பின்பற்றுபவர்கள்

9 செப்டம்பர், 2008

'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல !

மனிதர்கள் தங்கள் கேடுகட்ட செயலிற்கு ஞாயம் கற்பிக்கும் ஒரு சொல்லாகவே 'எல்லாம் அவன் செயல்' என்ற பதத்தைக் காண்கிறேன். ஒருவருக்கு கெடுதலை செய்துவிட்டு ஏற்படும் மன அழுததத்திலிருந்து விடுபடவே இந்த சொல்லை மனிதன் தேவைப்ப்படும் போதெல்லாம் பயன்படுத்தி வருகிறான். அண்மையில் நடிகர் சத்தியராஜின் அறைகூவலில் 'எனது சொட்டைத் தலையில் முடி வளரச் செய்வதற்கு உங்கள் ஆண்டவனுக்கு சக்தி இருக்கிறதா ? கூறுங்கள் நானும் கடவுள் நம்பிக்கைக் கொள்கிறேன்' என்றார். ஆன்மிக அன்பர்களுக்கு சத்தியராஜின் சீண்டல் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. இறை நம்பிக்கை இழிவாக ஆனதற்கு இறைமறுப்பாளர்கள் மட்டும் தான் காரணமா ?

உலகில் வேறெங்கிலும் இல்லாத அளவிற்கு போலி சாமியார்களின் பெருக்கத்தில் இந்தியாவில் இந்து மதமே முன்னிலை வகிக்கிறது. மற்ற மதங்களில் தனிமனிதர்கள் 'இறை அச்சம்' காரணமாக தங்களின் இழி செயலுக்கு இறைவனைக் காரணம் காட்டுவதில்லை என்று ஒப்பு நோக்கினால் நான் சொல்வது சரியென்றே உங்களுக்கு விளங்கும். இந்திய சமயத்தில் வருணபேதம் ஏற்பட்டதற்கு 'வருணங்கள் இறைவனால்' ஏற்பட்டது என்பதைக் கருத்தாக எழுதி தங்கள் இழிசெயலை இறைவனின் பெயரிலேயே செய்தனர். பண்டைய இந்தியாவில் தொழில் முறை சாதிப் பெயர்கள் இல்லவே என்று சொல்ல முடியாது, ஆனால் அவற்றினைக் கூறுபோட்டதெல்லாம் மனிதனின் இழிசெயலேயாம்.

அந்த கால சன்யாசிகளிடம் சென்று இறைவனை அறிந்திருக்கிறீர்களா ? என்று கேட்டால் 'தேடிக் கொண்டு இருக்கிறேன்...' என்ற பதிலே வந்திருக்கிறது, தன்னை முற்றும் உணர்ந்தவனாக சித்தர்கள் கூட சொன்னது இல்லை, மறைமுகப் பொருளில் ஒன்றிரண்டு சுட்டுப் பொருளாகவேதான் சொல்லி இருப்பார்கள், இன்றைய சாமியார்களைக் அதே கேள்வியைக் கேட்டுப் பாருங்கள் 'நானே இறைவன்' என்பான். இவன் இறைவன் என்றால் இவன் ஏன் உண்டியல் வைத்து வசூல் செய்ய வேண்டும் ? இவன் அனைத்தும் அறிந்தவன் என்றால் நாளைக்கு சுனாமி வரப்போகிறது, கடற்கரைப் பகுதிக்குச் செல்லாதீர்கள் என்று ஏன் சொல்லவில்லை ? மனிதனாக பிறப்பெடுத்தவனுக்கு அனைத்தையும் அறியும் சக்தி இருக்கிறது என்று பரப்பிவிடப் படுவதெல்லாம் மோசடியே, இறைவன் பெயரால் நடக்கும் இத்தகைய மோசடிக்கு, அதனைச் செய்பவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தன்னை மேன்மையாகவனாக ஆக்கிக் கொள்ளவே முடியாது. பிறவி என்பது பாவக் கணக்கு என்ற நம்பிக்கைப் படியே வைத்துக் கொண்டாலும் தனது பாவக் கணக்கைத் தீர்கவே ஒருவன் பிறவி எடுக்கிறான், பிறகு ஏன் இவன் தன்னையே இறைவன் என்று தன்னை பூஜை செய்யச் சொல்லி அதையெல்லாம் பார்த்து ரசிக்கிறான் என்ற கேள்வியே எழுகிறது. இத்தகைய அசுர அவதாரங்களை அழிக்க நாத்திகனே வல்லவன்.

தானம், உதவி, சேவை என செய்பவர்கள் இறைவனின் தொண்டாகவே செய்து வந்தார்கள், அதை 'தானே செய்தேன்' என்று நினைத்தால்...மனதிற்குள் அகந்தை குடியேறி அந்த நற்செயலில் இருந்து தவறிவிடுவான் என்பதற்காகவே 'எல்லாம் அவன் செயல், அவனின் செயலாக செய்யப்படுபவை' என்று சொல்லப்பட்டு வந்த வழக்கு, மனிதர்களின் இழிசெயலை மறைத்துக் கொள்ளவும் அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரே சொல்லாகவே மாறிவிட்டது.

சத்தியராஜ் இறை நம்பிக்கையைத் தூற்றுகிறார் என்றால் இறை நம்பிக்கைகளை நீர்த்துப் போகவைத்ததற்கு யார் காரணம் என்று உணர்ந்து கொண்டால் சத்தியராஜ் மீது கோபம் வராது. நம்பிக்கையாளர்கள் கோபம் கொள்ள வேண்டியது இடம் 'நானே கடவுள்' 'எல்லாம் அவன் செயல்' என்று சொல்லிக் கொண்டு ஏமாற்றும் போலி சாமியார்களிடம் தான்.

44 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

/////'எனது சொட்டைத் தலையில் முடி வளரச் செய்வதற்கு உங்கள் ஆண்டவனுக்கு சக்தி இருக்கிறதா ? கூறுங்கள் நானும் கடவுள் நம்பிக்கைக் கொள்கிறேன்' ////

:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

:-)))))
//

ஐயா,

நீண்ட நாளுக்கு பிறகு வந்து பின்னூட்டமிடுவதற்கு முதலில் நன்றி !

வெறும் சிரிப்பானோடு நிறுத்துவிட்டீர்கள், சத்தியராஜுக்கு தலையில் முடி வளர செய்வதற்கு ஜோதிட வழி எதுவும் பரிகாரம் இருக்கிறதா ?
:)

Kanchana Radhakrishnan சொன்னது…

இந்த பதிவை எழுதியது யார்?நானே என்று சொல்லமாட்டீர்கள் அல்லவா?

கோவி.கண்ணன் சொன்னது…

// kanchana Radhakrishnan said...
இந்த பதிவை எழுதியது யார்?நானே என்று சொல்லமாட்டீர்கள் அல்லவா?

9:46 AM, September 09, 2008
//

இராதா கிருஷ்ணன் ஐயா,

இடுகை நன்றாக இல்லையா ?

பின்னே மண்டபத்துல யாராவது வந்து எழுதிக் கொடுத்தார்கள் என்றா சொல்லுவேன். நான் நானே தான் எழுதினேன் !

பிள்ளைகளின் செயலுக்கு பெற்றவர்களைத் தூற்றுவது எவ்வளவு ஞாயமின்மையோ அதே தான் மனிதர்களின் கீழான செயல்களை இறைவனே செய்தான் என்று சொல்வதும். சுறுக்கமாகச் சொல்லிவிட்டேன் !

:)

Kanchana Radhakrishnan சொன்னது…

அதிகப்படியான ஒரு செய்தியையும் வரவழித்து விட்டேன் பார்த்தீர்களா?

ஜெகதீசன் சொன்னது…

அவர் தனது பெயரை சொத்தியரோஜே என்று மாற்றிக் கொண்டால் அவருக்கு சொட்டைத் தலையில் முடி வளரும்...
:P

விஜய் ஆனந்த் சொன்னது…

// ஜெகதீசன் said...
அவர் தனது பெயரை சொத்தியரோஜே என்று மாற்றிக் கொண்டால் அவருக்கு சொட்டைத் தலையில் முடி வளரும்... //

:-)))...

Subbiah Veerappan சொன்னது…

/////ஐயா,
நீண்ட நாளுக்கு பிறகு வந்து பின்னூட்டமிடுவதற்கு முதலில் நன்றி !
வெறும் சிரிப்பானோடு நிறுத்துவிட்டீர்கள், சத்தியராஜுக்கு தலையில் முடி வளர செய்வதற்கு ஜோதிட வழி எதுவும் பரிகாரம் இருக்கிறதா ?:)///

நடுவில் நேரமின்மை காரணமாக பின்னூட்டங்கள் இடவில்லை! ஆனால் பதிவுகளை எல்லாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்

சத்தியராஜிற்கு இனிமேல் முடி வளர்ந்து என்ன ஆகப்போகிறது?
அப்படி வளர்ந்தால், அதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப்போகிறது?

ஜோதிடத்தில் கைக்காசை செலவு செய்யும் பரிகாரம் எதுவும் கிடையாது!
இறைவனைப் பிரார்த்திப்பது ஒன்றுதான் பரிகாரம்.

