பின்பற்றுபவர்கள்

21 மார்ச், 2008

KRS ! ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - நியூட்டன்

E = MC^2 என்ற சமன்பாட்டில் வழி இறைத்தன்மை இருப்பதாக நண்பர் அன்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இருபகுதிகளாக எழுதினார். நன்று. அதற்கு எடுத்துக்கொண்ட பொருள் 'இருப்பது' 'இல்லாதது' அதாவது வெளிச்சம் அற்ற நிலை இருட்டு என்கிறோம். இருட்டு என்று ஒன்று தனியாக கிடையாது என்றால் வெளிச்சத்தை இருப்பதாகத்தான் கொள்ள முடியும் என்றார். மேலும் பாலில் நெய் இருப்பது போல் என்ற அப்பர் சாமிகளில் பாட்டையும் ஆதாரமாகக் காட்டி மறுக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பினார். பாலில் நெய்மட்டும் இருக்கிறதா ? இயற்ப்பியல் விதிபடி எந்த பொருளும் மாறுபடும் போது வெறொரு வடிவம் எடுக்கிறது. பால் தயிரானால் வெண்ணை அதன் பிறகு உருக்கினால் நெய். பாலே நெய்யாக மாறிவிடாது. நெய் இருக்கும் போது பாலின் உண்மையான தன்மை அங்கு இருப்பதில்லை. ஒன்று மன்றொன்றாக மாறி இருக்கிறது. இது எப்படி இருப்பதை மெய்பிக்கும் உவமையாகும் ? சுவிட்சை நிறுத்தியதும் இருந்த வெளிச்சம் என்ன ஆனது ? இருட்டில் வடிவம் எடுத்து இருந்தது ஒளி பின்பு அது இருட்டுடன் கலந்துவிட்டது அல்லது இல்லாது போய்விட்டது என்று சொல்லலாமா ? நன்பகல் சூரிய ஒளியில் தொலைவில் இருக்கும் சுடரை பார்க்கலாம், சுடர் ஏற்படுத்தும் வெளிச்சத்தை பார்க்க முடியுமா ? இருட்டு என்று இல்லை என்றால் வெளிச்சம் தன்னை வெளிச்சம் போட முடியாது.

பக்தியாளர்களுக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கிரியேஷன் அதாவது படைப்பு என்பதை நம்புவார்கள். உலகம் 6 நாளில் இறைவனின் சித்தத்தில் தோன்றியதாக ஆப்ரகாமிய மதங்களின் கோட்பாடுகள் சொல்கின்றன. இந்துமதம் தவிர்த்து இந்திய தத்துவங்கள் இதை மறுக்கின்றன.

நியூட்டனின் விதிப்படி எந்த ஒரு விசையையும் ஆக்கவே அழிக்கவோ முடியாது. இது பொருள்களுக்கும் பொருந்தும். இல்லாத ஒரு பொருளை எவராலும் உருவாக்கித்தர முடியுமா ? அதாவது உலகில் உள்ள அனைத்தும் எவராலும் உருவாக்கப்படவில்லை. பின்பு ஏன் பொருள்களுக்கான வடிவம் கிடைக்கிறது ? பொருளின் வடிவம் அடிப்படை மூலப் பொருள் ஒன்றை மற்றொன்றுடன் கலக்கும் போது அவை பிரிதொரு பொருளாகவும் வடிவமாகவும் மாறிவிடுகிறது. வெளித்திறலின் (பிரபஞ்சம்) முழு அமைப்பிற்கும் இது பொருந்தும். இறைவன் உருவாக்கினான் என்றால் அவனை உருவாக்கியது யார் என்று கேள்வி பழைய கேள்வி அதற்குள் செல்ல வேண்டாம். ஆனால் ஏன் உருவாக்கினான் என்ற கேள்வி எழுப்பலாம் அல்லவா ?

உலகைப்படைத்தும் அதில் மனிதர்களைப் படைத்தும், என்னால் படைக்கப்பட்டவர்களான நீங்கள் என்னிடம் விசுவாசமாகவும் என்னை நம்புவராகவும் இருக்க வேண்டும், அப்படி செய்தால் உங்களுக்கு மறுமையில் அதற்கான பலன் கிடைக்கும் என்று சொல்வதன் மூலம் இறைவன் என்ன பலனை பெறுகிறான் ? அதாவது இறைசித்தம் என்பதன் நோக்கம் என்ன ? so called ஒரு புதிய கிராமத்தை உருவாக்கி... அதில் மக்களை பிறக்க வைத்து ... குடியமர்த்தி என் ஆட்சியில் கீழ் என் சொல்படி கேட்டுக் கொண்டு இருங்கள், இல்லை என்றால் இதனை மீறுபவர்களுக்காகவே பக்கத்தில் கொடிய விலங்குகள் உள்ள காடு இருக்கிறது, அதில் கொண்டு விட்டுவிடுவேன் இதுவே என் நோக்கம் என்று சிறிய அளவுக்கு இதனை கூறலாமா ?

இறை இருக்கிறது என்று நம்புவர்கள், இறைசித்தத்தின் நோக்கம் அதாவது படைப்பின் நோக்கம் இதுவென்று அறிய முடியாதபோது இருப்பதை நிருபிப்பது எங்கனம் ?

படைப்பு என்று ஒன்று கிடையவே கிடையாது, இல்லாத ஒன்றை படைத்தார் என்று சொன்னால் இறைவனும் இல்லாத ஒன்றாக இருந்து ஒரு நாள் தோன்றி இதையெல்லாம் படைத்தார் என்று சொல்ல முடியும். இல்லாததில் இருந்து இறைவன் உருவாகவில்லை என்றால் இல்லாத ஒன்றை மட்டும் எப்படி படைக்க முடியும் ?

பிரபஞ்சம் முழுவதுமே காந்த விசையின் பிணைப்பில் இயங்குகிறது, கூடவே வாயுக்கள் சேர்த்தலில் நடக்கும் வேதிவினைப்படி பிரபஞ்ச விரிவும் ஒடுக்கமும் நடைபெறுகின்றன. விரிந்து கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் வெற்றிடமாக இருப்பதெ ஆகாயம் என்கிறோம், விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் காந்த புலன் விசை குறிப்பிட்ட எல்லையில் விசை தளரும் போது மீண்டும் உள்னோக்கிய அழுத்தம் கிடைத்து பிரபஞ்சம் சுருங்க ஆரம்பிக்கிறது.

விதையின் தன்மையில் முழுமரத்தின் அமைப்பும் இருக்கும், ஒரு விதை சரியான இடத்தில் சரியான சூழலில் விதைக்கட்டால், அதன் முழுப்பலனான மரமாக வளர்ந்து இறுதியில் அது விதைகளைத்தான் தோற்றுவிக்கும், விதையாக இருக்கும் பொழுது முழுமரமும் அதில் ஒடுங்கி இருக்கிறது, சுற்றுச்சூழலி தொடர்பு கொள்ளும் போது மரமாக பரிணமிக்கிறது. விதையாக இருக்கும் போது மரம் இல்லை. மரம் என்னும் விரிவுத்தன்மையில் விதையில் உள்ள அத்தனை ஒடுக்கமும் இருப்பதில்லை, மரமாக இருப்பது ஐம்பூதங்கள் கலந்த வேதிப்பொருளும் அதன் இலக்கான விதைக்கான மூலப் பொருள் மட்டும் தான் இருக்கும். ஆக மரம் என்பது விதையும் பஞ்சபூதமும் கலந்த விதையின் திரிந்த வடிவம்.

அடுத்து இந்த விதை முதன் முதலில் எங்கிருந்து வந்தது என்று கேட்கமுடியுமா ? வாயுக்கோளங்களும், திடப்பொருள்களும் பல்வேறு விகித பிரிவில் சேர்ந்து வினையாற்றும் போது கிடைக்கும் தனித்தனிவடிவம் தான் முழு பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும். உயிரற்றவை அல்லது உயிருள்ளவை என்று சொல்லப்படுவது யாவும் அதில் உள்ள அனுத்துகளின் துகள்களின் சேர்கையின் அளவைப் பொருத்து அமைந்துவிடுகிறது, உயிருள்ளவற்றில் நடப்பது சுழற்சி, உயிரற்றவற்றில் நடப்பது சுழற்சியின்மை ஆனால் மாற்றத்திற்கு உட்பட்டது, திடமான கல் சிதைந்தால் மணலாகும், இன்று மணல் துகளாக இருப்பெதெல்லாம் மாமலையில் இருந்து காற்றினாலும், நீரினாலும் மற்ற வாயுக்களின் சேர்க்கையால் எற்பட்ட பிரித்தல் என்ற வேதிவினையால் ஏற்பட்ட வடிவம்.

உயிருள்ளவையின் நோக்கம் அதை பெருக்குதல் மட்டுமே, பஞ்சபூதங்களை தின்று வளர்ந்த அதன் உருவம் இறுதியில் பஞ்சபூதமாகவே மாறிவிடும், விதை வளர்ந்து மரமானால் மரம் காய்ந்து சிதைந்து துகள்களாக மாறி நிலத்தில் சேர்ந்து உரமாகிவிடுகிறது அத்துடன் அதன் வடிவம் முற்றிலும் மறைந்துவிடுகிறது.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, பிரபஞ்ச வெடிப்பும் ஒடுக்கமும் அதைத்தான் சொல்கிறது. வெடிப்பும் ஒடுக்கமும் தொடர் நிகழ்வு. அந்த நிகழ்வு தூண்டலுக்கான சக்தி வெளியில் இருந்து வரவில்லை என்பதால் அதை அழிக்க முடியாது. மழையை அழித்தால் மேகமாக மாறி திரும்பவும் மழையாகத்தான் மாறும். மழை என்பது ஒடுக்கம், மேகம் என்பது விரிவு.

பிரபஞ்சம் என்ற ஒன்றை இறைவன் உருவாக்கவில்லை, அது என்றுமே இருப்பது. அதன் வெடிப்பு நடக்கும் போது கோள்கள் அதிலிருந்து வடிவம் பெறுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு கோள்களில் உள்ள சக்தி குறைந்து ஒடுக்க மையத்தை நோக்கி நகர்ந்து ஒடுங்கிவிடுகிறது. இவ்வாறு அனைத்து கேலக்சிகளும் ஒடுங்கும் போது ஏற்படும் அளவிடமுடியாத அழுத்தம் மீண்டும் பிரபஞ்சவெடிப்பிற்கான காரணியாக மாறிவிடுகிறது.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற தத்துவம் உண்மை என்னும் போது படைப்பு என்று உண்டு என்பதே தவறு. படைப்பு என்று எதுவுமில்லை. எல்லாம் ஒன்று மற்றொன்றாக ஆகும் உருமாற்றம் தான். இதில் இறைவனின் செயல் என்று எதைச் சொல்ல முடியும் ? பக்தியாளர்களின் கூற்றுப்படி நன்மை தீமை என்ற பகுப்பில் நன்மைக்கு காரணம் இறைவனாகவும், சுனாமி போன்ற சோகங்களுக்கு இறைவன் காரணமல்ல என்று சொல்லும் போதே நடப்பது எல்லாம், எல்லாம் வல்ல இறைவனில் லீலை என்பது பொருள் அற்றது என மாற்றுகிறீர்கள் அல்லது அதை மறுக்கிறீர்கள்.
நான் ரவிசங்கரின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல், இறைவன் இருந்தால் அது/அவன்/அவள் செயலற்றதாகவே ஒரு சாட்சி நிலையில் இருக்கும், அதனால் எதையும் மாற்றி அமைக்கவோ, புதிதாக உருவாக்கவோ முடியாது. இறைவன் தோன்றியோ, தான்தோன்றியே இல்லை.

