பின்பற்றுபவர்கள்

31 ஆகஸ்ட், 2009

மீசை மழிப்பது பாவச்செயலா?

அண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் அவல் தவில் கூறியுள்ள 'தாடியுடன் சேர்த்து, மீசையும் எடுக்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில தசை அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

எந்த தமிழனும் தாடி எடுப்பதை தாழ்த்தி பேசுபவனில்லை. தாடி எடுப்பதை தாழ்த்துபவன் தமிழனாக இருக்க முடியாது. தாடி எடுப்பதை தாழ்த்தும் எவனும் பேச தகுதியற்றவன். அவன் எந்த முடியையும் மழித்துக் கொள்ள தகுதியற்றவன். தாடியை எடுப்பது மட்டும் தான் மழித்தல் என்பதில்லை. ஆனால் மீசை வைத்துக் கொள்வதையும் வீரம் என்பேன். இந்தியா பொன்ற பல மழிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மழிப்புகளால் மழிக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் மழிப்புகளில் உள்ள முடி மழிப்பே அவரவர் மழிப்பு வழக்கம் எனலாம். தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களாகிய நமக்கு மீசை தான் முக்கிய அடையாளம்.

பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாடியை மட்டும் தான் எடுப்பேன் மீசை எடுக்க விருப்பம் இல்லை என்றால் அவர் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது அவர்களின் மீசையைப் போலும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது அவர்களைப் போலும் ஜெர்மணி செல்லும் போது ஹிட்லர் போல் மீசையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், மீசை எடுப்பது பொது வழமையாக இருக்கிறது. மழிப்பு என்ற செயலில் அவரர் மீசையும் மழிக்கப்பட்டு தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி அவர்களைப் போல் மீசையில் ஒட்டாமல் கூழ் குடிக்க முடியும். மீசை மழித்தல் என்ற வட இந்திய வழக்கம், இந்தியாவில் பெரும்பாலானோர் மழிப்பு வழக்கமாக கொண்டிருந்தால், வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேஷாக மீசை மழித்துக் கொள்வத்தால், அவரவர் வாழ்வில் நலம் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு மழித்துக் கொள்ள பழகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொது மழிப்பான தாடியும் எடுக்கலாமே, மீசை எதற்கு? என்ற வாதமும் கூடவே வருகிறது. தாடி மழிப்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக மழிக்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் தாடி மழித்திருக்க வேண்டும் என்பது போலவே, நம்தேசம் முழுக்க தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு சாமான்யர்களாக தெரிய மீசை மழிப்பும் அவசியமாகிறது. மீசை மழித்துக் கொண்ட ஒருவனுக்கு தமிழ் நாட்டில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால், மீசை வளர்க்க கற்றுக்கொள்கிறான். தமிழ் திரைப்படங்களில் வருவது போல, குறுந்தாடி வைத்துக் கொள்கிறான், அக்குள் சேவிங்க் பண்ணிக் கொள்கிறான், மீசையை ட்ரிம் பண்ணுகிறான், டை அடித்துக் கொள்கிறான் என்பது போலல்லாமல் அழகாகவே கருகருவென மீசை வைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம் / நகைக்கிறோம். ஆனால், வட மாநிலங்களுக்குச் சென்று மீசை எடுக்க கற்றுக்கொள்ளும் நம்மவர்களின் முழுவதாக மழிக்காமல் அடியோடு ட்ரிம் செய்வதகாவே இருக்கிறது. நீ பாதி நான் பாதி என்பது போலவே நாம் மழிக்கும் மீசை நம்மில் பாதி, நமக்கு மரியாதையை பெற்றுதருகிறது என்பதை மறுக்க முடியாது. இது அனைத்து பிற மழிப்புகளுக்கும் பொருந்தும்.

சர்வதேச அளவில் அதிகமாக மழிக்கப்படும் முடிகள் வரிசையில் மீசை மழிப்பு இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும், அதற்கடுத்த நிலையிலேயே தாடி மழிப்பும் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். துபாய் அரபிகளில் பெரும்பாலானோர் மீசை மழிப்பவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர், பெங்காளியர், நேபாளியர் மற்றும் ஆப்கானியருக்கான பொது மழிப்பாக மீசை மழிப்பு இருக்கிறது. இவர்களுடைய மீசை மழிப்புக்கும், தாடி மழிப்புக்கும் ஒரே ப்ளேடை பயன்படுத்துவதால், இவர்களால் எளிதில் மழித்துக் கொள்ள முடிகிறது. தேவையிருக்கும் அனைவரும் மழித்துக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழர்களாகிய நம் பாடுதான் திண்டாட்டம், மீசை மழிப்பு ஒன்றினை கற்றுக்கொள்ளும் முன் (சில தவறான வெட்டினால்) நரக வேதனையுடன் அவமானப்பட வேண்டியிருக்கிறது. மீசை வெட்டுவது மட்டும் அல்ல, நம்மால் சேவிங்க் செய்யவே பழக்கம் இல்லாதிருந்தால் தாடி மழிக்க முயலும் போதும் இதே நிலைதான்.

தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் மீசை வைத்துக் கொள்வது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கம் இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் மீசை வைத்துக் கொள்ள முகம் மாறுபட்ட அழகாக இருக்கிறது.


தமிழ் நாட்டில் மீசை மழிப்பு எதிர்ப்பு - ஒரு ப்ளேடு பார்வை.
1937, தமிழ்நாட்டில் (அப்போது சில ஆந்திர பகுதிகளையும் உள்ளடக்கியது) ஆங்கிலேயர் ஆட்சியில் காஜஜி தலைமையிலான அரசு 'உயர் நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாய மீசை மழிப்பு' என்ற சட்டம் கொண்டுவருகிறது. தீவிர தமிழ் ஆர்வலர்கள் சிலர் மற்றும் காஜாஜி எதிர்பாளர்கள் சிலரும் சேர்ந்து அத்திட்டத்தை எதிர்கின்றனர்.

மீசை மழிக்கும் போது போது சிலர் இரத்தக் காயம் பட்டனர் என்றும் வரலாறு சொல்கிறது. 1940, அதே காஜாஜியல் இச்சட்டம் திரும்ப பெறப்படுகின்றது. 1965, இந்திய அலுவல் அடையாளமான மீசை மழிப்பு மழித்தவுடன் 'ஒரே மூச்சாக, அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்' என்ற கொள்கையோடு 'முதலாம் மீசை மழிப்பு ஏற்பு மாநாடு' திருச்சியில் நடத்தப்படுகிறது.

முன்னதாக கடியரசு பத்திரிக்கை, 'மீசை மழிப்பது, பாரிய வழக்கம் என்பதாலும், குடுமி வைத்துக் கொண்ட ஒரு சாதியினரின் மத கோட்பாடுகளை முன்னிருத்தும் முயற்சியே மீசை மழிப்பு' என்றும், மேலும் 'மீசையை மழித்துகொண்டால், மீசையை மழித்துக் கொள்ளும் வட நாட்டவரைவிட நாம் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டிவரும்' என்பதாகவும் சொல்லிற்று. இயல்பான இனப்பற்று உணர்ச்சி மிகுதியில் மீசை வைத்துக் கொள்வது பலமாகவே நடந்திருக்கிறது. இதற்கு மா.பொ.சி மீசையே சாட்சி. மீசை மழிக்க ப்ளேடுடன் வந்தவர்கள் கடைவீதியில் அடித்து விரட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களின் சலூன் கடைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.

இதே நிலையில், தாடி எடுக்க சொல்லும் போது ஆங்கில எதிர்ப்பில் இருந்திருக்கின்றனர். அப்போதும், இவற்றை கண்டுகொள்ளாமல், தாடியை எடுத்துக் கொண்டவர்களின் சந்ததியின் வாழ்க்கைதரம் இன்று நல்ல நிலையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மீசை மழிப்பு எதிர்ப்பு முன்னுக்கு வர தாடி மழிப்பு எதிர்ப்பு பின்னால் சென்றது. அதைத்தொடர்ந்து நாவிதர் இயக்கங்கள், மீசை மழிப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியில் பங்குபெறும் திராவிட அரசுகளின் பிரதிநிதிகள் நாள் தோறும் மீசை மழித்துக் கொள்பவர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்ய மீசை மழிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பது, இயல்பான எதிர்பார்ப்பு.

மீசை மழிப்பு எதிர்ப்பு என்பது அரசியலாகவும், குடுமிவைத்துக் கொள்ளும் ஒரு சமுதாயத்தின் மீது அல்லது குடுமி மீது இருந்த / இருக்கும் வெறுப்பாகவுமே படுகிறது. ஒரு பொருளால் பலன்பெறும் அல்லது அந்தப்பொருள் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கே புரியம் அப்பொருளின் அருமை. அப்பொருளுக்கு தொடர்பில்லாதவர்கள் அது கூடாதென்ற சாபம் இடக்கூடாது. அப்பொருளை பாவிக்காது, அதன் தீங்கு பற்றிய பொத்தாம்பொதுவான அவதானிப்பு கூடாது. ஒரு கற்பனை; எனக்கு மீசை இருந்தது, வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழர்களுக்கெதிரான திடீர் கலவரம், மீசை எடுத்துக் கொண்டால் உயிர் பிழைப்பேன். சொல்லுங்கள்… நான் மீசை வைத்திருக்க வேண்டுமா? கூடாதா?

தாடியைத் தவிர வேறு மழிப்புகளை செய்வது கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், சேவிங்குக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா? முடிக்கு ஏது எல்லை, வளரும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் மழித்துக் கொள்ளட்டும், அதை தடுக்கக்கூடாது. தனக்கு தாலையில் முடி நிறைய இருந்தால், வழுக்கையர்களை கிண்டல் அடிப்பது மனித இயல்பு. வேறு ஆள் கிடைக்காதவன் பூனையை…. மழிப்பதன் மூலம் யாருக்கும் எந்த கேடும் வந்துவிடாது. மழிப்பது முடி அளவு. சீனர்களைப் பார்த்தேனும் மீசையை மழித்துக் கொள், என்பதான சொல்லாடல்கள் மழித்தலை ஊக்குவிக்கின்றன.

நன்றி!
முடித்திருத்தம் செய்து கொண்டுவிட்டு குளிக்காமல், அவசரமாக எழுத முயற்சித்தது. கொஞ்ச நாளைக்கு தலைமுடி வெட்டத் தேவை இல்லை. எந்த கடையில் முடி வெட்டுகிறேன் என்கிற தகவல் அனுப்பணும்?

முகம் முழுவதும் மழிப்பதனால் தமிழன் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொண்டு, மழிப்பதற்கு நோ சொல்லாமல், முறையாக தாடி, மீசை மழித்துக் கொள்வது வாழ்வில் நலமுடன் முன்னேற அனைவரையும் வாழ்த்துகிறேன்

ஜெய்ஹிந்திபுரம் Said... பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே மீசை அரும்பும் பருவத்தில் மீசை மழிப்பு செய்வது எப்படி என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும், இல்லை என்றால் வரும்காலத்தில் வடமாநிலங்களுக்குச் செல்லும் போது அவர்கள் மீசையுடன் தனித்து அடையாளமாக நிற்பார்கள், தேச ஒற்றுமை சீர்கெடும். அனைத்து இந்திய ஆண்களுக்கும் பொது அடையாளமாக மீசை மழித்தல் அந்தந்த மாநிலங்களில் பள்ளிகளிலேயே இலவசமாகச் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும். உங்களுக்கு மீசை மீது ஆசை என்பதற்காக இலவசமாக சேவிங்க் சொல்லிக் கொடுப்பதை அரசியல் செய்து தடுக்காதீர்கள்

SanjaiGandhi Said...
நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது இந்த சட்டமெல்லாம் கொண்டுவராம விட்டுட்டாங்க பாவிகள். :(

இப்போ டெல்லிக்குப் போனா மீசையோடு ஆசையாக டீ கூட உறிஞ்சிக் குடிக்க முடியலை.. :(

ஊரான் புள்ளைங்க எல்லாம் மீசையோடு கஷ்டப் படனும்.. பேரப் புள்ளைங்க எல்லாம் மீசை எடுக்கனும்.. என்னா ஒரு கொள்ளுகை.. கூடுதலா ஒரு சேவிங் செய்து கொள்வதில் எந்த குத்தமும் இல்லை. எல்லாரும் மீசை மழித்துக் கொள்ளுங்கள். :)

30 ஆகஸ்ட், 2009

வலையில் எழுதி ஒரு மசுரும் ஆகப் போவதில்லை.

கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாக தமிழர்கள் மடிகிறார்கள், ஓட்டுப் போடாதிங்கன்னு பலரும் பளாக்கில் பினாத்தினார்கள், தடுக்க முடிந்ததா ?

வென்றதும் கொக்கறித்தக் கூட்டம் தமிழனுக்கு சூடு சொறனையே இல்லை என்று தமிழனிடமே தமிழனை வைத்தே நிரூபனம் செய்தது. வெட்கித் தலை குனிந்தது விட்டு அடுத்த வேலையைப் பார்த்தோம்.

கடற்கரையில் அம்மணமாக கண்களைக் கட்டிவிட்டி ஒவ்வொருவராக அழைத்துச் சென்று சொரி நாயைச் சுடுவது போல் சுட்டுப் போட்டார்களாம், வீடியோ காட்சிகளைப் பார்த்து மீண்டும் துடிக்கிறார்கள்,

அந்தப் கொடும் செயல் வெளியே தெரிந்தும், 'அடப் பாவிகளா நீங்களெல்லாம் இவ்வளவு கேவலமான பிறவிகளா என்று உலகத்தார் காரி உமிழ்வார்களே என்று அச்சப்பட்டு, முதுகெலும்பற்ற கோழைகளாக அப்படியெலாம் நடக்கவில்லை அது களங்கம் கற்பிக்கும் வீடியோ என்று பதறுகிறான், செய்தவனுக்கே அதை ஒப்புக் கொள்ள மனம் கூசிப் போய் பச்சைப் பொய் சொல்லும் போது, அதைப் பார்த்துவிட்டு உணர்ச்சி வசப்படுவர்களால், மேடையில் பேசுபவர்களால், எழுதுபவர்களால் என்ன செய்துவிட முடியும் ?

எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்கும் குறைவில்லை என்று கொக்கறிக்கும் அரசியல் வியாதி கூட்டங்களை வைத்துக் கொண்டு நாம் உணர்ச்சி வசப்படுவது நம் உடல் நலத்துக்குக் கேடு.

இதோ இன்னொரு நடிகன் கூட தமிழர் எதிர்களுக்கு மாலை போட்டு வலம் வர ஆயத்தமாகிவிட்டான்.

டமிழன்.....டமிழன் நாமலும் அவனுக்கு வாழ்த்து சொல்லிக் கூவுவோம்.

ப்ளாக்குங்கிறது மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இடம் அதில் நம்மை போன்ற ஆசாமிகள், சிறுகதை, கவிதை, விவாதம் ஆகியவற்றை எழுதுவதுடன் நில்லாமல், தமிழன், தமிழ் என்று உணர்ச்சி வசப்படுவதால் ஒரு மசுரும் அறுவடையாகப் போவதில்லை. போயி புள்ளக் குட்டிங்களை படிக்க வையுங்க.

:(

28 ஆகஸ்ட், 2009

குருவி தலை(மை)யில் பனங்காய் !

2011ல் மீண்டும் காங்கிரசு ஆட்சியாம். பண்ணையார் ஆட்சி முறையை நல்ல பரப்புரை மூலம் அண்ணா தலைமையிலான திமுக அரசு வெற்றிகரமாக தமிழ் நாட்டில் இருந்து அகற்றியது. அதன் பிறகு தொடந்து 30 ஆண்டுகளாக 'திராவிட' பெயரிலான கட்சிகளே தமிழகத்தில் ஆட்சியை நடத்திவருவதும், அவர்களில் எதிர்கட்சியாக இருப்பவர்களின் முதுகில் காங்கிரஸ் பயணித்து மத்திய அரசு அமைத்துக் கொள்வதும் வாடிக்கை. திமுகவை உடைத்து அதிமுக என்று எம்ஜிஆர் தலைமையில் ஒரு கட்சியும் அமைந்து திமுகவிற்கு மாற்றுக் கட்சியாக்கியதில் காங்கிரசுக்கு பெரும் பங்கே உண்டு, அதைச் செய்தும் காங்கி்ற்கு மத்திய அரசு அமைக்கும் உதவி தவிர்த்து வேறொன்றும் கிடைக்கவில்லை. அண்டை மாநிலங்களிலெல்லாம் கொலொச்சும் காங்கிரசு தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தேறுவதற்குக் கூட வாய்பில்லா நிலைதான் இன்றும் தொடர்கிறது. ஒரே ஒரு முறை மூப்பனார் தலைமையில் காங்கிரசு தனித்து நின்று 25 தொகுதிகள் பெற்றது, அதுவும் அதிமுக, ஜெ, ஜா, திமுக, காங்கிரசு என்று தனித்தனியாக நின்றதால் விழுந்த ஓட்டுகளின் விழுக்காடு அடிப்படையில் கிடைத்ததே அந்த வெற்றி, அதாவது அதிமுக உடையாது இருந்தால் காங்கிரஸ் மண்ணைக் கவ்வி இருக்கும், அதன் பிறகு எதாவது ஒரு திராவிடக் கட்சியின் மீது குதிரை சவாரி செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருப்பது தான் காங்கிரசு செய்யும் தமிழக அரசியல்.

காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்பது தமிழக 'காங்கிரசாரின் ஒரு தமிழக கனவு' என்பது போல் அடிக்கடி தமிழக காங்கிரசின் (கோஷ்டி) தலைவர்களால் பேசப்படும், அதும் தேர்தல் நெருங்கும் போது, கூட்டணி அமைக்கும் முன்பு வரை மட்டுமே, அதன் பிறகு தேர்தல் முடியும் வரை வாயைத் திறக்க மாட்டார்கள். இந்தியாவை காங்கிரசு மயமாக்க ராகுல் காந்தி முயற்சி எடுக்கிறாராம். அவரது செயல்பாட்டின் வழி பீகாரில் காங்கிரசு கனிசமான வெற்றிகளை ஈட்டித்தந்ததாம். எனவே எதிர்கால காங்கிரசின் நம்பிக்கை நாயகனான ராகுலின் கடைக் கண் பார்வை கடைகோடி மாநிலமான தமிழகத்தில் விழுந்திருக்கிறது. எப்படி ? என்கிற யோசனையில் தான் நடிகர் விஜய் தெரிந்திருக்கிறார். விஜயின் தொறமை என்ன ? தகுதி என்ன ? என்றெல்லாம்,

இதுக்கும் மேல விஜய் பற்றி எழுதினால் விஜய் ரசிகர்கள் அர்சனை செய்வார்கள், விஜயின் தொறமை என்ன ? தகுதி என்ன ? என்பதை எழுத வினவு, அசுரன் போன்ற பெரும் தலைகள் இருக்கும் போது எனக்கு என்ன வேலை ?

