பின்பற்றுபவர்கள்

திக. வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திக. வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 செப்டம்பர், 2014

திக தலைவர் திரு Dr வீரமணி ஐயாவின் அரிய படம் !

தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் எனக்கு பிடித்த தலைவர்களில் திரு வீரமணி ஐயாவும் ஒருவர்,  ஐயாவின் அண்மையகால தமிழக அரசியல் சார்ந்த முடிவுகளில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும், பெரியார் பற்றாளன் என்ற முறையில் வீரமணி ஐயாவின் மீது எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு.

ஒரு முறை சிங்கப்பூருக்கு திருக்குறளில் இல்லற மேன்மை என்கிற தலைப்பில் அவர் பேச வந்த போது நானும் நண்பர் குழலி புருசோத்தமனும் அவரை சந்தித்தோம், பின்பு அவர் தங்கி இருக்கும் இல்லத்திற்கு சென்று அவரிடம் ஒரு 30 நிமிடம் பேசும் நல்ல வாய்ப்பும் கிடைத்தது, வழக்கமாக கருப்பு உடையில் பார்க்கும் அவரை வெள்ளை சட்டையில் பார்ப்பதற்கு எங்களுக்கும் வியப்பாகவே இருந்தது, கொஞ்சமும் தயக்கமின்றி படம் எடுக்கவும் அனுமதி அளித்தார்,  நான் அந்த படத்தை பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தேன், எதாவது ஒரு நல்ல வேளையில் வெளி இட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். இந்த இதழ் ஆனந்த விகடனில் ஐயா அவர்களின் நேர்காணலில் அவர் அணியும் மற்ற ஆடைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார், ஆனால் படம் எதுவும் வெளி வரவில்லை.

வலைப்பதிவு வாசிப்பவர்களுக்கே அந்த அரிய வாய்ப்பு. ஐயாவுக்கு தெரிந்தாலும் தவறாக கொள்ளமாட்டார் என்று எண்ணியே இந்த படத்தை இங்கு வெளியிட்டுள்ளேன்.



மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்