பின்பற்றுபவர்கள்

5 அக்டோபர், 2008

ஐந்து குருடர்களும், ஒரு கல் யானையும் !

ஆத்திகம் நாத்திகம் இவற்றின் அளவுகோல்களைப் பார்த்தால் மிக வியப்பான உண்மை என நான் நினைப்பது, இரண்டுமே ஒன்றை வைத்து ஒன்று பின்னப்பட்டு இருப்பதைத் தான். ஆத்திகனின் அளவுகோல் மதம் சார்ந்த நம்பிக்கை அதில் எவ்வளவு தூரம் லயத்து இருக்கிறானோ அது தான் அளவுகோல். நாத்திகனுக்கு ஆத்திகன் சொல்லும் அளவுகோளுக்கு எதிரான சிந்தனை. மதம் இறைவன் பற்றிய ஆத்திக கட்டுமானங்கள் தான் நாத்திகனின் மறுப்புக்கான அளவுகோல்.

முற்றிலும் உணர்வு சார்ந்த இறை நம்பிக்கையை இவை இரண்டுமே உண்டு என்றோ இல்லை என்றோ வரையரை செய்துவிட முடியுமா ? கண்டிப்பாக முடியாது. கடவுளுக்கு உருவம் இல்லை என்று நம்பினாலும் அவதாரம் எடுப்பதாக பலர் நம்புகிறார்கள். ஒவ்வொரு முறையும் நிலமை மோசமாக ஆகும் போது அவதாரம் எடுப்பதாக இந்திய சமய நம்பிக்கை, இறைத்தூதுவர்களை அனுப்புவதாக பிற மத நம்பிக்கை. ஆக நிலமை மோசமாகிறது என்பது தன்னால் நடப்பது தானே. படைப்பு மிகச் சரியாக இருந்திருந்தால் சீர்கெடுவதற்கு வாய்ப்போ அதனை சரிசெய்யும் தேவையற்ற வேலையோ இருக்காது. இஸ்லாமுக்கு பிறகு மதங்கள் எவையும் தோன்றததால் முகமது நபி இறுதித் தூதர் என்று இஸ்லாமில் நம்பப்படுவது கூடச் சரியாகத்தான் இருக்கும். ஆனால் பிற மதத்தினர் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் கடவுள் நம்பிக்கைகள் சார்ந்தவை எல்லாம் தனது மதக் கட்டமைப்பில் உள்ளதைத்தான் அவரவர் நம்புவார்கள்.

இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதால் அவைதான் நாத்திக கொள்கையின் அடித்தளமாகிறது. ஆத்திகர்களின் இறைவன் பற்றிய கட்டுமானங்கள் 1% விழுக்காடு கூட உண்மையாக இருக்கவே முடியாது, ஏனென்றால் ஏகப்பட்ட கொள்கைகள் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் முரணானவை, கிறித்துவர்களுக்கு ஜீஸஸ் கடவுளின் அவதாரம், இஸ்லாமியர்களைப் பொருத்து ஜீஸஸ் 'ஈசா நபி' இறைத்தூதர் மட்டுமே. அத்வைதிகளுக்கு தனியாக கடவுள் கிடையாது அவர்களையும் சேர்த்தே எங்கும் நிறைந்திருப்பதே கடவுள் என்பார்கள், மற்ற வேதாந்திகள் பரமாத்மா, ஜீவாத்மா என்றெல்லாம் பேசுவார்கள். இவைகளின் முரணான கொள்கைகள் மூலம் இவர்கள் ஒருவிழுக்காடு கூட இறைவன் குறித்து சரியான புரிந்துணர்வு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஆக இறைவன் என்கிற நம்பிக்கையில் ஆத்திகன் எங்கு நிற்கிறானோ அதே இடத்திற்கு அருகில் தான் நாத்திகனும் நிற்கிறான்.

இறை ஏற்பவர்களும் சரி 'ஏற்பு' என்பதைத் தாண்டி சென்றதே இல்லை, மறுப்பவர்கள் ஆத்திகர்களின் கொள்கை 'மறுப்பை' தாண்டி அப்படி ஒன்று இருக்கிறதா என்று மன அளவில் கூட சிந்தித்துப் பார்பது இல்லை.

மிஸ்டர் கோவி, என்னச் சொல்லவர்றீங்க ?

