பின்பற்றுபவர்கள்

பதிவர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 ஜூலை, 2017

பதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்

நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்போதும் நம்மை துறத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரை விரைவாக பிடித்துவிடுகிறது, ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பின் தொடர்கிறது, பலருடன் நடந்தே சென்று ஒரு நாள் கை கொடுத்து அணைத்துக் கொள்கிறது. மரணத்திற்கு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை, அதற்கு எவ்வளவு நம்மை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதைப் பொருத்து நம் வாழ்நாள், இந்த ஓட்டத்தினூடாகத் தான் நாம் பல்வேறு உணர்ச்சிகள், குற்ற உணர்ச்சிகளோடு, ஆணவம், எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஓடுகிறோம், நம்மோடு சேர்ந்து அவைகளும் மறைந்து போகின்றன, பின்னர் வேறு பலரின் நினைவுக்குள் மட்டும் அவர்கள் இருக்கும் வரை வாழ்வோம், அதுவும் நமக்கு தெரியாத ஒரு வாழ்க்கை, நம்மால் உணரமுடியாத வாழ்க்கை.

*****

பித்தனின் வாக்கு என்ற பெயரில் பதிவு எழுதும் சுதாகர் சிங்கையில் இருந்து அவற்றை எழுதினார், பதிவர் சந்திகளில் நேரடி அறிமுகம் கிடைத்தது, அவரது சமூகம் சார்ந்த கருத்துகளில் எனக்கு ஏற்பு இல்லை என்றாலும், நகைச்சுவை பதிவுகள், துணுக்குகள், சமையல் பற்றி அவர் எழுதியவை சுவையானவை. நேரில் பழகுவதற்கும் இனியவர், சிங்கையில் ஈராண்டுகள் (2008-2010) பணிபுரிந்தார், பின்னர் சென்னைக்கு திரும்பி கல்பாக்கத்தில் தங்கி, நாள் தோறும் பைக் பயணமாக சென்னையில் வேலை பார்த்து வந்தார், நான் சென்னை வரும் போது அழைத்துப் பேசுவார், எப்போதும் முக நூலில் தொடர்பில் இருப்பார்,  உடன் பிறந்த உறவுகள் தவிர்த்து அவருக்கு தனிக்குடும்பம் இல்லை. ஒண்டிக்கட்டைத்தான் 

3 மாதம் முன்பு பணித் தொடர்பில் சிங்கை வந்திருந்தார், தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன், இரண்டு நாட்கள் இருந்தார், முதல் நாள் மாலையும் அடுத்த நாள் மாலையும் சந்தித்துப் பேசினேன், ஒத்தையாளாக இருக்கிங்க சேமிப்பு கையிருப்பு வைத்துக் கொள்ளுங்கள், முடிந்தால் சொந்தமாக சிறிய வீடு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன், கொஞ்சம் சேமிப்பு இருக்கு ஆனா வீடு வாங்கும் அளவுக்கு இல்லை, முயற்சிக்கிறேன் என்றார்.

நாள் தோறும் கல்பாக்கத்தில் இருந்து 40 நிமிட பைக் பயணம் செய்து வேலை செய்கிறேன் என்றார், இந்த வயதில் 40 நிமிட பயணம் நல்லது அல்ல, முடிஞ்ச அளவு சென்னையில் தங்கி வேலை பார்க்கலாமே என்றேன், தனிமையில் இருப்பதைவிட அண்ணன் வீட்டில் வசிப்பது மன நிறைவாக உள்ளது, அண்ணன் மகளுடன் பொழுது போகிறது என்றார்

புறப்பட்ட நாளில் விமான நிலையத்திற்கு டாக்சி பிடித்து அனுப்பினேன் போகும் போது மொபைலை தவறவிட்டுச் சென்றார், ஒருவழியாக டாக்சி ஓட்டுனரை தொடர்ப்பு கொண்டு திரும்ப போனைப் பெற்று அடுத்து சிங்கை வந்த வேறு நண்பர் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தேன், பெற்று கொண்டு நன்றி தெரிவித்தார் 

அவர் சிங்கையில் இருந்து போன பிறகு ஒருமுறையாவது திரும்ப வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்ததை நிறைவேற்றிக் கொண்டது போல் தெரிகிறது கடந்த அந்த இருநாள் பயணம், சிங்கையில் முன்பு பார்த்து, பார்க்க விரும்பிய கோயில்களை பார்த்து , சாப்பிட விரும்பிய உணவு கடைகளில் சாப்பிட்டு வந்ததாக சொன்னார் வேறு/மாறுபட்ட கருத்துகள் எனக்கும் அவருக்கும் இருந்தாலும் ஒரு வயது தான் வேறுபாடு என்றாலும் என்னை மரியாதையுடன் அழைத்து பேசுவார் 

நேற்று (06/ஜூலை/2017)அவரது உறவினர் அவர் மறைவு குறித்து முகநூலில் பகிர்ந்தது என் பார்வைக்கு டைம்லைனில் வந்தது, மாரடைப்பில் உயிர் பிரிந்ததாக குறிப்பிட்டு இருந்தனர், மேற்கொண்டு தகவல்கள் எதுவும் இல்லை

அவர் தற்போது இல்லை என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. பதிவுலகம் மூலமாக அவரை அறிந்தவர்கள் தொடர்பு கொண்டவர்களுக்கு தகவலாக இதனை இங்கு பதித்துள்ளேன்

நண்பரின் ஆன்மா அமைதியடையட்டும்
மார்ச் 2017ல் சிங்கை வந்திருந்த போது எடுத்தப்படம்

22 ஜூலை, 2013

'சாதி'க்கலாம் வாங்க !

எப்படி இருந்த தமிழ் மணம் எப்படி ஆகிவிட்டது ? சாதி / மதம் சார்ந்த பதிவுகளை எழுதுவது தமிழ்மணம் விதிகளுக்கு முரணானது......ஆனால்.....வஹாபிகள் தங்கள் இடுகைகளில் மதம்சார்ந்து 9ம், 10 ஆவது வேற எதாவது எழுதி விலக்கு பெற்றுவிட்டார்கள், நம்ம 'ப..சுமை பக்கம் அருளாரும் மாற்றி மாற்றி எழுதி நான் சாதி சார்ந்து (மட்டுமே) எழுதுவதில்லைன்னு சத்தியம் செய்துவிடுவார்.

ஆனால் பச்சையாகவே சாதிப் பெயர் தாங்கி பதிவுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

வன்னியர்களின் சாதிவெறிக்கு எதிரான வன்னியர்கள் !

இன்னும் ஒரு மாதம் சென்றால் இப்படியெல்லாம் வலைப் பதிவு தலைப்பு வைத்து பதிவு வருமோ ?
சாதிவெறி பார்பனர்களின் சாதிவெறிக்கு எதிரான நல்ல பார்பனர்கள் !
செட்டியாரின் சாதிவெறிக்கு எதிரான செட்டியார்கள் !
தேவர்களின் சாதிவெறிக்கு எதிராக தேவர்கள் !
கவுண்டர்களின் சாதிவெறிக்கு எதிராக கவுண்டர்கள் !
முதலியார்களின் சாதிவெறிக்கு எதிராக முதலியார்கள் !
சாதிவெறி பிள்ளைமார்களுக்கு எதிராக நல்ல பிள்ளைமார்கள் !
.
.
.
இந்துக்களின் மதவெறிக்கு எதிராக இந்துக்கள் !
இஸ்லாமியர்களின் மதவெறிக்கு எதிராக இஸ்லாமியர்கள் !
கிறித்துவர்களின் மதவெறிக்கு எதிராக கிறித்துவர்கள் !

இதையெல்லாம் நாம படிச்சி, அதை சூடான இடுகையாகவும் ஆக்கி எவ்வளவு தமிழ் சேவை செய்கிறோம்..........!

சாதி சங்கம் நடத்தவும், விளம்பரம் செய்யவும், முகநூல் இருக்கு, ஏன் வலைப்பதிவிலேயே கூட செய்யலாம், அதையெல்லாம் நூல்குறி (புக்மார்க்) செய்து விரும்பியவர்கள் படிக்கட்டும், ஆனால் பலரும் எட்டிப் பார்க்கும் திரட்டிகளில் இவை வருவது......எழுதும் ஆசையில் எழுதவருபவர்களுக்கு 'இதைத்தான் வலைப்பதிவில் எழுதுறானுங்களா ?' ன்னு நினைத்து தலை தெறிக்க ஓடமாட்டார்களா ?

16 மே, 2013

நடுத்தர வயதினருக்கு ...!


80 வயது வரையிலும் வாழ்க்கை என்ற கணக்கில் 40 வயது என்பது நடுத்தர வயது என்கிறார்கள், கிட்டதட்ட பாதி கிணறு தாண்டிய நிலை, உடல் உழைப்பின்றிய இன்றைய கால கட்டத்தில் இந்த வயதில் நோய்கள் எட்டிப் பிடிப்பது இயல்பு. நாம் சாப்பிடும் உணவு வகைகளும், அதன் முறைகளும், மன அழுத்தங்களும் சேர நாற்பது வயதில் நோய் தாக்கம் என்பவை வெகு இயல்பாகவே நடைபெறுகிறது. நமக்கு என்ன தேவை என்பதை விட மற்றவர்களைப் பார்த்து நாமும் அது போல் நிறைய வீடு வாசல் நிலம் என்ற வசதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற அழுத்தம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்பவை, அதில் எதுவும் இயலாமல் போனால் சோர்வும் சேர இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி என்று நம்மை நாற்பது வயதில் இறுக்கிப் பிடிப்பவை ஏராளம்.

பொதுவாகவே இந்தியர்களுக்கு நீரிழிவு குறைபாடு உலகிலேயே மிகுதி, 35 வயதாகிவிட்டாலே ஆண்டுக்கு ஒருமுறையேனும் யாரும் சொல்லாமல் நாமே நம் உடலின் சர்கரை அளவை, கொழுப்பு அளவுகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும், நல்லா தானே இருக்கிறோம், என்று நினைப்பதைவிட 'எனக்கு எந்த நோயும் அண்டாது' என்று நம்புவோர் நம்மில் பலர். உடலை உயரத்திற்கேற்ற சரியான எடையுடன் (BMI) வைத்திருப்பவர்களைவிட முகம் உருண்டையாகவும், சற்று பூசின மாதிரி இருப்பவர்களே ஆரோக்கியமானவர்கள் என்றும் பலர் நம்புகிறார்கள், அதனால் தான் நம்மவர்கள் உடல் இளைத்தால் சொத்தே பரிபோனது போல உணருகிறார்கள். எலும்பு துருத்தாத அளவுக்கு உடலில் சதைகள் இருந்தால் போதும் அவை தான் நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம் என்று நம்மால் நினைக்கவே முடியவில்லை. குண்டாக இருப்பவர்களைப் பார்த்து கிண்டல் அடித்து தம்மால் அவ்வாறு ஆக முடியவில்லை என்று ஏங்குபவர்கள் பலர், குண்டான உடலே ஆரோக்கியமானது, சூதுவாதற்றது என்று அப்பாவியாக பலர் நம்புகிறார்கள். உடல் நலம் என்பது உடல் கூடுதல் எடையுடன் இருப்பது தான் என்பதாக நம்மவர்களின் எண்ணங்களில் ஆழமாக பதிந்துள்ளது. ஒருவர் 120 கிலோ எடை இருந்தாலும் கொஞ்ச நாளில் 100 கிலோக்கு குறைந்திருந்தால் என்ன துரும்பா இளைத்துவிட்டீர்கள் என்று ஒரு அம்மாவைப் போல் கவலையாக கேட்பவர்கள் உண்டு.

குண்டான உடல் ஒல்லியான உடல் இவையெல்லாம் உணவு முறைகள் மற்றும் பரம்பரைத் தன்மையால் கிடைப்பவை. பரம்பரைத் தன்மையால் பலருக்கு விரும்பாமலேயே அவர்களது உடல் அமைப்பு மாறிவிடுகிறது. நொறுக்கு தீணி, கொழுப்புகள் மிகுதியான அசைவ உணவு, ஐஸ்க்ரீம். நெய் மற்றும் தேவைக்கு அதிகமான தூக்கம் இவை அனைத்தையும் முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் சதை பற்றுடன் உடலை மாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒருவர் சூதுவாது உள்ளவரா இல்லையா என்பதையெல்லாம் உடலின் எடையை வைத்து எடை போட முடியாது.