கருப்பு எம்ஜிஆரின் (வருங்கால தமிழக முதல்வர்) கனவு வடையை குருவி கவ்விக் கொண்டு (போகக்) போகிறது.

வருங்கால முதல்வர் டாக்டர் விஜய் வாழ்க !!!

செய்தி : தினமலர்

ஜெய்'ஹிந்தி'புரம் !

நண்பர் பீர்/Peer, இந்தி கற்பது பாவச் செயலா ? என்று கேட்டு இருக்கிறார். இந்தி மட்டுமல்ல எந்த ஒரு மொழியையும் கற்பது பாவச் செயலே அல்ல.

//பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது மலையாளமும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது தெலுகும், கனடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது. ஹிந்தி என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.//

இவர் குறிப்பிடும் பணி நிமித்தமாக அண்டை நாடுகளுக்கு செல்பவர்கள் 5 விழுக்காடு இருக்கலாம், இதில் படித்தவன் முதல் பாமரன் அனைவரும் அடங்கும். பாமரன் எவனும் நான் இந்திப் படிக்காததால் பிற மாநிலங்களில் கூலி வேலை செய்யமுடிவதில்லை என்று புலம்புவது கிடையாது, தட்டு தடுமாறி மூன்றே மாதங்களில் எந்த மாநிலத்திற்கு செல்கிறார்களோ அந்த மாநில மொழியைக் கற்றுக் கொண்டு சரளமாக பேசுகிறார்கள். படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிவதால் யாரும் இடற்படுவது போல் தெரியவில்லை. இந்திப்படங்கள் புரியவில்லை, இந்தி பெண்களுடன் பேச முடியவில்லை, போன்ற அற்ப காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் 5 விழுக்காட்டினரிலும் ஒரு சிலருக்காக ஏற்கனவே இருக்கும் கல்வி பாடச் சுமையில் மேலும் ஒன்றாக இந்தியையும் 95 விழுக்காட்டினர் படிக்கலாம், படிக்க வேண்டும் என்று சொல்வதில் ஏதேனும் ஞாயம் உண்டா ? அப்படியும் விரும்பிப் படிபவர்களை யாரேனும் கையை பிடித்து தடுக்கிறார்களா ?

இந்தி பிராச்சார சபாவில் 3 வயது முதல் 100 வயது வரை உடையவர்களுக்கு மாதம் 50 ரூபாயில் இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள், நான் கூட ஒரு 3 மாதம் சென்று இருக்கிறேன். அதைப் படிக்கலாமே. அதைத் தடுப்பவர்கள் ஏவரேனும் இருக்கிறார்களா ? பெருவாரியான மக்கள் பேசும் மொழியை ஒருவர் தெரிந்து கொண்டால் அம்மக்களோடு கலந்து உறவாட, உரையாட ஏதுவாக இருக்குமாம். இலங்கையில் சிங்களம் தெரியாத தமிழர்கள், தெரிந்த தமிழர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியில் சிறப்பாக பாடிய வாணி ஜெயராமுக்கு வாய்ப்புக் கொடுத்தால் நான் பாடமாட்டேன் என்று மிரட்டி வாணி ஜெயராமை சென்னைக்கே திருப்பிய அனுப்ப செய்தவர்தான் இந்தி குயில் (பேரை வேறு சொல்லனுமா ?) இந்தியில் நன்றாக பேசி நடிக்க முடியும் என்று நிரூபணம் செய்த கமலஹாசன் முதல் அனைத்து தென்மாநில நடிகர் அனைவ்ருமே பிடறி தெறிக்க ஓடும்படி துறத்தப்பட்டனர். சாருக்கான் முதல் இந்தி வாலாக்களின் படங்கள் அனைத்து மாநிலங்களிலும் நன்றாக ஒடும் என்பதைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் ஏதேனும் பொதுப் பயன் இருக்கிறதா ?

கேரளாவில் 50 விழுக்காட்டினர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள், அப்படிச் செல்லும் போது அவர்கள் இடற்படக் கூடாது எனவே கேரள மாநிலத்தினர் அனைவருக்கும் அரபி கட்டாயப் பாடம் ஆக்கவேண்டும் என்று கேரளா முடிவு செய்தால் அதற்கு இந்தி இடிதாங்கி மைய அரசு அதனை போற்றி பாராட்டி, உதவியும் செய்யுமா ? மொழி அரசியல் தெரியாதவர்கள் தாம் ஒரு சூழலில் இடற்பட்டோம் என்பதை பொதுப் பிரச்சனையாக்குவதில் ஏதேனும் பொது நலம் இருக்கிறதா ? மொழி வலியுறுத்தல் என்பது ஆளுமையின் அடையாளம். மொழியை வைத்து பெரும்பாண்மை சிறுபாண்மை அரசியல் மிகக் கேவலமான பிற்போக்குத் தனம். பெரும்பாண்மையினர் பேசும் மொழி என்று ஒரு மொழியை பொதுப்படுத்தி பிறமொழிகள் பயனற்றவையாக ஒதுக்கும் நிலையும், அழிக்கும் நிலையும் வந்தால் மொழிப் பெரும்பாண்மை ஞாயம் என்றும் அதைப் பொதுப்படுத்த வேண்டும் என்போர் பெரும்பாண்மை புயலால் அழியும் மொழிகளை சீர்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பார்கள் ? ஒதுங்கிக் கொண்டு... அது சிறுபான்மை மொழிப் பேசுபவர்களின் தலையெழுத்து, அவர்கள் மொழியை பாதுகாப்பது அவர்களின் செயல், அதை செய்யத் தவறிவிட்டார்கள் என்று சொல்லுவார்கள் தானே!

அண்டை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாகச் சொல்கிறார். மும்பையில் மஹாராஷ்டிர மொழியை இந்தி அழித்துவிட்டது என்று அண்மையில் கலவரங்கள் வெடித்தது நண்பருக்கு தெரியாதா ? அல்லது பிற மாநிலக்காரர்கள் சுரணை குறைவாக இருந்து விழித்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படி குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இந்திக்கு எதிராக கலகக் குரல்கள் எப்போது தொடங்கிவிட்டன.

//தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் தமிழ் பேசுவது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.//

இது இவருடைய கற்பனை மட்டுமே, ஆனால் இப்படி பிற மாநிலத்தினர் தமிழை பேச முற்பட முயற்சிப்பது ஒரு சிலர் மட்டுமே. அண்மையில் வட இந்தியர் ஒருவருக்கு செல்பேசியில் தமிழ் ரிங்க் டோனை செல்பேசி நிறுவனம் இணைத்ததற்காக அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்ததை ஜெய் ஹிந்திபுரம் தம்பி அறிந்ததில்லை என்று நினைக்கிறேன். அதன் சுட்டி இங்கே இருக்கிறது, அதில் இருக்கும் பின்னூட்டங்களை கவனமாகப் படிக்கவும்.

பிறமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் 5 விழுக்காட்டினர் நன்மை பெருபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மீதம் 95 விழுக்காட்டினருக்கு அது கட்டாயப்பாடமாக்குவதால் 95 விழுக்காட்டினர் பெரும் நன்மைகள் என்ன என்பதை ஜெய்ஹிந்திபுரம் தம்பி பட்டியல் இட்டால் எனது விவாதங்களை தொடருவேன். ஏற்கனவே பொது மொழி தகுதி, இந்தி கட்டாயம் என்று அறியாமையால் பிதற்றுபவர்களுக்காக நான் பல்வேறு பதிவுகளை எழுதி இருக்கிறேன்.

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

26 ஆகஸ்ட், 2009

கலவை 26/ஆக/2009 !

இலவச வடை : அரசு செலவில் சந்திப்பு : நம்ம ஊரில் பதிவர்களுக்கு இப்படிப் பட்ட வாய்ப்புக் கிடைக்குமா தெரியலை. ஆனால் சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சி நடத்த உரியவர்களை அணுகி தேதி நேரம் சொல்லிவிட்டால் இடம் ஒதுக்கி, இணைய இணைப்புடன் கணிணி மற்றும் காட்சித் திரை, காஃபி, தேனீர், சமோசா, வடையும் இலவசமாக ஏற்பாடு செய்து தருகிறார்கள், சிங்கப்பூரில் தான் இப்படி நடக்கிறது. வாழ்க சிங்கப்பூர் அரசு. சென்ற ஞாயிறு சிங்கைப் பதிவர்களும் நூலக தமிழ் வாசகர் வட்டமும் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடந்தது, பதிவர் உலகம் பற்றி வாசகர் வட்டத்துடன் உரையாடினோம். பயனான சந்திப்பாக அமைந்தது. இவ்வளவு வசதி செய்தி தந்தாலும் நண்பர்கள் சொன்னது, 'நமக்கெல்லாம் பூங்காங்களில் அமர்ந்து இயற்கை காற்றுடன், கொஞ்சம் பொகையைப் போட்டு சந்திப்பு நடந்தால் தான் மனநிறைவாக இருக்கு'. ஆனால் இப்போதெல்லாம் பூங்காக்களில், பொது இடங்களில், புகைக்கு பகைன்னு அறிவிச்சிட்டாங்க. பூங்காவை விட்டு கொஞ்சம் தள்ளிப் போகனும். எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு கஷ்டம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு கஷ்டம்.

கஷ்டம் சாமி : கந்தசாமி பற்றி தனி விமர்சனப் பதிவு போடலாம் என்று நினைத்தேன். பதிவர்கள் டெரர் ஆகி, கொல வெறி ஆகி துறத்தினால் என்ன செய்வது, கைப்பேசி எண்ணையும் பொதுவில் வைத்தாகிவிட்டது, கந்தசாமி விமர்சனம் எழுதினால் எதிர்வினையாக கண்டிப்பாக நல்லிரவில் அழைத்து டார்சர் கொடுப்பாங்கன்னு தனிப்பதிவாகப் போடவில்லை. இருந்தாலும் நாலுவார்த்தை 10 வெள்ளி செலவு செய்ததற்காக எழுதியே ஆகனும், பதிவர் கடமைன்னு ஒண்ணு இருக்கே.

இடைவேளையில் எழுந்து வந்திருந்தால் ஒரு படம் பார்த்த உணர்வு கிடைத்து இருக்கலாம், 3:15 மணி நேரம் இழுவை, போதைப் பொருள், கள்ளச் சந்தை, மெக்சிகோ, கருப்புப் பணம், ஏழைகள், ப்ளாட்பார வாசிகள், (கவர்ச்சி காந்தமாக விக்ரமுடன் ஓடிவந்து அடிக்கடி ஒட்டிக் கொள்ளும்) ஷ்ரேயா, க(வ)டிவேலு (சோக்கெல்லாம் நல்லா இல்லிங்க) , ஏற்கனவே ஜெண்டில் மேன், குரு படங்களில் சொல்லப்படுவது போல் இல்லாதவங்களுக்கு இருக்கிறவர்களிடம் இருந்து அள்ளிக் கொடுக்கும் கதையாம். சுசி.கனேசன் விரும்புகிறேன், திருட்டுப் பயலே படம் செய்திருந்தார், திருட்டு பயலே அட்டகாசமாக இருந்தது, ஷங்கர் அவதாரமெடுக்க முயற்சித்து தயாரிப்பாளர் காசில் மஞ்சள் குளித்து இருக்கிறார்.....பாவம் விக்ரம்.... நல்ல நடிகர்....அடுத்து நல்லப்படம் கொடுக்க வேண்டும். கவர்ச்சிக்கு வாரி இறைத்த காசை கதைக்கும், திரைக்கதைக்கும் இறைத்திருக்கலாம்........ரொம்ப இழுழுழுழுழுழுழுழுழுழுவை. படம் முழுவதும் ஏழைகள் ஏழைகள் என்று ஏழைகள் நலன் பேசுவதால் படம் பார்க்கும் பெரும்பாண்மை நடுத்தர வர்க்கமே முகம் சுளிக்கிறது. ஏழைகள் பற்றிய படமெல்லாம் எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு எடுபடுவதில்லை, வெற்றிப்படங்கள் அனைத்துமே நடுத்தர மக்களை சுற்றி நடப்பதாகக் காட்டப்படும் கதைகள் தான் என்பதை இயக்குனர்கள் புரிந்து கொள்ளாமல் போவது வியப்பு.

புரிந்து கொள்ளாத இந்தி மொழி வெறியர் : நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
பிற மாநில மொழிகளையும் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும்.

முக்கியமாக தேசிய மொழியான இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக இந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் இந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம்.


- ஏற்கனவே இந்தி நுழைந்ததால், ஆரம்பப் பள்ளிகளில் பலர் தாய்மொழிக் கல்வியை புறக்கணிக்கத் தொடங்கி அண்டை மாநிலங்களில் தாய்மொழி வழிக்கல்வி பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது, வருங்காலத்தில் தாய் மொழியை சிறப்பு பாடமாகத்தான் எடுத்து படிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது, இந்த லட்சணத்தில் கபில் சிபில் போன்ற இந்தி வெறியர்கள் இந்தியாவை இந்தி மயமாக்கத் துடிக்கிறார்கள். பாம்பே மிட்டாய் விற்பவனுக்கு இந்தி தெரிகிறது கடைசி வரையில் மிட்டாய் தான் விற்கிறான் என்று நண்பர் முத்து தமிழினி குறிப்பிட்டது தான் நினைவு வருகிறது, தமிழகத்தில் தனித் தமிழ் இயக்கம் ஓரளவு வெற்றிபெற்றது போலவே முழுவதும் இந்தியமாக்கிவிட்டால் பிறகு அதிலிருந்து பிற மொழிச் சொற்களை களைந்துவிட்டு சமஸ்கிரத மயமாக்கலாம் என்கிற ஒரு திட்டமாகத்தான் எனக்கு இவை படுகிறது. மாநில மொழி ஆர்வளர்கள் விழித்துக் கொண்டு அம்மணமாகாமல் தப்பிக் கொள்ள வேண்டும். இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்த ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் அதற்கு முன்பு 300 ஆண்டுகளில் இஸ்லாமிய அரசர்களால் கொண்டுவரப்பட்ட உருது மொழியுடன் சமஸ்கிரதம் சம அளவில் கலந்து ஏற்பட்ட இந்தியும் கூட அந்நிய மொழிதான். இது பற்றிய தகவல் இங்கே.

25 ஆகஸ்ட், 2009

கலாச்சாரக் காவலர்கள் கட்டமைக்கும் பெண்ணியம் !

பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் ஆகிய சொல்லாடல்களில் பலருக்கும் பல கருத்துகள் இருக்கிறது. ஊருக்கு அறிவுரைக் கூறும் ஆண் சமூகம் வீட்டுப் பெண்களுக்கு அத்தகைய உரிமைகள் கொடுக்கிறதா என்பதே கேள்விக்குறி. தொடர்ந்து அழும் தொலைக்காட்சித் தொடர்கள் இன்னும் என்ன என்னவோ அத்தனை ஊடகங்களும் திடீர் பெண்ணிய வியாதிகளாகி பெண்கள் எதையெல்லாம் செய்யலாம் என்பதாக அவர்கள் எதோ நல்லது செய்வது போல் பெண் சமூகங்களை கீழறுத்ததே நடந்தேறிவருகிறது. இன்னும் ஒரு சிலர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வதில் தவறே அல்ல என்றெல்லாம் வழியுறுத்துகின்றனர். மேம்போக்காக பார்த்தால் அது சரிதான் என்பது போல் தெரியும், ஆனால் நல்லதொரு ஆணின் மனைவி கேடுகெட்ட ஆண்களின் வலையில் வீழ்வதற்கு இது போன்ற கருத்து வாதிகள் மறைமுகமாக குழிபறிக்கிறார்கள் என்பதே உண்மை.

பெண்கள் மதுக்குடிப்பதும் குடிக்காமல் இருப்பதற்கும் வளர்ப்பு, குடும்ப சூழலே காரணம், அது அவர்களது மிக மிக தனிப்பட்ட செயல் இதில் கருத்து சொல்ல எதுவுமே இல்லை. எனக்கு தெரிந்து சித்தாள் வேலை, சாலைத் தொழிலாளிகள், கூலித் தொழிலாளி பெண்கள் பலருக்கு குடிக்கும் வழக்கம் இருக்கிறது, உடம்பு அசதியை மறந்து தூங்கினால் தான் அடுத்த நாள் வேலைக்குச் செல்ல முடியும் என்கிற காரணம் சொல்லுவார்கள், அது சரியான காரணமா ? இல்லையா ? என்கிற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அவை பொதுச் சமூக ஒழுக்கத்தை நலிவுறச் செய்வது போலவும், பெண் உரிமையுடன் தொடர்புடைய ஒன்று போலவும் ஊடகங்கள் கட்டமைப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

கூலித் தொழிலாளி ஒருவர் மதுக்கடை முன்பு நின்று மதுக்குடிப்பதை படமெடுத்துப் போட்டு 'அன்றாடம் காய்சிகளின் பெண்ணொழுக்கம் பாரீர்'
என்பதை மறைமுகக் கருத்தாக திணிப்பது போல் மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? அல்லது அப்படி எதுவுமே நடைபெறுவதில்லையா ?


படம் நன்றி : தினமலர்

நட்சத்திர கேள்விகளுக்கு நச் பதில்கள் !

