பின்பற்றுபவர்கள்

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூன், 2012

விருந்தும், மருந்தும் !


விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது உறவையும் கெடுத்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு, அவர் காலத்தில் விருந்தினர்கள் தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கக் கூடும், தவிர அவர்களுக்கான பணிவிடை என்பது உணவும் உறைவிடமும் கொடுத்து உதவுவது என்ற அளவில் தான் இருந்திருக்கும். பின்னர் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் விருந்தினர்கள் மூன்று நாளைக்கு மேல் தங்குவது தொல்லை தான் என்றே உணர்ந்து பழமொழி வடிவெடுத்திருக்கிறது.

*****

அந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லை என்று சிலர் மனிதர்களையும் அவர்கள் தம் சமூக வாழ்வியலை ஒப்பிட்டு அலுத்துக் கொள்வது உண்டு, எந்த காலத்திலும் மனிதர்களின் மனம் பெரிய அளவில் மாறுபடுவது கிடையாது, அப்படியே ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பவை இன்றைய வாழ்க்கைச் சூழல் ஏற்றியிருக்கும் சுமைகளின் அழுதத்தினால் தான் மாறி இருக்கின்றன. இதைத் திறந்த மனத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளத்தான் வேண்டும். எந்த காலத்திலும் மனிதனின் பொருளாசைகள், பேராசைகள் தான் நாடுகளின் எல்லைகளை விரித்திருக்கிறது, ஆட்சிப்பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது, இதைத்தாண்டி உலக மக்களுக்கு நன்மைச் செய்யப் போகிறேன் என்று கூறி அரசை விரிவு படுத்தியவர்கள் எவரும் இல்லை, அதே போன்று மனிதனின், குறிப்பாக ஆண்களின் காம இச்சைகளும் எல்லாக் காலத்திலும் மிதமிஞ்சியதாகவே தான் இருந்திருக்கிறது , இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு பல மனைவிகளை மணந்து கொண்டார்கள், பின்னர் பொருளாதார வசதிக் குறைவால் சின்னவீடு என்ற அளவுக்குச் சுறுக்கிக் கொண்டனர், தற்போது கள்ள உறவுகள் மூலம் அவற்றைத் தொடர்கிறார்கள், அனைவரையும் இப்படிச் சொல்லமுடியாவிட்டாலும், அதில் ஈடுபடுவர்களின் செயல் முறைகள் தான் மாறி இருக்கின்றதே அன்றி எங்க காலத்து ஆளுங்க 'அதில்' கில்லாடிகள் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. மனிதனுக்கு பசியும் தூக்கமும் பொதுவானதாகவே இருந்துவருகிறது என்னும் போது மற்றத் தேவைகளின் ஒப்பீடுகளிலும் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கென்னடிக்கு மர்லின் மன்றோ கிடைத்தது போல் கிளின்டனுக்கு ஒரு மோனிகா. இன்றைய தேதிக்கு சட்டச்சிக்கல் என்பதால் ஒரே மனைவியை மட்டும் மணந்து கொண்டிருப்பவர்கள் அனைவரையும் நாம் உத்தமர் என்று பட்டம் சூட்டிவிட முடியாது, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், அவர்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும் போது இன்றைய ஆண்கள் உத்தமர்கள் என்றோ அந்த காலத்தவர் 'அதில்' கில்லாடிகள் என்றோ நாம் ஒப்புக் கொள்வோம்.

இப்பொழுதெல்லாம் உறவினர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை, அவர்கள் எப்பொழுது கிளம்புவார்கள் என்று முள்மேல் நிற்கும் மனநிலையே உள்ளது என்று பதிவர் பெரியவர் பழனி கந்தசாமி மாறுவது மனமா ? காலமா ? எழுதி இருக்கிறார். மனிதர்கள் பணத்தை தேடி அலைகிறார்கள் என்று எழுதி இருக்கிறார். உண்மை தான், பிதுங்கும் மக்கள் தொகையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வருவதே பெரும் அறைகூவல் என்னும் நிலைக்குச் சென்ற பிறகு இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது ? இந்த நிலைக்குக் காரணம் என்ன ? பொறுப்பற்ற முறையில் பெருகிய மக்கள் தொகை தானே ? இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சமூகம் அக்கரைக் கொண்டிருந்தால் பொருளியல் ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையே நமக்கு வந்திருக்காது, கடவுள் கொடுக்கிறான் என்று 10 குழந்தைகள் வரை பெற்றுப் போட்டு 80 ஆண்டுகளில் 30 கோடியில் இருந்து 100 கோடியை அடைந்துவிட்டு நாம் புலம்புவதால் என்ன பயன் ? இன்றைய தம்பதிகளுக்கு மட்டும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசையே இல்லையா ?, பெற்றெடுக்கும் அவஸ்தை என்பதை ஒப்பிட்டு பெண்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும் குடும்பத் 'தலைவன்' என்கிற அந்தஸ்தில் 100 குழந்தைகளுக்குக் கூட தந்தையாகும் ஆசை ஆணுக்கு உண்டு, ஆனால் ஒன்று இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு தேவையான படிப்பும் வசதியும் செய்து வளர்த்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் தான் ஆண்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவதை நினைத்துப் பார்க்கவே தவிர்த்துவருகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் ஆண்களின் மீது இன்றைய போட்டி நிலைச் சமூகம் ஏற்படுத்தி உள்ளவை தான்.

இன்றைய தேதிக்கு இளைஞர்களின் (ஆண் / பெண் தம்பதிகளின்) இலக்கே தனக்கென ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்வது, 55 வயதை நெருங்கும் எவரும் கடந்த கால பொருளியல் நிலைமை, குறைவான ஊதியம் என்ற நிலையில் கிட்டதட்ட ஓய்வு பெரும் நிலையில் சொந்த வீட்டைக் கட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்கள், தற்பொழுது சொந்த வீட்டுக் கனவு 30 - 35க்குள் கை கூடிவிடுகிறது, 'அப்பன்காரன் சம்பாதித்து வைத்திருந்தால்' ஒரு வீடுகட்ட நான் நாயாகப்படும் நிலை வந்திருக்காது' என்கிற இளைஞர்களின் மனக் குரலை எங்கும் கேட்கமுடிகிறது, முனிசிபல் பள்ளியில், அரசு இலவசக் கல்வியில், முயற்சிகளில் ஓரளவு படித்து வெளியே வந்தவர்களுக்கு முதலில் இருக்க நல்ல வீடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அதற்காக கடுமையாக உழைக்கும் மனநிலையில் வேலைக்கும் போகும் பெண் தான் வேண்டும் என்று கூறி திருமணமும் செய்து கொள்கின்றனர், பின்னர் ஓய்வில்லாத உழைப்பு, இதில் உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் உபசரிக்கவும் நேரம் இருக்குமா ? மாமனார் மாமியார் வந்தாலே எப்போ கிளம்புவாங்க என்று இருக்கும் சூழலில் பிற உறவினர்களுக்கு ஊட்டிவிடுவது என்பது நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று. போட்டித் தன்மை மிக்க உலகில் தனியார் நிறுவனங்களில் பார்க்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது, கூடவே வாரிசுகளுக்கு நல்ல கல்வி அளிக்க, நல்ல பள்ளிகளை தேர்ந்தெடுப்பது, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்றெல்லாம் உட்கார நேரம் இல்லாத வாழ்க்கைச் சூழலில் உறவினர்களை கண்டு கொள்வதற்கான நேரம் ?

எனது வீட்டுக்கு அருகே, மூன்று பேருந்து நிறுத்தம் தள்ளி குடி இருக்கும் நண்பரை குடும்பத்துடன் வீட்டுக்கு வரச் சொன்னோம், அவருடைய மனைவி  'உங்க மகளுக்கு தொடக்க நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு படிப்பு நடக்கிறது, நீங்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவருகிறீர்கள், நிறைய வேலை இருக்கும், எப்போதும் ஓடிக் கொண்டி இருப்பீர்கள் என்பது தெரியும், தேர்வெல்லாம் முடியட்டும் என்று கூறி அழைப்பை மறுத்தார்' தேர்வு முடிய இன்னும் ஆறுமாத காலம் இருக்கிறது என்றாலும், அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றியது, அதையே தான் அவர்களும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள், நாம் நிலைமை புரியாமல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவர்கள் திட்டமிட்ட வேலைகள் எல்லாமும் தடையாகிப் போகும் போது 'இவர்களை யார் அழைத்தது ?' என்று நினைக்கத்தான் செய்வார்கள்,  குடும்பங்கள் சுறுங்கி, நேரங்கள் திட்டமிட்டவையாக மாறிவிட்டப் பிறகு உபரி நேரங்கள் கிடைப்பதே தற்காலிக ஓய்விற்கானது. குடும்பத்திற்கானது என்ற நிலையில் விருந்தினர்களை முன்பு போல் பல நாள் தங்கிச் செல்லவதை மகிழ்ச்சியான மனநிலையுடன் கொண்டாட முடியுமா ? நம்மால் ஒழுங்காக கவனிக்க முடியாத சூழலில், பணிவிடை செய்ய முடியாத சூழலில், விருந்தினரை அவமானப்படுவதை தவிர்க்க, உறவினர்கள் வந்தாலும் உடனே கிளம்பிடுவது தான் நல்லது என்றே நினைக்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களுடன் அருகே வீட்டு உரிமையாளரும் குடி இருந்தால் வீட்டு விருந்தினரை 'எப்போ கிளம்புவீர்கள் ?' என்று வீட்டு உரிமையாளரே கேட்பார். காரணம் இடம் குறித்து அல்ல, தண்ணீர். இது போல் நிறைய இடற்கள் உண்டு, இன்னிக்கு அடுப்பங்கரைக்கு ஓய்வு, சமைக்க வேண்டாம் மதியம் சரவண பவனுக்குச் செல்வோம் என்று திட்டம் போட்டிருக்கும் போது 'இந்த பக்கமாக வந்தேன் அப்படியே பாத்துட்டுப் போவலாம்னு வந்தேன்' என்று ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தால், கேட்கும் நமக்கு நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல் இல்லாவிட்டாலும், 'தினமும் உங்க சாப்பாட்டை மனுசன் சாப்பிடுவானா ?' என்று மகிழ்வோடு வெளியே இருந்த குழந்தைகள் கணைத் தொடுப்பார்கள். முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு பார்க்கப் போனால் யாரும் அதைக் குறை காண்பது இல்லை.

முதலில் உறவுக்காரர்களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் மற்றவர் வீட்டுக்குச் செல்ல போதிய காரணம் இருக்க வேண்டும், சும்மா பார்த்துச் செல்ல காதுகுத்தி, திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள் அழைப்புகள் என்று எத்தனையோ குடும்ப நிகழ்ச்சிகள் இருக்கிறது, நான் ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் சென்றாலும் எனக்காக விடுமுறை எடுக்காதீர்கள் என்றே என் அக்கா, தங்கையிடம் சொல்வதுண்டு, அன்றைக்கு எதுவும் மற்ற வேலை இருந்தாலும் போய்விட்டு வாருங்கள், பக்கத்தில் எங்காவது சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்வதுண்டு, 'நான் எப்போ ஒருமுறை வருகிறேன், என்னைக் கவனிப்பதைவிட உனக்கு என்ன வேலை ?' என்று நாம் கேட்டால் அவர்களுக்கும் வெளியே சொல்லமுடியாத சங்கடங்களையும் சேர்த்தே கட்டிவிடுகிறோம், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகள் தவிர்த்து ஒருவரை பிடித்து இழுத்து வைப்பது நாம் சென்ற பிறகு அவர்களுக்கு பிற சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கும். சீனர்கள் விடுமுறை நாட்களில் எவரையும் வீட்டுக்கு அழைப்பது கிடையாது. நான் சென்று வந்த சீன நண்பர்களின் வீடுகள் அனைத்திற்கும் எதாவது நிகழ்ச்சியின் அழைப்பின் பேரில் மட்டுமே சென்றிருக்கிறேன், அக்கம் பக்கம் சீன வீடுகளில் உறவினர் நடமாட்டங்களும் மிக அரிதாகவே இருக்கும்.

முன்பெல்லாம் உறவுக்காரர்கள் வீட்டுக்குச் செல்ல பலகார மூட்டையும் கூடவே செல்லும், இப்பொழுது பலரும் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கூடுதல் எடை என பல்வேறு உடல் நலச் சீர்கேட்டால் இருக்கும் போது, அல்லது உடலை கெடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஓரளவு உடல் நலம் பற்றிய அக்கரையில் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவர்கள் நாம் வாங்குவதை திண்பார்களா இல்லையா என்று எதுவும் அறியாமல் வாங்கிச் செல்லும் இனிப்புப் பண்டங்கள் பெரும்பாலும் குப்பைக்குத்தான் செல்கின்றன, என்வீட்டுக்கு வரும் இனிப்புகளில் 80 விழுக்காடு குப்பைக்குத்தான் செல்லும், மாற்றாக பழங்களாக வருபவற்றை நாங்கள் வீணாக்குவது இல்லை, ஒருவர் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் இருந்தால் கொஞ்சம் பிஸ்கெட் அல்லது சாக்லெட், பெரியவர்களுக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லலாம், அர்சனா / கிருஷ்ணா / ஆனந்தபவன் ஸ்வீட் வகைகளில் ஒருகிலோ / இரண்டு கிலோ வாங்கிச் சென்றால் தான் அன்பா ? நெய் கலந்த கொழுப்பு மிக்க பண்டகளை தற்காலத்தில் யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. ஒருவேளை வாங்கி வந்துவிட்டார்களே வீணாக்காமல் தின்போம் என்று தின்றுவிடுவர்கள் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருந்தால், இரத்ததில் கொழுப்புக் கூட... அதற்கு தனியாக மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தாலும் இருக்கும். உறவினர் வீட்டுக்கு செல்லும் போது அவர்கள் 'இருங்க காபி எடுத்துவருகிறேன்' என்று சொல்லும் போதும் அல்லது சொல்லாமல் எடுத்துவரும் போதும் உங்களுக்கு இனிப்பு ஆகாது என்றால் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள், யாரும் அதை சங்கடமாக நினைப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் என்ற வகையில் இனிப்பு சாப்பிட முடியாதவர்களை யாரும் கட்டாயப்படுத்தி 'திருப்பதி லட்டு, பிரசாதம்' இது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொன்னால் அது விசம் கொடுப்பதற்கு ஒப்பானது. உறவினர் / நண்பர் வீட்டுக்குச் சென்று காபி வருமா வராதா என்ற அளவுக்கு அங்கே உட்கார்ந்து பேசும் நிலைக்குச் செல்லும் முன் கிளம்புவது நல்லது. கிளம்புவது போல் பாவனைக்காட்டினாலே அவர்கள் காப்பி தருவார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

இன்றைக்கு இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கைச் சூழலில் ஆணுக்கு ஆசை இருந்தாலும் பெண்ணின் விருப்பம் குறித்த புரிந்துணர்வு இருப்பதால் கணவன் - மனைவி இடையே கட்டாய பாலியல் வல்லுறவுகள் கிடையாது. பெண்ணின் விருப்பம் குறித்தும் கேட்கப்படுகிறது, இன்றைக்கு ஆண் சமூகம் எவ்வளவோ அடக்கப்பட்டுள்ளது, அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளது, அடங்கும் சூழலில் உள்ளது, அதையெல்லாம் ஒப்பிட 60 வயதிற்கு மேலானவர்கள் அதிர்ஷடக்காரர்கள், அவர்களுக்கு தன்னளவில் இழப்பு என்று எதுவுமே இருந்திருக்காது, பெரு நகரச் சூழலில் கணவன் - மனைவி இடையே பாலியல் உறவு கூட திருமணம் ஆன சில ஆண்டுகளில் வாரம் ஒருமுறை பின்னர் மாதம் ஒருமுறை, அதன் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை என்றே குறைந்துவிட்டது. இவற்றையெல்லாம் யாரும் விரும்பிப் ஏற்படுத்திக் கொள்வது கிடையாது, வாழ்க்கைச் சூழல் அழுதத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள், இவை தனிமனித தவறுகள் இல்லை. இதைப் புரிந்து கொள்பவர்கள் காலத்தை ஒப்பிட்டுப் பேசுவது கிடையாது. 

பெரியவர்கள் மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் குழந்தைகளும் ஒன்று போல் தான் இருக்கிறார்கள், அவர்களிடம் மாற்றமாக நாம் பார்ப்பது இன்றைய காலத்தில் அவர்களுக்கு கிடைத்த வசதிகளில் கிடைத்த கூடுதல் அறிவுதான், எந்த காலத்திலும் குழந்தைகளிடம் நெருப்பைக் கொண்டு சென்றால் எட்டிப்பிடித்து நெருப்பில் விரலைச் சுட்டுக் கொள்ளத்தான் செய்வார்கள். 

நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் இருந்தபோது தன்னை வந்துப் பார்க்கவில்லை என்று முகம் தூக்கிக் கொள்பவர்களும் தற்பொழுது குறைவு, அவரவருக்கு என்ன வேலையோ என்று நினைத்து மற்றவர்களின் நேரங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள். பழைய காலத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், தற்பொழுது பலவற்றை இழந்து தான் வாழ்க்கையையே ஓட்ட வேண்டி இருக்கிறது. இதில் தனிமனிதனையோ, இன்றைய சமூகத்தையோ குறையாகப் பார்க்க ஒன்றும் இல்லை

12 ஜனவரி, 2012

மதவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் !

