் மொழி மற்றும் மொழிப் பெயர்ப்பு பிரச்சனை என்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை, 'இறைவன்' என்பது பண்பு மற்றும் தொழில் பெயராகப் பயன்படுத்தலாம், 'இறைவன் சிவன்' என்னும் பொழுது வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும்  அதை பிரச்சனையாக்குவதில்லை, அது நம்பிக்கை சார்ந்த ஒன்று என்ற வட்டத்திற்குள் வந்துவிடும். அரபியில் அல்லாவுக்கு வேறு எதுவும் பெயர் இருந்தாலும் (அளவற்ற அருளாளன், நிகரற்ற பொருளாளன் மற்றும் 100க் கணக்கான பெயர்கள் இருந்தும்) அவை புழக்கத்தில் பெயராக அழைக்க அல்லது பயன்படுத்தப்படாததால் தான் இத்தகைய குழப்பங்கள் வருகிறது என்றே நினைக்கிறேன்.

*******

மலேசியாவில் இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை நோன்பு (ரம்ஜான்) மாதத்தில் ஒரு பள்ளி மதிய உணவிற்கு கழிவறை / குளியல் அறையில் இடம் ஒதுக்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது,  அதாவது இஸ்லாமிய மாணவர்கள் பகலில் சாப்பிடாமல் நோன்பு இருக்கும் பொழுது மற்ற மாணவர்கள் உணவருந்தினால் இஸ்லாமிய மாணவர்களின் நோன்பு பாதிக்கப்படும் என்று விளக்கம் சொல்லி இருக்கின்றது பள்ளி நிர்வாகம், சிங்கப்பூரில் மலாய்காரர்கள் நடத்தும் உணவுக் கடைகளில் 80 விழுக்காடு விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கின்றது, காரணம் மலாய் உணவை பிறரும் உண்ணுகிறார்கள் என்பதுடன் ஒரு மாதம் கடையை அடைத்தால் பின்பு கடைக்கு வாடகை எப்படி கொடுக்க முடியும் என்பதுடன் ஒரு மாதத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவார்களா என்கிற அச்சமும் இருப்பதால் மலாய் இஸ்லாமியர் உணவு கடைகள் அடைக்கப்படுவதில்லை. மாணவர்கள் நிலைமை வேறு என்றால் கழிவறையில் இடம் ஒதுக்கிக் கொடுப்பது மட்டும் எப்படி சரியாகுமோ ? அதற்கு மாற்றாக உணவு இடைவேளையில் கேண்டின் பக்கம் இஸ்லாமிய மாணவர்கள் செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தி இருக்கலாமே.

இதுவும் மலேசிய தகவல் தான், ஒரு சீன வலைப்பதிவர் ஒருவர் தனது நண்பியிடன் சேர்ந்து ரம்சான் நோன்பு துவங்கும் நாளில் 'ஹேப்பி ஹரிராயா ஹேவ் எ நைஸ் ஹலல் பாக் த்குதே' என்று வலையில் வெளியிட்டு கைதாகியுள்ளார், பாக் குத்தே என்பது பன்றி இறைச்சியில் செய்யப்படும் ஒருவகை சூப் உணவு. பிரச்சனைக்கு வேறு எதுவும் வேண்டுமா ? இங்கு சீன சைவ உணவு வகைகளில் சோயாவில் செய்த சைவ மீன், சைவ மட்டன், சைவ இறா உள்ளிட்டவைகள் உண்டு, கிட்டதட்ட அதே பொருளில் தான் மேற்கண்ட  பொருளில் தான் கொஞ்சம் சீண்டிப்பார்க்கும் எண்ணத்துடன் சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார், ஹலல் பீர் இருக்கும் பொழுது, அனுமதிக்கப்படும் பொழுது (தெரியவில்லை என்றால் அண்ணன் சு.பி பதிவை பாருங்கள்') ஒருவேளை சோயாவில் செய்து அதை  ஹலல் பாக் த்குதே என்று சொன்னாலும் தவறாகுமோ ?

**********

இஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்கிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க.  

இணைப்புகள் :

http://www.malaysia-chronicle.com/index.php?option=com_k2&view=item&id=130332:heat-is-on-alvin-vivian&Itemid=2#.Ue_1fI2bdh0

2 பிப்ரவரி, 2013

சோ இராமசாமி இஸ்லாமிய நண்பன் ஆன கதை !


நேற்றில் இருந்து சிங்கையில் விஸ்வரூபம் ஓடுது, இங்கே முதலில் வெளி இடவும் இல்லை, பிறகு இடை நிறுத்தவும் இல்லை, தமிழக கூத்துகள் முடியட்டம் என்று இங்குள்ள தனிக்கைக் குழு காத்திருந்ததோ என்னவோ, நேற்று தீர்ப்பு அப்படி இப்படி என்றதும் அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் அனுமதி கொடுத்துவிட்டனர், நேற்று முதல் இங்கே விஸ்வரூப காய்சல் அடிக்கக் துவங்கி இருக்கிறது, கோல்டன் டிஜிட்டல் மற்றும் ரெக்ஸ் திரைவளாகங்களில் மொத்தம் ஐந்து அரங்குகளில் விஸ்வரூபம் காட்சி. கூட்டத்திற்கு குறைவில்லை, சனி / ஞாயிறும் அரங்கு நிறையும் என்றே நினைக்கிறேன்.

145 நிமிட காட்சி, மிகப் பெரிய வெட்டுகள் எதுவும் இல்லை, தடைசெய்யக் காரணம் என்று சொல்லப்பட்ட, சர்சைகள் என்று கிளப்பிவிடப்பட்ட காட்சிகளும் இருந்தன. நடனக் கலைஞராக அறிமுகம் ஆகும் கமல் வரலாறு அஜித் போன்று செயற்கையாக செய்யாமல் உடல் நளினத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். ஆப்கான் காட்சிகள் ஆவணப்படம் போன்று இருந்தது, அதில் திரைப்படத்திற்கு முன்பே நாம் கேள்விப்பட்டது, படித்தது,  யுடியுபில் பார்த்ததில், வழிபாட்டுடன்  கழுத்தறுப்பது, மனித வெடிகுண்டு, பொது இடத்தில் தூக்குப் போடுவது, ஓஃபிய விற்பனை இவற்றை  சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று சொல்வதை விட கஷ்டப்பட்ட எடுத்த காட்சிகள் என்று தான் சொல்ல வேண்டும், 100க் கணக்கான துணை நடிகர்கள், ஆப்கான் குகைகள் ஆப்கானிய உடையுடன், ஆண்கள் பெண்கள், அவர்களின் பின்புலம், அமெரிக்க வெறுப்பு, எதிர்ப்பு.....ஆப்கானில் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்க்க ஆவணப் படம் போல் தான் இருந்தது, ஆப்கான் தவிர்த்து அமெரிக்க காட்சிகள் விறுவிறுப்பான துறத்தல் ரகம், மற்றபடி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று சொல்ல காட்சிகள் எதுவும் இல்லை. பில்லா - 2 போல் படம் முழுவதும் துப்பாக்கி சத்தம். படத்தொகுப்பாளரை படம் ரொம்ப வேலை வாங்கி இருக்கும் போல். 

படத்தில் கமல் இஸ்லாமியராகவே வந்து போகிறார்.ஹிரோவும் அவன் செயலும் நல்லவை எனும் போது ஹிரோவின் மதமும் இது தான் என்று தெளிவாகக் காட்டும் பொழுது மதத்தை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று யார் கொளுத்திப் போட்டதோ, இவை வெறும் பேரம் படியாத அரசியல் திசைத் திருப்பல்கள் மட்டுமே, அதற்கு தமிழக இஸ்லாமிய அமைப்புகள் பகடைகாய் ஆகியுள்ளன, இது தெரியாமல், படத்தையும் பார்க்காமல் தாறுமாறாக எதிர்ப்புகள் குவிந்திருப்பது, மதவாத அமைப்புகள் நினைத்தால் மதப் பற்றாளர்களை உணர்ச்சி வசப்பட வைக்க முடியும் என்பதை நிருபனம் செய்துள்ளது. விஸ்வரூபத்திற்கு எதிரான தாண்டவம் தமிழகத்தில் மதவெறிபரவி வருவதை உணர்த்துகிறது, ஒரு பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர் எடுத்தப் படத்தை சிறுபான்மையினர் எப்படி தடை செய்யலாம் ? என்று உணர்ச்சி ஊட்டப்பட்டால் மதக்கலவரம் தவிர வேறு என்ன நடக்கும் ?  கமல் நினைத்திருந்தால் இந்துத்துவவாதிகளை நாடி தன் படத்திற்கு ஆதரவாக களம் இறக்கிவிட்டிருக்க முடியும், கமலை கண்டபடி திட்டும் மடையர்களுக்கு இது புரியுமா ? புரியாதது போல் நடிக்கிறார்களா ? மற்றவர்களுக்கு உணர்ச்சி இருக்காது என்று நம்புகிறார்களோ ?

அமெரிக்ககாரன் குழந்தையை, பெண்களை கொல்லமாட்டான் என்று ஒரு தீவிரவாதி பேசும் வசனத்தை நான் ரசிக்கவில்லை, அமெரிக்ககாரன் ஈராக், ஆப்கான் போரில் குழந்தையை,பெண்களை கொன்றானா ?  இல்லையா என்பது அமெரிக்க நண்பனான சவுதிக்கு தெரியாதா ? சவுதிகாரன் சகித்துக் கொள்ளும் சங்கதி ஒன்றைத் தானே தானும் சொல்லி இருக்கிறார்.படத்தில் அமெரிக்ககாரன் பெட்ரோலுக்காக சண்டையிடுகிறான் என்றும் வசனம் வருகிறது, எனவே குறிப்பிட்ட வசனத்தை அமெரிக்க அடிவருடித்தனம் என்று சொல்வதையும் என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. ஒருவேளை ஆப்கானில் பெண்களையும் குழந்தைகளையும் கேடயமாக பிடித்துக் கொள்வார்களோ என்னவோ, அதுபற்றி தெளிவான காட்சியை கமல் வைக்கவில்லை, என்பதால் அந்த வசனம் படத்தில் ஒரு இடறல்தான்,

படத்தைவிட படவிவகாரம் தான் விஸ்வரூபம் ஆகியது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் - 2 தொடரும் என்று போடுகிறார்கள், கமலுக்கு இனிமேலும் அந்த ஆசை இருக்குமா ?  படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா நல்ல தேர்வு, ஓமராக நடித்திருப்பவர் காட்சிக்கு காட்சி பயம் கொள்ளச் செய்யும் அளவுக்கு அசத்தி இருக்கிறார், 

*****
கூட்டத்தோடு கூட்டமாக 'சோ. இராமசாமி' விஸ்வரூபத்திற்கு தடை சரிதான் என்று பேசியுள்ளார். படத்தில் பார்பனர்கள் பற்றிய காட்சி உள்ளது, கமல் கோழி சமைத்துவிட்டு, 'பாப்பாத்தி அம்மா உங்களுக்குதான் இதோட டேஸ்டு நல்லா தெரியும், கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன், எங்க ஆத்துகாரி கூட சிக்கன் விரும்பி சாப்பிடுவா என்று நடனம் கற்றுக் கொள்ளும் பெண்ணிடம் சொல்லுவார். பார்பனர்கள் கோழி சாப்பிடுவது தவறு என்று யாரும் தவறாக நினைப்பதில்லை, ஆனா கமல் இப்படி போட்டுக்கொடுக்கிறாரே என்று சோ நினைத்திருக்கக் கூடும், அடுத்து கமலின் மனைவியாக காட்டப்படுவர் சொல் தூய்மையாக 'பிராமணாள் பாஷை' பேசுகிறார், படத்தில் கமல் ஒரு முஸ்லிம் என்று தெரிந்தும் அவரை வெறுக்காமல் அவருடனேயே ஒட்டிக் கொள்கிறார், ஒரு இந்துப் பெண், நம் பிரமணா சமூகத்தைச் சார்ந்த பெண் ஒரு முஸ்லிமுக்கு மனைவியாக எப்படிக் காட்டலாம் ? என்று நினைத்து சோ எரிச்சல் அடைந்திருக்கக் கூடும். சாலமன் ருஷ்டியுடன் பத்மலெட்சுமி கொஞ்ச காலம் மனைவியாக வாழவில்லையா ? கமல் காட்டியது புதுசா ?  மற்றபடி சோ இராமசாமி இஸ்லாமிய நண்பன் ஆகி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை, ஒரு இந்துத்துவ அடைப்படைவாதி இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு ஏற்படுவை இவை இவை என்று தெரியவந்தால் உள்ளுர ரசிப்பான், சோ வுக்கு தமிழக களேபரங்கள் தெரியாதா ? தெரிந்தே கார்டூன் போட்டு கலவரம் ஏற்படுத்தும் தினமலர் வகையறாக்களை சார்ந்த இவர் இது இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படம் என்று கூறி இருந்தால் கூட நாம் ஒருவேளை இவர்கள் மாறிவிட்டார்களோ என்று நினைக்கலாம், ஆனால் இவர் சொன்னகாரணம், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் தடை செய்யக் கூடிய படம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். 