***********

தேன்கூடு சாகரன், சிந்தாநதி, ஈழநாதன் மற்றும் பட்டாபட்டி ஆகியவர்களின் மரணம் என்னை வெகுவாகவே பாதித்தது, இவர்கள் அனைவரும் 35 - 45 வயதிற்குள் உள்ளவர்கள், குடும்பம் குழந்தைகள் உள்ளவர்கள், ஈழநாதனின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற விவரம் தெரியவில்லை, ஆனால் மற்ற மூவரும் மாரடைப்பால் மரணித்திருக்கிறார்கள், ஆண்டுக் கொருமுறையேனும் இவர்கள் தங்களது இரத்தத்தின் கொழுப்பு அளவுகளை சரிபார்த்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் மரணம் இவர்களை நெருங்கி இருக்காது என்றே நினைக்கிறேன். உடல் நிலையில் அக்கறை கொள்ளாது அலட்சியாமாக இருந்தார்களோ, அல்லது அதற்கெல்லாம் நேரம் இல்லாது தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தார்களோ, அல்லது நமக்கெல்லாம் நோய் அண்டாது என்று நம்பினார்களோ தெரியவில்லை, இவர்களின் எழுத்துகளைவிட அவர்கள் விட்டுச் சென்ற பாடம் நாம் நம் உடலில் அக்கறை கொள்ளவது மிக அவசியம் என்பதே.

************

மனைவியர் வேலைக்கு செல்பவர்கள் என்றால் கணவனின் திடீர் மறைவிக்கு பின் ஓரளவு சமாளித்து குழந்தைகள் வளர்த்தெடுக்க முடியும், சற்று முற்போக்கானவர்கள் என்றால் உறவினர் நண்பர்கள் ஒத்துழைப்புடன் மறுமணம் கூட செய்து கொள்ள முடியும்,  வீட்டு வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளை கவனித்துக் கொள்ளவர்களாகவும், வெளி உலகமே தெரியாதவர்களாகவும் இருந்துவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் இறப்பை விட கொடுமையானது. மனைவியை வேலைக்கு அனுப்ப விரும்பமில்லாதவர்கள், திடிரென்று ஒரு நாளுக்கு பிறகு தான் இல்லை என்றால் தன் குடும்பம் கரையேறுமா ? என்பதை நினைத்துப் பார்த்து பின்னர் சூழல்களை சமாளிக்கும் பக்குவத்தையாவது மனைவியருக்கு பழக்கிவிடுங்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதும் வெளியுலகம் தெரியாமல் இருப்பது பெண்களுக்கு பெரும் ஆபத்து தான். 

ஆணுக்கு 50 வயதுவரையிலும் கூட மனைவி மறைந்தால் மறுமண வாய்ப்பு அவனது பொருளாதார வசதியைப் பொருத்தது.  ஆனால் 35 வயது கைம் பெண்ணுக்கு திருமணம் செய்ய யாராவது முயற்சிப்பதே புரட்சி என்று சொல்லும் நிலை தான் உள்ளது. நான் ஒருவேளை மறைந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள் என்று பேச்சோடு பேச்சாக தனது ஒப்புதலை முன்பே சொல்லி வைக்கும் ஆண்கள் அரிது.

*********

நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை விட நோய் இருக்கிறதா என்று முன்பே சோதனை செய்து கொண்டு தடுப்பதற்கான செலவுகள் குறைவே.

6 பிப்ரவரி, 2013

'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !

2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்துவந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் அமரர் டோண்டு இராகவனும் ஒருவர். நேற்று கூட பல பதிவுகளில் பின்னூட்டமிட்டிருந்தார், இவர்து சமூகக் கருத்தாங்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும் ஏனைய இவரது எழுத்துகள் படிக்கக் கூடியவை தான், அன்னாரை சென்னையில் இருமுறை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, வலைப்பதிவர்கள் கூட்டத்தில் கடற்கரை சந்திப்பில் முதல் முறை சந்திக்கும் பொழுது 'நீங்கள் தான் கோவி,கண்ணனா ?' என்று விசாரித்து தழுவிக் கொண்டார்,  அடுத்த முறை தி.நகரில் பதிவர் கூட்டத்தில் சந்திக்கும் பொழுதும் அவ்வாறே கட்டிக் கொண்டார், சமுக கருத்தாங்களில் இருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள் என்று அறியப்பட்ட அளவில் இந்தத் தகவல் பல வலைப்பதிவர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

அவரது எழுத்தில் இருந்தே....

"அதன் பிறகு (கோவி.கண்ணனை) நேரில் சந்தித்தபோது நான் அவரை கட்டித் தழுவி வரவேற்றேன் (இதை இதுவரை யாருக்குமே செய்ததில்லை, அவரைப் பார்த்து என்னையறியாமல் செய்தேன்). பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவருக்கும் எனக்கும் சண்டை வந்தது துரதிர்ஷ்டவசமானது என்று. அதன் பிறகும் பல மன வேற்றுமைகள் வந்தாலும் நாங்கள் இருவருமே அதை ஓரளவுக்கு மேல் வளர விட்டதில்லை என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்."


என்னைப் பொருத்த அளவில் அவரும் அவரது சமூகம் சார்ந்த கருத்தாங்களும் அவராக ஏற்படுத்திக் கொண்டது அல்ல, தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதை அவரது சமூகம் சார்ந்த குரலாக ஒலித்தார் என்றே நினைத்தேன், அவரது சாதிப்பற்றும் சாதிசார்ந்த கருத்தாங்களும் வெளிப்படையானவை என்பதால் பலரும் முகம் சுளித்தனர் என்றாலும் பிறர் மறைவாக செய்துவருவதை இவர் வெளிப்படையாக செய்தார் என்ற அளவில் பாராட்டுக்குரியதே, ஏனைய பார்பனர்கள் சாதிப் பெருமையில் தங்கள் சமூகத்தை 'பிராமணர்' என்று எழுதிவருவது தொடர்கின்ற வேளையில் எனக்கு தெரிந்து 'டோண்டு இராகவன்' ஒருவரே தம் சமூகம் என்றாலும் பார்பனர் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் 'பார்பனர்' என்றே எழுதிவந்தார், காலம் காலமாக பிராமணர் என்பது சாதியமாகவும், சாதிசார்ந்து பிறப்பு வழி சாதியில் ஒன்றாக அறியப்படுவதால் அதில் தனிச் சிறப்பு ஒன்றும் இல்லை, அவை சாதியக் குழு அடையாளம் தான் என்பதை டோண்டு இராகவன் ஒப்புக் கொண்டே ஆனால் சாதிய அடையாளம் களையப்படத் தேவை இல்லை என்கிற தற்சார்பில் 'பிராமணர்' என்று எழுதாமல் பார்பனர் என்றே எழுதிவந்தார், பார்பனர்களில் இத்தகைய புரிதல் உள்ளவர்கள் வெகு குறைவே. பார்பனர் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை அவர்களும் பலரைப் போன்றவர்கள், சாதிகளுள் ஒன்று என்கிற புரிந்துணர்வில் தான், தான் சிக்கன் விரும்பி சாப்பிட்டுவதையும் தன்னை 'சண்டைக்கார பார்பான்' என்றும் கூட அவரால் வெளிப்படையாக எழுத முடிந்தது.

அவரைப் பொருத்த அளவில் நிகழ்வுகள் கடந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் அவற்றை எழுதும் பொழுது 'சமீபத்தில் 1952ல்' என்றே எழுதிவந்தார், படிப்பவர்களுக்கு நகைச்சுவையாக, முரண்பாடாக இருந்தாலும் அவற்றை பலரும் ரசித்தனர், அவ்வாறு எழுதுவதற்கு அவர் சொன்ன விளக்கம் 'என்னைப் பொருத்த அளவில் நிகழ்வுகள் அனைத்தும் அண்மையில் நடந்ததாக உணர்வதால் நான் அவ்வாறு எழுதுகிறேன்' என்றே குறிப்பிடுவார்.

முன்பெல்லாம் '65 வயது இளைஞனான டோண்டு இராகவன் எழுதுகிறேன்' என்று தன் வயதை வெளிப்படையாகக் கூறி தன்னை இளைஞன் என்றும் கூறிக் கொள்வார், அண்மையில் ஒருபதிவில் என்னதான்  நான் என்னை இளைஞன் எனக்கூறி வந்தாலும், நான் வயதால் கிழவன்தானே. என்றும் எழுதி இருந்தார், நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையாக இருந்து மீண்டும் எழுத வந்தும் தனது பழைய நிலைப்பாடுகளில் எந்த வித சமரசமும் இல்லாமல் அதே வேகத்துடன் தான் எழுதிவந்தார், 


அன்னாரின் மறைவு சோ மற்றும் மோடியின் வலைப்பதிவு ஆதரவாளர் என்ற அளவில் அவர்களுக்கு தெரியாவிட்டாலும் கூட இழப்பு தான். அவரது பெரியார் எதிர்ப்பு எழுத்துகளும் அதற்கான விளக்கமான சுகுணாதிவாகர், குழலி மற்றும் யுவகிருஷ்ணா போன்ற பிறரின் எதிர்வினைகளும்  எம்போன்றவரை பெரியார் அப்படி என்ன தான் செய்தார் என்று அறிய வைத்து பெரியார் மீது பற்றுதல் கொள்ள வைத்தது.

பல்வேறு மொழிகளைப் படித்து பட்டறிவை வளர்த்துக் கொள்பவர்கள் வெகுசிலரே, ஜெர்மனி, ஹிந்தி, ஆங்கிலம் உள்பட ஆறுமொழிகளில் கைதேர்ந்வராகவும் மொழிப்பெயர்பை தன் தொழிலாகவும் வைத்திருந்தார், தாம் எழுத வந்ததே மொழிப் பெயர்ப்பு தொழிலுக்கு விளம்பர வாய்பாக அமையும் என்கிற மற்றொரு காரணமும் உண்டு என்று வெளிப்படையாகச் சொன்னார், ஒருமுறை அவரிடம் பின்னூட்டத்தில் கேட்டேன், 'உங்களுக்கு தெரிந்த மொழிகளில் தமிழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?' 'சந்தேகமே வேண்டாம், இதில் எனக்கு பாரதியின் நிலைப்பாடு தான்' என்று தமிழைப் பற்றி உயர்வாகவே குறிப்பிட்டு இருந்தார், ஒரு மொழிப் பெயர்பாளர் என்ற அளவில் அவரது இழப்பு மொழிப்பெயர்பாளர்களில் சிறந்த ஒருவரை இழுந்துள்ளோம் என்பதும் தான்.

வலைப்பதிவர்கள் 'தென்திருப்போரை மகர நெடுங்குழைக்காதன்' என்கிற பெயரைக் கேள்விப்படும் பொழுதெல்லாம் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் கண்டிப்பாக நினைவுக்கு வருவார்.

அவர் ஒரு மூத்த வலைபதிவர் மற்றும் என் நண்பர் என்ற அளவில் அவரது இழப்பு எனக்கு மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது, நல்ல நண்பர் என்ற முறையில் அவருக்காக இந்த ஒரு சிறப்புப் பதிவு எழுதி அவரைப் பெருமைப்படுத்துவதை நான் கடமையாகவே நினைக்கிறேன்,  திருவிக அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி தி.க தொண்டர்கள் திருவாசகம் ஓதி அவரை பெருமைப் படுத்தியது போல், பெரியார் பற்றாளன் என்ற முறையில் அன்னாரின் ஆன்மா அமைதியடையவும், அவரது இல்லத்தினர் இழப்பில் இருந்து மீண்டு வரவும் மகர நெடுங்குழைக்காதனை பிராத்திகிறேன்,

இரங்கல் பதிவு இணைப்புகள் : 


பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம் - என்றும் அன்புடன் பாலா


திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். - எடக்கு மடக்கு (முட்டாபையன்)


சாதி இனிஷியல் மாதிரி -  யுவகிருஷ்ணா



டோண்டு ராகவன் -  பத்ரி சேஷாத்ரி



டோண்டு சார் -  கானா பிரபா

பாண்டுச் சோழன் சரித்திரம்  - பினாத்தல் சுரேஷ்

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!  - சுவனப்பிரியன்

அமரர் டோண்டு ராகவன்.. -  T.V.ராதாகிருஷ்ணன் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .. .சிராஜ்

பதிவர் டோண்டு மரணம் - கல்வெட்டு 

Dondu Raghavan Sir, We miss you!! - பழமைபேசி

தமிழின் மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக - இக்பால் செல்வன்

பதிவர் திரு டோண்டு ராகவன்! - வருண்

டோண்டு ராகவன் இறைவன் அடி சேர்ந்தார் - அருண் அம்பி

டோண்டு! - மு.சரவணக்குமார்

டோண்டு ராகவன் - அஞ்சலி..! - உண்மை தமிழன்

டோண்டு ராகவன். - கேபிள் சங்கர்

டோண்டு ராகவன் சார்! - என். உலகநாதன்

அஞ்சலி – டோண்டு ராகவன் - சா. திருமலைராஜன்

டோண்டு - துளசி கோபால்


டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம் - ramachandranusha(உஷா)

1 ஜனவரி, 2013

2012ல் விடுபட்டவை !