இப்போதுதான் நாட்டில் பாதிப்பேர் இறைவன் இல்லை என்கிறானே?
அதனால் பரிகாரத்தை எல்லாம் மறந்து விடலாம் அல்லது கடாசி விடலாம்

சில லேட்டஸ்ட் பரிகாரங்கள்:
1. கட்டிங் அடிக்கும் பழக்கமுள்ளவர்கள் கட்டிங் அடிப்பது முதல் பரிகாரம்
2. கட்டிங் அடிக்காதவர்கள் யூ டியூப்பில் வடிவேலு, விவேக், கவுண்டமணி ஆகியோரின் படங்களைப் பார்த்து மகிழ்வது இரண்டாவது பரிகாரம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
அதிகப்படியான ஒரு செய்தியையும் வரவழித்து விட்டேன் பார்த்தீர்களா?
//

இதுக்குப் பெயர் தான் போட்டு வாங்குவதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அவர் தனது பெயரை சொத்தியரோஜே என்று மாற்றிக் கொண்டால் அவருக்கு சொட்டைத் தலையில் முடி வளரும்...
:P

9:55 AM, September 09, 2008
//

சத்தியராஜ் தனக்கு விக்கு (வளர) வைக்கலாம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
// ஜெகதீசன் said...
அவர் தனது பெயரை சொத்தியரோஜே என்று மாற்றிக் கொண்டால் அவருக்கு சொட்டைத் தலையில் முடி வளரும்... //

:-)))...
//

விஜய்,

சொந்தக்கருத்தில் பின்னூட்டமிடாதவர் சங்கத்துக்கு நீ தான் தலைவராமே !

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...


நடுவில் நேரமின்மை காரணமாக பின்னூட்டங்கள் இடவில்லை! ஆனால் பதிவுகளை எல்லாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்//

ஓ, அப்படியா ! நல்லது !

//சத்தியராஜிற்கு இனிமேல் முடி வளர்ந்து என்ன ஆகப்போகிறது?
அப்படி வளர்ந்தால், அதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப்போகிறது?//

அவரு தன்னோட ஆசையை வெளிப்படுத்தி அதற்கு ஆண்டவன் உதவ வேண்டும் என்கிறார் ! :)

//ஜோதிடத்தில் கைக்காசை செலவு செய்யும் பரிகாரம் எதுவும் கிடையாது!
இறைவனைப் பிரார்த்திப்பது ஒன்றுதான் பரிகாரம்.//

பிரம்மஹத்தி தோஷம் - பிராமணனுக்கு பசு கொடுப்பதெல்லாம் உண்மையிலேயே ஜோதிடத்தில் இல்லையா ?

//இப்போதுதான் நாட்டில் பாதிப்பேர் இறைவன் இல்லை என்கிறானே?
அதனால் பரிகாரத்தை எல்லாம் மறந்து விடலாம் அல்லது கடாசி விடலாம்//

இருக்கு என்று சொல்பவர்களும் அறிந்தவர்களாகாவோ, உணர்ந்தவர்களாகவோ இல்லை, வெறும் நம்பிக்கையில் மட்டுமே உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்வீர்களா ?

//சில லேட்டஸ்ட் பரிகாரங்கள்:
1. கட்டிங் அடிக்கும் பழக்கமுள்ளவர்கள் கட்டிங் அடிப்பது முதல் பரிகாரம்//

அளவைச் சரியாகக் கூறவும் ! 1/ 2 அல்லது Full ?

//2. கட்டிங் அடிக்காதவர்கள் யூ டியூப்பில் வடிவேலு, விவேக், கவுண்டமணி ஆகியோரின் படங்களைப் பார்த்து மகிழ்வது இரண்டாவது பரிகாரம்!

10:22 AM, September 09, 2008
//

மடோனா, பாரிஸ் ஹில்டன் எல்லாம் ரிடையர்ட் ஆகிட்டாங்களா ? டயராகிட்டாங்களா ?

அறிவகம் சொன்னது…

நான் யார்? திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீக ஞானிகள் ஆராய்ந்த நான்யார்?, கடவுள் யார்? ஆய்வு.

நானும் ஆராய்ந்தேன் 15 வருடங்களாக. விடையே கிடைககாத கேள்விக்கு என் மகன் பிறந்ததும் விடை(ஞானம்) கிடைத்தது.அந்த தீர்க்கமான விடையை ஒரு கவிதையாக வடித்து வைத்துள்ளேன்.

அந்த கவிதை தான் தங்களின் இந்த பதிவுக்கு நான் எழுதும் மிகசிறந்த பின்னூட்டமாக இருக்கும் என கருதுகிறேன். ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னவென்றால் கவிதை மிகபெரியது(நீண்டது). சுமார் 2 பதிவுகளுக்கான இடத்தையே பிடித்துவிடும்.

அந்த கவிதையை இங்கு பின்னூட்டமாக எழுதுவதா? அல்லது சுட்டியை மட்டும் தருவதா( இன்னும் எனது வலைபதிவில் பதிபிக்க வில்லை.) உங்கள் அனுமதியை பொருத்து பின்னூட்டம் அமையும். நன்றி. (கவிதையை சுருக்கி எழுத பார்த்தேன் அனால் கருத்துக்கள் சிதறிவிடுகிறது.)

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவகம் said...
நான் யார்? திரு. ரமணமகரிஷி உட்பட பல ஆன்மீக ஞானிகள் ஆராய்ந்த நான்யார்?, கடவுள் யார்? ஆய்வு.//

அறிவகம்,
இதைப் பற்றி நினைக்காதவர்கள், தேடாதவர்கள் குறைவு தான் !
:)

//நானும் ஆராய்ந்தேன் 15 வருடங்களாக. விடையே கிடைககாத கேள்விக்கு என் மகன் பிறந்ததும் விடை(ஞானம்) கிடைத்தது.அந்த தீர்க்கமான விடையை ஒரு கவிதையாக வடித்து வைத்துள்ளேன்.//

குழந்தைகள் 6 வயது வரையில் தெய்வீக குணங்களைக் கொண்டவையாகவே இருக்கும், அவற்றின் முகத்திலும் செயலிலும் அதைப் பார்க்க முடியும்.

//அந்த கவிதை தான் தங்களின் இந்த பதிவுக்கு நான் எழுதும் மிகசிறந்த பின்னூட்டமாக இருக்கும் என கருதுகிறேன். ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னவென்றால் கவிதை மிகபெரியது(நீண்டது). சுமார் 2 பதிவுகளுக்கான இடத்தையே பிடித்துவிடும்.

அந்த கவிதையை இங்கு பின்னூட்டமாக எழுதுவதா? அல்லது சுட்டியை மட்டும் தருவதா( இன்னும் எனது வலைபதிவில் பதிபிக்க வில்லை.) உங்கள் அனுமதியை பொருத்து பின்னூட்டம் அமையும். நன்றி. (கவிதையை சுருக்கி எழுத பார்த்தேன் அனால் கருத்துக்கள் சிதறிவிடுகிறது.)//

அனைவரும் படிக்க வேண்டிய ஓன்று தனிப்பதிவாகப் போட்டுவிட்டு சுட்டியைத் இடுங்கள் !

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல கருத்துக்கள்

narsim சொன்னது…

//ஒருவருக்கு கெடுதலை செய்துவிட்டு ஏற்படும் மன அழுததத்திலிருந்து விடுபடவே இந்த சொல்லை மனிதன் தேவைப்ப்படும் போதெல்லாம் பயன்படுத்தி வருகிறான்//

நல்ல பதிவு

நர்சிம்

வால்பையன் சொன்னது…

//இத்தகைய அசுர அவதாரங்களை அழிக்க நாத்திகனே வல்லவன்.//

இந்த ஒரு வரிக்காக நான் "ஒ" போடுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
நல்ல கருத்துக்கள்

12:33 PM, September 09, 2008
//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//narsim said...
நல்ல பதிவு

நர்சிம்

2:23 PM, September 09, 2008
//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
//இத்தகைய அசுர அவதாரங்களை அழிக்க நாத்திகனே வல்லவன்.//

இந்த ஒரு வரிக்காக நான் "ஒ" போடுகிறேன்

3:08 PM, September 09, 2008
//

V(I)P மிக்க நன்றி !

Darren சொன்னது…

நல்லாத்தான் எழுதறேள் ஆனால் சில சமயங்களில் உங்கள் சில பதிவுகளில் பின்னுட்ட பதிலை படிக்கும்போது, நீங்க எழுதமட்டும்தான் செய்வீர்களோ என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.

ஆனா ஒன்று மட்டும் தெளிவு, முன்பு தமிழ்மண பதிவர்களுக்கு முத்து(தமிழினி) இப்போ நீங்க. எதுக்கா? அது உங்களுக்கே தெரியும்.

காமெடியாக எடுத்துக்கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடன் பின்னூட்டம் இட்டுவிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan said...
நல்லாத்தான் எழுதறேள் ஆனால் சில சமயங்களில் உங்கள் சில பதிவுகளில் பின்னுட்ட பதிலை படிக்கும்போது, நீங்க எழுதமட்டும்தான் செய்வீர்களோ என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.//

பாராட்டுக்கு நன்றி தரண்,
கோவிலுக்குப் போவது தவறு சாமியே இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள், நீங்கள் கூட அப்படி ஒருவராக இருக்கலாம், கோவிலுக்குச் செல்லும் அந்த நேரத்தில் கொஞ்சமாவது ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள், தீய செயல்களுக்கு அந்த நேரம் செலவிடப் படுவதில்லை என்பதே என் எண்ணம், சாமி இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் பிறகு தானே ! கோவிலுக்குள்ளேயே கொலைகாரர்களும், மசூதிக்குள் தீவிரவாதிகளும் கூட இருக்கிறார்கள் அவர்களெல்லாம் எக்ஸ்ட்ரீமிஸ்டுகள். அவையெல்லாம் அகற்றப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நேற்று கூட நண்பர் டிபிசிடிக்கு பதில் அளித்து இருந்தேன். வேற்றுமைகளை முற்றிலும் களைவது தான் சமத்துவத்திற்கான ஒரே வழி நம்புவர்களும் உண்டு, தோட்டம் முழுவதும் வெள்ளை ரோஜா இருந்தாலும் அழகுதான், வேற்றுமையிலும் அதற்கான சிறப்புகளைப் போற்றி ஒற்றுமை காணுவோம் என்று நம்புபவர்களும் உண்டு. தோட்டம் முழுவதும் பலவண்ணங்களில் ரோஜா இருந்தாலும் அழகுதானே !