*********

தமிழகத்தில் மதவாத மற்றும் சாதிய சக்திகள் பெருகிவருவதால் எதிர்காலத்தில் (ஓய்வு வயதில்) கூட தமிழகம் திரும்பவது பற்றி  யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்,

28 ஜனவரி, 2013

கமலஹாசன் ஏற்கனவே இஸ்லாமியர்களை இழிவு.....


எதோ விஸ்வரூபம் படத்தில் மட்டும் தான் கமலஹாசன் முல்லா ஓமர் மற்றும் ஆப்கானிய தலிபான்களை தீவிரவாதிகளாகவும், அவர்கள் கையில் வைத்து புனித போருக்கு அழைப்பு விடுக்கும் புனித புத்தகத்தை தீவிரவாத நூலாகக்கி கேவலப்படுத்தி இழிவு படுத்தினார் என்பதில்லை, கமலஹாசன் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதை ஏற்கனவே துவங்கிவிட்டார், அவ்வை சண்முகி படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே கமல் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருப்பதை தெரிந்து கொள்ளலாம், அந்த படத்தில் கமலின் நண்பராக வரும் நாசர் ஒரு முஸ்லிம் சமையல்காரனாக காட்டப்பட்டு இருப்பார், காலம் காலமாக தமிழ் சினிமாவில் கடத்தல் காரர்களாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்களை கமல் இந்தப்படத்தில் சமையல்காரனாக சித்தரித்திருந்ததை முஸ்லிம் பார்த்திரத்திற்கு  புரோமோசன் கொடுத்திருப்பதாக நினைக்காதீர்கள், அந்த சமையல்காரன் வேடத்திலும் முதலாளியிடம் பணத்தை கையாடல் செய்த நபராகத்தான் நாசரைக் காட்டி இருப்பார், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் இஸ்லாமியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், சமையல் வேலைக்கு தான் சரியாக இருப்பார்கள், இருந்தாலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்குமா வைக்காதா ?

நன்றாக பேசும் நாசரை அடுத்தக் காட்சியில் ஊமையாக்கி ஒரு பார்பனர் வீட்டில் பொய் சொல்லி வேலைக்குச் சேரும் ஆளாகவும் காட்டி இருப்பதால் இஸ்லாமியர்கள் பொய் சொல்ல ஊமையாகக் கூட நடிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதுடன், அவர் வாய்பேச இயலாத நிலையில் சொல்லும் இறை வேத மந்திரங்களை எதோ காயத்திரி மந்திரம் சொல்லுவதாக டெல்லிகனேஷ் எடுத்துச் சொல்வதாக அவர்களுடைய வழிபாட்டை கொச்சைப்படுத்தி இருப்பார், மீனா வழுக்கி விழ தரையில் எண்ணையைக் கொட்ட நாசர் சொல்லித்தருவது போலவும், குறுக்குவழிக்கு வழி சொல்லுபவர்களாகவும் ஒரு இஸ்லாமியரைக் காட்டி இருப்பதை இவ்வளவு நாள் யாரும் பார்க்காமல் விட்டது வியப்பாக இருக்கிறது. ஐந்துவேலை நமாஸ் செய்யும் நாசருக்கு நெற்றியில் பட்டைப் போட்டு ஊமையாக்கி.........கமலஹாசன்.........

தசவதாரம் படத்தில் ஒரு நெட்டை பையனை ஆப்கான் உடையில் காட்டி இஸ்லாமியர்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என்றெல்லாம் ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி இருந்தார், அதுமட்டுமன்றி பலதெய்வ வணக்கம் அம்மன் வேட நடிகையான கேஆர் விஜயாவை இஸ்லாமிய பெண்மணியாக காட்டி இருப்பது இஸ்லாமியர்களின் மீதான தொடர்சியான இழிவாகவும், வண்மமாகவும் இருந்தும் இதுவரையாரும் கண்டுகொள்ளாமல் கண்டனம் தெரிவிக்காமல் விட்டது வியப்பளிக்கிறது. கமல் மட்டுமா ? ஆர்யா என்கிற இஸ்லாமிய நடிகரை இந்து சாமியாராக்கி நெற்றியில் பட்டைப்போட்டு இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் மாற்றான 'நான் கடவுள்' என்ற கடவுள் நிராகரிப்பு தலைப்பில் இஸ்லாமிய நடிகரை இழிவு படுத்தி இருந்தார் இயக்குனர் பாலா.

வடிவேலு ? ஒரு பைத்தியத்திடம் பின்லேடன் அட்ரஸ் பற்றிய காட்சியை நகைச்சுவையாக்கி பின்லேடன் என்கிற இஸ்லாமியரை இழிவுபடுத்தி இருந்தது,.........தொடர்ச்சியாக தமிழ் பட உலகம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துகிறது படுத்துகிறது........ப...டு,,,த்,,,து,,,,கி,,,,ற,,,து.

எனக்கு ஒரு ஐயம்.......பின்லேடனுக்கும், முல்லா ஓமருக்கும் அட்ரஸ் தமிழ்நாடா ? அவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தை பார்த்தும், பின்னே ஏன் இவர்கள் இஸ்லாமியர்கள் இழிவுபடுத்தப்படுவதாக விஸ்வரூபத்தின் கழுத்தில் கத்தி வைத்து தலிபான் பாணியில் தண்டிக்க விரும்புகிறார்கள் ? ஞாயமாக தங்கள் ஒட்டுமொத்தப் பெயரையும், புனித நூலையும் கெடுத்த பின்லேடன், முல்லா ஓமர்மீதல்லா இவர்களுக்கு கோபம் வரவேண்டும் ? பின்லேடன் இறப்புக்கு சிறப்பு தொழுகை நடத்தும் பொழுது இழிவுபடாமல் இருந்த இஸ்லாமிய சமூகம், முல்லா ஓமர் பற்றிய படத்தால் இழிவுபடுத்துப்பட்டுவிடுமா ?

2 அக்டோபர், 2012

கண்டன கடமையும் பொறுப்பேற்கும் சடங்குகளும் !

ஐயா நல்லா பார்த்துக் கொளுங்கள் நாங்கள் எங்கள் மதத்தினர் செய்த பாதக செயல்களைக் கண்டிக்கிறோம், எங்க மத்தில் இல்லாததைத் தான் இவர்கள் செய்துள்ளனர், எங்க மதம் தூய்மையானது அப்பழுக்கற்றது. ஐயா நாங்க சிறுபான்மையினர் எங்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை, இந்த நாட்டில் எங்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை, இந்த நாட்டில் நல்லவர்களே இல்லை என்று சொல்லவில்லை இது மோசமான நாடாகத்தான் இருக்கிறது கொலை கொள்ளை தலித்துகளை வண்புணர்கிறார்கள், இதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

தனிமனித தவறை ஏன் நாட்டின் பிரச்சனை என்று தண்டோராப் போடுகிறீர்கள் இதையெல்லாம் உங்க மதத்தவர் பெரும்பான்மையினராக இருக்கும் நாட்டிலும் தானே செய்கிறார்கள், 

தப்பு தப்பு தப்பு இதெல்லாம் எங்கள் மத மார்க்கத்தில் இல்லை அதை நீங்கள் தனிமனித செயலாகத் தான் பார்கனும், நாங்க அப்படித்தான் பார்த்து கண்டனக் கடமையைப் பதிய வைக்கிறோம். இதப் பாருங்க எங்க மதப் புத்தகத்தின் எட்டாவது பகுதி 84 ஆவது வசனம் "அப்பாவிகள் மீது (அ)நியாயம் செய்யாதீர்கள்" 8:84 மேலும்

எங்க மதத்தில் அடக்க தலங்களை வழிபடத் தடையுள்ளது, அவ்வாறு வழிபடுபவர்களை நாங்கள் தூற்றுவோம், முடிந்தால் அந்த அடக்கத் தளங்களை அகற்றவும் நாங்கள் ஆதரவு அளிப்போம், ஆனால் அதை மாற்று மதத்தினர் செய்துவிட்டால் எங்களை அவமதித்துவிட்டார்கள் என்று ஓலமிடுவோம். உங்க மதத்தில் தானே பெண்குழந்தையைக் கொல்கிறார்கள், 

உங்க ஆளுங்களும் தான் அதைச் செய்கிறார்களே, 

இல்லை இல்லை அது தனிமனித தவறு அவ்வாறு செய்பவர்களை எங்கள் மதம் வன்மையாக கண்டிக்கிறது, 

அட முட்டாப் பயலே எந்த மதம் தான் பெண் குழந்தையைக் கொல்லலாம் என்று அனுமதிக்கிறது ? இதுவும் தனிமனித செயல் தானே இதை மட்டும் ஏன் மதவாதம், நாட்டு நடப்பு என்றெல்லாம் வகைப்படுத்துகிறாய் ? 

உங்க மத ஸ்லோகத்தில் தான் இதை அனுமதித்துள்ளது, தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார் இதோ பார் "தலைச்சன் பெண் குழந்தையைக் கொன்றால் தந்தை தனவான் ஆவான்" 

அட கருமாந்திரம் புடிச்சவனே இந்த எழவெல்லாம் எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது, இதையெல்லாம் எங்கிருந்து எடுத்துவந்து காட்டுகிறாய், இதையெல்லாம் சொல்லி இருக்கிறதே என்று யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை, எவனோ பேராசைக் கொண்டவன் அல்லது பெண் குழந்தையை வெறுப்பவன் செய்திருந்தால் அதையெல்லாம் மதச் செயலாகவும் நாடு அனுமதிப்பதாகவும் சொல்லும் நாசமாப் போனவனே, நாங்களெல்லாம் பழமை வாதத்தைப் புறக்கணிக்கக் கூடாது, எங்களுக்கு எங்கோ என்றோ ஒரு அரைக்கிறுக்கன் எழுதிவைத்ததை அடிபிறழாமல் பின்பற்றுவது தான் எங்களுக்கான வழிமுறை என்று சொல்ல வருகிறாயா ?

ஆமாம் ஆமாம், நாங்கள் எங்க மதத்தைப் அடிபிறழாமல் பின்பற்றுகிறோம் நீங்களும் அவ்வாறு பின்பற்றவேண்டும், அது தான் உங்க மதம், அதனால் தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள்,  எங்கள் மதத்தில் இவ்வாறான செயல்கள் அனுமதிக்கப்படவும் இல்லை, தவிர தவறு செய்தவர்களை நாங்கள் வன்மையாகவும் கண்டிக்கிறோம், திருந்த வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென்றும் மத எண்ணிக்கைக்காகவும் அவர்களை மதத்தில் இருந்து விலக்காமல் வைத்திருக்கிறோம்

அதுக்குள்ள ஒருவர் ஓடிவந்து கண்டனம் தெரிவிப்பவரின் கருத்தை ஆராய்ந்ந்து நீங்களும் கண்டனம் தெரியுங்கள் கயவர்களே, கண்டனம் தெரிவித்தவரின் மதத்தைப் பார்க்காதீர்கள் என்று முட்டுக் கொடுப்பார்.

தான் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்கள் செய்யும் வன்முறைகள் தனிமனிதத் தொடர்பானது என்றும் மாற்று மதத்தினர் செய்யும் தவறுகள் அந்த மதத்தின் தவறு நாட்டின் தவறு என்றும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஆனால் இவர்களைப் போல் அந்தந்த மதத்தினர் மதவாதிகளாகவே நடந்து கொண்டால் இவர்களின் மதப் பிரச்சாரம் எடுபடாது அங்காங்கே வன்முறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதை இவர்கள் அறியாதவர்களா ?

"இந்த இடத்தில் குண்டு வைத்தவர் எங்கள் அமைப்பினர்"  என்று காவலர்களுக்கு துப்பு துலக்க வேலையே வைக்காமல் பொறுப்பேற்றுக் கொள்ளும் முஜாஹுதின் அமைப்பினர் எவ்வளவோ பரவாயில்லை, அவர்கள் சப்பைக் கட்டுவதில்லை.

எந்த மதவெறிகளும் அடங்கும் முன்பு ஓலம் பெரிதாக இருக்கும், ஒருவேளை மதவெறிகள் அடங்கப் போவதன் அறிகுறியோ இவை.

உலகில் உள்ள மதப் புத்தகங்களை அனைத்தையும் எரித்துவிட்டால், மதப் புத்தகத்தை வைத்து கலவரங்களும் நடக்காது, அதை வைத்து பிறரைக் கொல்லுவதும், குறை சொல்வதும் நடைபெறாது

26 செப்டம்பர், 2012

பூ மிதிக்கலாம் வாங்க !