நாள்,  கிழமை, ஆண்டு இவைகளில் நல்லது கெட்டது பற்றிய நம்பிக்கை எனக்கு கிடையாது,  என்றாவது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் எதாவது கெடுதல் நடந்தால் நடக்க இருந்தவைகளில் ஒன்று இந்த நாளில் / இந்த காலகட்டத்தில் நடந்துவிட்டது என்பது தவிர்த்து குறிப்பிட்ட நாளை / நேரங்களை வெறுக்கும் அளவுக்கு நான் நினைத்துப் பார்ப்பது இல்லை.

சென்ற ஆண்டைப் பொறுத்த அளவில் நான்கு வெவ்வேறு இடங்களுக்கு நாடுகடந்து சுற்றுலா சென்று வந்தேன், ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்த ஆண்டு என்று சொல்ல முடியும், அதே வேளையில் உடன் பிறந்த தம்பியையும் இழந்திருக்கிறேன், இடையில் வேலை மாற்றம், அதற்கான சூழலும் உருவானது, வேலை மாற்றத்தை தொடர்ந்து பார்த்த வேலைப் போனது என்று நினைத்துப் பார்பதைவிட வேலை மாறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது என்றே கருதினேன், எந்த ஒரு நிகழ்வும், மகிழ்சியைத் தந்தாலும் துக்கத்தைத் தந்தாலும், நிம்மதியை கெடுத்தாலும் இவை நடக்க இருந்த நிகழ்வாக வந்து சென்றது என்பது தவிர்த்து குறிப்பிட்ட கால கட்டத்தை வெறுக்க ஒன்றும் இல்லை என்பது எனது தாழ்மையான தனிப்பட்ட கருத்து.

தம்பியின் மறைவிற்கு முந்தைய வாரத்தில் இருநாள்கள் நண்பர் ஒருவருடன் கோவா சென்று வந்தேன், ஸ்பைஸ் ஜெட் சன் நிதி குடும்பத்தினரின் விமானத்தில் தான் சென்றேன், கட்டணம் ஒன்றும் அவ்வளவு மிகுதி இல்லை, போக வர சென்னை - மும்பை - கோவா - கோவா - மும்பை - சென்னை  நான்கு விமான சேவைகளுக்கு மொத்தம் 12 ஆயிரம் ஆகியது, தங்கும் செலவு இருவருக்கும் இரண்டு நாளைக்கு 5 ஆயிரம், பயணச்சீட்டை (eTicket) எடுத்துச் செல்லவில்லை என்றால் பிச்சைக்காரர்களைப் போல் 100 ரூபாய் பிடுங்கிக் கொண்டு,  அவர்களே ஒரு பேப்பரில் பிரிண்ட் எடுத்து தருகிறார்கள்,  செல்போன் வழியாக உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சலைக் காட்டி eTicket இன்றி Boarding Pass கொடுக்கும் இடம் வரை சமாளித்து வந்தவரிடம் கூட 100 ரூபாய் பிடிங்கிக் கொண்டு தான் Pass கொடுக்கிறார்கள்,  அது எதற்கு என்று தெரியவில்லை,  கோவா பற்றிய தகவல்களை பிறகு நேரம் கிடைத்தால் தனிப்பதிவாக இடுகிறேன். வெட்டியாகப் பொழுது போக்கும் பொழுது மற்றவர்கள் எப்படி நேரம் இல்லை என்று சொல்லுகிறார்கள் என்பதே எனது ஆராய்ச்சிக்குறிய கேள்விகளுள் ஒன்றாக இருக்கும், திட்டமிட்ட வேலைகளில் ஈடுபடும் பொழுது "நேரமின்மை" குறித்த தெளிவு கிடைத்தது, வலைப்பதிவால் சீரழிஞ்சேன் என்று நான் புலம்புவதோ, புலம்பப் போவதோ  இல்லை, ஏனெனில் என்னுடைய எழுத்தின் வழியாக எனது எண்ணங்களைப் புரிந்தோர்  அவர்களாகவே விரும்பி நண்பர்களாக அறிமுகம் செய்து, நட்பைத் தொடரும் வாய்ப்புகள் வலைப்பதிவு வழியாகத் தான் கிடைத்தது.



கோவாவில் இருந்து சென்னையில் இறங்கி பின் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மதுரைக்கு ரயிலில் இரவுப் பயணமாகப் புறப்பட்டு முன்னாள் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றேன், மிகவும் நெருக்கமானவராக இருந்து பின்னர் தொடர்பு வசதி இன்மையால் 16 ஆண்டுகள் தொடர்பில்லாமல் சென்றவர்களில் அவரும் ஒருவர், எதற்கும் அவர் வேலை செய்த அலுவலத்தில் தான் தொடர்ந்து பணியில் இருப்பாரோ என்று மின் அஞ்சல் செய்து பார்க்க, மதுரைக் கிளையில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர், பின்னர் தொடர்பு கொண்டு அலைபேசி எண் பெற்று, சென்னை வரும் பொழுது சந்திப்பாகதாகக் கூறி, பின்னர் மதுரையிலேயே சந்திக்க முடிவு செய்து அவரை சந்தித்தேன்.

மனிதர்களுக்கு 20 - 25 வயதில் என்னமாதிரியான மனநிலை வாய்க்கிறதோ, அதுவே தான் காலம் முழுவதும் இருக்கும் என்றே நினைக்கிறேன், ஆண்டுக் கணக்கை தாண்டிய பழக்க வழக்கங்கள் இதை மெய்பிக்கின்றன, வயதின் வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு அனுபவம் ஓரளவு முடிவுகளை எடுப்பதற்கும், முன்கூட்டிய திட்டமிடலுக்கும் பயன்படுமேயன்றி, 20 வயதில் உருவான உலகம், நட்பு, சமூக எண்ணங்கள்,  தன்னைப் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றைக் குறித்த எண்ணங்களை வயதின் ஏற்றம் மாற்றிவிடாது, நண்பரைப் பார்த்த பொழுது கடந்து போன 16 ஆண்டுகள் சுருங்கி இருந்தது, எனக்கும் அவனுக்கும் முந்தைய பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியை காண முடிந்தது, தோற்றங்கள் கொஞ்சம் மாறி இருந்ததால் ஏற்பட்ட மனத் தடுமாற்றத்தில் "நீ" என்பதை "நீங்கள்" என்று பேசத் துவங்கும் பொழுதே தடுத்தேன் "என்னடா ஆச்சு உனக்கு ?" "வா போ என்றே பேசுடா" என்று சொன்னதைக் கேட்டு சிரித்து உடனே மாறிக் கொண்டான்' 

மதுரையில் ஒரு பகல் பொழுது தங்கி இருந்தேன், மூன்று வலைப்பதிவு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, ஒருவர் பேராசியர் தருமி, மற்றவர் உங்கள் சிலருக்கு அறிமுகமானவர் Consent to be......nothing! என்ற வலைப்பதிவில் எழுதும் திரு கிருஷ்ண மூர்த்தி, மற்றொரு வலைப்பதிவர் (தற்பொழுது பெயர் நினைவில்லை). தருமியை பலமுறை சந்தித்திருந்தாலும் கிருஷ்ண மூர்த்தியை சந்தித்தது முதல் முறை, சென்ற முறை மதுரை சென்ற பொழுது பார்க்க வாப்பில்லாமல் திரும்பிவிட்டேன் என்று வருத்தம் அடைந்திருந்தார், அதனால் இந்த முறை மதுரைக்கு சென்ற பொழுது அவரையும் பார்த்து வந்தேன், 


பிறகு மதுரையில் இருந்து இரவு புறப்பட்டு கோவை சென்று அங்கொரு நாள் பகல் பொழுது, நான் புறப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து கிளம்பிய எனது மதுரை நண்பரும், சென்னை நண்பரும் கோவையில் சந்திப்பது என்பது ஏற்பாடு, என்னுடைய சென்னை நண்பரும் மதுரை நண்பரைப் பார்த்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது, மூவரும் பல ஆண்டுகள் கழித்து ஒன்றாக சந்தித்தது மற்றற்ற மகிழ்ச்சியை வாரி வழங்கியது, இடையில் பகல் பொழுதில் நம்ம ஜோதியர் இல்லம் ஜோதிஜி மற்றும் என்னுடன் நான்கு ஆண்டுகளாக மின்னஞ்சல் தொடர்பில் இருக்கும் அறிவே தெய்வம் சிவா ஆகிய இருவரையும் பார்க்க திருப்பூர் வருவதாகக் கூறி இருந்தேன், அவர்களும் காத்திருந்தனர், இடையில் திட்டமிட்ட நேரம் தவற, திருப்பூருக்கும், கோவைக்கும் இடைப்பட்ட இடமான அவிஞாசிக்கு வரச் சொன்னார்கள், சாலை புதுப்பித்தல் மற்றும் செப்பனிடுதல் தொடர்பில் பேருந்து ஊர்த்து செல்ல மதியம் மூன்று மணிக்குத் தான் அவினாசிக்குச் சென்றேன். 

அதுவரை சாப்பிடாமல் இருவரும் காத்திருந்தனர், பார்த்ததும் தழுவல்களுடன் பலநாள் பழகியவர்களைப் போல் எந்த வித மனத்தடங்களும் இன்றி பேசிக் கொண்டே ஒரு மூன்று நட்சத்திர உணவகத்திற்குச் சென்று தாமே எடுத்து உண்ணும் (பபே) உணவுக்கு அழைத்துச் சென்றனர், ஏற்கனவே பகல் 12 மணிக்கு ஸ்வாமி ஓம்காருடன் கொஞ்சம் வயிற்றை நிரப்பி இருந்ததால், அந்த உணவை சற்று திணறியே உண்டேன், அவர்களும் அப்படியே, நேரம் தப்பிய சாப்பாடு விரும்பிச் சாப்பிட முடியாது அல்லவா ?  நட்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்த உணவுக்கு செலவளிக்கும் பணம் பயன்படும் என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் நெடும் தொலைவில் இருந்து அவர்களைப் பார்க்க வந்தேன், எனக்கு என்ன சிறப்பாக செய்துவிடமுடியும் ? என்ற அவர்களின் கேள்விக்கு அதிக நேரம் செலவழித்து பதில் தேடாத விடையாக பபே உணவு, மற்றபடி ஏன் பணத்தை இப்படி விடுதிக்காரனிடம் வீணடிக்கிறீர்கள்  ? என்று நாகரீகமும் புரிந்துணர்வும் இல்லாமல் கேட்கக் கூடாது என்பதால் அதை நண்பர்களின் உபசரிப்பு என்றே கொண்டேன்.

ஜோதிஜி நினைத்த அளவுக்கெல்லாம் ஒல்லிக் குச்சியாக இல்லை, ஓரளவு பணக்கார களையோடு தான் இருந்தார், மாறாக சிவா நினைத்த அளவுக்கே புகைப்படத்தில் பார்த்தது போல் இருந்தார், நிறைய பேசினோம், 

கோவையில் இருந்து நாகை திரும்பும் போது கோவை தனியார் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இரவில் மின்சாரம் இல்லாததால் ஒரு பயணி நகரும் பேருந்தின் முன் சக்கரத்தில் காலைவிட்டு பாதத்தை இழந்தார், அவருடைய கதறல், சுற்றி இருந்தவர்களின் உடனடியான செயல்பாடுகள், அடுத்த ஐந்து நிமிடத்து 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது, மின்சாரம் இன்மையின் கொடுமைகளில் ஒன்றாக இதுவும் நடந்தது, கருணாநிதியின் ஒரு சில திட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு நன்றாகவே பயன்படுகிறது, ஜெ - தன் ஈகோவை மீறி விட்டு வைத்திருப்பதும் அதை தொடர்ந்து நடத்துவதும் பாராட்டுக்குரியது, 


சென்னையில் அகநாழிகை பொன் வாசுதேவன் மற்றும் மூனா செந்தில், மோகன் குமார் உள்ளிட்ட வலைப்பதிவு நண்பர்களையும் முதன் முறையாகப் பார்த்தேன், அதில் பொன். வாசு நான் தங்கி இருந்த இடத்திற்கே  தன் மகனுடன் வந்து பார்த்துச் என்றார், 


****

ஒரு சிலர் தாம் விரும்பி குறிப்பிட்ட நாள்களில் தம்மை மாற்றிக் கொள்கிறோம் என்று முடிவு செய்து, அதன்படி செயல்படுவதைத் தவிர்த்து எந்த ஒரு நாளுக்கும் தனிச் சிறப்பு தனியாக வந்துவிடாது, கடந்தவைகளில் மறக்கக் கூடியவையும் உண்டு, நினைக்கக் கூடியவையும் உண்டு, நடக்க இருந்த நிகழ்வுகள் கடந்து போனது என்பது தவிர்த்து சென்ற ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்று நினைக்கவில்லை, படிப்பினைகளும், அனுபவங்களும் மோசம் என்றால் அவற்றை கடந்தும் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம், கடந்த ஆண்டு பலவற்றைச் சுமத்திக் கொண்டு, தனிப்பட்ட அளவில் நாம் தொடர்ந்து இயங்க வழங்கிய வாய்ப்பு என்று பார்த்தால் எந்த நாளும் மோசமான நாள் இல்லை, எந்த ஆண்டும் மோசமான ஆண்டு கிடையாது என்பதை என்னளவில் நம்புகிறேன்.

