பின்பற்றுபவர்கள்

17 அக்டோபர், 2008

சினிமா சினிமா ...

கலைகள் என்று சொல்லப்பட்ட இயல் இசை நாடகம் அனைத்தும் திரை ஊடகமாக சுறுங்கிவிட்ட பிறகு பொழுது போக்கிற்கு அதைத்தவிர வேறு வழி இல்லை என்றாகி விட்டபடியால், சினிமா இன்றி அமையாது தமிழுலகு மற்றும் உலகு. 'நான் சின்ன வயசில்... என்று எழுத வாய்ப்புக் கொடுத்த பதிவர் இளைய பல்லவனுக்கு நன்றி. பொதுவாக தொடர் பதிவில் அவ்வளவு ஆர்வம் காட்டாவிட்டாலும், என்ன எழுதுவது என்று சற்று திணறுபவர்களும், பதிவு எழுதி நிறுத்தியவர்களுக்கு மறு தூண்டுதலாக இருப்பதால் தொடர்பதிவு தவறல்ல. அலுப்பாக இருந்தாலும் எழுத வைக்கிறது.

1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஒரு நான்கு வயது இருக்கும் போது விஜயலட்சுமி திரையரங்க்கில் தேவரின் 'தெய்வம்' படம் தான் முதன் முதலில் பார்த்தப் படம், படத்தில் தீப ஆரதனை காட்சி வந்த பொழுது கையை நீட்டி தொட முயன்றேன். அதை இன்றும் கூட பெற்றோர்களும் உடன் பிறந்த மூத்தவர்களும் நினைவு வைத்திருக்கிறார்கள், முதல் படத்திலேயே பரவசத்தை உணர்ந்துவிட்டேன் :). 2 ஆம் வகுப்பு படித்த போது விஜயலட்சுமி திரையரங்க்கில் அக்காவுடனும் பாட்டியுடனும் பார்த்த 'நான் அவனில்லை படம்'... இன்னும் கூட 'மந்தார மலையோடு வந்தாடும் தென்றலில் தாழாட்டும் புல்லாங்குழல்' என்ற எஸ்பிபியின் ஆரம்பகாலப் பாடலாக திரையில் பார்த்த, ஜெமினியின் கருப்பு வெள்ளைக் காட்சியை நினைக்க முடிகிறது. அதன் பிறகு ஒளவையார், மணாளனே மங்கையின் பாக்கியம், தங்கமலை ரகசியம் வகைப் படங்களைத்தான் பெற்றோர்கள் அழைத்துச் சென்றார்கள்.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அமர்ந்து பார்த்தது தான் மிகக் கொடுமையானது என்பதை படத்தின் பெயரைச் சொன்னால் தெரிந்து கொள்வீர்களா ? கடைசியாக பி.வாசு இயக்கத்தில் வந்த படம் தான்

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சிங்கை தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரலில் போட்ட பீமா, இந்த படம் மட்டும் ஓடி இருந்தால் இன்னும் பல மொக்கை படங்கள் வந்திருக்கும், அது கெட்டுப் போச்சே ! இயக்குனரைத்தான் பாராட்டனும், லிங்குசாமியும் மொக்கையாக படம் எடுப்பார் என்று தெரிந்தது

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?நிறைய சொல்லலாம், கர்ணன், ஆயிரம் ஜென்மங்கள், முதல்மரியாதை, பசும் பொன், சிப்பிக்குள் முத்து....இதுல முதல் மரியாதையும் ஓரளவுக்கு தாக்கினாலும், பசும்பொன் படத்தின் பிரபு பாத்திரம் அப்பாவையும், ராதிகா பாத்திரம் அப்பாவின் அம்மாவை (பாட்டியை)யும் நினைவு படுத்தும், காட்சிகளும், சூழலும் கிட்டதட்ட அதே தான்.