பூ மிதிக்க ஆசைப்பட்டு போன கவுண்டமணி,  நல்லா அடிவாங்கிக் கொண்டே கொஞ்சாதீங்க கொஞ்சாதிங்க என்று சொல்லும் ஜனராஜ் கேரக்டர் ஞாபகம் தான் வருது அண்ணன் சுபி எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்களுக்கு தடித்த தோலுடா ன்னு நாம மார்க்க அறிஞர்களைப் பார்த்து தான் தெரிஞ்சு கொள்ளனும், மதங்களும் மார்க்கங்களும் எதை எதையெல்லாம் சொல்லிக் கொடுக்குதோ இல்லையோ தடித்தத் தோலை ஆடையாகக் கொடுக்கிறது, அது அல்லேலோயா கோஷ்டியாக இருக்கட்டும், இந்துத்துவா குருப்பாக இருக்கட்டும், நம்ம மார்க அறிஞ்ஞர்களாக இருக்கட்டும் சொல்லி வச்சது போல் அவங்க அவங்க அளவுக்கு தோலாடை அணிந்து கொண்டு தான் பொது இடத்தில் வந்து "கருத்து" சொல்கிறார்கள். நமக்கு மார்க அறிஞ்ஞர்களுக்கு மார்க்கு போடுவது வேலை இல்லை என்றாலும் மார்க்க அறிஞ்ஞர்களாக ஓடிவந்து தமக்கு மார்க்கு போடுங்க என்று முதுகை காட்டி வரத்தான் செய்கிறார்கள்.  ஏற்கனவே நிறைய பேர் நிறைய மார்க்கு போட்டுவிட்டார்களே என்றாலும் நாம யோசிச்சு மார்க் போடத்தான் வேண்டி இருக்கு காரணம் மேலே சொன்னவை தான்.

*****

கற்பழிப்பு என்று சொல்வது பாலியல் வண்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுபடி நாம் பன்னெடுங்காலமாக அவ்வாறு சொல்லக் கூடாது எழுதிவருகிறோம், தமிழில் கற்பொழுக்கம் என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் என்பது தவிர்த்து வேறெந்த பொருளும் இல்லை, அதாவது கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்கிற பொருள் தவிர்த்து வெறெதும் இல்லை, எனவே பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட பெண் ஒருத்தியை ஒழுக்கம் கெட்டவள் அல்லது அவளுடைய ஒழுக்கம் அழிக்கப்பட்டது என்ற பொருள் தரும் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவது காட்டுமிராண்டி தனம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை என்று சொல்வதில் யாதொரு தவறும் இல்லை, கற்பு என்ற சொல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் பெண்களுக்கு பொருத்திப் பார்க்கும் பொழுது மணவிலக்கு பெற்ற பெண் இரண்டாவது கணவருடன் வாழ்க்கை நடத்துவதை இரண்டாம் கற்பு பெற்றவள் அல்லது கற்பு மாற்றம் செய்து கொண்டவள் என்று சொன்னால் அது எப்படி பொருந்தாதோ, அபத்தமானதோ அது போன்றதே தானாக எந்த ஒரு ஒழுக்கக் கேட்டையும் செய்துவிடாது பாலியல் வேட்கை வெறியால் சிதைக்கப்பட்ட பெண்ணை கற்பிழந்தவள், கற்பழிக்கப்பட்டவள் என்று சொல்லுவதும் ஆகும். இது போன்ற முறையற்ற, பொருள் தராத, திரிக்கப்படக் கூடிய வகையில் பெண்களை இழிவுப் படுத்தும் சொல் தான் "கற்பு" என்பதால் பெரியார் அதனைப் பற்றிய கடுமையான விமர்சனங்களைச் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை அரிசனங்கள் என்று காந்தி சொன்னபோது கடுமையாக எதிர்த்தவரும் பெரியார் தான்,  ஹரி ஜனங்கள் அதாவது மகாவிஷ்ணுவின் மக்கள் என்ற பொருளில் தாழ்த்தப்பட்டவர்களை அழைக்கலாம் என்கிற காந்திஜியின் பரிந்துரை தாழ்த்தப்பட்டவர்களை இந்துமத சாக்கடைக்குள்ளே அடைத்து அதை அள்ளச் சொல்லும் பார்ப்பனிய வாதிகளுக்கு தான் சாதமாக இருக்கும் எனவே ஹரிஜன் என்று தாழ்த்தப்பட்டவர்களை அழைப்பது கண்டிக்கத் தக்கது என்று கூறினார் பெரியார்,  தாழ்த்தப்பட்டவர்களை வெறும் சொற்களால் "வள்ளல் வாரிசுகள்" என்று அழைப்பதினால் மட்டுமே அவர்களின் பொருளாதாரா நிலை மாறிவிட்டதாக நாம் கூறிக் கொள்ள முடியுமா ? எனவே ஹரிஜன் என்று சொல்வது தாழ்த்தப்பட்டவர்களை மேலும் இழிவிலேயே வைத்திருக்கும் என்பதால் ஹரிஜன் என்று சொல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது மாறாக தலித் என்ற சொல்வது அவர்களைக் குறிக்கும் பொது அடையாளச் சொல்லாக இந்தியாவெங்கிலும் வழக்கில் உள்ளது, தமிழகத்தில் மு.கவின் பரிந்துரைப்படி அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை, "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று தமிழில் சொல்லிவருகிறோம்.

அண்ணன் சுவனப்பிரியன் அரிசனத் தெரு அவலம் என்ற பெயரில் 'எங்கள் ஊருக்கு பக்கத்தில் அரிசனத் தெரு இருக்கிறது அவர்கள் சுத்தம் தெரியாதவர்கள் தண்டவாளப்பாதையில் திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள், இவர்கள் எங்கள் மதத்தவர்களைப் பார்த்து திருந்தவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார், வவ்வால் போன்றவர்கள் அரிசனம் என்று சொல்லக் கூடாது இழிவு படுத்துவதாகும் என்று சொல்லியும் மாற்றிக் கொண்டது போல் தெரியவில்லை. தலித்துகளின் நிலை குறித்து பாலைவன ஊற்றாக கண்ணீர் வடிக்கும் சுவனப்பிரியன் தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் திறந்த "வெளிக்கு" போகிறார்கள், அவர்களுக்கு கழிவறையையும் அவர்களது  கழிவறையை  தூய்மை செய்யவும் ஏன் ஆட்கள் இல்லை ?, தம்பகுதி மக்களின் கழிவறையை யார் துப்புறவு செய்கிறார்கள் ? என்ற கேள்வியெல்லாம் எழவே இல்லை. இவர் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  இவரின் தாரைக் கண்ணீரில் கோரைப் பாயை ஊறவைக்கிறார்.

அடுத்து அண்ணாரின் இன்றைய பதிவு "கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக விட்ட கண்ணீர்", ஏனுங்க வர வர உங்கப் பதிவு ஏன் இந்துத்துவ எழில் பதிவு போல் அவலங்களை மட்டும் அதும் இந்தியாவில் நடக்கும் அவலங்களை மட்டும் எடுத்து எழுதுகிறீர்கள், நீங்கள் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்லும் சவுதியில் இவையெல்லாம் நடைபெறுவதே இல்லையா ?" என்ற என் பின்னூட்டத்திற்கு அண்ணன் அளித்துள்ள மறுமொழி

கோவி.கண்ணன் said...

எழில் என்பவரது பதிவின் வஹாபிய வர்சன் போல் எழுதத் துணிந்த சுவனப்பிரியனுக்கு நல்வாழ்த்துகள்.

ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் போக்கிடம் இல்லை என்பதை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறோம்.

தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.

http://www.topix.com/forum/religion/islam/TB11PD6GPEFAKJLVQ


"சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். 


ஆனால் நமது இந்தியாவிலோ கற்பழித்து அதற்கு சாட்சியாக அவர்களே அதனை மொபைலில் வெளியிடவும் செய்கிறார்கள். வெளியிட்ட அவர்கள் சுதந்திரமாக வெளியிலும் உலாவுகிறார்கள். சவுதி சம்பவத்துக்கும் நமது நாட்டு சம்பவத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை ஏனோ கோவி கண்ண்ன் கவனிக்கத் தவறி விடுகிறார்."


அதாவது அண்ணன் சுபி கற்பழிப்பு  பற்றி சவுதியில் இவர் கேள்விப்பட்டதே இல்லையாம், அங்கு நடைபெறுவதெல்லாம் சில பெண்களிடம் தவறாக நடப்பது மட்டும் தானாம். படிப்பவர்களுக்கு ஏதோ சுவனப்பிரியன் தான் ஒப்புக் கொண்டுள்ளாரே என்று நினைக்கத் தோன்றும், தவறாக நடப்பதெல்லாம் என்றால் என்ன பொருள் ஈவ் டீசிங்கா ? அதாவது சவுதியில் வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வண்புணர்வுக்கு பெயர் "தவறாக நடப்பதாம்"  ஆனால் இந்தியாவில் நடப்பது "கற்பழிப்பாம்",  சவுதியில் உள்ள பாலியல் குற்றவாளிகள் அதை மொபைலில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளமாட்டார்கள், அவர்கள் அறிவாளிகள் என்றும் மறைமுகமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அண்ணன் சுபியின் சவுதிய அகராதிபடி சவுதியில் 
கல்லால் எறிந்து கொல்லப்பட்டால் அதன் பெயர் பூ எறிதல், பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக சவுதியில் இன்று நான்கு பெண்கள் மீது பூக்கள் எறிந்தனர்

கழுத்து வெட்டி கொல்லப்பட்டால் அதன் பெயர் மாலை சூடுதல், திருட்டு வழக்கில் இரண்டு சவுதி ஆண்களுக்கு இன்று மாலை சூடப்பட்டது

பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டிருந்தால் அதன் பெயர் தங்கம் உரசுதல் ஏதோ இரக்கப்பட்டு இதற்கு மட்டும் "தவறாக நடத்தல்" என்று சொல்கிறார் போலும் கை வெட்டப்பட்டால் "இறுக்கி அணைத்து உம்மா கொடுத்தல்" என்று சொல்லுவாரோ

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அண்ணன் சுவனப்பிரியனுக்கு வாழ்த்து சொல்லுவோம், ஆனால்  'வாழ்த்து' அவருடைய அகராதிபடி இல்லை.

இன்ஷா அல்லா ..........இந்த இம்சைகளை ஒடுக்க இன்னொரு இறைத் தூதரை அனுப்பு. அதன் பிறகு அவரை வைத்து அடுத்த 1400 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நாம் அப்பறம் பார்ப்போம்.
:)

************

சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின்  அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.

17 செப்டம்பர், 2012

சுவன அண்ணன் சொல்லும் பொய்கள் !


தெரிஞ்சோ தெரியாமலோ சுவன அண்ணனை பதிவுல வஹாபிகளின் தலைவர் ஆ(க்)கிவிட்டார்கள், அதனால் வலையுலகில் சுவன அண்ணன் பொன்னான கருத்துகளுக்கு பல முனைகளில் இருந்தும் எதிர்வினைகள் வருது, அண்ணன் சுவனப் பிரியன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வெற்றி வெற்றி என்று கூறிக் கொள்ளலாம். ஆனாலும் சுவன அண்ணன் மற்றும் அவருடைய நான்கு ஆதரவாளர்களும் அவர்களின் பீஜெ டைப் வஹாபிய கொள்கைகளும் தான் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் சார்ந்தவை என்பதை நான் புறக்கணித்தே வருகிறேன், இருந்தாலும் அவர்களுக்கான எதிர்வினைகள் குறித்து அவர்களுடைய கருத்துகள் 'இஸ்லாமை' தாக்குவதாக அவர்கள் புலம்புவதில் இருந்தும் ஏனைய இஸ்லாமியர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நாம் பெரிதாக கவலைப்பட கலவரப் பட ஒன்றும் இல்லை. சுவன அண்ணனின் தலைமை பதவிக்கு போட்டி நடக்காமல் இருந்தால் சரி. சுவன அண்ணனுக்கு நான் எதிர்வினை எழுதுகிறேன் என்பதால் எனக்கு அவர் எதிரி என்பதெல்லாம் கிடையாது, அப்படி இருந்தால் 'அண்ணன்' அடைமொழியை அவ்வளவு எளிதாகப் போட்டுவிடுவேனா ?

*****

அண்ணன் சுவனப்பிரியன் சொல்கிறார், "ஈழத்தமிழர்களைத் தாக்க பிரபாகரனை ஏன் தாக்க வேண்டும் அவர்களின் மதமான இந்துகடவுள்களை அல்லவா தாக்கவேண்டும் ?" என்கிற ஈழப்பதிவர்களின் கூற்று இரு மதங்களுக்கிடையே பிரச்சனைக் கிளப்பும் வகையில் உள்ளதாம்,  சுவனப்பிரியன் அண்ணனுக்கு தெரிந்து இஸ்லாமிய (வஹாபிய) பதிவர்கள் யாரும் பிற மதங்களைத் தாக்கி எழுதியதே கிடையாதாம். அண்ணன் சொல்வதன் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் முழு ஒட்டகத்தையும் குடிசைக்குள் நுழைத்துவிட்டு ஒட்டகமே இந்தப் பக்கம் வரவில்லை என்பது போல் சொல்கிறார். சில நாட்களுக்கு முன்பு தான் "சிந்திக்க சில உண்மைகள்" என்ற பெயரில் பெரியாரின் படத்தைப் போட்டு கிறித்துவ / இந்து மதங்களைப் பற்றி மிகவும் கிழ்தரமாக பல்வேறு இடங்களில் எழுதப்ப்ட்டவைகளை ஒட்டி வெட்டி பதிவுகள் வெளியானது, பெரியார் ஆட்கள் கிறித்துவ மற்றும் இந்து மதங்களை மட்டுமே தாக்கி எழுத என்ன முகாந்திரம் உள்ளது ? அந்த வலைப்பதிவில் பெரியார் படம் இருப்பது தவிர்த்து பெரியாரின் முக்கிய கொள்கையான கடவுள் மறுப்பு குறித்து எந்த இடுகையும் இல்லை என்பதாலும், அந்த வலைப்பு முக்கியமாக கிறித்துவ / இந்து மதத்தினரை தாக்கி எழுதியதால் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தின் சார்பில் எழுதப்படுவது என்பதை அதனை தொடர்ந்து பார்த்துவரும் எவரும் சொல்லிவிடுவர், சம்பந்தப்பட்ட வலைப்பதிவை பின்னர் தமிழ்மணம் திரட்டியும் நீக்கியது. 

