பின்பற்றுபவர்கள்

கன்றாவிக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்றாவிக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஜூன், 2010

இனியவை 40 - இன்னா 400 !

போர்வாள்களாகத் துணியவில்லை,
கேடயங்களாக இருக்கத்தான் இயலவில்லை,
காயங்களை ஆற்றவும் மனமுமில்லை,
காயங்கள் தானே ஆறுவதற்குள் பொறுமையுமில்லை,
ஊர்வலத்தின் முன்பே தெரியும்
ஊர் அவலக்காட்சிகள்
மறைக்க மனத்திரை ஒன்றை
மாநாட்டில் தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை...
இன்றைய இனியவை நாற்பதின்
மயிலாடும் முகத்தின் மறைவில்
நேற்றைய மறக்க முடியாத
காட்சிகளாக தொடர்காட்சிகளாக.........இன்னா நானுறு !


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்