தமிழ்மணம் காசி அண்ணாச்சியின் நட்சத்திர கேள்விகளுக்கு என் பதில்,

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

கணிணியில் தமிழைப் பார்பவர்களில் துள்ளிக் குதிப்பவர்களும் இருக்கிறார்கள், முகம் சுளிப்பவர்களும் இருக்கிறார்கள். பதிவுலகம் சாராத பலருக்கு மின் அஞ்சல் அனுப்பும் போது மிகச் சிலர் தான், தமிழில் தட்டச்சு செய்வது எப்படின்னு கொஞ்சம் விவரமாக சொல்லித்தாங்க என்பார்கள், பலர் அதற்கு ஆங்கிலத்தில் கூட பதில் மின் அஞ்சல் அனுப்புவதில்லை. காரணம் மொழி என்பது தகவல் பரிமாற்றும் கருவிதான், அதை இணையம், வின்களம் அளவுக்கு எடுத்துப் போகத்தேவை இல்லை என்றும், அப்படி முனைபவர்களை மொழி வெறியர்கள் என்பதாகவே நினைக்கிறார்கள். பிற(ர்) மொழியை தொடர்ப்புக்கும், தொழிலுக்கும் பயன்படுத்தலாம், தாய்மொழி ஒன்றுதான் அந்த இனத்தின் அடையாளம் என்பதை பலர் உணருவதில்லை. ஒரு இனம் கேலி செய்யப்படுவது அடையாளங்களை மறுக்கிற போது தான் என்பதும், இன அடையாளங்களை அழிப்பது தான் பிற இனங்களின் செயல், அவை காலந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், வளர்ச்சியடைந்த மொழிகள் எப்படி ஒரு இனத்தால் முனைந்து கொண்டு செல்லப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் பலர் புரிந்து கொண்டப்பாடில்லை. தாய் மொழிப்பற்றிய புரிந்துணர்வு, தேவை பற்றியக் கட்டுரைகள் இன்னும் மிகுதியாக ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழி பெயர்பும் சேர்ந்து எழுதப்பட்டு படித்தார்கள் என்றால் ஒருவேளை தாய்மொழியின் தேவை உணர்வார்கள் என்று கருதுகிறேன். நீரிழிவுக்கு உறவுக்காரர்களான் இந்தியர்கள், தமிழர்கள் இனிப்பைக் கூட மருந்து தடவிக் கொடுத்தால் தான் ஒருவேளை ஏற்பார்கள்

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

பேருந்து முன்பதிவு, தொடர்வண்டி முன்பதிவுகள் எல்லாம் இணையத்தின் மூலம் செய்யும் படி தற்போழுது தனியார் நிறுவனங்களும், அரசுகளும் ஏற்பாடு செய்திருக்கின்றன, நன்கு படித்தவர்களிலே கூட அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை செய்பவர்கள், நிறுவன உரிமையாளர்கள் என கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தவிர்த்து இத்தகைய வாய்ப்புகளை நம்பிப் பயன்படுத்துபவர்கள் குறைவு, காரணம் கடன் அட்டை மோசடிகள் நடப்பதால், இணையம் பயன்படுத்தி நடக்கின்ற பரிமாற்றங்கள் (Transaction) மூலமாக கடன் அட்டை எண் திருடப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் காரணமாகக் கூட இருக்கும். சிங்கையில் பணத்தை நேரடியாக கணக்கில் சேர்க்கும் மின்னியல் எந்திரங்கள் இருந்தாலும் சிலர் அவற்றை நம்பாமல் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று கணக்கில் சேர்த்துவிட்டு வருகிறார்கள், வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்படி என்றால் இந்தியாவில் கணிணி வழியாக நடைபெறும் சேவைகளை முழுவதும் பலர் பயன்படுத்த ஒரு 10 ஆண்டுகளாக ஆகும். அதுவும் கூட நடுத்தர மக்களிடம் மட்டும் தான். கடவுச் சீட்டு புதுப்பித்தல், பெறுதலுக்கான ON-LINE படிவம் இந்திய தூதரக இணையப்பக்கத்தில் கிடைக்கிறது, ஆனால் அதை அச்சு எடுத்து பூர்த்தி செய்து அனுப்பவேண்டும் என்கிற நிலையில் தான் அந்த இணைய தளம் இயங்குகிறது. மற்ற நாடுகளில் இருப்பது போல் முழுவதும் இணையம் வழியான சேவையாக நடைபெறுவதில்லை. இந்தியாவின் மக்கள் தொகையையும் பொருளியல் ஏற்றத்தாழ்வு சிக்கல்களையும் கருத்தில் கொண்டால் வளர்ந்த
நாடுகளின் கணிணி செயல்பாடுகளை ஒப்பிட்டு பேசுவதும் தவறாகப் படுகிறது. எல்லாம் நடக்கும், நடக்கும் நாள் பிடிக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி இணைய இதழ்கள், இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் இணையத்தில் இந்தியப் பிற மொழிகளைக் காட்டிலும் தமிழில் சிறப்பாக நடைபெறுகிறது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விக்கிப்பீடியா போன்றவற்றிற்கு தன்னார்வளர்கள் மிகுதியாக செய்திருந்தாலும் அதனை விரைவு படுத்த தன்னார்வளர்கள் குழுக்களாக அமைக்கப்பட்டால், சேர்ந்து கொண்டால் இலக்கு, காலம் ஆகிவற்றை வரையறுத்து சிறப்பாக செயல்பட முடியும், உதாரணத்திற்கு ஒருவர் சிலப்பதிகாரம் பற்றி எழுதத் தொடங்கினால் முடிக்கவே முடியாது, ஆனால் ஒரு குழுவாக செயல்பட்டு எழுதினால் ஆளுக்கொரு பகுதியாக எடுத்துக் கொண்டு சில மாதங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி சேர்த்துவிட முடியும். தன்னார்வளர்களின் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், விக்கிப்பீடியா தகவல்கள் நம்பகத்தன்மையாக்க அவை தனிமனித செயல்பாடுகளைச் சாராமல் எழுதப்பட்டு இருந்தால் அவை வருங்காலத்தினருக்கு சிறந்த ஆவணமாக இருக்கும். நம்பகத்தன்மைகளை சீர்படுத்த சார்பற்ற குழுக்களாக செயல்பாடுகள் அமைந்து, ஒப்புதல்களுடன் கட்டுரைகள் வெளி இடப்படவேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

பயன்பாட்டு விரிவாக்கத்திற்கு தமிழை இணையத்தில் பயன்படுத்தும் சமூக பண்பாடு மற்றும் தமிழக / தமிழருக்கு நடத்தப்படும் சேவை, வணிக நிறுவனங்களுக்கு வரிவிலக்கு சலுகைகள் போல் அளிக்கலாம், பயனீட்டாளர்களுக்கு சேவை வரி குறைக்க முயற்சிப்பேன்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

படித்து வேலைக்குச் சென்றதும் தமிழ் வாசிப்பு என்பது வார இதழ்களுடனும், தொலைக்காட்சியுடனுமே முடிந்து விடக் கூடியதாக இருந்தது, ஆனால் இன்றைக்கு தமிழில் சரளமாக எழுதுவதும், இலக்கிய ஆக்கங்கள் படைக்க பலர் முயற்சிப்பதற்கும் வலைப்பதிவுகளை எழுதுவதும், வாசிப்பதும் கை கொடுக்கிறது. புதிதாக வலைப்பதிக்க வருபவர்கள் மனத்தடை இல்லாது, ஆபாசம் தவிர்த்து எதைப் பற்றியும் எழுதலாம் என்கிற எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டால், முதலில் எழுதப் பழகி பிறகு அவர்களே அவர்களுக்கான தனித்தன்மையையும் அவர்கள் கலக்கப் போகும் களம் எது என்பதை அவர்களாகவே முடிவு செய்து கொள்வார்கள்.

6.தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் 5 ஆண்டு சேவை - அது பற்றி தனிப்பதிவு போட்டு இருக்கிறேன். தமிழ்மணம் முன்பு போல் தமிழுக்கு ஒரே திரட்டி கிடையாது, தமிழ் பதிவுகளுக்காக இயங்கும் பல திரட்டிகளில் தமிழ்மணமும் ஒன்று. அதனால் திரட்டிகளில் முன்னோடியாக சேவைகளை மேம்படுத்தித் தொடர வேண்டும் என்பதே தற்போதைய விருப்பம்.

இது தொடர்பதிவு, இதே கேள்விகளுக்கு பதில் எழுதி, கேள்விகளை கை மாற்றிவிட மாதவிப் பந்தலார், கேஆர்எஸ் என்றழைக்கப்படும் பதிவர் நண்பர், ஆன்மிகச் செம்மல், திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை அழைக்கிறேன்.

24 ஆகஸ்ட், 2009

தமிழ்மணம் - வலைப் பதிவுலகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு !

ஐந்தாண்டுக்களுக்கு முன்பே தமிழ் வலைப்பதிவுகள் துவங்கப்பட்டு இருந்தாலும், முதன் முதலாக வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து பதிவுலகின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்மணம் திரட்டியையே சாரும். மாறுபட்ட சிந்தனையில், சேவை மனப்பாண்மையில் தமிழ் திரட்டி ஒன்றை இணையத்தில் தமிழ் கூறும் நல்லுலக்க்கு அறிமுகப் படுத்திய திரு காசி ஆறுமுகம் அவர்களையும் அவர்களுக்கு உதவியாக இருந்த அனைத்து பதிவர் நண்பர்களையும், தற்போதைய தமிழ்மணம் நிர்வாகக் குழுவினரையும், த்மிழ்மணம் திரட்டி சேவை ஐந்தாம் ஆண்டு நிறைவில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இப்பொழுது தான் RSS Feeder (செய்தி ஓடை) தொழில்நுட்பங்கள் நல்ல முறையில் வளர்ந்திருக்கின்றன, திரட்டிகளுக்குச் செல்லாமலேயே கூகுள் ரீடரில் பதிவுகளை தொகுத்துப் படிக்க முடிக்கிறது, ஆனால் அவை இல்லாத காலகட்டங்களில் பதிவுத் தொகுப்புகளுக்கு தமிழ்மணம் திரட்டியின் சேவை மிகப் பெரியதாக இருந்தது, வெறும் பதிவுத் தொகுப்பு சார்ந்த சேவை மட்டுமின்றி, அதில் இணைபவர்களை வெளிச்சமிடும் வகையில் வாரம் ஒரு நட்சத்திரப் பதிவர் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கிறது.


தொடக்கத்தில் நட்சத்திர வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்க இணைந்திருந்த பதிவர்கள் எண்ணிக்கையும் காரணம், பிறகு எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக வாய்ப்புகள் கிடைக்க ஆண்டுகளாக காத்திருப்பவர்களும் உள்ளனர். நட்சத்திர வாய்ப்பு கிடைக்காதவர்களில் 3 - 4 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வருவோரும் உண்டு. தற்போது நட்சத்திர பதிவர் வாய்ப்புகள் எப்படி வழங்கப்படுகிறது என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. தொடர்ந்து நல்ல முறையில் எழுதி வருபவர்களுக்கு வாய்ப்பு(கள்) கிடைக்கிறது என்பதாக புரிந்து கொள்கிறேன். மற்றபடி அதில் வேறேதும் முறைகள் வைத்திருக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. நீண்ட நாளாக எழுதிவந்தும் எனக்கெல்லாம் வாய்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று சிலர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரைகள் நல்ல நோக்கத்திற்கு என்றாலும் அது சிலரால் தவறாக பயன்படுவதாக பலர் சொல்லிய குற்றச் சாட்டுகளை தமிழ்மணம் செவிமடுக்க வேண்டும், பொறுப்புகள் என்பதை 'அனைவருக்கும் பொது''வாக்கும் போது சிக்கல்களும் முறைகேடுகளும் நடப்பது இயல்பு. எல்லோருமே பொறுப்பானவர்கள் என்று நினைக்க முடியும், நடப்பில் கூறு அற்றவையாக மாறும் போது, வழிமுறைகளை மாற்றி அமைக்கலாம், அதை அப்படியே விட்டுவிடுவதும் சரி அல்ல, நோக்கம் மிகச் சில பதிவர்களால் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை திரட்டி நிர்வாகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்மணம் விளம்பரங்கள் அற்ற திரட்டியாகவும், முற்றிலும் இலவசத் திரட்டி சேவையாகவே தொடர்வதும் சாதனைதான். இணையப் பெருவெளியில் தமிழ் பதிவர்களின் தமிழ் (எழுத்து) சேவை அளப்பெரியது, அதற்கு வழி அமைத்துக் கொடுத்தும், பதிவர்களைத் தொடர்ந்து பல்வேறு வகைகளில் ஊக்குவித்தும் வரும் தமிழ் மணம் திரட்டி மற்றும் திரட்டி நிர்வாகத்தைப் பாராட்டி மகிழ்கிறேன். ஐந்தாம் ஆண்டு நிறைவு என்பது தமிழ்மணத்திற்கு உரிய பெருமை... கூடவே தமிழ் பதிவுலகும் தமிழ்மணம் மூலமாக ஐந்தாண்டுகளாக வளர்ந்து வந்திருக்கிறது என்கிற பெருமையும் அதில் அடங்கும். எனவே ஐந்தாண்டுகள் நிறைவு தமிழ்மணம் மற்றும் தமிழ் பதிவுலக்கிற்கான பெருமை என்பதை புதியவலைப்பதிவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பிற திரட்டிகளை நடத்திவரும் பதிவர் அன்பர்களும், 'தமிழ்மணம் நம்முடைய திரட்டி' என்ற எண்ணங்களையே கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை தொடரவும் மேலும் சிறக்கவும் வேண்டும், மீண்டும் வாழ்த்திக் கொள்கிறேன்.

22 ஆகஸ்ட், 2009

பாலியல் தொழிலும், திருட்டும் !

இந்திய சமய நம்பிக்கையாக கடவுள் நம்பிக்கையின் ஒரு கிளை நம்பிக்கை மற்றும் உறுதியான நம்பிக்கையாக சிலை வழிபாடுகள். 'கடவுளுக்கும் எதாவது செய்யனும் பாஸ்' என்கிற புரிதலாக சிலைகள் வடித்து வைத்து மனுசனுக்கு செய்வது போல், நகை அலங்காரம், மூளிகைக் குளியல்கள், அரசர்களைப் போல் வீதி உலான்னு நடக்குது. அந்த சிலை சக்தி மிக்கது என்று கிளப்பி விடப்பட்டால் வேண்டுதல்களும், காணிக்கைகளும் குவிந்துவிடும், இல்லையென்றால் பாழடைந்து ஒரு வேளை எண்ணெய் கூட கோவிலுக்கு ஊற்றமாட்டார்கள். எல்லாம் 'சக்தி' பற்றிய நம்பிக்கை மகிமைதான். ஆத்திகம், ஆன்மிகம் என்கிற சொல்லில் மிகவும் ஈடுபாட்டுடன் அது குறித்த எதிர்மறை விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கோவில்கள் என்பது நிறுவனமயமாகி ஒரு பிரிவினருக்கு, சாதியினருக்கு வயிற்றுப் பிழைப்பாகிவிட்டது என்று சொன்னால் அவர்கள் மிகவும் சினம் அடைகிறார்கள்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதாக வேண்டுதல்கள் மூலம் கோவில்களுக்கு வந்து சேரும் பொருள்கள் மூலம், பக்தர்களுக்கு வசதி செய்து தரச் செலவு செய்வதைவிட கொள்ளைபோகும் செல்வங்கள் பலமடங்கு. ஆண்டவனுக்கும் மேலானோவராக தங்களை நினைத்துக் கொண்டால் ஆண்டவனுக்கு சேவை செய்வதற்கு அங்கு அபகரிக்கப்படும் செல்வங்கள், சொத்துகள் ஆகியவற்றை கூலியாக அல்லது மிகவும் அற்ப சொற்பமாக நினைத்துக் கொள்வார்களோ என்னவோ, கோவில் சொத்தை கொள்ளை அடிக்கிறோம், அபகரிக்கிறோம் என்ற மனசாட்சிகளே எழாது போல.

இறைவன் என்கிற உருவகம், குறியீடு ஆகியவை இல்லாத ஒன்று நினைக்கும் நாத்திகர்கள், இறை குறித்து தாங்கள் எதுவும் பயப்படத் தேவை இல்லை என்பது அவர்களுடைய எண்ணத்திலேயே இருக்கும் ஒன்று. ஆனால் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இறைவன் பெயரைப் பயன்படுத்தி கொள்ளை அடிப்பதெல்லாம் எந்தவகை இறை நம்பிக்கை என்று தெரியவில்லை. சிலைத் திருடர்களில் நாத்திகர்கள் இருக்கவே முடியாது. நான் முன்பு கூடக் குறிப்பிட்டு இருக்கிறேன். சிலை திருடன் ஒருவனைப் பிடித்து விசாரித்தால் கடவுள் நம்பிக்கை இல்லாததால் தான் நான் சிலையை பொம்மையாக நினைத்துத் திருடுகிறேன் என்று சொல்லுபவன் எவனுமே கிடையாது. கஜினிகள் காலத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் தற்பொழுது சிலைத் திருட்டில் ஈடுபடுபவர்களில் பிறமத்தினர் மிக மிகக் குறைவு. சிலைத் திருடுபவன் இறைவனின் புகழ் தெரியாது பேராசையால் திருடுகிறான் என்றால், அன்றாடம் அர்சனை செய்யும் அர்சகர்களில் சிலர் கோவில் சொத்தில் கையை வைப்பதும், கையாடல் செய்வது என்ன வகையான ஒழுக்கம் ? என்ன வகையான இறை நம்பிக்கை ? ஆனால் இதற்கு சாக்காகக் கூறப்படும் பொருளாதார நிலைமையைச் சொல்லி பரிதாபம் தேட முயல்வது ஞாயம் தேட முயல்வதும் சரியா ?

காம உணர்வைக் கட்டுப்படுத்த முடியாதவர்களிடம் தன்னை மூலதனமாக வைத்துச் செய்யும் பாலியல் தொழிலை(விபச்சாரத்தை) விட, அடுத்தவர் பொருளை அபகரிக்கும் திருட்டு(த் தொழில்) மிக மிக ஈனத்தனமானது என்று நான் சொன்னால் அது சரியா ? தவறா ?

20 ஆகஸ்ட், 2009

பெருகிவரும் உறுப்பு தானங்கள் !

மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம். அண்மையில் 'பசங்க' படத்தில் காட்டப்படும் இரு சிறுவர்களின் வீடுகளிலும் ஒருவர் வீட்டில் 'இரத்தானம் செய்துள்ள குடும்பம்' என்ற பலகையும், மற்றொரு வீட்டில் 'உடல் தானம் செய்துள்ள குடும்பம்' என்று பலகையும் இருக்கும், அப்படி ஒரு காட்சியை வைத்த இயக்குனர் பாண்டியராஜை வெகுவாகப் பாராட்டலாம்.


'உடல் மண்ணுக்கு' என்கிற பழமொழிகள் பழமையாகும் நடவெடிக்கை என அண்மைய காலங்களில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விபத்தில் இறந்தவர்களின் உடல் தானம் செய்யும் பெற்றொர்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பது மனித நேயம் வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

உறுப்பு தானங்களுக்கு எதிராக சில கருத்துகள் இருக்கின்றன, உதாரணத்திற்கு உறுப்பு தானம் கிடைப்பது எவ்வளவு எளிதன்று ஆகையால் பணக்காரர்கள் அல்லது பணக்கார நாட்டினர் ஏழைகளைக் குறிவைத்து செயல்படுகிறார்கள், உறுப்புகளின் தேவை வாழ்வியல் ஆதாரம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்புகள் விற்பனை மறைமுகமாக பெரிய தொழிலாகவே நடந்து வந்திருக்கிறது. உறுப்புகளைப் பெற சீனாவை பல நாடுகள் முற்றுகை இட்டதாகவும், மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உறுப்புகள் விற்கப்பட்டதாகவும் Organ Donation (Opposing Viewpoints) என்ற ஆங்கில நூலில் படித்தேன். இந்தியாவிலும் ஏழைகளின் சிறுநீரகங்கள் மலிவு விலைக்கு சட்டவிரோதமாகப் பெற்றததைத் தொடர்ந்து, உலக நாடுகள் உறுப்பு தானங்கள் குறித்த சட்டதிட்டங்களையும், நடைமுறைகளையும், கவுன்சிலிங்க் எனப்படும் ஒப்புதல் குறித்த அனுகுமுறைகளும் ஏற்பட்டு, உறுப்பு தானங்களை முறைப்படுத்தி இருக்கிறார்கள்.