இஸ்லாமியர்கள் (வஹாபியர்கள்) அவ்வாறு செய்யக் கூடியவர் இல்லை என்று நம்பும், பரப்பும் சுவன அண்ணனுக்கு குறிப்பிட்ட வலைப்பதிவை நடத்தி வந்தவர்கள் யார் என்று தெரியாமல் இருக்க ஞாயமில்லை, இருந்தும் சுவன அண்ணன் இஸ்லாமியர்கள் அவ்வாறு செய்யக் கூடியவர்கள் இல்லை என்கிறக் கருத்தை வலைப்பதிவில் எழுதிவருவது போல், சம்பந்தப்ப்ட்ட வலைப்பதிவை எழுதுபவர் ஒரு இஸ்லாமியராக இருக்க தகுதியற்றவர் என்று வெளிபடையாக எழுதி கண்டனம் தெரிவிப்பாரா ? தவிர "UNMAIKAL" என்ற பெயரில் அண்ணனின் பதிவுகளில் பின்னூட்ட வாந்தி எடுப்பவரும் பிற மதங்களை தாக்கிய கருத்துகளைத் தான் அள்ளித் தெளித்துவருகிறார்

தவிர வாஞ்சூர் என்கிற பெரியவர் (இவரு தான் UNMaikal?) நடத்திய வலைப்பதிவில் 'இது தான் இந்தியா' என்ற தலைப்பில் இந்தியாவில் நடைபெறும் மோசமான செயல்களின், அவல நிலையின் வீடியோ காட்சிகளை இணைத்து வெளியிடுவதே பதிவாக தொடர்ந்து வந்தது, அண்ணன் சுவனப்பிரியன் அவர்களிடம் சொல்லிக் கேட்கும் பொழுது, பெரியவர் வாஞ்சூர் ஐயா இந்தியாவின் மீது அக்கரைக் கொண்டுள்ளதால் தான் மனம் நொந்து இந்தியா திருந்த வேண்டும் என்கிற நோக்கில் அத்தகைய வீடியோ காட்சிகளை வெளி  இடுவதாக இட்டுக் கட்டி பதிலும் சொன்னார், சுவன அண்ணன் எனக்கு இதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும், இஸ்லாம் தீவிரவாதம் போதிக்கவில்லை என்று அன்றாடம் எழுதும் தாங்களுக்கோ, பெரியவர் வாஞ்சூருக்கோ இஸ்லாமியர் பெயர்களில் நடைபெறும் வன்முறைகளும் வீடியோ காட்சிகளும் காணக் கிடைக்கவில்லையா ? இந்தியாவின் மீது கொண்ட அக்கரையின் காரணமாக அதன் மீது ஏற்பட்ட ஆற்றாமையினால் வீடியோ காட்சிகளைப் போட்டு இந்தியாவை திருத்த முனையும் தாங்கள், இஸ்லாம் பெயரில் நடக்கும் தீவிரவாதச் செயல்களும், அல்லாஹூ அக்பர் சொல்லி நடைபெறும் கழுத்தறுப்பு காட்சிகளையும் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டி இஸ்லாமை திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை ?, தான் ஒரு இஸ்லாமியன், பிறகு இந்தியன் என்கிற முன்னெடுப்புகளில் தங்களுக்கும் வாஞ்சூர் ஐயாவிற்கும் இஸ்லாம் மீதான பற்றுதல் தான் கூடுதலாக இருக்க வேண்டும். இது தான் இந்தியா என்ற வீடிய காட்சிகள் கிடைக்கும் உங்களுக்கு இது தான் இஸ்லாம் என்று படம் காட்டுவதற்கு படம் இல்லை என்று வெளிப்படையாக் கூறினால் கூகிளிட்டு தேடித்தர பலர் இருக்கிறார்கள். படம் காட்ட நீங்கள் தயாரா ?

உங்களது இறுதி இறைத் தூதர் மற்றும் இறைத் தூதர்கள் நம்பிக்கைகள் பற்றி எமக்கு எந்தக் கருத்தும் இல்லை, ஆனால் இந்தியாவிற்கான இறைத் தூதர்கள் இவர்களாக இருக்கக் கூடும் என்று திருவள்ளுவர் உள்ளிட்டவர்களை நீங்கள் ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள், மேற்குலக மதங்களில் மட்டும் தான் இறைத் தூதர் சித்தாந்தகள் இருக்கிறது, இந்திய மதங்களில் வழிகாட்டிகளை கடவுளின் அவதாரங்கள் என்று தான் பார்ப்பார்கள், நீங்கள் போகிற போக்கில் இவர் இவர் இறைத்தூதராக இருக்கலாம் என்கிற கூற்று தேவை இல்லாமல் இந்து மதத்தினரை இஸ்லாமுக்குள் அடைக்கும் கூற்றாக இருக்கிறது, உங்களுக்கு உறுதியாக தெரியாத ஒன்றை வலிந்து திணிப்பது ஏன் ?

மீண்டும் ஒருமுறை,

எங்க ஆட்கள் பிற மதங்களை கொச்சைபடுத்த துணியமாட்டார்கள் என்கிற பச்சை பொய்யை அவிழ்த்துவிடாதீர்கள், அவர்கள் சொந்தமாக எழுதவில்லை கட் & பேஸ்டு தான் செய்தார்கள் என்று சப்பைக்கட்டாதீர்கள், இஸ்லாம் பற்றி ஏனையோர் எழுதும் மாற்றுக்கருத்துகளும் அவர்களே உருவாக்கிக் கொண்டது இல்லை, எங்கெங்கோ படித்தவை தான்.

சுவன அண்ணன், நான் இஸ்லாமை எதிர்த்து எதுவும் எழுதுவதில்லைக் காரணம் உங்களையும் சேர்த்து  நான்கு வகாபிய பதிவர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும் அவர்களின் கருத்துகள் மட்டுமே இஸ்லாமிய கருத்துகள் என்றும் நான் நம்புவதில்லை.

இறை நாடினால் மேலும் தொடரும்....

14 செப்டம்பர், 2012

சர்சையைக் கிளப்பாத ஆபாசப் படம் ! (18+)


இணையத்தில் ஒரு படமும் செய்தியும் (18+) வேகமாக பரவி வருகிறது, இதற்குக் காரணம் அண்மையில் ஒரு திரைப்படக் காட்சி யுட்யூப் முன்னோட்டம்  காரணமாக அமெரிக்க தூதரகங்கள் எரிக்கப்பட்டதும் சில அமெரிக்கர்கள் கொல்லபட்டதும் காரணமாக வைத்து கார்டூன் படத்தை வெளியிட்டுள்ளனர், இருந்தாலும் சம்மந்தப் பட்ட திரைப்படம் எடுத்தவர்களின் எண்ணத்தை நாம் போற்ற ஒன்றும் இல்லை, மாறாக கண்டிக்கத் தக்கது, தடைசெய்யத் தக்கது என்பதில் மாற்றம் எதுவும் இல்லை, வேண்டுமென்றே உணர்ச்சி தூண்டுவதற்காக எடுக்கப்பட்டது என்பதை அதில் நடித்தவர்களின் வாக்கு மூல அடிப்படையில் அதாவது 70 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் படத்தில் நடிக்க வைத்து தங்களை ஏமாற்றப்பட்டதாக முறையிட்டுள்ளனர் வழக்கும் தொடர்ந்துள்ளனர், அவர்கள் உயிருக்கு பயந்து அவ்வாறு சொல்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை, அவர்கள் அந்தப் படத்தில் நடித்தது பெருத்த அவமானம், ஏமாற்றம் என்றே கருதுகிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாது சம்பந்தப்பட்ட படத்திற்கு முட்டுக் கொடுக்கும் வண்ணம் இந்து கிறித்துவ யூத மற்றும் பவுத்த மதங்களின் குறியீட்டுக் கடவுள்களை ஒன்று சேர்த்து ஓரின சேர்க்கையில் அவர்கள் ஒன்றாக ஈடுபடுவது போல் ஆபாசமாக படம் வரைந்து, அதை தாங்கள் வெளியிட்டதால் தங்களுக்கு எதிர்ப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அறிவித்துள்ளனர். 

"இந்தப் படத்திற்காக யாரும் கொலை செய்யப்படவில்லை" என்று சொல்லும் கார்டுன் வெளியீட்டாளர்கள் சொல்ல வருவது என்னவென்றால் மற்ற மதத்தினர் இதையெல்லாம் பொருட்படுத்தாத பொழுது குறிப்பிட்டவர்கள் மட்டும் எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை நிகழ்த்தி உயிர்களுக்கு வேட்டு வைப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர. பார்க்க படிக்க அவங்க சொல்வது ஞாயம் தானே என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அதை அவர்கள் ஒன்றாக வரையாமல் தனித் தனியாக வரைந்துவிட்டு அதே கேள்வியை அவர்களால் எழுப்ப முடியுமா ? என்று நினைக்க அவர்களது கோழைத்தனமும் சப்பைக் கட்டுகளாகவும் அவர்களது செயலை நினைக்க முடிகிறது.

புதிய தொழில் நுட்பம் இணையத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதும் எதிர்ப்பார்த்தது போல் நடைபெறுவதும் வாடிக்கையாகி வருவதால், இனிமேலாவது மக்கள் இது போன்ற சீண்டல்களுக்கு மதிப்பு கொடுக்காமல் புறம் தள்ளினால் அவர்களின் நோக்கங்கள் அடிப்பட்டுப் போகும், தேவையற்ற உணர்சிவசப்படுவதினால் உயிர்சேதம் பொருள் சேதம் தவிர்த்து, வன்முறையாளர்கள் என்கிற முத்திரையும் உறுதி செய்யபடும் என்பதை போராட்டக்காரர்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும். சுமமா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் போராட்டம் எதற்காக என்று தேடிப்பார்க்க குறிப்பிட்ட யுடியூப் படத்தின் பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டி விட்டது தான் நடந்திருக்கிறது.

கடல் நீரில் விழுந்த காக்கையின் எச்சம். கடல் நீருக்கு எந்த  பாதிப்பை ஏற்படுத்தும் ? என்று நினைத்து இவற்றையெல்லாம் புறம் தள்ளிச் செல்லலாம். விமர்சனங்கள் வேறு விஷமத்தனங்கள் வேறு, ஆனால் யாரோ செய்த தவறுக்கு யாரோ பலிகடா ஆகுவதால் எதுவும் சரிசெய்யப்படுவதில்லை எனபது புரிந்தால் விஷமத்தனங்களுக்கு எதிராக விசனப்பட்டால் நட்டம் நமக்கும் சேர்த்தேதான் ஏற்படும். பிறகு எதைச் சொல்லி 'அமைதி' மார்க்கம் என்று மார்த்தட்டிக் கொள்ள முடியும் ?

கார்டூனின் "தரம்" கருதி படத்தை நான் பதிவில் இணைக்க வில்லை. மேலே இணைப்பு மட்டும் கொடுத்துள்ளேன். நான் அறிவுரையோ பரிந்துரையோ இங்கு எழுதவில்லை, எனக்கு தோன்றிய எண்ணங்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.

24 ஆகஸ்ட், 2012

மருதாணி - வதந்தீ !


சன் தொலைகாட்சியின் மெகாத் தொடர் தலைப்பு தான், சென்ற வாரம் இஸ்லாமிய பெருநாளின் பின்னிரவிலும், மறுநாள் செய்தியாகவும் பரபரக்கப்பட்ட பெயர் மருதாணி. மருதாணி வைத்துக் கொள்பவர்களை அச்சுறுத்தி கிளப்பிவிடப்பட்ட வதந்ததி, வதந்திகள் நோக்கத்துடனும், நோக்கமின்மையாலும் கிளப்பிவிடப்படுவது வாடிக்கை தான். கண்ணதாசன் தாம் இறந்துவிட்டதாக அவரே ஒருமுறை வதந்தி கிளப்பி இருந்தார், தனக்காக வருந்துபவர் யார் என்று தெரிந்து கொள்ள அவ்வாறு செய்தாராம். கருணாநிதி, ரஜினி உள்ளிட்டோரைப் பற்றி கூட வதந்திகள் வந்து இருக்கின்றன, எம்ஜிஆருக்கும் பலமுறை வதந்தி கிளப்பி இருந்தனர்,  முன்பெல்லாம் வதந்தி பரவும் வேகத்தை ஒப்பிட அடங்க இரண்டு மூன்று நாள் பிடிக்கும், செல்பேசிகள் புழக்கத்திற்கு வந்த பிறகு பரவும் வேகமும் கூடுதலாகவும், அதே போன்று அடங்குவதும் கிட்டதட்ட அதே வேகத்தில் அடங்கிவிடுகிறது.