நான் எதையும் மெய்பிக்கவோ பொய்யாக்கவோ முயலவில்லை. படித்தவற்றில் இருந்து எனக்கு ஓரளவு புரிவதாகவும் ஏற்கமுடிவது போல் இருப்பதை இங்கே பகிர்ந்து கொண்டேன்.

இந்த இடுகை திரு ரத்னேஷ் அவர்களுக்கும், டிபிசிடி ஐயாவுக்கும் காணிக்கை.

50 கருத்துகள்:

TBCD சொன்னது…

நன்றி..நன்றி..நன்றி....

TBCD சொன்னது…

இன்னைக்கு மருந்துக் கடைகளில் கொஞ்சம் ஈனோ அதிகமா விற்பனை ஆகும்.

வயித்தெரிச்சலுக்கு நல்ல மருந்தாமே..!!

TBCD சொன்னது…

கடவுள் இருக்கிறார்..

இல்லாமல் போகிறார்..

அவரால் சமுகத்திற்கு பலன் என்ன..?

இயற்கையயை கடவுள் என்றுக் கொண்டாடி, அப்படியே,அதுக்கும் நாங்க தான் அத்தார்ட்டி என்று ஆன்மிகவாதிகள்/ஆத்திகர்கள் சொல்லலாம்.

உலகிற்கு பொதுவான ஒன்று இயற்கை..அப்படி பொதுவான ஒன்றை ஏன், பல தரப்பட்ட கடவுளர்கள் படைத்தார்களாம்..(படைத்தார்களா..என்பதே கே(லி)ள்விக்குரிய விசயம்)

சூரியன், உலகின் எந்த மூலையிலும் வெப்பம் தரும். அதுப் போல் அனைத்து மக்களையும் ரட்சிக்கும் கடவுள், யார்.. (ஏன்னா, ஒரு பகுதியில் வணங்கும் கடவுளை மறுபகுதியில் இருபப்வர்கள் வணங்குவதில்லை..பெரும்பான்மையோர்...)

சரி, கடவுளை வணங்குவதால் என்ன நன்மை..

வணங்காமல் இருந்தால் என்ன தீமை..

வணங்கினாலும், வணங்காவிட்டாலும், வித்தியாசமே இல்லை என்றால் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்.

இந்தக் கடவுளை வணங்காமல், அந்தக் கடவுளை வணங்குபவர்களுக்கு சொர்க்கம் உண்டா.

அப்படி அவர்களூக்கு சொர்கம் இல்லையென்றால்..அது யார் தவறு..மக்கள் தவறா...கடவுள் தவறா..


இப்படி கேட்டுட்டேப் போகலாம்..

இயற்கை எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாததை மறைக்க, கடவுளை உருவாக்கி பிரச்சனையயை ஒத்தி வைத்துவிட்டார்கள்.

ஜெகதீசன் சொன்னது…

நன்றி!!!!
:)
இடுகையை முழுசாப் படிச்சுட்டு வருகிறேன்...

SP.VR. SUBBIAH சொன்னது…

உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
- கவியரசர் கண்ணதாசன்

உண்டு என்று சொல்பவர்களுக்குக் கடவுள் இருக்கிறான்
இல்லையென்று சொல்பவர்களுக்கு அவன் இல்லை
----இரண்டுமே உண்மை!

சரி பிரச்சினை எங்கே?
இருசாராரும் தங்கள் கருத்திற்கு ஆள் பிடிக்க நினைப்பது மட்டுமே!

யாரைப் பிடிக்க நினைக்கிறார்கள்?

உண்டு என்பவன் கட்சி மாறமாட்டான்
இல்லையென்பவனும் சர்வ நிச்சயமாகக் கட்சி மாற மாட்டான்

இரண்டிற்கும் நடுவே மதிமேல் உட்கார்ந்திருக்கிறானே அன்தான் பிடிபட வேண்டிய ஆள்
அவன் எந்தப் பக்கம் சாய்வான் என்பது யாருக்குத் தெரியும் - அவனைத்தவிர?

அவன் பிடிபடுவதால் யாருக்கு என்ன லாபம்?
இது என்னஆட்சியைப் பிடிக்க உதவும் அரசியலா?

இரு சாராருக்குமே லாபம் இல்லை!

அதனால்தான்..... மீண்டும் முதல் வரியைப் படியுங்கள்!

வவ்வால் சொன்னது…

கோவி,

அடிச்சு ஆடி இருக்கிங்க !

//அதற்கு எடுத்துக்கொண்ட பொருள் 'இருப்பது' 'இல்லாதது' அதாவது வெளிச்சம் அற்ற நிலை இருட்டு என்கிறோம். இருட்டு என்று ஒன்று தனியாக கிடையாது என்றால் வெளிச்சத்தை இருப்பதாகத்தான் கொள்ள முடியும் என்றார்.//

இதுவே தவறான ஒரு எடுகோள்,

வெளிச்சம் என்பதே நிரந்தரம் இல்லை, இருளே எங்கும் நிரந்தரமாக வியாபித்து இருப்பது. இருள் அற்ற நிலை வெளிச்சம். வெளிச்சம் அற்ற நிலை இருள் அல்ல.

காரணம் இந்த பேரண்டம் முழுவதும் எங்கும் இருப்பது இருளே, ஆங்காங்கே நட்சத்திரங்களில் ஏற்படும் அணுவினையால் ஏற்படும் ஒளி மட்டுமே தெரிகிறது, பேரண்டம் முழுவதும் இருக்கும் இருளில் இவை எல்லாம் மின் மினி பூச்சிகளின் ஒளிக்கே சமம்.

விண்னில் இருந்து பார்த்தால் சூரியன் ஒரு நெருப்பு பிழம்பாக தெரியும் ஆனால், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெளிச்சம் இருக்காது இருளாக தெரியும், ஆனால் பூமியில் மட்டும் எப்படி பகல என்றால் வெளிச்சமாக இருக்கு, காரணம் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிச்சிதறல் தான், அது இல்லை எனில் பூமியிலும் பகலிலும் இருளாக இருக்கும்.

காந்த சக்தியை ,பார்க்க முடியுமா, மின்சக்தியை பார்க்க முடியுமா என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம், காந்தத்தை, மின்சாரத்தை மனிதன் உருவாக்கிக்கொண்டது போல கடவுளையும் மனிதன் உருவாக்கினானா?

RATHNESH சொன்னது…

முன்பே உங்கள் பதிவொன்றின் பின்னூட்டத்தில் சொன்ன ஞாபகம். பெர்ட்ரண்டு ரஸ்ஸல் அவர்கள் Father Copleston என்பவருடன் The Existense of God என்கிற பொருளில் 1948-ல் நடத்திய விவாதத்தில் (அப்போது BBC-யில் ஒலிபரப்பானதாம்) கூறியுள்ள பல விஷயங்களுடன் தங்கள் சிந்தனை ஒத்துப் போகிறது.

கனமான விஷயம். விவாதிக்க ஒன்றுமில்லை. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//எதையும் மெய்பிக்கவோ பொய்யாக்கவோ ...//

இரண்டுமே 100 சதவிகிதம் முடியாமல் போனதுதான் விவாதங்கள் தொடர்வதற்கே காரணம்..

அதுவரை உண்டென்றவர்களுக்கு உண்டு..

இல்லையென்றால் இல்லை என்றிருக்க வேண்டியதுதான்..

சிறில் அலெக்ஸ் சொன்னது…

//விண்னில் இருந்து பார்த்தால் சூரியன் ஒரு நெருப்பு பிழம்பாக தெரியும் ஆனால், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெளிச்சம் இருக்காது இருளாக தெரியும், ஆனால் பூமியில் மட்டும் எப்படி பகல என்றால் வெளிச்சமாக இருக்கு, காரணம் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிச்சிதறல் தான், அது இல்லை எனில் பூமியிலும் பகலிலும் இருளாக இருக்கும்.//

இது சரியான விடையா தெரியல. பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் ஒளிபடும்படி ஏதேனும் இருந்தால் அதன் மீது ஒளி தெரியுமே? சூரிய கிரகணம் இப்படித்தானே ஆகிறது. ஒளி எதிரே பயணிக்கிறது. எதிரே எதுவும் தடுத்தால் அந்த இடத்த்திலிருந்து மீண்டும் திருப்பப்பட்ட திசையில் பயணிக்குது.

Atmosphere இல்லாம பூமி மட்டுமே இருந்தாலும் ஒளி நம்ம மேல படும். கொஞ்சம் வீரியமா.

கையேடு சொன்னது…

வணக்கம் திரு. கோவி.கண்ணன். தங்களது விடுப்பை குறைத்துக்கொண்டது மகிழ்ச்சி.

பதிவைப் படித்துமுடித்தவுடன் உடனடியாகத் தோன்றியது "Return of the Dragon" என்ற திரைப்படத்தின் பெயர்.
தவறாக எண்ணவேண்டாம், தோன்றியதைக் கூறிவிட்டேன்.

பதிவு - வழக்கம் போல் செறிவான பதிவு.

வவ்வால் சொன்னது…

சிறில்,

இப்போ பகலில் வெளிச்சமாக இருக்கே அதே போல இருக்குமா?

இப்போவும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே எந்த எதிரொளிக்கும் பொருளும் இல்லை அப்புறம் எப்படி வெளிச்சமாக பகலில் இருக்கு?

ஏன் இதே சூரியன் தானே விண் வெளியிலும் இருக்கு அப்போ சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வெளிச்சமாக இருக்கலாமே ஏன் கருமையாக இருக்கு?

டார்ச் லைட் அடிக்கிறிங்க , அப்போ எங்கே ஒளி போய் விழுதோ அதுவரைக்கும் ஒரு பீம் ஆக பார்வைக்கு தெரியும் வண்ணம் ஒளி போகுதே அதே போல சூரியனில் இருந்து பூமி வரைக்கும் பீம் ஆக வெளிச்சம் இருக்கணுமே ஏன் இல்லை?

சூரியனின் ஆற்றல் வெப்ப சலனம், கடத்தல் , கதிர் வீச்சு என்று மூன்று வகையில் கடத்தப்படுகிறது பூமிக்கு, ஆனால் வளி மண்டலம் இல்லாத இடத்தில் எல்லாம் கதிர் வீச்சு முறையில் மட்டுமே சூரிய ஒளி பயணிக்கும், ஒளிச்சிதறலும் இருக்காது, அதனால் அங்கே வெளிச்சமாக இராது.

பூமியில் வளி மண்டலம் இல்லைனா சூரிய ஒளி என்பது பூமி மேற்பரப்பில் தரையில் மட்டுமே எதிரொளித்து தரை மீது மட்டும் வெளிச்சம் தெரியும் "just like surface illumination" ஆனால் சுற்றுபுறம் முழுவதும் இருளாக இருக்கும்.வானத்தில் நட்சத்திரங்கள் தெரியும்!

ஆர்ம் ஸ்ட்ராங்க் நிலவில் எடுத்த புகைப்படம் பார்க்கவும்!நிலவின் பகல் அது , பகலிலும் இரவு போலவே நிலவு சூழல் தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கடவுள் இருக்கிறார்..

இல்லாமல் போகிறார்..

அவரால் சமுகத்திற்கு பலன் என்ன..?

இயற்கையயை கடவுள் என்றுக் கொண்டாடி, அப்படியே,அதுக்கும் நாங்க தான் அத்தார்ட்டி என்று ஆன்மிகவாதிகள்/ஆத்திகர்கள் சொல்லலாம்.

