பின்பற்றுபவர்கள்

31 அக்டோபர், 2008

குண்டு வெடிப்புகள் பழகிப் போய்விடுமா ? :(

நமக்கு என்று வராதவரை குண்டு வெடிப்பு போன்ற பெரிய பயங்கரவாத நிகழ்வு கூட வெறும் செய்திதான் என்பது போல் மக்கள் பழகிவிட்டனர். :(

அஸ்ஸாமில் பல இடங்களில் குண்டு வெடித்து 68 பேர் வரை மரணம் அடைந்திருக்கிறார்கள், 200 பேர் வரை காயம் அடைந்திருக்கிறார்கள். மும்பையில் குண்டுவெடித்தால் இந்தியாவெங்கும் ஏற்படும் பரபரப்பு அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் ஏன் ஏற்படவில்லை ?

குண்டு வெடிப்புகள் அதனால் உயிர் இழப்புகள், அருகில் உள்ளவர்கள் தவிர்த்து யாரும் அச்சப்படுவதில்லை. வழக்கம் போல் எதாவது ஒரு அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளும், இந்த முறை இந்தியன் முஜாஜுதின் என்ற பெயரில் இயங்கும் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறது.

****

தீவிரவாதிகளே நீங்கள் என்னதான் குண்டு வெடித்தாலும் அரசாங்கங்கள், உலக நாடுகள் கண்டனத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். செத்துப் போகிறவர்கள் அப்பாவி பொதுமக்கள் தான். இந்த செயல் கோழைத்தனமானது, அப்பாவிகளைக் கொன்றும் எதுவும் ஆகப் போவதில்லை. எவன் செத்தா எனக்கென்ன என்று இருக்கும் எல்லோரும் சுரனையற்றவர்கள் என்று தெரிந்தே இப்படி ஒரு செயலைச் செய்ய உங்களுக்கெல்லாம் அலுப்பாகவே இல்லையா ?

அட பக்கத்துத் தெருவுல தானே வெடித்தது, நம்ம வீட்டில் யாரும் சாகவில்லை என்று சென்று கொண்டே இருக்கப் போகிறார்கள். இன்னும் வளர்ச்சி அடைந்து,

போகப் போகப் பாருங்கள், எங்கள் ஊருக்கு அடுத்தவாரம் தீவிரவாதிகள் குண்டுவெடிக்கப் போகிறார்களாம் என்று போஸ்டர் அடித்துக் கொண்டாடவே போகிறார்கள். உங்களுக்கும் உங்கள் குண்டுவெடிப்புக்கும் இது போன்ற (அவ) மரியாதைக் கிடைக்கலாம்.

தீவிரவாதிகளே நீங்கள் சாதித்தவை

1. அரசியல்வாதிகளின் வழக்கமான கடும் கண்டனம்
2. உலக நாடுகளின் வழக்கமான கண்டனம்
3. எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது ஆட்சியை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்ற அவைக் கூச்சல்
4. மக்கள் தொகையை குறைப்பது
5. மாநில காவல் துறைக்கு / சிபிசிஐடிக்கு ஒருமாதம் தீவிர விசாரணைப் பணி
6. நான்கு அப்பாவிகளைப் பிடித்து விசாரிப்பார்கள்

அடத்தூ.... உங்களுக்கு அலுப்பே இல்லையா ?

16 கருத்துகள்:

பூச்சாண்டியார் சொன்னது…

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்க நினைக்கும் தீய சக்திகளின் கீழ்த்தனமான செயல்.

Thamiz Priyan சொன்னது…

குண்டு வைப்பவர்கள் தங்களது குறிக்கோளில் வெற்றி தான் அடைகின்றார்கள்.

குண்டு வைத்து விட்டு ஏதோ ஒரு பேக்ஸ் மெஷினில் இருந்து ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரில் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாக பேக்ஸ் அனுப்பி விட வேண்டும். பின்னர் முஸ்லிம்களைப் பிடித்து போலிஸூம், மீடியாக்களும் தொங்கிக் கொண்டு இருப்பார்கள். அதே நேரம் அவர்கள் மகிழ்ச்சியா ஆசிரமத்தில் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டு இருப்பார்கள்...
எனவே வெற்றி தான்!

அவர்களுடஒஇ

தருமி சொன்னது…

//மும்பையில் குண்டுவெடித்தால் இந்தியாவெங்கும் ஏற்படும் பரபரப்பு அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் ஏன் ஏற்படவில்லை ?//

காலையிலிருந்து மண்டையைக் குடைந்துகொண்டிருந்த கேள்வி... :-(

Vetirmagal சொன்னது…

அருமை.
இதனால் யாருக்கு பயன்? அந்த நேரத்தில் அங்கே மாட்டிக்கொண்டவர்களின் உயிருக்கு ஒரு மதிப்பு இல்லையே!

விசாரணைகள் நடத்தி எத்தனை உண்மைகள் வெளி வந்தன?

எங்கே போகிறது நம் நாடு? ஒரு விழிப்புணர்வற்ற சமூகமும் இந்த 'நமக்கென்ன' தத்துவமும் நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...


காலையிலிருந்து மண்டையைக் குடைந்துகொண்டிருந்த கேள்வி... :-(
//

குறிப்பாக இந்துத்துவ அமைப்புகள் மெளனமாகக் கிடப்பதற்கு காரணம் இதற்கும் பின்னாலும் எதாவது சாதுக்கள் இருந்து பின்னால் அம்பலப்பட்டு அவமானமாவது தேவையா என்று நினைத்திருக்கலாம்.

