பின்பற்றுபவர்கள்

15 ஜனவரி, 2012

பிறமதத்தினர் தமிழர் திருநாளைக் கொண்டாடுவது நடக்குமா ?

இன்று மதியம் வீட்டின் அருகே ஒரு ஷாப்பிங் மால் (வணிக வளாகம்) சென்றுந்தேன், சீனப்புத்தாண்டு நெருங்குவதால் நாள் தோறும் வணிக வளாகங்கள் ஒவ்வொன்றிலும் அதனுள் இருக்கும் பொது மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்றைக்கு பார்த்த நிகழ்ச்சி கொஞ்சம் அதிர்ச்சி மற்றும் வியப்பை அளித்தது. மாலாய் முஸ்லிம்கள் மற்றும் சீனர்கள் இணைந்து சீனப் புத்தாண்டை வரவேற்றுப் பாடல்கள் பாடிக் கொண்டு இருந்தனர். முழுக்க முழுக்க மலாய் பாடல்கள் அவை புரியாவிட்டாலும் ஒவ்வொரு பாடலுக்கு முன் ஆங்கில விளக்கம் கொடுத்தனர். மலாய்காரர்கள் என்றாலே அவர்களின் தாய் மொழி மலாய் மற்றும் அவர்கள் சார்ந்த மதம் இஸ்லாம் என்பது மட்டும் தெரியும். பாபாக்கள் என்ற ஒரு பிரிவினர் உண்டு அவர்கள் மலாய் - சீனக் கலப்பினர், அவர்களில் சிலரும் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

எனக்கு தெரிந்து 'இஸ்லாமியர்கள் பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா ?' அதாவது காஃபிர்கள் கொண்டாடும் பண்டிகைக்கு காஃபிர்களை இஸ்லாமியர்கள் வாழ்த்தலாமா ? என்ற சர்சைகள் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் ஒருபிரிவிற்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது, அந்த கேள்வியின் தேவை குறித்து ஆராய்ந்து அவர்களே பதிலும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது இஸ்லாம் மீது நம்பிக்கையற்றவர்கள் இஸ்லாமிய இறைவனை வழிபடுவது இல்லை, அவர்கள் இணை வைப்பவர்கள் மற்றும் அவர்கள் வணங்கும் கடவுளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே இல்லாததால் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது ஹாரம் (விலக்கப்பட்டுள்ளது) ஆக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள், இதைப் படித்துவிட்ட நான் 'எனக்கு தமிழ் மற்றும் இந்து பண்டிகை நாள்களில் மதக் கட்டுப்பாடுகளை மீறி வாழ்த்து சொல்லும் இஸ்லாமிய நண்பர்கள் நன்மதிப்பு மிக்கவர்களாகவும் சமூக நேயம் தெரிந்தவர்களாகவும் தெரிந்தனர். ஏனெனில் கொஞ்சமாக மதத்தைக் கடைபிடிக்கலாம் என்பது போன்ற அனுமதிகள் அங்கு இல்லை, தன்னை இஸ்லாமியர் என்று உணர்ந்தவர் எவரும் இஸ்லாத்திற்கு புறம்பானவற்றை செய்யக் கூடாது என்பதே அம்மதம் வழியுறுத்துவதாகவும், மீறிச் செயல்பட்டால் அதற்கு ஏற்ற குறைவான நிரந்தர சொர்கப் பலன்கள் கிடைக்குமாம். எனவே தனது நிரத்தர சொர்கத்தின் பலன்களை நமக்கு வாழ்த்துச் சொல்வதால் செலவழிக்கிறாரே என்ற நெகிழ்ச்சியே இஸ்லாமிய நண்பர்கள் வாழ்த்து சொல்லும் போது எனக்கு ஏற்படும்.

மேலே சீனப் புத்தாண்டுக்கு வாழ்த்துப்பாடல் பாடும் மலாய்காரர்கள் (இசைக்குழு) பழமைவாதத்தை புறக்கணித்துவிட்டு சமூக நல்லிணக்கத்தை முன்னிட்டு சீனப் புத்தாண்டை வரவேற்கின்றனர்.

*******

தமிழ் கிறித்துவர்களில் கத்தோலிக்கப்பிரிவினர் பொங்கல் கொண்டாடி அவர்கள் மதவழக்கப்படி மாதாவுக்கும் ஏசுவிற்கும் படைத்து உண்ணுகின்றனர். அவர்கள் பொங்கல் நாளில் சூரியனை வழிபடுவது போல் தெரியவில்லை, நான் அறிந்தவரையில் அனைத்து மதங்களைச் சேர்ந்த சீனர்களுக்குள் சீனப் புத்தாண்டு பொதுவாகவே கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சீனாவில் பல்வேறு மதத்தை சேர்ந்த சீனர்களும், இஸ்லாமிய சீனர்களும் சீனப் பெயர்களைத்தான் இட்டுக் கொள்கின்றனர், அவர்கள் பெயர்களில் அரபு வாசனையோ, ஆங்கில வாசனையோ குறைவு, பவுத்த மற்றும் தாவோ இச சீனர்கள் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் சீனர்கள் மற்றுமே பிறர் கூப்பிடுவதற்காக தனக்கு தானே ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர், இது பொதுவாக அவர்கள் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையில் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பெயராக வெறும் அலுவலகம் சார்ந்த பெயராகவே அந்த ஆங்கிலப் பெயர்கள் இருக்கும். ***மலேசிய சீனர்கள் இஸ்லாமுக்கு மாறும் போது அவர்கள் பெயரும் அரபி பெயருக்கு மாறும் ஏனெனில் மலேசியா சீனர்கள் பெரும்பான்மை பெற்ற நாடு அல்ல*** ஆனால் சீனப் பெயர்கள் மதம் சார்ந்தவை அல்ல என்பதால் சீன நாட்டின் சீனர்கள் அப்பெயர்கள் அவர்களின் மதங்களுக்கு பொதுவான ஒன்றாகவே கருதி தம் மொழியில் பெயர் வைத்துக் கொள்கின்றனர். இங்கு தமிழ்நாட்டில் அவ்வாறு நடைபெறுவது மிக மிக அரிதே. தமிழிலும் ஏராளமான பொது பெயர்கள் உண்டு ஆனால் அதை இந்துக்கள் தவிர்த்து வைப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவே.

பொங்கல் இந்து அடையாளத்துடன் சூரியனுக்கு படைத்து கொண்டாடப்படுவது தான் பொதுப் பண்டிகையாகக் கொண்டாடத் தடை என்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் போன்று மதம் சார்ந்து கொண்டாடலாமே ? நான் ஆயுத பூசை அன்று ஆயுதங்களுக்கு பொட்டிட்டு அவல் பொறிகடலையுடன் அல்லாவுக்கு தொழுது கொண்டாடும் இஸ்லாமியரைப் பார்த்திருக்கிறேன் அது போல் செய்பவர்கள் மிகக் குறைவே. தமிழ்நாட்டில் தமிழ் சார்ந்த பண்டிக்கை என்று தான் பொங்கல் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது, அதை தத்தம் மத விதிகளின் படி கொண்டாடத் தடை எதும் இல்லை என்னும் போது, கொண்டாடுவதில் தவறென்ன. அதற்கான முயற்சிகள் இதுவரை மெத்தடிஸ்ட், பெந்தகோஸ் கிருத்துவரும் இஸ்லாமியரும் எடுத்தது போல் தெரியவில்லை.


சிங்கப்பூரைப் போல் சிறந்த ஆட்சியாகவும் தொழில் வளமான நாடாகவும் தமிழ் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கவில்லை, இந்திய அரசியல் சூழலில் மக்கள் நெருக்கம் காரணமாக ஊழல் என்பது தவிரக்க முடியாத ஒன்று ஆகிவிட்டது, மேலும் தேசிய நிரோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அப்படி ஆகுவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு என்று உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்,

ஆனால் தமிழருக்கு பொதுவான நாள், தமிழர் திருநாள் தமிழ்பேசும் அனைத்து மதத்தினரால் பொதுவாகக் கொண்டாடப்படுவது எப்போது என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த ஏக்கம் கூட இங்கிருக்கும் சீனர்களைப் பார்த்து வந்தது தான், பல்வேறு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் பேசும் மொழிசார்ந்து அவர்கள் அனைவரும் சீனப்புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.