//ஆனா ஒன்று மட்டும் தெளிவு, முன்பு தமிழ்மண பதிவர்களுக்கு முத்து(தமிழினி) இப்போ நீங்க. எதுக்கா? அது உங்களுக்கே தெரியும்.//

அவருடைய எழுத்துக்கள் தெரியும், கேலியும் கிண்டலுமாக எழுதுவார், ஆன்மிகம், நாத்திகம் பற்றி அவரது கருத்துக்களை, நிலைகளை ஊன்றிப் படித்தது இல்லை.

//காமெடியாக எடுத்துக்கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடன் பின்னூட்டம் இட்டுவிட்டேன்.

4:20 PM, September 09, 2008
//

என்னை மதித்து தானே பின்னூட்டமிடுகிறீர்கள், அதைத்தான் முதலில் புரிந்து கொள்வேன், பிறகு தான் அது எதிர்வினையும் அதற்கான மறுமொழியும். எண்ணங்கள் உங்களுக்கும் எனக்கும் வேறாக இருக்கலாம். கருத்துப்பரிமாற்றம் என்ற புள்ளியில் இரண்டுமே சந்தித்துக் கொள்கிறதே, பிறகு எப்படி தவறாகக் கொள்வது.

Unknown சொன்னது…

//மனிதர்கள் தங்கள் கேடுகட்ட செயலிற்கு ஞாயம் கற்பிக்கும் ஒரு சொல்லாகவே 'எல்லாம் அவன் செயல்' என்ற பதத்தைக் காண்கிறேன். ஒருவருக்கு கெடுதலை செய்துவிட்டு ஏற்படும் மன அழுததத்திலிருந்து விடுபடவே இந்த சொல்லை மனிதன் தேவைப்ப்படும் போதெல்லாம் பயன்படுத்தி வருகிறான்//

யாருக்காவது துரோகம் செய்து விட்டு எல்லாம் அவன் செயல் என்று சொல்வதும், தமது கேடு கெட்ட செயல்களுக்கு நியாயம் கற்பிக்க எல்லாம் அவன் செயல் என்பதும் அடிப்படையில் தவறானவை. ஏனெனில் துரோகமிழைக்கப்பட்டவர் மன்னிக்கும் வரை இறைவனே மன்னிப்பதில்லை என்கிறது இஸ்லாம்.

எனினும் இவ்வார்த்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்ததாக அமையும்.

நமக்கு ஏற்பட்ட பெரிய இழப்பை, துக்கத்தை, தோல்வியை, மற்றவர்களால் ஏற்பட்ட மனக்காயத்தை ஆற்றிக் கொள்ள எல்லாம் அவன் செயல் என்று நினைத்து வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு இலகுவாக பயணிக்க முடிகிறது. தவறு செய்தவர்களை இலகுவாக மன்னிக்க முடிகிறது. இந்த வகையில் உபயோகித்தால் அவ்வார்த்தை மனிதனுக்கு வாழ்வின் சுமையைக் குறைக்கும் கருவியாகும்.

RATHNESH சொன்னது…

ஓர் ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியை, தன் மாணவக் குழந்தைகளிடம், கடவுள், பாவம் புண்ணியம் பற்றிய உணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்ப்பதற்காக "பிள்ளைகளே, நான் என்னுடைய எல்லா செல்வங்களையும் கோவிலுக்கு எழுதி வைத்து சாமியே கதி என்று பூஜை புனஸ்காரங்களில் மூழ்கி இருந்தால் கடவுள் என்னை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்வாரா?" என்று கேட்டார். பிள்ளைகள் கோரஸாக "இல்லை" என்றார்கள். "என்னுடைய சொத்துக்களை எல்லாம் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து விட்டு ஏதாவது தொண்டு நிறுவனத்தில் பணி செய்தால் கடவுள் என்னை சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பாரா?" குழந்தைகள் கோரஸாக, "இல்லை" என்றார்கள். ஆசிரியைக்கு மகிழ்ச்சி. "என்னுடைய செல்வத்தை எல்லாம் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் கட்டக் கொடுத்து விட்டு வாழ்நாள் முழுதும் குழந்தைகளுக்கு சேவை செய்தால் நான் சொர்க்கத்துக்குப் போக முடியுமா?" என்று கேட்க, குழந்தைகள் கோரஸாக, "இல்லை" என்றார்கள். ஆசிரியைக்கு இப்போது திகைப்பு. "அப்போ நான் சொர்க்கம் போகணும்னா என்ன தான் செய்யணும்?" என்று கேட்க அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்: "அதுக்கு நீங்க சாகணும்"

சத்யராஜும் குழந்தைகளிடம் கேள்வி கேட்டால் அவர்களிடமிருந்து சரியான பதிலைத் தெரிந்து கொள்ள முடியும்.

Vishwa சொன்னது…

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலளித்து உங்கள் பகுத்தறிவு ஞானத்தை வெகு சிறப்பாக வெளிபடுதுகுறீர்கள்!!!
கூடிய சீக்கிரம் உங்கள் பெயரை "கண்ணன்"லிருந்து "சத்யராஜ்தாசனாக" மாற்றிகொள்வது உத்தமம்...

நீங்கள் ஒரு இந்துவாக இருப்தால்தான் இந்தளவு வாய்கிழியே உங்கள் பகுத்தறிவு பிரசாரத்தை செய்துகொண்டு இருக்குறீர்கள்.... பிற மதமாக இருந்தால் இந்நேரம் உங்கள்........ தைகபட்டுஇருக்கும்.

உங்கள் ஐம்பது வருட பகுத்தறிவைவிட எங்கள் ஐந்தாயிரம் வருட ஆன்மிகம் மக்களை செம்மைபடுதியுள்ளது.தனிமனித ஒழுக்கம் இல்லாத "பெரியோர்கள்" பிறரை விமர்சனம் பண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?

அன்புடன்...
விஷ்வா

வால்பையன் சொன்னது…

விஷ்வா நல்ல காமெடியா எழுதுறிங்க!

இந்தியா இந்துக்கள் பெரும்பான்மை நிறைந்த நாடு!
இங்கே இந்து மதங்களின் கோமாளித் தனத்தை பற்றி தான் பேசமுடியும்.

மற்ற மதங்களின் கோமாளித் தனங்களை பேச அங்கே ஆளில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது. மார்டின் லுதர் கிங் போப் ஆண்டவரையே எதிர்த்து குரல் கொடுத்தவர்.

உங்களின் ஐந்தாயிரம் வருட ஆன்மிகம் என்ன மேன்மையை கொடுத்தது என்று கொஞ்சம் விளக்கமாக சொள்ளமுடிஒயுமா

கோவி.கண்ணன் சொன்னது…

//Vishwa said... "'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல !":

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலளித்து உங்கள் பகுத்தறிவு ஞானத்தை வெகு சிறப்பாக வெளிபடுதுகுறீர்கள்!!!
கூடிய சீக்கிரம் உங்கள் பெயரை "கண்ணன்"லிருந்து "சத்யராஜ்தாசனாக" மாற்றிகொள்வது உத்தமம்...

நீங்கள் ஒரு இந்துவாக இருப்தால்தான் இந்தளவு வாய்கிழியே உங்கள் பகுத்தறிவு பிரசாரத்தை செய்துகொண்டு இருக்குறீர்கள்.... பிற மதமாக இருந்தால் இந்நேரம் உங்கள்........ தைகபட்டுஇருக்கும்.

உங்கள் ஐம்பது வருட பகுத்தறிவைவிட எங்கள் ஐந்தாயிரம் வருட ஆன்மிகம் மக்களை செம்மைபடுதியுள்ளது.தனிமனித ஒழுக்கம் இல்லாத "பெரியோர்கள்" பிறரை விமர்சனம் பண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?

அன்புடன்...
விஷ்வா //

விஷ்வா,

இதற்கு நான் பதிலுரைக்க வேண்டுமானால் ஆத்திக சாமியார்களில் லீலைகளை பெயரோடு சொல்ல வேண்டிவரும், பிறரைத் தூற்றி எனது கருத்து வலு சேர்க்கும் அவசியம் எனக்கு எப்போதும் இருப்பதில்லை. செடியில் கூடவே வளரும் களைகளையும், உண்டாகும் பதர்களையும் அழிக்க முயற்சி செய்ய வேண்டும், பிறகு தோட்டத்திற்கான வேலி போட்டு மாடு மேயாமல் பார்த்துக் கொள்ளலாம், இல்லை என்றால் பயிர் செழிப்பதற்கு வாய்ப்பே இல்லை, மாடுகளும் மேயும் பயிர்களும் பதராகவே போகும்.

இந்துவாக இருந்தாலும் போலி சாமியர்களை சகித்துக் கொண்டு தான் செல்லவேண்டும் என்ற உங்கள் கருத்தைக் கேட்டு ஆன்மிகவாதிகளும் உண்மையான பக்தியாளர்களுமே கைகொட்டி சிரிப்பார்கள்.

