பின்பற்றுபவர்கள்

5 அக்டோபர், 2008

தமிழன் என்றால் இளிச்ச வாயனா ?

தேசிய வியாதிகள் எப்போதும் சொல்லும் வசனம் 'இந்திய இறையாண்மைக்கு பங்கம்'. இந்த வாதம் இவர்களாலேயே தோற்றுப் போய்தான் இருக்கிறது. இந்திராகாந்தியைக் கொன்றவர்கள் பஞ்சாபிக்காரர்கள் என்பதற்காக ஒட்டுமொத்த இந்தியர்களும் அவர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டார்களா ? சரியாக இருபது ஆண்டுகள் முடிவதற்குள்ளேயே மன்மோகன் 'சிங்' பிரதமர் ஆனதை எவராவது அவர் பஞ்சாபி, சிங் என்பதற்காக நிராகரித்தார்களா ? தேசிய அவமானம் என்று கருதினார்களா ? குஜராத் மோடி ஆட்சியில் நடந்த மதப்படுகொலைகளை யாராவது தேசிய அவமானம் என்று கருதினார்களா ? வழக்கம் போல் எல்லாமும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது ஜீரணிக்க முடியாத குற்றம் என்றாலும் அதற்கு ஈடாக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் நலனையும் அடகு வைப்பது மட்டும் என்ன ஞாயம் ? இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடாமல் இருந்தாலே போதும் என்று தான் ஈழத்தமிழர்கள் நினைக்கிறார்கள். ஆதரவு வேண்டாம் என்றாலும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருவதை எந்த ஒரு ஈழத்தமிழனும், தன்மானமுள்ள, இனமானமுள்ள தமிழகத தமிழர்களும் அதை வரவேற்கவில்லை.

இந்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து நடந்துவருவது கவலை அளிக்கிறது. பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று கலைஞர் எச்சரிக்கை அடைந்திருப்பது பாராட்டத்தக்கது என்றாலும் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அதைச் சொன்னால் வெறும் சொற்கள் அல்ல என்று தமிழர்கள் நம்புவார்கள். முஷ்ரப் தூண்டுதல் என்று நம்பப் படும், பாகிஸ்தானால் வேண்டுமென்றே, திட்டமிட்ட இந்திய தாக்குதலாக, நடத்தப்பட்ட கார்கில் போரில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்த இந்தியா அடுத்த ஓரிரு ஆண்டுகளில் முஷாரப்பை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரித்ததையும், கோடிக்கணக்கில் செலவு செய்து பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அவருக்காக அவர் வாழ்ந்த பழைய வீட்டையெல்லாம் புதுப்பித்ததை நாம் மறந்திவிடலாகாது. பிஜேபி அரசு செய்த இவையெல்லாம் இந்திய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களுக்குச் செய்யப்பட்ட துரோகம் இல்லையா ? இவையெல்லாம் தேச நலன் என்ற பெயரில், நட்புறவு என்ற பெயரில் தானே நடத்தப்பட்டது.புரட்ச்சி என்றால் கூறப்பட்டு சிலாக்கிப்பட்டது. தேசிய வியாதிகளான காங்கிரஸ்காரர்களும், பிஜேபியினரும் இவற்றையெல்லாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

34 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

hmm.... :(((((

ஜெகதீசன் சொன்னது…

கலைஞர் பதவி விலகலாம்...

அமைச்சரவையில் இருந்து கலைஞரும், மருத்துவரும் வெளியேறலாம்.

மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை இருவரும் விலக்கலாம்...

இன்னும் எவ்வளவோ செய்யலாம் அவர் நினைத்தால்...

ம்ம்ம்.....

தந்தி அனுப்புவது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும்..

விஜய் ஆனந்த் சொன்னது…

:-((

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஓகோ, இவரு கடிதம் எழுதி களைச்சுப் போயி, இப்ப எல்லாரையும் தந்தி குடுக்க சொல்றாரா? கேக்குறவன் எல்லாம் கேணையா இருந்தா, இவரு இதுவும் சொல்லுவாரு, இன்னமும் சொல்லுவாரு. ஏனுங்க நான் தெரியாமத்தான் கேக்குறேன், இவரால சொல்லி செய்ய முடியாததையா மக்கள் அனுப்புற தந்தி செஞ்சுடும்?

