சேக்கிழாரின் சைவ நெறியில் எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது. நந்தனார் வரலாறு நடந்தவையா...திருத்தொண்டர் புராணத்தில் ஒரு கதையா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லவில்லை. அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் நந்தனார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்தி நெறியின் குறியீடு என்பதை கண்டிப்பாக அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
நந்தனார் வரலாறு பலருக்கும் தெரிந்தவை என்பதால் அதை இங்கே சொல்லப் போவதில்லை. இறுதியில் நந்தனார் 'ஜோதியில்' ஐக்கியம் ஆனார், என்று சொல்கிறார்கள். 200 நூற்றாண்டுகளுக்குள் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரின் 'முக்தி'யும் கூட ஐயமாகவே இருப்பதால், சேக்கிழாருக்கு முன்பு வாழ்ந்தவராக சொல்லப்படும் நந்தனார் 'ஜோதி' மயமானது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவுமே கிடையாது.
சேக்கிழார் சிவநெறியைப் போற்றியவர்கள் என்ற வரிசையில் நந்தனாரையும் குறிப்பிட்டு நாயன்மார்கள் வரிசையில் வைத்துள்ளார். நாயன்மார்களில் ஒருவர் என்ற அளவில் நந்தனாருக்கு முதன்மைத்துவம் எதுவும் இல்லை. பிற நாயன்மார்களைவிட நந்தனார் நேரடியாக தில்லைக்கு தொடர்புடையவர் என்பதால், நந்தனார் அங்கே முக்திபெற்றவர் என்று கூறி தனியாக சிலை நிறுவப்பட்டு போற்றப்பட்டதாக சொல்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்டவனுக்கு தனி மரியாதையா ?' சிலையிலும் தீண்டாமை கொடுமை செய்து நந்தனார் சிலையை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தீட்சிதர்கள் அப்புறப்படுத்தியதாகவும், கண்ணகி சிலைபோல் நந்தனார் சிலையும் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. ஐம்பது ஆண்டுகள் கணக்கு என்பது மிகச் சரியாக இல்லாவிட்டாலும், பாரதியார் பாடலில் நந்தனார் சிலை இருந்த இடத்தைப் பற்றிய பாடல் இருப்பதால், பாரதி காலத்தில் சிலை கோவினுள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்றே சொல்கிறார்கள்.
ஒ
ரே கல்தான்....சிற்பியின் கைவண்ணத்தில் சாமி சிலையாகவும், அடியார் சிலையாகவும் ஆகிறது, அந்த கல்லில் உள்ள வடிவத்தை வைத்து தீண்டாமை பார்பது என்பது வருணாசிரம கொள்கையின் உச்ச கட்ட கொடுமை. சைவம் சைவம் என்று கூவும் சைவ அன்பர்கள் சிலையை மீண்டும் நிறுவவதற்கு முயற்சி எடுத்தார்களா ? அது தில்லை தீட்சிதர்களிடம் செல்லுபடியானதா என்ற தகவலெல்லாம் தெரியவில்லை. தமிழில் பாடுவதற்கே நாத்திகர்களின் போராட்டம் தேவைப்படும் போது, வருணாசிரம கொள்கைகளை இந்து மத, சைவ கொள்கைகளாக நினைக்கும் ஆன்மிகவாதிகளுக்கு நந்தனார் சிலை அகற்றப்பற்றதற்கு ஏதும் கவலைப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே. போகட்டும்.
தீட்சிதர்களின் அடாவடிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கோவிலை கையகப்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆறுமுக ஸ்வாமி போராடித்தான் உள்ளே சென்றிருக்கிறார். இறுதி மூச்சு வரை போராடிய நந்தனார் எப்போது செல்வார் ?
ஆன்மிக அன்பர்களும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை மேலாக நினைப்பவர்களும் நந்தனார் சிலையை தில்லையில் மீண்டும் நிறுவ முயற்சி செய்ய வேண்டும், அதற்காக மாதவி பந்தலார் முயற்சியில் வேண்டுகோள் விண்ணப்பம் மின் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது, அதில் உங்கள் கையொப்பம் இடுங்கள் கையொப்ப எண்ணிக்கைக்கு ஏற்ப நந்தனார் கோவிலுக்குள் செல்லும் நாள் முடிவு செய்ப்படும்.
மின் விண்ணப்பம்:
நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்
'நாளைப் போவோம்...நாளைப் போவோம்' என்று காத்திருந்தற்காகவே நந்தனாருக்கு 'திருநாளைப் போவார்' என்ற பெயருண்டு. நம் காலத்தில் நாளை வேண்டாம்....இன்றே அவரை அழைப்போம்.