அனைவருக்கும் அன்பான  ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

27 அக்டோபர், 2012

டிவிட்டர் சுட்ட...தடா !


இராஜன் விவகாரம் ஊதி வெடித்தப் பிறகு டிவிட்டரில் முனைப்பாக செயல்பட்ட டிவிட்டர்கள் கணக்கை மூடிவிட்டு ஓடிவிட்டனர். எனக்கு நெருங்கிய டிவிட்டர்/பதிவர் ஒருவரிடம் கேட்டேன், 'இங்கே இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லைண்ணே அதனால் மூடிவிட்டேன்' என்கிறார், பெரும்பாலனவர்கள் டிவிட்டரில் ஆபாச மொழி நடை என்கிற பெயரில் குற்றம் சுமத்தப்பட்ட சாக்கில் கருத்து சுதந்திரத்தில் கை வைத்திருப்பதாகவே நினைக்கின்றனர்.  ஆபாச மொழி நடை என்பதன் மொழி நடையை வரையறுப்பதன் சிக்கல்களும், அவற்றின் மீதான தவறான புரிந்துணர்வுகள் ஆபாச மொழி நடைகளைவிட ஆபாத்தானவை என்கிற கருத்தாக்கம் வலுப்பெறத் துவங்கியுள்ளது, உதாரணத்திற்கு சென்னையில் வெகு சாதாரணமான மொழி நடை மற்றும் பதிவர் ஜாக்கி சேகர் பயன்படுத்தும் **த்தா என்பது கேட்பதற்கு ஆபாசம் என்றாலும் அதன் வீச்சு மிகக் குறைவு, தென் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சென்னைக் காரர் தன்னை **த்தா என்று திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டால் அவரை வட்டார வழக்கு புரிந்துணர்வு அற்றவர் என்று தான் முதலில் புரிந்து கொள்ள முடியும், பிறகு தான் அந்த சொல் அவரை ஏன் காயப்படுத்தியது என்று ஆராய்ச்சிக்கு செல்ல முடியும்.

பார்பனர்களிடையே அன்றாடம் பயன்படுத்தப்படும் சூத்திரவா என்பதன் பொருள் மிகவும் கீழ்த்தரமான பொருள் கொண்டதாகவே சொல்லப்படுகிறது, சூத்திரன் என்றாலும் அடுத்த ஐந்தாம் பிரிவான பஞ்சமன் என்பதன் பொருளும் கிட்டதட்ட வேசி மக்கள் என்பதன் பொருள் கொண்டதாம், பார்பனர் ஒருவர் உங்களை சூத்திரன் என்று சொல்லாவிட்டாலும் தன்னைத் பிராமணன் என்று கூறிக் கொண்டாலே எதிரே உள்ளவர் பார்பனர் அல்லாதவர் அல்லது அவர் உங்களை மறைமுகமாக சூத்திரன் என்று வரையறுக்கிறார் என்றே பொருள், இதை உணர்ந்து தான் மொழி நடைகளில் பிராமணர் என்று சொல்லுதல் நல்லதற்கில்லை என்பதற்காகவே பாரதி போன்றோர் 'பார்பனர்' என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தி வந்தனர் என்பது கவனிக்கத் தக்கது. பொதுவெளியில் தன்னை பிராமணர் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர் மற்றவர்களை சூதிரனாக சித்தரிக்கிறார் என்று குற்றம் சாட்டினால் அதற்கான எந்த விளக்கங்களும் ஏற்கத்தக்கதல்ல.

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா ? பிரபலங்களிடம் அவை இருக்கிறது, ஏனெனில் அவர்களை சட்டம் எந்த விதத்திலும் தண்டிக்காது, ஆளும் காங்கிரசை பாஜாகவினர் பாராளுமன்றத்தில் தேச துரோகிகள் என்று ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளின் குறியீடாகச் சொல்கின்றனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டது போலவும் தெரியவில்லை, சட்டமன்றத்தில் ஜெ கருணாநிதியை விமர்சிக்கின்றார், கருணாநிதி ஜெவை விமர்சிக்கின்றார் விஜயகாந்தும் ஜெ-வும் பலமுறை மேடைகளில் தனித் தாக்குதல்கள் நடத்திக் கொள்கின்றனர், இதற்கெல்லாம் எந்த அவதூறு வழக்குகள் கிடையாது, நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று சாதிய அடிப்படையில் கருணாநிதியை கிண்டல் அடித்தவர் தானே இளங்கோவன், இவையெல்லாம் மேடை நாகரீகமாகவும், அரசியல் ரீதியான கருத்து சுதந்திரமாகப் பார்க்கப்படுவதை செய்தித்தாள்களின் படிக்கும் எவரும் தமக்கும் அந்த உரிமை இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர், அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர் பற்றிய அன்றாட அநாகரீக விமர்சனங்கள் என்றும் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் அவற்றை எழுத்து சாட்சியாக இணையங்களில் செய்யும் பொழுது பிரபலங்களின் மீதான மானப் பிரச்சனையாக ஓட்டு எந்திரங்கள் தண்டிக்கப்படுகின்றனர். இத்தகைய தண்டனைகள் காயம்பட்டவர்களுக்கான வலி நிவாரணியா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை, இத்தகைய ஆபாசத்தாக்குதல்கள் பெருங்கடலில் விழுந்த காக்கையின் எச்சம் போன்று கரையக் கூடியது என்றே அவர்கள் உணர்ந்திருந்தாலும் சாமனியனுக்கு பெற்றுத்தரும் தண்டனைகள் தனது ஆளுமையைப் பற்றி பயம் கொடுக்கச் செய்யும் என்றே நம்புகிறார்கள். 

இணையத்தளங்களில் ஆபாசங்களுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டுமென்றால் ஜெயமோகனை கீழ்தரமாக, ஆபாசமாக எழுதும் சாரு போன்றவர்களும் விதி விலக்குகளாக இருக்க என்ன இருக்கிறது. ஆனால் அதே சாருவே இதுபற்றி மாற்றுகருத்தாக இணையங்களில் ஆபாசம் தண்டனைக்குரியது என்று திருவாய்மலர்கிறார், ஆக இவர்களின் ஆபாசம் குறித்த அலறல்கள், சாதரணவர்கள் பிரபலங்கள் மீது செய்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை  மற்றும் மறைமுக மிரட்டல்களாகவே  நினைக்க முடிகிறது.

எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் பற்றிய எல்லைகளை அதிகார வர்க்கம் முடிவு செய்யும் நிலையில் அவைப்பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாமல் எழுதிவிட்டு கருத்து சுதந்திரத்தில் கைவைத்தாக நாம் புலம்புவது பொருளற்றதாகவே உள்ளது. பெண் சுதந்திரம் என்பது ஆண்வர்க்கம் விருப்பப்பட்டு இடும் பிச்சை என்று பலர் நினைப்பது போல் எழுத்து சுதந்திரம் என்பவை அதிகார வர்க்கம் கண்டுகாணாமலும் விட்டு வைத்திருக்கும் பிச்சை என்று தான் நினைக்க முடிகிறது.  எழுத்து சுதந்திரத்தின் எல்லைகள் பற்றி எந்த ஒரு கருத்தும் வரையறுக்கப்படாத நிலையில் டிவிட்டர்கள் கணக்கை மூடிவிட்டுச் செல்வது வரவேற்க்கத் தக்கது தான்.

பிரபலத்தை எதிர்ப்பது குற்றம், ஆபாசமாகப் பேசுவது குற்றம் இதற்காக சிறைச் சாலைக் கதவுகள் திறந்தே இருக்கும்  பிரபலத்தை எதிர்க்க மற்றொரு பிரபலமாக இருக்க வேண்டும் இங்கு தகுதிகள் தான் எதிர்பவரையும் எதிர்க்கப்படுவரையும் முடிவு செய்கிறது. 

23 அக்டோபர், 2012

ராஜன்லீக்ஸ் செய்த தவறு !


பிரபலங்கள் டிவிட்டுகிறார்கள், பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் அவர்களை பாலோ செய்யும் வழக்கம் எனக்கு இல்லை, தொலைகாட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு பிரபலங்களின் கருத்து முக்கியமானதாக இருக்கலாம், ஊடகங்கள் பிரபலங்களின் பின்னால் செல்லட்டும், நமக்கு தேவை நம்மைப் போன்றவர்களின் கருத்துகள் எத்தகையது என்று அவர்களிடம் நம் கருத்தை பகுர்ந்து கொள்ளலாம் என்பதால் தான் வலைப்பதிவில் எழுதுவதை விருப்பத்துடன் பொழுது போக்காகவும் செய்துவருகிறேன், வலைப்பதிவு போன்ற பொது ஊடகத்தில் கருத்து செல்பவர்கள் பிரபலங்கள் என்றாலும் அவர்களுடைய கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து முன்வைக்கப்படும் பொழுது அதை எதிர்கொள்வார்கள் என்ற மனநிலையில் பிரபலங்களைப் பின் தொடருவர்கள் பட்டியல் மிகப் பெரியது, அதற்கான பலனைத்தான் இராஜன் மற்றும் பிறர் எதிர் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது, 

சாமானியர்கள் காவல் துறையிடம் தங்கள் பிரச்சனைகளை முறையிட்டால் காது கொடுத்துக் கேட்டு நடவடிக்கை எடுக்க நேரமில்லாமல் இருக்கும் காவல்துறை பிரபலங்கள் முறையிட்டால் உடனேயே நடவடிக்கை எடுத்துவிடுமாம், எனக்கு தெரிந்து காவல் துறையினருக்கு ஊதியம் கொடுப்பது பிரபலங்கள் இல்லை, பொதுமக்கள் வரிப்பணம் தான் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது, ஆனால் பிரபலங்களுக்கு சேவை செய்வதற்கு கொடுக்கும் முன்னிரிமையை மற்றவர்களுக்கு கிஞ்சித்துக் கொடுப்பதில்லை, எனவே வலைப்பதிவு அல்லது டிவிட்டர் போன்ற ஊடகங்களில் இடம் பெறும் பிரபலங்களைச் சீண்டுவது அல்லது எதிர்கருத்து சொல்வதெல்லாம் யோசித்து செய்ய வேண்டிய ஒன்றே நடந்த நிகழ்வு பாடமாக ஆக்கியுள்ளது.

"பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது." - சின்மயி

இட ஒதுக்கீடு குறித்து இவர் டிவிட்டரில் பகிர்ந்த தனிப்பட்ட கருத்துகளுக்கு இவர் வருத்தம் தெரிவித்தது போலவும், இட ஒதுக்கீடு குறித்து இவர் தவறாக விளங்கிக் கொண்டது போலவும் எந்தக் கருத்தும் இவரது விளக்கங்களில் இல்லை, மாறாக நீங்களும் அப்படித்தான் நினைக்கக் கூடும் என்றே எழுதி இருக்கிறார், இட ஒதுகீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்பட்டவர்களுக்கும் பிடிங்கிக் கொடுக்கப்படும் அல்லது பார்பனர்களிடம் அபகரிக்கப்பட்ட சொத்து போன்று தான் இவர்கள் கருத்து கொண்டிருக்கிறார்கள், இத்தகைய புரிந்துணர்வு உள்ளவர்களிடம் விவாதம் செய்வதும் பின் தொடர்வதனாலும் சமூகத்திற்கு என்ன பலன் ?  திராவிட இயக்கங்கள் காலம் காலமாக இது பற்றிப் பேசி வந்திருந்தாலும் பார்பனர்களின் எத்தனை பேர் இட ஒதுக்கீடு பற்றி சரியான புரிந்துணர்விற்கு வந்திருக்கிறார்கள், இராஜன் போன்றவர்கள் ஏன் இவர்களிடம் போய் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும் ? மாறாக முற்றிலுமாக புறக்கணித்திருக்கலாமே. தினமலர் போன்ற பார்பன ஊடகங்களைப் படிக்கும் பொழுது நமக்கு தேவையற்ற இரத்த அழுத்தம் ஏற்படலாம் என்று நான் அவற்றைப் படிப்பதை முற்றிலும் தவிர்த்தே வருகிறேன், வலைப்பதிவிலும், கூகுள் ப்ளஸிலும் பார்பனிய கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள் இணைந்திருந்தாலும் நான் அவர்களை பின் தொடர்வது கிடையாது,

சமூகத்தில் பெண்ணுக்கு எதிரான அதுவும் பெண் பிரபலமென்றால் உடனேயே நடவடிக்கை அரசு எந்திரங்கள் உண்டு, காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கைதி காவல் துறையினாலே பாலியல் வண்முறை செய்யப்படும் நாட்டில் தான் இத்தகைய பெண் உரிமைகாவலர்களும் இருக்கிறார்கள் என்று நாம் பெருமைப் பட வேண்டும்.

