பின்பற்றுபவர்கள்

இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மே, 2013

டி எம் எஸ்ஸுக்கு சூட்ட வேண்டியவை புகழாரம். ஒப்பாரி இல்லை !

சிறுவயதில் மார்கழியில் அருகில் இருக்கும் கோவில்களில் பாடும் டி எம் எஸ்ஸின் பக்திப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் என்ற முறையில் டி எம் எஸ்ஸின் தனித்துவம் வாய்ந்த குரல் என்றுமே எனக்கு மிகவும் பிடித்தவை, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் - நாத்திகரும் விரும்பிக் கேட்கவைக்கும் ஒரு பாடல் அதை டி எம் எஸ் தவிர்த்து வேறு யாராலும் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியாது, எத்தனையோ புகழ்பெற்றப் பாடகர்கள் தமிழத்தில் கோலொச்சினாலும் சவுராஷ்ட்ரா மொழியை தாய்மொழியாகக் கொண்ட சவுந்தராஜனின் தமிழ் பாடலில் எந்த ஒரு சொல்லும் சிதைந்தோ, சொதப்பியோ இருந்தது இல்லை.

ஒரு பாடகரை தொடர்ந்து பாடவைப்பதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் இசையமைப்பாளர்களின் கையில் தான் உள்ளது, இளையராஜாவின் வரவிற்கு பிறகு டி எம் எஸ்ஸுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்தது, நன்றாக பாடி வந்த எல் ஆர் ஈஸ்வரியும் திரைப்படங்களில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்கள் என்றாலும் இருவருமே தத்தம் இருப்பை தொடர்ந்து பக்திப் பாடல்கள் தொகுப்பை வெளியிட்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். இளைஞர்களின் கவனம் எஸ்பிபி பக்கம் திரும்ப டி எம் எஸ் என்றால் எம்ஜிஆர் சிவாஜிப் பாடல்கள் பாடியவர் என்ற அளவில் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக நினைக்க வைத்தது, இதைத் தவறு என்று சொல்ல முடியாது, அவரவர் காலத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினால் தான் தமது தனித்துவம் நிலைத்து நிற்கும் என்று இசையமைப்பாளர்கள் நினைப்பார்கள், எனவே டி எம் எஸின் பாடல் ஆதிக்கம் கிட்டதட்ட அவரது 60 வயதினில் முடிவுக்கு வந்ததை இசை துறைக்கான மிகப் பெரிய இழப்பு என்று கருத முடியாது, பழையன கழிதலும் புதியவை புகுதலும் தானே சமூக வளர்ச்சிக்கும் நல்லது.

*******

டி எம் எஸ் தனது 91 வயதில் மறைந்துவிட்டார், இதை நல்ல சாவு, வாழ்வாங்கு வாழ்ந்தவரின் சாவு என்று தான் வகைப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, முக அழகிரி தவிர்த்து டி எம் எஸ் வாழ்ந்த காலத்தில்  திரைத்துறையினர் அவருக்காக பெரிய விழா எடுத்ததில்லை, அழகிரி அரசியல் நோக்கம் காரணமாக இதைச் செய்திருந்தாலும் தனிப்பட்ட கலைஞனுக்கு பாராட்டு என்ற முறையில் அதனை பாராட்டியே ஆகவேண்டும், எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய டி எம் எஸ்ஸுக்கு எம்ஜிஆர் ரசிகர்களோ, சிவாஜி ரசிகர்களோ பாராட்டுவிழா எதையும் நடத்தவில்லை, இதற்கெல்லாம் திரையுலகினரோ, அவர்கள் எடுக்கும் திரையுலக பாராட்டு விழாக்களுக்கு தலைமை ஏற்று நடத்தும் அரசியல்வாதிகளுக்கோ வருத்தம் எதுவும் அடைந்தது போல் தெரியவில்லை. ஆனால் டி எம் எஸ் மறைந்த பிறகு இருதரப்பினரும் டி எம் எஸ் மறைவு குறித்து ஆற்றமுடியாத துயரம், ஆத்தமா சாந்தியடைய வேண்டும் என்றெல்லாம் இரங்கல் தெரிவித்துள்ளனர், 91 வயதின் இறப்பின் ஆத்மா சாந்தியடையவில்லை என்றால் எந்த வயதில் இறந்தால் ஆத்மா சாந்தியடையும், இத்தனைக்கும் டிஎம்எஸ் தனது பேரன் திருமணத்தையே பார்த்தவர் தான்.

