பின்பற்றுபவர்கள்

24 ஜூலை, 2009

வாத்தியார் வகுப்பறையில் 500 மாணவர்கள் !

வலையுலக இளைஞர்களை மிஞ்சும் வகையில் சுப்பையா வாத்தியார் 500 பின்தொடர்பவர்களைப் (Followers) பெற்ற முதல் தமிழ் பதிவர் ஆகிறார். இன்னும் சில தளங்கள் 500+ ல் இருந்தாலும் அவை குழுப்பதிவுகளா தனிப் பதிவுகளா என்பது எவருக்கும் தெரியாது.

பின் தொடரும் பதிவர்கள் எண்ணிக்கைப் பட்டியலில் முன்னனியில் இருக்கும் சுப்பையா வாத்தியாருக்கு வாழ்த்துகள்.


வாத்தியாரின் ஜோதிடப் பதிவுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை ஆனாலும் அந்தப் பதிவுகளில் அவர் தரும் மற்ற தகவல்களை விரும்பிப் படிப்பேன். இந்த வயதிலும் உற்சாகமாக என்று எழுதினால் 'வயசை ஞாபகப் படுத்தாமல் இருக்க முடியாதான்னு' கேட்பார். அதனால் வயது வேண்டாம். 65 வயதுக் காரர்களே இளைஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் போது (யூ மீன் தருமி ?) வாத்தியாருக்கு அவ்வளவெல்லாம் ஆகவில்லை. உடம்பைக் கொஞ்சம் குறைச்சிட்டு (யாருப்பா அது... அவர் பேசுவதையும் கொஞ்சம் குறைச்சிட்டுன்னு சொல்வது ?) இன்சர்ட் பண்ணிட்டு டி சர்டோடு வந்தார் என்றால் நாடோடிகள் பட நாயகன் சசிகுமார் போல இருப்பார்.

****

பின்னோக்கிய நினைவுகள் சில...

SPVR சுப்பையா ஐயா அவர்களின் 'பல்சுவை' வலைத்தளம் ஒன்று ஆகஸ்ட் 2006 வாக்கில் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. அப்போதெல்லாம் பெ.மகேந்திரன், உங்கள் நண்பன் சரவணன், நாமக்கல் இன்னும் சில வ.வா. சங்கப் பதிவர்களும் நானும் சேர்ந்து அனானி / அதர் ஆப்சன் திறந்து வைத்திருப்பவர்கள் பதிவில் இப்போது பலர் அடிப்பது போல் நகைச்சுவை கும்மி அடிப்பது வழக்கம். சுப்பையா அவர்களின் பதிவு இணைந்த போது.... அவரது புகைப்படத்தைப் பார்த்து ஆகா நம்ம வகுப்பு வாத்தியார் போல இருக்கிறார்... வாங்க அவரைக் கலாய்போம் என்று வலை நண்பர்களுடன் சாட்டிவிட்டு... அவரது பதிவுக்குச் சென்று வாத்தியார் பட்டம் கொடுத்து கும்மி அடித்தோம். மட்டுறுத்தல் வைத்திருந்தார். அவர் பின்னூட்டம் வெளி இடும் முன்பே அதே பின்னூட்டத்தை மற்றவர்களிடம் கொடுத்து..... அதை பேஸ்ட் செய்து ..... வழிமொழிகிறோம்..... முன்மொழிகிறோம் அல்லது அதற்கு பதில் சொல்லி பின்னூட்டம் போடுவது என்று ஒரே பின்னூட்ட நகைச்சுவை. 'நாம வெளி இடும் முன் அந்தப் பின்னூட்டத்தை வேறொருவர் எப்படி அறிந்து கொண்டு அதை ஒட்டி எழுதுகிறார் ?' என்று அவரை குழப்புவது தான் திட்டம். திரு சுப்பையா ஐயா அசராமல் ஆடினார்.

