இன்னிக்கு சிங்கப்பூரில் மாரியம்மன் கோவில் தீமிதி, பெருமாள் கோவில் செரங்கூன் சாலையில் இருந்து டாங்க் சாலை வரை கிட்டதட்ட 4 கிமி சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரவுக்கு இடையூரா வண்ணம், தீ மிதிக்கு அன்பர்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து பாதுகாவலர்களையும் அமர்த்தி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அரசு சார்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது சிங்கப்பூர் அரசு, இது போன்று தைபூசம் காவடிக்கும் அரசு தரப்பு சிங்கப்பூர் வாழ் தமிழர்களை மதித்து ஏற்பாடுகளை செய்யும், சாலை போக்குவரத்தில் குறிப்பிட்ட மணிகளுக்கு ஒரு சில மாற்றங்களையும் செய்துகொடுப்பார்கள். தமிழர்கள் சிறுபான்மை சமூகமாக வாழும் சூழலில் இத்தகைய ஏற்பாடுகள் (மலேசியா தவிர்த்து) வேறு நாடுகளில் எங்கும் கிடைக்காத ஒன்று.
இன்றைக்கு 4000 ஆண்கள் தீ மிதிக்கிறார்களாம். வெறும் முற்போக்கு சிந்தனை என்றால் 'என்ன கருமாந்திரம், நாடுவிட்டு நாடு வந்து வாழ்ந்தாலும்' தீ மிதி சாமியாடுவது, தீச்சட்டி என்று பழமையிலே வாழ்கிறார்களே என்கிற எண்ணம் எனக்கு இருந்திருக்கும், ஆனால் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி அதைத் தொடர இங்கு குடியேறியவர்கள் எத்தகைய முயற்சிகளையெல்லாம் எடுத்திருக்கக் கூடும் என்று நினைக்க அவர்களை பாராட்டவும், பெருமை கொள்ளவும் நேர்கிறது, சிங்கப்பூர் இந்திய சமூகம் என்பவை இன்றைக்கு எங்களைப் போன்று படித்தவர்களாக பாதுக்காப்புடன் குடும்பமாக குடியேறியவர்களும் அல்லர், வெள்ளைக்காரனின் எடுபிடி ஆட்களாக இங்கேயே தங்கும் சூழலில் கலப்பினங்களை மணந்து உறவுகளைப் பெருக்கிக் கொண்டும், தமிழகத்தில் இருந்து உறவுக்காரர்களை மணந்து பெருகிக் கொண்டர்வளாகவும் பெருகியவர்கள் தாம்.
தம்மை பெருளாதாரத்தில் வளர்த்துக் கொள்ளாவிட்டாலும் சமூமாக முன்னேறுவதன் மூலம், வரும்கால வாரிசுகள் சமூகம் ஏற்படுத்தி வைக்கும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டு முன்னேறும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் சார்ந்த அமைப்புகளையும், கோவில்களையும் ஏற்படுத்து வைத்துள்ளனர், இங்கும் சாதிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில்கள் உள்ளன என்றாலும் யார் யார் கோவிலுக்கு வரலாம் என்ற வரையறையெல்லாம் எதுவும் கிடையாது கோவிலுக்கு ஏற்ற உடையுடன் செருப்பு அணியாமல் யார் வேண்டுமானாலும் கோவில்களுக்கு சென்று வரலாம், சிங்கப்பூர் இந்தியர்களில் (தமிழர்களில், இவர்களெல்லாம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே வந்தவர்கள், ஏன் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் இந்தியர்கள் என்கிறார்கள் என்பதற்கு காரணம் பெரிய நிலப்பரப்பை சொல்வது சமூகம் சார்ந்த அடையாளத்தில் கூடுதல் மதிப்பை தரும் என்கிற எண்ணமாகக் கூட இருக்கலாம்) இந்துக்கள் மட்டுமின்றி, தமிழ் கிறித்துவர்கள் மற்றும் தமிழ் இஸ்லாமியர்களுக்கும் தேவலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளுக்கு எங்களைப் போன்று குடியேறியவர்கள் முன்பு குடியேறியவர்கள் அமைத்துள்ள வசதி வாய்ப்புகளைத் தான் பயன்படுத்திக் கொள்கிறோம், சிங்கப்பூரில் முருங்கைகாயும், பனங்கெழங்கும் கிடைக்கிறதென்றால் அவற்றை விற்பனை செய்யும் கடைகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவானவைதான், செரங்கூன் சாலைக்கு சென்றால் தமிழகத்தின் பகுதி போல் தோன்றும், மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இவையெல்லாம் ஒரே இரவில் உருவானவை அல்ல. இவற்றை இன்னும் மிகுதிப்படுத்தி இருக்க முடியும்.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவகளில் 50 விழுக்காட்டினருக்கும் மேல் சேற்றில் ஒரு காலும் ஆற்றில் ஒருகாலுமாக இங்கே ஈட்டுவதை தமிழத்தில் சொத்துவாங்குவது அங்கு 'சிங்கப்பூர்காரர்' என்ற புகழுடன் வாழ்வதையே விருப்பமாகக் கொண்டு செயல்பட்டதால் சீனர்களைப் போல் மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவோ, சிங்கப்பூரில் சொத்து வைத்திருப்பவர்களாகவோ இந்திய சமூகம் பெரிய அளவில் வளர்ந்திருக்கவில்லை, சீனர்களில் பணக்காரர்கள் 10 விழுக்காடு என்றால் 10 விழுக்காடே வசிக்கும் இந்தியர்களில் பணக்காரர்கள் 1000ல் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவகளில் 50 விழுக்காட்டினருக்கும் மேல் சேற்றில் ஒரு காலும் ஆற்றில் ஒருகாலுமாக இங்கே ஈட்டுவதை தமிழத்தில் சொத்துவாங்குவது அங்கு 'சிங்கப்பூர்காரர்' என்ற புகழுடன் வாழ்வதையே விருப்பமாகக் கொண்டு செயல்பட்டதால் சீனர்களைப் போல் மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவோ, சிங்கப்பூரில் சொத்து வைத்திருப்பவர்களாகவோ இந்திய சமூகம் பெரிய அளவில் வளர்ந்திருக்கவில்லை, சீனர்களில் பணக்காரர்கள் 10 விழுக்காடு என்றால் 10 விழுக்காடே வசிக்கும் இந்தியர்களில் பணக்காரர்கள் 1000ல் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே.
முகவரிடம் பணம் கட்டி தனியாக வேலைக்கு வந்தவர்கள் தவிர்த்து, சிங்கப்பூரில் குடும்பமாக வசித்தவர்கள் இந்தியாவில் சொத்துவாங்காமல் இங்கேயே முதலீடு செய்திருந்தால் இந்திய சமூகம் தன்னிறைவு அடைந்திருக்கும், ஆனால் எங்கு கடைசிகாலம் என்பதை குழப்பி குழப்பி இந்தியாவில் சொத்து வாங்கி அங்கேயும் சென்று வசிக்காமல், தானும் அனுபிக்காமல் சொந்தக்காரனை சொத்து அனுபவிக்கவிட்டவர்களால் தான் நம்மால் பெரிய அளவில் சமுக உயர்வை பெற முடியவில்லை என்பதை இங்குள்ள பெரிசுகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில் படித்து அங்கு சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இங்கே வந்து இங்குள்ள இந்தியர்கள் கழிவறைகளில் வேலைபார்ப்பதைப் பார்க்கும் பொழுது முகம் சுளித்து (நம்ம சமூகத்திற்கு தலைகுணிவு என்றெண்ணி அவர்களுடன் பேச விரும்பாதவர்களே மிகுதி. இங்கேயே பிறந்தவர்கள் ஏன் இந்த வேலையை செய்கிறார்கள் என்று வருபவர்கள் யாரும் சிந்திப்பதே கிடையாது, கழிவறையில் வேலைபார்க்கும் சிங்கப்பூர் இந்தியர்கள் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே, அவற்றிற்கும் கீழே உள்ளவர்களில் படிக்காதவர்கள் ஓட்டுனர் வேலைக்கும், பாதுகாவலர் வேலைக்கும் சென்றுவிடுகிறார்கள், ஆனால் தற்பொழுது 25க்கு உட்பட்ட இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருமே படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதுடன் நல்ல வேலைக்கும் செல்கிறார்கள்.
தற்போதைய குடியேறிகளான எங்களுக்கு உறவுக்காரர்கள் கூட இல்லை என்பதைத் தவிர்த்து பெரிதாக குறை எதுவும் இல்லை, அதும் இன்றைய அலைபேசி வசதியிலும் தீர்ந்துவிடுகிறது, பட்ஜெட் விமானத்தில் ரூபாயில் 10,000 நேரடியாக சென்று பார்த்துவிடலாம், இணையத்திலும் வீடியோ வழியாக பார்க்க முடிகிறது, 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் நிலமை ?
வெளிநாடுகளில் எங்கேயாவது நம் பண்பாட்டு சார்ந்த வழிபாட்டுத் தளங்களுக்கு சென்றால் அங்கு உள்ள கடவுளை கும்பிடுவதற்கு முன் இவற்றை நமக்காக ஆக்கி வைத்திருப்பவர்களையும் நன்றியோடு நினையுங்கள். நான் சொல்வது சென்னைக் கூட பொருந்தும், படித்துவிட்டு சென்னைக்கு குடியேறுபவர்கள் சென்னைக்காக எதை கிள்ளிப் போட்டார்கள் ?
46 கருத்துகள்:
வணக்கம்
சிறப்பான அம்சங்களை சிறப்பாக பதிவில் பதிவிட்ட விதம் மிக அருமை வாழ்த்துக்கள்
இந்த கோயிலுக்கு நான் சென்றும் வந்தேன்......வழிபாட்டக்காக(சிங்கப்பூர்)
நீங்கள் சொல்வது போல மலேசியாவில் போகும் பாதைகள் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் எல்லா இடங்களிலும் ஐயனார்கோயில் முனிஸ்வரர் கோயில்.. மாரியம்மன் முருகன் கோயில் என்று பரந்து பட்டுள்ளது உண்மைதான்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிங்கப்பூர் .தமிழர்களின் சிறந்தபண்பாடு பற்றிய தகவலுக்கு நன்றிகள்
Typed with Panini Keypad
உண்மையே! அன்று அவர்கள் செய்ததை முடக்காமல் இருந்து, இனி வரும் சந்ததியினருக்கு அளித்ததைப் பாராட்டத்தான் வேணும்.