பணக்காரகள் / வசதியானவர்கள் 80 வயதிற்கு மேல் வாழ்ந்தாலே அது வேலைக்காரகளின் பணிவிடையால் தான், 91 வயதிற்கும் மேல் டி எம் எஸ் வாழ்ந்தால் அவருக்கு உடலில் உயிர் தங்கியுள்ளது என்பது தவிர்த்து வேறென்ன பலனைக் கொடுக்கும் ? இரங்கல் என்ற பெயரில் சாவைக் கொச்சைப்படுத்துவதை விட அவருக்கு சூட்டும் புகழாரமே அவருக்கான சிறந்த அஞ்சலி என்பது எனது தனிப்பட்ட கருத்து. எந்த ஒரு மனிதனும் நன்றாக வாழ்ந்து வாரிசுகளின் மகன்/மகள் / பேரக் குழந்தைகள் சாவைப் பார்க்காமல் போய் சேர்வது தான் சிறந்த இறப்பாகும், டி எம் எஸ்ஸின் மறைவால் வருத்தம் அடைய ஒன்றும் இல்லை.

டி எம் எஸ்ஸின் புகழ் அவரது பாடல்கள் நிலைத்து நிற்கும் வரை நிலைக்கும், பாகவதர்கள் பாட்டுகளே கூட இன்றும் நினைவு கூறும் பொழுது டி எம் எஸ்ஸின் பாடல்கள் இன்னொரு நூற்றாண்டிற்கு கூட கேட்டுக் கொண்டி இருக்கும்

1 ஜூன், 2012

ஷக்கலக்கா பேபி !

சீனமொழியை கற்றுக் கொள்ளும் எனது ஆர்வத்தில் கொஞ்சமும் தொய்வின்றி தொடர்ந்து கற்றுக் கொண்டுதான் வருகிறேன், சீனர்கள் மாண்டரின் மொழியில் பேசுவதில் ஏறக்குறையை 60 விழுக்காடு அவர்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்கு சீனமொழித்திறன் என்னுள் வளச்சி பெற்றுள்ளது. பேசுவது மட்டுமின்றி அம்மொழியை படிப்பதற்கும் கற்றுக் கொண்டால் ஒரளவும் முழுமை அடைய முடியும் என்று நினைத்து தற்பொழுது சீன எழுத்துகளையும் மனப்பாடம் செய்து வருகிறேன், சீன எழுத்துகளை மனப்பாடம் தான் செய்யமுடியும், ஏறக்குறையை 80,000 எழுத்துகளில் இன்றைக்கு செய்தித்தாளில் அல்லது அன்றாடம் எழுத்துப் புழக்கத்தில் பயன்படுபவை என்பதாக சுமார் 2000 சீன எழுத்துகள் வரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அவை அனைத்தையும் சொல்குறியீடாக மனப்பாடம் செய்து கொண்டால் தான் சீன மொழியைப் படிக்க முடியும். சீன / கொரிய / ஜப்பானிய மொழியின் எழுத்துகள் தான் உலகிலேயே மிகுதியான எழுத்துகளைக் கொண்ட மொழி. கொரிய / ஜப்பானிய எழுத்துகளுக்கு சீனமொழி எழுத்துகளே அடிப்படை. இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பெரிய வேறுபாடு என்னவென்றால் இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள வெறும் மூன்று மாதமே போதும் அதன் பிறகு தெரிந்ததை வைத்து நாம் மேலும் மேலும் குறிப்பிட்ட மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும், கூர்ந்த கவனிப்பும் ஆர்வமும் இருந்தால் ஆங்கிலம் உள்ளிட்ட மற்றொமொழிகள் பேச்சுவழக்காகவும் கற்றுக் கொள்ள முடியும், ஆனால் அவை அறிமுக மொழியாக கற்றுக் கொள்ளும் பொழுது ஓரளவு கற்றுக் கொள்ளவே ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகும்.