பெரியார்களின் ஒழுக்கம் / ஒழுங்கீனம் வெளிப்படையானது, அதை யாரும் மறுக்கவில்லை, மறைமுக சந்தி சிரிக்கும் போலி ஆன்மிக பெரிய பெரியவர்களை விமர்சனம் செய்யாதது எந்த விதத்தில் ஞாயம் என்று நான் கேட்க மாட்டேன். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் !

ஆன்மிகம் பேசுவதென்றால் அந்த நிலையில் நின்று பேசவேண்டும், அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், உண்மையான ஆத்திகவாதிகள் யாருமே அதிகம் பேசமாட்டார்கள். மத ஒழுங்கீனங்களுக்குச் சப்பைக் கட்ட மாட்டார்கள். ஐந்தாயிரம் ஆண்டுகளாக உயிரோடு பெண்களை கணவனின் பிணத்தோடு சேர்த்து எரித்ததே சென்ற நூற்றாண்டில் தான் இராஜா இராம் மோகன் ராயால் முடிவுக்கு வந்திருக்கிறது, இத்தகைய ஐந்தாயிரம் ஆண்டு ஆணாதிக்க போலி ஆன்மிக வரலாறுகளுக்கு என்றாவது வெட்கப்படுவது உண்டா ?

ஆதிசங்கரன் இன்னொரு முறை பிறந்து வந்தாலும் போலி ஆன்மிக வாதிகளை திருத்தவே முடியாது. நான் நாத்திகம் பேசுகிறேனா ஆத்திகம் பேசுகீறேனா என்பதை இருசாரருமே நன்கு அறிவர். உங்களைப் போன்றவர்கள் எனது பெயரமாற்றத்திற்கு பரிந்துரை செய்வது வீண் கவலை. அதற்கு பதிலாக எங்காவது உட்கார்ந்து காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தால் புண்ணியம் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டி இருக்கும். ஆனால் எனக்கு அது தேவையற்றது.

ஆன்மீகவாதி யார், போலி ஆன்மிகவாதி யார் என்பதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு பெரிதாக ஞானம் எதுவும் தேவையில்லை, அவர்களின் செயலே வெளிபடுத்திவிடும்.

Vishwa சொன்னது…

"இதற்கு நான் பதிலுரைக்க வேண்டுமானால் ஆத்திக சாமியார்களில் லீலைகளை பெயரோடு சொல்ல வேண்டிவரும், பிறரைத் தூற்றி எனது கருத்து வலு சேர்க்கும் அவசியம் எனக்கு எப்போதும் இருப்பதில்லை. செடியில் கூடவே வளரும் களைகளையும், உண்டாகும் பதர்களையும் அழிக்க முயற்சி செய்ய வேண்டும், பிறகு தோட்டத்திற்கான வேலி போட்டு மாடு மேயாமல் பார்த்துக் கொள்ளலாம், இல்லை என்றால் பயிர் செழிப்பதற்கு வாய்ப்பே இல்லை, மாடுகளும் மேயும் பயிர்களும் பதராகவே போகும்."
கண்ணன்,
இதைதான் நானும் கூறுகிறேன்....நீங்கள் ஒருமையில் விளிக்கும்"ஆதிசங்கரன்"இருக்கும்போது மற்றவர்களை பற்றி உங்களுக்கென்ன கவலை. சில அற்பபதர்களும் ஆன்மிகம் என்னும் பெயரில் அனைத்து மதங்களிலும் இல்லையா? அதில் இருக்கும் அனைத்து அயோகியர்களையும் சாட வேண்டுமே!!ஆனால் உங்கள் கண்கள் இந்துமதத்தின் மீதுமட்டும் மட்டும் படுவது எதனால்?நீங்கள் அவ்வாறு செய்தலலோழிய,உங்களையும் சரி உங்கள் ஆசானையும் எப்படி உண்மையான பகுத்தறிவுவாதி என்று ஏற்றுகொள்வது.

"இந்துவாக இருந்தாலும் போலி சாமியர்களை சகித்துக் கொண்டு தான் செல்லவேண்டும் என்ற உங்கள் கருத்தைக் கேட்டு ஆன்மிகவாதிகளும் உண்மையான பக்தியாளர்களுமே கைகொட்டி சிரிப்பார்கள்."
கண்ணன்,
இந்து மதமே சகிப்புத்தன்மைக்கு எடுதுக்காட்டுதனே?உடனே நீங்கள் குஜராத்தை உதாரணம் காட்டுவீர்கள் இல்லையா?ஐயோதியவை உதாரணம் காட்டுவீர்கள்? இதற்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று உங்களை போன்ற போலி பகுத்தறிவு சிந்தனையாலகளுக்கு தெரியும்.எனவே எனது வேலை சிம்பிள்.

"பெரியார்களின் ஒழுக்கம் / ஒழுங்கீனம் வெளிப்படையானது, அதை யாரும் மறுக்கவில்லை, மறைமுக சந்தி சிரிக்கும் போலி ஆன்மிக பெரிய பெரியவர்களை விமர்சனம் செய்யாதது எந்த விதத்தில் ஞாயம் என்று நான் கேட்க மாட்டேன். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் !"
கண்ணன்,
கிணறு வெட்டினால்தான் நீர் கிடைக்கும். அதுபோல் ஆன்மீக பெரியவர்கள் செய்ததவறுகளை யாரும் "சரி" என்று கூறவில்லை.அவர்களாவது மறைவில் தவறு செய்தவர்கள்...அகபட்டுகொண்டர்கள். அனால் ஒழுக்கத்தை மற்றவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு தான் மட்டும் அதை காற்றில் பறக்கவிட்டது எந்த ஊரு ஞாயம் என்று நான் கேட்க மாட்டேன். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்! தவறை "OPEN"ஆக செய்யலாம் அல்லவா...சூப்பரா இருக்கு உங்க பகுத்தறிவு....

"ஆன்மிகம் பேசுவதென்றால் அந்த நிலையில் நின்று பேசவேண்டும், அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், உண்மையான ஆத்திகவாதிகள் யாருமே அதிகம் பேசமாட்டார்கள். மத ஒழுங்கீனங்களுக்குச் சப்பைக் கட்ட மாட்டார்கள். ஐந்தாயிரம் ஆண்டுகளாக உயிரோடு பெண்களை கணவனின் பிணத்தோடு சேர்த்து எரித்ததே சென்ற நூற்றாண்டில் தான் இராஜா இராம் மோகன் ராயால் முடிவுக்கு வந்திருக்கிறது, இத்தகைய ஐந்தாயிரம் ஆண்டு ஆணாதிக்க போலி ஆன்மிக வரலாறுகளுக்கு என்றாவது வெட்கப்படுவது உண்டா ?"

கண்ணன்,
சடாரெண்டு ஆன்மீகத்திலிருந்து பெண்ணியத்திற்கு SOOPER"ஆக பரந்துவிட்டீர்..உங்களுக்கு உங்கள் பகுத்தறிவு மீது எந்தளவுக்கு பேச தகுதிஉள்ளதோ அதே அளவு எனது மதத்தின் மீதும் ஆண்மீகதின்மீதும் பேச எனக்கும் முழுத்தகுதியும் உள்ளது. நீங்கள் முதலில் உண்மையான பகுத்தறிவுவாதி என்று எனக்கு வேண்டாம், உங்களுக்கே நிரூபித்து கொள்ளுங்கள்? உடன்கட்டை ஏறுவது என்பது அக்காலத்தின் சடங்கு....அந்த சடங்கை இந்து மத நூல்களிலோ அல்லது இந்து மத பிரதிநிதிகளோ என்றாவது எங்காவது முன்மொழிந்து இருக்கிறார்களா..இறுதியில் அந்த வழக்கத்திற்கு முடிவுகட்டிய இராஜா இராம் மோகன் ராயும் ஒரு ஆண்மீகவாதியே."இதைவிட கொடுமையான் சடங்குகளை இன்று பிற மதத்தவர் அரங்கேற்றும்போது உங்கள் நாக்கு மட்டும் ஒரு இன்ச் சுருங்கிவிடுகிறதே...அப்படிஎன்றம் ஒரு முஸ்லிமோ அல்லது கிரித்தவனோ எக்கேடு கெட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை...இதுதான் உண்மையான பகுத்தறிவுவாதம் .உங்களை கண்டால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லை....


"ஆதிசங்கரன் இன்னொரு முறை பிறந்து வந்தாலும் போலி ஆன்மிக வாதிகளை திருத்தவே முடியாது. நான் நாத்திகம் பேசுகிறேனா ஆத்திகம் பேசுகீறேனா என்பதை இருசாரருமே நன்கு அறிவர். உங்களைப் போன்றவர்கள் எனது பெயரமாற்றத்திற்கு பரிந்துரை செய்வது வீண் கவலை. அதற்கு பதிலாக எங்காவது உட்கார்ந்து காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தால் புண்ணியம் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டி இருக்கும். ஆனால் எனக்கு அது தேவையற்றது."
கண்ணன்,
ஐயாயிரம் வருட போலி ஆன்மீகத்தைவிட ஐம்பதுவருட போலி பகுதறிவுவாதிகள் இந்த நாட்டிற்க்கு செய்த தீங்கு எரளமானது. நான் காயத்ரி மந்திரத்தை சொன்னால் எனக்கு மட்டுமே புண்ணியம் ஆனால் இது போன்ற நச்சுகருத்துக்களை உதிர்கும் போக்கால் இன்று பலருடைய சிந்தனைக்கு வெட்டு வைக்கும் உங்களை என்னவென்று கூறுவது. நீங்கள் 'சொட்டைதலைக்கும் வெந்தாடிகும்"தாசனாக இருந்தால் எனக்கென்ன கவலை. ஆனால் அந்த "தாசபணியை" கொஞ்சம் நேர்மையாக செய்யுங்கள்.