கோவி,
//இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில் படித்து அங்கு சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இங்கே வந்து இங்குள்ள இந்தியர்கள் கழிவறைகளில் வேலைபார்ப்பதைப் பார்க்கும் பொழுது முகம் சுளித்து (நம்ம சமூகத்திற்கு தலைகுணிவு என்றெண்ணி அவர்களுடன் பேச விரும்பாதவர்களே மிகுதி//
ப்பூ இந்தியாவில் இருந்து வரவங்க யாரும் அங்கே கக்கூஸ் கழுவும் வேலைனு தெரிஞ்சே வரவில்லை, காசுக்கு ஆசைப்படும் சிங்கை,மலேசிய இந்திய பிச்சக்காரர்கள் அங்கே கட்டுமான வேலை, மாலில் வேலைனு சொல்லி ஏமாத்தி , சில லட்சங்கள் முதல் பிடுங்கிட்டு கூப்பிட்டு போய் அங்கே கக்கூஸ் கழுவுடான் என ஏமாத்திவிடுகிறார்கள்.
கடன் வாங்கி கொடுத்த பணம் வீணா போயிடுமேனு கவலைப்பட்டு தான் அந்த கக்கூஸ் வேலை செய்றாங்க, இந்தியாவில வேலைக்கு கூப்பிடும் போது அங்கே கக்கூஸ் வேலைக்குனு சொல்லி எந்த சிங்கை ,மலேசிய பிச்சக்கரனாவது சொல்லி கூப்பீட சொல்லுங்க,அப்படியும் வேலைக்கு வந்தா இந்த குற்றச்சாட்டை சொல்லுங்க.
சிங்கை,மலேசியா குடியுரிமை வாங்கிய பின்னரும், ஆள் எடுக்கும் ஏஜண்ட் வேலை செய்தால் நிறைய காசு கிடைக்கும்னு செய்து பணம் சம்பாதிக்க பொய் சொல்லி இங்கே இருந்து ஆள் கூப்பிட்டு போகிற கேவலம் உங்க கண்னுக்கு தெரியலை,ஏன் இட ஒதுக்கீட்டில் படிச்சிட்டு இங்கே வந்து கக்கூ௶ கழுவுறான்னு கேட்கிறிங்களே உங்களுக்கே வெட்கமா இல்லையா?
எவனும் சிங்கப்பூரில் கக்கூஸ் கழுவ சுமார் 1.5 லட்சம் கொடுக்க இந்தியாவில் தயாரில்லை, சொல்லப்படும் பொய்யால் நம்பி கடன் வாங்கி காசுக்கொடுத்துட்டு வந்து மாட்டிக்கிறாங்க.
வவ்வால் - பதிவை மீண்டும் ஒருமுறை தெளிவாக படித்துவிட்டு பின்னுட்டமிடவும் ..ஏன் இவ்வளவு அவசரம் ?!
வவ்வால், நான் தமிழகத்தில் இருந்து வந்து கடைநிலை ஊழியம் செய்பவர்கள் பற்றி குறிப்பிடவில்லை. மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்.
ஒரே ஒரு சந்தேகம்.
நீங்க ஊர்காரனா? என்பதும் ஊர்காரன் என்ற இளக்காரமும் உள்ள சூழ்நிலை இப்போது மாறிவிட்டதா?
கோவி,
//நான் தமிழகத்தில் இருந்து வந்து கடைநிலை ஊழியம் செய்பவர்கள் பற்றி குறிப்பிடவில்லை. மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்.//
நானும் தமிழகத்தில் இருந்து வரவங்களையோ, இல்லை ஏமாற்றிக்கூப்பிட்டு செல்லும் ஏஜன்டுகள் தமிழர்கள் என்றோ கூறவில்லையே, கொஞ்சம் பொறுமையா தான் பின்னூட்டத்தினை படிக்கிறது :-))
பின்னூட்டத்தில் "இந்தியர்கள்" என்றே சொல்லி இருக்கிறேன், ஹி...ஹி நீங்க மட்டும் கவனமா இந்தியர்கள்னு போட்டிப்பிங்களா:-))
நீங்க என்னமோ இந்தியாவில் இருந்து கக்கூஸ் கழுவ என்றே அடிச்சு பிடிச்சு பிளைட் புடிச்சு "இட ஒதுக்கீட்டில் படிச்ச மக்கள்" ஓடி வராப்போல எழுதி இருக்கீங்க, ஏஜண்ட்டுகளாக செயல்ப்படும் சிங்கை,மலேசிய குடியுரிமைப்பெற்ற "இந்தியர்கள்" ஏமாற்றுவதை பற்றி சொல்லவேயில்லை.
கக்கூஸ் கழுவும் வேலை என்று சொல்லித்தான் அழைத்து செல்கிறார்கள் என உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா?
ஏமாற்றி அழைத்து செல்வதற்கு என்னால் ஆயிரம் உதாரணங்கள் சொல்ல முடியும்.
ஹோட்டலில் சமையல் வேலை என சொல்லி அழைத்து சென்று விட்டு அங்கே சுத்தம் செய்யும் வேலை கொடுத்தார்கள் என சொன்ன ஒரு ஹோட்டல் மாஸ்டர் சொன்ன சோகக்கதையும் கேட்டிருக்கிறேன்.
# இந்தியாவில் தீமிதிச்சா மூட நம்பிக்கை ,சிங்கையில் தீமிதிச்சா அது இனப்பற்று என மகிழும் பகுத்தறிவெல்லாம் எனக்கு இல்லீங்க :-))
எந்த நாட்டில்/ஊரில் தீ மிதிச்சாலும் அவனுங்கள மூடர் கூட்டம்னு தான் சொல்லுவேன்!
--------------------
பிரியமுடன் பிரபு,
என்ன அவசரத்தினை கண்டுப்பிடிச்சீங்க, இல்லை நீங்க என்ன தெளிவா பின்னூட்டத்தினை படிச்சிங்க?
நீங்களும் தெளிவாக பதிவைப்படிங்க, பின்னூட்டத்தினையும் தான்.கக்கூஸ் கழுவும் வேலைக்குனு தெரிஞ்சே அங்கே எவன் வரான் சொல்லுங்க? ஏஜண்டுகள் ஹார்பரில் வேலை, மாலில் வேலை, கட்டுமான வேலைனு சொல்லி ஏமாற்றித்தான் அழைத்து சென்று "கக்கூஸ் வேலையில்" தள்ளுகிறார்கள், இதில் அந்த வேலை செய்றவனிடம் பேசினால் கவுரவ குறைச்சல்னு வருத்தம் வேற அவ்வ்!
//இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில் படித்து அங்கு சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இங்கே வந்து இங்குள்ள இந்தியர்கள் கழிவறைகளில் வேலைபார்ப்பதைப் பார்க்கும் பொழுது முகம் சுளித்து (நம்ம சமூகத்திற்கு தலைகுணிவு என்றெண்ணி அவர்களுடன் பேச விரும்பாதவர்களே மிகுதி. இங்கேயே பிறந்தவர்கள் ஏன் இந்த வேலையை செய்கிறார்கள் என்று வருபவர்கள் யாரும் சிந்திப்பதே கிடையாது,//
யாரை குறை சொல்லுகிறீர்கள்? என்று எனக்கு சரியாக புரியவில்லை.
வவ்வால் அண்ணே மீண்டும் அதே சொல்கிறேன்..தெளிவா படிங்க..:))))
////இங்கே வந்து இங்குள்ள இந்தியர்கள் கழிவறைகளில் வேலைபார்ப்பதைப் பார்க்கும் பொழுது முகம் சுளித்து (நம்ம சமூகத்திற்கு தலைகுணிவு என்றெண்ணி அவர்களுடன் பேச விரும்பாதவர்களே மிகுதி. இங்கேயே பிறந்தவர்கள் ஏன் இந்த வேலையை செய்கிறார்கள் என்று வருபவர்கள் யாரும் சிந்திப்பதே கிடையாது,//
அதில்தான் இங்குள்ள இந்தியர்கள் நனு இருக்கே ?! அதாவது இந்திய வம்சாவளி சிங்கை குடிமக்கள் புரியுதா ?!
ஒருவேளை நானும் சிங்கையில் இருப்பதால் கோவி அண்ணன் சொல்ல வருவதை எளிதில் புரிந்துகொள்ள முடிந்ததோ என்னவோ..
//இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில் படித்து அங்கு சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இங்கே வந்து//
இங்குள்ள ஏற்கனவே குடியேறிய பூர்வ குடிகள் கழிவறைகளில் வேலை செய்வதைப் பார்த்து நாம் (அதாவது ஒரு தலைமுறை இட ஓதிக்கீட்டில் படித்து கொஞ்ச காலம் அங்கேயே வேலை செய்துவிட்டு பின்பு இங்கு வந்திருக்கும்) முகம் சுளிக்கக் கூடாது இதுவே கோவி அண்ணன் சொல்ல வந்த கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன் @வவ்வால் அவர்களே உங்கள் கோவம் நியாயம்தான் ஆனால் இப்பொழுது சிங்கையில் அது போன்ற மோசடிகள் மிக மிக குறைந்து விட்டன அரசின் கெடுபிடிகள் அதிகம்
இங்குள்ள தமிழ் சமுதாயத்தினரின் சேவையும் ஒற்றுமையும் பாராட்டப்பட வேண்டியது இங்குள்ள மூத்த தலைமுறையினர் பெரும்பாலும் கடைநிலை தொழில்களே செய்தனர் அனால் அந்த நிலைமை இப்பொழுது மாறிக்கொண்டிருக்கிறது //கழிவறையில் வேலைபார்க்கும் சிங்கப்பூர் இந்தியர்கள் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே, அவற்றிற்கும் கீழே உள்ளவர்களில் படிக்காதவர்கள் ஓட்டுனர் வேலைக்கும், பாதுகாவலர் வேலைக்கும் சென்றுவிடுகிறார்கள், ஆனால் தற்பொழுது 25க்கு உட்பட்ட இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருமே படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதுடன் நல்ல வேலைக்கும் செல்கிறார்கள்// நீங்கள் சொல்லியது நூறு சதம் உண்மை அனைவரும் முன்னேறி சிறுபான்மை சமுகமாக இருந்தாலும் வளமான சமூகமாக வேண்டும் இதுவே என் அவா
இப்பொழுது கோவி அண்ணனிடம் சில கேள்விகள்
//இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில்// இது எதற்காக? என்ன சொல்ல வருகிறீர்கள் அதிக பணம் கட்டி படித்தவர்கள் இந்த தவறை செய்யலாமா இல்லை முன்வகுப்பை(Forward Caste) சேர்ந்தவர்கள் இதை செய்யலாமா??