*****

இன்னிக்கு காலையில் சிங்கப்பூர் சீன வானொலி நிகழ்ச்சியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுவலகம் வந்தேன்,  ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் முதல்வன் படத்தில் சுஷ்மிதா சென் பாடும் பாடலாக வெளிவந்த ஷக்கலாக்க பேபி சைனீஸ் பாடல் வடிவில் ஒலிப்பரப்பானது. ஒரு தமிழன் இசையமைத்தப்பாடல் சீனமொழியிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது பெருமையானது. சீனப்பாடலைக் காப்பி அடித்த ரஹ்மானின் இசை என்று யாராவது மாற்றி எழுதி இருக்கிறார்களா ? என்றுத் தேட, இணையத்திலும் அவ்வாறு இல்லை. இப்பொழுது தெரியவருவது போல் ஆண்டு தேதி வழக்குகள் முன்பு இல்லாததால் யாரை யார் காப்பி அடித்தார்கள் என்பதே தெரியாத நிலையில் உரியவருக்கானப் பெருமை என்பவையெல்லாம் வரலாறு எழுதுபவர்களின் கைகளில் தான் இருந்தது, பாட்டும் நானே பாடலும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே - என்கிற திருவிளையாடல் பாடலை இயற்றியவர் ஒரு இஸ்லாமியர் ஆனால் அது கண்ணதாசன் பாடல் என்று சொல்லப்படுகிறது. 'அசையும் பொருளும், இசையும் நானே.....' என்பது அப்பாடல்வரிகளில் ஒன்று இஸ்லாமியர்களின் இணை வைத்தல் பற்றிய கருத்து நாம் அறிந்தவை தான் என்பதால் ஒரு இஸ்லாமியர் கற்பனைக்கும் கூட அசையும் பொருள் எல்லாம் இறைவன் என்ற பொருள் தரும் (இறைவனுக்கு இணை வைக்கும்) வரிகளை எழுதி இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து, எனது கருத்து உண்மை இல்லை என்றாலும் கூட அதை ஒரு இஸ்லாமியர் எழுதினார் என்பதற்காக மற்ற இஸ்லாமிய பெருமைப்படும் வரிகளாக அதில் எதுவும் இல்லை என்பது அது குறித்து பெருமை பேசும் இஸ்லாமியருக்கான செய்தி. ஏ ஆர் ரஹ்மான் சம்பாதித்து போதும் இசை அமைப்பதை நிறுத்தலாம், இஸ்லாத்திற்கு துரோகம் செய்வதை ரஹ்மான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வாஹாபியர்களின் (கண்டனக்) குரலாக சுவனப்பிரியனே குரல் எழுப்பியுள்ளார். இசைக்கு மனிதன் அடிமையாவதை இஸ்லாம் எதிர்க்கிறது என்கிற அடிப்படையில் அவர் ஏ ஆர் ரஹ்மானை ஏற்கனவே நிறைய சம்பாதித்திவிட்டார் இனி இஸ்லாமிய வளர்ச்சி பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துவிட்டு இசைக்க ரஹ்மான் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார் சுபி.