"ஆன்மீகவாதி யார், போலி ஆன்மிகவாதி யார் என்பதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு பெரிதாக ஞானம் எதுவும் தேவையில்லை, அவர்களின் செயலே"

கண்ணன்,
உங்கள் கேவிக்கான எனது பதிலை மறுபடியும் நீங்கள் படிப்பதே உங்கள் கடைசி இரண்டு வரிகளுக்கான பதில்....

நேர்மையுடன்...
விஷ்வா

கோவி.கண்ணன் சொன்னது…

//

நேர்மையுடன்...
விஷ்வா//

:)

விதாண்டாவாதிகளுக்காக எனது நேரத்தை செலவிட எனக்கு விருப்பமில்லை. நேரம் பொன்னானது அல்லவா ?

உங்களுக்கு உயர்வாக தெரிந்தால் தலையில் வைத்துக் கொள்ளுங்கள், மதவெறியர்களின், போலி சாமியார்களின் பிரச்சனை ஆன்மிகப் பிரச்சனையே அல்ல, சமூக பிரச்சனை, இது புரியாத உங்களிடம் விவாதிப்பது எனக்கு நேர விரயமே, இங்கே பின்னூட்டியவர்கள் அனைவருமே நாத்திகர் கிடையாது.

அறிவகம் சொன்னது…

திரு. கோவி.கண்ணன் இதே எனது பின்னூட்டம் வாழ்க்கை வலி கவிதையில். சுட்டி

http://kulali.blogspot.com/2008/09/1.html

என்றோ எனக்குள் எழுதப்பட்ட இந்த கவிதையை பதிவாக வெளியிட நினைவுபடித்தியமைக்கு நன்றிகள் பல.

அறிவகம் சொன்னது…

அச்சச்சோ... எழுத்து பிழை ஏற்பட்டு விட்டது. மேலே இதே என்பதை இதோ என படித்துக்கொள்ளவும்.

அப்புறம் உங்களுக்கும் விஷ்வாவுக்கும் இடையில் நடக்கும் கருத்து போராட்டத்திற்கு ஒருவேளை எனது கவிதைதொடர் தெளினான பதில் அளிக்கும் என நினைக்கிறேன். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவகம் said...
அச்சச்சோ... எழுத்து பிழை ஏற்பட்டு விட்டது. மேலே இதே என்பதை இதோ என படித்துக்கொள்ளவும்.

அப்புறம் உங்களுக்கும் விஷ்வாவுக்கும் இடையில் நடக்கும் கருத்து போராட்டத்திற்கு ஒருவேளை எனது கவிதைதொடர் தெளினான பதில் அளிக்கும் என நினைக்கிறேன். நன்றி.

12:08 AM, September 10, 2008
//
அறிவகம்,
பின்னூட்டங்களுக்கு நன்றி. அவரிடம் கருத்து மோதல்கள் எதுவும் இல்லை. அவரது இரண்டாவது பின்னூட்டத்திலேயே முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் ஏன் திட்டுவதில்லை என்கிற ஆதங்கம் நன்றாக ஒலித்தது, அதன் பிறகு கருத்து மோதல்களுக்கு என்ன இருக்கிறது. பதிலளிப்பதும் வீண் என்றே விட்டுவிட்டேன்.

கிரி சொன்னது…

//'எனது சொட்டைத் தலையில் முடி வளரச் செய்வதற்கு உங்கள் ஆண்டவனுக்கு சக்தி இருக்கிறதா ? கூறுங்கள் நானும் கடவுள் நம்பிக்கைக் கொள்கிறேன்' என்றார்//

அவரு மண்டையில முதல்ல மூளை வளர கூறி கேட்க சொல்லுங்க :-)))

அவரும் எப்படியாவது முடி வர வைக்க முயற்சி செய்கிறாரு போல ஹி ஹி ஹி

கோவி.கண்ணன் சொன்னது…

//அவரு மண்டையில முதல்ல மூளை வளர கூறி கேட்க சொல்லுங்க :-)))

அவரும் எப்படியாவது முடி வர வைக்க முயற்சி செய்கிறாரு போல ஹி ஹி ஹி //

வாய்யா கிரி,
பழைய பகையை யானை மாதிரி மனசுல வச்சிக்கிட்டு சத்தியராஜ் என்று பெயரைப் பார்த்ததும் பின்னூட்டிடிங்களாக்கும், அது வேற கதை, இது வேறு ?

Darren சொன்னது…

//கோவிலுக்குப் போவது தவறு சாமியே இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள், நீங்கள் கூட அப்படி ஒருவராக இருக்கலாம்,///

அனைத்து சாதியினரையும் கோவிலில் சரிசமமாக நடத்த வேண்டும் என போரடியதே நாத்திகர்கள்தான். இந்த நாட்டில் சாதிய, மத,மற்றும் இன வேற்றுமைகள் உருவாக்கப்படும் இடங்களே கோயில்கள்தான். நாடு அமைதியாகவும், மனித ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நீக்கும் இடமாகவும் கோயில்கள் மாறும் பட்சத்தில் வீதிக்கு ஒரு கோயில் கட்டினால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம்.


//உங்களுக்கும் எனக்கும் வேறாக இருக்கலாம். கருத்துப்பரிமாற்றம் என்ற புள்ளியில் இரண்டுமே சந்தித்துக் கொள்கிறதே, பிறகு எப்படி தவறாகக் கொள்வது.///

நன்றி.இந்த மாதிரியான் பதில்கள்தான் உங்கள் பலம். கருத்து பறிமாற்றத்தில் சுதந்திரம் அவசியம் அதை உங்கள் பதிவில் உணர்வதால் தொடர்ந்து உங்களுடன் மோதலில்( கருத்து மோதல்) ஈடுபடவைக்கிறது. haha

கிரி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
வாய்யா கிரி,
பழைய பகையை யானை மாதிரி மனசுல வச்சிக்கிட்டு சத்தியராஜ் என்று பெயரைப் பார்த்ததும் பின்னூட்டிடிங்களாக்கும், அது வேற கதை, இது வேறு ?//

ஹா ஹா ஹா சும்மா டமாசு கோவி கண்ணன்..நீங்க பின்னூட்டத்துல காரசாரமா இருந்தீங்க சரி சும்மா கலகலப்பாக்குவோம்னு போட்டேன்

சரி என்ன பதிவர் சநதிப்பு பதிவு ஒன்றையும் காணோம் ..ஜோசப் பால்ராஜ் இன்னைக்கு போடுவீங்கன்னு சொன்னாரு

கோவி.கண்ணன் சொன்னது…

//அனைத்து சாதியினரையும் கோவிலில் சரிசமமாக நடத்த வேண்டும் என போரடியதே நாத்திகர்கள்தான். இந்த நாட்டில் சாதிய, மத,மற்றும் இன வேற்றுமைகள் உருவாக்கப்படும் இடங்களே கோயில்கள்தான். நாடு அமைதியாகவும், மனித ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நீக்கும் இடமாகவும் கோயில்கள் மாறும் பட்சத்தில் வீதிக்கு ஒரு கோயில் கட்டினால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம். //

தரண்,

போரடியதே நாத்திகர்கள்தான். - இதை நானும் அவ்வப்போது சொல்லித்தான் வருகிறேன். வேற்றுமைகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் இடமாகத்தான் இருந்தது கோவில்கள், எல்லா இடங்களிலும் அப்படி இல்லை, ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்தவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் பிற ஐயப்ப சாமிகள் காலில் விழுந்து கொள்வார்கள். அங்கு(ம்) எனக்கு பிடிக்காதது பெண்களைத் தூய்மையற்றவள் என்று மறைமுகமாக தள்ளி வைத்தது தான். மேல் மருவத்தூரில் சமத்தும் பேணுகிறார்கள், அங்கு வருமானமும் அதிகம், உயர்சாதிக்காரர்கள் அங்கு செல்வது இல்லை. ஒரே நாளில் தீர்வு வந்துவிடும் என்று நான் நினைப்பது இல்லை. மரணம் பற்றிய பயம் இருக்கும் வரை இறை நம்பிக்கையை அசைப்பது கடினமே, அதுவே மதவாதிகளுக்கும் அவர்களின் இழிசெயலுக்கும் காரணமாகிவிடுகிறது.

Vishwa சொன்னது…

"விதாண்டாவாதிகளுக்காக எனது நேரத்தை செலவிட எனக்கு விருப்பமில்லை. நேரம் பொன்னானது அல்லவா ?"

எது சார் விதண்டாவாதம்? நான் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் உங்களால் உருப்படியான பதில் சொல்ல முடியவில்லை...அப்புறமா எதற்கு விதண்டாவாதம் என்ற சப்புக்கட்டு. எதற்கெடுத்தாலும் ஹிந்து மாதத்தில் அது நடந்ததே இது நடந்ததே என்று ஒப்பாரி மட்டும் வைக்க தெரியும் ஆனால் நேர்மையான கேள்விக்கு மட்டும் "மதவாதி பேசுகிறான்" என்று சொல்லிவிட வேண்டியது....