இட ஒதிக்கீடு பற்றிய தங்கள் நிலை எனக்கு தெரியாது ஆனால் இந்த வரிகளில் வன்மம் தெறிக்கிறது அய்யா...
போகிற போக்கில் அவர்களை இழுப்பானேன்??
சரி நான் சொல்கிறேன்
"பணம் கொழுத்த முன் வகுப்பை சேர்ந்த வட இந்தியர்கள்தான் நீங்கள் சொன்ன திமிருடன் நடந்து கொள்கிறார்கள் இங்கே(சிங்கையில்) ஓரளவு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இட ஓதிக்கீட்டில் படித்தவர்கள் பெரும்பாலோனார் கடை நிலை ஊழியர்களிடம் பரிவுடன் தான் இருகிறார்கள்" இந்த கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
விவாதத்தில் பங்கெடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் இங்க நிறுத்துகிறேன்.
எனக்கும் இந்த கட்டுரை அந்த அளவுக்கு புரியல.
" சிங்கபூர் நாட்டுகாரனே (இந்திய வம்சாவளி) இங்க பாத்ரூம் கழுவுறான் நீ இட ஒதுகீடுல குறைந்த கட்டனதுல படிச்சவன் தானே உனக்கு என்ன" இதான் சொல்ல வராரூர் ன்னு நினைக்கிறன். இது எந்த வகைல நியாயம்னு சுத்தமா எனக்கு தெரியல?
இரவுப்பறவை
பழைய அதே இரவுப்பறவை தானே நீங்க
வவ்வால் மற்றும் ஏனையோருக்கு,
நாம நினைப்பது போல் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தமிழ்குடிமக்கள் அனைவருமே நல்ல நிலையில் இல்லை, காரணம் 30 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு இருப்பது போல் போதிய பள்ளிக் கூடங்கள் நிறைந்தும் இல்லை, இந்திய மக்கள் தொகை காரணமாக இந்திய அரசு முன்னெடுத்த குடும்பக்கட்டுபாடு திட்டத்தால் தற்பொழுது 40 வயதுக்கு குறைவானவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பிறந்த இரு குழந்தைகளில் ஒருவராகத்தான் இருப்பர், எனக்கு தெரிந்த 40 வயதுக்கு குறைவான இந்திய / தமிழக நண்பர்கள் பெரும்பாலோனர் தங்கையோ, அக்காவோ அல்லது தம்பியோ, அண்ணனோ எதோ ஒரே ஒரு உறவு முறை வாய்த்தவர்கள் மட்டுமே, மூவரில் ஒருவராக பிறந்தவர்கள் குறைவு, ஆனால் சிங்கப்பூரில் அதே காலகட்டத்தில் குடும்பக்கட்டுபாடு குறித்த விழிப்புணர்வுகள் கிடையாது, ஏனெனில் இங்கு மக்கள் தொகை பெருகினால் தான் தொழில்வளத்தை மனித வளம் சார்ந்து பெருக்க முடியும், சிங்கப்பூர்வாழ் தமிழர்கள் போதிய கல்வி அறிவு பெற வாய்ப்பில்லாமல், குழந்தைகுட்டிகளை பெருக்கிக் கொண்டும் வந்ததால் அவர்களின் குழந்தைகளுக்கும் சரியான கல்வியோ, வழிகாட்டுதலோ செய்ய முடியாமல், படிப்பை முழுதாக தொடர முடியாமல் போக கடைநிலை ஊழியம் தான் அவர்களுக்கு வாய்தத்து, இன்றைக்கும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலோர் அதைத்தான் செய்கின்றனர்.
நான் இந்தியாவில் இருந்து வந்து இங்கு கழிவறை வேல செய்பவர்கள் பற்றி குறிப்பிடவில்லை, அவர்கள் இட ஒதிக்கீட்டில் படித்திருக்கவும் வாய்ப்பில்லை, எனவே உங்கள் தவறான புரிதலுக்கு எனது விளக்கம் இவைதான்.
ஏமாற்றும் முகவர்கள் பெரும்விழுக்காட்டினர், புதிதாக குடியுரிமை பெற்ற தமிழ்நாட்டு தமிழர்கள் தான், அவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இல்லை, இந்தியாவில் இருந்து இலவச கல்வி மற்றும் இட ஒதுக்கீட்டில் படித்து கல்வி தகுதி அடைப்படையில் சிங்கைக்கு வேலைக்கு வந்தவர்களில் குடியுரிமை பெற்றதும் முகவர்களாகி நீங்கள் குறிப்பிட்டவற்றை செய்கிறார்கள்.
நான் இட ஒதுக்கீட்டு எதிராக வன்மாக இங்கே இதைக் குறிப்பிடவில்லை, அப்படியான கல்வி வாய்ப்பு இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிடைக்காமல் தான் அவர்கள் கழிவறை வேலை செய்கிறார்கள் என்பதை குறிப்பிடத்தான் நான் குறிப்பிட்டேன், ஆனால் அவற்றை புரிந்துகொள்ளாத நம்மவர்கள் வானத்தில் இருந்து வரம் வாங்கி, சிங்கப்பூரை தூக்கி நிறுத்துவது இவர்களால் தான் முடியும் என்பது போன்ற நினைப்புடன் நடந்து கொள்கிறார்கள், இங்கேயே பிறந்துவளர்ந்தவர்களை ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள்.
"ஊர்காரர்கள்" என்று சொல்வது மலேசியா, சிங்கையில் வழக்கம் தான், ஆனால் அவற்றின் தொனி இப்பொழுதெல்லாம் மாறிவிட்டது, என்னுடைய தமிழக நண்பர்களே 'ஊருக்கு போய் வந்திங்களான்னு தான் கேட்பாங்க, அதிலேயும் 'ஊரு தான் இருக்கிறது........எந்த ஊறு.........ம் இல்லை
:)
கோவி,
//நான் இந்தியாவில் இருந்து வந்து இங்கு கழிவறை வேல செய்பவர்கள் பற்றி குறிப்பிடவில்லை, அவர்கள் இட ஒதிக்கீட்டில் படித்திருக்கவும் வாய்ப்பில்லை, எனவே உங்கள் தவறான புரிதலுக்கு எனது விளக்கம் இவைதான்.//
என்னது நீங்க இந்தியாவில் 'இட ஒதுக்கிட்டில் படித்துவிட்டு சில காலம் அங்கும் வேலை செய்துவிட்டு 'வந்தவர்கள்னு ,இந்தியாவில் இருந்து வந்தவர்களை சொல்லலையா, அப்போ நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லுறிங்க, அது சரி , உங்க அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது தான், ஆனால் இப்படி எழுதினால் எங்க ஊருல தமிழ் படிச்சவங்க எல்லாம் என்ன போல தான் புரிஞ்சுப்பாங்க,, எங்க ஊரு தமிழு அம்புட்டு தான் அவ்வ்!
"//இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில் படித்து அங்கு சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இங்கே வந்து இங்குள்ள இந்தியர்கள் கழிவறைகளில் வேலைபார்ப்பதைப் பார்க்கும் பொழுது முகம் சுளித்து (நம்ம சமூகத்திற்கு தலைகுணிவு என்றெண்ணி அவர்களுடன் பேச விரும்பாதவர்களே மிகுதி//"
இதுல யாரைத்தான் சொல்லி இருக்கிங்க, சிங்கப்பூரு ஆட்களையா அவ்வ் முடியல , அவ்வ்!
-------------------------
பிரியமுடன் பிரபு,
//அதில்தான் இங்குள்ள இந்தியர்கள் நனு இருக்கே ?! அதாவது இந்திய வம்சாவளி சிங்கை குடிமக்கள் புரியுதா ?!
ஒருவேளை நானும் சிங்கையில் இருப்பதால் கோவி அண்ணன் சொல்ல வருவதை எளிதில் புரிந்துகொள்ள முடிந்ததோ என்னவோ..//
அந்த வரிக்கு முன்னாடி இந்தியாவில் இட ஒதுக்கிட்டில் படித்துவிட்டு ,அங்கு வேலையும் செய்துவிட்டுனு வருதே அது ஏன் கட் பண்ணி போட்டீர்?
நிதானமா படிச்சு பாருங்க ,என்னோட தமிழ் வாசிப்பு அந்த அளவுக்கு ஒன்னும் மோசமா போயிடல்லை உம்மை போன்றவர்கள் சொல்லிக்கொடுத்து புரிய வைக்கும் அளவுக்கு அவ்வ்!
அப்படி நான் தப்பா புரிந்துக்கொண்டேன் என்றால் அது எழுதப்பட்ட விதத்தில் இருக்கும் "மொழி பிழையே" ஒரு வேளை சொல்ல வந்ததை சொதப்பி எழுதி இருந்தால் அதுக்கு என் மேல் ஏன் பாயுறிங்க?
இது சிங்கப்பூர் தமிழ் உனக்கெல்லாம் புரியாதுனு சொல்ல வரிங்க ,ரைட்டு!
ஒரு வேளை தமிழ் வழியில் படிச்சு ,தமிழில் பேசி, இன்னும் தமிழில் வாசிக்கும் பழக்கம் வச்சிருப்பதால் எனக்கு மட்டும் தான் இப்படி தெரியுதா?
பிரியமுடன் பிரபு,
//அதில்தான் இங்குள்ள இந்தியர்கள் நனு இருக்கே ?! அதாவது இந்திய வம்சாவளி சிங்கை குடிமக்கள் புரியுதா ?!//
எனக்கு புரியுதா என வகுப்பெடுக்கும் முன்னர் ஏன் மொட்டையா இந்தியர்கள்னு போடனும், சிங்கை இந்தியர்கள்னு போட்டிருக்கலாமேனு கேட்டிருக்கலாம் அவ்வ்!