உலகிற்கு பொதுவான ஒன்று இயற்கை..அப்படி பொதுவான ஒன்றை ஏன், பல தரப்பட்ட கடவுளர்கள் படைத்தார்களாம்..(படைத்தார்களா..என்பதே கே(லி)ள்விக்குரிய விசயம்)

சூரியன், உலகின் எந்த மூலையிலும் வெப்பம் தரும். அதுப் போல் அனைத்து மக்களையும் ரட்சிக்கும் கடவுள், யார்.. (ஏன்னா, ஒரு பகுதியில் வணங்கும் கடவுளை மறுபகுதியில் இருபப்வர்கள் வணங்குவதில்லை..பெரும்பான்மையோர்...)

சரி, கடவுளை வணங்குவதால் என்ன நன்மை..

வணங்காமல் இருந்தால் என்ன தீமை..

வணங்கினாலும், வணங்காவிட்டாலும், வித்தியாசமே இல்லை என்றால் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்.

இந்தக் கடவுளை வணங்காமல், அந்தக் கடவுளை வணங்குபவர்களுக்கு சொர்க்கம் உண்டா.

அப்படி அவர்களூக்கு சொர்கம் இல்லையென்றால்..அது யார் தவறு..மக்கள் தவறா...கடவுள் தவறா..


இப்படி கேட்டுட்டேப் போகலாம்..

இயற்கை எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாததை மறைக்க, கடவுளை உருவாக்கி பிரச்சனையயை ஒத்தி வைத்துவிட்டார்கள்.//

நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி டிபிசிடி ஐயா ?

கடவுள் இருப்பதால் என்ன பலனா ?

நான் கோவிலுக்கு போனால் சுண்டல் கிடைக்கும், அது பலன் இல்லையா ?

"நான் கோவிலுக்கு போறேன்...கோவிலுக்கு" -வைதேகியை காத்திருக்க வைக்காமல் அங்கு வரச்சொல்லிட்டு காதலை வளர்க்கலாம்.

வேறு என்ன வேண்டும் ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இன்னைக்கு மருந்துக் கடைகளில் கொஞ்சம் ஈனோ அதிகமா விற்பனை ஆகும்.

வயித்தெரிச்சலுக்கு நல்ல மருந்தாமே..!!
//

டிபிசிடி ஐயா,
புது மருந்தாக இருக்கே, மலேசியா தயாரிப்பா ?

வலையில் ஜெலுசில் தானே சொல்லுவாங்க, நீங்க புதுமையானவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
நன்றி!!!!
:)
இடுகையை முழுசாப் படிச்சுட்டு வருகிறேன்...

4:45 PM, March 21, 2008
//

தம்பி ஜெகா,

வருகிறேன் என்றீர்கள், வரவில்லை.
பக்திமானாக மாறி புரக்கணிப்பு செய்துட்டிங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
- கவியரசர் கண்ணதாசன்

உண்டு என்று சொல்பவர்களுக்குக் கடவுள் இருக்கிறான்
இல்லையென்று சொல்பவர்களுக்கு அவன் இல்லை
----இரண்டுமே உண்மை!

சரி பிரச்சினை எங்கே?
இருசாராரும் தங்கள் கருத்திற்கு ஆள் பிடிக்க நினைப்பது மட்டுமே!

யாரைப் பிடிக்க நினைக்கிறார்கள்?

உண்டு என்பவன் கட்சி மாறமாட்டான்
இல்லையென்பவனும் சர்வ நிச்சயமாகக் கட்சி மாற மாட்டான்

இரண்டிற்கும் நடுவே மதிமேல் உட்கார்ந்திருக்கிறானே அன்தான் பிடிபட வேண்டிய ஆள்
அவன் எந்தப் பக்கம் சாய்வான் என்பது யாருக்குத் தெரியும் - அவனைத்தவிர?

அவன் பிடிபடுவதால் யாருக்கு என்ன லாபம்?
இது என்னஆட்சியைப் பிடிக்க உதவும் அரசியலா?

இரு சாராருக்குமே லாபம் இல்லை!

அதனால்தான்..... மீண்டும் முதல் வரியைப் படியுங்கள்!

4:55 PM, March 21, 2008
//

சுப்பையா ஐயா,

நடுவில் ஒருவர் இல்லை என்றால் தீர்ப்பு சொல்ல முடியாது, நீதி செத்துடும். நீதிபதி மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் ?

புரியல்ல தயவு செய்து விளக்கவும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,

அடிச்சு ஆடி இருக்கிங்க !
......உருவாக்கினானா?

//

வவ்ஸ்,

கலக்கலான பின்னூட்டம்.
டிபிசிடி என்கிட்ட காதைக்கடிக்கிறார். "எல்லோரையும் நொங்கு எடுக்கும் வவ்வால் உங்கள் கருத்தை மட்டும் மறுத்துப் போச மாட்டேன் என்கிறாரே ... அவருக்கு போண்டா வாங்கிக் கொடுத்திங்களான்னு கேட்கிறார்"
:)

அவர் பதிவில் பின்னூட்டம் பொழிந்து கண்டன போராட்டாம் நடத்திடலாமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
முன்பே உங்கள் பதிவொன்றின் பின்னூட்டத்தில் சொன்ன ஞாபகம். பெர்ட்ரண்டு ரஸ்ஸல் அவர்கள் Father Copleston என்பவருடன் The Existense of God என்கிற பொருளில் 1948-ல் நடத்திய விவாதத்தில் (அப்போது BBC-யில் ஒலிபரப்பானதாம்) கூறியுள்ள பல விஷயங்களுடன் தங்கள் சிந்தனை ஒத்துப் போகிறது.

கனமான விஷயம். விவாதிக்க ஒன்றுமில்லை. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.
//

ரத்னேஷ் அண்ணா,

காளிதாசன் நாக்கில் காளிதேவி எழுதி பேசச் சொன்னாளாமே, அந்த கதை உங்களுக்கு தெரியுமா ?

இந்த மறுமொழி - உங்களைப் போல் சுறுக்கமாக புதிர் மறுமொழி போட ஒரு சிறு முயற்சி.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...

இரண்டுமே 100 சதவிகிதம் முடியாமல் போனதுதான் விவாதங்கள் தொடர்வதற்கே காரணம்..

அதுவரை உண்டென்றவர்களுக்கு உண்டு..

இல்லையென்றால் இல்லை என்றிருக்க வேண்டியதுதான்..
//

சரியாக சொன்னீர்கள் பாசமலர் அம்மா,

நம்புவர்களை ஒரேடியாக உயர்த்திப் போசி மறைமுகமாக நம்பாதவர்கள் சமூகவிரோதி போல் காட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறில் அலெக்ஸ் said...

இது சரியான விடையா தெரியல. பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் ஒளிபடும்படி ஏதேனும் இருந்தால் அதன் மீது ஒளி தெரியுமே? சூரிய கிரகணம்
//

சிறில் ஐயா,

வவ்வால் வருவார், நேரான விளக்கம் தருவார் என்று நம்பினேன். அபயமளிப்பவர் வந்துவிட்டார்.

தட்டாமல் வந்து எட்டிப்பார்த்து கீ போர்டை தட்டியதற்கு(ம்) நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
வணக்கம் திரு. கோவி.கண்ணன். தங்களது விடுப்பை குறைத்துக்கொண்டது மகிழ்ச்சி.

பதிவைப் படித்துமுடித்தவுடன் உடனடியாகத் தோன்றியது "Return of the Dragon" என்ற திரைப்படத்தின் பெயர்.
தவறாக எண்ணவேண்டாம், தோன்றியதைக் கூறிவிட்டேன்.

பதிவு - வழக்கம் போல் செறிவான பதிவு.
//

கையேடு அவர்களே,
பாராட்டுக்கு மிக்க நெகிழ்ச்சி. மிக்க நன்றி.

தீவிரமாக எழுதுவது பற்றி தற்போது எண்ணம் இல்லை, அவ்வப்போது நல்ல கட்டுரைகளை எழுத முயற்சிப்பேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்வால் said...
சிறில்,

இப்போ பகலில் வெளிச்சமாக இருக்கே அதே போல இருக்குமா?

....... பகலிலும் இரவு போலவே நிலவு சூழல் தெரியும்.
//

வவ்ஸ்,

நான் ஓரளவு ஊகித்த அதே கருத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
நன்றி..நன்றி..நன்றி....
//

காணிக்கையை மனம் உவந்து ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி !

Thekkikattan|தெகா சொன்னது…

கோவியாரே,

ம்ம்... நடத்துங்க, நடத்துங்க! நிறைய வாசிச்சிருக்கீங்கன்னு தெரியுது.

தெளிவா வந்து விழுகுது. கேள்விகள் மட்டுமே நம்மை வளர வைக்கும் படி நிலைகள் என்பதனை இந்தப் பதிவு நல்ல அழுத்தமாகவே முன் வைக்கிறது.

வவ்வால் சொன்னது…

கோவி,

//டிபிசிடி என்கிட்ட காதைக்கடிக்கிறார். "எல்லோரையும் நொங்கு எடுக்கும் வவ்வால் உங்கள் கருத்தை மட்டும் மறுத்துப் போச மாட்டேன் என்கிறாரே ... அவருக்கு போண்டா வாங்கிக் கொடுத்திங்களான்னு கேட்கிறார்"
:)

அவர் பதிவில் பின்னூட்டம் பொழிந்து கண்டன போராட்டாம் நடத்திடலாமா ?//

இப்போலாம் திபிசிடிக்கு நாராயணா தான் ரொம்ப புடிக்குதே ஏன்னு பார்த்தான் ,கலகம் செய்யத்தானா :-))

சரியான அனுகூல சத்ருவா இருப்பார் போல இருக்கே :-))

திபிசிடி பதிவுக்கு போய் கொஞ்சம் நொங்க எடுக்கணும் போல!

போண்டாவுக்கு மடங்க நான் என்ன போண்டா மாதவனா, எனக்குலாம் குவாட்டர் + சிக்கன் லெக் பீஸ் வாங்கி கொடுக்கணும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
கோவியாரே,

ம்ம்... நடத்துங்க, நடத்துங்க! நிறைய வாசிச்சிருக்கீங்கன்னு தெரியுது.

தெளிவா வந்து விழுகுது. கேள்விகள் மட்டுமே நம்மை வளர வைக்கும் படி நிலைகள் என்பதனை இந்தப் பதிவு நல்ல அழுத்தமாகவே முன் வைக்கிறது.
//

தெகா அண்ணாச்சி,

நன்றாக சொன்னிங்க, கேள்வி இல்லை என்றால் அறிவிற்கான கதவு திறக்காது.

நன்றி !

Unknown சொன்னது…

நல்லா தெளிவா, அழகா எழுதி இருக்கீங்க :-)

//ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - நியூட்டன்

E = MC^2 // இந்த மூணு வரியில மட்டும் 3 தப்பு.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - law of conservation of energy (or first law of thermodynamics)(நியூட்டன் சொல்லல)

நியூட்டன் சொன்னது - 3 laws of motion
1. A physical body will remain at rest, or continue to move at a constant velocity, unless an unbalanced net force acts upon it.
2. The net force on a body is equal to its mass multiplied by its acceleration.
3. For every action there is an equal and opposite reaction. (thanks to wiki)

E= MC square = சொன்னது ஐன்ஸ்டீன் :-)

Sridhar V சொன்னது…

நிறைய எழுதியிருக்கீங்க. விரிவா விவாதிக்கும் அளவுக்கு எனக்கு அறிவியல் ஞானம் கிடையாது.

முதலில் எனக்கு தெரிந்த சில விஷயங்களை பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

//பிரபஞ்சம் முழுவதுமே காந்த விசையின் பிணைப்பில் இயங்குகிறது,//

குவாண்டம் மெக்கானிக்ஸின் அடிப்படையில் நான்கு அடிப்படை விசைகள் இருக்கின்றன. Gravitation, Electro Magnetism, Strong Nuclear, Weak interaction விசைகள் என்று சொல்லப்படுகிறது.