இவர்கள் அங்கம் வகிக்கும் மத்திய அரசையே எதிர்த்து இவர்கள் போராட்டம் நடத்துவதும், முழு அடைப்பு நடத்துவதும் மக்களை முட்டாள்களாக்கும் செயலே தவிர வேறொன்றுமில்லை.
போற போக்க பார்த்தா மின் வெட்டைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக போராட்டம், கடிதம், தந்தி இப்படி ஏதாவது போராட்டம் அறிவிச்சாலும் அறிவிப்பாரு இவரு. ஏன்னா நம்ம மக்கள் தான் கேணையணுங்க ஆச்சே.

மக்கள் செய்ய வேண்டியது தந்தி அடிப்பது அல்ல. தேர்தலில் தமிழக மீனவர்கள் சுடப்படுவது, கச்சத் தீவை மீட்பது, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, ஈழத் தமிழர் பிரச்சனை என அனைத்துப் பிரச்சனையிலும் எல்லாக் கட்சிகளின் நினையையும் தெளிவாக எழுதி வாங்கிக் கொண்டு, சாதகமான கொள்கையுள்ள கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி மத்தியிலும் , மாநிலத்திலும் ஆட்சியில் அமர்ந்து கொண்டே மக்களை தந்தியடிக்கத் தூண்டும் தலைவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க எனது கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமியை அனுப்புகிறேன் எனச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரி தன் இனப் பாசத்தை வெளிப்படுத்திய ஜெயலலிதாவையும் சேர்த்து புறக்கணிக்க வேண்டும்.

தமிழன் சொன்னது…

தந்தி போதாது மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும்.

சுரேஷ் ஜீவானந்தம் சொன்னது…

கோவி,
// இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது ஜீரணிக்க முடியாத குற்றம் என்றாலும் அதற்கு ஈடாக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் நலனையும் அடகு வைப்பது மட்டும் என்ன ஞாயம் ?//
அதுவும் அந்த நீதி விசாரணையே ஒரு தலைப்பட்சமாக இருந்தது. கொலைக்குக் காரணமான இந்தியாவின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப் படவேயில்லை.

//இந்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து நடந்துவருவது கவலை அளிக்கிறது. பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று கலைஞர் எச்சரிக்கை அடைந்திருப்பது பாராட்டத்தக்கது என்றாலும் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அதைச் சொன்னால் வெறும் சொற்கள் அல்ல என்று தமிழர்கள் நம்புவார்கள்.//
ஓட்டு அரசியலைப் பொறுத்த வரையில் நம்மைப் போன்ற தமிழுணர்வாளர்கள் குறைவு. கலைஞர் அப்படி ஏதும் தியாகம் செய்தாலும் மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்களா என்பது சந்தேகம் என்பதை அவர் அனுபவப் பூர்வமாக கடந்த காலத்தில் கற்றிருக்கலாம்.

ஆனால், அவரும் பதவி சுகமே பெரிது என்று நினைக்கும் சராசரி அரசியல்வாதிதான் என்று நிரூபித்து விட்டார். தமிழினத் தலைவர் என்றெல்லாம் கூறுவதை கேட்டால், படித்தால் எரிச்சல் வருகிறது.

சயந்தன் சொன்னது…

தந்தி பக்ஸ் ஈமெயில் எஸ் எம் எஸ் கூரியர் புறா
இவையெல்லாவற்றையும் கலைஞர் பயன்படுத்தி பார்க்கலாமே ?

பெயரில்லா சொன்னது…

thamilbest இல் உங்கள் பதிவு இணைக்கப்பட்டிருந்தது.

அது சரி சொன்னது…

//
பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று கலைஞர் எச்சரிக்கை அடைந்திருப்பது பாராட்டத்தக்கது என்றாலும் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அதைச் சொன்னால் வெறும் சொற்கள் அல்ல என்று தமிழர்கள் நம்புவார்கள்.
//

அதாவது, டி.ஆர். பாலுவுக்கு ஒரு குறிப்பிட்ட துறை வேண்டுமானால், கருணாநிதி டில்லிக்கு விமானம் ஏறுவார். மத்திய அரசை நடுங்க வைப்பார்..