ஹி..ஹி அப்போ நானும் இந்தியர்கள தான் சொல்லி இருக்கேன் என கம்மு போகலாமே எதுக்கு நான் சிங்கை இந்தியர்கள சொல்லிட்டனோனு பதறுறிங்க அவ்வ்!
மேலும் இட ஒதுக்கீட்டில் படித்துவிட்டு வந்தவர்கள் என மெனக்கெட்டு குறிப்பிடுவதன் நோக்கம் என்ன ? பிராமணர்கள் எல்லாம் அப்படி நினைக்காத நல்லவங்கனு சொல்ல வர்ராரா ஒன்னியுமே புரியலை அவ்வ்!
இந்த ஊர்க்காரங்க என்ற சொல் ஃபிஜித்தீவுகளிலுமுண்டு.
தாய்மண்ணைச் சேர்ந்தவர்களென்றால் அங்கே உள்ள ஃபிஜி இந்தியர்களுக்கு ஏகப்பட்ட மதிப்பு.
தாங்கள் விட்டு வந்த சொந்தங்களில் ஒருவராக நம்மை நினைக்கிறார்கள்.
@ஜோதிஜி திருப்பூர்
ஆமாங்க! அதே இரவுப்பறவை தான் :))))
@கோவி கண்ணன்
என்னுடைய கேள்விகளை எளிதாக ஓதுக்கிட்டு போய்ட்டீங்களே :(
நான் கேட்பது இங்கிருக்கும்(பூர்விகமாக) சிங்கைவாழ் இந்தியர்களை உதாசீனமாக பார்ப்பது
இட ஓதிக்கீட்டில்
இலவசமாக படித்தவர்கள் மட்டும்தான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?
இதற்கு பெயர் வன்மம் இல்லாமல் என்ன?
பொதுவாக இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று கூறியிருக்கலாம்
அல்லது இந்தியாவில் படித்துவிட்டு வந்த என்று கூறி இருக்கலாம் ஏன் இடஓதுக்கீட்டையும் இலவச கல்வியையும் இழுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி?
இதற்கு சான்றாக உங்களால் புள்ளி விபரங்கள் தர முடியுமா?
நான் சொல்கிறேன் இன்ஜினியரிங் படித்துவிட்டு இங்கு வரும் ஆட்கள் தான் அதிகம் எத்தனை அரசு கல்லூரிகள் அய்யா இருக்கிறது இங்கு வரும் அனைவருக்கும் பொறியியலை இலவசமாக/இட ஓதிக்கீட்டில் சொல்லிக் கொடுக்க?
முதல் இரண்டு பத்தி அருமையாக இருக்கு.
ஆமாங்க! அதே இரவுப்பறவை தான் :))))
சொகமா இருக்கீகளா?
@ஜோதிஜி திருப்பூர்
நல்ல இருக்கேங்க! நீங்க நல்ல இருக்கீங்களா? ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி!! :)))
இரவு பறவை
என்ன இப்படி கேட்டுட்டீங்க.
வளர்த்தவர்களையும் வாழ்த்தியவர்களையும் மறப்பது தகுமா?
தாய்மண்ணைச் சேர்ந்தவர்களென்றால் அங்கே உள்ள ஃபிஜி இந்தியர்களுக்கு ஏகப்பட்ட மதிப்பு.
டீச்சர் இது குறித்து ஏதும் நீங்க எழுதியிருக்கீங்களா?
// ஏன் இடஓதுக்கீட்டையும் இலவச கல்வியையும் இழுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி?//
கல்வி கற்பதற்கான இருதரப்பினருக்கான (சிங்கை தமிழர்கள். மற்றும் அண்மையில் குடியேறிய இந்தியர்கள்) வாய்ப்பு என்ற அளவில் இதனை குறிப்பிட வேண்டியதாயிற்று, சிங்கப்பூரில் இலவச கல்வியும் இல்லை, இட ஒதுக்கீடும் இல்லை, இந்தியாவில் குறைந்த கட்டணக் கல்வி என்று நான் குறிப்பிட்டதும் கூட இட ஒதுக்கீட்டில் படிக்காதவர்களையும் சேர்த்தே குறிப்பிடத்தான், எனவே இட ஒதுக்கீட்டை வன்மாக இழுக்கிறேன் என்கிற உங்கள் அனுமானத்தை நான் புறக்கணிக்கிறேன். நானும் இட ஒதுக்கீட்டு கல்வி கற்று வந்தவன் என்ற அளவில் இங்குள்ளவர்களுக்கு கல்வி வாய்ப்பு எமக்கு வாய்தது போல் வாய்க்கவில்லை என்கிற புரிதல் எனக்கு உண்டு, எனவே கழிவறையில் வேலை செய்பவர்கள் எவராக இருந்தாலும் ஏளனமாகப் பார்பது இல்லை, தோழமையுடன் தான் அவர்களுடன் பழகுகிறேன்.
//பிராமணர்கள் எல்லாம் அப்படி நினைக்காத நல்லவங்கனு சொல்ல வர்ராரா ஒன்னியுமே புரியலை அவ்வ்!//
வவ்வாலு நான் என்றைக்குமே பார்பனர்களை பிராமணர்கள் என்று குறிப்பிட்டது கிடையாது. :) உங்களுக்கு பிராமணர்கள் வேண்டும் போல !
:)
மேலே உள்ள பின்னூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளேன்.
//நான் சொல்கிறேன் இன்ஜினியரிங் படித்துவிட்டு இங்கு வரும் ஆட்கள் தான் அதிகம் எத்தனை அரசு கல்லூரிகள் அய்யா இருக்கிறது இங்கு வரும் அனைவருக்கும் பொறியியலை இலவசமாக/இட ஓதிக்கீட்டில் சொல்லிக் கொடுக்க?//
சிங்கப்பூரில் பொறியில் படிக்க எவ்வளவு செலவு ஆகும், சிங்கப்பூரில் வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்கள் எத்தனை ஆண்டுகள் அதை கட்டுகிறார்கள் என்று ஒப்பிட்டுபார்த்துவிட்டு நீங்கள் கூறலாம். எல்லா படிப்பும் ஒண்ணு தான் என்றால் ஒரு கல்லூரியின் மதிப்பு எதை வைத்து சொல்லப்படுகிறது, குறிப்பிட்ட கல்லூரியில் சேர பலரும் விரும்புவது ஏன் என்று எனக்கு ஒண்ணும் விளங்கவில்லை. :)
ஆசிரியை பிஜித் தீவு பயண அனுபவத்தை நூலாகப்போட்டிருக்கிறார். நியூ செஞ்சுரி போட்டதாக புத்தகக்கண்காட்சியில் பார்த்ததாக நினைவு. பிஜீத்தீவு மக்களுக்கு தன் தாய் நாட்டை தாய் மொழியையும் இழந்தோம் என்ற பரிதாப ஏக்கம் மிகையாகவுண்டு. அதற்குப்பல காரணங்கள் உண்டு. அவை இங்கே தேவையில்லை. சில: அடிமைகளாக இழுத்துச்செல்லப்பட்டார்கள்; ஒபபந்தத் தொழிலாளர்களாக குழந்தை குட்டிகளோடு கப்பல் ஏற்றப்பட்டார்கள்; ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டார்கள். அவர்கள பட்ட அடிமை வாழ்க்கைத் துயரங்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களைத்தவிர வேறெவரும் பட்டதாக யான் படிக்கவில்லை. வெகு தூரம் நிலமே தெரியா கடல் வெளி. கற்பழிக்கப்பட்டு தமிழ்ப்பெண்கள் கடலில் எறியப்பட்டார்கள். திரும்பி வரமுடியாமல் ஒப்பந்தம் தடுத்துவிட்டது. இவற்றைப் பற்றி பாரதியார் எழுதிய துயரமான பாடலைப்படிக்கவும். இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
கோவி கண்ணன் கட்டுரையில் பல எழுத்துப்பிழைகள். இவர்தான் எழுதினாரா அல்லது வேறுநபரா?
இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் துப்புரவு தொழிலில் ஈடுபடுகிறார்கள்; அதைக்கண்டு நம்மவர்களே முகஞ்சுழிக்கிறார்கள் என்பதில் இருமனோ விஹாரங்கள் வெளிப்படுகின்றன:
1. இட ஒதுக்கீட்டில் படிக்காதவர்கள் உயர்ந்தோர்.
2. துப்புரவுத் தொழில் இழிவானது.
பொதுவாக கோவி கண்ணன் பதிவுகளில் இப்படிப்பட்ட கீழ்த்தரமான கருத்துக்கள் வாரா. எனவேதான் இவர்தான் எழுதினாரா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிற்து..
தமிழர்களின் சாதனை எங்கு சென்றாலும் கோயில்களையும் மசூதிகளையும் தேவாலயங்களையும் கட்டுவதாகவும், அவை வருந்தலைமுறைகளுக்கு தரும் கொடையாகவும் இறும்பூதெய்கிறார். அதே வேளையில் சீனர்களைப்போல முன்னேறவில்லையே என்ற கழிவிரக்கத்தையும் வெளிப்ப்டுத்துகிறார். நகைமுரண்!
மிகையான மதவுணர்வு முன்னேற்றத்தைத் தடுக்கும். மூளைச்சோம்பேறித்தனத்தையும் பயத்தையும் உருவாக்கும். Religious feelings should also be rational. They can be. சிங்கையில் தீமிதிவிழாவும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கலும் மூடத்தனமான வகை மதமே.
சிங்கையில் பிறகாலத்தில் ஒரு பெரியார் தோன்றுவார் என நம்பலாம்.
- குலசேகரன்.
குலசேகரன்,
நன்றி. ஒரு சின்னவிஷயம். பிஜித்தீவு பயணக்கட்டுரைகள் இல்லை. அங்கே ஆறு ஆண்டுகள் குப்பை கொட்டி அனுமானித்தவைகளே:-)
சந்தியா பதிப்பகத்தின் வெளியீடு.
ஜோதிஜி,
குலசேகரன் உங்களுக்குப் பதில் சொல்லிட்டார்.