நீங்கள் சொன்னது ஒருவகையில் சரி. கேலக்ஸி போன்ற வடிவங்கள் உருவாக புவியீர்ப்பு விசை காரணமாக இருக்கிறது. ஆனால் அந்த பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களுக்கும் அது காரணி இல்லை. சொல்லப்போனால் புவியீர்ப்பு விசை மிகவும் வலுவிழந்ததாகவே கருதப்படுகிறது மற்ற அடிப்படை விசைகளை கணக்கில் கொண்டு பார்த்தால்.

//பிரபஞ்சத்தின் காந்த புலன் விசை குறிப்பிட்ட எல்லையில் விசை தளரும் போது மீண்டும் உள்னோக்கிய அழுத்தம் கிடைத்து பிரபஞ்சம் சுருங்க ஆரம்பிக்கிறது.//

பிரபஞ்சம் விரிகிறது / சுருங்குகிறது என்பது ஒரு hypothesis. இப்பொழுது பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. இன்னும் சில பில்லியன் வருடங்களில் இது சுருங்கலாம் என்று அளவிடப்பட்டிருக்கிறது. அவ்வளவே! அதாவது விரிந்து கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சம் பல கோடி வருடங்கள் கழித்து சுருங்கலாம் என்பது எதிர்பார்ப்பே.

//உயிருள்ளவையின் நோக்கம் அதை பெருக்குதல் மட்டுமே,//

உயிருள்ளவைகளுக்கு இரண்டு நோக்கம். 1) தன்னை காத்தல், 2) தன் இனத்தை காத்தல். இரண்டாவது நோக்கத்திற்காக இனப்பெருக்கம்.

//பிரபஞ்ச வெடிப்பும் ஒடுக்கமும் அதைத்தான் சொல்கிறது. //

பிரபஞ்ச வெடிப்பு பற்றி படித்திருக்கிறேன். பிரபஞ்ச ஒடுக்கம் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

இது ஒரு தொடர் நிகழ்வு என்று நீங்கள் சொல்வதை பார்த்தால் - பலமுறை நிகழ்ந்தது போல் சொல்கிறீர்கள்.

ஒரு முறை நிகழ்ந்ததுதான் Big Bang. இன்னொருமுறை நிகழுமா என்று யாருக்கும் தெரியாது :-)

//ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற தத்துவம் உண்மை என்னும் போது படைப்பு என்று உண்டு என்பதே தவறு. //

மிகச் சரி. energy cannot be created or destroyed. ஆனால் அது இருக்கிறது அல்லவா?

அறிவியலின் கேள்வியும் அதுதான் - 'அந்த சக்தி - அது எப்படி அங்கே இருக்கிறது'

ஆன்மீகத்தின் கேள்வியும் அதுதான் - 'அந்த சக்தி - அது எப்படி அங்கேயே இருக்கிறது...'

நீங்கள் பஞ்சபூதங்கள் என்று கருத்தாக்கத்தில் கொண்டு வந்து முடித்து விட்டீர்கள். வேறு சிலர் அதற்க்கு பெயர் சூட்டி இன்னும் பல படிமங்களோடு புது கருத்தாக்கம் உருவாக்குகிறார்கள். அவ்வளவே!

இதற்க்கு அறிவியலும் விலக்கில்லை. Proton, Neutron, Electron என்று படித்த நாம் இன்று அந்த proton-க்குள் இருக்கும் positron பற்றி அறிந்து கொள்கிறோம். பருப்பொருளே (matter) எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று படித்த நாம் இன்று anti-matter பற்றி படிக்கின்றோம்.

6 நாட்களில் கடவுள் உலகை உருவாக்கினார் என்ற கருத்தாக்கத்தை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கே நிரூபனம்?

பல கோடி வருடங்களுக்கு பிறகு நிகழக்கூடும் என்று அறிவியல் சொல்கிற பிரபஞ்ச சுருக்கத்தை நீங்கள் கேள்வி கேட்காமல் ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் ஆத்திகருக்கில்லை. எங்கே நிரூபனம்?

மற்றபடி இது சரி, இது தவறு என்று பொதுமைபடுத்துவது கடினம்.

தேடல் தொடரும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//TBCD said...
இன்னைக்கு மருந்துக் கடைகளில் கொஞ்சம் ஈனோ அதிகமா விற்பனை ஆகும்.//

ஹிஹி
என்ன கசிந்துருகும் நோக்கு உங்களுக்கு டிபிசிடி அண்ணாச்சி! வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடறீங்க! வயிறு எறிவரைக் கண்டபோதெல்லாம் மருந்து விக்கறீங்க! அருமை! அருமை! :-)

போர் முடியும் முன்னரே வெற்றி முரசு கொட்டிக்க உங்களுக்குச் சொல்லியா தரணும்? :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

கோவி அண்ணா
ஆற்றலை அழிக்கவும் முடியாது! ஆக்கவும் முடியாது! ரொம்பவும் சரியாச் சொல்லி இருக்கீங்க!
Nothing stays! Everything transforms!!

//இல்லாத ஒன்றை படைத்தார் என்று சொன்னால் இறைவனும் இல்லாத ஒன்றாக இருந்து ஒரு நாள் தோன்றி இதையெல்லாம் படைத்தார் என்று சொல்ல முடியும்.//

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது!
ஆனா ஆற்றல் பிறவற்றை ஆக்கும்! அழிக்கும்!

ஒரு பொருளை இன்னொரு பொருளாய் ஆற்றல் மாற்றும்!
பொருள்-1 அழியும், பொருள்-2 ஆகும், இதை ஆற்றல் செய்யும்!

அதே தான்! :-))
எது ஆற்றல், எது பிற-ன்னு, பழுத்த ஆன்மீகப் பதிவர் உங்களுக்குத் தெரியாதா என்ன? :-))

அப்பர் பால் சாப்பிட்டது உங்களை ரொம்பவே அசைச்சிருச்சி-ன்னு கேள்விப்பட்டேன்! டிபிசிடி கிட்ட ஈனோ இருக்கு! கவலைப்படாதீங்க! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

நேரமின்மையால் சிறில் அண்ணாச்சிக்கு இட்ட அதே பின்னூட்டங்களை இங்கேயும் தருகிறேன்! அடியேன் பி.க செய்கிறேனா-ன்னு நீங்க தான் சொல்லோனும்!

-------------------------
எப்படி அறிவியல் தன் சாதக பாதகங்களை உணர்ந்து தன்னை வளப்படுத்திக் கொள்கிறதோ, அதே வழியைத் தான் மெய்யியலும், மெய்யான ஆன்மீகமும் செய்கின்றன!
I would say both are NOT contradictory but complementary!
---------------------
அப்புறம் சிறில்,
நான் ஆன்மீகம்-ன்னு சொல்லும் போது எல்லாம் குறிப்பது not religion but spirituality!
நான் மதத்தைக் குறிக்கவில்லை!
-------------------------------

//பாட்டுக்கு சுவை சேர்க்க பாலை சேர்த்த அப்பரை//

சுவை சேர்க்க பாலை எதுக்கு இழுக்கனும்? பலாப்பழத்தை இழுத்திருக்கலாமே?

//இழுத்துவந்து அவர்கள் வாதாத்தில் கூறுவது பொருந்திவரவில்லை//

ஏன் பொருந்தி வரவில்லை என்று கூறாமல், வெறுமனே சுவைக்குச் சொன்னது தான், பொருந்தி வரவில்லை என்று நீங்கள் கூறுவதும் சுத்தமாகப் பொருந்தி வரவில்லை!
---------------------------------
ஜீவா
அறிவியலைக் கண்டு மதம் பயப்படுகிறதோ இல்லையோ…
ஆன்மீகம் (மதம் அல்ல) அறிவியலைத் துணைக் கொள்வதைக் கண்டு, மதம் அல்லாத சிலர் ரொம்பவே பயப்படுகிறார்கள்! :-)))

அதாச்சும் என்னன்னா, அறிவியலை இவர்கள் மட்டும் தான் துணைக் கொள்ள வேண்டும். அறிவியல் உத்திகளை ஆன்மிகம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! அதான் ஆன்மீகம் ரொம்ப பெருசாச்சே! அது கிட்டயே நிறைய இருக்குமே! எதுக்கு எங்க அறிவியல் கிட்ட இருந்து எடுத்துக்கணும் என்று “அறிவியல்” பூர்வமாகச் சிந்தனை செய்பவர்களும் உண்டு! :-))
-----------------------------
இங்கே கருத்தாக்கங்கள் உண்மையான அறிவியலுக்கும் உண்மையான ஆன்மீகத்துக்கும் எளிதாக நடக்கும்! ஏனென்றால் இரண்டும் ஒரே தளத்தில் இருப்பவை!

பிரச்சனை உண்மையான அறிவியலுக்கும் உண்மையான ஆன்மீகத்துக்கும் இல்லை!

போலியாக அறிவியலைக் கைகொள்பவர்களுக்கும், மதத்தில் மாட்டிக் கொண்டு போலியாக ஆன்மீகத்தைக் கைகொள்பவர்களுக்கும் தான்!

சிறில் அண்ணாச்சியிடமும் இதையே இன்று காலையில் சொன்னேன்!
someone not knowing science may have a seemingly fake spirituality - very true!
the same way,
someone not knowing spiritualty may have a seemingly fake scientific temparament
:-)))

வவ்வால் சொன்னது…

கேஆரேஸ்,

ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பவர்கள் அடிக்கடி அவர்கள் சொல்வதன் அர்த்தமே உணர்வதில்லை :-)) very true!

//someone not knowing science may have a seemingly fake spirituality - very true!//

அறிவியல் என்பது கல்வியின் மூலம் வருவது,கல்வி அறிவே இல்லாமல் கூட அறிந்திருக்கலாம், ஆனால் அதனை விளக்கவோ, எப்படி நடக்கிறது என்பதோ புரியாமல் தான் இருக்கும்.

எனவே பொதுவாக பார்த்தால் கல்வியறிவு தேவை அறிவியலுக்கு , ஆனால் ஆன்மீகத்திற்கு தேவையா?

நீங்க சொன்னாப்போல பார்த்தா கல்வியறிவு இல்லாதவர்களின் பக்தி போலியானது என்று சொல்றிங்க சரி தானே? ஒரு ஆன்மீகவாதியாக இருந்துக்கொண்டு இப்படி சொல்வது மடத்தனமாக தெரியவில்லையா?

//the same way,
someone not knowing spiritualty may have a seemingly fake scientific temparament
:-)))//

இது அதை விட காமெடி, ஆன்மீகவாதியாக இருந்தால் தான் உண்மையான அறிவியல் அறிவு இருக்கும்னு சொல்றது, அதன் அர்த்தம் நாத்திகவாதிக்குலாம் அறிவியல் அறிவே இருக்காதுனு சொல்வது , அப்போ எல்லா விஞ்ஞானிகளும் பக்தி பழமாகவே இருப்பார்களா? இது வழக்கம் போல ஆன்மீக /பார்ப்பனிய மடத்தலைவரின் தலைக்கன பேச்சு போன்றது :-))

சிவபாலன் சொன்னது…

Hats Off GK!

thiagu1973 சொன்னது…

இதைத்தான் இயங்கியல் விதியும் சொல்கிறது எல்லாமே இயங்கிகொண்டும் மாறிகொண்டும் இருக்கிறது

அதன் இயக்கத்தை தீர்மானிப்பது வெளியிலிருக்கும் பொருள் அல்ல

அதன் உள்ளே இருக்கும் முரண்பாடுகள்தான்

அனு முதல் அண்டம் வரை இதுதான் விதி

இதே விதி சமூகத்துக்கும் பொருந்தும்

ஏழை பணக்காரன் என்றில்லாமல்

சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் இருப்பதால் சமூகம் மாறி கொண்டே இருக்கிறது

என்கிறது மார்க்சியம்

thiagu1973 சொன்னது…

சம்பந்தமில்லாமல் இருக்கிறதா :))

கோவை சிபி சொன்னது…

நல்ல பதிவு.இன்று அதிக மக்கள் மோதி விழுவது சினிமா,ஆன்மீகம் இரண்டிலும்தான்.இந்த இரண்டுமே அதீத கனவு,பொய்,ஏமாற்று,வன்முறை,கீழ்மை உணர்வுகளை நறுவிசாக வருடிவிடும் தந்திரம் ஆகியவற்றின் கூட்டுக்கலப்பு.''முதலீட்டாளர்கள்'மக்களை ஏமாற்றுவதற்கும்,ஏமாறும் மக்கள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் மதம் ஒரு கருவி.இதை ஆன்மீகம் என்ற போர்வை கொண்டு மக்களை சீரழிப்பதற்கு துணை போகும் எந்த சக்தியைக்கும் எதிர்வினை புரிவது நல்ல செயல்.