மக்கள் பிரச்சினை அது பெட்ரோல் தட்டுப்பாடாக இருக்கட்டும், நெல்லுக்கான அடிப்படை விலையாக இருக்கட்டும்,காவிரி பிரச்சினையாக இருக்கட்டும்.. 1963லியே கடிதம் எழுதியவன் இந்த கருணாநிதி என்று அறிக்கை விடுவார்...புள்ளி விபரங்களை அள்ளி விடுவார்...

மீனவர் பிரச்சினை பற்றி சமீபத்தில் அவரே எழுதிய கேள்வி பதில்..

"
இந்து நாளேட்டில் இது பற்றி வெளிவந்த செய்தியில் பாக். ஜலசந்தியில் இலங்கை ராணுவத்தினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்திய அரசும், இலங்கை அரசும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முறை குறித்து முடிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன."

அதாவது, மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று இ ந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டு விட்டன... ஆஹா, என்னவொரு தீர்வு...என்னவொரு தீர்வு.....

கச்சத்தீவு அவரது ஆட்சி காலத்தில் தான் தாரை வார்க்கப்பட்டது. இதை கருணாநிதியே நினைத்தாலும் மறுக்கமுடியாது.

இதை அன்றே தடுத்து நிறுத்த அவர் செய்தது என்ன?? ம்ம்ம்... கடிதம் எழுதினோமில்ல....இது தான் தமிழ்னாட்டுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்ததாகவும், பொது வாழ்வில் அறுபது வருடங்களாக மெழுகாக உருகுவதாகவும் சொல்லும் கருணாநிதியின் சாதனை....

இவர்கள் பதவியை தூக்கி எறிவார்களா?? ச ந்தேகம் வேண்டாம்... பதவியை துச்சமாக மதிக்க கூடியவர்கள் தான் கருணாநிதியும் கட்சிக்காரர்களும்...ஆனால், அது பதவிக்காலம் முடிவதற்கு ஒரு வாரம் முன்பு மட்டுமே!

நசரேயன் சொன்னது…

குடும்ப அரசியலில் சிக்கி தி.மு.க(திக்கற்ற மு.கருணாநிதி) அவருக்கு வேண்டுமானால் மத்திய அரசை மிரட்டுவதும், வேண்டாததை அடுத்தவர்கள் மூலம் தந்தி அடிக்க சொல்லி கேட்பதும் தமிழனின் உயிரை மயிரை போலே மதிக்கிறார் என்றே அர்த்தம். இப்படி ஒரு மானங்கெட்ட அரசியல் நடத்துவதற்கு முழுக்கு போட்டு விட்டு கோபால புறத்திலும் மற்ற ஊர்களில் உள்ள வாரிசுகளின் வீட்டில் ஒய்வு எடுப்பதே தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிதான நன்மை.

suvanappiriyan சொன்னது…

தந்தி போதாது மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும்.

சி தயாளன் சொன்னது…

தமிழர் பிரச்சினை பற்றி இந்தியக்கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாததுதான் இதுக்கு காரணம்.

இதுக்கு நான் சும்மா கலைஞரையோ, ஜெவையோ குற்றம் சொல்லவதால் பிரயோசனம் இல்லை..

எல்லா கட்சிகளும் தங்கள் சுயலாபங்களை தள்ளி வைத்துவிட்டு இந்தபிரச்ச்சினையை கையில் எடுத்தால் பலன் உண்டு..

RATHNESH சொன்னது…

ஈழத் தமிழர்கள் நிலை பரிதாபமானது தான். மறுப்பதற்கில்லை.

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

//இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடாமல் இருந்தாலே போதும் என்று தான் ஈழத்தமிழர்கள் நினைக்கிறார்கள்.//

நான் அறிந்தவரையில் இந்தியாவின் தலையீடு அவசியம் என நினைக்கிறார்கள். இதற்கு அரசியல்,வாழ்வியல்,கலாசார தொன்மை மட்டுமல்ல பூகோல அமைப்பும் காரணம். பின்னூட்டத்தில் விரிவாகச் சொல்ல முடியவில்லை.

நல்லதொரு பதிவுக்கு நன்றிகள்.