பிரபலங்களை அதுவும் பெண் பிரபலங்களை பின் தொடர்ந்து சூடுபோட்டுக் கொள்ளாதீர்கள், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இருக்கும் பொழுது அரசு எந்திரங்களை காவலாக வைத்திருப்பவர்களிடம் உங்கள் உரையாடல்கள் தேவை தானா ?

வலைப்பதிவில் பெண்கள் அதிக அளவில் எழுதுவது மகிழ்ச்சி அளித்தாலும் ஒரு பெண்ணாக நான் அசிங்கப்பட்டேன், ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறார்கள் என்கிற பரப்புரைகள் உண்மையிலேயே பெண்கள் எழுதுவதை முடக்கிவிடும். எதாவது பிரச்சனை என்று வரும் பொழுது அதை எளிதாக திசைத் திருப்பும் ஆபத்தாக 'பெண்ணென்றும் பாராமல் என்னை இழிவு படுத்திவிட்டார்கள்' என்று உங்களை நோக்கிச் சொல்லப்படும் குற்றச் சாட்டுகளை உங்களால் எதிர்கொள்ள முடிந்தால் நீங்கள் பிரபல பெண்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்து சொல்லலாம்.

வலைப்பதிவில் கருத்து சுதந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் பிரபலங்களிடம் விவாதம் செய்யாதீர்கள், இங்கு மருத்துவர் ருத்திரன் கூட மனநலமில்லாத மருத்துவர் என்று கிண்டல் செய்யப்பட்டார், மிகவும் கேவலமாகப் பேசப்பட்டார், இருந்தும் அவர் தன்னைப் போன்ற பிரபலத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் புலம்பியது போல் தெரியவில்லை, பொது ஊடகங்களில் மாற்றுக் கருத்து என்ற பெயரில் வசைச் சொற்கள் வழக்கமானது என்று தான் ருத்ரன் போன்ற பிரபலங்கள் நம்புகிறார்கள், திமுகவின் அழுகிய நாக்குகளான நன்னிலம் நடராஜனும் தீப்பொறி ஆறுமுகமும் பொதுவாழ்க்கைக்கு வந்த முதல்வர் ஜெ வைப் பேசாத பேச்சா ? 

வலைப்பதிவர் இராஜன் தனிப்பட்ட முறையில் பாடகி சின்மயியை தரக்குறைவாக பேசி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இவ்வாறு இல்லாமல் வெறும் கருத்து மோதல்களுக்காக இராஜன் தண்டிக்கப்பட்டால் பாடகி சின்மயியின் செயலுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும், இராஜன் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

இது தேவையா இது தேவையா என்று எழவு விழுந்த வீடுபோல் அவரவருக்குள் பேசுவதை விட்டு வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட்டு. இது குறித்த ஸ்கிரீன்சாட்டுகள், டுவிட்டுகள் எல்லாம் வெளியே வந்தால் தான் உண்மை தெரியவரும். பிரபலத்தை எதிர்த்த ஒரே காரணத்தால் வலைப்பதிவர்கள், ட்விட்டர்களின் கருத்து சுதந்தரம் பறிக்கப்படுவதும். அவர்கள் முடங்குவதும் தான் முடிவு என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்

8 அக்டோபர், 2012

கேபிள் சங்கருடன் பொன் மாலைப் பொழுது !


கேபிள் சங்கர் தற்பொழுது சிங்கையில் இருக்கிறார், தனது சினிமா துறை தொடர்பில் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து உரையாட சிங்கை வந்துள்ளார்,  நேற்று காலையில் விமான நிலையம் செல்ல இயலாத நிலையில் மாலையில் சந்திக்கலாம் என்று பிரியமுடன் பிரபு அழைக்க கேபிளை சந்திக்க மாலை 6 மணி வாக்கில் குட்டி இந்தியா சென்றேன், அங்கே ஏற்கனவே தமிழ்வெளி நிறுவனர் குழலியுடன் உரையாடிக் கொண்டிருந்தார், கட்டித் தழுவலுடன் ஒரு வரவேற்பைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் அளவளாவிட்டு, திரைப்படம் குறித்து பேச்சு வந்தவுடன் 'இங்கிலிஸ் விங்கிலிஸ்' பார்க்க விரும்புவதாக கேபிள் சொன்னார். அதுக்கென்ன கிளம்பிடுவோம் என்று திரையரங்கையும் காட்சி விபரங்களையும் தெரிந்து கொள்ளும் பொழுது அடுத்த 30 நிமிடத்தில் தெம்பனீஸ் ஜீவி திரையரங்கிற்குச் சென்றால் பார்க்க முடியும், கிளம்புங்க கிளம்புங்க என்று நால்வரும் கிளம்பி வாடகை வாகனம் எடுத்து கிளம்பினோம், 6:40க்கு திரையரங்கிற்குள் நுழைந்து 5 நிமிடம் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு வாங்கி உள்ளே செல்லும் முன்பே முன் இருக்கை தான் என்று உறுதியாக தெரிந்த நிலையில் 45 டிகிரி கோணத்தில் திரை தெரிய படம் பார்த்தோம், திரைக்கு மிக அருகில் இருந்து பார்க்க கொஞ்சம் கழுத்து வலிக்கத் தான் செய்தது.

அடுத்த வாரிசு படத்தின் பிறகு தமிழில் ஶ்ரீதேவியின் (அரவிந்தசாமியுடன் நடித்தது அல்ல)  ரஜினியுடன் நான் அடிமை அல்ல, அதன் பிறகு தமிழ் பக்கம் ஒதுங்கவும் இல்லை, ஶ்ரீதேவியை திரையில் பார்க்க ஆவலுடன் இருந்தேன், குரல் முன்பு போல் (சற்று மூக்கால் பேசுவது போன்ற கொஞ்சும் குரலாக )இல்லாமல் கொஞ்சம் கரகரப்பு கூடி இருந்தது, பார்த்தது இந்திப் படம் என்பதால் ஶ்ரீதேவி குரல் பழக்கப்பட்ட குரல் போலும் தெரியவில்லை, எனக்கு சற்று ஏமாற்றமே, மற்றபடி ஶ்ரீதேவியின் தோற்றம் நடிப்பு சூப்பரோ சூப்பர், திரைப்படம் பற்றி விமர்சனங்களை கேபிள் எழுதிவிட்டார், அவரைவிட சிறப்பாக எழுத என்னால் முடியாது, எனவே விமர்சனங்களைத் தவிர்க்கிறேன். ரஜினி, சில்க், ஶ்ரீதேவி, அஜித் ஆகியோரைத் தான் பிரேமுக்கு பிரேம் ரசிப்பேன் என்பதால் ஶ்ரீதேவி வரும் காட்சிகள் அனைத்தையும் விழிக் கொட்டாமல் பார்த்தேன். 

கொஞ்சம் கூட சொதப்பல் இல்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் ஶ்ரீதேவியின் உணர்வு பூர்வமான நடிப்பு பாராட்டச் சொற்கள் இல்லை, நடிகர்கள் தவிர்த்து சென்ற தலைமுறை நடிகை ஒருவர் படம் முழுவதும் ஆக்கிரமித்து நடித்திருப்பது எனக்கு தெரிந்து ஶ்ரீதேவி ஒருவர் தான். முகத்தின் சுருக்கங்களை மேக்கப் சரிசெய்ததைவிட அவரது கண்கள் மிகுதியாகவே சரி செய்ததிருந்ததால் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு ஶ்ரீதேவியின் தோற்றம் மாறாமல் இருப்பதும் இந்தப் படத்தில் சிறப்பு, ஹார்லிக்ஸ், காம்ப்ளான் அம்மாக்களைப் போன்று படத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

ரொம்பவும் முடிச்சுகள் இல்லாமல் கான்வெண்ட் செல்லும் பிள்ளைகள் இருக்கும் இல்லத்தில் நடக்கும் இயல்பான கதை. ஶ்ரீதேவி ரசிகர்களுக்கு மிகவும் அருமையான திரைவிருந்து.

*****

படம் முடிந்து வெளியே வந்து ஸ்டார்பக்ஸில் ஆளுக்கு ஒரு காபி குடித்துக் கொண்டே படத்தைப் பற்றிப் பேசிவிட்டு இரவு 10 மணி வாக்கில் அவரவர் கிளம்பினோம்,  வலைப்பதிவர் நண்பராக மிகவும் இயல்பாக, அன்பாகப் பேசக் கூடியவர்கள் மிகச் சிலரே, கேபிள் சங்கர் பிரபலபதிவர் என்றாலும் பெரிய இயக்குனர் ஆக ஆனாலும் இப்படித்தான் இருப்பார் என்றே நினைக்கிறேன். இது போன்ற நண்பர்கள் நம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள் என்றால் நாம பார்க்காமல் விட்டால் நமக்கும் நட்டமே. 

எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று மிகத் தெளிவான புரிந்துணர்வுகள் கொண்டவர்கள் மிகச் சிலரே, அதில் கேபிள் சங்கரும் ஒருவர்.  மிகவும் வெளிப்படையாக பகட்டில்லாமல் பேசும் கேபிள்ஜி த கிரேட். அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்த அனுபவமும் மறக்க இயலாத ஒன்று.

கேபிள் சங்கர் வரும் வியாழன் 11 அக்டோபர் வரை சிங்கையில் இருப்பார், தொடர்பு கொள்ள +65 82037082

28 ஆகஸ்ட், 2012

யார் மூத்தப் பதிவர்கள் ?


தமிழ் பதிவர்களின் மாபெரும் ஒன்று கூடலை நேரடி ஒளிபரப்பை நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க முடிந்தது, இந்த ஏற்பாடு சிறப்பு,  இணைய வேகத்தில் குறைபாடு இருந்ததால் விட்டு விட்டு தெரிந்தது, இருந்தாலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் ஒரு வாய்ப்பு என்ற அளவில் இதை நான் குறையாகவும் கருதவில்லை. தமிழகத்தில் இந்த அளவு ஏற்பாடு செய்ய முடிவதே பெரிய அளவு.  நான் பார்க்கத் துவங்கிய பொழுது பதிவர் அறிமுக நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி கிட்டதட்ட இரண்டு மணி நேரம் நடந்ததாக பின்னர் தெரிந்தது.  சிங்கப்பூரில் சிறிய அளவிலான சந்திப்புகளில் பதிவர் அறிமுகங்களை தவிர்ப்போம், காரணம் தேவையற்ற நேர விரயம் என்பதுடன், திட்டமிட்ட மற்ற நிகழ்ச்சிகளை நடத்த போதிய நேரம் கிடைக்காது என்பதால் பதிவர் அறிமுகங்களை தவிர்ப்போம், அதற்கு மற்ற காரணம், வலைப்பதிவில் எழுதுகிறார்கள், ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்ற அளவில் திரும்பவும் அறிமுகப் படுத்திக் கொள்வது தேவையற்றது என்பதாலும், மிகவும் புதியவர் / வாசகர் என்றால் மட்டுமே சிறு அளவிலான தகவல்களை கேட்டுப் பெருவதுடன் சரி. சிலருக்கு பேசவே கூச்சமாக இருக்கும்  அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்ல நெளிவார்கள்.  பெரிய கூட்டங்களில் சிலர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்று நினைத்திருப்பார்கள். அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத நிலையில் அவர்களை மேடை ஏற்றி அறிமுகம் செய்யது கொள்ளச் சொல்வதும் அவர்களை வர்புறுத்துவதாகும். சிலர் அறிமுகம் என்ற அளவில் இல்லாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள், அதை கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் நெளிவார்கள். இதற்கு மாற்றாக பெயர் அட்டைகளில்  (பேட்ஜ்) அவர்களது பெயர், தேவை என்றால் ஊர் மற்றும் வலைப்பதிவு பெயரை, வருகையை உறுதிப்படுத்தியவர்கள் என்ற அடிப்படையில் முன்கூட்டியே அச்சடித்து வைத்திருந்து வருகையின் பொழுது அணிந்து கொள்ளச் சொல்லலாம். அதைப் படிப்பவர்கள் இன்னார் இன்னார் என்று தெரிந்து கொள்வார்கள். விருப்பம் இருந்தால் நிகழ்ச்சி இடைவெளிகளில் தான் உரையாட விரும்புவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து தொடர்ப்பு கொள்வார்கள்.