நாத்திகவாதத்திற்கு எதிராக எப்போதும் வேண்டுகோள் என்ற பெயரில் எள்ளி நகையாடப்படுவதில் ஒன்று "உங்க நாத்திக பிரச்சாரங்களை உங்கள் குடும்பத்தினருக்கு செய்தீர்களா ?, அவர்கள் வழிபாடு செய்வதை உங்களால் தடுக்க முடிகிறதா ?" ஐயா வெறும் வழிபாடு மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வழிபாடுகளை நாத்திகன் பழித்ததாகத் தெரியவில்லை, ஒரு நாத்திகனின் மனைவி வீட்டுகுள் சூடம் கொளுத்துவது அதிகபட்சமாக சூடத்தில் களப்படம் இருந்தால் கரும் புகையினால் கண் எரிச்சல் தரும் அவ்வளவு தான், அவற்றை நாத்திகர் பொறுத்துக் கொள்கிறார்கள். கழிவறை செல்லும் விருப்பங்களை யாருமே தவறு என்ற சொல்லமாட்டார்கள். அவரவருக்கான உந்துதல் என்ற அளவில் நாத்திகன் வழிபாடு செய்பவர்களை பழிப்பது கிடையாது, நடுத்தெருவை கழிவறையாக்கினால் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது அது போல் தான் ஆன்மீகம் என்ற பெயரில் பொது இடத்தில் மதவியாபாரங்கள் கடைவிரிக்கப்படும் போது மதத்தீவிரவாதத்தின் தன்மைகள், பாதிப்புகள் சுட்டப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாத்திகன் ஏன் தன் வீட்டினரின் வழிபாட்டை கேள்வி கேட்பதில்லை என்பது இப்பொழுது தெளிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பெரும்பாலும் நாத்திக பிரச்சாரங்கள் மூடநம்பிக்கை, மதவாத மற்றும் மனித இன வெறுப்புவாதங்களை எதிர்த்தும், அவ்வாறு எதிர்க்க அவற்றில் பிணைக்கப்பட்டுள்ள கடவுள் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி துவங்கி மூடநம்பிக்கை, மதவாதாங்களை முற்றிலும் தகர்க்க முடியாவிட்டாலும் அவற்றில் உள்ள பித்தலாட்டங்களை, அரசியல்களை வெளிச்சம் போடுவதன் மூலம் பொதுமக்களின் உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் விழிப்புணர்வு தூண்டலை தம் பிரச்சாரங்கள் மூலம் செய்கின்றன நாத்திக வாதங்கள், நாத்திகவாதம் என்பது கடவுள் மறுப்பு மட்டுமே சார்ந்தவை அல்ல, நாத்திக வாதமென்பது புத்தர் காலத்திற்கு முற்பட்ட தேவையாக இருந்து இன்றும் அவை தேவை என்பதாக உள்ளது என்பது அவை தொடர்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்,

மதவாதிகளால் இந்த உலகம் சிதறடிக்கப்பட்டு இருக்கின்றனவே அன்றி ஒருமித்த ஒற்றுமைகான தீர்வு அவர்களால் என்றுமே சொல்லப்பட்டு இருந்ததில்லை என்பதை, ஒரு மதம் என்பது பிரிதொரு மதத்தை நாத்திக மதமாக பார்க்கிறது என்பதிலிருந்து அனைவருக்குமே தெரியும், ஏனெனில் மதக்கட்டுமானத்தில் கடவுள் என்பது அம்மதத்தை மட்டுமே உண்மையானதாகவும், அந்தக் கடவுள் மட்டுமே உண்மையானதாகவும் பிரிது யாவும் போலி என்றும் நம்பிக்கையற்றோர் என்றும் கூறிவருகின்றனர். மதவாதிகளை பொதுப்படுத்திக் கேள்வி கேட்கும் போது அவர்கள் தங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக் கொண்டு தாங்கள் மதவாதிகள் அனைவரும் ஒரே இறைவனை நம்புவதாகவும் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அதில் இம்மியும் உண்மை இல்லை, ஒரு வழிபாட்டுத்தளத்தின் திருவமுதை, கடவுள் ஒன்றே என்றால் மற்ற மதத்தை பின்பற்றுபவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா ? ஆனால் அவர்கள் என்றுமே அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை, தீண்டத்தகாத ஒரு பொருளாக பார்த்து புறக்கணிக்கின்றனர் என்பது தான் உண்மை, மதவாதிகளின் மத, கடவுள் அரசியல் அறியாத பொது மக்கள் மட்டுமே எந்த வழிபாட்டுத் தளங்களையும் புறக்கணிப்பது இல்லை.

*****

மதவாதிகளே,

1.உங்கள் மதமோ மார்கமோ, நல்வழியோ எதுவாக இருந்தாலும் அவற்றை நீங்கள் நன்றாக உள்வாங்கி இருப்பதாகவும், அவற்றின் படியே நடந்தால் உலகம் உய்வுரும் என்று சொல்லுகிறீர்கள், அப்படி என்றால் அவற்றைப் பற்றி எதுவுமே அறியாதவர்களிடம் வந்து பிரச்சாரம் செய்வதை விட அவற்றைப் பற்றி உங்களை விட சற்று குறைவாக அறிந்துள்ள அல்லது சரியாக உள்வாங்காமல் தவறு செய்யும் உங்கள் மதத்து தீவிரவாதிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களை உங்கள் நலவழிக்கு திருப்பினால் உலகில் தற்கொலை குண்டுவெடிப்புகளும், மதத்தீவிரவாதத்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் பெருமளவு தடுக்கபப்டுமே, இதை ஏன் நீங்கள் செய்வதில்லை ?

இயந்திரவியல் படித்து அதன் படி, அல்லது சொந்தமாக தொழில் செய்து கொண்டு நல்ல நிலையில் இருப்பவர்களிடம் வந்து நீ மருத்துவம் படித்தால் இன்னும் சம்பாதிக்கலாம் என்று கூறுவது அபத்தம் தானே, அதற்கு பதிலாக ஏற்கனவே மருத்துவம் படித்து பாதியில் ஓடி அல்லது தேராமல் வெளியேறி அரசுக்கு தெரியாமல் அரை குறை மருத்துவம் பார்த்து நான்கு பேர் செத்துப் போவதற்கு காரணமான ஒருவருக்கு முறையான மருத்துவ பாடங்களை கற்றுக் கொடுப்பது எளிதா ? அல்லது முற்றிலும் துறைக்கே தொடர்பில்லாத ஒருவருக்கு மருத்துவம் சொல்லிக் கொடுத்து மாமேதை ஆக்குவோம் என்று கூறி செயல்படுவது எளிதா ?


2. உங்கள் மதத்தின் உட்பிரிவுக்குள் ஒரு பிரிவான நீங்கள் மட்டும் தான் அக்மார்க் மற்றதெல்லாம் ஆகாத மார்க் என்கிறீர்கள், அப்படி என்றால் உங்கள் பிரச்சரங்களை உங்கள் உட்பிரிவுகளுக்கு நீட்டித்து அவர்களையெல்லாம் உங்கள் அக்மார்க்கத்துக்கு திருப்பிவிட்டு உங்கள் மதம் சாராதவர்களிடம் உங்கள் பிரச்சாரம் செய்யலாமே, உங்கள் மார்கத்தை ஓரளவு உள்வாங்கியவர்கள் புரிந்து கொள்ள முடியாதவற்றை உங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாதவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பின் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை. அதாவது உங்கள் வீடு தூய்மையானது என்றால் உங்கள் தெருவில் வசிக்கும் மற்றவர்களையும் அவ்வாறு இருக்கச் சொல்லி மாற்றிவிட்டு அதன் பிறகு பக்கத்து தெருவோ வீடோ தூய்மையாக இருக்கிறதா என்று பார்க்கலாமே ?

3. மதவாதிகளே, உங்கள் கூற்றுப்படி, உங்கள் புனித நூல்களின் படி உங்கள் கொள்கைகளை ஏற்காத எவரும் நரக நெருப்பில் வாடுவார்கள் என்று நன்கு தெரிந்துள்ளீர்கள், நரக நெருப்பில் வாடப் போகிறவர்களுக்காக வருந்தாமல் அவர்களின் தற்கால வாழ்க்கையையும் உங்கள் மதத்தீவிரவாதங்களின் தற்கொலைகளால் நரகமாக்கப்படுவது உங்களுக்கு தெரியவில்லையா ? நாங்களெல்லோரும் இந்த பூமியோ சொர்கம், அதில் தத்தமவருக்கு கிடைத்தவர்களே உடனிருக்கும் சொர்கவாசிகள் என்று மெய்யான இந்த உலகை சொர்கமாகத்தான் நம்பியுள்ளோம், கற்பனை மற்றும் நம்பிக்கை சார்ந்த சொர்கம் பற்றி எங்களுக்கு கவலை எதுவும் கிடையாது, எங்களை எங்களது உலக சொர்கத்திலாவது அமைதியாக வாழவிடலாமே, உங்கள் கூற்றுபடி நரகத்திற்கு செல்லும் முன்பாவது நாங்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகிறோம், அதை செய்ய உங்களுக்கு என்ன தயக்கம் ?

4. கடைசி நாள், தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டதன் அறிகுறிகள் உங்களுக்கு நன்கு தெரிவதாகச் சொல்கிறீர்கள், அப்படி என்றால் அது குறித்த சிந்தனையில் உங்கள் கவனம் இருந்து உங்கள் சொர்க வாயிலின் டோக்கனை நீங்கள் பெற்றுக் கொள்ள உங்கள் மதம் சார்ந்த ஈகைகளை செய்ய முயற்சி எடுக்காமல் அவற்றில் முற்றிலும் நம்பிக்கை இல்லாதவர்களிடம் நீங்கள் செய்யும் மதவாதப் பிரச்சாரம் உங்கள் நேரங்களை விழுங்குவதுடன் டோக்கன் உங்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் அபாயம் இருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா ?முதலில் உங்களை மேன்மைபடுத்திக் கொண்டு பிறருக்கு அறிவுரை கூறுங்கள். உங்கள் மத மார்க்கப்படி நீங்கள் ஆகாய மார்கமாக சொர்கம் செல்லுவீர்க்ள், ஆனால் நாங்கள் தரை மார்க்கமாக பேருந்திலோ, தொடர்வண்டியிலோ தான் செல்லவேண்டி இருக்கிறது, அதில் குண்டு வெடிப்பதால் எங்கள் வாழ்க்கைச் சொர்கம் நரகமாக்கப்படுகிறது என்பதால் இந்த வேண்டுகோள்.

*****

மதத் தீவிரவாதம் பற்றிய விக்கி இணைப்பு

ஒரே மதத்தைச் சார்ந்த பல நாடுகளில் சில உணவுக்கு வழியே இல்லாத ஏழைகளைக் கொண்டதாகவும் பிற மீதமான உணவை கடலில் கொட்டுவதாகவும் உள்ளன, இதிலிருந்து மதம் என்பது ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதாரத்தை சமப்படுத்தும் சாதனம் இல்லை என்று நன்கு தெரிந்து கொள்ளலாம், இதை ஒப்புக் கொண்ட நாடுகள் தங்களை மதச் சார்பற்ற நாடுகள் என்று கூறிக் கொள்கின்றன, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த எந்த ஒருவரும் தங்கள் நாடு மதச் சார்பற்ற நாடாக தொடர்வதையே விரும்புகின்றனர், அதன் மூலம் மதம் சார்ந்த தங்கள் உரிமைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள், ஆனால் நாம் பெரும்பான்மை நிலைக்கு வளர்ந்து இந்த நாடு நம் மதம் சார்ந்த நாடாக மாறவேண்டும் என்ற தற்கால வாழ்க்கைக்கு முற்றிலும் ஒத்துவராத முரண்பட்ட கனவும் காண்கிறார்கள்.

உலகில் எந்த ஒரு காலகட்டத்திலும் 100 விழுக்காடு ஒரே மதத்தைப் பின்பற்றிய மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது அவை இனியும் ஏற்படாது என்பது தெளிவு, எனவே தம் பின்பற்றும் மதம் உலகின் ஒரே மதமாகும் என்கிற கனவுகளை மதவாதிகள் கைவிட்டுவிடலாம், தேவைக்கேற்ப ஊருக்கு பொதுக் கழிவறைகள் உருவாவது போல் மதங்களோ, புதிய மதங்களோ உருவாகிவிடும், இவை திறந்த வெளி கழிவறையாகி தொற்று நோய் ஏற்படும் நிலை ஏற்படும் முன் அங்கு நாத்திக கழிவறைகளும் மாற்றாக ஏற்பட்டுவிடும். இது தான் இதுவரை நடந்துள்ளது.

பின்குறிப்பு : நான் ஆத்திகனோ, நாத்திகனோ இல்லை, அவற்றின் கடைகோடிகளை முற்றிலும் அறியாத நிலையில் அவற்றில் எந்த ஒரு நிலையையும் நான் சார்ந்து இருப்பது இல்லை, இதனால் என்னால் போலி மதவாதிகளையும், போலிச்சாமியார்களையும், மதத்தீவிரவாதிகளையும் 'இறை அச்சம்' எதுவுமின்றி விமர்சனம் செய்யமுடிகிறது. மேலும் மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரை வேண்டுகோளில் நான் எந்த ஒரு தனிமதத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை, அப்படி உங்களுக்குத் தோன்றினால் உங்கள் மதத்தின் மீதான உங்கள் ஆழ்ந்த பார்வை உங்களை அப்படி நினைக்கச் சொல்கிறது என்றே பொருள்.

நான்கு பேர் மத்தியில் யாராவது குசு விட்டிருந்தால், விளையாட்டாகச் சொல்லுவார்கள், 'குசு விட்டவன் கை சிவந்திருக்கும்' இதுல என்ன நகைச்சுவை என்றால் தன் கை சிவந்திருக்கிறதா என்று குசுவிடாதவரும் பார்ப்பார், அவ்வாறு பார்க்கத் தேவை இல்லை என்பது தான் பின்குறிப்பின் செய்தி. மதவாதிகளே நீங்கள் ஏற்படுத்தி இருக்கும் பொதுப்பயம் பலரின் வெளிப்படையான விவாதங்களை தடுக்கிறது, கட்டுப்படுத்துகிறது என்பது உங்களுக்கான வெற்றி அல்ல, அது உங்கள் மீது படித்திருக்கும் பொதுப்பார்வை, அவற்றை ஏற்படுத்தியது நீங்கள் தான், முடிந்தால் அவற்றை களைய /கழுவ முயற்சி செய்யுங்கள். நான் தனிமனித தாக்குதல்களோ, தனிமதத் தாக்குதலோ செய்வதில்லை என்பதில் உறுதியாகத்தான் உள்ளேன். எனக்கு புத்தமதம் உள்ளிட்ட அனைத்த மதங்களில் ஏராளமான நெருங்கிய நண்பர்கள் உண்டு.

மத நம்பிக்கைகள் கழிவறை பயன்படுத்துவது போன்று தனிமையான, யாருக்கும் தொந்தரவு செய்யாத, யாருடைய தொந்தரவையும் விரும்பாத ஒரு தனிமனித தேவை மற்றும் விருப்பம் போல் இருந்தால் அவை விமர்சனம் செய்யப்பட மாட்டாது.

19 டிசம்பர், 2011

ஒரு மொழி அழிந்தால் என்னவாகும் (1) ?

மொழிகள் பேசப்படாமல் அழிவதிலும், அல்லது பிற மொழியினரால் அழிக்கப்படுவதிலும் அது பிறரிடம் திணிக்கப்படுவதிலும் உடன்பாடு அற்றவன், காமம் என்பது இனிமையான உணர்வு என்றாலும் ஒப்புதலுடன் கூடுதல் மற்றும் வன்புணர்வாக தீர்த்துக் கொள்ளப்படுதல் என்பதன் மிகப் பெரிய வேறுபாடுகளைப் போன்றது பிற மொழியை தனிப்பட்ட ஒருவர் விரும்பிக் கற்பது மற்றும் அதன் மீது தொடர்ந்து செய்யும் புறக்கணிப்பு.

எப்போதும் அறிவீனர்கள் அல்லது மேம்போக்களர்களின், பொதுப் புத்தியாளர்களின் கூற்று 'மொழிங்கிறது பேசுவதற்குத்தானே (Medium of Communication) அதற்கும் மேல் என்ன இருக்கு ?' என்கிறார்கள், பெருவாரியானவர்களின் புரிதல் கூட இத்தகையது தான், அவை வெறும் அடிப்படைப் புரிதல். மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான் என்ற நிலை மனிதன் தோன்றிய காலம் தொடர்ந்து இருந்தால் காக்கைக் கூட்டம் எங்கும் வாழ்ந்தாலும் ஒன்று போல் கரைவது என்ற நிலையில் தான் மனிதனின் மொழி ஒன்றாகவே இருந்திருக்கும். இங்கே முதன்மையாக கவனத்தில் கொள்வது என்ன வென்றால் மதவாதிகளின் படைப்புக் கூற்றுகளை உடைத்துப் போடுவதன் மறைமுக கருவியாகவே இருக்கிறது, மனிதன் படைக்கப்பட்டு இருந்தால் அவனுடைய மொழி ஒன்றாகவே இருந்திருக்கும், அல்லது அடிப்படைச் சொற்களான தாய் தந்தை உறவு முறைப் பெயர்களாவது ஒன்றாக இருக்க வேண்டும், ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்குள் கூட சொற்கள் அவ்வாறு இல்லை என்பது கவனிக்கத் தக்கது. மனிதன் படைக்கப்பட்டு பல்கிப் பெருகினான் என்ற மதவாதக் கூற்றை மொழிக் கூறுகள் முற்றாக உடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதுமொழிப் பற்றிய சமூகக் கருத்து அல்லது மாற்றுப் புரிதல் தான், இங்கு கூற வருவது மொழிப் பற்றிய அரசியல் சார்ந்த புரிந்துணர்வுகள் இல்லை.