"அவரிடம் கருத்து மோதல்கள் எதுவும் இல்லை. அவரது இரண்டாவது பின்னூட்டத்திலேயே முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் ஏன் திட்டுவதில்லை என்கிற ஆதங்கம் நன்றாக ஒலித்தது, அதன் பிறகு கருத்து மோதல்களுக்கு என்ன இருக்கிறது. பதிலளிப்பதும் வீண் என்றே விட்டுவிட்டேன்"

ஆமாம் எங்களைபோண்ரவரிடம் எப்படி கருத்து மோதல் வரும் விட்டால் மோதல் மட்டும்தான் வரும்...பகுத்தறிவாளன் என்று சட்டை காலரை துக்கிவிட்டுகொள்வதில் என்ன பிரயோஜனம்.....இன்று உலகில் தொடரும் வன்முறைக்கும் மதச்சண்டைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு...அது சண்டைபோடும் இரு தரப்புகளில் கண்டிப்பாக ஒரு தரப்பு முஸ்லிம்களே...அதற்கு என்ன காரணம்.....அவர்கள் இன்றுவரை விடாமல் பிடித்துகொண்டிருக்கும் பழமைவாதமும் மூடபழக்கவழக்கமே...நீங்கள் அதையும் தோலுரிக்கவேண்டுமே...யாரும் உங்களை எகிப்துக்கோ அல்லது கொஸொவொவுக்கொ போகசொல்லவில்லை... ஆனால் உங்கள் பகுத்தறிவு பார்வையை அங்கேயும் கொஞ்சம் பார்க்க சொல்கின்றோம்...செய்வீர்களா....உலகம் உருண்டைதான் என்று உலகுக்கு சொன்ன விஞ்ஞானியை கொன்றுவிட்டு இன்று அதற்கு பாவமண்ணிப்பு கோரிய போபுகள் இன்று உங்கள் பார்வையில் படாமல் போனதேன்?

இதுதான் விதண்டாவாதமா...போங்கையா நீங்களும் உங்க பகுத்தறிவும்...

மறுபடியும் நேர்மையுடன்....
விஷ்வா

கோவி.கண்ணன் சொன்னது…

//பகுத்தறிவாளன் என்று சட்டை காலரை துக்கிவிட்டுகொள்வதில் என்ன பிரயோஜனம்.....

இதுதான் விதண்டாவாதமா...போங்கையா நீங்களும் உங்க பகுத்தறிவும்...//


விஷ்வா சார்,

இது அபாண்டம் அடாவடி,

நான் எங்கே என்னை பகுத்தறிவாளன், நாத்திகன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன் ? கற்பனைக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது, இங்கே எழுதி இருப்பது போலி சாமியார்களால் இறைவன் மீதான நம்பிக்கை கெடுகிறது என்பதன் மையப் பொருளே !

இதுவே விளங்காதவர்களிடம் விவாதம் செய்வதே வீன் என்றேன். போப்புக்கு ஏன் ஆப்பு வைக்கல ? இஸ்லாமியர்களின் குல்லாவை ஏன் தட்டிவிடவில்லை என்பதெல்லாம் வீனான பேச்சு. அதுக்கெல்லாம் தான் இந்துத்துவா வியாதிகள் இருக்கிறார்களே, நானும் ஏன் அதையெல்லாம் செய்ய வேண்டும் ?

நான் போலி பகுத்தறிவாளன் :)

பகுத்தறிவாளர்கள் மீது இருக்கும் உங்கள் பற்றும், அதற்கு நான் களங்கம் விளைவிக்கிறேன் என்று நினைக்கும் உங்கள் ஆதங்கம் விளங்குகிறது. படித்தவுடன் இப்போதுதான் புரிந்து புல்லறிக்குது. நான் பகுத்தறிவாளன் இல்லை சார்.

வெண்தாடிதாசன் சொன்னது…

ஹிந்து தீவிரவாதிகளை கேள்வி கேட்டால் உடனடியாக ஜகா வாங்கிவிடுவார்கள். முஸ்லிம்மை பார், கிறிஸ்துவனை பார். ஏன் அவர்களை நீ கேட்பதில்லை என்று ஆரம்பித்துவிடுவார்கள்.

ஜாட்டான்களே, என்னை சூத்திரன் என்று சொல்வது உன் பொந்து மதம்தான். முகமதா என் அண்ணனை நாலாம் ஜாதி என்றான். கிறிஸ்துவா என் தம்பியை பஞ்சமன் என்றான்? நீ கடவுளா கும்பிடும் கல்லை கூட கிட்டே நெருங்கி பார்க்கவிடாடது யாரடா?

என் குடும்பத்தார்கள் ஹிந்துக்கள். அவர்களை சிறுமை படுத்தும் ஹிந்து மதத்தை பற்றிதான் கேள்வி எழுப்ப முடியும். முடிந்தால் அதற்கு பதில் சொல். முடியாவிட்டால் பொத்தி கொண்டு போ. அவன் நொள்ளை, இவன் சொத்தை என்று புலம்பாதே. உன் முதுகில் இருக்கும் அழுக்கை நீக்க முயற்சி செய். பிறகு அடுத்தவனை பற்றி கவலை படலாம்.

வெண்தாடிதாசன் சொன்னது…

//உலகம் உருண்டைதான் என்று உலகுக்கு சொன்ன விஞ்ஞானியை கொன்றுவிட்டு இன்று அதற்கு பாவமண்ணிப்பு கோரிய போபுகள் இன்று உங்கள் பார்வையில் படாமல் போனதேன்?//

அடங்கொய்யால இது என்னா புதுக்கதை . பூமியை சுருட்டி எடுத்து கொண்டு கடலில் ஒளிந்து கொண்டதாக தானே கேள்வி பட்டேன்.

வெண்தாடிதாசன் சொன்னது…

//உலகம் உருண்டைதான் என்று உலகுக்கு சொன்ன விஞ்ஞானியை கொன்றுவிட்டு இன்று அதற்கு பாவமண்ணிப்பு கோரிய போபுகள் இன்று உங்கள் பார்வையில் படாமல் போனதேன்?//

அவனாவது சுமார் 2000 வருஷமாக புருடா விடுகின்றான். ஆனால் நீ ராமன் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலில் பாலம் கட்டினான் என்று ஆகாச புருடா விடுகின்றாயே?

Vishwa சொன்னது…

"யாரு சொன்னா நான் பகுத்தறிவாளன் ?"கண்ணா,
உங்கள யாரும் பகுதறிவாளன்னு சொல்லல....போலி பகுதறிவாளன்னுதனே சொன்னேன்

"அச்சச்சோ, என்ன கொடுமை சார் இது ? சமரசம் செய்து கொண்டு தான் எல்லாவற்றையும் எழுதனுமா ? பெரியாரின் ஏற்கத்தக்க கருத்துக்களை எழுதினால் உடனே அவனுக்கு பகுத்தறிவாளன் என்ற பட்டம் கட்டுவதா ? முற்போக்காக எதாவது பேசினாலே அவன் பகுத்தறிவாளனாம். பகுத்தறிவாளன் என்றால் நாத்திகமா ? ஆத்திகவாதிகளுக்கு பகுத்து அறியும் திறனே இல்லையா ?"
கண்ணா,
தயவுசெஞ்சு உங்கபார்வயில எது முற்போக்குன்னு சொல்லுங்க...நான் வேணும்னா பாடம் கத்துக்குறேன்....பெரியாருடைய பல கருத்துக்களில் எனக்கு மிகுந்த உடண்பாடு உண்டு,ஆனால் அவரும் தனது பார்வையை ஹிந்து மதத்தின்மீதே செலுத்தினார்...ரஷியாவுக்கெல்லம் சென்றுவந்தவர்தனே..அங்கு கம்மியுநிஸதீன் பெயரால் அரங்கேறிய கொடுமைகளை எங்காவது என்றாவது தனது திருவாய் மலர கூறியுள்ளாரா....அது போகட்டும் "இந்தியாவுக்கு சுதந்திரமே வேண்டாம்" என்று வெள்ளையனிடம் மண்டியிட்டவர்தனே இந்த பெரியார்.தனிமனித ஒழுக்கமென்றால் எவ்வளவு ரூபாயென்று கேட்பவர்தானே இந்த பெரியார்...பெண்கள் பாப்(BOB) கட்டிங்(CUTTING) செய்துகொண்டால் மட்டும் பெண்ணியம் தழைதோங்குமா.....மக்களை போலி ஆன்மீகவாதிகள் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறும் உங்கள் பெரியாரையும் அதே குற்றச்சாட்டுடன் கூண்டில் நிறுத்த முடியும்.படிபறிவில்லாத பாமரனை படித்த அறிவாளியான பெரியார் எந்த வகையில் முன்னேற்றியுள்ளான்.பெரியாரின் கருத்துக்கள் காலத்தின்பால் அழியும்..அதற்கு உதாரணம் பெரியாரிசம் பேசும் இன்றைய தமிழக முதல்வர் வீட்டிலேய அவரது மருமகள் மற்றும் மனைவி,துணைவி என்று அனைவரும் தீவிர கடவுள் பற்றாளர்களே!!!பெரியார் வழி வந்த அண்ணாவின் குடும்பமும் கடவுள் பக்தி கொண்டவர்களே. இன்னுமிதுபோன்ற எத்தனையோ உண்மைகள் வெளிவரதொடங்கியுள்ளது....அதகூட விடுங்கள், பெரியாரின் பேரனான இளங்கோவன் செய்யும் கூத்துக்கள் கொஞ்சமா நஞ்சமா....இவர்கள் அனைவரும் ஹிந்துகக்ளே!!!!நீங்கள் "போலி பகுத்தறிவாளன்" என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டவராயிற்றே...எனவே இப்போது கூறுங்கள், உங்களது ஆட்டம் கலைய ஆரம்பித்து விட்டதுதானே? ,பெரியாரது கொள்கைகள் நீர்த்து போய்விட்டதுதானே!!!?.இன்று பெரியார் கொள்கைகளின்பால் தோன்றிய திராவிடர் கழக கூடத்துக்கு எத்தனை பொதுஜனம் வருகிறது .இன்று உண்மைகளை வெளிக்கொணர ஏராளமான ஊடகங்கள் உள்ளனவே...உங்களைபோன்ற போலிகள் பிரம்மப்பியதனம்செய்தும் ஆன்மீகத்தின்பால்,கடவுள் பக்தியின்பல் கூட்டம் அதிகமாகின்றதே தவிர பெரியாரின் கூடத்துக்கு ஆள் சேரவில்லையே.வாருங்கள்,உங்கள் வேலைகளை விட்டுவிட்டு கூட்டதுக்கு, ஆள் சேர்த்து பெரியாரை பிரலயமாக்குங்கள்.செய்வீர்களா?பெரியாரும் காலி பெருங்காய டப்பாவும் ஒன்று,வாசனை இருக்குமே தவிர பயன் ஏதும் இருக்காது.அந்த வாசனையும் கருணாநிதி போன்ற போலிகளால் காலத்தில் நிக்காமல் கானாமல் போகும்.