Unknown சொன்னது…

அப்துல் கலாம் இப்படிதான் ஒரு கதை எழுதி கடவுளை Proof பண்ணினார்.
அதை படிச்சிட்டு ஒரு பையன் கேட்டான்- இந்த கதைல நாத்திக Professor first பேசறார். பையன் அமைதியா இருக்கான். அப்புறம் பையன் கேள்வி கேக்கிறான் நாத்திக Professor பதில் சொல்ல முடியாம அமைதியாகிறார். இதிலிருந்து கடவுள் உண்டுன்னு Proof பண்றாங்க.

இந்த கதைய அப்படியே உல்டாவா பையன் முதல்ல கேள்வி கேக்கிறான். அப்புறம் நாத்திக Professor சரி இப்பொ நான் கேள்வி கேக்கிறேன்பா அப்படின்னு கேட்டு, பையன் அமைதியாகிற மாதிரி கதைய வச்சா கடவுள் இல்லைன்னு Proof பண்ணின மாதிரி ஆகிடுமேன்னு!!.

இது எப்படி இருக்கு??

கோவி.கண்ணன் சொன்னது…

//பூங்கொடி said...
நல்லா தெளிவா, அழகா எழுதி இருக்கீங்க :-)

//ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - நியூட்டன்

E = MC^2 // இந்த மூணு வரியில மட்டும் 3 தப்பு.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - law of conservation of energy (or first law of thermodynamics)(நியூட்டன் சொல்லல)

நியூட்டன் சொன்னது - 3 laws of motion
1. A physical body will remain at rest, or continue to move at a constant velocity, unless an unbalanced net force acts upon it.
2. The net force on a body is equal to its mass multiplied by its acceleration.
3. For every action there is an equal and opposite reaction. (thanks to wiki)

E= MC square = சொன்னது ஐன்ஸ்டீன் :-)
//
பூங்கொடி அவர்களே,

பாராட்டுக்கு முதற்கண் நன்றி !

தகவலுக்கும் நன்றி !

தலைப்பில் உள்ள விதியை கண்டுபிடித்தவரின் பெயரில் பிழைதான். சுட்டிக்காட்டியதற்கு நன்றி !

எந்த தூண்டப்படும் எந்த விசைக்கும் அதற்கு எதிரான எதிர்விசை உண்டு - இது கர்மாவுக்கு சொல்வார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sridhar Narayanan said...
நிறைய எழுதியிருக்கீங்க. விரிவா விவாதிக்கும் அளவுக்கு எனக்கு அறிவியல் ஞானம் கிடையாது.//

நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி சார்.

//முதலில் எனக்கு தெரிந்த சில விஷயங்களை பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன். தவறாக எண்ண வேண்டாம்.
//

தவறாக கொள்ள ஒன்றும் இல்லை. இங்கு எனது இடுகையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற வலியுறுத்தல் எதுவும் இல்லை. கருத்து பரிமாற்றம் மட்டுமே. புரிந்துணர்வு உண்டு. :)

//குவாண்டம் மெக்கானிக்ஸின் அடிப்படையில் நான்கு அடிப்படை விசைகள் இருக்கின்றன. Gravitation, Electro Magnetism, Strong Nuclear, Weak interaction விசைகள் என்று சொல்லப்படுகிறது.//

எனக்கு தெரியாத தகவல் நன்றி !

//நீங்கள் சொன்னது ஒருவகையில் சரி. கேலக்ஸி போன்ற வடிவங்கள் உருவாக புவியீர்ப்பு விசை காரணமாக இருக்கிறது. ஆனால் அந்த பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களுக்கும் அது காரணி இல்லை. சொல்லப்போனால் புவியீர்ப்பு விசை மிகவும் வலுவிழந்ததாகவே கருதப்படுகிறது மற்ற அடிப்படை விசைகளை கணக்கில் கொண்டு பார்த்தால்.
//

எல்லா இயக்கங்களுக்கும் அது காரணியல்ல என்பதில் மாறுபடுகிறேன். மஞ்சள் நிறமும் நீலநிறமும் இணைந்தால் பச்சை வண்ணம். பச்சை வண்ணத்தின் மூலப் பொருள் வேறு எங்கிருந்தும் வரவில்லை. தானியங்கி பொருள்கள் பார்த்திருப்பீர்கள் ஒரு காற்றில் ஆட ஆரம்பித்தால் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருக்கும். இங்கே காற்றுதான் கடவுள் என்று சொல்ல முயலக்கூடாது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே சொன்னேன். பிரபஞ்ச இயக்கம் ஒரு closed loop cycle அதற்கு புறவிசை தேவைப்படாது. உள்ளிருக்கும் பல்வேறு விசைகள் வழி செயல்படுகிறது. வெப்ப ஏற்பு = வெப்ப இழப்பு பாதரசமானியின் ஆய்வு படித்து இருப்பீர்கள். செலவு செய்த சக்தி எங்கும் சென்று விடாது. வெறொன்றாக மாறி இருக்கும், திரும்பவும் பழைய நிலைக்கு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு திரும்பும். இங்கே மழை பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன்.

//*** hypothesis. இப்பொழுது பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. இன்னும் சில பில்லியன் வருடங்களில் இது சுருங்கலாம் என்று அளவிடப்பட்டிருக்கிறது. அவ்வளவே! அதாவது விரிந்து கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சம் பல கோடி வருடங்கள் கழித்து சுருங்கலாம் என்பது எதிர்பார்ப்பே.//

சரிதான். இதே போன்ற நம்பிக்கை இறந்த நாம் மீண்டும் பிறப்போம் என்ற cycle of birth ஆன்மிகத்தில் இருப்பதை ஒப்புக் கொள்ளும் போது இதனை ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது ?

//உயிருள்ளவைகளுக்கு இரண்டு நோக்கம். 1) தன்னை காத்தல், 2) தன் இனத்தை காத்தல். இரண்டாவது நோக்கத்திற்காக இனப்பெருக்கம்.//

முதல் நோக்கம் உயிரணங்களுக்கு மட்டுமே பொருந்தும் தாவரங்களுக்கு தனக்கு தேவையான உணவை வேர்வழியாக எடுத்துக் கொள்வதன் மூலம் தான் சாகமல் இருக்கலாம் என்று சிறிய அளவில் மட்டுமே பொருந்தும். புற ஆபத்துகளில் இருந்து தற்காத்து கொள்வது தாவரங்களால் முடியாது. உணவின் வழி உடலைப் பாதுகாத்துக் கொள்வது உயிரினங்களின் நோக்கமல்ல அது வாழ்தலுக்கான ஆதாரம் ஆனால் அதுவும் டார்கெட்டான உற்பத்தியை அடைவதற்காக பயன்படுத்திக் கொள்வதே. எனவே உற்பத்தி மட்டுமே நோக்கம் என நினைக்கிறேன்

//பிரபஞ்ச வெடிப்பு பற்றி படித்திருக்கிறேன். பிரபஞ்ச ஒடுக்கம் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.//

வெடிப்பு / விரிவு ஒரு புள்ளியில் இருந்து அளவிட முடியாத சக்தி குவியும் போது ஏற்படும் சிதறல். ஒடுக்கம் விரிவின் எல்லையை தொட்டதும், அதே புள்ளியின் மையம் நோக்கி நகர்வது. அது மீண்டும் அந்த புள்ளியை நெருங்கியதும் மீண்டும் வெடிக்கும்.

//இது ஒரு தொடர் நிகழ்வு என்று நீங்கள் சொல்வதை பார்த்தால் - பலமுறை நிகழ்ந்தது போல் சொல்கிறீர்கள். //
அப்படித்தான் சொல்கிறார்கள், தீர்க தரிசனம் என்பது என்ன, பின்னால் நடக்கப் போவதை சொல்வதாகத்தான் சொல்கிறார்கள், ஆனால் அவை ஏற்கனவே நடந்ததை அறிந்ததின் அனுபவ அறிவு.
:)

//ஒரு முறை நிகழ்ந்ததுதான் Big Bang. இன்னொருமுறை நிகழுமா என்று யாருக்கும் தெரியாது :-)//

மேலே சொன்னதுதான் தீர்க்க தரிசனம் நம்பினால் இதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

//மிகச் சரி. energy cannot be created or destroyed. ஆனால் அது இருக்கிறது அல்லவா? //

தானியங்கி விசைபற்றி மேலேயே சொல்லி இருக்கிறேன்.

//அறிவியலின் கேள்வியும் அதுதான் - 'அந்த சக்தி - அது எப்படி அங்கே இருக்கிறது'
ஆன்மீகத்தின் கேள்வியும் அதுதான் - 'அந்த சக்தி - அது எப்படி அங்கேயே இருக்கிறது...'//

இதற்கு அடுத்த இடுகையில் இதற்கான விளக்கம் ஓரளவு இருக்கிறது

//நீங்கள் பஞ்சபூதங்கள் என்று கருத்தாக்கத்தில் கொண்டு வந்து முடித்து விட்டீர்கள். வேறு சிலர் அதற்க்கு பெயர் சூட்டி இன்னும் பல படிமங்களோடு புது கருத்தாக்கம் உருவாக்குகிறார்கள். அவ்வளவே!//

இங்கு சிறிய அளவில் தெரிந்த கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன். நான் ஆராய்சி மாணவன் அல்ல

//இதற்க்கு அறிவியலும் விலக்கில்லை. Proton, Neutron, Electron என்று படித்த நாம் இன்று அந்த proton-க்குள் இருக்கும் positron பற்றி அறிந்து கொள்கிறோம். பருப்பொருளே (matter) எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று படித்த நாம் இன்று anti-matter பற்றி படிக்கின்றோம்.//

இந்த கருத்தின் மூலம் என்ன சொல்லவருகிறீர்கள் ? அறிவியல் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஆன்மிகத்தில் அது இல்லையே ? ஆன்மிகத்தில் எல்லாவற்றையும் அறியும் திறனை அது கொண்டுவந்து கொடுத்துவிட்டதா ? ஆன்மீகம் 20 நூற்றாண்டில் 1 விழுக்காடு கூட வளர்ச்சி அடையவில்லை.

//6 நாட்களில் கடவுள் உலகை உருவாக்கினார் என்ற கருத்தாக்கத்தை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கே நிரூபனம்?//

நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஒரு கருத்து இருப்பதைக் குறிப்பிட்டேன்.

//பல கோடி வருடங்களுக்கு பிறகு நிகழக்கூடும் என்று அறிவியல் சொல்கிற பிரபஞ்ச சுருக்கத்தை நீங்கள் கேள்வி கேட்காமல் ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் ஆத்திகருக்கில்லை. எங்கே நிரூபனம்?//

பலகோடி வருசத்திற்கு பிறகு நீங்களும் நானும் சந்தித்தால் நிறுபிக்க முடியும் :)) அறிவியல் ஓரளவுக்கு மனத்திற்கு ஏற்றுக் கொள்ளும் உண்மைகளைத் தருகிறது. ஆன்மிகம் கற்பனையை மட்டுமே தருகிறது.