மொழி என்பது மனிதனின் வாழும் சூழலுக்கேற்ப உருவாக்கப்படுகிறது அல்லது உருப்பெறுகிறது என்பது தான் மொழியாளர்களின் மொழிக் குறித்த அடிப்படை பாடம், மொழியின் தோற்றம் என்பவை ஒரு மனிதன் வாழும் சூழலில் தம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி கதைப்பதற்கு உருவாக்கப்பட்ட சுட்டுச் சொற்களாக இருந்து பின்னர் அவர்களிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் தொகுப்பு ஒலிகள் என்ற அளவில் வளர்ந்து தத்தம் சந்ததியினரிடையே வரலாற்று ஒலிகோப்பாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவது ஆகும்.

மனித ஒலிகள் அத்தனையும் ஒலி அலைவரிசையினுள் அடக்கம் என்றாலும் ஒரு குறிப்பிட்ட மொழிக் குறித்த சரியான ஒலிப்பு (உச்சரிப்பு) ஒன்றை பிற மொழியினரால் அப்படியே உள்வாங்க முடியாது, இதற்கு அடிப்படைக்காரணம் மொழிச் சொற்களின் அல்லது குரல் ஒலிகளின் தோற்றம் அல்லது உருவாக்கம் என்பவை மனித தொண்டை அமைப்பு, முக்குத் துளை, மூக்கு வடிவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மிக்க குளிர் மிகுந்த நாடுகளில் வசிப்போரின் மூக்கு அமைப்புகளும் புறத்தோற்றம் மற்றும் நிறம் கூட பிற இடங்களில் வசிப்பவரை ஒப்பிட மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும், வாயை நன்கு திறந்து பேசினால் குளிரையும் உள்ளிழுக்க வேண்டிய சூழலைத் தவிர்க்க அவர்களின் சொற்கள் மற்றும் சொற்களின் ஒலி அமைப்பு உதடுகளை அதிகம் விரிக்காமல் அல்லது வாயைத் திறந்து (உதடு ஒட்டும் ஒட்டாது என்பது போல்) பேசப்படும் சொற்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்ததாகவே இருக்கும், மாறாக வெப்ப நாடுகளில் வசிப்போருக்கு மூச்சுவிடுதல் ஒரு பெரிய இடற்பாடு இல்லை என்பதால் அவர்களின் மொழிகளில் இயல்பாகவே பல்வேறு ஒலிகளை கொண்ட சொற்கள் இருக்கும். மனிதன் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் சூழலுக்கு ஏற்ப முந்தைய மொழிகளின் திரிபுகளும் கண்டு கொண்ட புதிய நில அமைப்புகள் அவற்றின் தன்மை, பயனுக்கான, பொருளுக்கான புதிய சொற்களின் உருவாக்கங்களும் சேர கிளை மொழிகள் உருவாகின்றன. இது மொழிகள் உருவாக்கம் மற்றும் கிளைத்தல் பற்றிய மொழியாளர்களின் அடிப்படைப் புரிதல்.

மொழிகள் பண்பாட்டுக் கூறுகள் என்கிறார்கள், அதாவது ஒரு மொழிப் பேசுபவர்களின் கலைத் திறன் மற்றும் பண்பாடு அவற்றின் பழக்க வழக்கங்கள் அவர்கள் பேசும் மொழியின் வாயிலாகவே அவர்களிடையே தொடர்சிகளை காக்கிறது. குழுக்களுக்குள் மனிதப் (புலம்) பரவல் இல்லாத காலங்களில் எழுத்துகளின் தேவை என்பதற்காக இன்றியமையாத பிற காரணங்கள் எதுவும் இல்லை, நாகரீக வளர்ச்சி அல்லது அறிவின் சேமிப்பு, குரல்களை எடுத்துச் செல்ல இன்றியமையாமை என்ற தேவை ஏற்பட்ட போது (பொதுவாக மன்னர் ஆட்சி, நாகரீக சமூகம் என்று வளர்ந்த நிலையில்) எழுத்திற்கான தேவை ஏற்பட நாகரீகம் வளர்ந்த நிலையில் இருந்த மொழி இனங்கள் தங்களுக்கான எழுத்துளை அமைத்துக் கொண்டன. எழுத்துகள் இல்லாத மொழிக்குழுக்கள் பேசுவதன் மூலம் மட்டுமே தத்தம் சந்திகளிடைய முன்பு தாம் சேகரித்த தகவல் மற்றும் தொழில் குறித்த அறிவுகளை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு மொழி அழிந்தால் என்ன ஆகும் ? மொழிகள் அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன, தற்காலத்தில் பொருள் ஈட்டப் பயன்படாத மொழி என்ற அளவில் தாய்மொழிகள் ( தொல் பொருள் காப்பகங்களில்) தள்ளிவிடப்படுகின்றன. தொடர்ச்சியான புலம் பெயர்வு மற்றும் பிறமொழியினரின் படையெடுப்புகள், திணிப்புகள், புறக்கணிப்புகள் என்ற அளவீடுகள் மொழி அழிவதற்கான முதல் காரணிகளாக உள்ளன, அவைத்தவிர்த்து குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் பொறுப்பின்மை. ஒரு மொழிப் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டால் அவற்றில் புதைந்துள்ள அறிவு சார்ந்தவைகளும் சேர்ந்தே அழிந்து போகும், உதாரணத்திற்கு குறிப்பிட்ட மூலிகைக் குறித்த பயன்பாடுகள் அவற்றை வளர்ப்பது மருந்தாக்குவது ஆகியவை மொழிக் குறியீடாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் போது அம்மொழியே அழிந்த பிறகு அம்மூலிகையின் பயன்பாடு குறித்த பயன்பாடுகளும் அழிந்தே போகும், தமிழில் பழைய மருத்துவ நூல்கள் யாவிலும் சித்தமருத்துவ முறைகள் பாடல்களாக மறைமுகப் பொருளில் தான் கூறப்பட்டுள்ளது, அவற்றின் பொருள் புரிந்து அம்மூலிகையை மருந்தாகப் பயன்படுத்த நல்ல தமிழ் மொழி அறிவும், அச்செய்யுள்களின் மறை பொருள்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலும் இருந்தால் மட்டுமே முடியும்.

மூலிகை மட்டும் அல்ல, விவசாயம், வேட்டை ஆடுதல், கட்டுமானம், பிற தொழில் மற்றும் அன்றாடப் பயன்பாடுகள் ஆகியவற்றின் கருவூலமாக மொழி இருந்து வந்திருக்கிறது, குறிப்பிட்ட சில வகை ஆக்கங்களை பிறர் அறிந்து கொண்டால் பேராபத்து அல்லது தம் தொழிலைச் செய்ய முடியாது என்ற அளவில் சங்கேதமாகவே எந்த ஒரு மொழியில் பல கூறுகள் அமைந்துள்ளன, இன்றைக்கு இராணுவ இரகசியங்களைக் கோட் செய்வது போன்றவை அவை, குறிப்பிட்ட கோட் முறைப்பற்றிய விளக்கங்கள் அழிந்து போகும் போது காத்த இராணுவ ரகசியகங்கள் எவருக்குமே புலப்படாமல் அழிந்து போவது போன்றவை அவை. இராணுவ ரகசியங்கள் மறைந்து போவது இராணுவத்திற்கு இழப்பு அன்று, ஒட்டுமொத்தமாக அந்த நாட்டுகே இழப்பு, மொழியாளர்களின் கூற்று மிகத் தெளிவாக

ஒரு மொழியின் அழிவு என்பவை தனிப்பட்ட அம்மொழிப் பேசுபவர்களுக்கான இழப்பு அல்ல மாறாக அவை ஒட்டு மொத்த மனித குலத்திற்கான ஈடு செய்ய இயலாத இழப்பு தான் என்பதை நம்புங்கள் என்கிறார்கள். ஒரு மொழி அழியும் போது அம்மொழிப் பேசியவர்களின் அம்மொழி வழியாக அறிந்திருந்த தனிப்பட்ட அறிவுத் திறன்களையும் சேர்த்தே உலகம் இழக்கிறதாம்.

ஒரு மொழி அழியும் போதும் மேலும் என்ன ஆகும் ? பிரிதொரு பகுதியில் பார்ப்போம்.

Ref :
When Languages Die: The Extinction of the World's Languages and the Erosion of Human Knowledge

21 செப்டம்பர், 2011

பக்திப்பட இயக்குனர் ஏபி நாகராஜன் !

திரைப்படங்கள் பொழுது போக்குத் தொழில் என்றாலும் பண்டைய இயல் இசை நாடகக் கலைகளின் தொகுப்பான / நீட்சியான இன்றைய வடிவம் தான் திரைப்படங்கள் என்பதால் அவை வெறும் பொழுது போக்குச் சார்ந்தவை என்று ஒதுக்கிவிட முடியாது. வாழ்வியல், இசை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை மக்களிடம் கற்று அதைத் தொகுத்து மக்களுக்கே அளித்துவருபவை தான் அவை. எல்லாவற்றையும் வியாபாரப் பொருள்களாக ஆக்கிப் பார்க்கும் இன்றைய உலகில் சிக்கிச் சீரழிந்து வருபவைகளில் இந்தப் பொழுது போக்கு கலையுலகும் ஒன்றாகும். எளிதில் மக்களைச் சென்று அடையும் வியாபாரப் பொருள் மற்றும் அதில் அறிமுகம் ஆகுபவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர் ஆகிறார்கள் என்பதால் புகழும் பணமும் ஒரு சேர நாடுவோருக்கு திறமையின் அடிப்படையில் அவற்றை வாரி வழங்குவது திரைப்படத் தொழிலின் சிறப்பாகும். அதில் கிடைக்கும் பேரும் புகழும் அரசியல் நாற்காலியை அசைத்துப் பார்க்கும் அல்லது கைப்பெற்றும் என்பதால் திரையுலகம் மக்கள் வாழ்வியலை, ஆட்சி அதிகாரத்தை மாற்றும் சக்தி படைத்தவை என்றால் அதில் மறுக்க எதுவும் இல்லை. திரைப்படங்கள் மூலம் நல்ல தமிழை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நல்ல உரையாடல்களை எழுதியவர்கள் மிகச் சிலரே, அதில் குறிப்பிடத்தக்கவர் ஏபி நாகராஜன்.

*****

இன்றைய காலகட்டத்தில் படங்களில் உரையாடல்கள் குறைவு காட்சியும் மக்களின் புரிந்துணர்வும் உரையாடல்களின் தேவைகளைக் குறைத்துவிட்டன, தற்போதைய படங்கலில் நீள உரையாடல்கள் வந்தால் மக்கள் விரும்புவதில்லை, 30 ஆண்டுகளுக்கு முன்புவரை உரையாடல்களுக்காகவே பார்க்கப்பட்டவை ஏபி நாகராஜனின் படங்கள். இன்றைக்கும் எப்போதும் பலமுறைப் பார்க்கத் தக்கப் படங்களாகவே ஏபி நாகராஜனின் சரஸ்வதி சபதம், திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகனாம்பாள் படங்கள் உள்ளன. அருவெறுப்பற்ற நகைச்சுவை, செந்தமிழ் கலந்த சொற்கள் இட்டு நிரப்படுவதுடன் காட்சிக்கு ஏற்ற உரையாடல்களை எழுதுவதில் வல்லவராகவே திகழ்ந்தார் ஏபி நாகராஜன்.

நான் இதுவரைப் பார்த்தப்படங்களில் என்றைக்கும் நினைவில் வருபவையும் பார்க்கப் பார்க்க சலிக்காத படங்களில் ஏபி நாகராஜனின் திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகானாம்பாள், தில்லானா மோகானம்பாள் பற்றி தனியாகக் குறிப்பிடத் தேவை இல்லை, தமிழ் திரையில் வரலாறு படைத்த படங்களில் அது முதன்மையானது, நாட்டுப்புறக் கலைஞர்களின் (தமிழ் நாட்டின் தனிப்பெரும் கலையை நாட்டுப்புறக் கலை என்று ஒதுக்கி வைத்துப் பார்க்கும் கேவலமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்) உணர்வுகளை படம் பிடித்ததுடன் தமிழ்நாட்டில் சிலப்பதிகாரத்திற்கு முன்பிருந்தே வாழும் நடனக்கலையான சதிராட்டம் (பரதம்) படத்தின் மையமாக இருந்தது, நடித்தவர்களும் அதில் வாழ்பவர்களாகவே நடித்திருந்தனர்.

பட்டிதொட்டி எங்கும் வசன நடைகளுக்காக பாராட்டுபெற்று இன்றும் அதன் வசனங்கள் 'மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததோ ?' என்று பலரும் பேசும் புகழ்பெற்ற வசனங்கள் இடம் பெற்றத் திரைப்படம், 'அம்மையப்பன் சொல்லுக்கே செவி சாய்க்காத நான், உன் பேச்சைக் கேட்க சற்று நிற்கிறேன் என்றால் அது நீ பேசும் தமிழுக்காகத் தான்' என்று கோவித்துக் கொள்ளும் முருகன் ஒளவைப்பாட்டியிடம் சொல்வதாக கடவுளுக்கும் மேலாக தமிழை பெருமைபடுத்தி இருப்பார் தன் உரையாடல்கள் எனும் பேனா வீச்சால், அதுமட்டுமா தமிழில் இலக்கண இலக்கிய பொருள் பிழைகள் அது கடவுளே செய்தாலும் மன்னிக்க இயலாத ஒன்று என்று நக்கீரன் வழியாக 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று முழங்கி இருப்பார் ஏபி நாகராஜன்.


திருவிளையாடல் திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் அனைத்தும் கவியரசர் கண்ணதாசன் வரிகளில் தெவிட்டாத இசையமுதம இசையில் என்றும் கேட்கவல்லவை. காட்சி அமைப்பு, பாடல்கள்,இசை அனைத்தும் ஒன்றே பொருந்தி பார்பவரை மூன்று மணி நேரம் கட்டிப்போட வைத்திருக்கும் அப்படம், சிவாஜியின் மிகையற்ற நடிப்பு படத்திற்கு மேலும் மெருகு. ஆணவம் மிக்க கர்நாடக சங்கீதப் பாடகராக (ஹேமநாத பாகவதர்) வரும் டிஎஸ் பாலையா மிகச் சிறந்ததொரு நடிப்பை வழங்கி இருப்பார். 'இன்றொரு நாள் போதுமா ?' பாலமுரளியின் இளம் வயதுக் குரல் என்றென்றும் கேட்க இனிமைதான். அதையும் வீழ்த்த அடுத்து டி எம் எஸ் ஆல் பாடப்படும் 'பாட்டும் நானே பாவமும் நானே', இத்தனையும் கோர்த்து நல்லொதொரு சமூகம், பக்தி மற்றும் பொழுது போக்குப்படமாகவே இயக்கி இருந்தார் ஏபி நாகராஜன்.

அக்கம்மாப்பேட்டை பரமசிவன் நாகராஜன் என்ற முழுதான அவர் பெயரின் சுருக்கமே ஏபி நாகராஜன். சிவாஜி கனேசன், எம்ஜிஆர், ஜெமினிகனேசன், சாவித்திரி, பத்மினி மற்றும் ஜெயலலிதா, உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் /நடிகைகளை வைத்து பலப் படங்களையும் இயக்கியும், சில தெலுங்கு படங்களின் கதை / திரைகதை அமைத்துள்ளார்

வடிவுக்கு வலைகாப்பு என்ற 1962ல் தொடங்கிய அவரது இயக்குனர் பயணம் எம்ஜிஆர் நடித்த நவரத்தினம் 1977 வரை நீடித்தது, கிட்டதட்ட 15 ஆண்டுகள் 26 படங்கள் வரை இயக்கியுள்ளார், அவர் இயக்கியவைகளுள் இன்றும் பேசப்படுபவை, பார்க்கப்படுவை அவற்றில் சில

திருவிளையாடல், தில்லானாமோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை ஆகியவை, மேலும் ராஜ ராஜ சோழன், காரைக்கால் அம்மையார், திருமால் பெருமை, திருவருட் செல்வர் உள்ளிட்டவை பக்தி மற்றும் வரலாற்றுப் படங்களாகும், பெரியார் முழுக்கம் தமிழ்நாட்டில் பெரியத்தாக்கம் இருந்தும் ஏபி நாகராஜனின் பக்திப்படங்கள் மிகவும் விரும்பிப்பார்க்கப்பட்டன என்பது இங்கு குறிப்ப்டத் தக்கது, இன்னும் சொல்லப் போனால் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரங்களையும் அதனால் ஏற்பட்ட மக்கள் உணர்வு அலைகளையும் மறைமுகமாக கட்டுப்படுத்தும் வேலையை இவரது வசனங்கள் செய்தன என்றால் அது மிகையல்ல.