*****

மூத்தப் பதிவர் யார் என்ற (சுரேகாவின்) விளக்கம் சிறப்பாக இருந்தது,  வலைப்பதிவில் ஓரளவு தொடர்ந்து செயல்படும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூத்தப் பதிவர்கள் என்ற விளக்கம் எனக்கும் பிடித்திருந்திருந்தது, ஏற்கிறேன், என்னைக் கவர்ந்த மற்றொன்று தமிழ் பதிவர்களிடையே பெரியவர்களை மதிக்கும் பண்பு, இவை யாருமே சொல்லிக் கொடுக்காமல் வளர்ந்திருக்கிறது, இதற்கு அடிப்படைக்காரணம் நமது பண்பாடு என்றே நினைக்கிறேன், பெரியவர்களிடம் கருத்து மோதல் செய்வதுடன் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்புகளை இணைத்துப் பார்க்கலாகது என்ற புரிந்துணர்வு பங்குபெற்ற அனைவருக்குமே இருந்தது பாராட்டத்தக்கது, வலைப்பதிவில் எழுதுகிறார்கள், வயதில் மூத்தவர்கள் என்ற அளவில் அனைவரும் மதிக்கின்றனர் என்ற உணர்வே மூத்தவர்களுக்கு கிடைக்கும் சிறந்த வெகுமதியாகும், என்னுடைய தனிப்பட்ட நன்மதிப்பு பெற்றவர்கள் என்ற அளவில் மூத்த வலைப்பதிவர்கள் சிலரை நேரடியாக சந்திக்கும் பொழுது அவர்களின் காலில் கூட விழுந்து எழுந்திருக்கிறேன், அதற்காக அவர்கள் எழுதுவதையெல்லாம் சரி என்றெல்லாம் நான் ஒப்புக் கொண்டதோ, மறுக்கத் தயங்கியதோ இல்லை,  தீமையான கருத்துகளைப் பரப்புவர்கள் என்பவர்கள் தவிர்த்து மூத்தவர்களை மதிக்க வேறெந்த அளவுகோலும் தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

வலைப்பதிவில் நீண்டகாலமாக எழுதிவரும் திரு டோண்டு இராகவன் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாதது சற்று ஏமாற்றம் தான், சந்திப்பில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர், திரு டோண்டு இராகவன் கலந்து கொள்ளவதை ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்திருந்தால் அவருக்கும் சிறப்பு செய்திருபார்கள் என்றே நினைக்கிறேன், அது தவிர்த்து டிபி ஆர் ஜோசப், தருமி மற்றும் டிவிஆர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், டிவிஆர் / தருமி கலந்து கொள்ளாததன் தனிப்பட்ட காரணங்களை பதிவில் எழுதி இருந்தனர்.  விழாவில் கலந்து கொள்ளபவர்கள் என்ற அடிப்படையில் இல்லாமல் முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள்  மூத்தப்பதிவர்களை அடையாளம் கண்டு, தொடர்பு கொண்டு அவர்களின் விருப்பம் கேட்டிருந்தால் விடுபட்டவர்கள் ஒருவேளை கலந்து கொள்ள நேரிட்டிருக்கும். விழாவில் கலந்து கொள்பவர்கள் தவிர்த்து வெளிநாட்டில் வசிக்கும் மூத்தப்பதிவர்களையும் பாராட்டி அவர்களுகான சான்றிதழ்களை அனுப்பியும் வைக்கலாம், நேரடியாக அனைவரும் பங்குபெற முடியும் என்பது வாய்ப்பற்றது. உதாரணத்திற்கு திருமதி துளசி கோபால், இவரைத் தெரியாத பதிவர் வலைப்பதிவராக இருக்க முடியாது, வலைப்பதிவு முன்னோடி என்பது தவிர மூத்த வலைப்பதிவர் என்கிற தகுதியும் பெற்றவர், இவரைப் போன்றவர்களை நினைவு கூர்ந்து பாராட்டாமல் மாபெரும் சந்திப்புகளில் வெற்றி என்ற சொல்லாடலை இணைத்துக் கொண்டால் மட்டும் போதாது. இதை நான் குறை என்ற அளவுகோளில் குறிப்பிட வில்லை, நிகழ்ச்சி பற்றிய எனது எண்ணம், அதை வெளியே சொன்னால் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மற்றவர்கள் நிகழ்ச்சி பற்றி என்னக் கூறுகிறார்கள் என்பது தெரியவரும் என்பதால் குறிப்பிடுகிறேன், எனவே குறை / எதிர்கருத்து என்ற அளவில் இதைப் பொருத்திப்பார்க்காதீர்கள்.

*****

தமிழ் வலைப்பதிவர்களுக்கு பொது அமைப்பு தேவையா ? சாத்தியமா ? - இதையெல்லாம் கடந்த ஆண்டே பலர் எதிர்த்தும் ஆதரித்தும் எழுதிவந்தார்கள், பொது அமைப்பு என்றால் யார் தலைமை ஏற்பது ? கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் என்று திமுகவினரால் சொல்லப்பட்டால் கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் ஆகிவிடுவாரா ? அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா ? என்பது போன்றது தான் வலைப்பதிவர்களுக்கான பொது அமைப்பும் தலைமையும். எந்த ஒரு அமைப்பும் வெற்றிகரமாக செயல்பட தலைமை மிகவும் தேவை, வழிகாட்டல் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அமைப்பாக செயல்படவும், தலைமை தாங்குபவர்களை தேர்ந்தெடுக்கவும் விளக்கங்கள் காரணங்கள் தேவைப்படுகிறது. சிலர் சென்னைப் பதிவர் சந்திப்பு என்றார்கள், சிலர் தமிழ் நாட்டு பதிவர்கள் சந்திப்பு என்றார்கள், வெளிநாடுகளில் இருந்து சிலர் கலந்து கொண்டதால் உலக தமிழ் பதிவர்கள் சந்திப்பு என்றார்கள். வலைப்பதிவர்களுக்கான பொது அமைப்பு ஏன் ? என்பதற்கான காரணங்களை நாம் தெளிவாக வரையறுக்காதவரை அதுபற்றியும் அதன் தலைமை பற்றியும் பேசுவது வீண். மற்றபடி

நகரம் சார்ந்து ஒருசிலரின் உந்துதலில் வலைப்பதிவாளர்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சி நடத்துவதில் ஏதும் சங்கடங்கள் இல்லை, சென்னை நிகழ்ச்சியைக் கூட நான் அப்படித்தான் பார்க்கிறேன், இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள் மதுரை, கோவை, திருச்சி, பெங்களூர் டெல்லி மற்றும் வலைப்பதிவர்கள்  எண்ணிக்கை அளவில் மிகுந்திருக்கும் இடங்களில் நடத்துவது அவசியம் தான்.  நாங்கள் சிங்கையில் மணற்கேணி நிகழ்ச்சி நடந்தினோம், முதலாண்டு வெற்றியாளர்களுக்கு மறைந்த வலைப்பதிவர்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் பெயரிலேயே விருதுகள் வழங்கினோம்,  இதில் அமைப்பு என்பது சிங்கைப்பதிவர்கள், அதிலும் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் கலந்து பேசி பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தொடர்ந்து செயல்படாமல் இருப்பதற்கு வேறு சிலகாரணங்கள் இருந்தாலும் யாருக்கும் அதில் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகள் எதுவும் இல்லை. 

இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் கணக்கு வழக்குகள் மிகவும் முக்கியம் யாரும் மட்டமான கமெண்ட் அடித்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஏன் நடத்தினோம் ? என்று வருந்துவார்கள். ஸ்பான்ஸர் சிப் அல்லது விருப்பத்தின் பெயரில் விரும்பியதைக் கொடுக்கலாம், திட்டச் செலவு இவ்வளவு என்று சொல்லிவிட்டால் விரும்பியவர்கள் பொருளுதவி செய்வார்கள்,  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நடந்த பிறகு பல்வேறு தரப்பினரால் சர்ச்சைக்கு உள்ளாவர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதன் பிறகான சர்சைகளும் அங்கமே, அத்துடன் சேர்த்து தான் நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வருகின்றது, எனவே சர்சைகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது, மிகவும் மோசமான சர்சை என்றால் மட்டுமே விளக்கங்கள் கொடுக்கலாம்.

நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்க்கும் பொழுது நானும் கலந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது, அதற்கான முன்னேற்பாடுகளை நான் எதுவும் செய்யவும் இல்லை, ஆனாலும் இதுபோன்ற மாபெரும் சந்திப்புகளில் கலந்து கொள்வதால், என்னைப் பிடிக்காதவர்களையும் நான் சந்திக்க வேண்டிய சங்கடமாக அமைந்துவிடும், அதனால் முடிந்த அளவு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வது ஐயமே. கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை.

23 ஆகஸ்ட், 2012

கு_கா_ன் பே_சு வி_ஞ்_ப் போ_சு !


பிரச்சனை முடிஞ்சதா இல்லையான்னு தெரியவில்லை,  பதிவர் ஆரூர் மூனா செந்தில் மற்றும் நாய் நக்ஸ் - நக்கீரன் ஆகிய இருவர் தனிப்பட்ட முறையில் பேசியதை திரை ஒற்று (ஸ்கீரீன் ஷாட்) எடுத்து போட்டு, பதிவர் சந்திப்பு என்றாலே குடிகாரர்கள் கூடிக் களிக்கும் இடம் என்பது போன்ற தோற்றம் விளைவிக்க ஒரு முயற்சி மதவாதப் பதிவர்களால் நடந்தது,   இவங்க இரண்டு குழுவிற்கும் என்ன பிரச்சனை என்று ஊகித்தால், தமிழ்மணம் மகுட போட்டிகளில் அண்மைக்காலமாக முனா செந்திலின் இடுகைகளும் இடம் பிடிப்பது கூடக் காரணமாக இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து, தமிழ்மணம் மகுடம் சூடும் பதிவுகளின் 'தரம்' உருவாக்கப்படுபவை / தெரிந்தவை தான் என்பதால் நமக்கு அதில் ஏதும் நட்ட/நாட்டமில்லை, ஆனால் அதை 'தரமாக' நினைப்பதுடன் அதில் தங்கள் 'தரமான' பதிவுகளை போட்டிப் போட்டு வாக்குக் குத்தி இணைப்பவர்களுக்கும் மூனா செந்தில் மீது எரிச்சல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்பது எனது அனுமானம் என்றாலும் அதில் உண்மைகள் இருக்காது என்று சொல்ல ஏதேனும் வாய்ப்புள்ளதா என்பதை வாசிப்பவர்களின் பார்வைக்குவிட்டுவிடுகிறேன், நான் தனிப்பட்டு யாரையும் குறைச் சொல்லவில்லை, குழுவாகச் செயல்படுபவர்கள் குறித்து தான் சொல்கிறேன், விமர்சனங்கள் என்பது தவிர்த்து தனிமனித தாக்குதலில் எனக்கு விருப்பம் கிடையாது, தவிர 'முகம் தெரியாதவர்களை' பழகி இருக்காதவர்களுடன் விவாதம் செய்வதையும் கூட நான் தவிர்த்தே வருகிறேன், மூனா செந்திலோ, நக்கீரனோ கூட எனக்கு நேரடியாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ தொடர்ப்பு அற்றவர்கள், இக்பால் செல்வன், சார்வாகன், ராஜ நடராஜன் ஆகியோருடன் கூட எனக்கு நேரடித் தொடர்புகள் எதுவும் கிடையாது,  குழுவாக செயல்படும் போது அதில் இணைந்திருப்பவர்களின் தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் சேர்த்தே முட்டுக் கொடுக்கும் மூட்டுவலி பற்றி அறிந்தவன் என்பதால் எந்த ஒரு குழுவிலும் சேர்ந்து செயல்படுவதில் விருப்பமற்றவன். இருந்தாலும் பதிவர் சார்ந்த ஒருங்கிணைப்பு சந்திப்புகளில் கலந்து கொள்வதுண்டு. வார இதழில் வாசிப்பாளர் போல் வாசித்துவிட்டு கருத்துகளை பின்னூட்டமாகச் சொல்வதுடன் சரி. இந்தக் கருமாந்திரத்தை நான் ஏன் எழுதனும் ? யாருக்காவது முட்டுக் கொடுத்து துட்டுப் பார்க்கப் போகிறேனா ? என்று கூட ஒரு சிலர் நினைக்கக் கூடும் என்பதால் விளக்கம் பின்னர் அளிக்கிறேன்.