//
மற்றபடி இது சரி, இது தவறு என்று பொதுமைபடுத்துவது கடினம்.

தேடல் தொடரும். :-)
//

நல்லது !

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பர் பால் சாப்பிட்டது உங்களை ரொம்பவே அசைச்சிருச்சி-ன்னு கேள்விப்பட்டேன்! டிபிசிடி கிட்ட ஈனோ இருக்கு! கவலைப்படாதீங்க! :-))//

அப்பர் பால் சாப்பிட்டாரா ? மோர் சாப்பிட்டரா ?

சின்னப்பையன் பாடிய முன்று பாட்டில் திறந்த பூட்டு தான் 10 பாட்டு பாடியும் மூட முடியவில்லை என்று புலம்பினார்.

அதுக்குதான் சப்பை கட்டு இருக்கே, ஆண்டவன் அவரோட 10 பாட்டை காது குளிர கேட்டுக் கொண்டிருந்தான் அதனால் பூட்டுவதற்கு தாமாதமாகிவிட்டது என்று சொல்ல.

இங்கும் பாருங்க இறைவன், ஞான சம்பந்தரின் குரள் வளம் பிடிக்காமல், தம்பி பாடுன போதும் என்று மூன்று பாட்டோடு நிறுத்திக்கோ நான் பூட்டை திறந்துவிடுகிறேன் என்று சம்பந்தரின் வாயை மூடிவிட்டார்.
:)

ஞான சம்பந்தரை நோக்கி

"எவனாச்சும் இவன பாடுவதை நிறுத்தச் சொல்லுங்கப்பா...

யோவ் அப்பரே நீ பாடு"

இறைவன் கவுண்டமணியாக மாறி இருந்தாரா ?

Sridhar V சொன்னது…

"இறை" என்று வரும்பொழுது மட்டும் நீங்கள் 'அது எங்கிருக்கிறது?' 'அது எப்படி உருவானது?' 'அது எந்த உருவில் இருக்கும்?' என்று பல கேள்விகள் வைக்கும் நீங்கள், "அறிவியல்" என்று வரும்பொழுது கேள்வி கேட்காமல் பலவற்றை ஒத்துகொள்கிறீர்கள் என்பதை குறிப்பிடவே பின்னூட்டம் இட்டேன்.

பலகோடி வருடங்கள் கழித்து நிகழக்கூடிய வாய்புள்ள ஒரு விசயத்தை அப்படியே ஏற்று கொள்கிறீர்கள். கணித விதிகள் / பௌதீக வீதிகள் கூறுகின்றன என்று சொல்கிறீர்கள். எவ்வளவு பௌதீக விதிகள் வழக்கொழிந்து மறுக்கபட்டிருக்கின்றன. அது வளர்ச்சியின் அடையாளமாகவும் கொள்ளலாம். நாம் அடையாளம் காண வேண்டியது இன்னும் நிறைய இருப்பதாகவும் கொள்ளலாம்.

இறைவன் மிகப்பெரியவன். அவன் அளவிடமுடியாத அன்பு கொண்டவன் என்பதும் ஒரு கருத்தாக்கமே.

proton / photon / positron போன்றவைகளை பற்றி சொல்ல வந்தது என்னவென்றால், அறிவியலின் அடிப்படைகள் நிரந்தரமில்லை. ப்ளூடோ துணைக் கோளாக பதவியிறக்கம் ஆனது ஒரு உதாரணம். சொல்லப்போனால் 'கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு'.

ஆன்மீகம் வளர்ச்சியடைந்திருக்கிறதா? இந்த 1% கணக்கு எப்படி கொண்டு வந்தீர்கள் என்று தெரியவில்லை.

21ம் நூற்றாண்டை முழுவதும் கொள்ள முடியாமல், எனது அனுபவங்களை மட்டும் கொண்டு கோடிட்டு காட்ட முடியும்.

- இராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் கண்டெடுத்த பல சீடர்கள். ஆன்மீகத்தில் அவர் மேற்கொண்ட சாதனைகள் (பயிற்சிகள்). அவர் ஓரின சேர்க்கையாளராக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் ஆன்மிக வீச்சு அளப்பரிய முடியாதது.

- விவேகானந்தர். இளைஞர் சக்தியை திரட்டி ஆன்மிகத்தை வேறு தளத்திற்க்கு உயர்த்தியவர். ஒரு மணி நேரம் கால்பந்தாட்டம் விளையாடுவது மிகப் பெரிய தியானம் என்று எடுத்து சொன்னவர். இந்து மத பிரதிநிதியாக இருந்தாலும் அவருடைய கருத்துகள், சொற்பொழிவுகள் பல்வேறு மதத்தினவரையும் ஆட்கொண்டது உண்மை.

- அன்னை தெரசா - வாடிகன் இவருடைய சேவையை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இவருக்கு 'புனிதர்' பட்டம் அளிக்கும் முயற்சியில் இருக்கின்றது. 21-ம் நூற்றாண்டு மாந்தர்களிலே புனிதர் பட்டம் பெற்ப்போகும் ஒரே மனிதர்.

- ஒஷோ (எ) ரஜ்னீஷ் - இவரின் சொக்கவைக்கும் சொற்பொழிவுகள் இன்றைய இளைஞர்களையும் கட்டி போடத்தான் செய்கிறது. உண்மையை சொன்னால் என்னால் இவரின் புத்தகங்களை முழுமையாக படிக்க முடிவதில்லை. ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மன நிறைவும், ஆழ்ந்த அமைதியும் ஏற்பட்டு விடும். இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

இ்ன்னும் நிறைய மனிதர்கள் ஆன்மீகத்தை வளர்த்து கொண்டுதான் இருக்கின்றார்கள். "மனவளக்கலை மன்றம்' வேதாத்ரி மகரிஷி, மகரிஷி மகேஷ் யோகி, பிரும்மகுமாரிகள் சமாஜம், "சுதர்சன் கிரியா" ரவிஷங்கர், சுகபோதானந்தா போன்ற பலரும் எளிய முறையில் பொதுமக்களுக்கு பல்வேறு முறையில் ஆன்மீகத்தை போதிக்கதான் செய்கிறார்கள்.

இங்கு பல மதகுருக்களை நான் குறிப்பிடாததன் காரணம் அவர்களின் பங்களிப்புகள் பக்கசார்புடையவைகளாகவோ அல்லது பக்க சார்புடன் பார்க்கபடும்படியாகவோ இருக்கலாம்.

தமிழ் பதிவுகளில் பலரும் ஆன்மிக அனுபவங்களை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், கே.ஆர். இரவிசங்கர் பன்முனைப் பார்வையில் அதை மிகச் சிறப்பாகவே செய்துகொண்டுதானிருக்கிறார்.

இன்றைய 'தட்டையான' உலகில், ஆன்மிகம் பல்வேறு எல்லைகளையும் தாண்டி மனிதர்களை சென்றடைந்து கொண்டுதானிருக்கிறது. அறிவியல் போல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//"இறை" என்று வரும்பொழுது மட்டும் நீங்கள் 'அது எங்கிருக்கிறது?' 'அது எப்படி உருவானது?' 'அது எந்த உருவில் இருக்கும்?' என்று பல கேள்விகள் வைக்கும் நீங்கள், "அறிவியல்" என்று வரும்பொழுது கேள்வி கேட்காமல் பலவற்றை ஒத்துகொள்கிறீர்கள் என்பதை குறிப்பிடவே பின்னூட்டம் இட்டேன்.//

ஸ்ரீதர் சார்,

மறுபடியும் நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி.

கேள்வி கேட்பதன் காரணம், இறை என்ற சொல்லில் எனக்குவெறுப்பு எதுவும் இல்லை. அதை வைத்துப் பின்னப்பட்டுள்ள மத அரசியல்கள், சமூக சீர்கேடுகள் ஆகியவற்றிக்கு அதனை பயன்படுத்திக் கொண்டு செய்யப்படும் கட்டமைப்பே. 'அன்பே சிவம்' என்று பெயரளவிற்கு மட்டும் சொல்லப்படம் அந்த மந்திரச் சொல் எந்த அளவுக்கு பயன்படுகிறது, இறையின் தேவை தான் என்ன ? 95 விழுக்காடு இறை நம்பிக்கை உள்ள உலகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டுமே. அப்படி இல்லை தானே ? இந்த அமைதி இன்மையை நாத்திகர்கள் ஏற்படுத்தினார்களா ?
//பலகோடி வருடங்கள் கழித்து நிகழக்கூடிய வாய்புள்ள ஒரு விசயத்தை அப்படியே ஏற்று கொளகிறீர்கள். கணித விதிகள் / பௌதீக வீதிகள் கூறுகின்றன என்று சொல்கிறீர்கள். எவ்வளவு பௌதீக விதிகள் வழக்கொழிந்து மறுக்கபட்டிருக்கின்றன. அது வளர்ச்சியின் அடையாளமாகவும் கொள்ளலாம். நாம் அடையாளம் காண வேண்டியது இன்னும் நிறைய இருப்பதாகவும் கொள்ளலாம்.//

இரண்டாவது பதிவில் இது பற்றி சொல்லி இருக்கிறேன். கண்டு பிடிக்காதவரையும் இந்த விதிகள் முன்பு இருந்ததே இல்லை என்று சொல்லமுடியாது, அன்று முதல் அதை அறிந்திருக்கிறோம் என்றே பொருள், தவறான ஒரு விதியைப் பற்றி அறிந்திருத்தால் அது தவறு என்று சொல்வதும் அதே அறிவியல் தான், ஆன்மிகம் அதை தவறு என்று சொல்லப் போவதில்லை பிறகு ஏன் அறிவியலின் வழக்கிழந்த விதிகள் பற்றி நினைக்க வேண்டும். வழக்கிழந்த விதிகளுக்கு மாற்று கொடுப்பது ஆன்மிகமா ? அறிவியல் விதிகள் அனைத்துமே பொதுப்பயன்பாட்டிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆன்மிக விதிகள் மதம் தாண்டி அது எங்கும் மூக்கு நுழைக்க முடியாது.

//இறைவன் மிகப்பெரியவன். அவன் அளவிடமுடியாத அன்பு கொண்டவன் என்பதும் ஒரு கருத்தாக்கமே. //

ஒப்புக் கொள்கிறேன். மறுப்பதற்கில்லை. தனது தயவின்றியெ பலபடிகள் முன்னேறிகாட்டும் எந்த மகனையும் தந்தை பெருமையாகவே நினைப்பான். நீங்கள் ஏன் எல்லாவற்றிக்கும் இறைவன் துணை அவசியம் அதை நம்பவேண்டும் என்று நினைக்கிறீர்கள். சிலைத்திருடர்களில், ஆலயங்களை / மசூதிகளை/ சர்சுகளை உடைத்ததில் நாத்திகரின் பங்கு எத்தனை விழுக்காடு இருக்கும் ?

//proton / photon / positron போன்றவைகளை பற்றி சொல்ல வந்தது என்னவென்றால், அறிவியலின் அடிப்படைகள் நிரந்தரமில்லை. ப்ளூடோ துணைக் கோளாக பதவியிறக்கம் ஆனது ஒரு உதாரணம். சொல்லப்போனால் 'கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு'.//

அது புரிகின்றது, குறைந்த பட்சம் பவுதீக காரணங்களை அறிவியல் ஆராய்சி தருகிறதே. ஆனால் ஆன்மிகம் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும் கேள்வி கேட்க உரிமை இல்லை என்கிறதே ?