இறந்த உடல்களில் இருந்து பெறப்படும் உறுப்புகள் அழிவதற்குப் பதிலாக மற்றொருவரைக் காப்பாற்றுகிறது என்கிற புரிதல் இருந்தும், இதற்குத் தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான். மதம் !!! ஆப்ரகாமிய மத நம்பிக்கையாளர்கள் அவர்களின் உறுப்புகளை அவர்கள் தானம் செய்யத் தடையாக நினைப்பதற்கு காரணம், 'முழுக்க முழுக்க எனது வாழ்க்கைக்காக கடவுளால் கொடுக்கப் பெற்ற உறுப்புக்களை பிறருக்குக் கொடுக்கும் படி கடவுள் வேத நூல்களில் அறிவுறுத்தவில்லை, எனினும் இஸ்லாமியர்களிடையே உறுப்பு தானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதை மீறி என்னால் உறுப்பு தானம் செய்ய முடியாது' என்ற கருத்து நிலவுவதால் மேற்கத்திய நாடுகளில் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் மதநம்பிக்கையாளர்களிடையே அவற்றிற்கு பரவலான வரவேற்பு இல்லை, இந்த காரணங்களினால் உறுப்புகளுக்கு காத்திருக்கும் நோயாளிகளில் ஆண்டுக்கு 20 விழுக்காட்டினர்வரை இறப்பை தழுவுவதாக அந்நூலில் குறிப்பிட்டு இருந்தது.

இந்திய சமய நம்பிக்கைகளில் மறுபிறவி பற்றிய நம்பிக்கை இருப்பதால் 'உடல் அழியக் கூடியது, உறுப்புகளை தானம் செய்வதால் தவறு இல்லை என்றும், பல்வேறு தானங்கள் இந்திய சமயங்கள் அனைத்திலுமே வழியுறுத்தப்பட்டு இருப்பதாலும் உடல் வேறு தலைவேறாக உறுப்பு அமைந்திருக்கும் கடவுள் உருவங்கள் இருப்பதாலும்' மன அளவில் உடல் தானம் செய்ய விரும்பும் இந்திய சமய நம்பிக்கையாளர்களை இந்திய சமயங்கள் தடைசெய்ய வில்லை என்றும், ஆனாலும் உறுப்புதானங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவிலும் குறைவாகவே இருக்கிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. மத நம்பிக்கையாளர்கள் பிறமதத்தினருக்கு உறுப்பு தானம் செய்ய முன்வராவிட்டாலும் கூட, தன் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன் தானம் செய்ய முன்வரலாம்.


உறுப்பு தானங்கள் பற்றிய பல்வேறு மத நம்பிக்கைகளும், வரவேற்பும் பற்றிய தகவல் இங்கே (http://www.donatelifeny.org)

சிங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் பணி புரிந்த காதலர்களில் காதலர் ஒருவருக்கு கல்லீரல் கெட்டுப் போனபோது, காதலி தானம் செய்து காதலரைக் காப்பாற்றினார் என்ற தகவல் பலரால் பேசப்பட்டு பாராட்டப்பட்டது. உறுப்பு தானங்களின் பயன் கருதி சிங்கப்பூர் அரசு, விபத்தில் இறக்கும் ஒருவரின் உடலில் இருக்கும் உறுப்புகள் தானம் செய்ய முன்வரவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கும் பல்வேறு மத அமைப்புகளும் அதற்கு இணங்கவே சிங்கப்பூரில் விபத்தில் மூளை சாவாக இறப்பவர்களின் உறுப்புகள் செயல்படக் கூடியது என்றால் அதை காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்துகிறார்கள்.


தமிழகத்தில் சென்ற வாரம் திருச்சியைச் சேர்ந்த ஒரு வாலிபரின் உறுப்பு பெற்றோர்களால் தானம் செய்யப்பட்டது, நேற்று சேலத்தில் ஒருவாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. விஐபிகளில் நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்தவர் என்கிற தகவல் பலருக்கும் தெரிந்திருக்கும்.உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது ? என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்.

19 ஆகஸ்ட், 2009

பொன்னியின் தவப் புதல்வர் - பிள்ளையார் பித்தர் திலகர் அவர்கள் !

ஒரு முறை துர்வாச முனிவர் கைலாசத்துக்கு சென்றார். வாசலில் இருந்த விநாயக பெருமானை பார்க்காமல் விடுவிடுவென்று சென்றார். அவரை வைத்து தமாஷ் பண்ண எண்ணிய கணபதி தனது துதிக்கையை அவர் முதுகை நோக்கி ஃபூ என ஊத, துர்வாசர் நான்கைந்து குட்டிக்கரணங்கள் அடித்து பதறி விழுந்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த பூத கணங்கள் கலகலவென்று சிரித்தன.

எழுந்து நின்ற துர்வாசர் தனது ஞானதிருஷ்டியை பயன்படுத்தி நடந்ததை அறிந்து கொண்டார். கோபம் கொண்டார். விநாயகரை பார்த்து கண்களில் நெருப்புப் பொறிகள் பறக்க பேசலானார், “நீர் பூலோகத்தில் நாற்சந்திகளிலும், குளத்தங்கரை மரத்தடிகளிலும் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கொண்டு இருப்பீராக. உமக்கு தேங்காய் உடைப்பவர்கள், தோப்புக்கரணம் போடும் பக்தர்கள் ஆகியோர் படிப்படியாக குறைந்து போகக் கடவர்” என்று சபிக்கவும் செய்தார். தம்மைப் பார்த்து சிரித்த அத்தனை பூதகணங்களும் பூலோகத்தில் இந்த்துவா திலகங்களாக பிறப்பார்கள் என்றும் அவர் கூற, பூதகணங்கள் பதறிப் போயின. அவர் காலில் விழுந்து, “முனிபுவங்கரே, உமக்கு மூக்குக்கு மேலே கோபம் என்பதை அறிந்தும் நாங்கள் சிரித்தது தவறுதான். மன்னித்து எங்களுக்கு சாபவிமோசனம் தர வேண்டும் என வேண்டின.

விநாயகரும் “துர்வாசரே என்னை இப்படி சபித்து விட்டீர்களே. உமக்கு பசி எடுத்து கோபம் அதிகரிக்கும்போது நானல்லவா உம்மை அழைத்து எனக்கு கிடைக்கும் பிரசாதங்களை உண்ணக் கொடுப்பேன். இப்போது எனக்கே பிரசாதம் இல்லையென்றால் உமக்கு எங்கிருந்து உணவு வரும்”? என கேட்டார். துர்வாசரும் தான் அவசரப்பட்டு சபித்ததை உணர்ந்து சுதாரித்து கொண்டார். “இந்துத்துவாக்களாக பிறக்கும் பூத கணங்கள் ஒரு தருணத்தில் ப்ளாஸ்டராப் பாரிசில் செய்யப்பட்ட உமது சிலைகளை கடலில் கரைப்பார்கள். கடல் மாசு பட்டு சுற்றுச் சூழல் மாசுபடுவதைப் பார்த்து மனம் கொதிக்கும் நாத்திகர்கள் எல்லா இடங்களிலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள், உன்னை கடலில் எரிவதை தடுக்க உதவுவார்கள். போலி ஆத்திகம் இன்னும் அழியும். ஆனால் உங்களுக்கு உண்மை பக்தர்களால் உடைக்கப்படும் தேங்காய்களும் பிரசாதங்களும் அதிகரிக்கும். அப்போது என்னை மறந்து விடாதீர்கள்” என சாப விமோசனத்தை கூறினார்.

இது உண்மையிலேயே சமீபத்தில் கலியுக ஜய ஆண்டில் வைகாசி மாதம் நடந்தது. (மே 27, 1953)

(நன்றி: பொன்னியின் தவப்புதல்வர், பக்கம் 705-706)ப்ளாஸ்டராப் பாரிஸ் பிள்ளையார் உருவ பொம்மை உடைப்புகளை செய்யுமாறு தனது தொண்டர்களுக்கு கட்டளையிட்ட திலகர் அவர்களிடம் சில ஆர்ய சமஜ் தொண்டர்கள் வந்து, தங்கள் வீட்டு பூஜையறையிலிருந்த பிள்ளையாரை உடைப்பதற்காக எடுக்க முயன்ற போது தத்தம் வீட்டு பெண்மணிகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவிப்பதாகக் கூறினர். அவர்களிடம் திலகர் “உங்களை யார் வீட்டிலிருந்த பிள்ளையார் பொம்மைகளை எடுக்கச் சொன்னது? கடையில் நாலணா கொடுத்தால் பிள்ளையார் பொம்மை செய்தே தருகிறார்கள். அதை வாங்கிக் கொண்டு போய் கடலில் கரையுங்கள்” என்றாராம். மேலும் திலகர் அவர்களே அவர்கள் குடும்பத்தினர் வணங்கி, நிர்வகித்து வந்த பிள்ளையார் சிலையின் கடற்கரை கரைப்பு ஊர்வலங்களுக்கு தலைமை ஏற்று இருந்து நல்ல பணி ஆற்றியதாகவும் படித்துள்ளேன்.

பல்கி கிண்டலுக்காக எழுதினாலும் உண்மையில் திலகரின் பிள்ளையார் கரைப்பின் தன்வினையாய் முக்குக்கு முக்கு பிள்ளையார் ஊர்வலம், ராமாயண பக்தி பிரசாரத்தால் தெருவுக்கு தெரு ராமாயண பிரவசனங்கள் ஆகியவை நடந்தன.

இந்துத்துவாக்களின் தலைவர் என்னும் முறையிலும், பொன்னியின் தவப்புதல்வன் கதையை வைத்து பார்க்கும் போதும், பால கங்காதார திலகர் துர்வாசரின் சாபம் நிறைவேற உதவியதன் மூலம், உண்மையிலேயே பிள்ளையார் சிலை படுகொலைக்கும் ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் சுற்றுச் சூழல் கேட்டால் கடல் மாசுபடுவதற்கும் காரண கருத்தா திலகர் என்பது வெள்ளிடை மலை.

:)

கதை மாதிரி நன்றி : திரு டோண்டு இராகவன்

18 ஆகஸ்ட், 2009

சரியாக ஒரு கொலை !

"சார்......உங்க உடல் நிலை பலவீனமாக இருக்கு... அதிர்ச்சி தரும் செய்திகள் கேட்பதை முடிந்தவரை தவிருங்கள்" என்று சொன்னார் அமைச்சர் அரு.செல்வராசுவை பரிசோதித்த மருத்துவர்

அமைசர் அரு.செல்வராசு ஆளும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர், அமைச்சர் துறையில் மட்டுமின்றி பிற துறைகளின் காண்ட்ரெக்டுகள் கூட அமைச்சரின் கண் அசைவில் அமைச்சர் சொல்லும் நிறுவனங்களுக்குக் கிடைத்துவிடும். முதல்வருக்கு மகன் இல்லை என்றால் அடுத்த முதல்வர் ஆகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கும் என்று கூட கட்சியினர் பேசிக் கொள்வார்கள்.

"நான் எதிர்கட்சிகளைப் பார்த்துக் கேட்கிறேன்....உங்களால் ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சியைக் கொடுத்துவிட முடியுமா ? எதற்கு ஊழல் செய்ய வேண்டும் ? மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி எங்கள் கு.மு.க (குடிமக்கள் முன்னேற்ற கழகம்) தான். எங்கள் கட்சி கறைபடியாத கட்சி, எதிர்கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது நடத்திய அரசியல் கொள்ளைக்காக கோர்ட் படி ஏறிவருகிறார்கள், பொது மக்களே.....ஏழைப் பெருமக்களே நான் உங்களைக் கேட்கிறேன்......எங்கள் கட்சி இதுவரை ஏதேனும் ஒரு ஊழல் வழக்கிலாவது தண்டனை பெற்றி இருக்கிறதா ? எங்கள் மூச்சும் பேச்சும்......."

என்று முந்தைய நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் மேடையில் மயங்கி விழுந்து, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனையில் முதல் உதவி பெற்று, தற்பொழுது மிகப் பெரிய மருத்துவமனையில், ஓட்டல் அறை போல் இருக்கும் பெரியதொரு குளிர்சாதன அறையில் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறார்

***

அன்று மதியம்,

நடசத்திர ஓட்டல் ஒன்றின் அறையில்,

தொழில் அதிபர்கள் அண்ணன் வாசுதேவனும் , தம்பி இராமதேவனும்

"வாசு...நம்ம அமைச்சர் செல்வராசு மருத்துவ மனையில் மாரடைப்பால் சேர்த்திருப்பதாக நேற்றே மொபைல் கால் வந்ததே போய் பார்த்து வருவோமா ?"

"ம் எனக்கும் தெரியும்... அதற்கான ஏற்பாடுகளைத்தான் செய்து வருகிறேன்....."

"அமைச்சருக்கு நாம தான் பினாமி, நாமலே உடனடியாக சந்திக்காவிட்டால் ஒரு மரியாதை இருக்காதே அண்ணே"

"தம்பி......இது தான் சரியான சந்தர்பம்.....இதைப் பயன்படுத்திக் கொண்டால் நாம செட்டில் ஆகிவிடலாம்"

"புரிகிற மாதிரி சொல்லுங்க அண்ணே......"

"அமைச்சரோட டாக்குமெண்ட்ஸ் அனைத்தும் அவரோட ..... ஈசிஆர் ரோட்டு பங்களாவில் தான் இருக்கு, பங்களாவும் சொத்துக்களும் நம்ம பேரில் இருக்கு...."

"ஆமா..."

"நம்ம கிட்ட சொத்துக்கள் இருப்பதை அவரு புள்ளைங்க கிட்டக் கூடச் சொல்லவில்லை....ன்னு நாம மேல அவ்வளவு நம்பிக்கை இருப்பதாக பெருமையாக அடிக்கடி சொல்லுவாரு"

"ஆமா..."

"அவரோட சொத்தாக நம்மிடம் இருப்பவை சுமார் 500 கோடிங்கிற விவரம் நமக்கும் அவருக்கும் மட்டும் தான் தெரியும்"

"இப்ப நாம அவருக்கு அதிர்ச்சி கொடுத்தால்......போய் சேர்ந்துவிடுவார் சொத்துக்கள் நமக்குத்தான்"

"எப்படி செய்யப் போறிங்க......"

***

வாசுதேவன் வந்திருப்பதாகச் சொல்ல, உடனே சந்திக்கும் படி அமைச்சர் அனுமதி அளிக்க..
மருத்துவமனையின் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செல்வராசுவை தனிமையில் சந்திக்கிறார்...வாசுதேவன்

"ஐயா.......நான் சொல்றதை கேட்டு அதிர்ச்சி அடைந்திடாதிங்க......நம்ம பங்களாவைப் பற்றியும் சொத்துக்களைப் பற்றியும் பிரபல வார இதழ் சீனியர்கீரன் புலனாய்வு செய்து எழுதி இருக்கான், இன்னிக்கு இஸ்யூவில் வந்திருக்கு....நம்ம பங்களாவை ரைடு பண்ணப் போறாங்ன்னு மேலிடத்தில் இருந்து ரகசிய மெசேஜ் வந்தது... எதாவது..யாரிடமாவது பேசி தடுக்க முடியுமான்னு பாருங்க...இதோப் பாருங்க போட்டோவோடு செய்தி போட்டு இருக்கிறான் சீனியர்கீரன்"

என்ற செய்தியை முகத்தில் ஈ ஆடாமல் வாசுதேவன் சொல்லச் சொல்ல, கேட்ட செல்வராசு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய.....அறையின் கண்ணாடி வழியாக பார்த்த நர்ஸ் வேகமாக வரத் தொடங்க...கொண்டுவந்திருந்த போலி வார இதழை தன் கோட் பாக்கெட்டுகுள் வாசு வைக்க... செல்வராசுவின் தலைத் தொங்கத் தொடங்கி... விழிகள் மேலே வெறித்துப் பார்த்து பளபளப்பை இழந்து கொண்டிருந்தது.

17 ஆகஸ்ட், 2009

மாண்புமிகு மருத்துவ சமூகம் !

உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால் அதை மறுப்பவர்கள் எவருமே இருக்க முடியாது. இனவேறுபாடு எதுவும் இல்லாமல் அல்லது மிகக் குறைவான ஒரு நாட்டில் ஒன்று போல் முக அமைப்பு கொண்ட மக்கள் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டு அவர்களில் ஒரு பகுதியினரை பிறப்பை, தொழிலை வைத்து தாழ்வு படுத்தி,அடிமையாக்கி வைத்திருக்க கண்ணுக்குத் தெரியாத சாதி என்கிற மாயவலையை பிண்ணி அதில் சிக்க வைத்து வாழ்வியல் சதி(ரா) ஆட்டம் ஆடும் நிலை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வழக்கம். அப்படி செய்பவர்களுக்கு முற்பட்ட, முற்போக்கு சமூகம் என்கிற உயர்ந்த பெயரையும். பாதிக்கப்பட்டவர்களை கிழான சமூகம், தீண்டத்தகாதவர்கள் என்றும் சொல்லி வந்திருப்பது 'தெய்வம் பிறந்ததாகக் வாய்கூசாமல்' சொல்லப்படும் 'பாரத திரு' நாட்டில் இன்றும் கூட நடை முறையில் தொடர்வதும், அதை தடுக்க முனையும் மனிதம் போற்றுவோருக்கு சா'தீயம்' பெரும் அறைகூவல் தான்.

***

சலூன் கடை என்றாலே சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார் ?

அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து சிரைத்துக் கொள்வது வழக்கம். பூணூல் போட்டுக் கொள்வது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே வந்திருக்க வேண்டும் என்று வரலாற்று, இலக்கிய ஆர்வளர்கள் சொல்லுகிறார்கள். பூணூல் பற்றி எதுவும் குறிப்பிடாத வள்ளுவரும், மழித்தலும் நீட்டலும் வேண்டாம்' என்று அறிவுறித்தியது பார்பனர்களின் வெளிப்பகட்டைக் கண்டிப்பதற்குத்தான் என்றும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவத்தை பண்டைய தமிழகத்தில் பெளத்தர்களும், சமணர்களும் செய்து வந்ததாகக் கூறுகிறார்கள், சித்தர்களில் பலர் சமண சித்தர்கள் என்றும் இந்து, சைவ சமய ஆதிக்கங்களினால் அவர்கள் பின்னாளில் இந்து சமயம் சார்ந்தவர்களாகக் காட்டப்படுவதெல்லாம் வெறும் கட்டுமானங்களே என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மருத்துவம் பார்க்கும் வழக்கம் இருந்தது, பெரும்பாலும் சமணர்களே மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவே இருந்தனர். பெளத்த, சமணர், பார்பனர் தவிர்த்து மழித்துக் கொள்ளும் பழக்கம் வேறொருவருக்கு இருந்ததில்லை. சமணர்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்ட காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட சமணர்கள் அனைவரும் மருத்துவத் தொழிலுடன் சவரம் செய்வதையும் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அது அப்படியே ஆண்டு 1900 வரை தொடர்ந்தது.

காயங்கள் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்ய அந்த இடங்களில் மயிரையும் மழிப்பது வழக்கம் என்பதால் அன்றைய மருத்துவர்கள் அனைவருமே சவரம் செய்வதையும் தெரிந்து வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பார்பனர் மற்றும் சைவ வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தால் பக்தி இயக்கம் என்ற பெயரில் சமணர்கள் வீழ்த்தப்படுவதற்கு முன்பு பார்பனர்கள் தங்களுக்கு தாங்களே சிரைத்துக் கொள்வது தான் வழக்கம். வீழ்த்தப்பட்ட சமண சமூகத்தில் மருத்துவம் தெரிந்தவர்களை மருத்துவர்கள் என்கிற சாதிப் பிரிவாக ஆக்கி, மருத்துவம் தெரியாதவர்களை வண்ணார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகமாக மாற்றி ஊருக்கு ஒதுக்குப் புறம் குடி இருக்க அனுமதிக்கப்பட்டதாகத்தான பண்டைய சாதியம் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவெங்கும், புத்த சமண மத வீழ்ச்சி என்பது ஆதிசங்கரருக்கு பிறகு ஏற்பட்டவையே, அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக தொடர்ந்ததும் ஆதிசங்கரருக்கு பிறகு நடந்த வரலாற்று நிகழ்வே.

இப்படியாக உருவான மருத்துவ சமூகம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் உயர்சாதியினருக்கு சேவகம் செய்ய வேண்டி இருந்ததால், தீண்டாமை ஆதிக்கத்தின் பாதிப்புக்கு அவர்களும் ஆளானார்கள்.

மருத்துவர்களின் சமூகக் கடமைகளாக அவர்களுக்கு முற்பட்ட சமூகம் 'விதிக்கப்பட்டவை' எவை என்று பார்த்தால்,

* தேவையான போது தலை, முகச் சவரம் செய்துவிடுவது
* இல்லச் சடங்கின் போது ஹோமம் செய்ய வரும் பார்பனருக்கு உதவுதல்
* பூப்பு எய்தும் சடங்கு, சாவு ஆகியவற்றை பிறர்க்கு சொல்லிவிடுதல், பூப்பு எய்திய பெண்ணுக்கு மூலிகை சார் கலந்த குளிக்கும் நீரை ஆயத்தம் செய்து தருவது
* "மாப்பிள்ளை சவரம்" - திருமணத்தின் முதல் நாளின் போது மணமகனின் பிறப்பு உறுப்பு பகுதியில் முடி நீக்குதல், அப்போது அவனுக்கு எதேனும் ஆண்மை தொடர்பான நோய்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லுதல்
* மணப்பெண்ணுக்கு சேலைக் கட்டிவிடுவது (மனுதர்மப்படி பால், பட்டுப் புடைவைக்கும் தீட்டு கிடையாதே !)
* ஆண் / பெண் இருபாலருக்கும் மாதம் ஒருமுறை மறைவிட மழித்தல்
* பெண்களுக்கு மகப்பேறுக்கு உதவுதல்
* சவத்துக்கு சவரம், சவத்தை குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுதல், சவ அடக்கத்தில் உதவுதல்

இவைகளுக்கு "ஊர்ச் சோறும்", கூலியாக நெல் போன்ற தானியங்கள் வழங்கப்பட்டதாகவும், அவை இல்லாதவர்கள் பணம் கொடுப்பதும் வழக்கமாம். இந்த தொழிலில் ஈடுபடும் அந்த சமூகத்து ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் சொல்லப்பட்டனர். அவர்களில் பெண்கள் மருத்துவம் மிகுதியாக தெரிந்து வைத்திருந்ததால் 'பாட்டி வைத்தியம்' என்கிற சொல் கூட பெண்கள் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் ஏற்பட்ட சொல் என்றே சொல்கிறார்கள்.

ஆங்கிலேயே மெக்கல்லே கல்வித் திட்டத்தினால் அலோபதி மருத்துவம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குலத்தொழில் இறைவனால் விதிக்கப்பட்டது என்றும் பிறவற்றை செய்வது இறை விதிக்கு ஏற்புடையது அல்ல என்று கூறிவரும் பார்பனர்கள் மருத்துவத் தொழிலில் கிடைக்கும் பணம் புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது ஏனைய பிற சமூகமும் ஆங்கில மருத்துவத் தொழிலுக்கு மாறிவிட்டார்கள். 12 நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்க சட்டதிட்டம் காரணமாக மருத்துவத் தொழிலை தொடர முடியாமல் தங்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலான சவரத்தொழிலை வேறு வழியின்றி தொடர்கின்றனர். அந்தத் தொழிலையும் கூட நகரச் சூழலில், அதற்கு ஒரு உ(ய)ரிய விலையை நிர்ணயம் செய்து 'ப்யூட்டி பார்லர்' என்ற பெயரில் முற்பட்ட சமூகம் வைத்து செய்து கொண்டு வருகின்றன.

நாம் நம் உடலைத் தொட அனுமதிப்பது மருத்துவர்களுக்கும், சவரத்தொழிலாளிக்கும் மட்டுமே. அந்த இருவேலையையும் ஒருவராக செய்துவந்த, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட மருத்துவர் சமூகம் முடித்திருத்ததை மட்டுமே செய்துவருகிறது. அதிலும் கிராமங்களில் தலித் பிரிவினருக்கு சவரம் செய்பவர்கள் மேல்சாதிக்காரர்களுக்கு சவரம் செய்ய தடுக்கப்பட்டு இருக்கிறது


நூல் சான்று : ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு (160 பக்கங்கள், விலை ரூ 90/-)

கிடைக்கும் இடம் : வல்லினம், எண் 9, Y-ப்ளாக், அரசு குடியிருப்பு, இலாசுப் பேட்டை, புதுச்சேரி - 605 008, தொலைபேசி : 0413 - 2257151

நூலில் சில பகுதிகள் உயர்சாதிக் கொடுமைகளாக சொல்லப்படுபவகளை வாசிக்கும் போதே வாசிக்குபவர்களுக்கு இரத்த கொதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, அதனால் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முழுவதையும் தற்காலச் சூழலில் எழுதுவது தேவையற்றதாக நினைத்து பதிவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன், முழுவதும் அறிந்து கொள்ள நினைக்கும் சமூக ஆர்வலர்கள் நூலை வாங்கிப் படிக்கலாம்.

14 ஆகஸ்ட், 2009

தப்பாக ஒரு கொலை !

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான், வீட்டில் எதோ சத்தம் கேட்டு மயங்கி விழுந்திருந்த கல்பனாவை மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள்.

சிகிச்சைக்கு எல்லா ஏற்பாடுகளும் தாயராகி அவளை ஸ்டெச்சரில் போட்டு அறுவை சிகிச்சை அறைக்கு உள்ளே அழைத்துச் செல்லப் போகும் அந்த வினாடியில்...

பதட்டத்துடன் ஓடிவந்த கணவன் குமாரை கடைசியாக பார்த்துவிட்டு கண் மூடினாள் கல்பனா

மருத்துவர்கள் கைவிரிக்க உடலை எடுத்துச் செல்லும் முன்... உடல் நிறம் லேசாக கருமை அடைவதை வைத்து...மருத்துவர்....ப்ரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்

"ஐயோ.......என் கல்பனாவை கூறு போட்டுவிடாதீர்கள்.......என்ற கூய்ச்சலில் குமாரின் குரலில் மேலும் பதட்டம் நடுக்கம் தெரிந்தது"

"அவங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரிந்து கொள்ளுங்கள்......சார்" என்று சொல்லிய டாக்டர், அவன் அனுமதிக்கு காத்திருக்காமல்

"நர்ஸ்......போலிசுக்கு தகவல் சொல்லிவிட்டு....பிரேத பரிசோதனைக்கு பாடியை அனுப்பிவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் டாக்டர்

"குமார் வெடித்து அழுதான்......"

ஐந்து நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் சாம்ப மூர்த்தி அங்கு வந்தார்

"நீங்க தானே அவங்க ஹஸ்பெண்ட்"

"ஆமா சார்"

"எத்தனை மணிக்கு சம்பவம் நடந்தது"

"தெரியலை சார்...பக்கத்துவீட்டுக்காரங்க அலுவலகத்துக்கு அழைத்துச் சொன்னாங்க"

"சரி உங்க வீட்டுக்கு வாங்க ......போவோம்"

****

கல்பனாவின் அறையில்

ஏகப்பட்ட மருந்துகள், டானிக்குகள் அலமாரியில் இருந்தன.....மேசை மீது திறந்து இருந்த சிரப் பாட்டில் காலியாக இருந்தது....பக்கத்தில் செல்போன்.....எடுத்துப் பார்த்தார்.

"மிஸ்டர் குமார் உங்கள் மொபைல் நம்பர் என்ன ?"

சொன்னான்

"உங்களுக்கு உங்க ஒய்ப் கால் பண்ணி இருக்காங்களே......மூன்று மணி 5 நிமிடத்தில் பதிவாகி இருக்கிறதே"

"சார் அந்த நேரத்தில் நான் மீட்டிங்கில் இருந்தேன்.....வாய்ஸ் மெயிலில் போய் இருக்கும்....நான் செக் பண்ணவில்லை"

குறித்துக் கொண்டார்

"உங்களுக்கு யாரேனும் எதிரிகள் நண்பர்கள் ?"

"அப்படி யாரும் இல்லை சார். நாங்க காதலித்து திருமணம் செய்து கொண்டவங்க...பெற்றோர் பெரிதாக எதிர்கல...எங்க வாழ்க்கை நல்லா இருந்தது.....நான் கல்பனாவை உயிருக்கு உயிராக நேசித்தேன்"

"ம்ம்......இங்கே இருக்கும் மருந்துகள் யாருடையது......?"

"கல்பனாவுடையது தான் சார்"

"இந்த டானிக் ?"

"இதுவும் கல்பனாவுடையது தான் சார்.....மதியம் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவாள்..இரண்டு நாளைக்கு முன்பு தீரப் போவதாக சொன்னாள்... இன்னிக்கு மாலை வாங்கி வர இருந்தேன்.......அதுக்குள்ளே"

இடையில் ஒரு அலைபேசி அழைப்பிற்கு.....

"நினைச்சேன்.....வச்சிடுங்க" என்று சொல்லிவிட்டு,

மருந்து பெயர்களைப் படித்ததும் முகம் ஓரளவு பிரகாசமானார் இன்ஸ்பெக்டர்

"சொல்லுங்க.....கல்பனாவை ஏன் கொலை பண்ணினிங்க ?"

"சார்..............!"

"மிஸ்டர் தெரியும்......இனிமேல் மழுப்ப முடியாது...."

"சார் நான் ஏன் மனைவியை கொலை பண்ண முயற்சிக்கப் போறேன் ?"

பரிதாபமாக கேட்டான்

அதை நான் சொல்கிறேன்

"அவங்களுக்கு ஆஸ்மா இருந்திருக்கு.........அதை சொல்லாமல் தான் அவங்க உங்களை காதலிச்சிருக்காங்க...."

"திருமணம் ஆன பிறகுதான் அவங்க நோய் உங்களுக்கு தெரியவந்திருக்கு......சதா இருமல் ...மருத்துவம்....உங்களை ரொம்பவே வெறுப்படைய வைச்சிருக்கு....."

"........" குமாருக்கு ராட்டினத்தில் தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது

"கல்பனாவை தீர்த்து கட்டிவிட்டால்.......வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டம் போட்டிங்க....டானிக் தீரும் சமயத்தில் கொஞ்சமாக சயனைடு கலந்து வச்சிட்டிங்க.....அவங்க வழக்கமாக சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்கு டானிக் சாப்பிடுபவர்... எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்.......என்னவோ செய்யவும் ....உங்களுக்கு போன் பண்ணி இருக்கிறார்.....போனை எதிர்பார்த்த நீங்கள் எடுக்க வில்லை.... இயற்கை மரணம் .....என்று சொல்லிவிடலாம் என்று திட்டம் போட்டிங்க...அக்கம் பக்கத்தவர் பார்க்கவில்லை என்றால்...."

எத்தனை கேஸ்களைப் பார்த்தாரோ.... அவர் ஊகமாக சொல்லச் சொல்ல...'வீடியோ எடுத்த காட்சி போல் சொல்கிறாரே....' என்று அதிர்ந்த குமார்...அதற்கும் மேல் இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார் என்பதை கேட்கும் நினைவு எதுவும் இல்லாது மயங்கி விழுந்துவிட்டான்

கனவு காணலாம் வாருங்கள் !

1947 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு என்று சொல்வதைவிட ஆளும் வர்கத்திற்கு, மதவெறியர்களுக்குக் கிடைத்த சுதந்திரம் என்றே சொல்ல வேண்டும், மதவெறியர்கள் சுதந்திரமாக காந்தியைச் சுட்டுக் கொள்வதற்கும், பாகிஸ்தான் பிரிவினைக்கும் வழிவிடப்பட்ட ஆண்டே 1947. உறுதிமொழி என்ற பெயரில் மாணவர்களுக்கு சொல்லப்படும் நாட்டுப் பற்று, நாட்டை வழி நடத்துவதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளால் சந்தி சிரிக்கிறது, ஆம் சுவிஸ் போன்ற வெளி நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள அரசியல்வாதிகளின், பினாமிகளின், முதலாளி வர்கங்களின் பணத்தொகை இந்தியாவைத்திருக்கும் வெளி நாட்டுக் கடனைவிட மிகுதி. இவை அனைத்துமே இந்தியாவை சுதந்திரமாக சுரண்டிய பணம் தானே ?

கையால் தைக்கப்பட்ட பிச்சைக்காரனின் உடை போல ஒட்டுப் போட்ட நாடாக பல்வேறு மொழி பேசும் மானிலங்களை ஒன்றிணைத்து இந்தியா எனப்படுகிறது, ஆனால் வாழ்வாதரமான தண்ணீர் தேவைகள் இந்தியா ஒரே நாடு அல்ல அவை ஒரு தோற்றமே என்பதாக அவ்வப்போது உணர்த்துகின்றன. மதச்சார்பற்ற நாடு என்று மார்தட்டிக் கொண்டாலும் இந்துப் பெரும்பாண்மை, இந்து வெறி தூண்டப்பட்ட மாநிலங்களில் பிற மதத்தினர் அச்சத்துடன் வாழ்வது சுதந்திரமா ?

வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைப் பெற்றதாக நினைக்கும் நம் நாட்டில் வெள்ளையர்களின் முதலீடுகள் என்ற பெயரில் இந்தியர்கள் (வளம், உழைப்பு என) தொடர்ந்து சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள், மதவாதமும், முதாலித்துவம் (பண்ணையார்கள்) போற்றும் இரு பெரும் தேசியக் கட்சிகளைத் தவிர்த்து வேறொரு நல்ல ஒரு அரசியல் தலைமை இந்தியாவிற்குக் கிடைக்காமல் போனதற்கு மாநில அரசியல்வாதிகளின் சுயநலம் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும் ? தேசிய, மாநில அரசுகளை எதிர்த்துக் கிளம்பும் போராட்டக்காரர்களை தேசவிரோத குழுக்களாக அடையாள படுத்திவைக்க இன்றைய அரசியல் சட்ட அமைப்பு சுதந்திரம் அளித்திருக்கிறது.

அனைவருக்கும் ஒரே மொழி என்ற பெயரில் வடமாநிலத்தவர் பேசும் இந்தி தமிழகம் தவிர்த்து எங்கும் திணிக்கப்பட்டு அம்மாநிலங்களின் மொழிகளை விழுங்கி வருகின்றன. இதன் காரணமாக தென் மாநிலங்களில் பல துவக்க நிலை பள்ளிகளிலும் மாநில மொழிகளைப் பயில்வதற்கு யாரும் இல்லாமல் மாநில மொழிப் பாடத்திட்டங்கள் கைவிடப் படுவதாக செய்திகள் வருகின்றன. தமிழுக்கும் அதே நிலை என்றாலும் அவ்வளவு சீர்கெட்ட நிலை ஏற்படாதது இந்தி எதிர்பால் நமக்கு கிடைத்த நன்மை. இன்றும் கூட இந்தி அபிமானிகள் எங்களால் இந்தி பேச முடியாமல் போனதற்கு தமிழகத்தின் இந்தி எதிர்ப்பே காரணம் இல்லை என்றால் வடமாநிலத்தின் வளங்களை நாங்கள் வலைபோட்டு தமிழகத்துக்கு அள்ளி வந்திருப்போம் என்று பேசுகிறார்கள் என்பது விந்தைதானே ?

பெயரளவில் திராவிடம் வைத்துக் கொண்டு குடும்ப அரசியல் நிறுவனங்களாக தமிழக அரசியல் கட்சிகள் வளர்ந்து நிற்பதும் சுதந்திர இந்தியாவின் பரிணாமம், பிற மாநிலங்களிலும் இதே நிலைமை என்பதால் தமிழன் தனித்துவிடப் படவில்லை என்று ஆறுதல் அடையலாம். வெள்ளையர் ஆட்சியில் முன்பு கொத்தடிமைகளாக இருந்தவர்கள் இன்று இலவச அடிமைகளாக அடிமை வாழ்கையைத் தொடர்கின்றனர்.