******

ஒரு பழமொழி சொல்லுவாங்க 'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு' கொலை வெறியோடு வசைபாடியதையோ, மதுவாடையுடன் சொட்டும் எச்சிலுடன் மேலே விழுந்து அன்பு செலுத்த முயற்சித்தையோ போதை தெளிந்து விடிந்தவுடன் மறந்துவிட்டு, யாரேனும் அதுபற்றிச் சொன்னால் 'ராத்ரி போதை அதிகமாச்சு மாப்ளே' என்று வழிந்துவிட்டு மறந்துவிடுவார்கள், குடிகாரர்களில் 95 விழுக்காட்டினர் கட்டிப் புரண்டு சண்டை இடுபவர்களோ, சாக்கடையில் விழுந்து கிடப்பவர்களோ கிடையாது, இருந்தாலும் மது உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அது 'தீய பழக்கம்' என்று வகைப்படுத்தப்பட்டு தவிரக்கச் சொல்லி வலியுறுத்தப்படுகிறது. பருவ வயதைக் கடந்தவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்ற வகையில் அரசுகளே மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்கின்றன என்பதால் மது ஒட்டு மொத்த சமூகத்தீன் சீர்கேடு என்று சொல்ல ஒன்றும் இல்லை, உடல் நலன் என்ற அளவில் தனிப்பட்ட மனிதனுக்கு மது குறித்த விழிப்புணர்வை ஊட்டுகிறார்கள், ஆனாலும் மதுவும் மருந்தாகும் என்ற அடிப்படையில் போதைக் குறைவான ஒயின் வகைகளை இதய நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.  எனவே மதுவின் நன்மை தீமை என்பவை எல்லாம் அவற்றின் அளவான மற்றும் தேவையான பயன்பாடுகளைப் பொருத்து மாறும். ஒட்டு மொத்தமாக மது சமூகத்தின் சாபக் கேடு என்று சொல்ல முடியாது.

மனித சமூகத்தின் சாபக் கேடுகள் மதங்கள் தான், மதுவைக் காட்டிலும் போதைத் தரக் கூடியவை மதங்களே, நானும் அவனும் உற்ற நண்பர்களாக இருந்தாலும் எதோ ஒரு அசம்பாவிதத்தினால் மத ரீதியில் பிளவு பட்டு நிற்கும் பொழுது என் கையில் இருக்கும் அறிவாள் அவனைப் பதம் பார்க்காது என்பதற்கு மதம் உத்திரவாதம் கொடுக்காது, ஆனால் மனித நேயமும், நட்பும் உத்திரவாதம் அளிக்கும், அவை மதங்களினால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதில்லை.

எந்த ஒரு மதம் சார்ந்த தீவிர வாதச் செயலிலும் குடிகாரர்களின் பங்கு என்று எதாவது இருக்கிறதா ? குடிகாரன் என்பதால் மட்டுமே குண்டு வைத்தான் என்று ஏதேனும் செய்திகள் வந்ததுண்டா ? துளி கூட ஆல்ஹால் இல்லாமல் போதை ஏற்றும் மதத்திற்கு இருக்கும் பண்பு நலன்களில் மிகக் குறைந்த விழுக்காடே ஆல்ஹால் சேர்ந்த மதுவில் இருக்கிறது. குழுவை ஏற்படுத்தவும், குழுவிற்கு போதை ஏற்றவும் சக்தி படைத்தவை மதங்கள், அதை ஒப்பிட டாஸ்மாக் கடைகளோ, குடிகாரர்களோ அற்பம் தான். 

மதப்பற்றாளர்கள், மதவெறியர்கள் போதை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் அதன் முரண்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை மதம் - மது - எது போதை ? என்பதை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம். நான் பல இடுகைகளில் எழுதிவருவது 'மதவெறி/சாதிவெறி - மதப்பற்று/சாதிப்பற்று' இவைகளுக்கான அடைப்படை வேறுபாடு சம்பவம் நடந்த பிறகு, சம்பவம் நடப்பதற்கு முன்பு' என்பது தவிர்த்து வேறுபாடுகள் இல்லை, அதாவது சாதி / மதம் சார்ந்து குழுவாக ஊர்வலம் செல்லும் போது கூட்டத்தில் ஏதேனும் சலசலப்பு அல்லது கூட்டத்தை நோக்கி சிறு கல்வீச்சு நடந்தாலும் கூட அதே குழு சாதி வெறி / மதவெறி குழுவாக மாறி தாண்டவம் ஆடிவிடும் இதை மறுப்பவர்கள் மதவெறிக்கும் மதப்பற்றிற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளது என்று  எனக்கு பாடம் நடத்தலாம்.

******

சென்ற மாதம் ஐயா புலவர் இராமனுசம் அவர்களை அவரது சிங்கை சுற்றுலா பயணத்தின் போது சந்தித்தேன், சென்னைப் பதிவர்களின் மாபெரும் சந்திப்புக்கு திட்டமிட்டு பொறுப்பேற்று செயல்படுவதாக குறிப்பிட்டு இருந்தார், அவருக்கு தனிப்பட்டு லாப நட்டமில்லாமல் (நேர விரயம் கொஞ்சம் பண விரயம் என்கிற நட்டம் இருந்தாலும்) இப்படி ஒரு முயற்சியை அவரது 80 வயதை கடந்த நிலையில் எடுத்திருப்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, கிட்டதட்ட நூறு பேருக்கும் மேற்பட்ட பதிவர்களை தனிப்பட்டு தொடர்பு கொண்டு சந்திப்பின் பொழுது அவரவரின் செயல்பாடுகள் குறித்த திட்டமெல்லாம் தீட்டி ஒருங்கிணைப்பதன் கடினம் எனக்கு புரிந்தது, 'ராமா - கிருஷ்ணா, என்பதுடன் பேரக் குழந்தைகளுடன் பொழுதை கழிக்க வேண்டிய வயதில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் செயல்படுவதை என்னால்  மிகச் சாதரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அண்ணா காலத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்களில் மிகச் சிலரே எஞ்சி இருக்கும் நிலையில் அது போன்ற ஒருவரின் தமிழ் நலம் குறித்த செயல்பாடுகளை வரவேற்காவிட்டால் நட்டம் நமக்குத்தான் என்பதால் ஐயாவின் முயற்சியை பாராட்டி பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக் கூறினேன், எல்லாம் கூடிவரும் சமயத்தில் பதிவர் சந்திப்பு என்றாலே குடிகாரர்களின் சம்மேளனம் என்று கிளப்பிவிடுவது கண்டிக்கத் தக்கதுடன் அத்தகைய தூண்டல்களை துண்டித்து வெற்றிகரமாக பதிவர் சந்திப்பு செயல்பாடுகள் நடந்தேற வேண்டும், மூனா செந்திலோ, நக்கீரனோ ஒரு பெரியவர் எடுக்கும் முயற்சியில் 'தண்ணீ' அடித்துவிட்டு கலந்து கொள்வார்கள் என்பது போன்ற வதந்திகளை நான் நம்பவில்லை. மற்றபடி அந்த நிகழ்வு தவிர்த்த வேளைகளில் அவர்கள் குடிப்பதோ விழுந்து கிடப்பதோ யாருக்கும் நட்டம் ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

பொதுவாகவே நண்பர்களின் திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல்லும் நண்பர்கள் குடியுடன் அதிகாலை 3 மணி வரை சீட்டாடிக் கொண்டு இருந்தாலும் காலையில் எதுவும் நடைபெறாது போல் திருமணத்தில் கலந்து கொள்வார்கள், மட்டையானவர்கள் மண்டபம் பக்கம் தலையை காட்டமாட்டார்கள், அதைத் தாண்டி அசம்பாவிதங்கள் பெரிதாக எதுவும் நடைபெறாது, எனவே குடிப்பழக்கம் உள்ளவர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது தவறு என்று சொல்வதைக் கூட நான் மறுக்கிறேன், அப்படியே சொன்னாலும் சொல்லுபவர்களின் தகுதிகள் அறிந்து அதன் பிறகே அதை பரிசீலனை செய்யலாமா  புறந்தள்ளலாமா என்பதெல்லாம் முடிவு செய்யப்பட வேண்டும்.

மதுவின் தீமையை எடுத்தும் சொல்ல விரும்பும் எவரும் மதவாதத்தின் தீமைபற்றியும் விழிப்புணர்வு கொடுத்தால் அவர்களின் "நல்ல எண்ணம்" குறித்து அவர்களே கூட மகிழ்ந்து கொள்ளலாம். நாலு பேரு மட்டும் தான் இஸ்லாமியப் பதிவர்கள் இல்லை என்பதால் இதை 'இஸ்லாமியப் பதிவர்களின் எதிர்ப்பு' என்றும் வகைப்படுத்துவதை நான் புறக்கணிக்கிறேன், மத போதையுடன் 'தமிழ்மணம் மகுட' போதையும் சேர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையது என்பதை ஒப்பிட்ட குடிகாரர்களின் போதை பெரிய விசயமே இல்லை,

8 மே, 2012

சிந்திக்க சில உண்மைகள் !


மதம் தொடர்பான சர்சைகளுக்கு இடமளிக்காத வண்ணம் சில பதிவர்களின் சில இடுகைகளை அண்மையில் நீக்கியது தமிழ் மணம், அதன் தொடர்பில் எனது மூன்று பதிவுகள் நீக்கப்பட்டன. மதவாதச் செயலை தடுப்பதற்காக எனது மூன்று இடுகைகள் நீக்கியதில் எனக்கு மகிழ்ச்சியே. இது பற்றி நான் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

சிந்திக்க சில உண்மைகள் என்கிற பெயரில் ஒரு பதிவு நீண்ட நாள்களுக்கு முன்பிலிருந்தே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது, இதில் தி.க தலைவர் கி,வீரமணி அவர்களின் படமும், தந்தைப் பெரியாரின் படமும்  போட்டு இருப்பது அன்றி அதில் வரும் தகவல்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை நான் அந்தப் பதிவினை தகவல்களை தொடர்ந்து பார்த்துவருவதன் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்.

பெரியாருக்குப் பிறகான தி.க வின் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட பற்றும் இல்லாவிட்டாலும் ஒரு இயக்கத்தின் பெயரில் மதவெறியைப் பரப்ப அதனை வாய்ப்பாகக் கருதும் கூட்டம் தொடர்ந்து இந்திய சமய நம்பிக்கைகளையும், கிறித்துவ சமயத்தையும் மிகவும் கேவலமாக தாக்கிவருகிறது, அதில் மறந்தும் கூட இஸ்லாமின் பிற்போக்குத் தனங்கள் (குறிப்பாக இளம் வயது திருமணம் மற்றும் பலதார மணம்) ஆகியவை கண்டிக்கபடவில்லை என்பதால் இந்த தளம் இஸ்லாமியப் பதிவரால் தான் நடத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன். அது எனது ஐயமாகவோ, சந்தேகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்தப் பதிவின் சுட்டிகள் பல்வேறு இஸ்லாமியத் தளங்களில் பின்னூட்டத்தில் சுட்டியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது போன்று தொடர்ச்சியாக குறிப்பிட்ட மதத்தின் மீது அவதூறுகளை எழுதி மத ஒற்றுமை சிதைக்கிறது என்கிற அடிப்படையில் தமிழ் மணம் அந்தப் பதிவை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த பதிவை எழுதுபவர் யார் என்றே தெரியாத நிலையில் எனக்கு அந்தப் பதிவர் மீது எந்த காழ்புணர்வும் இல்லை.

பெரியாரின் கடவுள் குறித்த பொதுவான சிந்தனைகள் / முழக்கம் 'கடவுளை நம்புவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் காட்டுமிராண்டி, கடவுளை மற, மனிதனை நினை' என்பதெல்லாம் அந்தத் தளத்தில் இல்லை என்பதால் அந்தத் தளம் கடவுள் மறுப்புத் தளம் அல்ல, மாறாக அந்தத் தளத்தில் இந்து மதமும், கிறிஸ்துவ மதமும் கடுமையாக தாக்க எழுதப்படுகிறது.