//கல்வி கற்பதற்கான இருதரப்பினருக்கான (சிங்கை தமிழர்கள். மற்றும் அண்மையில் குடியேறிய இந்தியர்கள்) வாய்ப்பு என்ற அளவில் இதனை குறிப்பிட வேண்டியதாயிற்று//
மீண்டும் தாங்கள் அதையேதான் கூறுகிறீர்கள் என்னுடைய வாதம் இட ஓதிக்கீட்டிற்கும் இங்கு வந்து ஏளனமாய் பார்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான்
//சிங்கப்பூரில் இலவச கல்வியும் இல்லை, இட ஒதுக்கீடும் இல்லை, இந்தியாவில் குறைந்த கட்டணக் கல்வி என்று நான் குறிப்பிட்டதும் கூட இட ஒதுக்கீட்டில் படிக்காதவர்களையும் சேர்த்தே குறிப்பிடத்தான், எனவே இட ஒதுக்கீட்டை வன்மாக இழுக்கிறேன் என்கிற உங்கள் அனுமானத்தை நான் புறக்கணிக்கிறேன். //
நான் சிங்கை கல்வியையும் இந்திய கல்வியையும் ஒப்பிடவில்லை
நான் கேட்கும் கேள்வி மிக எளிமையானது,
இங்கு வந்து அடுத்தவர்களுடன் திமிருடன் பழகுவதற்கும் இட ஓதிக்கீட்டிற்கும் என்ன தொடர்பு என்பதே?
//நானும் இட ஒதுக்கீட்டு கல்வி கற்று வந்தவன் என்ற அளவில் இங்குள்ளவர்களுக்கு கல்வி வாய்ப்பு எமக்கு வாய்தது போல் வாய்க்கவில்லை என்கிற புரிதல் எனக்கு உண்டு, எனவே கழிவறையில் வேலை செய்பவர்கள் எவராக இருந்தாலும் ஏளனமாகப் பார்பது இல்லை, தோழமையுடன் தான் அவர்களுடன் பழகுகிறேன்.//
இது முற்றிலும் உங்களுக்கே உங்களுக்கான புரிதல்,
இங்கு இந்திய சமுதாயத்தைச் சார்ந்த நன்கு கல்வி கற்ற நடுத்தர வயது(30-40) தலைமுறையும் உள்ளது, அந்த வயதில் உள்ளவர்கள் அடிமட்டத்தொழில் செய்வது அவர்களின் தெரிவே தவிர வாய்ப்பு மறுக்கப்பட்டோ அல்லது வாய்ப்பு இல்லாமலோ அல்ல
நீங்கள் சொல்வது 30 வருடத்திற்கு முன் கல்வி கற்றிருக்க வேண்டிய முதியவர்கள்(50 வயது மற்றும் அதற்கு மேல்)
இது மலாய் மற்றும் சீன மக்களுக்கும் பொருந்தும், எத்தனையோ சீன முதியவர்கள் பூட் கோர்ட் - ல் துப்புரவு பணியாளர்களாய் இருகிறார்கள்
காரணம் 30 வருடங்களுக்கு முன் இங்கு சரியான கல்வி வாய்ப்புகள் இல்லை என்பதே.
//சிங்கப்பூரில் பொறியில் படிக்க எவ்வளவு செலவு ஆகும், சிங்கப்பூரில் வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்கள் எத்தனை ஆண்டுகள் அதை கட்டுகிறார்கள் என்று ஒப்பிட்டுபார்த்துவிட்டு நீங்கள் கூறலாம். எல்லா படிப்பும் ஒண்ணு தான் என்றால் ஒரு கல்லூரியின் மதிப்பு எதை வைத்து சொல்லப்படுகிறது, குறிப்பிட்ட கல்லூரியில் சேர பலரும் விரும்புவது ஏன் என்று எனக்கு ஒண்ணும் விளங்கவில்லை. :) ///
இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்
நான் கல்வி முறைகளை ஒப்பிடவில்லை, என் கேள்வி இட ஓதிக்கீட்டிற்கும் மக்களிடம் பழகுவதற்கும் என்ன தொடர்பு என்பதே?
எத்தனையோ மேலை நாடுகளில் எந்த இட ஓதிக்கீடும் இன்றி அதிக பணம் செலவழித்து படித்தவர்கள்தான் இன்றும் கூட இன/மத மற்றும் பொருளாதார வேறுபாடுகளை அதிகமாக பாவிக்கிறார்கள் இது உங்களுக்கும் தெரியும்.
ஆனாலும் இது சம்பந்தமாக ஒரு சிறு விளக்கம்:
ஒரு வளர்ந்த நாட்டின் குடிமகன் சந்திக்கும் கல்வி/பொருளாதார ரீதியான போட்டிகளை ஒரு வளரும் நாட்டின் குடிமகன் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை,
ஆனால் வளரும் நாட்டிற்கே உரிய சவால்களை அவன் சந்தித்து இருப்பான்.
என் கேள்வி இன்னும் பதிலளிக்கப் படாமலேயே உள்ளது ;)))
பரவாயில்லை இது ஏதோ தவறி வந்த வாக்கியமாக எடுத்துகொள்கிறேன்.
காரணம் இட ஒதிக்கீடு பற்றிய உங்களின் இந்த கட்டுரையில்
(http://govikannan.blogspot.sg/2007/05/blog-post_30.html) உங்களுடைய நிலையை சற்று அனுமானிக்க முடிகிறது.
ஆனால் நான் சொல்ல வருவது இதுதான், "கல்வி கற்ற முறைக்கும் எளிய மக்களை ஏளனமாக பார்ப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே!"
:)))
கோவி,
//வவ்வாலு நான் என்றைக்குமே பார்பனர்களை பிராமணர்கள் என்று குறிப்பிட்டது கிடையாது. :) உங்களுக்கு பிராமணர்கள் வேண்டும் போல !
:)//
பார்ப்பணர்கள் என சொல்லிவிடுதாலோ, பிராமணர்கள் ஆக இல்லாமல் போய்விடுவதில்லை எல்லாமே ஒன்று தான், ஆனால் பார்ப்பணியம்/பிராம்மணியத்தின் மீது பற்று இருக்கா என்று தான் பார்க்க வேண்டும், சமீபகாலமாக உங்கள் எழுத்தில் (சிந்தனையில்) ஆன்மீக வாசம் தூக்கலாக அடிக்க ஆரம்பித்துவிட்டது, பகுத்தறிவிலிருந்து பக்திமார்க்கம் பயணமோ :-))
உங்கள் தகவலுக்காக,
பார்ப்பணர்கள் என்பவர்கள், பஞ்சாங்கம், ஜாதகம் பார்க்கும் வேலை செய்யும்(காலம் கணிப்பவர்கள்- காலத்தினை முன்னரே பார்ப்பவர்கள்= பார்ப்பணர்) பிராமனர்கள் அவ்வளவே.
பிராமணர்கள் எனப்பொதுவாக அழைக்கபடும் மக்களில் அவர்கள் செய்யும் வேலையைப்பொறுத்து பலப்பெயர்கள் உண்டு ,அது போல ஒரு பெயரே பார்ப்பணர் என்பதும்,எனவே அவ்வாறு சொல்லிவிடுவதில் பெரிய புரட்சி வெங்காயம் எதுவுமில்லை :-))
# சிங்கப்பூரில் கல்விக்கட்டணம் அதிகம் என்கிறீர்கள் அதே போல ஊதியமும் அதிகம் தானே எனவே வருந்த என்ன இருக்கு?
இந்தியாவில் இருந்து குறைவான கல்விக்கட்டணத்தில் படித்து வந்தவர்கள் என்றால் அது யார்? ஏன் முற்பட்ட வகுப்பினர், அல்லது பார்ப்பணர் என சொல்ல கூட மனசு இல்லை, இட ஒதுக்கீட்டில் படித்து வந்தவர்கள் என சொன்னால் அவர்கள் பார்ப்பணர்/முற்பட்ட வகுப்பு அல்லாதவர் என தெளிவான தோற்றம் கிடைக்குது.
குறைவான கல்விக்கட்டணம் என்பது ,இங்குள்ள குறைவான ஊதியம் பொறுத்து அதிகமான ஒன்றே. மேலும் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தாலும் வருமான வரி சான்று குறைவாக கொடுக்கவில்லை எனில் வழக்கமான கல்விக்கட்டணமே, எனவே இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களும் "நீங்க சொன்ன குறைவான கட்டணத்தில் கல்விகற்றவர்களாக இருக்க வாய்ப்புண்டு.
எனவே நீங்க யாரை சொன்னீர்கள் என்பதே தெளிவில்லாமல் தான் இதுவரையில் இருக்கு, ஒரு வேளை உங்களுக்கு மேட்டுக்குடியினரை நேரடியாக சொல்ல மனசு வரலையோ என்னவோ :-))
உங்களுக்கும் பார்ப்பணர்கள் தேவைப்பட்டிருக்கும் போல :-))
------------
சென்னையில் குடியேறியவர்கள் என்ன கிள்ளிப்போட்டார்கள் என்பது இருக்கட்டும்,சிங்கையில் குடியேறியவர்கள் கிள்ளி போட்டது கோயில் கட்டி ,தீமிதிக்கிறது மட்டும் தானா அவ்வ்!
தீமிதிக்கிறத எல்லாம் அருமையா பாராட்டிக்கிட்டு அப்புறமும் நீங்க பகுத்தறிவா பேசுவது எந்த வகையில் சேர்த்தினே தெரியலை, அதுலவும் இஸ்லாமிய மதத்தை வேற அபாரமா விமர்சனம் செய்வீங்க, இனிமேல் அப்படி செய்தால் சரியா வருமா?
# இந்தப்பதிவில் உங்களோடு விவாதம் செய்வதே உங்களை பகுத்தறிவுவாதிப்போல முற்போக்காக காட்டிக்கொண்டு வந்தவர் , இப்படி தீமிதி, இட ஒதுக்கீடுல படிச்சவங்கனு பதிவ எழுதி இருக்கீங்களேனு தான், மற்றபடி உங்கள் கருத்து உங்களுக்கே!
வருங்காலத்தில் நிறைய ஆன்மீக கருத்து பிரசங்கங்கள் உங்களிடம் இருந்து வரும்னு நினைக்கிறேன் :-))
வவ்வால்
புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதே இந்த ஆன்மீகம் தான். அதன் வடிவம் வெவ்வேறாக இருக்கலாம். அவரவருக்கு ஏதோ ஒரு திருப்தி கிடைப்பதை கண்ணன் குறிப்பிட்டுள்ளார். உடனே உங்க பாணியில் அவரை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டீங்க. நமக்கு ஒரு விசயம் பிடிக்கலைன்னா ஊரே இப்படித்தான் இருக்கனும்ன்னு சொல்றது எந்த ஊரூ நியாமோ? கண்ணன் என்ன தந்தை பெரியாரா? அவர் கொள்கை அவரோட. சிங்கப்பூர் தமிழர்களின் கொள்கை அவரவர்களுக்கு?