திரும்பவும் சக்கலக்கா பேபிப் பாடலுக்கு வருவோம் இந்தப் பாடல் சிங்கப்பூர் பாப் பாடகி ஒருவரால் பாடப்பட்டு ஆல்பமாக வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. யுடியூபில் இப்பாடல் காணொளியாகக் காணக்கிடைக்கிறது. சிலர் அப்பாடல் குறித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்தப்பாடல் முதல்வன் படத்துப் பாடல் பின்னர் ஏர் ரஹ்மானின் பாம்பே ட்ரீம்ஸ் இசைத் தொகுப்பில் (ஆல்பம்) இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார், விக்கிப்பீடியாவிலும் இந்தத் தகவல் உண்மை என்றே கட்டுகிறது, யூடியூபில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் ஒன்றில் இப்பாடல் கவனமாக ஏர் ரஹ்மான் பேரைத் தவிர்த்துவிட்டு மேற்கத்திய இசையில் பாம்பே ட்ரீம்ஸின் பாடல் பின்னர் முதல்வன் படத்தில் காப்பியடிக்கப்பட்டதாக ஒருவர் கருத்துவிட்டுள்ளார். பாம்பே ட்ரீம்ஸ் இசை அமைத்ததும் அதே தமிழனாக இருந்தாலும் அந்தப் பாடல் தமிழ் படத்தில் இடம் பெரும் முன் இந்திப்பாடலாக வந்ததுதான் என்பதாக மட்டம் தட்டியுள்ளனர். இப்படியெல்லாம் கூட தமிழனக்கு எதிர்ப்பு இருக்குமா ? வெறுப்பாக இருந்தாலும் வியப்பாகவும் இருக்கிறது. ஒரு தகவலை வெளி இடுபவர்கள் குறைந்தப்பட்சம் உண்மைத் தன்மை குறித்த எண்ணமே இல்லாமல் எழுதி-விடுகிறார்கள்.

நமக்கு தெரியும் அண்மைய காலத்திலேயே தமிழர்கள் குறித்த தகவல்கள் வரலாற்றில் திரிக்கப்படும் போது, நமக்கு தெரியாத காலத்தில் நடைபெற்றவற்றின் வரலாறுகளாகக் காட்டப்படுவதிலும் இருக்கும் உண்மைத் தன்மைகளை நாம் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம் என்பவை துரதிஷ்ட வசமானது :(

21 பிப்ரவரி, 2009

நாளை உலகப் பெரும் புகழடையப் போகும் தமிழனுக்கு வாழ்த்துகள் !

ஹாலிவுட்டின் ஆஸ்கார் பரிசு இந்திய திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து...பின்னார்...அது ஒன்றும் அவ்வளவு உயர்ந்த விருது அல்ல...பிற நாட்டினரின் படங்களுக்கு ஒரு பிரிவு வைத்திருக்கின்றனர் அவ்வளவுதான் என்பதாக இந்திய திரைக்கலைஞர்கள் தங்கள் பெருமூச்சுகளுக்கு ஞாயமான காரணங்களை சொல்லிக் கொண்டு தேற்றிக் கொண்டனர்.


நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் ஆங்கிலப் படமான 'ஸ்லம் டாக் மில்லினியர்' படத்துக்கு இசை அமைத்து பல விருதுகளைப் பெற்றதுடன், அவரது பெயர் ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பின்னனி இசை
சிறந்த பாடல் (இருபாடல்கள்)


என இரு பிரிவுகளில் அவரது பெயர் முன் மொழியப்பட்டுள்ளது.

இசைப்புயல் நாளை நடக்க இருக்கும் ஆஸ்கர் விருதுவழங்கும் விழாவில் குறைந்தது பின்னனி இசை அல்லது பாடல் அல்லது இரண்டிலுமே பரிசு வெல்லப் போவது உறுதி,

எனெனில் அனைத்து தமிழ்மக்களின் வாழ்த்துகளும், இந்தியர்களின் வாழ்த்துகளும் அதை உறுதி படுத்தும், அவற்றிக்கும் மேலாக அவரது இசைக்கும் அந்த தகுதியும் இருக்கிறது.



ஏ.ஆர்.ரகுமானின் இசையை விட அவரிடம் மிகவும் பிடித்தவை...அவர் புகழின் உச்சியை நோக்கி மேலே செல்லும் ஒவ்வொரு காலகட்டத்திலும்,

'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தன்னடக்கமாக சொல்லும் அவரது மனது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்