எந்த ஒரு சமயம் சார்ந்த பெரும் பண்டிகையில் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வது இந்திய சமூகத்துப் பெண்களின் வழக்கமாக இருக்கிறது, நகைகள் போட்டுக் கொள்ளாத பெந்தகொஸ்தே அமைப்பு தவிர்த்து கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் அவரவர் பண்டிகையின் போது மருதாணி இட்டுக் கொள்வது வழக்கம்.  இந்தியாவில் இருந்த வரை தீபாவளி நாள்களின் அக்கா- தங்கை வைத்துவிடும் மருதாணி என் கைகளிலும் நகங்களிலும் கூட இருந்தது,  தாள்களில் நட்சத்திர வடிவங்களை வெட்டி அதன் மீது மருதாணி வைத்து உள்ளங்கையில் அழகான மருதாணி சிவப்பு வடிவங்களை அமைத்துக் கொள்வோம், அதன் பிறகு கையை கழுவும் வரை சொறிய முடியாது, காலையில் எழுந்து பார்த்தால் சட்டை படுக்கை பாய் ஆகியவற்றில் மருதாணி அங்காங்கே அப்பி இருக்கும், கையைக் கழுவி யாருடைய கை நன்றாக சிவந்திருக்கிறது என்று பார்த்து பார்த்து ரசிப்போம். வீட்டில் மருதாணி செடி இருப்பது மகிழ்ச்சியுடன், கவுரவத்தையும் கூட கொடுப்பதாக நினைத்திருந்தேன், கடைசியாக திருமணத்தின் முந்தைய இரவில் கொஞ்சம் வைத்துவிட்டார்கள், இப்பவும் ஆண் மருதாணி வைத்துக் கொள்வது தவறு இல்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் கேலி செய்யப்படுவோம் என்பதால் வைத்துக் கொள்வதில்லை. 

சிங்கையில் ஆண் முகப்பவுடர் அடித்திருந்தாலும் 'மேக்கப் ?' என்று கேலி செய்வார்கள்,  ஆண்கள் யாரும் முகத்தில் பவுடர் அடிப்பது கிடையாது, பவுடரை உடலில் தடவிக் கொள்வார்கள். சென்னையிலோ தமிழகத்திலோ இரு நண்பர்கள் கைகோர்த்து நடப்பது போல் இங்கு நடந்தால் 'அவ(னா)ர்களா இவ(ன்)ர்கள் ?' என்பது போல் பார்பார்கள். பொது நீச்சல் குளங்கலின் ஆண் பெண்ணுக்கு தனித்தனியாக உடைமாற்று அறைகள் உண்டு, உடைமாற்று அறைகளில் எந்த வெட்கமுமின்றி ஆடையின்றி குளிபார்கள், அங்கேயே உடைமாற்றுவார்கள், உடைமாற்று அறையில் முன்பெல்லாம் ஷவர்கள் வரிசையாக இருக்கும் இடையே தடுப்பு இருக்காது, தற்பொழுது அறைகள் அமைத்து ஷவர் வைத்திருக்கிறார்கள். குளித்த பிறகு  தடுப்பில் இருந்து வெளியே வந்து  (அறையினுள்)  உடைமாற்றுவார்கள்,  ஆணுக்கு முன் ஆணின் நிர்வாணம் இங்குள்ளவர்களின் வெட்க வரையறைனுள் வராது,  பொதுவாகவே சீனர், ஜப்பானிய கலாச்சாரம் பரவிய இடங்களில் பொது இடம் தவிர்த்த தனிப்பட்ட இடங்களான பொதுக் குளியல் அறைகளில் அம்மணம் ஒரு பிரச்சனையே இல்லை.  அப்பனும் - மகனும் கூட குளியல் அறையில் ஒருவருக்கும் முன் ஒருவர் நிர்வாணமாகத்தான் நிற்பார்கள்,  முதன்முதலில் அவர்களைப் பார்க்க கொஞ்சம் அதிர்சியாக இருந்தது அவ்வளவு தான். இவர்களின் அகராதிபடி ஆண்மை பெண்மை இவையெல்லாம் வெறும் பாலியல் உறுப்புகள் சார்ந்தது கிடையாது, சீனா, ஜப்பான், தைவான் மற்றும் கொரியாவில்  வெப்ப நீருற்றுகளில் (Hot Spring) ஆண் பெண்ணுக்கு அமைக்கப்பட்ட தனித்தனிப் பகுதியில் நிர்வாணக் குளியல் மிகவும் இயலபாக நடைபெறும் ஒன்று. Hot Spring Tour என்ற வகையில் வெளிநாட்டினர் விரும்பிச் செல்லும் இடங்கள் அந்தநாடுகளில் ஏராளம் உண்டு. ஆண் இயல்புகள் பெண் இயல்புகள் என்ற அடைப்படையில் ஆண் பவுடர் அடிப்பதையும், ஒத்தப் பாலினர் கைகோர்த்துச் செல்வதையும் இவர்கள் இயலாக எடுத்துக் கொள்வது கிடையாது.

இஸ்லாமியப் பெண்கள் கைகள், முகம்  தவிர்த்து உடலை முழுவதும் மறைத்துக் கொண்டிருந்தாலும், ரம்சான் பண்டிகையின் போது மருதாணி வைத்துக் கொள்வதை தடுக்கும் நோக்கத்தில் ஏன் வதந்தி கிளம்பி இருக்க வேண்டும் ? யார் கிளப்பி இருப்ப்பார்கள் ? பெண்களின் வெளியே தெரியும் கையில் வைத்துள்ள மருதாணி கவர்ச்சியைத் தூண்டும் என்றும் என்ற அடிப்படைவாத நம்பிக்கைத் தவிர்த்து இதைத் தடுக்கும் நோக்கம் வேறெதும் இருப்பதாகத் தெரியவில்லை,  பின்னிரவில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்ன ஆகுமோ  பதைப்புடன் உயிர் பயத்துடன் மருத்துவமனைகளுக்கு ஓடியதை வதந்தி கிளப்பியவர்களே கூட ரசித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். இது வதந்தீ என்றே நிருபணம் செய்யப்பட்ட நிலையிலும் அடுத்தாண்டு மருதாணி வைக்கும் பழக்கம் பாதியாக குறைந்துவிட வாய்ப்புள்ளது, வதந்தி கிளப்ப எவ்வளவோ நிகழ்வுகள் இருந்தும், மருதாணி வைத்துக் கொள்வது பிரச்சனை (தான்) என்ற அளவில் மசூதி மைக்குகளில் அறிவிக்கும் அளவுக்கெல்லாம் சென்றிருக்கிறது.  கீழே உள்ளது ஒரு மாதத்திற்கு முன்பு வந்த செய்தி. மருதாணி வதந்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, யார் கிளப்பி இருப்பார்கள் ? ஏன் கிளப்பி இருப்பார்கள் ? கீழே உள்ள இணைப்புகள் பல்வேறு  ஊகங்களைக் கிளப்பிவிடுகிறது.

இணைப்புகள் :



ஒரு சிலரால் அவர்களின் சமூகத்தை வலிந்தே  1400 ஆண்டு பின்தங்க வைப்பதை நினைத்து வருத்தப்படாமல் / பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை, இவற்றிற்கெல்லாம் அவர்களைச் சார்ந்த சில பெண்களே ஆதரவு அளிப்பதும் கூட அவர்களுக்கு கிடைக்கும் ஆசிகளாகத்தான் அமைகிறது.

அரேபிய நாடுகளில் மருதாணி வைத்துக் கொள்ளுவது பாரம்பர்யமானது தான் , அதை ஏன் தமிழகத்தில் தடுக்கும் நோக்குடன் செயல்பட வேண்டும் என்றும் தெரியவில்லை. ஒருவேளை சவுதி போலிஸின் செயல்பாடுகள் தான் மதரீதியாக அனுமதிக்கப்பட்டது என்று கருதுகிறார்களோ. மருதாணி வதந்தி பற்றி எந்த ஒரு மதவாதப் பதிவரும் வருத்தப்பட்டோ / கண்டித்தோ பதிவு எழுதியது போல் தெரியவில்லை. இந்த வதந்தியின் வாய்ப்பு என்ற அடைப்படையில் இது முழுக்க முழுக்க எனது ஊகம்.  என் ஊகம் தவறு என்று சொன்னால் தமிழகத்தில் வசிப்பவர்கள் அடிப்படைவாதிகள் இல்லை என்று மகிழ்வேன்.

21 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் - அண்மைய நிகழ்வுகள் !


சுதந்திர இந்தியாவின் அரசியல் அடிப்படை இந்தியாவின் எந்தப் பகுதி மக்களும் எங்கும் வசிக்கலாம், நிலங்களை வாங்கலாம் என்பதே.  சென்னையிலும் பெங்களூரிலும் மும்பையிலும் வெளி மாநிலத்தினர் காலூன்றி இருப்பதற்குக் காரணம் இந்த அடிப்படை சட்ட உரிமை தான், ஆனால் அஸ்ஸாம் மாநிலத்தவர் மீதான தாக்குதல் என்ற தகவல் பரவ தென் மாநிலங்களை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளி ஏறுவதாக தகவலும் படங்களையும் பார்த்த பிறகு அண்டிப் பிழைப்பவர்களுக்கு சம உரிமைகள் என்பவையெல்லாம் வெறும் ஏட்டளவில் என்றே தெரிகிறது.  மாநில அரசுகள் தக்க பாதுகாப்புத் தருவதாக இருந்தாலும் மக்கள் நம்புவதற்கு தயாராகவில்லை, குஜராத் உள்ளிட்ட சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மை உயிருக்கு  பற்றுறுதி இல்லாத பொழுது சிறுபான்மையாக வெளி மாநிலங்களில் பிழைப்பவர்களை இந்த மாநில அரசுகள் எவ்வாறு காக்கும் என்று கேள்வியாகத்தான் அஸ்ஸாமியர்கள் வெளி ஏறினார்கள், கூடவே தம் வீட்டுக்கு ஆபத்து நேரிடாலாம் என்று வம்படியாக அவர்களை வீட்டைவிட்டு வெளியேறவும் வீட்டு உரிமையாளர்கள் செய்திருக்கிறார்கள் என்கிற தகவலும் வெளியானது. தமிழ்நாட்டில் கடைவிரிக்காத வெளி மாநிலத்தவர்களா ? கூலி வேலைக்கு வருபவர்களை ஏன் அடித்து துறத்த வேண்டும் ? 

பெரும்பாலும் கலவரங்களிலும் தீவிரவாத செயல்களும் பொதுமக்களையும் சாதாரண குடிமகன்களை தாக்குவதிலுமே வீரம் இருப்பதாக அவற்றில் ஈடுபடுபவர்கள் செயல்படுகிறார்கள், இவர்களை தாக்குவதும் எளிது தவிர அரசுகள் கண்டிப்பதுடன் நிறுத்திவிடும், எதிர்காலத்தில் பொது மன்னிப்பு கேட்டுவிட்டால் சரியாகிப் போய்விடும் என்றே நம்புகிறார்கள், தாக்குதல் பேசப்பட வேண்டும் ஆனால் அதன் பாதிப்புகள் மறக்கப்படும் நிலையில் இருந்தால் எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம் என்பதாகத்தான் இத்தகைய தாக்குதல் நடந்தேறிவருகின்றன, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் கூட ராஜிவ் காந்திப் படுக்கொலையும் கோவை குண்டுவெடிப்பும் ஒன்றாகிவிடாது என்பதை ஒப்பு நோக்குக. கோவையில் குண்டு வெடித்தது என்பதை எத்தனை மாநிலங்கள் நினைவு வைத்திருக்கும் ?  சாதாரணப் பொதுமக்களை கொல்வது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்கிற எண்ணத்தின் நீட்சியை உணர்ந்திருப்பதால் தான் என்னவோ நாங்கள் பாதுகாக்கிறோம் என்று சொன்னாலும் அஸ்ஸாமியர்கள் நம்புவதாக இல்லை.

வதந்தி ... வதந்தி என்றாலும் வதந்தியை நம்பும் சூழலும் முகாந்திரங்களும் இருப்பதை நாம் நம்ப மறுத்தாலும் அவர்கள் அதை வெறும் வதந்தி என்று நம்பத் தயாராக இல்லை, உலகில் எங்கு இஸ்லாமியர்களுக்கு அநியாயம் நடந்தாலும் கொதிக்கும் இஸ்லாமியர்கள் இந்தியாவெங்கும் உண்டு என்பதையும் அதற்காக இஸ்லாமியர்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள் என்பதை இஸ்லாமிய சமூகம் மற்ற சமூகத்தினருக்கு எண்ணமாக ஆக்கிவிட்டப்படியால், வட கிழக்கு மாநிலத்தவர் மீதான தாக்குதல் என்பவை வதந்தியாக இருந்தாலும் அஸ்ஸாமில் நடந்த அண்மைய வன்முறைகளை ஒப்பிட்டு பார்த்து அஸ்ஸாமியர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடப்பது உறுதி என்றே நம்பத் துவங்கி தான் வெளியேறி உள்ளனர் என்றே நினைக்கிறேன்,  வேலை செய்யும் சூழல், பாதுக்காப்பு ஆகியவற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் அஸ்ஸாமில் இருக்கும் அவர்களது உறவினர்கள் நம்பாத போது அவர்கள் வெளி ஏறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

தருமி ஐயாவின் இந்தப் பதிவைப் படித்த பிறகு தான், அங்காங்கே அமைப்பு சார்ந்து இயங்கும் ஒரு சிலரின் தூண்டுதலால் ஒட்டு மொத்த இந்திய இஸ்லாமிய சமூகம் மற்றவர்களின் பார்வையில் எப்படி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, தேவையற்ற உணர்ச்சி கொந்தளிப்புகளால் புற சமூகத்தினருக்கும் அவர்களுக்குமான இடைவெளிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்பதை ஏன் நம்ப மறுக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. அஸ்ஸாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தியை இஸ்லாமியர்கள் தூண்டினார்களா ? பாகிஸ்தான் தூண்டியதா ? என்ற கேள்விகளை புறந்தள்ளிவிட்டு பார்த்தால் இத்தகைய தூண்டுதல் கண்டிப்பாக செயல்படும் என்ற நிலை இந்தியாவில் உருவாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா ?