ஒரு கல் யானை, நான்கு குருடர்கள் அதை தடவி பார்க்கிறார்கள், ஒவ்வொருவருக்கு தட்டுப்படுவதை (கால், காது, வயிறு, வால்) வைத்து தூண், முறம், சுவர், சாட்டை என்று சொல்கிறார்கள், இவர்கள் ஒவ்வொருவரும் ஐந்தாவது ஒரு குருடரிடம் தான் சொல்வதே உண்மை என்கிறார்கள், அந்த ஐந்தாவது நபர் இவர்கள் சொல்வதை நம்பாமல் அவரும் அவர்கள் தொட்டுக் காட்டும் இடங்களைத் தடவிப் பார்க்கிறார், மேடுபள்ளமான கல்லு தான் வேற ஒன்றும் இல்லை என்று அவர்களை பழிக்கிறார். கல் யானை (அசையாமல்) நின்று கொண்டு இருக்கிறது. நான்கு குருடர்கள் ஆத்திகர்கள் (அவரவர் மத நம்பிக்கையாளர்கள்), ஐந்தாவது குருடன் நாத்திகன். எது உண்மை ? இறை ஏற்பும் இறை மறுப்பும் அவரவர் பார்வையில் தாம் சொல்வதே உண்மை என்று சொல்லிக் கொண்டு அங்கேயே நின்று கொண்டு இருக்கிறது

17 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

கல் யானை (அசையாமல்) நின்று கொண்டு இருக்கிறது. நான்கு குருடர்கள் ஆத்திகர்கள் (மத நம்பிக்கையாளர்கள்), ஐந்தாவது குருடன் நாத்திகன். எது உண்மை ? இறை ஏற்பும் இறை மறுப்பும் அங்கேயே நின்று கொண்டு இருக்கிறட்//

புது டெம்ப்ளேட் வைச்சு, புச்சா யோசிச்சு ஒரு பஞ்சோட முடிச்சிருக்கீங்க, அப்படித்தான் நடந்துக்கிறோமோ,,, ""தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்.""

SP.VR. SUBBIAH சொன்னது…

/////இறை ஏற்பும் இறை மறுப்பும் அங்கேயே நின்று கொண்டு இருக்கிறது/////

அதெல்லாம் யாரும் நிற்கவில்லை.
இறையுணர்வாளன் தன் நம்பிக்கையிலும், விசுவாசத்திலும் உறுதியாக இருக்கிறான்
அதுபோல இறைமறுப்பாளனும் தன் கொள்கையில் உறுதியாக உள்ளான்.

நின்று கொண்டிருப்பவர்கள், இது இரண்டிலும் சேராதவர்களே!
நீங்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்று குழப்பாமல் ஒரே ஒரு வார்த்தையில் சொன்னால், யானையைத் தடவிக்கொண்டிருப்பவன் அத்தனை பேரும், உங்களுடன் நீங்கள் சொல்லும் கட்சியில் சேர்ந்துவிடுவான்.

முதலில் நீங்கள் சொல்லுங்கள் யானையைத்தடவியதில் உங்களுக்கு என்ன தெரிந்தது?
இறைவன் உண்டா?
அல்லது இல்லையா?
Say yes or No in one word!

நீங்கள் யெஸ் என்று சொன்னாலும் அல்லது நோ என்று சொன்னாலும் எனக்கு சம்மதமே?
நீங்கள் நம்புவதாலோ அல்லது நம்பாததாலோ யாருக்கு என்ன ஆகப்போகிறது ?
யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.
ஆகவே துணிந்து சொல்லுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

சுப்பையா சார்,

நான் யானையை தொலைவில் இருந்து பார்த்து இவர்கள் பேசிக் கொள்வதை கவனிக்கிறேன்.