//ஆன்மீகம் வளர்ச்சியடைந்திருக்கிறதா? இந்த 1% கணக்கு எப்படி கொண்டு வந்தீர்கள் என்று தெரியவில்லை.//

ஒரு விழுக்காடு என்று சொன்னதும் கூட தவறுதான், ஆன்மிகம் எந்தபுதிய உண்மைகளை தரவில்லை, என்றோ சொல்லிய விசயங்களை அவரவர் புரிந்து கொண்டுள்ளதற்கு ஏற்றவாறு திரிக்கின்றனர் என்று சொல்லி இருக்க வேண்டும் :)
//21ம் நூற்றாண்டை முழுவதும் கொள்ள முடியாமல், எனது அனுபவங்களை மட்டும் கொண்டு கோடிட்டு காட்ட முடியும்.

- இராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் கண்டெடுத்த பல சீடர்கள். ஆன்மீகத்தில் அவர் மேற்கொண்ட சாதனைகள் (பயிற்சிகள்). அவர் ஓரின சேர்க்கையாளராக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் ஆன்மிக வீச்சு அளப்பரிய முடியாதது. //

உங்கள் அனுபவம் என்று சொல்கிறீர்கள், தனிமனித பயன்பபட்டிற்கு மட்டுமே ஆன்மிகம் பயனளிக்கிறது, அதுவும் அதிதீவிர நம்பிக்கையும், தீவிர பயிற்சியும் வேண்டும் என்று சொல்கிறீர்கள், அப்படி செய்தால் நீங்கள் கூட ஒரு விவேகந்தராக உருவாகலாம். ஆன்மீகம் இவ்வளவு கடுமையானதா ? :)

நீங்கள் இரமாகிருஷ்ணரின் சீடர்கள் ஓரின சேர்கை நாட்டம் கொண்டவர்கள் என்ற தகவல் எனக்கு உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது, நேற்றுவரை நான் இராம கிருஷ்ண மடத்தின் மேல் அளவற்ற மரியாதை வைத்திருந்தேன். மிகந்த மன அழுத்ததிற்கு ஆளாக்கிவிட்டுவிட்டீர்கள். இங்கு சந்தேகமாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று மட்டுமே கொள்ள முடியவில்லை.

//- விவேகானந்தர். இளைஞர் சக்தியை திரட்டி ஆன்மிகத்தை வேறு தளத்திற்க்கு உயர்த்தியவர். ஒரு மணி நேரம் கால்பந்தாட்டம் விளையாடுவது மிகப் பெரிய தியானம் என்று எடுத்து சொன்னவர். இந்து மத பிரதிநிதியாக இருந்தாலும் அவருடைய கருத்துகள், சொற்பொழிவுகள் பல்வேறு மதத்தினவரையும் ஆட்கொண்டது உண்மை.//

தனிமனித ஆன்மிகம் பற்றியே திரும்பவும் சொல்கிறீர்கள், அதற்கு கடுமையான பயிற்சி தேவை என்று சொல்லவருதிலிருந்து புரிகிறது, விவேகந்தரின் ஆன்மிக அறிவு பெற இளைஞர்கள் அனைவரும் இல்லத்தை துறந்து விவேகாநந்தர் போல் அலைய முடியுமா ? இல்லற வாழ்கையின் உன்னதம் பற்றி என்ன சொல்கிறார் விவேகநந்தர் ?

//- அன்னை தெரசா - வாடிகன் இவருடைய சேவையை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இவருக்கு 'புனிதர்' பட்டம் அளிக்கும் முயற்சியில் இருக்கின்றது. 21-ம் நூற்றாண்டு மாந்தர்களிலே புனிதர் பட்டம் பெற்ப்போகும் ஒரே மனிதர்.
- ஒஷோ (எ) ரஜ்னீஷ் - இவரின் சொக்கவைக்கும் சொற்பொழிவுகள் இன்றைய இளைஞர்களையும் கட்டி போடத்தான் செய்கிறது. உண்மையை சொன்னால் என்னால் இவரின் புத்தகங்களை முழுமையாக படிக்க முடிவதில்லை. ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மன நிறைவும், ஆழ்ந்த அமைதியும் ஏற்பட்டு விடும். இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

இ்ன்னும் நிறைய மனிதர்கள் ஆன்மீகத்தை வளர்த்து கொண்டுதான் இருக்கின்றார்கள். "மனவளக்கலை மன்றம்' வேதாத்ரி மகரிஷி, மகரிஷி மகேஷ் யோகி, பிரும்மகுமாரிகள் சமாஜம், "சுதர்சன் கிரியா" ரவிஷங்கர், சுகபோதானந்தா போன்ற பலரும் எளிய முறையில் பொதுமக்களுக்கு பல்வேறு முறையில் ஆன்மீகத்தை போதிக்கதான் செய்கிறார்கள்.

இங்கு பல மதகுருக்களை நான் குறிப்பிடாததன் காரணம் அவர்களின் பங்களிப்புகள் பக்கசார்புடையவைகளாகவோ அல்லது பக்க சார்புடன் பார்க்கபடும்படியாகவோ இருக்கலாம்.

//

தனிமனித பண்பை சேவையை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்துக் கொண்டது தவிர மத அமைப்புகள் ஒன்றும் செய்யவில்லை. அது அவர்களின் சேவைக்கு நோக்கம் இருப்பது போன்றும் உள்நோக்கம் இருப்பது போன்றும் அவர்கள் நற்செய்லை இழிவு படுத்துவது ஆகும்.

//தமிழ் பதிவுகளில் பலரும் ஆன்மிக அனுபவங்களை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், கே.ஆர். இரவிசங்கர் பன்முனைப் பார்வையில் அதை மிகச் சிறப்பாகவே செய்துகொண்டுதானிருக்கிறார்.//

இரவிசங்கரின் சேவை பலரும் அறிந்தது, நானும் தனிப்பட்ட முறையில் தனி இடுகை எழுதி பாராட்டி இருக்கிறேன்.

//இன்றைய 'தட்டையான' உலகில், ஆன்மிகம் பல்வேறு எல்லைகளையும் தாண்டி மனிதர்களை சென்றடைந்து கொண்டுதானிருக்கிறது. அறிவியல் போல். //

போலி சாமியார்கள் எல்லோரும் நாத்திகர்கள் என்று சொல்லாதிருந்தால் சரி. :))

salem thiagu சொன்னது…

இராம கிருஸ்ண பரம அம்சர் பற்றி Sridhar Narayanan பின்னூட்டதிற்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள். ஒன்றை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாய் கூறுவது சரியானது அல்ல.
முதலில் மடத்திற்கு சென்று அங்கு பின்பற்றி வரும் நடைமுறைகளை தெரிந்து கொண்ட பின்பு பின்னூட்டம் எழுதுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//salem thiagu said...
இராம கிருஸ்ண பரம அம்சர் பற்றி Sridhar Narayanan பின்னூட்டதிற்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள். ஒன்றை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாய் கூறுவது சரியானது அல்ல.
முதலில் மடத்திற்கு சென்று அங்கு பின்பற்றி வரும் நடைமுறைகளை தெரிந்து கொண்ட பின்பு பின்னூட்டம் எழுதுங்கள்.
//

தியாகு,

ஸ்ரீதர் நாரயணன் ஆன்மிகவாதி, தாம் கேள்விப்பட்டதை குறித்து சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவரது ஊகம் என்று சொல்ல முடியாது. நான் இதுபோன்று ஒரு பழி இராமகிருஷ்ணர் மடத்தில் இருப்பதை இதுவரை கேள்விப்பட்டது இல்லை. இது உண்மையென்றால் துறவரம் என்பது பாலியல் தேவைக்கான மறுப்பு அல்ல அது பெண்ணுடன் கூடுவதை மட்டுமே எதிர்க்கிறது என்ற தவறான தகவலைக் கொடுத்துவிடும். கிறித்துவ மதத்தில் சில பாதிரியார்கள் ஓரின சேர்கையாளர்கள் என்று செய்திகள் வரும், இங்கு இந்துமதம் கட்டமைக்கும் பிரம்மச்சாரியத்திற்கும் அது பொருந்துவது போன்று நடந்துவருவது வருத்தமளிக்கும் ஒன்று. புனிதம் என்றால் புளித்தவாடைதானோ என்று எண்ண வைக்கிறது.

இதில் ஸ்ரீதர் நாரயணன் பற்றி கண்டனம் தெரிவிக்க ஒன்றுமில்லை, அவர் ஊகத்தில் சொல்லவில்லை, கேள்விப்பட்டதை அல்லது படித்ததிலிருந்து சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அது போன்ற தகவல் எனக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக அதுபற்றி எழுத துணிந்திருக்கமாட்டேன். 90 விழுக்காடு என்னைப் போலவே இராமகிருஷ்ண மடத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு அவை ஊகம் என்ற பெயரில் சொன்னாலும் பலருக்கு மனக்கஷ்டமே.

Sridhar V சொன்னது…

இரண்டு விளக்கங்களை கூறிக் கொண்டு இந்த விவாதத்தை முடித்து கொள்ளலாம் என்று விழைகிறேன். பின்னூட்டங்களை வெளியிட்டு அவற்றுக்கு விரிவான விளக்கமும அளித்ததற்கு மிக்க நன்றி.

1. நான் ஒரு ஆன்மீகவாதி அல்ல. ஆன்மீகத்தில் நம்பிக்கையற்றவனும் அல்ல. வேண்டுமென்றால் 'இரண்டும் கெட்டான்' என்று சொல்லிக் கொள்ளலாம்.

கோவி, தியாகு,

2. இராமகிருஷ்ண மடத்தைப் பற்றி அவதூறு எதுவும் சொல்லவில்லை. தயவுசெய்து முந்தைய பின்னூட்டத்தை மீண்டும் படித்து கொள்ளுங்கள். தவறான புரிதலுக்கு காரண்மாக இருந்தால் மன்னியுங்கள். நான் தெளிவாகவே எழுதியிருந்ததாக நினைத்து இருந்தேன்.

நான் ஈர்க்கப்பட்ட முதல் ஆன்மீக குரு பரமஹம்ஸர்தான். அவருடைய ஆன்மீக வீச்சு மிகப்பெரியதுதான்.

அவரைப்பற்றி நான் சொல்லும்பொழுது அவர் மேல் இருக்கும் 'இந்த' குற்றசாட்டை பற்றி நீங்கள் சொல்லலாம் என்ற எதிர்பார்ப்பில் அதைப்பற்றியும் குறிப்பிட்டேன். நீங்கள் இணையத்தில் தேடினால் முனைவர் கிருபால் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை படிக்க கிடைக்கலாம். இதை மடம் தீவிரமாக் எதிர்த்து தனது கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறது.

ஓரினசேர்க்கையோ, அதன் மேல் உள்ள விழைவோ ஒரு குற்றமல்ல என்ற புரிதலைக் கொண்டவன் நான். அதனால் எளிதாக எழுதிவிட்டேன். அதுவே உங்கள் தவறான புரிதலுக்கு காரணியாக இருந்திருக்கலாம். உங்களின் மன உளைச்சலுக்கு அது காரணமாக இருப்பின் மன்னியுங்கள் :-(((

இராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு (மடம் வெளியிட்டது அல்ல) புத்தகம் ஒன்று இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இம்மாதிரி சர்ச்சைக்குரிய செய்திகளை கொண்டதால் அது தடைசெய்யப்பட்டது என்று அறிதேன். அவரின் வாழ்க்கையோ அல்லது சாதனைகளோ எல்லார் பார்வையிலிருந்தும் பதிவு செய்யபட வேண்டியது முக்கியம். நாம் சிலவற்றை படிக்காதிருந்தால் நமது மனம் வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அந்த தகவல்கள் அங்கே அப்படியேதான் இருக்கின்றன.