பொங்கல் கொண்டாடினால் தான் தமிழனா ?

நமக்கான பொது அடையாளம் மொழி என்ற அளவில் இருப்பதுடன் சேர்த்து ஒரு பொதுவிழா ஒருமித்து கொண்டாடுவதன் மூலம் நாம் அனைவரும் கொண்டாட்டங்கள் ஒன்றிலும் இணைந்துள்ளோம் என்ற உணர்வு ஏற்பட்டு நம்மிடையே பிணைப்பை ஏற்படுத்தும், மேலும் நாம் வேறு வேறு மதத்தை சார்ந்தவர் என்று பிரித்துப் பார்க்கும் கூறுகளையும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தகர்க்கும்.


******

இன்றைய நாளை தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடும்
மற்றும்
பொங்கலாகக் (மட்டும்) கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

44 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

பண்டிகை, திருநாள் என்பவை பெரும்பாலும் மரபு சார்ந்து கொண்டாடப்படுபவையே! அதனால், சில நம்பிக்கைகளோடு தொடர்பு இருப்பதும் இயற்கையே. ஆனாலும் உங்களுடைய ஆதங்கத்தில் இருக்கும்நியாயம், பொங்கல் ஒரு பொதுவான பண்டிகையாகக் கொண்டாடப்படவேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன்.

suvanappiriyan சொன்னது…

திரு கோவி கண்ணன்!

//இங்கு தமிழ்நாட்டில் அவ்வாறு நடைபெறுவது மிக மிக அரிதே. தமிழிலும் ஏராளமான பொது பெயர்கள் உண்டு ஆனால் அதை இந்துக்கள் தவிர்த்து வைப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவே.//

அதற்கு காரணம் இங்குள்ள சாதி ஏற்றத் தாழ்வும், சாதிப்பிடிப்பும்தான காரணம். ஒருவர் ராகவன் என்ற பெயரில் இஸ்லாத்தை தழுவுவதாக வைத்துக் கொள்வோம். இவரை பார்க்கும் ஒருவர் அடுத்து இவரது ஜாதி என்ன என்பதை நோட்டம் விடுவார். சாதி ஒழிய வேண்டும் என்றுதான் அவர் வேறு மார்க்கத்தையே தேர்ந்தெடுக்கிறார். அங்கும் சாதி வந்து நின்றால் அவர் மாறியதில் அர்த்ததே இல்லாமல் போய் விடும்.

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் எந்த சாதி என்பது எவராலும் பார்க்கப் படுவதில்லை. அதே நேரம் திலிபன் என்ற பெயரிலேயே இருந்திருந்தால் வெகு இலகுவாக அவரது சாதி தமிழகத்தில் பிரபல்யப் பட்டிருக்கும்.

அரபு அல்லாத பெயர்களில் முஸ்லிம்கள் பெயர் வைப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. இறைத் தூதர் ஆப்ரஹாம் அரபியரல்ல. அந்த பெயரும் அரபியல்ல. ஆனால் முஸலிம்கள் பெரும்பாலும் வைக்கின்றனர்.

தமிழகத்தில் சாதி பாகுபாடு சாதி வெறி மறையும் பொழுது அன்று முஸ்லிம்களும் தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்வார்கள்.

//பொங்கல் இந்து அடையாளத்துடன் சூரியனுக்கு படைத்து கொண்டாடப்படுவது தான் பொதுப் பண்டிகையாகக் கொண்டாடத் தடை என்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் போன்று மதம் சார்ந்து கொண்டாடலாமே ?//

இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரில் ஒரு புதிய பண்டிகையை நாமாக உண்டாக்கிக் கொள்ள முடியாது. அதற்கு குர்ஆன் தடை விதிக்கிறது. உலகம் முழுவதும் ஒரு முறையாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஏற்பாடு.

சூரியனுக்கோ மற்ற எந்த கற்சிலைகளுக்கோ படைக்காமல் அங்கு வழிபாடு நடக்காமல் தமிழர்களுக்கென்று பொங்கலை கொண்டாடினால் அதற்கு இஸ்லாம் தடையில்லை. எனவே சூரியனுக்கு படைப்பதை நிறுத்திக் கொண்டால் அந்த விழாவில் முஸ்லிமகளும் கலந்து கொள்வார்கள்.

எனது இம்மை மறுமை வாழ்வு செம்மையாக இருக்க இஸ்லாத்தை நான் ஏற்றிருந்தாலும் இனத்தினால் நான் தமிழனாகவும் மேலும் திராவிடனாகவும் இருக்கிறேன். அது என்றுமே அழியப் போவதில்லை.

வவ்வால் சொன்னது…

கோவி சரியா சொன்னிங்க. சில பிற மத பதிவர்கள் பொங்கலையும் இந்து மத பண்டிகையாவே பார்க்கிறாங்க.ஏன் பொங்கல் கொண்ண்டாட வில்லைனு பதிவும் போட்டு இருக்காங்க, பானைக்கு பட்டை அடிச்சு, பொட்டு வைத்து வணங்கப்படுகிறதாம் எனவே அது மதப்பண்டிகை கொண்டாட முடியாதுனு சொன்னாங்க. தை-1 இல் தமிழ் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள், உழவர் திருநாள் என வேறு பலவும் இருக்கு அதுக்கு வாழ்த்து சொல்லிக்கிறிங்களா, என சொல்லி வந்தேன்.

தமிழ்நாட்டில பிறந்து தமிழ் பேசி , தமிழ் மண்ணில் ,உழவனால் விளைவிக்கப்பட்ட உணவைத்தானே எல்லாம் சாப்பிடுறாங்க, அரேபியா இல்லை வாட்டிகனில் இருந்தா உணவு வருது. எனவே இந்நாளை உழவு திருநாளாகவும், தமிழ் புத்தாண்டு என்றாவது கொண்டாடலாமே.அதுவும் அவரவர் மத கடவுளுக்கு பொங்கல் வைச்சுட்டு போங்க,அந்த கடவுள் எல்லாம் பொங்கல் செரிக்காதுனு சொல்லவா போறாங்க :-))

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, உழவர் திருநாள்,திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகள்.

2008 இல் எழுதிய இப்பதிவையும் ஒரு முறைப்பார்க்கவும்.இந்த பதிவு ஏற்கனவே நீங்க படிச்சது ,தான் இப்போ மீள் பதிவா போட்டு இருக்கேன். :-))

தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை

Unknown சொன்னது…

எங்கோ இருக்கும் மிலேச்ச நாடுகளின் பண்டிகைகளை கொண்டாடுவோருக்கு, பிறந்த நாட்டின் புத்தாண்டுகளும், இயற்கையை வணங்கும் நிகழ்ச்சிகளும் அந்நியபட்டது ஆதங்கமே!

ஷர்புதீன் சொன்னது…

அவரவர் மதங்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில் எனது கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் எனக்கு பிடித்த ஒரு விஷயம் இது - சாத்தியங்கள் உண்டா?

கேரளத்தில் உள்ள ஓணம் போன்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படுத்தி, அன்று அவரவர் மதங்களின் வழிபாட்டில் ஈடுபடுவது முதற்கொண்டு அவரவர்களின் பாணியில் கொண்டாடி மகிழலாமே என்பது!