பகுத்தறிவிலிருந்து பக்திமார்க்கம் பயணமோ :-))
பகுத்து அறியும் போது பல உண்மைகள் தெரியும். அது சில சமயம் ஆன்மீகத்தை தேவையில்லை என்று விலகியிருக்கச் செய்யும். அது மீண்டும் தேவை என்று அருகே வர வைக்கும். மீண்டும் விலகச் செய்யும். இது அவரவர் வாழ்க்கையின் தனிப்பட்ட அனுபவங்கள் தரும் உண்மை. எனக்குத் தெரிந்தவரையிலும் எந்த காலத்திலும் கண்ணன் நீங்க சொல்ற பாதைக்கு போற ஆளா எனக்குத் தெரியல.
அவருக்கு பில்டிங்கும் ஸ்ட்ராங்.
பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்கு.
கோவி,
நீங்கள் இந்த பதிவை கொஞ்சம் சொதப்பி விட்ட மாதிரி தான் தெரிகிறது. வவ்வால் கூறியது போல, ஆன்மிக வாசம் கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. உங்களை பற்றி தெரியாத அல்லது முதல் முறையாக இந்த பதிவை படிப்பவர்கள், உங்களை வேறு விதமாக (நீங்கள் இருப்பதை விட) எண்ணிக்கொள்ள வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
//இங்கு குடியேறியவர்கள் எத்தகைய முயற்சிகளையெல்லாம் எடுத்திருக்கக் கூடும் என்று நினைக்க அவர்களை பாராட்டவும், பெருமை கொள்ளவும் நேர்கிறது, //
இந்த முயற்சிகளெல்லாம் எல்லா நாட்டிலும் எல்லா குடியேறிகளும் அவங்க அவங்க கடவுளுடைய கோவிலை கஷ்டப்பட்டு தான் நிறுவியிருப்பார்கள். (இந்தியாவில் வெள்ளையர்கள் கட்டாத கிறிஸ்தவ ஆலயங்களை விடவா?). இதில் சிங்கபூர் முன்னோர்களை மட்டும் ஸ்பெசலாக பாராட்ட என்ன இருக்கிறது. இதெல்லாம் தன் கடவுள் அங்கேயும் இருக்கவேண்டும் என்ற சுயலமேயன்றி வேறொன்றுமில்லை என்று தான் நான் நினைக்கிறேன். பொது நலத்தோடு ஏதாவது செய்திருந்தால் சொல்லுங்கள் எல்லோரும் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் கோவிலையோ, ஆலயத்தையோ மசூதியையோ கட்டியதற்காக நாம் பாராட்ட தேவையில்லை என்று நினைக்கிறேன்.
//ஆனால் நான் சொல்ல வருவது இதுதான், "கல்வி கற்ற முறைக்கும் எளிய மக்களை ஏளனமாக பார்ப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே!"
:))) //
கல்வி நமக்கு எப்படி கிடைத்தது, இங்கு சிங்கைவாழ் தமிழர்களில் பெரும்பாலோர் ஏன் கல்வியை தொடராமல் கடைநிலை ஊழியம் செய்கிறார்கள் என்று சிந்துத்துப் பார்க்கும் அறிவின்மையை சாடித்தான் நான் இட ஒதுக்கீடு ஒன்றை அங்கே குறிப்பிட்டேன்.
நான் கல்லூரிப்படிப்பை முடிக்க செலவிட்டதைக் காட்டிலும் குழந்தைகளின் எல்கேஜி கட்டணங்கள் குறைவு. எனக்கு அது பெரும் சுமை அல்ல, ஆனால் கல்வி தகுதியின்றி கடைநிலை ஊழியம் செய்பவர்களால் தங்கள் குழந்தைகளை கல்லூரி வரை படிக்க வைக்க முடியாத நிலமை இங்குள்ளதுது. பணமாற்றில் சிங்கைபணம் இந்திய பணத்தைவிட 50 மடங்கு பெரிதாக தெரிவது நமக்கு தான், ஆனால் சிங்கை தமிழர்கள் எங்கு போய் பணமாற்றம் செய்யப் போகிறார்கள் ? இங்கு கல்லூரியில் ஒரு செமஸ்டர் கட்டணம் 25,000 வெள்ளிகள், ஆனால் அவர்கள் பெறும் மாத ஊதியம் 1500 வெள்ளிக்கு குறைவே, அதில் வீட்டுக்கடனுக்கு பாதிக்கு மேலும், சேமநிதிக்கு (சிபிஎப்) 25 விழுக்காடும் போக குடும்பச் செலவுக்கு சில நூறு வெள்ளிகளே மிஞ்சும். கல்லூரி படிப்பு வங்கிகடன் கொடுக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், சிறந்த கல்விக் கிடைக்கும் வாய்ப்புக்கான போட்டித் தன்மையில் கடைநிலை ஊழியம் செய்பவர்களின் குழந்தைகள் பகுதிநேரமாக வேலை செய்து கொண்டே கல்லூரிவரை படிப்பை தொடர்வதே மிகப் பெரிய அறைகூவல். அதன் பிறகு தான் வங்கிக்கடனெல்லாம். ஏற்கனவே குடும்பம் வயிற்றுக்கும் வாயிக்கும் சரியான வருமானத்துடன் இருக்கும் பொழுது அந்த சுமையைக் குறைக்கலாம் என்று பத்தாம் வகுப்பு வரை படிப்பைத் தொடராமல் வேலைக்கு செல்லத்துவங்குபவர்கள் பலர்.
தமிழகத்தில் இருந்து இங்கு வேலைக்கு தகுதி கல்வி மற்றும் முன்னனுபவ அடைப்படையில் தான் எடுக்கிறார்கள், அவ்வாறு வருபவர்களுக்கு ஓரளவு போதிய வருமானம் இருக்கும், வேலைவாய்ப்பு குறைவான நாட்டில் இருந்து இங்கு வந்து நல்லவேலையில் நம்மால் இருக்க முடிகிற பொழுது இங்கேயே வாழ்பவர்களால் இதே வேலைவாய்ப்பை பெற முடியாமல் ஏன் கடைநிலை ஊழியம் செய்கிறார்கள், ஒருவேலை அவர்களுக்கு நாம படிச்ச மெத்த படிப்பு ஏறாதோ என்கிற உயர்வு மனப்பான்மையால் இங்குள்ள சிங்கைத்தமிழர்களை ஏளனமாகப் பார்க்கிறார்கள். ஒரு காலை இழந்தவர் யார் உதவியுடனோ ஜெய்பூர் காலை வைத்துக் கொண்டு அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவரின் இயலாமையைப் பார்த்து முடம் என்று சொல்லமாட்டார்கள் என்று தான் நாம் நம்புகிறோம், ஆனால் அவ்வாறு சிலர் சொல்லுவதைப் பார்க்கும் நம்மால் நீ எப்படி இருந்தாய், நீ காணும் அவனுக்க்கு அவ்வாறு உதவயாரும் இல்லை என்று சொல்ல வேண்டி இருக்கிறது.
//பிராமணர்கள் எனப்பொதுவாக அழைக்கபடும் மக்களில் அவர்கள் செய்யும் வேலையைப்பொறுத்து பலப்பெயர்கள் உண்டு ,அது போல ஒரு பெயரே பார்ப்பணர் என்பதும்,எனவே அவ்வாறு சொல்லிவிடுவதில் பெரிய புரட்சி வெங்காயம் எதுவுமில்லை :-))//
வவ்ஸ்,
பிராமணன் இருக்கும் வரை சூத்திரன் பட்டத்தை யார் சுமப்பது ? நீங்கள் சுமக்க தயாரா ? புரட்சி வெங்காயம் இருக்கா இல்லையான்னு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
//# சிங்கப்பூரில் கல்விக்கட்டணம் அதிகம் என்கிறீர்கள் அதே போல ஊதியமும் அதிகம் தானே எனவே வருந்த என்ன இருக்கு?//
நல்ல நகைச்சுவை, சிங்கப்பூர் வெள்ளி 1 க்கு ரூ 50 என்றால் ஒரு சிங்கப்பூரை 50 இந்தியாவுடன் ஒப்பிட முடியுமா ? அவ்வ்வ்வ்வ்
மேலே உள்ள பின்னூட்டத்தில் ஊதியம் பற்றி சொல்லி இருக்கிறேன்.
//இந்தியாவில் இருந்து குறைவான கல்விக்கட்டணத்தில் படித்து வந்தவர்கள் என்றால் அது யார்? ஏன் முற்பட்ட வகுப்பினர், அல்லது பார்ப்பணர் என சொல்ல கூட மனசு இல்லை, இட ஒதுக்கீட்டில் படித்து வந்தவர்கள் என சொன்னால் அவர்கள் பார்ப்பணர்/முற்பட்ட வகுப்பு அல்லாதவர் என தெளிவான தோற்றம் கிடைக்குது//
பிறநாடுகளை ஒப்பிட ஐஐடி படிப்புக்கும், காசு கொடுத்து இடம் வாங்கும் கல்லூரிப்படிப்பும் ஆகும் செலவும் பலமடங்கு குறைவே. இட ஒதுக்கீட்டில் வராத பிரிவில் பார்பணர்கள் மட்டுமே இருந்திருந்தால் நான் குறிப்பிட்டே சொல்லி இருப்பேன், இந்தியாவில் கிறித்துவ தலித்தும், இந்து தலித்தும் வேறு வேறு இட ஒதுகீட்டுபிரிவில் வருவார்கள், ஆனால் அவர்கள் நிலமையும் பொருளாதாரத்திலும் எந்த மாற்றமும் இருக்காது, தமிழக இஸ்லாமியர்களில் ஒரு பிரிவும் கூட OC பிரிவில் வருகிறது. செட்டியார்களில் சில பிரிவும் அவ்வாறே உள்ளது. எனவே குறைந்தகட்டணத்தில் படித்தவர்கள் பார்பனர்கள் என்று குறிபிட்டு சொல்ல ஒன்றும் இல்லை.
