பின்பற்றுபவர்கள்

23 அக்டோபர், 2008

தேன்கூடு திரட்டியை நடத்தியவர்களுக்கு எனது கண்டனம் !

செப்டம்பர் 2 க்கு பிறகு தேன் கூடு திரட்டி வேலை செய்யவில்லை. திரு சாகரன் மறைவிக்கு பிறகு பலர் எடுத்து நடத்தியதாக காற்று வாக்கு தகவல்கள் வந்ததுடன் சரி. அதன் பிறகு அதில் செயல்பட்டவர்கள் தீவரவாதியாக இயங்குவதாக நினைத்தார்களோ என்னவோ, "நானும் சேர்ந்தே தான் நடத்துகிறேன், தேன் கூடு பற்றி தகவல்கள் வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள்" என்று அதனை நிர்வகித்தவர் எவரும் சொல்லாதது வியப்பே அளிக்கிறது. இந்த அளவுக்கு மறைவாக செயல்பட என்ன தேவை என்றே தெரியவில்லை.

தேன்கூடும் ஒரு பெயர் பெற்ற திரட்டிதான், அதனை நிர்வகித்தவர்களுக்கு பதிவர்களுக்கு அதன் செயல்பாடுகள் முடங்கிப் போனதன் காரணம் அறிய தருவதில் என்ன தவறு ? "திரட்டிகளை நம்பலாமா ? எனக்கென்ன என்றபடி திரட்டி நிர்வாகத்தினர் நடந்து கொள்வார்கள்" என்று பிற திரட்டிகளைப் பற்றியும் பதிவர்கள் நினைக்கும் வண்ணம் தேன்கூட்டை கலைத்தவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதைக் குற்றச் சாட்டாகவே சொல்கிறேன்.

திரட்டியால் பதிவர்களுக்கு பயன் என்றாலும் பதிவர்கள் இல்லை என்றால் திரட்டியும் மின்சாரம்ம் இல்லாத தமிழ்நாடாகத்தானே இருக்கும். எந்த நோக்கத்தோடு திரட்டி ஆரம்பிக்கப் பட்டது என்பதைப் பற்றி பதிவர்கள் கேட்காவிட்டாலும், பதிவர்களை விதிமுறைகளுடன் இணைத்துக் கொள்ளும் திரட்டிகளுக்கு, பதிவர்களுக்கு சில தேவையான அறிவிப்புகளைச் செய்வேண்டும் என்பது தான் பதிவர்களின் எதிர்பார்ப்பு. ஓசியில் கொடுத்தாலும் கெட்டுப் போன பொருள்களைக் கொடுத்தால் கை நீட்டி வாங்குபவர்கள் கேள்வி கேட்பார்கள், அதுதான் இயல்பு.

தொடர்ந்து நடத்த முடியாததற்கு பொருள் வசதியோ, நேரமோ இல்லை என்பதால் கைவிட்டு இருந்தாலும், தேன்கூடு தளத்தில் ஒரு அறிவிப்பை வெளி இட்டு நிறுத்தி இருக்கலாம், தளத்தின் ஆண்டு சந்தா புதுப்பிக்கப்படாமல் முடங்கி இருந்தாலும், அதை நிர்வகித்தவர்கள் அவர்களது வலைப்பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளி இட்டு தகவல்கள் தெரிவித்து இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்யாதது பொறுப்பற்ற செயலாகவே தெரிகிறது.

இதையெல்லாம் ஏன் கேட்கிறேன் ?

தேன்கூடு திரட்டி இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அதில் தங்களது வலைப்பக்கத்தை இணைத்தவர்கள் பலர், தேன்கூடு திரட்டியின் அறிவுறுத்தல் படி தேன்கூடு திரட்டியில் தானியங்கியாக பதிவர்களின் பதிவை திரட்ட ஒரு Java Script ஐ தேன்கூடு நிர்வாகத்தினர் கொடுத்து இருந்தனர். அதை தங்களது வலைப்பக்த்தில் வைத்துக் கொண்டிருந்தவர்களின் பதிவெல்லாம் தேன்கூடு முடங்கிய பிறகு தொங்குகிறது. அதாவது யார் யார் தேன்கூடு Java Script வைத்திருந்தார்களோ, அவர்கள் பதிவை திறக்கும் போது பின்னூட்டங்களைக் காட்ட சுமார் ஒரு நிமிடம் வரை எடுத்துக் கொள்கிறது, காரணம் அந்த Java Script தேன்கூடு திரட்டியை தொடர்பு கொள்ள முயலும் நேரம் எடுப்பது தான், திரட்டி முடங்கிவிட்டதால் திரும்ப திரும்ப முயற்சித்துவிட்டு பிறகு தான் பின்னூட்டங்களைக் காட்ட வழிவிடும்.