அடுத்து ., அதே போல் ஒவ்வரு ஊருக்கும் " ஊர் டே" என்ற பெயரில் ஒரு நாளை ஏற்படுத்தி அன்று அவரவர் மதங்களின் வழிபாட்டில் ஈடுபடுவது முதற்கொண்டு அவரவர்களின் பாணியில் கொண்டாடி மகிழலாமே என்பது! இப்போதெல்லாம் பிழைக்க என்று பல்வேறு ஊர்களில் ஒரே ஊரை சேர்ந்த மனிதர்கள் அதிகம் வாழும் முறை என்பதால் ஊர் டே கொண்டாடுவது அழகாக இருக்குமே ?

புதுகை.அப்துல்லா சொன்னது…

கோவியார் ஒரு விசயத்தை நீங்க நல்லாப் புருஞ்சிகிடனும். இங்கிருக்கும் இஸ்லாமியர் அனைவரும் இந்துக்களாக இருந்து மாறியவர்களே. போன வருசம் வரைக்கும் பொங்கல் வச்சு சூரியனைக் கும்பிட்ட பயலுக்கு இந்த வருசம் மதம்மாறும் போது பொங்கல் என்பது மொழி,இனம் சார்ந்த பண்டிகையாத் தெரியாது, ஒரு இந்து பண்டிகையாகத்தான் தெரியும்.இதுதான் எதார்த்தம். இது மதப் பண்டிகை அல்ல, மொழிப் பண்டிகை என்பதை மதம் மாறியவர்களுக்கு உணர்த்தத் தவறியது உங்களைப்போன்ற சோகால்டு பெரியாரிஸ்டுகளின் தவறு. நான் அறிந்தவரை எங்கள் மாவட்டத்தில் பெரும்பாலான தமிழ் தாய்மொழி இஸ்லாமியர்கள் பொங்கல் திருநாளில் சக பிற மத தமிழர்களோடு இனைந்து கொண்டாடத்தான் செய்கிறார்கள். என்னமோ தெரியவில்லை உங்களுக்குத்தான் இருண்டதெல்லாம் பேயாகத் தெரிகிறது :))

குடுகுடுப்பை சொன்னது…

பொங்கலை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம், ஆனால் அதனை மதம் கடந்த பண்டிகையாக்க அதன் அடிப்படை நோக்கமான சூரியனுக்கு நன்றி செலுத்துதல் வணங்குதலை நீக்க முயற்சிப்பது, கிறிஸ்துமஸூக்கும் ஏசு பிறந்த நாளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போன்றது.

அன்புடன் நான் சொன்னது…

தமிழர் பண்டிகையாகவோ... உழவர் பண்டிகையாகவோ அனைவரும் கொண்டாட உகந்தது பொங்கல் பண்டிகை மட்டுமே...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கு என் இனிய உழவர்தின வழ்த்துக்கள்.

சிவக்குமார் சொன்னது…

அனைவரும் இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சிதான். எனக்கும் சில வருடங்கள் ரம்ஜான் பிரியாணி கிடைத்திருக்கிறது. எனது இசுலாமிய நண்பியின் உறவினர் ஒருவரின் தோல் பட்டறையில் ஆயுத பூஜை கொண்டாடுவார்கள் என்றும் கேள்விப்பட்டேன் ஆனால் ஆயுத பூஜை தமிழர் பண்டிகை இல்லையே :(. மற்ற மதத்தவர் தமிழ் பெயர் வைக்காததற்கு ஒரு நியாயமான காரணமிருக்கிறது அவை வேற்று நாட்டில் மொழியில் தோன்றியவை என்று. ஆனால் இங்கு பாருங்கள் எந்த அடிப்படையில் பெயர் வைக்கிறார்கள் என்று. உதாரணத்திற்கு அம்மாஜி மீண்டும் சித்திரை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தாரே. குறைந்தபட்சம் அது தமிழ்புத்தாண்டல்ல என்பதே தெரியாமலல்லவா இருக்கிறோம். மாற்று மதத்தவர்களைக் கொண்டாடச் சொல்வதற்கு உரிமையில்லை என்றே நினைக்கிறேன். மற்ற மதத்தவருடன் இணைந்து கொண்டாடுவது இருக்கட்டும் உழவர் திருநாள் தமிழர் திருநாள் என்று பீற்றிக் கொண்டு உழைத்துப் போட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கூட சேர்த்துக் கொள்வதில்லை தமிழர்கள்

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

//இது மதப் பண்டிகை அல்ல, மொழிப் பண்டிகை என்பதை..//??

அப்துல்லாவின் பரப்புரை வெகு விநோதமாக இருக்கிறது. பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் இந்த தேசத்தின் பலபகுதிகளிலும் மதநம்பிக்கை சார்ந்த மரபுகளே அடிப்படையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதில் மொழியும் ஒரு மூலக்கூறு அவ்வளவுதான்!ஒரு பரந்த பாரத தேசமெங்கும் வேளாண்மை சார்ந்த திருநாளாகக் கொண்டாடியவர்கள், தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தான் கொண்டாடினார்களே தவிர, அதையும் ஒரு அரசியலாக்கும் தன்மையில் எப்போதுமே இருந்ததில்லை.

அரசியலாக்க முயன்றதுமே, பெரும்பான்மை தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை!

Unknown சொன்னது…

நீங்க இட்ட பதிவுக்கும் கமெண்ட்டும் சம்மதமில்லாமல் இருக்கு வவ்வால் அவர்களை தவிர பொங்கல் பன்டிகை என்பது நமக்கு உணவுக்காக விவசாயம் செய்யும் விவசாயிகளின் நாள்!இந்த நாளை விவசாயிகளின் நாளாக நான் நினைக்கிறேன்....பயிர் செழிக்க..சூரியனின் அருள் வேண்டும்...மழையின் அருள் வேண்டும்...பூமியின் அருள் வேண்டும்...அதன் உபகரணங்களுக்கு நன்றி கூறவேண்டும் இந்த அவ்வளவே இதில் மனிதனால் படைக்கப்பட்ட எந்த கடவுளின் அருளும் கிடையாது அனைத்தும் கற்பனையே!இயற்கையே நம் கடவுள் அதை நேசிப்பவர் அனைவருக்கும் இன்நாள் பொன்நாள் என்ன கண்ணன் சார் நான் கூறுவது சரியா?

தருமி சொன்னது…

ஓ! இது ஒரு 'பொங்கல் சீரியலா'? எத்தனையோ வருஷமா இதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோமோ ...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

குடுகுடுப்பை - நன்றி செலுத்துவதற்கும்,வணங்குவதற்கும் அடிப்படையில் ஆயிரம் வேறுபாடு உண்டு. பின்னர் அது வணங்குவதாக உறுமாறியாது யாரால் எப்போது என்பது நீங்கள் அறியாதது அல்ல.

suvanappiriyan சொன்னது…

திரு தருமி!

//ஓ! இது ஒரு 'பொங்கல் சீரியலா'? எத்தனையோ வருஷமா இதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோமோ ...//

இத்தனை வருடங்கள் எழுதியும் ஏதும் மாற்றங்கள் வந்த பாடில்லை. ஏனெனில் இரு தரப்பும் தங்கள் கொள்கையில் பிடிவாதமாக இருக்கின்றனர்.

ஒன்று சூரிய நமஸகாரத்தை விட்டால் இனம் என்ற முறையில் மற்ற மதத்தவர் குறிப்பாக இஸ்லாமியர் கலந்து கொள்ள வாய்ப்புண்டு. அது நடக்காத பட்சத்தில் பதிவுகளாக எழுதித் தள்ளிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

குடுகுடுப்பை!

//பொங்கலை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம், ஆனால் அதனை மதம் கடந்த பண்டிகையாக்க அதன் அடிப்படை நோக்கமான சூரியனுக்கு நன்றி செலுத்துதல் வணங்குதலை நீக்க முயற்சிப்பது, கிறிஸ்துமஸூக்கும் ஏசு பிறந்த நாளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போன்றது.//

உண்மையை ஒததுக் கொண்டதற்கு நன்றி! சூரிய நமஸ்காரம் இல்லாமல் பொங்கல் இல்லை என்கிறீர்கள். அதுதான் முஸ்லிம்களுக்கு பிரச்னையே!