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் எந்த பகுதியிலும் இஸ்லாமியர் பெயர்களைச் சொல்லி தூண்ட முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு யாரைக் குறைச் சொல்வது ? உதாரணத்திற்காக இணையத்தில் உலாவும் இந்த இரண்டு படங்களைப் பாருங்கள், இவற்றில் ஒன்று தான் உண்மையானதாக இருக்கும், மற்றது உருவாக்கப்பட்டது.


இதில் ஒன்றின் பொருள் "எங்கள் மதத்தை இழிவாகப் போசுபவர்களின் தலையை எடுப்போம்" , மற்றது கிராபிக்ஸ் செய்யப்பட்டு பல்வேறு இணையத் தளங்களில் இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் நோக்கதுடன் வெளி இடப்பட்டுள்ளது, இதன் பொருள் "எங்கள் மதம் ஆபத்தானது என்று சொல்லுபவர்களின் தலையை எடுப்போம்" என்பது. கிராபிக்ஸ் செய்தவர்களின் நோக்கம், "அமைதி மார்க்கம் என்று சொல்பவர்கள் தலை வெட்டுவது பற்றிப் பேசுகிறார்கள், எவ்வளவு முரண்பாடுடையதாக இருக்கிறது!" என்று காட்டுவதாகவும், அதாவது 'இவர்கள் தாங்கள் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொண்டாலும் இவர்களது செயல் தலையை வெட்டுவதே'என்பதாகும்.  கிராபிக்ஸில் மாற்றும் முன் இருந்த  "எங்கள் மதத்தை இழிவாகப் போசுபவர்களின் தலையை எடுப்போம்"  என்பது மட்டுமே உண்மையான பதாகை, மேலும் உணர்வு பூர்வமானவை, ஞாயமானவை என்றாலும் கூட  "தலைவெட்டுவது" குறித்த எச்சரிக்கை எவராலும் சகிக்க முடியாத ஒன்றே. இஸ்லாமியர்கள் மீதான பிறரின் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி பரிணமிக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு படங்கள் குறித்த பார்வையே புரிந்து கொள்ளக் கூடியதாகவும்.

எதற்கும் உணர்ச்சி வசப்படும் ஒருவனை உணர்ச்சி வசப்பட வைத்து தன்னிலை இழக்கச் செய்வது எளிது,  மிதமிஞ்சிய உணர்ச்சி வசப்படும் சமூகமாக இருக்கும் வரை, அவை அவர்களின் மீதான தூண்டுதல், வதந்திகள் பரப்புவர்களின் செயல்களுக்கான வாய்ப்பு என்றே பார்க்க முடிகிறது. விழித்துக் கொண்டால் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே நன்மை. இந்திய சமூக பெரும் இடைவெளி / இடைஞ்சல்களாக பிராமின் / நான்பிராமின் என்ற கோட்பாடுகள் வலுப்பெற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்தது போல் உலக அளவில் இஸ்லாமியர் / இஸ்லாமியர் அல்லோதோர் என்ற நிலை உருவாகி சமூகம் சீர்குழையும் ஆபத்துகளுக்கான முகாந்திரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்து என்பதற்காகவும், கிறித்துவர் என்பதற்காகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள் மிகக் குறைவே, அதற்காக அவர்களை உணர்ச்சி அற்றவர்கள் என்று கூறிவிட முடியாது, மதத்தை வைத்து இஸ்லாமியர்களை தூண்டுவதும், உணர்ச்சி வசப்பட வைப்பதும் எளிது என்பதால் இந்த வதந்திகள் பரவுவதுடன் அவை நடைபெறக் கூடியவை என்கிற நம்பகத் தன்மை எட்டியுள்ளதன் விளைவை அஸ்ஸாமியர்கள் அலறிக் கொண்டு இரயில் ஏறியது உறுதிப்படுத்துகிறது.

நான் இங்கு இழிவாகவோ, இட்டுகட்டியோ எதையும் எழுதவில்லை,  வெளியே சொல்லத் தயங்குபவர்களின் கருத்துகள் எத்தகையவை என்று அவர்களும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் என்ற அளவில் தான் இதை எழுதுகிறேன், எந்த மதமும் தனிமனிதனுக்கு சோறுபோடாது, உடைமைக்கு உத்திரவாதம் அளிக்காது என்கிற நம்பிக்கைகள் எனக்கு உண்டு எனவே எதையும் தாழ்வாக, இழிவாக, உயர்வாக எழுதும் தேவை எனக்கு இல்லை.

3 ஆகஸ்ட், 2012

சுவனப்பிரியன் கேட்கும் மொய்விருந்து !


ண்பர் சுவனப்பிரியன் 'சவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே!' என்ற தலைப்பில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவிகள் கேட்டு இடுகை ஒன்றை எழுதி இருக்கிறார், அவரின் உதவி செய்யும் நோக்கம், மனப்பான்மை இவற்றை நான் குறை சொல்லவிரும்பவில்லை மாறாக பாராட்டுகிறேன், ஆனால் இவர் போன்றவர்கள் 'தமிழ்/தமிழன்' என்ற லேபிளை எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க இவர்களின் முரண்பாடுகள் விவாதிக்கக் கூடியவை என்ற நிலைக்கு வருகிறது. இலங்கையில் தமிழனுக்கு கொடுமை நடந்தால் இவர்களின் தமிழின பற்று காணமல் போய்விடும் அங்கெல்லாம் இலங்கைத் தமிழர்கள், இலங்கை தமிழ் விடுதலை அமைப்புகள் இஸ்லாத்திற்கு / இஸ்லாமியர்களுக்கு எதிரானாவர்கள் என்ற இவர்களின் நிலைப்பாட்டினால் தமிழும், தமிழனும் காணாமல் போய்விடுவான்.

சுவனப்பிரியன் குறிப்பிட்டுள்ள சவுதி சிறையில் வாடும் இஸ்லாமியர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால் இவர் தமிழன் என்று எழுதுவதாகவே வைத்துக் கொண்டாலும், சவுதி போன்ற இஸ்லாமிய நாடுகளில் பிற நாடுகளைச் சார்ந்தவர்களின் மதம் ஆராயப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சலுகை எதையும் கொடுக்கவில்லை. என்பதை பாதிக்கப்பட்ட நபர் தன்னை குற்றவாளி இல்லை என்று நிருபனம் செய்ய இயலாத நிலையில், மதத்தைக் காட்டி தப்பித்துக் கொள்ளவும் இயாலாத நிலையில் உள்ளார் என்பதிலிருந்தும் தெரிகிறது, ஆனால் சவுதி அல்லது அரேபிய நாடுகளைப் பற்றி விமர்சனம் செய்தால் இவர்கள் இஸ்லாமை விமர்சனம் செய்வதாக நினைத்து கச்சைக் கட்டுகிறார்கள், இவர்களை மதம் சார்ந்து மதிக்காத அரசுகளுக்கு இவர்களாக வலிய சென்று வாதம் பேசுவதில் இருந்து இஸ்லாம் என்றால் அரபு நாடுகளும் அதன் கொள்கைகளும் என்றே எம்மைப் போன்றவர்களை இவர்கள் நினைக்க வைத்துவிடுகிறார்கள் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட நபர் ஒரு இஸ்லாமியர் என்றும், அவரை விடுவிக்க அவர் திருடியதாக குற்றம் சொல்லப்படும் சவுதி ரியாலை கொடுத்துவிட்டாலே போதும் என்றே சுவனப்பிரியன் எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் நினைத்தால் குறிப்பிட்ட நபரை வெளியே கொண்டுவர போதிய பணத்தை திரட்ட முடியாதா ?

  • பாதிக்கப்பட்டவர் அப்பாவி, குற்றமற்றவர் மற்றும் ஏழை இஸ்லாமியர் - இந்த தகுதி அடிப்படையில் அவருக்கான உதவிகளை செய்ய இவர்களது (சுவனப்பிரியன் சார்ந்து இருக்கும் தவ்ஹீது ) அமைப்புகளுக்கு போதிய பணம் இல்லை என்று நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது.
  • ஒரு  ஏழை இஸ்லாமியரைக் காப்பாற்ற முடியும் என்ற அளவுக்கு பணம் இல்லாதவர்கள் ஊருக்கு ஊர் அமைப்புகளை தொடங்கி நடத்துவது மட்டும் எப்படி சாத்தியம் ?
  • தன் மதத்தைச் சார்ந்த ஒரு ஏழை அப்பாவியை காப்பாற்ற முடியாத நிலைகள் இந்த அமைப்புகள் வேறு எந்த உயர்ந்த நோக்கத்திற்காக செயல்படுகின்றன ?

து போல் திருட்டு வழக்கில் சிக்கிக் கொண்டவர்களையெல்லாம் எப்படி காப்பாற்றுவது, அவர்கள் ஒருவேளை திருடி இருந்தால், அல்லது இது போல் உதவிகள் கிடைக்கும் என்று தெரிந்தே திருடினால் அவர்களுக்கெல்லாம் இஸ்லாமிய அமைப்புகள் உதவிக் கொண்டே இருக்க முடியுமா ? என்ற அறிவுப்பூர்வமான கேள்விகள் வந்தால், பாதிக்கப்பட்டவரின் குற்ற முகாந்திரம் தெரியாமல் உதவிகள் மட்டும் கேட்க முடியுமா ? என்ற கேள்வியும் கூடவே வருகிறது.

பாதிக்கப்பட்ட நபருக்கான உதவிகள் என்பது அவர் குற்றமற்றவர் என்ற நம்பிக்கை அடிப்படையில் அமைந்த நிலையில் ஒருவரை காப்பாற்றவேண்டுமா ? பலரைக் காப்பாற்ற வேண்டுமா ? என்பதைவிட அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம்.

ற்ற மதத்துக்காரர்கள் குற்றவாளி இல்லை என்று நிருபனம் செய்ய சான்றுகள் தேவை. ஆனால் சுவனப்பிரியன் போன்றவர்களின் கூற்றுகளால் 'இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றும் ஒரு இஸ்லாமியர் திருடவோ அல்லது பிற குற்றச் செயல்களில் ஈடுபடவோ வாய்ப்பில்லை' (பர்மா பஜாரில் டிவிடி விற்கலாமா ? என்று கேட்காதீர்கள்). எனவே பாதிக்கப்பட்டவர் இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றுபவரா ? ஐந்து வேளை தொழுவரா ? இஸ்லாமிய கடைமைகளை பின்பற்றுவரா ? என்று தெரிந்தலே போதும்.  பாதிக்கப்பட்ட நபர் உண்மையான இஸ்லாமியர் இஸ்லாத்தை பின்பற்றுபவர், இவர் குற்றம் செய்திருக்க வாய்பில்லை, அப்படி நினைக்கத் தேவை இல்லை, அதை நிருபனம் செய்யவும் தேவை இல்லை என்று சுவனப்பிரியன் போன்றவர்களின் சான்றிதழ் / பரிந்துரை அடிப்படையில் மேற்சொன்ன இஸ்லாமிய அமைப்புகள் பாதிக்கப்பட்ட நபர் குறித்து தெரிந்து கொண்டு உதவி செய்ய முடியாதா என்ன ?

துவும் செய்ய வாய்ப்பில்லாதா நிலையில் இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றும் ஒருவர் குற்றவாளி என்று காவலர்களால் குற்றம் சுமத்தப்படும் நிலையில் இஸ்லாமிய அமைப்புகளும் காப்பாற்றது, இஸ்லாமிய அரசுகளும் காப்பாற்றது அவர்களுக்கு தேவை எல்லாம் குற்றமற்றவர் என்று குற்றவாளி தன்னைத் தானே நிருபனம் செய்யவேண்டும் என்ற நிலைப்பாடு என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும்,  அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் சிறையில் செய்யாத குற்றத்திற்கு தண்டனைப் பொறுவதைத் தவிர்த்து வேறு வாய்ப்பில்லை என்று தெரிந்தால் மனிதாபிமான அடைப்படையில் உதவ வெளி உலகில் ஏராளமானவர் உண்டு.