மணிகண்டன் சொன்னது…

ஈழத் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல. அதனால் உங்களோட analogy சரியானது அல்ல. அதை தவிர உங்களின் பதிவில் உள்ள விடயங்கள் சிந்திக்க வைப்பவை. ஈழ தமிழர் நலனுக்கு செயல்படும் ஒரே குழு, தீவிரவாத குழுவாக இருப்பது (கருதப்படுவது) துரதிஷ்டமே. அதே சமயம் இலங்கை அரசுக்கு நட்புறவு நீட்ட பாகிஸ்தான் மற்றும் வேறு பல நாடுகள் தயாராக இருக்கும் பட்சத்தில் இந்தியா ஒன்றும் செய்யாமால் இருக்க முடியாது. இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள் இந்தியாவின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படும் (நம்பி ! ) ஈழத் தமிழர்களின் நலனை முன்னிறுத்தி அல்ல.
இந்தியாவில் வாழும் தமிழர்கள் கொடுமைப்படுத்தபட்டால் உங்களது தலைப்பு சரியானதாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
ஈழத் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல. அதனால் உங்களோட analogy சரியானது அல்ல. அதை தவிர உங்களின் பதிவில் உள்ள விடயங்கள் சிந்திக்க வைப்பவை. ஈழ தமிழர் நலனுக்கு செயல்படும் ஒரே குழு, தீவிரவாத குழுவாக இருப்பது (கருதப்படுவது) துரதிஷ்டமே. அதே சமயம் இலங்கை அரசுக்கு நட்புறவு நீட்ட பாகிஸ்தான் மற்றும் வேறு பல நாடுகள் தயாராக இருக்கும் பட்சத்தில் இந்தியா ஒன்றும் செய்யாமால் இருக்க முடியாது. இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள் இந்தியாவின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படும் (நம்பி ! ) ஈழத் தமிழர்களின் நலனை முன்னிறுத்தி அல்ல.
இந்தியாவில் வாழும் தமிழர்கள் கொடுமைப்படுத்தபட்டால் உங்களது தலைப்பு சரியானதாக இருக்கும்.

4:06 PM, October 06, 2008
//

மணிகண்டன்,

இந்தியா தரும் ஆயுதத்தால் இலங்கை இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுபவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இராமேஸ்வரம் பகுதி மீனவர்களும் தான். அதனை மறந்திட வேண்டாம்.

மணிகண்டன் சொன்னது…

*********இந்தியா தரும் ஆயுதத்தால் இலங்கை இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுபவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இராமேஸ்வரம் பகுதி மீனவர்களும் தான். அதனை மறந்திட வேண்டாம்.*******

உண்மை கோவி சார். ஆனால் இந்தியா ஆயுதம் தராவிட்டாலும் இந்த நிகழ்வுகள் நடக்கும். அதே சமயம் இதை காரணம் காட்டி இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். அந்த நடவடிக்கையால் ஈழத் தமிழர்களின் நலனையும் காப்பாற்ற முனையலாம்.

இந்தியா தந்த ஆயுதத்தால் தான் விடுதலைப்புலிகள் கூட பலரை சுட்டு கொல்ல முடிந்தது. ஈழத்தமிழ் பிரச்சனைக்கு ஆயுதம் தாங்கிய போராட்டம், இலங்கை அரசுடன் இந்திய அரசாங்கம் பேச்சு வார்த்தை மற்றும் தனி மாகாணம் அமைப்பது இவையே தீர்வை நோக்கி செல்லும் வழிகளாக இருக்கலாம். ஆனால் எனது காலகட்டத்தில் இது நடைபெறுமா என்பது சந்தேகமே.

Rajaraman சொன்னது…

இலங்கை தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதி வடிப்பது நீலிக்கண்ணீர் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.. ஆனால் கோவியார் போல் சிலர் இதை மெச்சுவது எப்படி என்று தெரிய வில்லை. இதில் அவர் அடித்த கோமாளி கூத்துகளை கூற ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது..

anujanya சொன்னது…

உங்கள் பதிவைப் பற்றி: பதவி விலகி இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதைவிட (சிலசமயம் அது பிளாக் மெயில் என்று புரிந்து கொள்ளப்படும்), பெரும்பாலான தமிழ் மக்களின் வேட்கையை வலியுறுத்தும் வண்ணம் தந்தி கொடுத்தால் பிரதமருக்கு இதன் முக்கியம் மற்றும் அவசரம் புரிய வரலாம். முதல்வர்மேல் உள்ள பலவித ஏமாற்றங்களாலும், கட்சிசார் நிலைகளாலும் அவரது இந்த 'தந்தி' கொடுக்கச்சொல்லும் கோரிக்கையைப் பலபேர் நிராகரிக்க நேர்கிறது வருத்தமே.