அடுத்து சூரியனுக்கு நீங்கள் வைக்கும் பொங்கலை என்றாவது ஏற்றுக் கொண்டுள்ளதா? இப்படி தனக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையாவது வைத்ததா? தெரிந்து கொள்வதற்காகவே இதனை கேட்டேன்.

மற்றபடி இந்த பொங்கல் நன்னாளில் சாதி மத வேறுபாடுகளை களைந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வு மேலோங்கி மனிதம் தழைக்க எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்தக்கள்.

தருமி சொன்னது…

//இத்தனை வருடங்கள் எழுதியும் ஏதும் மாற்றங்கள் வந்த பாடில்லை. //

விடாக் கொண்டர்களும், கொடாக் கொண்டர்களும் ...!

ஜோதிஜி சொன்னது…

தமிழ்நாட்டில பிறந்து தமிழ் பேசி , தமிழ் மண்ணில் ,உழவனால் விளைவிக்கப்பட்ட உணவைத்தானே எல்லாம் சாப்பிடுறாங்க, அரேபியா இல்லை வாட்டிகனில் இருந்தா உணவு வருது. எனவே இந்நாளை உழவு திருநாளாகவும், தமிழ் புத்தாண்டு என்றாவது கொண்டாடலாமே.அதுவும் அவரவர் மத கடவுளுக்கு பொங்கல் வைச்சுட்டு போங்க,அந்த கடவுள் எல்லாம் பொங்கல் செரிக்காதுனு சொல்லவா போறாங்க :-))


நன்றி வவ்வால்.

அதிரைக்காரன் சொன்னது…

நன்றி செலுத்துகிறோம்னு சொல்லி எங்களை இந்த பொங்கலன்றுகூட ஓடஓட விரட்டுறீங்களே? இதுதான் நீங்க செய்யும் நன்றியா? - காளை

காளையை அடக்கித்தான் மரத்தமிழன் வீரத்தைக் காட்டனுமா? சேஞ்சுக்கு ஒரு சிங்கத்தையோ யானையையோ அடக்கி வீரத்தைக் காட்டலாமே?- பசு

பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்றால் பொங்கலிட ஏன்சார் நேரம் காலம் பார்க்கனும்? சூரிய பகவான் பொங்கல் மட்டும்தான் சாப்பிடுவாரா? நல்லநாளன்று ஆம்பூர் கறி பிரியாணி வேண்டாம் முனியாண்டி விலாஸ் கோழி பிரியாணியாவது போடலாமே?

மனுசனுக்குத்தான் பட்டை நாமம் போட்டோம்,பானைக்கும் ஏன் சார் பட்டை? பொங்கல் பானை என்ன ஐயங்காரா? அட! ஒரு சேஞ்சுக்கு குல்லா போடலாம்ல? :)

எல்லாம் சரி,பொங்கலன்று கோமாதா பிரியாணி போட்டால் தமிழ் பேசும் எத்தனைபேர் சமபந்தி சாப்பிட வருவார்கள்? டோண்டு சாரையும்கூட சேர்த்துக்கலாமே!

சும்மா போங்க சார்! அரிப்பெடுக்கும் போதெல்லாம் கலாச்சாரம் கத்தரிக்கா என்று சொல்லி கதைவிட்டுக்கொண்டு இருக்காமல்,உழைத்தவன் வியர்வை நிலத்தில் விழும் முன்னாடி ஊதியம் கொடுத்து நன்றி செலுத்துவோம்.

முட்டை பரோட்டா வாழ்த்துக்கள்! :)

குடுகுடுப்பை சொன்னது…

புதுகை.அப்துல்லா
குடுகுடுப்பை - நன்றி செலுத்துவதற்கும்,வணங்குவதற்கும் அடிப்படையில் ஆயிரம் வேறுபாடு உண்டு. பின்னர் அது வணங்குவதாக உறுமாறியாது யாரால் எப்போது என்பது நீங்கள் அறியாதது அல்ல.//

வணக்கத்துக்கும் நன்றிக்கும் ஆதிமனிதனுக்கு புரிந்து செய்திருப்பான் என்பான் என்ற உங்கள் கருத்தை படிப்பவர்களுக்கே விட்டுவிடுகிறேன். உங்கள் கருத்துப்படி நீங்கள் நன்றி செலுத்துவதோ / வணங்குவதோ/ அல்லாவை வணங்குதோ உங்கள் உரிமை, ஆனால் சூரியனை வணங்கிக்கொண்டிருப்பவனை பண்டிகையை செக்யூலர் ஆக்குகிறேன் எனறு பண்டிடிகையின் தன்மையின் மாற்ற முயல்வது தவறு.

குடுகுடுப்பை சொன்னது…

சுவனப்பிரியன் அய்யா, கோவி சொல்வதும் நான் சொல்வதும் பொங்கலை உங்கள் விருப்பபடி கொண்டாடுங்கள்/கொண்டாடாமல் இருங்கள். ஆனால் பண்டிகையின் அடிப்படை உழவன் சூரியனை வணங்குவது அப்படி வணங்கிக்கொண்டிருப்பவனிடம் அதனை பிடுங்காதீர்கள் எனபதுதான். ஓணம் பண்டிகை பெயரே இந்துமதப்பெயர்,ஆனால அவரவர் விருப்பப்படி மலையாளிகள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.ஓணம் பண்டிகைக்கு ஒரு காரணம் இருக்கும் அந்தக்காரணத்தை அதனை நம்புவனிடம் இருந்து புடுங்க நினைத்தால் அது தவறு.

குடுகுடுப்பை சொன்னது…

நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறேன், இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதற்காக இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை அதிலிருந்து நீக்கினால்தான் கொண்டாடுவேன் என்று சொல்வதில்லை.

குடுகுடுப்பை சொன்னது…

பொங்கல் அனைவரும் கொண்டாடுவது பற்றிய பிரச்சனையல்ல, அனைவரும் கொண்டாடுவதற்காக பண்டிகையின் தன்மையை வேறாக மாற்ற நினைப்பது தவறு/தடுக்கப்படவேண்டும்.

அவரவர் விருப்பபடி அனைவரும் கொண்டாடுவதே சரியானதாகும்.

குடுகுடுப்பை சொன்னது…

அப்துல்லா

சூரிய வழிபாடு இந்து மதத்திற்கு சொந்தமானதல்ல உலகின் ஆதிகுடிகளுக்கு சொந்த மானது.இவர்களெல்லாம் நன்றி செலுத்தினார்கள் என்று சொல்லமுடியுமா?

செமிட்டிக் மதங்கள் பாகனிசத்தை ஒழித்தவை, அவை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் சூரியவழிபாடே இல்லை என்று வாதிடமுடியுமா?

கூகிலிட்டால் ஆயிரம் லிங்க் கிடைக்கும்.

http://www.reviewofreligions.org/2306/ancient-sun-worship/

குடுகுடுப்பை சொன்னது…

அடுத்து சூரியனுக்கு நீங்கள் வைக்கும் பொங்கலை என்றாவது ஏற்றுக் கொண்டுள்ளதா? இப்படி தனக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையாவது வைத்ததா? தெரிந்து கொள்வதற்காகவே இதனை கேட்டேன்.//

சூரியன் என்னை வணங்கு இல்லாவிட்டால் நரகம் என்று மிரட்டல் விடுவதில்லை, விவசாயத்திற்கு பயன்படுகிறது என்று நம்பி வணங்குகிறார்கள்.அது நம்பிக்கை சார்ந்தது, உங்கள் நம்பிக்கையை பார்த்து பலர் சிரிப்பர், அதேபோல நீங்களிம் இதனைக்கண்டு சிரித்துக்கொள்ளுங்கள் அல்லது மதம் மாற்றி சொர்க்கவாசியாக்குவேன் என்றால் அந்த முயற்சியையும் தொடருங்கள்.