இது பற்றி முன்னம் 'மா.சி' பதிவில் 'கல்வெட்டு'உடன் ஒரு உரையாடல் நடந்தது. அதனால் இணைய நன்பர்கள் தெரிந்திருப்பார்கள் என்று எண்ணி வேகமாக எழுதியதும் ஒரு காரணம்.

பின்னூட்டங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. வேறு ஒரு சமயத்தில் விரிவாக உரையாட விருப்பம். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sridhar Narayanan said...
இரண்டு விளக்கங்களை கூறிக் கொண்டு இந்த விவாதத்தை முடித்து கொள்ளலாம் என்று விழைகிறேன். பின்னூட்டங்களை வெளியிட்டு அவற்றுக்கு விரிவான விளக்கமும அளித்ததற்கு மிக்க நன்றி.
//

திரு ஸ்ரீதர்,

நீங்கள் எதைச் சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை, அதைப் போல் நீங்கள் உங்கள் கருத்தை நேர்மையாக சொல்லி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாமலும் இல்லை.

சில தகவல்கள் உண்மை இல்லை என்றாலும் "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்" என்பது போல் நாம் கட்டமைத்துக் கொண்டுள்ள புனிதத்தன்மையின் மேல் கேள்வி வரும் போது துவண்டு போவது இயல்புதானே.

நமக்கு ஏற்படும் பாதிப்பு நாம் அதில் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தோம் என்பதைப் பொருத்தே, அதில் ஈடுபாடு அற்றவருக்கு அது வெரும் தகவல் தான்.

உங்களைத் தவறாக நினைக்கவில்லை. மேலும் நண்பர் டிபிசிடி பதிவில் ஏன் அதிர்சி அடைந்தேன் என்று என் எண்ணங்களை தெரிவித்துள்ளேன், படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நேர்மையாக கேள்விப்பட்ட தகவலகளை சார்பில்லாமால் சொல்வதற்கு துணிவு வேண்டும், அது உங்களிடம் இருக்கிறது பாராட்டுக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//வவ்வால் said...
//someone not knowing science may have a seemingly fake spirituality - very true!//
ஒரு ஆன்மீகவாதியாக இருந்துக்கொண்டு இப்படி சொல்வது மடத்தனமாக தெரியவில்லையா?//

வவ்ஸ்!
அது நான் சொன்ன வாசகம் இல்ல! சிறில் அண்ணாச்சி முதலில் இதைச் சொன்னாரு! அவருக்குப் பதிலா, அதன் அடுத்த ஆங்கில வாசகத்தைச் சொன்னேன்! :-)))

ஆட்களை நீக்கிக் கருத்தை மட்டும் பார்த்தா என்ன சொல்லுவீங்களோ? :-)

//நீங்க சொன்னாப்போல பார்த்தா கல்வியறிவு இல்லாதவர்களின் பக்தி போலியானது என்று சொல்றிங்க சரி தானே?//

இல்லை! அப்படிச் சொல்லவே முடியாது! கூடவும் கூடாது! சிறில் அதை எந்த context-ல சொன்னாருன்னா, அறிவியலே தெரியாமல் ஆன்மீகத்தோடு அறிவியலைத் தொடர்புபடுத்தி பேசும் ஒருவன், போலியான ஆன்மீகவாதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இவ்ளோ தான் சொன்னார்!

//the same way,
someone not knowing spiritualty may have a seemingly fake scientific temparament
:-)))//

//இது அதை விட காமெடி, ஆன்மீகவாதியாக இருந்தால் தான் உண்மையான அறிவியல் அறிவு இருக்கும்னு சொல்றது//

இங்க தான் வழக்கம் போல் (குமரன் சொல்வது போல்) காய் கவர்ந்து விட்டீங்களோ? :-)
அறிவியலில் சிறக்க ஆன்மிகத்தில் சிறக்க வேண்டும் என்ற தேவையே இல்லை! சிறிலுக்கு நான் சொன்ன மறுமொழியின் பொருள் என்னான்னா...

நீங்க எப்படி போலியான ஆன்மீகவாதி அறிவியலைப் பத்தி ஒன்னுமே தெரியாம, அறிவியலைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்களோ...
அதே போல போலியான மறுப்பாளர்களும் அறிவியல்-னா என்னான்னே தெரியாம, ஆன்மீகத்தை எதிர்க்க, அறிவியலைப் போலியா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பும் இருக்கு!

இவ்ளோ தான்!
இதுல மறுப்பாளர் எல்லாம் அறிவியலே அறியாதவங்க! ஆன்மீகம் பேசுவோரெல்லாம் அறிவியலே அறியாதவங்க என்ற generalizing பேச்சே இல்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

கோவி அண்ணா, ஸ்ரீதர்...
அருமையான கலந்துரையாடல்...ரொம்ப நாள் கழிச்சி ஜல்லி, தனி மனிதத் தாக்கு எல்லாம் இல்லாம issue based discussion படிச்சதுல மிகவும் மகிழ்ச்சி!

ஊருக்குத் திரும்பி வந்தவுடன், இதற்கு ஒரு விவாத களம் வைக்கலாம்-னு யோசனை! என்ன சொல்றீங்க? :-))

வவ்வால் சொன்னது…

கேஆரெஸ்,
//வவ்ஸ்!
அது நான் சொன்ன வாசகம் இல்ல! சிறில் அண்ணாச்சி முதலில் இதைச் சொன்னாரு! அவருக்குப் பதிலா, அதன் அடுத்த ஆங்கில வாசகத்தைச் சொன்னேன்! :-)))

ஆட்களை நீக்கிக் கருத்தை மட்டும் பார்த்தா என்ன சொல்லுவீங்களோ? :-)//

ஆட்களை நீக்கி பார்த்தாலும் , அது ஒரு நிழலாக கருத்துடன் வந்துக்கொண்டே தான் இருக்கும்.

அவரே சொன்னதாக இருந்தாலும், நீங்கள் அதை மறுக்கவில்லை எனும் போது அது உங்கள் கருத்தாகவும் ஆகி விடுகிறது அல்லவா?

//அறிவியலே தெரியாமல் ஆன்மீகத்தோடு அறிவியலைத் தொடர்புபடுத்தி பேசும் ஒருவன், போலியான ஆன்மீகவாதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இவ்ளோ தான் சொன்னார்!//

இந்த இடத்தில கூட சின்ன கருத்துப்பிழை இருப்பதாக எனது சின்ன மூளைக்கு(அது இருக்கா?) தோனுது,

இப்போ ஒருவர் உண்மையாவே ஆன்மீகத்தில கரைக்கண்டவரா இருக்கார், அறிவியல் அவ்வளவா தெரியாது, தெரிந்த அறிவியலை வைத்து ஏதோ சொல்றார் இப்போ அவர் சொல்றதுல அறிவியல் பகுதி மட்டுமே உடான்ஸ்,ஆனால் அவரை எப்படி போலி ஆன்மீக வாதி என்பீர்கள்,அவர் நோக்கத்தில் சரியான ஆன்மீகவாதியா இருக்கலாமே!

//someone not knowing spiritualty may have a seemingly fake scientific temparament//

இதை அப்படியே மொழி பெயர்க்கிறேன்,

யார் ஒருவர் ஆன்மிகத்தை அறியவில்லையோ அவர் போலி அறிவியல்வாதியாக கருதப்படலாம், அப்படினு தானே வருது.

அவர் அறிவியலை நன்கு அறிந்திருக்கிறார், என்றாலும் எப்படி அவர் போலி அறிவியல்வாதியாக ஆவார், அவர் அறியாதது ஆன்மிகம் தானே.

//போலியான மறுப்பாளர்களும் அறிவியல்-னா என்னான்னே தெரியாம, ஆன்மீகத்தை எதிர்க்க, அறிவியலைப் போலியா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பும் இருக்கு!//

கடவுள் நம்பிக்கை மறுக்க கண்டிப்பா அறிவியல் தெரிந்திருக்கனும்னு என்ன கட்டாயம், கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாலே போதும்.

ஆன்மீகவாதிகள் தான் அறிவியல் பூர்வமாகவும் கடவுளை நிருபிக்க தேவை இல்லாமல் முயல்கிறார்கள்.

அறிவியல் தெரியாத ஆன்மீகவாதிகளை நான் போலி என்றே சொல்ல மாட்டேன்,கண்மூடித்தனமாக நம்புபவர் என்பேன். ஆனால் ஆன்மீகம் என்றப்பெயரால் மக்களை ஏமாற்றி சுய லாபம் தேடுபவரைத்தான் போலி என்பேன்.

அறிவியல் தெரிந்தோ , தெரியாமலோ , கடவுளை ஒருவன் மறுத்தால் அவன் கடவுள் மறுப்பாளர் தான், இதில் போலி என்பதற்கே இடமில்லை, ஏன் எனில் அவனைப்பொறுத்த வரைக்கும் அவன் கொள்கையில் உறுதியாக இருக்கான்.அறிவியல் படி கடவுள் இருக்குனு சொன்னாலும் நம்பணும்னு அவசியம் இருக்கா?

சில சுத்த சைவக்காரர்களுக்கு வெண்டைக்காய் பொரியல் புடிக்காது அதனால அவன் போலி வெஜிடேரியன் ஆகிடுவானா?

அதே போல கடவுள் இருக்குனு நம்பியே ஆகனும்னு கட்டாயமே இல்லை. இல்லை என்றால் இல்லை என்பதே கொள்கை, அதில் எங்கே போலி வந்தது, ஒரு வேளை ரகசியாம கடவுளுக்கு பூஜை போட்டால் தான் போலி நாத்திகவாதி.

அதனால அந்த இரண்டு ஆங்கில கூற்றுகளுமே பொருளற்றது, இங்கே பொதுவாகவே அர்த்தமே இல்லாம ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ஏதோ பெரிய அர்த்தம் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது :-))

அதுவே தமிழில் சொன்னா அது எப்படினு கேட்பாங்க!

பி.கு: வீட்டு சாப்பாடை ஒரு கட்டு கட்டுங்க, ஊருக்கு திரும்பும் போது இமிக்ரேஷன்ல நீங்க யாரு இந்த பாஸ்போர்ட்ல வேற யார் போட்டோவோ இருக்கேனு கேட்கனும் :-))
அங்கே போன இதெல்லாம் கண்ணுல கூட பார்க்க முடியாது!

Radhakrishnan சொன்னது…

அற்புதமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு மிகவும் அழகாக எடுத்தாளப்பட்ட பின்னூட்டங்களும், விளக்கங்களும் மிகவும் பாராட்டுக்குரியது.

சர்ச்சைக்குள் சிக்காமல் சகிப்புதன்மையுடன் விவாதிக்கும்போது அங்கே பல விசயங்கள் காணக்கிடைக்கின்றன என்பதற்கு இந்த பதிவும் ஒரு சாட்சியாய் அமைகிறது.

பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. கோவியாருக்கும், பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும், குறிப்பாக வவ்வால் ஸ்ரீதர் நாராயணன், கண்ணபிரான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வெ.இராதாகிருஷ்ணன் said...
அற்புதமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு மிகவும் அழகாக எடுத்தாளப்பட்ட பின்னூட்டங்களும், விளக்கங்களும் மிகவும் பாராட்டுக்குரியது.

சர்ச்சைக்குள் சிக்காமல் சகிப்புதன்மையுடன் விவாதிக்கும்போது அங்கே பல விசயங்கள் காணக்கிடைக்கின்றன என்பதற்கு இந்த பதிவும் ஒரு சாட்சியாய் அமைகிறது.

பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. கோவியாருக்கும், பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும், குறிப்பாக வவ்வால் ஸ்ரீதர் நாராயணன், கண்ணபிரான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
//

பாராட்டும் வரிகளுக்கு மிக்க நன்றி ஐயா.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்