"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் ஒரு மோசடி (ஆ)சாமி தன்னைத் தான் கடவுள், இறைவன் என்று சொல்லும் போது ... ஏன் சாமி மல மூத்திரத்திலும் இருப்பானா ? என்று கேட்டால் பகுத்தறிவாளன் பட்டம் கட்டிவிடுவார்கள், நாத்திகன் என்று சொல்லிவிடுவார்கள், வெறும் கையில் விபூதி வரவழைப்பதற்கு பதில் கையடக்க பூசனிக்காயை வரவழைக்க முடியாதா ? சிம்கார்டு போட்ட செல்போன் வரவைக்க முடியாதா ? வயுத்துக்குள்ளே பொற்கொல்லர் உட்கார்ந்து இருக்காரா தங்கத்தில் எப்படி சாமி லிங்க வாந்தி எடுக்கிறீர்கள் என்று கேட்டால் அவன் நாத்திகனாம்."கண்ணா,
நீங்கள் யாரைவேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள்.மகாபாரதத்தில் கண்ணன் "நானே அனைத்தும், உனது நண்பனும் பகைவனும் நானே, உனது சகலமும் நானே,ஆக நீயே நான்,நானே நி.நீ செய்யும் பாவமும் நானே ,நீ செய்யும் புன்னியம்மும் நானே" என்று இந்த உலகத்தின் உன்னத தத்துவத்தை கூறிய பின் அர்ஜுனனை வில்லேடுத்து போரிட கூறுவான். ஆக சகலமும் கடவுள் என்றபின் அதில் மலமெங்கே மூத்திரமெங்கே.இன்று நீங்கள் குறிப்பிடும் சாமியார் லிங்கத்தை வாயிலிருந்து எடுப்பவர்தன்,அவரால் பூசணிகாயை கண்டிப்பாக எடுககமுடியாதுதான். ஆனால் அவர் தனது ஒழுங்கினங்களுக்கு அப்பால் ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மற்றும் மேடக் மாவட்டங்களில் (Medak and Ananthpur) மக்களுக்கு நிரந்தர குடிநீர் தீர்வை கொடுத்துள்ளாரே....புட்டபர்த்தியை சுற்றியுள்ள 700 கிராமங்களுக்கு அரசுசெய்யவேண்டிய போதுமான உள்கட்டமைப்பு வேலைகளை செய்துள்ளாரே.ஏன் உங்கள் "பகுத்தறிவு பல்விளக்கி" கருணாநிதிகூட அவரிடம் தமிழகத்திற்கு தன்நீர் உதவி செய்ய்வேண்டும் என்று கூறி அதற்கான திட்டமும் பெற்று அவருக்கு பாராட்டு விழாவும் நடதினாரல்லவா.தனிமனித துவேஷத்தை தாண்டி அவரும் இந்த சமுதாயத்துக்கு,அவர் சார்ந்த,சாராத பிர மத மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லதுதானே செய்துள்ளார்.ஏன் பெரியார்கூட பெண்பித்தராமே, ஆனால் அவர் கொள்கைகளை நீங்கள் ஏற்று கொள்ளவில்லையா?


"நான் என்னமோ பெரியார் கொள்கைகளை பதிவுலகில் பறைசாற்றுவேன் என்று சபதம் செய்து கொண்டு வநதது போலவும் அதில் பிரழ்ந்து எழுதுகிறேன், எனது பகுத்தறிவு புனித(!) தன்மை பால்பட்டு, திரிந்து மோராகிவிட்டதாகவும், பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறேன் என்பது போலவும் புரிந்து கொண்டு, நீ ஏன் இஸ்லாமியரைக் கேட்பது இல்லை, போப்பாண்டவரைக் கேட்பது இல்லை ? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள், நான் பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவனோ அதற்கு பாதுகாவலனோ இல்லை."
கண்ணா,
உதைபட்டவுடன் இந்த சப்பைகட்டை கட்டிவிடீர்கள்.அரசியலைபற்றியும் சினிமாவை பற்றியும் விமர்சனம் செய்ய அரசியல்வாதியாகவும்,சினிமாகாரனாக இருக்க தேவைல்யில்லை.எனவே உங்கள் போலி பகுத்தறியும் பண்பை, "திக கூட்டதுக்கு நான் செல்லவில்லை அதனால் நான் திக'காரன் இல்லை" என்று சொல்லி நடைகட்ட முடியாது. பெரியாரிசம் பேசிவிட்டு இப்படி தப்பித்தால் என்ன அர்த்தம் கண்ணா?


"மூட நம்பிக்கையை கேள்வி கேட்பவன் எல்லாமே நாத்திகனா ? ஆத்திகவாதி என்றால் சாமியார்களில் லீலைகளை தெய்வீகமாக கருதி அவர்கள் பாதுகாப்புடன் உறவு கொள்ள காண்டம் வாங்கிக் கொடுத்து பணிவிடை செய்ய வேண்டுமா ?"
அய்யோ கண்ணா,
நீங்கள் மூடன் என்றோ முட்டாள் என்றோ யாரும் சொல்லவில்லை. உண்மையை பரப்புவேன் என்று சொல்லி தனது பருப்பு வேகாமல் ஊருக்கு இளைத்தவனை வம்பிழுபதுதனே மடமையின் உச்சகட்டம்.நீங்கள் காண்டமை(CONDOM) யாருக்கும் வாங்கிதரவேண்டியதில்லை.அரசாங்கம் இப்போது செய்யும் உருபடியாண வேலைகளில் அதுவும் ஒன்று. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு முஸ்லிமிடம் போய் "ஐயா உங்கள் மதத்தில் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்.நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் தலாக்,தலாக்,தலாக் என்ற மந்திர வார்த்தை மூன்று முறை கூறி செய்தகல்யானத்தை செயலிழக்க செய்துவிட்டு மீண்டும் ஒரு பதினாறு வயது மங்கையை கல்யாணம் செய்யலாம்,ஆனால் உங்களுக்கு ஏற்கனவே இருபது வயதில் ஐந்து மகன்கள் உள்ளார்கள்..எனவே உங்கள் ஆத்திர அவசரத்துக்கு இந்த பலுனைகொஞ்சம் போடவேண்டிய இடத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.இனி உங்களுக்கு பிள்ளைகள் பிறக்கவில்லையென்றால் எல்லாம் வல்ல "அல்லா" கோவித்துகொள்ளமாட்டர் என்று அறிவுறுத்துங்கள்.இல்லை கருக்கலைப்பு பாவம் என்று பிதற்றும் கிறித்தவ பாதிரிகளிடம் அந்த "condom"ன் மகிமையை அரிவுருதுங்கள்""நான் பகுத்தறிவாளன் அல்ல, போலி பகுத்தறிவாளன் தான், போலி மதச்சார்பின்மை என்னும் சந்தர்பவாதம் போல்.... போலி பகுத்தறிவாளனான என்னால் இந்து மதத்தை மட்டுமே கேள்வி கேட்கமுடியும்."கண்ணா,
நீங்கள் போலி என்று ஏற்றுகொண்டத்ற்கு எணது பாராட்டுக்கள்.பிற மதத்தை கேள்வி கேட்டால் செருப்படியும் வீட்டுக்கு ஆடோவும் வரும் அல்லவா?ஏன் உங்கள் உயிரே கூட போகலாம். எனவே ஊருக்கு இலைத்தவனிடம் உங்கள் வீரதீரபராகிரமத்தை
காட்டுங்கள்.நீங்கள்தான் உண்மையான வீரன்!!!!"பகுத்தறிவாளனின் லட்சணம் என்ன ? அனைத்து மதத்தையும் சமமாக கருதி, எல்லா மதத்தையும் தூற்ற வேண்டுமாம் ! என்ன ஒரு சூப்பர் புரிதல் ! அப்படி செய்பவர்களைத்தான் பகுத்தறிவாளனாக ஒப்புக் கொள்வார்களாம், மற்றவர்களெல்லாம் போலி பகுத்தறிவாதிகளாம். இப்படி லட்சணத்துடன் இருக்கும் பகுத்தறிவாளனின் செயலை எத்தனை ஆத்திகர்கள் போற்றுகிறார்கள்? பகுத்தறிவாளன் பகுத்தறிவாளானாக இல்லை என்பதற்கு இவர்கள் படும் கவலையில் எதாவது உண்மையான ஆதங்கம் இருக்கிறதா ? கருணாநிதி மஞ்ச துண்டு போட்டால் பகுத்தறிவாதம் செத்துடுமா ? எதுவுமே போடாத பெரியாரை இவர்கள் போற்றி இருக்க வேண்டுமே ? அப்படி எதுவும் செய்தது போல் தெரியவில்லை. பிறகு ஏன் பகுத்தறிவாளன் போலியா ஒரிஜினிலா என்றெல்லாம் கவலைப்பட வேண்டும் ?"கண்ணா,
மேலே கூறியதுபோல் பெரியார் கூறிய சில கருத்துக்கள் ஆழமானவை.ஆனால் அவை அனைத்தும் கூர்முனை தீட்டி எறியப்பட்டது ஒரு சமூகத்தின்மேல்.பார்பனீயம் பார்பனீயம் என்று இன்னுமெத்தனை காலத்துக்கு சொல்லிகொண்டிருபீர்கள்.நீங்கள் மட்டும் "பார்பான்'என்று சொல்லலாம் ஆனால் பிறர் மட்டும் "பறையன்" என்றுசொன்னால் வண்கொடுமை சட்டத்தால் கைது கைதுசெய்யபடுவார்களாம். கருணாநிதி எக்கேடு கேட்டால் எனகென்ன.அவர் ஏப்போதும் கடவுள் மறுப்பு சிந்தனை என்ற கருவியை ஆயுதமாக உபயோகிக்க துடிப்பவர்.பெரியார் "எதுவும்"போடமாட்டார் என்று எனக்கு எப்படி தெரியும்((இது வெறும் நகைச்சுவைக்காக))))).