சார்வாகன் சொன்னது…

வணகம் நண்பரே
பொங்கல் என்பது தமிழர் மட்டுமல்ல உழைக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான திருநாளே.இப்படித்தான் பொங்கல் கொண்டாடவேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை. அன்று ஏதேனும் நன்றாக சமைத்து [ஆத்திகர்கள் இஷ்ட‌ தெயவத்தை வணங்கி] , குடும்பம் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணலாம்.இது செய்ய பிடிக்காதவ்ர்கள் அன்று என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.நமக்கு பிடித்த திருநாள் இதுதான்.இதனையும் விளக்கம் சொல்லி விவாதித்து மகிழ்ச்சியை ஏன் குறைக்க வேண்டும்?.உங்களுக்கும் , அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

சிராஜ் சொன்னது…

சிராஜ் காட் வெரி அங்க்ரி.. சோ, ஒரு மைனஸ் வோட்டு... மன்னிக்கவும்...

சிராஜ் சொன்னது…

இஸ்லாமியர்கள் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது. பொங்கல் அன்று இயற்கையை வணங்குவோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்புறம் பொங்கல் கொண்டாட வர வில்லை என்று கோபப்படுகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை உணவு இயற்கை கொடுத்தது, அதனால் அதை வணங்குகிறீர்கள். எந்த தவறும் இல்லை. தாராளமாக வணங்குங்கள். எங்களை பொறுத்தவரை உணவு மற்றும் அனைத்தும் இறைவன் கொடுத்தது, ஆகவே அவனுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உணவு கிடைத்ததற்காக தனியாக ஒரு நாளில் நன்றி சொல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை, ஆகவே நாங்கள் பொங்கல் கொண்டாடவில்லை. அறியாமல் இருப்பவர்களுக்காகத் தான் இந்த விளக்கம். மற்றபடி விதாண்டவாதம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில், நீங்கள் கொண்டாடுவதால் நாங்கள் கொண்டாட முடியாது. யாருக்கு நன்றி செலுத்துவது என்பது எங்களைப் பொறுத்தது, அதை நீங்கள் திணிக்க முடியாது.

கோவி கண்ணன், நீங்கள் உண்மையிலே நாத்திகராகவும், நீதியாலராகவும் இருந்தால் என்னுடைய கருத்தில் எந்த தவறும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.... பார்ப்போம்...

சிராஜ் சொன்னது…

/* தமிழ்நாட்டில பிறந்து தமிழ் பேசி , தமிழ் மண்ணில் ,உழவனால் விளைவிக்கப்பட்ட உணவைத்தானே எல்லாம் சாப்பிடுறாங்க, அரேபியா இல்லை வாட்டிகனில் இருந்தா உணவு வருது. எனவே இந்நாளை உழவு திருநாளாகவும், தமிழ் புத்தாண்டு என்றாவது கொண்டாடலாமே.அதுவும் அவரவர் மத கடவுளுக்கு பொங்கல் வைச்சுட்டு போங்க,அந்த கடவுள் எல்லாம் பொங்கல் செரிக்காதுனு சொல்லவா போறாங்க :-)) */

ஜோதிஜி,
விவசாயத்துக்கு தேவையான தண்ணி கர்நாடகா ல இருந்துதான் வருது... கன்னட புத்தாண்டு கொண்டாடலாமா?????
லாஜிக்கா பேசுறாராம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியார் ஒரு விசயத்தை நீங்க நல்லாப் புருஞ்சிகிடனும். இங்கிருக்கும் இஸ்லாமியர் அனைவரும் இந்துக்களாக இருந்து மாறியவர்களே. போன வருசம் வரைக்கும் பொங்கல் வச்சு சூரியனைக் கும்பிட்ட பயலுக்கு இந்த வருசம் மதம்மாறும் போது பொங்கல் என்பது மொழி,இனம் சார்ந்த பண்டிகையாத் தெரியாது, ஒரு இந்து பண்டிகையாகத்தான் தெரியும்.இதுதான் எதார்த்தம். இது மதப் பண்டிகை அல்ல, மொழிப் பண்டிகை என்பதை மதம் மாறியவர்களுக்கு உணர்த்தத் தவறியது உங்களைப்போன்ற சோகால்டு பெரியாரிஸ்டுகளின் தவறு. நான் அறிந்தவரை எங்கள் மாவட்டத்தில் பெரும்பாலான தமிழ் தாய்மொழி இஸ்லாமியர்கள் பொங்கல் திருநாளில் சக பிற மத தமிழர்களோடு இனைந்து கொண்டாடத்தான் செய்கிறார்கள். என்னமோ தெரியவில்லை உங்களுக்குத்தான் இருண்டதெல்லாம் பேயாகத் தெரிகிறது :))//

தமிழ் புத்தாண்டின் மத அடையாளம் எது அதை அவரவர் மதம் சார்ந்து கொண்டாடத் தடை என்று சொல்பவன் எவன் ? இணைந்து கொண்டாடுகிறார்கள், சேர்ந்து கொண்டாடுகிறார்களெல்லாம் அவரவர் ஏற்படுத்திய மத இணக்கத்தின் நிலை மட்டுமே, எத்தனை பேர் தனித்துக் கொண்டாடுகிறார்கள் என்று தெரிவிக்கவும்.

இப்பவும் பலமுறையும் சொல்லி இருகிறேன் 'அப்துல்லா என்பவர் நல்ல குணம், பிறருக்கு உதவும் மணப்பான்மை, அண்ணே என்று விழிப்பதெல்லாம் அப்துல்லா என்ற தனிமனிதர் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டதன் பலன், அதற்கு மதம் உரிமை கொண்டாட முடியாது, உங்கள் நல்ல குணங்களை உங்கள் மதத்தின் அடைப்படைக்கு தாரை வார்த்தால், அதே மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளுக்கும் நீங்கள் பொறுபேர்பீர்களா ?

வன்முறைக்கு மதம் தொடர்பு இல்லை என்றால் தனிமனிதரின் நற்செயலுக்கும் மதம் தொடர்பு இல்லை. இதை உணர்ந்தவன் பெயரளவில் மதத்தை (பெயர்களில்) தாங்கி இருந்தாலும் மதங்களை கடந்தவர் ஆகிறார்.

நான் இங்கு ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுவதில்லை என்று கேட்கவில்லை, நான் கேட்பது தமிழருக்கு பொதுவான தமிழர் திருநாள், புத்தாண்டு ஆகியவற்றை பொதுவாகக் கொண்டாடத் தடை என்ன என்பது பற்றி தான். சீனர்களுக்கு முடிந்தது, மலையாளிக்களுக்கு முடிந்தது சோ கால்ட் கல்தோன்றி முன் தோன்றாக்காலத்து தமிழ்குடிக்கு ஏன் முடியவில்லை என்ற ஆதங்கமே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சிராஜ் said...
சிராஜ் காட் வெரி அங்க்ரி.. சோ, ஒரு மைனஸ் வோட்டு... மன்னிக்கவும்...//

ஐயா என்னோட பேங்க் பேலன்ஸ் போச்சு

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழகத்தில் சாதி பாகுபாடு சாதி வெறி மறையும் பொழுது அன்று முஸ்லிம்களும் தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்வார்கள்.//

தமிகத்தையோ, இந்தியாவையோ விடுங்க சுவனப்பிரியன், முதலில் இஸ்லாமியருக்குள் இனவேற்றுமை மறையுமா ? அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா ? இவற்றிற்கு எந்த முகாந்திரமும் இல்லாத போது தமிழ் தாங்கிய பண்டிகைகளை கழட்டிவிட்டது போல் சேர்த்துக் கொள்வதில் என்ன தயக்கம் ? அஹமதியா பிணங்களை என்று எழுதப்பட்ட வினவு பதிவு தங்களுக்கு நினைவு இருக்கும் என்றே நினைக்கிறேன், நீங்கள் இஸ்லாத்திற்குள் சாதிபாகுபாடு இல்லை என்று எத்தனை முறைக் கூவினாலும் உண்மை நிலை அவ்வாறு இல்லை என்பதை நன்றாகவே அறிந்துள்ளோம். நீங்கள் வேதப் புத்தகத்தைக் காட்டி சாதி இல்லை என்பது போல் தான் 'பிராமணன்' என்பது சாதிசார்ந்த பட்டம் இல்லை, அது குணம் சார்ந்தது என்று பார்பனர்கள் கூறுகிறார்கள், உண்மை நிலை அது போல் கிடையாது என்பதால் வேதப்புத்தக சான்றுகள் உண்மைக்கு வெகுதூரம் உள்ளவையே.