பக்திப்படங்கள் மட்டுமல்லாது நவராத்ரி, மேல்நாட்டு மருமகள், குமாஸ்தாவின் மகள் மற்றும் சில சமூகப்படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகனேசனின் முழுமையான நடிப்பாற்றலை வெளிப்பட வைத்த இயக்குனர்களில் இவரே முதன்மையானவராக நினைக்க முடிகிறது.

தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திகாட்டி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கும் பங்காற்றிய ஏபி நாகராஜன் இந்திய அரசால் இன்னும் கவுரவிக்கப்படவில்லை என்பதை பலர் வருத்ததுடன் சொல்கிறார்கள்.
ஏபிநாகராஜனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு அவர் தமிழனாகவும் பிற்பட்டவராகவும் பிறந்தது தான் காரணம் என்றே எண்ண வேண்டியுள்ளது.

தமிழ் கூறும் நல் உலகிலும் ஏபி நாகராஜன் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை, அவரது பிறந்தத் தேதி வயது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை. அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள விக்கிப்பீடியா ஆங்கிலக் கட்டுரையில் அவரது படம் கூட இடம் பெறவில்லை, வரலாறுகள் எழுதப்படாமல் தொலைக்கப்படுவதற்கு நம் அலட்சியமும் காரணம், ஏபி நாகராஜன் பற்றி முழுமையான தொகுப்பை எழுத முடியவில்லை, எதிர்காலத்தில் தகவல்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தகவல் தெரிந்தவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். பின்னர் அவற்றை இடுகையில் சேர்க்கிறேன்.

(From the Web) A. P. Nagarajan is a veteran Tamil film director, who set a trend in film making in Tamil cinema in 1960s. He started his film career as a dialogue writer for Nalvar (1953), in which he also acted. He founded a production with actor V.K. Ramasamy and made Nalla Idathu Sambandham in 1958. When he started directing, his first few films were based on contemporary themes like the one on a boy guide working in Mahabalipuram (Vaa Raja Vaa). In the mid sixties he directed a series of films on religious subjects like Sarasvathi Sabatham (1966), thereby starting a trend in Tamil film making.

20 ஆகஸ்ட், 2009

பெருகிவரும் உறுப்பு தானங்கள் !

மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம். அண்மையில் 'பசங்க' படத்தில் காட்டப்படும் இரு சிறுவர்களின் வீடுகளிலும் ஒருவர் வீட்டில் 'இரத்தானம் செய்துள்ள குடும்பம்' என்ற பலகையும், மற்றொரு வீட்டில் 'உடல் தானம் செய்துள்ள குடும்பம்' என்று பலகையும் இருக்கும், அப்படி ஒரு காட்சியை வைத்த இயக்குனர் பாண்டியராஜை வெகுவாகப் பாராட்டலாம்.


'உடல் மண்ணுக்கு' என்கிற பழமொழிகள் பழமையாகும் நடவெடிக்கை என அண்மைய காலங்களில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விபத்தில் இறந்தவர்களின் உடல் தானம் செய்யும் பெற்றொர்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பது மனித நேயம் வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

உறுப்பு தானங்களுக்கு எதிராக சில கருத்துகள் இருக்கின்றன, உதாரணத்திற்கு உறுப்பு தானம் கிடைப்பது எவ்வளவு எளிதன்று ஆகையால் பணக்காரர்கள் அல்லது பணக்கார நாட்டினர் ஏழைகளைக் குறிவைத்து செயல்படுகிறார்கள், உறுப்புகளின் தேவை வாழ்வியல் ஆதாரம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்புகள் விற்பனை மறைமுகமாக பெரிய தொழிலாகவே நடந்து வந்திருக்கிறது. உறுப்புகளைப் பெற சீனாவை பல நாடுகள் முற்றுகை இட்டதாகவும், மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உறுப்புகள் விற்கப்பட்டதாகவும் Organ Donation (Opposing Viewpoints) என்ற ஆங்கில நூலில் படித்தேன். இந்தியாவிலும் ஏழைகளின் சிறுநீரகங்கள் மலிவு விலைக்கு சட்டவிரோதமாகப் பெற்றததைத் தொடர்ந்து, உலக நாடுகள் உறுப்பு தானங்கள் குறித்த சட்டதிட்டங்களையும், நடைமுறைகளையும், கவுன்சிலிங்க் எனப்படும் ஒப்புதல் குறித்த அனுகுமுறைகளும் ஏற்பட்டு, உறுப்பு தானங்களை முறைப்படுத்தி இருக்கிறார்கள்.

இறந்த உடல்களில் இருந்து பெறப்படும் உறுப்புகள் அழிவதற்குப் பதிலாக மற்றொருவரைக் காப்பாற்றுகிறது என்கிற புரிதல் இருந்தும், இதற்குத் தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான். மதம் !!! ஆப்ரகாமிய மத நம்பிக்கையாளர்கள் அவர்களின் உறுப்புகளை அவர்கள் தானம் செய்யத் தடையாக நினைப்பதற்கு காரணம், 'முழுக்க முழுக்க எனது வாழ்க்கைக்காக கடவுளால் கொடுக்கப் பெற்ற உறுப்புக்களை பிறருக்குக் கொடுக்கும் படி கடவுள் வேத நூல்களில் அறிவுறுத்தவில்லை, எனினும் இஸ்லாமியர்களிடையே உறுப்பு தானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதை மீறி என்னால் உறுப்பு தானம் செய்ய முடியாது' என்ற கருத்து நிலவுவதால் மேற்கத்திய நாடுகளில் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் மதநம்பிக்கையாளர்களிடையே அவற்றிற்கு பரவலான வரவேற்பு இல்லை, இந்த காரணங்களினால் உறுப்புகளுக்கு காத்திருக்கும் நோயாளிகளில் ஆண்டுக்கு 20 விழுக்காட்டினர்வரை இறப்பை தழுவுவதாக அந்நூலில் குறிப்பிட்டு இருந்தது.

இந்திய சமய நம்பிக்கைகளில் மறுபிறவி பற்றிய நம்பிக்கை இருப்பதால் 'உடல் அழியக் கூடியது, உறுப்புகளை தானம் செய்வதால் தவறு இல்லை என்றும், பல்வேறு தானங்கள் இந்திய சமயங்கள் அனைத்திலுமே வழியுறுத்தப்பட்டு இருப்பதாலும் உடல் வேறு தலைவேறாக உறுப்பு அமைந்திருக்கும் கடவுள் உருவங்கள் இருப்பதாலும்' மன அளவில் உடல் தானம் செய்ய விரும்பும் இந்திய சமய நம்பிக்கையாளர்களை இந்திய சமயங்கள் தடைசெய்ய வில்லை என்றும், ஆனாலும் உறுப்புதானங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவிலும் குறைவாகவே இருக்கிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. மத நம்பிக்கையாளர்கள் பிறமதத்தினருக்கு உறுப்பு தானம் செய்ய முன்வராவிட்டாலும் கூட, தன் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன் தானம் செய்ய முன்வரலாம்.


உறுப்பு தானங்கள் பற்றிய பல்வேறு மத நம்பிக்கைகளும், வரவேற்பும் பற்றிய தகவல் இங்கே (http://www.donatelifeny.org)

சிங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் பணி புரிந்த காதலர்களில் காதலர் ஒருவருக்கு கல்லீரல் கெட்டுப் போனபோது, காதலி தானம் செய்து காதலரைக் காப்பாற்றினார் என்ற தகவல் பலரால் பேசப்பட்டு பாராட்டப்பட்டது. உறுப்பு தானங்களின் பயன் கருதி சிங்கப்பூர் அரசு, விபத்தில் இறக்கும் ஒருவரின் உடலில் இருக்கும் உறுப்புகள் தானம் செய்ய முன்வரவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கும் பல்வேறு மத அமைப்புகளும் அதற்கு இணங்கவே சிங்கப்பூரில் விபத்தில் மூளை சாவாக இறப்பவர்களின் உறுப்புகள் செயல்படக் கூடியது என்றால் அதை காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்துகிறார்கள்.


தமிழகத்தில் சென்ற வாரம் திருச்சியைச் சேர்ந்த ஒரு வாலிபரின் உறுப்பு பெற்றோர்களால் தானம் செய்யப்பட்டது, நேற்று சேலத்தில் ஒருவாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. விஐபிகளில் நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்தவர் என்கிற தகவல் பலருக்கும் தெரிந்திருக்கும்.



உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது ? என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்.

6 ஆகஸ்ட், 2009

ஒரு கசப்பான பதிவு ! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

"சர்க்கரை" - நினைத்தாலே இனிக்கும் என்பது நீரிழிவு நோய் (நோய் அல்ல உடலின் இன்சுலின் குறைபாடு) அற்றவர்களுக்குத் தான். நீரிழிவு இருப்பவர்களுக்கு ஒரு துண்டு மைசூர்பாவைக் கூட நஞ்சைப் போல் பாக்கும் நிலைதான் அவர்களது நிலை. இனிப்புகளைப் பார்த்தால் நாவில் எச்சில் ஊரினாலும் அதை அப்படியே துப்பிவிட்டு, முடிந்தால் முழுங்கிவிட்டு, விரல் நுனி அளவிற்கு எடுத்து பெயரளவுக்கு இனிப்புகளை சுவைக்க முடியும்.

"திருப்பதி லட்டுன்னாலும் சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அது ஆலகால விசம்" தான் என்று என் உறவினரிடம் சொன்னேன். நம்ப மறுத்தார். கடவுள் நம்பிக்கை ஆழமாக இருந்தால் உண்மையைக் கூட ஏற்க கசக்கத்தான் செய்கிறது!!!

சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும் செயற்கைச் சக்கரை சாக்கரீன் எவ்வளவு கெடுதலான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பதிவர் நண்பர் மருத்துவர் தேவன் மாயம் சிறப்பாக பட்டியல் இட்டிருக்கிறார்.

சர்க்கரை குறைபாடு விலங்குகளுக்குக் கூட வருமாம், நம்ம பதிவர் துளசி அம்மாவிட்டு (செல்லப் பூனை) ஜிகேவுக்கும் அந்தக் குறைபாடு இருந்ததாம். இருவகை சர்கரை குறைபாட்டில் ஒன்று சர்க்கரை மரபுக் கூறுகளால் வரும் என்றாலும் சரியான உணவு முறைகளின் மூலம் அவை அணுகும் நாளைத் தள்ளிப் போடலாம், முற்றிலும் தவிர்த்துவிடக் கடுமையான உணவுப் பழக்கம் மேற்கொள்ளலாம், இருந்தாலும் அவை பாதிக்கப்பட்டவர்களின் உணவு பழக்கத்தைப் போன்றுதான்.

சர்க்கரை நோய் பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் ? "இதில் பயப்பட ஒன்றும் இல்லை, வழக்கமான உங்கள் உணவுப் பழக்கத்தில் எதையெல்லாம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமோ, கூடுமோ அவற்றை தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்படும் உணவு முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும், சர்கரை நோய்கான அறிகுறி வந்துவிட்டால் Time to Change your food habits என்கிறார்கள்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?

உச்சிமுதல் உள்ளங்கால் வரை உடல் இயக்கத்திற்கு தேவை இரத்தம், அது நீர்த்(த) தன்மையுடன் இருந்தால் உடல் இயக்கம் சீராக இருக்கும், இன்சுலின் குறைபாட்டடல் இரத்ததில் இருக்கும் சர்க்கரை முழுவதுமாக எரிக்கப்படாத நிலை ஏற்படுவதால், சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின் இரத்தம் நீர்த்தத் தன்மையிலிருந்து குழைவுத் தன்மைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறும் (Thingkness of Blood) அதனால் இரத்த ஓட்டத்தின் சீர்மை கெட்டுவிடும், குழைவின் காரணமாக இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற்படும், இரத்தத்தின் மூலம் இயங்கும் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.

சர்கரைக் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் கண், சிறுநீரகம் பாதிக்கப்படும், அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், இரத்த ஓட்டத்தின் சீர்மை கெடுவதால் உடல் அசதி இயல்பாகவே ஏற்படும். சர்க்கரை அளவு மிகுதியாகிவிட்டால் மயக்கம் வரும். இதய நோய், மாரடைப்பு, ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைப் பெருகிவிடும். அதனால் கண்களையும் சிறுநீரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் மருத்துவரிடம் சோதித்துக் கொள்ள வேண்டும். பாதங்களை ஒட்டிய கால்பகுதியில் தோலின் நிறம் கறுப்பாகும். கால்களில் மரப்பு (Numbness) ஏற்படும். கால்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்காவிட்டால், காலில் காயம் பட்டாலும் உடனடியாக ஆறாது. காலையே எடுத்தால் தான் உயிர்பிழைக்க முடியும் என்கிற நிலை எல்லாம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆண்களுக்கு விரைப்பு / எழுச்சிக் குறைப்பாடு ஏற்பட சாத்தியம் உண்டு.

மேலும் ஆண்களுக்கு......

சர்க்கரை நோய் கண்ட முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் உடல் தோலின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும், விரிவடையும் தன்மையுடன் கூடிய ஆண்குறியின் முனைத் தோல் (foreskin) எழுச்சியின் போது விரிவடைந்த (சுறுக்கம் விரிவு மாறி மாறி ஏற்படும் elasticity) நிலையில் இருப்பதால் அதில் சிரிதளவு இரத்தக் கசிவுடன் கூடிய வெடிப்பு(புண்)கள் சுற்றிலும் அடிக்கடி (அதாவது ஆண்டு/மாதத்தில் பலமுறை) ஏற்பட்டுவிடும். முனைத்தோலுக்கும் ஆண்குறியின் மொட்டுப்பகுதிக்கும் இடையே உள்ள மூடிய பகுதிகளில் பல்வேறு தாது உப்புகளால் அழுக்கு படிமங்கள் (phimosis, டெட்ஸ்கின்) அடிக்கடி உற்பத்தியாகி அரிப்பும் ஏற்பட்டு இரத்தக் களறி ஆகிவிடும். உடல் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தினால் சரியாகிவிடும் என்றாலும் சரியாகும் வரை (தன்னின்பம் அல்லது உடலுறவின் போது) ஒவ்வொரு முறை தோல் விரிவடையும் போதெல்லாம் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். ஆண்குறியில் ஏற்படும் இந்த பாதிப்பு குறித்த விவரம் தெரியாதோர் 'பாலியல் நோயாக இருக்கும், நாம இராமனாச்சே....!' என்று பயந்துவிடுவதும், கவலைப்படுவதும் உண்டு. ஏற்கனவே (எங்கும் பாலியல் தொழிலாளியிடம் சென்று வராமல் இருந்து) அப்படி அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு இருப்பவர்கள் எந்த சோதனையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு சர்க்கரை நோய் கடுமையாக பாதித்து இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது. சர்க்கரை நோய்க்கான சிகிச்சையுடன் பாதிப்பு அடிக்கடி ஏற்படுபவர்கள் தோல் (புண்ணின்) எரிச்சலை தவிர்க்க முனைத்தோலை (Foreskin - Circumcision) அகற்றிக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இன்றைக்கு மருத்துவ உலகினருக்கு வற்றாத பணமழைப் பொழிவதற்கு நீரிழிவு நோய் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. சர்கரை நோய் கட்டுப்படுத்தலாம் முற்றிலும் போக்கிவிட முடியாது என்பதே மருத்துவ உலகம் இதுவரை சொல்லிவரும் தகவல்.

அப்படி இருந்தும் நம்ம ஊர் ரூம்போட்டு மருத்துவம் பார்க்கும் டுபாக்கூர் மருத்துவர்கள் எல்லாவற்றையும் குணப்படுத்துவதாக புளுகிவருவதும் அவர்களிடம் நோயாளிகள் ஏமாறுவதும் வாடிக்கை.

எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது, அதை முயற்சி செய்து பார்க்கலாம், பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மின் அஞ்சலில் வந்த விவரங்களை இணையத்தில் தேடிப்பார்த்தேன். தகவல் பரவலாக சென்று கொண்டு இருக்கிறது. இது வதந்தியா இல்லையா என்று தெரியாது. காசு பணம் மிகுதியாக செலவும் இல்லை, பக்க விளைவுகள் இல்லை, முயற்சித்துப் பார்க்கலாம், இதோ சிகிச்சை முறை (ஆங்கிலத்தில்)

DIABETIC?
FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS



A woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day,
she used the enclosed homemade medicine for a fortnight and now
she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets ............ ......... ......

The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs.
I request you all please circulate the email below to as many people as you can and
let them take the maximum benefit from it.


AS RECEIVED :


DR. TONY ALMEIDA (Bombay Kidney Speciality expert ) made the extensive
experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes.
Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm ( மரப் பிசின்...இது எங்கே கிடைக்கும் ?)
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm (கருஞ்சீரகம்)

Method of Preparation :
Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass jug or bottle.

How to use it?
Take one small cup of this water every day early morning when your stomach is empty.
Continue this for 7 days. Next week repeat the same but on alternate days. With these 2 weeks of treatment you
will wonder to see that you have become normal and can eat normal food without problem.