டெக்னாலஜி படுத்தும் பாடு - பேசும் கம்ப்யூட்டர் - என்ற அவரது பதிவில் அவருக்கு கொடுத்த வாத்தியார் பட்டம் அவரை ஊக்கப்படுத்தியது முதல், நாங்களும் மாணாக்கராக பின்னூட்டம் போட்டோம், அதன் பிறகு வகுப்பறை என்னும் தனிப் பதிவைத் திறந்து வலைப்பதிவு ஆசிரியாராக வெற்றிகரமாக தொடர்கிறார்.

*****

பல சிறுகதைகள் எழுதி இருக்கிறார், அதை நூலாகவும் வெளி இட்டிருக்கிறார். பதிவர்களுக்கு அடிக்கடி பொன்னாடை போர்த்தி கவுரவிப்பது அவரது வழக்கம். (கைப் பையில் எப்போதுமே ஒரு பொன்னாடை இருக்கும்). அவருக்கு பிடித்தது பில்டர் காபி. அதை அவரே பல பதிவுகளில் சொல்லி இருக்கிறார். சிறுவயது முதலே இலக்கிய ஆர்வமிக்கவராக இருந்தவருக்கு வலைப்பதிவு சரியான ஊடகமாக அமைந்திருக்கிறது. அவரை சந்திக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக 2007ல் கோவை சென்று அவரை சந்தித்திருக்கிறேன். கோவை செல்வதற்கு இரவு 11 மணி ஆகியது, அதுவரை காத்திருந்து பேசிவிட்டு, உணவு அளித்துவிட்டு 12 மணிக்கு மேல் விடைபெற்றார். ஜோதிடம் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறார். அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவரது ஜோதிடப் பாடங்கள் பயனளிக்கிறது என்பதைத் தான் அவரது பின் தொடர்பவர் பட்டியலின் எண்ணிக்கைக் காட்டுகிறது. வாத்தியார் ஜோதிடம் மட்டுமல்ல நகைச்சுவையிலும் கலக்குபவர் என்றால் அது மிகை அல்ல,

பிறரைப் பழித்து அதன் மூலம் புகழ்தேடதவர் என்னும் பக்குவம் அவர் எழுத்திலும் பழக்கத்தில் தெரிகிறது. வாத்தியார் பிரபல பதிவர் மட்டுமல்ல மூத்தப் பதிவரும் கூட. பதிவர் வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

11 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

நேற்றே நான் பார்த்து பிரமித்தேன் - இத்தனை பேரா என்று - எழுத வேண்டும் என ( ரொம்ப காலத்திற்குப் பின்) நினைத்தேன் - அதற்குள் இந்த இடுகை வந்து விட்டது

வாத்தியார் வாத்தியார் தான்

சந்திக்க வேண்டும் - அவரது தொலைபேசி எண் என்னிடம் கொடுத்தும் இன்னும் நான் தொடர்பு கொள்ளவில்லை.

மதுரை வந்ததும் நிச்சயம் பேசுகிரேன் - சந்திக்கிறேன்

நையாண்டி நைனா சொன்னது…

சார் நானும் வந்துட்டேன்.
இண்டர்ணள்ளே கை வச்சிராதீங்க...

Radhakrishnan சொன்னது…

பிரமிக்க வைக்கும் சாதனை. முத்தமிழ்மன்றத்தில் இவரது எழுத்துக்களை தேவகோட்டை சுப்பையா என்ற பெயரில் பார்த்து இருக்கிறேன். பின்னர் எங்கே இவரைக் காணவில்லையே என நினைக்கும்போது இவரது வலைப்பூ கண்ணுக்குப்பட்டது. விபரங்கள் படித்து வியந்து போனேன். இன்னும் நான் எந்த ஒரு வலைப்பூவிலும் என்னை ஒரு மாணவனாகச் சேர்த்துக்கொள்ளவில்லை. விரைவில் சேர்த்துக்கொள்கிறேன்.

வெள்ளிவிழா கொண்டாடும் வகையில், உங்கள் எழுத்தில் என்னைக் காண்பதால், மாணவனாக முதன்முதலில் இங்கே இணைந்து கொள்கிறேன்.