"நான் பகுத்தறிவாளன் இல்லை, போலி பகுத்தறிவாளன் அல்லது அறைகுறை பகுத்தறிவாளன் !"
கண்ணா,
உங்களை நீங்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு போலி போலி என்று புகழ்ந்துக்கொண்டிருப்பீர்கள்"பகுத்தறிவாளன் பட்டம் வேண்டுமா ? எல்லா மதத்தையும் திட்டிவிட்டு வாருங்கள், அப்பொழுது தான் நீங்கள் உண்மையான பகுத்தறிவாளன் என்ற பட்டம் தந்து உங்களை கவுரவிப்பார்கள், நீங்கள் இந்து மதத்தை மட்டும் குறைத்துச் சொன்னால் நீங்கள் போலி பகுத்தறிவாளன் என்றே தூற்றப்படுவீர்கள் !

நான் போலி பகுத்தறிவாளனாக இருக்கவே விரும்புகிறேன் !
:)))))"
கண்ணா,
உங்களைபோன்றவர்கள் போலிகளாக மட்டும் இருந்தால் பரவாயில்லை பேடிகளாக அல்லவா இருகிறீர்கள்.இன்ன பிற செயல்களை,அட்டுழியங்களை செய்பவரை பார்க்காமல் ஊருக்கு இளைத்தவனை நோன்டுபவர்களை "பேடியேன்று" சொல்லாமல் வேறென்ன சொல்லவேண்டும் கண்ணன்

அன்புடன்...
விஷ்வா

Arizona penn சொன்னது…

"பெரியாருடைய பல கருத்துக்களில் எனக்கு மிகுந்த உடண்பாடு உண்டு,ஆனால் அவரும் தனது பார்வையை ஹிந்து மதத்தின்மீதே செலுத்தினார்..."

விஷ்வா அவர்களே, பெரியாரும் சரி, நானும் சரி, நாங்கள் ஹிந்து மதத்தை சார்ந்தவர்களாக தான் கருதப்படுகிறோம். எனவே, எங்கள் மதத்தில் இருக்கும் குறைகளை விமர்சித்து கேள்வி கேட்கிறோம். என் வீட்டில் இருக்கும் குற்றம் குறைகளை கேள்வி கேட்டால், அடுத்த வீட்டில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி, அந்த வீட்டில் பொய் ஏன் கேள்வி கேட்கவில்லை என்று கேட்கிறீர்களே? என்னவென்று சொல்வது உங்கள் அறிவை?

"ரஷியாவுக்கெல்லம் சென்றுவந்தவர்தனே..அங்கு கம்மியுநிஸதீன் பெயரால் அரங்கேறிய கொடுமைகளை எங்காவது என்றாவது தனது திருவாய் மலர கூறியுள்ளாரா...."

விஷ்வா அவர்களே, சோவியத் ரஷிய அரசு அவருக்கு சுட்டிக்காட்டிய கூட்டுப்பண்ணைகளையும், மக்களின் எற்றத்தாழ்வில்லாத வாழ்வையும் பார்த்துவிட்டு வந்து எந்த மனிதரால்தான் கம்யூனிசத்தை திட்ட முடியும்? ஆனாலும் சோவியத் ருஷியா சென்று வந்தப்பின் தான் கண்டவற்றை பற்றி பெரியார் கூறும்போது என்னக்கூறினார் தெரியுமா? "மிகுந்த கட்டுப்பாடுகளை ருஷியா கம்யூனிஸ்டு அரசு மக்களின் மீது விதிக்கிறது...இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அந்நாடே சிதறி விடும்" என்று தான் கூறினார். அதுவே நடந்தது....

"அது போகட்டும் "இந்தியாவுக்கு சுதந்திரமே வேண்டாம்" என்று வெள்ளையனிடம் மண்டியிட்டவர்தனே இந்த பெரியார்." "தனிமனித ஒழுக்கமென்றால் எவ்வளவு ரூபாயென்று கேட்பவர்தானே இந்த பெரியார்...பெண்கள் பாப்(BOB) கட்டிங்(CUTTING) செய்துகொண்டால் மட்டும் பெண்ணியம் தழைதோங்குமா என்று கூறும் உங்கள் பெரியாரையும் அதே குற்றச்சாட்டுடன் கூண்டில் நிறுத்த முடியும்..."

வரலாறு தெரியாமல் பேசும் விஷ்வா அவர்களே, தமிழ்நாட்டில் சுதேசி கதராடையை மக்களிடத்தில் மிகவும் பரவலாக எடுத்துச்சென்ற தலைவரே பெரியார்தான் என்று உங்களுக்கு தெரியுமா? பாரதியார் சொன்னார் " பெண் விடுதலையும், சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயமும் கொண்ட இந்தியா உண்மையான சுதந்திரம் பெற்ற இந்தியா" என்று. அதைத்தான் பெரியாரும் சொன்னார். இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெறும்போது, இந்தியாவில் பெண்களின் நிலைமையும் மிகவும் மோசமாக இருந்தது, சமுதாயத்தில் சாதிக்கொடுமைகளும் மலிந்திருந்தது. அந்த நிலையில், திரும்பவும் மேல் சாதிக்காரர்களின் கையில் அரசாங்க இயந்திரங்கள் சென்றால் சாதிக்கொடுமைகளுக்கு விடிவு காலம் பிறக்காமல் போய் விடுமே என்ற வேதனையில் விளைந்த வார்த்தைகள் அவை!!!!

"தனிமனித ஒழுக்கமென்றால் எவ்வளவு ரூபாயென்று கேட்பவர்தானே இந்த பெரியார்..."

விஷ்வா அவர்களே, இளமையில் பெரியார் நடன விடுதிகளுக்கு சென்றதை தான் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பெரியார் சாதாரண "ராமசாமி"-ஆக இருந்தபோது இருந்ததை சுட்டிக்காட்டுகிறீர்கள். காந்தியும் "மஹாத்மா"-வாக மாறும்முன் மிகவும் மோசமான பழக்கங்களை கொண்டிருந்தவர்தான். ஆனால், இருவருமே தாங்கள் செய்த தவறுகளுக்கு சப்பை கட்டு கட்டவில்லை. அதனால் தான், அவர்கள் பெரியாறேன்றும் மகாத்மாவென்றும் அழைக்கப்படுகிறார்கள்.

"பெண்கள் பாப்(BOB) கட்டிங்(CUTTING) செய்துகொண்டால் மட்டும் பெண்ணியம் தழைதோங்குமா என்று கூறும் உங்கள் பெரியாரையும் அதே குற்றச்சாட்டுடன் கூண்டில் நிறுத்த முடியும்..."

விஷ்வா அவர்களே, சீதையை சந்தேகப்பட்டு தீயில் குதிக்கவைத்த ராமனை தெய்வம் என்று வணங்கும் உங்களை போன்றவர்களுக்கு பெரியார் குற்றவாளி போல் தான் தெரிவார். பெண்கள் அறிவு தெளிவு பெற்று, நன்றாக படித்து, சமுதாயத்தில் ஆணுக்கு சமமான நிலைக்கு உயர்ந்தால் தான் பெண்ணியம் தழைத்தோங்கும்...போப் cutting செய்துக் கொண்டால் பெண்ணியம் வளராது....பெரியார் சொன்னது முழுக்க முழுக்க உண்மை...விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டும், எதையும் பகுத்தாராயும் திறனிருக்கும் அனைவருக்கும் இந்த உண்மை புரியும்.....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்