பொங்கல் பானைக்கு பொட்டு வைக்கிறாங்க, சூரியனைக் கும்பிடுறாங்க, நீங்க வைக்காதிங்க, நீங்க பொட்டு வச்சாதான் பொங்கல் என்று யார் சொல்லுவார்கள் ? கத்தோலிக்க கிறித்துவர் கொண்டாடும் பொங்கலில் பொட்டோ சூரிய வழிபாடோ கிடையாது

கோவி.கண்ணன் சொன்னது…

//கேரளத்தில் உள்ள ஓணம் போன்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படுத்தி, அன்று அவரவர் மதங்களின் வழிபாட்டில் ஈடுபடுவது முதற்கொண்டு அவரவர்களின் பாணியில் கொண்டாடி மகிழலாமே என்பது!//

ஷர்புதின்,

கேரள ஓனம் மலையாள நாள்காட்டிப்படி திருவோண நட்சத்திர நாளில் வருவது, அது முழுக்க முழுக்க இந்து சோதிட நம்பிக்கையின் தொடர்பில் வரும் ஒரு பண்டிக்கை, ஆனால் பொங்கல் இட என்று நாள் நேரம் பார்பார்களேயன்றி பொங்கல் தேதியான தை 1 என்றுமே மாறியதே இல்லை, நல்ல நாள் கெட்ட நாளெல்லாம் அதில் பார்கப்படுவதும் இல்லை, தவிர அதை தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடும் போது மத அடையாளம் என்று கூறிப் புறக்கணிப்பது எந்த விதத்தில் சரி ?

பொங்கலையோ, புத்தாண்டையோ அவரவர் மதவழக்கப்படி கொண்டாடத் தடை என்று ஸ்டே வாங்கி வைத்திருப்பவர் யவர் ?

இவ்வாறு மொழி சார்ந்த உரிமைகளை விட்டுக் கொடுக்கும் போது, விட்டுவிடும் போது மிக எளிதாகவே 'குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் அல்ல' என்று சொல்லிவிட ஒரு வழியையும் விட்டுச் செல்கிறார்கள் என்பது தான் உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//அடுத்து சூரியனுக்கு நீங்கள் வைக்கும் பொங்கலை என்றாவது ஏற்றுக் கொண்டுள்ளதா? இப்படி தனக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையாவது வைத்ததா? தெரிந்து கொள்வதற்காகவே இதனை கேட்டேன்.//

இது விதண்டாவாதம் சுவனப்பிரியன்,

ஆட்டைக் கேட்டுவிட்டா அதை நீங்கள் வெட்டுகிறீர்கள் ? மேலும் தான் துவா செய்து வெட்டப்படுவதால் தமக்குத்தான் நன்மை என்று அது அறிந்துள்ளதா ?

ஒரு ஆடு தான் பிறக்கும் போது தன்னை ஹலல் ஆடு என்றோ, ஹலல் அல்லாத ஆடு என்றோ அறியுமா ? ஹலாக வெட்டப்பட்டு ஆடு நம்பிக்கை இல்லாதவர்கள் அதை உண்ணும் போது வருந்துமா ?

நொட்டை நொள்ளைச் சொல்ல ஆயிரம் உதாரணங்கள் உங்களுக்கு கிடைப்பது போல் எனக்கும் கிடைக்கலாம் ஆனால் சொல்லுவதற்கு முன் இதற்கான எதிர்வினை என்னவாக இருக்கும் என்று யோசிப்பதே நலம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி,
விவசாயத்துக்கு தேவையான தண்ணி கர்நாடகா ல இருந்துதான் வருது... கன்னட புத்தாண்டு கொண்டாடலாமா?????
லாஜிக்கா பேசுறாராம்...//

ஐயே......தமிழ் நாட்டு ஆடு மாடு தான் வெட்டப்படுகிறது என்பதால் இவரு மாட்டுப் பொங்கலுக்கு மட்டும் ஓகே சொல்லுவார் போல

சார்வாகன் சொன்னது…

@நண்பர் சிராஜ்
//ஆகவே நாங்கள் பொங்கல் கொண்டாடவில்லை.//
கலாச்சாரம்,மதம் இரண்டையும் குழப்புவதே தேவையற்றது.இபோது ஒரு இஸ்லாமியர் அல்லாதவருக்கும் ரம்ஜான் அல்லது பக்ரீத் அன்று விடுமுறை கிடைக்கும்.அவரது நண்பர்கள் அவர்களது இல்லத்திற்கு கொண்டாட(என்ன ஊர்க்கதை பேசி,சாப்பிடுவதுதான்) அழைத்தால் பெரும்பாலும் சென்று வருவார்கள்.ஒரு வேளை மாமிசம் சாப்பிடாத நண்பர்களுக்கும் தனியாக விருந்து சமைத்து அளிக்கும் முஸ்லிம்களையும்(தமிழ்நாட்டில் 99% இப்படித்தான்) அறிவேன்.

இஃப்தார் விருந்து அளிக்காத கட்சிகள் தலைவர்களே இல்லை என கூறலாம்.

1.இப்படி இருக்க பொங்கல் தினமன்று அனைவரும் குளித்து புத்தாடை உடுத்தி மகிழ்வாக இருக்கும் போது, முஸ்லிம்கள் வீட்டிலும் மகிழ்ச்சியாக புத்தாடை உடுத்தி உங்கள் இறைவனுக்கே வழக்கமாக் தொழும் வேளையில் எங்கள் நாட்டுக்கும்,மக்களுக்கும் நலம்,வளம் தா என்று கேட்பது தவறா?

2.அல்லது நண்பர்களின் இல்லத்துக்கு சென்று உணவு உண்பதும் தவறா ?
3.அவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் தவறா?

4..தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி பார்ப்பதும் தவறா?அன்று திரப்படத்திற்காவது செல்ல‌லாமா?

எனக்கு எப்படி ஒரு பண்டிகையை கொண்டாடாமல் இருப்பது என அறிய ஆசை.

சிராஜ் ஒரு தனி மனிதன்.கருத்தாக எதை வேஎண்டுமானாலும் சொல்லலாம்.ஆனால் என்ன செய்கிறார் என்பதே முக்கியம்.
இப்போது பொங்கல் அன்று நண்பர் சிராஜ் என்ன செய்தீர்கள் ? என்பதை கூறினால் அனைவருக்கும் அறிய நன்றாக இருக்கும்.முதலில் அதை சொல்லுங்கள்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

@கிருஷ்ணமூர்த்தி - ஊடுருவலுக்குப்பின் ஆயிரம் வருட திணிப்பின் நீட்சியை நீங்களும் தொடர்வது உங்கள் வசதி (அ) அஜெண்ட்டா (அ) வேறு எதோ. அதேபோல் அதை மறுப்பது என் வசதி வசதி (அ) அஜெண்ட்டா (அ) வேறு எதோ.

அதிரைக்காரன் சொன்னது…

கோவி.கண்ணன்,எல்லோருக்கும் பதில் சொன்னீங்க, நம்ம காளையும், பசுவும் கேட்டதைக் கண்டுக்காமல் விட்டது ஏன்?