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?காதல் படம், அதில் ஒரு சினிமா கதையாசிரியர் மேன்சனில் தங்கி இருப்பதைப் போல் சிலரை பார்த்து இருப்பேன், அவர்கள் உலகமே சினிமாவாக இருக்கும், அப்படி ஒருவரிடம் அவர் பெயர் AK Balan இவ்வளவு முயற்சி பண்ணுகிறீர்களே அலுப்பாக இல்லையா என்று கேட்டேன். 'தம்பி உனக்கு ஒரு வேலை அது போதும், அதாவது ஆற்றில் நீச்சல் அடித்து மறுகரையை அடைபவன் நீ, நான் கடலில் நீந்துகிறேன், காலம் எடுத்தாலும் அது சாதனை' என்றார். அப்பறம் நான் ஏன் பேசப் போகிறேன். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புக் கிடைத்ததா என்று தெரியவில்லை. இது நடந்தது 1989ல்.

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

அந்த கால ஜெகன் மோகினி, மாயஜால காட்சிகள், அதை இப்போது எப்படி செய்திருப்பார்கள், ஜெயமாலினிக்கு சரியாக போட்டியாக நமிதா செய்திருப்பாரா என்று பார்க்க ஆவல் தான்.

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

10 ஆம் வகுப்பு படித்ததிலிருந்து தினமலர் துணுக்கு மூட்டை முன்பெல்லாம் விரும்பி படிப்பதுண்டு. நடிகை நடிகர்களை தினமலர் கிண்டல் செய்து பெயர் வைப்பது மிகவும் பிரசித்தம் (இராம ராஜன் - பசுநேசன், தனுஸ் - ஒல்லிபிச்சான், திரிசா - சாமி மாமி) இப்போதெல்லாம் விரும்பி படிப்பதில்லை, நக்கீரன் வாங்கினால் கொக்கரக்கோ ஒரு பக்க செய்தியை படிப்பேன். வலையில் சினிமா நிருபர் மற்றும் முரளி.கண்ணன் எழுதுவதை படிக்கிறேன்.

7) தமிழ்ச்சினிமா இசை?

அவ்வப்போது ஹிட் ஆகும் இசை அமைப்பாளர்களின் இசையே எனக்கு(ம்) பிடித்தவை. அனைவரையுமே பிடிக்கும்.

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஹாரிபாட்டர், ஸ்பைடர்மேன், லார்ட் ஆப் த ரிங், நார்னியா, அனகோன்டா டைப் படங்களை கிராபிக்ஸ் காட்சிகளுக்காக திரையரங்கிற்கு சென்று விரும்பி பார்ப்பேன்.

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?

நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழகத்தில் இந்தி நுழையாதவரை தமிழ் சினிமா துறை வாழும்.


10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

வருங்கால முதல்வர்கள் பற்றிய நகைச்சுவை இல்லையே என்று வருத்தப்படுவேன். மெகசீரியல் எடுக்கும் திட்டம் எதும் வைத்து கேள்வி கேட்கிறீர்களா ? அதுக்கு தமிழ் சினிமாவே பரவாயில்லை.

இதே கேள்விக்கு பதில் அளிக்க, அடுத்து யாரையாவது அழைக்கனுமாம் ? இருவரை மட்டும் அழைக்கிறேன்

1. ஸ்வாமி ஓம்கார் ( சின்ன வயசில் கண்டிப்பாக திரைப்படம் பார்த்து இருப்பார்... இதிலிருந்தெல்லாம் ஒதுங்கிவிட்டேன் ... இதுபற்றி பதிவிட விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை. மக்களுடன் தொடர்பு உள்ள ஒரு பெரிய ஊடகம் என்பதால் தெரிந்தவரையில் எழுதினாலும் தவறு இல்லை)

2. டி.வி ராதாகிருஷ்ணன் ஐயா (யாரும் ஏற்கனவே கூப்பிட்டு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்)

26 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

me the first.

மணிகண்டன் சொன்னது…

உங்க ப்ளாக்ல மட்டும் தான் என்னால "me the first" போட முடியுது.