மிக்க நன்றி கோவியாரே.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாத்தியார் வாத்தியார் தான்

Subbiah Veerappan சொன்னது…

/////பதிவர் வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.///

உங்கள் பராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி கோவியாரே!

நீங்களும், பெ.மகேந்திரன் அவர்களும் ’பல்சுவை’ பதிவிற்கு வந்து எனக்கு வாத்தியார் பட்டத்தை வழங்க, அதன் காரணமாகத் தோன்றியதுதான் எனது இரண்டாவது வலைப்பதிவான ‘வகுப்பறை’

ஆன்மிகத்தைப் பாடமாக நடத்தலாம் என்றுதான் அதைத் துவங்கினேன். சில வாரங்கள் கழித்துதான் என்னுடைய மரமண்டக்கு உதித்தது. தமிழ்மணத்தில் மட்டுமல்ல, இணையத்தில் உலாத்துபவர்கள் எல்லாம் இளைஞர்கள் - அவர்களிடம் ஆன்மிகம் போணியாகாது என்று!

உடனே ஜோதிடத்தை எழுதி அதில் ஆன்மிகத்தையும் Blend செய்து குடிக்கக் கொடுத்தால் சரக்கு போணியாகும் என்று எழுதத் துவங்கினேன். ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது. பிறகு, ”இவன் நல்லவண்டா, எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான்டா”, என்று எதிர்த்தவர்கள் என்மீது பரிதாபம் கொண்டு வீட்டு விட்டுப் போய்விட்டார்கள். இதுதான் பூர்வ கதை!

பின் தொடர்பவர்கள் 500பேர்கள் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியைவிட, இனி அவர்களுக்காக மேலும் சிறப்பாகவும், பொறுப்பாகவும் எழுத வேண்டுமே எனும் கவலைதான் இப்போது எஞ்சி நிற்கிறது.

பதிவு போட்டு, பழைய நினைவுகளைக் கிளறி, சில இனிய நினைவுகளைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய மேனமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கோவியாரே!

அப்பாவி முரு சொன்னது…

வாத்தியார் யாருடனும் சண்டை போடாததால் கவனிப்பில்லாமல் இருக்கிறார்.

கவனிப்படுபவர்களில் ஒருவராக ஆக்க வேண்டும்

cheena (சீனா) சொன்னது…

//பின் தொடர்பவர்கள் 500பேர்கள் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியைவிட, இனி அவர்களுக்காக மேலும் சிறப்பாகவும், பொறுப்பாகவும் எழுத வேண்டுமே எனும் கவலைதான் இப்போது எஞ்சி நிற்கிறது.//

இது தான் வாத்தியார்

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//வாத்தியார் யாருடனும் சண்டை போடாததால் கவனிப்பில்லாமல் இருக்கிறார்.

கவனிப்படுபவர்களில் ஒருவராக ஆக்க வேண்டும்

//

இப்ப என்ன சொல்ல வர்றீங்க?? யாராவது அவரோட சண்டை போடுங்கன்னு சொல்லுறீங்களா??

ஹி..ஹி...ஹி..

வால்பையன் சொன்னது…

வாத்தியாருக்கு வாழ்த்து சொல்ல வாய்ப்பழிதமைக்கு நன்றி!

புருனோ Bruno சொன்னது…

வாத்தியாருக்கு வாழ்த்துக்கள் :) :)

//இன்னும் சில தளங்கள் 500+ ல் இருந்தாலும் அவை குழுப்பதிவுகளா தனிப் பதிவுகளா என்பது எவருக்கும் தெரியாது.//

எழுதுபவர்(கள்) தவிர !!!

வடுவூர் குமார் சொன்னது…

அந்த 500 ஆடுகளில் ஏதேனும் கருப்பு ஆடு இருக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பிய பதிவை படிக்கலையா?
ஆரம்ப காலங்களில் கவிஜை என்னை அவ்வளவாக கவரவில்லை அதன் பிறகு ஜோதிடத்தில் ஓரளவு follow பண்ணினேன் பிறகு புரியாத்தில் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்