நந்தனார் வரலாறு பலருக்கும் தெரிந்தவை என்பதால் அதை இங்கே சொல்லப் போவதில்லை. இறுதியில் நந்தனார் 'ஜோதியில்' ஐக்கியம் ஆனார், என்று சொல்கிறார்கள். 200 நூற்றாண்டுகளுக்குள் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரின் 'முக்தி'யும் கூட ஐயமாகவே இருப்பதால், சேக்கிழாருக்கு முன்பு வாழ்ந்தவராக சொல்லப்படும் நந்தனார் 'ஜோதி' மயமானது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவுமே கிடையாது.
சேக்கிழார் சிவநெறியைப் போற்றியவர்கள் என்ற வரிசையில் நந்தனாரையும் குறிப்பிட்டு நாயன்மார்கள் வரிசையில் வைத்துள்ளார். நாயன்மார்களில் ஒருவர் என்ற அளவில் நந்தனாருக்கு முதன்மைத்துவம் எதுவும் இல்லை. பிற நாயன்மார்களைவிட நந்தனார் நேரடியாக தில்லைக்கு தொடர்புடையவர் என்பதால், நந்தனார் அங்கே முக்திபெற்றவர் என்று கூறி தனியாக சிலை நிறுவப்பட்டு போற்றப்பட்டதாக சொல்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்டவனுக்கு தனி மரியாதையா ?' சிலையிலும் தீண்டாமை கொடுமை செய்து நந்தனார் சிலையை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தீட்சிதர்கள் அப்புறப்படுத்தியதாகவும், கண்ணகி சிலைபோல் நந்தனார் சிலையும் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. ஐம்பது ஆண்டுகள் கணக்கு என்பது மிகச் சரியாக இல்லாவிட்டாலும், பாரதியார் பாடலில் நந்தனார் சிலை இருந்த இடத்தைப் பற்றிய பாடல் இருப்பதால், பாரதி காலத்தில் சிலை கோவினுள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்றே சொல்கிறார்கள்.
ஒ
ரே கல்தான்....சிற்பியின் கைவண்ணத்தில் சாமி சிலையாகவும், அடியார் சிலையாகவும் ஆகிறது, அந்த கல்லில் உள்ள வடிவத்தை வைத்து தீண்டாமை பார்பது என்பது வருணாசிரம கொள்கையின் உச்ச கட்ட கொடுமை. சைவம் சைவம் என்று கூவும் சைவ அன்பர்கள் சிலையை மீண்டும் நிறுவவதற்கு முயற்சி எடுத்தார்களா ? அது தில்லை தீட்சிதர்களிடம் செல்லுபடியானதா என்ற தகவலெல்லாம் தெரியவில்லை. தமிழில் பாடுவதற்கே நாத்திகர்களின் போராட்டம் தேவைப்படும் போது, வருணாசிரம கொள்கைகளை இந்து மத, சைவ கொள்கைகளாக நினைக்கும் ஆன்மிகவாதிகளுக்கு நந்தனார் சிலை அகற்றப்பற்றதற்கு ஏதும் கவலைப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே. போகட்டும்.தீட்சிதர்களின் அடாவடிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கோவிலை கையகப்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆறுமுக ஸ்வாமி போராடித்தான் உள்ளே சென்றிருக்கிறார். இறுதி மூச்சு வரை போராடிய நந்தனார் எப்போது செல்வார் ?
ஆன்மிக அன்பர்களும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை மேலாக நினைப்பவர்களும் நந்தனார் சிலையை தில்லையில் மீண்டும் நிறுவ முயற்சி செய்ய வேண்டும், அதற்காக மாதவி பந்தலார் முயற்சியில் வேண்டுகோள் விண்ணப்பம் மின் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது, அதில் உங்கள் கையொப்பம் இடுங்கள் கையொப்ப எண்ணிக்கைக்கு ஏற்ப நந்தனார் கோவிலுக்குள் செல்லும் நாள் முடிவு செய்ப்படும்.
மின் விண்ணப்பம்:
நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்
'நாளைப் போவோம்...நாளைப் போவோம்' என்று காத்திருந்தற்காகவே நந்தனாருக்கு 'திருநாளைப் போவார்' என்ற பெயருண்டு. நம் காலத்தில் நாளை வேண்டாம்....இன்றே அவரை அழைப்போம்.
*******
மதுரை மீனாட்சிக் கோவிலினுள் தெற்குவாசல் வழியாக நுழையும் போது இந்த சிலை இருக்கிறது. சிலை(யில்) கண் பளிச்சிடவே கிளிக்கினேன். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' இவர் மீனாட்சிக் கோவில் சொத்தில் அமைந்த வயலில் நாத்து நட்டாரா ? களையெடுத்தாரா ? அம்மனுக்கு மஞ்சள் (சாத்த) அரைத்துக் கொடுத்தாரா, அல்லது நாயனாரா ? தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' திவ்வியமாக பூசை புனஸ்காரங்களுடன் நின்றுகொண்டு இருக்கிறார் காரணம் பெயர் ராசி மற்றும் குலம். நந்தனார் சிலை அகற்றப்பட்டதற்குக் காரணமும் குலம் தான், அவர் புலையர் குலத்தை சேர்ந்தவராம்.