மணிகண்டன் சொன்னது…

வாத்தியார கூப்பிட மறந்துடீங்கலே !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
me the first.
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
உங்க ப்ளாக்ல மட்டும் தான் என்னால "me the first" போட முடியுது.
//

மட்டுறுத்தல் எடுத்துவிட்டால் அது ஒரு வசதி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
வாத்தியார கூப்பிட மறந்துடீங்கலே !

5:04 PM, October 17, 2008
//

வாத்தியாரின் பிரம்புக்கு பயம் தான் !
சினிமா பற்றி வாத்தியாரிடம் பேசினால் பிரம்பை சுழற்ற மாட்டாரா ?

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,

உங்கள் பதிவுகள் படித்து விட்டு ஏதாவது தவறாக பின்னூட்ட்ம் இட்டுருந்தால் மன்னிக்கவும் அதற்காக ஒப்படியா சிக்க விடுவது?
:)

என்னை போன்றவர்களின் அனுபவம் ஆன்மீகத்தில் வேண்டுமானால் சுவையாக இருக்கும். சினிமாவை பொருத்தவரை உப்பில்லாத பண்டம் போன்று இருக்கும். அதை எங்கே வைப்பார்கள் என உங்களுக்கு தெரியும் தானே?

ambi சொன்னது…

//ஜெயமாலினிக்கு சரியாக போட்டியாக நமிதா செய்திருப்பாரா என்று பார்க்க ஆவல் தான்.
//

அதானே கேட்டேன். நீங்க மாயாஜால காட்சிய பாத்த மாதிரி தெரியலையே. :)))

ஜோ/Joe சொன்னது…

//தமிழகத்தில் இந்தி நுழையாதவரை தமிழ் சினிமா துறை வாழும்.//

உண்மை.

மணிகண்டன் சொன்னது…

********* அதானே கேட்டேன். நீங்க மாயாஜால காட்சிய பாத்த மாதிரி தெரியலையே *********

அம்பி. கரக்டா பாயிண்ட் புடுச்சிடீங்க. ஒரே மாதிரி சிந்தனை இருந்தா தான் முடியுமோ. !

மணிகண்டன் சொன்னது…

//தமிழகத்தில் இந்தி நுழையாதவரை தமிழ் சினிமா துறை வாழும்.//

தமிழகத்துல மறைமுகமா இந்திய நுழைக்க முயற்சி பண்ற கண்ணனுக்கு எனது நேரடி கண்டனத்தை தெரிவிச்சுக்கறேன்.

நையாண்டி நைனா சொன்னது…

/*அந்த கால ஜெகன் மோகினி, மாயஜால காட்சிகள், அதை இப்போது எப்படி செய்திருப்பார்கள், ஜெயமாலினிக்கு சரியாக போட்டியாக நமிதா செய்திருப்பாரா என்று பார்க்க ஆவல் தான்.*/

நமிதாவை வைத்து ஜெகன் மோகினியை கற்பனை செய்ததற்கே... இப்படி ஒரு தடுமாற்றம் என்றால்,
இப்போ உண்மையிலேயே எடுத்து விட்டால்?????

அத்திரி சொன்னது…

அண்ணாச்சியை ஏன் கூப்பிடவில்லை?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நன்றி கோவி.

குடுகுடுப்பை சொன்னது…

/தமிழகத்தில் இந்தி நுழையாதவரை தமிழ் சினிமா துறை வாழும்./
சரியான கருத்து.

முரளிகண்ணன் சொன்னது…

thalai super. thanks

Veera சொன்னது…

//வருங்கால முதல்வர்கள் பற்றிய நகைச்சுவை இல்லையே என்று வருத்தப்படுவேன்.//

கோவைக் குசும்பு தெரியும். இது 'கோவி' குசும்பா!?