SINCE THESE ARE ALL NATURAL INGREDIENTS, TAKING THEM IS NOT HARMFUL. SO THOSE WHO ARE SCEPTICAL ABOUT THIS TREATMENT MAY STILL TRY IT WITHOUT ANY HARM. WORST CASE SCENARIO WILL BE THAT YOU REMAIN STILL SAME AS YOU WERE BEFORE

19 ஏப்ரல், 2009

அழகுணர்வும் செயற்கைத் தன்மையும் - Bowerbirds

சில / பல சொற்களுக்கான சமூகப் புரிந்துணர்வின் மூலமாக பொருள் சொல்வது மிகவும் சிக்கலான ஒன்று. எடுத்துக்காட்டு 'அழகு' என்றச் சொல். நாம் ஒன்றை அழகு என்று நினைத்தால் ஏனையோருக்கும் அதுவே அழகு என்று சொல்வது தவறானது ஏனெனில் எது அழகு என்பதை முடிவு செய்வது அவரவர் மனம் தான். பெரும்பாலும் திரைப்பட நடிகையர்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்தாலும் அவரவர்களுக்கு சில நடிகைகளைப் பிடிக்கும், அதற்கு தனிப்பட்ட காரணங்களாக அவர்கள் எண்ணங்களுக்கு ஏற்றவண்ணம் அவர்களின் உடல் அமைப்புகள் இருப்பதாகவும், அவற்றில் இருக்கும் கவர்ச்சி (பால் உணர்வு தூண்டுதல்களைப் பற்றிச் சொல்லவில்லை) அவர்களின் மீதான ஈர்ப்பு.
ஆக அழகு என்பதற்கான அளவு கோல் அவரவர் மனங்களே, அழகு என்பது மனம் தொடர்புடையது என்று சொல்வது உண்மையிலேயே சரியான கூற்றுதானா ?

மனித மனம் தவிர்த்துப் பார்த்தால், அழகும், அழகு உணர்வும் இயற்கையில் இயைந்து, இணைந்திருக்கிறது என்பதே உண்மை. வண்ணங்களையும், பல்வேறு மணங்களையும் பூக்களில் பார்க்கும் போது அவை சரியான கூற்று என்றே உணர்த்துகின்றன. பூக்களுக்கு வண்ணங்களாலும், மணத்தினாலும் நேரடி பலன் இல்லை என்றாலும், அவற்றின் இனப்பெருக்கத்திற்கு அவை மறைமுகமாக உதவுகின்றன. வண்ணமும் மணமும் அதை நாடி வரும் போது அங்கே சுவையான தேனும் இல்லை என்றால் எந்தப் பூக்களையும் வண்டுகள் நாடாது. வண்ணமும் மணமும் அதைப் பெற்றிருக்கும் மென்மையான தோற்றமும் அழகு என்பதை எடுத்துரைக்கும் விதமாக பூக்கள் எங்கும் மலர்ந்திருக்கின்றன.

குறிப்பாக ஆண் இனம் பறவைகள், விலங்குகள் இவைகள் பெண் இனங்களைக் காட்டிலும் அழகுத்தன்மையுடன் இருப்பதால் அதனை வெளிப்படுத்தி பெண் இனங்களுடன் கூடி வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றனர். பெண் இனம் அழகின் மீது கவனம் செலுத்துகின்றன, ஈர்க்கப்படுகின்றனர் என்பது இதன் மூலம் தெரிய வரும் மற்றொரு உண்மை:) (வளர்ந்த நாகரீக மனித சமூகத்தில் ஆண்கள் ஆணாக இல்லாததால், பெண்கள் ஈர்ப்பு திசை மாறி அழகுசாதனங்களின் மீது ஈடுபாடு கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறார்கள் போலும், ஆனால் அப்படிச் சொல்வதும் சிக்கலானது, ஏனென்றால் மனித அழகு உணர்வுகளை முடிவு செய்வதில் பலவித சமூக காரணிகளும் பங்கு வகுக்கின்றனர்) , மிகச் சில விலங்குகளில் வீரம் அழகாக ஏற்க்கபபடுகிறது, எடுத்துக்காட்டு சிங்கம்.
பல ஆண் சிங்கங்கள் பெண் சிங்கத்தை நெருங்க முற்படும் போது ஒன்றுக்கொன்று சண்டை இட்டுக் கொண்டு, வெற்றிப் பெற்றதே பெண் சிங்கத்தை அடைகிறது. நீங்களாக அடித்துக் கொண்டு முடிவு செய்யுங்க, அதுவரை நான் காத்திருக்கின்றேன், என்று சண்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கூட கண்டு கொள்ளாமல் இருக்கும் பெண் சிங்கம். இருந்தாலும் ஆண் சிங்கத்திற்கும் இருக்கும் பிடறியும், வலிமையான பார்வையும் பெண் சிங்கத்திற்கு கவர்சியானவை தான்.

இவையெல்லாம் ஒருவகையான இயற்கையான கவர்ச்சி தான் என்றாலும், என்னை வியப்படைய செய்த தகவல் ஒன்று, பெண் பறவையைக் கூடுவதற்கு விருப்பம் தெரிவிக்க ஆண் பறவை செயற்கையான சில அலங்காரங்களை செய்கிறது என்ற தகவல் , பவர்பேர்ட் (BowerBird) என்கிற அந்த பறவை இனத்தில் கவர்ச்சி மற்றும் ஈர்ப்புக்கு ஆண் பறவைகள் செயற்கைக் கவர்ச்சி அலங்காரங்களை கூட்டிற்கு (Nest) முன்பு உருவாக்குகின்றன. என்பது அவற்றின் இயற்கைத் தன்மை. This complex mating behaviour, with highly valued types and colors of decorations that, has led some researchers[who?] to regard the bowerbirds as among the most behaviorally complex species of bird. It also provides some of the most compelling evidence that the extended phenotype of a species can play a role in sexual selection and indeed act as a powerful mechanism to shape its evolution, as seems to be the case for humans.

அசை படம் :



அந்த இனப்பிரிவின் உட்பிரிவில் சில பறவைகள் பூக்களைக் கூட செயற்கை அலங்காரங்களுக்கு பயன்படுத்துன்றன மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்


அழகுணர்வில் மனித மனத்தின் ஒப்பீடு தவிர்த்துப் பார்த்தாலும் அழகுணர்வில் செயற்கைத் தன்மை இருக்கலாம் என்பதும் இயற்கைதான். பெண்கள் செயற்கையாக அலங்காரம் செய்துக் கொள்கிறார்கள், அது செயற்கையான அழகு, அது தேவையற்றது என்பவர்கள், இயற்கையில் கூட செயற்கைத் தன்மையில் இடமிருக்கிறது என்பதை கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது. :)

25 மார்ச், 2009

சரஸ்வதி, லக்ஷ்மி கடாச்சம் !

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அரங்க.சுப்பையா என்கிற தமிழ் வாத்தியார் பாடம் எடுப்பார். அவர் ஒரு நாத்திகர், மாணவர்களின் அடுக்கப்பட்ட கட்டுரை குறிப்பேடுகளின் (கட்டுரை நோட்) மீது தான் அவ்வப்போது உட்காருவார், நானெல்லாம் நாள் தோறும் பட்டை போட்டுச் செல்வதால் வாத்தியாரின் செயல் அருவெருப்பாக எண்ணி, சரஸ்வதியை அவமானப் படுத்துவதாகவும் மனம் புழுங்குவேன். இறைமறுப்பாக பேசாமல் அடிக்கடி எதாவது கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பார், 'விளையாட்டுக்கும் திருவிளையாட்டுக்கும் என்ன வேறுபாடு தெரியுமான்னு கேட்டுவிட்டு, நாம விளையாண்டால் விளையாட்டு அதுவே கடவுள் விளையாண்டால் திருவிளையாடலாம்...நாம் வெளையாண்டால் வாலிபால்....அதுவே கடவுள் விளையாண்டால் திருவாலிபால்' என்பார். நான் எண்ணி இருந்ததற்கு மாற்றான கடவுள் பற்றிய எதிர்மறை கருத்துகள் ஆதலால் அவை அப்போது மனதில் பதிந்தது, அவரை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும். மற்றபடி அவர் எப்போதும் நல்ல ஆசிரியர், ஏழை மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்வி மற்றும் பொருள் உதவி செய்தவர், அதன் பிறகு அவரை பார்த்தே இல்லை, தற்காலம் தஞ்சை பல்கலை கழகத்தில் பணி புரிந்துவருவதாக கேள்வி, இந்நேரம் ஓய்வு பெற்றிருந்தாலும் வியப்பு இல்லை.


பேராசிரியர் அரங்க சுப்பையா (முனைவர் மு இளங்கோவன் பதிவில் இருந்து)


பாட புத்தகங்கள் மற்றும் எழுதும் குறிப்பேடுகளில் தப்பித்தவறி கால் பட்டுவிட்டால், தொட்டு கும்பிடுவது இறை நம்பிக்கையுடய தமிழர்கள் வழக்கம். மேலேயே ஏறி உட்கார்ந்திருப்பது நினைத்துப் பார்க்காத செயல், ஏனென்றால் நமக்கு பெற்றோர்கள் வழி ஊட்டப்படும் பழக்கங்களில் பாடம் தொடர்புடையவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதில் குறிப்பேடுகளில் கால் படக் கூடாதது என்பதும் ஒன்றே. ஆனால் வெறும் தாள், செய்தித்தாள், ஏனைய தாள்களை சரஸ்வதியாக நினைத்துக் கொள்ள வேண்டும், அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது,
இப்போதெல்லாம் சரஸ்வதியும், லஷ்மியும் ஒன்றாக இருக்கும் படிதான் நாட்டின் செல்வ செழிப்பு இருக்கிறது. அதாவது முன்பெல்லாம் தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களே இருந்தன, தற்பொழுது உயர் ரக தாள், அதில் மதிப்பு அச்சிடப்பட்டு பணம் என்று அழைக்கப்படுகிறது, தாள் சரஸ்வதி அதன் மதிப்பு லக்ஷ்மி, இருவரும் சேர்ந்தே தான் டாஸ்மாக் முதல் விலைமகளிர் இல்லம் வரையில் நுழைகிறார்கள், இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.

இன்னும் வேறுமாதிரி சொல்லவேண்டுமென்றால் உடல் உறுப்புகள் அனைத்தும் தனித்தனியாக முதன்மைத்துவம் வாய்த்தவை, விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, இதில் வலது கை புனிதம், இடது கை பீச்சாங்கை என்றெல்லாம் இழித்து பேசுவதும், இடது கையால் பொருளை எடுத்துக் கொடுக்க கூடாது, சாப்பிடக் கூடாது என்பது மூட நம்பிக்கைகளின் எச்சங்களாக நம்மிடையே இருந்துவருகிறது. கையை விட கால்கள் எந்த விதத்தில் மதிப்பு குறைந்தது என்று தெரியவில்லை. ஒரு தாளில் கால் தெரிந்தோ, தெரியாமலோ படுவதால் என்ன குற்றம் ஆகிவிடப் போகிறது ? தலைக்கு தலையணையும் உட்கார மென்மையான இருக்கைகளை தேடுகிறோம், கால்களுக்கு முட்டுக் கொடுத்து, அல்லது கால்களுக்கு அணையாக எதோ ஒன்றை பயன்படுத்துவதால் என்ன தவறு ? அண்மையில் கம்பவாருதியின் சொற்பொழிவை கேட்ட போது இறைவணக்கம் எப்போதும் இறைவனின் கால்களுக்கு செலுத்தப்படுகிறது, 'இறைவனடி' சேர்ந்தார் என்று காலை பெருமை படுத்தித்தான் சொல்கிறார்கள், போற்றிப்பாடல்கள் காலில் தொடங்கி தலையில் முடியும், மூத்தோர் கால்களில் விழுவதும் கூட சிறப்பானது தான். காலை இழிவு என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது என்றார். (அம்மாவின் கால்களில் விழுபவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள், சுயமரியாதை செம்மல்கள் தான் கால்களை இழிவாக நினைத்து கால்களில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு என நினைக்கிறார்களோ :))

தாள்களில் வெறும் பாடம் தொடர்புடையது மட்டுமா அச்சடிக்கப்படுகிறது ? சரோஜா தேவி வகை ஆபாச கதைகள், ஆபாச படங்கள், மற்றும் திரை உலக கிசுகிசுக்கள் எல்லாம் அச்சடிக்க பயன்படும் தாளை சரஸ்வதி ரேஞ்சுக்கு உயர்த்துவது உச்சகட்ட பக்தியின் அச்சம் தான், இதையும் மீறி படங்கள் வரைந்து பாகங்களை குறித்து வைத்திருப்பார்கள் பல குறும்புக்கார மாணக்கர்கள். துள்ளும் இளமை வயது.....:) புது தொலைக்காட்சி பெட்டிக்கு தீப ஆராதணை செய்து பயன்படுத்தியவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன் :) அதில் அடுத்தவாரம் பையன் யாருக்கும் தெரியாமல் நண்பர்களுடன் நீலப்படம் பார்த்து கொண்டிருப்பான். கையினால் மாட்டு சாணியை பிள்ளையாராக பிடித்து வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைத்து கால்படக் கூடாது என்று சொல்வது முரணாக இருக்கிறது.

ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.

தாள்களுக்கு தனியான மரியாதை தேவை இல்லை, அவற்றை மறுபயனீடாகவும், அளவுடன் பயன்படுத்தினால் அவற்றின் தேவைக்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறையும், இதைத் தவிர்த்து தாள்களுக்கு வேறொரு மரியாதை சிறப்பாக செய்துவிட முடியுமா ?

குறிப்பு : இந்த பதிவு ஸ்வாமி ஓம்கார் பதிவுக்கு பின்னூட்டமிட்டதின் நீட்சி.

17 டிசம்பர், 2008

சென்னை விமான நிலைய காமடி - மெய்ப்புலம் அறைகூவலர் !

சென்னை: சென்னை விமான நிலையத்தின் கழிவறைக்குச் செல்வோரை தலை சுற்றி கிறுகிறுக்க வைக்கும் வகையில் ஒரு தமிழ்ப் பலகையை வைத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோர்களுக்காகவே சிறப்பு கழிப்பறை ஒன்று உள்ளது. அதன் வெளிக் கதவின் மேல் வைக்கப்பட்டுள்ள பலகையில், மெய்ப்புலம் அறைகூவலர் என்று எழுதி வைத்துள்ளனர்.

இதைக் காணும் பலருக்கும் இதன் அர்த்தம் சுத்தமாக புரியாமல் குழம்பியபடியே உள்ளே சென்று திரும்புகின்றனர்.

மெய்ப்புலம் அறைகூவலர் என்றால் உடல் ஊனமுற்றோர்

பிசிகலி சேலஞ்ச்ட் என்று எழுதாமல் தமிழில் எழுத வேண்டியதுதான். உடல் ஊனமுற்றோர் என்றே எழுதி வைக்கலாம். அதை விடுத்து வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே புரியும் வகையிலான படு சுத்தத் தமிழில் எழுதி வைத்தால் யாருக்காவது புரியுமா?

நல்ல வேளையாக மெய்ப்புலம் அறைகூவலர் என்ற வார்த்தைக்கு அருகில் உடல் ஊனமுற்றோருக்கான படத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இது ஏதோ தமிழ் சங்கத்தின் அலுவலகம் என்று நினைத்து யாரும் இப்பக்கமே வராமல் திரும்பிப் போகக் கூடும்.

தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?

- தட்ஸ் தமிழ்

************

இதைச் அனுகூலம் ஆக்கிக் கொண்டு தமிழ் எதிர்பாளர்கள்...நக்கலாக சிரித்து...'பாருங்கய்யா தமிழை' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.

இதுபோன்று ஆங்கிலத்தை தமிழ்படுத்தும் போது, சங்க(கால)ச் சொற்களுக்கு பதிலாக புழக்கத்தில் இருக்கும் சொற்களை பயன்படுத்துவதே நல்லது. இல்லாவிடில் விளங்காமல் போகும்.

சிங்கையில் உடல் ஊனம் பற்றிய சொற்களாக பயன்படுத்துவது

குருடர் - பார்வையற்றோர், பார்வையிழந்தோர், பார்வை குறைபாடு உடையோர்

"குருட்டுப்பயலா நீ" என்று பிறரை கேலி செய்ய "குருடு" என்பதன் பொருள் திரிக்கப்பட்டத்தால் பார்வை குறைபாடுகளை சொல்வதற்கு அந்த 'குருடு' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தற்போதைய பண்பாடு அல்ல. குரு என்ற சொல்லுக்கு ஒளி என்றே பொருள், ஒளியிலார், ஒளியிழந்தோர் என்ற பொருளில் தான் குருடர் என்ற தமிழ் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. குரு என்பது தமிழ்ச் சொல்லே, Kuru என்று எழுதாமல் Guru என்று ஆங்கிலத்தில் எழுதுப்படுவதால் நாம் அதை வடச்சொல் என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். குரு என்ற தமிழ் சொல்லுக்கு நேரடியான வடச் சொல் 'ஆச்சார்ய'

செவிடு - இதற்கு காது கேளாதவர், செவிக் குறையுடையோர், ஒலி கேளாதவர் என்று சொல்லலாம்

ஊமை - பேச இயலாதோர்,

இது போல் உடல் ஊனமுற்றோர் என்று எழுதினால் அந்த குறையுடையோரின் இதயத்தை காயப்படுத்துவதாகவே அந்தச் சொல்லின் பொருள் ஆகிவிட்டது. 'ஊனம்' என்பது குறை என்ற பொருளுடைய சொல். ஒருவரின் ஊனம் என்பது அவரே வாங்கி வந்த வரமல்ல, அவருடைய இயற்கை அமைப்பின் படி அப்படி அவர் இருக்கிறார்.

