) மாற்றி இருக்கிறேன்.
மாற்றத்திற்கான காரணம், பழைய டெம்ப்ளேட்டில் கட்டுரைக்கான இடம் அகலம் குறைவாக இருந்தது, பெரிய கட்டுரைகளை எழுதும் போது, நீளமான பக்கமாக ஆகிவிடுகிறது. எழுத்துருக்களை பெரிதாக்கினால் இன்னும் நீளமாகவே சென்றுவிடுகிறது.

புதிய வடிவமைப்பு டவுன்லோட் செய்யப்பட்டது தான். சிறிது மாற்றம் செய்து இருக்கிறேன். தேவைப்படும் போது அவ்வப்போது செய்தித் துண்டுகளை (Widget) சேர்ப்பேன்.
ப்ளாக்கர் டெம்ப்ளேட் மாற்றும் முன் கவனத்தில் கொள்ள வைக்க வேண்டியவை
1. இருக்கும் டெம்ப்ளேட்டை ( Existing Original Template) முதலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். எதாவது கோளாறுகள் என்றால் உடனடியாக பழைய நிலைக்கு மாற்றிக் கொள்ள பயன்படும்
(Edit Template பகுதியில் Before editing your template, you may want to save a copy of it. Download Full Template)
2. Widget எனப்படும் செய்தி துண்டுகளை தனித்தனியாக ஒருங்குறியில் (Unicode Text Format, Under Notepad select encoding option as 'Unicode) வெட்ஜெட் சேமிக்காவிட்டால் புதிய டெம்ப்ளேட் மாற்றும் போது முன்பு இருப்பவை அழிந்துவிடும், குறிப்பகாக Counter JavaScript காணாமல் போனால் முன்பிருந்த எண்ணிக்கையில் தொடரமுடியாமல் போகும். அதை தவிர்க்க வெட்ஜெட்டுகளை சேமிப்பது தேவை
3. Graphics நிறைய உள்ள டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தாதீர்கள், Page Load ஆக அவை நேரம் எடுத்துக் கொள்ளும்
4. தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் கருவிப் பட்டையை மீண்டும் பொருத்துங்கள்.