னால் மதமும், மதவாத அமைப்புகளும், மதவாத அரசுகளும் மக்களுக்கு சேவை செய்கின்றன என்பது போன்ற பொய் தோற்றத்தை தொடர்ந்து பரப்பாதீர்கள். உங்கள் வசதிக்கேற்றவாறு 'தமிழன்' லேபிளை தேவையான இடங்களில் மட்டுமே ஒட்டவைக்காதீர்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு கண்டிப்பாக உதவிகள் செய்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும், ஆனால் இதில் குற்றவாளியாக ஒருவர் சிக்க வைக்கப்பட்டிருப்பதையும் அவரின் இக்கட்டுகளும், அவர் அந்த மதத்தைப் பின்பற்றுகிறார' என்பதினால் இரு இம்மி கூட தீர்ந்துவிடாது, அதற்கு வாய்ப்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே இதனை எழுதியுள்ளேன், இதை சுவனப்பிரியனும் உணர்ந்திருக்க வேண்டும் அதனால் தான் வழக்கத்திற்கு மாறாக பாதிக்கப்பட்ட நபரின் மதத்தை முன்னிறுத்தாது 'தமிழன்' என்று சொல்லி இருக்கிறார் சுவனப்பிரியன்.

பின்குறிப்பு : உதவி கேட்பதை கொச்சைப்படுத்தி இதை எழுதும் நோக்கம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை, ஆனால் இதுபோன்ற வேளைகளில் தான், மதவாத கொள்ளைவாத முரண்பாடுகளை எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்ளவும் முடியும். இது போன்ற நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மதவாதிகள், மத அபிமானிகள் கொஞ்சமேனும் மாறுவார்கள், மனிதாபிமானத்திற்கு திரும்புவார்கள் என்கிற நம்பிக்கையில் மட்டுமே இதனை இடுகையாக்கியுள்ளேன்.

பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று பன்னெடுங்காலமாக பலர் சொல்லிவருவதைத் தான் சற்று விவரித்து எழுதியுள்ளேன்.

2 மே, 2012

சுவனப்பிரியன் சுவனாநந்தாவாக மாற இருந்தாரா ?

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் நித்தியா நந்தாவால் இந்து மதம் பாழ்பட்டுவிட்டது இனி என்ன செய்யப் போகிறீர்கள் இந்து நண்பர்களே ? என்ற கேள்வி கேட்டு என்னையும் இன்னும் சிலரையும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதில் சென்றப் பதிவில் சொல்லியாகிவிட்டது, இந்தப் பதிவில் அதையே பேச ஒன்றும் இல்லை, இருந்தாலும் சுவனப்பிரியரின் அந்த ஆதங்கத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நித்தியாநந்தாவின் கடந்த கால ஆன்மிக வாழ்க்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரைத்தான் ஒரே இந்து நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக் கொண்டும் தன்னையும் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் பக்தராக இணைத்துக் கொண்டு தன் பெயரை சுவனாநந்தா என்று மாற்றிக் கொள்ள இருந்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது, இடையில் ரஞ்சிதா - நித்தியாநந்தா கசமுசா நடந்த பிறகு தனது ஒரே நம்பிக்கையும் வீழ்ந்துவிட தனது கவனத்தை வஹாபிய பிரச்சாரங்களில் சுவனப்பிரியன் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடும், பின்னர் நித்தி போனால் சுத்தி என்று மதுரை ஆதினத்தின் பக்கம் சுவனம் கவனம் திருப்பி இருந்த வேளையில் தான் நித்தி அங்கும் நுழைய இந்து மதம் முற்றிலும் சீரழிந்துவிட்டது இனி ஒருவராலும் அதனை சீர்படுத்த முடியாது என்றே வெகுண்டெழுந்திருக்கிறார், இவரே இந்து மதத்திற்கு இறுதி இறைத்தூதர் ஆகி இருக்கலாம். அதைவிடுத்து பின்ன என்ன சார் ? அவர் அன்றாடம் வஹாப்பிய மார்க்கத்தில் வடிவது தேன் என்றும் பிற மதங்களில் வடிவது வேப்பெண்ணை என்றே பிரச்சாரம் செய்த வேளையில் வேப்பெண்ணையில் எலிப்புளுக்கை இருந்தால், எருக்கம்பால் கலந்திருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று அவர் போய் இருக்க வேண்டியது தானே ? எதற்கு இவருக்கு அப்படி ஒரு அக்கரை இருந்திருக்க வேண்டும், ஒரு வேளை சுவனாநந்தா ஆக இருந்த முயற்சிச் தோற்றதால் எழுந்த ஆற்றாமை, கோபம், வெறுப்பு ஆகியவை தான் அவரை அவ்வாறு எழுது வைத்தது என்று கொள்ளலாமா ?

சென்ற பதிவில் நான் கேட்டிருந்த எந்த ஒரு கேள்விக்கும் அவரால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை, ஜைனைப் திருமணம் உலக நடைமுறைக்கு எதிராக இருந்ததால் தானே அல்லாவால் அந்தத் திருமணத்தை தற்காத்து குரான் வசனாமாகப் பேச முடிந்தது என்று கேட்டால் அவரிடம் பதிலே இல்லை, மாற்றான் மனைவியை பெண்டாள்வதே மாபெரும் குற்றம் என்பதை மையக் கருத்தாக வைத்து சம்பூர்ண இராமயணம் முதல் கம்பராமயணம் வரை இங்கே படைக்கப்பட்டு அவற்றை (மாற்றன் மனைவியை கவர்வது) குற்றமாக பார்க்கும் எங்கள் சமூகத்திற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று கேள்வியை முன் வைத்ததற்கும் பதில் சொல்லாமல் தசரதன் அறுபதாயிரம் மனைவியைக் கட்டவில்லையா ? அதை ஒப்பிட எங்கள் சமயத் தலைவர் செய்தது அற்பம் சொற்பம் என்று தொடர்பற்று பதில் சொல்லி இருக்கிறார். மாற்றான் அல்லது மகனுடைய மனைவியை தாரமாக்கிக் கொள்வதும் ? பல தார திருமணம் ஒன்றா ? தவிர தறுதலை அப்பன் தசரதனுக்கு மகன் அவ்வாறு இல்லை என்று முரண்பட்ட வேறுபட்ட வழியைக் காட்டுவது தானே இராமயணம், நான் இங்கே இராமனின் புகழ்பாடவோ இராமயணத்தை இந்திய நம்பிக்கைக் குரிய வேதம் என்று முன்னிலைப் படுத்தவோ நான் இதைக் கூறவில்லை, இராமயணத்தில் எனக்கும் பல விமர்சனங்கள் உள்ளன. தசரதன் 60 ஆயிரம் மனைவிகளை உடையவன் என்பதால் இங்கே யாரும் அவனைப் போற்றுவதும் இல்லை.

இளம் வயது திருமணங்கள் பிற சமூகங்களில் திருட்டுத்தனமாக நடக்கிறது என்று நாம் ஒப்புக் கொண்டாலும் உங்கள் மதத்தில் இன்றும் அவ்வாறு நடப்பதை தடுக்கும் சரியத் சட்டம் எதுவும் இல்லையே ? உங்கள் மத வழிகாட்டல் காலத்திற்கும் பொருத்தமானது என்று எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள், அவற்றை எதிர்க்கும் சட்டங்களையும் உங்களவர்கள் எதிர்க்கிறார்களே என்று கேட்டால் எந்த பதிலும் இல்லை. இவர் அபத்தமாக சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அவர்களுக்கு 6 வயதில் திருமணம் செய்து ஒருவருக்கு சொந்தமாக்குவது தான் நல்வழி என்று எங்கள் மதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்திருக்கிறது, அதைப் பின்பற்றினால் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் தொடராது என்று கூறாமல் விட்டது நமக்கு ஆறுதல்.

திரு சுவனப்பிரியன் தொடர்ந்து இஸ்லாத்தில் சாதி இல்லை என்று பிரச்சாரம் செய்யவும் இந்திய சமயங்களை தூற்றவும் பல்வேறு நாளிதழ்களில் இடம் பெறும் சாதி கலவரம் குறித்து எடுத்துப் போட்டு கருத்துரைக்கிறார், பகவத் கீதையைப் போலவே கோத்திரங்களையும் மனிதப் பிரிவுகளையும் படைத்ததாகப் குரானில் (அல்லா) பறைசாற்றுவது வேறு தகவல், தவிர இவர்களது சியா - சுன்னி வகுப்பு / இன வாதக் கலவரங்களும் அதன் பொருட்டு நடக்கும் அன்றாட மசூதி குண்டுவெடிப்புகளும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நாளிதழ்களில் செய்தி ஆகிறது, இது குறித்துக் கேட்டால் இஸ்லாமியத் தவறு இஸ்லாத்தின் தவறு இல்லை என்றே கூறுவார். பின்பு இஸ்லாமிய சட்டங்கள் எவருக்காக எழுதப்பட்டது ? யார் பின்பற்றுகிறார்கள் என்று கேட்டால் பதிலும் வராது, யாரும் பயன்படுத்தாத / நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று நல்லத் திட்டம் என்று கூறினால் அது திட்டம் என்ற அளவில் மட்டுமே, அதைப் பயன்படுத்தி யாரும் பயன்பெற்றிருந்தால் அவற்றைப் பற்றி எதேனும் புகழ்ச்சியாகக் கூற முடியும். தூரத்து பச்சை பார்க்க அழகாக இருக்கும், அழகு என்ற அளவில் அதை ரசிகலாம், ஆனால் நுகர முடியாது, அது போன்றதே இவர்கள் புகழ்ந்து பேசும் சட்டங்கள் யாவும், அவர்களே அதை மதித்து நடக்காத போது அது குறித்து இவர்கள் பிரச்சாரம் செய்வதால் ஏதேனும் பலன் உண்டா ?

  • 1) ஷேக்
  • 2) சையது
  • 3) தக்னி முஸ்லிம்
  • 4) அன்சார்
  • 5) தூதுகோலா
  • 6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
  • 7) மாப்பிள்ளா
என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(நன்றி அஸ்மா)

இந்திய சாதிகள் தலித்துகளை மிகவும் தாழ்வாக நடத்துகிறார்கள் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை தான். அவர்கள் இஸ்லாமுக்கு மாறி ஒன்றும் மேம்படவில்லை, என்பதை ரசூல் போன்றவர்கள் எழுதியுள்ளனர். ஏழைக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் எந்த மதமும் இறங்காது, மாறாக இந்திய சாதிகளில் பார்பனர்களை ஓரங்கட்டி பல சாதிகளும் வளர்ந்துள்ளன, ஒரு வன்னியனிடமோ, நாடாரிடமோ சென்று நீங்கள் பார்பனரைவிட தாழ்ந்தவரா ? என்று கேட்டால் செருப்பைக் காட்டி மறுப்பார்கள். ஒரு ஷியா முஸ்லும் சுன்னி முஸ்லாமாகவோ, சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிமாக மாற வழியே இல்லாத உங்கள் மார்க்கத்தில் நீங்கள் சாதியைக் கடந்தவராக பிரகனப்படுத்துவது எவ்வாறு ? உங்களது தலித் மதமாற்றம் பித்தலாட்டம் என்பதால் தான் அம்பேத்கார் பெளவுத்த மதத்திற்கே மாறினார். 

இஸ்லாம் மறுமண மற்றும் பெண்களுக்கான சொத்து உரிமையைத் தந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார், அந்த உரிமை அரேபிய பாலைவனங்களில் ஏற்கனவே இருந்தது முகமதுவிற்கு அல்லாவின் வஹி கிடைப்பதற்கு முன்பே அவர் விதவையாக இருந்த கதீஜாவை மணந்துள்ளார், கதீஜாவிற்கும் தந்தைவழி சொத்துகள் இருந்ததால் அவரால் ஒரு வியாபாரியாக இருந்திருக்க முடிந்திருந்தது, என்று நண்பர்கள் சிலர் பதிலும் சொல்லி இருக்கின்றனர், ஏற்கனவே இருந்த நடைமுறையை சட்டமாக்கி இருந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்,. அதுவும் நடைமுறையில் இருக்கிறதா ? என்று கேட்டால் பழையபடி இஸ்லாமியரின் தவறுகள் இஸ்லாமிய சட்டத்தவறுகள் இல்லை என்றே பதில் வரும். நாகூர் நிலவரம் நமக்கு ஓரளவு தெரியும் என்றாலும் கீழக்கரையில் கூலித் தொழிலாளிக்கும் 10 லட்சம் வரதட்சனைக் கொடுத்தால் தான் இஸ்லாமிய பெண்களுக்கு திருமணங்கள் நடக்கும் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது, இவர்களைக் கேட்டால் பெண்ணுக்கு மகர் கொடுப்பது தான் இஸ்லாத்தின் வழக்கம் என்பார்கள், இந்த வழக்கத்தைப் பின்பற்றுபவர் யார் ? இவர்களின் வரதட்சனை வழக்கத்தை மகருக்கு மாற்றும் முயற்சியில் தான் இருக்கிறோம் என்பார்கள், அதை முதலில் இஸ்லாமியர்களிடம் செய்யாமல் அதை பிரச்சாரம் ஆக்குவது ஏன் ? தவிர தந்தை வழிச் சொத்துரிமையும், வரதட்சனைக் கேட்பவர்களுக்கான தண்டனையும் இந்தியாவில் சட்டமாக்கப்பட்டச் சூழலில் அதில் இந்தியர்களுக்கு இஸ்லாத் புதிதாக பரிந்துரைக்க என்ன இருக்கிறது ? தவிர அதைப் பின்பற்ற வேண்டியவர்கள் இஸ்லாமிய ஆண்கள் அல்லவா ?