படித்தவன் வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறான் நாட்டை முன்னேற்றுவது எப்படி ? என்கிற ஞாயமான கேள்வி கேட்பதாக நினைப்பவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவும். வேறெந்த காலகட்டங்களிலும் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் மிகுதி. நாள் ஊதிய வேலை முதல் நாசா விஞ்ஞானிகள் ஆகும் அளவுக்கு மக்கள் வளமும், கல்வி அறிவும் பெற்ற ஒரு நாட்டில் அவர்கள் அனைவருக்குமே இந்தியாவில் நல்லொதொரு வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு யார் காரணம் ? சுதந்திரம் பெருவதற்கு முன்பு கூட வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவர்கள் கூட திரும்பி இந்தியாவில் வந்து வேலை பார்க்கும் நிலை இருந்தது, சுதந்திரம் பெற்ற பிறகு படித்தவர்களும், படிக்காதவர்களும் வெளிநாடுகளைத் தேடி ஓடும் நிலைதான் உள்ளது. படித்தவன் வாய்ப்புக் கிடைத்தால் ஓடிவிடுகிறான் என்றே ஒத்துக் கொண்டாலும், அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளில் நாள் கூலிக்கு செல்பவர்கள் அங்கே கொத்தடிமைகளாகத் தொடர்வதும், அவர்கள் முறையான வேலை அனுமதியின்றி ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு சிறைகளில் அடைபடுவதும், அப்படியே எல்லாமும் பெற்றுச் செல்பவர்கள் அந்நாட்டில் ஊதியம் இல்லாமல் வேலை பார்த்து, சித்திரவதை பட்டு எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறை தண்டனைப் பெறுபவர்கள் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 1000க் கணக்கில் கூடிக் கொண்டே செல்கிறது, இந்த நிலை நமக்கு மட்டும் அல்ல, பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களுக்கும் இதே நிலைதான்.

சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவை விட்டு வெளியேறினால், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. நமக்கும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று "கனவு காணலாம் வாருங்கள்" என்று ஊக்கப்படுத்த கலாம்கள் இருக்கிறார்கள், அந்தப் பெருமையில் இன்னொரு சுதந்திர நாள் வந்து போகப் போகிறது.

சென்ற ஆண்டு எழுதியது இங்கே...

13 ஆகஸ்ட், 2009

சிங்கை செந்தில் நாதன் !

ஒரு முறை பார்த்தும், பெயரை வைத்து முகத்தை கற்பனை பண்ண முடியாமல் போகும் போது 'சந்திப்புக்கு அல்வா கொண்டுவருவாரே... அவர் தான் சிங்கை நாதன்' என்று சொன்னால் சட்டென்று சிங்கைப் பதிவர்கள் அவரின் முகத்தை நினைவு படுத்திக் கொள்வார்கள், அவர் தான் சிங்கை நாதன். அவர் பதிவு எதையும் எழுதுவதில்லை என்று சொல்லி இருந்தார். 'நீங்க எப்போது பதிவு எழுதுவிங்க ?' கேட்டேன். 'நீங்கள் பலரும் எழுதுறிங்க அதை படித்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துகிறேன்... எப்போதாவது எழுத நினைத்தால் எழுத முயற்சிக்கிறேன்' என்று சொல்லுவார்.

"எழுத்தின் மூலம் நாம புகழ்பெற வேண்டும் என்று நினைப்பதைவிட அதன் மூலம் நம் தமிழ் சமூகத்துக்கு எதாவது செய்யனும்...அதுதான் நம் எழுத்தின் பயன், என்னால் எழுத முடியா விட்டாலும் எழுதும் நண்பர்களை பாராட்டுகிறேன்...எல்லோருமே எழுதனும் என்று நினைத்தால் எழுதுவதையெல்லாம் படிக்கிறது யாரு...அதைத் தான் நான் செய்கிறேன்' என்று அறிவுபூர்வமாகவும் நகைச்சுவையாகவும் குறிப்பிடுவார்.

அல்வாக்களில் என்ன என்ன வகை இருக்கிறதோ ஒவ்வொன்றாக ஒவ்வொரு பதிவர் சந்திப்புக்கும் எடுத்துவருவார். யாரையும் மனம் புண்படும் வகையில் பேசியதே கிடையாது. சிங்கை அங்க்மோகியூவில் சற்று உயரமான சமவெளியில் பதிவர் சந்திப்பு வைத்த போது, மேலே ஏறிச் செல்லத் தயங்கினார். ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தும்... அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி அனுதாபம் தேட முயற்சிக்கவில்லை. எப்போதும் பதிவர் சந்திப்பு என்றால் முதல் ஆளாக வந்து நிற்பவர் கடந்த இருமுறை பதிவர் சந்திப்பின் போது முன்கூட்டியே வரச் சொல்லி அழைக்க...அவரது செல்பேசி மணி ஒலித்துக் கொண்டு இருந்தது எடுக்கவே இல்லை. சென்றவாரம் தான் நண்பர் குழலி வழியாக அவர் மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கிறார் என்கிற தகவல் தெரிய வந்தது. "என் பிரச்சனை என்னோடு போகட்டும், இப்போதைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கிறேன்...யாரும் வந்து பார்க்க வேண்டாம்....வந்தால் என்னால் பேசுவது கூட இயலாமல் இருக்கிறது...வேற எதாவது என்றால் சொல்கிறேன்" என்று குழலியிடம் சொல்லி இருக்கிறார். மிகவும் தயக்கத்திற்கு பிறகே குழலி இந்த தகவலை சென்ற சென்றவாரம் வெள்ளிக்கிழமை மணற்கேணி தொடர்பான குறும் சந்திப்பின் போது தெரிவித்து இருந்தார்.

அதன் பிறகு சனிக்கிழமை நான் குறுந்தகவல் அனுப்பி, "வார்ட் நம்பர் சொல்லுங்க...உங்களைப் பார்க்கனும்" என்று தகவல் அனுப்பினேன். "இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிடுவேன்...இப்போதைக்கு மருத்துவ மனைக்கெல்லாம் வரவேண்டாம்...எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்று பதில் அனுப்பி இருந்தார்.

இரண்டொரு நாளில் என்ன ஆனதென்றே தெரியவில்லை. பதிவர் நண்பர் செந்திலுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய வேண்டும்... இந்தியாவிற்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அவர் உடல் நிலை இல்லை...சிங்கையிலேயே விரைவாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். என்று மருத்துவர்களின் அவர் மனைவி திருமதி சாந்தி செந்தில் நாதனிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சைக்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகிறது, பதிவர் நண்பர்கள் இயன்றதை அளித்தும், நீங்கள் அறிந்த சேவை அமைப்புகளிடம் பேசி பொருளுதவி பெற்றுத் தந்து நம்மில் ஒருவரான நண்பர் செந்திலின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

உதவி எவ்வாறு செய்வது பற்றிய விவரங்கள் கேவிஆர் பதிவில் இருக்கிறது.
பதிவர் நர்சிம் குறிப்பிடும் 1000ல் ஒருவராக உங்களைப் பதிந்து கொள்ளுங்கள்.

12 ஆகஸ்ட், 2009

கலவை 12/ஆகஸ்ட்/2009 !

ஸ்வைன் ப்ளூ : விரைவாக பரவுவதற்கு மத்திய மாநில அரசுகள் மெத்தனம் தான் என்று நினைக்கிறேன். சென்ற மாதம் சென்னை விமானத்தில் இறங்கிய போது 'ஸ்வைன் ப்ளு சோதனை' நடத்துவதற்காக குடிநுழைவுக்கு முன்பு சிலர் உட்கார்ந்திருந்தனர். ஒரு அட்டவணையைக் கொடுத்து அதில் பெயர் விவரங்களை எழுதச் சொல்லி கடந்த 7 நாட்களில் சென்று வந்த நாடுகளின் பெயரைக் குறிப்பிடச் சொல்லியும் பயணம் செய்த இருக்கை எண்ணைக் குறிப்பிடும் படியும் இருந்தது, அதை நிரப்பிவிட்டுக் கொடுக்கும் பொழுது, உங்களுக்கு பீவர், இருமல் எதும் இருக்கிறதா ? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு வாங்கி வைத்துக் கொண்டார்கள், உடல் வெப்பசோதனைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை, வெளி நாடுகளில் கேமரா வழியாக வெப்ப நிலையை அறிந்து குறிப்பெடுத்துக் கொள்ளும் முறை இந்திய விமான நிலையத்தில் இல்லை, ஸ்வைன் ப்ளூ கிருமி தொற்றிய 7 நாட்களுக்குள்ளோ பிறகோ தான் அது உடலில் பரவி உடல் நலிவை (பாதிப்பு) ஏற்படுத்தும் என்றாலும், உடலைத் தொடாமல் ஏற்கனவே நலிவுற்றவரின், அல்லது காய்சல் உள்ளவரை ஓரளவுக்கு கண்டிபிடிக்கும் ஆள் தொடாத சோதனை முறைகள் இருக்கின்றன. நம்ம ஊரில் செயல்படுத்துவதில் என்ன சிக்கலோ.... அந்த அளவு செலவு செய்ய அரசாங்கத்திடம் பண வசதி இல்லை என்கிற காரணம் சப்பையானது, ஏனெனில் மாயவதி சிலை வைக்க 500 கோடிகள் வரை அரசாங்கப் பணம் செலவு ஆகுகிறது. மாநிலத்துக்கு ஒன்று வீதம் ஒரு 25 அமைச்சர்களுக்கு ஸ்வைன் ப்ளூ தொற்றி இருந்தால்அரசு விரைந்து நடவெடிக்கை எடுத்திருக்குமோ ?

***

கடவுளும் வால்பையனும்:
கடவுள் நம்பிக்கையை ஒழித்துவிட்டால் சாதி / மத பேதங்களை ஒழிக்கலாம் என்று நம்ம வால்பையன் சொல்கிறார். எனக்கு அந்த நம்பிக்கை இல்லை, சாதிக்கொரு கடவுள், மதத்துக்கு ஒரு கடவுள் என்று இருப்பதை ஒழித்தால் போதும், ஒரு மனிதனுக்கு கடைசி நம்பிக்கை என தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கடவுள் நம்பிக்கை மோசமானதாக நான் கருதுவதில்லை, கடவுள் நம்பிக்கையை வைத்து நடத்தும் பிழைப்பு வாதம், பித்தலாட்டம் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை முறியடித்தாலே போதும், பொதுக்கடவுளாக எதைக் காட்டுவது என்பதில் தான் சிக்கலே. அப்படி ஒரு பொதுக்கடவுளை நம்புவர்கள் ஆன்மிகவாதிகள் அதை நம்பாதவர்கள் மதவாதிகள். எதுவுமே வேண்டாம் ஆளை விடுங்கடாசாமிங்கிறவங்க நாத்திகர்கள். மதவாதிகளையும், போலி சாமியார்களையும் ஒழித்துக் கட்ட ஆன்மிகவாதிகளுக்கு நாத்திகர்களின் உதவி என்றுமே தேவையாக இருக்கும் :)

***

பதிவர் வட்டம் : ஆதிமூல கிருஷ்ணன் என்கிற தாமிராவின் தங்கமணி பற்றிய பயோடேட்டா நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது, இந்த வாரம் பயோடேட்டா சீசனா ? அண்ணாச்சி வடகரை வேலன் தொடர்ந்து இருக்கிறார். திரையுலகம் தவிர்த்த பயோடேட்டாக்கள் ரசிக்கும் படியாக இருக்கும். எனக்கும் ஸ்வாமி ஓம்காரை கலாய்த்து பயோடேட்டா எழுத விருப்பம் தான். இப்போதைக்கு நேரமில்லை யாரும் முந்திடக் கூடாதுங்கிறதுக்காக முன்பதிவு செய்து வைத்துவிடுகிறேன் :)


****

நட்பு வட்டம் : பதிவர் நண்பர்கள் அக்பர் (ஸ்நேகிதன்) மற்றும் ஸ்டார்ஜன் (நிலா அது வானத்து மேலே) நேற்று அலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். இருவரும் நெல்லைக்காரர்கள், ஒன்றாகப் படித்தவர்கள், வளைகுடாவில் ஒன்றாகவே ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள், ஒன்றாக தங்கி இருக்கிறார்கள், ஒரு விதத்தில் இருவரும் உறவினர்கள். நெருக்கமான நண்பர்களுடன் சேர்ந்தே வசிப்பது, வேலை பார்ப்பதற்கு கொடுப்பினை இருக்க வேண்டும். அக்பர் அடுத்த வாரம் தொடங்கி இரு மாதங்கள் தமிழகத்தில் இருப்பாராம். முரளி கண்ணனுக்கு என்ன ஆச்சு ? கொஞ்ச நாளாக பதிவுலகில் காணும், தெரிந்தவர்கள் (அக்பரிடம்) சொல்லுங்கள், அலைபேசியில் அலைத்தால் ரிங்குது ஆனால் எடுக்கலை(யாம்).

புகை மூட்டம் : இந்தோனிசியா ஜாவா மற்றும் சுமத்திரா தீவு, கிழக்கு மலேசியா ஜாவா சரபோவா தீவுகளில் எரியும் காட்டுத் தீ காரணமாக சிங்கப்பூர் வானிலையில் புகை மூட்டம் காணப்படுகிறது, சுற்றுச் சூழல் மனிதனால் கெடுவது போலவே அதுவே தன்னை கெடுத்துக் கொள்வதாக காட்டுத் தீ அவ்வபோது ஏற்படுகிறது. யாரை நொந்து கொள்வது ? உலக வெப்பம் மிகுதியாகி துருவ பனிமலைகள் உருக கடல் மட்டம் உயர்கிறது, 50 ஆண்டுகளுக்காவது உலகம் த(ஆ)ங்குமா ?

****

சிரிப்புத் துணுக்கு :

வீடியோ கடைக்காரர் வாடிக்கையாளரிடம் : புதுசா வந்திருக்குன்னு நீங்க கேள்விப் பட்ட ஸ்வைன் "ப்ளூ" சிடியெல்லாம் எங்கேயும் கிடைக்காது சார், பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் முகமூடி விற்கிறாங்க அதை வாங்கிப் போட்டுக் கொண்டு போங்க, இல்லாட்டி அடுத்த வாரத்திற்கு பிறகு உங்களை வீடியோவில் பார்த்தால் தான் உண்டு.

11 ஆகஸ்ட், 2009

செருப்பு சிந்தனைகள் !

விளக்கு மாற்றுச் சிந்தனைகள், மயிர் பற்றிய சிந்தனைகளை முன்பு எழுதி இருந்தேன். செருப்பு பற்றி கொஞ்சம் பார்ப்போம். ஆடைகள் உடலை மறைக்க என்றாலும் உடலின் தோற்றத்தை மாற்றிக் காட்டுவதிலும் முதன்மையாக இருப்பதால், முன்பெல்லாம் ஆடைகள் பணக்காரவர்கத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகத்தான் இருந்தது. ஏழைக்கு கோவணமும், நூல் சேலையும் என்பதே உடை அடையாளங்களாக இருந்தன. அதனால் தான் பணக்கார, உயர்சாதி வர்கம் பிற ஆண்கள் மேல் துண்டு அணிவதைக் கூட சகித்துக் கொள்ளாமல் எதிர்படும் போது அதை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு கூழைக் கும்பிடு போடப் பணித்தது.

பெண்களுக்கு ஜாக்கெட் எனப்படும் ரவிக்கை அணியக் கூடத் தடை இருந்ததாம், வைக்கம் போராட்டத்துக்கு முன்பு வரை தாழ்ந்த சாதி(க்கு தள்ளப்பட்ட சமூகத்து) பெண்களுக்கு ரவிக்கை அணியும் உரிமையை உயர்வர்க்கம் மறுத்தே வந்திருக்கிறது. 400 ஆண்டுகளுக்கு முன்பு "இவன் தாழ்ந்த சாதிக்காரன்" என்று நெற்றியில் பச்சை குத்திவிடுவதும் கூட நடைமுறையில் இருந்திருக்கிறது. சைவ சமயத்தினர் மேலோங்கி இருந்த காலத்தில் மத அடையாளமாக முதுகில் சூளாயுதத்தால் சூடு போடுவதும் வழக்கமாம், அப்பர் முதுகில் அப்படிப்பட்ட சூளாயுதத் தழும்புகள் இருந்ததாகப் பாடல்கள் உண்டு. ஒருவரின் வெளிப்புற அடையாளம் அவரை எதிர் கொள்ளும் நபர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் முனைந்தே அத்தகைய அடையாளங்கள் வைக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்தது. முன்பெல்லாம் வெளிப்புறமாக குலப் பெருமைக்காகப் போடப்பட்ட பூணூலை தற்போது வெளியில் தெரிந்தால் சங்கடம் என்ற நிலைக்கு மறைத்து மறைத்து பாதுகாக்க வேண்டி இருக்கும் நிலைக்குச் சென்றிருப்பது சமூகத்தில் ஏற்பட்ட பெரும் மாறுதல் என்று சொன்னால் மிகை அல்ல. வாழ்க பெரியார் புகழ்.

செருப்புகள் கூடப் பணக்கார உயர்சாதிச் சின்னமாகத்தான் இருந்திருக்கின்றன. தாழ்த்தப்பட்ட குடியானவர்கள் செருப்பணிந்து பொதுவில் நடக்க தடைகள் இருந்திருக்கின்றன. அப்படியும் அணிந்துவருபவர்கள் உயர்சாதிககரர்கள் எதிரே வரும் பொழுது அதைக் கழட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு, அவர்கள் கடந்த பிறகே போட்டுக் கொள்ள வேண்டும். இந்த காலச் செருப்புகள் போல் இல்லாமல் அந்த காலச் செருப்புகள் மிதி அடிகள், பாத அடிகள் எனப்படும் மரக்கட்டைகள் ஆகும், பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கு பிடிப்பாக ஒரு கட்டை இருக்கும் அதன் பிடிப்பில் நடந்து செல்வார்கள். ஒருவர் வீட்டினுள் இருக்கிறாரா இல்லையா என்பதை வீட்டிற்கு வெளியே மிதி அடிகள் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தே சொல்லிவிடும் ஒரு குறிப்பாகவும் செருப்புகள் இருந்திருக்கின்றன. செருப்புகள் தாழ்வாக நினைக்கப்படுவதற்கு அதில் கண்டதும் ஒட்டி இருக்கும் என்பதைவிட வருண வே(பே)த மனுஸ்மிருதி படி பிரம்மனின் கால் பகுதி சூத்திரத் தன்மையுடையது என்கிற கருத்தால் காலில் அணியப்படும் செருப்பு தாழ்வாக நினைக்கும் படி அமைந்திருப்பதற்கு வேறொரு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. உடலை வறுத்திக் கொள்ளும் வேண்டுதல்களில் நடை பயண (பாத யாத்ரை) வேண்டுதலும் உண்டு, அப்படிச் செல்லுபவர்களில் பலர் மேலும் உடலை வறுத்திக் கொள்ளும் வேண்டுதலாக செருப்பு அணியாமல் செல்லுவார்கள். சரியான உறை செருப்பு (ஷூ) போடவில்லை என்கிற காரணத்தினால் ஒலிம்பிக் போட்டியில் கலந்த கொள்ள மறுக்கப்பட்டு இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனராம். அவர்களுக்குத் தெரியுமா ? சித்திரை கத்திரி வெயிலில் கூட நம்ம ஆட்கள் தார் சாலையில் செருப்பே இல்லாமல் நடக்கக் கூடியவர்கள் என்று :) சர்க்கரை நோயாளிகள் செருப்பு அணியாமல் எங்கும் வெளியே செல்வது கால்களுக்கு மிகவும் கெடுதலான ஒன்று, அது போன்றே சர்க்கரை நோயாளிகல் தீமிதி போன்றவற்றிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றன.