தேன்கூடு திரட்டினரிடமிருந்து அறிவிப்பு வந்திருந்தால் பதிவர்கள் தேன்கூட்டின் Java Script ஐ வைத்திருப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். பலருக்கு எதனால் தங்கள் வலைப்பக்கம் தொங்குகிறது என்றே தெரியவில்லை.

*********

தேன்கூடு Script வைத்திருக்கும் பதிவர்களுக்கு,

தேன்கூடு திரட்டி கொடுத்திருந்த Java Script ஐ நீக்குவது எப்படி என்று பார்ப்போம். பலர் தேன்கூடு ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார்கள், எனக்கு தெரிந்து கேஆர்எஸ், முரளிகண்ணன் மற்றும் பலர். நீக்குவது எப்படி ?

Log on to Blogger

Click on 'Layout',

Click on 'Edit HTML' ,

then Click on the Square ( Check Box)

Expand Widget Templates

Search for the text 'thenkoodu.com' , then Remove the Scripts as highlighted below.
then Press "Save Template"

********

அடுத்து திரட்டிகள் கொடுக்கும் திரட்டி இணைப்பு படத்தை (Logo) வலைப்பதிவில் சேர்பதில் என்ன தவறு நேர்கிறது என்று பார்ப்போம்.

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

முறையான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

திடீரென்று நிறுத்தியதால் சிரமம்.

Bee'morgan சொன்னது…

ஓ.. இதுதான் பிரச்சனையா.. தகவலுக்கு மிக்க நன்றி கண்ணன்.. என் வலைப்பக்கம் ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன்.. இப்போது சரிசெய்தாகிவிட்டது..

கிரி சொன்னது…

தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்

//இணைந்தை கைகள் ! (36)//

"இணைந்த" நான் தவறாக கூறுகிறேனா! இல்லை உங்கள் தவறா!

துளசி கோபால் சொன்னது…

என்னுடைய டெம்ப்ளேட்லே தேன்கூடு நிரலி இல்லை. ஆனாலும் பின்னூட்டப்பெட்டி திறக்கமாட்டேங்குது.
பிங் தேன்கூடுன்னு என்னவோ வந்துக்கிட்டு இருக்கு.(-:

என்ன தகராறோ?

SurveySan சொன்னது…

:(

someone has the domain registered.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
என்னுடைய டெம்ப்ளேட்லே தேன்கூடு நிரலி இல்லை. ஆனாலும் பின்னூட்டப்பெட்டி திறக்கமாட்டேங்குது.
பிங் தேன்கூடுன்னு என்னவோ வந்துக்கிட்டு இருக்கு.(-:

என்ன தகராறோ?
//

துளசி அம்மா,

உங்கள் பதிவில் தேன் கூடு Java Script இருக்கிறது...

language='javascript' src='http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=http://thulasidhalam........................

பதிவின் view Source பார்த்தேன் இருந்தது.

நான் சொல்லி இருக்கும் முறைப்படி அதை நீக்கிவிடுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Bee'morgan said...
ஓ.. இதுதான் பிரச்சனையா.. தகவலுக்கு மிக்க நன்றி கண்ணன்.. என் வலைப்பக்கம் ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன்.. இப்போது சரிசெய்தாகிவிட்டது..
//
Bee'morgan,
உங்கள் பதிவு பட்டை (டெம்ப்ளேட்) கலக்கல் !

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்

//இணைந்தை கைகள் ! (36)//

"இணைந்த" நான் தவறாக கூறுகிறேனா! இல்லை உங்கள் தவறா!
//

கிரி நன்றி, தவற்றை திருத்துகிறேன். அல்லக்கைன்னு சொல்லிடாதிங்க :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
:(

someone has the domain registered.
//

அது பிரச்சனை இல்லைங்க, சாகரனுக்கு பிறகு நடத்தியவர்களுக்கு நிலவரம் தெரியும், எதாவது அறிவிப்பு விட்டு இருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
முறையான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

திடீரென்று நிறுத்தியதால் சிரமம்.
//

அண்ணாச்சி,

பொதுச்சேவை நிறுவனங்களுக்கு ஓரளவு பொறுப்பும் இருக்கனும். திரட்டிகள் கொடுக்கும் இணைப்பை யெலலம் வைத்துக் கொள்பவர்கள் யோசிக்க வேண்டி இருக்கிறது

Bee'morgan சொன்னது…

//
உங்கள் பதிவு பட்டை (டெம்ப்ளேட்) கலக்கல் !
//
மெய்யாலுமேவா..? :o)
நன்றிங்க..!