//சென்னையில் குடியேறியவர்கள் என்ன கிள்ளிப்போட்டார்கள் என்பது இருக்கட்டும்,சிங்கையில் குடியேறியவர்கள் கிள்ளி போட்டது கோயில் கட்டி ,தீமிதிக்கிறது மட்டும் தானா அவ்வ்!//
http://en.wikipedia.org/wiki/Indians_in_Singapore - பார்க்கவும்.
//தீமிதிக்கிறத எல்லாம் அருமையா பாராட்டிக்கிட்டு அப்புறமும் நீங்க பகுத்தறிவா பேசுவது எந்த வகையில் சேர்த்தினே தெரியலை, அதுலவும் இஸ்லாமிய மதத்தை வேற அபாரமா விமர்சனம் செய்வீங்க, இனிமேல் அப்படி செய்தால் சரியா வருமா?//
நான் ஏற்கனவே எங்க ஊர்கோவில் திருவிழாவில் காவடி ஆடியதையும், எங்கள் வீட்டு தீபாவளி பலகாரம், பொங்கல், பூசை அறை வரை படம் போட்டு எழுதியுள்ளேன், நான் புதிதாக எதையும் இங்கு சொல்லவில்லை.
//இப்படி தீமிதி, இட ஒதுக்கீடுல படிச்சவங்கனு பதிவ எழுதி இருக்கீங்களேனு தான், மற்றபடி உங்கள் கருத்து உங்களுக்கே!//
நான் என்ன எழுதினேன் என்பதற்கு விளக்கம் கொடுத்தாகிவிட்டது, ஆனால் நீ இதைத்தான் எழுதி இருப்பாய் என்ற உங்கள் ஊகம், விளக்கம் இவற்றை எல்லாம் நான் 'ஆமாம்' போட ஒன்றுமே இல்லை, நான் என்ன எழுதினேன் என்பது உங்களை விட எனக்குத்தான் நன்றாகத் தெரியும் என்பதையாவது நம்புங்கள்.
//பிளாகர் Alien A கூறியது...
கோவி,
நீங்கள் இந்த பதிவை கொஞ்சம் சொதப்பி விட்ட மாதிரி தான் தெரிகிறது. வவ்வால் கூறியது போல, ஆன்மிக வாசம் கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. உங்களை பற்றி தெரியாத அல்லது முதல் முறையாக இந்த பதிவை படிப்பவர்கள், உங்களை வேறு விதமாக (நீங்கள் இருப்பதை விட) எண்ணிக்கொள்ள வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.//
என்பதிவில் பெரியார் படமும் உண்டு, வள்ளலார் படமும் உண்டு, எனவே படிப்பவர்கள் என்னைப்பற்றி என்ன பிம்பம் கொள்கிறார்கள் என்பது பற்றி நான் நினைப்பது கிடையாது.
//இந்த முயற்சிகளெல்லாம் எல்லா நாட்டிலும் எல்லா குடியேறிகளும் அவங்க அவங்க கடவுளுடைய கோவிலை கஷ்டப்பட்டு தான் நிறுவியிருப்பார்கள். (இந்தியாவில் வெள்ளையர்கள் கட்டாத கிறிஸ்தவ ஆலயங்களை விடவா?). இதில் சிங்கபூர் முன்னோர்களை மட்டும் ஸ்பெசலாக பாராட்ட என்ன இருக்கிறது.//
மதம்பரப்ப பிறவழிபாட்டு தளங்களை இடித்துவிட்டு தன்னுடையதை கட்டிக் கொள்ளவதும், பிறநாடுகளின் தத்தமது பயன்பாட்டிற்காக பண்பாட்டின் தொடர்ச்சியாக வழிபாட்டு அமைப்பதும் ஒன்றா ? பல்வேறு பிரிவுகளாக கிடக்கும் சமூகத்தில் அனைவரும் பொதுவாக கூடும் இடம் என்பதற்காக கோவில்கள் ஏற்பட்டன, அதை பார்பனர்கள் பின்னர் தங்கள் சொந்த நலனுக்காக மாற்றிக் கொண்டார்கள், ஆனால் கோவில்களின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படும் இடங்களில் அவை இருப்பதால் நட்டம் யாருக்கும் இல்லை.
என்னைப் பொருத்த அளவில் ஒருவரின் பூசை அறை நம்பிக்கையைக் கேள்வி கேட்கும் தகுதி எனக்கு இல்லை. ஆனால் பொது இடத்தில் எம்மதமே உயர்ந்தது பிற மதம் மூடநம்பிக்கை சார்ந்தது என்று முழக்கம் செயவர்களை விமர்சனம் செய்வேன்.
//பொதுவாக கோவி கண்ணன் பதிவுகளில் இப்படிப்பட்ட கீழ்த்தரமான கருத்துக்கள் வாரா. எனவேதான் இவர்தான் எழுதினாரா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிற்து..//
பதிவின் தொடர்பில் பின்னூட்டங்களை வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லி இருக்கலாம், எனது பதிவின் எழுத்துப் பிழைகளைப் போல் நீங்கள் அரைகுறையாக புரிந்து கொண்டு கருத்திட்டுள்ளீர்கள்
//எனக்குத் தெரிந்தவரையிலும் எந்த காலத்திலும் கண்ணன் நீங்க சொல்ற பாதைக்கு போற ஆளா எனக்குத் தெரியல.//
ஜோதிஜி, 100 விழுக்காடு வழிமொழிகிறேன்.
:)
நான் முற்போக்காளன் என்று தெரிந்தே என்னுடன் பழகும் பழுத்த ஆன்மீகவாதிகள் நிறைய உண்டு, நட்புவேறு கொள்கைவேறு என்பதை புரிந்து கொள்பவர்களுக்கு குழப்பம் இல்லை, நம்ம பலூன் மாமா கூட கொஞ்ச நாளைக்கு முன்பு தான் தெளிவடைந்தார். அதுக்கு முன் நிங்க எப்படி ஓம்காருடன் பழகமுடிகிறது ? என்று கேள்வி எழுப்பிவந்தார்.
நம்ம ஊரில் அதிமுக தொண்டனும் திமுக தொண்டனும், கமல் ரசிகனும் ரஜினி ரசிகனும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்தால் அரிவாளால் வெட்டிக் கொள்வார்கள் என்று பலமாக நம்புகிறார்கள்.
கோவி,
//பிராமணன் இருக்கும் வரை சூத்திரன் பட்டத்தை யார் சுமப்பது ? நீங்கள் சுமக்க தயாரா ? புரட்சி வெங்காயம் இருக்கா இல்லையான்னு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். //
என்ன இப்படி ஆகிட்டிங்களே அவ்வ்!
அப்போ பிராமணர்களை எல்லாம் கொல்ல சொல்றிங்களோ அவ்வ்!
இப்போ பார்ப்பனர் சொல்லிட்டால் சூத்திர நிலை மாறிடுமா? மேலும் பார்ப்பணர் என்ற பெயர் நீங்க நினைக்கிறாப்போல இல்லைனும் சொல்லிட்டேன், அப்படி சொல்வதால் மட்டும் நிலை மாறிடுச்சா என்ன?
உண்மையில் பிராமணியம் தான் நீக்கப்பட வேன்டும், அந்த மனிதர்கள் அல்ல, கோயில் ,கும்பிடுனு இருக்கும் வரையில் பிராமணியம்/பார்ப்பணியம் நீங்காது ,மனசிலாயி!
அதனால் தான் பெரியார் கடவுள் மறுப்பு பிரச்சாரம்ம் செய்தார், நீங்க சிங்கையில் சிலாகிச்சு தீமிதிச்சு ,அலகுக்குத்தி கூழ் ஊத்திக்கிட்டு இருந்தால் என்னிக்கும் பெரியார் சொன்னது நடக்காது, சூத்திரன் நிலை தொடரவே செய்யும் அவ்வ்!
கோயிலுக்கு போயிட்டு இருக்க வரையில் நீங்க சூத்திரன் பட்டத்தினை சுமந்து தான் ஆகனும் !!!
//பிறநாடுகளை ஒப்பிட ஐஐடி படிப்புக்கும், காசு கொடுத்து இடம் வாங்கும் கல்லூரிப்படிப்பும் ஆகும் செலவும் பலமடங்கு குறைவே. //
சிங்கப்பூர் கல்வி கட்டணம் பத்தி சொல்லும் போது சிங்கப்பூர் கடைநிலை ஊழியனுக்கு கல்வி கட்டணம் சாத்தியமில்லைனு சொல்றீங்க, இந்திய கல்விக்கட்டணம் பத்தி பேசினால் "பிறநாடுகளை ஒப்பிடனு" சர்வதேசம் பேச ஆரம்பிக்கிறிங்க" அவ்வ்.
இந்தியாவிலும் கடைநிலை ஊழியனுக்கு கல்விக்கட்டணம் எட்டாக்கனி,இந்திய கடை நிலை ஊழியன் என்ன டாலரிலா சம்பாதிக்கிறான்,அவன் வாங்கும் 10,000 ரூ மாத சம்பளத்துக்கு எல்.கேஜி கூட சேர்க்க முடிவதில்லை ,எங்கே இருந்து பொறியியல் சேர்க்க?
ஆமாம் தமிழ்நாட்டு நிலவரம் என்னனே தெரியாது போல தெரியுதே அவ்வ்!
//எனவே குறைந்தகட்டணத்தில் படித்தவர்கள் பார்பனர்கள் என்று குறிபிட்டு சொல்ல ஒன்றும் இல்லை.//
ஆஹா கண்ண மூடிக்கிட்டு கம்பு சுத்த ஆரம்ம்பிச்சுட்டாரே, நானும் பிராமணர்கள்/பார்ப்பணர்களை மட்டும் சொல்லவில்லை முற்பட்ட வகுப்பினர்னும் சேர்த்து தான் சொல்லி இருக்கேன், நீங்க எதுக்கு பாதிய மட்டும் சொல்லிக்கிட்டு.
சிங்கப்பூர் கல்விக்கட்டணம் என நீங்கள் சொல்லி இருப்பது,
//? இங்கு கல்லூரியில் ஒரு செமஸ்டர் கட்டணம் 25,000 வெள்ளிகள், ஆனால் அவர்கள் பெறும் மாத ஊதியம் 1500 வெள்ளிக்கு குறைவே,//
இந்த சுட்டி சிங்கை தேசிய பல்கலையினது,
https://share.nus.edu.sg/registrar/info/ug/UGTuitionCurrent.pdf
டுயூஷன் ஃபீஸ்,
இதில் மருத்துவப்படிப்புக்கு ஆண்டுக்கு அதாவது இரு செமஸ்டருக்கு
சிட்டிசன் - 20,510 ,நிரந்தரக்குடிமகன் -25,850 வெள்ளினு போட்டிருக்கு.