ஒருவரின் செருப்பை பிறர் அணியக் கூடாது என்றாலும் மூத்தோர் செருப்புகளுக்கு இளையோரிடம் நல்ல மரியாதை இருந்திருக்கிறது என்பதை இராமயணத்தில் பரதன் இராமனின் செருப்பை (பாது'கைகள்') வைத்தே 14 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறான் என்பதில் இருந்தே தெரிகிறது. செருப்புக்கும் பெரியாருக்கும் தொடர்புகள் நிரம்ப உண்டு என்றாலும் தன்னை நோக்கி வலது கால் செருப்பு வீசியவன் இடது கால்செருப்பு வீசுவான் என்று காத்திருந்து பெரியார் அதனை எடுத்துப் பயனபடுத்தினார் என்ற செய்தி செருப்பை பற்றிய வியப்பு.

மற்றபடி செருப்பு வகைகளைப் பற்றி பலருக்கும் தெரியும் என்பதால் செருப்பு புராணத்தை இத்தோடு முடிக்கிறேன்.

தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் செருப்பிலும் இருப்பானா ? பரப்பிரம்மே எங்கும் நிறைந்திருக்கிறது என்போர் "ஆம்" என்பார்கள்.

என்னைக் கேட்டால் "இல்லை" என்றே சொல்லுவேன்.

10 ஆகஸ்ட், 2009

மனித உடல் நோய்களும், குணப்படுத்தும் சாமியார்களும் !

நமக்குக் கிடைக்கும் உணவு, மூச்சுக் காற்று, தண்ணீர் இவற்றில் இருக்கும் நச்சுத் தன்மையே உடலில் நோய்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைகிறது. அப்படி எதுவும் இல்லை என்றால் பரம்பரைத் தன்மையாக உடலில் அதன் தொடர்புடைய மரபியல் நோய்கள் தோன்றும், அதுவும் இல்லை என்றால் விபத்து போன்றவற்றால் உடலில் காயங்கள் ஏற்படும், காயங்கள் நோய்கள் இல்லை என்றாலும் அதனை சமச்சீர் செய்யும் முயற்சியில் சுரப்பிகள் மிகுதியாக வேலை செய்ய அதன் காரணமான பக்க விளைவுகளாலும், எடுத்துக் கொள்ளும் மருந்து காரணமாக உடலில் நோய்கள் தோன்றும். நோய்களில் தற்காலிக நோய், தொடரும் நோய்கள், குணப்படுத்த முடியாத நோய்கள் எனப் பலவகை உண்டு. தற்காலிக நோய்களான காய்சல், சளி, வயிற்றுப் போக்கு, தலைவலி ஆகியவை சரியான மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சரி ஆகிவிடும். குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து வாழ்நாளை நீட்டிக் கொள்ளலாம். உடல் நோய்கள் குறித்து எனது அறிவுக்கு எட்டிய எளிய விளக்கம் தான் இவை. எந்த ஒரு பெரிய நோய்களும் குணம் ஆகுவதற்கு மனம் முழுதாக ஒத்துழைக்க வேண்டும், எனக்கு விரைவில் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை நோய்பற்றி மிகுதியாக சிந்திக்காமல் இருப்பதன் மூலம், மனம் இலகுவாக இருப்பதால் இதய இரத்த ஒட்டம் சீராக இருக்கும், அதன் வழியாக நோய்கள் விரைவில் குணமடையும். வலி என்பது நோயின் பக்க விளைவு என்பதைவிட வலி என்பது நோய் இருப்பதை மூளைக்கு உணர்த்தும் ஒரு இயற்கை ஏற்பாடு என்பதாகப் புரிந்து கொண்டால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியும். வலி மட்டும் இல்லை என்றால் நோய் கண்டதே நம்மால் உணர முடியாது, மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் குறைந்துவிடும். உடல் சிதைவுக்கு இட்டுச் சென்றுவிடும். நோய் கண்ட உடலுக்கு வலிகள் மிக மிக தேவையான ஒன்று.

*****

மனித உடல் உறுப்புகளால் ஆனது என்பது போலவே அவ்வுறுப்புகள் இரத்தமும் சதையுமாக ஆனவை என்பது உண்மை. உடலியல் சூழல், விபத்துக் காரணமாக உடல் நோயைப் பற்றுவதும் முழுக்க முழுக்க இயற்கையானது. காற்றில் மாசுக்கள் சேரும் போது, தண்ணீரில் அசுத்தம் சேரும் போது அவை தூய்மை கேடு அடைவதைப் போன்றது தான் உடலில் ஏற்படும் நோய்கள். இவற்றிற்கான தற்காலிக அல்லது முடிவான தீர்வு என்பது சரியான மருத்துவரைப் பார்த்து அல்லது சரியான மருந்து பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வது மட்டுமே. ஆனால் நோய்களை சாமியார்கள் குணப்படுத்துவதாக பலரும் நம்புகிறார்கள். நோய்களைக் குணப்படுத்தும் சாமியார்களுக்கும், விடுதி அறை மருத்துவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வேறுபாடும் அல்ல, இருவருமே அற்புதங்கள் நிகழ்த்துவதாகக் கூறி நோய் கண்டவர்களின் பலவீனங்களை பணம் ஆக்குபவர்கள் தான். நாம் அறிந்தவரையில் எந்த ஒரு சாமியாரும் மூப்பு, பிணி, மரணம் இன்றி மறைந்தது கிடையாது. ஒரு காலத்தில் சித்தர்கள் எனப்பட்டோர் மூலிகை மருத்துவங்களில் சிறந்தவர்களாக இருந்தனர், அவர்கள் பல மறைச் (சங்கேத) சொற்களால் பாடல்களை எழுதி வைத்துள்ளார்கள், அவர்கள் ஆன்மீக வழியிலும் சிறந்தவர்களாக இருந்தனர். ஆனால் இன்று நோய்களை குணப்படுத்துவதாகச் சொல்லும் சாமியார்களுக்கு சித்த மருத்துவமும் தெரியாது ஆன்மீகமும் தெரியாது, அதனால் தான் தங்களின் தோற்றம் தங்களை சாமியார்கள் என்று நம்பும் படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள், அவர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்று சொல்வதற்காக கையாட்களை வைத்துக் கொண்டு சாமியார் அற்புதம் நிகழ்த்துபவராக கதைகளைப் பரப்புவர்களை வைத்திருக்கிறார்கள்.

நோய்கண்டவர்கள் அனைவருமே குணம் அடையாமல் இருப்பது இல்லை, அப்படி குணம் அடைபவர்களில் சாமியார்களை நம்புவர்களும் உண்டு, ஆனால் அந்த நம்பிக்கைதான் அவர்களை குணப்படுத்துவதாக நம்ப வைக்கப்படுவதும், அவர்களே அவ்வாறு நம்புவதும், அந்த அதீத உணர்ச்சியின் வெளிப்பாடுகளாக 'சாமியாரின் அற்புதம்', 'அவதாரத்தின் அற்புதங்கள்' குறித்த நூல்களில் இவர்களது சாமியார் துதிகளையும் எழுதிவிடுவார்கள், அதாவது எந்த ஒரு மருத்துவரும் கைவிடப்பட்ட நிலையில் (அப்படி எத்தனை மருத்துவரைப் பார்த்தார்கள் என்று தெரியாது) சாமியார் 'ஓவர் நைட்டில்' குணப்படுத்தியதாக நூல்களில் எழுதுவதும், எதிர்பட்டோரிடமெல்லாம் அதே தகவலைச் சொல்வதன் மூலம் தொற்று நோயைவிட சாமியாரின் புகழ் விரைவாகப் பரவிவிடும்.

மிகச் சிறந்த ஆன்மிகவாதிகள் என்று போற்றப்படுபவர்கள் கூட தீர்க்க முடியாத நோய்கண்டே இறந்திருக்கிறார்கள், இராம கிருஷ்ண பரம ஹம்சருக்கு புற்றுநோய், அவர் முதியவர் என்றாலும் இறக்கும் போது மிகவும் தள்ளாடக் கூடிய முதியவர் அல்ல, விவேகநந்தர் இறக்கும் போது அவருக்கு வயது 40க்கும் கீழ்தான். அவருக்கும் இரத்தப் புற்றுநோய், மூல நோய் ஆகியவை இருந்தன. மகான் எனச் சொல்லப்பட்ட புத்தரும் விச உணவை உண்டதனால் ஏற்பட்ட விசம் பரவலின் மூலம் உயிர் துறந்தார். கிருபானந்த வாரியார் லண்டனில் இருந்து திரும்பும் போது விமானப் பயணத்திலேயே மாரடைப்பால் மரணம் அடைந்தார். இப்படியாக எந்த ஒரு சாமியார்களும், ஆன்மிகவாதிகளும் கடுமையான நோய் இல்லாமல் இறந்ததோ அல்லது வாழ்நாள் முழுவதும் நோய் அண்டாது வாழ்ந்தோ அல்லது மரணம் என்பதை முற்றிலும் தவிர்த்தவர்களாக இருந்ததே கிடையாது.

முடவர்களை நடக்கவைப்போம், ஊமைகளைப் பேசவைப்போம் என்கிற கிறித்துவரகளில் ஒரு பிரிவினரைப் போல் இந்து மத சாமியார்களில் பலர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பலரையும் குணப்படுத்துகிறார்களாம், அடிக்கடி சர்சைக்கு வரும் எழுத்தாளர் மூன்று ஆண்டுக்கு முன்பு வரை நாத்திகராக இருந்தவர் ஒரே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டதும் ஒரு சாமியாரின் பக்தர் ஆகிவிட்டார். சாமியாரின் புகைப்படத்தில் இருந்து திருநீர் கொட்டுவதாக எல்லோரிடமும் சொல்லி வருகிறாராம். ஆக ஒருவரின் மரண பயமே சாமியார்களின் ஆசிர்வாததிற்கும், புகழ் பரவலுக்கும் மூல தனமாகிறது.

***

மனித உடல் உலோகங்களால் ஆனது கிடையாது, நோயும் வலியும், நோய் முற்றினால் மரணமும் இயற்கையானது, மருந்துகள் மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம், குணப்படுத்தலாம், மரணத்தையும் தவிர்கலாம், ஆனால் இதில் எதையுமே சாமியார்களின் மீது இருக்கும் நம்பிகையால், சாமியார்களின் ஆசிர்வாதங்களினால் குணம் அடைவதில்லை. புற்று நோயை 'ஒவர் நைட்டில்' குணப்படுத்துகிறார் என்று அல்லக்கைகளால், அறியாமையால் உளரும் அப்பாவி பக்தர்களால் கிளப்பிவிடப் படுவதிலெதிலும் உண்மைகள் என்பது மருந்துக் கூடக் கிடையாது.

9 ஆகஸ்ட், 2009

இது எங்க ஊர் அரிசி உப்புமா !

பேச்சிலர் சமையலில் எப்போதும் சிறப்பிடம் பெற்றிருப்பதில் உப்புமாவுக்கே முதல் இடம், சென்னையில் பேச்சிலராக இருந்த போது அடிக்கடி உப்புமா செய்து சாப்பிட்டத்தன் விளைவாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு உப்புமா என்றாலே உவ்வே...ஆக இருந்தது. இப்பவும் கூட வீட்டில் நீண்ட நாள் தங்கும் திட்டத்துடன் வரும் உறவினர்களை சத்தமில்லாது / சண்டை
இல்லாது அனுப்ப உப்புமா செய்து போடுவது எழுதப்படாத உத்தி :)

பெங்களூரில் காரபாத் என்ற பெயரில் கிடைக்கும் மஞ்சள் நிற உப்புமா
தேங்காய் சட்டினியுடன் உண்ட நினைவுகளிலும் என்றும் அதன் சுவையும் நினைவில் நிற்கும்.  இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என சுழற்சியில் தின்றுவிட்டு அதன் திகட்டல் காரணமாக மாறுபட்ட உணவாக ஒரு காலை / இரவு சிற்றுணவு வகையில் என்றாவது ஒரு நாள் ரவா உப்புமா அல்லது அரிசி உப்புமா செய்து சுவைப்பதுவழக்கம். கன்னடத்தில் உப்புமாவை உப்பிட்டு என்பார்கள், உவர்ப்பு என்கிற சுவைச் சொல்லின் மறுவலே உப்பு, திராவிட மொழிகள் அனைத்திலும் 'உப்பு' என்ற ஒற்றைச் சொல்லே உப்பைக் குறிக்கும் சொல்லாகும். உப்புமா என்ற சொல்வழக்கின்பொருள், மூலம் பற்றி சரியாகத் தெரியவில்லை. உப்பு சுவையை முதன்மையாகக் கொண்டு செய்யப்படுவதால் இந்த உணவுக்கு உப்புமா என்று வந்திருக்கலாம் என்பதைத் தவிர்த்து மற்றேதும் முடிவு செய்ய முடியவில்லை. உப்புமாவில் சேர்க்கப்படும் பொருள்களுக்கு ஏற்ற அதன் பெயர்களும் மாறுகிறது, காய்கறிகள் சேர்த்து செய்தால் அது கிச்சடி என்றும் சொல்லப்படுகிறது


அரிசி உப்புமா செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள்
* பச்சை அரிசி 1/2 லிட்டர்
* பெரிய வெங்காயம் ஒன்று

* தக்காளி பெரிதாக ஒன்று

* இஞ்சி சிறிதளவு

* இரண்டு பச்சை மிளகாய்
* கறிவேப்பில்லை சிறிதளவு

* வெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணை சிறிதளவு

* கடுகு மற்றும் பெரும்சீரகம் சிறிதளவு

* இரண்டு துண்டு பட்டை அல்லது கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலை இரண்டு

* தோல் நீக்கிய உருளை கிழங்கு ஒன்று

* சிறிய அளவு கேரட் ஒன்று

* இரண்டரை லிட்டர் தண்ணீர்

* தேவையான அளவு உப்பு

* தேவையானல் கடலைப் பருப்பு சிறிதளவு / அல்லது ஊரவைத்த அல்லது பச்சை பட்டாணி

* நிறம் தேவை என்றால் தேவையான அளவு மஞ்சள் பொடி

பச்சரிசியை5 நிமிடம் வாணலியில் இட்டு நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைக்க வேண்டும், வெங்காயத்தையும் பொடிப் பொடியாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும், தக்காளியை சிறு சிறு துண்டங்களாக வெட்டிக் கொண்டு, இஞ்சியைபொடிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். உருளை கிழங்கையும், கேரட்டையும் எடுத்து உண்பதற்கு ஏற்ற சிறிய அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

வாணலி சூடாகியதும் எண்ணையை ஊற்றி நன்றாக சூடானதும் கடுகு,பெருஞ்சீரகம் போட்டு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, பட்டை மற்றும் பிரிஞ்சிஇலைகளை சேர்த்து வதக்கிவிட்டு கருகும் முன் வெட்டி வைத்த இஞ்சி பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு கரிவேப்பில்லையுடன், வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிவிட்டு, தக்காளி மற்றும் உருளைகிழங்கு, கேரட் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு இரண்டரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு வறுத்து வைத்திருந்த பச்சை அரிசியை அதில் கொட்டி கிளறிவிட்டு, உப்பைச் சேர்த்து, 8 - 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு திறந்து நன்றாக கிளறி, தண்ணீர் வற்றி இருந்தால் 1/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டுவிட்டு, மிதமான வெப்பத்தில் அடுத்து 5 நிமிடம் வைத்து விட்டு இடையிடையே கிளறிவிட வேண்டும், அரிசி நன்றாக வெந்து தனித்தனியாக பிரிந்து இருக்கும் போது இரண்டு நிமிடம் அப்படியே மூடி வைத்துவிட்டு அதன் பிறகு எடுத்து பரிமாறலாம்.

மேலே சொன்ன பொருள்களில் அளவு மூவருக்கு தேவையான அளவாகும். இந்த அரிசி உப்புமாவுடன், தக்காளிச் சட்டினி அல்லது (கார) அப்பளம் சேர்த்து உண்ண திகட்டமலும் சுவை கூடுதலாகவும் இருக்கும்.மின் அஞ்சல் வழியாக போட்ட பதிவு, பக்கம் ஒழுங்கில்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம்.

எனக்கும் வருத்தமே ! - உரையாடல் சிறுகதைப் போட்டி !

உரையாடல் சிறுகதைப் போட்டியில் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள் கலந்து கொண்டு 20 தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. முடிவுகளைப் பார்த்துவிட்டு புகைச்சல், , நமைச்சல், குடைச்சல் எல்லா 'சல்'லும் ஏற்பட்டு இருக்கிறது. போட்டிகளின் முடிவின் போது விமர்சனங்கள் எழும் என்றாலும் இந்த முறை பலரும் அது பற்றிப் பேசுகிறார்கள்.

"நாம எழுதுகிற எழுத்து நமக்கு உயர்வாக தெரிவது போலவே எல்லோருக்கும் தெரியவேண்டும்" என்கிற மனநிலையின் வெளிப்பாடுகளில் ஒன்றாகத்தான் இவ்விமர்சனங்களின் ஒரு பகுதியைப் பார்க்கிறேன்.