ஊடல் ஊனமுற்றோர் - "உடல் குறையுற்றோர்", "உடலியல் மாறுபட்டோர்" என்று சொல்லலாம், ஊனம் என்பதை விட குறை என்று எழுதினால் பொருள் மாறாது, சொல்லின் தாக்கமும் குறைவு

ஒரே சொல்லால் சொல்லப்படும் பண்பு பெயர்ச் சொற்களின் (Vocabulary) பொருள் எதிர்காலத்தில் திரிந்து போனால், இரு அல்லது மேற்பட்ட சொற்களில் (DECOMPOSE OR CONVERT IN TO MEANING) அந்த பொருளை எழுத முடியும் என்றால் எழுதலாம் தவறு அல்ல. அல்லது முற்றிலும் புதிய ஒற்றைச் சொல்லை உருவாக்கி பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் Latrine பின்னர் Toilet ஆகி அதன் பிறகு அந்த சொல்லின் பொருளும் அருவெறுப்பாய் ஆனதால் தானே Rest Room என்று மாற்றிக் கொண்டார்கள்.

கழிவறை என்று சொல்வதைத் தவிர்த்துவிட்டு தளர்வறை (கழிவு இறுக்கம் தளர்த்த...) அல்லது வேறு எதாவது புதிய சொற்களை பயன்படுத்தலாம்.

ஆங்கிலத்தில் இருந்து நேரடி மொழிப்பெயர்ப்பு எல்லா மொழிகளுக்கும் சிக்கலான ஒன்று தான். மொழிப்பெயர்ப்பு சொற்களை பொதுப்படுத்தும் முன் தமிழார்வளர்களிடமும், தமிழாராய்ச்சியாளர்களிடமும் கலந்து பேசி முடிவு செய்தால் நல்லது.

5 டிசம்பர், 2008

ஊடகங்கள் என்னும் மதங்கள் !

மதம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை, எண்ணங்களை தீர்மாணிப்பது என்று சொன்னால் எவரும் மறுப்பார்களா ? எந்த ஒரு மதமும் அதைச் சார்ந்தவர்களின் குண நலன்களை உருவாக்குவதுடன், உணவு உடை மற்றும் கட்டுப்பாட்டுக்களை விதித்து ஒருவரை தன் இச்சையாக செயல்படவிடாலம் அவர் மீது ஆளுமை செலுத்தினால் அதுதான் மதம். நேரடியாக ஒருவர் மீது தாக்கத்தை ஏற்படுவதால் அதன் பண்புகளில் ஏற்படும் மிகக் கூடுதலான அளவே மதவெறி எனப்படும். சரியா ?

ஊடகங்கள் எனப்பது மக்களாட்சியின் நான்காவது தூண்கள் கிட்டதட்ட மதம் போல் ஆகிவிட்டன. மதம் என்பதே சார்பு நிலைதானே. எந்த ஒரு ஊடகமும் அது செய்தி இதழாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி மக்கள் முன் காட்சிபடுத்துதல் ( பின்நவினத்துவ சொல்லாம்) என்பதில் சார்பு நிலையில் தான் இயங்குகின்றன. சன் டிவி, ஜெ டிவி பார்க்கும் சிறுவர்கள் கூட இதை உணர்வார்கள். இவற்றைக் குறிப்பிடுவது எளிமையான உதாரணம் கருதியே.

ஊடகம் என்பது தொழில் என்பதாக வளர்ந்த பின் போட்டித் தன்மை என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. முதலில் மக்கள் விரும்புவதைத் தருவதாகச் சொல்லும் ஊடகங்கள் பிறகு மக்களின் விருப்பத்தை தீர்மாணிக்கின்றன.

விபச்சாரம் நடப்பதும் அதன் மீது சட்ட நடவெடிக்கையும் இயல்பாக அன்றாடம் நடப்பவைதான். அன்று போடுவதற்கு செய்தி பஞ்சமோ, பெரிய Deal இல்லாத போது, காவல் துறையின் விபச்சார நடவடிக்கை செய்தியை எடுத்து
படத்துடன் "விபச்சார அழகிகள் உல்லாச விடுதியில் கைது" என்று போடுவார்கள். விபச்சாரம் செய்பவர்களை அழகிகளாகக் காட்டுவதுடன், விடுதிகள் என்றால் அவை உல்லாசமாக இருப்பதற்கு உரிய இடம் என்பது இவர்கள் முன்பே பலமுறை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளதால், அந்த செய்தியை பலர் ஆர்வமுடன் படிப்பார்கள்.

ஊடகங்கள் எப்போதுமே பிரபலங்களின் செய்திகளை கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பதை அண்மைய மும்பை தாக்குதலில் இரயில் நிலையத்தைவிட நட்சத்திர ஓட்டல்களின் காட்சிகளே தொலைக்காட்சியில் இடம் பெற்றதை பலரும் குறிப்பிட்டு காட்டி கண்டனம் செய்தார்கள். வாசகர்கள் காதில் புனிதம் தடவி "ஊடகம் என்பது ஜெனநாயகத் தூண்" என்பது எப்போதோ அடிப்பட்டுப் போய்விட்டது.

ஒரு ஆட்சியை மாற்றி அமைப்பதில் ஊடகம் முன்னிலை வகிக்கிறது. விருப்பமில்லாத ஆட்சியாளர்கள் என்றால் அவர்கள் செய்யும் நலத்திட்டங்களை பற்றி ஒருவரி கூடச் சொல்லாமல், அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல் வழக்குகளின் செய்திகளை மட்டுமே வெளியிட்ட பிற செய்திகள் தங்கள் வாசகர்களின் கண்களில் படாமல் கவனத்துடன் தவிர்ப்பர். செய்திகளாக இவர்கள் தருவது இவர்களுக்கு பிடித்தவை மட்டுமே.

இஸ்லாம் பற்றிய மேற்கத்திய (கிறித்துவ சார்பு, முதலாளித்துவ சார்பு) ஊடகங்களின் தாக்குதலும் இப்படித்தான், பின்லேடனையும் அல்கொய்தா என்ற இரண்டே விசயங்களை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு 'இஸ்லாம் என்றால் தீவிரவாதம்' என்கிற செய்தியை பதியவைக்க முயன்று வெற்றிபெற்றன. ஆனால் அதே ஊடகங்களுக்கு ஈராக்கில் எந்தவிதமான ரசாயன ஆயுதங்களும் இல்லை என்று தெரிந்தாலும், தெரிந்தே புஷ் அரசின் செயல்பாடுகளையும், அபுகிரைப் கொடுமைகளையும் அதிக அளவில் வெளியே பரப்பாமலும் ஓரளவுக்கு தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்ட சிறு சிறு செய்திகள் அளவுக்கு அதனை வெளியிட்டன.

மலேக்கான் தொடர் குண்டு வெடிப்பு பற்றி பரபரப்பாக வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் தற்பொழுது மும்பைத் தாக்குதலில் கவனம் செலுத்தி அன்றாட தகவல் ஆக்கிவிட்டன. இந்த செய்திகள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்குத் தகுந்தார்போல் செய்திகளை வெளி இடுவார்கள், 'இறந்து போனவர்களில் எவரும் இஸ்லாமியர் இல்லை' என்று சொல்வது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கமாக கொண்டுள்ள செய்தி இதழ் அதனை வெளியிட்டது, அதுமட்டுமில்லாது அந்த செய்தி மக்கள் மனதில் மறையவே கூடாது என்பதற்காக இறந்து போனவர்களின் அத்தனை பேரின் வீடுகளுக்குச் சென்று அன்றாடத் தகவல்களாக அதனை வெளி இடுவார்கள். இவை சிறு இதழ்களில் செய்யப்பட்டால் பெரிய தாக்கம் ஏற்படாது, சிறிய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையான வாசகர்களை மட்டுமே கொண்டிருக்கும், அவர்களின் கவனம் வேறு இதழ்களுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதனை தொடர்ந்து செய்வார்கள், ஆனால் இந்திய அளவில் செயல்படும் செய்தி இதழ்கள் மறைமுகமாக செய்யும் போது வாசகர் மனதில் அந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

நான் 25 ஆண்டுகளாக ஆனந்தவிகடன் படிக்கிறேன், 15 ஆண்டுகளாக நக்கீரன் படிக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லும் முன் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள், 'அந்த இதழ்களெல்லாம் உங்களுக்கு தேவையானதை கொடுக்கவில்லை, அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் மாறி இருக்கிறீர்கள், அவர்கள் தரும் செய்தியே உங்கள் எண்ணங்களையும் சிந்தனையாகவும் மாறி இருக்கிறது, அதாவது உங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் தீர்மாணிப்பவர்கள் அவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது வாசகனுக்கு பெருமையான ஒன்றா ?

ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.

ஆனால் 90 விழுகாடு வாசகர்களின் மன நிலை எதோ ஒரு சார்பில் எதோ ஒரு செய்தி ஊடகத்தை சிறப்பாக கருதும் மனநிலையில் தான் இருக்கிறது, அதில் வரும் செய்திகளே உண்மையானவவ என்று நம்புவார்கள், மற்ற இதழ்கள் திரிப்பதாகவே சொல்வார்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது துக்ளக் மட்டுமே படித்த எனது முன்னாள் பாஸிடம் நான் நக்கீரன் செய்தி பற்றி பேசினால், 'நக்கீரனெல்லாம் ஒரு புத்தகமா, அவன் பொய் பொய்யா எழுதுவானே ?' என்று சொல்லுவார். அவரைப் பொருத்து நக்கீரனின் வரும் செய்திகள் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும், ஏனெனில் நக்கீரன் எவரையும் துணிவுடன் எதிர்த்து எழுதும், ஆனால் அவ்வளவு துணிவு வாய்பே இல்லை என்று நினைப்பவராக அவர் இருப்பதால் நக்கீரன் பழிசொல்லி எழுதுவதாகவே அவர் கருதுவார். இங்கே நக்கீரன் துணிச்சலான செய்தி இதழ் என்று சொல்லவரவில்லை. நக்கீரனின் அன்மைய திமுக ஆதரவு செய்திகள் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஆதரவு நிலை என்பதற்காக எப்போதும் திமுகாவின் ஊழல் தகவல்களை, முறைகேடுகளை மறைப்பதில்லை என்பதில் ஓரளவுக்கு நக்கீரன் கோபால் பரவாயில்லை என்பேன்.

வாசகர் வட்டம் என்ற வட்டத்திற்குள் நீங்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களில் ஆளுமை செலுத்துவதில் ஒரு ஊடகம் வெற்றிபெற்றிருக்கிறது என்றே பொருள், அந்த ஊடகத்தை துதிப்பவர்களில் நீங்களும் ஒருவர் ஆகிவிடுவீர்கள். உண்மையிலேயே ஊடகம் என்பது தொழில் தான், துணிச்சலான புலனாய்வுக்கு ஊடகங்களைப் பாராட்டலாம், ஆனால் ஊடகம் தரும் செய்திகளே உண்மை என்று நம்புவோர்க்கு ஊடகங்கள் மதங்கள் போல் அவர்களின் மீது ஆளுமை செய்கிறது என்பது பேருண்மை. ஏற்றிவிடுவதும் வாசகர்களே, பிறகு மாட்டிக் கொண்டு மீளாமல் இருப்பவர்களும் வாசகர்களே !

இந்த பலரால் விரும்பிப் படிக்கப்படும் பதிவுகளுக்கும் பொருந்தும் :).

இதுபற்றி பலசெய்திகளை ஒப்பிட்டு விரிவாக எழுதமுடியும், பிரிதொரு இடுகையில் எழுதுவேன்.

3 டிசம்பர், 2008

தே... பையன் மற்றும் கருத்தியல் !

சுத்தியல், பொரியல், பொறியியல், அவியல் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். கருத்தியல் என்றால் என்ன ? வலைப்பதிவுக்கு வரும் முன் இப்படி ஒரு கருமத்தை (கருமம் என்றால் செயல்/ செயல்பாடு என்ற பொருளும் உண்டு) நான் கேள்விப்பட்டதே இல்லை. வலைப்பதிவு ஊடகம் வழியாக பலபுதிய சொற்களையும் அவை எங்கு கையாளப்படுகின்றன என்பதையும் என்னப் போலவே பலரும் கற்றுக் கொண்டுள்ளனர். ஒருவர் மீது வீசப்படும் சொற்களைக் கூட ஆராய்ந்து அந்த சொல் எப்படி வந்தது, உண்மையிலேயே அந்த சொல் எதிரியின் செயலைத் தாக்குகிறதா ? அல்லது வெறுமனே உணர்ச்சியைத் தூண்டுகிறதா என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

"தேவடியாப் பையன்" என்று ஒருவரைத் திட்டும் போது சொல்லப்படும் "தேவடியா" என்ற சொல் பெண்மையை மட்டுமே இழிவு படுத்தும் சொல், பாலியல் தொழில் என்பது வாடிக்கையாளர்கள் இல்லை என்றால் இருக்கவே இருக்காது. வாடிக்கையாளர்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல் அதைச் செய்யும் பெண்களை மட்டும் இழிவாக சித்தரிக்கும் சொல்தான் விபச்சாரி, தேவடியா போன்ற சொற்களெல்லாம். ஆனால் அந்த பெண்ணை வைத்து வியாபாரம் செய்யும் ஆணை "மாமா அல்லது மாமா பையன்" என்று உறவுப் பெயரிலேயே குறிப்பிடுகிறார்கள், இழிதொழில் செய்பவன் ஆண் என்றால் அவனை உறவு பெயரில் கூட அழைப்பதற்கு சமூகம் தயாராகிவிடுகிறது. பாலியல் தொழில் செய்யும் பெண்ணுக்கும் ஆணுக்குக் கொடுக்கும் பெயர்களின் தன்மைகள் இப்படித்தான் முரண்பாடாக இருக்கிறது.

ஒருவனை ஆபாசமாகத் திட்டுவதற்கு அவனது தந்தையை கேவலப்படுத்த முடியாது என்பதால் தாயின் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி சொல்லாக வீசுவதே "தேவடியா பையன் / தேவடியா மகன்" என்று சொல்வதன் நோக்கமாகும். தந்தை பல பெண்களுடன் உறவு வைத்திருந்தாலும் அதை பெருமையாக நினைக்கும் சமூகம், தாய் என்றால் அவள் கற்பின் சொரூபமாகத்தான் இருக்க வேண்டும் என்ற புனிதம் கற்பிக்கப்படுவதால், அப்படி ஒரு சொல்லைச் சொல்லி திட்டுவதன் கெட்ட நோக்கமும், திட்டுவாங்கியவரின் எதிர்வினையாற்றுவதும் ஒரே புள்ளியில் சந்திக்கிறது. பெண்ணைத் தூற்றுவதற்காகவே அவளை புனிதப் பொருள் என்று முன்னேற்பாடாக போற்றி வைக்கிறது சமூகம். கற்பு கத்திரிகாய்கள் எல்லாம் இவ்வாறுதான் அவள் மீது தேவையற்ற சுமையாக்கி வைத்திருக்கின்றனர். எந்த மொழியிலும், எந்த இனத்திலும் "தேவடியா மகன் அல்லது அதற்கு இணையான பெண்மையை இழிவு படுத்தி திட்டும் வழக்கம் இருக்கிறது

******

பதிவர்களால் எழுதப்பட்டும் பலகட்டுரைகள், நகைச் சுவைகள் ஆகியவற்றை படிக்கும் போது ஏற்படும் எண்ணங்களையும், அந்த பதிவர்களின் எழுத்துக்களைப் பற்றி சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. "அவரு என்ன எழுதி இருக்காரு...மொக்கை...கருத்தியல் ரீதியாக எதுவுமே இல்லையே...இவரெல்லாம் பதிவர்னு நீங்கதான் சொல்லனும்...மற்றவங்களை விடுங்க...நீங்க நிறைய எழுதிறிங்க கருத்தியல் ரீதியாக உங்கள் பதிவுகளைப் பார்த்தால் ஒண்ணுமே இல்லையே..." என்பார்கள். அடப்பாவிகளே இதுகூட தெரியாமலா ஒரு 'அவதூறு ஆறுமுகம்' என்னை 'கருத்து கந்தசாமி' என்று சொல்லி மகிழ்ந்தார் ? என்று கேட்டேன். "கருத்தியல் ரீதியாக" என்பதில் எனக்கு உடன்பாடு ஏற்படுவதில்லை. நான் படித்த கருத்தியல் பதிவுகள் அனைத்துமே நடந்து முடிந்தவைப் பற்றி அதனுடைய காரண செயல்பாடுகள், இதனால் என்று ஆராய்ச்சி ரீதியில் எழுதப்பட்ட பதிவுகளாகவே உள்ளன. அதாவது கருத்தியல் என்பதே நடந்து முடிந்தது பற்றிய ஒரு ஆய்வறிக்கை மட்டுமே. அதை எப்படி அன்றாட நிகழ்வுகளை பற்றி எழுதுபவர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிதை புனைவோர்களுக்கு ஒட்டவைக்க முடியும் ?