பொங்கலை என்னத்தான் நீங்க ஒலக டமிழர் பெஸ்டிவல்னு சொன்னாலும், அதிலிருக்கும் குறிப்பிட்ட மதம்சார்ந்த அடையாளங்கள்,குறியீடுகள் உள்ளவரை பிறமத தமிழர்கள் அதைக் கொண்டாடுவதற்கான வாய்ப்புகள் குறைவே. முதலில் அத்தகைய மத அடையாளங்களை (சூரிய வழிபாடு,படைத்தல் etc.,) நீக்குவதற்கான முயற்சிகளை எடுத்து விட்டு அழைப்பு விடுக்கலாம்.

உழவனுக்கு நன்றி செலுத்துவதற்கே பொங்கல் என்றால்,விவசாயத்திற்கு வாங்கிய கடனை வேண்டாம், வட்டியையாவது தள்ளுபடி செய்து நன்றி செலுத்தலாமே?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி.கண்ணன்,எல்லோருக்கும் பதில் சொன்னீங்க, நம்ம காளையும், பசுவும் கேட்டதைக் கண்டுக்காமல் விட்டது ஏன்?//

மூக்கில் குந்தியிருக்கும் சைத்தான் வந்து கேட்டால் சொல்லாம் என்று உள்ளேன். என்னது சைத்தான் பேசாதா? 

அதிரைக்காரன் சொன்னது…

கோவி.கண்ணன்,

நீங்கள் கேள்வி கேட்டால் பகுத்தறிவு! அதே கேள்வியை நாங்கள் கேட்டால் எதையாவது சொல்லித் திசை திருப்பல்!

உழவருக்கு நன்றி செலுத்தும் பொங்கல் பண்டிகை தமிழர்களுக்குப் பொதுவானது என்ற உங்கள் வாதத்திற்கு,அதிலுள்ள குறியீடுகள் குறிப்பிட்ட மதம் சார்ந்தவையாக உள்ளன என்றேன். இதற்கு உங்கள் பகுத்தறிவு என்ன வியாக்கியானம் சொல்கிறதென்று அறிந்து கொள்ளவே கேட்டேன்.ஆனால் பகுத்தறிவு மூக்கு வழியாக வழிந்து ஓடிவிட்டதால் அதற்கான விடை உங்களிடமில்லை அல்லது அதைச் சொல்வதற்கல்ல உங்கள் பதிவுகள் என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள். நன்றி நண்பரே!

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிரைக்காரன் said...
கோவி.கண்ணன்,

நீங்கள் கேள்வி கேட்டால் பகுத்தறிவு! அதே கேள்வியை நாங்கள் கேட்டால் எதையாவது சொல்லித் திசை திருப்பல்! //

நக்கல் அடித்தால் நக்கல் தான் பதிலாக வரும், நான் 'டமிலர்' என்றால் நீங்கள் என்ன அரபிக்காரனா ? அரபிக்காரன் கட்டி வைத்திர்க்கும் மசூதியில் உங்களை அவன் அனுமதிப்பதே பெரியவிசயம், மற்றபடி உங்கள் அடையாளம் அவனுக்கு இந்தியன் தான் மற்ற இந்தியர்களை கேவலமாகப் பார்பது போல் தான் உங்களையும் பார்ப்பான்.

மாடு கேட்டுச்சு ஆடு கேட்டுச்சா ? என்னும் போது ஆடு தன்னை ஹலால் ஆக்கச் சொன்னிச்சான்னு நான் கேட்டால் அது குதர்கமாகிவிடுமா ?

எதைக்கொடுக்கிறோமோ அதைத்தான் பெற முடியும். நீங்கள் தன்மையுடன் கேட்டு இருந்தால் நானும் அதே தன்மையில் சொல்லி இருப்பேன். இங்கே சைத்தான் வந்ததும் அதனால் தான்

அதிரைக்காரன் சொன்னது…

கோவி.கண்ணன்,

உங்களையோ சகதமிழ் நண்பர்களையோ கேலி (நக்கல்=அரபுச்சொல்:) செய்யவேண்டும் என்பதல்ல என் நோக்கம்.

புதுப்பானைக்கு திருநீர் பூசி, பட்டை நாமமிட்டு,குங்குமப்பொட்டும் மாலையுமிட்டு மஞ்சள், கரும்பு, தானியங்களைப் பரப்பி வைத்து கதிரவன் உச்சியிலிருக்கும்போது வழிபட வேண்டுமென்பதற்கு எது அடிப்படை? தமிழனாக இருக்க இவையே அடையாளம் என்றும், இல்லாவிட்டால் தமிழனல்லன் என்றும் எவரெனும் கட்டளையிட்டுள்ளார்களா?

ஆனால்,ஓர் முஸ்லிம் எவ்வாறு கடவுளுக்கும் சகமனிதனுக்கும் நன்றி செலுத்த வேண்டும், பிறஉயிரினங்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக வரையறுத்துள்ளது. இதற்கான அடிப்படைகள் புனித குர்ஆனும்,முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளும் ஆகும்.இதை உளமாற நம்பிக்கை கொண்டு அவற்றை வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என்பது முஸ்லிம்களின் கடமை.

தமிழனாகப் பிறந்ததற்காக அவன் ஏற்றுக்கொண்ட நம்பிக்கையிலிருந்து விலகி,இந்துமத அடையாளங்களுடன் நடத்தப்படும் ஓர் பண்டிகையை தமிழ் முஸ்லிம்களும் கொண்டாடவேண்டும் என்பது அறியாமை.இதை உணராது வன்மாக,ஏளனமாக முஸ்லிம்களின் நம்பிக்கையை கேலி செய்வது தமிழன் பண்பல்ல.உங்கள் சமீப பதிவுகளில் இந்த பண்பு தவறியிருந்ததால் டமிழன் என்று விளித்தற்கு நீங்கள்தான் காரணம்.

பொங்கல் கொண்டாட்டத்திலுள்ள மதம் சார்ந்த திணிப்புகளை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதவரை பொங்கல் அனைத்து தமிழருக்குமான பண்டிகையல்ல என்பது என் தாழ்மையான கருத்து. விரும்பினால் நானிட்ட பின்னூட்டத்திலுள்ள கேலியைத் தவிர்த்து நியாயமான கேள்விகளுக்கு தன்மையாக பதில் தரவும்.

அரேபியா, தீவிரவாதம் மற்றும் பல உங்களின் இஸ்லாம்/முஸ்லிம்கள் மீதான எள்ளல்களுக்கு தனிப்பதிவில் உரையாடுவோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொங்கல் கொண்டாட்டத்திலுள்ள மதம் சார்ந்த திணிப்புகளை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதவரை பொங்கல் அனைத்து தமிழருக்குமான பண்டிகையல்ல என்பது என் தாழ்மையான கருத்து. விரும்பினால் நானிட்ட பின்னூட்டத்திலுள்ள கேலியைத் தவிர்த்து நியாயமான கேள்விகளுக்கு தன்மையாக பதில் தரவும்.//

ஏற்கனவே பலமுறை சொல்லியாகிவிட்டது, கத்தோலிக்க கிறித்துவர்கள் பட்டை போட்டு சூரியனுக்கு படைப்பது போல் தெரியவில்லை. உங்கள் வழியில் நீங்கள் செய்யத் தடை சொல்ல யாரும் இல்லை என்னும் போது ஒரு மொழி / இனம் சார்ந்த பண்டிகையை புறக்கணிப்பது ஒட்டு மொத்த தமிழின பழக்க வழக்கங்களை வெறுப்பதாகும்.