திரு மணிகண்டனுக்கு: பலமுறை போரிட்டாலும், பலமுறை பயங்கரவதங்களைக் கட்டவிழ்த்தாலும், பாகிஸ்தானை நம்மால் முற்றிலும் கைவிட முடியாது. ஏனெனில் உணர்வாலும், கலாச்சாரத்தாலும், மொழியாலும் பல நேரங்களில் ஒத்திருக்கின்றன இரு நாடுகளும். அது போலவே ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும். ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்த இந்தியா இப்போது முற்றிலும் தன் நிலையை மாற்றிக்கொள்வது கவலையான நிலை. புலிகள் மீது இன்னமும் கோபம் என்றாலும், ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் அடகு வைப்பது, அவர்களை மட்டும் அல்ல, இந்தியத் தமிழர்களுக்கும் ஒரு அவமானம். ஒரு வல்லரசாவது மட்டும் முக்கியமில்லை. நல்லரசாகவும் இருக்க வேண்டும். பாகிஸ்தான் இலங்கை அரசுக்கு உதவி செய்ததால் அதற்கு நட்டம் ஏதுமில்லை. இந்தியாவின் ஒரு முக்கிய இனம், அங்கு வதைக்கப்படுகிறது என்கிறபோது, இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி செய்வது எங்ஙனம் தார்மீக நியாயம்? The Indian Government is confusing Srilankan Tamils with LTTE.

அனுஜன்யா

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//Rajaraman 5:19 PM, October 06, 2008
இலங்கை தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதி வடிப்பது நீலிக்கண்ணீர் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.. ஆனால் கோவியார் போல் சிலர் இதை மெச்சுவது எப்படி என்று தெரிய வில்லை. இதில் அவர் அடித்த கோமாளி கூத்துகளை கூற ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது..
//

Rajaraman,

:)

ஆனால் இந்த நீலிக்கண்ணீரைக் கூட 'சோ' கால்ட் பத்திரிக்கை(கள்) வடிக்கக் காணுமே, மாறாக அவதூறு அல்லவா செய்து வருகிறார்கள்

Unknown சொன்னது…

Dear Sir,

You are asking about a Sikh killing Indiraji. Please understand those who killed Indiraji were hanged to death. Similarly if Prabaharan is hanged then India can think about helping eelam.
Next thing is they are Indians. I see Rajiv's killing as a killing of my PrimeMinister by some Foreign national in my motherland and see it as a threat to my national security, integrity and sovereignity. By killing a man of heart for billion people you created terror and shock among them. Country's security itself was brought into question.

My simple question is can they do it for USA ? Can they kill USA president and live happily.?. They would have been erased in the map now. You could claim LTTE is different and eelam people are different.
But Let eelam tamils say this, they wont say..Only solution is "till eelam people betray Prabaharan, eelam will be a distant dream"

மதிபாலா சொன்னது…

கலைஞர் வடிக்கும் நீலிக்கண்ணீரா இல்லையா என்ற ஆராய்ச்சியை விட இன்றைய அளவில் அவரைத்தவிர வேறு யாரால் ஈழத்தமிழர்களுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட முடியும் என்று சொல்ல முடியுமா உங்களால்..????

ஆதரவை விலக்கணும் , ஆட்சியிலிருந்து வெளியேறணும் நு கூவற மக்களே , இது என்ன எடுத்தேன் , கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கக்கூடிய விடயமா என்று எண்ணிப்பாருங்கள்.......