ஒரு இடத்தில் குண்டுவெடிக்கிறதென்றால் அதைப் பற்றிய செய்தியைத் தான் பதிய முடியும், அதையெல்லாம் கருத்தியல் ரீதியாக எழுதவேண்டுமென்றால் ஒருமாதம் கழித்து தகவல் திரட்டிய பிறகு, இதன் காரணம் என்ன, உளவியலா, புண்ணாக்கா, வெடிச்ச பஞ்சா என்றெல்லாம் எழுத முடியும்.

கருத்தியல் ரீதியான எழுத்து என்பது வெறும் காரண காரியங்களை எழுதும் ஆய்வறிக்கை மட்டுமே, அதை ஒரு சிறந்த எழுத்து என்று சொல்லமுடியாது. படிப்பதற்கு படிப்படியான தகவல்கள் இருக்கும், கோர்வையாக இருக்கும் என்பதெல்லாம் சரி. படிப்பதற்கு சோர்வளிக்காமல் நகைச்சுவையாக இருக்குமென்றெல்லாம் சொல்ல முடியாது. இயல்புகளைக் கூட "பொது புத்தி" என்று பேசுவதுதான் கருத்தியலின் வழக்கம்.
கருத்தியல் ரீதியில் எதையும் எழுதினால் அதை கருத்தியல் ஆசாமிகள் மட்டுமே படிப்பார்கள், மற்றவர்களெல்லாம் "பெரும் அறிவாளி போல இருக்கு" என்று சொல்லிவிட்டு ஒரு பத்திக்கு மேல் வாசிக்க மாட்டார்கள். கருத்தியல் நடைமுறையில் இருக்கும் சில பல தவறுகளை சுட்டுக் காட்டுகிறது (உதாரணம் மேலே சுட்டிய தேவடியா பையன் சொல்) என்பது சரிதான் அதனடிப்படையில் கருத்தியலில் பேசுவது தவறல்ல, ஆனால் அதையே பேசிக் கொண்டு இருப்பது இயல்புக்கு மாறானது. அன்றாட நிகழ்சிகளை எழுதுவதோ, விமர்சிப்பதோ கருத்தியலால் இயலாத ஒன்று என்றே நினைக்கிறேன். இது கருத்தியல் பற்றிய எனது தவறான கருத்தியல் என்று நினைக்கும் கருத்தியல் ஆசாமிகள் சுட்டிக்காட்டவும்.

14 நவம்பர், 2008

உயர்சாதி நாயும் மற்ற சாதி நாய்களும் !

இல்லாத ஒன்று தமிழர்களை / இந்தியர்களைப் பிரித்துப் போட்டு எத்தனை பாடாய் படுத்துகிறது. சாதியைத் தான் சொல்கிறேன். உடலில் எந்த பாகம் சாதியைக் குறிக்கிறது என்று யாரவது சொல்ல முடியுமா ? அப்படி ஒரு பாகம் இல்லாததாலேயே எங்கள் சாதி இதுதான் என்று காட்ட வெளி அடையளமாக 8 ஆம் நம்பர் நூலை வாங்கி குறுக்காகச் சுற்றிக் கொள்கிறது ஒரு கும்பல். பெரியார் ஏன் அவற்றை அறுக்கச் சொன்னார், அறுப்பது தேவைதானா என்று நன்றாக யோசித்துப் பாருங்கள், ஊருக்குள் அனைவரும் அமைதியாக வாழ ஒரு வீட்டில் உள்ளவர்கள் மட்டும் 'என் மனைவி ஒழுக்கமானவள்' என்று எழுதிவைத்தக் கதைதான் சாதி.

பார்பனரை மட்டுமே சாதிவெறியாக சித்தரிக்கும் முற்போக்கு வாதிகள் (வாந்தி முன்னால் வருவதால் முற்போக்கு, பேதி பின்னால் வருவதால் பிற்போக்கு என்று சொல்லலாம் போல) தேவர் சாதி வெறியர்களையும், கவுண்டர் சாதி வெறியர்களையும், வன்னியர் சாதி வெறியர்களையும் எப்போதாவது கண்டிப்பது உண்டா என்று பார்த்தால் மிக மிகக் குறைவுதான். இத்தனைக்கும் வெளிப்படையான கலவரங்களை பார்பனர்கள் நடத்துவது கிடையாது, பஸ் எரிப்புகளை பார்பனர்கள் நடத்துவது கிடையாது. ஆனால் இவையெல்லாம் நடக்கும் போது அதை நேரிடையாக கண்டிக்காமல் 'பார்பனர்களின் வருண அடுக்கு முறைதான்' இவற்றிற்கெல்லாம் காரணம் என்பது போலவும் அதுவும் அரை மணி நேரத்திற்கு முன்பு வந்த கடைசி செய்தி வழியாக அறிந்து கொண்டது போலவும் மூன்று பக்கத்திற்கு மனுவிலிருந்து தொடங்கி ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் வரையில் கொண்டு வந்து முடிப்பார்கள். ஐயா இவையெல்லாம் கடைக்கோடி தமிழனுக்கும் தெரிந்து நாறிப் போன வரலாறு, இதையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தால் தேவன் திருந்திடுவானா ? நினைத்துப் பாருங்கள்.

இவைதான் காரணம் என்பது ஏற்கனவே தெரிநத்து தானே. கிரிமி எப்படி தோன்றியது என்கிற ஆராய்ச்சியைவிட நோய்கண்டவர்களை குணப்படுத்துங்கள் ஐயா. எய்ட்ஸ் குரங்கிலிருந்து வந்தது என்று சொல்வது எய்ட்ஸ்க்கான தீர்வு அல்ல. மாற்று மருந்து அதுதான் தீர்வு. சமூகம் கெட்டு நாற்றமடிப்பதை இன்னும் எத்தனை காலத்துக்கு பார்பன சதி என்றும்...வருண அடுக்கைச் சுட்டிக் காட்டி பேசுவதையும் வைத்து மறைத்துவிட முடியுமா ? ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களில் பெரிய ஈடுபாடு வைத்து குண்டுவைக்கப் போகும் அளவுக்கு தமிழகத்தில் வெறியுடன் இருப்பவர்களில் பார்பனர்கள் யாரும் இல்லை என்பதை நம்புங்கள்.

சாதி வெறி எடுத்து சமூகத்தை சீர்கெடுக்கும் அனைத்து சாதிகளையும் அதே சாதிப் பெயரை வைத்தே சாடுங்கள். 'பார்பன பண்ணாடையே' என்று எழுதத் துணிபவர்கள் எவருமே 'தேவர் சாதி வெறியர்களே நிறுத்துங்கள், 'வன்னிய சாதிவெறியர்களே நிறுத்துக்கங்க...' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை கூட எழுத முன்வராதை நினைக்கும் போது முற்போக்கு என்ற பேச்செல்லாம் ஒவ்வாமையால் வந்த வாந்தியோ என்றே நினைக்கத்தோன்றுகிறது. சாதி வெறிகளையெல்லாம் 'பார்ப்பனியம்' என்ற சொல்லில் அடக்கியது தவிர்த்து சாதிமறுப்புப் போராட்டத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணும்.

இதோ இன்றைக்கு சட்டக்கல்லூரியில் தேவர் சாதி மாணவர்கள் நடத்திய வெறியாட்டத்தில் உணர்ச்சிப் பெருக்கில் ஆளுக்கு நான்கு கட்டுரைகளை எழுதுவதுடன் இவர்களது சாதிமறுப்பும் முடிந்து போகிறது.

அந்த கொடூர மாணவர்கள் நடத்தியது வெறும் தாக்குதலோ, கொலைவெறி மட்டுமேயன்று, சாதிமேலாண்மையை அழிக்கவே முடியாது என்ற அறைகூவல் தான். மாணவர்கள் இடையேயிலும் இத்தகைய சாதிவெறி அதுவும் சாதிவெறியால் கூனிக் குறுகிமேலெழுந்த அண்ணல் அம்பேத்கார் என்னும் மாமேதையின் பெயரிலான கல்லூரியில் இத்தகைய கொடுமை. இவையெல்லாம் வெறும் மாணவர்களுக்கிடையேயான சண்டை மாட்டும் தானா ? புறையோடிப்போன சாதித் திமிரால் சிலிர்த்த மயிரில் ஒன்று தான் அது. இன்னும் கோரப்பற்களும், கூரிய நகங்களும், ரத்தம் குடிக்கத் துடிக்கும் நாக்கும் கண்டு கொள்ளப்படமலேயே இருக்கிறது. ஆனால் முற்போக்காளர்களின் கண்களில் தெரிவதும் வெறும் உச்சிக் குடுமி மட்டும்தான்.

சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள். சாதிவெறியால் அரசு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அந்தந்த சாதிசங்களிடம் அதற்குண்டான ஈட்டுத்தொகைகள் வசூலிக்கப்பட்டால் எவனாவது துணிந்து பேருந்தை கொளுத்துவானா ?

19 அக்டோபர், 2008

இதே தலைப்பில், இந்த இடுகையை ஏற்கனவே எழுதி இருக்கிறேன் !

நான் சொல்வது வியப்பாக இருக்கலாம், உண்மையாகக் கூட இருக்கலாம். இவை சரியான அனுமானம் என்றால் ஜோதிடங்கள் சொல்லும் உண்மைகள், மதங்கள் சொல்லும் இறைத் தத்துவங்கள் கூட உண்மையாக இருக்கலாம். ஜோதிடத்தில் எதிர்காலத்தை கணித்துச் சொல்கிறார்கள், அவற்றினால் சொல்லப்படும் எதிர்காலம் குறித்த (சரியான) தகவல்கள் ஜோதிடரின் (ஆழ்ந்த) புலமை பெறுத்தது. பிழைப்புக்காக ஜோதிடம் சொல்பவர்கள் தவிர்த்து அதைக் கலையாக கற்று வைத்திருப்பவர்கள் நம் சுப்பையா வாத்தியார் மற்றும் ஸ்வாமி ஓம்கார் போன்றோர் அளிக்கும் ஜோதிடத் தகவல்கள் நடப்பதற்கு சாத்தியம் உள்ளவைகள், நடக்காது என்று முற்றிலும் நிராகரிக்க முடியாது. அதற்காக ஜோதிடத்தை நம்பித்தான் ஆகவேண்டும் என்றெல்லாம் சொல்ல வரவில்லை.

எதிர்காலம் என்பவை இனிவருபவையா ? ஏற்கனவே நடந்தவையா ? காலம் முன்னோக்கி நகர்கிறது என்கிற அறிதலில் எதிர்காலம் என்பவை இனிவருபவை என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மை ? உதாரணத்திற்கு 24 மணி நேர நாள் பகுப்பில் 15 மணி என்பது 14 ஆவது மணிக்கு பிறகு வருவது என்று எளிதாக சொல்லிவிடுவோம். 15 மணி என்பது 14 ஆம் மணியின் எதிர்காலம். இப்பொழுது 15 ஆம் மணியில் இருந்து பார்த்தால் 14 ஆம் மணி 25 மணி நேர அளவில் முன்னே நிற்கும் எதிர்காலம் ஆகிறது அதாவது 15க்கு பிறகு 14 வருகிறது. இதுவும் முன்னோக்கி நகரும் காலம் தான் ஆனால் 14க்கு முன்னே நிற்பது 15. ஒரு சுற்று முடியும் நேரத்தில் வரிசை மாறிவிடுகிறது 1-24 to 24-1. இந்த சுற்று ஒரு நாளுக்கு இருப்பது போலவே ஒரு ஆண்டு அளவில் உண்டு. ஜனவரிக்கு பிறகு பிப்ரவரி .... ஜனவரி .... பிப்ரவரி. ஒரு ஆரம்பம் என்ற அளவில் ஜனவரி முன்பாகவும் பிப்ரவரி பின்பாகவும் நமக்கு தெரிகிறது, ஆரம்பம் இல்லாமல் முன்னோக்கி நகரும் காலத்தில் ஜனவரி முதலிலா ? பிப்ரவரி முதலிலா ?அல்லது டிசம்பர் தான் கடைசியா என்று சொல்லவே முடியாது. காலம் நிற்காமல் சுழன்று கொண்டு தானே இருக்கிறது.

இப்போது பிக்பாங்க் தியரிக்கு வருவோம், பிரபஞ்சம் சுறுங்கி விரிவதாக தற்போதைய விஞ்ஞானிகள் கோட்பாடு வகுத்திருக்கிறார்கள், சுருங்கி விரியும் காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. அவற்றை முற்றிலும் வரையறுக்கும் ஆற்றல் மனித இனத்துக்கு ஏற்படாது என்றே நினைக்கிறேன், ஒளியின் வேகத்தைவிட பயணம் செய்யும் ஆற்றல் எந்த ஒரு திடப்பொருள் மீதும் ஏற்படுத்தி விடமுடியாது இது விஞ்ஞான உண்மையும் கூட, பிரபஞ்சத்தைப் பற்றி முற்றிலும் அறிந்தால் தான் விரிந்து சுறுங்கும் காலத்தை அளக்கவே முடியும். எல்லை அளவிட முடியாத பிரபஞ்சத்தை முற்றிலும் அறிவதற்கான உதவும் கருவிகளை எவ்வளவுதான் முயன்றாலும் உருவாக்கமுடியாது, பிரபஞ்ச ஒடுக்கம் விரிவு கோட்பாட்டை மெய்பிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டு மாதிரிகளை செய்து வைத்திருக்கிறார்கள். அவை முற்றிலும் வெற்றிகரமாக அமையுமா என்பது சரியாகத் தெரியவில்லை. சூரியன் தோன்றிய காலம் 5000 மில்லியன் ஆண்டுகள் என்கிறார்கள், மனித இன அறிவின் வரலாறு பரிணாம கொள்கை தவிர்த்துப் பார்த்தால் வரலாற்று அளவில் 3 - 5 ஆயிரம் ஆண்டுகள் தான், இந்த 5 ஆயிரம் ஆண்டை 5000 மில்லியனில் கழித்தால் 5000 மில்லியன் ஆண்டுகளே கிடைக்கும், எனெனில் 5000 மில்லியனை 5 ஆண்டுகளில் ஒப்பு நோக்க சொற்பமே, infinity - known integer = infinity.
எனவே மனித அறிவின் வழி பெறப்படும் பிரபஞ்ச தோற்றத்தின் (ஊகம்) ஆண்டு கணக்கு, சூரியன் வெளிப்பட்டதாக சொல்லப்படும் (ஊகம்) ஆண்டுக் கணக்கு எந்த அளவு சரி என்பதையும் பார்க்க வேண்டும்.

******

பிரபஞ்சம் சுறுங்கி விரிதல் என்னும் தத்துவத்தில் விரிதலில் நடக்கும் இயக்கம், சுறுங்குவதற்கு முன்பு நடந்த (முந்தைய) விரிவிலும் ஏற்பட்டு இருக்கலாம். ஒவ்வொரு முறையும் பிரபஞ்ச விரிதலில் நடக்கும் இயக்கமே மீண்டும் நடக்கிறது என்று வைத்துக் கொண்டு பார்த்தால், இயக்கமும் அதில் நடக்கும் நிகழ்வுகள் யாவும் முன்பே நடந்தவை. முன்பே நடந்தவையாக தெரிந்தால் மிகச் சரியாக அடுத்து வருவதை சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு பிறகு 2 மணி வருதால், நாளைக்கும் 1 மணிக்கு பிறகே 2 மணி வரும் என்பது சரியான அவதனிப்புதானே. குறுகிய காலகட்டத்தில் நடக்கும் சுழற்சியை அறியும் ஆற்றல் உள்ளவர்களான நாம் அடுத்து வருவது என்ன என்று சொல்லிவிடுகிறோம், பிரபஞ்ச விரிவு ஒடுக்க அளவில் நிகழும் இயக்கங்களை அறிந்தவர் அடுத்த பிரபஞ்ச விரிவிலும் இதே தான் வரும் என்று சொல்வாரா இல்லையா ? ஆனால் அப்படி ஒரு அறிவு உள்ளவர் (நம்மில்) எவரும் இல்லை. ஏற்கனவே நடந்தவைகளைத்தான் ஈஎஸ்பி என்ற உணர்வாக பலரும் உணர்கிறார்கள். பலருக்கும் இந்த உணர்வு உண்டு. முந்தைய பிரபஞ்ச விரிவின் இயக்கத்தின் போது சந்தித்தவற்றையே திரும்பவும் சந்திக்கிறோம். ஒரு சிலருக்கு இந்த இடத்தை முன்பே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வும், அந்த இடம் 10 ஆண்டுக்கு முன்பு உருவான அடுக்கு மாடி குடி இருப்பாகக் கூட இருக்கும், சுமார் 100 - 200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த முந்தைய பிறவியில் கூட பார்த்திருக்க சாத்திய மற்றதாகக் கூட இருக்கும், அப்படி இருந்தாலும் அந்த இடத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்றூ உணர்வார். ஏன் ? ஒருவரை புதிதாகப் பார்த்தவுடன் ஏற்கனவே பார்த்தது போலவே சிலர் உணர்வார்கள். பிரபஞ்சம் ஒடுங்கி மீண்டும் விரியும் போது நடந்தவையே மீண்டும் நிகழும், எப்போதும் அதையே உணர்வார்கள்.