:(

தருமி சொன்னது…

நமது மீடியாக்கள் பொறுப்புணர்ச்சியற்றிருக்கின்றன என்று சொல்லிக்கொண்டே, நீங்களும் தமிழ்ப்பிரியனும் உங்கள் ஊகங்களை நிறையவே வளர்த்துக்கொண்டு போகிறீர்களோ?
:-(

பெயரில்லா சொன்னது…

மும்பைக்கும் பிற இடங்களுக்கும் இருக்கும் பொருளாதாரச் சார்புதான் காரணம் கோவி.

மும்பைதான் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் அதுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// தருமி said...
நமது மீடியாக்கள் பொறுப்புணர்ச்சியற்றிருக்கின்றன என்று சொல்லிக்கொண்டே, நீங்களும் தமிழ்ப்பிரியனும் உங்கள் ஊகங்களை நிறையவே வளர்த்துக்கொண்டு போகிறீர்களோ?
:-(
//.

ஐயா,

வழக்கமாக இந்துத்துவாக்கள் தான் கிட்ட நின்று பார்த்தது போல் எழுதுவார்கள். இப்பொழுது ஒன்றையும் காணும் அதைத்தான் சொன்னேன்.

நல்லதந்தி சொன்னது…

//குறிப்பாக இந்துத்துவ அமைப்புகள் மெளனமாகக் கிடப்பதற்கு காரணம் இதற்கும் பின்னாலும் எதாவது சாதுக்கள் இருந்து பின்னால் அம்பலப்பட்டு அவமானமாவது தேவையா என்று நினைத்திருக்கலாம்.//

இதெல்லாம் ரொம்ப அநியாயமா இல்லியா? சார்? :(((((((((((((((

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...
இதெல்லாம் ரொம்ப அநியாயமா இல்லியா? சார்? :(((((((((((((((

1:12 AM, November 01, 2008
//

அன்மையில் ஒரு பெண்சாதுவும் அவ(ர்க)ளது இராணுவ கூட்டாளிகளும் சிக்கியதற்கு இந்துத்துவ பதிவர்கள் எவருமே ஒரு பதிவு கூட போடவில்லை :( மெளனமாகவே இருந்துவிட்டார்கள்.

நல்லதந்தி சொன்னது…

//அன்மையில் ஒரு பெண்சாதுவும் அவ(ர்க)ளது இராணுவ கூட்டாளிகளும் சிக்கியதற்கு இந்துத்துவ பதிவர்கள் எவருமே ஒரு பதிவு கூட போடவில்லை :( மெளனமாகவே இருந்துவிட்டார்கள்.//

அண்மையில் கலைஞர் இலங்கைப் பிரச்சனையில் அடித்த பல்டிக்குக் கூட பல பேர் பதிவு போடவில்லை நான் உட்பட் இது குத்தமா சார்? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...

அண்மையில் கலைஞர் இலங்கைப் பிரச்சனையில் அடித்த பல்டிக்குக் கூட பல பேர் பதிவு போடவில்லை நான் உட்பட் இது குத்தமா சார்? :)

1:24 AM, November 01, 2008//

ஓ அதுக்கு இது சரியாப் போச்சா ?

பரவாயில்லையே தள்ளுபடி அளவுக்கெல்லாம் யோசித்து பதிவு எழுதுறாங்களா ?

Matra சொன்னது…

People like Thamizhpiriyan are making dangerous assessments about bomb blasts.

Hinduism doesnt say that people who dont believe in it are satans, sinners or people fit to be killed.

Hinduism never believes in converting the world.

I'm not saying that Hindus wil never ever indulge in radical activity. There may be a very small handful number who do so.
This cannot be taken to conclude that Hindus are terrorists.
There are radical elements in every grouping of people based on religion/language/caste but these are minimal in Hinduism.
However there is real danger of these numbers getting larger.

Hindus are getting increasingly frustrated at the kind of filthy treatment from people who don't believe in it.

The world over, we see the effects of Islamic terrorism. Are they all fake ?. Are they all stage managed by Hindus/Christians/Jews and blamed on Muslims ?.

I see many people who post messages here and in other similar blogs, making statements purely based on their ideologies/hates and not on facts.

ஆட்காட்டி சொன்னது…

காரணம்>>>
அருணாச்சலப் பிரதேசத்தில் எவ்வளவு இடம் சீனாக்காரனிடம் இருக்கிறது? எத்தனை இந்தியர்களுக்கு தெரியும்? அது மாதிரித் தான் இதுவும்.

ஆட்காட்டி சொன்னது…

ஏதோ இந்தியப் பொருளாதாரம் விண்ணை முட்டுது, அதைக் குழப்புறாங்களாம். போய் வேலையைப் பாருங்கடா.

அத்திரி சொன்னது…

//மும்பைக்கும் பிற இடங்களுக்கும் இருக்கும் பொருளாதாரச் சார்புதான் காரணம் கோவி.
மும்பைதான் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் அதுதான்.//

ரிப்பீட்டு.
வடகிழக்கு மாநிலங்களை மத்திய அரசு கண்டுகொள்வதே கிடையாது.இதையேத்தான் மீடியாக்களும் செய்கின்றன. இதே குண்டு வெடிப்பு டெல்லியிலோ அல்லது பெங்களூருவிலோ, மும்பையிலோ நடந்தால் மீடியாக்கள் கூவுகிற சத்தம் ஐ.நா சபை வரைக்கேட்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்