அவ்வாறு செய்வதால் இங்கேயும் காங்கிரஸ் ஆதரவின்றி திமுக அரசு கவிழ்ந்தால் அதன்பின் ஜெயல்லலிதா வந்தால் ( இதற்கே ஆறுமாதங்கள் ஆகிவிடும் என்பதால் அதற்குள் பாதி ஈழத்தமிழன் வன்னியில் மரித்திருப்பான்) இன்றைக்கு நீங்களும் , நானும் எழுப்புகின்ற குரலுக்காக நம்மை குண்டர் சட்டத்தில் அடைத்தாலும் அடைப்பர்!!!!! பிறகென்ன செய்ய....ஆகவே இப்போதாவது நாம் அரசியல் காழ்ப்புணர்வுகளை தள்ளி வைப்போம்....

இதுவரை கலைஞர் புடுங்கிய ஆணி என்ன என்று கேள்வி கேட்பவர்கள் , இன்று வரை அவர்கள் ஈழப்பிரச்சினையில் புடுங்கிய ஆணி என்ன என்று பட்டியலிட்ட பின்னர் அக்கேள்வியை கேட்பதே நியாயமாக இருக்கும்!!!!!

மதிபாலா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மணிகண்டன் சொன்னது…

****The Indian Government is confusing Srilankan Tamils with LTTE***

****அனுஜன்யா :- ஈழ தமிழருக்கு போராடி அதில் வெற்றியையும் பெற்று தற சாத்தியம் உள்ள ஒரே குழு விடுதலை புலிகள். இந்த சூழ்நிலையில் இந்திய அரசிற்கு இருக்கும் confusion புரிந்து கொள்ள கூடியதே *****


As long as LTTE represents the freedom movement for srilankan tamils, this reluctance would continue from india.

As of now, demonstrating the support for srilankan tamils and also showing the greivances of srilankan tamil people to the entire world would do more good than other deeds. And so kalaignar's idea is a novel one.

மதிபாலா சொன்னது…

நண்பர் ஸ்டேன் ஜோ ....

இதே விடயம் பற்றி உங்களுக்கும் , எனக்கும் தொடர்ச்சியான விவாதங்கள் நடந்திருக்கின்றன.....

"தமிழீழம் - கொதித்தெழும் தமிழகம்" என்ற என் பதிவில் நீங்கள் என்ன சொன்னீர்கள்.....நான் சாதாரண போராட்டத்தை ஊதிப்பெரிதாக்குகிறேன் என்று....இன்று பார்த்தீர்களா , மொத்த தமிழகமும் அல்லது தமிழக கட்சிகளும் ஒரே கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்......ஆனால் அனைவரும் அரசியல் உள்நோக்கத்தினால் பேசுகிறார்கள் என்ற ஒரு கருத்து உலவுவதை ஒரு பக்கம் ஒத்துக்கொண்டாலும் , ஒவ்வொரு கட்சியின் ஈழநிலையும் தமிழகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன்..

மீண்டும் உங்கள் கருத்தொன்றை இங்கே நான் சுட்ட விரும்புகிறேன்...."tamilnadu tamils has their own problems and they least bothered about eelam tamils.."

இப்பொழுதும் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறீர்களா????

தொடர்ச்சியாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்தை பொதுவான பார்வையாக வைப்பது தவறென்று புரிந்துகொள்வீர்கள் என்றே நாம் நம்புகிறோம்...!!!!!!

தமிழீழத்தமிழர்களுக்கு தமிழகத்தமிழர்கள் எழுப்பும் குரல் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்..அதுபோலவே தமிழகத்தமிழர்களும் தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு குரல் எழுப்ப தயாராகவே உள்ளார்கள்...

உங்களைப்போன்ற சிலரும் , சோ க்களும் , சுசுக்களும் தான் தொடர்ச்சியான தமிழர் எதிர்ப்பு கொள்கைகளை பரப்பும் வண்ணம் உள்ளனர் என்பதை நான் இங்கே பதிவு செய்கிறேன்!!

Unknown சொன்னது…

Dear Mathibala sir,

Don't get fooled yourself just by seeing this leader's protest.

Communist were part and parcel of UPA. What they were doing then.?
MDMK was part of UPA. WHat vaiko did then.?
Kaliagnar is still in UPA, Anbumani is still in UPA why dont they resign. They know that this issue is of least important and they have many worst important issue to talk. As I have already said Can any part in TN openly say they are supporting LTTE in thier election manifesto and fight the election and win it. If they can , Then we can say Tamil people are still supporting LTTE.