நான் யானையின் அருகில் செல்லவே இல்லை.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்று குழப்பாமல் ஒரே ஒரு வார்த்தையில் சொன்னால், யானையைத் தடவிக்கொண்டிருப்பவன் அத்தனை பேரும், உங்களுடன் நீங்கள் சொல்லும் கட்சியில் சேர்ந்துவிடுவான்.
//

நான் கட்சி சார்பற்றவன், கட்சியும் சேர்க்காதவன் !
:)

SP.VR. SUBBIAH சொன்னது…

/////கோவி.கண்ணன் 12:29 AM, October 05, 2008
சுப்பையா சார்,
நான் யானையை தொலைவில் இருந்து பார்த்து இவர்கள் பேசிக் கொள்வதை கவனிக்கிறேன்.
நான் யானையின் அருகில் செல்லவே இல்லை. :)///////

அதாவது நாரதர் வேலையை மட்டுமே நீங்கள் செய்வீர்கள்!:-)))))

ஆத்திகம் சொல்வது உண்மையா என்று ஒரு பத்துப் பதிவு
நாத்திகர்கள் சொல்வதில் என்ன தவறு என்று பத்து பதிவு

ஆக மொத்தம் மாதம் 20 பதிவிற்கான மேட்டர் வேண்டும்

கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை நடத்திக்காட்டுவதாகக் கூறும் மோடி மஸ்தான் கடைசிவரை அதை நடத்தமட்டான்.
கூட்டத்தைக் கூட்டுவதற்காக அதைச் சொல்வான். நீங்கள் ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் வைத்து அப்படித்தான் மோடி வேலை (குஜராத் மோடியல்ல) செய்து கொண்டிருக்கிறீர்கள்:-)))))

SP.VR. SUBBIAH சொன்னது…

/////நான் கட்சி சார்பற்றவன், கட்சியும் சேர்க்காதவன் !///

அது உண்மையாக இருக்கலாம்

ஆனால் இரண்டு கட்சிக்காரர்களின் கொம்புகளையும் சீவி விட்டு அலங்காநல்லூர் போட்டி நடத்தி நன்றாக பதிவு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH 12:40 AM, October 05, 2008
/////கோவி.கண்ணன் 12:29 AM, October 05, 2008
சுப்பையா சார்,
நான் யானையை தொலைவில் இருந்து பார்த்து இவர்கள் பேசிக் கொள்வதை கவனிக்கிறேன்.
நான் யானையின் அருகில் செல்லவே இல்லை. :)///////

அதாவது நாரதர் வேலையை மட்டுமே நீங்கள் செய்வீர்கள்!:-)))))

ஆத்திகம் சொல்வது உண்மையா என்று ஒரு பத்துப் பதிவு
நாத்திகர்கள் சொல்வதில் என்ன தவறு என்று பத்து பதிவு

ஆக மொத்தம் மாதம் 20 பதிவிற்கான மேட்டர் வேண்டும்

கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை நடத்திக்காட்டுவதாகக் கூறும் மோடி மஸ்தான் கடைசிவரை அதை நடத்தமட்டான்.
கூட்டத்தைக் கூட்டுவதற்காக அதைச் சொல்வான். நீங்கள் ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் வைத்து அப்படித்தான் மோடி வேலை (குஜராத் மோடியல்ல) செய்து கொண்டிருக்கிறீர்கள்:-)))))
//

சுப்பையா சார்,

நான் சொல்வதால் சண்டை நடக்கிறதா ? எப்போது மதவாதிகள் (அவர்களுக்குள்ளும்) நாத்திகர்கள் என சண்டை இடாமல் இருந்திருக்கிறார்கள்.

நான் சொல்லும் யானை அழகான யானை அப்படியே தான் நிற்கும், அதற்கு பெரிய மரத்தை வளைத்து உடைக்கும் ஆற்றலும் இல்லை, யாரையாவது தூக்கிப் போட்டி மிதிக்கும் 'மதமும்' இல்லை. யார் கோபமாக அதைப் பார்த்தாலும், அன்பாகப் பார்த்தாலும் அது அவர்களை நோக்கிய நிலையான அன்பான பார்வையில் தான் இருக்கும்.
:))))))))))))

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இறைவனும் இல்லை இறைவியும் இல்லை...

இறைமை ஒன்றே உண்டு என்கிறது யானை...

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH 12:43 AM, October 05, 2008


அது உண்மையாக இருக்கலாம்

ஆனால் இரண்டு கட்சிக்காரர்களின் கொம்புகளையும் சீவி விட்டு அலங்காநல்லூர் போட்டி நடத்தி நன்றாக பதிவு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்:-))))
//

ஒரு ஆசிரியர் தன்னோட முதல் வகுப்பு மாணவனுக்கு தர்ம அடி வாங்கி வைக்கும் வேலையைச் செய்யலாமா ?