பொறியியலுக்கு ஆண்டுக்கு- 7,170 & 9,040 வெள்ளி(கலை கல்விக்கும் இதே தான்)
கூட ஸ்பெஷம் டெர்ம் ஃபீஸ் என சுமார் 700-1000 வெள்ளி எல்லா படிப்புக்கும்னு போட்டிருக்கு.
மேற் சொன்ன கட்டணம் எல்லா சிங்கை குடிமக்களுக்கும் கல்ல்வி மாநியத்தின் அடிப்படையில் சேர்ர எல்லாருக்கும் கொடுப்பாங்க போல.
நீங்க படிக்க கட்டணம் அதிகம்னு நிருபிக்க மருத்துவ படிப்பை மட்டும் ஏன் எடுத்துக்கணும், மத்தப்படிப்புலாம் படிப்பில்லையா?
இந்தியாவில் மருத்துவப்படிப்பு உயர்வகுப்பு வருவாய் பிரிவுக்கே கஷ்டம் தான்.
# நீங்க சொன்னது என்னனு உங்களுக்கு தான் தெரியும் என்பதை ஏற்கிறேன்,ஆனால் பொதுவெளியில் வெளியிடும் போது படிப்பவர்கள் நீங்க நினைச்சாப்போலவே நினைக்க வேண்டும் என நினைப்பது என்ன நியாயம்னே தெரியலை.
நீங்க மற்ற சமூக கேடுகள்,பத்திரிக்கையில் வரும் செய்தினு அல்லது ஏதேனும் இஸ்லாமியப்பதிவர் ஏதோ எழுதினாக்கூட விமர்சனம் செய்றிங்க,அப்போலாம் அது அவங்களுக்கு தான் உங்களை விட நல்லா புரியும்னு சும்மா இருந்திருக்கலாம் :-))
வவ்வால்,
பகுத்தறிவு, கடவுள் மறுப்பு மற்று பார்பனியம் குறித்து உங்கள் புரிதலை வைத்து அதன் தொடர்பில் பேசுபவர்களும் உங்கள் புரிதல்படி இருக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்புடன் மறுமொழி இட்டுள்ளதாகவே நான் புரிந்து கொண்டுள்ளேன். என்னைப் பொருத்தளவில் பெரியார் என்ன சொன்னார் என்னபதைவிட எதற்காக சொன்னார் என்பதை பல்வேறு பதிவுகளில் வெளிப்படையாக எழுதியுள்ளேன், அதில் குறிப்பாக சுயமரியாதையை மூச்சாக கொண்ட பெரியார் குன்றக்குடியடிகளார் காலில் விழுந்தது, பெரியார் தம் தொண்டர்களை திருவிக மறைவின் போது திருமுறை ஓதச் சொன்னது உள்ளிட்டவை இருக்கிறது, பதிவில் தேடிப்பார்த்தால் அவைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளமுடியும், கடவுள் மறுப்பு பெரியார் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியது முரண்பாடு என்பது போல் கூட உங்களால் விளங்கிக் கொண்டு பெரியாரின் செயலை கொச்சைப்படுத்திப்பார்க்க முடியும், பெரியார் ஒதுக்கப்பட்டவகளின் இறைநம்பிக்கையை ஒழிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் அவரின் ஆலய நுழைவு போராட்டம் பொருளதற்றதாகவே இருந்திருக்கும், அவர் போராட்டம் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைக்கானது, நீங்கள் கூறுவது போல்பார்பனியம் ஒழிக்க கோவில்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் ஒற்றைப் புரிதலில் பெரியார் இருந்திருந்தால் அவருடைய போராட்டங்களினால் பார்பனர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்குமிடையே கொலைகளைத் தான் விழுந்திருக்கும், வழிபாட்டு உரிமையைக்காக போராடுங்கள், குலதெய்வ வழிபாடு, இறைநம்பிக்கை ஆகியவற்றில் பார்பனர்களை முன்னிறுத்தாதீர்கள் என்று தான் அவர் கூறிவந்தார்.
நீங்கள் திரும்ப திரும்ப வழியுறுத்திய ஒன்று 'இஸ்லாமியர்களை இனி எப்படி விமர்சனம் செய்வீர்கள் ?' என்கிற ஆதங்கம், அதன் நோக்கம் இதைப்பற்றி ஒன்றும் சொல்லிக் கொள்வதற்கு இல்லை, நம்ம ஊரில் 'போட்டுக் கொடுப்பது, அல்லது அதற்கான முயற்சி' என்பதாகத்தான் நான் பார்க்கிறேன், இதை பின்னூட்ட கருத்து என்ற பெயரில் வைத்துள்ளீர்கள், அதற்காக நான் வருத்தமடையவில்லை, ஏனெனில் என்னுடைய இஸ்லாமிய விமர்சனங்கள், என்னுடைய இருப்பு ஆகியவை வெளிப்படையானவையே, இதை நீங்கள் சொல்லித்தான் பிறர் அறிந்து கொள்ள ஒன்றும் இல்லை என்பதே எனது பதில். பெட்டர் லக் நெக்ஸ்டைம். உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்துவது எனக்கு நோக்கமில்லை, நேரடிக் குற்றச்சாட்டாக அரைகுறை புரிந்துணர்வுடன் நீங்கள் சொல்வது மற்றவர்களையும் புண்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளவும்.
கோவி,
உங்களை வருத்தமடைய செய்ய வேண்டும் என்பதும் எனது நோக்கமல்ல.
பிராம்மணர் என சொல்லிவிட்டாலே , பிராமணியத்துக்கு ஆதரவாளனா என நீங்க கேட்கும் முன்னர் ,இப்போ எனக்கு சொன்ன விளக்கத்தை எல்லாம் நீங்க நினைச்சுப்பார்த்திருக்கலாம் அவ்வ்!
நான் பிராமணர்னுலாம் சொல்ல மாட்டேன் என்பதில் பெருமிதம் கொள்பவராயின், "சப்பைக்கட்டு" கட்டி பெரியார் குன்றக்குடியடிகள் காலில் விழுந்தார் என்று எல்லாம் சொல்வதன் மூலம் சொல்ல வருவது என்னனு தான் புரியவில்லை. குன்றக்குடி அடிகள் பார்ப்ப்பனர்ன்னு நினைச்சுக்கிட்டு நீங்க பேசுறிங்களோனு டவுட்டாகுது அவ்வ்!
# //அவரின் ஆலய நுழைவு போராட்டம் பொருளதற்றதாகவே இருந்திருக்கும், அவர் போராட்டம் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைக்கானது, //
உரிமை மறுக்கப்படும் பொழுது அவ்வாறு செய்தாரே ஒழிய காவடி தூக்கு,அலகு குத்துனு,தீமிதினு புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கவில்லை!
இப்போ நீங்க சிதம்பரம் கோயிலில் போய் தேவாரம் பாடினால் அதுவேறு ,ஆனால் சிதம்பரம் கோயிலில் தள்ளி நின்னு கன்னத்துல போட்டுக்கிட்டு வந்தால் அது வேறு,அப்படி போட்டுக்கொள்வதே சிறப்புனு பெருமையாக பேசினால் அதெல்லாம் "பகுத்தறிவா"?
# //நம்ம ஊரில் 'போட்டுக் கொடுப்பது, அல்லது அதற்கான முயற்சி' என்பதாகத்தான் நான் பார்க்கிறேன், //
உங்களைக்கேள்விக்கேட்டுப்புட்டேன் என்பதால் உணர்ச்சிவசப்படுறிங்கனு நினைக்கிறேன்... உங்களுக்கு தெரியாம இன்னொருத்தருக்கிட்டே போய் சொன்னால் தான் அது நீங்க சொல்றாப்போல, ஆனால் சம்பந்தப்பட்டவங்கக்கிட்டேயே நேரடியாக விமர்சனத்தினை முன் வைப்பது "நேர்ப்பட பேசுவது" ஆகும்.
#// ஏனெனில் என்னுடைய இஸ்லாமிய விமர்சனங்கள், என்னுடைய இருப்பு ஆகியவை வெளிப்படையானவையே,//
இந்துத்வாக்களின் இஸ்லாமிய விமர்சனங்களும் ,அவர்களின் இருப்பும் கூட வெளிப்படையாக நடக்குது, அதனால் அவர்கள் எல்லாம் மதச்சார்பற்றவர்களாகிடுவாங்களா அவ்வ்!
நாம ஒரு சாக்கடையில் இருந்துக்கொண்டு ,இன்னொருத்தன் சாக்கடையில் நிக்கிறான்னு சொன்னால் சிரிக்கவே செய்வார்கள்!
கறையேறிவிட்டு ..சாக்கடைய பத்தி பேசினால் தான் சரியா வரும்..நான் கறையேறிட்டேன் ..நீங்க இன்னும் உள்ளப்போறிங்க அவ்வ்!
# நீங்க ஏதோ சொல்லிட்டோம்னு அதை வலிந்து நிறுபிக்க மிகவும் முயற்சி செய்வது நன்றாகவே தெரிகிறது, சிங்கையில் கல்விக்கட்டணம் கூடுதல் என சொல்லிவிட்டு அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு மருத்துவக்கல்விக்கட்டணத்தினை ஒப்பிட்டு பேசும் போதே புரிந்தது அவ்வ்!
நீங்க சொல்வது போலஒரு வேளைக்கல்விக்கட்டணம் கூடுதல் என்றால் குறைவான மக்கள் தொகைக்கொண்ட ஒரு நாட்டிலேயே அனைவருக்கும் மலிவாக கல்வி வழங்க முடியாத அரசை அல்லவா குறை சொல்லி இருக்க வேண்டும்(தமிழ்நாட்டில கக்கூஸ் இல்லை,சிங்கப்பூர பாருங்க சூப்பருனு சொல்லிப்பீங்க அவ்வ்), உண்மையில் அது அரசின் இயலாமை அல்லவா?
இதெல்லாம் இல்லாமல் வழக்கம் போல நடுநிலையான பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன்!
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
அருமையானதோர் பதிவு
கருத்துரையிடுக