மதிபாலா சொன்னது…

நண்பருக்கு ,

நான் இங்கே புலிகளை பற்றி எந்தக்கருத்துமே சொல்லவில்லை........ ஈழத்தமிழர்களை பற்றி மட்டுமே சொன்னேன்......சொல்லியிருக்கிறேன்.....ஏன் அமைச்சரவையிலிருந்து விலகவில்லை என்ற உங்கள் கேள்விக்கு இதே பதிவில் கடந்த பின்னூட்டமே பதிலென கருதுகிறேன்...

( ஆனாலும் , இன்றைக்கு ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக தங்களை வரித்துக்கொள்ளும் புலிகளே ஒரே பிரதிநிதி என்று பலரும் கருதுவதால் , நமது ஈழத்தமிழர் ஆதரவை புலிகளுக்கெதிரான ஆதரவாக நீங்களோ இல்லை படிப்பவர்களோ கருதிக்கொள்வதற்கு நாம் எப்போதும் பொறுப்பாக முடியாது )

ஆப் த சப்ஜெக்ட்

என்னை சார் என்று அழைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை ஸ்டேன் ஜோ சார்.??? நான் ரொம்ப சின்னப்பையன்..

Rajaraman சொன்னது…

கடிதம் எழுதுவது, தந்தி கொடுக்க சொல்வது, மயிலை மாங்கொல்லையில் ஈழத்தமிழருக்காக என்று மீட்டிங் போட்டு, துதிபாடிகளை விட்டு தன்னை தானே புகழ்ந்து கொள்வது போன்ற Lip Service தவிர வேறு என்ன உபயோகமாய் கிழித்தார் அல்லலுறும் ஈழ தமிழருக்கு. ஐந்து முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தும்??? இதில் வேறு உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் என்று அடிவருடிகளை விட்டு கூச்ச நாச்சமின்றி பீத்திக்கொள்வது.. ஏதோ மத்திய அரசே இவரின் கண்ணசைவில் தான் நடக்கிறது என்று கதை அளக்கிரார்களே அப்புறம் எதுக்கு தந்தி வெங்காயம் எல்லாம் நேரடியாக ஆணை இடுவது தானே யார் தடுத்தது.

Unknown சொன்னது…

Ok Dear Mathibala,

I am not sure where you are living (probably Indonesia). So you will surely not be able to guess the pulse in TamilNadu. If you ask any one in TN are you worried about eelam tamils.? they will say "Yes". If you ask them should India help eelam tamils, they might say "Yes". But if you ask them how you are going to help.? or If India do not help what will they do.? they will not have answer. Because they better things to get worried,Price rise, inflation, lack of drinking water,petrol price raise and other so many issues. They do not care what eelam tamils are doing. You know who is responsible for that.?One and only Prabaharan.
Also one more point is these same eelam tamil definitely do not love India, they are just crying becauuse they do not have any help.They were the same people who drove away Indian Tamils who went as coole to tea estates after joining sinhalese. Now when Sinhalese beat them they are crying to India.

People who write for eelam tamils, First try to pacify the hungry of your neighbors who are in the street. First check whether all the people in your street are geeting basic amneties. Eelem tamil have thier own leader who will get them independence. Lets stay away from them.

மதிபாலா சொன்னது…

But if you ask them how you are going to help.? or If India do not help what will they do.? they will not have answer. ////

சரி இருக்கட்டும்...என் மனம் போல நான் இங்கே புலம்பிக்கொள்கிறேன்.....என் கருத்துக்கள் ஈழத்தமிழரின் பால்...அதே தமிழகத்தை சேர்ந்தவர் நீங்கள்........உங்களுக்கு எப்படி நம் ஆதரவை விமர்சிக்க வேண்டிய அவசியம் வந்தது??? நீங்கள் உங்கள் பக்கத்து தெருவில் பசியுற்று கிடக்கும் பலரை பசியாற்றும் பணியில் ஈடுபடூவதை விட்டுவிட்டு இங்கே நமது கருத்துக்களை விமர்சிக்கிறீர்கள்???

நாம் பணி நிமித்தமாக வெளிநாட்டில் இருந்தாலும் மிகுந்த வாசிப்புகளில் நாட்டம் உள்ளவன்...அது தவிர்த்து உலகத்தமிழ் மக்களரங்கம் என்ற விவாத அரங்கின் மூலமாக பல்வேறு தோழர்களின் உணர்வுகளையும் , தமிழக மக்களின் உணர்வுகளையும் கொஞ்சமாவது அறிந்து கொண்டவன் என்ற நம்பிக்கையிலேயே என் கருத்துக்களை பதிகிறேன்!!