சீனன் மதம் சாராது சீனப் புத்தாண்டு கொண்டாடுகிறான், ஒரு மலையாளி மதம் பார்க்காது ஓனம் கொண்டாடுகிறான். உங்களுக்கான பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு உரிமையை நீங்கள் புறக்கணித்துவிட்டு ஏற்கனவே கொண்டாடுபவர்கள் மாற்றிக் கொள்ளட்டும் என்கிறீர்கள், அவர்கள் மாற்றிக் கொண்டு தான் உள்ளார்கள். பொங்கல் கொண்டாடுபவர்கள் அனைவரும் உழவர்களும் இல்லை, அவரவர் வழக்கத்தில் கொண்டாடுகிறார்கள், ஒரு வீட்டுப் பொங்கலில் சைவ கறி மற்றவர் வீட்டு பொங்கலில் கருவாட்டுக் குழம்பு, உங்க பொங்கல் பொங்கல் இல்லை என்று ஒரு பயலும் சொன்னது கிடையாது.

வெளியில் இருந்து ஒருவர் கேட்கும் போது தமிழ் பண்பாட்டின் பொது அடையாளம் மொழி மட்டுமின்றி ஒரு பண்டிகையும் கூட உள்ளது என்று சொல்ல முடியும்.

அதிரைக்காரன் சொன்னது…

//வெளியில் இருந்து ஒருவர் கேட்கும் போது தமிழ் பண்பாட்டின் பொது அடையாளம் மொழி மட்டுமின்றி ஒரு பண்டிகையும் கூட உள்ளது என்று சொல்ல முடியும்.//

பண்டிகை என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் அளவுகோள் என்ன? புத்தாடை,புதுப்படம்,சின்னத்திரை நிகழ்ச்சிகள்,ஆட்டம்,பாட்டம் etc.ஆனால் இஸ்லாம் இவையல்ல என்று சொல்கிறது. உழவுக்கும் தொழிலுக்கும் எவ்வகையில் வந்தனம் செய்வது என்ற இஸ்லாமிய பண்பாடு, தற்போதைய பண்பாட்டைவிட நியாயமாகப் படுவதால்,முஸ்லிம்கள் அதைக் கொண்டாடவில்லை.

வருடமெல்லாம் உழவுக்கு உதவிய காளையை ஓடவிட்டு,கொடுமை படுத்தி அடக்குவதை வீரம் என்று சொல்கிறீர்கள்.(நான் முஸ்லிமாக இல்லாதிருப்பினும்) இது வீரமாகத் தெரியவில்லை. (இதைத்தான் ஒரு யானையையோ அல்லது சிங்கத்தையோ அடக்கி வீரத்தைக் காட்டலாமே என்றேன்.) அதனால்தான் உச்சநீதிமன்றமும் வரம்பு விதிக்கிறது.அதேபோல்,உழவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் ஒருநாளுக்கு மட்டும் கூத்தடிப்பது என் பகுத்தறிவில் அது ஏமாற்றுச் செயலாகவே படுகிறது.

பொதுவாகவே முஸ்லிம்களின் பண்டிகை தவிர்த்து, எல்லாமத பண்டிகைகளுமே ஏறத்தாழ வணிகமயமாக்கப்பட்டுள்ளன.(இங்கு முஸ்லிம்களின் பண்டிகையை தவிர்த்திருப்பது உங்களுக்கு நெருடலாக இருந்தாலும்,அது கசப்பான உண்மையே;இதுகுறித்து தேவையெனில் பிறகு பேசலாம்.)கேளிக்கைகளும் கொண்டாட்டங்களுமே பண்டிகை என்ற முதலாளியத்துவ மாயையில் கிட்டத்தட்ட எல்லா நம்பிக்கையாளர்களும் மயங்கியுள்ளனர். முஸ்லிம்கள் இவற்றிலிருந்து விலகியிருப்பதால்தான், அவர்கள் பழமைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் வசதிப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

உழைத்தவனது வியர்வை சொட்டு நிலத்தில் விழும் முன்பாக உழைப்புக்கேற்ற கூலியை வழங்கினால், அவனுக்கு எல்லா நாளுமே பண்டிகையே. முதலில் அதற்கான ஏற்பாட்டுகளைச் செய்துவிட்டால் அதுவே உண்மையான நன்றியாகும்.

//ஒரு மொழி / இனம் சார்ந்த பண்டிகையை புறக்கணிப்பது ஒட்டு மொத்த தமிழின பழக்க வழக்கங்களை வெறுப்பதாகும்//

இதைத்தான் நாங்களும் கேட்கிறோம். மொழி/இனம் சார்ந்த பண்டிகையில் ஏன் குறிப்பிட்ட மதம் சார்ந்த உள்ளீடுகள் ஊடுறுவின என்று. உண்மையில் மொழி/இனம் சார்ந்த அக்கரை இருப்பின் முதலில் அவற்றை அல்லவா களைய வேண்டும்? இதுகுறித்து உங்களிடமிருந்து ஒரு கருத்தும் வராதது உங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியுள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருடமெல்லாம் உழவுக்கு உதவிய காளையை ஓடவிட்டு,கொடுமை படுத்தி அடக்குவதை வீரம் என்று சொல்கிறீர்கள்.//

ரத்தம் சொட்ட சொட்ட கழுத்து அறுத்து போட்டு கடவுளுக்கான அற்பணிப்பு என்ற அளவில் பார்க்கும் போது காளையை அடக்குவது கோழைத்தனமாகத் தெரியலாம்.

//அதேபோல்,உழவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் ஒருநாளுக்கு மட்டும் கூத்தடிப்பது என் பகுத்தறிவில் அது ஏமாற்றுச் செயலாகவே படுகிறது. //

இருக்கலாம், அதே போல் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் உங்கள் மீது கடவுள் வெறும் ஐந்து தடவை தான் பார்வை செலுத்துகிறாரா ? நீங்க ஏன் 24 மணி நேரமும் தொழுது நன்றி சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது ?

//பொதுவாகவே முஸ்லிம்களின் பண்டிகை தவிர்த்து, எல்லாமத பண்டிகைகளுமே ஏறத்தாழ வணிகமயமாக்கப்பட்டுள்ளன.//

ஆமாம் சார், உங்களுக்கு இன்னும் கூடுதலாகத் தெரிய நண்பர் அப்துல்லாவிடம் கேளுங்க பொங்கல் கொண்டாதவங்க போடும் கரும்புக் கடைகளை, பட்டாசுக் கடைகளைப் பற்றிக் கூடச் சொல்லுவார். எவனோ கொண்டாடுவதில் லாபம் இருக்கிறது என்று அவர்கள் ஒருவேளை நினைக்கிறார்களோ என்னவோ அவர்களுக்காவது இந்தக் கொண்டாட்டங்கள் தேவை படாதா ?

//உழைத்தவனது வியர்வை சொட்டு நிலத்தில் விழும் முன்பாக உழைப்புக்கேற்ற கூலியை வழங்கினால், அவனுக்கு எல்லா நாளுமே பண்டிகையே. முதலில் அதற்கான ஏற்பாட்டுகளைச் செய்துவிட்டால் அதுவே உண்மையான நன்றியாகும்.
//
அச்சா அச்சா.... அவர்களுகாவது காத்திருந்து காத்திருந்து மறுமை நாள் வரை ஒத்திப் போடாமல் இன்றே கூலி கிடைப்பது நல்லது தான்.
ஆகாட்டம் இன்றே செய்துவிடுவோம்.

//இதைத்தான் நாங்களும் கேட்கிறோம். மொழி/இனம் சார்ந்த பண்டிகையில் ஏன் குறிப்பிட்ட மதம் சார்ந்த உள்ளீடுகள் ஊடுறுவின என்று//

அந்த முட்டாள்களுக்கு தெரியாது என்றே நினைக்கிறேன், நாளைக்கு இந்தியாவில் 'பிலாகியிசம்' என்று ஒன்று நுழைய வரும் அதற்கும் ஏற்றவாறு பண்டிகளை பொதுவாக்குவோம் என்று.

*********

சொற்களை இடம் மாற்றி திரும்ப திரும்ப ஒன்றேயே பேசுவது உங்களுக்கு அலுப்பில்லாமல் இருக்கலாம், எனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை.

http://www.youtube.com/watch?v=Rxep9oQwrGU

மிக்க நன்றி மிக்க நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்