கோவி.கண்ணன் சொன்னது…

//Bee'morgan said...
//
உங்கள் பதிவு பட்டை (டெம்ப்ளேட்) கலக்கல் !
//
மெய்யாலுமேவா..? :o)
நன்றிங்க..!
//

ஆமாம், வழிப்போக்கன் என்ற பதிவில் இருக்கும் டெம்ப்ளேட் அசத்தல்

வால்பையன் சொன்னது…

மிக்க நன்றி
எப்படி எடுப்பது என்று தேடிகொண்டிருந்தேன்

Indian சொன்னது…

என்னுடைய பரிந்துரை, அந்த கோடை அழித்து விடாமல் கமெண்ட் மட்டும் செய்துவிடுவது.
எதிர்காலத்தில் தேவைப்பட்டால் திரும்பவும் இணைக்க என் அவஸ்தைப்பட வேண்டும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//Indian said...
என்னுடைய பரிந்துரை, அந்த கோடை அழித்து விடாமல் கமெண்ட் மட்டும் செய்துவிடுவது.
எதிர்காலத்தில் தேவைப்பட்டால் திரும்பவும் இணைக்க என் அவஸ்தைப்பட வேண்டும்?
//

அதுக்கு சின்னதாக HTML வகுப்பெல்லாம் எடுக்கனும் :), தேவைப்படும் போது முன்பு போலவே நிறுவிக் கொள்வார்கள்

RATHNESH சொன்னது…

திருக்கோட்டியூர் நம்பியாக இல்லாமல் ராமானுஜராக நற்பணி செய்கிறீர்கள். நன்றி.

ஜமாலன் சொன்னது…

நன்றி நண்பர் கோவி...

நீக்கிவிட்டேன்...

பல ஆன்மீக. இலக்கிய. அரசியல் பகுத்தறிவு சேவைகளுக்கு மத்தியில் தொழில்நுட்பத்திலும் செலுத்தும் கவனம் பிரமிக்க வைக்கிறது.

Kanchana Radhakrishnan சொன்னது…

தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்

நையாண்டி நைனா சொன்னது…

தேனீக்கள் கொட்டி இருக்குமோ... என்னவோ?அதனாலே கூட பிடி தளர்ந்து கீழே விழுந்திருக்கலாம்....

மேலும் நான் தான் நடத்தினேன் என்று அறிவித்தால், தேனீக்கள் எல்லாம் இராம.நாராயணன் பட பாம்பு மாதிரி வன்மம் தீர்த்து விடும் என்று எண்ணி சொல்லாமல் இருந்திருக்கலாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரின் பன்முகத்தன்மை இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது! எனக்குத் தெரிந்து அவர் தொழில் நுட்பவாதி!!
பகிர்வு பலருக்கு உதவும்.

//RATHNESH said...
திருக்கோட்டியூர் நம்பியாக இல்லாமல் ராமானுஜராக நற்பணி செய்கிறீர்கள். நன்றி.//

கோவியாரும் கும்பகோணத்துக்குப் பக்கம்தான். நாகப்பட்டினம்!(வெள்ளைக்காரனின் நாக் பட்னா -வை அறிமுகப் படுத்துவதற்கு கும்பகோணத்தைப் பயன்படுத்தியது தவறு என்று நீங்கள் சொல்வது காதில் ஒலிக்கிறது)

துளசி கோபால் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
துளசி கோபால் சொன்னது…

நீங்க சொன்னதுபோல் செஞ்சுத் தேன்கூடைக் கழட்டிவிட்டாச்சு. ரொம்ப இடுக்குலே கட்டி இருந்துச்சு கூடு. கண்டுபிடிக்க உதவுனதுக்கு நன்றி.

ஒரு அஞ்சாறு மாசத்துக்கு முன்னே நம்ம கொத்ஸ்கூட , 'உங்க பேஜ் லோடு ஆக நேரம் எடுக்குது' தேன்கூட்டை எடுத்துருங்க'ன்னு சொன்னார். அப்ப நான் கொஞ்சம் அஸால்டா இருந்துட்டேன், நம்ம டெம்ப்ளேட்லே அது இல்லைன்னு(-:

உங்க உதவிக்கு மீண்டும் நன்றிப்பா.


போன பின்னூட்டத்தில் தட்டச்சுப் பிழை இருந்துச்சுன்னு எடுத்துட்டேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்