சிந்திக்க சில உண்மைகள் என்கிற பதிவை படிக்கும் கிறிஸ்துவர்களுக்கு பெரியார் மற்றும் கி.வீரமணி மீது வெறுப்பு வருவதற்கு இந்தத் தளம் காரணமாக அமைகிறது என்பதால் இதன் மீதான தமிழ் மணத்தின் தடை தேவையாகப் படுகிறது.



"இந்தப் பொழப்புக்கு...என்று யாரும் காரி உமிழ்ந்தாலும் வெட்கமற்றவர்கள் திருத்திக் கொள்ளவே மாட்டார்கள்" -  இது எந்த மதத்தின் வசனம் ?

- இதையெல்லாம் எந்த இறை வேதத்திலும் தேடாதீர்கள். இறைவேதமெல்லாம் உண்மையில் நல்லது சொல்லி இருந்தால் நம்மிடையே மதவெறியர்கள் இருக்க மாட்டார்கள்.

3 மே, 2012

இவர்களால் மட்டும் எப்படி ? எல்லாம் (ஏக) இறைவனின் ஆசி !

நான் கடந்த 4 - 5 மாதங்களாக வலைப்பதிவுகளை குறிப்பாக தமிழ்மணம் திரட்டியில் வரும் வலைப்பதிவுகளைப் பார்க்க ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது.

உலகத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல அமைதியான மார்க்கம் வாஹபிய மார்க்கம் தான். வஹாபியர்களின் சுறுசுறுப்பும், ஒற்றுமையும், இறை அச்சமும், இறைப் பற்றும், இறைப் பறைச்சாற்றலுக்கும் முன் ஒரு பய மார்த்தட்ட முடியாது. அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் என்ன என்ன நான் கேள்விபட்ட வரையில் அவர்களது செயல் திறன் சிலிர்க்க வைக்கிறது, ஒற்றுமையாக ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதுவதாகட்டும், அதில் கள்ள ஓட்டோ நல்ல ஓட்டோ ( மற்றவர்கள் ) போட்டு குத்தாது தற்காத்து தாமே ஓட்டுகளைப் போட்டு கண்ணும் கருத்துமாக குத்தி மகுடம் ஏற்றுவதாகட்டும் வியக்க வைக்கிறார்கள், சிலிர்க்க வைக்கிறார்கள். இதைப் படித்து வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரிந்தால் உங்களுக்கு வாசிப்பு அனுபவமே இல்லை என்றே சொல்வேன். இவர்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இன்றைய உலகத்தில்  இவர்களது வஹாபிய மார்க்கம் தான் வேகமாக வளர்க்கிறது, தொடர்ந்து இவர்கள் மகுடம் ஏற்றும் பதிவுகள் அதைத்தான் சொல்கின்றன. உங்களால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில் சிலை வணங்கி உங்களுக்கு ஏக இறைவனின் ஆதரவு இல்லை, நீங்கள் செய்வது இறைச் சேவையும் இல்லை. இவர்களால் மட்டும் இது எப்படி சாத்தியம்  ? ஆச்சர்யபட்டீர்களா ? நானும் வியப்படைந்தேன் ஏக இறைவனின் ஆசி இல்லாமல் இவர்களால் இவ்வளவு ஒற்றுமையாக செயல்படமுடியாது, இதை மறுப்பவர்கள் இந்தப் பதிவுக்கு நெகட்டிவ் வாக்குப் போடலாம். 






Add caption
Add caption

Add caption


Add caption



(யாராவது வஹாபி நண்பர்கள் பெயர் விட்டிருந்தால் மன்னிக்கவும், எனக்கு போதிய நேரமின்மையால் உங்கள் அத்தனை பேரின் மகுடங்களை ஸ்கீர்ன் ஷாட் எடுக்க முடியவில்லை, இருந்தாலும் 30 நாளைக்கு 25 பதிவுகளுக்கு மேல் உங்களது தான் மகுடம் சூட்டியது என்பதை நான் சாட்சியாகவும், வாழ்த்தாகவும் தெரிவித்துக் கொள்கிறேன், ஆமினா போல் 55 வாக்குகளை ஒருத்தனும் இதுவரை வாங்கவில்லை)

சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடுவதைத் தெரிந்ததால் தான் என்னவோ, இது போல் இந்தியாவில் ஓடினால் இந்தியா எப்படி இருக்கும், கூடவே அல்லாவின் ஆட்சி நடந்தால் எப்படி இருக்கும் ? நம் வாஞ்ஜையுடன் வாஞ்சூர் ஐயாவைக் கேளுங்கள், கேடுகெட்ட இந்தியா, அசிங்கப் பிடித்த இந்தியா, நாகரீகமற்ற இந்தியா எப்படி இருக்கும்? இது பற்றி இதுவரை ஒரு 10 பதிவாக எழுதி இருப்பார்,. இவருக்கு இருக்கும் தேசப்பற்று தான் என்னை சிந்திக்க வைக்கிறது, இறைவன் நாடி இந்தியாவில் இஸ்லாமிய வஹாபிய ஆட்சி ஏற்படும் போது நம் வாஞ்சூர் ஐயாவின் இந்தியாவின் மீதான வருத்தமெல்லாம் நீங்கி இருக்கும்.
(வாஞ்சூர் ஐயாவின் விடா முயற்சிக்கு என் வாழ்த்துகள், இந்த காஃபீரின் வாழ்த்து உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெரியும், இருந்தாலும் என் திருப்திக்காக வாழ்த்துகிறேன், எங்காளுங்க சாகுற வயதானால் (தான்) சங்கரா சங்கரான்னு சொல்லுவாங்க, ஆனா ஒருத்தரும் உங்களைப் போல் இறைச் சேவை செய்யமாட்டார்)

ஒருவனுக்கு முக்கியத் தேவை நாட்டுப் பற்றா ? இறைப் பற்றா ? இதில் என்ன சந்தேகம், இறைவனின் படைப்பாற்றலை ஒப்பிட நாடு என்பதே அற்பம், இதன் மீது பற்று வைப்பதைக் காட்டிலும் இறைப் பற்று எவ்வளவோ மேல், நாட்டு பற்று 'நாம் சிட்டிசன் ஆப் வேர்ல்ட்' ஆக இருக்கும் வரை தான், அதன் பிறகு மறுமை இந்த நாடு எப்படிப் போனால் என்ன ? இறைப் பற்றில் இளைப்பாருங்கள், அதைத் தான் நம் வாஞ்சூர் ஐயா 'இந்தியாவின் அவலங்கள் இவை' என்று தோல் உறித்துக் காட்டுகிறார். மார்க்கத் தடையில்லை என்றால் இந்தியாவில் பிறந்ததற்காக உயிரை விட்டு இருப்பார். சிந்திக்க வேண்டாமா மனிதர்களே, அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவலங்கள் நிறைந்த நாட்டில் ஒரு வஹாபியாக பிறந்தது மட்டுமே, அவருக்கு ஜென்மங்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் நீங்கள் அடுத்த பிறவியில் அரேபியாவில் பிறக்கவும் என்று என்னால் வாழ்த்தவும் முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு இந்தியா மீது இருக்கும் வெறுப்பான பற்றிற்கு என் வாழ்த்துகள், உங்களைப் போல் குடிமகனைப் பெற இந்தியா தான் தவம் செய்திருக்க வேண்டும். அரேபிய அவலங்கள் என்று எவரேனும் எதிர்பதிவு போட்டு படம் போட்டால் நம்பாதீர்கள், நாட்டில் கிராபிக்ஸ் தொழில் நுட்பம் தெரிந்த நயவஞ்சகர்கள் நிறைய உண்டு, அவர்கள் உங்களை காழ்புணர்வால் தூற்றுவதற்கும் இட்டுக் கட்டிய படங்களைக் காட்டக் கூடும்.

யா அல்லா, இந்தியாவில் உன் நல்ல ஆட்சியை நயவஞ்சக வெள்ளையர்கள் களைத்துவிட்டார்கள் மீண்டும் அது ஏற்படுமா ? ஏற்படும் என்கிறார் நண்பர் சுவனப்பிரியன் இந்தியாவில் அவருடைய மார்க்கம் வேகமாக வளர்ந்துவருகிறதாம். எல்லாம்..... எல்லாம் வல்ல அல்லாவின் ஆ(ட்)சி நாம என்ன செய்ய ? நானும் அவருடைய மார்க்கத்திற்கு திரும்ப வேண்டுமாம், மார்க்க சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டுமாம், தீர்ப்பு நாளில் நிற்க வைத்து அல்லா கேள்வி கேட்கும் பொழுது சுவனப் பிரியன் எனக்கு ஒழுங்காக புரியும் படிச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவருக்கு கிடைப்பதில் எண்ணிக்கை குறையுமாம். எல்லாம் சரி தான் ஆனால் எனக்கு குபீர்னு செண்ட் அடித்துக் கொள்பவர்களுடன், பலநாள் மழிக்காத தாடி உள்ளவர்களுடன் சொர்கம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லையே., மயக்கமாகி சொர்கத்தில் கிடப்பதைவிட அல்லாவின் தண்டனையை ஏற்று சுவனப் பிரியன் நல்லா தான் விளக்கினார் நான் தான் வெளங்கிக் கொள்ளவில்லை, நம்பவில்லை என்று இறைவனிடம் கூறி அவருக்கு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நகரம் செல்ல இருக்கிறேன்.

இதை யாரும் நக்கல் பதிவாகக் கொள்ளவேண்டாம்.

***********

தமிழ்மண மகுடத்தை கைப்பற்றுவதில் காஃபிர்கள் தோல்வி அடைந்துவிட்டனர், ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதற்கு தான் நான் இங்கே சாட்சிகளை வைத்துள்ளேன்.  பதிவை மகுடம் ஏற்றுவது எவ்வளவு கடினம் தெரியுமா ? கள்ள ஓட்டைப் போட்டு கீழே தள்ள காஃபிர் கும்பல் சதி தீட்டும், இதையும் மீறி இம்புட்டு பேர் நாளொரு மேனியும் பொழுதெருவண்ணமும் மகுடம் ஏற்றுவதைப் பார்க்க அவங்க ஒழைப்பு எனக்கு பிடிச்சிருக்கு.  இதை நான் மனதில் கொள்ளும் போது இதே வேலையாக இவர்கள் இருப்பதால் தொழுகையை தவறி இறைதண்டனைக்கு ஆளாகிவிடுவார்களோ, வேலையை இழந்துவிடுவார்களோ என்று நானும் அச்சப்படுகிறேன், ஆகவே நண்பர்களே நீங்கள் வேண்டுகோள் வைத்தால் தமிழ்மணம் மகுடம் பகுதியை வஹாபிய மகுடம் என்று மாற்றி அவர்களது பதிவு ஒவ்வொன்றாய் மணிக்கு ஒரு முறை மாற்றி மாற்றி காட்டும், அவர்களுக்கு தேடித் தேடி வாக்குப் போடும் நேரமும் மிச்சம், தொழுகையை ஒழுங்காக தொழுது இறைவனின் அன்பையும் மறுமை வாழ்வில் மேன்மையும் பெறுவார்கள். 

தமிழ் மணம் திரட்டிக்கு பணிவான வேண்டுகோள் 'தமிழ்மணம் மகுடம்' என்பதை 'வஹாபிய மகுடம்' என்று பெயர் மாற்றி எங்களது அன்பு வஹாபிய நண்பர்களுக்கு உதவுங்கள், சக பதிவர்கள் நீங்கள் எந்த ஒரு பிற பதிவுக்கும் வாக்கு செலுத்தி வஹாபியர்களின் இறைச் சேவையை நிந்தித்து இறை தண்டனை[ப் பெற வேண்டாம்.

இறைவன் மிகப் பெரியவன், மகுடம் ரொம்ப ரொம்ப சிறுசு. ஆகாவே வஹாப்பி அல்லாத பதிவர்கள் தமிழ்மண மகுடத்தை வஹாப்பிய பதிவர்களுக்கே விட்டுக் கொடுங்கள் / பெயர் மாற்ற பரிந்துரை செய்யுங்கள்.

இன்ஷா அல்லா, மாஷா அல்லா !

இந்தியாவில் நல்லாட்சி ஏற்படும் முன் இந்த தமிழ்மணத்தை வஹாபிய மணமாக்கிக் நல் அத்தாட்சி வைத்துவிட்டாய். நீயே மிகப் பெரியவன்.

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன் 3:54

ஏக இறைவனின் ஆசி பெற்றவர்களிடம், அவன் புகழ் பாடுபவர்களிடம் மோதினால் தோல்வி என்று நன்கு உணர்ந்து கொண்டேன், இனி அவர்கள் என்ன எழுதினாலும் (இறை நாடினால் அன்றி) இனி இது குறித்து எதுவுமே சொல்வதாக இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்