Unknown சொன்னது…

//உங்களுக்கு எப்படி நம் ஆதரவை விமர்சிக்க வேண்டிய அவசியம் வந்தது//

Because I know the pain of suffering we got after we went and poked into eelam issue.We lost our 21st century leader, more over during 1989-1991 cold blood murders were taken place in chennai street evey now and then, where ever you turn there will be stories of terror,AK47 and other weapons. Smugglers were smuggling ration goods to eelam which led to poor ecnomic status in which we have to sell our Gold to foriegn countries.

We dont want to support eelam tamils and burn our fingers once gain and became scapegoats. We dont want our kid to see AK47 and boms from their childhood.We are not ready to give our children as "Kaavu" just for Prabaharan to get eelam.Rather We want our kids to study and excel. We live safely across the border. Let eelam tamils live or fight against sinhalese with thier Prabaharan on the other side of the shore.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல நோக்கத்திற்கான பதிவு.
கோபத்தில் என்ன சொல்வதென்று புரியவில்லை.
தந்தி அனுப்புங்க என்று கலைஞர் சொல்லி இருக்கக் கூடாது. 40 எம்.பிக்களுக்கு ஓட்டு போட்டு அனுப்பினோம். அடிக்கடி பிரதமரைச் சந்திக்கிற வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. எத்தனை தடவை இலங்கைப் பிரச்சனைக்காக இவர்கள் பிரதமரைச் சந்தித்திருக்கிறார்கள்?
எனது கருத்து எப்பவும் ஒன்றுதான்!
நமது குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும்!
இல்லை என்றால்
நாம் தில்லியை ஒழிக்க வேண்டும்.
(அதாவது சென்னை,திருச்சி,கோவை,மதுரை இப்படி எதாவது ஒற்றை வைத்துக் கொள்ளலாம்)

tamilraja சொன்னது…

மனதை ரொம்ப நாளாக அரிக்கும் கேள்விகள்

இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தமிழர்களை இந்தியர்கள் என்று ஏன் நினைக்க மறுக்கிறார்கள்?
தமிழ்நாட்டு எல்லை தாண்டினால் மக்கள் மனதிலும் இதே இருக்கிறது!

அப்புறம்,மதவாதம் பேசும் ராமகோபாலன்,அர்ஜுன் சம்பத்,குருமூர்த்தி,சோ,வேதாந்தம்,போன்ற இந்து தீவிரவாத எண்ணமுள்ளவர்கள்.
இலங்கை தமிழர்களை இந்துக்கள் என்ற எண்ணத்திலாவது,காப்பாற்ற குரல் கொடுக்காதது ஏன்?

தமிழ் நாட்டில் மட்டும் தமிழர்களுக்கு இந்து என்ற எண்ணம் வேண்டும் என்று அடிக்கடி இவர்கள் தான் கூவுகிறார்கள்.

Unknown சொன்னது…

நண்பர் stanjoe அவ்ர்களின் பொருளற்ற மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களைப் புறக்கணிப்போம். அவ்ர் சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் ஏகே47 துப்பாக்கிகளைப் பார்த்ததாக கூறுவதெல்லாம் சுத்த பேத்தல் மற்றும் பிதற்றல். நிறைய கேப்டன் படம் பார்த்திருப்பார் போல.

ஈழத்தமிழருக்காக தமிழ்நாட்டில் பொங்கிப் பிரவாகமெடுத்து வரும் ஆதரவில் இவர் போன்றோரின் குரல்கள் எடுபடாமல் காணாமல் போகும்.

நிச்சயம் தமிழீழம் மலர்ந்தே தீரும். அது நிறைவேற யார் என்ன போராட்டம் அறிவித்தாலும் ஆதரவளிப்போம். எல்லாரும் ஒரே மேடையில் ஏறியதில்லை. ஏறப் போவதுமில்லை. நாம் எல்லா மேடைக்கும் ஆதரவளிப்போம். தமிழீழம் மலர ஒத்துழைப்போம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்