இது உண்மை என்றால் மதமாக மனித இனத்தில் முதலில் சநாதனம், சமணம், பெளத்தம், கிறித்துவம், இஸ்லாம் இவை வரிசை மாறாமல் மறுபடியும் ஏற்படும் எல்லா மதங்களிலும் உலகம் ஒருநாள் அழியும் என்று சொல்லி இருப்பதையும் கவனிக்கவும். உலக அழிவும் ஏற்கனவே நிகழ்ந்ததாக இருப்பதால் அவற்றை உறுதியாகவே இம்மதங்களின் வழியாகவும் சொல்லப்படுகிறது என்றே கருதவேண்டி இருக்கிறது. அந்த அழிவு எப்போது ? காலத்திற்கு (கோவியார் அல்ல) மட்டுமே தெரியும் அது 100 ஆண்டுகளிலோ, அடுத்த ஆண்டிலோ, அடுத்த மாதமாகக் கூட இருக்கலாம். :)

ஒவ்வொரு விரிவின் போது பிறவிகள் மற்றும் சூழல்கள் அச்சு மாறாமல் நிகழும். விமான தாக்குதலால் இரட்டை கோபுரம் தகரும், அதே பெற்றோருக்கு பிறந்து இருப்பீர்கள், உங்கள் (இதே)மனைவியுடன் இருப்பீர்கள், (என்ன கொடுமை என்கிறார்கள் பலர்) . பீர் அருந்துபவர்கள் அருந்துவார்கள், இந்த நிமிடம் நடப்பவையே நடக்கும். தமிழ்மணம் இருக்கும், காலம் பதிவு இருக்கும், இந்த பதிவின் தலைப்பையும், இந்த பதிவை இந்த 2008 ஆண்டுக்கான 300 ஆவது பதிவாகவும் (எழுத்துப் பிழைகளுடன்) கோவியார் எழுதி முடித்திருப்பார். நீங்கள் படித்துக் கொண்டு இருப்பீர்கள்.
உங்கள் வாழ்வில் மகிழ்ந்திருந்தாலோ, துக்கப்பட்டு இருந்தாலோ அவை பிரபஞ்ச விரிவு தோறும் நடப்பவையே. இவை சரியாகப் புரிந்து கொண்டால் எல்லாம் மாயை என்று உணர்வீர்கள், எதற்கும் நாம் காரணமல்ல. உலகம் நாடக மேடை நாம் (வந்து போகும்...வந்து போகும்) நடிகர்கள் என்று உணர்வீர்கள்.

எந்த விதியும் (கால) சுழற்சிக்குள் அடக்கம் ! விதிகள் காலத்தால் மாறும் ?

******
பின்குறிப்பு : நான் சொல்லி இருப்பது பிரபஞ்ச ஒடுக்கம் விரிவில் வரும் கோட்பாடுகளை (Cycle of Time) ஒட்டி வருபவை. இவற்றை நம்ப வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை. இவை சாத்தியம் என்று என்னளவில் நம்புகிறேன். விவேகநந்தர் ஞானயோகத்தில் இதுகுறித்து விரிவாக எழுதி இருக்கிறார்.

16 அக்டோபர், 2008

காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நம்மை காப்பது எப்படி ?

பங்கு சந்தை சூறாவளியில் காணாமல் போன நிறுவனங்களில் முதன்மையானவையாக கடன் வழங்கும் வங்கிகளும், காப்பிடு வழங்கும் வங்கிகளுமே ஆகும். லட்சக்கணக்கானோர் சிறுக சிறுக சேமிப்பு + காப்பீடாகப் போட்டவையெல்லாம் வளர்ந்து வாங்கப் போகும் நிலையில் திவாலாகி அவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டது. தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்பது நூற்றாண்டு கால படிப்பினையாக அமையும் என்று எதிர்பார்த்தாலும், மக்கள் எதையுமே அன்றோடு மறந்துவிடுவார்கள் என்கிற லாஜிக் தெரிந்த பொது / தனியார் நிறுவனங்கள் புதுவழியில் மக்களை எப்படியேனும் அனுகிவிடுவர்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மேக்சிமா, ரமேஷ் கார் மற்றும் அனுபவ் நிறுவனங்கள் மூலம் நல்ல 24 விழுக்காடு வட்டி வழங்கப்படுவதை நம்பி அடிவாங்கியவர்கள் என்பதால் தமிழக மக்கள் தற்போதைய பங்கு சந்தை பாதிப்பில் பங்கு பெறாதவர்களாகவும், அப்படியே பெற்று பாதித்திருந்தாலும் ஏற்கனவே நடந்தவையே என்றும் தேற்றிக் கொள்வார்கள்.

பலூன் ஊத ஊத பெரிதாகவும் வியப்பாகவும் இருக்கும், காற்று சேர சேர அழுத்தம் மிக பலூனின் பரப்புகள் மெல்லியதாகவும் மாற, அடுத்து காற்று சேர்ந்து கொண்டிருக்கும் போது எந்நேரமும் வெடிக்கலாம் என்ற விதிபோல் தான் பங்கு சந்தையின் வீழ்ச்சிகள் காட்டுகின்றன. வெறும் பணம், அதை பத்திரமாக (Form) மாற்றி பணம் பண்ணிக் கொண்டே இருக்கலாம் என்கிற நினைப்பில் வெண்ணீரைக் கொட்டியதாகவும், பெரும் கோடிஸ்வரனாக உலா வந்தவர்கள் 'பணம் என்பது மாயை' தான் என்று அருளுரை ஆற்றும் அளவுக்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறது. பணமும் அதன் மூலம் கிடைக்கும் புகழும் (குறுகிய) காலம் தொடர்புடையது என்னும் ஆன்றோர் உண்மையை உணர்ந்து கொள்ள கொடுக்கும் பணம் மிகவும் பெரியதுதான். எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்குவது போலவே பணத்தின் மீது இருக்கும் மோகத்தை உணர்ந்து தெளிந்து கொள்ள இப்பணம் கொடுக்கப்படுவதாகவே உணர்ந்து கொண்டால் ஓரளவு அழுத்தத்திலிருந்து மீளலாம். அப்படியும் ஆறுதல் கிடைக்கவில்லை என்றால்,

'எதைக் கொண்டுவந்தாய், எதனை இழக்கிறாய் ?'

'நீ எதைக் கொண்டு வந்தாயோ...அதை,
நீ பங்கு சந்தையிலிருந்தே கொண்டு வந்தாய்'

'இன்று உன்னுடையதாக இருப்பது... பங்கு பரிவர்த்தனை முடிந்த பிறகு
ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்'

என்பதாக கீதாச்சாரத்தை சற்று மாற்றி அமைத்துக் கொண்டு ஆறுதல் அடையலாம்

**********

இங்கே சிங்கையில் தபால் அலுவலகம், வங்கி ஆகியவற்றிற்கும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கும் சென்றால் எதாவது ஒரு காப்பிட்டு முகவர் / கடன் அட்டை முகவர் நம்மை நெருங்கி சிரித்தபடியே ஒரு 20 அடிக்கு கூடவே வருவார். பெரும்பாலும் 'நோ தாங்கஸ்..', இல்லாவிடில் 'எனக்கு வேறொரு நிறுவனத்தில் காப்பீடு இருக்கிறது / கடன் அட்டை இருக்கிறது' என்று சொல்லி சமாளித்து எட்டி வந்துவிடுவார்கள். நான் 2004 வாக்கில் ஒரு தபால் அலுவலகத்திற்குச் சென்ற போது (AI* நிறுவனத்தைச் சேர்ந்த) ஒரு பெண் முகவரிடம் மீளமுடியாமல் சிக்கிவிட்டேன். 'உடனடியாக காப்பீடு எடுக்க முடியாது, வேண்டுமானால் கைபேசி எண்களைத் தருகிறேன், பிறகு பேசுங்களேன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்தேன். தப்பிவந்ததாக நினைத்தேன் ஆனால் சரியாக ஒருவாரத்தில் அழைத்தாள். சும்மா சொல்லி வைப்போமே என்பதற்காக 'இப்ப நிதி நிலமை சரியில்லை, இன்னும் மூன்று மாதம் கழித்து பேசுங்கள்' என்றேன். சரியாக மூன்று மாதம் சென்று அழைத்தாள், அப்போதும் அதே காரணத்தைச் சொல்லி இன்னும் ஒரு ஆறுமதத்திற்கு தள்ளிப் போட்டேன். விடுவாளா ? அடுத்த ஆறுமாதத்தில் அழைத்தாள், அவள் தான் அழைக்கிறாள் என்று சொல்வதற்காக அவளே, 'Kanna Do you remember me, that day angmokyo post office ?", நானும் "yes, yes madam" என்று சொல்வதே வாடிக்கையாக இருக்கும்.

அதன் பிறகு மற்ற சூழல்களையெல்லாம் சொல்லி, அதாவது ஏற்கனவே வெறொரு நிறுவனத்தில் இருக்கும் காப்பீடு அடுத்த ஆண்டு முடிந்துவிடும் அதன் பிறகு பேசு' என்றேன், சரியாக ஒரு ஆண்டில் மீண்டும் அழைத்தாள், கிட்டதட்ட இரு ஆண்டுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்துக் கொண்டே இருந்தாள். இந்த முறை அவளை எப்படி தவிர்பது என்று நினைத்து யோசித்தேன். "Madam, I am going back to india permanently, I am sorry, I cannot signup for any policy" கொஞ்சம் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிந்தது, தொழில் தானே, அதன் பிறகு அவள் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை, மீறி தொடர்பு கொண்டாலும், "I came from India only on last week, I will stay here only for another 2 months" என்று சொல்லலாம் என்றே நினைத்திருக்கிறேன். இதுவரை அவளும் அழைக்கவில்லை. ஒருவேளை எனது கைபேசி எண்ணை அவளது பட்டியலில் இருந்து நீக்கி இருக்கலாம். இதுபோன்ற முகவர்களிடம் பட்டென்று முகத்தில் அடித்தது போல் சொல்வதற்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை.

நல்லவேளை நான் தப்பித்தேன், அவள் முன்மொழியும் வங்கியும் தற்பொழுது திவாலாகி இருக்கிறது, சென்ற ஆண்டு வேறொரு முகவரிடம் வீட்டு பாதுகாப்புக்காக (ஏற்கனவே வேறொரு நிறுவனத்தின் வீட்டு பாதுகாப்பு பத்திரம் House Protection Scheme (HPS) ஒன்று இருக்கிறது) உபரியாக அதே நிறுவனத்தில் 180 டாலர் வரை ஆண்டுத் வைப்புத் தொகையாக கட்டியது ஸ்வாகாதான், பெரிய நட்டமில்லை. 100,000 டாலர் வரை காப்புறுதி வாங்கி இருந்த பல முதியவர்கள் மனம் ஒடிந்து இருக்கிறார்கள். கிணற்று தண்ணீரை ஆற்றுவெள்ளம் அடித்து போகுமா என்று பேச்சு வழக்கு உண்டு சிறுக சிறுக சேமிக்கும் பலரது சேமிப்பை நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி என்னும் சுனாமி அப்படியே விழுங்கிவிட்டது. அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்த நிறுவனங்களில் காப்பீடு செய்யாமால் நிறைய சலுகைகள் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.

சிறுக சிறுக சேமித்து இப்படி ஒரே தடவையில் மாயமாகப் போவதற்கு பதில் 'இருக்கிற வரை Enjoy பண்ணுவோம்' என்ற மனநிலைக்கு மக்கள் சென்று, வரும் காலத்தில் சேமிக்கும் பழக்கம் ஒழிந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை :(

13 அக்டோபர், 2008

அல்ஃபோன்ஸா அன்னை !

இறைவன் நேரடியாக அனைவருக்குமே உதவ முடியாது என்பதால், பெற்றோர்கள் வழி, குறிப்பாக அன்னையர் வழியாக அதனைச் செய்கிறான் என்று பெற்றோரின், அன்னையிரின் பெருமை தன்னை சிறப்பாகச் சொல்வதுண்டு.

தாய்மை உயர்வு தான், அதைவிட எல்லோரையும் தன் மக்களைப் ( குழந்தைகள்) போல் பரிவு காட்டும் தாய்மை உயர்விலும் உயர்வு, வேறெந்த மதத்தைக் காட்டிலும் பெண்ணிற்கு உயரிய மதிப்பு அளித்து, அவர்கள் மூலம் நல்லொதொரு சமூக, ஆன்மீகச் சேவை செய்துவரும் மதம் என்பதால் கிறித்துவ மதத்தின் மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. தன்னலமற்ற உன்னத சேவைக்காக தன்னையே அற்பணித்துக் கொள்ளும் எண்ணற்ற கிறித்துவ சகோதரிகள் வெள்ளை ஆடையில் செல்வதைப் பார்க்கும் பொழுது, என்னை தேவதைகள் கடந்து போவது போலவே உணர்வேன்.

பெண்களின் வாழ்கையை கணவன், குழந்தைகள் என்று சுறுக்கி வைத்திருக்கும் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அனைவருக்கும் வாழும் அன்னையராகவே இவர்களை கருதுகிறேன். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவது என்று கொச்சையாக பிற மதத்தினரால் ஏசப்பட்டாலும், அந்த அன்னையர்கள் எண்ணங்களில் இருப்பது கிறித்துவம் என்கிற மதம் அல்ல, இறைவனிடம் அன்பு கொண்ட அடியார்கள் இறைவன் குறித்தான தங்கள் சேவையை எப்படி இறைப்பணி என்று நினைக்கிறார்களோ அதைத்தான் அந்த சகோதரிகளும், அன்னையர்களும் நினைக்கிறார்கள்.

உலகுக்கு ஒரு அன்னையைக் காட்ட எந்த மதத்தாலும் முடியாதபோது, மதங்களைக் கடந்தவராக உலக மக்களின் அன்பைப் பெற்றவராக அன்னை தெரசா ஒளிர்ந்து நின்றார். அவரைப் போலவே எண்ணிலடங்காத கிறித்துவ சகோதரிகள் தங்களின் முழுவாழ்க்கையை இறைவனின் சேவையாளர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். அதில் ஒருவராக அன்னை அல்ஃபோன்ஸா இருந்திருக்கிறார், தனது ஊனமுற்ற காலையும் பொருட்படுத்தாது கேரள பகுதியில் 39 வயது வரை வாழ்ந்து சிறப்பான சேவை ஆற்றி மறைந்திருக்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் இந்திய கிறித்துவர்களுடன் சேர்ந்து இந்தியர்களும் பெருமை பட வேண்டிய ஒன்று, நான் பெருமை படுகிறேன்.

*********

நூற்றில் தொன்னூறு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள், எதாவது கிறித்துவ பள்ளியில் தான் ஆரம்ப வகுப்போ, உயர்நிலை வகுப்போ படித்திருப்பார்கள், கிறித்துவ மிசனெறிகள் இந்தியாவுக்குள் கிறித்துவ மதத்தைப் கொண்டு வந்திருக்காவிட்டால், பாமரர்களுக்கு ஏட்டுக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கும், கால்டுவெல் ஐயர் போன்ற பாதிரிமார்கள் வந்திருக்காவிட்டால் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள், தமிழும் வடமொழியில் இருந்து பிறந்த நீச பாசை என்று கூறும் தமிழ்தூற்றிகளின் ஏச்சுக்களை உண்மை என்று நம்பி குறுகிக் கொண்டு இருந்திருப்போம்.

நல்ல வேளை பாமரன் கல்வி பெற்றதும், தமிழர்கள் தெளிவடைந்ததும் கிறித்துவம் இம்மண்ணில் வேர் ஊன்றியதால் கிடைத்த பெரும் பயன்கள்.

என்னைப் பொறுத்து கல்வி தரும் கலைச் செல்வி சரஸ்வதியாக தெரிபவர்கள், தூய வெள்ளையாடையில் அதைச் சிறப்பாகச் செய்யும் கிறித்துவ சகோதரிகள் மட்டுமே.

இந்தியாவெங்கும் பாமரர்கள் மட்டுமே கல்வி பெறவில்லை, ஒரிசா போன்ற மாநிலங்களில் கிறித்துவ சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒவ்வொரு இந்துத்துவ வெறியனும் கூட எதாவது ஒரு கிறித்துவ பள்ளியில் ஆரம்பக் கல்வியோ, உயர்நிலை கல்வியோ பெற்று இருப்பான். இந்துத்துவ கேடுகெட்ட ஜென்மங்களின் தகாத செயல், தங்களது சொந்த சகோதரியையை தானே பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்துவது போன்ற மன்னிக்க முடியாத இழிசெயல். (முற்றிலுமே நிதானம் இழந்து ஒரு இந்து சகோதரியை கிறிதுவ கன்னிகாஸ்திரி என்று நினைத்து வண்புணர்ந்து இருக்கிறார்கள்)

*******

தமிழக மண்ணிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் தன்மானத் தமிழர்கள் என்றோ, பெரியார் பூமி என்றோ சொல்லிக் கொள்வதில் பெருமை கிடையாது, அதன் பிறகு எல்லா சாக்கடைகள் போலத்தான் நாமும் என்று நினைத்துக் கொள்வோம்.

இந்துத்துவ வாதிகளின் இழிவினால் சிறுமை அடையும் நிலை நம்மீது(ம்) திணிக்கப்படாமல் தடுப்போம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்