:-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் 5:59 PM, October 17, 2008
திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,

உங்கள் பதிவுகள் படித்து விட்டு ஏதாவது தவறாக பின்னூட்ட்ம் இட்டுருந்தால் மன்னிக்கவும் அதற்காக ஒப்படியா சிக்க விடுவது?
:)

என்னை போன்றவர்களின் அனுபவம் ஆன்மீகத்தில் வேண்டுமானால் சுவையாக இருக்கும். சினிமாவை பொருத்தவரை உப்பில்லாத பண்டம் போன்று இருக்கும். அதை எங்கே வைப்பார்கள் என உங்களுக்கு தெரியும் தானே?
//

ஸ்வாமி ஓம்கார், கட்டாயப் படுத்தவில்லை. சினிமா என்ற ஊடகம் பற்றி உங்களுக்கு என்று எதாவது கருத்து இருக்கலாம், தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டேன். மற்றபடி எழுதியே ஆகவேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை.

என்ன சொன்னிங்க உப்பில்லா பண்டம் எங்கேயா ? மருத்துவர்கள் கூட அரை உப்பு பரிந்துரைக்கிறார்கள். உப்பே இல்லாமல் சாப்பிட்டாலும் பரவாயில்லை என்கிறார்கள். பழமொழிகள் கூட காலத்தில் காலாவதி ஆகிவிடுகிறதே.

உப்பு ரொம்ப தூக்கலான பண்டங்கள் தானே எங்கே வைக்க முடியுமோ அங்கே வைக்க முடியும் ?
:)

எழுத வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. வற்புறுத்தல் எதுவும் இல்லை.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி கண்ணன் அவர்களுக்கு,

உங்கள் கோரிக்கையை ஏற்று, தொடர் பதிவை வெளியுட்டுள்ளேன்.

படித்துவிட்டு சொல்லுங்கள்

http://vediceye.blogspot.com/2008/10/blog-post_18.html

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ambi said...
//ஜெயமாலினிக்கு சரியாக போட்டியாக நமிதா செய்திருப்பாரா என்று பார்க்க ஆவல் தான்.
//

அதானே கேட்டேன். நீங்க மாயாஜால காட்சிய பாத்த மாதிரி தெரியலையே. :)))
//

அம்பி,
பல்பொருள் அங்காடிக்குக்கு போகும் போது யார் யாருக்கு என்ன தேவையோ அதைத்தானே வாங்குவார்கள். உங்களுக்கு பிடித்த மேட்டரை உருவிட்டிங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
//தமிழகத்தில் இந்தி நுழையாதவரை தமிழ் சினிமா துறை வாழும்.//

உண்மை.
//

ஜோ,
நாம வழக்கமாக பேசிக் கொள்வது தானே அது !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
********* அதானே கேட்டேன். நீங்க மாயாஜால காட்சிய பாத்த மாதிரி தெரியலையே *********

அம்பி. கரக்டா பாயிண்ட் புடுச்சிடீங்க. ஒரே மாதிரி சிந்தனை இருந்தா தான் முடியுமோ. !
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
//தமிழகத்தில் இந்தி நுழையாதவரை தமிழ் சினிமா துறை வாழும்.//

தமிழகத்துல மறைமுகமா இந்திய நுழைக்க முயற்சி பண்ற கண்ணனுக்கு எனது நேரடி கண்டனத்தை தெரிவிச்சுக்கறேன்.
//

இங்கே தமிழகத்தில் 'இந்தி' என்று நுழைக்க முயன்றிருக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
/*அந்த கால ஜெகன் மோகினி, மாயஜால காட்சிகள், அதை இப்போது எப்படி செய்திருப்பார்கள், ஜெயமாலினிக்கு சரியாக போட்டியாக நமிதா செய்திருப்பாரா என்று பார்க்க ஆவல் தான்.*/

நமிதாவை வைத்து ஜெகன் மோகினியை கற்பனை செய்ததற்கே... இப்படி ஒரு தடுமாற்றம் என்றால்,
இப்போ உண்மையிலேயே எடுத்து விட்டால்?????
//

:) நமீதா ஜகன்மோகினியாக நடிக்கிறார் என்று எத்தனை பேருக்குத் தெரியாது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி said...
அண்ணாச்சியை ஏன் கூப்பிடவில்லை?

9:24 PM, October 17, 2008
//

அண்ணாச்சியைக் கூப்பிடும் பொறுப்பை கோவை பதிவர்கள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
நன்றி கோவி.
//

நன்றி ஐயா !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்