அதை விடுங்க. கதை எப்படி ? பிடிச்சிருக்கா ? ஓட்டை எதும் இருக்கா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
இறைவனும் இல்லை இறைவியும் இல்லை...

இறைமை ஒன்றே உண்டு என்கிறது யானை...

12:54 AM, October 05, 2008
//
விக்கி,
எந்த பாலாக இருந்தாலும் அது கல் யானைதான் இனவிருத்தி செய்யாது எனவே ஆணா பெண்ணா என்ற கவலையை விடுங்க.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதாவது நாரதர் வேலையை மட்டுமே நீங்கள் செய்வீர்கள்!:-)))))

ஆத்திகம் சொல்வது உண்மையா என்று ஒரு பத்துப் பதிவு
நாத்திகர்கள் சொல்வதில் என்ன தவறு என்று பத்து பதிவு

ஆக மொத்தம் மாதம் 20 பதிவிற்கான மேட்டர் வேண்டும்//

நாடியைச் சரியாகப் பிடிச்சிங்க, ஆத்திகம் - நாத்திகம் பேசுவதற்கு எனக்கு மிக விருப்பமான மேட்டர்.

கேஆர்எஸ் என்னை பழுத்த ஆன்மிக வாதி என்கிறார். கீதா அம்மா என்னை நாத்திகன் என்று நினைக்கிறார்.

:)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அண்ணே உலகம் புரியாத பச்ச புள்ளயா இருக்கிங்களே...

யானைக்கு மாலை சார்த்தி குங்கும் வச்சிட்டு படுத்து தூங்கிட்டு.. காலையில் போய் பாருங்க... கல் யானைக்கு பக்கத்தில் கல் பூனையை வச்சி புது கடவுளை உண்டு பண்ணிடுவாங்க நம்ம ஆளுங்க...

மோசமானவங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
அண்ணே உலகம் புரியாத பச்ச புள்ளயா இருக்கிங்களே...

யானைக்கு மாலை சார்த்தி குங்கும் வச்சிட்டு படுத்து தூங்கிட்டு.. காலையில் போய் பாருங்க... கல் யானைக்கு பக்கத்தில் கல் பூனையை வச்சி புது கடவுளை உண்டு பண்ணிடுவாங்க நம்ம ஆளுங்க...

மோசமானவங்க...
//

:)

அப்பறம் பூனைத்தலையை யாராவது உடைத்துவிடுவார்கள் கலவரம் வரும். சரியா ?

ஜெகதீசன் சொன்னது…

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா 12:21 AM, October 05, 2008


புது டெம்ப்ளேட் வைச்சு, புச்சா யோசிச்சு ஒரு பஞ்சோட முடிச்சிருக்கீங்க, அப்படித்தான் நடந்துக்கிறோமோ,,, ""தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்.""
//

தெகா முயலைப் பிடித்து மூன்று கால் என்று சொல்வதைக் கூட ஒப்புக் கொள்ளலாம் ஏனெனில் பிடித்தது ஒரு காலை எதோ ஒரு விலங்கின் பிடியில் இருந்து தப்பியதால் ஏற்பட்ட ஊனமாகக் கூட இருக்கும்,

ஆனால் அணிலை முயல் என்றால் சரியா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் 11:24 AM, October 05, 2008
:))
//

நன்றி !

லக்கிலுக் சொன்னது…

//கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை நடத்திக்காட்டுவதாகக் கூறும் மோடி மஸ்தான் கடைசிவரை அதை நடத்தமட்டான்.
கூட்டத்தைக் கூட்டுவதற்காக அதைச் சொல்வான். நீங்கள் ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் வைத்து அப்படித்தான் மோடி வேலை (குஜராத் மோடியல்ல) செய்து கொண்டிருக்கிறீர்கள்:-)))))//

வாத்தியாரையே டென்ஷன் பண்ணீட்டீங்களே கோவியாரே? :-)

நாத்திகர்கள் கோயிலுக்கு போகக்கூடாது, மஞ்சத்துண்டு போடக்கூடாது என்றெல்லாம் ஆத்திகர்களாகவே நாத்திகர்களுக்கு ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள். இன்று காலை கூட நான் பிள்ளையார் கோயிலுக்கு போனேன், பிள்ளையாரைப் பார்க்க அல்ல. பிள்ளையாரை பார்க்கவந்த ஒரு சூப்பர் ஃபிகரை சைட் அடிக்க :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்