போட்டியின் விதிமுறைகளை ஏற்று போட்டிகளில் பங்கு பெறும் பொழுது, போட்டி முடிவை விமர்சிக்கலாம் ஆனால் கடுமையான விமர்சனங்கள் தேவையற்றதாகத்தான் கருதுகிறேன். போட்டியின் நடுவர்களுக்கென்றே தனிப்பார்வை உண்டு. அவர்களது தனிப்பட்ட முடிவில் எது சிறந்த கதை என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை போட்டி நடத்துபவர்கள் அவர்களுக்கு அளிக்கிறார்கள். சில போட்டிகளில் நடுவர்களால் முடிவு செய்ய முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும் பொழுது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல்பரிசுகள் கொடுப்பதையெல்லாம் பார்த்து இருக்கிறோம்.
ஒரு சிலர் மட்டும் போட்டியில் கலந்து கொள்பவர்களின் சாதி, மதம் என்னவென்றெல்லாம் பார்த்து வெற்றியாளர்களை அறிவிக்கும் போது நடுநிலைமை தவறி நடந்து கொள்வார்கள், தொலைகாட்சி போன்ற நிகழ்ச்சிகளில் இது போன்ற கூத்துகள் நிறைய நடைபெறும் என்பதால், பல போட்டி நிகழ்ச்சிகளில் தொலைக் காட்சிகளில் குறிப்பாக இசை போட்டிகளில் வெற்றி பெறுபவர்களைப் பற்றி நிறைய திறமை உடையவர்கள் என்று நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஆனால் பதிவர்களால் நடத்தபெற்ற உரையாடல் சிறுகதைப் போட்டியில் அப்படிப் பட்ட ஒரு நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கதைகளில் மொக்கைக் கதைகள் எதுவும் இருந்தது போல் தெரியவில்லை. அதில் வெற்றி பெற்ற சிலகதைகளை நானும் படித்திருக்கிறேன் என்பதால் என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும், போட்டிக் குழுவினரான ஜ்யோராம் சுந்தரும், பைத்தியக்காரனும் தரமற்ற கதைகளை தேர்ந்தெடுத்திருப்பது போல் தெரியவில்லை. வெற்றிப் பெற்ற சிறுகதைகளில் நம் கதை இல்லை என்பதற்காக விமர்சனம் செய்பவர்கள் நல்லக் கதையாக எழுதி இருந்ததாக நினைத்தால் சிறு இதழ்களுக்கும், வார இதழ்களுக்கும் அனுப்பலாம்,

நீங்களும் ஒரு நான்கு பேர் கொண்ட போட்டி முடிவு செய்யும் நடுவர் குழுவில் இருந்தால் உங்களைப் போலத்தான் மற்ற மூவரும் முடிவு செய்வார்கள் என்று நினைப்பது தசரியாகுமா? அனைவரும் ஒன்று போல் சிந்திக்கக் கூடியவர்கள் என்றால் ஒரு போட்டிக்கு நடுவராக நான்கு பேர் தேவை இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் தேவையற்ற சல சலப்புகள் குறையும்.

போட்டிகளுக்காக நேரம் ஒதுக்கி கலந்து கொள்வது என்பது வேடிக்கைப் பார்ப்பதைவிட சிறப்பானது, அதில் பரிசு பெற்றால் மகிழ்ச்சி அடையளாம், இல்லை என்றால் கலந்து கொண்டோம் என்று மன நிறைவு அடையலாம்.
பெரும்பாலும் போட்டிகளில் ஜாம்பவான்கள் கலந்து கொள்வதில்லை ஏனெனில் கலந்து கொண்டு பரிசு கிடைக்காவிடில் எழுத்து ஏளனமாகப் பார்க்கப் படுமோ என்ற அச்சம், தாழ்வுணர்வு ஏற்படும். நமக்கெல்லாம் அப்படிப்பட்ட மனக்குறை இல்லை :)

வெற்றிக்கும் தோல்விக்கும் பொதுவானது ஆடுகளம். வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்காமல் அதில் போட்டியில் கலந்து கொண்டு களத்தில் நின்றோம் என்பதும் பெருமை தானே !

உரையாடல் சிறுகதைப் போட்டி நடத்தியவர்கள், மற்றும் போட்டியில் வென்றவர்கள், கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

7 ஆகஸ்ட், 2009

மீன்கொத்தி (சிறுகதை) !

"டாக்டர்.... மேடம்... சொன்ன இடத்தில் கையெழுத்துப் போடுங்க..." சுகாதரத்துறை இயக்குனரான பெண் மருத்துவரிடம் மிரட்டுவது போன்று சொல்லிக் கொண்டு இருந்தார் அமைச்சரின் பிஏ.

"சார்...நீங்க மிரட்டினாலும்.....எங்களுக்குன்னு சில புரோசீஜர்ஸ் இருக்கு, முறைப்படி டெண்டர் விட்டு தான் நாங்க மருந்து வாங்குறோம்..."

"இருக்கட்டம் மேடம்...இப்ப உங்களுக்கு வந்திருக்கிற டெண்டர் எல்லாமே அமைச்சரின் வெவ்வேறு மருந்து கம்பெணிகளின் கொட்டேசன்கள் தான் என்று உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், அதுல ஒரு கம்பெணிக்கு கொடுத்து இருக்கலாம், வந்திருப்பதில் ஒண்ணே ஒண்ணு புதுசா ஒரு கம்பெணி அனுப்பி இருப்பது, இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும், புதுக்கம்பெணி அமைச்சருக்கு போட்டியாக ஒருவன் ஆரம்பிச்சிருக்கான்.....அவனால அமைச்சருக்கு ஏற்கனவே 20 கோடி நட்டம்....அவனுக்கு கொடுத்தீர்கள் என்றால் அமைச்சர் கடுப்பாகிவிடுவார்"

"சார்.....உங்க கம்பெணிகளைவிட அந்த கம்பெணி குறைவாக கோட் பண்ணி இருக்காங்க...அவங்க மருந்துகளும் தரமானது......"

"மேடம் நீங்க தரத்தை பற்றியெல்லாம் பேசி தேவை இல்லாது ரிஸ்க் எடுக்கிறிங்க.....அமைச்சரை பகைச்சிக்காதிங்க.....அவ்வளவுதான் சொல்லிட்டேன்"

"சார்....எங்களுக்குத் தேவை நல்ல மருந்து......நான் உங்க கம்பெணிக்கு கொடுத்தால்....விவரம் தெரிந்து அந்தக் கம்பெனிக்காரங்க கோர்டுக்குப் போனாலும் எனக்கு பிரச்சனை தான்......என்னால உங்களுக்கு ஒத்துழைக்க முடியாது"

"மேடம் என்ன செய்விங்களோ......எனக்கு தெரியாது....நாளைக்கு டெண்டர் எங்களுக்கு கிடைச்சாகனும்"

"சாரி...மிஸ்டர்.....அடுத்த அடுத்த டெண்டர்களில் பார்க்கலாம்....."

"10 கோடி காண்ட்ரேக்ட்....அமைச்சர் எப்படியாவது அவருக்கு கிடைக்கனும் என்று சொல்லிவிட்டார்"

"திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காதிங்க.......எடத்தைக் காலிப்பண்ணுங்க .....இல்லாட்டி...."

அமைச்சரின் பிஏ.......அந்த மருத்துவ இயக்குனரை ஒரு முறை முறைத்துவிட்டு சென்றார்

***

மறுநாளுக்கு மறுநாள் அங்கே அமைச்சர் வீட்டில், பி.ஏ அமைச்சரிடம்,

"ஐயா.......நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன்......அவ.... அந்த அம்மா பயப்படுவது போல் தெரியல.... நமக்கு ஆர்டர் கிடைக்கல.....அந்த புதுக்கம்பெணிக்கு கிடைத்துவிட்டது... இனிமே ஒண்ணும் பண்ண முடியாது"

"எப்ப்டிய்யய எப்பிடிய்யா.....எம்மேல பயமில்லாமல் போச்சு...இரு அவளுக்கு ஆப்பு வைக்கிறேன்......நீ என்ன பண்ணுகிறே....அடுத்த டெண்டர் பிரிக்கும் போது நம்ம ஆளுங்களிடம் ஒரு 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து......அந்த அம்மாவைப் பார்க்கப் போகச் சொல்லு... மற்றதையெல்லாம் நான் விஜிலென்ஸ் ஆபிசர்களிடம் சொல்லி பார்த்துக் கொள்கிறேன்"

"அந்த அம்மா லஞ்சம் வாங்குமான்னு தெரியாது.......பின்னே எப்படி......?"

"அதையும் நான் பார்த்துக் கொள்கிறேன் ... வாங்கியதாக விஜிலென்ஸ் அலுவலர்கள் பத்திரிகையாளர்களிடம் சொல்லுவாங்க...."

****

மூன்று மாதம் கழித்து,

ஒரு நாள் அந்த பெண் மருத்துவரை கைது செய்து அழைத்துச் சென்றதை பற்றிய முந்தைய நாள் தொலைக்காட்சிப் படத்துடன், லஞ்சம் வாங்கிய பெண் டாக்டர் சிக்கினார், மருந்து கொள்முதலில் ஊழல் என்ற செய்தி கொட்டை எழுத்துகளில் செய்தி தாள்களில் வெளியாகி இருந்தது.

படித்துவிட்டு கட்சிக்கார பெருசு...இன்னொரு பெருசிடம்,

"ஆட்சி நல்லா போயிட்டு இருக்குல்லே....மக்களை ஏமாத்துறவங்க ... ஊழல் செய்றவங்க இப்படி சிக்கனும்யா.....பொம்பளைன்னா மட்டும் தப்பு செய்யலாமா ?"

என்று தன் சார்ந்த கட்சியின் ஆட்சிப் பெருமையுடன், பத்திரிக்கையின் மற்ற செய்திகளையும் பற்றி தனது கருத்துகளை உதிர்த்துக் கொண்டு இருந்தார்

*****

பின்குறிப்பு: கதைக்கும் இணைப்பிற்கும் தொடர்பில்லை, உரையாடல் முழுவதும் புனைவுதான். அரசு எந்திரங்கள், எல்லாவற்றையும் வயிற்றுக்குள் அடக்கும் முதலைகளை விட்டுவிட்டு மீன் கொத்திகளைத் தான் எப்போதும் வேட்டை ஆடுகிறது.

6 ஆகஸ்ட், 2009

ஒரு கசப்பான பதிவு ! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

"சர்க்கரை" - நினைத்தாலே இனிக்கும் என்பது நீரிழிவு நோய் (நோய் அல்ல உடலின் இன்சுலின் குறைபாடு) அற்றவர்களுக்குத் தான். நீரிழிவு இருப்பவர்களுக்கு ஒரு துண்டு மைசூர்பாவைக் கூட நஞ்சைப் போல் பாக்கும் நிலைதான் அவர்களது நிலை. இனிப்புகளைப் பார்த்தால் நாவில் எச்சில் ஊரினாலும் அதை அப்படியே துப்பிவிட்டு, முடிந்தால் முழுங்கிவிட்டு, விரல் நுனி அளவிற்கு எடுத்து பெயரளவுக்கு இனிப்புகளை சுவைக்க முடியும்.

"திருப்பதி லட்டுன்னாலும் சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அது ஆலகால விசம்" தான் என்று என் உறவினரிடம் சொன்னேன். நம்ப மறுத்தார். கடவுள் நம்பிக்கை ஆழமாக இருந்தால் உண்மையைக் கூட ஏற்க கசக்கத்தான் செய்கிறது!!!

சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும் செயற்கைச் சக்கரை சாக்கரீன் எவ்வளவு கெடுதலான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பதிவர் நண்பர் மருத்துவர் தேவன் மாயம் சிறப்பாக பட்டியல் இட்டிருக்கிறார்.

சர்க்கரை குறைபாடு விலங்குகளுக்குக் கூட வருமாம், நம்ம பதிவர் துளசி அம்மாவிட்டு (செல்லப் பூனை) ஜிகேவுக்கும் அந்தக் குறைபாடு இருந்ததாம். இருவகை சர்கரை குறைபாட்டில் ஒன்று சர்க்கரை மரபுக் கூறுகளால் வரும் என்றாலும் சரியான உணவு முறைகளின் மூலம் அவை அணுகும் நாளைத் தள்ளிப் போடலாம், முற்றிலும் தவிர்த்துவிடக் கடுமையான உணவுப் பழக்கம் மேற்கொள்ளலாம், இருந்தாலும் அவை பாதிக்கப்பட்டவர்களின் உணவு பழக்கத்தைப் போன்றுதான்.

சர்க்கரை நோய் பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் ? "இதில் பயப்பட ஒன்றும் இல்லை, வழக்கமான உங்கள் உணவுப் பழக்கத்தில் எதையெல்லாம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமோ, கூடுமோ அவற்றை தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்படும் உணவு முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும், சர்கரை நோய்கான அறிகுறி வந்துவிட்டால் Time to Change your food habits என்கிறார்கள்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?

உச்சிமுதல் உள்ளங்கால் வரை உடல் இயக்கத்திற்கு தேவை இரத்தம், அது நீர்த்(த) தன்மையுடன் இருந்தால் உடல் இயக்கம் சீராக இருக்கும், இன்சுலின் குறைபாட்டடல் இரத்ததில் இருக்கும் சர்க்கரை முழுவதுமாக எரிக்கப்படாத நிலை ஏற்படுவதால், சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின் இரத்தம் நீர்த்தத் தன்மையிலிருந்து குழைவுத் தன்மைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறும் (Thingkness of Blood) அதனால் இரத்த ஓட்டத்தின் சீர்மை கெட்டுவிடும், குழைவின் காரணமாக இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற்படும், இரத்தத்தின் மூலம் இயங்கும் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.

சர்கரைக் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் கண், சிறுநீரகம் பாதிக்கப்படும், அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், இரத்த ஓட்டத்தின் சீர்மை கெடுவதால் உடல் அசதி இயல்பாகவே ஏற்படும். சர்க்கரை அளவு மிகுதியாகிவிட்டால் மயக்கம் வரும். இதய நோய், மாரடைப்பு, ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைப் பெருகிவிடும். அதனால் கண்களையும் சிறுநீரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் மருத்துவரிடம் சோதித்துக் கொள்ள வேண்டும். பாதங்களை ஒட்டிய கால்பகுதியில் தோலின் நிறம் கறுப்பாகும். கால்களில் மரப்பு (Numbness) ஏற்படும். கால்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்காவிட்டால், காலில் காயம் பட்டாலும் உடனடியாக ஆறாது. காலையே எடுத்தால் தான் உயிர்பிழைக்க முடியும் என்கிற நிலை எல்லாம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆண்களுக்கு விரைப்பு / எழுச்சிக் குறைப்பாடு ஏற்பட சாத்தியம் உண்டு.

மேலும் ஆண்களுக்கு......

சர்க்கரை நோய் கண்ட முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் உடல் தோலின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும், விரிவடையும் தன்மையுடன் கூடிய ஆண்குறியின் முனைத் தோல் (foreskin) எழுச்சியின் போது விரிவடைந்த (சுறுக்கம் விரிவு மாறி மாறி ஏற்படும் elasticity) நிலையில் இருப்பதால் அதில் சிரிதளவு இரத்தக் கசிவுடன் கூடிய வெடிப்பு(புண்)கள் சுற்றிலும் அடிக்கடி (அதாவது ஆண்டு/மாதத்தில் பலமுறை) ஏற்பட்டுவிடும். முனைத்தோலுக்கும் ஆண்குறியின் மொட்டுப்பகுதிக்கும் இடையே உள்ள மூடிய பகுதிகளில் பல்வேறு தாது உப்புகளால் அழுக்கு படிமங்கள் (phimosis, டெட்ஸ்கின்) அடிக்கடி உற்பத்தியாகி அரிப்பும் ஏற்பட்டு இரத்தக் களறி ஆகிவிடும். உடல் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தினால் சரியாகிவிடும் என்றாலும் சரியாகும் வரை (தன்னின்பம் அல்லது உடலுறவின் போது) ஒவ்வொரு முறை தோல் விரிவடையும் போதெல்லாம் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். ஆண்குறியில் ஏற்படும் இந்த பாதிப்பு குறித்த விவரம் தெரியாதோர் 'பாலியல் நோயாக இருக்கும், நாம இராமனாச்சே....!' என்று பயந்துவிடுவதும், கவலைப்படுவதும் உண்டு. ஏற்கனவே (எங்கும் பாலியல் தொழிலாளியிடம் சென்று வராமல் இருந்து) அப்படி அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு இருப்பவர்கள் எந்த சோதனையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு சர்க்கரை நோய் கடுமையாக பாதித்து இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது. சர்க்கரை நோய்க்கான சிகிச்சையுடன் பாதிப்பு அடிக்கடி ஏற்படுபவர்கள் தோல் (புண்ணின்) எரிச்சலை தவிர்க்க முனைத்தோலை (Foreskin - Circumcision) அகற்றிக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இன்றைக்கு மருத்துவ உலகினருக்கு வற்றாத பணமழைப் பொழிவதற்கு நீரிழிவு நோய் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. சர்கரை நோய் கட்டுப்படுத்தலாம் முற்றிலும் போக்கிவிட முடியாது என்பதே மருத்துவ உலகம் இதுவரை சொல்லிவரும் தகவல்.

அப்படி இருந்தும் நம்ம ஊர் ரூம்போட்டு மருத்துவம் பார்க்கும் டுபாக்கூர் மருத்துவர்கள் எல்லாவற்றையும் குணப்படுத்துவதாக புளுகிவருவதும் அவர்களிடம் நோயாளிகள் ஏமாறுவதும் வாடிக்கை.

எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது, அதை முயற்சி செய்து பார்க்கலாம், பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மின் அஞ்சலில் வந்த விவரங்களை இணையத்தில் தேடிப்பார்த்தேன். தகவல் பரவலாக சென்று கொண்டு இருக்கிறது. இது வதந்தியா இல்லையா என்று தெரியாது. காசு பணம் மிகுதியாக செலவும் இல்லை, பக்க விளைவுகள் இல்லை, முயற்சித்துப் பார்க்கலாம், இதோ சிகிச்சை முறை (ஆங்கிலத்தில்)

DIABETIC?
FINALLY GOOD NEWS FOR ALL DIABETICSA woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day,
she used the enclosed homemade medicine for a fortnight and now
she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets ............ ......... ......

The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs.
I request you all please circulate the email below to as many people as you can and
let them take the maximum benefit from it.


AS RECEIVED :


DR. TONY ALMEIDA (Bombay Kidney Speciality expert ) made the extensive
experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes.
Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm ( மரப் பிசின்...இது எங்கே கிடைக்கும் ?)
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm (கருஞ்சீரகம்)

Method of Preparation :
Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass jug or bottle.

How to use it?
Take one small cup of this water every day early morning when your stomach is empty.
Continue this for 7 days. Next week repeat the same but on alternate days. With these 2 weeks of treatment you
will wonder to see that you have become normal and can eat normal food without problem.

SINCE THESE ARE ALL NATURAL INGREDIENTS, TAKING THEM IS NOT HARMFUL. SO THOSE WHO ARE SCEPTICAL ABOUT THIS TREATMENT MAY STILL TRY IT WITHOUT ANY HARM. WORST CASE SCENARIO WILL BE THAT YOU REMAIN STILL SAME AS YOU WERE BEFORE

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்