இவரின் நண்பர்கள் மிகவும் அபத்தவாத சிந்தனையாக

"ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..! மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்..!நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..?

போரில் அகதியான அடிமைப் பெண்ணை (வலக்கரம் சொந்தமாக்கிக் கொள்ள என்று அவர்களுக்குள்ளேயே புரியாதபடியெல்லாம் எழுதிவார்கள்) அடிமையை விருப்பம் போல் அனுபவிக்கலாம் என்பதே இவர்களுக்கு ஹதீதியா குரானிய வழிகாட்டால், இந்த சிந்தனையில் சற்று மாற்றி இவர்களுக்கு ஏற்பாக இருக்கும் பலதார மறுமணத்தை ஈழ விதவைகளுக்கு இவர்கள் பரிந்துரைக்கிறார்கள், விதவைகளுக்கான மறுவாழ்வு இளைஞர்கள் மனவுவந்து அவர்களை மணக்க வேண்டும் என்பது தான் பொதுவான பரிந்துரை அன்றி அவர்களில் பலரையும் மணந்து கொள்ளுங்கள் என்பது அபத்தவாத மூளையற்ற சிந்தனையின் பரிந்துரையாக இருக்க முடியும், தவிர ஒரு இளைஞனின் வருமானம் நிரந்தரமாக இருக்க முடியாத இன்றைய சூழலில் பல பெண்களை மணந்து எவ்வாறு காப்பற்ற முடியும் ?, இதற்கும் மாற்றாக அந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் தனியார் நிறுவனமும், அரசு நிறுவனங்களும் முன்னுரிமை தரவேண்டும் என்று பரிந்துரைப்பது தான் நல்வழி. அப்படியென்றால் அவளுக்கு ஆண் துணையோ ? ஆண் இன்பமோ தேவை இல்லையா ? என்று கேட்டால் சொல்ல அறுவெறுப்பாக இருந்தாலும் பல தாரம் மணம் செய்து கொண்ட பெண்களின் பாலியல் வேட்கை என்றோ ஒருநாள் வந்து போகும் கணவரால் தீர்ந்துவிட்டதா ? என்று கேட்டு அது குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவை குறித்த பரிந்துரைகள் கடுமையான கண்டனத்துகுரியது ஆகும், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உடல் சுகத்திற்காக ஈடுபடுகிறார்கள் என்கிற கருத்துகள் புறந்தள்ளக் கூடிய நிலையில், அவர்களை பல தார மணத்தில் ஈடுபடுத்தலாம் என்று சொல்வது குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவதே. அவர்களுக்கு மாற்று நல்ல வேலையும், விதவையை மணக்க வரும் இளைஞர்களும் அன்றி வேறெந்த தீர்வும் சிறப்பானதாக இருக்க முடியாது.

இதையெல்லாம் விட அரேபிய நாடுகளில் இன்றைய தேதிக்கு போரில் (ஈராக் தவிர்த்து) விதவையாக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் ? சவுதி உள்ளிட்ட மன்னர் பரம்பரைகள் விதவைகளைத்தான் மணந்து விதவை நல்வாழ்வு என்கிற ரீதியில் முழக்கப்படும் இஸ்லாமிய தீர்வைச் செயல்படுத்துகிறார்களா ? மன்னர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்கள் விதவையான பிறகு அவர்களுக்கு மறுமணம் நடப்பில் உள்ளதா ? மன்னர்களைவிடுத்துப் பார்த்தாலும் அரேபிய ஷேக்குகள் பண ஆசைக் காட்டி இந்திய ஹைத்ராபாத்தில் மணந்து கொண்டு பின்னர் மோகம் தீர்ந்ததும் கைவிட்டு செல்லும் பெண்களில் எத்தனை பேர் விதவைகள் ? அவர்கள் முறைப்படி முத்தலாக் செய்யப்பட்டே பின்னர் மறுமணம் செய்து கொடுக்கப்படுகிறார்களா ?  நீங்கள் பெருமையானதாகக் கூறும் முத்தலாக்கை குறிப்பிட்ட காலங்களில் முறையாக செய்து மணவிலக்கு பெற்றுக் கொண்டோர் எத்தனை பேர் ? யாருமே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைமுறைப்படுத்தாத மேலும் ஒரு இஸ்லாமிய சட்டமாகத்தான் அவை பெயரளவில் தான் இருக்கிறது. அதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தும் கண்காணிப்பை நீங்கள் செய்துவருகிறீர்களா ? உங்களையெல்லாம் ஈழ விதவைகளுக்கு பலதார மறுமணம் பரிந்துரைக் கேட்டு உங்களிடம் ஒப்பாறி வைத்தவர் யார் ? அவர்களுக்கு உங்கள் மதத்தினர் பல தாரமணத்தில் செய்யும் தில்லுமுல்லுகள் தெரியுமா ? இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத உங்களின் பரிந்துரைகளில் மதவெறியும், மதப்பிரச்சாரமும் அன்றி வேறெதுவும் தென்படவில்லை. பணம் படைத்தவனின் மேம்பட்ட காம இச்சைகான வடிகால் என்பதைத் தவிர்த்து பல தார மணத்தில் பெண்களுக்கான தீர்வு என்ன ? காசு இருக்கும் போது அவளை மணந்து அவளுக்கு ஒரு வயிற்றுப் பிள்ளையை / களைக் கொடுத்துவிட்டு, அவர்களை தெருவில் விட அவர்கள் சமூகக் குற்றவாளியாகும் நிலையைத் தான் ஏற்படுத்தும் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் ?  உங்கள் பலதார மண பரிந்துரையில் முதல் மனைவியின் விருப்பம் பற்றி ஏதேனும் வழிகாட்டல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா ? எந்த ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு எண்ணற்ற மனைவிகள் இருப்பதை பெருமையாகக் கருதுவாளா ? எந்த ஒரு இந்தியத் தகப்பனும் தன் மகள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படப்போவதை பெருமையாகக் கூறிக் கொள்வானா ? பணக்காரனுக்கு  சலுகைக் கொடுத்து வளைந்து கொடுக்கும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் பணக்காரன் பலமனைவிகளை மணந்து கொள்ளலாம் (பெண்களை பணயம் வைக்கலாம்) என்ற உங்கள் மதப்பரிந்துரைகளுக்கும் வேறுபாடுகள் என்ன ?

திருவாளர் சுவனப்பிரியன் அவர்களே, நீங்கள் அடிக்கடி அரைகுறையாக கூவும் குரானுக்கு மாற்றான மேம்பட்ட வசனம் இவ்வுலகில் எழுதப்படவில்லை என்கிற கூற்றை யாரும் மறுக்கவே இல்லை என்று மார்தட்டிவருகிறீர்கள்.  இவற்றை பலர் கேட்டு நகைத்துச் சென்றதால் உங்களுக்கு உரிய பதில் கிடைக்காமல் போய் இருக்கும்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்று என்றோ ஐய்யன் திருவள்ளுவர் சொல்லிச் சென்றுள்ளார், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சமமாகவே கருதப்படவேண்டும் என்கிற வழிகாட்டல் தான் அது, பெண்களையே மனிதனாக மதிக்கத் தெரியாத உங்களுக்கு பிற உயிர்களும் சமமாக மதிக்கப் பரிந்துரைப்பதில் ஏற்புடையதாக இருக்காது. இருந்தாலும் உங்களுக்கு சுட்டிக் காட்டவே விரும்புகிறேன், எந்த ஒரு உயிரையும் கொன்று போடும் உரிமை உங்களுக்கு கிடையாது, உணவுக்காகக் கொல்லுவதையும் என்பெயரில் (அல்லாவின் பெயரில்)  செய்யுங்கள் என்கிற வழிகாட்டலும் பிற உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து மறைமுகமாக இருப்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கமாட்டீர்கள், அதை நேரிடையாக வெளிப்படையாகவே 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி எல்லா உயிர்களும் மதிப்பில் ஒன்றே என்றார் ஐய்யன் திருவள்ளுவர், இதற்கு நேரிடையான வசனத்தை உங்கள் மார்க்கத்தில் இருந்து எடுத்துக்காட்டி முடிந்தால் அதைப்பரப்ப முயற்சி செய்யுங்கள்.

நானும் இதுவரை யாரும் சொல்லாத வசனம் ஒன்றை உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன், இதைவிட சிறந்த வசனம் உங்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தால் கொண்டுவாருங்கள்.

நீங்கள் உங்கள் உடன்பிறந்தாளுக்கு , மகளுக்கு செய்ய விரும்பாததைப் பிற பெண்களுக்கு பரிந்துரைக்காதீர்கள்

உங்களுக்கு இதற்கான விளக்கம் ப்ராக்கெட் போட்டால் தான் புரியும் என்பதால்,

நீங்கள் உங்கள் உடன் பிறந்தாளுக்கு (அக்காள் மற்றும் தங்கைகளுக்கு) , மகளுக்கு செய்ய விரும்பாததை (பலதார அல்லது சிலதார மணத்தை) பிற பெண்களுக்கும் (பல தார அல்லது சில தார திருமணத்தை) பரிந்துரைக்காதீர்கள்

********

இதை எப்படி முடிக்கிறது ? தென்னை மரம் , பசுமாட்டுக் கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது.

இஸ்லாமின் கொள்கைகள் சிறப்பாக இருந்தும், நடைமுறையில் பயன்படுத்த முடியாது என்பதால் தான் சுவனப்பிரியன் சுவனநந்தாவாக மாற இருந்து நித்தி - ரஞ்சிதா கசமுசாவால் கெட்டுவிட்டதா ? என்றே நினைக்கத் தோன்றுகிறது. சுவனப்பிரியன் விரும்பினால் தாய் மதம் திரும்பலாம், அவருடைய நண்பர் திரு டோண்டு இராகவனிடம் சொன்னால் டோண்டு இராகவன் சாரே நவீன இராமனுஜராக ஆகி சுவனப்பிரியனுக்கு பூணூல் அணிவித்து தீட்சைக் கொடுத்து பார்பனராக பிராமணராக மாற்றிக் கொள்வார், அவரும் சாதிக் கொடுமையிலிருந்து மீண்டு உயர் வகுப்பை அடைந்து , வைகுண்டத்திற்குச் செல்வார்.

போங்க சார், ஐந்து வேளைத் தொழுகையை சிறப்பாக செய்யுங்கள், நீங்கள் விரும்பும் சுவனக் கன்னிகைகள் உங்களுக்கு காத்திருக்கிறார்கள், அதைவிடுத்து தேவையற்ற சர்சைகளாக கொள்ளர் தெருவில் துருப்பிடித்த ஊசியை விற்றுக் கொண்டு உங்கள் நேரங்களை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், 'தீர்ப்பு நாள் சமீபமாக, உள்ளது அதற்கான அத்தாட்சிகளை அல்லா தொடர்ந்து வெளிப்படுத்துக் கொண்டுள்ளான், இந்த இனிய பிறவியை, வீண் விவாதங்களில் வீனாக்கலாமா ?'

பிகு : நான் இஸ்லாமிய மதத்தை நான் இங்கு இழிவு படுத்தும்படி எதையும் எழுதவில்லை,  அவர்களின் நடைமுறைகளில் உள்ளவற்றைச் சுட்டியுள்ளேன், தவிர உலகில் 20 விழுக்காட்டினரின் நம்பிக்கை என்பதை உணர்ந்துள்ளதால், அவர்களது வழிகாட்டி முகமதுவையோ, குரானையோ நான் போற்றாவிட்டாலும் தூற்ற நினைத்தது இல்லை, உங்க பாணியில் சொல்ல வேண்டுமென்றால் நான் இஸ்லாத்தைக் குறை கூறவில்லை, இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.

உங்களில் (தமிழக / இந்திய இஸ்லாமியர்கள்) பெரும் விழுக்காட்டினர் ஒரே திருமணத்தில் நம்பிக்கைக் கொண்டு நிலைத்திருப்பதும் உங்கள் மதம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடு இல்லை, அது இங்கேயே வழிவழிவரும் பண்பாடு அல்லது தனிமனித ஒழுக்கம் சார்ந்தவையே, அரபு நாடுகளில் அவ்வாறு இல்லாது பெண்கள் போகப் பொருளாக்குவது கண்டு உங்கள் அறிவுரைகளை பண்பாடுகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

இன்ஷா அல்லா, 'இவர்களுக்கு சாந்தியும் சமாதனமும் என்னேரமும் கிட்டினால் இவர்கள் சிந்தனை இறை நாட்டம் தவிர்த்து தேவையானவற்றதில் மூக்கு நுழைக்காது. 

நாடூவீர் ஏக இறைவன் !

உங்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டுவதும், பாறைமுன் திருக்குறள் அறத்துப் பால் விளக்கவுரை பேசுவதும் ஒன்றே என்பது தெரியும், இருந்தாலும் உங்கள் நச்சுப் பிரச்சாரங்களில் என்னையும் இழுத்தால் இதனை பலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதினேன், உங்கள் மீது எங்கேயாவது தனிப் பட்ட தாக்குதல் இருந்தால் குறிப்பிடவும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்